All Activity
- Past hour
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஹே.. குளிக்குது ரோசா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து ஆண் : அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே ஆண் : அடி செவ்வாழையே…. யே……. உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே ஆண் : மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் ஆண் : இளம் பூஞ்சோலையே…… உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்......! --- ஆத்தாடி பாவாட காத்தாட ---
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல்வர் நியூபலன்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ......! அவரைத் தொடர்ந்து வந்திருந்த அனைத்து அமைச்சர்களுக்கும் பாராட்டுக்கள் .......! முதலில் இது போன்ற போட்டிகளை திறமையாக நடத்திவரும் கிருபனுக்கு பாராட்டுக்கள் . .....! இப்போட்டியில் அவருக்கு பக்கபலமாய் நின்ற செம்பாட்டானுக்கும் நன்றிகள் ........! பங்குபற்றிய மற்றும் திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள் ........! எல்லாவற்றுக்கும் களம் அமைத்துத் தந்த யாழ் இணையத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் ......!- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெற்றியாளர் நியூபலன்ஸ்சுக்கும் 2வது இடத்தைப்பிடித்த கந்தப்புவுக்கும் வாழ்த்துகள்.போட்டியைத்திறம்பட நடத்திய கிருபன்ஜீக்கும் திரியைத் தொய்வில்லாமல் நகர்த்திச் சென்ற கள உறவுகளுக்கும் வாழ்த்துகள்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தமிழ்நாட்டில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா குறித்து சமூக வலைத்தளங்களில் பேசப்படும் விஷயம் ஒரு குடும்பப் பிரச்சினை. இதைப் பற்றி கருத்து சொல்லும்போது சில சமநிலைப் பார்வைகள் இருக்க வேண்டும். நேரடியாக சட்டம் அல்லது வன்முறை போன்ற பெரிய பிரச்சினையாக இல்லையெனில், ஒரு கணவன்,மனைவி இடையேயான பிரச்சினை பொதுவாக தனிப்பட்ட விஷயம். பொதுமக்கள் முன்னால் அதை வெளிப்படுத்துவது அழகல்ல.. அதனால் பலர்,குடும்ப விஷயம் தனிப்பட்டதாக இருக்க வேண்டும், என்று நினைப்பது இயல்பானது. விஜய்க்கும் அந்த எண்ணம் இருக்கலாம். விஜய் தற்போது அரசியலில் இருக்கிறார். அதனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை கூட அரசியல் விவாதமாக மாறுகிறது அல்லது அவரது எதிரிகளால் மாற்றப்படுகிறது. பொதுவாக மக்கள், தலைவர்கள் மீது அதிக கவனம் செலுத்துவார்கள். இது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விஷயம் இல்லை. பல தலைவர்களுக்கும் இது நடந்திருக்கிறது. உண்மையில் சங்கீதாவுக்குப் பிரச்சினை இருந்தால் அதை வெளிப்படுத்த அவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் தேர்தல் நேரம் போன்ற அரசியல் சூழலில் பொது வெளியில் இதை கொண்டுவருவது அரசியல் தாக்கமா? அல்லது ஒரு பழிவாங்கலா? இன்றைய காலத்தில், சமூக வலைத்தளங்கள் ஒரு விஷயத்தை விரைவாக பெரிதாக்கிவிடும். உண்மை, வதந்தி, ஊகம் எல்லாம் இரண்டரக் கலந்து போய்விடும்.அதனால் வெளியில் வரும் தகவல்களை முழுமையாக உண்மை என்று உடனே நம்பாமல் பார்த்துக் கொள்வது நல்லது.