All Activity
- Past hour
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிறிதரன் ஜெகநாதன் என்ற தமிழரும் இலங்கை அணியில் விளையாடி இருக்கிறார். இவர்தான் இலங்கை அணியில் டெஸ்ட் விளையாடிய பின்பு முதலில் இறந்த விளையாட்டு வீரர். 44 வயதில் காலமானார். ரவி ரத்நாயக்காயின் தாய் தமிழ். ரவிந்திரா புஷ்பகுமாரா பாதி தமிழ். ரோய் டையஸ் சிங்களவர் என்று சொன்னாலும் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை மாதிரி அவரின் முன்னோர்கள் தமிழர்கள் . வினோதன் ஜோன் விளையாடிய காலத்தில் அவுஸ்திரேலியா அணி முதன் முதலாக இலங்கையில் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடவந்தது. கண்டி அஸ்கிரியா மைதானத்தில் புனித பூமியில் தமிழர் விளையாடலாமா என்று முக்கிய பிக்கு ஒருவர் சொன்னதால் அவர் அணியில் இடம்பிடிக்கவில்லை என்று முன்பு எங்கேயோ வாசித்த ஞாபகம்
-
தமிழனின் சிற்பக் கலை.
பலா பழ செதில்கள்.. ஏகாம்பர நாதர் கோயில் - காஞ்சிபுரம்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கோழி முட்டை 65 (அந்தி வேளை சிற்றுண்டி..)
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கடைசி வரை போராடு..
-
நகைச்சுவைக் காட்சிகள்
பெற்றோர் பார்த்து வைத்த திருமண பரிதாபங்கள்..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
கோடைகாலத்தில் சும்மா வாறது ஒரு தேத்தண்ணிய குடிச்சிட்டு 20ரூ மதிப்புள்ள தண்ணிய போத்தலில் ரொப்பி கொண்டு போறது இதெல்லாம் நடக்காது.. மதுரை கொட்டல் தொழில் செய்பவர்கள் அதிபுத்திசாலிகள்..!- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நடராஜன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வந்த படம் ஜீவா. இது துடுப்பாட்டம் சம்பந்தமான திரைப்படம் . 10 வருடங்களுக்கு முன்பு வந்தபடம். இதில் தமிழகத்தில் இருந்து இந்தியா அணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 14 பேரில் 12 பேர் பிராமணர்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த பிராமணர்கள் என்றால் நாமம் போட்ட ஐயங்கார்கள்தான்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
- அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது ஏன் என அரசாங்கத்துக்கு தெரியாதா? - முன்னாள் அமைச்சர் சம்பிக கேள்வி
அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது ஏன் என அரசாங்கத்துக்கு தெரியாதா? - முன்னாள் அமைச்சர் சம்பிக கேள்வி Published By: Vishnu 03 Mar, 2026 | 04:25 AM (எம்.மனோசித்ரா) அமெரிக்கா கடந்த ஜனவரி மாதத்திலேயே தனது பாரிய போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது. கோடிக்கணக்கான டொலர்களை செலவிட்டு அமைதியாக இருப்பதற்காகவா அந்தப் போர்க்கப்பல்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன? அமெரிக்காவின் இந்த முன்னெடுப்புக்கள் குறித்து அரசாங்கத்துக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லையா என முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டின் பல பகுதிகளில் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே மக்கள் இவ்வாறு வரிசைகளில் காத்திருக்கின்றனர். சாதாரண பொதுமக்களுக்கு இருக்கும் இந்த விழிப்புணர்வும் அச்சமும் அரசாங்கத்திடம் ஏன் இல்லை? அமெரிக்கா கடந்த ஜனவரி மாதத்திலேயே தனது பாரிய போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது. கோடிக்கணக்கான டொலர்களை செலவிட்டு அமைதியாக இருப்பதற்காகவா அந்தப் போர்க்கப்பல்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது எவருக்கும் புரியும் விடயமாகும். கடந்த காலங்களில் வெனிசுவேலா போன்ற நாடுகளிலும் இவ்வாறான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். உலகளாவிய ரீதியில் இவ்வாறான போர் அபாயங்கள் தெரிந்திருந்தும், அதற்கு முகங்கொடுக்க அரசாங்கம் போதிய எரிபொருள் இருப்புகளை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 10 இலட்சம் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய்க்கு இதுவே பிரதான வழியாகும். