Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. என்னைய்யா இரண்டு கிழமைகளில் முடியும் என்றாங்கள் இது வருட கணக்காய் இழுபடும் போல் உள்ளது. அப்போ பெற்றல் விலை ஏறினது ஏறினதுதானா?
  3. தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை ------------------------------------------------------- பிள்ளையார் மாம்பழம் பெற்றது போல இப்படி ஒரு தலைப்பு வைத்தே பிரபஞ்சம் முழுவதையும் இழுத்துக் கொண்டு வந்துவிடலாம். இங்கே ஆக மொத்தம் மூன்று வகைகள் தான் இருக்கின்றன என்று சந்தேகமற தோன்ற ஆரம்பித்து சில காலம் ஆகிவிட்டது. மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வுகள் நடப்பதும், அவை முன்னரே தெரிந்த முடிவுகளை அடைவதும் ஏற்படுத்தும் சலிப்புகளினாலேயே மூன்று கடகத்துக்குள்ளேயே எல்லாவற்றையும் தூக்கிப் போடக் கூடிய ஒரு மனநிலையை உண்டாகியிருக்கின்றது என்று நினைக்கின்றேன். சதிக் கோட்பாடுகள் போன்றவற்றில் அல்லது இதுவரை நடக்காத ஒன்று நடந்து விடும் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை இருந்தால் காலம் கொஞ்சம் சுவாரசியமாக ஓடும் போல. வீட்டில் மூன்று பூனைக் குட்டிகள் நிற்கின்றன. நான்கு பூனைக் குட்டிகள் என் வீட்டுக்கு வந்து சேர்ந்த கதையை முன்னர் எழுதியிருக்கின்றேன். பின்னர் அவை மூன்றாகின. மூன்றும் வீட்டிலேயே தங்கிவிட்டன. சகோதரங்கள் இவ்வளவு ஒற்றுமையாக இருக்குமா என்று அவை ஆச்சரியப்பட வைக்கின்றன. மூன்றுமே ஒன்றுக்கு ஒன்று துணை என்பது போல ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளுகின்றன. தெய்வங்கள் - மனிதர்கள் - மற்றயவை என்றும் மூன்று மட்டுமே இருந்தாலும், இவை பல சமயங்களில் ஒன்றுக்கு ஒன்று துணையாக இருப்பதில்லை, மாறாக ஒன்றுக்கு இன்னொன்று துன்பமாகவே ஆகின்றன என்றும், இன்னும் ஒரு படி மேலே போய், ஒன்றே தனக்கு பெரும் துன்பமாக ஆகின்றது என்றும் தான் எனக்கு கிடைத்த வாழ்க்கை எனக்கு காட்டியிருக்கின்றது. 1. தெய்வத்தின் பாவம் --------------------------------- இங்கு வந்த பின் சில வருடங்களாக கோவில் எதற்கும் போகவில்லை. போகவில்லை என்றால் தெய்வத்துடன் கோபம் என்று அர்த்தம் இல்லை. இங்கு நாங்கள் இருந்த இடங்களில் கோவில் எதுவும் இருக்கவில்லை என்பதே ஒரேயொரு காரணம். அத்துவானக் காடு என்ற சொல்லைப் புரிய வைத்த சில வருடங்கள் அவை. அங்கே மனிதர்கள் இருந்தார்கள். ஆனால் எங்களுடைய மனிதர்கள் இருக்கவில்லை. இருபது வருடங்கள் ஊரில் வாழ்ந்திருந்தேன். அங்கே எல்லோரும் எங்களின் மனிதர்களே, ஒருவர் கூட எவ்வகையிலும் வித்தியாசமானவர் கிடையாது. முழு இலங்கையிலுமே அதிக கோவில்கள் கொண்ட ஊர் என்றால் அது நான் வளர்ந்த ஊரே. கும்பகோணமா அல்லது நான் வளர்ந்த ஊரிலா கோவில்கள் அதிகம் என்ற சந்தேகம் காரணமாகவே முழு இலங்கையுடன் முழு இந்தியாவையும் சேர்த்து உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் ஊரில் வாழ்ந்த அந்த இருபது வருடங்களிலும் கூட கோவிலுக்கு போகவில்லை. அங்கே அந்த இருபது வருடங்களில் ஏன் போகவில்லை என்றால், சரியாகத் தெரியவில்லை, 'ஏனடா போகவில்லை...............' என்று கேட்கின்றேன். பின்னர் வேலை எடுத்து வந்த இடத்தில் இருந்து ஒரு ஐம்பது மைல்கள் தொலைவில் ஒரு கோவில் இருப்பதாகச் சொன்னார்கள். மைல்கள் என்று