Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்! 1 Jan 2026, 8:53 PM மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் எப்போது வரும் என்று இன்னும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப் போர் வந்து நடந்து முடிந்து பதினாறு வருடம் ஆகி விட்டது. அந்தப் போரில்தான் ஈழம் அழிக்கப்பட்டது. தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன. ஐ நா சபையிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறை செயலர் பதவிகளிலும் , இலங்கை ராணுவ ஆலோசனை பதவிகளிலும் மலையாளிகள் உட்கார்ந்து , ஒரு பக்கம் தமிழ் நாட்டில் மாய்மாலம் செய்து பிழைத்துக் கொண்டே . தமிழினத்துக்கு எதிராக அவிழ்த்துப் போட்டார்கள். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்போதும் இருப்போம் என்று வரலாற்றுப் புத்தகங்களை வழித்து நக்கிக் கொண்டிருக்கும் கியூபா, இலங்கைக்கு உதவி செய்ததன் மூலம் நியாயம் துறந்து அம்மணமாக நின்றது . பிரபாகரன் முன்பு பிச்சைக்காரன் ஆனான் பிடல் காஸ்ட்ரோ. இத்தனை ஈன தேசங்கள், ஈனப் பிறவிகள் தமிழினத்தின் மானத்தோடு விளையாடிய அதுதான் மூன்றாம் உலகப்போர். இனி ஒரு போர் வந்தால் அது நான்காம் உலகப் போர். உலகமே எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் மானத்தோடு மனசாட்சியோடு போர் அறத்தோடு களமாடி தோற்றாலும், வரலாற்றில் வென்று, அந்த அநியாயத்துக்கு துணை போன தேசங்கள் ஒவ்வொன்றும் தனக்கு முகத்தில் தாங்களே காறி உமிழ்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கி வரலாற்றில் நிலைத்தது விடுதலைப் புலிகள் அமைப்பு. குறைகளே இல்லாத அமைப்பு அல்ல அது. ஆனால் அதை விட சிறப்பான ஓர் இனப் போராளிகள் குழுவை இந்த உலகம் கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. தனது படையில் இருந்த கடைசி வீரனின் உயிரும் தனது மனைவி மகன்களின் உயிரும் ஒன்று என்று எண்ணிய ஒரு போராளி (வஞ்சகர்கள் பார்வையில் தீவிரவாதி; பயங்கரவாதி) இந்த உலகத்தில் இருந்தான் என்ற உண்மையை, இனி நீங்கள் கற்பனையில் சொன்னாலும் இந்த உலகம் நம்பாது. லாஜிக்கா இல்லையே என்று சொல்லி விட்டு நகர்ந்து விடும். ஒரு நாடே ஓர் பெரும்பான்மை இனமே, சுற்றி வளைத்து நிராயுதபாணிகளை ஆயுதத்தால் கொன்று பெண்களை எல்லாம் சீரழித்து அழிக்கும் வன்முறையில் வெறியாட்டம் ஆடிய நிலையில், அண்டை நாடுகள் எல்லாம் வக்கிரத்தோடு வேடிக்கை பார்த்த சூழலில், புலிகள் படையில் காயம்பட்ட போராளிகளை மீட்டு, எந்த வசதிகளும் இல்லாத நிலையில், தரையில் தோண்டப்பட்டு உருவாக்கப்பட்ட – பங்கர்கள் எனும் – அடிப்படை வசதிகள் கூட இல்லாத, சிறிய, மண் சுரங்க அறைகளில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் அந்த போராளிகளை மீட்க, உயிரைப் பணயம் வைத்து, பசி பட்டினி கிடந்து, குடும்பத்தை இழந்து வாழ்வை இழந்து, போராளிகளைக் காப்பாற்றிய, விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் பணி எப்படிப்பட்டது என்பதை சொல்லும் படம் இது. ஆம். விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவ அணியின் பெயர் சல்லியர்கள். சிங்கள மிருகங்களால் அம்மா, அப்பா, உறவுகள், காதல், பாசம் வீடு, வாசல், சொத்து சுகம் இழந்து, எங்கெங்கோ போய் ஒரு வழியாக மருத்துவம் படித்து… அயல்நாட்டுக்கு போய் மருத்துவம் பார்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற சூழலில் அதை விட்டு விட்டு… தாய் மண்ணை மீட்கும் போராளிகளைக் காப்பற்ற ஈழம் வந்து…. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து… தங்கள் மேல் அதிக ஆத்திரத்தோடு குறி வைக்கும் சிங்களப் படையினரை சமாளித்து, பணியாற்றிய மாவீர மருத்துவர்கள் இந்த சல்லியர்கள். எத்தனை சிலுவைகளைப் போட்டாலும் இந்த சல்லியர்கள் சுமந்த சிலுவைகளை செஞ்சிலுவைச் சங்கம் கூட சுமந்தது இல்லை. எனினும் ஒருவன் அடிபட்டு உயிருக்கு ஆபத்து என்று வந்தால் அவன் யாராக இருந்தாலும் ஒரு மருத்துவர் என்ன செய்ய வேண்டும்? அதில் இந்த சல்லியர்கள் எவ்வளவு தெய்வத்தன்மையோடு இருந்தார்கள்… அதன் விளைவு என்ன? என்பதே இந்தப் படம். இன உணர்வு இல்லாவிட்டாலும் கூட, மனசாட்சி உள்ள, சாப்பாட்டில் கிரிஸ்டல் சேர்த்துக் கொள்கிற எல்லோரும் கூட, இந்த படத்தைப் பார்த்தால் நெகிழ்ந்து போவார்கள். அப்படி ஒரு கதை. அப்படி ஒரு களம். ஓர் இயக்குனராக மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் கிட்டு. தன்னை மேதகு முதல் பாகத்திலேயே நிரூபித்தவர் அவர். கதை நிகழும் பின்புலம், லொகேஷன்கள், ஷாட்கள், ஃபிரேம்கள், படத்துக்கு அவர் கொடுத்து இருக்கும் டோன் எல்லாம் அபாரம். நடிக நடிகையர் தேர்வு, அவர்களுக்கான கெட்டப் எல்லாம் அபாரம். சின்னச் சின்ன நடிகையர்களைக் கூட பொருத்தமாக தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு போராளியின் உயிரைக் காப்பாற்ற, ஒரு சல்லியர் மருத்துவர் ரத்தம் கொடுத்து விட்டு பட்டினியோடு அந்தப் போராளிக்கு, அறுவை சிகிச்சை செய்யும் பணியில், அந்த குண்டுக் காயம் பட்ட இடத்தைச் சுற்றி அந்த மருத்துவர் ஆட்காட்டி விரலால் அழுத்திச் சுழற்ற, அதே நேரம் சிங்கள ராணுவ முகாம் அதிகாரி ஒருவர், தான் சுகமாக அருந்தும் கோப்பைக்குள் விரலை விட்டு ஆள்காட்டி விரலால் சுழற்றும் காட்சியை, டிரான்சிஷன் செய்து ஒப்புமைப்படுத்திக் காட்டும் இடம், இயக்குனருக்கு மகுடம். ரிக்ஷாக்காரன் படத்தில் ”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…” பாட்டில் எம் ஜி ஆர் பாதிக்கப்பட்ட குழந்தையின் புன் சிரிப்பை ரசித்துக் கொண்டிருக்க, அயோக்கியக் கூட்டம் ஆடிப் பாடிக் குடித்துக் கொண்டு ஆபாச நடனம் பார்த்துக் கொண்டு ஆணவச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும். அதற்கு இணையான காட்சி, சல்லியர்கள் படத்தில் வரும் இந்தக் காட்சி. சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு ஒரு படிம ஓவியம் போல படத்துக்கு உயிர் கூட்டுகிறது. கென் மற்றும் ஈஸ்வரின் இசை, இளங்கோவனின் படத் தொகுப்பு இரண்டும் நேர்த்தியான பங்களிப்பை செய்துள்ளன. முஜிபுர் ரஹ்மானின் கலை இயக்கம், பூங்குயில் கிட்டுவின் ஆடை வடிவமைப்பு இரண்டுக்கும் நூற்றுக்கு நூறு மார்க். சிகையலங்காரமும் சிறப்பு. சற்றே துருத்திக் கொண்டு தெரிந்தாலும் அப்துலின் மேக்கப்பும் பல இடங்களில் அசத்துகிறது. நாயகியாக பெண் மருத்துவராக நடித்திருக்கும் சத்யா தேவியிடம் எல்லோரும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும்.கேட்காமல் விட்டு விடாதீர்கள். “உண்மையை சொல்லுங்கள். நீங்கள் விடுதலைப் புலிகள் படையில் எத்தனை நாள் பயிற்சி எடுத்தீர்கள். எத்தனை நாள் சல்லியர்கள் அமைப்பில் பணியாற்றினீர்கள். இல்லவே இல்லை என்று எல்லாம் பொய் சொல்லக் கூடாது” அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பு.. இல்லை இல்லை.. இருத்தல்.. இல்லை இல்லை அதுவாகவே ஆதல். அற்புதம் சத்ய தேவி. வாழ்க. வளர்க, சக மருத்துவராக வரும் மகேந்திரனும் அப்படியே சிறப்பாக நடித்துள்ளார். படமாக்கல் அளவுக்கு திரைக்கதை பலமாக இல்லை. சல்லியர்கள் வாழ்வு, இலங்கை ராணுவத்தின் கொடுமைகள், போராளிகளின் தனிப்பட்ட வாழ்வு இழப்புகள் இவற்றில் எதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து, எதை எந்த அளவில் சொல்வது என்பதில் தெளிவின்மை காரணமாக, ஒன்றை இடித்துக் கொண்டு வந்து இன்னொரு விஷயம் நிற்கிறது. அதேபோல இந்தப் படத்தில் முக்கியமாக வலியுறுத்தப்படும் விஷயம் சிங்கள ராணுவத்தில் யாருக்கு நடக்கிறது என்ற விஷயத்தைக் கூட இன்னும் தீவிரமாக யோசித்து இருக்கலாம். அப்படி சொன்னால் அதில் தவறும் இருக்காது. சிங்கள அரசியல் தலைவர் ஒருவரின் மகன் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க யாழ்ப்பாணம் வருகிறான். ”சுட்டு விடுவோமா?” என்று கேட்கப்பட்ட போது,” நல்ல விசயத்துக்கு வருகிறான். இப்போது சுட்டால், நாம் விளையாட்டுக்கு எதிரான இயக்கம் என்று ஆகிவிடும். வேண்டாம் “என்றார் பிரபாகரன். ஆனால் அவன்தான் பிரபாகரன் இறந்த பிறகு யாழ்ப்பாணம் முழுக்க சாராயக் கடைகளைத் திறந்து போதை ஆற்றை ஓட விட்டான். எனவே அந்த சிங்கள கதாபாத்திரம் எது என்பதில் இன்னும் இறங்கி அடித்திருக்கலாம். அதே போல ரத்தம் சேகரிக்கப்பட்டு இருக்கும் பைகளை, சிங்கள ராணுவ அதிகாரி காலால் மிதித்து உடைப்பதை பெண் மருத்துவர் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவர் யோசிக்கும் போது,அந்தக் காட்சி அவருக்கு விஷுவலாக வருகிறது. அது பொருத்தமாக இல்லையே. ‘இல்லை இல்லை.. நடந்த விஷயத்தை அவர் இமாஜினேஷன் செய்கிறார்..’ என்று ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால் கூட, நடந்த சம்பவத்தில் மருத்துவர் இமாஜின் செய்து பார்க்க, அம்மா அப்பா கொல்லப்படுவது முதல் இதை விட முக்கிய சம்பவங்கள் அந்தக் காட்சியிலேயே இருக்கு, எனவே அப்போதும் பொருத்தமாக இல்லை. இப்படி சில குறைகள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதை, சூழல், படமாக்கல், நடிப்பு, கருத்தியல், போன்ற வகைகளில் உயர்ந்து நிற்கிறது படம். ஒவ்வொருவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் சல்லியர்கள்.. கண்ணீரும் ரத்தமும்.. மகுடம் சூடும் கலைஞர்கள் சத்ய தேவி, கிட்டு. https://minnambalam.com/salliyargal-tamil-film-review-2026/
  3. நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்! நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் ரெஜிபோம் பெட்டிகள் உட்பட சந்தேகத்திற்கிடமான பொருட்களும் காணப்பட்டுள்ளன. இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதுடன் ஆட்டு இறைச்சி போன்று நாய் இறைச்சி விற்பனை செய்த சம்பவங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458027
  4. பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்! 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை, சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற் கொண்டு, பாடசாலைக் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கள் வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைவாக அமைவாக, 2026 ஆம் ஆண்டில் 05 – 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் காலை 07.30 மணி முதமல் பிற்பகல் 01.30 மணிவரை மாற்றமின்றி தொடரும். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதல் தவணைக்காக ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. தரம் 06 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடசாலை வேளைகளின் எண்ணிக்கை 07 ஆகும். ஒரு பாடசாலை வேளைக்காக ஒதுக்கப்பட்ட நிமிடங்கள் 45. 2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்படும். கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் கீழ், தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2026 ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. தரம் 1 இற்கான மாணவர்களை அறிமுப்படுத்தும் செயற்பாடு 2026 ஜனவரி 05 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், உத்தியோகப்பூர்வமாக கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும். தரம் 1 இற்குரிய செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் தரம் 6 இற்குரிய கற்றல் தொகுதிகள் (Learning Modules), அந்தந்த தரங்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தரங்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் இதுவரையில் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன. 2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி 12 முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது. இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 02 ஆம் திகதி வெளியிடப்படும். https://athavannews.com/2026/1458060
  5. சுவிஸ் மதுபான விடுதி தீ விபத்து; 40 பேர் உயிரிழப்பு, 115 பேர் காயம்! சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஆடம்பர மதுபான விடுதியின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள ஒரு ஸ்கை ரிசார்ட்டில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் மேலும் 115 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பரலது நிலை கவலைக்கிடமாக இருப்பதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள லு கான்ஸ்டெல்லேஷன் என்ற மதுபான விடுதியின் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நள்ளிரவு 01:30 மணியளவில் (GMT 00:30) இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தை விசாரித்த அதிகாரிகள் விபத்துக்கான உறுதியான காரணத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், இது திட்டவட்டமான தாக்குதல் அல்ல என்பதை உறுதிபடுத்தினர். விபத்தில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வரும் நாட்களில் இறந்தவர்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிராந்திய காவல்துறை அதிகாரி பிரடெரிக் கிஸ்லர் கூறினார். இதனால் உயிரிழந்தவர்களின் உடல்கள் விரைவாக அவர்களது குடும்பங்களுக்குத் திருப்பி அனுப்பப்படும். தீ விபத்தின் பின்னர் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான வாலாய்ஸ் பகுதிக்கு 13 ஹெலிகொப்டர்கள், 42 அம்பியூலன்ஸ்கள் மற்றும் 150 அவசரகால உதவியாளர்கள் இரவு முழுவதும் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அழகிய சுவிஸ் ஆல்ப்ஸின் மையத்தில் அமைந்துள்ள கிரான்ஸ்-மொன்டானா, மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். https://athavannews.com/2026/1458068
  6. ஈரானில் அதிகரிக்கும் வன்முறை; பலர் உயிரிழப்பு! அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டங்களில் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (01) ஈரானில் தொடர்ந்த அமைதியின்மையால் அதிக உயிர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் இறந்ததாக ஈரானிய ஊடக நிறுவனமான Fars news நிறுவனமும் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவும் தெரிவித்தன. மேலும், நாட்டின் மேற்கில் உள்ள அஸ்னாவில் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் ஒருவரும் உயிரிழந்தாக Fars news குறிப்பிட்டுள்ளது. வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களின் போது வாகனங்கள் தீக்கிரையாக்கப்படுவது வெளிப்படுத்தப்பட்டது. பல போராட்டக்காரர்கள் நாட்டின் உச்ச தலைவரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளனர். சிலர் முடியாட்சிக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்துள்ளனர். அமைதியின்மையைத் தணிக்கும் முயற்சியாக அதிகாரிகள் வங்கி விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை (டிசம்பர் 31) நாடு முழுவதும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மூடப்பட்டன. திறந்த சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் இந்த போராட்டம் தெஹ்ரானில் வெடித்தது. 2022 ஆம் ஆண்டு மஹ்சா அமினி என்ற இளம் பெண் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இறந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சிக்குப் பின்னர் இந்த போராட்டங்கள் மிகவும் பரவலாக உள்ளன. https://athavannews.com/2026/1458113
  7. Today