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் இளைஞர், யுவதிகள் தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். போர் வெடித்தால் அங்குள்ள எமது மக்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. ஈராக் - குவைத் போரின் போது இலட்சக்கணக்கான இலங்கையர்கள் அகதிகளாக மாறியதையும், இந்தியா போன்ற நாடுகள் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பித் தமது மக்களை மீட்டெடுத்த போது, இலங்கை அரசாங்கம் முறையான திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை. இம்முறையும் அத்தகையதொரு இக்கட்டான நிலை ஏற்பட்டால் அரசாங்கத்திடம் என்ன திட்டம் இருக்கிறது? அரசாங்கம் இயற்கை அனர்த்தங்களை கையாண்ட விதம் அதிருப்திக்குரியது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் கூட முறையான தங்குமிடங்கள் இன்றி கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கம் சமூக ஊடகங்களில் வீடுகள் கட்டுவது போலவும், பாதைகளை அமைப்பது போலவும் விளம்பரம் செய்தாலும், கள நிலைவரம் முற்றிலும் வேறாக உள்ளது. சுனாமி அனர்த்தத்தின் போது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத நிறுவனங்கள் ஒன்றிணைந்து மிக விரைவாக வீடுகளைக் கட்டி முடித்தமை அனைவருக்கும் நினைவில் இருக்கும். தற்போது அரசாங்கம் அத்தகைய உதவி வழங்கும் நிறுவனங்களை ஊக்குவிப்பதில்லை. தாமே அனைத்தையும் செய்வதாகக் கூறி எதையும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இறுதியாக, வீதியில் மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் எரிபொருளுக்காகக் காத்திருக்கும் சாதாரண மக்களுக்கு இருக்கும் அறிவு கூட அரசாங்கத் தலைவர்களுக்கு இல்லை. ஜனவரி மாதத்திலிருந்தே அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் விளைவாகவே இன்று மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வரும் நாட்களில் நாடு ஒரு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் என எச்சரிக்கின்றோம் என்றார். அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது ஏன் என அரசாங்கத்துக்கு தெரியாதா? - முன்னாள் அமைச்சர் சம்பிக கேள்வி- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Sahibzada Farhan இதுவரை இத்தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்து முன்னிலையில் இருக்கிறார். அவரும் தண்டப்பணம் கட்டுவது சரியில்லை போல தெரிகிறது- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் மோதல் நீடிக்கும் : இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் - டிரம்ப் Published By: Vishnu 03 Mar, 2026 | 04:57 AM ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், இந்த இராணுவ நடவடிக்கைக்கு மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளதாக கூறினார். அதன்படி, ஈரானின் ஏவுகணை அமைப்புகள் மற்றும் திறன்களை முற்றிலுமாக அழித்தல், ஈரானிய கடற்படையை செயலிழக்கச் செய்தல், மேலும் ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதே முக்கிய இலக்குகள் என விளக்கினார். “இந்த ஆட்சியால் உருவாகும் அச்சுறுத்தல்களை நீக்குவதற்கான கடைசி மற்றும் சிறந்த வாய்ப்பு இதுவே” என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் குறிப்பிட்டார். ஈரான் மோதல் நீடிக்கும் : இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் - டிரம்ப்- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
காமனெயி கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சர்தார் அயாஸ் சாதிக் (கோப்புப்படம்) இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் 'ஆழ்ந்த இரங்கலை' தெரிவித்துள்ளார். இரானிய மக்களுடன் துணைநிற்பதாக தெரிவித்துள்ள அவர், மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமையை 'தீவிரமானது மற்றும் கவலைக்குரியது' என்று விவரித்தார். இது "சர்வதேச சட்டத்தை மீறிய செயல்" கூறிய அவர், நாட்டுத் தலைவர்களை நேரடியாக குறிவைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார். பிராந்தியத்தில் நடந்து வரும் மோதல்கள் உலகம் முழுவதும் உறுதியற்ற தன்மை, பதற்றம் மற்றும் பெரும் மோதல்களின் அபாயத்தை