stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
கதைப்படங்கள்
-
Different types of boats used by Tamils historically
This study examines the design and use of ancient Tamil boats across the wider Tamilakam region, including the Chera territories of present-day Kerala and Tamil Eelam, which were integral to ancient Tamil cultural and political geography. Although the post-1500 CE period lies beyond the classical era of Tamilakam, the maritime craft of Kerala during this time represent an evolved form of the earlier Tamil maritime traditions that had flourished under the Chera rulers. Therefore, they are included in this study to trace the continuity and transformation of Tamil maritime technology from antiquity into the early modern period. Images inside this were taken from various sources. Image credits to the respective owners. Document:
-
Kerala Cherai Beach Vanjchi/ வஞ்சி
-
வஞ்சி/ vanchi - sea going.jpg
-
oththaikoori Vallam/ ஒத்தைக்கோரி வள்ளம்
-
chavam, malabar caost, kerala
-
Pattamar - Thomas Cussans, Lt., Madras Artillery, dated July 30, 1817. .jpg
-
kanna thoni.jpg
-
padaku, kattu vallam - Poompuhar, Tamil Nadu | Same boat is in Pulicat lake
-
champathoni.jpg
-
odam.jpg
-
odam.jpg
-
kanna thoni
-
Valavarayan Vallam
-
kasaragod, Kerala - Patti.jpg
-
Kolli Vallam
-
mahe kerala | Specific name of this Thoni is unknown, 1960s
-
Thoni | Kasargode, Kerala
-
Small Vanchi - கொச்சுவஞ்சி/ செறுவஞ்சி
-
Churulan Vallam
-
Kolli Vallam
-
Kolli Vallam - mini version
-
-
மாதுளை மரம்
மாதுளை மரம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட T.தம்பிமுத்து எழுதி ‘நியூ யோர்க்கர்’ சஞ்சிகையில், 05 நவம்பர் 1954-இல் வெளியாகிய சிறுகதை : The pomegranate tree. தமிழில்: எழுத்துக்கினியவன் சில மனிதர்களுக்கு ஒரு விசேடமான பலவீனம் இருக்கும்; அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார்கள், தங்களுக்கு உயிரானவர்களின் மனமகிழ்ச்சியைக் கூட அர்ப்பணித்து விடத் தயங்க மாட்டார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் திரௌபதியைப் பணயமாக வைத்து இழந்த தர்மன். எனது இரத்தின மாமாவின் பலவீனம் வட இலங்கையின் அச்சு வேலிக் கிராமத்தில், அவருடைய வீட்டுக் கிணற்றடிக்கு அருகில் வளரும் மாதுளை மரத்தின் பழங்களுக்குத்தான். விறாந்தைக்குக் கீழே கல்லாசனத்தின் மேல் விரித்திருந்த புலித்தோலில் உட்கார்ந்து மாதுளம் பழக் கொட்டைகளைச் சுவைத்தபடி இரத்தின மாமா எனக்கும் என் சகோதரர்களுக்கும் சேர் வால்டர் ஸ்காட்டின் கதைகளுக்குத் தானும் கொஞ்சம் கண்ணும் மூக்கும் வைத்து ஆலாபிப்பார்: “அப்போ அந்தக் கறுப்பு மறவன் கடிவாளத்தைப் பற்களால் கடித்துப் பிடித்தபடி குதிரையை ஓட்டிவந்து, ‘ஹோ ஐவன்ஹோ! ஹோ ஐவன்ஹோ!’ என்று கூவினான். ரெபெக்கா வெகு உயரத்திலிருந்து, தன் கூந்தல் ஒரு கார்மேகம் மாதிரிக் கவிழ்ந்து விழக் கீழே பார்த்தாள்…இந்த மாதுளம்பழம் அருமை. அச்சுவேலிக் கிணற்றடி மாதுளைக்குப் போட்டியாக எதுவுமே கிடையாது!” ஆங்கிலேயர் மாதுளம்பழக் கொட்டைகளைக் கரண்டியால் கோதி அள்ளி உண்ணும் முறை முழுப்பிழை என்று இரத்தின மாமா சொல்வார். கரண்டியால் கோதி எடுத்தால் ஏதோ கற்பூரத் தைலம் சாப்பிட்டது போல மாதுளம்பழத்தின் உருசியையே கெடுத்துவிடும். அது மட்டுமல்ல, மாதுளங் கொட்டைகளை விழுங்கக் கூடாது. ஒரு கொஞ்சத்தை வாயில் போட்டு ஒன்றிரண்டு முறை மென்று மாதுளம்பழச் சாற்றை, சிப்பிமீன் சாப்பிடுகிற மாதிரி உறிஞ்சி எடுத்தபிறகு கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும். மரத்திலேயே பழுத்த புத்தம்புது மாதுளம்பழம் கொஞ்சம் எலுமிச்சை கலந்த ஷாம்பேன் மாதிரி இருக்கும். அச்சுவேலிக்கு வெளியே இவ்வளவு உருசியான மாதுளம்பழத்தைக் கண்ட ஞாபகமே எனக்கு இல்லை. மாரிகாலத்தில் நானும் எனது ஐந்து சகோதரர்களும் எங்கள் பெற்றோருடன் கொழும்பு நகரத்தில் வசித்தோம். அங்கேதான் பள்ளிக்கூடம் போனோம். கோடை விடுமுறைகளுக்கு அச்சுவேலிக்குப் போய்விடுவோம். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை அவருடன் தங்கியிருந்தோம். அவருக்குப் பிறகு இரத்தின மாமாவுடன் அல்லது ஆறு மாமாவுடன். இரத்தின மாமா எனது அப்பாவின் ஒன்றுவிட்ட மைத்துனர். ஆறு மாமா அம்மாவின் மைத்துனர். இலங்கை உறவுமுறைகளின் படி இவர்கள் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாமாக்கள்தான். இலங்கையில் மாமாக்கள் மருமக்களுக்கு அளவுமீறிய செல்லம் கொடுப்பது வழக்கம். ஆகவே அச்சுவேலிக்குப் போவதென்றால் எங்களுக்குக் கொள்ளைப் பிரியம். ஆறு மாமா ஒரு சன்னியாசி மாதிரியான மெலிந்த சிறிய உருவம் கொண்டவர். செம்மையாகச் செதுக்கிய கழுகு போன்ற தலையில் நரைத்துப்போன வெள்ளைத் தலைமுடி. ஒரு பறவை மாதிரி கொஞ்சம் பதற்றமான அசைவுகள் கொண்டவர். எந்த விஷயத்தையும் கவனித்துச் செய்கிற கறார்ப் பேர்வழி. கீரிமலைக் கேணியில் குளித்துப் பிறகு பிராமணக் கடையில் மதிய உணவு அருந்த எங்களைக் காரிலோ குதிரை வண்டியிலோ அனுப்பும் போது எல்லோருக்கும் தனித்தனியாகத் துவாய்களும், சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடப் பாய்களும் கவனமாக எடுத்து வைப்பார். பிறகு அந்தப் பயணத்துக்குத் தேவையான சரியான அளவு பணத்தை எடுத்துத் தன் மகன் – எங்கள் மைத்துனன் – ராஜா கையில் வைப்பார். ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படாத மாலைகளில் எங்களை உள்ளான் குருவியோ புறாவோ வேட்டையாட அழைத்துச் செல்லும்படி ராஜாவைப் பணிப்பார். ராஜா உயரமாக அழகாக இருப்பான். கவிதைகளை, முக்கியமாக ஔவையாரின் நாலடிச் செய்யுள்களை, மேற்கோள் காட்டுவதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். இப்போது அவன் ஒரு அரசாங்க அதிபராகக் கடமையாற்றுவதால் நடைமுறைகளையும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்வதையும் சீராக நடத்துவதிலேயே கவனமாக இருக்கிறான். ஆனால் என் நினைவில் அவன் ஒரு கவிஞன்தான். வேட்டை என்பது திறந்த வெளிகளிலும், பனங்காணிகளிலும், வயல்வெளிகளிலும், பறவைகளிலும் காணக்கூடிய கவிதைகளின் ஒரு அம்சம்தான். சிலவேளைகளில் சிறுமிகளைப் பற்றிக் கேட்டு ராஜா எங்களைக் கேலி செய்வான். “வளர்ந்த பிறகு ஆரைக் கட்டுவாய்? நளினியா சகுந்தலாவா சாவித்திரியா?” நான் “சாவித்திரி!” என்று சிலவேளைகளில் கத்துவேன். அல்லது “சகுந்தலா!” ஒரே கும்மாளம்தான். திரும்பி வரும்போது பென்னாம்பெரிய பனையோலைகள் சரசரக்க, சில்வண்டுகள் இருண்ட பனங்காணிகளில் களேபரம் செய்ய, ஒற்றைக் காபைட் விளக்கெரியும் தெருவோரக் கடையில் நிறுத்தி ஒரு கோர்வை வடையும் எலுமிச்சம்பழச் சாறும் வாங்கித் தருவான். ஆறு மாமா வீட்டுக்குப் போகும் போது பெட்டிபெட்டியாக வாணங்களும் பட்டாசுகளும் இருக்கும் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். கோப்பாய்க்கு அருகிலுள்ள முடிவில்லாத ‘நிலாவரை’ கிணற்றைப் பார்க்கப் போகும்போதும் அல்லது விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போதும் ஆறு மாமா எங்களுக்கு ஆளுக்கொரு வெள்ளி ரூபாய் நாணயம் தருவார். இரத்தின மாமா வீட்டில் நாங்கள் இருந்தபோதும்கூட வேட்டை, நீச்சல் பயணங்கள் போயிருக்கிறோம் என்றாலும் அங்கே எங்களை மிகவும் கவர்ந்தது மாதுளம்பழங்களும் நாட்கணக்கில் தொடரும் இரத்தின மாமாவின் நெடுங்கதைகளும்தான். கிராமத்தினருக்கு இரத்தின மாமாவின் மேல் பயங்கலந்த மரியாதை இருந்தது. அவர் ஒரு ராங்கிபிடித்த, பிடிவாதக்கார, இலகுவாகத் திருப்தி செய்ய முடியாத, ஆனால் நல்ல மனமுள்ள சர்வாதிகாரி. அவர்தான் ஊர்ப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்தின் தலைவர். அப்பப்பா காலமான போது, அவருடைய பிள்ளைகள் யாரும் அந்தக் கிராமத்தில் வசிக்கவில்லை. இரத்தின மாமா, அப்பப்பாவின் மைத்துனர் என்கிற முறையில், அப்பப்பாவின் முறையான வாரிசாக, அச்சுவேலியின் முதற்குடிமகனாகத் தன்னைத்தானே வரிந்து கொண்டார். அத்தோடு கிடைக்கும் எல்லா விதமான விசேட உரிமைகளும் தனக்குத்தான் என எதிர்பார்த்தார். ஆறு மாமா இதற்கு முற்றிலும் பலத்த எதிர்ப்பு. கிராமத்தின் ‘உடையார்’ என்ற முறையில் சட்டத்துக்கும் நீதிக்கும் பொறுப்பான தான்தான் அச்சுவேலியின் நியாயமான முதற்குடிமகன் என்று நினைத்தார். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை கிராமத் தலைவர் யார் என்பதில் ஐயம் எதுவுமே இருக்கவில்லை. அவர் தெருவில் நடந்து வந்தால் ஊர் மக்கள் மரியாதை காட்டி தத்தம் வீடுகளுக்குள் ஓடிப்போய்ப் பதுங்கிக்கொள்வார்கள். நாங்கள் சிறுபிள்ளைகள் ஊர்த் தெருக்களிலும் ஒழுங்கைகளிலும் ஓடித்திரியும் போது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மண்டியிட்டு மரியாதை தந்தமை நகரத்துப் பிள்ளைகளான எங்கள் கண்களுக்கு வியப்பாகத் தெரிந்தது. எங்களோடு பேச முதல் அவர்கள் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையையோ தோளில் போட்டிருந்த துண்டையோ கழற்றி இடையில் சுற்றிக்கொள்வார்கள். ஏனென்றால் அவரது பேரப்பிள்ளைகளுக்கு முன்னால் பகட்டாக அணிந்துகொள்வது மரியாதையின்மை என்று கருதப்பட்டது. ஊருக்கு வருகை தரும் வெளியூர்ப் பிரமுகர்களுக்கு ஊரார்களை அறிமுகப்படுத்தும் பணியை அப்பப்பாவும், அவருக்கு முதல் அவரது தகப்பனும்தான் எப்போதுமே செய்வார்கள். ஆறு மாமா, இரத்தின மாமா இரண்டு பேருக்குமே அந்த உரிமை தங்களுக்குத்தான் வரவேண்டும் என்ற ஆசை. ஊரில் நடக்கும் எல்லாத் திருமண அல்லது மரண வீட்டு ஊர்வலங்கள் தன் வீட்டுக்கு நூறு யார்ட் அண்மைக்கு வந்ததும் தத்தம் வாத்தியக் கச்சேரிகளை நிறுத்திவிட வேண்டும் என்ற கட்டளையை இரத்தின மாமா அறிவித்த கையோடேயே ஆறு மாமாவும் அதே கட்டளையைப் பிறப்பித்தார். அப்பப்பாவுக்கு இன்னுமொரு சலுகையும் இருந்தது. வருடப்பிறப்பு நாளில் ஊரிலுள்ள எல்லா நாதஸ்வரக் கோஷ்டிகளும் அவரது வீட்டுக்குப் போய்த்தான் முதலாவது கச்சேரி வைக்க வேண்டும். ஆறு மாமா இந்தச் சலுகையைத் தனக்கென்று எடுத்துக்கொண்டதும் இரத்தின மாமா கோபம் கொந்தளிக்க ஆறு மாமாவோடும் அவரது குடும்பத்தோடும் பல வாரங்கள் பேசாமலேயே விட்டுவிட்டார். ஆறு மாமா சாதுரியமாகப் பெருமனதுடன் வேட்டைக்குப் பிறகு வழமையாகச் செய்வது போல ஒரு காட்டுப்பன்றித் தொடையை அனுப்பி வைத்த பிறகுதான் இரத்தின மாமாவின் கோபம் தணிந்தது. இப்படி உரிமைகளைத் தம் வயமாக்குவதற்கு இரண்டு மாமாக்களும் சமர் செய்யும்போது, அதன் விளைவுகள் அச்சுவேலியின் ஒவ்வொரு கல் வீட்டிலும் ஓலைக் குடிசையிலும் எதிரொலித்தன. மரபுவழிகளை மிகக் கவனமாகப் பேணும் ஒரு கிராமம்தான் அச்சுவேலி. கிராமத்து ஆண்கள் தங்கள் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். திருமண, மரண வீட்டு ஊர்வலங்கள் போகும் போது புழுதி பறக்கும் ஊர் வீதிகளில் விரிக்கும் வெள்ளைத் துணிகளை வழங்குவது ஊரிலுள்ள வண்ணாரின் உரிமை. அதை ஊர்த் துணிக் கடைக்காரர் செய்ய முனைந்தால் ஊர் பொங்கியெழுந்து தர்ம அடியிலோ கொலையிலோதான் முடிந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்குத்தான் திருமண ஊர்வலங்களில் மண் கலயங்களைக் காவிக்கொண்டு செல்லும் உரிமை இருந்தது. அவர்கள் மண்பானைகளுக்குள் ஊதி ஒரு ஆழமான ஒத்ததிரும் தொனியைக் கிளப்புவார்கள். ஒவ்வொரு சில அடிகளுக்குப் பிறகும் நகர்வதை நிறுத்திச் சில வெள்ளி நாணயங்கள் பானைக்குள் போடப்படும் வரை பொறுத்திருப்பார்கள். நகை வேலை செய்யும் உரிமை ஒரு விசேடமான தட்டார் சாதியினருக்கே. பனந்தென்னைகளில் ஏறிக் கள் இறக்கும் உரிமை இன்னொரு சாதியினருக்கு மட்டும்தான். அனேகமாக எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான முன்னுரிமை வரிசை பேணப்பட்டது. உதாரணமாக, இரண்டு கிராமக் குடும்பங்கள் கொண்டாட்டங்களில் முதலில் பாடும் உரிமையைப் பாரம்பரியமாக