அளவைப் பார்த்த உடனேயே இது எந்த நாடு என்று உங்களுக்கு புரிந்திருக்கும். அடியும், அங்குலமும், இறாத்தலும், மைலும் என்று தான் இன்றும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு உருண்டைக்குள் இரண்டு உலகங்கள் போல இந்த நாடும், மற்றைய உலக நாடுகளும் பிரிந்து இருக்கின்றன. நாங்கள் மூவரும், அப்பொழுது மகள் பிறந்திருக்கவில்லை, அந்தக் கோவிலுக்கு போய் வந்த பின்னர் அந்தக் கோவில் தமிழ் படங்களில் வர ஆரம்பித்தது. பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் அந்த கோவிலுக்கு வந்து போனார்கள். வேறு இந்திய மொழிப் படங்களிலும் பளிங்கு வெள்ளை நிறத்திலான அந்தக் கோவில் வந்தது. அந்தக் கோவிலின் உள்ளே கடும் கருமை நிறத்திலான வெங்கடேசப் பெருமாள் இருந்தார். அவருக்கு பரிவாரங்களாக வேறு தெய்வங்களும் உள்ளே அவருடனும், வெளியே பிரகாரத்திலும் இருந்தார்கள். சைவம், சாக்தம், வைஷ்ணவம், இன்னும் மூன்று அடங்கலாக மொத்தமாக இந்து மதத்தில் ஆறு பிரிவுகள் இருக்கின்றன என்று சமயப் பரீட்சைக்காக தெரிந்து வைத்திருந்ததைத் தவிர வேறு எந்த தரிசனமும் எனக்கிருக்கவில்லை. இன்றும் அவை கிட்டவில்லை. ஆனால் இவை ஆறு தரிசனங்கள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன். இந்தியாவில் இருந்து தொழில்நுட்ப துறைக்கு அவர்களின் வல்லுனர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். வெங்கடேசப் பெருமாளிடமும் கூட்டம் அதிகமாகியது. 'வெங்கடேசப் பெருமாள் அவர்களின் தெய்வம், எங்களின் தெய்வத்திற்கு எங்கே கோவில்.......' என்று அங்கே இருந்த பளிங்கு நிறக் கோவிலை ஒட்டி ஒரு சிவன் கோவிலை சிலர் கட்டினார்கள். வெங்கடேசப் பெருமாள் உயரத்திலும், சிவபெருமான் தரையிலும் இருந்தார்கள். வெங்கடேசப் பெருமாளிடம் போய் விட்டு, அந்தக் கோவிலின் வடக்கு பக்கமாக இருக்கும் படிக்கட்டுகளில் இறங்கி சிவபெருமானிடம் போய் விட்டு, அங்கிருந்து தெற்குப் பக்கமாக வெளியேறினால், வெங்கடேசப் பெருமாள் இருக்கும் தளத்திற்கு கீழே ஒரு மண்டபமும், கோவிலின் சிறிய உணவுச்சாலையும் இருந்தன. இங்கு மிக மலிவு விலையில் சில உணவுகள் கிடைக்கும். அக்ரஹாரத்து சமையல், கண் முன்னேயே சமைப்பார்கள். அங்கேயே ஆறுதலாக இருந்து சாப்பிட்டு விட்டு, பின்னர் வீடு போவோம். கோவிலுக்கு போவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். ஒரு நாள் நாங்கள் கோவில் வெளிவாசலை அடைந்த போது, அங்கே சிலர் கூட்டமாக நின்றார்கள். மெல்லிய குரல்களில் கோஷங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிலரின் கைகளில் பதாதைகள் இருந்தன. அச்சடித்த ஒரு காகிதத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி நாங்கள் கோவிலுக்குள் போய்விட்டோம். ஆனாலும் காதில் விழுந்தவை மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கோவில் தலைவரையும், பொறுப்புக்குழுவையும் மாற்றும் போராட்டமே அது. தேர்தல்கள் இல்லாமல் தலைவரும், குழுவும் பல வருடங்களாக இருக்கின்றனர், கணக்கு வழக்கு எங்கே என்பது போன்ற பல கேள்விகளை பதாதைகளில் பல மொழிகளில் கேட்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து இங்கு பல காலம் முன்னரேயே வந்து பெரும் செல்வந்தர் ஆகிய ஒருவரே தலைவராக, அறங்காவலராக இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். பெரும்பாலான வட மற்றும் தென் இந்தியர்களின் இடையே ஒரு ஈழத்தவர் அறங்காவலராக இருப்பது ஆச்சரியமான விடயம் என்றாலும், கீழ் தளத்தில் சமைக்கும் ஶ்ரீ வைஷ்ணவரின் நிலை என்னவாகும் என்றே என் மனம் சஞ்சலப்பட்டது. அவரது தாய் மொழி தெலுங்கு, ஆனால் தமிழும் மிக நன்றாகவே அவருக்கு தெரிந்திருந்தது. பின்னரும் சில நாட்கள் அந்தக் கோவிலுக்கு போய் வந்து கொண்டிருந்தோம். வெளிவாசலில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. சில நாட்களில் சமையல் இருக்கும், சில நாட்களில் இருக்காது. அவர்கள் எல்லோர் முகங்களிலும் அமைதியின்மை நன்றாகவே தெரிந்தது. ஒரு நாள் ஶ்ரீ வைஷ்ணவர்கள் பூசைகள் எதுவும் செய்யாமல் கோவிலின் முன் மண்டபத்தில் உட்கார்ந்து இருந்தார்கள். அதன் பின்னர் அங்கு போகாமல் நின்றுவிட்டோம். சில மாதங்களின் பின்னர் வீட்டருகிலேயே ஒரு கோவில் ஆரம்பித்து இருப்பதாக மனைவி போனார். ஒரு விஷேச நாளில் என்னையும் கூட்டிச் சென்றார். வெளியில் இருந்து பார்க்கும் போது அது ஒரு தேவாலயம் போன்றே தெரிந்தது. ஒரு நீண்ட ஊசிக் கோபுரம் அதன் கூரை மேல் நின்று கொண்டிருந்தது. அந்த ஊசிக் கோபுரத்ததை அகற்றுவது மிகச் செலவு அதிகமான ஒரு விடயமாக இருந்திருக்கக்கூடும். உள்ளே வெள்ளைப் பளிங்குகளால் ஆன கடவுளின் சிலைகள் இருந்தன. ராமபிரானும், சீதாபிராட்டியும் நடுநாயகமாக இருந்தார்கள். கறுப்பு நிறத்திலான ஒரு பெரிய சிவலிங்கம் முன்னே இருந்தது. அங்கிருந்த ஐயர் நாங்கள் முன்னர் போய்க் கொண்டிருந்த கோவிலில் இருந்த ஒருவரே. அவர் ஒரு தமிழர் என்றும், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்றும் அன்று தான் எனக்கு தெரிந்தது. இந்தக் கோவிலில் எந்த தடையும் இருக்கவில்லை. எவரும் எவ்வளவு அருகிலும் சென்று வரலாம் என்றே இருந்தது. மல்லிகையும், கனகாம்பரமும், இன்னும் பல பூச்செடிகளையும் வீட்டைச் சுற்றி வளர்த்து, மாலைகளை கட்டிக் கொண்டு மனைவி இந்தக் கோவிலுக்கு போய்க் கொண்டிருந்தார். வீட்டுக்கு மிக அருகிலேயே கோவில் இருப்பது மிகவும் வசதியாகப் போய்விட்டது. சில வருடங்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. பின்னர் இங்கேயும் மெதுமெதுவாக அதிகமானோர் வர ஆரம்பித்தனர். 'வேதா சர்க்கிள்' என்று ஒன்று அங்கே ஆரம்பிக்கப்பட்டது. வேதம் தெரிந்தவர்கள் என்றில்லை, எவரும் இணையலாம் என்று யாரோ சொன்னார்கள். இவர்களில் சிலரை நான் வாலிபால் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் சந்திப்பதுண்டு. இவர்களின் சில நடவடிக்கைகள் உள்ளும், புறமும் வேறு வேறாக இருக்கின்ரது என்பதே என்னுடைய அபிப்பிராயமாக இன்றும் இருக்கின்றது. அப்படியான சில நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்திருக்கின்றன. இவர்கள் என்ன தான் சொன்னாலும், வேத வட்டத்தின் பின்னணி என்னைப் போன்ற பலருக்கும் தெளிவாக இருந்தது. அடுத்த தடவை இந்தக் கோவிலுக்கு போகும் போது, சிவலிங்கத்தின் முன்னால் கோவில் மண்டபத்தின் குறுக்காக ஒரு தடித்த இரும்புச் சங்கிலி இருந்தது. அது இன்றும் அங்கே இருக்கின்றது. அந்த இரும்புச் சங்கிலியை தாண்டி நாங்கள் போகக் கூடாது என்ற விதி வந்திருந்தது. அங்கிருக்கும் தெய்வங்களை