அதிகரிக்கக் கூடும் என்று அவர் கூறினார். "இந்த கடினமான நேரத்தில் நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் இரான் மக்களுடன் துணை நிற்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார். காமனெயி கொல்லப்பட்டது குறித்து பாகிஸ்தான் கூறியது என்ன? காமனெயி மறைவு குறித்த தனது அறிக்கையில் வங்கதேசம் கூறியது என்ன? பட மூலாதாரம்,X/@BDMOFA இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மறைவுக்கு வங்கதேச அரசு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "' ஆயதுல்லா அலி காமனெயி இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து வங்கதேச அரசு வருத்தமடைந்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின்படி, "இது சர்வதேச சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறும் செயலாகும். இரான் நாட்டின் சகோதரத்துவ மக்களுக்கு வங்கதேச அரசு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது." மேலும், அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ள வங்கதேசம், "மோதல்கள் எந்தத் தீர்வையும் தந்துவிடாது. பேச்சுவார்த்தை, பரஸ்பர மரியாதை மற்றும் சர்வதேச சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே சர்ச்சைகளுக்குத் தீர்வு காண முடியும்," என்று கூறியுள்ளது. முன்னதாக, சீனா மற்றும் ரஷ்யாவும் ஆயதுல்லா அலி காமனெயி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தன. சீனா இச்சம்பவத்தை "ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது" என்று அழைத்தது; அதே நேரத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இதனை "மனித அறநெறிக்கும் சர்வதேச சட்டத்திற்கும் எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளார். காமனெயி மறைவு குறித்த தனது அறிக்கையில் வங்கதேசம் கூறியது என்ன?- நாட்டில் அவசரகால நிலைமை மீண்டும் நீடிப்பு ; ஜனாதிபதி செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
நாட்டில் அவசரகால நிலைமை மீண்டும் நீடிப்பு ; ஜனாதிபதி செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு Published By: Vishnu 03 Mar, 2026 | 04:37 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் அமுலிலிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பிப்ரவரி 28ஆம் திகதியிலிருந்து மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அவசரகால நிலைமை நீடிக்கப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு, பொது அமைதியைப் பேணுதல் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்விற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைத் தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய அவசரகாலச் சூழலைக் கருத்திற்கொண்டு இந்த நீடிப்பு அவசியமானது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதுடன், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என ஜனாதிபதி முன்னதாகவே உறுதியளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதற்கு முன்னர் 15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டிருந்த தனித்துவமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள், நீர் வழங்கல், உணவு விநியோகம், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அலுவலகங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், நீர்ப்பாசனம், தொலைத்தொடர்பு, தபால் மற்றும் ஊடக சேவைகள், நிலச்சரிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதிச் சேவைகள் ஆகிய துறைகள் அத்தியாவசிய சேவைகளாகத் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளன. இந்த மீளறிவித்தல் மூலம், அவசரகால நிலைமை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் குறித்த அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவை விதிமுறைகளின் கீழ் தடையின்றி இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/240001- புதிய அரசியலமைப்பு : தமிழ் மக்களின் ஒருமுக தீர்மானம் அவசியம் - தமிழ் சட்டத்தரணிகள் பேரவை திறந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு
