stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை!
தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை! தையிட்டிக்கு கொண்டு வரப்பட்டிருந்த புத்த சிலை இராணுவ சிற்றுண்டி சாலையில் இருந்து எடுப்பட்டுள்ளது என kks பொலிஸ்சார் தெரித்துள்ளனர். இன்னிலையில் அதனை கொண்டு வந்த மதகுருவிடம் வாக்குமூலம் பெறவுள்ளது. மேலும் இன்று யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458192
-
மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!
மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு! இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில் இங்குள்ள இந்துார், கடந்த ஏழு ஆண்டுகளாக துாய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இங்கு பகிரத்புரா பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு சில தினங்களுக்கு முன் திடீர் உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. குழாயில் கசிவு வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட உபாதைகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்து மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. . பகிரத்புராவில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டதும், புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையில் இருந்து வெளியேறிய கழிவுநீர் அதனுடன் கலந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு, அப்பகுதிகளில் அரசு சார்பில் குடிநீர் வழங்கப்பட்டது. பிற குழாய்களில் வரும் குடிநீரை காய்ச்சி பருகவும் அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் உயிரிழப்புக்கு காரணமான குடிநீர், பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், குடிநீருடன் கழிவுநீர் கலந்திருந்தது உறுதியானது. அதில், குடலில் நோய்த்தொற்று உண்டாக்கி வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும், ‘விப்ரியோ காலரே, ஷிகெல்லா, இ.கோலி’ பாக்டீரியாக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணித் துறை மண்டல பொறுப்பாளரும், இரண்டு உதவி பொறியாளர்களும் இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், கழிவுநீர் கலந்தது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமை செயலர் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பல மாதங்களாக இந்த பிரச்னை சரிசெய்யப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் கூறியதை மேற்கோள்காட்டி, இரண்டு வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458213
-
சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!
சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி! சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார். கடந்த வாரம் சீனா மற்றும் தாய்வான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை சீன இராணுவம் முன்னெடுத்துள்ளது. அத்துடன் தாய்வானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றது. இதேவேளை சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்து சென்றிருந்தது. எனினும் தாய்வான்இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. மேலும், தாய்வான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் சீனா அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். தாய்வானை சீனாவின் தன்னாட்சி பிராந்தியமாகவே கருதுவதாகவும் அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதிய ஆண்டில் அறிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார். https://athavannews.com/2026/1458169
-
வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள்
வெனிசுலாவில் பாரிய வெடிப்பு சம்பவம்- பொதுமக்கள் அச்சம்! வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று (0 3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதை அடுத்து, நகரம் முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாழ்வாக பறந்த விமானங்கள், தொடர் வெடிப்புகள் மற்றும் மின் துண்டிப்புகள் குறித்து உள்ளூர் மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாவது வெடிப்புச் சம்பவம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது இதன் காரணமாகப் பாரிய சத்தத்துடன் அப்பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. https://athavannews.com/2026/1458227
-
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் [மூன்று பகுதிகள்]
