All Activity
- Past hour
-
ஐரோப்பிய ஆணைய ஆவணம் 2027 ஆம் ஆண்டுக்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஓர்பன் கூறுகிறார்.
உக்ரேனில் ரஷ்யா தனது மொழி,இனவாரியான கைப்பற்றிய இடங்களை பற்றி ஐரோப்பிய ஒன்றியம் அலட்டிக்கொள்ளா விட்டால் ஒன்றிய கனவு சாத்தியம் என நினைக்கின்றேன்
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
இரா சம்பந்தன் கூட்டிக்கொண்டு வந்த ஆளிட்ட கனக்க/நல்லதை எதிர்பார்க்கப்படாது கண்டியளோ.😀 அமிர்தலிங்கம்,சம்பந்தன் வரிசையில் வந்த இன்னொருவர்தான் இந்த சுமந்திரனார்.வழமை போல் பதவியை மோகத்தை தவிர வேறேதும் இல்லை.🤣 இவர்கள் எல்லாம் பொன்னம்பல இராமநாதன் காலத்து மூளைசாலிகள்.😂
- Yesterday
-
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா: சுகாதார விதிமுறைகளை மீறிய உணவு நிலையங்களுக்கு எதிராக வழக்கு
மதிப்புக்குரிய சுகாதார இன்ஸ்பெக்டர்மார் உந்த தேத்தண்ணி கடையள்,கூல் பார் ரொய்லட்டுக்களையும் செக் பண்ணினால் போற வழிக்கு புண்ணியம் கிடைக்கும் 😷
-
ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு!
நான் முல்லாக்களின் ஆதரவாளன் இல்லை. ஆனால் ஈரான் நாடு என்று பார்த்தால் சீனாவின் பின் பலம் அதிகமாக உள்ளது. இது நான் தீர்மானித்து எழுதிய கருத்து அல்ல. என்னுடன் வேலை செய்யும் தம் நாட்டை விட்டு வெளியேறி ஜேர்மனி வந்த ஈரானியர்கள் சொன்னது. அவர்கள் இன்னொன்றையும் சொன்னார்கள்..... ஈரானில் அரச மொழியாக சீன மொழி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை என..... ஐ திங்......அமெரிக்காவிற்கு வெளிப்படை எதிரிகள் அதிகரித்து வீட்டார்களோ என திங் பண்ண வேண்டிக்கிடக்கு....😜
-
என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்
ஆ..அப்படியா..ஊரில் இன்னும் கொஞ்சம் பார் திறக்க இடம் இருக்கோ....உங்களிடம் எல்லாம் எப்படி பிள்ளைகள் படித்தார்களோ..?
-
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!
இந்த பிக்குகள் எல்லாம் முள்ளிவாய்கால் அழிவுகளுக்கு பங்கெடுத்த முன்னாள் இராணுவ வீரர்களாக இருக்கலாம்.
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
உங்கடை ஆளுக்கு வரியை தவிர வேறை ஒண்டும் தெரியாது போல கிடக்கு. ஏலுமெண்டால் கூகிள்,பேஸ்புக்கு,வாட்ஸ் அப்,விண்டோஸ் ,ரிவிட்டர் எல்லாத்தையும் தனக்கு பிடிக்காத நாடுகளிலை நிப்பாட்டச்சொல்லுங்கோ பாப்பம்😃
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
எதையும் வெளிப்படையாக தெரிவித்தால் பலருக்கு பல சந்தேகங்கள் வராது என நான் நினைக்கின்றேன். மொட்டையாக எழுதி விட்டு கடந்து செல்வதால் பின்னடைவுகள் தான் ஏற்படும் என நான் நினைக்கின்றேன்.
-
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!
அது என்ன இன்னொன்று என அறிய ஆவல்! ‘ஹசினி
-
கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
அமெரிக்கர்களின் சீட்டாட்டம் மிக நுட்பமானது.ஐரோப்பிய ஒன்றியத்தின் பலிக்கடா உக்ரேன் என்பது போகப்போக தெரிய வரும். உக்ரேனில் ரஷ்யா கையகப்படுத்திய பகுதி ரஷ்யாவுக்கே சொந்தமாகும். உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றிய கனவு ஊட்டியவர்களுக்கு கிரீன்லாந்து நல்லதொரு சமர்ப்பணம்.
-
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்!
அது என்ன இன்னொன்று என அறிய ஆவல்! தனது எதிர்காலம் சிறை அல்லது மறைவாகவே இருந்தாகணும் என்று கணித்தே வைத்துள்ளார் மஹிந்தா. இரண்டாம் துட்ட கைமுனுவுக்கு ஏன் இப்படியொரு விபரீத எண்ணம் வந்தது? சிங்களவருக்கு பயந்தே அவர் விகாரையில் இப்படி ஒரு சொகுசு வீட்டை ஏற்பாடு செய்திருக்கிறார்.
