stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து எல்பிஜி எரிவாயுவுடன் வரும் கப்பல்கள் - மத்திய அரசு அளித்த புதிய தகவல்
ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு புதுடெல்லி: ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்கி வருகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. ஈரான் ராணுவத்தின் சிறப்பு அனுமதியுடன் ஷிவாலிக், நந்தா தேவி ஆகிய எரிவாயு (எல்பிஜி) கப்பல்கள், ஜக் லட்கி என்ற கச்சா எண்ணெய் கப்பல் ஆகியவை இந்தியா வந்தன. இந்த சூழலில் ஜக் வசந்த், பைன் காஸ் ஆகிய 2 எரிவாயு கப்பல்கள் ஈரான் ராணுவ சிறப்பு அனுமதியுடன் நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன. இந்த கப்பல்கள் நேற்று சர்வதேச கடல் எல்லை பகுதியை வந்தடைந்தன. அவற்றுக்கு இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு போர்க்கப்பல் பாதுகாப்பு வழங்கி வருகிறது. மார்ச் 26 முதல் 28-ம் தேதிக்குள் இரு எரிவாயு கப்பல்களும் இந்தியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர் ராஜஷ் குமார் சின்ஹா கூறும்போது, “இரு எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்த கப்பல்களில் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி காஸ் இருக்கிறது’’ என்றார். இதுகுறித்து மத்திய பெட்ரோலிய துறை வட்டாரங்கள் கூறியதாவது: சமையல் காஸ் தட்டுப்பாட்டை சமாளிக்க உள்நாட்டில் எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி நாள்தோறும் உள்நாட்டில் 55,000 டன் எல்பிஜி உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கெனவே வளைகுடா நாடுகளில் இருந்து 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. தற்போது மேலும் 2 எரிவாயு கப்பல்கள் விரைவில் இந்தியா வந்து சேர உள்ளன. இவை தவிர நெதர்லாந்தில் இருந்து ஹெலாஸ் கிளாடியேட்டர், அமெரிக்காவில் இருந்து காஸ் ஜுபிட்டர் ஆகிய 2 கப்பல்கள் தலா 24,000 டன் எல்பிஜி காஸுடன் இந்தியா வருகின்றன. இவை வரும் 30-ம் தேதி விசாகப்பட்டினம் துறைமுகத்தை வந்து சேரும். அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அடுத்தடுத்து எல்பிஜி காஸ் கப்பல்கள் இந்தியாவுக்கு வர உள்ளன. இதேபோல ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. வளைகுடா பகுதியில் முகாமிட்டுள்ள12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஹார்முஸ் ஜலசந்தியில் 2 எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி Mar 25, 2026 - 02:51 PM தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பொறுப்பில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். எவ்வாறாயினும், அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காகக் குடும்ப உறுப்பினர்கள் அனுமதி கோரியிருந்த போதிலும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. நேற்று (24) சலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து அறிவிக்கப்பட்டதன் பின்னர், நீதவான் அவரைப் பார்வையிட்டதுடன், பின்னர் வைத்தியரிடம் ஆற்றுப்படுத்தியுள்ளார். அங்கு, வைத்திய ஆலோசனையின்படி அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmn5u1fp8000h356pjhfmrbta
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் Published By: Digital Desk 3 25 Mar, 2026 | 10:14 AM மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அங்கிருந்த எரிபொருள் தாங்கி ஒன்று தீப்பற்றியுள்ளது. ட்ரோன்கள் நடத்திய தாக்குதலால் விமான நிலையத்திலுள்ள எரிபொருள் சேமிப்பு தாங்கி ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக குவைத் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையலி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் சொத்துக்களுக்கு மாத்திரமே சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்புப் படையினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, குவைத் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தமது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் இராணுவம் அறிவித்துள்ளது. வெடிப்புச் சத்தங்கள் கேட்டால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், பாதுகாப்புப் பிரிவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியதில் இருந்து, குவைத் விமான நிலையம் பலமுறை ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த 14 ஆம் திகதி ராடார் கட்டமைப்பை இலக்கு வைத்தும், 8 ஆம் திகதி அன்று எரிபொருள் தாங்கிகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. தற்போது நிலவும் போர்ச் சூழலால் குவைத் சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே வழமையான வணிக விமான சேவைகளுக்காக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரான் ஆதரவுப் படைகளே இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/241870
-
ஈரான் வழங்கிய மர்ம பரிசு! வியந்து போன ட்ரம்ப்!
ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் நடந்த மர்ம வர்த்தகத்தில் 20 நிமிடத்தில் ரூ.840 கோடி லாபம் நியூயார்க்: ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்' தளத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டார். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக, சர்வதேச சந்தையில் நடந்த வர்த்தகம் மூலம் மர்ம நபர் ஒருவர் வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம் ஈட்டியுள்ளார். இதுகுறித்து சந்தை ஆய்வாளர்கள் கூறியதாவது: திங்கள்கிழமை காலை நியூயார்க் நேரப்படி 6:50 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:20 மணி) இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி முதலாவதாக, எஸ் அண்ட் பி 500 பியூச்சர் குறியீட்டில் சுமார் ரூ.12,600 கோடி மதிப்பிலான பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இரண்டாவதாக கச்சா எண்ணெய் பியூச்சர் சந்தையில் ரூ.1,615 கோடி மதிப்பிலான விற்பனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக, உலகளவில் நிச்சயமற்ற சூழலில் வர்த்தகம் மந்தமாக இருக்கும் அதிகாலை வேளையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இவ்வளவு பெரிய தொகையை ஒருவர் முதலீடு செய்தது சந்தையை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ட்ரம்பின் அறிவிப்பு வெளியானவுடன் பங்குச்சந்தை 2.5% உயர்ந்தது. அதேசமயம் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 109 டாலரிலிருந்து 92 டாலராகச் சரிந்தது. இதன் மூலம், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் மட்டும் அந்த மர்ம நபர் வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம் பார்த்துள்ளார். பங்குச்சந்தை உயர்வையும் கணக்கிட்டால் இந்த லாபம் பன் மடங்கு அதிகமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். போர் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக இவ்வளவு துல்லியமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதால், அரசின் ரகசியத் தகவல்கள் முன்கூட்டியே கசிந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனினும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் இப்புகார்களை மறுத்துள்ளார். ‘‘அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்க மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறது. ஆதாரமற்ற இத்தகைய குற்றச்சாட்டுகள் பொறுப்பற்றவை’’ என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை. ட்ரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்கு முன் நடந்த மர்ம வர்த்தகத்தில் 20 நிமிடத்தில் ரூ.840 கோடி லாபம்
-
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!
ஏர் கனடா விமானம் விபத்து: நியூயார்க் விமான நிலையத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு; 72 பயணிகள் தப்பினர் நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் முதன்மை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: கனடாவின் மாண்ட்ரியல் நகரில் இருந்து 72 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் புறப்பட்ட ‘ஏர் கனடா எக்ஸ்பிரஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான சி.ஆர்.ஜே-900 ரக விமானம், ஞாயிற்றுக்கிழமை இரவு 11.37 மணியளவில் லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது ஓடுதளம் 4-ல் சுமார் 24 மைல் வேகத்தில் அந்த விமானம் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் விமானத்தை இயக்கிய முதன்மை விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயணைப்பு வாகனத்தில் இருந்த ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு காவலர் ஆகிய இருவருக்கு பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலைமை தற்போது சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் இருந்த பயணிகளில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதுடன் 72 பயணிகளும் உயிர்தப்பினர். விபத்தைத் தொடர்ந்து, லாகார்டியா விமான நிலையத்தை அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தற்காலிகமாக மூடியது. அவசரகால மீட்புப் பணிகள் மற்றும் முதற்கட்ட விசாரணையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் அங்கு தரையிறங்க வேண்டிய சுமார் 18-க்கும் மேற்பட்ட விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஏர் கனடா விமானம் விபத்து: நியூயார்க் விமான நிலையத்தில் 2 விமானிகள் உயிரிழப்பு; 72 பயணிகள் தப்பினர்
-
மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
https://www.facebook.com/reel/1392673015947613 🙃
-
என் பெயர் பூனா (Buna)!