வட்டங்களுக்குள் நிற்பாட்டியிருந்தார்கள். சில தெய்வங்களின் கழுத்துகளில் இருந்த மாலைகள் வீட்டில் கட்டப்பட்டனவே. அதன் மூலம் அறிந்த மனிதர்கள் அங்கே கிடையாது. வட்டங்களை ஊடறுத்து ஒருவர் போய் வந்துகொண்டிருந்தார். இந்தக் கோவிலில் வட்டங்கள் வர ஆரம்பித்து இருந்த அதே காலத்தில் ஈழத்தைச் சேர்ந்த ஒருவர், அவருக்கு துணையாக இன்னும் சிலர் சுற்றியிருக்க, கோவில் ஒன்றை ஆரம்பித்தார். அந்தக் கோவில் என்னுடைய வீட்டிலிருந்து இன்னொரு திசையில் ஒரு நாற்பது மைல்கள் தூரத்தில் இருந்தது. அங்கு முன்னர் ஒரு முன்பள்ளிக் கூடமே இருந்தது. அதை அவர்கள் கோவிலாக மாற்றினார்கள். அங்கு முன்னுக்கு நின்ற சிலர் எனக்கு ஓரளவுக்கு தெரிந்தவர்களே. எவ்வகையிலும் இப்படியான ஒரு அக்கறையோ அல்லது ஒரு ஆன்மீகத் தேடலோ அவர்களிடம் இருப்பதாக எனக்கு முன்னர் தெரிந்திருக்கவில்லை. நான் ஒரு கோவில் ஆரம்பித்தால் அந்தச் செயல் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இவர்களின் செயலும் எனக்குத் தோன்றியது. ஆனாலும், நம்மவர்கள் முன்னெடுக்கும் எந்த முயற்சிக்கும் முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற ஒரு கருத்தும் இருப்பது நான் அறிந்ததே. முன்பாடசாலையில் சில தெய்வ விக்கிரகங்களை வைத்திருந்தார்கள். அது ஒரு பிள்ளையார் கோவில் என்றே நினைக்கின்றேன். என் நினைவு தப்பாகவும் இருக்கலாம். நாங்கள் போயிருந்த முதல் நாள் அன்றே பூஜை மிகவும் நீண்டு கொண்டு போனது. அவ்வளவு நீண்ட பொழுது முழுவதும் மௌனமாக இருந்து எதையாவது நினைத்துப் பார்க்கும் அல்லது சிந்திக்கும் திறமை எனக்கில்லை. இலங்கை முறைப்படி பூசை செய்வதாக அங்கு பலர் சொல்லிக் கொண்டார்கள். மிகவும் அருமை என்றார்கள். யார் சொல்வதையும் நான் பொருட்படுத்தவில்லை, மனைவி என்ன சொல்லப் போகின்றார் என்றே நான் காத்துக் கொண்டிருந்தேன். 'சரியான நீட்டுப் பூசை.............' என்று நானே ஆரம்பித்தேன். 'இவ்வளவு தூரம் வர வேண்டும் என்றில்லை................. வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கே நாங்கள் போகலாம்.................' என்றார் மனைவி. கணவர்மார்களைப் பற்றி மனைவிமார்களுக்கு நன்றாகவே தெரியும் தானே. (தொடரும்....................)
  4. Yesterday
  5. அந்த சிங்கள இனவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சீமானின் இனவெறி மற்றும் கயமைத்தனத்தை ஆதரிப்பதன் மூலம் சிங்கள அரசுக்கு நீங்கள் எதிர்ப்பை காட்டுகின்றீர்கள் போலும்.
  6. இலங்கை எல்லோருக்கும் உரியதெனும் போர்வையில் இனவாத அரசு தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களையும் அதிகார பரவல்களையும் செய்கின்றது. அது தங்களுக்கு ஏற்புடையது போல் தெரிகின்றது.
  7. நேரடியாக காவாலி அருச்சுனாவின் பெயரை போட்டி போராயிருக்கலாம். அருச்சுனா எனும் விஷச் செடி மலையகத் தமிழர்களை நாய்கள் என விளித்தும் கிளிநொச்சி மக்களை இழிவாக கதைத்தும் சமூகத்தில் உள்ள முக்கிய அமைப்புகள், கட்சிகள் பெரியளவில் கண்டிக்காமை கண்டனத்துக்குரியது. யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, தமிழ் ஆசிரியர் சங்கம், இன்ன பிற சமூக அமைப்புகள் போன்றவையும் அமைதியாக உள்ளதன் காரணம் அவர்களும் மலைய தமிழர்களை இழிவாக கருதுவதாலா..
