stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
ஈரானிய 'கொலை ஒப்பந்த' சதி முயற்சி: அமெரிக்க நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார் ஆசிப் ராசா!
ஈரானிய 'கொலை ஒப்பந்த' சதி முயற்சி: அமெரிக்க நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார் ஆசிப் ராசா! 07 Mar, 2026 | 01:07 PM அமெரிக்க அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஆசிப் ராசா மெர்ச்சண்ட் , புரூக்ளின் மத்திய நீதிமன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் ராசா மெர்ச்சண்ட், அமெரிக்காவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஐநாவிற்கான முன்னாள் தூதுவர் நிக்கி ஹேலி ஆகியோரைக் கொலை செய்வதற்கான திட்டங்களை முன்னெடுத்ததாகப் வழக்குத் தொடரப்பட்டது. இதற்காக வாடகைக்குக் கொலைகாரர்களை அமர்த்த அவர் முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. புதன்கிழமை (04) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சாட்சியமளித்த மெர்ச்சண்ட், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்காகவே தான் இந்தச் சதியில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஈரானியப் புரட்சிகர இராணுவத்தின் அழுத்தமே இதற்குக் காரணம் எனவும், எவரும் கொல்லப்படுவதற்கு முன்னரே தான் பிடிபடுவேன் என்று தான் நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். ஈரான் ஆட்சியாளர்களின் திட்டங்களை ஒத்ததாகவே இது அமைந்திருப்பதாக வொஷிங்டன் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி அமெரிக்காவை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்ட மெர்ச்சண்ட் மீது, சர்வதேச பயங்கரவாதம் மற்றும் கொலைக்கான ஒப்பந்தம் ஆகிய இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவற்றில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதல்கள் காரணமாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ள சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரானிய 'கொலை ஒப்பந்த' சதி முயற்சி: அமெரிக்க நீதிமன்றில் குற்றவாளியாகக் காணப்பட்டார் ஆசிப் ராசா!
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
ஆதாரம் பிளீஸ்? ஏனைய நாட்டு கொடியோடு பயணித்த கப்பலகளில் வேலை செய்த இந்தியர் ஒருவர் இறந்தார் என நினைக்கிறேன். இந்திய கொடி பாவித்த கப்பல்கள் எதையும் ஈரான் தாக்கியதாக தகவல் இல்லை.
-
ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!
எவர் சொல்லையும் கேட்க தேவையில்லை. நடுநிலை நாடு ஒன்று சரணடைந்த போரிடும் தரப்பை மீள போர் முனைக்கு அனுப்ப கூடாது. அனுப்பினால் அந்த நாடும் போரிடும் தரப்பாக கருதப்படலாம். எப்படி அனுப்புவது? கப்பலை கிளப்பினால் மாலைதீவு தாண்ட முதல் அமெரிக்கா அதை துவம்சம் பண்ணி விடும். தெஹ்ரானுக்கு போக பொது விமான சேவை ஏதும் இல்லை. இலங்கை விமானபடை விமானம் அவ்வளவு தூரம் போகாது என நினைக்கிறேன். போனாலும் இஸ்ரேல் அதை பஸ்பமாக்கி விடுவான். மாலுமிகள் போக விரும்புவார்களா?
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ஆனால்… இந்தியா கப்பலை வெளியேறுமாறு பணித்தத்து…. அல்லது தக்க பாதுகாப்பு கொடுக்க தவறியது என நீங்கள் கூறியது தவறு என்பதை காட்ட பல தெளிவான உறுதியான காரணங்கள் உள்ளன. இந்தியா கப்பலை வெளி ஏற சொல்லி நிர்பந்தபடுத்தியது என ஈரானோ எந்த செய்தி அமைப்போ சொல்லவில்லை.