வைத்திருந்தன. வேறு யார் பாடகர்கள் இருந்தாலும் பரவாயில்லை, முதலில் ஒரு குடும்பம் பாடிய பிறகு அடுத்த குடும்பம் தொடரும். மிகவும் தாழ்த்தப்பட்ட ஒரு சாதியினருக்குத்தான் திருமண, மரண வீட்டு விருந்துகளில் எஞ்சியிருக்கும் உணவுகளைச் சேகரிக்கும் உரிமை இருந்தது. செத்துப் போன மாடுகளைக் கொண்டு செல்லும் உரிமை நளவர்களுக்கு மட்டும்தான். சில உயர்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டும்தான் காலணிகளை அணியும் உரிமை. இத்தகைய எழுதப்படாத விதிகளெல்லாம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்கப்பட்டன. இப்படியான ஒரு பாரம்பரியம் எங்கெங்கும் படர்ந்திருந்த ஒரு பின்னணியில்தான் மற்றப்படி நல்ல மனதுகொண்ட இரத்தின மாமாவும் ஆறு மாமாவும் தங்களுடைய உரிமைகளுக்காக மல்லுக்கட்டினார்கள். பண்பாடு, பாரம்பரியம் என்ற உணர்ச்சிகள் அவர்களிடம் மேலோங்கி நின்றன. வருங்காலத்தில் எந்தக் குடும்பம் ஊரில் முன்னின்று தழைத்தோங்கி வளரும் என்பது அப்போதே தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருந்தது. அதேநேரத்தில், போட்டிக்கு நின்ற இரண்டு குடும்பங்களுக்குமிடையில் ஒரு நிரந்தரமான பிணைப்பு வரப் போகிறது என்ற ஒரு கதை ஊரில் பரவலாகப் பேசப்பட்டது. இந்தக் கதை பரவிய கோடைகால விடுமுறையில் எனக்கு எட்டு வயதுதான் என்றாலும், குடும்பங்கள் இரண்டுக்கும் இடையில் நிலவிய இறுக்கமான பதற்றம் எல்லோருக்கும் போல எனக்கும் புரிந்திருந்தது. ஒருநாள் இரத்தின மாமா வீட்டு முற்றத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு மீன்காரி தன் பனையோலைக் கடகத்தைக் காவிக்கொண்டு வந்தாள். நிலத்தில் கடகத்தை இறக்கி வைத்துக் கவிழ்த்தாள். வழக்கம் போலப் பெரிதும் சிறிதுமாகப் பலவகை மீன்கள் அதிலிருந்து கொட்டுண்டன. சூறை, வாள்மீன், இறால், நண்டு, கணவாய், சிங்கி இறால், நெய்த்தோலி என்று பலவகை. வல்லையோ பருத்தித்துறையோ ஏதோ பக்கத்தூர்க் கடற்கரை மணல் வைரத்துகள்கள் போல இன்னும் அந்த மீன்களில் ஒட்டிக்கொண்டிருந்தன. மாமிக்கும் அவரது இரண்டு சமையற்காரருக்கும் துணையாக வேடிக்கை பார்க்க அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லோரும் ஓடிவந்தார்கள். சமையற்காரர்தான் இறுதி முடிவு எடுப்பவர் என்றாலும், மாமிக்கு முன்னால் வைத்தே பேரம் பேசினார்கள். சமையற்காரர் திருப்தியடைந்து சம்மதம் கொடுத்ததும் மாமியும் சம்மதம் தெரிவித்துத் தலை ஆட்டுவார். அந்தக் காலை வெளிச்சத்தில் மீன்கள் கைமாறக் கூட்டத்தின் கலகலப்பு ஏறிப் பிறகு இறங்கித் தணிந்தது. கொஞ்சம் கலகலப்பு அடங்கிய நேரம் மீன்காரி சட்டென்று மாமியைப் பார்த்து “ஆறு ஐயாவின்ர மகனைச் சுந்தரி அம்மாவுக்குப் பேசுறீங்கள் எண்டு பத்தர் சொன்னார்” என்றாள். எங்களது மைத்துனன் ராஜாவைப் பற்றித்தான் அவள் சொல்கிறாள் என்று அறிந்ததும் எனது காதுகளைத் தீட்டிக்கொண்டேன். இரத்தின மாமாவுக்கு மகன்கள் கிடையாது. சுந்தரி ஒரே மகள். பக்கத்தில் விருந்தினரை உபசரிக்கும் ‘சாலை’ என்ற கொட்டகையில் நின்றிருந்த சுந்தரி நாணத்துடன் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அவளுக்குப் பதினாறு வயது. இதுவரை அவளுக்கு நூறு தடவைகளாவது கல்யாண வரன் பேசி வந்த கதை கேட்டிருப்பாள். முதலாவது வரன் பேச்சு வந்த போது அவளுக்கு மூன்று வயது இருந்திருக்கலாம். அல்லது ஒரு வயதாகக் கூட இருந்திருக்கலாம். மாமி பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார். “பெடியன் நல்ல வடிவு” மீன்காரி, சுந்தரியைத் திரும்பிப் பார்த்தபடி இளம் பெண்களைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைப்பதற்குப் பேசும் தெவிட்டுகின்ற குரலில் தொடர்ந்தாள், “படிப்பிலும் கெட்டிக்காரனாம்.” சுந்தரி வெட்கத்துடன் கலகலவென்று சிரித்தபடி, கையில் போட்டிருந்த காப்புகள் கிணுகிணுக்கத் தன் சேலையைச் சரி செய்துகொண்டாள். “சாத்திரியார் பொருத்தம் பாக்கிறார்” மாமி ஒப்புக் கொண்டார். “பொருத்தம் எண்டால்தான் மிச்சம் எல்லாம் நடக்கும்.” “நீங்கள் ஒரு லட்சம் சீதனம் குடுக்கிறியளாம்! மாப்பிளைக்கு அது சரிதான். எப்பவோ ஒருநாள் அரசாங்க அதிபரா வந்திடுவார்” மீன்காரி, சுந்தரியைக் கடைக்கண்ணால் பார்த்தபடி தொடர்ந்தாள். மாமி பதிலேதும் சொல்லவில்லை. மீன்காரி கடகத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நழுவிப் போனாள். நகை செய்யும் ‘பத்தர்’தான் அச்சுவேலியின் செல்வந்தக் குடும்பங்களின் பாரம்பரியக் கல்யாணத் தரகர். ராஜாவுக்கும் சுந்தரிக்கும் திருமணப் பேச்சைக் கொண்டு நடத்துகிற இந்தத் தரகர் கொஞ்சம் அளவுக்கு மிஞ்சிப் புளுகிற, செருக்கு மிகுந்த, எப்போதும் குங்குமப் பொட்டு வைத்த, சிறிய, மாநிற மனிதர். அவரது தரகு வேலைத் திறமையும் எதையும் பேசி நிறைவேற்றி வைக்கக் கூடிய ஆற்றலும் அச்சுவேலிக்கு வெளியே கூடப் பேர் போனவை. தொலைவிலுள்ள திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற நகரங்களில் கூடக் கூலிக்குத் தரகு வேலை செய்து வெற்றி கண்டவர். மெல்லிய திசுக் காகிதத்தில் பென்சிலால் வரைந்த தனது நகை வடிவமைப்புகளைக் காவிக் கொண்டு நாடு முழுவதும் பயணம் செய்யும்போது, அவர் வயதுவந்த வாலிபர்களினதும் யுவதிகளினதும் படங்களையும் ஒரு கட்டாகக் கொண்டு செல்வார். தனது தரகுத் தொழிலைத் திறந்த மனப்பான்மையுடன் அணுகுபவர். ஒரு சாதாரண பெண்ணுக்குப் பெரிய சீதனத்தோடு -ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் – பேசுவதும், ஒரு அழகான பெண்ணுக்குச் சில ஆயிரங்களோடு பேசி முடிப்பதும் அவருக்கு ஒன்றுதான். தனது இரண்டு கலைகளையும் -தரகு வேலையையும் நகை செய்யும் பத்தர் வேலையையும் -ஒன்றிணைத்ததால் மிகப் பெரிய செல்வந்தராகி விட்டார். தரகு வேலைக்குச் சீதனத்தின் பத்து வீதத்தை அறவிடுவார். திருகோணமலைக்கோ கொழும்புக்கோ பயணம் செய்யும்போது, கையில் போட்ட தங்க வளைகாப்பும், விரலில் போட்ட வைர மோதிரமும், வேட்டிக்கு மேல் அணிந்திருக்கும் வெள்ளை ஐரோப்பிய மேலங்கியும் அவரது செல்வந்தத்தை உலகத்துக்குப் பறைசாற்றின. இரத்தின மாமா தன் மகளை ஆறு மாமாவின் மகனுக்குக் கைபிடித்துக் கொடுக்கப் பண்ணினால் அது இந்தப் பத்தரின் தரகு வேலையின் சிகரமாகி விடும். அன்று மாலை, காகங்கள் எல்லாம் முருங்கை, வேப்ப மரங்களில் சென்றடைய, வௌவால்கள் இலுப்பம் பழங்களை வேட்டையாடப் படையெடுக்கத் தொடங்கிய நேரத்தில், அச்சுவேலியின் எல்லா வீடுகளிலும் ஒரே செய்தியைப் பற்றித்தான் கதை நடந்தது. இரத்தின மாமா கிணற்றடி மாதுளை மரத்திலிருந்து ஆறு பழங்களை ஆறு மாமா வீட்டுக்கு அனுப்பிவைத்தாராம் (இதற்கும் பிறகு நடந்ததற்கும் தொடர்பு ஏதாவது இருந்ததா என்று நான் பிறகு யோசித்ததுண்டு). பத்தரின் தரகு வேலையால் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. திருமண நாளுக்கு முதல் நாள் மாலை சீதனப் பேச்சு முடிவுற்றுச் சீதனம் மாப்பிள்ளையிடம் கையளிக்கப்படும். திருமண நாள் அருகே வர, இரத்தின மாமாவின் வீட்டில் வேலைகள் மும்முரமாக நடந்தன. பச்சையும் மஞ்சளுமான தென்னோலைகளால் வேயப்பட்ட கிடுகுகளால் பந்தல்கள் கட்டப்பட்டுக் கொன்றை, சம்பங்கி, வெள்ளையும் இளஞ்சிவப்புமான செவ்வரளி, செம்மஞ்சள் நிறத் தென்னம்பூ போன்ற பலவகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டன. கூரைக்குக் கீழே வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டன. தரையில் இந்தியக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. ஒரு பந்தலில் மிகையாக அலங்கரிக்கப்பட்ட கூரைக்குக் கீழே உயர்த்தி வைக்கப்பட்ட திண்ணைதான் மணவறை. அதிலே நண்பர்களோடு மணமகன் அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னால் ஒரு பித்தளைக் குடத்தின் மேல் வெற்றிலைகளும், மஞ்சள் எலுமிச்சம் பழமும், பூக்களும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அவை மகப்பேற்றுக்கான சின்னங்கள். இரத்தின மாமா காசியிலிருந்து கையால் நெய்யப்பட்ட சரிகை வேலைப்பாடுள்ள கூறைப்புடவை ஒன்றைக் கொண்டுவர ஒழுங்குபடுத்தியிருந்தார். குங்கும நிறத்தில் மின்னிய அந்தப் புடவையின் விலை அந்தக் காலத்திலேயே மூவாயிரம் ரூபாய். வளவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து உள்ளூர்த் தவில் வாத்தியக்காரரைத் தவிர, தஞ்சாவூரிலிருந்து இரண்டு சங்கீதக் கோஷ்டிகளை வீட்டுக்குள் கச்சேரி வைக்கக் கொண்டுவந்திருந்தார். ஒவ்வொரு விருந்தினரின் வருகையையும் வாசற் தவில்காரர் அறிவிக்க, சிறுவர் குழாம் சீனப்பட்டாசு வெடிப்பதற்கு ஓடிப் போக, உள்ளேயிருக்கும் ஒரு சங்கீதக் கோஷ்டி கச்சேரியை ஆரம்பிக்க, மக்கள் கையிலிருக்கும் எல்லா விதமான ஆயுதங்களாலும் வெடிவைத்துக் கோலாகலமாக விருந்தினர்களை வரவேற்பார்கள். ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் திருமணப் பரிசுகள் ஊர்வலமாக வந்தபடி இருந்தன. இரண்டு பேர் சுமக்கும் ஒரு தடியின் இரண்டு பக்கமும் தொங்கும் வாழைக் குலைகள், இலுப்பெண்ணை, நல்லெண்ணைச் சாடிகள், கால்நடைகள், கோழிகள், அரிசி மூட்டைகள், சாராயப் போத்தல்கள், சுருட்டுப் பெட்டிகள், கத்தரி, பலா, முருங்கை போன்ற காய்கறிகள், மாம்பழம், பப்பாசிப்பழம், ஜம்பு போன்ற பழவகைகள். கொஞ்சம் வறிய மக்கள் திருமண விருந்துக்குச் செய்யப்படும் கறிகளுக்குக் கூட்டுச் சேர்ப்பதற்காகத் தேங்காய்களை அனுப்பி வைத்தார்கள். திருமணத்துக்கு முதல் நாள் ஒருவர் மாமரத்துக்குக் கீழே உட்கார்ந்தபடி மணித்தியாலக் கணக்காக நெற்றியில் பொட்டாக அணிவதற்காகச் சந்தனம் அரைத்துக்கொண்டிருந்தார். அரைத்த சந்தனம் வெள்ளிப் பேழைகளில் போடப்பட்டு விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்குப் பன்னீர் தெளித்த பிறகு, சந்தனப் பொட்டு போடுவதற்காக நீட்டப்படும். வெளியே மாந்தோப்பில் மூன்று கல் வைத்த அடுப்புகளில் பென்னாம்பெரிய கிடாரங்கள் சோறு கறி சமைப்பதற்காக வைக்கப்பட்டன. திருமணத்துக்கு முந்நூறு விருந்தினராவது வருவார்கள். அதைத் தவிர, தாழ்த்தப்பட்ட சமூக வேலையாட்களுக்கும் மிஞ்சிய உணவு வழங்கப்படும். அது எல்லா விருந்துகளின் பின்னரும் நடக்கும் பாரம்பரிய வழக்குமுறை. முதலில் பெண்கள் ஆண்களுக்கு உணவு பரிமாறுவார்கள். அதற்குப் பிறகு பெண்களும் வேலையாட்களும் சாப்பிடுவார்கள். அதற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்து வேலையாட்களுக்குப் புளியந்தோப்பிலோ மாந்தோப்பிலோ உணவு வழங்கப்படும். ஏனென்றால் அவர்களுக்கு வீடுகளுக்குள் வர அனுமதி கொடுப்பதில்லை. ஒரு தேர்ந்த பரிசுக் கிடாய் ஆடு வெட்டப்பட்டது. பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டன. சலவைக்கார வண்ணார் ஊர்வலம் செல்வதற்கு விரிப்பதற்காகக் கட்டுக் கட்டாக வெள்ளைத் துணி கொண்டுவந்தார். இரண்டு யானைகள் பாகர்களோடு வந்தன. மாப்பிள்ளையும் பெண்ணும் அவற்றில்தான் கோவிலுக்குப் போய் வருவார்கள். பக்கத்து ஊர் சங்கீதக் கோஷ்டிகளெல்லாம் அருகில் கூடாரம் போட்டிருந்தார்கள். சாத்திரியார், வழக்கறிஞர், பத்தர் அவர்களோடு ஆறு மாமா பிற்பகல் நேரம் வருவார். அப்போதுதான் சீதனம் பேசி நிர்ணயிக்கப்படும். இரத்தின மாமா முற்றத்தில் ஒரு மேசைக்கருகே உட்கார்ந்திருந்தார். மேசையில் ஒரு கிண்ணத்தில் மாதுளங்கொட்டைகளும் அதற்கருகே ஒரு போத்தல் சாராயமும் வைக்கப்பட்டிருந்தன. நானும் என் ஐந்து சகோதரர்களும் இரத்தின மாமாவைச் சுற்றி முண்டியடித்துக்கொண்டு நின்றோம். அவர் சிவப்பும் தங்கமுமாகச் சரிகை வைத்த தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடைய மேலங்கி முழங்கால் வரைக்கும் தொங்கியது. மேலே கழுத்துவரைப் பொத்தான் போடப்பட்டிருந்தது. அடிக்கடி கொஞ்சம் மாதுளங்கொட்டைகளை வாய்க்குள் போட்டு, ஒரு மிடறு சாராயமும் குடித்தார். பத்தர் சாத்திரியாருடன் வந்து சேர்ந்தார். “இருங்கோ” என்று சொன்ன இரத்தின மாமா “எங்கே இந்த ஆறு? தாமதமாப் போச்சு…” என்று கேட்டார். “கெதியா வந்திடுவார்” என்று பத்தர் தேற்றினார். இரத்தின மாமா பொறுமையில்லாமல் மேசையில் விரல்களால் தாளம் போட்டார். இன்னும் கொஞ்சம் சாராயம் குடித்தார். தட்டாருக்கோ சாத்திரியாருக்கோ சாராயம் கொடுத்து உபசரிக்கவில்லை. சாதி ஒழுங்குமுறையில் அவர்களுக்கு உட்காரும் தகுதி வழங்கப்பட்டிருந்தாலும் சேர்ந்து உண்பதற்கோ குடிப்பதற்கோ தகுதி வழங்கப்படவில்லை. இரத்தின மாமா சிந்தனையில் மூழ்கியிருந்தார். இன்றைய தினம் அவரது செல்வத்தின் பெரும்பகுதியைக் கொடுத்து விடப் போகிறார். தனக்கென்று இருந்த வீட்டையும் கொஞ்சம் வருமானத்துக்காக ஒருசில வயற்காணிகளையும் மட்டும்தான் வைத்துக்கொள்ளப் போகிறார். சீதனம் கொண்டு வருவதற்கு யாராவது மகன் இருந்திருந்தால் அவரை இது இவ்வளவாகப் பாதித்திருக்காது. கடைசியில் ஆறு மாமா ஒரு வழியாக வந்து சேர்ந்தார். வெள்ளைத் தலைமுடி குடுமியாகப் போடப்பட்டு, உருக்கி வார்த்தது போல இருந்த அவரது காதுகளில் கடுக்கன் தோடுகள் தொங்க, மிகவும் ஒல்லியாக மிடுக்காக இருந்தார். அவரும் முழங்கால் வரைக்கும் கறுப்பு நிற மேலங்கி அணிந்திருந்தார். “இதைக் கெதியா முடிப்பம்” என்றார் இரத்தின மாமா. “சரி, சரி” என்றபடி உட்கார்ந்த ஆறு மாமா, ஒரு சின்ன வெள்ளி உரலையும் உலக்கையையும் பையிலிருந்து எடுத்து அதற்குள் கொஞ்சம் வெற்றிலை பாக்கைப் போட்டு இடிக்க ஆரம்பித்தார். இரத்தின மாமா தாழ்த்திய குரலில் பேச ஆரம்பித்தார். “சகுனங்கள் எல்லாம் சரியாம். சாதகமும் நல்ல பொருத்தம் எண்டு சாத்திரியார் சொல்லுறார்.” எனது இருதயம் அடிக்கும் சத்தம் எனக்குக் கேட்டது. ‘சகுனம்’ என்ற சொல் ஏதோ பயங்கர மர்மங்களின் ஆட்டங்களை நினைவுக்குக் கொண்டுவந்தது. “அப்பிடித்தான் கேள்விப்பட்டன்” வெற்றிலை பாக்கை இடித்தபடி ஆறு மாமா சொன்னார். விருந்தினர் பந்தலில் பெண்கள் பரிவாரம் சூழ நின்ற சுந்தரியைக் கண்டேன். எல்லோரையும் போல அவளுக்கும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிறைந்திருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி நாணமும் தன்னடக்கமும் கொண்டவளாய் நின்றாள். வழக்கறிஞர் கை நிறைய வீடு – காணி உறுதிகளைத் தூக்கிக் கொண்டு முற்றத்துக்கு வர, இரத்தின மாமா அவற்றைக் கையில் வாங்கிக்கொண்டார். “சுன்னாகத்து வயல் காணி எல்லாவற்றையும் எனது மகளுக்கு எழுதிவிடப் போகிறேன்” என்று இரத்தின மாமா ஆறு மாமாவைப் பார்த்துச் சொன்னார். “தவறணைக்குப் பின்னாலே உள்ள போயிலைக் காணி எப்பிடி?” ஆறு மாமா கேட்டார். “அதுவும் அவளுக்குத்தான்” என்றார் இரத்தின மாமா. ஆறு மாமா தொடர்ந்து வெற்றிலை பாக்கை இடித்துக்கொண்டிருந்தார். “அது இரண்டுக்கும் இருபத்தையாயிரம் பெறுமதி” இரத்தின மாமா தொடர்ந்தார் “ஐம்பதாயிரம் காசாக. மிச்சத்துக்கு இந்தக் காணியில் ஒரு பங்கையும் பக்கத்து வீட்டையும் குடுக்கிறன். வா, எல்லைக் கோட்டைக் காட்டுறன்.” அத்துடன் அவர்கள் எழுந்து கிணற்றடி நோக்கிப் போனார்கள். நானும் எனது சகோதரர்களும் பின் தொடர்ந்தோம், மற்ற வீட்டுக்காரர்களும் கூட்டமாகத் தொடர்ந்தார்கள். இரத்தின மாமா கிணற்றடியில் நின்று, மாதுளந்தோப்பின் நடுவே வளர்ந்திருந்த ஒரு மாமரத்துக்கு அப்பால் சுட்டிக் காட்டி “இதுதான் எல்லை” என்றார். “ஓ” என்றார் ஆறு மாமா. “பக்கத்துக் காணிக்குக் கிணறில்லாட்டி என்ன பிரியோசனம்? இரத்தின மச்சான், எல்லைக் கோட்டைக் கிணத்துக்கு நடுவால போடு. அப்பிடியெண்டா பக்கத்துக்கு வீட்டுக்குத் தண்ணி உரிமை இல்லாமல் போகாது.” இரத்தின மாமாவின் முகம் கறுத்தது. தனக்குப் பிரியமான மாதுளை மரத்தை ஏறிட்டுப் பார்த்தார். சீதனக் காணிக்குக் கிணற்றுக்கு நடுவில் எல்லைக் கோடு போட்டால், அந்த மரம் இனி அவருக்குச் சொந்தமில்லை. “கிணறு பாவிக்கிற உரிமையை எழுதித் தாறன்” இரத்தின மாமா சொன்னார், “ஆனால் எல்லைக் கோடு மாமரத்தடியோட போகட்டும்.” “நியாயமில்லாமல் கதையாத” ஆறு மாமா பதில் சொன்னார், “கிணத்துக்குள்ளால எல்லை போகட்டும். அதுதான் இலகுவான தீர்வு.” “இல்லையில்லையில்லை!” இரத்தின மாமா பிடிவாதத்துடன் முகத்தைக் கோணினார். பத்தர், இரத்தின மாமாவின் காதுக்குள் ஏதோ குசுகுசுத்தார். அது இரத்தின மாமாவை மிகவும் குழப்பிவிட்டது. பத்தர் பிறகு ஆறு மாமாவின் பக்கம் திரும்பி ஏதோ சொன்னார். “நான் சொல்லுறதைக் குறை நினைக்காத இரத்தி… கிணறு அல்லது கிணத்தின் பாதி என்ர மகனுக்கு வாற காணியில கட்டாயம் இருக்க வேணும்” ஆறு மாமா சொன்னார். பத்தர் மீண்டும் இரத்தின மாமாவின் காதில் ஏதோ குசுகுசுத்தார். இரத்தின மாமா “இல்லை!” என்று அடித்துச் சொல்லிவிட்டார். பத்தர், ஆறு மாமாவின் பக்கம் திரும்பி சலாம் போட்டுவிட்டு “கிணத்தில என்ன இருக்கு? நீங்கள் எப்ப வேணுமெண்டாலும் இன்னுமொரு கிணத்தைக் கிண்டிப் போட்டுப் போகலாம்” என்றார். “நான் கேட்ட மாதிரி எல்லைக் கோடு போடாட்டில்…” ஆறு மாமா தனது உரிமைகளைப் பாதுகாக்கும் கறாரான தொனியில் சொன்னார், “இந்தக் கலியாணம் நடக்காது!” “ஐயா! ஐயா!” பத்தர் கைகளைப் பிசைந்தபடி கெஞ்சினார். “மடையன்!” என்று இரத்தின மாமா முணுமுணுக்க, ஆறு மாமா திகைத்துப் போனார். இலங்கையில் ‘மடையன்’ என்று சொல்வது பெரிய அவமரியாதை. “சுத்த மடையன்” என்று திரும்பவும் சொன்ன இரத்தின மாமா, “பாழாப்போன கலியாணம்!” என்று சொல்லிவிட்டுத் தோப்புக்கூடாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சீதனப் பேச்சுவார்த்தை குழம்பியதால் திருமணம் நிறுத்தப்பட்டது. பந்தல்களும் தோரணங்களும் அவிழ்க்கப்பட்டன. அன்றிரவு சாப்பிடும்போது “அந்தப் பிசாசு! அவன் என்ர கிணத்தடி மாதுளையைத்தான் கண் வச்சான்!” என்று இரத்தின மாமா கத்தினார். அடுத்த நாள், மலாயாவில் பெரிய தோட்டம் வைத்திருந்த தன் மைத்துனருக்கு அவரின் மகனுக்கும் சுந்தரிக்கும் கல்யாணம் பேசிக் கடிதம் அனுப்பினார். இரண்டு வாரத்துக்குள் மாப்பிள்ளை வந்து சேர்ந்தான். திருமணம் கோலாகலமாக நடந்தது. யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒரு மின்னியற்றி இயந்திரம் வாடகைக்கு எடுத்து வீட்டைச் சுற்றியும் மரங்களுக்கு மேலும் வண்ண மின்சார விளக்குகளெல்லாம் போட்டு அமர்க்களம் பண்ணிவிட்டார். இந்த விளையாட்டெல்லாம் ஆறு மாமாவைப் பிரமிக்க வைக்கத்தான். ஆறு மாமா திருமணத்துக்கு வருகை தரவில்லை. ஆனால், கொஞ்ச நாள் போனதும் இரத்தின மாமாவுக்குக் காட்டுக் கோழியும், காட்டுப் பன்றித் தொடைகளும், மான் இறைச்சியும் வழக்கம் போல வேட்டைக்குப் பின்னர் அனுப்பி வைக்கத் தொடங்கினார். ராஜாவுக்குக் கல்யாணப் பேச்சு நேரம் சுந்தரிமேல் காதல் பிறந்து விட்டதால், பல வருடங்கள் கல்யாணம் வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்றான். பிறகு ஒருநாள் ஒரு கொழும்புப் பெண்ணைச் சந்தித்ததும் மனம் மாறிவிட்டான். அவளுக்குப் புத்தளத்தில் பெரிய தென்னந்தோப்புகள் இருந்தன. அவள் டென்னிஸ் விளையாடுவாள். கார் கூட ஓட்டத் தெரியும். அவள் உதட்டுச் சாயம் பூசி, கையில்லாத ரவிக்கையும் அணிந்ததைப் பார்த்து ஊரார் திகைப்பில் ஆடிப் போய்விட்டார்கள். ஆனால் அவள் ஆறு மாமாவின் வயதான காலத்தில் நல்ல மருமகளாக அவரைச் சந்தோஷமாக வைத்திருந்தாள். அவளுக்காக வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு டென்னிஸ் மைதானத்தையே ஆறு மாமா கட்டிக் கொடுத்தார். ஆனால் அவளுக்கு மூத்த மகன் பிறந்த கையோடு அவளது டென்னிஸ் ஆர்வம் விட்டுப் போயிற்று! இரத்தின மாமா இறந்தபோது, எனக்குப் பத்து வயதுகூட இல்லை. ஆனால் வேலைக்காரி ஒரு கிண்ணத்தில் கிணற்றடி மாதுளைமரத்தின் பழக் கொட்டைகளைக் கொண்டு வரும்போது அவரது வட்டமான, சுருக்கமில்லாத முகத்தில் மலரும் மகிழ்வு எனக்கு இப்போதும் கண் முன்னால் தெரிகிறது. அந்த மரம் அச்சுவேலி முழுக்கப் பிரபலமான மரமாக இருந்தது. இன்னும் இருக்கிறது. Artist : Arpitha Reddy எழுத்துக்கினியவன் என்ற புனைபெயரில் மொழியாக்கங்கள் செய்துவரும் ந.அசோகன் தமிழ் – ஆங்கிலம் என இருவழிகளிலும் மொழியாக்கங்களைச் செய்து வருகிறார். இவரது ஆங்கில மொழியாக்கங்கள் Copper Nickel, Lunch Ticket, Jaffna Monitor ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ் மொழியாக்கங்கள் காலச்சுவடு, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது ஆங்கில மொழியாக்கமொன்று Gabo Prize-க்கான இறுதிப் பட்டியலில் தேர்வானது. https://thadari.com/the-pomegranate-tree-t-tambimuttu-short-story/?fbclid=IwdGRleAPHMyRleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeCFdVxcuG8DMvh6BM5WiRfhB9f2VThtnfL0rsSEfZH3RPMi9z_Vw_uwQTi2Y_aem_tH25YO_Qwhrh963g_Z5J3w
- Today
-
வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
தனித்துவம் மிக்க ஓவியக் கலைஞர் ஓவியங்கள் - கதைகளுக்கு உயிர்த் துடிப்பை ஊட்டுவதோடு கதை சித்திரிக்கும் பாத்திரம், பகைப்புலம், காட்சிகளை வாசகர் மனதில் பதியவும் செய்கிறது என்பதில் தவறிருக்க முடியாது. சிலவேளை எனது கதைகளுக்கு வரையப்பட்டுள்ள படங்களைப் பார்த்துக் கொண்டு அதில் நான் ஒன்றிப்போய் விடுகின்றேனென்றால் அது ரமணியின் படங்களில் தான். இப்படிச் சொல்லும் போது ஒரு ஓவியன் எவ்வளவு தூரம் வெற்றியடைகின்றானென்பதை, அப்படைப்பாளியால் தான் மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும் என்ற உண்மையை யாரும் மறுக்க மாட்டார்களென்றே நினைக்கிறேன். அப்போதெல்லாம் யார் இந்த ஓவியர் ரமணி? பெரிய பத்திரிகை நிறுவனங்களில் கொழுத்த சம்பளத்துடன் கடமையாற்றுகின்றவரோ! என்ற எண்ணம் தவிர்க்க முடியாது ஏற்பட்டதுதான்! அன்று......... பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் முதல் வருட மாணவனாகப் பிரவேசித்த முதலாம் நாள் - முன்பே தெரிந்த சில நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போதுதான், புன்னகை சிந்திய படி சாந்தம் ததும்பும் அந்த உருவம் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. 'இவர்தான் ரமணி இவரது சொந்தப் பெயர் வி. சிவசுப்பிரமணியம்' அறிமுகப் படலம் நடக்கிறது. திறமையில் மாத்திரமல்ல வயதிலும் முதிர்ந்தவர் தானென்று எனது எண்ணத்தை உடனே மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. மகிழ்ச்சித் துடிப்பில் அந்த ஆற்றல் மிக்க கரத்தை என்னால் விட்டு விட முடியவில்லை. அவருடைய அனுபவங்களையிட்டுக் கதைக்க வேண்டும் போலவும் இருந்தது. ஆயினும் இனித் தொடர்ந்து சந்திக்கும் வாய்ப்பு முழுமையாக இருக்கிறது தானே என்பதால் கூடவே ஒரு நிம்மதி. 'காலையில் இருந்தே எதிர் பார்த்திருந்தனான்' இதுதான் முதன் முதலில் என் செவிகள் சந்தித்த ரமணியின் குரல். முதல் வருட மாணவர்களை, பழைய மாணவர்கள் - ஆசிரிய கலாசாலை. பல்கலைக் கழகம் முதலிய இடங்களில் எதிர்பார்ப்பது எதற்காகவென்று தெரியும்தானே..........? அத்தகைய முதன்மைத் திமிர்களைத் தாண்டிய அக்குரலில் ஒரு புலமை நெஞ்சின் துணை முதல் நாளிலேயே கிடைத்துவிட்ட பூரிப்பு எனது மெய்யெல்லாம் பரவியது. அதைத் தொடர்ந்து எந்த வேளையிலென்றாலும் எத்தனை முறையென்றாலும் தனக்கேயுரித்தான புன்னகையை உதிர்த்த படிதான் செல்வார். நானும் கூட எப்பொழுது கலாசாலை நேரத்தில் ஓய்வு கிடைக்கிறதோ, அப்பொழுது நுண்கலைப் பகுதியை ஒருமுறை நோட்டம் விட்டு, அங்கும் பாடவேளையில்லாமலிருந்தால் ரமணியை நெருங்கி விடுவேன். நண்பர் அன்பு ஜவஹர்ஷாவும் கூடவே வந்து விடுவார். பிறகென்ன? பரஸ்பரம் கருத்துப் பரிமாறல்களும் அனுபவ வெளிப்பாடுகளும் தான். கொழும்பிலிருந்த காலத்தில் சில பத்திரிகாசிரியர்கள் நாலைந்து கதைகளைத் தூக்கித் தந்து, விருப்பமானதொன்றுக்குப் படம் கீறித் தருமாறு தந்துவிடுவதாகவும் இதனால் மிகுந்த ஆர்வத்துடன் அனுப்பும் குறிப்பாக இளம் எழுத்தாளர்களின் நிலையை எண்ணிப் பார்க்கத் தவறுகிறார்களென்றும் அவர் சொல்லும் போது, ஒரு பத்திரிகாசிரியன் எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டுமென்ற கருத்தை ரமணி அனுபவ வாயிலாகச் சொன்னது இன்று கூட பத்திரிகாசிரியர்களுக்குப் பொருத்தமானதுதான். இன்று நேற்றல்ல, கடந்த பத்தாண்டுக்காக ஓவியத் திறமையை, பத்திரிகைத் துறையோடு பிணைத்துப் பணிபுரிந்து வரும் இவர் இதுவரை சுமார் நூறு புத்தகம், சஞ்சிகைகளுக்கு அட்டைப்படம் வரைந்துள்ளார். அநேகமாக எல்லா ஈழத் தமிழ் தேசியப் பத்திரிகைகளிலும், 'தவச', வீரகேசரி வெளியீடுகளிலும் படம்வரைந்து வருகின்றார். குறிப்பாக நவீன பாணித் தமிழ் எழுத்துக்களையும் பத்திரிகை, சஞ்சிகைகளில் அறிமுகப்படுத்தியதும் ரமணி என்றே சொல்ல வேண்டும். இதை எழுதும் போது, அண்மையில் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட 'பூ' ஞாபகம் வருகின்றது. அதன் உள்ளடக்கத்தைப் பாராட்டியவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமானோர் நேரிலும் கடிதமூலமும் அதன் அட்டையைத்தான் பாராட்டினார்கள் என்ற செய்தி இதைப் படித்த பின்புதான் ரமணிக்குக் கூடத் தெரியவரலாம். 