அண்ணை அது நானில்லை, @கிருபன் அண்ணை.
-
ஈரான் நாட்டுப்புற சமையல்
நேற்றைய சமையல்❣️ என்னுடன் ஒரு ஈரன் மங்கை வேலை செய்கின்றா, அவ கேட்ட ஓரு கேள்வி என்னை தூக்கி வாரிப்போட்டுது😂❤️
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
என் பெயர் பூனா (Buna)!
இப்படித்தான் திப்பிலி (மிளகு) கிறேக்கம் போய் பிப்பிலி ஆகி இன்று பெப்பர் ஆகி நிற்கின்றது.
- Today
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
என்னதான் உயிர் போகிற விசயமாயிருந்தாலும் சாப்பாட்டிலே நீங்கள் ரொம்பக் கவனம்
-
விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
நீங்களும் கெட்டிக்காரன்தான். நான்தான் ‘மூனா😜’ வழக்கறிஞர் என்றில்லாமல் நண்பன் என்ற முறையில். சரியான கணிப்பு. 09ந் திகதி சுற்றுலா பொலிஸ் அலுவலகத்துக்கு முதலாளி போயிருக்க வேண்டும். ஐயா ஹொலிடேயில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 17ந்திகதி அடுத்த அழைப்பு, ஐயா இன்னும் ஹொலிடேயில் இருக்கிறார். ஒருநாள் வருவார். உண்மை ஒருநாள் வெளியாகும்- அதில் பொய்யும் புரட்டும் வெளியாகும் வரும்
-
மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
பச்சைவிளக்கு திரைப்படத்துக்காக கண்ணதாசன் எழுதிய படலொன்றின் வரிகள், உள்ளே பணத்தைப் பூட்டி வச்சி வள்ளல் வேஷம் போடு ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு நல்ல கணக்கை மாதி கள்ளக் கணக்கை ஏத்தி நல்ல நேரம் பாத்து நண்பனையே மாத்து... அவருக்கு வேண்டப்படவர்களுக்காக எப்பொழுதும் அவர் வீட்டுக் கதவுகள் திறந்திருக்கும். வீட்டில் சாப்பிட்டு வந்தாலும் வற்புறுத்தி சாப்பிட வைப்பார். எம்ஜிஆர் திட்ட மிடுவதில் வல்லவர். இல்லாவிட்டால் கதர் ஆடை அணிந்து, ருத்ரட்ச மாலை போட்டுத் திரிந்தவர் திமுகவில் சேருவாரா?
-
என் பெயர் பூனா (Buna)!
காபியை விடவும் காபியின் வரலாற்றுப் பதிவு சுவையாக உள்ளது கிருபன் அவர்களே! ஆனாலும் நான் காபி அருந்துவதை விட்டுவிட்டேன். காலையில் காபி அருந்திக் கழிப்பறையில் இருந்து களிப்புடன் வெளியே வருபவர்களைக் கண்டுள்ளேன். சிலர் உள்ளிருந்து முக்கி முனகிக் கண் சிவந்து வருவதையும் கண்டுள்ளேன். நான் இரண்டாவது ரகம்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பச்சை கிளி பாடுது .......படம் : அமரதீபம் ......சிவாஜி & பத்மினி ......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : மானல்லவோ கண்கள் தந்தது மயில் அல்லவோ சாயல் தந்தது தேனல்லவோ இதழைத் தந்தது சிலையல்லவோ அழகைத் தந்தது பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது ஆண் : ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ஹும் பெண் : பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது ஆண் : இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது நடையழகு ஆண் : நடையழகு நடனம் ஆனது நாலழகும் என்னை வென்றது பெண் : தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது ஆண் : தேனல்லவோ இதழைத் தந்தது சிலையல்லவோ அழகைத் தந்தது பெண் : வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் இனி வரவும் செலவும் உன்னதேன்று என்னைத் தந்தேன் .......! ..... மானல்லவோ கண்கள் தந்தது .....