குடும்பப் பிரச்சினைகள் பொதுவாக தனிப்பட்ட முறையில் தீர்க்கப்படுவதுதான் சிறந்தது. ஆனால், ஒருவர் பெரிய பொது நபராக இருந்தால் அது பொதுவாக பேசப்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இப்படி இருக்கும் போது சமூக வலைத்தளங்களில் ஒருவரை மட்டும் குற்றம் சொல்லாமல் இரு தரப்பையும் புரிந்து கொள்ள முயற்சிப்பது தான் சரியான அணுகுமுறை. விஜய் சினிமாவில் இருந்தபோது அவர் ஒரு நட்சத்திரம் மட்டுமே. ஆனால் அவர் அரசியலுக்கு வந்த பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. கமலஹாசனைப் பார்த்தால், அவரது குடும்பப் பிரச்சினை எப்படி என்பது பலருக்குத் தெரியும். அரசியலில் அவர் ஈடுபட்ட போது அவை பேசப்பட்டன. ஆனால் இன்று அது பேசு பொருளாக இல்லை. அவரது அரசியல் ஒரு மையத்துக்குள்ளே அடங்கி விட்டதும் ஒரு காரணம். மற்றது அவர் திமுகவின் கைப்பிள்ளை. விஜய் இன்று அரசியலில் பலமான ஒரு இடத்திலேயே இருக்கிறார். அவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இது புதிய விஷயம் இல்லை. பல நடிகர்கள் அரசியலுக்கு வந்தபோது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பேசப்பட்டது. எம்ஜிஆர் பிரபலமான சினிமா நட்சத்திரம். பின்னர் அவர் தமிழ்நாட்டு முதலமைச்சர். அவரது திருமணம், குடும்ப வாழ்க்கை, மலயாளி போன்றவை பல காலங்களில் அரசியல் விவாதமாக பேசப்பட்டன. அவர் முதலமைச்சர் ஆன பிறகு எல்லாமே காணாமல் போய்விட்டது. இதுவேதான் ஜெயலலிதாவுக்கும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, சோபன்பாபுவுடனான உறவு எல்லாம் பேசினார்கள். அவர் ஆட்சிக்கு வந்தபின் அவரை ‘இரும்பு மனுசி’ என்றார்கள். ‘அம்மா’ என்று காலிலும் விழுந்தார்கள். பெண்களுக்கான உரிமை இருக்கிறது. அவர்கள் No என்று சொன்னால் அது Noதான் என்ற நிலை இன்றிருக்கிறது. தனது உரிமைக்காகப் போராடுவது சங்கீதாவின் உரிமை. அவர், தனது மன உளைச்சலுக்கோ, விவாகரத்துக்கோ எப்போதே நீதி மன்றம் போயிருக்கலாம். ஆனால் காத்திருந்து, விஜயை வீழ்த்துவதற்கு எதிரிகளிடம் தேர்தல் நேரத்தில் ஒரு ஆயுதத்தை தூக்கிக் கொடுத்திருக்கின்றார். நிழலி குறிப்பிட்டது போல் 8% வாக்குகள்தான் விஜய்க்கு கிடைக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அவருக்கு அதைவிட மேலதிகமாகக் கிடைக்கும் என்பது எனது கணிப்பு.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்க எப்படி ஒரேயடியாக கீழே.- ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
இன்று, ஈரான் மக்களின் சுதந்திரத்திற்காக போர் புரியும் இஸ்ரேல், அமெரிக்கா அன்று, எம்மினம் அழியும் போது தடுக்க வேண்டாம் குரலாவது கொடுத்ததா? எங்களை அழிப்பதற்கு ஆயுதம், ஆலோசனை, கடன் அளித்து, இலங்கை புலனாய்வுப்பிரிவினருடன் ஒத்துழைத்து, தகவல்களை அளித்து, நம் விடுதலை இயக்கம் அழிக்கப்படும்வரை உதவியது எவ்வாறு? ஏன் எமது சுதந்திரத்தை தடுத்தார்கள்? அப்போ அவர்களுக்கு தேவையான வளங்கள் நம்மண்ணில் இல்லை, இனிவருங்காலத்தில் இந்துசமுத்திரத்தில் தமது போர்கப்பல்களை நிறுத்த வேண்டுமெனில் அதற்கு இலங்கையரசு அனுமதி மறுத்தால் நமது ஜனநாயகம் பற்றியும் பேசுவார்கள். கடந்த காலங்களில் அரேபிய நாடுகளோடு கூடிக்குலாவும்போது அமெரிக்காவுக்கு இது தெரியவில்லையோ? இப்போ திடீரென்று என்ன கரிசனை வந்தது? அமெரிக்காவின் உண்மை நோக்கம் கண்டு, அவர்கள் விலகிக்கொள்வதால் இல்லாத பொய்களை பரப்புகிறார்கள். லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கிய அமெரிக்கா பின் கடாபிக்கு என்ன செய்தது? ஒசாமா பின்லேடனை வளர்த்ததே அமெரிக்கா, பின் எப்படி மாறியது? ஏன், அமெரிக்கா, இஸ்ரேலிடம் அணுஆயுதம் இல்லையா? அதையும் அழிக்கவேண்டியதுதானே. வெனிசுலாவை ஏன் இரண்டாக்கியது அமெரிக்கா? அவர்கள் தங்கள் புற்றுக்குள் இருந்தார்கள், அவர்களை வெளியே இழுத்து விட்டதே அமெரிக்காதான். இப்போ ட்ரம்ப் சொல்கிறார், ஈரானில் மத ஆட்சி நடந்தாலென்ன, ஜனநாயக ஆட்சி நடந்தாலென்ன அதுபற்றி கவலையில்லை, ஈரான் எங்களோடு இணைந்து செயற்படவேண்டும், முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார். இங்கே எங்கேயும் அவர் ஜனநாயத்தை பற்றியோ அணு ஆலை பற்றியோ குறிப்பிடவில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் ஏற்கனவே என்னை அறிமுகப்படுத்தியிருந்தேன் நான் ஜெர்மன் பிரெமனிலிருந்து நியூபலன்ஸ் .நான் வெற்றி பெறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை, முதல் இடம் பிடித்ததற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்...............................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியூபலன்ஸ் மற்றும் கந்தப்பு அண்ணா இருவருக்கும் வாழ்த்துக்கள்😍🙏..........................- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
