Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. Sumitha Panneerselvam கஞ்சியில... பென்சில் சீவின தூள் போட்டு பார்த்தால், அழி ரப்பர் வரும். ############### سدام حسين நாம் ஆட்சிக்கு வந்தால் wine shop மூடப்படும். ############### Pradhisha V முடிய வெட்டி, வாழை மரத்துக்கு கீழ மறைச்சு வச்சா... நிறைய வளரும். ############### Sam Santhakumar விழுந்த பல்லை வானத்துக்கு காட்டினால் திரும்ப முளைக்காது.. அந்த பல்லை சாணியில வைத்து கூரை மேல எறிஞ்சாதான் முளைக்கும். ############### Gowtham Balamurugan நீ இருக்க அழகுக்கு சீமையிலிருந்து தான் பொண்ணு வருவாள். தோள்ல கை போட்டால்... வளர மாட்டோம். ############### Pothigai Pugal வீட்டு தாழ்பாளை ஆட்டினால், சண்டை வரும். ############### ராஜ ராஜா அரிசி தின்றால், கல்யாணம் அன்று மழை வரும். ############### Mahi நீ நல்லவன் டா. உன் நல்ல குணத்துக்கு நல்ல பொண்ணா கிடைக்கும்டா. ############### Sankar Thala இலவசம் தருபவர்களுக்கு ஓட்டு போட்டால் நாடு முன்னேறும். ############### Saleem Saleem ரஜினி அரசியலுக்கு வர போறாரு...
  3. கடந்த வாரம் பிரித்தானியா பணமுறியின் யீல்ட் அமெரிக்க பணமுறியின் யீல்டினை விட அதிகரித்தற்கு காரணமாக பணமுறியினை முதலீட்டாளர்கள் விற்று வெளியேறுவது காரணம் என கூறுகிறார்கள். 2008 இல் இருந்ததனை போல அதிகமாக உள்ளதாக (அல்லது அதிகமா என நினைவில்லை) கூறுகிறார்கள். அந்த தாக்குதலுக்கு மூல காரணமாக CIA இனை இரஸ்சியர்கள் குற்றம் சாட்டினார்கள், CIA; உக்கிரேன் செய்யவில்லை என அதற்கு பதிலழித்திருந்ததாக நினைவுள்ளது, தற்போது அலி காமெனியினை பேச்சுவார்த்தை நடாத்திக்கொண்டிருக்கும் போதே கொன்றுள்ளார்கள், அதற்கு முன்னர் கடந்த வருடமும் பேச்சுவார்த்தை காலத்திலேயே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
  4. பயணம் போகும் நாளன்று காலையில் எழுந்து தோய்ந்துவிட்டு எட்டு மணிக்குப் பக்கத்தில் இருக்கும் இந்திய உணவகத்துக்குச் சென்று உணவருந்திவிட்டு மீண்டும் வந்து அறையுள் அடைகிறேன். சாதாரணமாக வெளியில் சென்று பார்ப்போமா என்று எண்ணிவிட்டு, பிறகும் வேண்டாம் என முடிவெடுக்கிறேன். ஏனெனில் பயணப் பொதிகளுள் இடம்தான் இல்லையே. வீணாக பணம் கொடுத்து வாங்கி கடந்த ஆண்டுபோல் எதற்காக விமான நிலையத்தில் விட்டுவிட்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொள்ள போன் ஒன்று வருகிறது. புதிய இலக்கமாக இருக்க யார் என்கிறேன். “மடம் நான் வரவேற்பில் இருந்து பேசுகிறேன், இன்னும் எத்தனைநாள் நிற்கப் போகிறீர்கள்” “நேற்றே இன்று ஒருமணிக்குப் போகவேண்டும் என்று சொன்னேனே” “உங்களுக்கு விமானநிலையம் போக வாகனம் வேண்டுமா” “எவ்வளவு எடுக்கிறீர்கள்” “12000 ரூபாய்கள்” “வேண்டாம். நானே ஒழுங்குசெய்துகொள்கிறேன். நன்றி” என்றுவிட்டு பிக்மீயில் பெரிய கார் போட 4500 ரூபாய்கள் என்று வருது. பக்கத்துக் கடையில் ஏதும் உணவு வாங்கிக்கொண்டு போவோமா என எண்ணிவிட்டு, வேண்டாம் விமான நிலையத்திலேயே வாங்கிக்கொள்வோம் என எண்ணி எதையும் வாங்கவில்லை. 12.45 இற்கு நான் கிளம்பவேண்டும். எனது பொதிகளைத் தூக்கிவர யாரையாவது அனுப்புகிறீர்களா என்றுவிட்டு சிறிய பொதியைத் தூக்கிக்கொண்டு வெளியே வர, இருவர் வாசலில் வந்து நிற்கின்றனர். கீழே சென்று திறப்பைக் கொடுத்தபின் பிக்மீக்குப் பதிய ஏழு நிமிடங்களின் பின் அந்தக் கார் வர, பொதிகள் மூன்றையும் ஏற்றிவிட்டபின் நானும் ஏறி அமர்கிறேன். விமான நிலையத்தில் பெரிதாகச் சனங்கள் இருக்கமாட்டார்கள் என்று எண்ணியிருக்க உள்ளே செல்லும் வாசலில் ஒரே சனம். பொதிகளைக் கொண்டு உள்ளே சென்று ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பகுதியில் இரு பெரிய பொதிகளையும் ஒப்படைத்து போடிங்பாஸ் வாங்கியபின் “உங்கள் பொதிகள் ரியாத்துக்கு வராது. நேரடியாக யூகே சென்றுவிடும். நீங்கள் அங்கு சென்றபின் உங்கள் பொதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றவுடன் நானும் சரி என்றுவிட்டு டியூட்டிஃப்ரீ யில் ஏதாவது வாங்கலாம் என்று பார்த்தால் எல்லாம் சரியான விலை. ஒரு உலர் தேயிலைப் பக்கற் மட்டும் வாங்கிக்கொண்டு போய் ஒரு இருக்கையில் அமர்கிறேன். விமான வாயிலுக்குச் செல்ல நேரம் இன்னும் நிறைய இருக்க, ஏதாவது உண்ணலாம் என்னும் எண்ணம் எழுகிறது. இரண்டு மூன்று கடைகளைப் பார்த்தால் எதுவும் பிடிக்கவில்லை. நான்காவது கடையில் ஓர் சிக்கன் சலாட் மற்றும் ஒரு கோப்பியும் ஓடர் செய்ய, 11 டாலர் வர BOC வங்கி அட்டை மூலம் பணம் செலுத்திவிட்டு வருகிறேன். விமானம் புறப்பட இன்னும் இரண்டரை மணிநேரம் இருக்க மெதுவாக சூட்கேசை இழுத்தபடி இலக்கம் 8 ஐத் தேடியபடி சென்றால் பெரிதாக யாரையும் காணவில்லை. போனை சார்ஜ் செய்ய வசதியாக ஒரு இருக்கையில் அமர்ந்து போனைப் பார்க்க நேரம் போனதே தெரியவில்லை. சாதாரணமாக ஒரு முக்கால் மணிநேரம் இருக்கும்போதுதான் அதற்குரிய மண்டபத்தைத் திறப்பார்கள். அன்று ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னரே திறந்துவிட நானும் இன்னும் சிலரும் மட்டும் உள்ளே சென்று அமர்கிறோம். போரின் பயத்தில் ஆட்கள் போகவில்லையோ என்று எண்ணியபடி போனில் மூழ்கியிருக்க, என் இருக்கைக்குப் பக்கத்தில் ஒருவர் வந்து அமர்வது தெரிகிறது. திரும்பிப் பார்க்க, ஒரு பெண் என்னைப் பார்த்து சிரித்தபடி இதில் அமரலாம்தானே என்கிறார். நான் தாராளமாக என்று கூறிச் சிரித்தபடி எந்த நாட்டுக்குச் செல்கிறாய் என்கிறேன். “நான் ரியாத்தில் வேலைக்காகச் செல்கிறேன்” “ஓ நீண்ட நாட்களாக அங்கு வேலை பார்க்கிறாயா? “14 ஆண்டுகளாகச் செய்கிறேன். ஆனால் இது புதிய வேலை” “பழைய வேலை என்னவாயிற்று” “இம்முறை நான் ஆறு மாதங்கள் நாட்டில் நின்றுவிட்டேன். தொடர்ந்து வேலை செய்வதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை நாட்டுக்கு வந்து போகும்போது பழைய வேலை இல்லாமற் போய்விடும்” “உனக்கு எத்தனை குழந்தைகள்? “எனக்குக் குழந்தைகள் இல்லை. 