stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
இந்த பைபிள் விநியோகத்தைப் பற்றி…. ஆபிரகாம் சுமந்திரன் தனது திருவாயை திறந்து கருத்து ஒன்றும் கூறவில்லை என்ற படியால்… அவருக்கும் நல்ல விருப்பம் போல் தெரிகிறது. 😂 “மௌனம்… சம்மதத்துக்கு அறிகுறி” 🤣
-
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொலரை கோரும் பென்டகன்!
இரானின் பந்தயம் - அமெரிக்கா படை பல செலவு மாடல் ஐயே ஆயுதமாக்குவது - சரிவருகிறதோ? ஏறத்தாழ, அமெரிக்கா ஓரிரண்டு பாதுகாப்பு பாதீட்டின் 1/5.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
இவை இவளவு கொடுமையாக முன்பு இருந்தது. ஆயினும், கிம் சுவிஸில் வாழ்ந்த அனுபவத்தை கொண்டு சிலவற்றை சீரமைத்ததாக. அனால், அரசு என்ற அடிபணியில், ஈராக், லிபிய, தற்போது இரான் .. வடகொரியா எடுத்த போக்கு சரி என்றே பெரும்பாலான அரசியல் / இராணுவ ஆய்வாளர் ... நிபுணர்கள் (அமெரிக்காவில் கூட) ஏற்றுக்கொள்வது. அனால், கிம்மை பொறுத்தவரை வடகொரிய அரசு என்ற அமைப்பை பாதுகாப்பதே முன்னுரிமை ... ஏனெனில் கிம்மின் அரை சகோதரத்தை, மாமனாரை கூட விட்ட வைக்கவில்லை
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
தமிழ் யூடியூபர்கள் வியூவுக்காகவோ தமது குறை அறிவினாலோ செய்வதாக இருக்கலாம்…. அது கூட ஓக்கே… ஆனால் வெளிநாட்டில் வாழும், ஆங்கிலத்தில் செய்திகளை வாசிக்க கூடிய இயலுமை இருக்கும், வெளிநாட்டில் எதோ ஒரு தொழிலை செய்யும் அளவுக்கு அடிப்படை திறமையாவது இருக்கும், ஈழத்து அங்கிள்கள், இந்த பைத்தியகார வீடியோக்களை நம்பி பார்ப்பதும்…. அதை உண்மை என நம்பி யாழுக்கு காவி வருவதும்தான் ஏன் என்பதை என்னால் விளங்கிகொள்ள முடியவில்லை.
-
சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!
- Today
- உங்களுக்கு தெரியாத வட கொரியா
இதெல்லாம் மேற்கின் பொய் பிரச்சாரம். என் தலைவனின் நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறது😂- இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
உப்பு சப்பில்லாத மேட்டரை ஊதி பெரிதாக்கி ஊடக வெளிச்சம் தேடுகிறார் ஜனநாயக விரோத ஆளுனர்.- கருத்து படங்கள்
- சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!
சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்கவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் மேலும் இதன்போது கூறினார். முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2026/1469232- தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!
தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு! மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாதத்தை இன்று (19) ஆரம்பித்து வைத்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலமையில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அன்னை பூபதி அம்மாவின் சமாதியில் நிழல் படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்தூவி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாத்தை ஆரம்பித்து வைத்தனர். இதனை தொடர்ந்து அன்னையில் மகள் மற்றும் உறவினர்கள் சமாதியில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலைய முன்றலில் கடந்த 1988 ம் ஆண்டு மார்ச் 19 ம் திகதி இந்திய இராணுவத்தை வெளியேறுமாறும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தை நடாத்துமாறு 9 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து 32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஏப்பிரல் 19 ம் திகதி எயிர்நீத்தார் என்பது குறிப்பிடதக்கது. https://athavannews.com/2026/1469167- “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை
வடமாகாணத்திலை சிங்களவனுக்கு... தெருவுக்கு தெரு விகாரை இருக்கு, எல்லா இடமும் இராணுவ முகாம் இருக்கு காவல் துறைகளில் 90 வீதமானவர்கள் சிங்களவர்கள் நினைத்த இடத்தில்... குடியேறி சிங்கள கிராமமாக மாற்ற அரச ஆதரவு இருக்கு. இனி சிங்களவனுக்கு என்ன பிரச்சினை. உழைத்து சாப்பிடுங்க(டா) "சிங்ஹிந்தியா" என்ற பெயரை பார்க்க... இந்தியாவின் வழமையான சகுனி விளையாட்டு நடைபெறுகின்றது போலுள்ளது.- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
லிங் என மொட்டையாக கேட்டது என் தவறுதான். அரசியல் கருடன், அரசியல் குருடன் என தம்மை தாமே அழைத்து கொள்ளும் அநாமேதய யூடியூபர் அல்லாமல் … நமபகமான லிங் ஏதும் உள்ளதா ஐயா😂- இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ , அமைப்புகளோ நேரடியா சென்று நூல் வழங்க முடியாது – வட மாகாண ஆளுநர் திட்டவட்டம்! பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார் இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன. இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார். மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1469178- இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..