'பஞ்சமர்' வெளிவந்த புதிதில், அதன் அட்டையைப் பார்த்தவுடனே ஒருவர்... 'ஏன் இந்த முகங்கள் இவ்வளவு ஆவேசமாக இருக்கின்றன?' என்று கேட்டதாக மன்னார் நண்பரொருவர் சொன்னார். 'போராட்ட உணர்வு கொண்ட தாழ்த்தப்பட்ட மக்களை டானியல் சித்திரித்துள்ளார். அதைத் தானே ரமணி அட்டையில் தீட்டியுள்ளார்' என்று அவரிடம் கேட்டேன் நான். அதிகமேன் கடந்த பல வருடங்களாக 'மல்லிகை' அட்டையை அலங்கரித்து வருவது இவரது நவீன படங்கள்தானே. 'மல்லிகை அட்டையா? அது ரமணிதான் வரைய வேண்டும்' என்று திரு. டொமினிக் ஜீவா வாய்விட்டுச் சொல்வார். 'ஈழத்தின் முதல் தரமான ஓவியர்' என்று ஓவியக் கலைஞரான 'சிரித்திரன் - சுந்தர்' கூடப் பலதடவை மனந் திறந்து கூறியுள்ளார். இத்தனைக்கும் இவர் ஒரு சிற்பக் கலைஞரும் கூட என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம். என்ன இருந்தாலும் இங்கு கலைஞர்களுக்கு ஏற்ற சன்மானங்களும் கௌரவங்களும் அளிக்கப்படுவதில்லையென்ற உண்மையை 'சில வேளை நான் அட்டை வரைந்த புத்தகங்களை நானே வாங்கிப் பாதுகாக்க வேண்டியுள்ளது' என்று கூறும் பொழுது அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நிலைமை எப்போதுதான் மாறுமோ? ஒருநாள் கையில் 'கணையாழி' யுடன் நடந்து கொண்டிருந்தேன் நான். எதிர்ப்பக்கமாக சைக்கிளில் வந்தவர், நிறுத்தி இறங்கி என் கையிலிருந்த சஞ்சிகையை வாங்கி அட்டைப் படத்தைப் பார்த்தவர் 'இத்தகைய நவீன ஓவியங்களை ஈழத்துச் சஞ்சிகைகளும் வெளியிட வேண்டும். இத்தகைய படங்களை வாசகர்கள் இரசிக்கச் செய்ய வேண்டுமல்லவா?' என்று கேட்டவாறே பக்கங்களைப் புரட்டத் தொடங்கினார். இடையிடையே அவரது கவனம் புதுக்கவிதைகளில் படிவதை நான் அவதானிக்கத் தவறவில்லை. 'ஆழமான விடயங்களைக் கூட மிக அழகாகப் புதுக்கவிதைகளில் எழுதுகிறார்கள். ஈழத்தில் கூட நிறைய வெளிவருகின்றன' என்று தனது கருத்தைக் கூட அப்போது கூறி வைத்தார். இயற்கையான கலைத்துவம் கொண்ட ரமணி அத்தோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. நுண்கலைகளைக் கல்லூரியில் பயின்று, தனது ஆற்றலை நெறிப்படுத்தி 'டிப்ளோமா இன் ஆர்ட்' இல் முதற்தரத்தில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து, தேசிய நூதன சாலையில் தயாரிப்பு உதவியாளராக மூன்று வருடம் கடமையாற்றியுள்ளார். மல்லாகத்தில் வசிக்கும் இவர் தற்பொழுது ஏறாவூர் அலிகார் மகாவித்தியாலயத்தில் விசேட ஆசிரியராகப் பணிபுரிகிறார். ரமணியிடமிருந்து கலையுலகம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பு நிச்சயம் வீண் போகாது என்றே நம்புகிறேன். - திக்குவல்லை கமல் (மல்லிகை அட்டைப்பட ஓவியங்கள் - மார்ச் 1974)
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
ஏராளனின் அத்தனை பகிர்வுகளும் அருமை .ரசித்தோம் . நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 86 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 86 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மகாவம்சத்தின் 22 ஆம் அத்தியாயத்தின் [காமனி ஜனனம்] 13 முதல் 22 வரையிலான வசனங்களில் விஹாரா தேவியை சுற்றி ஒரு அபத்தமான கதை சுழல்கிறது. கோதாபயனின் மகன், காகவண்ண தீசன் என்று அழைக்கப்பட்ட இளவரசன், தந்தையின் மரணத்திற்குப் பிறகு அங்கு ஆட்சி செய்தான். நம்பிக்கையுள்ள இந்த அரசனுடைய மனைவியின் பெயர் விகார தேவி ஆகும். கல்யாணி மன்னன் தீசனின் மகளான அவள், உறுதியான நம்பிக்கையுடையவள் ஆகும். தீசனின் தம்பி ஐய உதிகன் என்பவன் ராணியைக் காதலித்ததால் தீசனுடைய கோபத்துக்குள்ளாகி, பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டான். அவன் ஒளிந்து கொண்டிருந்த பிரதேசத்துக்கு, பின்னாளில் அவன் பெயரே இடப்பட்டது. ராணிக்கு இரகசிய மடல் ஒன்றைப் பிக்கு வேடம் அணிந்த ஒருவனிடம் அவன் கொடுத்து அனுப்பினான். அவன் அரண்மனை வாயிலில் நின்று கொண்டு, வழக்கமாக அரண்மனையில் உணவு கொள்ளும் தேரர் ஒருவருடன், அவர் அறியாமலே, உள்ளே நுழைந்து விட்டான். தேரருடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தியதும், அரசனுக்குப் பின்னே தன்னைக் கடந்து செல்லும் ராணியின் கண்ணில் படும்படியாக அந்த மடலைத் தரையில் போட்டான். சத்தம் கேட்டுத் திரும்பிய அரசன் கண்ணில் இது பட்டுவிட்டது. மடலை எடுத்துப் படித்த அவன் கோபத்தால் சீறினான். கோபத்தில் சிந்தித்துப் பாராமல் தேரரையும், அவருடன் இருந்த வேடதாரியையும் கொன்று கடலில் எறியச் செய்து விட்டான். இதனால் கோபமடைந்த கடலரசன் பொங்கினான். அதனால், நாட்டுக்குள் கடல் புகுந்தது. உடனே அரசன் தன்னுடைய அழகிய பெண்ணான, இளவரசி தேவி என்பவளை ஒரு பொற்கலத்தில் வைத்தான். கலத்தின்மீது அரசகுமாரி என்று பொறிக்கப் பட்டிருந்தது. அதை அப்படியே அதே கடலில் விடச் செய்தான். அந்தக் கப்பல் இலங்கை விகாரத்துக்கருகே கரையில் ஒதுங்கியது. அரசன் காகவனதீசன் அவளைக் கண்டு தன் ராணியாக்கினான். இதனால் இவளுடைய பெயருக்கு முன் விகார என்ற அடைமொழி வந்தது. ஆகவே மேற்கண்ட மகாவம்ச கதையில் மன்னர் ஒரு துறவியைக் கொல்கிறார், இது கடல் கடவுளின் கோபத்தை எழுப்புகிறது, அது நாட்டை மூழ்கடிக்க வெள்ளத்தை ஏற்படுத்தியது என்றாகிறது. இராசாவலிய, அந்த கடல் கடவுளை மணிமேகலை [Mannimehala] என்ற தமிழ்ப் பெயரால் அடையாளம் காட்டுகிறது. ஆனால், மகாவம்ச, மகாநாமா அந்த தமிழ்ப் பெயரையோ அல்லது கடல் கடவுளின் பெயரையோ குறிப்பிடவில்லை. இரண்டு பழம் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவற்றில், கடலின் தெய்வம் மணிமேகலை ஆகும். இந்த இரு தமிழ் காவியங்களும் தீபவம்சத்துக்கும் முன்னையது ஆகும். தமிழ் இலக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ள இதே போன்ற கடல் பிரளயம் [sea deluge] உள்ளது. விகாரா தேவி ஒரு தங்கப் பாத்திரத்தில் வைக்கப்பட்டு கடலில் மிதக்க விடப்பட்டார். தமிழ் வீரனைக் கொன்ற வாளில் இருந்து இரத்தக்கறை படிந்த தண்ணீரைக், ஒரு தமிழ் வீரனின் துண்டிக்கப்பட்ட தலையில் தனது ஒரு காலை வைத்துக் கொண்டு குடிக்க வேண்டும் என்று ஒரு கொடூரமான ஆசையை விகாரா தேவி கொண்டிருந்தார். போர் இல்லாத நேரத்தில் அவள் தனது இந்த கொடூரமான தாகத்தைத் தணித்தாள்; அத்தியாயம் 22 இன் 55 முதல் 58 வரையிலான வசனங்களைக் காண்க. ' ........ அரசன் இதையறிந்ததும், அவனைப் பிடிப்பதற்காகத் தன்னுடைய முதல் வீரனை அனுப்பினான். குதிரையில் ஏறிக் கொண்டு இவ் வீரன் அவனைத் தொடர்ந்தான். குதிரை மேலிருந்தவாறே வேலு சுமணன் காட்டில் மறைந்து கொண்டு, துரத்தி வந்தவன் அருகில் நெருங்கிய போது வாளை நீட்டினன். குதிரைமீது வேகமாக வந்த அவனுடைய தலை துண்டுபட்டுக் கீழே விழுந்தது. குதிரையையும் வீரனுடைய தலையையும் எடுத்துக் கொண்டு, வேலு சுமணன் அன்று மாலையே மகாகாமத்தை [Mahagama] அடைந்தான். ராணி விரும்பிய வண்ணம் தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டாள். அரசன் வேலு சுமணனுக்கு (அவன் செய்த சேவைக்கு) ஏற்ற பரிசுகளை அளித்துக் கெளரவித்தான்.' - இவள் தான் தன் இரண்டு மகன்களையும் வடிவமைத்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது? Part: 86 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 A ridiculous tale is spun around Vihara Devi in the verses 13 to 22 of Chapter 22 of the Mahavamsa. The king kills a monk in the above tale which arosed wrath of the sea-god and deluge took place to inundate the country. Rajavaliya identifies the sea-god as Mannimehala, a Tamil name, and Mahanama did not want to keep the Tamil name and did not name the god. In the two Tamil epics, the Silapathikaram and the Mannimegalai, the goddess of sea is Mannimegalai. There is a similar sea deluge described in Tamil literature. Vihara Devi was put on a golden vessel and let to drift in sea. Vihara Devi is also a Naga princess. Vihara Devi had a cruel desire to drink the blood stained water from the sword, which was used to slain Damila soldier while putting one of her legs on the severed head of the Damila soldier. She did quench her cruel thirst during the time of no war; see verse 55 to 58 of Chapter 22. This is the woman who moulded her two sons. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 87 தொடரும் / Will follow துளி/DROP: 1985 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 86] https://www.facebook.com/groups/978753388866632/posts/33225259250455961/?
-
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
இந்த போர்மூலாவின்படி பார்த்தால் உலக ஒழுங்கு பிழைத்துவிடும்.
-
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
கிறீன்லாந்துக்கு அண்மையாக டென்மார்க்கைவிட அமெரிக்காவே உள்ளது. எனவே இது அமெரிக்காவுக்கே சொந்தம் என்கிறார்கள்.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அப்படியானால் தமிழர் போராட்டத்தை நடத்தியவர்களில் பலர் அப்படிச் செய்திருக்க வேண்டும். அப்படித் தேடினார்களா? அதற்கான மனம் அவர்களுக்கு இருந ததா?
-
தகுமோ… இது முறையோ! - கிரீன்லாந்து விவகாரம்
கிரீன்லாந்தை டென்மார்க் நேரடியாக தனது காலனி ஆதிக்கத்துக்குள் வலிந்து கொண்டுவரவில்லை. நோர்வேயிலிருந்து புறப்பட்டு ஐஸ்லாந்து வழியாக சென்ற எரிக் ரௌட என்ற வீக்கிங் கொள்ளைக்காரத் தலைவன் 980-ஆண்டளவில் வேறும் பல நோர்வே குடியேறிகளுடன் கிரின்லாந்து நாட்டை முதன்முதலாக சென்றடைந்து ஆக்கிரமிப்பு செய்தான். அதற்கு முன்னர் அந்த நாட்டில் பூர்வீககுடிமக்களாக எஸ்கிமோவர்கள் என்று இன்று அழைக்கப்படும் இனுட் இனத்தை சேர்ந்த ஆதிவாசிகளே காணப்பட்டார்கள். சில நுற்றாண்டளவில் இஸ்கண்டிநேவியன் நாடுகள் தமக்குள் ஒப்பந்தங்கள் செய்து ஒரு டேனிஷ் நாட்டு அரசனின் தலைமையில் இணைந்தன. அந்த காலகட்டத்தில் நோர்வே நாட்டின் வீக்கிங் கொள்ளைகாரர்கள் Greenland, Iceland, Faroe island, Hebrides, Isle of Man, Orkney, Shetland ஆகிய பிரதேசங்களை படிப்படியாக கையகப்படுத்திவர அவற்றை நோர்வே நாடும் பல்வேறு காலங்களில் காலனிகளாக வைத்திருந்தது. ஐக்கிய நாடாக மாறிய டென்மார்க், நோர்வே மற்றும் சுவிடன் சில நூற்றாண்டுகள் (1536-1814) அதை நீடித்து பின் முரண்பட்டு சுவீடனும் நோர்வேயும் கூட்டாக பிரிந்தன. அப்போது டென்மார்க் நோர்வேக்கு சொந்தமான காலனிகள் சிலவற்றை பிரிந்து செல்லும் நோர்வே நாட்டுக்கே திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்தும் தனது கைவசமே வைத்துக்கொண்டது. டென்மார்க்குக்கு அப்படி கிடைத்ததுதான் கிரீன்லாந்து. இப்படி காலனியாக உள்வாங்கப்பட்ட கிரீன்லாந்து படிப்படியாக டென்மார்க்கின் முடியரசுக்கு கீழ் உள்ள ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய ஒரு சுயாதீன பிரதேசமாகவும் பின்னர் படிப்படியாக மேலும் பல அதிகாரங்கள் வழங்கப்பட்ட சுயாட்சியுள்ள டேனிஷ் முடியுரிமை கொண்ட நாடாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. இன்று நோர்வே நாட்டு மன்னரின் முடியாட்சிக்கு உட்பட்டு வடதுருவம் தொடக்கம் தென்துருவம் வரை அமைந்துள்ள Svalbard, Jan Mayen, Bouvet Island, Bouvet Island, Peter I Island, Queen Maud Land(South pole) ஆகிய பிரதேசங்கள் உள்ளன.