53 வயதாகிறது” “உன் கணவர் வேலை செய்வதில்லையா? “அவர் செய்யும் வேலையில் நிறையப் பணம் வராது” “குழந்தைகள் இல்லாதபடியால் உனக்கு பெரிதாகச் செலவு இருக்காதுதானே. ஏன் உள் நாட்டிலேயே ஒரு வேலை தேடிக்கொள்ள முடியாதா? “எனக்கு சின்னதா ஒரு வீடு காட்டவேண்டும் என்று நீண்டநாள் ஆசை. முன்னர் பத்து இலட்சங்கள் சேர்த்து வைத்து ஒரு முகவர் நியூசீலாந்தில் வீடுகள் மலிவு, அங்கு நீ ஒரு வீடு வாங்கினால் அங்கு போவதற்கு விசாவும் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார். இப்ப திரும்பவும் இலங்கையில் வீடுகட்டப் பணம் சேர்க்கிறேன்” “பணத்தை நீயே வைத்திருப்பாயா அல்லது...... “ “ என் கணவரின் வங்கி இலக்கத்துக்கு மாதாமாதம் அனுப்பிவிடுவேன்” “ கணவர் செலவழிக்காமல் பத்திரமாக வைத்திருப்பாரா” அதெலாம் வைத்திருப்பார். நான் அனுப்பும் பணத்தில் எதையும் வீணாக்குவதில்லை. ஆனால் உறவினர்கள் அயலவர்கள் எப்போதும் கடன் கேட்டபடிதான் இருப்பார்கள். இல்லை என்று சொன்னால் கதைக்கவும் மாட்டார்கள்” தமிழர்கள் என்றால் என்ன சிங்களவர் என்றால் என்ன. பண விடயத்தில் எல்லோரும் ஒரேமாதிரித்தான் போல. பாவம் இந்தப் பெண் என எண்ணியபடி கதைப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அரைவாசி இடங்கள் நிறைந்துவிட்டன. இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு. நான் கணவருக்கும் ஊரில் இருப்பவர்களுக்கும் போன் செய்து இன்னும் அரை மணித்தியாலத்தில் கிளம்பிவிடுவேன் என்றதும் ரியாத் போய்ச் சேர்ந்த பிறகு போன் செய் என்றபடி முடிக்க, நான் அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்தால் அவர் இன்னொருவருடன் கதைப்பது தெரிய சுற்றுமுற்றும் பார்க்க இரண்டுநாட்களின் முன் கட்டார் ஏயார்வேஸ் நிறுவனத்தின் முன்னால் கண்ட பல முகங்கள் தெரிகின்றன. விமானத்தில் ஏறி அமர்ந்தால் யன்னல் ஓரத்தில் ஒருவரும் மற்றப் பக்கம் நானும் நடுவில் ஒரு இருக்கை வெறுமையாகவும் இருக்க, கடவுளே ஒருவரும் எனக்குப் பக்கத்தில் வரக்கூடாது என்ற என் நேர்த்தியை சனீஸ்வரர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் விமானம் முழுவதும் ஆட்களால் நிறைந்துவிட்டது. ஐந்தரை மணித்தியாலத்தின் பின் விமானம் தரையிறங்க விமான நிலையம் கண்ணில் படவில்லை. நாம் இறங்கியவுடன் பஸ்சில் ஏற்றிக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீற்ரர் தொலைவில் உள்ள விமான நிலையத்தில் கொண்டுபோய் விட வேறு விமானங்களுக்கு மாறுபவர்களின் வரிசை சிறிதாகவும் அந்த நாட்டுக்குள் பிரவேசிப்பவர்கள் நீண்ட வரிசையிலும் காத்திருக்கிறார்கள். எமக்கு புதிய போடிங் பாஸ் அங்குதான் தரப்படுகிறது. எமக்கு இன்னும் ஆறு மணிநேரம் இருக்கிறது. ஏற்கனவே இரவானதால் குளிர். அதைவிட எல்லா இடத்திலும் ஏசி போட்டு நடுக்கம் வராத குறை. கணவர் பிள்ளைகளுக்கு இங்கு வந்து சேர்ந்ததைச் சொல்வோம் என்றால் நெட்வேர்க் வேலைசெய்யவில்லை. அவர்களின் Wi-Fi கூட சரியாக வேலை செய்யவில்லை. பலதடவை போன் செய்தும் நான் கதைப்பது கணவருக்குக் கேட்கவில்லை. அவர் கூறுவதும் எனக்குக் கேட்கவில்லை. சரி மெசேஜ் போட்டுவிடுவோம் போனால் போகட்டும் என எண்ணியபடி Wi-Fi ஐ நிறுத்திவிட்டு மெசேஜ் போட்டால் அது போய்விட்டது. போனை மூடி வைத்துவிட்டு ஒரு இரண்டு மணிநேரம் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பசியெடுக்க ஆரம்பிக்கிறது. விசர் வேலை பார்த்தது. உண்பதற்கு ஏதும் வாங்கி வந்திருக்கலாம். விமானத்தில் முன்னர்போல் திருப்தியாக உண்பதற்கு உணவு தருவதில்லை. இன்னும் நான்கு மணிநேரம் பசியோடு இருக்க முடியாது என எண்ணிக்கொள்கிறேன். நான் இருந்த இருக்கையின் பக்கத்தில் ஒரு வயதான கணவன் மனைவி அமர்ந்திருக்க நீங்கள் எங்கு செல்கிறீர்கள் எனப் பேச்சுக்கொடுக்க தாமும் UK செல்வதாகக் கூறிவிட்டு மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருக்கின்றனர். என் இடத்தைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் உணவு வாங்கிக்கொண்டு வருகிறேன் என்றபடி கழுத்துக்கு வைக்கும் தலையணையை நான் இருந்த இடத்தில் வைத்துவிட்டு எனது சூட்கேசைத் தள்ளியபடி ஒரு சிறிய உணவகத்துக்குச் செல்கிறேன். சாண்ட்விச், சலாட் மற்றும் ஹாட் சொக்ளற் என்று கூற 17 dollars என்கின்றார் அந்தப் பெண். நான் என் பாங்க் காட்டைக் கொடுக்க அந்தப் பெண் காட் ரீடரில் போட்டால் டிக்கிளைண்ட் என்று வருகிறது. அதில் போதிய பணம் இருக்கிறது மீண்டும் போடுங்கள் என்கிறேன். மீண்டும் போட அப்படியே வர அந்தப் பெண் பக்கத்தில் நின்ற ஒருவருடன் ஏதோ குசுகுசுக்க அவர் காட்டை வாங்கிப் பார்த்துவிட்டு உங்கள் காட் ஒரு மாதத்தின் முன்னரே முடிந்துவிட்டது என்றபடி காட்டை எனக்குத் தர, நான் நம்பாமல் வாங்கிப் பார்க்கிறேன். அவனமானம் ஒருபுறம் இந்த எளிய மனிசன் புதிய காட் வந்ததை எனக்குச் சொல்லவில்லை என்று மனிசன்மேல் கோபமும் வர, மன்னியுங்கள் நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். பவுண்ட்ஸ் எடுப்பீர்கள் தானே என்கிறேன். அந்தப் பெண் நோ என்கிரா. எனக்கு சரியான பசி. மற்றைய