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 02 கிறிஸ்துமஸுக்கு புத்தாண்டுக்கும் இடையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு இடையில், அடைக்கலமும் ஆராதனாவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு யாழ்ப்பாண பொது நூலகத்தில் மீண்டும் சந்தித்தனர். ஆராதனா நூலகக் குறிப்புப் பகுதியில் நாட்டுப்புற தாளங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்; அடைக்கலம் குற்றச்சாட்டு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு மீனவருக்காக ஒரு ஆட்கொணர்வு வழக்கைத் தயாரித்துக் கொண்டிருந்தார். வரலாற்றால் வடுக்கள் நிறைந்த, ஆனால் அதை மறைப்பதற்காகவே முழுமையாக புனர்நிர்மாணம் அரசால் செய்யப்பட்ட அந்த யாழ்ப்பாண பொது நூலகத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் உலகங்களைக் கற்றுக்கொண்டனர். 'ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும்' 'ஒரு மொழியை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் நூல்களை அழிக்க வேண்டும்' இதைத்தான்1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் இலங்கை அரச அதிகாரத்தால், சிங்கள இன வன்முறைக் குழுவொன்றால் யாழ்ப்பாணம் பொது நூலகம் முற்றாக எரிக்கப்பட்டது. அது பற்றியே முதலில் அங்கு பேசத் தொடங்கினர். அவர்களின் கலந்துரையாடலுக்கு இடையில், ஆராதனா, கிறிஸ்மஸ் ஈவை [christmas eve] நான் குழந்தைப் பருவத்தில் விளக்குகளாகவே பார்த்திருக்கிறேன். நட்சத்திரங்களாக. பாடல்களாக. ஆனால் அன்று அது கேள்வியாக இருந்தது. இப்ப கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் முதல் முறை இந்த கிறிஸ்மஸ் ஈவுக்கு சென்றபின், அந்த கேள்வி மறைந்து விட்டது என்றாள். அடைக்கலம் ஒன்றும் பேசவில்லை. அவளை, அவளின் பேச்சை ரசித்தபடி மௌனமாக இருந்தான். பின் இப்ப கிறிஸ்மஸ் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டான். அவள் சற்றும் தாமதிக்காமல், உடனடியாகவே, அவனின் கண்ணை பார்த்தபடியே, "இப்போது எனக்குத் தெரியும் — நான் கற்றுக் கொண்ட கிறிஸ்மஸ் பிறந்த நாளைப் பற்றி அல்ல. மனிதன் மனிதனாக நிற்பதைப் பற்றி" என்றாள். "நான் கேள்வி கேட்டே பழகவில்லை. வழிபாடு எனக்கு இசை. பாடல். நடனம். கண்கள் மூடி ஏற்றுக் கொள்ளும் அமைதி." என்று தன்னையும் கொஞ்சம் அறிமுகப் படுத்தினாள். இதுவரை அமைதியாக இருந்த அடைக்கலம், "நான் வழக்கறிஞராக மாறியது சட்டத்தை நேசித்ததனால் அல்ல. அநீதியைப் பார்த்து அமைதியாக இருக்க முடியாததனால்" என்றான். "வடக்கில் ஒரு மனிதன் அவனுடைய நிலத்தில், அவனே விருந்தினன் ஆக்கப்பட்ட போது நான் சட்டப் புத்தகத்தைத் திறந்தேன்" என்று விளக்கமும் கொடுத்தான்." அன்று முதல் என் கிறிஸ்மஸ் ஒரு வழக்குக் கோப்பாகவே இருந்தது, அது மட்டும் அல்ல, நான் தேவாலயத்திற்குப் போகிறேன். ஆனால் நான் அங்கு நம்பிக்கையைத் தேடுவதில்லை. அமைதியை மட்டும் தேடுகிறேன்." என்று தன் கதையைச் சுருக்கமாக சொல்லி முடித்தான். ஆண் பெண்ணின் உடல் அழகைக் கண்டு கவரப்படுவது போல, பெண் ஆணின் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு, பாதுகாப்பு உணர்வு, அக்கறை போன்ற குணாதிசயங்களில் மயங்கி காதலிப்பதே பொதுவான கண்ணோட்டமாகும். அதில் ஆராதனாவும் ஒருவளே. என்றாலும், ஆராதனா தன் உணர்வுகளை வெளிக் காட்ட நினைத்தாலும் ஏதோ ஒரு நாணம், வெட்கம் அவளைத் தடுத்தது. பெண்ணிடம் தயக்கம் இருக்கும், பயம் இருக்கும், கூச்சம் இருக்கும், நாணம் இருக்கும், வெட்கம் இருக்கும் .... இவற்றிற்கு நடுவில் அவர்கள் தங்கள் காதலையும் சொல்லியாக வேண்டும். இந்த பிரச்சனை இன்று நேற்று அல்ல .... தொன்று தொட்டு வருகிறது. பாண்டிய மன்னன் வீதி உலா போகிறான். அவள் ஒரு சாதாரண குடும்பப் பெண். பாண்டியன் மேல் காதல். சொல்லவா முடியும் ? அவனைக் கொஞ்சம் பார்கவாவது செய்யலாம் என்றால் அவனை சுமந்து வரும் அந்த பட்டத்து பெண் யானை வேக வேகமாக நடந்து சென்று விடுகிறது. யானையிடம் தலைவி சொல்கிறாள் ... "ஏய் யானை, கொஞ்சம் மெதுவா தான் போயேன் ... என்ன அவசரம் .." என்று சொல்ல வேண்டும். யானை கேட்குமே , "ஏன் என்னை மெதுவாக போகச் சொல்கிறாய் " என்று. பாண்டிய மன்னனை சைட் அடிக்கணும் என்று சொல்லவா முடியும் ? அவள் அந்த பட்டத்து பெண் யானையிடம் சொல்கிறாள் " நீ இப்படி தங்கு தங்கு என்று வேகமாய் நடந்து போனால், ஊரில் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள். இப்படி ஒரு அடக்கம் இல்லாமல், ஒரு பெண் இருக்கலாமா என்று உன்னைப் பற்றி பழி பேசுவார்கள். எனவே, மெல்லமா போ " என்கிறாள். என்னவோ, அந்த யானை மேல் ரொம்ப கரிசனம் உள்ளவள் போல. எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான் புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப் படுவது உடைத்து அப்படித்தான் ஆராதனா தன் மனதை மெல்லமா போக செய்து விட்டாள். அதனால், அடைக்கலத்துக்கு அவளின் நிலையை அறியமுடியவில்லை. அதன் பின் ஒரு முறை அடைக்கலத்துடன் நீதிமன்றத்திற்குச் சென்றாள் - உள்ளே அல்ல, ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பங்களுடன் வெளியே காத்திருந்தாள், சட்ட பயத்தை [சட்டத்தின் மீதான அச்சம்] இலகுவான தமிழில் மொழிபெயர்த்தாள். மகன் காணாமல் போன அந்த வயதான பெண்மணியிடம், சமநிலையில் இருந்து, ஆறுதல் அளிக்கப் பேசுவதை அவன் பார்த்தான். அந்த