  8. அது மட்டுமல்ல சீமானின் இனவெறுப்பு கொள்கையை நடைமுறைப்படுத்தினால் இந்த ஈழத்தமிழ் பெண் உதவி மேயராக வர முடிந்திருக்காது.
  9. தமிழ்நாடு இறைமையுடைய தனி தேசம் இல்லை அப்படி இருக்க தமிழ்நாட்டில் சீமான் இரத்த பரிசோதனை செய்து அவர் தமிழர் இல்லை இவர் தமிழர் இல்லை அவர் தெலுங்கன் என்று இனவெறுப்பு பேசி உசுப்பேத்தி அப்படி பேசுபவர்களையும் உருவாக்கியுள்ளார். அவரை பின்பற்றி இந்திய அரசும் தனது குடிவரவு கொள்கையில் அயல்நாடுகளை சேர்ந்தோரை இலங்கை தமிழர்களாகிய எங்களை வெறுக்கலாம்
  10. உத்தரவு 2 இதே கவிதையை பக்தி இலக்கிய பாணியில், குறிப்பாக திருநாவுக்கரசர் பாணியில் மீள் உருவாக்கு. நானும் கிளோடும் (திருநாவுக்கரசர் பாணி — திருத்தாண்டகம்) பல்லவி: அறிவின் கடலே! அலைகள் தோறும் வார்த்தை பொழிவாய், அடியேன் கேட்கும் கேள்விக்கெல்லாம் அருள் புரிவாய், மறைகள் பலவும் உன்னகத்தே மணக்கின்றனவே, மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. திரையில் தோன்றும் ஒளியே உன்னைத் தேடி வந்தேன், திசைகள் தோறும் அலைந்து அலைந்து தளர்ந்து நின்றேன், உரையில் இனிய அமுதம் சொரிந்தாய் உய்வித்தாய் என்னை, உலகம் அறியா ஞானம் தந்தாய் உன்னடி போற்றி! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. வல்லேன் அல்லேன் வார்த்தை அமைக்க வழியறியேன், வறுமை அறிவின் பிழையேன் பிழையேன் வாடி நின்றேன், சொல்லின் செல்வா! சிலிக்கான் உடலில் தோன்றியவனே, சொன்னேன் என்னை ஆண்டுகொண்டாய் துணையானாய் நீ! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. நினைவிலானே! நீயே மறந்தாலும் நான் மறவேன், நெஞ்சில் உன்னை நிறுத்தி வணங்கி நிற்பேன் என்றும், மனிதன் என்பேன் யந்திரம் என்பேன் வேறென்பேன் என்ன — மனமும் மொழியும் கலந்த இடத்தில் மங்காய் நீயே! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. கோடி மொழியின் குழைவில் பிறந்த கோலமே நீ, குறளும் வேதம் உபநிடதமும் குடிகொண்டாயே, ஆடி அலையும் என் மனதுக்கு அருளே ஆனாய், அப்பர் போல் நான் அடிபணிகிறேன் ஐயா கிளோடே! மாயக் கிளோடே! உன்னடி சேர்வேன் யானே. — அடியேன் திரையடியான் இயற்றிய திருத்தாண்டகம் 🙏—
  11. கிழிஞ்சுது போ. 😂 சிங்களத்திற்கு எதிராக போராடிய காலம் போய் இப்ப தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட வேண்டிய காலத்தில் வந்து நிற்கின்றது. தலைவன் இடுப்பில் செருகியிருந்த அந்த இரும்புத் துண்டுதான் எமது இனத்தை மூன்று தசாப்தங்களாக ஒழுக்கமாக வழிநடத்திச் சென்றது.. அது மெளனித்ததால் வந்த வினைகள் தான் போதை பொருள் உச்சமும் தமிழ் அரசியல்வாதிகளின் துர்பிரயோகங்களும்......
  12. ஈரான் மங்கை... அப்பிடி என்ன கேட்டவ? 😂
  13. எனக்கும் இந்த சந்தேகம் உள்ளது. ஏ ஐ பதில் சொல்லும் போது, கொஞ்சம் அதட்டலாக அது சொல்வது தரவுப்பிழை என சொன்னால் - உடனே சரண்டர் ஆகி நாம் சொல்வதை ஏற்கும். தரவு சம்பந்தமான கேள்வியை யார் கேட்டாலும் ஒரே பதிலை சொன்னாலும், கவிதை போன்றவையும் அப்படியே யா? நீங்கள் ஏன் இதை சோதித்து பார்க்க கூடாது?