-
கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
இன்றைய காலத்தில் சீனா எதற்கும் வன்முறையை கையில் எடுப்பதில்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அந்தந்த நாட்டு திண்ணையில் உட்காந்து விடுகின்றார்கள்.சிறிது காலம் செல்லச்செல்ல எமது சேவை உங்களுக்கு தேவை என்பது போல் தமது இருப்பை நியாயம் கற்பித்து விடுகின்றார்கள்.இதை இன்றைய காலங்களில் எல்லா நாடுகளிலும் நடக்கும் சம்பவங்களை கண்கூட பார்க்கின்றோம். நேட்டோ ஆரம்பித்த காலம் தொடக்கம் இன்றுவரைக்கும் செய்த நற்செயல்கள் எவை? சம்பந்தமில்லாத ஏனைய நாடுகள் மீது வான்வெளி தாக்குதல்களை செய்து மக்களையும் நாட்டையும் அழித்ததை தவிர.....? நேட்டோவை கலைப்பது போல் ஐநா போன்ற உலகை பேயனாக்கும் அமைப்புகளையும் கலைக்க வேண்டும். எல்லாம் சூரிய அஸ்த்தமனம் இல்லாத பிரிட்டிஷ் சாம்ராஜ்ய வம்சாவளிகள். உன் மடியில் நான் படுக்க....என் மடியில் நீ படுக்க எனும் பீலிங் வருவதை யாராலும் தடுக்க முடியாது.🤣 ஒரு காலத்தில் தாம் தம் இனம் என வாழ்ந்த ஆசிய, ஆபிரிக்க நாடுகளை வியாபார ரீதியாக ஆக்கிரமித்து ,தம் ஆட்சி நலனுக்காக சிற்றரசுகளை அழித்து கூட்டாட்சியை உருவாக்கி...... இன்று நடுத்தெருவில் நிற்கும் தனி இனங்களின் சாபம் சும்மா விடாது. இவர்கள் தமக்குள்ளேயே அடிபட்டு சாகும் தூரம் அதிகமில்லை.
-
உதவி தேவை: கல்லுண்டாய்வெளி & தொண்டைமானாற்றில் பறந்த புலிகளின் வானூர்தி பற்றிய தகவல்கள்
உறவுகளே வணக்கம், கல்லுண்டாய்வெளி மற்றும் தொண்டைமானாற்றில் பறந்த புலிகளின் வானூர்தி பற்றி நேரில் கண்டிருந்தாலோ அல்லது கேள்வியுற்றிருந்தாலோ அது தொடர்பில் தெரிந்த தகவல்களை பதிவிட்டு (அறிந்தவர்களிடம் கேட்டாவது) வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்த உதவிசெய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இராவணனின் புட்பக விமானம் போல வான்புலிகளின் வானூர்திக் கதைகள் இருக்கப்படாது. புலிகளைப் போன்றே அவர்தம் வரலாறுகளும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அவா.
-
புலிகளின் இரண்டாவது உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | வானில் பறந்த முதல் வான்கலம்
இதற்குள் இருக்கின்ற ஏதேனும் இதனோடு பொருந்தி வருமா?
-
புலிகளின் இரண்டாவது உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | வானில் பறந்த முதல் வான்கலம்
இது கேணல் சங்கர் அவர்களின் கண்காணிப்பில் தயாரிக்கப்பட்ட கொச்சு இலகு வானூர்தி (Micro Light Aircraft) வகையைச் சேர்ந்த ஒரு வகையான வான்கலம் (சரியான வடிவம் என்னவென்று தெரியவில்லை.) ஆகும். இதுதான் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டு வானில் பறந்த முதலாவது வான்கலமும் ஆகும். இது 1980களின் இரண்டாம் பாகத்தில் (சரியான திகதி அறியில்லை. கூடுதலாக 86,97 காலமாக இருக்கலாம்) வானில் பறந்தது. இதற்கான புளூ பிரின்ட் எந்தவொரு நாட்டிடமும் இருந்து புலிகள் பெறவில்லை. முற்றிலும் உள்ளூரிலேயே கிடைக்கத்தக்க மூலப்பொருட்களையும் சொந்த அறிவினையும் கொண்டு உருவாக்கியிருந்தனர். வான்கலத்திற்கான பொறியாக ஒரு பழைய உந்துருளியின் பொறி கழற்றி எடுக்கப்பட்டு பாவிக்கப்பட்டது. வான்கலத்தை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களாக உடைந்த ஊர்திகளிலிருந்து எடுக்கக்கூடிய அலுமினியத் தகடுகள், குழாய்கள், மற்றும் மரப்பலகைகள் பாவிக்கப்பட்டதாக அறியக்கூடியதாக உள்ளது. வசதிகள் கொண்ட சரியான தொழிற்சாலைக் கட்டமைப்புகள் இல்லாத காரணத்தால் சிறிய பண்ணுறத்தகம் (garage) போன்ற கொட்டிலுக்குள் வைத்தே