Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Today
  2. குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து நடைபயணத்தை ஆரம்பித்த யாத்திரீகர்கள் சிவனொளிபாத மலையடிவாரத்தை அடைந்தனர் 18 Mar, 2026 | 01:16 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து சிவனொளிபாத மலை வரை பாத யாத்திரை சென்றவர்கள் புதன்கிழமை (18) மலையடிவாரத்தை அடைந்தனர். கடந்த சனிக்கிழமை (14) முல்லைத்தீவு குருந்தூர் மலையிலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமானது. நுவரெலியா, அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவன்எலிய பௌத்த விகாரையில் யாத்திரீகர்கள் தங்கியிருந்து, தொடர்ந்து பயணித்து, சிவனொளிபாத மலை அடிவாரத்தை அடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/241268
  3. ஹோமூஸ் நீரிணை திறந்துதான் உள்ளது!, எம்மீது தாக்கும் எதிரிகளுக்கு மட்டும் மூடப்பட்டுள்ளது - அப்பாஸ் அராக்சி
  4. பெப்ரவரி 21 உலக தாய்மொழி நாள். https://maniyinpakkam.blogspot.com/2026/02/blog-post_20.html
  5. ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு Mar 18, 2026 - 02:54 PM ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலின் 'channel 12' செய்திச் சேவை முன்னதாக செய்தி வௌியிட்டிருந்தது. இந்தத் தகவல்களின்படி, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் முடிவுகள் குறித்து அதிகாரிகள் தற்போது மதிப்பாய்வு செய்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஈரான் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmvu325c000g356p3ct40hzq
  6. இரானை தாக்க 2270 கிலோ 'பங்கர் பஸ்டர்' குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,USAF கட்டுரை தகவல் கிறிஸ் பார்ட்ரிட்ஜ் பிபிசி 41 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் ஹோர்மூஸ் நீரிணை அருகே உள்ள இரானிய ஏவுகணை தளங்களை தாக்கியதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை தளங்களை, பதுங்கு குழிகளை ஊடுருவி தாக்கக்கூடிய சக்திவாய்ந்த குண்டுகளைக் கொண்டு தாக்கியதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது. அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், நீரிணையின் இரானிய கரையோரம் அமைந்துள்ள கடினமான இரானிய ஏவுகணை தளங்கள் மீது 5000 பவுண்ட் (2270 கிலோ) எடை கொண்ட ஆழமாக ஊடுருவி தாக்கும் ஆயுதத்தை வெற்றிகரமாக உபயோகித்ததாக தெரிவித்துள்ளது. ''இந்த தளங்களில் இருந்த, கப்பல்கள் மீது தாக்கக்கூடிய இரானிய க்ரூஸ் ஏவுகணைகள் இந்த நீரிணையின் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பெரிய ஆபத்தாக இருந்தன," என அமெரிக்க ராணுவம் தெரிவிக்கிறது. உலகின் 20% எண்ணெய் கப்பல்கள் செல்லும் இந்த நீரிணையை இரான் வெற்றிகரமாக மூடியது கடல் போக்குவரத்தை பாதித்ததோடு உலகளாவிய எண்ணெய் விலை அதிகரிப்பிலும் பங்கு வகித்துள்ளது. இந்த பெரிய குண்டுகள், கடந்த ஆண்டு இரானின் நிலத்தடி அணுசக்தி தளங்களைத் தாக்குவதற்கு அமெரிக்கா பயன்படுத்திய "பங்கர் பஸ்டர்" குண்டுகளைப் போன்றதே. மற்ற குண்டுகளைப் போல் அல்லாமல், பங்கர் பஸ்டர் குண்டுகள் நிலத்தடியில் ஆழமாக ஊடுருவி வெடிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகள், கனமாக மற்றும் வலுவான இரும்பால் மூடப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,USAF படக்குறிப்பு,ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும் இரான் நிலத்தடியில் ஆயுதங்களை வைத்திருப்பதாக நினைக்கும் அமெரிக்கா இரான் அதன் பெரும்பாலான ஆயுதங்களை நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்திருக்கிறது என அமெரிக்கா நம்புவதற்கான மற்றுமொரு உதாரணம், இந்த 2270 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவதாக வரும் செய்தி. இரானிய ஏவுகணை தளங்கள் மீது எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது என்பதை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) குறிப்பிடவில்லை. ஆனால் இந்த அம்சங்களுடன் பொருந்திப் போகும் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஜிபியு - 28 லேசர் மூலம் வழிநடத்தப்படும் குண்டு மற்றும் புதிய ஜிபியு-72 மேம்படுத்தப்பட்ட 5கே ஊடுருவும் குண்டு. இந்த இரண்டாவது வகை குண்டை பயன்படுத்தியிருப்பதற்கான வாய்ப்பே அதிகம். 