Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. பகிரங்கமாக கேட்கிறார் கொடுக்கிறார்கள். இது கேட்பவருக்கும் கொடுப்பவருக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் ஒன்றுமே பேசாதபோது நமக்கு ஏன் குமட்டுது???
  3. பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் உண்மையைப் போட்டு உடைத்து விட்டார் விஸைக்கு தாங்கள் கணித்த வாக்குசதவீதம் விஸை காங்கிரசுடன் கூட்டணிவைத்தால் என்று கருத்துக்கணிப்பை வைத்து விட்டு பிறகு விஜையின் வாக்கு சதவீதம் என்றுஅடிச்சு விட்டிருக்கிறார். ஒரு கருத்துக்கணிப்பையும் நம்ப முடியாது. எல்லாமே கருத்துத்திணிப்புதான்.இதுவரை வந்த கருத்துக்கணிப்புகளில் கட்சியே தொடங்காத ரஜனி அரசியலுக்கு வந்தால் யாருக்கு வாக்குப் போடுவீர்கள் என்றெல்லாம் கருத்துத்திணிப்பு நடத்தியிருக்கிறார்கள். அங்கே நாதக இருக்காது மற்றையவர்கள் என்று இருக்கும். இதை எல்லாம் மீறி தனித்து நின்று தேர்தல் ஆணையத்தால் கட்சி அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் கூட பல கருத்துத்திணிப்புகள் நாதகவை மற்றவர்கள் என்ற வகைக்குள்தான் வைத்திருக்கறார்கள். ஊடகங்களும் 3 முனைப்போட்டி என்றுதான் கருத்துத்திணிப்புகளைச் செய்கின்றன. மக்கள் முட்டாள்கள் அல்ல. இந்தக் கருத்திணிப்புகளைத் தடை செய்ய வேண்டும்.
  4. Today
  5. நன்றி கவிஞரே.................. நீங்கள் நலமா.................... சமீப நாட்களில் நான் எதுவுமே எழுதவில்லை. ஆனாலும் இந்த விடயத்தில் அப்படி இருக்க முடியவில்லை. கவிஞரின் பெயரையும், ஜெயமோகனின் பெயரையும் முற்றாக தவிர்க்க நினைத்தேன். கவிஞரின் பெயர் இங்கு வந்தால், அது ஒரு சினிமா உரையாடலாகவும், கவிஞர் எதிர் வைரமுத்து என்றும் போய் விடுமோ என்று நினைத்தேன். ஜெயமோகன் அடிவாங்காத இடமே கிடையாது தானே............🤣. அவர் உள்ளே வந்தால் இந்த திரியே வெறும் வாய் கலப்பாகத்தான் முடியும்...............🤣. 'சக்கரவர்த்தி உலா' என்று நான் இந்த உரையாடலில் முன்னர் குறிப்பிட்டிருந்த ஒரு கட்டுரையை எழுதியது ஜெயமோகனே......................
  6. வீட்டில் 80 வீதமான பொரியலுக்கு நாம் அவகாடோ எண்ணெய்யை பயன்படுத்துகின்றோம் இப்போது. மிகுதி 20 விகிதத்தில் 15 வீதம் நல்லெண்யையும் 5 வீதம் canola எண்ணெயையும் பயன்படுத்துகின்றோம். இறைச்சி, மீன் marinade பண்ண , salad போன்றவற்றுக்கு ஒலிவ் எண்ணையை பாவிக்கின்றோம். வீட்டில் பார்ட்டி, விருந்தினர்கள் கனக்க எனில் இருக்கவே இருக்கு சூரியகாந்தி பூ எண்ணெய்.😁
  7. உங்கள் பொறுப்புதுறப்பை தாண்டியும் - தொடர்பிருப்பதாக எனக்கு படுகிறது. கிட்டதட்ட ஒரே விடயம் (கண்ணதாசன் கொள்ளை அடிக்கவில்லை எனில்) ஆனால் பார்க்கும் பார்வை வேறு படுகிறது.
  8. ஆம்…உங்களுக்கு பத்திரிகா தர்மம் என்றால் என்ன என்பது தெரியவில்லை என்பது உங்கள் கேள்வியில் தெரிகிறது. ஒரு குற்றசாட்டை எழுதினால் அதற்கு சம்பந்த பட்டவரின் பதிலையும் கேட்டு வெளியிடுவார்கள். அதனால் குற்றசாட்டு இல்லை என்றாகாது. உழைப்பு - நான் எப்போதும் என் சொந்த உழைப்பில்தான் சாப்பிடுவேன் அண்ணை. மற்றையவரிடம் திரட்டி அல்ல. அதான் விஜைய வெளுக்க எண்டு சபரீசனை தேர்தலுக்கு சிலமாதம் முன்பே சந்தித்து பெட்டி வாங்கியாச்சே.
  9. இப்பொழுது தேர்தல் நேரம். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் வாக்குகள் கிடைக்குமென்றால் மட்டும் வருவார்கள். கூட்டுச் சேர்ந்த கட்சிகளுக்கு இடங்களைப் பிரித்துக் கொடுப்பதற்கே திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறார்கள். அத்தோடு இது ஓட்டு அரசியல் இல்லை என்கிறீர்கள். எப்படி வருவார்கள்? நாம் தமிழர் கட்சியைப் பற்றி நீங்களே சொல்லிவிட்டீர்களே போலி தேசியம் பேசித் திரிபவர்கள் என்று. இதற்கு மேல் என்ன செல்ல இருக்கின்றது?