இவ்வான்கலத்தை கேணல் சங்கர் தலைமையில் புலிகள் வடிவமைத்தனர். இது தொண்டைமானாற்றில் அமைந்திருந்தது. அவருடைய இம்முயற்சிக்கு உள்ளூர் தச்சர்களும் கொல்லர்களும் உதவி நல்கியிருந்தனர். இவர்களின் இம்முயற்சியைக் கண்ட தமிழ் பொதுமக்களில் சிலர் "சாப்பாட்டிற்கே வழியில்லை, என்னத்துக்கடா இங்க விமானம்" என்றும் ஏளனமும் செய்தனர். எனினும் இதற்கெல்லாம் மனச்சோர்வடையாமல் புலிவீரர்கள் முதல் வான்கலத்தை செய்யும் முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வெற்றி கண்டனர். ஓம், புலிகளின் (தமிழர்களினதும் தான்) முதல் பறக்கத்தக்க உள்நாட்டு தயாரிப்பு வான்கலம் இங்குதான் உருவாகியது. இங்கு உருவாகிய வான்கலமானது தொண்டைமானாறு உப்பளவெளியிற்கு அருகிலிருந்த ஓர் மண்பாங்கான தெருவில் வெள்ளோட்டம் விடப்பட்டது. முதல் முயற்சியிலேயே உருவாகிய இவ்வானூர்தி அம்மண் தெருவில் ஓடி எழும்பியது. ஒரு தென்னைமரமளவு உயரத்திற்கு எழும்பிவிட்டு மீண்டும் பதாதிரமாக கீழிறங்கியது. இதுவே புலிகளின் முதல் வானூர்தியாக முதல் பறப்பாக வரலாற்றில் பதிவானது. ஆதாரம்: வானத்தை வென்ற தமிழர்கள் ல் ஈழத்தில் கண்டுபிடித்த முதல் விமானம், IBC Tamil
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
படித்தவர்கள் இரு வகைப்படும். ஒரு வகை படித்த படிப்பை நாட்டு வளர்ச்சிக்காக பயன்படுத்துவர். அவர்களிடம் நான் என்ற அகங்காரம் இருக்காது.அமைதியான மனப்பான்மை உடையவர்கள்.தெரியாததை அமைதியாக விளங்கப்படுத்துவர். இரண்டாவது வகையினர் தொழிலுக்காக படிப்பவர்கள். அவர்களது நோக்கு எதை படித்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற நோக்குடையவர்கள். அப்படியானவர்களிடம் எந்தவொரு மனித மாண்புகளையும் காணவே முடியாது. இவையெல்லாம் நான் இலங்கையில் வாழ்ந்த போது கண்ட அனுபவங்கள்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏராளன் எதோ பேச்சுக்கு கருத்தை எழுதி விட்டு விடாமல் எழுதிய கருத்தை செயலாக்கியவர் நீங்கள் தான். நாங்கள் நாலு பேர் வெளியில் இருந்து என்னவும் கதைக்கலாம் காசு தருவோம் என்று கூறலாம் அல்லது தரலாம்.... ஆனால் அந்த நேரத்தில் கிடைத்த அந்த நிதியை உடனேயே பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்து அவர்களின் அத்தியாவசியமான தேவையை நிறைவேற்றியவர் நீங்கள் தான். உண்மையாகவே சொல்கின்றேன் இங்கே இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு நீங்கள் தான் முதற் காரணம் . அரசியல் வேண்டாம் என்பதால் திருப்பி அனுப்பப்பட்ட நிதிகளைப் பற்றிப் பேச விரும்பவில்லை ஆகவே உங்ககளுக்கே நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம் . தொடர்ந்தும் உங்களின் ஆதரவும் செயற்பாடும் முன்னோடி அமைப்பிற்குத் தேவை என்பதையும் கூறி உங்களுக்கு எங்களின் நன்றிகளையும் கூறிக்கொள்கின்றோம் . 🙏
-
என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன்
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 20.12.2025
-
கருத்துப்படம் 19.12.2025
-
கருத்துப்படம் 17.12.2025
-
கேலி 15.12.2025
-
கருத்துப்படம் 12.12.2025
- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன், ஆழ்ந்த இரங்கல்கள். காலம் உங்கள் கவலையைப் போக்கட்டும்.- IMG_9441
- புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
இவர்கள் குறிப்பிடும் வானூர்தி இதுவாக இருக்கலாம்: (கண்கண்ட சாட்சிகள் ஆரேனும் இருந்தால் வரலாறு பதிய உறுதி செய்யுங்கள்) கீழுள்ள படத்தில் 1987 இல் இவ்வானூர்தி பறந்ததாக கூறப்பட்டிருந்தாலும் சாத்திரியாரின் பதிவுகள் மூலம் 1984இல் இருந்து புலிகள் வானூர்தி செய்து பறக்கவிடத் தொடங்கிவிட்டார்கள் என்று அறியமுடிகிறது.- புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