2021-இல் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட இந்த குண்டு பெரிய கூட்டு நேரடி தாக்குதல் ஆயுதமாகும். இவை இலக்கை நோக்கி செயற்கைக்கோள் மற்றும் இனெர்ஷியல் (Inertial) நேவிகேஷன் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது. இந்த ஜிபியு-72 வகை குண்டு பரிசோதனை செய்யப்பட்டபோது, "கடினமாக ஆழத்தில் புதைக்கப்பட்ட இலக்குகள் சார்ந்த சவால்கள் மற்றும் ஃபைட்டர் மற்றும் பாம்பர் விமானங்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது." என அமெரிக்க விமானப்படை தெரிவித்திருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேலின் டெல் அவிவ்வை கோராம்சாஹர் 4 மற்றும் குவாதர் ஏவுகணைகளைக் கொண்டு இலக்கு வைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்திருந்தது 'இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரான் ஆயுதங்கள்' ஜிபியு-72 வகை குண்டுகள் மிகப்பெரியதாக இருந்தாலும் எஃப்-15இ ஸ்டைக் ஈகிள் போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல முடியும். இது ராணுவ திட்டமிடுபவர்களுக்கு, பி1-பி வகை விமானங்களைச் சார்ந்திருக்காமல் பணியில் ஈடுபடுத்துவதில் பெரிய வசதியை வழங்குகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் ஏவுகணை மற்றும் டிரோன் உள்கட்டமைப்புகளைத் தாக்கியுள்ளன. ஆனால் இரானின் ஆயுதங்கள் தற்போதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. நேற்று, இஸ்ரேலின் டெல் அவிவ்வை கோராம்சாஹர் 4 மற்றும் குவாதர் ஏவுகணைகளைக் கொண்டு இலக்கு வைத்ததாக இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்திருந்தது. இவை பல வெடி மருந்துகளைக் கொண்ட பகுதிகளைச் சுமந்து செல்லக்கூடியது என அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் உள்ள காணொளிகள், இரானால் க்ளஸ்டர் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை வலுவாக சுட்டிக்காட்டுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp323e6y542o
  7. மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி! Mar 18, 2026 - 04:10 PM சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கற்கும் மாணவன், மாணவி ஒருவரது புகைப்படத்தையும் மற்றுமொரு மாணவியின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் டிக்டொக் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த அவதூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள் அவதூறு பரப்பியவரின் வீட்டிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவியுள்ளனர். இதன்போது அவதூறு பரப்பிய மாணவனின் தந்தை நியாயம் கேட்கச் சென்ற ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிஸில் இரு மாணவிகளின் பெற்றோரும் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில். ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் மாணவனை சிறுவர் சீர்திருத்த மையத்தில் 14 நாட்களும், மாணவனின் தந்தையை 14 நாட்களும் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmmvwr4rd000i356p5yii0qf1
  8. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  9. இரான் போரில் டிரம்ப் முன்னுள்ள ஒவ்வொரு வாய்ப்புமே ஏன் ஆபத்தானது? பட மூலாதாரம்,Reuters கட்டுரை தகவல் அந்தோனி ஜூர்ச்சர் வட அமெரிக்க செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தும் போரின் மூன்றாவது வாரத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிபர் பதவியின் எஞ்சிய காலத்தை வடிவமைக்கக் கூடிய முக்கியமான முடிவுகளை எதிர்கொண்டுள்ளார். இந்தப் போர் மேலும் தீவிரமடையக் கூடியதாகவும், கட்டுப்படுத்துவதற்கு மிகவும் கடினமானதாகவும் மாறக்கூடும் என்ற போதிலும், டிரம்ப் இத்தகைய கவலைகளைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை. வெள்ளை மாளிகையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்த ஒரு உரையில், அவர் இந்தப் போர் குறித்துப் பேசினார். ஆனால், ஜான் எஃப் கென்னடி மையத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள், வெள்ளை மாளிகையில் புதியதொரு நடன அரங்கம் அமைக்கும் திட்டங்கள், இந்த ஆண்டின் ஃபிஃபா உலகக் கோப்பை, ஒரு குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் உடல்நிலை மற்றும் பிற விவகாரங்கள் எனப் போருடன் தொடர்பில்லாத பல தலைப்புகளைப் பற்றியும் அவர் பேசினார். இத்தகைய பரந்த மற்றும் முன்னரே திட்டமிடப்படாத பேச்சுமுறை டிரம்புக்கு இயல்பான ஒன்று. வார இறுதியில், அவர் தனது ஃப்ளோரிடா ஓய்வு விடுதியில் கோல்ஃப் விளையாட்டிலும் ஈடுபட்டார். தனது சமூக ஊடக தளமான 'ட்ரூத் சோஷியலில்' இரானுடனான போர் குறித்துப் பேசுவதற்கு அவர் செலவிட்ட நேரத்திற்குச் சமமான நேரத்தை, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை விமர்சிப்பதிலும் செலவிட்டார். டிரம்ப் பல தலைப்புகளில் கவனம் செலுத்தினாலும், ஒரு தலைவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், போர் என்பது