தருணத்தில் அவனின் மனம் அவனுக்குச் சொன்னது, "அவளின் தனிப் பெருமை கொண்ட அழகை விட, அவள் பிறர் துயரத்தை தன் துயராக ஏற்கும் மனிதராக இருக்கிறாள்" என்று. அது அவனை மேலும் சிந்திக்க வைத்தது. அவள் செய்யும் இந்தச் செயல், அவன் வழக்காடும் வாழ்க்கையையும் பிரதிபலித்து, இருவரும் ஒரே உண்மையின் பக்கம் நிற்பவர்கள் என்பதை அவன் உணர்ந்தான். அந்த நிமிடம் அவனுக்குச் சொன்னது: “இந்த பெண்ணுடன் நான் வாழ்க்கையைப் பகிர முடியும்.” அன்று மாலை, சோதனைச் சாவடியைத் தாண்டி அவர்கள் செல்லும் போது, ஆராதனாவின் மனம் காணாமல் போன தன் மகனைப் பற்றி பேசும்போது குரலே இல்லாமல் போன அந்த முதிய பெண்ணின் முகத்தில் இன்னும் இருந்தது. இரும்புக் கம்பிகளும் சீருடை ஒளிகளும் சூழ்ந்த அந்தச் சாலையில், அவள் திடீரென நின்று, “நாம் செய்கிற எல்லாம் சில நேரங்களில் பயனற்றது போல் தோன்றுகிறதா?” என்று கேட்டாள். அந்தக் கேள்வி அவள் நம்பிக்கையால் அல்ல; அவள் சுமந்த பொறுப்பின் சத்தம். அடைக்கலம் ஒரு கணம் மௌனமாக இருந்தான். பிறகு மெதுவாகச் சொன்னான்: “நான் வருவதை நிறுத்தும் நாளில்தான் அது பயனற்றதாகும்.” அவன் நீதியை வெற்றியாக மாற்ற முடியாதவன் என்பதை அறிந்திருந்தான்; ஆனால் நீதி தேவைப்படும் இடத்தில் இருப்பதை விட்டுவிட மறுத்தவன். அவர்கள் மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள்—சோதனைச் சாவடியைத் தாண்டி, இரவுக்குள்—உலகத்தை மாற்ற முடியாவிட்டாலும், மனிதனை முற்றிலும் உடைய விடாமல் தடுக்க நிற்கும் மனிதர்களைப் போல. அப்பொழுது ஒரு பாடல் அவர்களின் காதில் ஒலித்தது; "உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய் அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான் அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்! உன்னை நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர் அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர் அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையுடன் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம் !! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1970 [கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/33112176718430882/?
-
வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள்
வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள் செய்திகள் வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகப் பாரிய சத்தத்துடன் அப்பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாவது வெடிப்புச் சம்பவம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjxzfirb03gzo29ndt385qql
-
டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்?
டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்? கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதற்காக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள உலகக் கும்பலுக்கு விற்பனை செய்ததாக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 9ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட வேண்டுமென அரசு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் கைவிரிக்கப்பட்டது என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தொடர்பான கடந்த கால மோசடிகள் மற்றும் காணி ஒதுக்கீடுகளைச் சுட்டிக்காட்டும் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளிலும் கிளிநொச்சியின் பூநகரியிலும் கடலட்டை பண்ணைகளுக்கு அரச நிலங்கள் வாடகை செலுத்தப்படாமல் ஓதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை சுமார் நாலாயிரம் ஏக்கர் நிலங்களாகவும், முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், முறையற்ற அரச காணிகள் மற்றும் மாதாந்தம் நூறு மில்லியன் வரையிலான நிதி துஸ்பிரயோகம் ஆகியவற்றுக்கான குற்றச்சாட்டுகள் காணித்திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக எழுந்துள்ளன. இதனால் முன்னாள் வடமாகாண காணி ஆணையாளர் மற்றும் தற்போதைய வடமாகாண சபை அமைச்சின் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு தரப்பின் தகவலின்படி, கடலட்டை பண்ணைகளின் நிலங்களை பிரதேச செயலகங்கள் வழியாக ஒதுக்குதல் செய்யாமல், முன்னாள் அமைச்சர் தன்னிச்சையாக தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியதாகவும், இந்நிலையில் அதற்கு தொடர்புடைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை தென்னிலங்கையில் கைதான முன்னாள் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்த அனுபவத்தின் அடிப்படையில், தற்போது அரசு டக்ளஸ் தேவானந்தாவையும் அவரது விசுவாச அதிகாரிகளையும் சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளது. https://www.samakalam.com/டக்ளஸ்-மீது-பாயும்-புதிய/
-
தீவகத்தில் சட்டவிரோத செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞன் மீது தாக்குதல்!