கண்கண்டு பதிவுசெய்தவர்: குமார் வசந்தி (facebook) 1987 ல்: டேய் மானிப்பாய் இயக்கக் காம்பில பிளேன் செய்யிறாங்களாம், நேற்று பார்த்தவன் சொன்னான். பிளைட்டா? பிளைட்டாம். நம்பக்கூடியமாதிரி இருக்கா? யாரும் நம்பவில்லை. பள்ளிக்கூடம் விட்டதும் ஒரே ஓட்டம். அப்போ சி பிளேன் மேலே சுற்றிக்கொண்டிருந்தது. அது சுற்றினால் அடுத்தநாள் பொம்பர் வரும், குண்டுபோடும். காம்புக்கு பார்க்கப்போன போது விமானம் வாகனத்தில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தது (ஒரு ஆள் இருக்கக்கூடிய விமானம்) சி பிளேன் சுற்றியதால் அடுத்தநாள் எப்படியும் பொம்பர் குண்டு போடும் என்று இயக்கத்துக்கு தெரியும். ஓடிப்பார்க்கும் போது விமானம் கிடங்கில் விழுந்து சில்லு நெளிந்து விட்டது. அது ஒரு சிறிய முகாம் எங்கோ இருந்து செய்து வந்திருக்கு என்பது புரிந்தது. விமானம் இரவோடு இரவாக கொண்டுபோய் விட்டார்கள். எமக்கு பார்க்கும்போது விளையாட்டு பிளைட்டாக இருந்தது அது. இருபது வருடத்துக்கு பின்னர் வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், ‘வானோடி’ என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர். வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்கதொடங்கி விட்டார்கள்.- புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
நிழலாடும் நினைவுகள் எழுத்தாளர்: சாத்திரியார் 2007/03 கப்ரன் வாசு (கண்ணாடி வாசு/ ஐடியா வாசு), வல்வெட்டிதுறை 1984 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல் அப்பையா அண்ணை, குட்டிசிறி, கப்ரன் பாரத், மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து, "எல்லாம் சரி, எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ, இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும்" என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் "இன்னும் இன்னும் வேகமா" என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை இயக்குகிறான். அந்த நேரம் பார்த்து ஒரு போராளி ஏலேலோ அய்லசா என்று பாடவும் விமானத்தை தள்ளிய மற்றறைய போராளிகள் தள்ளுவதை நிறுத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். வாசு அவர்களை பார்த்து கோபமாய் கத்துகிறான், "மேலை எழும்பினா காணும். நான் எப்பிடியாவது கோட்டைக்குள்ளை கொண்டு போய் இரண்டு ஆமிகாரன்ரை தலையிலையாவது விழுத்துவமெண்டா இவங்களோடை ஒண்டும் செய்ய ஏலாது. பகிடியை விட்டிட்டு தள்ளுங்கோடா" என்கிறான். போராளிகள் தொடர்ந்து விமானத்தை தள்ள விமானம் சில அடிகள் மேலே எழுவதும் கீழே விழுவதுமாய்.... கடைசியில் அந்த வீதியோரத்தில் நின்ற ஒரு பூவரசு மரத்துடன் மோதி ஒரு பக்க இறக்கை உடைந்து போக வாசு சில சிராய்ப்பு காயங்களுடன் விமானத்தை விட்டு இறங்குகிறான். ஆனாலும் விமானம் செய்கின்ற முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. வாசு எப்பவுமே தன்னைபற்றியோ தன்னுயுரிரைபற்றியோ கவலைபடாமல் எப்படியாவது எங்கேயாவது எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துவதை பற்றியே சிந்திப்பவன். அது மட்டுமல்ல கண்ணிவெடிகள் தயாரிப்பது ரவைகட்டுவது(ஆரம்பகாலத்தில் 9 மி.மீ.