போரை நிறுத்துவது குறித்து கூட்டாகவே தீர்மானிப்போம் -டிரம்ப் Mar 9, 2026 - 10:24 AM ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாங்கள் இருவரும் இது குறித்துப் கலந்துரையாடி வருகின்றோம். சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா தமது தாக்குதல்களை நிறுத்த முடிவு செய்தால், இஸ்ரேல் மட்டும் ஈரானுக்கு எதிரான போரைத் தொடர முடியுமா என இதன்போது வினவப்பட்டுள்ளது. அதற்கு பதில் வழங்கிய டிரம்ப், அத்தகைய ஒரு சூழல் உருவாக வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார். அதற்கான அவசியம் ஏற்படும் என்று தாம் நினைக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, என்ன நடக்கிறது என பார்ப்போம் எனக் கூறி அது குறித்துக் கருத்து தெரிவிக்க டிரம்ப் மறுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், முன்னதாக மொஜ்தபாவுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்த டிரம்ப், கமேனியின் மகனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். அத்துடன் தமது ஆதரவின்றி தெரிவு செய்யப்படும் தலைவர் நீண்ட காலம் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. போரை நிறுத்துவது குறித்து கூட்டாகவே தீர்மானிப்போம் -டிரம்ப்- தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்; இலங்கையர் ஒருவரின் வருடாந்த சீனியின் நுகர்வு 34 கிலோவாக அதிகரிப்பு
தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்; இலங்கையர் ஒருவரின் வருடாந்த சீனியின் நுகர்வு 34 கிலோவாக அதிகரிப்பு Published By: Vishnu 09 Mar, 2026 | 03:53 AM இலங்கையின் 5ஆவது தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கமைய, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறான கணக்கெடுப்புகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.South Asians & Diaspora நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 10 ஆயிரம் பேரிடம் முன்னெடுக்கப்படவுள்ள இக்கள ஆய்வின் மூலம், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்களின் வாய் சுகாதார நிலை தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. இதற்காக வீடுகளுக்கும் பாடசாலைகளுக்கும் வருகை தரும் மருத்துவக் குழுவினருக்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இக்கணக்கெடுப்பு குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அதிகாரிகள், நபரொருவர் ஆரோக்கியமாக வாழ ஆண்டுக்கு 10 கிலோ சீனியை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள போதிலும், இலங்கையில் நபரொருவர் ஆண்டுக்குச் சராசரியாக 34 கிலோ சீனியைப் பயன்படுத்துவதாக தெரிவித்தனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வாய் சுகாதாரத்தில் முன்னேற்றம் காணப்பட்டாலும், 5 வயது சிறுவர்களின் பற்சிதைவு வீதம் 63 சதவீதமாகவும், பெரியவர்களின் பல் ஈறு பாதிப்பு 50 சதவீதமாகவும் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. இக்கணக்கெடுப்பிற்காகச் சுமார் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்- ஈரானின் புதிய அதி உயர் தலைவர் தெரிவு?