பெரும்பாலும் ஓர் அதிபரின் பதவிக் காலத்தையே முழுமையாக ஆட்கொண்டு விடும் என்று வரலாறு காட்டுகிறது. இந்தப் போர் எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் நீடிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. முன்னதாக, இந்தப் போர் "ஏற்கெனவே வெல்லப்பட்டுவிட்டது" என்றும் "முழுமையாக முடிந்துவிட்டது" என்றும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், தற்போது அது இன்னும் பல வாரங்களுக்கு அல்லது அதற்கும் மேலாகத் தொடரக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது. திங்கட்கிழமை பிற்பகலில், ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் தான் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த சீன பயணம், இந்தப் போரின் காரணமாக ஒரு மாதம் தாமதமாகும் என்று டிரம்ப் அறிவித்தார். இதற்கான காரணத்தை வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லிவிட் பின்வருமாறு விளக்கினார்: "தற்போதைய சூழலில், முப்படைகளின் தலைமைத் தளபதியாகிய அதிபரின் தலையாய கடமை, 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' நடவடிக்கையின் தொடர் வெற்றியை உறுதி செய்வதே ஆகும்." இது இரானுக்கு எதிராக நடத்தப்படும் போருக்கு அதிகாரபூர்வமாகச் சூட்டப்பட்டுள்ள பெயரைக் குறிக்கிறது. பட மூலாதாரம்,PTI இந்த வார இறுதியில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்க உதவும் வகையில், நாடுகளின் ஒரு கூட்டமைப்பை உருவாக்க விரும்புவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் தெரிவித்தார். இந்தப் பகுதி உலக வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும், இரானின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகிறது. அதுகுறித்துப் பதிவிட்ட டிரம்ப், "இந்தச் செயற்கையான தடையால் பாதிக்கப்படும் சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பி வைக்கும் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார். "எப்படியிருப்பினும், ஹோர்முஸ் நீரிணையை விரைவில் திறந்த நிலையிலும், பாதுகாப்பான நிலையிலும், தடையற்ற சூழலுக்கும் நாம் கொண்டு வருவோம்," என்று அவர் எழுதியுள்ளார். இருந்தாலும், அவரது வேண்டுகோளுக்குப் பிறகு, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உள்படப் பல நாடுகள், இந்த முயற்சியில் இணைய விரும்பவில்லை என்று தெரிவித்தன. "நாங்கள் ஒரு விரிவான போருக்குள் இழுக்கப்பட மாட்டோம்," என்று பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் கூறியுள்ளார். அந்த நீரிணையில் நிலவும் சூழலைக் கையாள்வதற்கு ஏற்றதொரு "செயல்படக்கூடிய கூட்டுத் திட்டத்தை" வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிற நாடுகள் இதில் இணையாத காரணத்தால், குறுகியதாக இருப்பினும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழிப் பாதையைப் பாதுகாக்க, அமெரிக்க கடற்படையின் கூடுதல் படைகளை அனுப்புவதா என்பது குறித்து டிரம்ப் தற்போது முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது. திங்கள் கிழமை, கடலில் கண்ணிவெடிகளைப் பதித்து, பிற கப்பல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இரானிய கப்பல்களை அமெரிக்கா ஏற்கெனவே அழித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார். அதேவேளையில், ஒரேயொரு கண்ணிவெடி கூடப் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரித்தார். மேலும் அவர், "இது சற்றும் நியாயமற்றது. நாம் போரில் வென்று வருகிறோம். இந்தச் சூழலில் தற்போது செய்துகொண்டிருக்கும் இத்தகைய செயல்களைச் செய்வதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை," என்று கூறினார். காணொளிக் குறிப்பு,கடல் நீரை குடிநீராக மாற்றும் நிலையங்களில் இரான் கை வைத்தால் வளைகுடா ஸ்தம்பிக்குமா? இரானுடனான மோதலில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை செயல்பாட்டில் வைத்திருக்கிறது என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை, சுமார் 5,000 வீரர்கள் மற்றும் மாலுமிகளை கொண்ட ஒரு கடற்படை பிரிவை ஜப்பானில் இருந்து மத்திய கிழக்கிற்கு நகர்த்துமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. டிரம்ப் மேலும் ராணுவ நடவடிக்கைகளை எடுக்க முடிவெடுத்தால், அது அமெரிக்க படைகளை அதிக ஆபத்தில் தள்ளக்கூடும். ஏனெனில் அவர்கள் இரானுக்கு மிக அருகில் இருப்பார்கள். அவர் நடவடிக்கை எடுக்காமல், மாறாக இரானின் ராணுவத்தைப் பலவீனப்படுத்தும் தனது இலக்கை அமெரிக்கா ஏற்கெனவே அடைந்துவிட்டது என்று கூறினால், நிலைமை நிலையற்றதாகவே நீடிக்கக்கூடும். இரான் தொடர்ந்து கப்பல்களை அச்சுறுத்தலாம். எண்ணெய் விலைகள் உயர்ந்த