  8. இந்த வளமும் எனதே, மண்ணும் எனதே! sudumanal வெனிசுவேலாவை சூழும் போர் மேகம் Thanks for image: deutschlandfunk. de இன்றைய இன்னொரு போர்ச் சூழல் கரீபியன் கடலில் தகிக்கத் தொடங்கி சில வாரங்களாகின்றன. வெனிசுவேலா மீது அமெரிக்கா சிலுப்பிக் காட்டுகிற போர் அரசியல்தான் அது. ட்றம்ப் இன் முதல் ஆட்சிக் காலகட்டத்தில் (2017-2021) வெனிசுவேலா மீதான ட்றம்பின் கழுகுப் பார்வை விழுந்தது. வெனிசுவேலாவுக்கு எதிரான பாரிய பொருளாதாரத் தடைகள் 2017 இல் அறிவிக்கப்பட்டன. வெனிசுவேலா பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியது. மீண்டும் ஏழ்மை பெரும் பகுதி மக்களை படிப்படியாக அழுத்தத் தொடங்கியது. அது பைடன் காலத்திலும் தொடர்ந்தது. இப்போ ட்றம்ப் இன் இரண்டாவது ஆட்சிக் காலம் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்பதுபோல், இன்றைய நெருக்கடி தோன்றியிருக்கிறது. ட்றம்ப் இன் இறுதி இலக்கு வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை மீண்டும் கைப்பற்றி கொள்ளை அடிப்பதுதான். உலகத்திலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடாக வெனிசுவேலா இருக்கிறது. 1900 களில் இருந்து கால்பதித்த சர்வதேச எண்ணெய்க் கம்பனிகள் காசு பார்க்கத் தொடங்கியிருந்தன. 1972 இல் அன்றைய வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக இருந்த Carlos Andres Perez அவர்கள் பெற்றோலிய உற்பத்தியை தேசியமயமாக்கம் செய்தார். அப்போது எண்ணெய் உற்பத்தியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மேற்குலக நாடுகளில் பிரித்தானியா-டச்சு பல்தேசியக் கம்பனியான SHELL உம், அமெரிக்காவின் Texaco, Exxon, Chevron போன்ற பரகாசுரக் கம்பனிகளும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். வேறும் பல கம்பனிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்தன. சமாதான முறையில் பேசித் தீர்க்கப்பட்டு, தேசியமயமாக்கம் கம்பனிகளின் ஒப்புதலுடன் நடந்தேறியது. 1.3 பில்லியன் நட்ட ஈடாகவும் வழங்கப்பட்டது. என்றபோதும் சில கம்பனிகள் தாம் எதிர்பார்த்த நட்ட ஈடு கிடைக்கவில்லை என்ற திருப்தியின்மையுடன் இருந்தன. இந்த தேசிய மயமாக்கலின்போது PDVSA என்ற அரச எண்ணெய்க் கம்பனியை வெனிசுவேலா அரசு உருவாக்கியது. இது எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, எண்ணெய் வளக் கண்டுபிடிப்புகள், ஏற்றுமதி என எல்லாவற்றுடனும் தொடர்புபட்டிருந்தது. 1998 இல் வெனிசுவேலாவில் சாவோஸ் (Hugo Chavez) ஆட்சிக்கு வந்தார். கியூபாவாலும் சோசலிசத்தாலும் ஈர்க்கப்பட்ட அவர் வெனிசுவேலாவை சோசலிசக் கூறுகளுடன் மாற்றியமைத்தார். 2007 இல் அவர் எல்லா எண்ணெய்க் கம்பனிகளின் மீதான PDVSA இன் கட்டுப்பாட்டை 60 வீதமாக அதிகப்படுத்தினார். Chevron (USA),Total (France), Statoil (Norway), BP (UK) கம்பனிகள் அதை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து இயங்கின. உடன்பாடின்மை கொண்ட அமெரிக்காவின் Exxon, Conoco Phillips கம்பனிகள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறின. சாவேஸ் எல்லா கம்பனிகளினதும் சொத்துகளையும் கட்டுமானங்களையும் அரச உடைமை ஆக்கினார். 2005 இலிருந்து வெனிசுவேலாவின் சில தனிநபர்கள் மீதான ஆரம்பநிலை பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிக்கத் தொடங்கியது. சாவேஸை ஆட்சியிலிருந்து கவிழ்க்க சிஐஏ செய்த சதிகள் வெற்றிபெறவில்லை. 2000 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் பீப்பாக்களை வெனிசுவேலா உற்பத்தி செய்தது. எண்ணெய் ஏற்றுமதியால் வந்த பணத்தை சமூக நலத் திட்டங்களுக்கு சாவேஸ் செலவிட்டார். அதன்மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். 2013 மார்ச் இல் தனது மரணம் நிகழும்வரையான ஆட்சிக்காலத்துள் 70 வீதமாக இருந்த ஏழ்மையை வெறும் ஏழு வீதமாக குறைத்தார். ஒன்பது மில்லியன் குடும்பங்களுக்கு வீடுகள் சொந்தமாகக் கிடைத்தன. அப்போது சாவேஸின் வலது கரமாக இருந்தவர்தான் -ஒரு பஸ் சாரதியான- நிக்கொலாஸ் மடுரோ. 2013 இல் மடுரோ தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆனார். மடுரோவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையாலும் பெரும் எண்ணெய்க் கம்பனிகளின் வெளியேற்றத்தாலும் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி காணத் தொடங்கியிருந்தது. மடுரோவின் ஆட்சித் திறமையின்மையும் காரணம் என சொல்லப்படுகிறது. 2000 களில் நாளொன்றுக்கு 3 மில்லியன் பரல்களாக இருந்த எண்ணெய் உற்பத்தி 2024 இல் எட்டு இலட்சத்துக்கு குறைவாக வீழ்ச்சி கண்டது. 2017 இல் முதல் கட்டமாக ஆட்சிக்கு வந்த ட்றம்ப் தமது எண்ணெய் கம்பனிகளுக்கும் அமெரிக்காவுக்கும் வெனிசுவேலா அநீதி இழைத்துவிட்டதாக சொல்லி, வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையை பாரிய அளவில் செயற்படுத்தினார். அது வெனிசுவேலாவினை மோசமாகப் பாதித்தது. எண்ணெய் ஏற்றுமதி மேலும் வீழ்ச்சி கண்டது. ஏழ்மை மீண்டும் அதிகரித்தது. பெருமளவான அகதிகள் அல்லது குடியேற்றவாசிகள் வெனிசுவேலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் வரத் தொடங்கினர். ட்றம் 2021 இல் போனார். பைடன் வந்தார். ட்றம்ப் 2025 இல் மீண்டும் வந்தார். வெனிசுவேலாவின் நிலைமை அப்படியே தொடர்ந்தது. வெனிசுவேலாவிலிருந்து பெருந்தொகையானவர்கள் அமெரிக்காவுக்குள் வருகிறார்கள். அவர்கள் கிரிமினல்கள், சிறைக் கைதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் என்றார். அதைத் தடுக்க வேண்டும் என கரீபியன் கடலில் முதலாவது கடற்படைக் கப்பலை விட்டார். பிறகு சுருதியை மாற்றி வெனிசுவேலாவிலிருந்து பெருந்தொகை போதைப் பொருள் அமெரிக்காவுக்குள் கடத்தப்படுகிறது, வெனிசுவேலா அரசு இலட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மரணத்துக்கு காரணமாக இருக்கிறது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானம் தாங்கிக் கப்பலையும் அதில் 15000 இராணுவத்தனரையும் ஏற்றினார். 40 க்கு மேற்பட்ட சிறு படகுகளும் அதில் பயணித்த சுமார் 80 க்கு மேற்பட்டவர்களும் கரீபியன் கடலில் அடுத்தடுத்து குண்டுவீசி தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அந்தப் படகில் இருந்தது என்ன, போதைப்பொருள்தானா என்ற எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. படகுகளை மறித்து சோதனை செய்யவுமில்லை. அதிலிருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படவுமில்லை. குண்டுகள் அவர்களை படகோடு எரியூட்டின. அதெல்லாம் மீன்பிடிப் படகுகள் என வெனிசுவேலா சொல்கிறது. எந்த ஆதாரமும் ட்றம்புக்கு தேவைப்படவில்லை. ஏனெனில் அவரது கரிசனையில் குடிபெயர்வாளர்களுமில்லை. போதைப் பொருளுமில்லை. ஒபாமாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கொண்டுராஸ் இன் முன்னாள் ஜனாதிபதி Juan Orlando 2019 இல் நியுயோர்க் நீதிமன்றத்தால் ஆயுட்கால சிறைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டவர். 