நாடுகளில் UK பவுண்டஸ் எடுப்பார்கள். நீ ஏன் மாட்டேன் என்கிறாய் என்று கேட்க பக்கத்தில் நின்றவர் சரி எடுக்கிறேன். ஆனால் மிகுதி தரமாட்டோம் என்கிறார். நீ மிகுதி தரவேண்டாம். எனக்கு உணவைக் குடு என்கிறேன். இவ்வளவு உணவும் எத்தனை பவுண்ட்ஸ் வருகிறது என்று போனில் பார்த்தால் 12.70 பவுண்டஸ் என்று காட்ட, அட மிகுதி ஏழு பவுண்டஸ் வீணாகப் போகிறதே என எண்ணியபடி ஒரு கேக் மற்றும் யூஸ் எடுத்துவிட்டு 20 பவுண்ஸ் கொடுத்து உணவுகளை வாங்கிக்கொண்டு வர அந்தக் கணவனும் மனைவியும் பிஸ்கற் உண்டு கொண்டு இருக்கின்றனர். நான் என் உணவுகளை உண்டுவிட்டு கோப்பியைக் குடித்தபின் கேக்கையும் யூசையும் சூட்கேசுள் வைத்துப் பூட்டிவிட்டு சுற்றுமுற்றும் பார்க்க அங்கு பல இருக்கைகள் காலியாக இருக்கின்றன. சதுரமாக பெஞ்சுகளும் சிறிது தூரத்தில் போடப்பட்டிருக்க இரு பெண்கள் போர்வையால் போர்த்துக்கொண்டு படுத்திருக்க, எதுக்கும் நானும் படுப்போம் என எண்ணியபடி பக்கத்து முதியவர்களுக்கு நான் அந்த பெஞ்சில் போய் இருக்கப்போகிறேன். நீங்களும் வாருங்கள். இந்தக் கதிரையிலும் அது வசதியாக இருக்கும் என்று கூற அவர்களும் எழுந்து வருகின்றனர். அந்த முதியவர் போனைப் பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பெண் அவரின் தோளில் சாய்ந்து தூங்க, நான் காலை மடக்கியபடி என் கைப்பையை தலைமாட்டில் வைத்து அதன் மேல் தலை வைத்தபடி சூட்கேசை ஒருகையால் பிடித்தபடி கோழித்தூக்கம் போடுகிறேன். ஆனாலும் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பேன் போல. என்னை யாரோ தட்ட திடுக்கிட்டு விழித்தால் அந்தப் பெண்மணி. எமது விமானம் வேறு இடத்தில் என்று அறிவித்தார்கள். அதுதான் எழுப்பினேன் என்று அவர் கூற நான் எழுந்து என் பொதியையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு நேர அட்டவணை இருக்கும் இடத்திற்குச் சென்று பார்க்கிறேன். வேறு பலரும் எமக்கு அருகே வந்து நின்று பார்க்கின்றனர். எமது விமானம் இரண்டுமணி நேரம் இன்னும் பிந்தும் என்று போட்டுள்ளார்களே அன்றி வேறு எந்த விபரமும் இல்லை. இன்னும் மூன்று மணி நேரம் இருக்கே. பிறகுதான் போடுவார்கள். சும்மா இதில நின்று எந்தப் பிரயோசனமும் இல்லை. வாங்கோ போய் இருப்பம் என்றபடி நாம் இருந்த இடத்துக்குப் போக, இரு ஆண்கள் அங்கு நீட்டி நிமிர்ந்து படுத்திருக்க வேறு பக்கமாகச் சென்று அமர்கிறோம். விமானநிலையம் பெரும்பாலும் வெறிச்சோடிப்போய் இருக்கு. இன்னும் இரண்டு வயதானவர்களும் எம்மோடு வந்து அமர்கின்றனர். அவர்களும் UK தான் போகிறோம் என்கின்றனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருக்க நேரம் போவது தெரியவில்லை. அடிக்கடி எழுந்து சென்று நேர அட்டவணையில் ஏதும் போடுகிறார்களா என்று பார்த்தால் இரண்டு மணி நேரத்தின் பின்னரே நாம் நான்காம் இலக்க மண்டபத்துக்குப் போக வேண்டும் என்று எல்லோரும் விரைந்து அங்கே செல்கிறோம்.
  5. மாணவருக்கு சைக்கிள், லேப்டொப், அம்மா உணவகம், மகளிர் உதவித்தொகை, நூறுநாள் வேலை என்பன வரவேற்கப்பட வேண்டிய நலத்திட்டங்கள். டிவி, பிரிட்ஜ் எல்லாம் அவரவர் உழைத்து வாங்க வேண்டியவை
  6. Today
  7. டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மருத்துவமனைக்கு விரைந்தனர். சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இரு முறை பதவி வகித்தவர் சோனியா காந்தி. இந்த நிலையில் இன்று இரவு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. நலம் விசாரித்த ராகுல், பிரியங்கா சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மகனும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ரா ஆகிய இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். தாயாரை சந்தித்து உடல் நலம் விசாரித்த ராகுல் காந்தி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ராஜ்யசபா எம்பியாக உள்ள சோனியா காந்தி, கடந்த ஜனவரி மாதம் சுவாச பிரச்சினைகள் காரனமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 79 வயதான சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். லோக்சபா எம்பியாகாவும் 5 முறை சோனியா காந்தி இருந்துள்ளார். மருத்துவர்கள் கண்காணிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அச்சப்படும் அளவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் கிளைமேட் மாற்றம் காரணமாக சோனியா காந்திக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. https://tamil.oneindia.com/news/delhi/senior-congress-leader-sonia-gandhi-admitted-to-hospital-784165.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் குற்றங்களை ஆண்டவரே மன்னியும்🪦⚰️
  8. நேற்று இதை பகிடியாக பகிர்ந்தேன். இன்று கிட்டதட்ட இதை பிபிசி உறுதி செய்கிறது. தம்பர் அறிவிக்க முன்னம் 110 க்கு மேல் நிண்ட எண்ணை விலை அறிவிப்போடு 97 க்கு வீழ்ந்தது. இப்படி நடக்கும் என பல மில்லியன் short பண்ணி பலமடங்கு இலாபம் கண்டுள்ளனர் சிலர். இப்படி விலைகுறைய எந்த முகாந்திரமும் இல்லாத போது தம்பரின் ஒரு போஸ்டில் விலை இப்படி சரிந்துள்ளது. பிகு அடேய் தம்பா…யாழில் நான் ஏதோ கொஞ்சம் கடுமையாக உன்னை பற்றி எழுதுவது உண்மைதான்…அதுக்காக இப்படியா செய்வது😱😭😂. ஒயில் லோங் எல்லாம் நக்கிட்டு போய்டேடா😂. BBC NewsOil traders bet millions ahead of Trump's Iran talks postMarket data shows the amount of oil trade rose before the US President said he would postpone attacks on Iran's power plants.