நிலையிலேயே நீடிக்கலாம். அப்படியானால், மத்திய கிழக்கில் அதிகாரச் சமநிலையைத் தெளிவாக மாற்றாமலேயே, அமெரிக்கா பில்லியன்கணக்கான டாலர்களை செலவழித்திருக்கக்கூடும். இப்சோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கிளிஃபோர்ட் யங்கின் கூற்றுப்படி, ஏற்கெனவே மக்கள் ஆதரவு கலவையாக உள்ள நிலையில், டிரம்புக்கு எரிபொருள் விலை அதிகமாக நீண்ட காலம் நீடிப்பது ஒரு கடுமையான அரசியல் பிரச்னையாக மாறக்கூடும். தற்போதைக்கு, இரான் போர், குடியேற்றம், வர்த்தக வரிகள் போன்ற பிற பிரச்னைகள் குறித்து அவர்களில் சிலருக்கு சந்தேகங்கள் இருந்தாலும், டிரம்பின் முக்கிய ஆதரவாளர்கள் இன்னும் அவருக்கு ஆதரவளித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆதரவுக் குறைவில் முக்கியமாக மிதவாத குடியரசுக் கட்சியினர் மற்றும் எந்த கட்சியையும் சாராத வாக்காளர்கள் பங்கு வகிக்கின்றனர். டிரம்பின் ஏற்பு மதிப்பீடுகள் 40% என்கிற குறைந்த அளவில் உள்ளன. இது குடியரசுக் கட்சியினருக்கு கவலையளிக்கக்கூடும். இருப்பினும், இதுவரை இரான் போர் அவரது செல்வாக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கவில்லை. அமெரிக்கர்களுக்கு மிகவும் முக்கியமான, அன்றாட வாழ்க்கையை இந்தப் போர் பாதித்தால் இந்த நிலை மாறக்கூடும். டிரம்பின் அதிபர் பதவிக் காலத்தில் ஒட்டுமொத்த பணவீக்கம் குறைந்திருந்தாலும், வீட்டு வசதி, மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. இந்தப் போர் பொருளாதார பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில் இருந்து அரசாங்கத்தின் கவனத்தை திசை திருப்புகிறது. எரிபொருள் விலை அதிகமாகவே இருந்தால், அது டிரம்பின் அரசியல் நிலையைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். சமீபத்தில், அமெரிக்காவில் ஒரு கேலன் பெட்ரோலின் விலை, ஒரு மாதத்திற்கு முன்பு 2.94 டாலராக இருந்த நிலையில், தற்போது 3.72 டாலராக உயர்ந்துள்ளது. அதன் தாக்கத்தை விளக்கிய யங், "இது எல்லாவற்றையும் தகர்த்துவிடுகிறது. குடியரசுக் கட்சியின் பார்வையில் மலிவு விலைத் திட்டம் தகர்க்கப்படுகிறது," என்றார். எளிதாகச் சொல்வதெனில், அதிகரிக்கும் வரும் விலைகள், மக்களின் வாழ்க்கையை இன்னும் இலகுவானதாக மாற்ற அரசு வகுத்துள்ள திட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்றும், அதன் அரசியல் ஆதரவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் விளக்கினார். பட மூலாதாரம்,EPA மறுபுறம், அதிபர் டிரம்ப் மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க முடிவு செய்தால், ஒரு கடுமையான ஆபத்தும் உள்ளது. ஆயிரக்கணக்கான அமெரிக்க கடற்படை வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பது, இரானின் எண்ணெய் ஏற்றுமதிப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவது அல்லது இரானின் அணுசக்தித் திட்டத்தின் பகுதிகளை அழிப்பது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகத் தரைப்படைகளைப் பயன்படுத்த டிரம்ப் முடிவு செய்யக்கூடும். இருப்பினும், அமெரிக்க வீரர்களை இந்த மோதலுக்கு அனுப்புவது கடுமையான பொது விமர்சனத்திற்கு வழிவகுக்கும். பல அமெரிக்கர்கள் நீண்ட போர்களால் சோர்வடைந்துள்ளனர். மற்றொரு நீடித்த ராணுவ ஈடுபாட்டை அவர்கள் விரும்பவில்லை. வெளிநாட்டுப் போர்களைத் தவிர்ப்பதாக டிரம்ப் உறுதி அளித்ததால், அவரைப் பலரும் ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணர்வை விளக்கிய கிளிஃபோர்ட் யங்க், "முடிவில்லா போர்ச் சோர்வு நிலை நிலவுவதாக" கூறினார். "நாம் தரைப்படைகளை அனுப்பினால் நிர்வாகத்திற்கு முற்றிலும் புதிய ஆபத்து ஏற்படும், அது எல்லாவற்றையும் மாற்றிவிடும்," என்றார் அவர். இதன் பொருள், மக்கள் நீண்டகாலப் போர்களால் சோர்வடைந்துள்ளனர் என்பதாகும். வீரர்களை அனுப்புவது அரசுக்குப் புதிய அரசியல் சிக்கல்களை உருவாக்கக்கூடும். அமெரிக்கா தனது நடவடிக்கைகளை வான்வழித் தாக்குதல்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தினால், டிரம்ப் தனது மக்கள் ஆதரவை மேம்படுத்திக் கொள்ள அதிக நேரம் கிடைக்கக்கூடும். அமெரிக்காவில் எரிபொருள் விலை உயரும்போது மக்கள் அடிக்கடி கோபமடைகிறார்கள். ஆனால், விலை மீண்டும் குறைந்தால் அந்தக் கோபமும் பொதுவாகக் குறைந்துவிடும். நவம்பரில் நடைபெறவிருக்கும் இடைக்காலத் தேர்தல்களுக்கு இன்னும் ஏழு மாதங்களுக்கு மேல் அவகாசம் இருப்பதால், நிலைமையைச் சமாளித்து, உள்நாட்டில் ஒரு பெரிய பொருளாதாரப் பிரச்னை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு டிரம்புக்கு இன்னும் நேரம் இருக்கிறது. "நமக்கு யாரும் தேவையில்லை. நாம் உலகின் வலிமையான தேசம்" என்று திங்கள் கிழமை டிரம்ப் கூறினார். இருப்பினும், அவரிடம் இருக்கும் ஒவ்வொரு வாய்ப்பும் அபாயங்களைக் கொண்டுள்ளது என்பதே டிரம்புக்கு இருக்கும் முக்கிய சவால். அவர் தனியாகச் செயல்பட்டாலும் சரி, மற்றவர்களுடன் சேர்ந்து செயல்பட்டாலும் சரி, எளிய தீர்வு என எதுவும் இல்லை. இந்த மோதலுக்கு விரைவான, எளிமையான ஒரு முடிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy57xzl9v1yo