400 தொன் போதைப் பொருளை அமெரிக்காவுக்குள் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2022 இல் அவர் (பதவிக் காலம் முடிந்தபின்) அமெரிக்காவால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து இப்போ ட்றம்ப் ஆலோசித்து வருகிறார். போதைப்பொருளுக்கு எதிராக போராடும் மக்கள் தலைவர் ட்றம்பின் அழகு இதுதான். ஆக வெனிசுவேலாவுக்கு எதிரான சண்டித்தனத்துக்கு போதைப்பொருள் குற்றச்சாட்டை வைக்கும் அவரது சமூகப் பொறுப்பு புல்லரிக்காமல் என்ன செய்யும். இப்போ நேரடியாகவே விசயத்துக்கு வந்திருக்கிறார். “வெனிசுவேலாவின் எண்ணெய் வளமும் எனதே. இயற்கை வளமும் எனதே. அந்த நிலமும் எனதே” என வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டார். “அமெரிக்க எண்ணெய் கம்பனிகளை சட்டத்துக்கு புறம்பான வழியில் நாட்டிலிருந்து ‘கம்யூனிஸ்ட்’ சாவேஸ் இன் அரசாங்கம் வெளியேற்றி கொள்ளையடித்தது. அமெரிக்காவை ஏமாற்றியுள்ளது” என குமுறுகிறார். ஆக அவரது இலக்கு அந்த வளத்தை களவெடுப்பதுதான். இதை சாதிக்க அவர் முதலாவதாக தேர்ந்தெடுத்திருக்கிற வழி ஆட்சிமாற்றத்தை ஒரு சதிப்புரட்சியின் மூலம் அடைவது. ஏற்கனவே இந்த வழியை சாவேஸ் அரசாங்கத்துக்கு எதிராக பல முறை செய்து தோற்றது சிஐஏ. பிறகு 2018 இல் இராணுவ அணிவகுப்பு நடந்துகொண்டிருந்த நிகழ்வில் வைத்து இப்போதைய ஜனாதிபதி மடுரோவை ட்றோண் தாக்குதல் மூலம் கொல்ல முயற்சிசெய்து தோற்றது. இப்போ மீண்டும் இன்னொரு முயற்சியில் இறங்கியிருக்கிறது. சிஐஏ வெனிசுவேலாவுக்குள் சென்று சதியில் இறங்க, அதற்காகச் செயற்பட அனுமதியளித்து ஏற்கனவே ட்றம்ப் கையொப்பமிட்டிருந்தார். இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற மரியா கொரீனாவை ஆட்சிக்கு கொண்டுவர சிஐஏ நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. இவர் அமெரிகக் கம்பனிகளுக்கு வாயிலைத் திறந்து தடங்கலற்ற களவை செய்ய அனுமதிக்க தயாராக இருப்பவர். அத்தோடு அவர் சியோனிச இஸ்ரேலிய அரசின் ஆதரவாளர். ஆனால் மடுரோ பலஸ்தீனத்தை அங்கீகரித்ததோடு, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருபவரும் ஆவார். அதனால் நெத்தன்யாகு உட்பட சியோனிஸ்டுகள் மடுரோவை வீழ்த்தி மரியா கொரீனாவை ஆட்சியிலமர்த்துவதை ஊக்குவிக்கின்றனர். மடுரோ நாட்டைவிட்டு வெளியேறி ரசியாவுக்கு குடும்பத்துடன் செல்ல நவம்பர் 30 வரை காலக்கெடு விதித்தார் ட்றம்ப். மடுரோ மறுத்துவிட்டார். இப்போ காலக்கெடு முடிந்துவிட்டது. தனது அடிவருடி ஆட்சியை அங்கு நிறுவி மீண்டும் வெனிசுவேலாவின் முழு எண்ணெய் வளத்தையும் கொள்ளை அடிப்பது இலகுவான வழிமுறை என அவர் நம்புகிறார். ஆட்சிமாற்றத்துக்கான நியாயமாக ஒரு கதையாடலை அவர் உருவாக்குகிறார். “மடுரோ ஒரு சர்வாதிகாரி, அமெரிக்காவுக்குள் குடியேற்றவாசிகள் மூலம் பயங்கரவாதத்தை கடத்துகிறார். தூளைக் கடத்துகிறார். வெனிசுவேலாவில் ஜனநாயகம் இல்லை. வெனிசுவேலாவில் மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள். அவருக்கு மக்கள் ஆதரவு கிடையாது” என்று அவரது பட்டியல் நீள்கிறது. மடுரோவின் ஆட்சியை பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை என்று என்று புலம்பெயர்ந்த வெனிசுவேலாவின் ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள். ஊடக சுதந்திரம் என்பதும் நசுக்கப்பட்டிருந்ததாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இப்போது அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மடுரோ ஆட்சியின் கீழ் அந்த மக்களை ஒருங்கிணைத்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் வீதிக்கு வந்து குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், அமெரிக்கா ஒரு ஆணியும் பிடுங்கத் தேவையில்லை என்ற தொனியில் ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் ஊடகங்களுக்கு சொல்கிறார்கள். ட்றம்ப் இன் இரண்டாவது வழிமுறையானது, ஆட்சி மாற்றம் சாத்தியப்படாத பட்சத்தில், இராணுவ நடவடிக்கை மூலம் அந்த எண்ணெய் வளப் பிரதேசத்தைக் நிரந்தரமாகக் கைப்பற்றும் நோக்கமாகவும் இருக்கலாம். இதன்மூலம் எண்ணெய் வளத்தை கொள்ளை அடிக்க முடியும். இது நடந்தால், வெனிசுவேலா அமெரிக்கத் தாக்குதலால் சின்னாபின்னமாக போக இடமுண்டு. பெரும் பேரழிவுகளும் கொலைகளும் நடந்தேறும். எவளவுதான் தேசியவெறியை வெனிசுவேலாவின் மடுரோ ஆயுதமாக எடுத்தாலும் பெரும் படைபலமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாது. அதேநேரம் சில ஆய்வாளர்கள் “அப்படியொரு யுத்தம் நடந்தால் அது இலகுவில் முடிவடைந்துவிடப் போவதில்லை. வெனிசுவேலா ஒரு வியட்நாமாக, ஆப்கானிஸ்தானாக, நிக்கரகுவாவாக மாறும். மீண்டும் 10, 20 வருடங்கள் அமெரிக்கா களமாடவேண்டிய நிலை உருவாகலாம்” என்கின்றனர். வரலாற்று ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் ஏற்கனவே இதற்கெதிராக குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர். பிரேசில், கொலம்பியா, உருகுவே, மத்திய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் அணுகுமுறை பேரழிவை ஏற்படுத்தக் கூடியது என எச்சரித்துள்ளனர். வெனிசுவேலாவின் இறைமை மீதான தாக்குதலாக இது இருக்கிறது என கண்டிக்கின்றனர். தென் அமெரிக்கா ஸ்திரத்தன்மையற்றதாக மாற இடமுண்டு என்ற அச்சம் புறக்கணிக்க முடியாதது. இதற்குள் இயங்குகிற பூகோள அரசியல்தான் பிரமாண்டமானது. வெனிசுவேலாவின் எண்ணெயில் பெருமளவை சீனா இறக்குமதி செய்கிறது. அதுமட்டுமல்ல 500 க்கு மேற்பட்ட எண்ணைக் கிணறுகளை சீனா நவீனமயப்படுத்தியுள்ளன. சீனாவின் மேற்பார்வையின் கீழும் அவை உள்ளன. ஏற்கனவே கடந்த ஏப்ரலிலிருந்து ட்றம்ப் உருவாக்கிவிட்டிருக்கும் உலக பொருளாதாரப் போர் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் மோதிக்கொண்டிருக்கும் இரு பெரும் வல்லரசுகள் அமெரிக்காவும் சீனாவும் ஆகும். வெனிசுவேலா எண்ணெய் வளத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் சீனாவிற்கான வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி இல்லாமல் போகும். அது சீனாவுக்கு பாதகமான பொருளாதார விளைவை ஏற்படுத்தும். அத்தோடு கரீபியன் கடலில் சீனாவின் தலையீட்டை அல்லது நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவும் வெனிசுவேலாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இன்னொரு முக்கியமான பிரிக்ஸ் நாடு ஆகும். பெற்றோலியப் பொருட்களை வாங்குகிற, விற்கிற நாடுகள் அதற்கான பணப்பரிவர்த்தனையை டொலரில் மேற்கொள்ள வேண்டும் என்பதை 1973 இல் அமெரிக்கா நிறுவியதன் மூலம் இலாபமீட்டி வருவதோடு, உலக பொருளாதாரத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவும் டொலர்மயமாக்கல் தன்பங்குக்கு வழிசமைத்திருந்தது. அதை “பெற்றோ டொலர்” முறைமை என அழைப்பர். இந்த முறைமைக்கு சவாலாக இப்போ பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் எடுத்திருக்கிற எதிர்பாராத நகர்வு அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ரசியா, சீனா, இந்தியா, ஈரான் மட்டுமல்ல, சவூதி உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் டொலரை விட்டு அந்தந்த நாடுகளின் பணப் பரிவர்த்தனையில் ஈடுபத் தொடங்கிவிட்டன. இது அமெரிக்காவுக்குக் கிடைத்த பெரும் அடி. அத்தோடு அமெரிக்காவின் எடுபிடியாக இருந்த இரண்டாவது பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடான சவுதி அரேபியா பிரிக்ஸ் இல் இணைந்தும் விட்டது. ஜி7 (G7) இன் பொருளாதாரத்தை பிரிக்ஸ் சரிவு நோக்கி தள்ளியுள்ளதால் பிரிக்ஸ் நாடுகளை வரிப் போரால் மிரட்டியும் வருகிறார் ட்றம்ப். வெனிசுவேலாவும் ப்ரிக்ஸ் இல் இணைய விருப்பம் தெரிவித்திருந்தது. அமெரிக்காவில் கிடைக்கும் எண்ணெய் வளம் மிகப் பெரியதல்ல. அமெரிக்காவுக்கு ஆதாரமாக இருந்த கனடிய எண்ணெய் வளமும் இந்த வரிப் போரில் ஏற்பட்ட முரண்பாட்டால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆக அமெரிக்காவுக்கு நிரந்தரமான எண்ணெய்வள நாடு என்று எதுவும் இப்போது இல்லை. அந்த இடைவெளியை வெனிசுவேலா எண்ணெய் வளப் பிரதேசத்தை கைப்பற்றி வைத்திருப்பதன் மூலம் நிரப்ப ட்றம்ப் முயற்சிக்கிறார் என இன்னொரு கோணத்திலும் நோக்க முடியும். வெனிசுவேலாவின் இன்னொரு பாதுகாப்பு அரணான நாடாக ரசியாவை பலரும் சொல்கின்றனர். வெனிசுவேலாவுடனான இந்த நெருக்கடி தோன்றப் போவதான சமிக்ஞைகள் தெரிந்ததும் ரசியா வெனிசுவேலாவுக்கு இன்னும் மேலதிகமாக உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை வழங்கியுள்ளது. சரியாகச் சொன்னால் வியாபாரம் செய்தது என்பதே பொருத்தமானது. இந்தப் போரில் வெனிசுவேலாவுக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் ரசியாவோ, சீனாவோ வந்திறங்கும் என யாரும் எதிர்பார்த்தால், அது ஒரு ஜனரஞ்சக நினைப்பு மட்டுமே. அது யதார்த்தமேயில்லை. வல்லரசுகள் இலகுவில் தமக்குள் நேரடியாக மோதிக் கொள்வதில்லை. அது இன்னொரு நாட்டை மைதானமாக வைத்துத்தான் போர்களை நடத்துகின்றன. எனவே வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்தால், சீனாவோ ரசியாவோ நேரடியாக துணைக்கு இறங்கப் போவதில்லை. அப்படி இறங்கும் என நினைக்கும் அரசியல் ஜனரஞ்சகமானது, அது அடுத்த உலகயுத்தத்தையும் சேர்த்தே கொண்டுவரும் என்ற யதார்த்தத்தை மறுக்க வக்கற்றதாக இருக்கும். இது அதிகாரத்துக்கான போட்டி என்ற புரிதலில் கவனம் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் ஆகும். வெனிசுவேலா மீது அமெரிக்கா போர் தொடுத்து நில ஆக்கிரமிப்பு செய்தால், அதன்பின் அது வல்லரசுகளின் இன்னொரு களமாக சிக்கிச் சீரழியும். பூகோள அரசியலில் இன்னொரு பரிமாணமும் உள்ளது. இதுபற்றி அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள் பேசியிருக்கிறார். கடந்த வருட மார்ச் மாதம் ரசியாவும் கியூபாவும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தத்தை செய்தன. இந்த வருடம் யூன் மாதம் -அணுவாயுதத்தை ஏவக்கூடிய ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும்- ரசிய நீர்மூழ்கிக் கப்பல் கருங்கடலில் புளோரிடாவிலிருந்து 90 கடல் மைல் தூரத்தில் உள்ள கியூப கடற் பரப்பினுள் வந்து நின்றது. இது ஒரு சமாந்தரமான நடவடிக்கை என ரசியா இதற்கு விளக்கம் கொடுத்தது. அதாவது உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணையை கொடுக்க எடுத்த முடிவுக்கு சமாந்தரமான எதிர் நடவடிக்கை என்பதே அதன் பொருளாகும். இன்னொரு வகையில் சொல்வதானால் “நீ எனது எல்லை அருகில் உக்ரைனுக்குள் ஏவுகணையை நிறுத்தினால், நானும் உனது எல்லை அருகில் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துவேன்” என்றும் எடுத்துக் கொள்ளலாம். 1962 இல் துருக்கியில் அமெரிக்கா நிறுத்திய ஏவுகணைக்கு எதிர்வினையாக சோவியத் யூனியன் கியூபாவில் தனது ஏவுகணையை நிறுத்த கப்பலில் வந்திருந்ததும், அது ஓர் அணுவாயுதப் போராக வெடிக்குமோ என உலகை அச்சுறுத்தியதுமான வரலாறு உண்டு. இந்த வருடம் கரீபியன் கடலில் ரசிய நீர்மூழ்கிக் கப்பல் பின் அரங்க நிகழ்வுகள் நடந்து சில மாதங்களின் பின்னர், கரீபியன் கடலில் பெரும் எடுப்பிலான இராணுவ பிரசன்னத்தை அமெரிக்கா செய்துள்ளது. வெனிசுவேலாவுடன் ரசியா மட்டுமல்ல சீனாவும் நெருங்கிய உறவு வைத்திருக்கிறது. அமெரிக்காவின் படையெடுப்புக் கண்காட்சி இரண்டு நாட்டுக்கும் “எங்களது அதிகார பரப்புக்குள்ளிருந்து வெளியே நில்லுங்கள்” என்ற செய்தியை சொல்லியிருப்பதாகவும் எடுத்துக் கொள்ள முடியும். கருங்கடலில் நீர்மூழ்கிக் கப்பலுடன் நடமாடுகிற ரசியாவுக்கும், வியாபார வழித் தடத்தில் அமளியாக இயங்குகிற சீனாவுக்கும் மறைமுகமான ஓர் இராணுவ ரீதியிலான எச்சரிக்கையாகவும் வெனிசுவேலாவின் கடற்பரப்பில் சூழ்ந்து நடத்தப்படும் அமெரிக்கப் படைக் கண்காட்சி இருக்கிறது. இராஜதந்திர ரீதியில் உக்ரைனை நேட்டோவில் அங்கம் வகிக்க முடியாதவாறும், ரசியா கைப்பற்றிய டொன்பாஸ் மற்றும் கிரைமியா பகுதிகளை ரசியாவுக்கு உக்ரைன் வழங்க நிர்ப்பந்தித்தும் ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார். நேட்டோவில் உக்ரைன் அங்கம் வகிக்க முடியாது என்பது நேட்டோ ரசிய எல்லை வரை வராது என்ற உத்தரவாதத்தை ரசியாவுக்குக் கொடுப்பதாகிறது. ஆகவே “அதுபோலவே நீ எனது கரீபியன் கடல் எல்லைவரை வராமல் இரு” என்ற செய்தியை இதற்குள்ளால் வாசிக்க முடியும். இது ஓர் எழுதப்படாத டீல் ஆக அவரவர் நலன் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையில் அமைந்து விடுகிறது. இதேபோலவே உக்ரைன் நிலப் பரப்பை ரசியாவுக்கு விட்டுக் கொடுக்கச் செய்வதன் மூலம் வெனிசுவேலாவின் எண்ணை வளப் பிரதேசத்தை நிரந்தரமாக தன்னுடன் வைத்திருக்க அமெரிக்கா ஒரு ‘லைசன்ஸ்’ இனை பெற்றுக் கொள்கிறது. ரசியாவைப் பொறுத்தவரை, டொன்பாஸை தமதாக்குகிற இலக்கை முதன்மையில் வைத்திருக்கவே செய்யும். அதனால் வெனிசுவேலா மீது அமெரிக்கா போர் தொடுத்தால், ரசியா தலையிடாமல் இருப்பதற்கான இன்னொரு காரணம் இராஜதந்திர ரீதியில் உருவாக்கப்படுகிறது. இதை சூட்சுமமாக அணுகும் ட்றம்ப் வெனிசுவேலா தமது எண்ணெய் கம்பனிகளுக்கு அநீதி இழைத்தது என்ற தொனியை இப்போ உருமாற்றி, “அது எங்களது எண்ணெய்” என்று சொன்னதை விரிவுபடுத்தி, “எங்களது எண்ணெய். எங்களது வளம். எங்களது நிலம்” என்று நிலத்தையும் சேர்த்து பேசத் தொடங்கியிருக்கிறார். இது ஒரு அப்பட்டமான காலனிய மனக்கட்டமைப்பு என்பதை மடுரோ உரத்துச் சொல்கிறார். அமெரிக்காவின் இந்த படையெடுப்பு குறித்தும் மனித உரிமை மீறல் குறித்தும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளும் ஊடகங்களும் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஐரோப்பாவும் கள்ள மவுனம் சாதிக்கிறது. வெனிசுவேலா மீதான இந்த அச்சுறுத்தல் அல்லது சாத்தியமாகக் கூடிய ஆக்கிரமிப்பு யுத்தம் குறித்து ஐநா சபையும் இதுவரை எதுவும் செய்யவில்லை. மடுரோ ஐநா செயலாளருடன் பேசியபின்னரே பாதுகாப்புச் சபையை கூட்ட ஐநா செயலர் முடிவெடுத்திருக்கிறார். அமெரிக்காவிடம் வீட்டோ அதிகாரம் இருக்கும்போது இந்த கூட்டம் ஒரு ஒப்புக்கு நடந்தேறுவதாகவே அமையும். அமெரிக்க மக்களும்கூட இதுவரை வீதிக்கு வந்து இந்த காலனிய மனக்கட்டமைப்புக்கு எதிராக போராடவில்லை. வெனிசுவேலாவின் எண்ணை வளத்தை திருடுவதன் மூலம் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளாடும் தமது வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட மட்டுமல்ல, தமது சலுகைபெற்ற வாழ்வை இழந்துவிடத் தயாராக இல்லாத காலனிய கருத்தியல் சிந்தனை முறையின் கைதிகளா அமெரிக்க மக்கள் என எண்ணத் தோன்றுகிறது. கரீபியன் கடல் போர்க் கோலம் பூண்டது போன்று அமளியாக மாறியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் வெனிசுவேலாவை அண்டிய கடற்பரப்பில் நிற்கிறது. வெனிசுவேலாவை கடல்வழியாக முற்றுகையிட்டு பல போர்க்க கப்பல்கள் நிற்கின்றன. இதுவரை 16000 இராணுவத்தினர் காவல்நாய்களாகவும், ட்றம்ப் ஏவினால் கடித்துக் குதற தயாராக இருப்பவர்களாகவும் கடற்பரப்பில் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர். எண்ணெய் பீப்பாக்களை தாங்கியபடி வெனிசுவேலாவுக்குள் வரவும் வெனிசுவேலாவிலிருந்து வெளியே போகவும் எந்த கப்பலுக்கும் அனுமதியில்லை. அதை செயலில் எச்சரிக்கும் விதமாக 1.9 மில்லியன் எண்ணெய்ப் பீப்பாக்களுடன் கருங்கடலில் காணப்பட்ட ‘நிழல் கப்பலை’ டிசம்பர் 10ம் தேதி அமெரிக்கா தடாலடியாக கைப்பற்றியது. அதிலிருந்த எண்ணெய் முழுவதையும் திருடியுமுள்ளது. கப்பலை தடுத்தும் வைத்துள்ளது. அதற்குப் பிறகு மேலும் இரண்டு கப்பல்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் வெனிசுவேலாவில் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கக் கம்பனியான செவ்ரோன் 500’000 பீப்பாக்களுடன் அமெரிக்கா போய்க்கொண்டிருந்த காணொளி வெளியாகியிருந்தது. உலக சமாதான நாயகனாக படம் காட்டி நோபல் பரிசுக்கு அலையும் ட்றம்ப், அதற்கு முரண்நிலையாக செயற்பட்டு இந்தப் போரை நடத்துவாரா, அல்லது அழுத்தச் செயற்பாடாக தனது இராணுவ மிரட்டலை செய்து வெனிசுவேலாவில் தனது எடுபிடி ஆட்சியொன்றை நிறுவி, எண்ணை வளத்தை கொள்ளையடிக்கப் போகிறாரா என்பது விரைவில் தெரிய வந்துவிடும். அப்படியொன்று நடந்தால் வெனிசுவேலாவின் ஜனாதிபதி மடுரோவையும் குடும்பத்தையும் (சிரியாவிலிருந்து அசாத் இனை ரசியாவுக்குள் கொணர்ந்ததுபோல) ரசியாவுக்கு அழைத்துவர புட்டினுக்கு ட்றம் அனுமதியளிப்பார் என்பது மட்டும் உறுதி. மடுரோ வெனிசுவேலாவை விட்டு வெளியேற வேண்டி வந்தால், தனது நாடு அவரை வரவேற்கும் என (ரசியாவின் செல்லப்பிள்ளையான) பெலாருஸ் அதிபர் அலெக்ஸண்டர் லூக்காசெங்கோ கூறியிருப்பதை வெறும் கூற்றாக மட்டும் எடுப்பதா, அதோடு சேர்த்து ஓர் எதிர்கால அரசியல் நிகழ்வின் சாத்தியப்பாட்டை முன்னறிவிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாமா?. https://sudumanal.com/2026/01/01/இந்த-வளமும்-எனதே-மண்ணும்/