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓமோம். அதுக்குள்ள தலை"விதி" யும் ஒன்று. அந்த விதியின்ர இலக்கம் தெரியவில்லை. 🤣
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 125 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 125 / பின் இணைப்பு - "இலங்கையின் நாளாகமங்கள் மற்றும் தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை" அவளுடைய கணவர் கோவலன், நம்பிக்கையற்ற நம்பிக்கையுடன் திரும்பி வந்தபோது, அவள் ஒரு புன்னகையுடன், 'என் காற்சிலம்பை எடுத்துக்கொள்' என்று அவனுக்கு ஆறுதல் வழங்கினாள். இந்தக் காவியத்தின் ஆசிரியர் கண்ணகியை, கணவனின் நன்மை தீமையிலும் அல்லது இன்பத்திலும் துன்பத்திலும் அல்லது எதுவாக இருந்தாலும், அவருடன் நிற்கத் தயாராக இருக்கும் ஒரு அழகான இளம் பெண்ணாக, சித்தரிக்க விரும்பியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இருவரும் பாண்டிய இராச்சியத்தின் பண்டைய தலைநகரான மதுரைக்குச் சென்று, அங்கே, எதாவது ஒரு தொழிலைத் தொடங்குவதற்காக, கொலுசை அல்லாது சலங்கையை விற்று பணம் பெறச் சென்றனர். கவுந்தி அடிகள் இருவரையும் அழைத்துச் சென்று, இடைக் குலமடந்தையாகிய மாதரி என்னும் விருந்தோம்பலில் சிறந்த பெண் வீட்டில், 'ஈங்கு, என்னொடு போந்த இளங் கொடி நங்கை-தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்: கடுங் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு நடுங்கு துயர் எய்தி, நாப் புலர வாடி, தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி,' "இங்கு என்னொடு வந்த இளநங்கை மென்மை மிக்கவள். அவள் காலடிகள் மண்ணை மிதித்தது இல்லை. அத்தகையவள் காதலனோடு கடுமையான வெய்யிலில் கொடுமையான காட்டு வழியில் கணவனுடன் நடந்தாள். நாப் புலர வாடி வருந்தினாள். கணவனுடன் உற்ற துயரில் பங்கு கொண்டாள். தன் துயரை அவள் காணாமல் அவனுக்காக அவன் துயர் துடைப்பதற்காக உடன் வந்தவள்." என்று கூறி, அவளின் பராமரிப்பில் ஒப்படைத்தார். அதன் பின், கவுந்தி முனிவர், அங்கிருந்து தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். கோவலன் அதன் பின், கண்ணகியை மாதரியுடன் விட்டுவிட்டு, தனியாக மதுரை நகருக்குச் சென்றார். கோவலன், இடையர் மன்றங்களைக் கடந்து மாநகரில் நடந்து சென்று பீடிகைத் தெருவாகிய கடைவிதியை வந்து அடைந்தான். அங்கே, அரச பொற்கொல்லன் ஒருவனை கோவலன் சந்தித்தான். அரசியின் காலணியை ஏற்கனவே களவாடிய அந்த அரச பொற்கொல்லன், தான் தப்புவதற்காக, ராணியின் சிலம்பு திருடிய திருடன், இவனே என்று கோவலனை மன்னனுக்கு கூறினான். எந்த விசாரணையும் செய்யாமல், தனது பொற்கொல்லனை நம்பி, அவசர அவசரமாக மன்னன் கோவலனின் தலையை வெட்ட உத்தரவிட்டான். கோவலன் உடனடியாக கொல்லப்பட்டான். வெற்று நிலத்தில் அரிதாகவே நடமாடும் அளவுக்கு செல்வம் நிறைந்த, நல்லொழுக்கமுள்ள இளம் பெண் கண்ணகி, “யாரும் படாத துயரம் உற்றேன்; இத்தகைய துயரத்துக்குக் காரணமான செய்தியைக் கூறுகின்றேன். கேளுங்கள்; என் கணவன் கள்வன் அல்லன் என் சிலம்பைக் கொள்ளவே இக் கொலை செய்தனர்; அதுதான் நடந்தது” என கோபமடைந்து, மன்னனை நேரில் சந்தித்தாள். மன்னன் “இள நங்கையே நீ யார்?” கண்ணிரோடு கலங்குவது ஏன்?” என்று வினவினான். அவள் அதிர்ந்திடும் மொழியில் தான் யார் என்பதையும், தன் வழக்கு யாது என்பதையும் அடுக்கி வைத்துக் கூறினாள். “ஆராயாது தீர்ப்புக் கூறிய அரசன் நீ சோழ நாட்டு மகள் நான் ; புறாவிற்காகத் தன் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சோழன் ஆண்ட நாடு என்னுடைய நாடு; ஆவின் கண்ணிர் தன் நெஞ்சு சுட்டது. மணியின் நா அவனைத் தட்டி எழுப்பியது. தன் ஒரே மகனைத் தெருவில் கிடத்தித் தேர் கொண்டு உயிர் போக்கிய உயர்ந்தோன் மனுநீதிச் சோழன்; இவர்கள் ஆண்ட நாடு சோழ நாடு: புகார்நகரம் எமது ஊர்”. என்றாள். ஒருநாள் மாலைவேளை, இளவரசன் தற்செயலாக, ஒரு கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர, மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும் ஒலி எழுமாறு அடித்தது. அதைக்கண்டு மன்னன் துக்கமடைந்தான். மன்னனின் அமைச்சர்கள், இளவரசன் மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், மன்னனின் பயன்பாட்டிற்காக