தீவகத்தில் சட்டவிரோத செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞன் மீது தாக்குதல்! adminJanuary 3, 2026 தீவக பகுதியில் மாடுகளை களவாடி , சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கி விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றினால் , மாடுகளை திருடும் கும்பலுக்கு எதிராக செயற்பட்டு வந்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாரந்தனை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , தீவகம் பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்கள் , மற்றும் மாடுகள் களவாட்டப்பட்டு , இறைச்சியாக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்துள்ளார். குறித்த இளைஞன் உள்ளிட்ட சிலர் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடுகளை களவாடி இறைச்சியாக்க முற்பட்ட கும்பல் ஒன்றினை மடக்கி பிடித்து , அவர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கடையொன்றுக்கு சென்ற சமயம் , மாடுகளை களவாடும் கும்பலை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் மது போதையில் இளைஞன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குலுக்கு இலக்கான இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவற்துறையினரர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2026/225550/
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்! adminJanuary 3, 2026 தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக, தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கைகோர்த்துள்ளனர். தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில், இன்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிகிரியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, காணி உரிமையாளர்களுடன் இணைந்து மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்துகளில் பெருமளவிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். சிகிரியாவிலிருந்து புத்தர் சிலையுடன் வருகை தந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரை, காங்கேசன்துறை காவல்துறையினர் இடைமறித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர், தையிட்டி விகாரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் பேருந்து மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தமது நில உரிமையை மீட்டெடுக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் உறுதியுடன் உள்ளனர். https://globaltamilnews.net/2026/225560/
- Today
-
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
அண்ணர் அஞ்ஞாதவாசம் போய் விட்டு வந்திருக்கின்றார் போலும் தமிழீழம் மட்டுமே என்று கேட்ட புலம்பெயர் தமிழர்கள் பலர் இப்போது அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஒற்றை ஆட்சி ஸ்ரீலங்காவை ஏற்று கொண்டதோடு அவர் தான் நிரந்தரமாக இலங்கையை ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வாக்கெடுப்பு தேர்தலை இலங்கை முழுவதிலும் நடத்தபட வேண்டும் என்று கேட்கின்ற நிலைக்கு வந்திருக்கின்றார்கள்
-
பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
2026 பாடசாலை நேர அட்டவணை மற்றும் ஆசிரியர் பயன்பாடு தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவுறுத்தல் Published By: Vishnu 03 Jan, 2026 | 03:52 AM புதிய கல்விச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நேர அட்டவணை மற்றும் கல்விசார் ஆளணியினரைப் பயன்படுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவுறுத்தல் கோவையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டிலும் பாடசாலை நடைபெறும் நேரம் தற்போது நடைமுறையில் உள்ளதைப் போலவே காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தொடரும் என அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த கல்விச் சீர்திருத்தச் செயன்முறை, 2026 ஆம் ஆண்டிலிருந்து தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிவுறுத்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235081
-
இறைவனிடம் கையேந்துங்கள்
"யாழ்ப்பாணத்து மண், வீரத்தின் அடையாளம்! எங்கள் குரும்பசிட்டி ஸ்ரீ முத்துமாரி
-
அமெரிக்காவின் டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD!