இரானின் புதிய உச்ச தலைவர் 'மொஜ்தபா காமனெயி' - யார் இவர்? அரசியல் பின்னணி பட மூலாதாரம்,Tasnim News Agency கட்டுரை தகவல் பிபிசி பாரசீக மொழி சேவை 9 மார்ச் 2026, 01:33 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் ஆயதுல்லா அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயி, அடுத்த அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தந்தையைப் போலல்லாமல், 56 வயதான அவர் பெரிதாக அறியப்பட்டவர் அல்ல. அவர் ஒருபோதும் அரசாங்கப் பதவியை வகித்ததில்லை, பொது உரை அல்லது நேர்காணல்களை வழங்கியதில்லை, அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் பல ஆண்டுகளாக இரானில் திரைக்குப் பின்னால் அவர் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்ததாக வதந்திகள் உள்ளன. 2000களின் பிற்பகுதியில் அமெரிக்க ராஜதந்திர நடவடிக்கைகள் பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசியங்கள், அவரை "அங்கிகளுக்குப் பின்னால் உள்ள சக்தி" என்று விவரித்தன, அவர் ஆட்சிக்குள் "திறமையான மற்றும் வலிமையான" நபராக பரவலாகக் கருதப்பட்டதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆயினும்கூட, அவரது தேர்வு இன்னும் சர்ச்சைக்குரியதாக இருக்கலாம். முடியாட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டது. அதன் சித்தாந்தம், பரம்பரை வாரிசுரிமை மூலம் அல்ல, மாறாக அவரது மத நிலைப்பாடு மற்றும் நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அதிஉயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. காமனெயி தனது ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய குடியரசின் எதிர்காலத் தலைமை குறித்து பொதுவான சொற்களில் மட்டுமே பேசினார். அதிஉயர் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் மதகுரு அமைப்பான இரான் நிபுணர்கள் சபையின் ஒரு உறுப்பினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காமனெயி தனது மகன் எதிர்காலத் தலைமைக்கான வேட்பாளராக இருப்பதற்கான யோசனையை எதிர்த்ததாகக் கூறினார். ஆனால் அவர் அத்தகைய ஊகங்களை ஒருபோதும் பகிரங்கமாகக் கூறியதில்லை. பட மூலாதாரம்,EPA மொஜ்தபா காமனெயி யார்? செப்டம்பர் 8, 1969 அன்று இரானின் வடகிழக்கு நகரமான மஷாத்தில் பிறந்த மொஜ்தபா, காமனெயியின் ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை. அவர் டெஹ்ரானில் உள்ள மத அலவி பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். 17 வயதில், மொஜ்தபா இரான்-இராக் போரின் போது பல குறுகிய காலத்திற்கு இராணுவத்தில் பணியாற்றினார் என்று இரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எட்டு வருட ரத்தக்களரி மோதல்கள், இராக்கை ஆதரித்த அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மீது இரான் ஆட்சியாளர்களை மேலும் சந்தேகப்பட வைத்தன. 1999-ஆம் ஆண்டில், மொஜ்தபா தனது மதப் படிப்பைத் தொடர ஷியா இறையியலின் முக்கிய மையமாகக் கருதப்படும் புனித நகரமான கோமுக்குச் சென்றார். இது வரை அவர் மதகுருமார்களின் உடைகளை அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனது 30 வயதில் ஒரு செமினரியில் கலந்து கொள்ள அவர் ஏன் முடிவு செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமீபத்திய