  9. 2025: உலக நிலவரம் எப்படி இருந்தது? ஜனவரி 1, 2026 –பயஸ் ஃபோஸன் (Pius Fozan) எந்தத் தீர்வும் எட்டப்படாமலேயே இந்த ஆண்டு (2025) முடிவுக்கு வருகிறது. உலகம் எதையெல்லாம் சகித்துக்கொள்ளத் துணிந்துவிட்டது என்பதற்கான நீண்ட பட்டியல்தான் இங்கே எஞ்சி நிற்கிறது. அந்தப் பட்டியலின் முக்கிய அம்சங்கள்: காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் 18,457க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் உள்நாட்டுப் போர் சூடானைச் சிதைத்து வருகிறது. உலகில் வெறும் 6.6% மக்கள் மட்டுமே முழுமையான ஜனநாயகச் சூழலில் வாழ்கிறார்கள். ஒட்டுமொத்த மனித குலத்தில் வெறும் 0.001% பேர் (சுமார் 60,000 பேர்) உலக மக்கள் தொகையின் சரிபாதிப் பேர் வைத்துள்ள செல்வத்தைப் போல மூன்று மடங்கு செல்வத்தைத் தங்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள். உக்ரைனில் ரஷ்யா தொடுத்த போர் நான்காவது ஆண்டிற்குள் நுழைகிறது. சில நெருக்கடிகளுக்கு இங்கே கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சூடான், ஹைட்டி, கொங்கோ போன்ற நாடுகளின் துயரங்களோ கவனிக்க ஆளின்றி அனாதையாக இருக்கின்றன. சூடான் உலகக் கவனத்திலிருந்து ஏன் நழுவியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை நம் ஸ்மார்ட்போன் திரையில் ஓடும் ‘ஸ்க்ரோலிங்’ வேகத்தில், மக்களின் வலிகள் ஏதோ ஒரு புதுமையான செய்தியுடன் போட்டி போட முடியாமல் தோற்றுப்போகின்றனவா? அல்லது ஆபிரிக்காவில் போர் நடப்பது வழக்கம்தான், அது அந்த மண்ணுக்கே உரியது என நாம் பழகிப்போன ‘இனவாத’ முன்முடிவுகள் காரணமா? அல்லது எது ‘அவசரம்’ என்பதை அதிகாரவர்க்கம் தீர்மானிக்கிறதா? சூடான் ஏன் தலைப்புச் செய்திகளில் இடம் பெறவில்லை என்பது மட்டுமல்ல; சூடானைப் பற்றிப் பேசாததால் கிடைக்கும் அமைதியால் பலன் அடைவது யார் என்பதுதான் கேள்வி. சூடானைப் பொறுத்தவரை, அந்த அமைதிக்கான விலையைத் ‘தங்கம்’ மூலம் அளவிடலாம். இந்த மோதலில் தங்கத்தைத் தோண்டி எடுக்கும் ஆசையில் இருக்கும் ஐக்கிய அரபு இராச்சியம், அங்கிருக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கு (RSF) ஆயுதங்களை வழங்கியதை ஐக்கிய நாடுகள் சபையே ஆவணப்படுத்தியுள்ளது. தாறுமாறாகிப்போன சர்வதேச ஒழுங்குமுறை வெறும் சம்பிரதாயச் சடங்காக மாறியிருந்த சர்வதேச ஒழுங்குமுறை, 2025 இல் இன்னும் மோசமாக உடைந்துபோனது. அமெரிக்கா தன் இஷ்டத்திற்கு அதிகாரத்தைச் செலுத்தியது; தான் உருவாக்கிய உலகளாவிய விதிமுறைகளைத் தனது தேவைக்கேற்ப வளைத்துக்கொண்டது. இஸ்ரேல் மீதான விசாரணையைத் தொடர்ந்ததற்காகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீதே அமெரிக்கா தடைகளை விதித்தது. காஸாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் புலனாய்வு செய்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அதிகாரி ஃபிரான்செஸ்கா அல்பனீஸுக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டது. வெறுப்புப் பேச்சுகளைக் கேள்வி கேட்டதற்காகவும், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுப்புக்கூற வைத்ததற்காகவும் ஐரோப்பியச் சமூகத் தலைவர்கள் தண்டிக்கப்பட்டனர். அமெரிக்காவிற்குள் புலம்பெயர்ந்த மக்கள் நீதிமன்றங்களிலும் தெருக்களிலும் வேட்டையாடப்பட்டனர். அவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், தாக்கப்பட்டும், கேள்விக்குரிய சூழலில் நாடுகடத்தப்பட்டும் வருகின்றனர். இங்கே தர்க்கமும் தண்டனை கொடுப்பவரும் ஒருவர்தான்; ஆனால் கூச்சல் மட்டும் சில இடங்களுக்குச் சாதகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஐரோப்பியத் தலைவர்கள், தங்கள் ஆள் ஒருவருக்கு அமெரிக்கா தடை விதித்தபோது கதறினார்கள். ஆனால், தாங்களே உருவாக்கிய சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) இஸ்ரேலைத் தண்டித்ததற்காகத் தடை விதிக்கப்பட்டபோது மௌனம் காத்தனர். இவர்களைப் பொறுத்தவரை நீதி என்பது அவர்கள் விருப்பத்திற்குத் தேர்ந்தெடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்று (Optional). பொறுப்புக்கூறல் என்பது நிபந்தனை. யாருக்கு வலி ஏற்படுகிறது, யாரால் வலி ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே இது மாறுகிறது. சர்வதேச ஒழுங்கும் சட்டத்தின் ஆட்சியும் இங்கே ஒருபோதும் சமமாகப் பயன்படுத்தப்பட்டதில்லை. 2025 இல் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒன்றும் புதிதாக எதையும் உடைத்துவிடவில்லை; இந்தத் தறிகெட்ட அமைப்பு இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார். இந்த அமைப்பு நடுநிலையானது அல்ல; இது அதிகாரத்திற்குச் சேவை செய்யவே உருவாக்கப்பட்டது. அதன் போலித்தனத்தை இனி யாராலும் மறைக்க முடியாது. பலவீனமாகிவரும் ஜனநாயகம் ஜனநாயகமும் சுதந்திரமும் தொடர்ந்து பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. பத்தில் ஒருவருக்குக்கூட இப்போது முழுமையான ஜனநாயகம் கிடைப்பதில்லை. உலக மக்கள்தொகையில் சுமார் 72% பேர் சர்வாதிகார அமைப்புகளின் கீழ் வாழ்கிறார்கள். இது 1970களுக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும். மக்கள் பங்களிப்பு சுருங்கிவிட்டது, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டது. தொழில்நுட்ப ஜாம்பவான் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம் உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ (Trillionaire) ஆகும் நிலையை நெருங்கிவிட்டார். இந்த ஓராண்டுக் காலத்தில் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. ஊடகம், பாதுகாப்புத் துறை, செயற்கைக்கோள் கட்டமைப்பு என அவரது ஆதிக்கம், தனிநபர் மூலதனத்திற்கும் பொது அதிகாரத்திற்கும் இடையிலான எல்லையை மங்கச் செய்துவிட்டது. அறிஞர்கள் இதை ஒருவகை ‘தனியார் ஆட்சி’ (Private Governance) என்றே விவரிக்கிறார்கள். அவரது பணமும் தளங்களும் உலகெங்கிலும் ஒரு புதிய நவீன சர்வாதிகாரத்தை வடிவமைத்துச் சீரமைக்கின்றன. இந்தச் சீர்குலைந்த பொருளாதார அமைப்பால் பலன் அடைந்தவர் எலான் மஸ்க் மட்டும் அல்ல. உலக சமத்துவமின்மை அறிக்கை 2026இன்படி, முதல் 10% வருமானத்தை ஈட்டுபவர்கள் மீதமுள்ள 90% பேர் பெறும் மொத்த வருமானத்தைவிட அதிகமாகப் பெறுகிறார்கள். உலகச் செல்வத்தில் 75%-ஐ அந்த முதல் 10% பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள்; அடித்தட்டு மக்களுக்கோ வெறும் 2% மட்டுமே மிஞ்சுகிறது. அதே சமயம், உலகளாவிய தொழிலாளர்களின் ஊதியமோ தேக்கமடைந்து அல்லது சரிந்துவருகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்த அளவிலான சமத்துவமின்மை மிகவும் அசாதாரணமானது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் இந்த அழுத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தியாவின் முதல் 1% பணக்காரர்கள் நாட்டின் 40% செல்வத்தைக் கொண்டுள்ளனர். இது இந்தியாவை உலகின் மிக மோசமான சமத்துவமின்மை கொண்ட சமூகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தைவிடவும் மோசமானது. ஒரு துளி நம்பிக்கை எஞ்சியிருக்கிறது… நேபாளம், வங்கதேசம் முதல் பல்கேரியா, ஜோர்ஜியா, மடகாஸ்கர்வரை போராட்டங்கள், மாணவர் இயக்கங்கள் மூலம் இளைஞர்கள் அரசியலின் தற்போதைய நிலையைத் தகர்த்துவருகின்றனர். அரசாங்கங்கள் கவிழ்ந்தன, புதிய அரசியல் கட்டமைப்புகள் வடிவம் பெறுகின்றன. ஜோர்ஜியா இந்த மாற்றத்தின் அடையாளமாக மாறியது; இளைஞர்கள் அடக்குமுறையை மீறி வீதிகளில் உறுதியாக நிற்கிறார்கள். அமெரிக்காவில், ஜோஹ்ரான் மம்தானி போன்ற சோஷலிசவாதிகள், காஸா விவகாரம், சமூக நீதி ஆகியவற்றுக்கான தங்கள் உறுதியான ஆதரவை மாற்றிக்கொள்ளாமலேயே தேர்தலில் வெற்றி பெற முடியும் எனக் காட்டினார்கள். இன்றைக்கும் கொள்கை அரசியலுக்கு இடமுண்டு என்பதற்கான சான்று இது. நியூயார்க் மேயர் தேர்தலில் வென்றபோது ஜோஹ்ரான் மம்தானி தன் மொழியையோ அல்லது வாக்குறுதிகளையோ ஒருபோதும் நீர்த்துப்போகச் செய்யவில்லை. 