மட்டுமே இருந்த தெருவில் தான் சவாரி செய்ததாகவும், அதிக எண்ணிக்கையிலான வீரர்களுடன் சென்றதாகவும் விளக்கினர். அது மட்டும் அல்ல, சக்கரத்தின் கீழ் கன்று இறக்க வாய்ப்பில்லாத வகையில், அதிக சத்தம் இருக்கும் வகையில், தேர் மணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்கள் மன்னனுக்கு கூறி, இந்தக் கொலை இளவரசன் வேண்டும் என்று செய்தது அல்ல என்று விளங்கப்படுத்தினர். இருப்பினும், மனுநீதி கண்ட சோழன், தனது அன்புக்குரிய ஒரே மகனை சக்கரத்தின் கீழ் படுக்க வைத்து நெரித்துக் கொன்றான். அதனால் தானும், அந்த தாய் பசுவின் வலியை அனுபவிக்க, உணர முடியும் என்று நம்பினான். என்றாலும் அங்கே கண்ணகி இந்த முழு விவரத்தையும் கொடுக்கவில்லை. அதற்கு அவளுக்கு நேரம் இல்லை. ஆனால் காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட , முற்காலச் சோழர்களின் தலைநகரில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களையும் சுருக்கமாகக் குறிப்பிடுகிறாள். Part: 125 / APPENDIX – "The Chronicles of Ceylon and the Tamil Epics Silappathikaram and Mannimeghalai" When her husband, Kovalan, came dejected with forlorn hope, she offered him with a smile: ‘take my anklet’ (Silambu in Tamil and Hallamba in Sinhala). The author of the epic must have intended to portray Kannaki as a charming young lady who is ready to stand with her husband in the woes and in the weal irrespective of his merit or demerit. Both of them went to Madurai, the ancient capital of the Pandiyan Kingdom, to sell the anklet to get some money, perhaps, to start a business. Kavunti, a sage, accompanied both, and placed them in the care of a shepherd woman, Matari, and the sage Kavunti continued on her way. Kovalan, leaving Kannaki with Matari, went alone to the town of Madurai. The Royal goldsmith happened to meet Kovalan, and framed Kovalan as the thief who stole the queen consort’s anklet which was earlier stolen by the Royal goldsmith. The king in hasty decision gave order to behead him, and Kovalan was killed. Kannaki, the virtuous young lady who rarely walked on bare earth got angry, and confronted the king in person. The king inquired who she was, and the reason for her to be there. She introduced her that she came from the city of Puhar where ruled kings before; a king relieved the distress of a bird and another king sacrificed his dear and only son, grieved at the sight of a cow whose eyes were filled with pearl-like tears and who rang the bell for justice. The king’s ministers explained that the prince was riding the chariot adorned with bells along the street which was exclusively for the use of the king, and went with greater number of soldiers. The ministers were trying to convince the king that the chariot was adorned with bells so that there would have quite a lot of noise so that there was no possibility for calf to get killed under the wheel. The prince went with a large number of soldiers so that the killing wouldn’t have been deliberate act of the prince. They also indicated that the street was for the kingly use only. Still the king, Manu Neethi Kannda Cholan, killed his dear and only son under the wheel so that he could suffer the same pain as the mother cow. Kannaki didn’t give this full detail, but she makes terse references to these two incidents with two ancient kings of Puhar. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 126 தொடரும் / Will follow துளி/DROP: 2078 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 125 https://www.facebook.com/groups/978753388866632/posts/34172313542417189/?