  10. ஆமா…இந்த எட்டு கோடி உலக தமிழினத்தில் இவர் ஒருவர் மட்டும்தான் இலக்கியம் படைக்கிறார்😂. இவருக்கு மட்டும்தான் எது இலக்கியம், எது குப்பை என பிரித்தறியும் ஆற்றல் உள்ளது😂. இவர்தான் தமிழ் இலக்கியத்தை காப்பாத்த வேணும் - இந்தியாவிற்கு எடுத்து சொல்ல வேண்டும். போய்யா அந்த பக்கம் எரிச்சல் பிடிச்ச மனுஷா. புளித்த மாவுக்கு தோசை சுடும் அடிதட்டு பெண்ணோடு மல்லுகட்டிய gutter dweller , தமிழனுக்கு பாடம் எடுக்க வந்துட்டார்😂. இந்த அற்பனுக்கு கூஜா தூக்கவும் நம்மில் ஆட்கள் இருப்பதுதான் வேதனை. உலக மொழிகளில் எல்லாம் தமிழர்கள் ஆளுமை செய்கிறார்கள், இலக்கியம் படைக்கிறார்கள், அங்கீகாரமும் பெறுகிறார்கள். ஆனால் எமது தாய் மொழியில் எது இலக்கியம் என்பதை தீர்மானிக்கு அதாரிட்டி தான் தான் என ஒரு நூலிபான் குறுக்க மறுக்க ஓடுகிறது😂. எல்லாமும் தமிழர்கள் கொடுத்த இடம்.
  11. அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்கப்படும் - ஈரான் 18 Mar, 2026 | 04:42 PM ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு பழி தீர்ப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (18) ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானும் அந்த தகவலை உறுதிப்படுத்தியது. அத்துடன் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் துணை அமைப்பான பசிஜ் படைத் தலைவர் கோலம்ரேசா சுலைமானியும் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. முன்னதாக ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதில் கடுங்கோபத்தை வெளிப்படுத்திய அந்நாடு, இஸ்ரேலின் தாக்குதலில் அலி லாரிஜானியும் கொல்லப்பட்டதில் பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதோடு, தீவிரமாக தனது எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ஈரான் இராணுவ தளபதி அமீர் ஹதாமி கூறுகையில், “அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரானின் பதில் எதிரிகளுக்கு தீர்க்கமானதாகவும் வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். இந்த உயரிய தியாகியின் ரத்தத்துக்கும் பிற மதிப்புக்குரிய தியாகிகளின் ரத்தத்துக்கும் பழிவாங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மற்றொரு இராணுவ தளபதியான அலி அப்துல்லாஹி, “ஆயுதப்படைகளின் பதில் நடவடிக்கை எதிரியின் செயற்பாடுகளையம் கற்பனையையும் விடப் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும். இதற்காக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காத்திருக்கவேண்டும். எதிரி சரணடையும் வரை இந்தப் பாதை தொடரும்” என்றார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “ஈரான் அரசு என்பது நன்கு நிறுவப்பட்ட அரசியல், பொருளாதார, சமூக நிறுவனங்களைக் கொண்ட ஒரு வலுவான அரசியல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. தாக்குதல்களில் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும் எங்களது அரசியல் அமைப்பை சீர்குலைக்க முடியாது. நாட்டின் ஆட்சி முறை தனிநபர்களை சார்ந்திருக்காமல், வலுவான நிறுவனங்களை சார்ந்தே இயங்குகிறது...” என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு ஈரான் தரப்பு கடும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. https://www.virakesari.lk/article/241305
  12. நைஜீரியாவில் அடுத்தடுத்து தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் ; 23 பேர் உயிரிழப்பு ; 200க்கு மேற்பட்டோர் காயம்! 18 Mar, 2026 | 11:02 AM நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தின் மைதுகுரி நகரில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உயிரிழந்ததோடு 200க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (16) மைதுகுரியில் உள்ள தபால் நிலையமொன்றுக்கு அருகில் முதலில் ஒரு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலின் பின்னர் மக்கள் அப்பகுதியிலிருந்து வெவ்வேறு திசைக்கு பாதுகாப்பு தேடி ஓடிய நிலையில், அடுத்த சில நிமிடங்களில் உள்ளூர் சந்தைப் பகுதியில் மற்றுமொரு குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. அதனையடுத்து, மைதுகுரி பல்கலைக்கழக வைத்தியசாலை நுழைவாயில் பகுதியிலும் தொடர்ந்து கலேரி என்ற குடியிருப்புப் பகுதியிலும் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மைதுகுரியில் அடுத்தடுத்து 4 இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 23 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும் 200க்கு மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தாக்குதலுக்கு “போகோ ஹரம்” என்ற பயங்கரவாத அமைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு தற்போது மைதுகுரி நகரம் முழுவதும் இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் போகோ ஹரம் என்ற பயங்கர அமைப்பினை ஒடுக்க முன்னதாக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241263