இந்த இரு பந்திகளும் என்ன நடந்தது என தெளிவாக காட்டுகிறன. எப்போதும் பைபிளை புரெட்டஸ்தாந்து மாணவருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதே மத அமைப்பின் வேண்டுகோள். கல்வி அலுவலகத்தின் முதல் கடிதம் இதை தெளிவாக சொல்லவில்லை. இந்த மயக்கத்தை அதே அலுவலகத்தின் இரெண்டாம் கடிதம் விளக்கி சொல்லி விட்டது. அத்தோடு முடிந்திருக்க வேண்டிய உள்ளக விடயம் இது. இரெண்டு சங்கிகள், ஒரு சம்பந்தமே இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர், கடைசியாக ஜனநாயக விரோத ஆளுனர், மூவரும் இதை ஊதி பெரிதாக்கி தமக்கு ஊடக வெளிச்சம் பாய்ச்சி உள்ளார்கள். சும்மா நாங்களும் நேரத்தை வீணடித்துள்ளோம். பிகு மேலே கொடுக்கப்பட இருப்பது கிங் ஜேம்ஸ் பைபிள் என நினைக்கிறேன். இதை கத்தோலிக்க மாணவருக்கே கொடுக்க முடியாது, இப்படி இருக்க இதை சைவ, இஸ்லாமிய அனைத்து மாணவருக்கு கொடுப்பார்கள் என்பது நம்பகூடியதல்ல, ஆரம்பத்தில் இருந்தே.- ஈரான் போருக்காக 200 பில்லியன் டொலரை கோரும் பென்டகன்!
ஈரான் போருக்காக 200 பில்லியன் டொலரை கோரும் பென்டகன்! ஈரான் போருக்கு நிதியளிப்பதற்காக 200 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அமெரிக்க காங்கிரஸிடம் கோருவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு பென்டகன் வெள்ளை மாளிகையைக் கேட்டுக்கொண்டுள்ளதாக ஒரு மூத்த நிர்வாக அதிகாரியை மேற்கோள் காட்டி வொஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போருக்கு அமெரிக்க மக்களின் ஆதரவு மந்தமாக இருப்பதாலும், ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருவதாலும் இந்த நிதிக் கோரிக்கை காங்கிரஸில் ஒரு பெரிய அரசியல் போராட்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அந்தப் பத்திரிகை விளக்கியுள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தப் போர் நிதி வலு சேர்க்கும் என்றும், மோதலின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையின் அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. இதுவரை அமெரிக்கப் படைகள் 7,800-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன, 8,000-க்கும் மேற்பட்ட போர் விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளன, மேலும் 120-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்களைச் சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை கூறியுள்ளது. போரின் முதல் வாரத்திலேயே, அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளுக்காக 11 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டிருந்தது. தற்போது மேலதிகமாக செலவிடப்படும் 200 பில்லியன் டொலருடன் சேர்த்து, போருக்கான அமெரிக்காவின் மொத்தச் செலவினம், 2025 ஆம் ஆண்டில் 356.51 பில்லியன் டொலர்களாக இருக்கும் ஈரானின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) பாதியை விட அதிகமாக இருக்கக்கூடும் என ‘World Meters‘ அமைப்பு தெரிவித்துள்ளது. 2026 நிதியாண்டிற்கான பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டிற்காக 838.5 பில்லியன் டொலரை காங்கிரஸ் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1469194- ஈரான் மக்களை இஸ்ரேல் கிளர்ச்சிக்கு தூண்டுகிறது.