-
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
https://www.youtube.com/watch?v=X_Bzp4_hJ78
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இவருக்கும் அப்படியா ...பலருக்கு சாதாரணமாக நடப்பது தான். தெரியாத தகவலை அறிய தந்ததிற்கு நன்றி
-
'செவ்வருக்கை' நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம்
'செவ்வருக்கை' நூல் அறிமுக உரை - சுப.சோமசுந்தரம் எழுத்தாளர் எம்.எம்.தீன் அவர்களின் சமீபத்தியப் படைப்பான 'செவ்வருக்கை' எனும் சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் பேறு பெற்றேன். தொகுப்பிலுள்ள முதற்கதையின் தலைப்பே நூலுக்கான தலைப்பானது. செவ்வருக்கை என்பது ஒரு வகை பலா மரத்தைக் குறிப்பதாகும் - வாழையில் செவ்வாழை போல. இதன் பழத்தில் சுளைகள் மிக அடர்த்தியாகவும் செவ்வண்ணத்திலும் அமைவன. கனியின் மணமும் சுவையும் தன்னிகரற்றவை. இத்தொகுப்பின் கதைகள் அனைத்தும் சாதி ஆணவம் பற்றிப் பேசுபவை. தீன் அவர்கள் தக்கோரிடம் கேட்ட உண்மை நிகழ்வுகளைக் கதைக்களத்திற்கு ஏற்றவாறு அமைத்தளித்த படைப்பு இது. நூலில் உள்ள அனைத்துக் கதைகளையும் நாம் இங்கு பேச வரவில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு நான்கு சோறு (!) பதமாய் நான்கு கதைகளைச் சொல்லி முழுச்சோற்றையும் நீங்களே உண்டு பாருங்கள் என அழைப்பு விடுவதே இவ்வெழுத்தின் நோக்கம். முதலில் செவ்வருக்கை. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் இருந்த ஒரு ஆதிக்க சாதியினரின் காட்டில் (தோட்டத்தில்) ஆத்தி புலையனும் அவன் மனைவி வெயிலாளும் மற்றும் சில குடியானவர்களும் உழைத்து வந்தனர். அதனைப் பொறுப்பாக வழிநடத்தியவன் ஆத்திபுலயன். வெயிலா நிறைமாத சூலியான நேரம் இரண்டு செவ்வருக்கைப் பழங்கள் ஒரு மரத்தில் காய்த்துக் கனிவாகின. அதனை உண்ண ஆசைப்பட்ட வெயிலா தனது அண்ணன் மாடப்புலையன் மூலமாக வெட்டிக் கொணர்ந்து ஆசை தீர உண்டாள். அதனை அந்த நில உரிமையாளர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதையுணர்ந்த ஆத்திபுலயன் குடும்பத்துடன் அங்கிருந்து தப்ப முயல, ஆதிக்க வெறி பிடித்தவர்களால் கொலையுண்டு முடிந்து போயினர். கொலையாவதற்கு முன் வெயிலா ஈன்ற ஆண் மகவினைக் காப்பாற்றிய மாடப்புலயன் அவனுக்கு செங்காடன் எனப் பெயரிட்டு வளர்த்து ஆளாக்கினான். செங்காடன் வளர்ந்து ஆளாகித் தன் அப்பன் - ஆத்தாளைக் கொன்றவர்களைக் கொன்று அந்தச் சண்டையில் தானும் உயிர் நீத்தான். இதன் பின்னர் பல இன்னல்களுக்கு ஆளான பண்ணையார் குடும்பத்துக்குப் பரிகாரம் சொன்ன மலையாள மாந்திரீகர்கள் ஆத்திபுலயன், வேலாயி, செங்காடன் ஆகியோருக்குப் பூடம் போட்டு வருடா வருடம் செய்முறைகள் செய்து வழிபடச் செய்தார்கள். இது நடந்து முந்நூறு வருடங்களுக்குப் பிறகு பழைய கதையெல்லாம் திரிந்து இப்போது பண்ணையார் குடும்பத்து வகையறாக்கள் அந்தத் தெய்வங்கள் தங்கள் குலத்தைச் சார்ந்த, தங்கள் குலத்தை ஆசீர்வதிக்கும் குலசாமி என்றே நம்புகின்றனர். தங்களுக்குக் கீழான பகைச்சாதியினர் மீது தாக்குதல் நடத்தப் போகும்போதெல்லாம் அக்குல தெய்வங்களை வணங்கி உத்தரவு பெற்றே செல்கின்றனர். "செங்காடனும் மற்ற குல தெய்வங்களும் பழியை மறந்து சமாதானம் ஆகியோ அல்லது அவர்களது அதிகாரம் கண்டு பயந்தோ சிரித்தபடியே உத்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்" என்று எழுத்தாளர் தம் கூற்றாக அங்கதத்துடன் கதையை நிறைவு செய்கிறார். எம்.எம்.தீன் அவர்களின் கதை சொல்லும் நேர்த்தியைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. எழுத்து அவருக்குப் புதிதல்ல. சமூக அவலங்களை எடுத்தியம்புவதில் நேரிடையாகச் சொல்ல வேண்டிய இடத்தில் நேரிடையாகவும், குறிப்பாகச் சொல்ல வேண்டிய இடத்தில் குறிப்பாகவும் சொல்வதில் அவருக்கு நிகர் வெகு சிலரே. ஒவ்வொரு கதையிலும் அவர் போடும் நிறைவுத் திரை பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்வது நிறைவாய் அமையும். எடுத்துக்காட்டாக, செவ்வருக்கையை இப்போது கையிலெடுப்போம். தாங்கள் முன்னர் அநீதி இழைத்தவர்களிடமே வந்து ஆதிக்க வர்க்கத்தினர் மீண்டும் அந்த அநீதியைத் தொடர்ந்திட உத்தரவு கேட்பதும், அதற்கு அவர்கள் இசைவதுமான வெளிப்பாடு நகைமுரண் மட்டுமல்ல; இன்றைய சமூக அவலத்தின் அபாரமான குறியீடும் கூட. நமக்குத் தெரிந்து தலித் சமூகத்தினர் சிலரும், ஒரு காலத்தில் மேலாடை அணிய மறுக்கப்பட்ட சமூகத்தில் பலரும் அதே பாசிச சக்திகளிடம் சரணடைந்து நிற்பது என் போன்றோர் நினைவில் நிழலாடுவது தவிர்க்க இயலாத ஒன்று. எழுத்தாளர் இக்குறிப்பைத்தான் பெரும்பாலும் கொண்டிருப்பார்; உறுதியாகத் தெரியாது. எழுத்தாளர் சிந்தித்ததை வாசகரும் சிந்திக்க வைப்பதும், அவர் சிந்திக்காதையும் சிந்திக்க வைப்பதும்தானே சிறந்த எழுத்தாக அமைய முடியும் ! போகிற போக்கில் இக்கதை தொடர்பான வேறு ஒன்றைச் சொல்வது என் கடமை என எண்ணுகிறேன். இது செவ்வருக்கை. அறிஞர் அண்ணா எழுதிய சிறுகதை செவ்வாழை. முக்கனிகளில் இரண்டு வந்து விட்டனவே ! இரண்டு கதைகளின் பொதுவான அடிநாதம் மேட்டிமைத்தனம் சாடல். செவ்வருக்கை சாடுவது சாதிய மேட்டிமையை; செவ்வாழை சாடுவது வர்க்க மேட்டிமையை. செங்கோடன் என்னும் ஏழைக் குடியானவன் தன் குழந்தைகளிடம் ஆசையை வளர்த்து, தன் வீட்டுக் கொல்லையில் செவ்வாழை ஒன்றை வளர்த்து வருகிறான். அந்த ஏழையின் கனவு செழித்து வளர்ந்தது. இரண்டொரு நாட்களில் வாழைக்குலையினை வெட்ட எண்ணுகிறான். பிள்ளைகள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் வேலை செய்யும் பண்ணையின் உரிமையாளர் தம் வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சியொன்றுக்கு அந்த செவ்வாழைக் குலையைக் கேட்டு ஆள் அனுப்புகிறார். மறுப்பது எங்ஙனம் ? தனது மற்றும் தன் குழந்தைகளின் கனவெல்லாம் நொறுங்க, அக்குலையை வெட்டிக் கொடுத்து விடுகிறான். குழந்தைகளின் அழுகை நாட்கணக்கில் ஓயவில்லை. ஓரளவு விவரம் தெரிந்த பெரிய பையனின் விரக்தி நிலையைக் கதையின் முத்தாய்ப்பாக அறிஞர் அண்ணா இவ்வாறு வைக்கிறார் - "பாவம் சிறுவன்தானே ! அவன் என்ன கண்டான் - செங்கோடனின் செவ்வாழை தொழிலாளர் உலகில் சர்வ சாதாரண சம்பவம் என்பதை !". உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் பொதுவுடமைக் கருத்தை அண்ணா முன்னெடுக்கும் கதை செவ்வாழை. தோழர் தீன் சமூக நீதியைக் கையிலெடுத்ததும், சமூக நீதியை அதிகம் பேசும் அறிஞர் அண்ணா பொதுவுடமை பேசியதும் ஒரு இனிமையான ஒப்பீடு ! வர்க்க விடுதலையும் சமூக நீதியும் பின்னிப் பிணைந்த வை என்னும் பொதுவுடைமைவாதிகளின் கருத்திற்கு உரமிடுவது. சாதியம் என்னும் இழிவு, மத எல்லைகளைக் கடந்தது என்பதை சுட்டிக்காட்ட எம்.எம்.தீன் ஒருபோதும் தவறவில்லை. இந்திய இஸ்லாமியரிடையே சாதியம் விரவிக் கிடப்பதை 'நாசுவம்' எனும் கதையிலும், கிறித்துவத்தில் சாதியப் போக்கினை 'ஊரு ஒப்பாது' எனும் கதையிலும் ஆணித்தரமாய் உரைப்பதில் அவர் பின்வாங்கவில்லை. இஸ்லாமிய சமூகம் பெருமளவில் வாழும் ஊருக்கு முடி திருத்தும் தொழிலுக்காகவே கொண்டுவரப்பட்ட குடும்பத்தின் வாரிசு ஒருவர் பிற்காலத்தில் சென்னை சென்று கட்டுமானத் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறார். தம் மகனின் திருமணத்தை இந்த ஊரில் அவர் கட்டித் தந்த 'நிலா மஹால்'இல் நடத்த முடிவு செய்து ஊரடைக்க மதிய விருந்துக்கும் மாலை வரவேற்புக்கும் தடபுடலாக ஏற்பாடு செய்து அழைக்கிறார். மதிய விருந்துக்கு அந்த ஊர்க்காரர் ஒருவர் கூட வரவில்லை. அவரும் இஸ்லாமியராயினும் அவரது சாதி கருதி ஊர் மக்களான இஸ்லாமியர்கள் (!) திருமணத்தைப் புறக்கணித்த விவரம் அவருக்குத் தெரிய வருகிறது. நியாயமான அறச்சீற்றத்துடன் மாலை வரவேற்பை ரத்து செய்துவிட்டுக் குடும்பத்துடன் சென்னைக்குக் கிளம்பிச் சென்று விடுகிறார். திருமணத்திற்கு போன மாதிரியும் இருக்கட்டும், போகாத மாதிரியும் இருக்கட்டும் என்று மாலை வரவேற்புக்கு வந்த ஊர்க்காரர்கள் சிலரை பூட்டிய கதவு வரவேற்கிறது. வந்தவர்களில் தொப்பியும் பெரிய தாடியும் வைத்திருந்த பெரிய மனுசர் ஒருவர், "என்ன இருந்தாலும் நாசுவப் பயலுக்கு இம்புட்டு பவிசும் வீம்பும் ஆவாது" என்று சொல்ல, கதை முடிகிறது. இந்திய இஸ்லாத்திலும் சாதிய மனநிலை மாறவில்லை; மாறுவதாகவும் இல்லை என்பதை 'நாசுவ'த்தின் அந்த இறுதி நொடி உணர்த்துகிறது. இக்கதை அன்வர் பாலசிங்கம் எழுதிய 'கருப்பாயி என்ற நூர்ஜஹான்' எனும் குறுநாவலை நினைவுறுத்துகிறது. சாதியக் கொடுமையால் மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்தைத் தழுவிய தலித் சமூகத்தினர் பின்னர் தம் சமூகத்தாராலும், இஸ்லாமியராலும் ஒதுக்கி வைக்கப்பட்டு அல்லலுற்ற கதையைத் தத்ரூபமாகப் படம் பிடித்த நாவல் அது. அந்த நாவலை எழுதிய பின் அன்வர் பாலசிங்கம் பட்ட பாட்டை நண்பர்களிடம் கேள்விப்பட்ட நினைவு. நெஞ்சில் உரம் கொண்டு நேர்மைத் திறம் கொண்டு 'நாசுவம்' எழுதிய தோழர் தீன் அவர்களுக்குப் பாராட்டு. தேவாலயத்தில் இரு குடும்பங்கள் சந்தித்து மனமொத்து (தலைவனையும் தலைவியையும் சேர்த்துதான் !) ஒருவருக்கொருவர் விவரங்களைப் பகிர்ந்த பின், "நீங்க வேற நாங்க வேற; ஊரு ஒப்பாது" என்ற நூலிழையில் திருமணப் பேச்சு முறிந்து போகிறது. பின்வாங்கிய குடும்பம் தாங்கள் அவர்களை விட மேலோராக்கும் எனும் கற்பனையில் மிதக்கும் இடைநிலைச் சாதியினர் என்பதும், சிறிய அல்லது பெரிய ஏமாற்றத்துக்குள்ளான பிறிதொரு குடும்பம் வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் பட்டியல் இனத்தோர் என்பதும் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன ? அவர்களுக்குள் திருமணப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்த பாஸ்டரும் சாதிய மனநிலையில் இருந்து விலகியவர் அல்லர் என்பது சூசகமாக வெளிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அங்கேயும் உள்ள அநாகரிகத்தை 'ஊரு ஒப்பாது' கதையில் குறிப்பாக வெளிப்படுத்தியது எழுத்தாளரின் நாகரிகம். பன்னிரெண்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கடைசிக் கதையான 'சாதி நாற்காலி', பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த ஒரு படித்த அருந்ததியர் பெண் ஆதிக்க இடைநிலைச் சாதியினரால் எதிர்கொள்ளும் அவமானங்களைத் தோலுரித்துக் காட்டுவது. அவள் கற்ற கல்வி அவளைக் கொள்கைப் பிடிப்புடன் நிற்க வைக்கிறது. அவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று திரும்பும் அப்பெண் வீறு கொண்டு நிற்பதைப் பேசும் கதை இது. சமநிலையை ஏற்க மறுக்கும் சமூகத்திற்கு எதிரான போராட்டத்தில் அறிவாயுதம் கொண்டு நேர்மையாக சமூகப் பணியாற்றும் உறுதியேற்று உயிரையும் பணயம் வைக்கத் தயாரான புதுமைப் பெண்ணின் கதை இது. ஏனைய கதைகள் நிதர்சனத்தை சமூகத்தின் முகத்திலறைந்து சொல்லுகையில் இக்கதை ஒரு படி மேற்சென்று நம்பிக்கை ஒளியூட்டுவதாய் அமைகிறது. சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் போல அறவழி நின்று எதிர்வினை ஆற்றுகிறது. தோழர் தீன் அவர்கள் தமது எழுத்துப் பணியான சமூகப் பணியினைப் பன்னெடுங்காலம் முன்னெடுத்துச் செல்வார்; செல்ல வேண்டும். https://www.facebook.com/share/p/1E5ofEE61x/
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
காண்டாமிருகத்தை கலங்கடித்த மான்குட்டி!!! ஒன்றரை வயது குழந்தை மீட்கப்பட்ட காட்சி.