அமெரிக்காவின் டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD! Published By: Digital Desk 1 03 Jan, 2026 | 11:05 AM சீனாவின் BYD நிறுவனம் 2025ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளராக மாறியுள்ளது. இதுவரை, அமெரிக்க நிறுவனமான டெஸ்லா முன்னனி நிறுவனமாக திகழ்ந்தது. டெஸ்லாவின் வாகன விற்பனை தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ள நிலையில், BYD நிறுவனம் வலுவான போட்டியாளராக மாறியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/235099
-
கீழடி நகரை மக்கள் கைவிட்டது ஏன்? சுமார் 1,170 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது? ஆய்வில் புதிய தகவல்
கீழடி நகரை மக்கள் கைவிட்டது ஏன்? சுமார் 1,170 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது? ஆய்வில் புதிய தகவல் பட மூலாதாரம்,Archaeological Survey of India படக்குறிப்பு,கீழடி கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரைக்கு அருகில் கண்டறியப்பட்ட கீழடி தொல்லியல் தளத்தில் வாழ்ந்திருந்த மக்கள், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தைக் கைவிட்டு வெளியேறினர். சுமார் 1,150 ஆண்டுகளுக்கு முன்பாக இது நடந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்றதற்கான காரணத்தை விவரிக்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று. அக்டோபர் 25ஆம் தேதி Current Science ஆய்விதழில் "Luminescence chronology of sediments from the prehistoric civilisation sites along the Vaigai river, India" என்ற கட்டுரை வெளியானது. இந்த ஆய்வுக் கட்டுரையை ஆமதாபாத் நகரில் உள்ள Physical Research Laboratory-ஐ சேர்ந்த ஆய்வாளர்களும் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர். கீழடி தொல்லியல் தளத்தில் கிடைத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகள், அங்கு வாழ்ந்து வந்த மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு அகன்றதற்கான காரணத்தைப் புலப்படுத்துவதாக இந்த ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. அதாவது, அருகிலுள்ள வைகை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கே, அங்கு வாழ்ந்த மக்களை அந்த இடத்தை விட்டு செல்லத் தூண்டியிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்த நிகழ்வு சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்திருக்கலாம் என்றும் இவர்களது ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 13 கி.மீ. தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை அகழாய்வுகளை நடத்தியது. இந்த அகழாய்வில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்வுகளுக்குப் பிறகு, 2017ஆம் ஆண்டில் இருந்து மாநில தொல்லியல் துறை அங்கு தொடர்ந்து அகழாய்வுகளை நடத்தி வருகிறது. இங்கு கிடைத்த விரிவான கட்டடத் தொகுதிகளும் இங்கு கிடைத்த தொல் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த முடிவுகளும் கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கிலேயே ஒரு நகரம் இந்தப் பகுதியில் இயங்கியிருக்கலாம் என்ற செய்திகளைத் தந்தன. இந்த நிலையில் கீழடியில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் சில ஓஎஸ்எல் எனப்படும் Optically Stimulated Luminescence ஆய்வுக்கு சில ஆய்வாளர்களால் அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின் முடிவுகள், கீழடியில் வாழ்ந்த மக்கள் வைகையில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக, சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறியிருக்கலாம் எனத் தெரிய வந்திருப்பதாக ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது 'யோனியில் புகையிலை' - மேற்கு ஆப்பிரிக்க பெண்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையானது ஏன்? கொரோனா 2020: கப்பல்கள் நிறுத்தப்பட்டபோது கடல் விலங்குகளின் வாழ்க்கை எப்படி மாறியது? சௌதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பதற்றம் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு என்ன பிரச்னை? கீழடி நகரை மக்கள் கைவிட்டது ஏன்? சுமார் 