  9. 'நான் ஆட்சிக்கு வந்தால்...' - எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகள்! Vikatan EMagazine
  10. DavisLeon joined the community
  11. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்ட நிலையில் 10 தொகுதிகள் ஒதுக்கியது திமுக. திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் மூன்றாவது கட்சி தேமுதிக. Vikatan EMagazine
  12. ரோஜர் ஓட்டிய விமானம்! 50 ஆண்டுகள் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் Gen-X நண்பர்களுக்காக, ஒரு நனவிடை தோய்தல் பதிவு! தற்போது இளம் தலைமுறை ஒரு இசையைக் கேட்க வேண்டுமானால், எத்தனையோ வழிகள்: போனில் இருந்து நேராக செவி பன்னிக்கு, அல்லது புளூ ரூத் ஒலி பெருக்கிக்கு, காரின் ஸ்பீக்கர்களுக்கு என்று ஏராளமான வழிகள். இதெல்லாம், வராத 80 களில் எங்களுக்கு இசை என்றால் வானொலிப் பெட்டி தான். நான் நினைக்கிறேன் யாழ்ப்பாணத்தில் 1986 இல் மின்சாரம் முற்றாக நின்று போனது, பின்னர் 1987 - 89 இல் இந்திய இராணுவம் வந்த பின்னர் பகுதி நேரமாக வந்த மின்சாரம், மீண்டும் 91 இல் இல்லாமல் போய் விட தொலைக்காட்சிப் பெட்டிகள் வீடுகளில் தூசி படிந்து தூங்க ஆரம்பித்தன. மின்கலத்தில் இயங்கக் கூடியவை என்பதால், வானொலிப் பெட்டிகள் வீடுகளில் முக்கியமான ஒலியெழுப்பும் உபகரணங்களாக இடம் பிடித்தன. ஒரு பழைய கால பக்கிஸ் பெட்டி றேடியோ. இந்த வானொலிப் பெட்டிகளில் தான் எத்தனை வகைகள்? சில வீடுகளில், பாட்டன் காலத்து சுவர் மணிக்கூடு போலவே பெரிய பெட்டி ரேடியோக்களும் பாவனையில் இருந்தன. வானொலிப் பெட்டி கண்டு பிடிக்கப் பட்ட காலத்தில் உருவாக்கப் பட்டவையான வால்வு ரேடியோக்கள் (ரியூப் ரேடியோ என்றும் அழைப்பார்கள்) தான் இந்த பெரிய பெட்டி ரேடியோக்கள். இவை வால்வு (Valve) ரேடியோக்கள் என்று அழைக்கப் படக் காரணம், இந்த ரேடியோவின் முக்கியமான பாகம் கண்ணாடியினால் ஆன ஒரு குழாய் தான். இந்தக் குழாய் ஒரு திசையில் மட்டும் இலத்திரன்களைப் பாய அனுமதிக்கும், வெற்றிடம் நிரம்பிய குழாய் என்பதால் இதனை வால்வு என்றும் அழைப்பார்கள். இந்த வெற்றிடம் நிரம்பிய கண்ணாடிக் குழாயின் வழியே பாயும் மின்சாரத்தைக் கூட்டிக் குறைப்பதன் மூலம், வானொலிப் பெட்டி சிறைப்பிடிக்கும் சில ஆயிரம் வானலைகளில் (Radio waves) இருந்து சில அலைகளை மட்டும் ஒலியாக மாற்றும் விந்தை நிகழ்கிறது. வானலைகள் அடிப்படையில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் மின்காந்த அலைகள் தான். நாம் கண்ணால் காணும் வர்ணங்களைத் தாங்கி வரும் ஒளிக்கும், வானொலி அலைகளுக்கும் அவற்றின் அலை நீளம் (wave length), அதிர்வெண் (frequency), அவை தாங்கி வரும் சக்தி (energy) என்பவற்றில் தான் வேறு பாடுகள். குறைந்த சக்தி, நீண்ட அலை நீளம், குறைந்த அதிர்வெண் என்பன காரணமாக, வானொலி அலைகள் கட்டிடடங்கள் போன்ற தடைகளைத் தாண்டிப் பயணிக்க, ஒளி அலைகள் தெறித்தும், உறிஞ்சப் பட்டும் சிறு தூரத்திலேயே பயணத்தை முடித்துக் கொள்கின்றன. இப்படியாக தடைகளைத் தாண்டி வரும் வானொலி அலைகளை வாங்கிக் கொள்ளும் (receiver) வேலையைத் தான் வானொலிப் பெட்டி செய்கிறது. சில சமயங்களில், வாழ்க்கையில் எதையாவது விட்டு விலகி ஓடும் போது தான் நாம் நல்ல இடத்திற்குச் சென்று சேர்கிறோம். இதைப் போன்ற ஒரு நிலை தான் என்னுடைய பதின்ம வயதில் என்னை வானொலித் தொழில் நுட்பம் பற்றிக் கற்க வைத்தது. அந்தக் காலத்தில் தொழிற்கல்வி என்று ஒரு பாடம் 6 ஆம் வகுப்பிற்குப் பின்னர் எல்லோரும் எடுக்க வேண்டும். இரும்பு வேலை, மர (தச்சு) வேலை, விவசாயம், கணக்கியல் என்பவற்றோடு, வானொலி திருத்தவேலை (Radio mechanics) என்ற தெரிவும் எங்கள் கல்லூரியில் இருந்தது. தச்சு வேலை, இரும்பு வேலை, தானே வளரும் வாழை மரத்திற்கு வாய்க்கால் கட்டும் விவசாய வேலை என்பன குறித்து ஒரு ஆர்வம் வராமையாலும், பல்வேறு காரணங்களால் அக்கவுன்ரிங்கையும் தள்ளி விட்டு, வானொலி திருத்தும் வேலையில் நான் சரணடைந்தேன். “கரன்ட் இல்லாத ஊரில் வானொலித் தொழில் நுட்பம் கற்று என்ன செய்வது?” என்ற யோசனையால் போலும் வகுப்பும் ஒரு ஐந்து பேர்களுடன் சிறிதாகவே இருந்தது. றேடியோ, ரிவி, டெக் எல்லாம் திருத்தப் பழகலாம் என்று நாம் கனவில் இருக்க லிங்கன் மாஸ்ரர் (பாசையூரைச் சேர்ந்த ஒரு மாவீரரின் தந்தையார் இவர்) "உந்த உடைஞ்சதைத் திருத்துற வேலையெல்லாம் சரி வராது. நீங்கள் எல்லாம் றேடியோ தயாரித்துக் காட்ட வேணும், அது வேலை செய்ய வேணும்" என்று தன் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தார். எப்படி றேடியோ தயாரிப்பது? தற்காலத்தில் அமெச்சூர் வானொலி கிளப்புகள் என அழைக்கப் படும் ஆர்வலர் அமைப்புகள் ஏராளம் மேற்கு நாடுகளில் இருக்கின்றன. அவர்களுடைய இணையத் தளங்கள், சமூக