-
இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் கோரிக்கை
இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் கோரிக்கை 10 Jan, 2026 | 05:55 PM (எம்.நியூட்டன்) இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். யாழ் ஊடக அமையத்தில் சனிக்கிழமை (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தாயக செலணி அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரிநாள். 04.02.1948 அன்று பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்நாளில் இருந்து தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே வருகின்ற 04.02.2026 அன்றைய நாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தலைமை ஏற்று இணைந்து நடாத்தும் பேரணியில் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகின்றோம். வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் தமிழ் மக்களின் தேசிய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். தமிழ் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிரந்தர பொறுப்புக் கூறலை உறுதி செய்ய வேண்டும். இலங்கை அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதோடு, தமிழர் தாயகத்தை பல்வேறு வகையில் புத்த விகாரைகளை நிறுவியும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தி கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். பயங்கரவாதத் தடைச்சட்டம்" என்ற பெயரில் இன்றும் தொடரும் தமிழின அடக்கு முறைகளை நிறுத்தி, நீண்ட காலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கடந்த 77 ஆண்டுகளாகத் தொடரும் தமிழர் இனவழிப்பை நிறுத்தி ஓர் சர்வதேச நீதிப் பொறிமுறை மூலம் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்யப்பட வேண்டும் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்பதையும் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை உடையவர்கள் என்பதையும் ஏற்றுக் கொண்டு, வட்டுக்கோட்டைத் தீர்மானம் மற்றும் திம்பு பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் இறையாண்மை உள்ள தேச அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி "கரிநாள்" போராட்டம் 04.02.2026 புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழர் தாயகத்தின் கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெறும். இந்தப் போராட்டம் வெற்றியடைய, அனைத்து ஊடகங்களும், அமைப்புக்களும், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், மாணவர் அமைப்புக்கள், வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், பட்டதாரிகள் சங்கம், சிவில் அமைப்புக்கள், மத அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், கடல்த் தொழிலாளர் சங்கங்கள், விவசாயக் கழகங்கள், போக்குவரத்துக் கழகங்கள், விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச் சங்கங்கள், புத்திஜீவிகள் மற்றும் பொது மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரது பேராதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டுகின்றோம் - என்றனர். https://www.virakesari.lk/article/235698
-
அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்பும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது - ஜனாதிபதி
அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்பும் திறன் அரசாங்கத்திற்கு உள்ளது - ஜனாதிபதி 10 Jan, 2026 | 04:03 PM அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன் இருப்பதாகவும், அதற்காக இந்த ஆண்டு 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். குருணாகல் மாவட்டத்தின் ரிதீகம, மாவதகம, மல்லவபிட்டிய, இப்பாகமுவ மற்றும் கணேவத்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்ட அனர்த்தத்தால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் ரிதீகம, தொடம்கஸ்லந்த இளைஞர் படையணி நிலையத்தில் நடைபெற்றது. இன்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' திட்டத்தின் பிரதான திட்டமாக, இந்த வீடுகளை நிர்மாணிக்கும் PROJECT 5M செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டத்தில், அனர்த்தம் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக அதே இடத்தில் புதிய வீடுகளை நிர்மாணிக்க அனுமதி பெற்றவர்களுக்காக வீடுகளை நிர்மாணிக்க இந்த இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. அனர்த்தத்திற்குப் பிறகு நாடும் மக்களும் மிக விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாது என்று சிலர் கூறினாலும், தற்போது சேதமடைந்த அனைத்து வீதிகளையும் பொதுமக்களுக்கு மீண்டும் திறந்து, தொடர்பாடல், மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுத்து மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக இரவும் பகலும் உழைத்த அரச அதிகாரிகளின் பங்களிப்பை பாராட்டுவதாகவும், அந்த அனர்த்ததை எதிர்கொள்வதில் அரச பொறிமுறை நாட்டிற்கும் மக்களுக்கும் அதன் அர்ப்பணிப்பை நிரூபித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வண, இகுருவத்தே தர்மகீர்த்தி ஸ்ரீ சோபித விமலஜோதிதான தேரர் மற்றும் ரிதீகமவைச் சேர்ந்த திரு. திருமதி. டி.பி. அபேரத்ன ஆகியோரால் வழங்கப்பட்ட காணி மற்றும் நிதி நன்கொடைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அண்மைய காலங்களில் ஏற்பட்ட மிகப் பாரிய பேரழிவுகளில் ஒன்றை நாங்கள் சந்தித்தோம். நாடு விரைவாக மீள முடியாது என்று பலர் கூறினர். ஆனால் இப்போது அனர்த்தத்தால் சேதமடைந்த அனைத்து வீதிகளையும் மீண்டும் திறந்துள்ளோம். தொடர்பாடல், மின்சாரம், நீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அதற்காக நமது அரசியல்வாதிகள், குறிப்பாக அரச அதிகாரிகள், கடுமையாக உழைத்தனர். இந்த நாட்டு மக்களுக்கு நமது அரச பொறிமுறை பற்றி நல்ல புரிதல் இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்த அனர்த்தத்தின் போது, நமது அரச அதிகாரிகள் நாட்டிற்கும் மக்களுக்கும் எவ்வளவு அரப்பணிபபுடன் செயற்படுகிறார்கள் என்பதை நிரூபித்தனர். பல அதிகாரிகள் இரவும் பகலும் உழைத்தனர். மக்களும் அதற்காக முன்வந்தனர். அந்த அர்ப்பணிப்பின் விளைவாக, நாங்கள் கணிசமான அளவிற்கு மீண்டு வந்துள்ளோம். ஆனால் இந்தப் பேரழிவு நமது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். நமது நாட்டின் பொருளாதாரம் இதற்கு முன்பு ஒரு பாரிய நெருக்கடியைச் சந்தித்தது என்பதை இங்குள்ள நாம் அனைவரும் அறிவோம். அந்த நெருக்கடியின் விளைவுகளை நாம் அனைவரும் எதிர்கொண்டோம். மின்சாரம், எரிபொருள், எரிவாயு, பால் மா போன்றவை கிடைக்கவில்லை. முழு நாடும் வீழ்ச்சியடைந்தது. அத்தகைய பொருளாதார நெருக்கடி இயற்கை பேரழிவால் உருவாகவில்லை. மேலும் இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சி கிராமங்களில் வசிக்கும் நமது தாய்மார்கள் மற்றும் தந்தையர்களின் தவறுகளினால் ஏற்பட்டது அல்ல. ஆட்சியில் இருந்த அரசியல் வாதிகளிடம் பரவலாக காணப்பட்ட ஊழல், இலஞ்சம், முறைகேடு மற்றும் தவறான முடிவெடுகளை எடுத்தல் போன்றவற்றால் நமது நாட்டு மக்கள் பெரும் துன்பத்தை எதிர்கொண்டனர். அதைத் தொடர்ந்து நடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில், நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எங்களை ஆட்சிக்கு தேர்ந்தெடுத்தனர். மக்களுக்கு பல எதிர்பார்ப்புகள் இருந்தன. மோசடி மற்றும் ஊழலற்ற அரசாங்கம், ஊழல்வாதிகளையும் மோசடிக்காரர்களையும் தண்டித்தல், சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல் மற்றும் இளைஞர்களை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுதல் அந்த இலக்குகளில் முக்கியமானவை ஆகும். அனைவரும் வாழ்வதற்கு போதுமான வருமான ஆதாரத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே முக்கிய காரணியாக அமையும். அந்த இலக்கை நோக்கி நாம் ஏற்கனவே குறிப்பிடத்தக்க அளவு பணிகளைச் செய்து முடித்துள்ளோம். அப்படிப்பட்ட ஒரு நேரத்தில்தான் நாம் இப்படி ஒரு பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், அந்தப் பேரழிவை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை முன்பை விட சிறப்பாக மீண்டும் கட்டியெழுப்ப நமக்கு வலிமை இருக்கிறது. அதற்காக இந்த ஆண்டு 50,000 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளோம். பொருளாதாரத்தை வலுப்படுத்தினால் மட்டுமே அந்த வலிமை வரும். நமது கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை இதை விட சிறப்பாக இருக்க வேண்டும். சரியாக உணவு உண்ணாதவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தலைமுறை தலைமுறையாக நல்ல வீடு இல்லாதவர்கள் இருக்கிறார்கள். நம் நாட்டு மக்கள் இப்படி வாழக்கூடாது. 70-80 ஆண்டுகால வாழ்க்கையில் எல்லோரும் மனிதனாக வாழக்கூடிய ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். எனவே, இந்தப் பொருளாதாரத்தையும் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு நாட்டையும் கட்டியெழுப்புவதற்கு நாங்கள் மிகவும் திட்டமிட்ட முறையிலும் முறையாகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். நாம் அதைச் செய்ய வேண்டும். நாம் அதைச் செய்யாவிட்டால், யாரும் அதைச் செய்ய மாட்டார்கள். கடந்த 76 ஆண்டுகளில் அதைச் செய்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. இந்த நாட்டில் மக்களைக் கவனித்துக் கொள்ளும் ஒரு அரசாங்கம் இருந்தால், அது இந்த அரசாங்கம்தான். அதனால்தான் பேரழிவை எதிர்கொண்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டன. இவ்வளவு பாரிய தொகை இதற்கு முன்பு ஒதுக்கப்பட்டதில்லை. நம் நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த, முதலில் அனைவருக்கும் நல்ல வருமான ஆதாரத்தை வழங்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு தரமான கல்வியையும் வழங்க வேண்டும். நம் கிராமங்களின் பிள்ளைகள் எதிர்காலத்தை வெல்வதற்கான ஒரே வழி கல்விதான் என்பதை நாம் அறிவோம். நம் தாய்மார்கள் மற்றும் தந்தையர் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் நமது கல்வி முறை நல்ல பலனைத் தருவதில்லை. இந்தக் கல்வி முறை நம் பெற்றோருக்கு ஒரு சுமையாக உள்ளது. இது பிள்ளைகளுக்கு துயரமாகவும் உள்ளது. இலங்கையில் 50க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட சுமார் 1150 பாடசாலைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை பாடசாலைகள் ஆக இருக்காது. பிள்ளைகள் இலக்கிய விழாவையோ அல்லது விளையாட்டு விழாவையோ நடத்த முடியாது. அந்தப் பாடசாலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, நல்ல, அதிக பிள்ளைகளைக் கொண்ட, பிள்ளைகள் ஒன்றாக சேர்ந்து கல்வி கற்கும் ஒரு புதிய பாடசாலை கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும். கிராமப் பாடசாலையைப் பழைய பாடசாலையாகப் பாதுகாப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தைப் பறித்த இந்தக் கல்வி முறை மாற வேண்டும். அப்படியானால், நாம் ஒரு சிறந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, பொருத்தமற்ற அல்லது நோக்கமற்ற விடயங்கள் ஊடகங்கள் மூலம் பரப்பத் தொடங்கியுள்ளன. இலவசக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோதும், அதை எதிர்த்துப் போராடினார்கள். இந்த முறையும் அவ்வாறுதான். இது ஒரு சிறந்த கல்வி சீர்திருத்தம், நம் பிள்ளைகளைப் பராமரிக்கும் கல்வி. நம் பிள்ளைகளை உலகத்துடன் ஒருங்கிணைக்கக்கூடிய கல்வி முறை. மேலும், நம் பிள்ளைகள் ஆளுமை மற்றும் தலைமைத்துவத்துடன் முன்னேற வழிவகுக்கும் ஒரு கல்வி முறை. இயந்திரங்களை உருவாக்கும் அல்லது கருணை, ஆன்மீகம் அற்ற பெற்றோர்களையோ, ஆசிரியர்களையோ, மதத் தலைவர்களை அறியாத பிள்ளைகளை உருவாக்கும் கல்வி அல்ல. அத்தகைய கல்வியினால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. இந்தக் கல்வி முறை கருணை, மனப்பாங்கு மற்றும் இரக்க குணம் கொண்ட எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஒரு கல்வி முறையாகும். யார் என்ன சொன்னாலும், அந்தக் கல்வி சீர்திருத்தங்கள் நமது கிராமங்களில் உள்ள அப்பாவி பெற்றோரின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு கல்வி முறையை உருவாக்கும். அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதைப் பற்றி கலந்துரையாடடுவோம். நாங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்பதை உங்களுக்கு கூறுகிறோம். நாம் கல்வியை அழிக்கிறோம் என்று இங்கே உள்ள யாராவது நம்புகிறீர்களா? நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. நாம் தூரப்பிரதேச கிராமங்களில் பிறந்தோம். கல்வியின் மூலம் குறிப்பிட்ட இடம் நமக்குத் கிடைத்ததால் இன்று இந்தப் பொறுப்புகளை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். இல்லையெனில், எங்கள் குடும்பப் பின்னணி, எங்கள் கிராமப் பின்னணி எங்களை இங்கு கொண்டு வந்திருக்காது. கல்விதான் எங்களுக்கு வழி வகுத்தது. எனவே, தொலைதூர கிராமங்களில் பிறந்த நாம் முன்னேறுவதற்கு கல்வி வழி வகுத்தால், அந்தக் கல்விக்கு அழிவுகரமான பாதையை நாம் அமைக்க மாட்டோம். எங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வி முறையை உருவாக்க விரும்புகிறோம். கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க ஆகியோருடன் மாகாண மக்கள் பிரதிநிதிகள், குருநாகல் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/235687
-
புதிய காலனியாதிக்கமும் புதிய உத்தியிலான ஏகாதிபத்தியமும்-பா.உதயன்
நடு இரவில் வந்து நாலு பேருக்கு தெரியாமல் வெனிசுலாவை வெருட்டி விட்டு அந்த நாட்டின் ஜனாதிபதியை கைது செய்து கொண்டு போய் இருக்கிறது ஏகாதிபத்தியம்( Imperialism) . அமெரிக்காவின் இந்தச் செயல் பெரும் சர்வாதிகார நிலையை சொல்லி இருக்கிறது. அமெரிக்காவின் எதிரியான வெனிசுவேலா ஜனாதிபதி Maduro வின் அரசியல் கொள்கைக்கு எதிராக செயல்ப்பட்ட வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு சமாதான பரிசை கொடுத்ததன் மூலம் வெனிசுவேலாவுக்குள் அமெரிக்க நலன்சார் நகர்வுகளுக்கு இது உதவியிருக்கிறதா என்றும் எண்ணத் தோண்றுகிறது. இந்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவதாக மரியா கொரினா மச்சாடோ குறிப்பிட்டார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேசரீதியிலான ஒரு பொறுப்பற்ற ஒரு நாட்டின் இறைமையை மீறும் குற்ற நடவடிக்கையாகும் Violation of sovereignty and international law ஜனநாயக விரோத ஒரு நாட்டின் இறைமையை, சர்வதேச சட்டங்களை, ஐ.நா. பிரகடன்களை மீறிய ஒரு சட்டம் அறம் அற்ற ஒரு அத்துமீறிய செயல். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தென் அமெரிக்க நாடுகள் வரை இன்னும் பல ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும் அமெரிக்க தொடர்ந்து தனது நலன் மட்டும் சார்ந்து ஆகிரமிப்பு செய்வதும் அன் நாடுகளின் தலைவர்களை சிறை பிடிப்பதும் இதன் பின் இந்த நாடுகளின் அனைத்து கட்மைப்புக்களையும் அழித்து அந்த நாடுகளை மீண்டும் வளர விடாமல் தொடர்ந்து அங்கு ஸ்திரம் Instability இல்லாத தன்மையை உண்டாக்கி விட்டு ஜனநாயகம் என்று பேசிக்கொண்டு இன்னும் ஒரு நாட்டடில் அத்து மீறி நுழைந்து தனக்குத் தேவையான வழங்ககளை சூறை ஆடுவதே அமெரிக்காவின் தந்திரமாக இருக்கின்றது. பலம் மிக்கவர்களினால் செய்யப்படும் ஆட்சி மாற்றங்கள் இறுதியில் பெரும்பாலும் பெரும் ஆபத்தான நீண்டகால வன்முறை மோதல்களாக அந்த நாடுகளில் உருவாக்கி விடுவதை நடை முறையில் பார்த்திருக்கிறோம். ஜனநாயகம் மனித உரிமை என்ற பெயரில் இங்கு ஆக்கிரமிப்பே நடைபெற்றன அரசியல் பொருளாதார மற்றும் புவிசார் சர்வதேச உறவுகளை தீர்மானிக்கும் உரிமை அந்த அரசுக்கும் அந்த மக்களுக்கும் மட்டுமே உண்டு. இதை விடுத்து பலம் மிக்க நாடு பலம் இல்லாத நாடுகளை அதிகாரத்தின் மூலம் பணிய வைப்பதும் அதை தமது நலனுக்ககாக பாவிப்பதும் ஒரு புதிய காலனியாதிக்கமும் புதிய உத்தியிலான ஏகாதிபத்தியமும் Neo colonialism and Neo imperialism புதிய காலனித்துவ மற்றும் ஏகாதிபத்திய கொள்கைக்கு ஒப்பானது. ஜனநாயகத்தின் பெயரால் மறைமுகமாக செய்யப்படும் ஒரு ஆதிக்க சுரண்டலாகும். அமெரிக்காவால் இன்னும் ஒரு இறைமையுள்ள நாடுகளில் மேற்கொள்ளப்படும் இந்த அத்துமீறிய இராணுவ தலையீடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை மற்றும் சர்வதேச பாதுகாப்பு அதன் விதி முறைகளையும் மீறுகின்றது இதனால் ஒவ்வொரு பலம் குன்றிய நாடுகள் இன்னும் பாதுகாப்பற்றதாகிறது. சக்திவாய்ந்தவர்கள் எதையும் செய்யலாம் என்ற ஒரு செய்தியை இது சொல்லி நிற்கின்றது. இனி வரக்கூடிய எந்தப் போரையும் தடுக்க நமக்கு உள்ள ஒரே அமைப்பான ஐக்கிய நாடுகளையும் இது வலுவிழக்கச் செய்கிறது என்ற உண்மையை மறைக்க முடியாது. அமெரிக்காவின் இன்றைய செயல்பாடுகள் ஏகாதிபதியத்தின் ஒரு தொடர்ச்சியே இதை சரியாக விளங்க வேண்டுமானால் காலனித்துவ ஏகாதிபத்தியம் சம்மந்தமாக அரசியல் பொருளாதார கேட்ப்பாடுகளை சரியாக விளங்கிக் கொள்வதன் மூலம் அறிய முடியும். புதிய காலனியா திக்கம் புதிய ஏகாதிபத்யம் உலக அமைப்பு கோடப்பாடுகள் போன்ற கருத்துக்களை பல அரசியல் பொருளாதார நிபுணர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர். இதில் முக்கியமான சமூகவியலாளர் இமானுவேல் வால்ரஸ்டீன் (Immanuel Wallerstein) ஆவார். உலகப் பொருளாதார அமைப்பில் பலம் மிக்க நாடுகள் எப்படி சுரண்டுகின்றனர் இந்த உலகு எப்படி சமத்துவமற்று இருக்கிறது என்பதை யதார்த்தமாக உலக அமைப்பு கேட்பாடு (World system theory) மூலம் விளக்குகிறார் காலனித்துவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்டாலும் அரசியல் பொருளாதார ரீதியாக ஆதிக்க பலம் வாய்ந்த சக்கித்தியினால் அவர்கள் நலன் சார்ந்து தொடர்ந்து சுறண்டப் படுவதை பார்க்கிறோம். ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக், பனாமா, வெனிசுலா, நையீரியா இப்படி பல நாடுகளை பலம் வாய்ந்த அமெரிக்க அதன் நலன் சார்ந்து இந்த பலம் இல்லாத நாடுகளின் அதன் மூலவளங்களை ஜனநாயகம் மனித உரிமை என்ற பெயரில் அங்கு ஆதிக்கம் செலுத்தி பின் அதன் வளங்களை பெரும் தனியார் கம்பெனிகள் ஊடாக சுரண்டலை மேற்கொள்ளுகின்றனர். இன்னும் ஒரு பிரபலமான இலக்கிய பேராசிரியரான எட்வர்ட் சயீத் (Edward Said) பாலைதீனத்தை பிறப்பிடமாக்க கொண்ட அமெரிக்காவின் பிரபல கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியராக இருந்த அவர், காலனித்துவம் பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டவர் Orientalism என்ற இவர் எழுதிய நூல் மிகவும் பிரபலமானது பல பல்கலைக்கழகங்களில் பாடத் திட்ட நூலாக கற்பிக்கப்படுகின்றது. இந்த நூல் ஏகாதிபத்தியம் என்பது (Imperialism) வெறும் இராணுவ அல்லது பொருளாதார ஆக்கிரமிப்பு மட்டுமல்ல, கலாச்சாரம், மொழி, கல்வி, அடையாளம் என்பன ஊடகம் வழியாக மேற்கு உலக எல்லா மேற்கத்திய அறிஞர்களும் வரலாறுகளை மாற்றி தமக்கு சாதகமாக்கி கிழக்கு சமூகங்களின் உள் வேறுபாடுகளை குறைத்துக் காட்டி புவிசார் அரசியல் பொருளாதார நலனுக்காக தமக்கு வேண்டியபடி கோட்ப்பாடுகளை விபரித்தனர் சித்தனித்தனர் எழுதினர் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியது. சர்வதேச சட்டங்களை மதிக்காத எல்லா அத்துமீறல்கழும் சட்டங்களை மீறி நடக்கும் செயல்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகள் ஆகும் எனவே இன்று அமெரிக்க தான் குற்றம் இழைத்தவர்களாக இருக்கிறார்கள். பலத்தை வைத்துக்கொண்டு இன்று அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் பல ஆகிரமிப்புக்கள் எதிர் காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என நாடுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். வன்முறை மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களை அகற்றுவது சிறை பிடிப்பது என்பது உலக அமைதிக்கும் சமாதானத்துக்கும் சர்வதேச நீதி மன்ற சட்டங்களுக்கும் அச்சுறுத்தலாக அமையலாம். மனித குற்றங்கள் இழைத்த எந்தத் தலைவர்களையும் சர்வதேச நீதி மன்ற சட்டங்களின் அடிப்படையிலேயே கைது செய்ய முடியும். பலத்தை வைத்துக்கொண்டு இன்று அமெரிக்காவால் மேற்கொள்ளப்படும் பல ஆக்கிரமிப்புக்கள் எதிர் காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம் என நாடுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இனி வரும் காலங்களில் பல நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களையும் அமைதியின்மையையும் தோற்றுவிக்க எதிர் காலத்தில் வழி சமைக்கலாம். இது உலக ஒழுங்கில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் மாற்றம் இல்லை. பா.உதயன்✍️