துப்பாக்கி ரவைகூடுகளை சேகரித்து திரும்ப அவைகளை ரவைகளாக தாயாரிப்பார்கள்) அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பழுதடைந்த ஆயுதங்கள் அனைத்தையும் திருத்துபவனாகவும் இருந்தான். ஈழத்தில் இருந்த போராட்ட குழுக்களிற்கு இந்தியா அன்று ஆயுதங்கள் வழங்கிய போது புலிகள் இயக்கத்திற்கும் ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்கியது ஆனால் அவை பெரும்பாலும் ஏன் 80 வீதம் பாவிக்க முடியாத ஆயுதங்களையே கொடுத்திருந்தது. அவற்றையெல்லாம் வாசு இரவு பகலாக இருந்து முடிந்தவரை திருத்தி போராளிகளிடம் கொடுப்பான். அந்த ஆயுதங்கள் யுத்த களத்தில் சில நெரங்களில் இயங்க மறுக்கும்.யுத்தகளத்தில் ஒரு போராளியின் ஆயுதம் இயங்கா விட்டால் அது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அனைவரிற்கும் தெரியும். அந்த போராளிகள் வாசுவை திட்டியபடியே அந்த ஆயுதங்களை அவனிடம் கொண்டு போய் கொடுப்பார்கள்.அவன் சிரித்தபடியே என்ன மச்சான் செய்யிறது இந்தியா ஆயுதத்தை தந்த நேரம் அதை இரும்பா தந்திருந்தா நான் அதை உருக்கி ஒரு நல்ல ஆயுதமா செய்து தந்திருப்பன்.ஆனால் என்ன செய்ய அவங்கள் இப்பிடி தந்திட்டாங்கள் நானும் முடிஞ்சவரை திருத்திறன் எனறவாறே மீண்டும் அவற்றை திருத்த தொடங்கிவிடுவான்.அப்போது 1987ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ் நாவற்குழி இராணுவ முகாம் மீது புலிகள் ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டனர். அந்த இராணுவ முகாமிற்கு தண்ணீர் வெளியில் இருந்து ஒரு பெளசர் முலமே எடுத்து செல்லபடுவது வழைமை எனவே அதே போல ஒரு பெளசரை தயாரித்து அதன் உள்ளே வெடிமருந்தை நிரப்பி அதனை முகாம் உள்ளே அனுப்பி வெடிக்க வைப்பது பின்னர் அது வெடித்ததும் அதிர்ச்சியில் இருக்கும் இராணுவத்தினரை தாக்குவது என்று திட்டம் தீட்டப்பட்டு.அதற்கான அந்த முகாம் மீதான வேவுபார்த்தல் மற்றும் இராணுவ நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொறுப்பு அன்றைய சாவகச்சேரி பொறுப்பாளராக இருந்த கேடில்சிடமும். வெடிமருந்து நிரப்பிய பெளசரை தயாரிக்கும் பொறுப்பு வாசுவிடமும் ஒப்படைக்க பட்டது. அதுவும் எதிரிக்கு எந்தவித சந்தேகமும் வந்து விடாதபடி தண்ணீர் கொண்டு போகின்ற அதேபோன்றதொரு அச்சுஅசலாக இன்னொரு பெளசரை தயாரிக்க வேண்டும்.சிரமமானதும் சவாலானதமான ஒரு பணி ஆனால் வாசு ரஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரின் உதவியோடு ஆர்வத்துடன் செயற்பட்டான். அசல் தண்ணி பெளசரில் எங்கெங்கு கறள் பிடித்திருக்கின்றது. எங்கெங்கு நெளிந்திருன்றது என்று பார்த்து பார்த்து நகலை அசல் போல ஒரு மாதங்களிற்கு மேலாக செய்து முடித்தான்.அது மட்டுமல்ல தண்ணீர் பெளசர் இராணுவ முகாமிற்கு உள்ளே போகும் போது இராணுவத்தினர் பெளசரின் உள்ளெ தண்ணீர் தானா உள்ளது என்று பரிசோதித்து தான்அனுப்புவார்கள்.அதனால் அந்த பெளசரின் மேல் பாதியில் தண்ணீரும் கீழ் பாதியில் வெடிமருந்தும் நிரப்பி தயாரிக்கப்பட்டது.தாக்குதலுக༢r />??கான நாளாக 14.02.87 அன்று மாலை தீர்மானிக்கபட்டது.அந்த தாக்குதலிற்கு பொறுப்பாக அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு பொறுப்பேற்றிருந்தார்.அவர் போராளிகளிற்கு அன்று காலை தாக்குதல் பற்றிய விழக்கங்களை அளித்து மாலை 6.30 மணியளவில் முகாமின் உள்ளே அந்த பெளசர் வெடிக்கும் அதை தொடர்ந்து தொலைதொடர்பின் ஊடாககட்டளை வந்ததும் முகாம் மீதான தாக்குதலை தொடங்கும்படி வழியனுப்பி வைத்தார். அதன்படி போராளிகள் எல்லோரும் அன்று மாலை 4 மணியளவிலேயே தயாராய் நாவற்குழி முகாம் தாக்குதலிற்காக அவரவர் இடங்களில் நிலையெடுத்து காத்திருந்தனர்.