வடகிழக்கு தமிழ் கட்சிகளிடையே கொள்கை ரீதியான இணக்கம் ஆரம்பம்; தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பில் முக்கிய நகர்வு Published By: Vishnu 02 Mar, 2026 | 09:59 PM (க.சிவலிகமூர்த்தி) தமிழ் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக சிதறிக்கிடக்கும் தமிழ் கட்சிகளின் பலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலமான முறையில் முன்னிறுத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (02) இடம்பெற்றது. வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை ஒரு பொதுவான சட்டக் கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைத்து இனப்பொதுப் பிரச்சினைக்கான தீர்வினை நோக்கிய பயணத்தை வேகப்படுத்துவதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும் என தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் தெரிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள துவாரகா மண்டபத்தில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையே திங்கட்கிழமை (02) நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்; தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சிதையாமல் பாதுகாப்பதற்கும் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் ஒருமித்த குரலில் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் இவ்வாறானதொரு மேடை அவசியமாகின்றது. வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்றக் கட்சிகள் யாவும் ஒரு சில முக்கியமான விடயங்களில் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்தச் சந்திப்பானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு மூடிய அறை கூட்டமாக அமைந்திருந்ததுடன் அங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் அந்தந்த அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகக் கருதப்படும். வரும் காலங்களில் மிக விரைவில் மீண்டும் கூடி பிரதானமான பல முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளதாக சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் மேலும் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கருத்தைப் பகிர்கையில் இது ஒரு வெற்றியென்பதை தாண்டி ஒரு தொடக்கம் மாத்திரமே. இனப் பிரச்சினை சம்பந்தமாக ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தமிழ் கட்சிகள் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் அதன் நுணுக்கமான விபரங்கள் குறித்து இனிவரும் சந்திப்புகளில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இக்கூட்டம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. நீண்டகாலமாக நிலவும் இனப் பிரச்சினைக்கு அரசியல் சாசனம் ஊடாகத் தீர்வு காண்பதற்கான தொடர்ச்சியான நகர்வாக இது அமைவதோடு தமிழ் கட்சிகள் யாவும் ஒரே சட்டக் குடையின் கீழ் ஒன்றிணைந்திருப்பது ஒரு பாரிய வெற்றி எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கூறுகையில் இச்சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றது. இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அடுத்தகட்டச் செயற்திட்டங்கள் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையே மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை இனிவரும் காலங்களில் தமிழ் கட்சிகளை இணைக்கும் பாலமாகச் செயற்பட வேண்டும். தனித்தனியாகப் பிரிந்து நின்று செயற்பட்ட நிலையை மாற்றி மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் ஒரே குரலில் சொல்ல வேண்டிய காலம் கனிந்துள்ளதாகவும் இக்கூட்டு முயற்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஒரு பலமான செய்தியைச் சொல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார். திங்கட்கிழமை (02) இச்சந்திப்பில் அரசியல் பிரமுகர்களாக சிவஞானம் சிறீதரன் எம்.ஏ.சுமந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர். தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான சட்டத்தரணி க.ச.