உவரின் மருமோன் யுதர். மற்றது புட்டின்னை போலவே, இஸ்ரேலிடமும் தம்பரின் எப்ஸ்டீன் லீலை வீடியோக்கள் இருக்கலாம் என நினைக்கிறேன். வேறு வழியில்லாமல் அவர்களின் டுயூனுக்கு ஆடுகிறாரோ?- வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
நன்றி அண்ணா, பாரதியை பவுடர் டப்பாவுடன் நான் ஒப்பிடவில்லை. அது எத்தகைய அபத்தம் என்பதை நான் அறிவேன். நான் சொல்ல வருவது இரெண்டு விடயங்கள்: Beauty is in the eyes of the beholder என்பார்கள். எது இலக்கியம், அதிலும் எது நல்ல இலக்கியம் என்பதுவும் இப்படியே. மேலே ஹாப்பர் லியின் ஆங்கில நாவலை சுட்டி இருந்தேன். செங்கை ஆழியனின் சில (அனைத்தும் அல்ல) நாவல்கள் அந்த தரத்தை எட்டி பிடிக்க முயல்வன. எனது பார்வையில். ஆனால் பலருக்கு அப்படி இல்லை. மேலே சொன்னதன் அடிப்படையில்தான் விருதுகளும் அமையும். நான் விருது குழுவில் இருந்தால் - செங்கை ஆழியனை பரிந்துரைப்பேன். இத்தோடு பழதட்டு கலாச்சாரமும் சேர்ந்து கொள்ள - இதுதான் விருது வழங்கும் முறை. இதுதான் காலகாலமான நடைமுறை. ஞானபீடம் மட்டும் அல்ல அத்தனை கலை விருதுகளும் இப்படியே. விளையாட்டு விருதுகள் போன்றவை objective ஆக ஓட்ட போட்டியில் யார் முன்னுக்கு வந்தார் என்பதை வைத்து கோல்ட் மெடல் கொடுக்கப்படும். கலை விருதுகள் subjective ஆனவை. அதுதான் அதன் இயற்கை (nature of the beast).- இரசித்த.... புகைப்படங்கள்.
- வீதியோரம்.
இவ்வளவு வேகமாகத் தொடரை எப்பிடித்தான் எழுதி முடிச்சியளோ அண்ணா. நன்றாக இருக்கிறது. ஆனாலும் பலரையும் காணவில்லை. யாழை விட்டுப் போய்விட்டார்களா என்ன? கருத்திடாவிட்டாலும் மனம் சலிக்காது எழுதியமைக்கு வாழ்த்து அண்ணா.- “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை
“சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை வியாழன், 19 மார்ச் 2026 06:55 AM வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. https://jaffnazone.com/news/55670- இயலாமையுடைய நபர்களுக்கான நிதி ஒதுக்கீடு: 12 அமைச்சுக்களுடன் பாராளுமன்ற ஒன்றியம் விசேட பேச்சு!
இயலாமையுடைய நபர்களுக்கான நிதி ஒதுக்கீடு: 12 அமைச்சுக்களுடன் பாராளுமன்ற ஒன்றியம் விசேட பேச்சு! 19 Mar, 2026 | 01:06 PM இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து பன்னிரண்டு அமைச்சுக்களுடன் இயாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடலை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஏப்ரல் முதல் முன்னோடியாக இரண்டு வழித்தடங்களில் 10 தாழ்தள பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தவிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் தெரிவித்தனர். ஆறு வழிடத்தடங்களில் இவ்வாறான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்தபோதும், சக்கரநாற்காலிகளுடன் சென்று ஏறக்கூடியமை போன்ற வசதிகளைக் கொண்ட பஸ் தரிப்பிடங்களை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இந்த வசதிகளைப் பூர்த்திசெய்யும் பட்சத்தில் ஏனைய வழித்தடங்களிலும் இச்சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அத்துடன், இயலாமையுடைய குறைந்த வருமானத்தைப் பெறும் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவது மற்றும் அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான விசேட திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 50 மில்லியன் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த ரணவிரு சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், 30 வருட யுத்தத்தில் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் 23,192 பேர் தமது அதிகாரசபையின் கீழ் பராமரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ரூ.864 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், 16-35 வயதுக்கிடைப்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 80 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், பார்வைக் குறைபாடுள்ளோருக்கான மறுவாழ்வு அறக்கட்டளை நிதியின் மூலம் பார்வைக் குறைபாடுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உதவி சாதனங்கள் வழங்குவதற்காக ரூ. 17.4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். மேலும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்திருந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், 2026 முதல் 2035ஆம் ஆண்டு வரையில் முதல் 2035 வரை செயல்படுத்தப்படவுள்ள புதிய பத்தாண்டு சுகாதாரக் கொள்கை அடுத்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருப்பதாகவும், இந்தக் கொள்கையில் "அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்" (Universal Health Coverage) கீழ் இயாமையுடைய நபர்கள் உள்ளடங்கலாக நலிவடைந்த நபர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர். தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இயலாமையுடைய நபர்களுக்கான விரிவான வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அமைய, 2022 முதல் 2025-ஆம் ஆண்டு காலப்பகுதியில் 750 இயலாமையுடைய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2026-ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரூ. 