1,170 ஆண்டுக்கு முன் என்ன நடந்தது? ஆய்வில் புதிய தகவல் End of அதிகம் படிக்கப்பட்டது படக்குறிப்பு,கீழடி தொல்லியல் தளம் ஆய்வுக் குழிகளில் கிடைத்தது என்ன? தற்போது வைகை நதி, கீழடி தொல்லியல் தளத்தில் இருந்து வடக்கில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் ஓடுகிறது. அந்நதியின் வெள்ளப் படுகையில்தான் இந்த தொல்லியல் களம் அமைந்திருக்கிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் இந்தப் பகுதி ஒரு நகரமாக இருந்திருக்கலாம் என இங்கு கிடைத்த பொருட்களை கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியபோது தெரிய வந்தது. ஆனால், கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்தபோது வெளிவந்த கட்டடத் தொகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டால் படிவதைப் போன்ற மண் படிவங்கள் காணப்பட்டன. அந்தப் படிவங்களை ஆய்வுக்கு உட்படுத்த சில ஆய்வாளர்கள் முடிவெடுத்தனர். கீழடி பள்ளிச்சந்தை திடல் மேட்டில் தோண்டப்பட்ட இரண்டு ஆய்வுக் குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில்தான் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு குழிகளிலும் களிமண், நுண்ணிய வண்டல், மணல், சரளைக் கற்கள் ஆகியவை இருந்தன. மேலும் இந்தக் குழிகளிலும் கிடைத்த மண் படிவங்கள் பொதுவாக நுண்துகள்களாகவும் பல்வேறு வகைகளைக் கொண்டனவாகவும் இருந்தன. இந்த இரண்டு குழிகளிலும் மேற்பகுதியானது களிமண் படிவங்களால் மூடப்பட்டிருந்தது. இப்போது இந்த மண் படிவங்களைச் சேகரித்து, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தித்தான் கீழடி எப்போது கைவிடப்பட்டது, ஏன் கைவிடப்பட்டது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தக் குழிகளில் வேறு சில அம்சங்களும் தெரிய வந்தன. முதலாவது ஆய்வுக் குழியில் 50 செ.மீ. முதல் 170 செ.மீ. ஆழத்தில் திட்டமிட்டு கட்டப்பட்ட கட்டட அமைப்புகள் தென்பட்டன. ஒரே அளவிலான செங்கற்களால் கட்டப்பட்ட ஒரே மாதிரியான கட்டுமானங்களாக இவை இருந்தன. இதே குழியில் 2 மீட்டர் ஆழத்தில் உடைந்த கூரை ஓடுகளும் காணப்பட்டன. நீண்ட சுவர்கள், கால்வாய்கள் ஆகியவையும் தென்பட்டன. இந்தக் கால்வாய்கள் வெவ்வேறு அகலங்களைக் கொண்டிருந்தன. நுணுக்கமான களிமண்ணை வைத்து தரைத்தளங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. செங்கற்களால் கட்டப்பட்ட கட்டுமானங்களின் மீது நுண்ணிய வண்டல் - களிமண் படிவங்கள் காணப்பட்டன. இதன் அடிப்பகுதி கரடுமுரடான மணல் அடுக்குகளைக் கொண்டிருந்தது. இரண்டாவது அகழாய்வுக் குழியில் ஏராளமான பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள், களிமண் கலைப் பொருட்கள் ஆகியவை கிடைத்தன. அது பானை தயாரிக்கும் பகுதியாக இருந்திருக்கலாம் என்பதை இந்தப் பொருட்கள் சுட்டிக்காட்டின. இங்கும் வண்டல் - களிமண் படிவங்கள் காணப்பட்டன. ஆனால், முதல் ஆய்வுக் குழியோடு ஒப்பிட்டால், இங்கு படிவங்களின் தடிமன் அதிகமாக இருந்தது என்கிறது இந்த ஆய்வுக் கட்டுரை. இந்த இரண்டு ஆய்வுக் குழிகளிலும் கிடைத்த படிமங்கள் பெரும்பாலும் வண்டல் மண்ணாலும் களிமண்ணாலும் ஆனவையாக இருந்தன. சில வண்டல் படிவங்களின் இடையிடையே பானை ஓடுகளும் கிடைத்தன. முதலில், அதிக விசையுடன் மண் படிமங்கள் உருவான பிறகு, விசை குறைந்த நிலையில் அடுத்த நிலை படிங்கள் உருவானதை இது குறிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆய்வு எப்படி நடத்தப்பட்டது? கீழடியின் ஐந்தாம் கட்ட அகழாய்வில் - அதாவது 2019ஆம் ஆண்டு காலகட்டத்தில் - பள்ளிச்சந்தை திடல் மேட்டில் தோண்டப்பட்ட இரண்டு அகழாய்வுக் குழிகளில், வெவ்வேறு பண்பாட்டு அடுக்குகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஓஎஸ்எல் காலக்கணிப்புக்கு அனுப்புவதற்காக 0.8 மீட்டர், 1.5 மீட்டர், 2.8 மீட்டர், 3.9 மீட்டர் என வெவ்வேறு ஆழங்களில் மொத்தமாக நான்கு மாதிரிகள் சேரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் ஆமதாபாத்தில் உள்ள பௌதீக ஆராய்ச்சி ஆய்வகத்தின் Atomic, Molecular and Optical Physics Division-இல் உள்ள லுமினிசன்ஸ் ஃபிஸிக்ஸ் மற்றும் அப்ளிகேஷன் க்ரூப் ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. முதல் குழியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் OSL காலத்தைப் பொறுத்தவரை, 80 செ.