  10. ஆக, யாழ் அகவை 28இல் ஊர்க்கதை வாசிக்க வாய்ப்பிருக்கின்றது.☺️
  11. உங்களுடைய விவாதங்களுக்கும் எனது இந்தப் பதிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாரதியின் பாட்டை சுட்டிக்காட்டியிருந்தீர்கள். சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்தது. கண்ணதாசன், அம்பிகாபதி திரைப்படத்துக்கு எழுதிய பாடல் வரிகள். கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே காவியமோ ஓவியமோ கன்னியிளமானே வண்ணமுக வெண்ணிலவில் கன்னியிளமானே வண்டு வந்ததெப்படியோ கன்னியிளமானே…
  12. நான் ஐந்து மாதங்கள் ஊரில் இருந்தேன். போன் பார்க்கக் கூட நேரம் இல்லை.
  13. மார்ச் மாதம்தான் யாழுக்கு வருவீர்களா? எதுவானாலும் மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. எழுதுங்கள்.
  14. இதை முன்னரும் நிழலி ஒரு தடவை கேட்டிருந்தார். மத்திய தரை (Mediterranean) நாடுகளில் ஒலிவ் எண்ணையை உணவின் மீது தெளித்து, சூடாக்காமல் பாவிப்பதால் இந்த தவறான புரிதல் என நினைக்கிறேன். சாதாரண வதக்கல் (frying), தீவிர வதக்கல் (deep frying): முட்டை பொரித்தல் அல்லது அல்லது எதையாவது கொஞ்ச எண்ணையில் வறுத்தல் போன்றவற்றிற்கு தூய ஒலிவ் எண்ணை (extra virgin olive oil) பாவிக்கலாம். எண்ணையின் smoke point ~400 F வரை இருப்பதால் கருகிய பக்க விளைவுகள் உருவாகாது. அதை விட அதிக வெப்ப நிலை வேண்டும் மீன் பொரித்தல் போன்ற தேவைகளுக்கு light-tasting olive oil என்ற ஒரு வகை இருக்கிறது. இதன் smoke point ~470 F வரை இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு. இந்தப் பாதுகாப்பிலும் திருப்தி இல்லையெனில், அவகாதோ எண்ணை பொரிக்கப் பாவிக்கலாம். இதன் smoke point ~520 F வரை இருக்கும். அதே வேளை ஒலிவ் எண்ணையின் ஆரோக்கிய அம்சங்கள் அவகாதோ எண்ணையிலும் இருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், எங்கள் அனேக சமையல் தேவைகளுக்காக ஒலிவ் எண்ணையைச் சூடாக்கலாம்.
  15. இதோ இது என் நெஞ்சிலே .......... படம் : வட்டத்துக்குள் சதுரம் ....... இசை: இளையராஜா ........நடிப்பு : லதா & சுமித்ரா ......... 😍 ஒருமுறை நடிப்புடன் பாட்டையும் கேட்டுப்பாருங்கள் ........ அமிர்தம்.......!
  16. இந்திய அரசியலில் எதுவும் நடக்கும். இன்னும் இரண்டு மாதங்கள் தானே. பார்ப்போம்.
  17. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : { மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான் பிரம்மனும் மூா்ச்சையுற்றான் } (2) ஆண் : அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று உயிரைத் தடவி திரும்பும் போது மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து மாா்பு கடந்து இறங்கும் பொழுது முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே ஆண் : நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து பாலில் நனைத்து பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டான் ஆண் : உலக மலா்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்மை சமைத்து விட்டான் ஆண் : அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீா்ந்தது அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா ஹே ஹே கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா ஆண் : மின்மினி பிடித்து மின்மினி பிடித்து கண்களில் பதித்து கண்களில் பதித்து கண்மணி கண் பறித்தாள் ஆண் : தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள் ஆண் : காவித் துறவிக்கும் ஆசை வளா்ப்பவள் அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள் பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத் தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே ......! --- மின்னலை பிடித்து மின்னலை பிடித்து ---
  18. "மூன்று கவிதைகள் / 32" "மானல்லவோ கண்கள் தந்தது" மானல்லவோ கண்கள் தந்தது அன்று தேனல்லவோ இதழ்கள் தந்தது இன்று மையலில் மயங்கி நின்றேன் மெல்ல கையினைத் தந்து அருகே அழைத்தாய்! சித்திரப் பெண்ணே காதல் கொண்டேன் நித்தமும் உன்னையே எண்ணி வாழ்வேன் மென்மை அழகில் மெய்மறந்து நின்றேன் உண்மை அன்பில் முழுதும் நனைந்தேன் வாழும் காலம் உன்னுடன் இணைய சாட்சி சொன்னது இயற்கை அன்னை! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம். ........................................................ 'ஏடு துவக்கல்' [புகைப்படக் கவிதை] அம்மாமா அண்ணன் வாழ்த்துக் கூறவே செம்மாந்த தாத்தா ஏடு துவக்கினார்! அம்மாவின் அருளாசி விண்ணில் ஒலிக்கவே செம்மையாய் மகளும் மருத்துவர் ஆனாரே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம். ........................................................................... 'நிழலாக நெஞ்சில் நிறைந்திடும் நினைவுகள்' சுவரில் படரும் பாசியாய்க் கடந்தகாலம் சுமக்கும் கனவுகள் மகிழ்ச்சியின் கோலம்! பிரிந்த உருவம் உள்ளத்தில் நிலைக்கப் பழைய எண்ணங்கள் மனதில் இனிக்கும்! கடந்து போன வசந்த காலங்கள் கண்ணில் ஆடும் இன்ப உருவங்கள்! நிலைத்து வாழும் என்றும் நம்முடன் நிழலாக நெஞ்சில் நிறைந்திடும் நினைவுகள்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம். துளி/DROP: 2101 ["மூன்று கவிதைகள் / 32" https://www.facebook.com/groups/978753388866632/posts/34382484418066766/?