5.75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்குவதற்காக விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இயலாமையுடைய சமூகத்தினருக்கான அணுகக்கூடிய அனைத்துத் தரவுகள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கிய தனியான இணையத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 2026ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்காகன கொடுப்பனவுகளை மேற்கொள்ள ரூ.19,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்திடம் தெரிவித்தனர். அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் அணுகலுக்கான உரிமையை உறுதி செய்வதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பிரதேச செயலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் போன்ற பொது வசதிகளுக்கான அணுகல்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் 2026ஆம் ஆண்டில் தமது அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்திற்கு விளக்கமளித்தனர். இந்தக் கலந்துரையாடலில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களான சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, சந்திம ஹெட்டியாராச்சி, சுசந்த குமார நவரத்ன மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையாளர்களாக இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகளும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241350- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
https://www.youtube.com/watch?v=WGLsM32b5gw&t=529s- நம்பிக்கையீனங்கள் உருவாதல்
நம்பிக்கையீனங்கள் உருவாதல் இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு பெப்ரவரி 28ஆம் திகதி ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கொமினியை கொன்று தன்னுடைய தாக்குதலை ஆரம்பதித்தது முதல் அனைவருடைய பேச்சும், எழுத்தும் வளைகுடாவை பற்றியதாகவே இருந்து வருகிறது. அதே நேரத்தில் தத்தமது நாடுகளின் எரிபொருள் தட்டுப்பாடும் இருக்கிறது. இருக்கின்ற பிரச்சினைகளுக்குள் ஏற்படுகின்ற பிரச்சினைகளை எப்படி எதிர் கொள்வது என்பதற்கான வழிகளைத் தேடுவதே இப்போதுள்ள நெருக்கடியாகிவிட்ட நிலைதான் காணப்படுகிறது. எரிபொருள் பிரச்சினை, பொருளாதார நெருக்கடிகளுக்குள் பல்வேறு பிரச்சினைகளால் அடிப்படையான பல விடயங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. அல்லது நினைவுக்குவராமல் போய்விடுகின்றன. இது வழமையானதே. அது காலங்கடத்தல்களுக்கே காரணமாகிப் போய்விடுகின்றன. அதில் ஒன்றுதான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம். இப் போராட்டம் ஆரம்பமாகி பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. தற்போதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் வலையமைப்புக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், வடக்கு கிழக்கு சமூக இயக்கங்கள். ஊடகவியலாளர்கள் என அனைவரும் தமது கோரிக்கைகளை தத்தமது வழிகளில் முன்வைப்பதிலேயே காலஙகடக்கிறது. அதேநேரத்தில் அச்சுறுத்தலான நெருக்கடிகளும் உருவாகாமலில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர், நான் சாகும் போதாவது என் சகோதரன் எனது தலைமாட்டில் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மன்றாடிய தமிழ் அரசியல் கைதி ஒருவரின் சகோதரி மரணமானார். 31 வருடங்களாக சிறையில் வாடும் கைதி ஒருவரின் குடும்பத்தின் நிலை அவ்வாறாக இருக்கிறது. அது போன்று பல கதைகள் வடக்கு கிழக்கில் காணப்படுகின்றன. ஏக்கங்களும், ஏமாற்றங்களும், சந்தேகங்களும், கவலைகளும் தினம் தினம் தமிழ் மக்களை ஆட்கொள்ளுகின்றன. அதே போன்று காணாமலாக்கப்பட்ட, இராணுவம் பொலிசாரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை கேட்ட வண்ணமே பல உறவுகள் உயிரை விட்டவண்ணமிருக்கிறார்கள். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டே இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்குஎதிரான குற்றங்களை ஏற்றுக் கொள்ளவோ திரு;வு, நீதி வழங்கவோ முடியாமல் இலங்கையில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இன்று வரை தோற்றுப்போயே இருக்கின்றன. மாறாக இலங்கையில் ஆயுதப் போராட்டம் நிறைவுற்று 16 வருடங்கள் கடந்த நிலையிலும் நீதியை எதிர்பார்த்திருக்க வேண்டிய கட்டாயமே தமிழ் மக்களுக்கு காணப்படுகிறது. அரசாங்கங்கள் மாற்றம் பெற்றாலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்கள் பாதுகாப்பு சார் அச்சத்தினை கைவிட முடியாத நிலை தொடர்கிறது. அதே நேரத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதா என்ற கவலையையும் சேர்த்தே நகர வேண்டியும் உள்ளது. காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கடந்த வாரத்தில் கருத்து வெளியிட்டுள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள், சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதை மறுதலிக்கவில்லை. காணாமல் போனோர் விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது சர்வதேச பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது. காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும். காணாமல் போனோரின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியையும், தமது உறவுகளுக்கு நேர்ந்தது என்னவென்பதையுமே கேட்கிறார்கள். இந்த விடயம் தனித்துவமானதுடன், உணர்வு பூர்வமானது என்று தெரிவித்திருக்கிறார். அமைச்சருடைய இந்தக் கருத்தானது கடந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளினால் ஏற்றுக் கொள்ளமுடியாது என நிராகரிக்கப்பட்ட, தற்போதைய அரசாங்கத்தாலும் தொடரப்படுகின்ற காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டு நடத்துவதற்கான கருத்தாகவே பார்க்கப்படுகிறது. காணாமல் போனோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்றனவற்றின் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முனைகிறது என்ற குற்றச்சாட்டு வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட உறவுகளிடம் காணப்படுகின்ற நிலையில் தான் அரசாங்கம் தமது இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது என்பது இந்த இடத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும். 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிக்குக் கொண்டுவரப்பட்டாலும் யுத்தத்தில் காணாமலாக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், போன்றன முடிவுக்கு வரவில்லை. அத்துடன், தொடர்ச்சியாக பேசப்படுகின்ற ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் போன்றவற்றிடம் தமிழ் மக்கள் நீதியைக் கோருகின்றவைகளாகவே இருந்தும் வருகின்றனர். இந்த நிலையில் இப்போதும் இவ்விவகாரங்களுக்கு சர்வதேச பொறிமுறையினால் எதுவும் நடைபெறாது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுவதானது காலங்கடந்தும் ஞானம் கிடைக்காத தன்மையாகவே சொல்ல முடியும். அதே நேரத்தில், காணாமல் போனோர் விவகாரம் தனித்துவமானது. என்றும் அதற்கு அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒத்துழைப்பு போதுமானதாக இருக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கின்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் இருக்கிறார் என்பதனையே வெளிப்படுத்துகின்றது. அதே நேரத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கின்றது எனலாம். பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக இரத்து செய்யப்படும். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதியளித்திருந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முந்தைய அரசாங்கங்கள் முன்னெடுத்திருந்த விடயங்களை தொடர்வதானது தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என்பதற்கப்பால் அவர்கள் கோருகின்ற சர்வதேச நீதி என்பதனை வலுப்படுத்துவதாகவே இருக்கிறது எனவும்கூறலாம். அதே நேரத்தில், நாட்டில் இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இனியொரு போதும் கிடையாது எனக் கூறும் அரசாங்கம் முரண்பாடுகளை களைவதற்கு முயற்சிக்காமல் இருப்பதனை அவ்வாறே வைத்துக் கொண்டு நகர முயல்வதானது ஆபத்தான நிலைமையே. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக உறுதியளித்து விட்டு அதனைவிட மோசமானதொரு சட்டத்தை உருவாக்குவதும், புதியட அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று கூறிவிட்டு அதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று கருத்து வெளியிடுவதும் பொருத்தப்பாடில்லாச் செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுகின்றன. இவையெல்லாம், காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வலி மற்றும் உணர்வுகளை உணராமல் நகர்தல், தமிழ் அரசியல் கைதிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமை, தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இன அழிப்புச் செயற்பாடு, வட கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய போராட்டத்திற்கான தீர்வை வழங்காமல் காலத்தை வீணடித்தல் போன்றவைகள் நம்பிக்கையீனங்களையே ஏற்படுத்தும் என்பதனைத் தவிர வேறொன்றில்லை. அந்தவகையில்தான், இலங்கையில் யுத்த காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டன, இன அழிப்புகள் நடைபெற்றன, மனித குலத்திற்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றுக்கான பொறுப்புக்கூறல் அவசியம் தேவை என்பது தொக்குகிறது. அது மாத்திரமின்றி சர்வதேச வடிவமைப்புகளை மீறுவதாக ஒரு உள்நாட்டுப் பொறிமுறைக்குள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை புகுத்த நினைப்பதும் தவறானதாக இருக்கிறது. அவ்வேளையில் இராணுவம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரை தண்டிக்கும் பொறிமுறைக்கு ஒருபோதும் இடமளியோம் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் என்பதுடனேயே முடிவு கிடைக்கவே வாய்ப்புள்ளது என்பது மாத்திரம் நிச்சயம். இஸ்ரேல்- அமெரிக்காவால் ஆரம்பித்து வைக்கப்பட்டு, ஈரான் நடத்தும் யுத்தம் முடியும் வரையில் காத்திருப்போம். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நம்பிக்கையீனங்கள்-உருவாதல்/91-374144- வேலணையில் மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!
இலஞ்சம் வேலை செய்கிறதோ?!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.