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!
இந்தச்செய்தியில் ஒன்றுக்குப்பின் ஒன்று முரணாக இருக்கிறது. இது ட்ரம்பின் போர்த்தந்திரம்.- யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
ஒளவை சொன்னவற்றை அறிய தந்தமைக்கு நன்றி எண்கணிதத்தில் இலட்சம் என்று வந்து குழப்பாமல் இருப்பது 👍- யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
கற்பனையும் புனைவும்: இது பலாச்சுளையை தேனில் தோய்த்து சுவைப்பது போன்ற இனிமை உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியதால் எழுந்த கேள்வியா? 🤔 தத்தக்கப் பித்தக்க நாலு கால், தானே நடந்தால் இரண்டுகால், முத்திப் பழுத்தால் மூன்றுகால், பழுத்து விழுந்தால் எட்டுக்கால். இவைகளில் ஒரு பருவம்தான் அவர் உறவே!🤪 28வது யாழ்களத்தின் பிறந்ததினத்தை கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்வதை விட்டு தமிழ் வழியில் பல பழங்கள்கொண்ட பஞ்சாமுறுத பிரசாதத்தை உறவுகளுக்கும் ஊட்டிக் கொண்டாடி மகிழ்விக்க விரும்பினேன் சுவியர் அவர்களே! 😁- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்காட் முடிந்தால் அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னேயே புதியதாய் அனுப்பிவிடுவார்கள். என பெயரில் வரும் எல்லாக் கடிதத்தையும் எனக்குப் படம்எடுத்து வற்சப்புக்குப் போட்டவருக்கு இது மறந்துபோச்சு. தெரிந்திருந்தால் நானே காட்டைக் குடுத்திருக்கமாட்டேனே. 😂- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்அதுக்குக் காரணம் இருக்கு அண்ணா. நான் சொல்லி அவர்கள் வேறு ஆளைத் தம்முடன் சேர்த்துக்கொண்டால் அதுகும் இல்லை இதுகும் இல்லை என்றாகிவிடும். அத்தோடு அவர் சிங்களவர். முன்னபின்ன தெரியாது. அவர் என்னைக் கூட்டிக்கொண்டு போகும் வரையிலும் நான் உள்ளே போவேனோ மாட்டேனோ என்ற சந்தேகமும் இருந்துகொண்டிருந்தது. சிலவேளைகளில் உப்பிடி இருந்தால்த்தான் பிழைக்கமுடியும். ஆனாலும் அந்தப் பெண்கள் பக்கமே திரும்பாமல் ஓடி வராமல் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுத்தான் வந்தேன். அத்தோடு அன்றுதான் சிங்களவர்கள் மேல் இருந்த ஏதோவொன்று இல்லாமற்போனது. அவர்களுக்குக் கொடுக்காமல் எப்படி?? இம்முறை சிறிய பல விடையங்களைப் பஞ்சியில் எழுதாமல் கடந்திருக்கிறேன் அண்ணருக்கு என்னே ஒரு அன்பு 😂😂- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 28 அகவை - சுய ஆக்கங்கள்வருகைக்கு நன்றி அக்கா நெடுங்காலமா ................. கடந்த ஆண்டும் வந்திருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை.😂- என் பெயர் பூனா (Buna)!
நான் பயணங்களின் போது ரெஸ்டொராண்டுகளில் கஃபே கூர் (கொஞ்சமாய் இருக்கும் , நல்ல கசப்பு ) மற்றும் ஒரு குரோசன் பனிஸ் மட்டும் எடுப்பது வழக்கம் .......இப்ப கோப்பி குடித்துக் கொண்டுதான் இதையும் எழுதுகின்றேன் ......காலையில் மட்டும்தான் கோப்பி மற்றும்படி தேநீர்தான் ......! 😂 நன்றி ஏராளன் .......!- வீதியோரம்.
பரவாயில்லை . ..... கொஞ்சமாவது கிறுக்கல்கள் கிறுக்கி விடுங்கோ ........ வாசிக்க ஆவலுடன் உங்கள் ரசிகர்கள் ......! 😂 - போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.