மீ ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 670 (± 40) ஆண்டுகளாக இருந்தது. அதே குழியில் 1.5 மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 1,170 (± 60) ஆண்டுகளாக இருந்தது. இரண்டாவது குழியில் 2.9 (2.8) மீ ஆழத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியின் வயது 940 (± 70) ஆண்டுகளாக இருந்தது. 3.8 (3.9) மீட்டர் ஆழத்தில் கிடைத்த மாதிரியின் வயது 1,140 (± 70) ஆண்டுகளாக இருந்தது. "இந்த ஓஎஸ்எல் காலக் கணிப்பின்படி பார்க்கும்போது சுமார் 1,170 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் போன்ற தீவிர இயற்கை நிகழ்வுகளால் இந்தப் பகுதிகள் கைவிடப்பட்டு இருக்கலாம். இது படிப்படியாக நிகழ்ந்திருக்கலாம்," என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்களில் ஒருவரான எஸ். சத்தியசீலன். பட மூலாதாரம்,keeladimuseum.tn.gov.in படக்குறிப்பு,கீழடி அகழாய்வுத் தளம் - வான்வழிப் பார்வை அந்த காலகட்டத்தில் வைகை நதி எப்படி இருந்தது? அந்தக் காலகட்டத்தில் வைகை நதியின் போக்கு எவ்வாறு இருந்தது என்பதையும் இந்த ஆய்வுக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. பனியுகத்திற்குப் பிந்தைய ஹோலோசீன் காலகட்டத்தின் பிற்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தின் காலநிலை நிலையானதாக இருக்கவில்லை என்றும் தென்னிந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் ஏற்ற இறக்கமான காலநிலை சூழலை எதிர்கொண்டன என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. அந்தக் காலகட்டத்தில் வைகை ஆற்றல்மிக்க நதியாகவும் பரந்த வடிநிலப் பகுதிகளையும் வெள்ளச் சமவெளி பகுதிகளையும் கொண்டிருந்ததாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. "வைகை நதி பல முறை தனது பாதையை மாற்றியுள்ளது. பூமியின் மேல் ஓட்டில் ஏற்பட்ட மாற்றங்களாலும் வெள்ளப் பெருக்கின் காரணமாகவும் இந்தப் பாதை மாற்றங்கள் நடந்துள்ளன. இதுபோல நதி தனது பாதையை மாற்றுவதும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளங்களும் 1,250 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ந்து நடந்தன. இதனால், நதிக் கரையோரம் இருந்த குடியிருப்புகள் அழிந்தன. அதன் அடிப்படையில் பார்க்கும்போது தற்போது கிடைத்துள்ள ஓஎஸ்எல் காலக்கணிப்பு (1,170 ஆண்டுகளுக்கு முன்) வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட காலத்தையும் குடியிருப்புகள் அழிந்த நிகழ்வையும் அதன் மீது வெள்ளப் படிமங்கள் ஏற்பட்ட காலத்தையும் குறிக்கிறது" என்கிறார் சத்தியசீலன். கீழடியைப் பொறுத்தவரை, ஆரம்பக் காலத்தில் குடிசைகளில் இருந்து குடியிருப்புகள் துவங்கியிருக்க வேண்டும் என்கிறார் அவர். "பிறகு அங்கு கட்டடங்கள் கட்டப்பட்டு, அது ஒரு நகரமாகியிருக்க வேண்டும். அந்தப் பகுதியில் நடந்த அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்துப் பார்க்கும்போது மிகச் செழிப்பான விவசாயம் நடந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. இந்தப் பகுதி கைவிடப்பட்டதைப் பொறுத்தவரை, அது ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்காது, படிப்படியாக நடந்திருக்கும். அங்கிருந்த மக்கள், வட பகுதியில் ஆறு ஓடியதால் மற்ற மூன்று திசைகளில் நகர்ந்திருக்க வேண்டும்" என்கிறார் சத்தியசீலன். ஆகவே, 1,170 - 1140 ஆண்டுகளுக்கு முன்பு வைகையில் ஏற்பட்ட வெள்ளங்களின் விளைவாக இங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து நகர்ந்துள்ளார்கள் என்கிறது இந்தப் புதிய ஆய்வு. இதனால், அங்கிருந்த குடியிருப்புகள் அழிந்து அதன் மீது வெள்ளத்தால் ஏற்பட்ட மண்ணும் வண்டலும் படிந்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgx04z36ypo
-
அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டு செயற்பாடு. அண்ணை, பயனாளிகளுடன் கதைக்க தேவையில்லை. சரியான பயனாளியின் வங்கி விபரம் தந்தால் அதற்கு பணத்தை வைப்புச் செய்யலாம்.
-
400 ஆண்டுகளுக்குப் பிறகு டென்மார்க் அஞ்சல் சேவை கடிதங்களை விநியோகிப்பதை நிறுத்தவுள்ளது.