  13. இரண்டு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு Mar 18, 2026 - 12:28 PM அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmvow92m0009356pvjk8amp3
  14. ஒற்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்! Mar 18, 2026 - 11:47 AM நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய இலக்கங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக இருந்தால் இரட்டை எண்கள் கொண்ட திகதிகளிலும் மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் 1,3,5,7 மற்றும் 9 ஆக இருந்தால் ஒற்றை எண்கள் கொண்ட திகதிகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக நாளாந்தம் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டு வருவதாலும், உள்நாட்டில் எரிபொருளுக்கான கேள்வி அசாதாரணமான முறையில் அதிகரித்து வருவதாலும், நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புகளைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு, எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மீண்டும் QR குறியீடு முறைமையைச் செயற்படுத்த அரசாங்கம் கடந்த 16ஆம் திகதி முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmmvnfi470007356po4jicnh0
  15. போலி அறச்சீற்றம் By ஆர். அபிலாஷ் March 15, 2026 ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள விழைகிறார். சாகித்ய அகாடெமி, ஞான பீடம் ஆகியவற்றில் தீர்மானிக்கும் சக்தியாக தானே இருக்க வேண்டும் எனச் சொல்வதிலும், இவற்றைவிட உயர்ந்த விருதை அளிக்கும் அதிகாரம் மிக்கவர் தாம் எனக் காட்டிக் கொள்வதிலும் அவருக்கு ஒரு சந்தோஷம். ஆனால் இதில் என்ன பெருமை உள்ளது? குருமூர்த்திக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்? அதிகாரத்தை அதிகாரத்தால் வெல்ல வேண்டும் என்பதே கீழ்மையான பார்வை. இது ஒரு எழுத்தாளரின் வேலை அல்ல. இதனாலே ஜெயமோகனின் அறச்சீற்றம் போலியானது என நினைக்கிறேன். ஒருவர் தான் நம்புகிற ஒன்றுக்காகவோ அதற்கு எதிராகவோ லாபி செய்யும்போது அவர் அந்த ஜனநாயகமான கட்டமைப்பை சிதைக்கிறார். வைரமுத்து வாங்கிவிடக் கூடாது தங்கமுத்து வாங்க வேண்டும், அதற்காக நான் காய் நகர்த்துவேன் என முயல்வதே ஜனநாயக விரோதமான நடவடிக்கைதான். ஏனென்றால் அதன் பிறகு அப்படைப்பாளியே ஒரு தனிநபரின் முயற்சிகளின், ஆளுமையின் செல்வாக்கினால் மதிப்புறுகிறவர் ஆகிறார்; அவர் தன்மதிப்பை இழக்கிறார். ஒருவர் லாபி செய்து ஒன்றைப் பெறுவதைவிட அதை வாங்கித் தருவதைத் தகுதியாக மற்றொருவர் கருதுவது இன்னும் ஆபத்தானது. தனியார் விருதோ அரசு விருதோ ஒரு படைப்பு தன் தகுதியால், தேர்வுக்குழுவின் மதிப்பீட்டால் வெல்ல வேண்டும். அதற்கான இடைஞ்சலற்ற, நியாயமான நடைமுறையை உருவாக்கவே முயல வேண்டும். நம் அதிகார விளையாட்டுக்கு, உட்கட்சி மோதலுக்கு அதை இரையாக்கப் பார்க்கக் கூடாது. https://www.writerabilash.in/2026/03/blog-post_71.html
  16. கண்ணோடு பார்க்கும் மோகம் ....... முத்துராமன் & மஞ்சுளா..........! 😍
  17. இதென்ன பைபிள் கொடுத்தா இந்திரன், பைபிள் கொடுக்காட்டில் சந்திரன் எண்டு ஒரே தில்லு முல்லா கிடக்கு. இஸ்லாம், கிறிஸ்தவத்தில் சில பிரிவுகள் மதம் பரப்புவதை ஒரு கடமையாக சொல்லிறன. இந்த பணிப்பாளர் இப்படி ஒருவராக இருக்கலாம். ஆனால்… அரச கல்விகொள்கைக்கு அப்பால் அதிகாரிகள் விருப்பபடி எல்லாம் பள்ளிகளில் புத்தகம் வினியோகிக்க முடியாது. அப்படி நடந்தாலும் அதை பெற்றோர், பாதுகவலர் சங்கத்தினர் கேட்பார்கள். யார் இந்த் பெயர் தெரியாத இரெண்டு சங்கி மங்கிகள்? ஆட்களும் அவையின்ற பல்லும்😂. பைபிளை கொழுத்துவோம் என்ற சொற்பாவனை, சிவசேனா என்ற பெயர், இவர்களின் நோக்கம் என்ன என்பதை காட்டி நிற்கிறது. இந்த செய்தி உண்மையாக இருக்குமா ? இது இரெண்டு சங்கி மங்கியள் ஊடக வெளிச்சம் தேடி செய்யும் விடயமாகவே தெரிகிறது. அவரவர் சமய நூல்களை தவிர வேறு ஏதும் வினியோகம் ஆவதில்லை. லைபிரரியில் ஒண்டை வைக்கலாம் - ஆர்வம் உள்ளோர் தேடி வாசிக்க.