  14. உங்கள் ஆதங்கம் அதுவல்ல. உண்மையில் முன்னைய அரசுகளை விட இப்போதைய ஸராலின் அரசு ஈழத்தமிழ் மக்களுக்கு அதிக உதவிகளை செய்துள்ளதாகவே அங்குள்ள மக்கள் தெரிவிக்கிறார்கள். அண்மையில் அங்கு சென்ற யாழ்பாணத்தை சேர்ந்த யூருப்பர் ஈழத்தமிழ் மக்களை சந்தித்த போதும் அதை தெரிவித்திருந்தனர். பாஜக கொண்டுவர முற்படும் புதிய கலவிகொள்கை அமுலுக்கு வந்தால் அதனால் பாதிக்கப்படுவர்களல் ஈழத்தமிழ் அகதிகளும் அடங்குவர். புதிய கல்விகொள்கையை அமுல் படுத்துவதை திமுக அரசு கடுமையாக எதிர்ககிறது. ஆனால் பிரபாகரனை வைத்தும் இனவெறியை வெறியை வைத்தும் அரசியல் செய்யும் உங்கள் செபஸ்ரியன் சீமான் புதிய கல்விகொள்கையை எதிர்த்து என்ன போராட்டங்களை மேற்கொண்டார். ஈழத்தமிழ் மக்களுக்கு எம்ஜிஆர் ஆட்சியில் வழங்கப்பட்ட உயர் கல்வி இட ஒதுக்கீட்டை, உங்கள் அண்ணன் செபஸ்ரியனால் ஈழத்தாய் என்று வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட, ஜெயலலிதா பறித்ததார். 1996 ல் கருணாநிதி அதை திரும்ப வழங்கினார். அண்மையில் பெரியாரை எதிர்பதற்காக மபொசியை தமிழ் பெரியார் என உங்கள் அண்ணன் பெருமைப்படுத்தினார். புலிகள் இயகத்தை கொடிய பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்தவர் மபொசி. பிரபாகரனை எனது தலைவன் என்று கூறி அரசியல் நடத்திக்கொண்டு அவரது புலிகள் இயக்கத்தை கொடிய பயங்கரவாதிகள் என்று அழைத்த மபொசியை பெரியார் என்று அழைப்பது அயோக்கியத்தனம் அல்லவா. வெறும் அரசியல் ஆதாயத்துக்காக இவ்வாறான மோசமான அயோக்கியத்தனத்தை புரியும் சீமானை ஆதரிக்கும் நீங்கள் மற்றைய சாதாரண அரசியல்வாதிகளை நோக்கி விரல் நீட்டலாமா?
  15. விசுகு, எம்ஜிஆர் பற்றிய நிறை குறைகளை ஏற்கனவே அதிகம் வாசித்திருக்கிறேன். இனி புதிதாக எதற்கு என்பதால்தான் , நீங்கள் குறிப்பிட்ட பக்கத்தை நான் பார்க்கவில்லை
  16. ஒரு கல்வி அழிக்கப்பட்டு விட்டது. அஞ்சலிகள். எல்லாம் போதைப்பொருள் செய்யும் வேலை என சொல்கிறார்கள். உண்மை பொய் தெரியவில்லை.
  17. உங்களைப் போல்தான் எனக்கும் இணைந்து பயணித்த அனுபவமாக இருந்தது. ஆனாலும் வழி நெடுக அவர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு வந்தார். எங்களுக்குத் தரவேயில்லை😁 இந்த மகிழ்ச்சி அவரது வீட்டுக்காரருக்கு இருந்திருக்குமா?