2025 இல் பெண்களின் உறுதியும் வெளிப்பட்டது. ஐரோப்பாவில் பெண்கள் ஒன்றுதிரண்டு பாதுகாப்பான கருக்கலைப்பு என்பது புவியியல் சார்ந்த விஷயம் அல்ல, அது தனிநபர் உரிமை என்பதை ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகரிக்கச் செய்தனர். இது விவாதத்தின் போக்கை அறநெறியிலிருந்து ‘உரிமை’ நோக்கி மாற்றியது. ஆற்றல் துறையிலும் மாற்றம் நிகழ்ந்தது. முதல் முறையாக நிலக்கரி மின்நிலையங்களை விடவும் காற்று, சூரிய ஒளி ஆகியவை மூலம் அதிக மின்சாரம் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது உலக மின்சார அமைப்பில் ஒரு பெரும் திருப்புமுனை. நெறிமுறைகள் எவ்வளவு எளிதாகச் சிதைக்கப்படும் என்பதை இந்த ஆண்டு காட்டியது. அதே சமயம், மக்கள் திரண்டு அழுத்தம் கொடுத்தால் அதிகாரம் எப்படிப் பணியும் என்பதையும் காட்டியிருக்கிறது. இந்த அழுத்தங்கள் எந்த அளவுக்கு ஒரு நிலையான கட்டமைப்பாக மாறப்போகின்றன என்பதைப் பொறுத்தே வருங்காலம் அமையும். மூலம்: 2025: A year without alibis https://chakkaram.com/2026/01/01/2025-உலக-நிலவரம்-எப்படி-இருந்/
  10. டக்கிலஸை சேர்த்துக்கொண்டு போட்டியிட்டால் தான் முதலமைச்சர் ஆகிவிடலாமென சுமந்திரன் கனவு கண்டார், சுமந்திரனை இணைத்துக்கொண்டால் தான் வெல்வதற்கு வாய்ப்பிருப்பதாக டக்கிளஸ் எண்ணியிருப்பார், பலதடவை அந்த ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் டக்கிளஸ் சம்பந்தன் இருந்த காலத்தில். அது மக்கள் தன் மீது வைத்திருக்கும் செல்வாக்கை சரிக்குமென நன்றாகவே தெரிந்திருந்த சம்பந்தர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. இப்போ, தான் தலைவனாகவேண்டும் முதலமைச்சர் ஆக வேண்டுமென்று சில புல்லுருவிகள் அவரை கட்டியணைத்து விடுதலை வீரர் என புகழாரம் சூட்டுகின்றனர். இத்தனைக்கும் தீவகத்தை தனது உடைமையில் வைத்திருப்பதற்காக தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை கொலை செய்யுமளவிற்கு தாக்கியவர். இவரை விடுதலைக்காக உழைத்தவரென வாய் கூசாமல் கூறுகிறார் சிவஞானம், இவ்வளவுதான் இந விடுதலை பற்றிய அவரறிவு. இவர்கள் என்னதான் பாடுபட்டாலும் அனுராவை ஐந்து வருடத்திற்கு யாராலும் எதுவும் செய்ய முடியாது, அப்படி முயன்றால் அது அவர்களுக்கே ஆப்பாக செருகும். டக்கிளஸ் ஒழிக்கப்படவேண்டியவன் அதையே மக்கள் கொண்டாடுகின்றனர். அதுதான் அவரோடு கூட இருந்தவரே சொல்கிறார், டக்கிளஸ் மக்கள் வாக்குகளால் வெல்லவில்லை, மக்களை பயமுறுத்தி கட்டுக்கட்டாக தானே வாக்குகளை அள்ளிப்போட்டதாக. கடந்த தேர்தலில் வாக்கு எண்ணும்போது அவரது தோல்வியை நிர்ணயித்தது, அவர் நெடுந்தீவு வாக்குகளுக்காக காத்திருந்தார் அதுவும் அவர் கை விட்டுப்போனது. தனக்கு மிஞ்சின ஆசை முதலில் வெற்றியளித்தாலும் இறுதியில் எப்போதும் ஆபத்தையே தரும். மக்களை எழுபத்தாறு வருடங்களாக ஏமாற்றிய தமிழரசுக்கட்சியும் மாற்றியமைக்கப்படவேண்டும் மக்களால்!
  11. நன்றி அண்ணா. கள உறவுகள் உங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதோடு நின்றுவிடாது உங்கள் உறவினர், நட்புகளை குறைந்த வருமானம் ஈட்டும் / வருமானம் ஈட்ட முடியாதவர்களுக்கு பேருதவியாக அமையும் இவ்வடிப்படைச் சுகாதார வசதித் திட்டத்தை நிறைவுறுத்த உதவுமாறு தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறேன்.
  12. ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் - குழந்தை உட்பட 24 பேர் பலி 02 Jan, 2026 | 12:56 PM ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் வியாழக்கிழமை (1) புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஹோட்டல் ஒன்றை நோக்கி உக்ரைன் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடலோர கிராமமான கோர்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற இடத்தில் 3 உக்ரைன் நாட்டு ட்ரோன்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 24 பேர் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. “இது பொதுமக்களுக்கு எதிராக வேண்டுமென்றே உக்ரைன் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்” ரஷ்ய பிராந்திய ஆளுநரான விளாடிமிர் சால்டோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சு மற்றும் அந்நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/235023
  13. இது இந்தோனிசியாவில் போதைப்பொருள் கடத்தலிற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவரின் உண்மைக்கதை போலவே இருக்கிறது.
  14. இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த படகு ஒன்றும் மீன்படி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இலங்கை-கடற்பரப்பில்-மேலு/
  15. தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் திடீர் பதவி விலகல் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி (module) தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவர் தமது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்காக விநியோகிக்கப்பட்ட 6 ஆம் தரத்திற்கான பாடத் தொகுதியில் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதனை கல்வி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணையினை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப்புலனாய்வவு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/தேசிய-கல்வி-நிறுவகத்தின்/
  16. தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்! adminJanuary 2, 2026 தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் தவறான தகவல்கள் பரப்ப படுவதனால், சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள மொழியில் தென்னிலங்கை ஊடகங்களில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற போதே குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது. தையிட்டி விகாரை காணி வரைபடங்களை சிங்கள ஊடகங்களில் தெளிவாக பிரசுரித்து விளம்பரங்களை போட சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2026/225479/
  17. தோழர் டக்ளஸ் தேவானந்தா இந்தக் கைது மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது! அநுர அலையில் கடந்த தேர்தலில் அவர் அடித்துச் செல்லப்பட்டாலும், ஈபிடிபியின் வாக்கு வங்கி இன்னமும் இருக்கின்றது. அதை ஆட்டம் காண NPP இந்தக் கைது விளையாட்டின் மூலம் நடத்தும் நாடகம் பூமராங் ஆகி NPP ஐ பாதிக்கும்
  18. ஆம். குறித்த கேள்விகளுக்கு மாத்திரம் பதில்களைத் இத் திரியில் பதியுங்கள்.
  19. எப்படி மாற்றுவது .உங்களிடம் பதில்கள தந்தால் மாற்றுவீர்களா.நன்றி.
  20. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.🎉🥳
  21. முதலில் இந்த தொல்லியல் திணைக்களம் தொலைந்தால்தான் நாடு உருப்படும் ..கடனெடுத்து புத்தகோவிலை கட்டிவிட்டு...தமிழனிடம் களவெடுத்து வாழ் நினக்கும் கூட்டம்தான் ..இந்த இனம்
  22. அந்த இடத்தில் ஹர்திக் பாண்டியா என்பவரை தெரிவுசெய்கின்றேன் ..தேர்தல் ஆணையாளரே ..நன்றீ
  23. 2026 ஏப்ரலில் வரும். யாழ்களத்தில் வந்த முதல் போட்டி 2006 ஏப்ரலில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல். 20 வருடங்களாக யாழ்கள போட்டிகள் நடைபெற்று வருகின்றது