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
30 நாட்களில் விற்க வேண்டிய பெற்றோலை மூன்றே நாட்களில் விற்றுத் தீர்த்துள்ளனர். பெற்றோல் நிலையங்களில் பெற்றோல் இல்லை ஆனால் ஒவ்வொருவர் வீடுகளிலும் பதுக்கப்பட்டுள்ளது.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இதில் இன்னமும் தெளிவில்லை. நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்.
-
யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !
யாழ் மத்திய கல்லூரி 3 விக்கட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.👏🏆
-
அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு
இது சங்கிகளுக்கு மட்டும்
-
கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
-
அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர
நீங்கள்... விகாரைகளை கட்டி, "டமுக்கு" அடியுங்க. 😂
-
அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர
அமெரிக்கா உலகம் முழுவதுலும் உள்ள கடற்பரப்புகளை உயர் தொழில் நுட்பம் மூலம் தன்னால் முடிந்த அளவுக்கு கண்காணிக்கிறது. இதில் என்ன ஆச்சரியம் உள்ளது. இதில் என்ன பகீரங்கப்படுத்துவதற்கு உள்ளது.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
கடைசியாக கிடைக்கும் தகவல்கள் படி, இந்த கப்பல், கண்காட்சியில் வைத்து இலங்கை கொடுத்த அழைப்பை ஏற்று, இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளது. பாதி வழியில் இலங்கை அழைப்பை மீளப் பெற்றுள்ளது. அப்புறம் உள்ளே அனுமதிப்பதா இல்லையா என முடிவெடுக்க இலங்கை தாமதிக்க அந்த இடைவெளியில் கப்பலை அமெரிக்கா தாக்கியுள்ளது. சுய விருப்பில் இலங்கை நோக்கி புறப்பட்ட கப்பலை இந்தியா தடுத்திருக்க, பாதுகாக்க முடியாது. அதேபோல் விசாகபட்டனத்திலேயே இந்தியாவிடம் கப்பல் சரண் அடைத்திருந்தால் -ஏனைய இரு கப்பல்களை போல அதுக்கும் தஞ்சம் கிடைத்திருக்கும்.
-
இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்: பணியாளர்களுக்கு தங்குமிடம்
ஈரானின் மூன்றாவது யுத்தக் கப்பல் இந்தியாவில் அடைக்கலம்! ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல் கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. IRIS Lavan கப்பலானது கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அடைக்கலம் கோரியிருந்த நிலையில், மார்ச் 1ஆம் திகதி அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2026/1467512
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இவர்கள் கொல்லப்படும்போது அவரவர் நாட்டு மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இவர்கள் கேட்க முடியாது. ஒரு நாட்டில் பலாத்காரமாக உள்நுழைந்து, அவர்களது வளங்களை சுரண்டி, மக்களையும் அரசியற்தலைவர்களையும் கொன்று, நிர்வாகத்தை, நாட்டை சிதைத்து, செய்வது பயங்கரவாதம், சொல்வது மனிதநேயப்போர். அவர்கள் நாட்டிற்குள் அடாத்தாக புகுந்து இவ்வளவு கோரத்தையும் செய்யும் ட்ரம்ப் தன் நாட்டிற்குள் அவர்கள் வருவதற்கு தடை விதிக்கிறார், காரணம் பயம். அயத்துல்லா அலி கமெனி தங்கியிருந்த இடத்தில ஏவப்பட்ட குண்டு, தரையை தொட்டவுடன் வெடிக்காமல் பல அடி ஆழமுள்ள சீமெந்து மற்றும் பாறைகளை துளைத்துக்கொண்டு உள்ளே சென்ற பிறகுதான் வெடிக்குமாம். நிலத்துக்கடியில் மிகப்பெரிய அதிர்வு ஏற்பட்டு பிறகு தரைப்பகுதி உள்வாங்கப்படுமாம், இதற்கு பங்கர் பஸ்ரர் என்று பெயராம். போராட்டகாலத்தில், நமது ஊர், அண்டைய பல ஊர்களில் இப்படியான பல குண்டுகள் விடியற்காலையில் மக்கள் தூக்கத்திலிருக்கும்போது வீசப்பட்டன. தரை, பல அடி ஆழத்திற்கு கிணறு போல் தோன்றி நீரும் வந்துவிடும், அதற்குள் வீடு முழுதாக அமிழும். இது பல கிராமங்களில் நடந்திருக்கு. தூக்கத்திலிருந்தவர்கள் அதற்குள்ளேயே மாண்டனர். அப்போ, அந்த குண்டுகளை இலங்கைக்கு அளித்தது இஸ்ரேல்! வைத்தியசாலை, சிறுவர் விடுதிகளிற்கு குண்டுகளை வீசிவிட்டு, அங்கு பயங்கரவாதிகள் மறைந்திருந்ததனால் தாக்கி அழித்தோம் என்று கூறினார்கள். அதே சம்பவம் காஸா, ஈரானில் இஸ்ரேலால் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆலோசனையை இஸ்ரேலே வழங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது. இன்று இஸ்ரேலை இலங்கை கண்டிப்பது, மனித நேயம் பேசுவது வியப்பாக இருக்கிறது. தன்னை புனிதன் என்று அறிவிக்கிறதா?