-
ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
இரான் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுவது ஏன்? உண்மையில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,மஷாத்தில் ஒரு குழுவாகத் திரண்ட போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினரைத் தடுக்கும் வகையில் தரையில் மண்டியிட்டு அமர்ந்தனர் 10 ஜனவரி 2026, 09:26 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனவரி 7ஆம் தேதி நிலவரப்படி 24 மாகாணங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளன. இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை சிறிய அளவிலும், ஆங்காங்கே சிதறியவையாகவும் காணப்பட்டன. தெஹ்ரானில் அதிகப்படியான போராட்டங்கள் பதிவாகி இருந்தாலும், கடந்த சில நாட்களாக சிறிய நகரங்களில் அரிதாக பெரிய அளவிலான கூட்டங்கள் கூடத் தொடங்கியுள்ளன. இது கவனத்தை தலைநகரில் இருந்து பிற இடங்களுக்கு திருப்பியுள்ளது. இந்த அமைதியற்ற சூழல் குறித்து தெளிவான ஒற்றை விளக்கம் என ஏதுமில்லை. சிலர் இது பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்டதாகக் கருதுகின்றனர், மற்றவர்களோ இது நீண்டகால அரசியல் மற்றும் சமூகக் குறைகளின் சமீபத்திய வெளிப்பாடு என்று விவரிக்கின்றனர். தற்போதைய அமைதியற்ற சூழல், 2022-ஆம் ஆண்டு நடந்த மாசா அமினி போராட்டங்களின் எண்ணிக்கையைவிட மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் அதிகாரிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர். போராட்டங்கள் எவ்வளவு பரவலாக நடத்தப்படுகின்றன? சமீபத்திய போராட்ட அலை இரானின் பெரும் பகுதிகளில் விரிவடைந்துள்ள போதிலும், அதில் மக்கள் பங்கேற்கும் விதம், இடம் மற்றும் காலத்திற்கு ஏற்ப பெருமளவில் மாறுபட்டுள்ளது. ஆரம்பத்தில் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்று டிசம்பர் 28 அன்று, அதாவது போராட்டத்தின் முதல் நாளன்று தெஹ்ரானில் நடைபெற்றது. அப்போது நூற்றுக்கணக்கான கடைக்காரர்களும் வணிகர்களும் வீதிகளில் இறங்கிப் போராடினர். அடுத்தடுத்த நாட்களில், போராட்டங்கள் பொதுவாகச் சிறிய அளவிலும், சிதறியும், குறுகிய காலமே நீடிப்பதாகவும் இருந்தன. பெரும்பாலும் இவை இரவில் நடைபெற்றதோடு, சில நபர்களைக் கொண்ட குழுக்களாகவே இருந்தன. இந்த முறையில் சுமார் 10 நாட்களுக்கு போராட்டங்கள் தொடர்ந்தன. ஜனவரி 6 முதல், போராட்டத்தின் நிலவியல் ரீதியான போக்கு மாறத் தொடங்கியது. பல சிறிய மற்றும் முக்கியத்துவம் குறைவான நகரங்களில் அரிதான பெரிய அளவிலான கூட்டங்கள் காணப்பட்டன. இதுவொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்று சில உள்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன. முக்கிய போராட்ட மையங்களில் ஒன்றான மேற்கு மாகாணமான இலாமில் உள்ள அப்தானனில் பெருந்திரளான மக்கள் கூடினர். பட மூலாதாரம்,Middle East Images / AFP via Getty Images ஒரு நாள் கழித்து, சமீபத்திய ஆண்டுகளில் மக்கள் எழுச்சியையே பார்த்திராத வடக்கு கொராசான் மாகாணத்தின் தலைநகரான போஜ்னூர்டில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆர்ப்பாட்டங்கள் பதிவாகின. ஜனவரி 7 மாலை வரை பிபிசி மானிட்டரிங் தொகுத்த தரவுகள், ஒட்டுமொத்தமாக தெஹ்ரானில்தான் அதிக எண்ணிக்கையிலான போராட்டங்கள் நடந்துள்ளதைக் காட்டுகின்றன. இருப்பினும், முதல் நாள் தவிர, தலைநகரில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் ஆங்காங்கும், அளவில் குறைவாகவுமே இருந்தன. இது சில மாகாண நகரங்களில் காணப்பட்ட செறிவான கூட்டங்களுக்கு மாறாக இருந்தது. தெஹ்ரானை தாண்டி, ஃபார்ஸ் மாகாணம், குர்திஷ் மக்கள் வசிக்கும் இலாம் மற்றும் கெர்மான்ஷா மாகாணங்கள், தென்மேற்கில் உள்ள சஹார்மஹால்-பக்தியாரி ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடந்ததைத் தெளிவாகக் காண முடிகிறது. இந்தப் பிராந்தியங்களில் உள்ள பல நகரங்கள் நீண்டகாலப் பொருளாதார வீழ்ச்சி, அதிக வேலையின்மை மற்றும் குறைந்த முதலீடு போன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. மொத்தத்தில், இரானின் 31 மாகாணங்களில் 24 மாகாணங்களுக்கு உட்பட்ட 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளன. இரானில் 480-க்கும் மேற்பட்ட மாவட்டங்களும் சுமார் 1,400 நகரங்களும் உள்ளன. இந்தப் போராட்டங்கள் நிலவியல் ரீதியாக விரிவடைந்து இருந்தாலும், அதன் அளவிலும் தீவிரத்திலும் சீரற்றதாகவே உள்ளதை இது குறிக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்தப் போராட்டங்கள் முந்தைய நாடு தழுவிய போராட்டங்களைவிட, குறிப்பாக 2022-இல் மாசா அமினியின் மரணத்திற்குப் பிறகு நடந்த போராட்டங்களைவிட மிகச் சிறிய அளவிலேயே உள்ளன. பட மூலாதாரம்,X படக்குறிப்பு,மஷாத்தின் காணொளிகளில், போராட்டக்காரர்கள் "ஷா நீடூழி வாழ்க" என்று கோஷமிடுவதைக் காண முடியும். போராட்டங்களை எவ்வாறு புரிந்து கொள்வது? தற்போதைய போராட்டங்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. சில ஆய்வாளர்கள் இதைப் பணவீக்கம், நாணயத்தின் உறுதியற்ற தன்மை, குறைவான வாங்கும் திறன் ஆகியவற்றால் தூண்டப்பட்ட பொருளாதார ரீதியான போராட்டமாகப் பார்க்கிறார்கள். போராட்டத்தின் தொடக்க காலத்தில் வணிகர்கள் இதில் பங்கேற்றது இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகிறது. மற்றவர்களோ, இந்தப் போராட்டங்கள் ஆழமான, நீண்டகால அதிருப்தியைப் பிரதிபலிப்பதாகவும், இது அரசியல் ஆட்சிக்கு எதிரான பரந்த, ஆனால் ஒருங்கிணைக்கப்படாத எதிர்ப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். தெளிவான தலைமையோ அல்லது கோரிக்கைகளோ இல்லாதது இந்தப் போராட்டங்களை வரையறுப்பதைக் கடினமாக்குகிறது. இது பொருளாதாரக் குறைபாடுகள், அரசியல் ஒடுக்குமுறை, ஒன்று திரட்டப்பட்ட வெறுப்பு ஆகியவற்றின் கலவையாகத் திகழ்கிறது. பெண்ணுரிமை மற்றும் சமூக சுதந்திரத்தை மையமாகக் கொண்டு நடந்த 2022-ஆம் ஆண்டு போராட்டங்களைப் போலன்றி, தற்போதைய போராட்டத்தில் ஒரு தெளிவான ஒருங்கிணைந்த கருப்பொருள் இல்லை. பல இடங்களில், போராட்டக்காரர்கள் மதகுருமார்களின் அமைப்பு மற்றும் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமனேயியை இலக்கு வைத்து முழக்கங்களை எழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளனர். முந்தைய போராட்ட அலைகளுடன் ஒப்பிடுகையில், இரானின் கடைசி ஷாவின் மகனும், தற்போது நாடு கடத்தப்பட்டு வசிப்பவருமான ரெசா பஹ்லவிக்கு ஆதரவான முழக்கங்கள் அதிகரித்துள்ளன. இது தற்போதைய அரசியல் அமைப்பின் மீதான ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. பட மூலாதாரம்,UPI/Bettmann Archive/Getty Images படக்குறிப்பு,ரெஸா பஹ்லவி 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தமது தந்தையின் முடிசூட்டின் போது (வலது ஓரம் இருக்கையில் இருப்பவர்) போராட்டங்களில் பங்கெடுப்பவர்கள் யார்? கடைக்காரர்கள் இந்தப் போராட்டங்களைத் தொடங்கி வைத்தாலும், பல இடங்களில் இதில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை விரிவடைந்துள்ளது. நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் 67 இடங்களில் இருந்து வந்த காணொளிகளை பிபிசி வெரிஃபை உறுதி செய்துள்ளது. பல நகரங்களில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்கள் முக்கியமாகப் போராட்டங்களில் இணைந்துள்ளனர், இது பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட குழுவைத் தாண்டிப் போராட்டத்தின் வீச்சை விரிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், பல்வேறு குழுக்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குறைவாகவே உள்ளது மற்றும் நகரங்களுக்கு இடையிலான தொடர்ச்சியான, அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்புக்குரிய சான்றுகளும் குறைவாகவே உள்ளன. போராட்டத்தின் ஆரம்ப நாட்களில், தப்ரிஸ், இஸ்ஃபஹான், மஷாத், அஹ்வாஸ் உள்ளிட்ட பல வர்த்தக சபைகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொண்டன. பொருளாதார அழுத்தங்களை ஒப்புக்கொண்ட போதிலும், "எதிரிக் குழுக்கள்" தங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதாகக் கவலை தெரிவித்து, போராட்டங்களுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று அவை கூறின. ஜனவரி 7 அன்று தப்ரிஸில் கடைக்காரர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக வந்த செய்திகளை அரசு ஊடகங்கள் உடனடியாக மறுத்தன. தனியாக, குர்திஷ் மக்கள் வாழும் சில பகுதிகளில் ஜனவரி 8 அன்று கடைக்காரர்கள் வேலைநிறுத்தத்தைத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. போராட்டங்களில் மக்கள் பங்கேற்கும் முறைகளும் 2022-இல் இருந்து வேறுபடுவதாகத் தெரிகிறது. சீர்திருத்த ஆதரவு ஆய்வாளர் அப்பாஸ் அப்தி கூறுகையில், மாசா அமினி போராட்டங்களின்போது இருந்ததைவிட இதில் பெண்கள் மிகக் குறைவாகவே பங்கேற்கின்றனர். இந்த மாற்றமே சில சம்பவங்கள் அதிக வன்முறையாக மாறியதற்குக் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். இளைஞர்களின் முக்கியப் பங்கை முன்னிலைப்படுத்திய அவர், சமூகப் பிளவு ஆழமடைவதை அது சுட்டிக்காட்டுவதாகவும் கூறினார். பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,இரானின் இலாம் மாகாணத்தில் உள்ள முக்கிய போராட்ட மையங்களில் ஒன்றான அப்தானனில் பெருந்திரளான மக்கள் கூடினர் அரசு ஊடகங்களும் பாதுகாப்புப் படைகளும் எவ்வளவு விரைவாக பதிலளித்தன? இரானிய ஊடகங்கள் முதல் நாளில் இருந்தே இந்தப் போராட்டங்கள் குறித்த செய்திகளை விரைவாக வெளியிடத் தொடங்கின. அரசு ஒளிபரப்பு நிறுவனம் போராட்டங்கள் குறித்து சுருக்கமாகச் செய்தி வெளியிட்டதோடு, பொது மக்களின் குறைகளை ஒப்புக்கொள்ளும் நேர்காணல்களையும் ஒளிபரப்பியது. இதுபோன்ற போராட்டங்களின்போது இதுவொரு வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை. அதே நேரத்தில், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் அதிருப்தியாளர்களின் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்க அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டனர். மூத்த அதிகாரிகள் "நியாயமான" கோரிக்கைகளுக்கும் "கலவரங்களுக்கும்" இடையே வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிட்டனர். உதாரணமாக, தெஹ்ரானில் ஒரு தனிநபர் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ வைரலானதை அடுத்து, காவல்துறை உடனடியாக எதிர் வீடியோ ஒன்றை வெளியிட்டதுடன், அந்தச் செயல் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்றும் கூறியது. பாதுகாப்புப் படையினர் தொடக்கத்தில் நிதானமாகச் செயல்படுவது போலத் தோன்றினாலும், ஜனவரி 3-க்குப் பிறகு தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினர். இது அயதுல்லா காமனேயியின் முதல் பொதுக் கருத்துடன் ஒத்துப் போகிறது. அதில் அவர் "கலவரக்காரர்கள் அவர்களுக்குரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும்" என்று எச்சரித்திருந்தார். அதைத் தொடர்ந்து நீதித்துறையும் விரைவான தண்டனை வழங்கப்படும் என மிரட்டல் விடுத்தது. "பாதுகாப்பு காரணங்களுக்காக" இடையூறுகள் இருப்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இணைய போக்குவரத்து சாதாரண நிலையைவிட சுமார் 35% குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவொரு முழுமையான முடக்கம் என்பதைவிட, ஆங்காங்கே மற்றும் உள்ளூர் ரீதியிலான இடையூறுகள் என்றே அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. படக்குறிப்பு,இரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் இணையத்தடை இரானில் பல இடங்களில் வியாழக்கிழமை மாலை முதல் இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆங்காங்கே இணைய சேவை செயல்பாட்டில் இருப்பதாக க்ளௌட் ஃபேர், நெட்ப்ளாக்ஸ் போன்ற இணையதள கண்காணிப்புக் குழுக்கள் தெரிவிக்கின்றன. "போராடுபவர்கள் மீது அரசு படைகளைப் பயன்படுத்தும் விகிதம் அதிகரித்து வருகிறது. இணைய சேவை தடை செய்யப்பட்ட பிறகு அதிகரித்த வன்முறை மற்றும் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளது" என இரான் மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் மஹ்மூத் அமிரை-மோஹத்தாம் அறிக்கை மூலமாகத் தெரிவித்துள்ளார். இணைய சேவை முடக்கத்தின்போது படுகொலைகள் நடப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாதி எச்சரித்துள்ளார். இதுவரை எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர்? கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன மற்றும் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இருப்பினும் வன்முறையின் அளவு முந்தைய பெரிய அளவிலான போராட்டங்களைவிடக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. 2019 நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போராட்டங்களின்போது குறைந்தது 323 பேர் உயிரிழந்தது குறித்து ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆவணப்படுத்தியது. அதே நேரத்தில் 2022 மாசா அமினி போராட்டங்களின்போது 550க்கும் மேற்பட்ட இறப்புகளை மனித உரிமை அமைப்புகள் பதிவு செய்துள்ளன. இதற்கு நேர்மாறாக, தற்போதைய போராட்டங்களில், பாதுகாப்புப் படையினரின் 14 உறுப்பினர்கள் உள்படக் குறைந்தது 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. நார்வேவில் செயல்படும் இரான் மனித உரிமைகள் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் 9 குழந்தைகள் உள்பட 51 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது. அத்துடன் 2,277க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதாக அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் (Human rights activist) என்ற செய்தி முகமை தெரிவித்துள்ளது. சர்வதேச சூழல் ஏன் முக்கியமானது? இஸ்ரேலுடனான ஜூன் மாத போரைத் தொடர்ந்து, பதற்றமான சர்வதேச சூழலில் இந்தப் போராட்டங்கள் விரிவடைந்து வருகின்றன. அந்தப் போரின்போது அமெரிக்கா இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்கியிருந்தது. ஜனவரி 2-ஆம் தேதியன்று, அமைதியாகப் போராடும் போராட்டக்காரர்களை இரானிய பாதுகாப்புப் படையினர் கொன்றால் அமெரிக்கா தலையிடக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தார். மேலும் அமெரிக்கா "ஆயத்த நிலையில்" இருப்பதாகவும் கூறினார். ஜனவரி 4 அன்று டிரம்ப் தனது எச்சரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார். இதற்குப் பதிலளித்த இரானிய அதிகாரிகள், அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் இந்தப் போராட்டத்தைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டியதுடன், இரானின் ஆயுதப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் எச்சரித்தனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய பிரமுகர்கள் இந்தப் போராட்டங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, "வீதியில் இறங்கியுள்ள" இரானியர்களுக்கும், அவர்களுடன் "நடந்து செல்லும் ஒவ்வொரு மொசாட் முகவருக்கும்" தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். பாரசீக மொழியில் இயங்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசின் சமூக ஊடகக் கணக்குகள் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகள் சில போராட்டக்காரர்களுக்கு தைரியத்தை அளிக்கக்கூடும். ஆனால் அதேநேரம் இது 'வெளிநாட்டுச் சதி' என்ற அதிகாரிகளின் வாதத்தை வலுப்படுத்துவதோடு, இன்னும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்பதைத் தடுக்கும் காரணியாகவும் அமையக்கூடும். அடுத்து என்ன நடக்கும்? அரசாங்கத்தின் கவனம் தற்போது பொருளாதாரத் தீர்வுகளை நோக்கித் திரும்புவது போலத் தோன்றுகிறது. ஜனவரி 3-ஆம் தேதி, அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிர்வாகம், நாடு தழுவிய அளவில் மின்னணு கூப்பன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. விலைவாசி உயர்வில் இருந்து குடும்பங்களைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இருப்பினும், இணையதளங்களில் இத்திட்டத்திற்குப் பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலர் இதை "அவமானகரமானது" என்று வர்ணித்துள்ளனர். மத்திய வங்கியின் தலைமையில் மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், நாணயத்தின் நிலையற்ற தன்மை தொடர்ந்து நீடிக்கிறது. ஒருவேளை பொருளாதாரச் சூழல் மேலும் மோசமடைந்து, மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், இந்தப் போராட்டங்கள் ஒரு பெரிய தேசிய இயக்கமாக உருவெடுக்காவிட்டாலும்கூட, தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqj2dp9vkl8o
-
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்
எனது அம்மப்பாவும் கூட்டத்திற்கு போய் மதிலேறிப் பாய்ந்து தப்பி வந்த கதைகள் அம்மாவும் அம்மப்பாவும் சிறுவயதில் கூறுவார்கள்.