  24. உப்பிடி பொத்தாம் பொதுவாய் சொன்னால் எப்பிடி? கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்ல வேண்டியது. எதை சொன்னார், எது நடந்திருக்கிறது? ஆஹா..... படைத்தளபதியாக இருந்து எதை முறியடித்தார்? அவரது சாதனைகள் ஒன்று இரண்டையும் சொல்ல வேண்டியது. அலன் தம்பதிகளை உள்ளாடையுடன் கடத்தியது? பயங்கரவாதம் என்று அரசால் முத்திரையிடப்பட்ட ஒரு அமைப்பின் தளபதிக்கு எப்படி இத்தனை பதவிகள் கிடைத்தன? இனத்தை விற்று, காட்டிக்கொடுத்து, எதிரிக்கு கால் கழுவி? பிறகு எப்படி அந்த பயங்கரவாத அரசுடன் ஒட்டிக்கொண்டார் என்பதையும், அதை ஜனநாயகம் என்கிறார் என்பதையும் விலாவாரியாக சுட்டிக்காட்டலாம். அப்போ, சிறிலங்கா அரசு பயங்கரமானது என்பதை ஒத்துக்கொள்கிறார், தமிழ்விடுதலைப்போராட்டத்தை எதிர்த்து, நசுக்க சிறிலங்கா அரச பயங்கரவாதத்துடன் இணைந்து அமைச்சுப்பதவியையும் பெற்றுக்கொண்டார். அப்போ அவர் என்னதான் செய்தார் என்பதையும் சொல்லித்தொலைக்க வேண்டியது சொல்பவர். ஆமாம், அதே தான். அவருக்கு உயிரச்சுறுத்தல் இன்றுவரை இருக்கிறதாக ராகவன் சொல்கிறார், தனக்கு புலிகளால் இருந்தது என்று டக்கிளஸ் கூறியிருக்கிறார். சும்மா வள வள என்று பேசாமல், அவரது சொந்த பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி எப்படி தென்னிலங்கை பாதாள குழுவிடம் சென்றது? அதை சொல்ல வேண்டியது. அதை சொல்லாமல் இப்படி போர்த்து மூடுகிறாரே. டக்கிலஸுக்கு சுடத்தெரியவில்லை என்று மதுசிடம் கொடுத்தாரா? அப்படியென்றால் அவரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் எப்படி நடந்தன? அல்லது மதுஸ் கடனாக துப்பாக்கியை வேண்டினாரா? இவரிடம் களவெடுத்தாரா? ஏன் இத்தனை காலமாய் முறைப்பாடளிக்கவில்லை? ஒரு அமைச்சருக்கு சட்ட நடைமுறை தெரியாதா? இவருக்கு சிங்களம் தெரியாமல் ஒருவர் மொழி பெயர்ப்பு செய்ததாக கூறப்படுகிறது, எப்படி இவர் மத்திய அரசின் கீழ் அமைச்சராக இருந்து பணியாற்றினார்? மதுஸுடன் தொடர்புகளை மேற்கொண்டார்? இவரது சொந்த பாதுகாப்புக்கான துப்பாக்கி களவாடப்படுள்ளது, யாரால் அது களவாடப்பட்டது? தெரியாதவருக்கு எதற்கு துப்பாக்கி வழங்கப்பட்டது? ஏன் அவர் கைது செய்யப்படவில்லை? ஒரு அமைச்சர், ஒரு விடுதலை இயக்கத்தில் இருந்தவர், அவரது காரியாலயம் எங்கும் பாதுகாப்பு கமரா, பாதுகாப்பு உத்தியோகத்தர் இருந்தும் அவரின் துப்பாக்கிக்கு என்ன நடந்தது என்று சொல்லத்தெரியவில்லை இவரால், அவ்வளவு பொறுப்புள்ளவர்! கை ஒப்பம் இட்டு வாங்கிய துப்பாக்கியை மீள ஒப்படைக்கும் போது என்ன செய்ய வேண்டுமென்கிற நடை முறையை கடைப்பிடிக்காத, தெரியாத அமைச்சரும், பொறுப்பற்ற இராணுவமும் என்று கூறலாமா? மதுஸ் இந்த துப்பாக்கியை அமைச்சரிடமிருந்துதான் பெற்றதாக சாட்சியமளித்துள்ளார். சரி, களவாடப்பட்டது என்றால் எங்கே? எப்படி? எந்த பாதுகாப்புமில்லாத இடத்திலா ஆயுதங்களை களஞ்சியப்படுத்தியிருந்தனர்? கண்டுபிடிக்கப்பட்டது டக்கிலஸின் சொந்தப்பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட துப்பாக்கி. இவரது துப்பாக்கியை கொண்டு சென்றவர் இறந்திருக்கலாம் என்றால், டக்கிலஸ்தான் இறந்திருக்க வேண்டும். ஆனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளாரே? எழுதுபவருக்கு எது நடந்தது என்று தெரியாது அது நடந்திருக்கலாம், இது நடந்திருக்கலாம் என ஊகம் மட்டும் வெளிப்படுத்துகிறார். அதற்கு அவசியம் என்ன? என்ன நடந்தது என்பதை போலீசார் கண்டுபிடிப்பர், அதற்காகவே அவரை கைதும் செய்துள்ளனர். இவர் ஏன் துடிக்கிறார் எனத்தெரியவில்லையே? கூட இருந்து கூத்தடித்த குற்ற உணர்ச்சியினாலா? மக்களிடம் இவர் ஒரு புனிதர் என்று காட்டவா? மக்களுக்கு தெரியும் இவரின் புனிதத்தன்மை, அதனாலேயே வெடி கொழுத்தி ஆரவாரம் செய்கின்றனர். அவை டக்கிலஸிடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கியல்ல, டக்கிலஸின் துப்பாக்கி மதுசிடமிருந்து கைப்பற்றப்படுள்ளது, அவர் அதை டக்கிலஸிடமிருந்து பெற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் என்ன முன்னுக்கு பின் முரணாக உளறுகிறார்? குழம்பிபோயுள்ளார் போலுள்ளது. அது தான் கதை. இப்பதான் விசயத்திற்கே வந்திருக்கிறார், பேசாமல் இவர் ஒரு துப்பறிவாளனாக போயிருக்கலாம். அதை நீதிமன்றத்தில் சொல்ல வேண்டியதுதானே! மற்றவர்களை பற்றி யாரும் கேட்கவில்லை, அதை நீதித்துறை பார்த்துக்கொள்ளும். நீங்கள் செய்தவற்றை, சொல்ல வந்ததை சொல்லுங்கோ! துணைக்குழுவில் துப்பாக்கி இல்லாமலா இராணுவ குழுக்களாக இயங்கினீர்கள்? ஏன் துப்பாக்கியை மதுசுக்கு கொடுத்தார் உங்கள் தோழர்? அப்போ எதற்கு இந்தப்பதிவு? ஜனநாயகத்தில் குதித்தவர்களுக்கு எதற்கு ஆயுதம்? ஏன் இராணுவ குழுவாக இயங்கவேண்டும்? புலிகளை கூண்டோடு அழித்துவிட்டோம் என்று கூவியவர்களுக்கு, ஒத்தாசை புரிந்தவர்களுக்கு அதன் பிறகு எதற்கு ஆயுதம்? டக்கிளஸ் என்ன புலிகளுடனேயா போராடியவர்? யாருக்கு ஆயுதம் கொடுத்தோம், யார் மீள அளித்தனர் என்பது கூட தெரியாத ஜனநாயகம், அரசு. அதன் அமைச்சர். அவர்களோடுதானே நீங்களும் இன்றுவரை கடமையாற்றினீர்கள், ஊதியம் பெற்றீர்கள்? பிறகு பயங்கரவாதம், ஜனநாயகம் என்கிற போர்வை எதற்கு? இது அரச ஒட்டுக்குழுக்களின் பயங்கரவாதம், மனித உரிமை மீறல், போர்க்குற்றம் என்பதை கடைசியில் ஏற்றுக்கொண்டுள்ளார் போங்கள். அப்பட்டமாக உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார். அதில் தாங்களும் தங்கள் தோழரும் அடக்கம். ஜனநாயகம் இல்லாத, அரச பயங்கரவாதம் உள்ள நாட்டில், பாதிக்கப்பட்டோர் தம்மை பாதுகாக்க, ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்தது போலி ஜனநாயகம், அதை கொடூர கரம் கொண்டு அழித்தது ஜனநாயகம், போரில், அரசியலில் சம்பந்தப்படாதோரை கொன்றொழித்து ஜனநாயகம், தன் கோர முகத்தை ஜனநாயக போர்வையால் மறைத்தது. பிள்ளைகளை அனாதைகளாக்கியது, சாதாரண மனிதர்களை காணாமல் ஆக்கியது, விதவைகளாக்கியது, அங்கவீனர்களாக்கியது, புதைக்குழிகளுக்குள் மறைத்தது. ஆனாலும் அவர்களது கர்மா திரும்பி அவர்களை தாக்குகிறது. தம்மை பாதுகாக்க வளமாக்க எடுத்த கர்மா, தன்னை பாவித்துஅப்பாவிகளை அழித்த கர்மா, பாவித்தவர்களையே திருப்பி தாக்குகிறது. இவ்வளவு கஸ்ரப்பட்டு ஒரு கல்லறைக்கு வெள்ளை அடிக்க முயற்சித்திருக்கிறார். அனுரா எது செய்வார், செய்ய மாட்டார் என்பதை பொறுத்திருந்து பாப்போம். ஆனால் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். டக்கிலசோடு கூட இருந்து செயற்பட்டவர்களே தாங்கள் இவரோடு சேர்ந்து செய்த தவறுகளை கூறுகின்றனர். டக்கிலஸிற்கும் அவனது துப்பாக்கிக்கும் அவனது இராணுவத்திற்கும், பயந்து உயிர் பிழைப்பதற்காக இவர்களோடு சேர்ந்து இயங்கியதாக கூறுகின்றனர்.
  25. காலை உணவு காறாத்தல் பான் கூட தேவையில்லை தமிழன் நிம்மதியாய் இருக்க கூடாது என்ற அடிப்படை சிங்கள இனவாதமே காலை உணவு . கிடைக்கிற வருட வருமானத்தில் 4௦ வீதத்துக்கு மேல் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே போகுது என்ற விடயமும் வரும் புதிய அரச சிங்கள தலைவர்கள் நாடு நாடாய் பறந்து இலங்கை இறையாண்மையை அடகு வைத்தே பிச்சை எடுத்துத்தான் இலங்கை அரசு இயங்குது என்ற உன்மை சாதாரண இனவாத சிங்களவனுக்கு தேவையில்லை அவர்களை பொறுத்தவரை 1௦௦௦ வருடங்களுக்கு மேல் புரையோடி வளர்ந்து போன தமிழர் எதிர்ப்பு இனவாத மிருகத்துக்கு தீனி போட்டால் சரி .
  26. டக்ளஸ் விசுவாச கட்டுரையாளருக்கு இப்போ என்ன வேணும்? டக்ளஸ் எந்த தவறுமே செய்யாத யோக்கியர்னு சொல்லணும் அவ்வளவுதானே? நேரடியா கெஞ்சி கேட்டால் உங்கள் மனசை சந்தோசபடுத்தி பார்க்கவென்றாலும் சொல்லிட்டு போறோம் அதுக்கு எதுக்கு இவ்வலவு நீளமா மூச்சு வாங்க வாங்க எழுதிக்கொண்டு. ஆனா அந்த யோக்கிய சிகாமணிபற்றி சிறப்பான கட்டுரை வரைந்த விசுவாசியிடம் இரண்டே இரண்டு கேள்வி ஓடாமல் ஒளியாமல் பதில் சொன்னால் கோடி புண்ணியம் அது, பயங்கரவாதங்களை அடியோடு வெறுக்கும் பெருந்தகை டக்ளஸ் அவர்கள், அரசுகள் செய்வது பயங்கரவாதம் என்று தெரிந்தும் எப்படி அமைச்சராக பயங்கரவாத அரசுகளில் இருந்தார்? பயங்கரவாதம் செய்யும் அரசிடமிருந்து ஆயுதம் பெற்றால் டக்ளஸ் அப்போ யார்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.