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஒரு பலமான போராட்டம் அழிவது துரோகிகளால் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. மொஸாட் கும்பலுக்கு முகவராக ஈரானின் படைத்தளபதியே செய்திகளை அனுப்பியுள்ளார். அந்த தகவலின்படியே இஸ்ரேல் துல்லியமாக தாக்குதலை நடத்தியுள்ளன. அயத்துல்லா அலி கமேனியுடன் கூட இருந்துகொண்டே குழி பறித்துள்ளார், கடைசி நிமிடத்தில் முகமது பக்போர் கூட்டத்திலிருந்து மாயமாகி செய்தி அனுப்பி தாக்குதலை நடத்தியிருக்கிறார். அவரும் கூட்டத்திற்கு பங்குபற்ற சென்றதால் அவரும் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அவர் இப்போ விசாரணையில் உள்ளாராம். ஈரான் மீது கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வைத்துப்பார்க்கும்போது இவர்தான் உளவாளியாக செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது, கடந்த ஆண்டே இவர்மீது விசாரணை ஆரம்பித்த போதும் அயத்துல்லா அலி கமேனியுடன் இவர் நெருக்கமாக இருந்த காரணத்தினால் அது தடைபட்டது அல்லது தடுக்கப்பட்டது, அது யாரால் என்கிற விசாரணையும் தொடர்கிறதாம். இவருக்குப்பின்னால் இன்னும் பலர் இருக்கலாம், இது ஈரானிய படையினரை சந்தேகிக்கும், சோர்வடைய செய்யும், பலவீனப்படுத்தும் செயலாகும்.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
டிரம்ப் விவிவிலிய பிரார்த்தனையும், பிரளயத்தை மையமாக (second comimg) வைத்து சண்டையை விபரிப்பதும். இயேசுவின் மீள்வருகை (second coming) போதே புண்ணியம் செய்த சொற்றபமானவர்கள் எஞ்சி இருப்பார்கள் இயேசுவை காண - இதை வேறு திரியில் சொல்லி இருக்கிறேன். (முழு வீடியோ ஐ பார்க்கவும்)
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
nepodStros87hul80129f94c 4i3a138616c9lfmta50c3mai741c56uf755 · கேள்வியும் பதிலும் தமிழரைப் பொறுத்தவரை மனித வாழ்க்கைக்கு மிக முக்கிய தேவை என்ன? பெற்றோலும், டீசலும். யாழ். குடாநாட்டில் இப்போது அதிகம் காணக்கூடிய வாகனங்கள் எவை? பெற்றோல் பௌசர்கள் குடாநாட்டு மக்களின் பிரதான தொழில் என்ன? எரிபொருள் பதுக்குதல் அவரகளது பொழுதுபோக்கு....? பெற்றோல் செற் கியூவில் நிற்றல் இலங்கையில் அதிகம் எரிபொருள் பாவனையாளர்கள் யார்? குடாநாட்டு மக்கள்தான். யாழ்ப்பாணத்தின் வளம் என்ன? எரிபொருள் சேகரிப்பு இவ்வளவு யுத்தக் கலக்கத்திலும் நமது ஜனாதிபதி மனம் தளராமலிருப்பது எதனால்? குடாநாட்டிலுள்ள பெற்றோலை வைத்து இன்னும் பல ஆண்டுகள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கைதான்......!