ஊடகக் கணக்குகளில் போய்ப் பார்த்தீர்களானால் வானொலி தயாரிப்பது மிகவும் இலகு என்று புரிந்து கொள்வீர்கள். இதற்குரிய உதிரிப் பாகங்களைக் கூட இலகுவாக இணையச் சந்தைகளில் வாங்கி விடலாம். ஆனால், 80 களின் இலங்கையில், அதுவும் பொருளாதாரத் தடை காரணமாக மின்கலங்கள் கூட கிடைக்காத வடக்கில் வானொலி தயாரிப்பது சவாலான முயற்சி தான். ஆனால் ஒரு வானொலியின் அமைப்பு அடிப்படையில் 3 பகுதிகள் தான்: வானலைகளை உள்வாங்கிக் கொள்ளும் உணரி (அன்ரெனா), உள்வாங்கிய வானலைகளை தரம் பிரித்து, தரம் பிரித்ததைப் பெருப்பிக்கும் பகுதி, அந்த பெருப்பித்த வானலையை ஒலியாக வெளிவிடும் ஒலிப்பான் (ஸ்பீக்கர்). (இதை விட, வானொலி இயங்குவதற்கான மின்சக்தியை மின்கலம் கொடுக்கும் அல்லது ஏ.சி மின்சாரத்தில் இருந்து டி.சி மின்சாரமாக மாற்றும் மின்மாற்றி (ட்ரான்ஸ்போமர்) அந்த வேலையைச் செய்யும்). அன்ரெனா ஒரு பழைய செப்பு அல்லது அலுமினியக் கம்பி தான். ஸ்பீக்கரை, யாராவது கைவிட்ட பழைய வானொலிப் பெட்டியில் இருந்து கழட்டி எடுத்துப் பாவிக்கலாம். எனவே, வானொலிப் பெட்டி செய்வதானால் வானலைகளை சுத்தம் செய்து, பெருப்பிக்கும் அதன் மையப் பகுதி தான் மிக முக்கியமான பகுதி. ரியூப் அல்லது வால்வு தான் பழைய றேடியோக்களின் உயிர்நாடி. இந்த வானொலியின் உயிர் மையத்தை உருவாக்கும் முக்கியமான உதிரிப் பாகமாக 80 களில் ட்ரான்சிஸ்ரர் (transistor) இருந்தது. “ட்ரான்சிஸ்ரர் றேடியோ” என்ற சொல்லாடல் மூலம் தான் நாம் அனேகர் ட்ரான்சிஸ்ரர் பற்றி முதலில் அறிந்திருப்போம். ஆனால், இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த 1948 இல் மூன்று விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட ட்ரான்சிஸ்ரர், அதன் பின்னர் நிகழ்ந்த சகல விதமான இலத்திரனியல் சாதனைகளுக்குமான மூலைக்கல் என்று சொல்லலாம். குறை கடத்திகள் (semi-conductors) என்று அழைக்கப் படும் "பகுதியளவில்” மின்சாரத்தைக் கடத்தும் திண்மப் பொருட்கள் இருக்கின்றன. இவை பற்றிய ஆராய்ச்சியின் முக்கியமான விளைவாக ட்ரான்சிஸ்ரர் உருவானது. அது வரை றேடியோவின் முக்கிய பாகமாக இருந்த வால்வு செய்து வந்த வேலையை ட்ரான்சிஸ்ரர்க்ள் எடுத்துக் கொண்டன. ஒரு ட்ரான்சிஸ்ரர் என்பது அடிப்படையில் ஒரு சுவிட்ச் தான். எந்த விதமான அசையும் பாகங்களும் இல்லாமல், தன்னுள்ளே இருக்கும் அணுக்களின் முனைவுத் தன்மையை (polarity) மாற்றுவது மூலம், செக்கனுக்கு ஆயிரம்,பல்லாயிரம், இலட்சம் தடவைகள் “ON-OFF” ஆகும் ஒரு சுவிட்ச் தான் ட்ரான்சிஸ்ரர். ட்ரான்சிஸ்ரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வானொலிப் பெட்டியின் தரமும் அதிகரிக்கும். அந்தக் காலப்பகுதியில் 8 ட்ரான்சிஸ்ரர் றேடியோ தயாரிப்பது தான் உச்ச இலக்காக இருந்தது. ஆனால், 4 அல்லது 5 ட்ரான்சிஸ்ரர்களோடு, ஒரு சாதாரண றேடியோவைத் தயாரிக்கலாம். இத்தகைய சாதாரண றேடியோவைத் தான் நாம் வகுப்பில் படிப் படியாகத் தயாரித்தோம். ட்ரான்சிஸ்ரர், செப்புக் கம்பிகள், இன்ன பிற லொட்டு லொடுக்குச் சாமான்களையெல்லாம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த ஓரிரு மின்சாரப் பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கக் கூடியதாக இருந்தது. ஆனால், வாங்கிய பொருட்களை ஈயம் மூலம் ஒட்டி ஒரு வானொலிப் பெட்டியின் சுற்றுப் போல செய்வதற்கு ஒட்டுக் கருவி தேவை. மின்சாரத்தில் இயங்கும் சூடாக்கி ஒட்டும் கருவி (soldering iron) மின்சாரம் இல்லாத ஊரில் பயனற்றது. எனவே, சிரட்டையை எரித்து அதன் வெப்பத்தில் இயங்கும் ஒட்டும் கருவி தான் எங்கள் வானொலி தயாரிப்பிற்கு உதவியாக இருந்தது (சிரட்டை அயன் பெட்டி போல). தற்கால இலத்திரனியல் உபகரணங்களைக் கழட்டிப் பிரித்துப் பார்த்தீர்களானால் printed circuit board (PCB) எனப்படும் நேர்த்தியாக அமைக்கப் பட்ட பச்சை நிற அட்டைகள் இருப்பதைக் காணலாம். இதே போன்ற சுற்று அட்டைகளை போமிகா ஷீற் (Formica laminate) எனப்படும் தளவாடங்களில் பயன்படுத்தும் வழு வழுப்பான பூச்சுப் பலகையில் துளைகள் இட்டு, அதனூடாக ட்ரான்சிஸ்ரர், ஏனைய பாகங்கள், செப்புக் கம்பி என்பவற்றை இணைத்து, ஈயத்தை உருக்கி ஊற்றி எங்கள் அமெச்சூர் றேடியோக்களை நாம் தயாரித்தோம். கையுறை எதுவும் அணியாமல், ஈயத்தையும் அழைந்து, அது உருகும் போது உருவாகும் ஈய ஆவியையும் கொஞ்சம் சுவாசித்து தாராளமாக ஈயத்தில் புரண்டெழும்பிய பின்னர் வெளிநாடுகளுக்கு வந்த போது தான், ஈயம் (lead) எவ்வளவு ஆரோக்கியக் கேடானது என்று புரிந்து கொண்டோம். ட்ரான்சிஸ்ரரின் வருகை றேடியோக்களின் திறனை அதிகரித்து பருமனைக் குறைக்க உதவியது. சில ஆயிரம் - இலட்சம் ட்ரான்சிஸ்ரர்களும் ஏனைய உதிரிப் பாகங்களும் ஒருங்கே அமைந்த “ஒருங்கிணைந்த சுற்று-Integrated circuits (IC)” நவீன கால "சிப்-chip/microchip" களுக்கு முன்னோடி. சரி, வானொலிப் பெட்டியைத் தயாரிக்கலாம், ஆனால் எந்த வானொலி நிலையத்தின் ஒலி பரப்பை இந்த அமெச்சூர் வானொலிப் பெட்டியில் கேட்க கேட்க முடியும்? பொதுவாக வானொலி ஒலிபரப்பு (broadcasters) நிலையங்கள் AM, FM எனப்படும் இரு வகையான அலைவரிசைகளில் ஒலி பரப்புவார்கள். இவற்றுள் AM (Amplitude Modulation) அலை வரிசை சக்தி வாய்ந்த, தொலை தூரம் செல்லக் கூடிய அலை வரிசை. இந்தியாவின் ஆகாஷவாணி (All India Radio-AIR) திருச்சிராப்பள்ளி (திருச்சி) ஒலி பரப்பு நிலையம் யாழ்ப்பாணத்திலிருந்து 200 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருந்தாலும், AM அலைவரிசை மூலம் வட இலங்கை வரை தன் நிகழ்ச்சிகளை பெருமளவு துல்லியமாக ஒலி பரப்பியது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் (SLBC) கொழும்பு நிலையமும் AM அலைவரிசைகளில் (மத்திய அலை வரிசை (MW), சிற்றலை வரிசை-SW) இலங்கை முழுவதும் ஒலி பரப்பியது. ஆனால், எங்கள் எளிமையான வானொலிப் பெட்டிகளால் இந்த AM அலைவரிசைகளைத் தெளிவாகத் தரம் பிரிக்க இயலாது. என் நினைவு இப்போது தெளிவாக இல்லை, ஆனால் பலாலி அல்லது மண்டைதீவில் அமைந்திருந்த உப நிலையம் (relay station) மூலம் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத் தாபனத்தின் நிகழ்ச்சிகளை பண்பலை (FM-Frequency Modulation) வழியாக யாழ் நகரப் பகுதி நோக்கியும் ஒலி பரப்பினார்கள் என நினைக்கிறேன். குறுகிய தூரம் மட்டும் செல்லும் இந்தப் பண்பலை ஒலி பரப்பை, இரவு 8 மணிக்குப் பின்னர் எங்கள் அமெச்சூர் வானொலியில் மிக மெலிதாகக் கேட்கக் கூடியதாக இருந்தது. பலவீனமாக வந்து சேரும் வானலைகளைத் தெளிவாக்க Intermediate Frequency (IF) transformer என்ற இன்னொரு உதிரிப் பாகத்தைச் சேர்க்கலாமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்த இடை வெளியில், அந்தப் பண்பலை ஒலி பரப்பும் நாட்டுச் சூழ் நிலை காரணமாக நின்று போனது. இப்போது எங்கள் வகுப்பின் 5 பேர்களில் இருவர் முழுவதுமாகத் தயாரித்து முடித்திருந்த அமெச்சூர் வானொலிப் பெட்டிகளும், ஒரு சிறு பிள்ளை வேளாண்மை போல தூசி படிந்து மூலையில் முடங்கி விட்டது. இந்தக் காலப் பகுதியில் ஊரின் நிலைமையும் சமாந்தரமாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தின் தரைக் கட்டுப் பாட்டை தமிழ் விடுதலைப் போராட்ட அமைப்புகளிடம் இழந்து விட்டதால், வான் தாக்குதல்கள் ஆரம்பித்தன. ஆரம்பகால வான் தாக்குதல்களை இத்தாலிய தயாரிப்பான சியா மார்செற்றி (SIAI-Marchetti) என்ற சிறிய ப்றொபெல்லர் விமானங்கள் தான் பத்தாயிரம் அடிகளுக்கு கீழான உயரத்தில் பறந்து நிகழ்த்தின. இந்த SIAI-Marchetti-SF260TP குண்டு வீச்சு விமானங்களை இத்தாலிய விமானிகள் தான் முதலில் ஓட்டினார்கள் என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். இந்த விமானங்கள் திடீரென வானில் தோன்றி (சோடியாகத் தான் வரும்) வட்டமடித்து, இலக்கை நோக்கித் தாழ்ந்து வந்து றொக்கற் தாக்குதலை நடத்தும். ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் விமானத்திற்கு இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் வவுனியா/அனுராதபுரம் நோக்கிப் பறந்து விடும். இந்த விமானங்கள் எங்கள் வான் பரப்பில் இருக்கும் போது, விமானிகளின் உரையாடலை தரையில் வீடுகளில் இருக்கும் வானொலிப் பெட்டிகளில் குறிப்பிட்ட ஒரு பண்பலை வரிசையில் கேட்கக் கூடியதாக இருக்கும் (பிற்காலத்தில் பதுங்கு குழிகள் வீடுகளில் உருவான போது அதற்குள் ஒரு றேடியோவைத் தூக்கிக் கொண்டு போய் மக்கள் பதுங்கும் பழக்கமும் உருவானது). தரமான ஒரு பனாசொனிக் வானொலிப் பெட்டியில் சில சமயங்களில் இந்த விமானிகளின் உரையாடல்களை செவி மடுத்த நினைவிருக்கிறது. நீளமாக வசனங்கள் எதுவும் அவர்கள் பேசுவதில்லை. இரைச்சல்..பின்னர் ஏதோ ஒரு சொல் மீண்டும் இரைச்சல் என்றவாறு இருக்கும். அடிக்கடி "றோஜர்" என்ற சொல் வந்து போகும். அந்தக் காலப் பகுதியில், எங்கள் வயது மட்டத்தினருக்கு "றோஜர்" என்று விமானிகள் சொல்வதன் அர்த்தம் புரிந்திருக்கவில்லை. எனவே, கற்பனா சக்தி கூடிய பள்ளித் தோழர்கள் சிலர் "இந்த விமானத்தை ஓட்டிய பைலற்றின் பெயர் றோஜரடா!" என்று ஒரு றொக்கற்றை ஏவி விட்டார்கள். "றோஜர் தற்-Roger that" என்பது "தகவல் கிடைத்தது-Received" என்பதன் சுருக்கிய சமிக்ஞை என்பது பின்னர் தான் தெரிய வந்தது. அது புரியும் வரை, எங்கள் மீது குண்டு வீசிய சியாமா செற்றியை ஓட்டிய எல்லா விமானிகளின் பெயரும் றோஜர் தான்! பட உதவிகள்: வால்வு றேடியோவின் படம், ஒரு அமெச்சூர் வானொலி ஆர்வலரின் வலைப்பூவில் இருந்து நன்றியுடன் எடுக்கப் பட்டது. ஏனைய படங்கள்: நன்றியுடன் pixabay தளத்தில் இருந்து எடுக்கப் பட்டன.