  19. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 137 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 137 / பின் இணைப்பு - "இலங்கை நாளிதழ் ஆசிரியர்களால் புத்தர் துரோகம் செய்யப்பட்டாரா?" அகிம்சை, அறநெறி மற்றும் உண்மையைப் போதித்த இரக்கமுள்ள மற்றும் அறிவொளி பெற்ற கௌதம புத்தர், ஒழுக்கக்கேடு மற்றும் வன்முறைக்காகக் கண்டனம் செய்யப்பட்ட மனிதர்களின் வருகைக்கு இலங்கை போன்ற ஒரு புனித நிலத்தைத் தயார் செய்வார் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தத் திரிபு வெறும் இலக்கியக் குறையல்ல - இது நவீன இலங்கையில் அரச சித்தாந்தத்தையும் இன ஒடுக்குமுறையையும் தமிழர்களுக்கு எதிராக கையாள ஒரு தூண்டுதலாக, ஒரு சக்தியை ஏற்படுத்தும் கருவியாக இந்த மணோவியல் இன்னும் இருக்கிறது. யார் அரசில் இருந்தாலும் அதில் மட்டும் வேறுபாடு இல்லை!! மாறாக, ஒரு ஆட்சியாளர் எவ்வளவு நல்லவனாக, நேர்மையானவனாக இருந்தாலும், அவன் ஒரு பௌத்தராக இல்லாவிட்டால் கொல்லலாம் என்றும் அங்கு காணப்படுகிறது. இதற்கு ஒரு உதாரணம் மன்னன் எல்லாளன் ஆகும். தீபாவம்சத்தின்படி மிகவும் பாராட்டத்தக்க, புகழ் பெற்ற மன்னன் எல்லாளன் ஆகும். தீபாவம்சம் 18-50 இல் 'காமம், வெறுப்பு, பயம், அறியாமை ஆகிய நான்கு தீய பாதைகளைத் தவிர்த்து, இந்த ஒப்பற்ற மன்னன் நீதியாக ஆட்சி செய்தான்' என அங்கு விவரிக்கப்படுகிறது. அதே போல, மற்றொரு நாளாகமம் மகாவம்சமும் அவரை ஒரு நீதியான ஆட்சியாளர் என்று ஒப்புக்கொண்டாலும், புத்தமதத்தை பின்பற்றாதவர் என்ற ஒரு காரணத்துக்காக மட்டுமே, எல்லாளன் துட்டைகைமுனு அல்லது துட்டகாமினியால் கொல்லப்படுவதை பெருமைப்படுத்தி புகழ் பாடுவது எந்த புத்தரின் கொள்கை அல்லது தர்மத்துக்குள் அடங்குகின்றன என்று இன்னும் நான் தேடிக்கொண்டு இருக்கிறேன்? என்றாலும் தீபவம்சம் இந்த கொலை குறித்து மௌனமாக இருக்கிறது. ஒருவேளை, எல்லாளன் கொல்லப்பட்டதை விவரிக்க, அவருக்கு கடினமாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவர் அதை விவரிக்காமல் விட்டு இருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஒருவேளை அப்படி ஒரு எல்லாளனின் கொலை ஒருபோதும் நடக்காமல் கூட இருந்திருக்கலாம்? சில ஆய்வாளர்கள், எல்லாளன் மற்றும் துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி இருவரும் கற்பனைப் புராணப் பாத்திரங்களாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்? மத சார்புடன் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவமசம், அதிகமாக கி.பி. 5ஆம் நூற்றாண்டில் மகாநாம தேரர் என்ற ஒரு பௌத்த பிக்குவால் எழுதப்பட்டது ஆகும். இது வரலாற்று நூலாகவும், அதேவேளை, புத்த மதத்தை அரசியல் ரீதியாக மேம்படுத்தும் கதை வடிவமாகவும் உள்ளது. அது மட்டும் அல்ல, இந்த நூல், புத்தமத அரசர்களே வெற்றியடைவார்கள் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. மற்ற மதத்தினரை — அவர் ஒரு நீதிமிக்கவராக இருந்தாலும் —அழிக்கவேண்டும் அல்லது கொலை செய்யவேண்டும் எனும் எண்ணத்துடன் உள்ளது புலப்படுகிறது. இருப்பினும், மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா தேரர், அந்த கொலையைப் புகழ்ந்து அதை சரியீடு செய்தார் என்று எண்ணுகிறேன். அதுமட்டும் அல்ல, அனைத்து சிங்கள பௌத்த அரசியல்வாதிகள், வரலாற்றாசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் புத்த பிக்குகள் மகாவம்சத்தை தங்கள் தலையில் வைத்துப் புகழ் பாடி, அதை உண்மை வரலாறாக ஒத்துப் பாடுவது விந்தையாக உள்ளது? பாவம் புத்தரும் அவரின் கொள்கைகளும்? இன்னும் ஒன்றையும் கவனிக்க, துட்டகாமினி என்பவன், மகாவம்சத்தின் படி, அவரின் தந்தையின் அல்லது தாயின் கணவரின் உயிரியல் மகன் அல்ல. அவன் இறக்கும் ஒரு துறவியின் மறுபிறவி ஆகும். சூளவம்சத்தின்படி, புத்தர் கி.மு 544 இல் மகாபரிநிர்வாணம் அடைந்தார். இது பௌத்த நாட்காட்டியின் தொடக்கமாகும். இருப்பினும், இது பற்றி தீபவம்சத்திலோ அல்லது மகாவம்சத்திலோ வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ அங்கு குறிப்பிடப்படவில்லை. என்றாலும் ஜெர்மன் நாட்டின் அறிஞர் வில்ஹெம் லுட்விக் கெய்கர் அல்லது வில்லெம் கெய்கர் (Wilhelm Geiger), மிகவும் முக்கியமான வரலாற்று ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, கி.