இரத்தினவேல் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரன் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா சட்டத்தரணி வ.ச.நிரைஞ்சன் சட்டத்தரணி ஞா.கா.ரனித்தா மற்றும் சட்டத்தரணி ம.யூட் தினேஷ் உள்ளிட்ட முக்கிய சட்ட வல்லுநர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். இந்தச் சந்திப்பானது நீண்டகாலமாகத் தனித்தனியாகப் பயணித்த தமிழ் அரசியல் சக்திகளை ஒரு பொதுவான இலக்கின் கீழ் கொண்டு வருவதற்கான முதல் படியாக அமைகின்றது. தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் நடுநிலையான வழிகாட்டலில் எட்டப்பட்டுள்ள இந்த ஆரம்பகட்ட இணக்கப்பாடானது வரும் காலங்களில் ஒரு பலமான அரசியல் அழுத்தக் குழுவாக உருவெடுக்க வழிவகுக்கும். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விபரமான ஆவணங்களைத் தயாரித்து அடுத்தகட்டச் சந்திப்புகளில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடகிழக்கு தமிழ் கட்சிகளிடையே கொள்கை ரீதியான இணக்கம் ஆரம்பம்; தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பில் முக்கிய நகர்வு- தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
கொழும்பிலை இதை பேசுவதற்கு ...ஒரு தில்லு வேணும் ...உங்களுக்கு இருக்கா..- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்கா, ஈரான் மீது ஒரு மரபுவழி சமர் ஒன்றினை நடாத்தும் பலம் கொண்ட நாடல்ல என்று கூறியிருந்தேன், தற்போது அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுத்தாக்குதல் வெறுமனே மிக திட்டமிட்ட முக்கிய இலக்குகளை வான் தாக்குதல் மூலம் மேற்கொள்ளுகின்றது, இது ஒரு வகை அதிரடித்தாக்குதல் போல இருந்தாலும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்கள். அமெரிக்க அதிபர் 4 வார தாக்குதல் என கூறியிருந்தாலும் 4 வாரங்கள் வரை அத்தாக்குதல் செல்லுமா எனத்தெரியவில்லை. இதற்கு பதிலழிக்கும் ஈரான் தாக்குதலும் அமெரிக்க படைகள் பொருளாதார இலக்குகள் என அதே வான் வழித்தாக்குதல்கள்தான். இத்தாக்குதல் மூலம் அமெரிக்க இஸ்ரேலிய கூட்டு எதிர்பார்க்கும் இலக்கு என்ன? ஆட்சி மாற்றம்? கொஞ்சநாள் பொறுத்திருந்தாலே போதும் (கமேனியின் மூப்பு நிலை), எதற்காக இந்த முயற்சி? இப்போதும் அதே கட்சியே மீண்டும் புதிய ஒருவரை நியமிக்கும், அதன் போக்கு எப்படி என தெரியாது. அமெரிக்க அதிபரோ அல்லது இஸ்ரேலிய அதிபர் உள்நாட்டு அரசியல் நலனிற்காக இந்த தாக்குதலை செய்கிறார்களோ தெரியவில்லை. வெறும் ஆகாயத்தாக்குதல் செய்யும் இரு தரப்பில் மிக துல்லியமான நவீன உளவுத்தகவலோடிணைந்த மட்டுப்படுத்தப்பட்ட அதிரடித்தாக்குதலை நடத்துவதில் அமெரிக்கா தற்போதும் முன்னிலையில் நிற்கின்றது ஆனால் அதனை ஒரு முழு இராணுவ பலத்திற்கான அளவீடாக எடுக்கமுடியுமா என தெரியவில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் நிர்வாகம் பாகிஸ்தான் வீரர்களுக்கு தண்டப்பணம் விதித்திருக்கிறதாம். ஒவ்வொரு வீரருக்கும், ஐந்து மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (18000 அமெரிக்க டாலர்)- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்களுக்கு எல்லாரையும் தெரியும் என்று பார்த்தேன். பார்ப்போம் பதில் சொல்கிறாரோ என்று.- ''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது - எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' - எலான் மஸ்க்
சீனாவின் தொழில் நுட்ப வளர்ச்சி மிக வேகமாக இருக்கின்றது. இதை ஆசிய ஆபிரிக்க நாடுகளில் காணலாம். இலங்கையில் நேரடியாகவே காணலாம். மேம்பாலங்கள் உட்பட அதி வேக சாலைகள்,நவீன வீதிகள்.....வானுயர்ந்த கட்டடங்கள், சுற்றுலா தளம் உட்பட.... எல்லாம் சீனா தயாரிப்புகள். ஈழத்து தமிழ் அரசியல்வாதிகள் விழித்துக்கொள்வார்களாக........ எழுத பென்சிலும் கொப்பியும் தரும் நாட்டை நம்பாதீர்கள்.- லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
அந்த 50 கிராமத்து லெபனான் மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? துல்லிய தாக்குதல் செய்யும் தொழில் நுட்பம் இருந்தும் அப்பாவி மக்கள் அவலப்படுவதை இந்த உலகம் அனுமதிக்க கூடாது. - சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.