  13. 9952340777 joined the community
  14. இந்த யோசனையெல்லாம் ஒரு குழந்தை பிறந்து ஒரு வருசத்துக்குள் இன்னொன்றை பெற்றுக்கொள்பவர்களுக்கு வருவதேயில்லை😜
  15. இந்திய பிரதமர் மோடி – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இடையே தொலைபேசியில் முக்கிய கலந்துரையாடல் 24 Mar, 2026 | 10:23 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழி முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலில், குறிப்பாக மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் நிலைமை மற்றும் அதன் விளைவாக உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் ஏற்படும் சவால்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக இந்திய பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா – இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இரு தலைவர்களும் ஆய்வு செய்துள்ளனர். அதேவேளை, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவும் இலங்கையும் நீண்டநாள் நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் எனக் குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி, இரு நாடுகளும் பகிர்ந்து கொண்டுள்ள சவால்களை சமாளிக்க ஒன்றிணைந்து செயற்பட உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது, மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்தச் சூழல் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (24) மாலை தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடினார். வளர்ந்து வரும் இந்த நிலைமைகள் பிராந்திய மற்றும் உலகளாவிய விநியோக வலையமைப்புகளில் ஏற்படுத்தும் பாதகமான தாக்கங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் இங்கு மிகுந்த கவனம் செலுத்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுசக்தி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/241860
  16. ‘ஆர்சிபி’ அணியை ரூ.16,706 கோடிக்கு வாங்கிய ஆதித்யா பிர்லா குழும கூட்டமைப்பு ஆர்சிபி அணி வீரர்கள் வேட்டையன் Updated on: 24 Mar 2026, 10:34 pm 1 min read பெங்களூரு: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரூ.16,706 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 17 சீசன்களாக பட்டம் வெல்ல முடியாமல் இருந்த ஆர்சிபி அணி, கடந்த சீசனில் (18-வது ஐபிஎல் சீசன்) முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 10 ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணிகளில் ஒன்றாக ஆர்சிபி அறியப்படுகிறது. இந்நிலையில், அந்த அணியின் உரிமையை கைமாற்றும் திட்டத்தில் அதன் உரிமையாளர் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (யுஎஸ்எல்) நிறுவனம் இருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் அந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆப் இந்தியா, பி.எக்ஸ்.பி.இ, போல்ட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பு ரூ.16,706 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஆர்சிபி ஆடவர் அணி மற்றும் மகளிர் அணியின் உரிமையை இந்த கூட்டமைப்பு பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக்கில் நடப்பு சாம்பியனாக உள்ளது. ஆர்சிபி அணியை வாங்க பல்வேறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது அந்த அணியின் உரிமை கைமாற்றப்பட்டுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ்: இதேபோல மற்றொரு ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு சுமார் 15,300 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. கடந்த 2021 முதல் அந்த அணியின் முதலீட்டாளர்களில் ஒருவராக அவர் உள்ளார். ‘ஆர்சிபி’ அணியை ரூ.16,706 கோடிக்கு வாங்கிய ஆதித்யா பிர்லா குழும கூட்டமைப்பு
  17. அடேங்கப்பா தமிழின உறவு முறைகளில் தொடங்கி கணிதத்துக்குள் நுழைந்து ஒளவையின் மூதுரையில் இணைந்து ..... சூப்பர் .........! 👍
  18. முதியோர் கொடுப்பனவுக்கான விசேட அறிவிப்பு Mar 24, 2026 - 10:22 PM அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இக்கொடுப்பனவுகள் எதிர்வரும் 26ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது. முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்காக 3,112,310,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 71,339 முதியோர்களுக்காக 356,695,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைகள் எதிர்வரும் 26ஆம் திகதி அந்தந்தப் பயனாளிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது. மார்ச் 26ஆம் திகதி முதல் பயனாளிகள் தமது அஸ்வெசும கணக்குகளின் ஊடாக இப்பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmn4uq8qj0017356palpuvpml
  19. ஜப்பான் உதவியுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் நவீன சிடி ஆஞ்சியோ மற்றும் பல் மருத்துவ பிரிவு திறப்பு 24 Mar, 2026 | 04:30 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவமனையின் பிற சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவப் பிரிவு மற்றும் 4டி ஆஞ்சியோ சிடி சிகிச்சை அறையை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். இந் நிகழ்வு, சுகாதாரத் துறையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை எடுத்துக்காட்டியது. டிசம்பர் 2023-ல் கண் மருத்துவ உபகரணங்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஒப்படைப்பு இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைக் குறிக்கிறது. தற்போதைய கட்டமானது, தெற்காசியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படும் அதிநவீன சிடி ஆஞ்சியோகிராபி அமைப்பு மற்றும் பல் மருத்துவப் பிரிவுகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குகிறது. இந்தப் பங்களிப்புகள், புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட தொற்ற நோய்களை (NCDs) எதிர்கொள்வதற்கான இலங்கையின் திறனை மேம்படுத்துதல், அதன்மூலம் உயிர்களைக் காப்பாற்றவும், நீண்டகால சிக்கல்களைக் குறைக்கவும், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிடி ஆஞ்சியோகிராபி அமைப்பு, சிடி ஸ்கேனிங் மற்றும் ஆஞ்சியோகிராபி செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, மிகவும் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் நோயறிதலையும் சிகிச்சையையும் சாத்தியமாக்குகிறது. இது இலங்கையிலும் பரந்த பிராந்தியத்திலும் ஒரு முக்கிய மருத்துவ மையமாக மருத்துவமனையின் பங்கை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 10 பல் மருத்துவப் பிரிவுகளை வழங்குவது, மருத்துவமனையில் பல் மருத்துவ சேவைகளை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் துணைபுரியும். ஜப்பானில், வாய்வழி ஆரோக்கியம் ஒட்டுமொத்த உடல் நலத்துடன் நெருக்கமாக இணைந்ததாகக் கருதப்படுவதோடு, ஆரோக்கியமான ஆயுட்காலத்தை நீட்டிப்பதில் இது ஒரு முக்கியப் பங்கையும் வகிக்கிறது. எனவே, இந்த ஆதரவானது இலங்கையில் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவியுடன் 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. முதலில் திட்டமிடப்பட்ட 1,000 படுக்கைகளுடன் மேலும் ஒன்றைச் சேர்க்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ஜெ.ஆர். ஜயவர்தன தெரிவித்த கருத்திலிருந்து உருவான, நன்கு அறியப்பட்ட “1001-படுக்கை” கதை, இந்த ஒத்துழைப்பின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு மறக்கமுடியாத அத்தியாயமாக விளங்குகிறது. பல தசாப்தங்களாக, மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல், இரத்த விநியோக அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்றின் போது தடுப்பூசி விநியோக உதவி வழங்குதல் உள்ளிட்டவற்றின் மூலம் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஜப்பான் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறது. மேலும், இலங்கையின் சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது, சுகாதார சேவைகளைப் பராமரிப்பதற்கு அத்தியாவசியமான எரிபொருளை ஜப்பான் வழங்கியதுடன், இயற்கை பேரிடர் காலங்களில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக அவசர மருத்துவக் குழுக்களையும் அனுப்பியது. இந்த முயற்சிகள், குறிப்பாகத் தேவைப்படும் காலங்களில், இலங்கைக்குத் துணை நிற்பதில் ஜப்பானின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்த முயற்சிகள், அனைத்து தனிநபர்களும் ஆரோக்கியமாகவும் கண்ணியமாகவும் வாழக்கூடிய ஒரு சுகாதார அமைப்புக்கு ஆதரவளித்து, “மக்களில் முதலீடு” மற்றும் “மனிதப் பாதுகாப்பு” ஆகியவற்றில் ஜப்பானின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. இந்த ஆதரவு என்பது வெறும் உபகரணங்களை வழங்குவது மட்டுமல்ல, அது உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கான அடித்தளமாகும்," எனத் தூதுவர் இசொமதா குறிப்பிட்டார். ஜப்பானின் ஆதரவுடன் கட்டப்பட்ட ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனை, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் சின்னமாகத் திகழ்கிறது. வருங்கால சந்ததியினருக்குப் பயனளிக்கும் ஒரு நிலையான சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கும், நமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என்று நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம். அமைச்சர் ஜயதிஸ்ஸ அவர்கள், “இது வெறும் இயந்திரங்களின் நன்கொடை மட்டுமல்ல; இது நமது நோயாளிகளின் வாழ்விலும் எதிர்காலத்திலும் செய்யப்படும் ஒரு முதலீடாகும். இந்த நவீன பல் மருத்துவப் பிரிவை நிறுவுவதன் மூலம், நமது மக்களிடையே வாய்வழி நோய்களைத் தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் உள்ள ஒரு முக்கியத் தேவையை நாம் பூர்த்தி செய்கிறோம். இந்த தாராளமான உதவிக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவை உண்மையான நட்பின் செயல்கள், மேலும் இலங்கை மக்கள் இவற்றை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூருவார்கள்” என்று சிறப்பித்து குறிப்பிட்டார். சுகாதாரத் துறையை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை ஆழப்படுத்தவும் ஜப்பான், இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படும். https://www.virakesari.lk/article/241830
  20. உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும் Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 05:05 PM 2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளிடமிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (24) முதல் இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார். பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் தமது அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தனிப்பட்ட ரீதியில் பரீட்சைக்குத் தோற்றுவோர் தமது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்தி இணையத்தளத்தில் உள்நுழைந்து சுயமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இன்றையதினம் முதல் ஏப்ரல் 24, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என ஆணையாளர் நாயகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், அதன் அச்சிடப்பட்ட பிரதி ஒன்றை எதிர்காலத் தேவைகளுக்காகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பின்வரும் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்: அவசர தொலைபேசி இலக்கம் : 1911 தொலைபேசி: 0112785922, 0112784537, 0112786616, 0112784208 மின்னஞ்சல்: gcealexam@gmail.com https://www.virakesari.lk/article/241834
  21. என்ன தான் இருந்தாலும் முதலில் உங்களைச் சேர்த்த பெண்களுக்கு பெரிய நாமம் போட்டது சங்கடமாக இருக்கிறது.