மு. 483 என்பதை பின்பற்றி 1912 இல் மகாவம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிட்டார். இருந்தபோதிலும், 1950களில், இலங்கை பௌத்த-தேசியவாதத் தலைவர்கள், குறிப்பாக பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் அல்லது நிலைப்பின்மையின் போது, 1956 ஆம் ஆண்டில் 2500வது புத்த ஜெயந்தியைக் கொண்டாடும் நோக்கத்துடன், பழைய, மிகவும் மத ரீதியாக அடையாளப் படுத்தப்பட்ட தேதியான கி.மு. 544 ஐ மீண்டும் ஏற்றுக்கொண்டனர். அதாவது, இந்த அரசியல் குழப்ப நிலையை புத்த மத தேசியவாதிகள் பயன்படுத்திக் கொண்டனர் என்பது வரலாறு ஆகும். அவர்கள், கி.மு. 544 என்பதைக் ஏற்றுக் கொண்டு 1956ல் 2500வது புத்த ஜயந்தியை [அவதாரபுருஷர் முதலிய பெரியோரின் பிறந்தநாட் கொண்டாட்டம்] கொண்டாடினார்கள். இதற்காக ஆசிய நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு அழைக்கப்பட்டனர், இது சிங்கள பௌத்த தேசியவாதத்தை மேலும் வலுப்படுத்தியது எனலாம். Part: 137 / APPENDIX – "Is BUDDHA BETRAYED by Lanka chronicles authors?" Could anyone imagine that the compassionate Buddha prepared Lanka for the arrival of convicted criminals? The monkish chronicle tradition is that any criminal behaviour is glorious so long as the criminal is connected with the Buddhism. Conversely, however good a ruler is, he shall be killed if he is not a Buddhist. The typical example is the ruler Elara. The most praiseworthy ruler, as per Dipavamsa, is Elara. He was described as; incomparable monarch, Dipavamsa 18-50. The other Chronicle Mahavamsa too exalts the killing of Elara while acknowledging him a just ruler. The Dipavamsa author must have found it hard to describe the killing of Elara by Abhaya, he simply avoided describing it. It could be that the killing of Elara never took place. However, Mahanama, the author of the Mahavamsa, more than compensated it, and all the Sinhala politicians, historians, academicians, and the (un) Buddhist monks praise Mahavamsa on their heads. However, as shown elsewhere, both Elara and Dutta Gamani are invented kings. Dutta Gamani is a reincarnation of dying monk, and not the biological son of his supposed father, or rather not the son of his mother’s husband. In accordance with Culavamsa, Buddha attained Mahaparinirvana 544 B.C. This is the start of the Buddha Varsha (Buddhist Calendar). This origin is, however, not expressly stated or implied in the Dipavamsa or in the Mahavamsa. However, this year of 544 B.C. is considered unreliable. The translator of the Mahavamsa, Wilhelm Geiger, assumed 483 B.C. as the year of Mahaparinirvana, and prepared the List of Kings of Ceylon accordingly in the translation of the Mahavamsa. This was a Ceylon Government publication in the year 1912. The 2500th anniversary of the Buddha’s Mahaparinirvana shall fall on the year 2017 A.D. However, the Sinhala only and the Buddhist interest groups wanted to take advantage of the unstable political situation due to the sudden death of the then prime minister, D. S. Senanayake in the early 1950s. They adopted the discarded year 544 B.C. and Vesak in 1956 marked the start of the Buddha Jayanthi Year, commemorating the 2500th anniversary of the passing away of Buddha (543 BC). As part of the celebrations, the Government invited heads of State, particularly from Asian countries to visit Sri Lanka and participate in the numerous ceremonies. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 138 தொடரும் / Will follow துளி/DROP: 2102 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 137 https://www.facebook.com/groups/978753388866632/posts/34382660331382508/?