நாட்களில், சில ஊடக நிறுவனங்களும் இரானில் உள்ள அதிகார மையங்களுக்கு நெருக்கமான அதிகாரிகளும் மொஜ்தபா காமனெயியை "ஆயதுல்லா" என்று குறிப்பிடத் தொடங்கியுள்ளனர், இது ஒரு மூத்த மதகுருமார் பட்டமாகும். இந்த மாற்றம் அவரது நிலையை உயர்த்தி அவரை நம்பகமான தலைவராகக் காட்டும் முயற்சியாக சில பார்வையாளர்களுக்குத் தோன்றுகிறது. செமினரி அமைப்பில், "ஆயதுல்லா" பதவியை வகிப்பதும், உயர் வகுப்புகளுக்கு கற்பிப்பதும் ஒரு நபரின் கல்வி நிலை மற்றும் அறிவின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. அவை எதிர்காலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேவைகள் மற்றும் முன்நிபந்தனைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. ஆனால் ஏற்கனவே ஒரு முன்னுதாரணமாக உள்ளது. 1989-இல் இரண்டாவது அதிஉயர் தலைவராக ஆன பிறகு காமனெயி விரைவில் "ஆயதுல்லா" ஆனார். பட மூலாதாரம்,West Asia News Agency Via Reuters அரசியல் தலையீடு குற்றச்சாட்டுகள் 2005 அதிபர் தேர்தலின் போது மொஜ்தபாவின் பெயர் முதன்முதலில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த தேர்தலில் தீவிரப் போக்காளராக அறியப்பட்ட மெஹ்மூத் அஹ்மதி நிஜாத் வெற்றி பெற்றார். காமனெயிக்கு எழுதிய பகிரங்க கடிதத்தில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் அஹ்மதிநிஜாத் வெற்றிபெற உதவும் வகையில் மதக் குழுக்களுக்கு பணத்தை விநியோகித்த பாசிஜ் குழு ஆகியவற்றின் மூலம் அதிபர் தேர்தலில் மொஜ்தபா தலையிட்டதாக சீர்திருத்தவாத வேட்பாளர் மெஹ்தி கரூபி குற்றம் சாட்டினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மொஜ்தபா மீண்டும் அதே குற்றச்சாட்டை எதிர்கொண்டார். அஹ்மதிநிஜாத்தின் மறுதேர்தல் நாடு முழுவதும் 'பசுமை இயக்கம்' என்று அழைக்கப்பட்ட வெகுஜன போராட்டங்களைத் தூண்டியது. மொஜ்தபா தனது தந்தைக்குப் பிறகு இரானின் அதிஉயர் தலைவராக முடியும் என்ற கருத்தை எதிர்த்து சில போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். அப்போதைய துணை உள்துறை அமைச்சர் முஸ்தபா தஜ்ஜாதே, இந்த முடிவை "தேர்தல் சதி" என்றார். அவர் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார், இதற்கு "மொஜ்தபா காமனெயியின் விருப்பமே" காரணம் என்று அவர் விமர்சித்தார். பட மூலாதாரம்,Getty Images இரண்டு சீர்திருத்த வேட்பாளர்களான மிர்-ஹொசைன் மௌசவி மற்றும் மெஹ்தி கரூபி ஆகியோர் 2009 தேர்தலுக்குப் பிறகு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். பிப்ரவரி 2012-இல், மௌசவியை நேரில் சந்தித்து போராட்டத்தை கைவிடுமாறு மொஜ்தபா வலியுறுத்தினார் என்று இரானிய வட்டாரங்கள் பிபிசி நியூஸ் பாரசீகத்திடம் தெரிவித்தன. இப்போது, இரானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஉயர் தலைவராக, மொஜ்தபா தனது தந்தையின் கடும்போக்கான கொள்கைகளைத் தொடருவார் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் தனது தந்தை, தாயார் மற்றும் மனைவியை இழந்த ஒருவர் மேற்கத்திய அழுத்தத்திற்கு அடிபணிய வாய்ப்பில்லை என்றும் சிலர் நம்புகிறார்கள். ஆனால், இஸ்லாமியக் குடியரசின் இருப்பை உறுதி செய்வதும், அரசியல் மற்றும் பொருளாதார பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குத் தானே சரியான நபர் என்பதை பொதுமக்களை நம்ப வைப்பதும் அவருக்கு மிகவும் கடினமான பணியாகும். அவரது தலைமைத்துவம் பெரும்பாலும் சோதிக்கப்படாமல் உள்ளது. இஸ்லாமிய குடியரசு ஒரு பரம்பரை அமைப்பாக மாறி வருகிறது என்ற கருத்து பொதுமக்களின் அதிருப்தியை மேலும் ஆழப்படுத்தக்கூடும். மொஜ்தாபா இப்போது ஒரு குறிப்பிடத்தக்க மனிதர். ஆயதுல்லா அலி காமனெயியின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர் "அடுத்த இலக்காக" இருப்பார் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரம் கூறினார். இரானின் புதிய உச்ச தலைவர் 'மொஜ்தபா காமனெயி' - யார் இவர்? அரசியல் பின்னணி- மன்னாரில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி ஆரம்பம்.
மன்னாரில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி ஆரம்பம். adminMarch 9, 2026 தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆசிரியர் மெல்சின் தலைமையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் கலை விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் பல பாரம்பரிய கலைகளில் அனுபவம் பெற்றவருமான பிரபல ஆசான் சூசைநாதர் யசோதரன் அவர்கள் VMCT கலை மன்றத்தின் இயக்குநர் பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் அவர்களது நெறிப்படுத்தலில் VMCT கலை மன்றத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி ஆரம்ப விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சிலம்பு பயிற்சிகள் தலைமை ஆசிரியர் அன்ரன் பெசன்பேர்க் மெல்சின் தலைமையில் வார இறுதி நாள் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது #MannarSilambam #TraditionalArt #VMCTArtClub (VMCT #MartialArtsTraining #TamilCulture https://globaltamilnews.net/2026/230218/- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
டி20 உலகக் கோப்பை சாம்பியன் - ஒரே வெற்றியில் இந்தியா படைத்த 4 வரலாறு என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 8 மார்ச் 2026 வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் பிப்ரவரி 7-ம் தேதி 2026 டி20 உலகக் கோப்பை தொடங்கும்போது இதுதான் டி20 உலகக் கோப்பையின் வரலாறு. தொடரை நடத்திய நாட்டின் அணி கோப்பையை வென்றது இல்லை எந்த நடப்பு சாம்பியனும் கோப்பையை தக்க வைத்ததில்லை நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியதில்லை ஆனால், மார்ச் 8 இந்த வரலாறை மாற்றி, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற புதிய வரலாறு படைத்திருக்கிறது இந்தியா. ஆமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது இந்தியா. அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்து இந்தியா கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக விளங்கிய சஞ்சு சாம்சன் தொடர் நாயகன் விருது வென்றார். பட மூலாதாரம்,Getty Images அபிஷேக் அதிரடியும் மிகப் பெரிய பவர்பிளேவும் வழக்கமாக அதிரடியாக பேட்டிங்கைத் தொடங்கிக்கொண்டிருக்கும் சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியில் சற்று நிதானம் காட்டினார். மேட் ஹென்றி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் 