  22. இயலாமையுடைய நபர்களை மருத்துவக் கண்ணோட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் – ஹன்சக விஜேமுனி 24 Mar, 2026 | 05:06 PM (இணையத்தள செய்தி பிரிவு) இயலாமையுடைய நபர்களை மருத்துவக் கண்ணோட்டத்தில் மாத்திரமல்லாது சமூக மற்றும் மனித உரிமைக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும் என பிரதி சுகாதார அமைச்சர் (வைத்தியர்) ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். 2026 மார்ச் 20 ஆம் திகதி இலங்கை தேசிய வைத்தியசாலையின் தேசிய வலிப்பு நோய் மைய அரங்கில் நடைபெற்ற, இயலாமையுடைய நபர்களுக்கான சேவைகளை வழங்குவது தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பிராந்தியத்தில் உள்ள ஏனைய மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை இவ்விடயத்தில் சில முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், சுகாதார சேவைகளைப் பெறுவதில் இயலாமையுடைய நபர்கள் இன்னமும் பல பௌதீக, தகவல் தொடர்பு மற்றும் மனப்பான்மை சார்ந்த தடைகளை எதிர்கொள்வதாகவும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். சமூகத் தடைகளைக் கண்டறிவதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மனப்பான்மை மாற்றத்தை உருவாக்குவதற்கும் தேவையான கொள்கை மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதியமைச்சர், இயலாமையுடைய நபர்களுக்கு சுகாதாரத் தகவல்களைப் பல வடிவங்களில் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இயலாமையுடைய நபர்கள் மீது பாரம்பரியாகக் காணப்படும் மருத்துவக் கண்ணோட்டத்தைக் கடந்து, சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் ஒரு சேவையை வழங்குவதற்காக, சுகாதாரப் பணியாளர்களை முறையாக உணர்வூட்டுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அனைத்து விடயங்களிலும் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் ஆற்றிவரும் பங்களிப்புப் பாராட்டத்தக்கது. இயலாமையுடைய நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக அமைச்சுக்களில் நடத்தப்பட்டுவரும் செயலமர்வின் இரண்டாவது செயலமர்வு சுகாதார அமைச்சில் நடைபெற்ற போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அனுசரணையுடன், சுகாதார அமைச்சின் பணியாளர்களை இலக்காகக் கொண்டு, இயலாமை உள்ள நபர்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தினால் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுகத் வசந்த.த சில்வா, 'இயலாமையற்ற சமூக வாழ்க்கையை' அடைவதை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக விழிப்புணர்வு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், தற்போதுள்ள இலவச சுகாதார சேவையைப் பாராட்டியதுடன், இந்த நாட்டில் வசிக்கும் 16 இலட்சத்திற்கும் மேற்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கு சுகாதார சேவைகளைப் பெறுவதில் உடல் ரீதியான மற்றும் மனப்பான்மை ரீதியான தடைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். சுகாதார சேவைகளைப் பெறுவதற்கான உரிமை என்பது வாழ்வதற்கான ஒரு அடிப்படை உரிமை. மேலும், எதிர்கால சுகாதார வல்லுநர்கள் தங்கள் பயிற்சிக் காலத்திலிருந்தே இந்த உரிமை குறித்து விழிப்புணர்வு பெறுவதை உறுதி செய்வதற்காக, மருத்துவ மற்றும் தாதியர் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இயலாமையுடைய நபர்கள் குறித்த ஒரு புதிய கண்ணோட்டமும், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவும் சேர்க்கப்பட வேண்டும். இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான (வைத்தியர்) பத்மநாதன் சத்யலிங்கம், இயலாமையுடைய நபர்களுக்கான சங்கங்களின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவர் அசோக வீரவர்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவத் திணைக்களத்தின் பேராசிரியர் சமாரி வீரரத்ன, சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் (பொது சுகாதார சேவைகள்) பிரதி பணிப்பாளர் நாயகம் (வைத்தியர்) விந்தியா குமாரபேலி, சுகாதார அமைச்சின் இளைஞர், முதியோர் மற்றும் இயலாமையுடைய நபர்களுக்கான பிரிவின் பணிப்பாளர் நாயகம் (வைத்தியர்) நிஷானி உபேசேகர மற்றும் இயலாமையுடைய சமூகத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தனர். வைத்தியசாலையின் பிரிவுகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமை, சில வைத்தியசாலை கவுண்டர்கள் உயரமாகக் காணப்படுகின்றமை, அறுவை சிகிச்சை படுக்கைகள் காரணமாக இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், மலசலகூடங்களில் இயலாமையுடைய நபர்களுக்கு உரிய வசதிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றமை இங்கு எடுத்துக் கூறப்பட்டது. வரிசைகளில் காத்திருப்பதில் காணப்படும் சிரமங்கள் மற்றும் அறிவுசார்ந்த இயலாமையுடைய நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அடையாள அட்டைகளின் தேவையும் வலியுறுத்தப்பட்டது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் வைத்தியசாலைகளில் சாய்வுப் பாதைகள், இயலாமையுடைய நபர்களுக்கான கழிப்பறைகள் மற்றும் சிறப்பு மருந்து மையங்கள் போன்ற அணுகல் வசதிகளை அமைப்பதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அடிப்படை மருத்துவமனைகளில், அடிப்படை சைகை மொழியில் பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்ட சோதனை 'ஆதரவு மையங்கள்' அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் அதிகாரிகள், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) திட்ட அதிகாரி அனோஜிதா சிவாஸ்கரன், அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் இயலாமையுடைய நபர்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241829
  23. பாஞ்ச் ஐயா, இது கற்பனை புனைவோ அல்லது உண்மையோ? சித்தப்பாவிடம் அடிவாங்கி பின்னர் யாழ் இணையத்தில் இணைந்து கருத்துக்கள் பகிரும் அந்த உறவு யார்? இளம் வயது உடையவரோ?
  24. சீமெந்து விலை அதிகரிப்பு Published By: Digital Desk 3 24 Mar, 2026 | 01:00 PM உற்பத்தி நிறுவனங்களால் சீமெந்து விலை சுமார் 150 ரூபாவிலிருந்து 175 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த உற்பத்திச் செலவுகளே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மணல், சரளைக்கல் மற்றும் இரும்பு உட்பட முக்கிய கட்டுமானப் பொருட்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் டாரின்டன் போல் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/241813

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.