  18. தமிழ்நாடு அரசியல் என்பது எப்போதுமே சினிமாவும் சமூகமும் சந்திக்கும் ஒரு விசித்திரமான மேடை. அந்த மேடையில் “நடிகர் அரசியலுக்கு வரலாமா?” என்ற கேள்வி புதியதல்ல. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அதை புதிய கோணத்தில் கேட்கிறது. இன்று நடிகர் விஜயை மையமாகக் கொண்டு எழும் இந்த விவாதம், கடந்த காலத்திலும் பலமுறை எழுந்ததே. அரசியலுக்கு யாரும் வரலாம். அதுதான் ஜனநாயகம். தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் முதல்வராக வர முடிந்ததென்றால், சினிமா நடிகர் துணை முதலமைச்சராக வர முடிந்ததென்றால், நடிகர் விஜய் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது? இந்த கேள்விக்கான பதிலை கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அது எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த காலம். அப்போது அவரைச் சுற்றி எழுந்த விமர்சனங்கள் இன்று கேட்கும் விமர்சனங்களுக்குச் சற்றும் குறைவானவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் அவை கூடுதலானவை. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது, “நீதிக்கு முன்னால் ‘அ’ போட்டால் அநீதி அதுபோலத்தான் திமுகவுக்கு முன்னால் ‘அ’ போடுவது” என்று கருணாநிதி கிண்டல் செய்தார். “இந்தக் கட்சி நூறு நாள் தான் ஓடும்” என்று கண்ணதாசன் ஆருடம் கூறினார். “அண்ணாயிசம் என்றால் என்ன?” என்று கேள்வி துக்ளக் சோவினால் எழுப்பப்பட்டது. இவ்வாறான எத்தனையோ விமர்சனங்கள் எம்ஜிஆரை நோக்கி இருந்தன. அப்போது ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குவது என்பது வெறும் சிரிப்புக்குரியதாகவே கணிக்கப்பட்டது. ஆனால் ஒரு இடைத்தேர்தல் அந்த சிரிப்பை அடியோடு மாற்றியது. திண்டுக்கல் இடைத்தேர்தலில், பெரிய அரசியல் பின்னணி இல்லாத மாயத்தேவர் என்பவரை நிறுத்தி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் எம்.ஜி.ஆர், மாயத்தேவரை வெற்றிபெறச் செய்தபோது, அவரை எதிர்த்தவர்கள் அவரின் உண்மையான பலத்தை உணர்ந்தார்கள். எம்ஜிஆரை விட்டு ஒதுங்கி நின்ற அவரின் வலது கையான ஆர்.எம். வீரப்பன் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டார். அப்போது கிண்டல் செய்தவர்கள், பின்னர் வரலாறு உருவாகுவதைக் கண்டு நின்றார்கள். இன்று எள்ளி நகை ஆடுபவர்கள், மீண்டும் அதே வரலாறு திரும்புமா என்று கேட்கிறார்கள். 1977இல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே எம்.ஜி.ஆர் வெற்றி கண்டது, மக்கள் மனதில் நடிகருக்கான இடம் வெறும் பொழுதுபோக்கு அல்ல, அது அரசியல் சக்தியாகவும் மாற முடியும் என்பதை நிரூபித்தது. இந்த வரலாற்றை இன்று நடிகர் விஜயைச் சுற்றியுள்ள சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, சில முக்கியமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன. எம்.ஜி.ஆர் எதிர்கொண்ட அளவிலான அரசியல் அழுத்தங்களும், வன்முறைகளும் இன்று இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஒரு புதிய சவால் உள்ளது. அது சமூக ஊடகங்கள். அப்போது ஊடகங்கள் குறைவு. இன்று சமூக ஊடகங்கள் அதிகம். அப்போது விமர்சனங்கள் குறைவு. இன்று ஒரு வார்த்தை பேசினால், அது ஒரு நிமிடத்தில் ஆயிரம் விமர்சனங்களாக திரும்பி வருகிறது. ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு கருத்தும் உடனுக்குடன் சத்திரசிகிச்சை செய்யப்படுகிறது. விஜயின் விஷயத்தில், எம்ஜிஆர் போல் அவருக்கும் ரசிகர்கள் அதிகம். இளைஞர்கள், நடுத்தர வர்க்கம், சமூக அக்கறை கொண்டவர்கள் ஆகியோரிடையே அவருக்கு ஆதரவு இருக்கிறது. ஆனாலும், அரசியலில் ரசிகர்கள் ஒரு தொடக்கத்தை உருவாக்கலாம். ஆனால் வெற்றியை நிர்ணயிப்பது வாக்காளர்கள். எம்.