  20. வங்கி சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு Published By: Digital Desk 3 19 Mar, 2026 | 04:57 PM நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், வங்கிக் கட்டமைப்பு ஒரு 'அத்தியாவசிய சேவை' என்பதால் வாரத்தின் அனைத்து ஐந்து நாட்களிலும் வங்கிகள் தொடர்ந்து இயங்கும் என இலங்கை வங்கிச் சங்கம் (SLBA) அறிவித்துள்ளது. அரசாங்கத்தினால் புதன்கிழமைகள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வாடிக்கையாளர்களின் நலன் கருதி வங்கிகள் பின்வரும் விசேட நடைமுறையைப் பின்பற்றும், எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அனைத்து வணிக மற்றும் விசேட வங்கிகளும் புதன்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாத்திரம் இயங்கும். ஏனைய நான்கு நாட்களிலும் (திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி) வங்கிகள் வழமையான நேரப்படி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கிளைகளுக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் (Digital & Online Banking) பயன்படுத்துமாறு இலங்கை வங்கிச் சங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது: அத்தியாவசியத் தேவைகள்: மிக அத்தியாவசியமான தேவைகளுக்காக மாத்திரம் வங்கிக் கிளைகளுக்குச் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மொபைல் அப்ளிகேஷன்கள் (Mobile Apps) மற்றும் இன்டர்நெட் பேங்கிங் ஊடாக அன்றாடப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது உலகளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் விநியோகத் தடைகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் விரைவில் சீரடையும் என எதிர்பார்ப்பதாக வங்கிச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் நீண்டகாலப் பாதிப்புகளின்றி மீண்டும் வழமைக்குத் திரும்பும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இலங்கையிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அமைப்பாக இலங்கை வங்கிச் சங்கம் (SLBA) விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241387
  21. ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தை வருண், நரேனுக்கு சாதகமாக மாற்றவேண்டும்: டு பிளெஸ்ஸிஸ் மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா வரும் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 29-ம் தேதி 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஜியோஸ்டார் சார்பில் நடைபெற்ற ‘கேம் பிளான்’ நிகழ்ச்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்பாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான பாஃப் டு பிளெஸ்ஸிஸ் கூறியதாவது: கேமரூன் கிரீன் மிகவும் திற மையானவர், அவரிடம் வெற்றி பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக பல திறமைகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய வீரராகவும், ஆந்த்ரே ரஸ்ஸலுக்கு இணையான மாற்று வீரராகவும் அவர் இருப்பார். கேமரூன் கிரீன் ஆறு அடி உயரம் கொண்ட வலுவான வீரர். அவர், பவுன்ஸர் மற்றும் யார்க்கர் பந்துகளை வீசக்கூடியவர். பேட்டிங்கில் பந்தை மைதானத்துக்கு வெளியே அவரால் மிக எளிதாக அடிக்க முடியும், அதே சமயம் அவர், ஒரு முறையான பேட்டரும் கூட. ஒட்டுமொத்தத்தில் கேமரூன் கிரீன் கொல்கத்தா அணியை சமநிலையை அடையச் செய்கிறார். ஆனால், சமீபகாலமாக அவர் சிறந்த ஃபார்மில் இல்லை. இது ஒருபுறம் இருக்க ஐபிஎல் தொடரில் அவர், ரூ.25.2 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பதால், அந்த ‘ப்ரைஸ் டேக்’ அழுத்தமும் இருக்கும். அவரது, தோள்களில் பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. அணி அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கும். அவர் இதனை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். கொல்கத்தா அணி நிர்வாகம் ஃபின் ஆலன், டிம்ஷெய்ஃபெர்ட் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக விளையாடும் லெவனில் சேர்க்கும் வழியைக் கண்டறிந்தால், அது அந்த அணிக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இது அவர்களின் பேட்டிங்கை மிகவும் வலிமையாக்கும். தற்போதைய டி20 கிரிக்கெட் விளையாடப்படும் முறைக்கு, இவர்கள் இருவரும் இன்னிங்ஸைத் தொடங்குவது கச்சிதமாக இருக்கும். இவர்கள் இருவரும் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடக்கூடியவர்கள். பேட்டிங் வலுவாக உள்ள நிலையில் வேகப்பந்து வீச்சுத்துறை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சில முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் ஏலப்பட்டியலில் விற்கப்படாத வீரர்களில் இருந்து அனுபவம் வாய்ந்தவரை தேர்வு செய்து, பந்துவீச்சு துறையை பலப்படுத்துவது அவசியம். நான் கொல்கத்தா அணி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தால், ஈடன் கார்டன் மைதான பராமரிப்பாளரிடம் ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக தயாரிக்குமாறு கேட்டுக்கொள்வேன். ஏனெனில் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் போன்ற வீரர்கள் கிடைத்தது கொல்கத்தா அணி செய்த பாக்கியம். தற்போதைய டி20 கிரிக்கெட்டில் இருக்கும் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இவர்களும் அடங்குவர். வருண் மற்றும் நரைன் ஆகிய இருவருமே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் சூழல் இருக்க வேண்டும். அவர்களுக்குச் சாதகம் இல்லாத ஆடுகளங்களில் விளையாடினால், உங்கள் அணியின் அந்த இரண்டு பீரங்கிகளையும், உங்களின் ‘சூப்பர் பவர்’ திறனையும் நீங்கள் இழக்க நேரிடும். அவர்கள் எந்த வகையான ஆடுகளத்திலும் சிறப்பாகப் பந்துவீசி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடியவர்கள் தான். ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா வெற்றி பெற வேண்டுமானால், வருண் மற்றும் நரைன் இருவரும் அதிரடியாக செயல்பட வேண்டும். இந்த இரு வீரர்களையும் மனதில் வைத்தே ஆடுகளம் தயார் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தை வருண், நரேனுக்கு சாதகமாக மாற்றவேண்டும்: டு பிளெஸ்ஸிஸ்
  22. ஈரான்–இஸ்ரேல் போரால் அமெரிக்காவிற்கு பெரும் பொருளாதாரச் சுமை – ஈரான் வெளிவிவகார அமைச்சர் Published By: Digital Desk 3 19 Mar, 2026 | 03:52 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஈரான் மீதான போரின் காரணமாக அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள கடும் பொருளாதாரச் சுமைக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க பாராளுமன்றத்தில் உள்ள அவரது ஆதரவாளர்களே காரணம் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பதிவில், வொஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி இந்த கருத்துகளை முன்வைத்துள்ளார். அரக்ச்சி குறிப்பிட்டதாவது, ஈரானுக்கு எதிரான போருக்காக அமெரிக்க பாதுகாப்புத் துறை சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போரின் ஆரம்பக் கட்ட செலவாக மட்டுமே இருக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். “இந்த விருப்பத் தேர்வு போர் தொடங்கி மூன்று வாரங்களே ஆகின்றன. இந்த 200 பில்லியன் டொலர் என்பது பனிப்பாறையின் நுனி மட்டுமே” என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க பொதுமக்கள் இந்த பெரும் செலவுக்காக “பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காங்கிரஸில் உள்ள அவரது விசுவாசிகளுக்கு நன்றி சொல்லலாம்” எனவும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்க தரப்பில் போர்ச் செலவு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான முழுமையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால், போரின் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 11.3 பில்லியன் டொலர் செலவானதாக இராணுவ அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், போர் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தற்போதைய நிலையில் மொத்த செலவைக் கணக்கிட முடியாது என தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவுகள் மற்றும் உள்நாட்டு பொருளாதார தாக்கங்கள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. நிலைமை மேலும் விரிவடையும் பட்சத்தில், சர்வதேச பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/241378
  23. '98 சிசிடிவி, 2574 செல்போன் எண்கள்' - தூத்துக்குடி மாணவி கொலையில் கைது நடந்தது எப்படி? படக்குறிப்பு,கைது செய்யப்பட்ட நபர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் (எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம் சங்கடம் தரலாம்) தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகள் உள்பட அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக மாணவி கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் பெற்றோர், கடந்த 10-ஆம் தேதியன்று, 'பிளஸ் 2 படிக்கும் தங்கள் மகளைக் காணவில்லை' எனக் கூறி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகச் சென்ற அவர் திரும்பி வரவில்லை என காவலர்களிடம் தெரிவித்தனர். பட மூலாதாரம்,Facebook/Madhan படக்குறிப்பு,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் ஆனால், புகாரைப் பதிவு செய்யாமல் காவலர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக மாணவியின் தந்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஊரில் உள்ள மக்களையெல்லாம் திரட்டிக் கொண்டு தனது மகளைத் தேடியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்பிறகும் மாணவியை அவர்களால் கண்டறிய முடியவில்லை. மறுநாள் (மார்ச் 11) அதே காட்டுப் பகுதியில் மாணவியை அவரது குடும்ப உறவினர் ஒருவர் சடலமாக கண்டுள்ளார். இதன்பிறகே சம்பவ இடத்துக்கு காவல்துறை வந்ததாக கிராம மக்கள் குற்றம் சுமத்தினர். வழக்கில் தொடர்புடைய நபரைக் கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டதால் கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பத்து தனிப்படை இந்த நிலையில், மாணவி கொலை வழக்கில் தர்மமுனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரைக் கண்டறிந்தது குறித்து, தூத்துக்குடி எஸ்.