இறுதியாக அந்த பெளசரை வெடிக்க வைப்பதற்காக நேர கணிப்பு பொறியை லெப். கேணல் பொன்னம்மானும் வாசுவும் இணைத்து முடித்திருந்தனர். எல்லா போராளிகளும் தங்களிற்கு தந்தவிடயங்களையும் எதிரியை எப்படியெல்லாம் தாக்கலாம் என்று தங்கள் மனங்களிலேயே ஒத்திகை பார்த்தபடி அந்த வெடி வெடிக்க போகும் 6.30 மணி எப்போவரும் என தங்கள் கை கடிகாரங்களை அடிக்கடி ஒரு பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த வேளை 5.30 மணியவில் அந் பகுதியையே அதிர வைக்கும் ஒரு வெடியொசை கேட்டது. எல்லா போராளிகளின் முகங்களிலும் ஒரு வித கேள்வி குறி யுடன் தொலை தொடர்பு கருவி வைத்திரந்தவர்களை பார்த்தனர். தொலை தொடர்பில் எல்லோரும் கிட்டுவை அழைத்தபடி இருந்தனர்.அண்ணை என்ன நடந்தது. அங்கை வாசு பென்னம்மான் ஒரதரின்ரை தொடர்பும் கிடைக்கேல்லை என்ன நடந்ததெண்டு தெரியேல்லை எல்லாரும் அப்பியே நில்லுங்கோ நான் இடத்திற்கு போய் பாத்திட்டு உங்களை தொடர்பு கொள்ளுறன்கிட்டுவின் குரல் ஒலித்தது. அரை மணி நெரத்தின் பின்னர் அனைவரையும் தங்கள் முகாம்களிற்கு திரும்பும்படி கிட்டுவின் கட்டளை கிடைத்தது. ஆம் 5.30 மணிக்கே அந்த பெளசர் வெடித்து சிதறிவிட்டது. எப்படி எங்கே தவறு நடந்தது என்று யாருக்கும் தெரியாது காரணம் அதனருகில் நின்றிருந்த பொன்னம்மான் கேடில்ஸ் ரஞ்சன் அகியோருடன் வாசுவும் கந்தக காற்றுடன் கலந்து எங்கள் தேசத்தில் வீசும் காற்றாகி போனான். வாசு மட்டுமல்ல அவனது குடும்பத்தில் அவனது சகோதரன் மேஜர் ஜேம்ஸ். சகோதரி கப்ரன் சுந்தரி ஆகியோரும் எங்கள் மண்ணிற்காய் மாவீரர்களாகி போனார்கள். அவர்களிற்காய் எனது தலை தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்து கொண்டு நினைவுகளை தொடர்வேன்... மேலே நான் இணைத்த கட்டுரை சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது. அந்த கட்டுரையை எழுதி பத்திரிகைக்கு அனுப்பிய பின்னர் புலிகளின் வான்படை நடாத்திய தாக்குதல் செய்திகள் வெளிவந்த போது ஒருகணம் புலிகளிற்கு ஒரு வான்படை உருவாக்கும் கனவுகளுடன் அயராது உழைத்த வாசு, அப்பையா அண்ணை, குட்டிசிறி, பாரத் போன்றவர்களுயும் பின்னர் சங்கரண்ணாவும் ஒரு கணம் நினைவில் வந்து போயினர். http://sathirir.blogspot.com/2007/03/blog-post_30.html- புலிகளின் முதல் உள்நாட்டு வானூர்தி தயாரிப்பு முயற்சி | கண்கண்ட சாட்சிகளின் நினைவுகள்
புலிகளின் முதல் விமானம் Friday, February 06, 2009 எழுத்தாளர்: சாத்திரியார் அபி அப்பா என்றொரு பதிவர். அவர் பல விடயங்களை நல்ல நகைச்சுவையாகப்பதிவார். அவரது நகைச்சுவை பதிவுகளை நானும் படித்து சிரிப்பதுண்டு அப்படித்தான் .எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை.என்றொரு பதிவிட்டிருந்தார் நானும் ஏதோ நகைச்சுவைப்பதிவாகவே இருக்குமென நினைத்து உள்ளே போய் பார்த்தால் அங்கு அவரது பதிவில் ஈழத்து இயக்கங்களில் ஒன்றாகவிருந்த ரெலோ என்கிற இயக்கத்தின் இரண்டு விமானங்களை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்கிற ஒரு தவறான கருத்தினையும் எழுதிப்பதிவிட்டிருந்தார். அதற்கான பதிலினை நான் அவரது பதிவிலேயே இட்டிருந்தாலும்.மேலும் இதுபோன்ற தவறான தகவல்கள் அதனைப்படித்தவர்கள் மனங்களில் பதிந்து போகாமல் இருக்கவே புலிகள் முதலில் செய்த விமானம் பற்றிய விபரத்தினையும். ரெலோ அமைப்பு விமானங்கள் செய்யும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லையென்பதனையும் தெளிவு படுத்தவே எனது இந்தப்பதிவாகும். 