முடிவுக்கு வந்தது டென்மார்க்கின் தபால் சேவை பாரம்பரியம்! 03 Jan, 2026 | 08:46 AM டென்மார்க்கில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த தபால் சேவை பாரம்பரியம் அந்நாட்டுத் தபால் நிர்வாகத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டென்மார்க்கில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் 30 ஆம் திகதியுடன் கடிதங்களை விநியோகிப்பதை நிறுத்தவும், நாடு முழுவதும் உள்ள 1,500 சிவப்பு நிறத் தபால் பெட்டிகளை அகற்றவும் அந்நாட்டுத் தபால் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மக்கள் தற்போது தகவல்தொடர்பு மற்றும் ஆவணப் பரிமாற்றங்களுக்கு இணையவழி முறைகளை அதிகம் பயன்படுத்துவதால், பாரம்பரிய தபால் சேவையின் பயன்பாடு குறைந்துள்ளதே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/235087
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வடவர் குல்சா
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண் மையேந்தும் விழியாட படம் :பூஜைக்கு வந்த மலர் இசை: விசுவநாதன் - ராமமூர்த்தி வரிகள்: வாலி பாடியோர்: PB சீனிவாஸ் & P சுசிலா
-
திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை : 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு கடற்கரையில் நடைபெற்றது
திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த புத்த பிக்கு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்: அந்த பிக்குவை நான் நேரில் சந்தித்தவன் திருகோணமலை ஐந்து தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிராக பொதுவெளியில் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்த புத்த பிக்கு ஹந்துங்கமுவே நந்தரதன பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். மாணவர்கள் கொலை செய்யப்பட்டதற்கான நினைவேந்தல் நிகழ்வில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் உருவான தருணத்தில் நானும் அங்கு இருந்தேன். சமாதானம், நல்லிணக்கம், மொழி மத எல்லைகளைத் தாண்டிய மனித உறவை உருவாக்க வேண்டிய பணிகளில் அவர் ஈடுபட்டிருந்ததை நான் நேரடியாகக் கண்ட அனுபவம் உண்டு. அவர் சிங்களமும் தமிழும் பேசக்கூடியவர். மாணவர் படுகொலைக்கு எதிரான நினைவேந்தல் நிகழ்வுகளிலும், பொங்குத் தமிழ் பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு சமூக ஒற்றுமையை வலியுறுத்தினார். பின்னர் மிக விரைவாகவே, சிங்கள மொழி பேசும் துப்பாக்கி தாரிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உண்மையை வெளியில் கொண்டு வர துணிந்தவர்களை மௌனப்படுத்தும் அரசியல் வன்முறையின் தொடர்ச்சியாகவே இந்தக் கொலை எனக்குத் தென்பட்டது. அவருடைய மரணம், திருகோணமலை மாணவர் படுகொலையின் உண்மையை மறைக்க அதிகாரத்தால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை வெளிப்படுத்தும் சம்பவமாக இருக்கின்றது . இன்றுவரை இந்தக் கொலைக்கான உண்மையான பொறுப்பாளர்கள் யாரும் நீதிமுன் நிறுத்தப்படாதது இன்னும் வேதனை அளிக்கிறது. Trincomalee Five Student Massacre Buddhist Monk Who Condemned the Killings Was Shot Dead: I Am Someone Who Met Him in Person The Buddhist monk Handungamuwe Nandarathana, who publicly and openly condemned the killing of the five Tamil students in Trincomalee, was later shot dead. I have met that monk in person. I was also present at the moment when these photographs were taken during the memorial event held for the murdered students. I personally witnessed his commitment to peace, reconciliation, and building human relationships that transcended linguistic and religious divisions. He was able to speak both Sinhala and Tamil. He participated in memorial events held in protest of the student killings and attended Pongu Thamil gatherings, consistently emphasising the need for social unity. Soon afterwards, he was shot dead by Sinhala-speaking gunmen. To me, this killing clearly appeared as part of the continuum of political violence aimed at silencing those who dared to speak the truth. His death stands as powerful evidence of how far the authorities were willing to go to conceal the truth behind the Trincomalee student massacre. Even today, the fact that no genuine perpetrators have been brought before justice continues to cause deep pain. https://www.facebook.com/share/p/1CEX5wNyoe/
-
நான் ரசித்த விளம்பரம் .
கெஜம் முழம் அடி அங்குலம் காதம் என்று நீட்டல் அளவைகளை மக்கள் பயன்படுத்திய காலத்தில் வந்த அரசு அறிவிப்பு இது! 1955ம் ஆண்டில் நீட்டல் அளவைகளுக்கு பொதுவான வழிமுறையாக மெட்ரிக் அளவைகளை பயன்படுத்த அரசு மக்களுக்கு பரிந்துரை செய்தது!
-
பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- மலரும் நினைவுகள் ..
இதில் எத்தனை சுவைத்து இருப்பீர்கள் .. விடுபட்டவை எவை ரெல் மீ..?- நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
களத்திற்கு கொசு மருந்து அடிக்கவேணும், கொசு பெருகி தொல்லை தாங்க முடியவில்லை. இது தென்பகுதியில் இருந்து வந்த கொசுபோல் தெரிகிறது, விளங்காத கிணுகிணுப்பு. - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.