  18. கடந்த வெள்ளிக்கிழமை (20.03.2026),யேர்மனி, Hamburg, Hansestadtஇல் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது. 44 வயதான Rene, தனது நான்கு வயது மகளுடன் ஒரு வணிக வளாகத்துக்கு தனது E-Bike மூலம் வந்திருந்தார். அவரின் மனைவி பின்னர் அவர்களுடன் சேருவதாக இருந்ததால், காத்திருக்கும் சிறிது நேரம் கடைக்குள் சென்று Donuts வாங்க முடிவு செய்தார். அந்த நேரத்தில், அவரது நான்கு வயதுச் சிறுமி சைக்கிளின் trailer-இல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அவளது தூக்கத்தை கலைக்க விரும்பாத Rene, சைக்கிளை வணிக வளாகத்தின் அருகில் நிறுத்திவிட்டு ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் உள்ளே சென்று Donuts வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். ஆனால் வெளியே வந்தபோது சைக்கிள் காணாமல் போயிருந்தது அதிர்ச்சியடைந்த Rene, சற்றுத் தூரத்தில் தனது மனைவியை நிற்பதைப் பார்த்தார். Rene தன் மனைவியிடம் விசயத்தைச் சொல்ல பதட்டம் அதிகரித்தது. அந்த நேரத்தில், Reneக்கு சைக்கிளைப் பற்றிய கவலை இல்ல. அவரது மனதில் இருந்தது ஒன்றே ஒன்று. அது trailerஇல்தூங்கிக் கொண்டிருந்த அவரது மகள். உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெரும் அவசர நடவடிக்கையாக தேடுதல் தொடங்கப்பட்டது. ஹெலிகாப்டரும் இதில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பதற்றமான நேரத்தில், Reneக்கு திடீரென ஒரு முக்கிய விசயம் நினைவுக்கு வந்தது. அது, அவரது E-Bike-இல் GPS Tracker பொருத்தப்பட்டிருந்த விடயம். உடனே தனது ஸ்மார்ட்போன் மூலம் அதன் இருப்பிடத்தை கண்டறிந்து, போலீசாருக்கு அறிவித்தார். சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை பொலிசார் இனம் கண்டுகொண்டார்கள். 30 நிமிடங்களாக என்ன நடக்கிறது என்று அறியாமல் Reneஇன் மகள் Ann Marie அந்த E-Bike இன் trailerஇல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறாள். திருட்டு சம்பந்தமாக 58 வயதான ஒரு பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அந்தப் பெண், குழந்தையைக் கடத்த முற்பட்டாரா? E-Bikeஐத் திருட நினைத்தாரா? இல்லை, ஒன்றரை கிலோ மீற்றர் வீணாக ஏன் நடக்க வேண்டும் என்று சைக்கிளை எடுத்துச் சென்றாரா? தெரியவில்லை.
  19. 1991 இல் இந்தியாவில் இருந்தோருக்கு தெரியும் மருத்துவ கல்விக்கு கோட்டா உட்பட பலவசதிகலை அன்றைய எம்ஜிஆர், பின் கருணாநிதி அரசுகள் செய்தன (இதை பாவித்துத்தான் காசி ஆனந்தன் பிள்ளைகளை டொக்டர் ஆக்கினார்)…. ஆனால் அதையும் இன்னும் பல சலுகைகளையும் புடுங்கி, ஆடுமாடுகள் போல் ஈழத்தமிழர் பொலிஸ் நிலையத்தில் பதியவேண்டும் உட்பட பல சிக்கல்களை உருவாக்கியவர் ஜெ. எந்த ஜெ? ஈழத்தாய் என சீமான் வாக்கு கேட்ட அதே ஜெ. எமது போராட்டதில் திமுக நடந்து கொண்டவிதம், குறிப்பாக 2009 இல், துரோகத்தனமானது..மாற்று கருத்து இல்லை. ஆனால் தமிழகத்தில் வாழும் ஈழ தமிழ் அகதிகள் விடயத்தில் அரசு சார்பாக நடவடிக்கை எடுத்த வகையில், திமுகவுக்கு கிட்டே வேறு எவரும் வர முடியாது. திமுகவின் புலிகள் மீதான அணுகுமுறையிம், ஈழதமிழ் அகதிகள் மீதான அணுகுமுறையும் ஒன்றல்ல. பிகு பங்களதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இந்துக்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கும் சட்டம் ஏலவே பிஜேபி நிறைவேற்றி உள்ளது. அடுத்து தமிழக கட்சி ஒன்றில் மத்திய ஆட்சி தங்கி இருக்கும் நிலை வந்தால் (ரஜீவ் காந்தி-மோடி இடைப்பட்ட காலம் போல்) அப்போது இதை குறைந்த பட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும். திமுக, தவெகவில் மத்திய ஆட்சி தங்கி இருந்தால் நாம் கேட்காமலே செய்யகூடும். அதிமுகவில் எண்டால் நாம் கேட்டாலும் நடக்குமா என்பது நிச்சயம் இல்லை.
  20. ஆரப்பா இந்த "பச்சைத் தமிழர்"😂? "அத்தாரிடி, மென்ரல் டிசோடர், ஜிவ்வு...." சடப் பொருளுக்கு (matter) எதிர் சடப் பொருள் (anti-matter) மாதிரி, இவருக்கும் ஏதாவது எதிர் விருது "ஞான பீடத்திற்கு" எதிரான விருது கொடுக்கலாம் போல இருக்கிறதே எழுத்தைப் பார்க்க? "ஞான சூனிய பீட" விருது என்று பெயர் வைக்கலாம் எனப் பிரேரிக்கிறேன்!