-
குட்டிக் கதைகள்.
pSroosnedtgfHtg01u2àut5g328ig66ll6r03:16i89g9uu03et 9 i050,i · ஒரு 8 வயதுள்ள சிறுமி தயங்கி தயங்கி அந்த மருந்துக் கடையை நெருங்கினாள். கடைக்காரர் வேறு ஒருவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார். அங்கிள்... அங்கிள்.... என்னம்மா????? கடைக்காரர் பரிவுடன் கேட்டார்.... அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.... மருந்து வேணும்.... திக்கி...திக்கிய படியே கண்களில் கண்ணீருடன் சொன்னாள் prescription கொண்டுவந்தாயா குழந்தை???? அந்த குழந்தை ஒன்றும் தெரியாமல் முழித்தது.... அப்படின்னா???? எங்கிட்ட காசு இருக்கு.... என்றபடியே தன் பைக்குள் கையை விட்டு அந்த மண் உண்டியலை எடுத்து டேபிள் மேல் வைத்தாள். "காசு பத்தலைன்னா நான் வீட்டுக்கு போய் வேற காசும் கொண்டு வர்ரேன் அங்கிள், மருந்து குடுங்க அங்கிள். இந்த மருந்து குடுத்தா என்னோட அண்ணனுக்கு உடம்பு சரியாயிரும்.... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகைக்கு தயார் ஆனது. சரிமா அழாதே.... மருந்து பேர் என்ன????? குழந்தை மென்று விழுங்கி சொன்னது " மெரிக்கள்" கடைக்காரர்க்கு ஒன்றும் புரியவில்லை... மீண்டும் கேட்டார். நல்லா ஞாபக படுத்தி சொல்லுமா... என்ன மருந்து பேரு????? மெரிக்கள் அங்கிள்... அப்படி ஒரு மருந்தே இல்லையேம்ம்மா... ஆமா உனக்கு யார் இந்த மருந்து பேரை சொன்னது????? குழந்தை கண்ணீருடன் சொன்னது.... டாக்டர் அம்மா அப்பா கிட்ட பேசிட்டு இருக்கும் போது நான் கேட்டேன். இந்த மருந்து இருந்தா தான் அண்ணன் பிழைக்க முடியுமாமா அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்... குழந்தை அழுகை ஆரம்பித்தது. அதுவரை நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்த அவரது நண்பர் அக் குழந்தையிடம் வந்தார். அழுவாதே செல்லம். உங்க அண்ணனுக்கு வேண்டிய மருந்தை நான் வாங்கி தர்ரேன். முதலில் உங்க வீட்டுக்கு போய் உங்க அண்ணனை பார்க்கலாம். அப்புறம் நானே மருந்து கொண்டு வருகிறேன்.... என்று அந்த பெண்ணை கையை பிடித்து அவள் வீட்டுக்கு கூட்டி சென்றார். வீட்டில் அவளது அண்ணனை பரிசோதித்த அவர்... அவர்களது பெற்றோர்களிடம் அனைத்து விவரங்களையும் கேட்டு தெரிந்து கொண்டு அந்த நோயாளி குழந்தையுடன் அதே மருத்துவமனைக்கு சென்று, அக்குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்ரிடம் விவரத்தை கேட்டு அறிந்தார். அக் குழந்தைக்கு இருதயத்தில் 5 இடங்களில் block இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் மேல் செலவாகும் என்று டாக்டர் சொல்ல, அதற்க்கு அந்த நண்பர்..... டாக்டர்.... நானும் ஒரு டாக்டர் தான் இருதய சிகிச்சை நிபுணர். அமெரிக்காவில் ஒரு பிரபல மருத்துவமனையில் தலைமை மருத்துவராக வேலை செய்கிறேன். விடுப்பில் வந்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் இந்த குழந்தையின் அறுவை சிகிச்சையை நான் உங்கள் உதவியுடன் செய்யலாமா???? மருத்துவ செலவை முழுவதும் நானே ஏற்றுக்கொள்கிரேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பெற்றவர்கள் கண்ணீர் மல்க ஆண்டவர் தான் உங்கள் ருபத்தில் வந்து என் குழந்தையை காப்பாற்றினார். என்று கூற அதற்க்கு மருத்துவர் இதற்க்கு மூல காரணமே உங்கள் பெண் குழந்தையின் தூய்மையான அன்பு தான் காரணம். டாக்டர் உங்களிடம் ஏதாவது MIRACLE நடந்தால் தான் உண்டு என்று சொன்னதை, குழந்தை அந்த miracle என்ற வார்த்தையை மருந்து தான் என்று நினைத்து என் நண்பனின் மருந்து கடைக்கு வந்தது தான் மூல காரணம். எல்லாம் வல்ல இறைவனுக்கு தெரியும், யார்யாருக்கு, எந்தெந்த நேரத்தில், எதை கொடுக்க வேண்டும் என்று. அதை இப்பொழுது உங்கள் பெண் மூலமாக கொடுத்துள்ளார்........!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடேங்கப்பா இவ்வளவு விதிகள் உள்ளனவா ....... எல்லாம் எங்கள் தலைவிதி . ......!