1985 ம் ஆண்டளவில் திம்புப்பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் யாழ் குடாநாட்டின் அப்போதைய புலிகளின் தளபதியாக இருந்த கிட்டு தலைமையில் யாழ் குடாநாடு முதன் முதலாக புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகியது. வடக்கு கிழக்கின் மிகுதிப் பகுதிகளெல்லாம் இலங்கையரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. (ஏன் மற்றைய இயக்கங்கள் காவலுக்கு நிக்கவில்லையாவென யாராவது அனானியாக வந்து பதிவு போடாமல் தங்கள் அடையாளத்துடன் வந்து பதிவிட்டால் அதற்கான பதில் தரப்படும்)இந்தக் காலகட்டத்தில் புலிகள் அமைப்பு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் தங்கள் ஆயுதத் தொழிற்சாலைகளை உருவாக்கி ஆயுதங்களையும் செய்யத் தொடங்கியிருந்தனர்.அவற்றினுள் முக்கியமான பெரியதொரு ஆயுதத் தொழிற்சாலைதான் எனது கிராமமான மானிப்பாயில் இருந்த தொழிற்சாலை. அங்கு அப்பையா அண்ணை என்கிற புலிகளின் மூத்த உறுப்பினரின் கண்காணிப்பில் அந்தத் தொழிற்சாலை இயங்கி வந்தது. (அவரைப் பற்றிய பதிவு) அவருடன் நானும் பலகாலங்கள் இணைந்து அந்த தொழிற்சாலையில் பணியாற்றியிருக்கிறேன்.இங்கு புலிகளிற்கு வேண்டிய கண்ணி வெடிகள் புலிகளின் சொந்தத்தயாரிப்பான எறிகணைகள்(மோட்டார் செல்கள்) எல்லாம் இங்கு தயாரிக்கப்படும். அதே நேரம் அப்பையா அண்ணையும் இராணுவத்திறகெதிராக பயன்படுத்தககூடியதாய் புதிது புதிதாய் ஏதாவது வெடிபொருட்கள். இராணுவ வாகனங்கள் என்று செய்ய முயற்சிப்பார். அப்படியான ஒரு முயற்சிதான் புலிகளிற்காக விமானம் செய்யும் முயற்சியும்.அன்றைய காலகட்டத்தில் உள்ளுர் தொழில் நுட்பத்தில் இலகுவாய் உருக்கக்கூடிய அலுமினியத்தில்தான் விமானம் வடிவமைக்கப்பட்டது. அதற்கான தொழில் நுட்ப வேலைகளை கண்ணாடி வாசுவும் (அவரைப்பற்றிய பதிவு) றஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரும். பாலா என்பவருமே செய்வார்கள். அந்தத் தொழிற்சாலைக்கு வேண்டிய வெடி பொருட்கள் மற்றும் உபகரணங்களை வினியோகிக்கும் பொறுப்பு குட்டி சிறியிடம் இருந்தது. நிதி மற்றும் அங்கு பணியாற்றுபவர்களிற்கான உணவு வழங்குதல்என்பனவற்றிற்கு மானிப்பாய் பகுதியின் அன்றைய அரசியல் பொறுப்பாளராக இருந்த மயூரன் பொறுப்பாக இருந்தார்..ஆரம்பத்தில் ஜெர்மனிய நிறுவனமான வொக்ஸ் வாகன் கேவர் காரின் இயந்திரத்தினைத்தான் விமானத்திற்கு பொருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இரண்டு 125.சி சி ஊருந்துளியின் (மோர்டார் சைக்கிள்) இயந்திரத்தினையும் பயன்படுத்தி விமானத்தினை பறக்கவைக்கும் முயற்சிகள் நடந்தது.தயார் செய்த விமானத்தினை எடுத்துச்செல்ல இலகுவாக அதன் இறக்கைப்பகுதிகளை களற்றியெடுத்து உழவுஇயந்திரத்தில் கல்லுண்டாய் வெளிக்கு கொண்டுபோவோம். கல்லுண்டாய் வெளியென்பது மானிப்பாய்க்கும் அராலிக்குமிடையில் உள்ளதொரு பரந்தவெளி இங்கு விமானம் ஓடுவதற்கு வசதியாக வளைவுகளற்ற நேரான ஒரு வீதி உண்டு. அந்த வீதியில் விமானத்தினை மீண்டும் பொருத்தி பறப்பதற்கான முயற்சிகள் நடைபெறும்.அனேகமாக வாசு அல்லது பாலாதான் விமானத்தினை உள்ளிருந்து இயக்குவார்கள்.இதே நேரம் யாழ் பண்ணைக்கடலில் விழுந்த இலங்கை இராணுவத்தின் உலங்கு வானூர்தி ஒன்று மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட அதனையும் கட்டியிழுத்து வந்து அதன் இயந்திரப்பகுதியை பிரித்தெடுத்து இயக்கும் முயற்சிகளும் நடந்தது. ஆனால் அந்த இயந்திரம் பலகாலம் கடல்நீரில் கிடந்ததால் பலனேதும் கிடைக்கவில்லை. இப்படி விமானம் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கையில் கண்ணாடி வாசுவும் றஞ்சனும் நாவற்குழி முகாம்தாக்குதல் முயற்சியில் இறந்து போனாலும் விமானம் செய்யும் முயற்சி இந்தியப்படையின் வருகையும் அவர்களுடனான புலிகளின் யுத்தம் தொடங்கியதையிட்டு இந்திய உலங்குவானூர்திகள் மானிப்பாயிலிருந்த ஆயுதத் தொழிற்சாலை மீது உந்துகணை(றொக்கற்)தாக்குதல் நடத்தியதில் அந்த தொழிற்சாலையுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு விமானங்களும் அழிக்கப்பட்டதுடன். புலிகளின் விமானம் செய்யும் முயற்சி தறகாலிகமாக ஒரு ஓய்விற்கு வந்திருந்தது. இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் ஆரம்பகால விமானத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த எவரும் இல்லாத நிலையில் மீண்டும் லெப்.