-
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள். நானும் இந்த மாநாட்டுக்கு போய் சைக்கிளையும் விட்டுட்டு ஓட்டமும் நடையுமாக வீடு வந்து வீட்டில் அடியும் வாங்கி அடுத்த நாள் போய் பத்திரமாக இருந்த சைக்கிளை எடுத்து வந்தேன். இது பெரியதொரு அனுபவமாக இருந்தது.
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
US will take Greenland the ‘hard way’ if it can’t do it the ‘easy way,’ Trump says. President Donald Trump continued his threats towards Greenland on Friday, as he insisted that if the United States did not act Russia or China could occupy it in the future. Trump said that if he is unable to make a deal to acquire the territory “the easy way,” then he will have to “do it the hard way.” “We are going to do something in Greenland, whether they like it or not, because if we don’t do it, Russia or China will take over Greenland, and we’re not going to have Russia or China as a neighbor,” Trump told reporters at the White House. Greenland’s party leaders, including the opposition, issued a joint statement saying: “We do not want to be Americans, we do not want to be Danes, we want to be Greenlanders. The future of Greenland must be decided by the Greenlandic people.” The US president and his White House officials have been discussing a range of options on how to bring Greenland under US control amid renewed interest in the strategically significant Danish-controlled territory, and has not ruling out a military intervention. The governments of Greenland and Denmark continue to publicly and privately insist it is not for sale. It remains unclear how other NATO members would respond if the US decided to take Greenland by force. European leaders have warned that such a move would have serious consequences for the military alliance. In a joint statement the leaders of France, Germany, the UK, Italy, Poland and Spain said Greenland belongs to its own people. https://www.cnn.com/2026/01/10/politics/us-will-take-greenland-the-hard-way-if-it-cant-do-it-the-easy-way-trump-says
-
பராசக்தி விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது?
பராசக்தி விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? பட மூலாதாரம்,Dawn Pictures ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பராசக்தி திரைப்படத்திற்கு நேற்றுதான் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் யு/ஏ சான்று வழங்கப்பட்டது. அதனுடன் படத்தில் 25 மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதும் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் வசனம் நீக்கப்பட்டிருப்பதும் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளானது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதை என்ன? புறநானூறு என்கிற மாணவர் சங்கத்தின் தலைவரான செழியன் (சிவகார்த்திகேயன்) தீவிரமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது காவல்துறை அதிகாரியாக இருக்கும் திரு (ஜெயம் ரவி) போராடும் மாணவர் குழுவை எதிர்கொள்கிறார். அப்போது பெரிய இழப்பைச் சந்திக்கும் சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் இருந்து விலகுகிறார். சில ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தற்போது சிவகார்த்திகேயன் மத்திய அரசு பணியில் உள்ளார். அவரது சகோதரர் சின்னா (அதர்வா) தற்போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் சகோதரர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படுகிறது. கதாநாயகியான ஶ்ரீலீலா, ரத்னமாலா என்கிற வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பராசக்தி திரைப்படம் அரசியல் வரலாறு, நாடகத்தன்மை ஆகிய இரண்டும் கலந்த கலவையாக அமைந்துள்ளதாக தி இந்து விமர்சனம் தெரிவிக்கிறது. "பராசக்தி திரைப்படம், பிழைகள் இல்லாமல் இல்லை. ஆனால் வரலாற்றில் முக்கியமான ஓர் அத்தியாயத்தை காட்சிப்படுத்துவதற்கான சக்திவாய்ந்த முயற்சி. படத்தின் அரசியல் வெளிப்படையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் கதை, நடிகர்களின் நடிப்பு என்பதையும் தாண்டி இசை மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களும் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளன. "பராசக்தி திரைப்படம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக அமைவதற்குத் தேவைப்படும் சரியான அம்சங்களையும் கொண்டுள்ளது," என தி இந்து விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Red Giant Movies/X 'கவனிக்க வைக்கும் சிவகார்த்திகேயன்' சிவகார்த்திகேயனின் நடிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ள தினத்தந்தி விமர்சனம், "புரட்சி ஒரு பக்கம், எதார்த்தம் மறுபக்கம் என இருவேறு பரிமாணங்களில் சிவகார்த்திகேயன் கலக்கியுள்ளார். இதுவரை காதல், காமெடியில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக புரட்சி, போராட்டம் என்ற பாதையில் பயணித்திருக்கிறார். சாட்டையடி வசனங்களைப் பேசி கவனிக்க வைக்கிறார்" எனத் தெரிவிக்கிறது. "நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நல்ல திரைப்படம். முதல்முறையாக அரசியல் பின்னணி கொண்ட திரைப்படத்தில், மொழிப்பற்றுமிக்க கதாபாத்திரத்தில் ஏமாற்றமில்லாத நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நடிகர் ரவி மோகன் முழுமையான வில்லனாகவே தெரிகிறார்" என்று தினமணி தனது விமர்சனத்தில் குறிப்பட்டுள்ளது. 'சுதா கொங்கரா வீணடிக்கவில்லை' தனது பிற படங்களுடன் ஒப்பிடும்போது கருத்தியல் ரீதியாக அழுத்தமான விஷயத்தை சுதா கொங்கரா பராசக்தியில் தொட்டிருப்பதாகக் கூறும் தினமணி விமர்சனம், "இந்த வரலாற்றுச் சம்பவத்தைக் கையிலெடுத்தவர் அதை வீணடிக்கவில்லை. 1965இல் பொள்ளாச்சியில் மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடியவர்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஆவணமாக்கியது முக்கியமானது" எனத் தெரிவிக்கிறது. சுதா கொங்கராவின் இயக்கத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனமும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறது. "பல்லாண்டுக்கால போராட்டங்களை மூன்று மணிநேரத்திற்கு உள்ளாகச் சொல்வதோடு வலுவான கதாபாத்திரங்களைக் கொண்ட சுவாரஸ்யமான படம் ஒன்றைத் தயாரிப்பது எளிதல்ல. ஆனால் சுதா கொங்கரா அதை வெற்றிகரமாகச் செய்துள்ளார். பட மூலாதாரம்,Dawn Pictures பாராட்டப்படும் ரவி மோகனின் நடிப்பு இந்தப் போராட்டங்கள் மற்றும் அதற்கான காரணங்களைப் பற்றி அறியாதவர்களுக்கும் புரியும்படியாக கதையைச் சொல்வதோடு அதன் தீவிரத்தன்மையை உறுதி செய்வதிலும் சுதா கொங்கரா வெற்றி பெற்றிருக்கிறார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி மோகனின் நடிப்பு பாராட்டப்படும் அதே சூழலில் அவரது கதாபாத்திர அமைப்பு மீது சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. "காவல்துறை அதிகாரியான திருவின் வழிமுறைகள் பற்றி அதிகம் கூறப்பட்டு இருந்தாலும் அவர் ஏன் அவ்வாறு செய்கிறார் என்பது பற்றிய தெளிவில்லை" என தி இந்து விமர்சித்துள்ளது. "தமிழுக்கு ஆதரவான மாணவர்கள் மீது அவருக்கு அவ்வளவு வெறுப்பு ஏன் வந்தது, ஒரு பின்கதை அல்லது ஃப்ளாஷ்பேக் இருந்தால் உதவியாக இருந்திருக்கும். ஆனால் இந்தக் குறையும் சுதா மற்றும் அர்ஜுன் நடேசனின் வலுவான எழுத்தால் சரி செய்யப்படுகிறது. திரு கதாபாத்திரம் பேசும் வசனங்களும் தரமாக இருக்கின்றன" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் தயார் என ரவி மோகனின் நடிப்பைக் குறிப்பிட்டு தினத்தந்தியும் பாராட்டியுள்ளது. "ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட ரவி மோகன், முதல் முறையாக வில்லனாக வெளுத்துக் கட்டியுள்ளார். பார்வையிலேயே கொலை வெறியைக் காட்டுகிறார். தமிழ் சினிமாவுக்கு மிரட்டலான வில்லன் தயார். புரட்சிப் புயலாக அதர்வா கலக்குகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பு சேர்க்கிறார்." பட மூலாதாரம்,Red Giant Movies/X காதல் காட்சிகள் கதையைச் சிதைக்கின்றனவா? செழியன், ரத்னமாலா இடையிலான காதல் காட்சிகள் சூரரைப் போற்று படத்தில் வரும் சூர்யா-அபர்ணா பாலமுரளியை நினைவூட்டுவதாகக் கூறும் தி இந்து விமர்சனம், "ஆனால் அதைக் கடந்தும் ஶ்ரீலீலாவுக்கு தன்னை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரு கதாநாயகி மற்றும் மூன்று கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் இருப்பது இயக்குநருக்கு மிகப்பெரிய வெற்றி" எனத் தெரிவிக்கிறது. மறுபுறம், முதல் பாகத்தில் இடம்பெற்ற சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா காதல் காட்சிகள் கதையைச் சிதைப்பது போல் இருப்பதாக தினமணி விமர்சித்துள்ளது. அதுகுறித்துத் தனது விமர்சனத்தில், "அங்கு சில நிமிடங்களை நீக்கியிருக்கலாம். மேலும், தமிழ் மொழிக்கான கதையில் கூடுதலாக தெலுங்கும் இணைந்துகொண்டது கொஞ்சம் நெருடல். மதுரை போன்ற காந்தியவாதிகள் சூழ்ந்த ஊரில், அகிம்சை வழிப் போராட்டத்தையும் காட்சிப்படுத்தி இருக்கலாம். இந்தி பிரசார சபா காட்டப்பட்ட அளவுக்கு ஏன் மதுரை தமிழ்ச் சங்கம் காட்டப்படவில்லை? திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருந்தால் கூடுதல் பரபரப்பைக் கொடுத்திருக்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, படத்தின் நீளம் சற்று குறைவாக இருந்திருந்தால் அது மேலும் பலன் அளித்திருக்கும் என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது. "கடினமான ஒரு கதைக் களத்தில், சகோதரர்கள் இடையே பந்தம், கதாநாயகன் - கதாநாயகி இடையிலான உறவு போன்ற மனிதர்கள் இடையிலான பிணைப்பு படத்தை உணர்வுபூர்வமானதாக ஆக்குகிறது. ஆனால் சில இடங்களில் அவை மையக்கருவில் இருந்து விலகியும் செல்கின்றன," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது. படத்தின் இசை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றிக் குறிப்பிடும் தினத்தந்தி விமர்சனம், "ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு 1960 காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது. பரபரப்பான காட்சிகள் படத்திற்கு பலம். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே இருந்தாலும், வலுவான திரைக்கதை அதை மறக்கடிக்கச் செய்கிறது" என்கிறது. துணை கதாபாத்திரங்கள் அழுத்தமாக இல்லை என தினமணி விமர்சித்துள்ளது. "முதல்வராக நடித்தவருக்குப் பதில் வேறு நல்ல நடிகரைப் பயன்படுத்தி இருக்கலாம். பிரபல நடிகர்களான ராணா டக்குபதி, ஃபாசில் ஜோசஃப் கதாபாத்திரங்களும் அழுத்தமாக இல்லை. கேமியோ அளவில் நின்றுவிட்டன." நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து எழுதியுள்ள தினமணி விமர்சனத்தில், "பல இடங்களில் தணிக்கை வாரியம் மியூட் செய்யச் சொன்னதற்கு இணங்க தயாரிப்பு நிறுவனம் தடையும் செய்திருக்கிறது. ஆனாலும், என்ன சொல்ல வந்தார்கள் என்பது புரியும் வகையிலேயே இருப்பதால் அவை பெரிதாக பாதிப்பைத் தரவில்லை. நீக்கச் சொன்ன காட்சிகள் இடம்பெற்றிருந்தால் இந்தப் படம் இன்னும் அழுத்தமானதாக இருந்திருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1m7epxn4ejo
-
கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை – டென்மார்க் பிரதமர்
அமெரிக்கா மட்டுமல்ல நோட்டோ நாடுகள் அனைத்துமே ஏனைய நாடுகளை சீர்குழைத்து அதன் மூலம் தம் வளங்களை பெருக்கி லாபமடையும் நாடுகள். இந்த நேட்டோ அமைப்பே உடைந்து போகட்டும். அதுவும் தம் அமைப்பில் உள்ள நாட்டால் உடையுமெனில் மகிழ்ச்சி.
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு செலான் வங்கி 50 மில்லியன் ரூபா நன்கொடை 10 Jan, 2026 | 04:51 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு செலான் வங்கி 50 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியது. இதற்கான காசோலையை செலான் வங்கியின் பணிப்பாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர, நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். செலான் வங்கியின் பிரதான செயல்பாட்டு அதிகாரி ரணில் திசாநாயக்க மற்றும் பிரதான நிதி அதிகாரி ஷானுக ஜயரத்ன ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/235693
-
ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான அவதூறு பிரசாரங்களை ஏற்க முடியாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் கண்டனம்!
தம்பி உம்மள பாலிமேர்ண்ட் அனுப்பினது தமிழ் மக்களின் உரிமையை பேச. ஹரினிக்கு வால் பிடிக்க இல்லை. ராஜபக்சகள் தோற்கடிப்பதே முதல் இலக்காம், என் பி பி இல்லையாம்? ஏன் என் பி பி எங்களு எல்லாம் தந்துட்டினமோ? இவர் ஒரு மறைமுக அனுரகாவடி என நினைக்கிறேன். இலங்கைக்குள் சமஸ்டியே வேண்டாம் இரு தேசம் என அழுங்கு பிடியா நிண்டு அத்தனை ராஜதந்தரிகளையும் புறக்கணித்த தம்பி, இப்ப ஒரு மூண்டு மாசமா, இலங்கை சம்பந்தபட்ட அரசியலை முன்னெடுக்கிறார்? இந்த நிலைப்பாடு மாற்றத்துகு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. ஏன் இந்த மாற்றம்? குடுமி ஏதும் அனுர கையில் மாட்டி கொண்டதோ?