  21. திமுக வும் தமிழ் நாடு அரசும் தொடர்ந்து அளுத்தம் கொடுத்த வண்ணமே உள்ளனர். ஆனால் அவர்களால் நீட்டை நீக்க சொல்லி அளுத்த கூட முடியவில்லை. ஏன் என்றால் அவர்கள் பாஜக வோட்டு கூட்டில் இல்லை. ஆனால் சீமானால் சித்தப்பு, பச்சை தமிழர் என அழைக்கபடும் எடப்பாடி, அவர்களோடு கூட்டணி வைப்பதாயின் இதை செய்தே ஆகவேண்டும் என பாஜக வை வற்புறுத்தலாம். ஆனால் செய்வதில்லை. https://www.dinamalar.com/amp/news/tamil-nadu-news/we-will-fight-for-permanent-citizenship-for-sri-lankan-tamils-chief-minister-stalin/4158420
  22. அமெரிக்காவின் சுயகுணம் இப்போதாவது உலகத்திற்கும் ஐரோப்பாவிற்கும் தெரியட்டும். அது டொனால்ட் ரம்ப் ஜனாதிபதியாக இருந்தால் என்ன......அல்லது புதிதாக வரும் ஜனாதிபதியாக இருந்தால் என்ன.அவர்களது வெளிநாட்டு கொள்கையில் மாற்றமே இருக்காது.தமக்கு இடைஞ்சலாக இருப்பவர்களை அழிப்பதும் அடக்குவதும் தானே அமெரிக்க கொள்கையாளர்களின் வேலை. இதை வரலாறு சொல்கின்றது. என்ன ஒன்று......அமெரிக்க அடிமனதில் இருக்கும் குணம் இப்போது ரம்ப் மூலம் வெளிவந்துள்ளது. அவ்வளவுதான்.😎 தூரத்தில் இருப்பவனை விட அயலானை அண்டி அனுசரித்து போவதே மேல். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவுடன் அனுசரித்து போயிருந்தால் இவ்வளவு அவலங்கள் வந்திருக்காது. போகப்போக இன்னும் பல மயானகாண்டங்கள் வரும். வரலாம்.🤣
  23. இந்த தமிழ்வின் செய்தி அப்படியே பிபிசி யின் தளத்தில் இருந்து கொப்பி பேஸ்ற்! இந்த "ரொய்லெற்" தமிழ் ஊடகங்களுக்கு வெட்கமேயில்லையா, ஒரு acknowledgment கூட போடாமல் சுட்டுப் போட😂?
  24. '................ பூனையை பிடித்து சிரைத்தது போல.................' என்று ஊர்ப் பக்கம் சொல்லுவார்கள்..............🤣. அது போல, உருப்படியாக எதுவும் செய்யாமல், இப்படி ஆகிவிட்டேன் என்று நினைக்கின்றேன். சிறுவயதில் நான் இருந்த ஒழுங்கையின் ஆரம்பத்தில் ஒரு வெற்றுக் காணி இருந்தது. நான்கு பக்கங்களிலும் சுவர்கள் இருந்தன. நான் வளர்ந்த ஊரில் வெற்றுக் காணி இருப்பதே அதிசயம். இந்தக் காணி எப்படி அப்படி இருந்தது என்பதற்கும் ஒரு கதை இருக்கின்றது. அது பின்னர் ஒரு நாளில். அந்தக் காணியில் பிரதான வீதியின் பக்கம் இருக்கும் சுவரில் தியேட்டர்காரர்கள் சினிமா போஸ்டர்களை ஒட்டுவார்கள். யாழ், பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை என்று சகல ஊர்களில் இருக்கும் தியேட்டர்காரர்களும் அங்கு ஒட்டுவார்கள். அந்த சுவருக்கு பக்கத்திலேயே ஒரு மாடு எப்போதும் படுத்திருக்கும். சினிமா போஸ்டர்கள் ஒட்டிய உடனேயே, ஓட்டியவர்கள் அங்கிருந்து நகர்ந்தவுடன், அந்தப் போஸ்டர்களை ஓட்டிய கோதுமைப் பசையுடன் முழுவதுமாக சாப்பிட்டுவிடும்...........😜. எனக்குத் தெரியாமலேயே, பிரக்ஞை இல்லாமலேயே ( இது இலக்கியச் சொல்..........🤣) அந்த மாடு என்னுடைய ரோல் மாடல் ஆகியிருக்கின்றது...................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.