கேணல் சங்கரண்ணாவின் முயற்சியும் வெளிநாடுகளில் விமானத்தெழில் நுட்பமும் வானோடிகளாகவும் பயிற்சி பெற்ற சில இளைஞர்களின் முயற்சியும்தான் இன்றைய புலிகளின் விமானங்கள். அவைபற்றிய முழு விபரங்கள் அதற்குரிய காலம் வரும்பொழுது பதிவாகும்.இதுவே புலிகள் அமைப்பின் விமானத்தயாரிப்பின் முயற்சிகளாகும். ஆனால் 1985ம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்ட ரெலோ இயக்கம் விமானம் செய்வதானால் அதே யாழ்குடாநாட்டில்தான் செய்திருக்கவேண்டும். ஏனெனில் இந்தியாவில் செய்யமுடியாது அப்படியொரு முயற்சியை இந்திய அரசு விரும்பாது. அப்படி யாழ்குடாநாட்டில் செய்திருந்தாலும் விமானம் பறப்பு முயற்சிகளை மேற்கொள்வதங்கு உகந்ததாக நேரான பாதையும் மரங்கள் வீடுகளற்றதொரு வெளியான இடம் யாழ் குடாவில் மூன்றுதானிருந்தது அதில் ஒன்று வல்லைவெளி இங்கு அருகிலேயே தொண்டைமானாறு இராணுவ முகாம் இருந்ததாலும் மற்றும் இந்தவீதி வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் முக்கியமானதொரு வீதி என்பதால் வாகனப்போக்குவரத்துக்கள் அதிகம். எனவே இங்கு விமானத்தை பரீட்சிக்கமுடியாது. அடுத்தது கோப்பாய் சாவகச்சேரி வீதியில் வரும் கோப்பாய் வெளி இதற்கருகிலும் நாவற்குழி இராணுவ முகாம் இருந்தது. அடுத்ததாக புலிகள் விமானத்தினை பரீட்சித்த கல்லுண்டாய் வெளியாகும். இங்கும் ரொலே எவ்வித விமானப் பறப்பு முயற்சியும் மேற்கொள்ளவில்லை..அப்படியானால் ரெலோ விமானத்தை எங்கு செய்தது எங்கு பரீட்சித்தது??? அப்படியானால் ரெலோ விமானவடிவில் கடதாசியில் பட்டம் செய்து விட்டுப்பார்த்திருக்கலாம். அதனை புலிகள் குண்டு வைத்து எல்லாம் தகர்க்கத்தேவையில்லை கையாலேயே கிழித்தெறிந்திருக்கலாம்.அட எதுக்கு இவ்வளவு சிரமப்படுவான் ரெலோவின் ஆரம்பகால உறுப்பினரும் தற்போதைய ரெலோ அமைப்பின் தலைவராகவும் பாராழுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் செல்வம் அடைக்கலநாதனின் மின்னஞ்சலை இங்கு இணைக்கிறேன் - selvamtelo@yahoo.com அவரிடமே கேட்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.இதற்கு மேலும் யாராவது வந்து ரெலோ செய்த விமானத்தை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனர் என்று அடம்பிடித்தால் என்லை முடியலை முடியலை மேலதிகமாக சில விபரங்கள். அன்றைய காலகட்டத்தில் மானிப்பாய் ஆயுதத்தெழிற்சாலையில் நான் பழகிய போராளிகளான. முத்து.முகுந்தன்.வெள்ளைப்பிறேம்.கொன்னைப்பிறேம்.பாரத்.சுபாஸ்.சுதா. ஆகியோர் இந்திய இராணுவத்துடனான மேதலில் இறந்துவிட்டார்கள்.குட்டி சிறி கிட்டுவுடன் வங்கக்கடலில்வைத்து இந்தியக் கடற்படையால் கொல்லப்பட்டான்.அந்த முகாமை நிருவகித்த அப்பையா அண்ணை யாழ் இடப்பெயர்வின்பொழுது ஈ.பி.டி.பியினரால் கடத்திக்கொண்டுபோய் கொல்லப்பட்டார்.மானிப்பாய் அரசியல்துறை பொறுப்பாளராயிருந்த மயூரன் மற்றும் பாலா கண்ணன் சத்தியா .ஆகியோர் வெளிநாடுகளில் வசிக்கின்றார்கள். https://sathirir.blogspot.com/2009/02/blog-post_4579.html?m=1 - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.