பி மதன் செய்தியாளர் சந்திப்பில் விவரித்தார். "வழக்கில் பத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதில், நான்கு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆறு காவல் ஆய்வாளர்கள் உள்பட 150 பேர் இடம்பெற்றிருந்தனர்," எனக் கூறினார். படக்குறிப்பு,மாணவியின் மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் "அறிவியல்பூர்வமாக புலன் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்களும் தடயவியல் நிபுணர்களும் தடயங்களைச் சேகரித்து தனித்தனியாக அறிக்கை கொடுத்தனர்." எனக் கூறினார் மதன். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறிய மதன், "சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி இல்லையென்றாலும் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்." என்கிறார். "அந்தவகையில், 98 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். சம்பவம் நடந்த நாளில் பதிவான 2574 செல்போன் எண்களை ஆராய்ந்தோம். சிறையில் இருந்து வெளியே வந்த நபர்கள் உள்பட குற்றப் பின்னணி கொண்ட நபர்களின் பட்டியலைச் சேகரித்து விசாரிப்பதற்கு குழுக்களை அமைத்தோம்." எனவும் மாவட்ட எஸ்.பி தெரிவித்தார். 'உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும்' தொடர்ந்து பேசும்போது, "வழக்கின் விசாரணையில் குற்றப் பின்னணி கொண்ட 461 பேரை நேரடியாக விசாரித்தோம். அவர்கள் கூறும் தகவல்களை டிஜிட்டல் ஆதாரம் மூலமாக ஆய்வு செய்தோம். இவ்வளவு நாட்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் ஒருவரைக் கைது செய்தோம்." எனக் கூறினார் மதன். "சூழ்நிலை சாட்சிகள், செல்போன் அழைப்புகள், சிசிடிவி கேமரா காட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நபரை நெருங்கினோம். எந்தவித அழுத்தத்துக்கும் ஆளாகாமல் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து கைது செய்துள்ளோம்," என்கிறார் அவர். கைதான நபர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறிய எஸ்.பி, "விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவருக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும். குற்றத்தில் கூடுதல் நபர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," எனத் தெரிவித்தார். "மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டரா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "பாலியல் துன்புறுத்தலைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கான ஆதாரங்களைச் சேகரித்து அனுப்பியுள்ளோம். வழக்கு விசாரணையில் உள்ளதால் இதற்கு மேல் கூறுவது சரியாக இருக்காது." எனக் குறிப்பிட்டார். "ஒருவரைக் கைது செய்வதற்கு ஒன்பது நாட்கள் தேவைப்பட்டது ஏன்?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். "கிராமத்தில் உள்ளவர்கள் கூறுவது உண்மையா.. கிராமத்துக்கு அருகில் வசிப்பவர்கள் கூறுவது உண்மையா என தனித்தனியாக ஆய்வு செய்தோம்." என்றார். வரும் நாட்களில் கிராமங்களில் அதிகளவில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த உள்ளதாகவும் காவல்துறை ரோந்து பாதுகாப்பை தீவிரப்படுத்த உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தெரிவித்தார். மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடலைப் பெற்றுக் கொள்வதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77ml416pg3o
  24. வளைகுடா நாடுகள் அஞ்சிய 'விஷயம்' நடந்துவிட்டது - அடுத்து என்ன? பட மூலாதாரம்,Reuters கட்டுரை தகவல் ஃப்ரான்க் கார்ட்னர், பாதுகாப்பு செய்தியாளர், நிக் மார்ஷ், ஆசிய வணிக செய்தியாளர் அஸாதே மோஷிரி, தெற்கு ஆசிய செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் புதன்கிழமை அன்று இரானின் முக்கியமான தெற்கு பார்ஸ் எரிவாயு உற்பத்தி நிலை மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதைப்பற்றி அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து கத்தாரின் முக்கிய எரிவாயு தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய இரான் "கடுமையான சேதங்களை" ஏற்படுத்தியுள்ளது. கத்தாருக்கு எதிராக இரான் மேலும் பதில் நடவடிக்கைகளை எடுக்க கூடாது என டிரம்ப் எச்சரித்துள்ளார் இரானின் எரிவாயு உற்பத்தி நிலை மீதான தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்யாத நிலையில், தனது கூட்டாளி "மத்திய கிழக்கில் நிகழ்ந்த விஷயங்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக" இரான் மீது "கடுமையாக தாக்குதல் நடத்தியதாக" டிரம்ப் கூறியுள்ளார். கத்தாரின் வடக்கு எரிவாயு நிலையின் நீட்சியாக உள்ள இரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு நிலையுடன் தொடர்புடைய தளங்களை ''இஸ்ரேல் இலக்கு வைப்பது மிகவும் ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நகர்வு" என கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் கண்டித்துள்ளது. தனது ராஸ் லஃபான் ஆற்றல் உற்பத்தி