ஜி.ஆர் வெற்றியின் பின்னால் இருந்தது அவரது திரை விம்பம் மட்டுமல்ல. மக்களுடனான நேரடி தொடர்பு, தாய்ககுலத்தின் ஆதரவு, அவர் மீதான நம்பிக்கை, மற்றும் அவரின்அரசியல் அனுபவம். இந்த அம்சங்களில் சில விஜயிடம் இன்னும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது போல, தனது பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் வாய்ப்பு விஜய்க்கு கிடைக்கவில்லை. அவர் நேரடியாகவே சட்டசபைத் தேர்தலின் மூலம் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். அதனால் இந்தத் தேர்தல் விஜய்க்கு ஒரு சாதாரண அரசியல் போட்டி அல்ல. அது ஒரு சோதனை. சிங்கம் தனியாகத்தான் வருகிறது. அந்தப் பக்கம் கூட்டமாக இருக்கிறது. எதுவானாலும் வெற்றியை நிர்ணயிப்பது திருவாளர் பொதுமகன்தான் மே மாதம் 4ஆம் தேதி, வாக்குகள் மட்டும் எண்ணப்படாது, ஒரு நடிகரின் அரசியல் பயணத்தையும், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியலையும் மக்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.
  19. அமெரிக்க தேர்தல் நேரம் ட்றம்ப் ஏன் ஆட்சிக்கு வரக் கூடாது என்று சக உறுப்பினர்கள் எழுதியதையெல்லாம் புறம் தள்ளி, ட்றம்ப் ஆட்சிக்கு வந்தால் உலகிற்கே நல்லது சமாதானம் ஏற்படும் என்றெல்லாம் வாதாடியவர் நீங்கள். ஆட்சிக்கு வந்து 3 மாதத்திற்குள் உலகமே அவஸ்தைப்படுகிறது. வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும்.
  20. இந்தப்பிரச்சினையை போலீசார் விசாரிக்க முடியுமா?யார் யார் விசாரிக்கபட்டார்கள்? என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று எதுவும் கூறவில்லை, பொலிஸாருக்கு எதுக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள்? மக்களின் சமூக பிரச்சனைகளை தீர்க்க முடியாத போலீசார், கல்விசார் பிரச்சனைகளை தீர்க்கமுடியுமா? சைவ ஆலயங்களை இடித்து பௌத்த விகாரைகளை அமைப்போரையும் போலீசார் விசாரித்து பிரச்சனைகளை தீர்த்து சமூகத்தில் இந, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாமே? என்ன கோமாளிக்கூத்தெல்லாம் நடத்துது சிவசேனை.
  21. 2026 வளருமா, வளராதா? (வளர்வது எல்லாமும் நல்லது அல்ல புற்றுநோய் கட்டியும் வளரும்).
  22. வணக்கம் வாத்தியார் . .....! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே ஆண் : குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானதே விழி இரண்டு கடலானதே எனது மனம் படகானதே இளம் பளிங்கு நகம் சேர்த்ததே நிலவு அதில் முகம் பார்த்ததே இனிக்கும் தேனே எனக்கு தானே ஆண் : இளஞ்சிரிப்பு ருசியானது அது கனிந்து இசையானது குயில் மகளின் குரலானது இருதயத்தில் மழை தூவுது இரு புருவம் இரவானது இருந்தும் என்ன வெயில் காயுது இனிக்கும் தேனே எனக்கு தானே......! --- பூவே இளைய பூவே ---
  23. ரஸ்ய வங்கி வட்டி வீதம் சென்ற வருடம் 22 வீதம் வரை உயர்ந்தது. வங்குறோத்தான நாடுகளிலேயே இந்த அளவு வட்டி வீதம் சாத்தியமாகும். முதலீடுகளை அதிகரிப்பதற்காக சிரமப்பட்டு இந்த வருடம் 16-17 வீதத்துக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். இதற்கான விலையைப் பணவீக்கத்தினை அதிகரிப்பதன் மூலம் மக்கள் மீது சுமத்தப்படுகிறது.
  24. இந்த ஹெலிகப்ரர்கள் 60-70 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை. சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் பாவனையிலிருந்து முற்றாக நீக்கப்பட்டவை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.