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
முதலில் இந்தியாவின் பெயர் இல்லை. இப்போது சேர்த்து விட்டார்களா? விருந்தாளி விசாகப் பட்டணத்தில் நிற்கும் போதே சண்டை தொடங்கியதால் இந்தியா இவர்களை பத்திரமாக கையாண்டு இருக்கலாம்.
-
அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு
அப்ப உங்க வாக்கு திமுகவுக்கே. நல்லது.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
தெளிவான, விடயம் அறிந்த தலைமை
-
ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் - பிரதமர் அந்தோணி அல்பானிஸ்
ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் - பிரதமர் அந்தோணி அல்பானிஸ் Published By: Vishnu 07 Mar, 2026 | 06:40 AM இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஈரானியப் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் மூன்று அவுஸ்திரேலிய கடற்படை வீரர்கள் இருந்ததை அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானிஸ் வெள்ளிக்கிழமை (06) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ஈரானுக்கு எதிரான அந்தத் தாக்குதல் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் "நேரடியாகப் பங்கெடுக்கவில்லை" என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 'IRIS Dena' கப்பலைத் தாக்கும் நடவடிக்கை தொடங்கியபோது, அதில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் அந்தச் செயல்பாட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக பிரதமர் தெரிவித்தார். "அவுஸ்திரேலிய வீரர்கள் எவரும் ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை" என்று அவர் ஸ்கை நியூஸ் தளத்திற்குத் தெரிவித்தார். தாக்குதலை நடத்திய நீர்மூழ்கியின் பெயரை அமெரிக்கா வெளியிடவில்லை என்றாலும், அது 'USS Minnesota' என்ற வெர்ஜீனியா ரக நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கலாம் என இராணுவ இணையதளங்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியா தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கான ஆயத்தப் பணிகளுக்காக, சுமார் 50-க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் தற்போது அமெரிக்க நீர்மூழ்கிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவுஸ்திரேலிய அரசின் இந்த நிலைப்பாட்டை பசுமைக் கட்சி செனட்டர் டேவிட் ஷுப்ரிட்ஜ் கடுமையாகச் சாடியுள்ளார். "இந்தத் போர் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியா இதில் நேரடியாக ஈடுபடவில்லை என்று தொழிலாளர் கட்சி கூறிவருவது ஒரு பொய். டொனால்ட் டிரம்ப்பின் சட்டவிரோதப் போரில் அவுஸ்திரேலியா இப்போது உடந்தையாகியுள்ளது," என அவர் குற்றம் சாட்டினார். இராணுவ ஆய்வாளர் மால்கம் டேவிஸ் கருத்துப்படி, நீர்மூழ்கியின் கப்டன் தாக்குதலுக்கான முடிவை எடுத்தவுடன், பயிற்சியில் இருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் தார்மீக மற்றும் சட்ட ரீதியான காரணங்களுக்காகத் தங்களது அறைகளுக்குத் திரும்பிச் சென்றிருப்பார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க கடற்படை ஒரு போர்க்கப்பலை டார்பிடோ மூலம் அழித்தது இதுவே முதல் முறையாகும் எனத் தெரிவித்ததாக அவுஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கியில் 3 அவுஸ்திரேலியர்கள் - பிரதமர் அந்தோணி அல்பானிஸ்