தொழிற்பேட்டை மீதான இரானின் தாக்குதல் "வெட்கக்கேடானது" என்றும் "தனது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் நிலைத்தன்மை மீதான நேரடி அச்சுறுத்தல்" என கத்தார் அரசு குறிப்பிட்டிருந்தது. பட மூலாதாரம்,Getty Images வளைகுடா நாடுகள் 'அச்சப்பட்ட' விஷயம் இந்த அதிகரித்த பதற்றத்தை வளைகுடா அரபு நாடுகள் அச்சத்துடன் எதிர்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு முன்பு இரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிலைகளை குறிவைத்து நிகழ்ந்த இரானிய ஏவுகணை தாக்குதல்கள் தற்போது எரிசக்தி துறை மீதான தாக்குதலாக உருவெடுத்துள்ளன. இதுதான் வளைகுடா பொருளாதாரங்களின் இதய துடிப்பாக உள்ளது. எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோரசாயனங்கள்தான் வளைகுடா அரபு நாடுகளை சில பத்தாண்டுகளில் பணக்கார நாடுகளாக மாற்றின. பிப்ரவரி மாதம் இரானை தாக்க வேண்டாம் என வெளிப்படையாகவும் தனிப்பட்ட முறையிலும் தெரிவித்த பிறகும் அமெரிக்கா இரானைத் தாக்கியது கத்தாரை சீற்றமடையச் செய்தது. இப்போது கத்தார் எரிவாயு துறையின் மணிமகுடமான ராஸ் லஃபான் ஒரே இரவில் இரு முறை தாக்குதலுக்கு உள்ளானது. வளைகுடா அரபு நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் திறம்பட உள்ளன. 12 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைச்சர்களின் கூட்டம் நடைபெறும் நிலையில் ரியாத்தில் இரானின் பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன. ஆனால் இரானின் ஆயுதம் தற்போது வரை தீர்ந்துவிடவில்லை. அதன் ஆயுதங்களில் சில பாதுகாப்பு அமைப்புகளைக் கடந்து செல்ல முடிந்தது. பட மூலாதாரம்,Getty Images டிரம்பின் உத்தரவாதம் இரான் மற்றும் கத்தார் மீதான இந்த தாக்குதல்கள் இந்த மோதலின் முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. கத்தார் மீதான இரானின் தாக்குதல்கள் தொடர்ந்தால் தெற்கு பார்ஸ் எரிவாயு உற்பத்தி நிலை மொத்தமாக அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். அதே வேளையில் கத்தாரை இரான் தாக்கவில்லை என்றால் தெற்கு பார்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது என்கிற டிரம்பின் உத்தரவாதம் உலகளாவிய எரிபொருள் சந்தைக்கு இந்த நிலைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உணர்த்துகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,குவைத்தின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைகளில் ஒன்று இரான் எதிர்வினைக்கு விலை கொடுக்கும் வளைகுடா நாடுகள் கத்தாரில் உள்ள ராஸ் லஃபான் ஆற்றல் உற்பத்தி தொழிற்பேட்டை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளானலும் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஹப்ஷான் எரிவாயு உற்பத்தி நிலை மற்றும் பாப் நிலைகள் மூடப்பட்டுள்ளன. இடைமறிக்கப்பட்ட தாக்குதல்களில் இருந்து வந்த சிதறல்களால் அவை சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சௌதி அரேபியாவும் இலக்கு வைக்கப்பட்டது, மேற்குப் பகுதியிலும் தலைநகர் ரியாத்திலும் தாக்குதல்களை தடுத்ததாக அந்நாடு தெரிவிக்கிறது. ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் தனது உரிமையை நிறுத்தி வைத்திருப்பதாக சௌதி அரேபியா எச்சரித்துள்ளது. இரான் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அதன் சார்பாக மத்தியஸ்தம் செய்ய தயாராக இருந்த அதன் அண்டை நாடுகளுடான உறவுகளையும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,Getty Images இரான், இஸ்ரேல் தாக்குதலைக் கண்டித்த அரபு நாடுகள் இந்த நிலையில் ரியாத்தில் நடைபெற்ற அமைச்சர்களின் கூட்டத்திற்குப் பிறகு அரபு நாடுகள் கூட்டு அறிக்கை மூலம் இரானின் தாக்குதலைக் கண்டித்துள்ளன. இவர்களில் பஹ்ரைன், குவைத், லெபனான், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இதர நாடுகள் அடங்கும். குடியிருப்பு பகுதிகள், பொது உள்கட்டமைப்புகள் மற்றும் தூதரக கட்டடங்களை இலக்கு வைத்ததாக அவர்கள் கூறும் இரானின் "திட்டமிட்ட தாக்குதல்களை" அறிக்கையின் மூலம் கண்டித்திருந்தனர். எந்தச் சூழலிலும் இவற்றை நியாயப்படுத்த முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஐ.நா பிரிவு 51-இன்படி தங்களின் தற்காப்புக்கான உரிமையையும் அவர்கள் வலியுறுத்தினர். இரான் தனது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சர்வதேச சட்டம் மற்றும் சிறந்த அண்டைநாடுகள் கொள்கையை மதிக்க வேண்டும் எனக் கோரிய அந்த அறிக்கை, ஹோர்மூஸ் நீரிணையை மூடுவதை நோக்கமாகக் கொண்ட "நடவடிக்கைகள் அல்லது அச்சுறுத்தல்களை" தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது. லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்த அரபு நாடுகள் அதனை "பிராந்தியத்தில் நிகழும் விரிவாக்க கொள்கை" என்றும் குறிப்பிட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyvjjxjxw3o ஈரானை கண்டிப்பவர்கள் இந்த யுத்தத்தை ஆரம்பித்தவர்களை கண்டிப்பதில்லையே?!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.