4 பந்துகளையுமே அவர் டாட் பால்களாகவே ஆடினார். ஹென்றியின் லென்த், ஸ்விங் ஆகியவற்றைக் கவனமாக கவனித்து ஆடினார் சாம்சன். அதிகம் படிக்கப்பட்டது அமெரிக்காவை வெல்ல முடியாது என தெரிந்தும் இரான் போரை தொடர்வது ஏன்? இந்தியாவின் வெற்றி தருணங்களை காட்டும் 10 புகைப்படங்கள் வலியே தெரியாமல் ரத்தம் உறிஞ்சும் 'அட்டைகள்' - நீங்கள் என்ன செய்ய வேண்டும்? போர்ப் பதற்றத்துக்கு நடுவே சந்திப்பு: 'நண்பன்' இரானை எதிர்த்து சௌதிக்காக பாகிஸ்தான் களமிறங்குமா? End of அதிகம் படிக்கப்பட்டது இரண்டாவது ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் கிளென் ஃபிலிப்ஸ் பந்துவீச வர, இம்முறை அபிஷேக் மிகவும் கவனமாக எதிர்கொண்டார். அந்த ஓவரில் அவர் சந்தித்த 4 பந்துகளில் 3 ரன்கள்தான் எடுத்தார். இரண்டு ஓவர்கள் முடிவில் இந்தியா 12 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், சான்ட்னர் அதன்பிறகு எடுத்த முடிவு போட்டியின் போக்கையே மாற்றியது. முதலிரு ஓவர்கள் வீசிய பௌலர்களின் ஸ்பெல்லைத் தொடராமல், அடுத்த இரு ஓவர்களும் புதிய பௌலர்களைப் பயன்படுத்தினார் அவர். மூன்றாவது ஓவரை வீசிய ஜேக்கப் டஃபி நன்கு வேகம் கொடுக்க, அதை எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய பேட்டர்கள் அதிரடியைத் தொடங்கினார்கள். அந்த ஓவர்களில் 15 ரன்கள் வர, லாக்கி ஃபெர்குசன் வீசிய நான்காவது ஓவரில் 24 ரன்கள் எடுக்கப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images அதன் விளைவாக நான்காவது ஓவரின் முடிவிலேயே இந்தியா 50 ரன்களைக் கடந்துவிட்டது. தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்த இந்தியாவின் தொடக்க ஜோடி முதல் முறையாக நான்கு ஓவர்களை கடந்தது. அதே வேகத்தில் இந்திய ஓப்பனர்கள் இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். மேட் ஹென்றி வீசிய ஐந்தாவது ஓவரில் 21 ரன்கள், ஜேக்கப் டஃபி வீசிய ஆறாவது ஓவரில் 20 ரன்கள் என ரன்கள் வந்துகொண்டே இருந்தது. பவர்பிளே முடிவில் இந்திய அணி 92 ரன்கள் விளாசியிருந்தது. இந்த உலகக் கோப்பையில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். அந்த பவர்பிளேவுக்குள்ளேயே அபிஷேக் ஷர்மாவும் தன்னுடைய அரைசதத்தை நிறைவு செய்திருந்தார். 18 பந்துகளில் அரைசதம் கடந்தார் அவர். இந்த உலகக் கோப்பையின் அதிவேக அரைசதம் இதுதான். பட மூலாதாரம்,Getty Images ஹாட்ரிக் அடித்த சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி என தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன், இந்த இறுதிப் போட்டியிலும் அரைசதம் கடந்து ஹாட்ரிக் அடித்தார். அபிஷேக் ஷர்மா ஒருபக்கம் அதிவேக அரைசதம் எடுத்து சாதனை படைக்க, வழக்கம் போல் சத்தமே இல்லாமல் தன்னுடைய 'கிளாசிக்' ஷாட்களால் ரன் சேர்த்துக் கொண்டிருந்தார் சாம்சன். கடந்த இரு போட்டிகளிலும் செய்ததைப் போலவே கிடைக்கும் பந்துகளில் பவுண்டரியும், சிக்ஸரும் எடுத்துவிட்டு அதன்பிறகு ஸ்டிரைக்கை ரொடேட் செய்தார். பின்னர் திரும்ப ஸ்டிரைக்குக்கு வரும்போது மறுபடியும் அதையே செய்தார். அவரது இந்த அணுகுமுறையோடு, அபிஷேக்கின் அதிரடியும் சேர்ந்ததால், இந்தியாவுக்கு ரன்கள் குவிந்தன. பந்துகளை சரியாகக் கணித்த சாம்சன், ஆட்டத்தின் போக்கையுமே புரிந்து விளையாடினார். நியூசிலாந்து அணியின் ஆபத்தான பௌலராகக் கருதப்பட்ட மிட்செல் சான்ட்னரை மட்டும் நிதானமாக எதிர்கொண்டார். அவருடைய ஓவரில் விக்கெட் விழாமல் ஆடிவிட்டு மற்றவர்களின் பந்துவீச்சைப் பதம் பார்த்தார். ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக சான்ட்னரின் 9 பந்துகளை (7-வது & 9-வது ஓவர்) சந்தித்த சாம்சன் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். அதிகமாக அவர் ரிஸ்க் எடுக்கவில்லை. பின்னர் சான்ட்னர் வீசிய 11-வது ஓவரில் 3 பந்துகள் சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அதற்கெல்லாம் ஈடுகட்டும் விதத்தில் 12-வது ஓவரில் ஃபெர்குசனை டார்கெட் செய்தார். அந்த ஓவரின் முதலிரு பந்துகளிலும் சிக்ஸர் அடித்துவிட்டு மூன்றாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். பின்னர் அந்த ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்டிரைக் எடுக்க வந்தவர், அதிலும் பவுண்டரி அடித்தார். அந்த ஓவரில் 4 பந்துகளில் 17 ரன்கள். ரச்சின் ரவீந்திரா வீசிய 14-வது ஓவரிலோ ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசினார். இப்படி பௌலர்களை சிறப்பாகக் கையாண்ட சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதி மற்றும் இறுதி என இரு போட்டிகளிலும் அரைசதம் அடிக்கும் மூன்றாவது வீரர் சஞ்சு சாம்சன். இதற்கு முன் ஷாஹித் அஃப்ரிடி (2009) மற்றும் விராட் கோலி (2014) அதைச் செய்திருக்கிறார்கள். பட மூலாதாரம்,Getty Images துபே அதிரடி சாம்சன், அபிஷேக் மட்டுமல்லாமல் மூன்றாவது வீரராக வந்த இஷான் கிஷனுமே அதிரடியாக விளையாடினார். முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடிய அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவர்களின் தொடர்ச்சியான அதிரடியால் 15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்தது இந்தியா. 16-வது ஓவரில் நியூசிலாந்து அணிக்கு புத்துயிர் கொடுத்தார் ஜேம்ஸ் நீஷம். அவர் அந்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் பந்தில் ஃபுல் டாஸாக வீசப்பட்ட பந்தில் சாம்சன் வெளியேற, ஐந்தாவது பந்தில் இன்னொரு ஃபுல் டாஸில் இஷான் வெளியேறினார். கடைசி பந்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், 17-வது மற்றும் 18-வது ஓவரில் இந்தியாவின் ரன் விகிதம் குறைந்தது. திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா இருவரும் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை. 19-வது ஓவரில் ஹர்திக் அவுட் ஆக, அந்த ஓவர் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் 231/5 என்றானது. அதனால், 250 ரன்கள் வருவது கேள்விக்குறியானது. ஆனால், கடைசி ஓவரில் அதிரடி காட்டிய ஷிவம் துபே, ஜேம்ஸ் நீஷம் வீசிய அந்த ஓவரில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 24 ரன்கள் விளாசினார். அதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒர் அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். பட மூலாதாரம்,Getty Images பந்துவீச்சில் அசத்திய அக்ஷர் & பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தன்னுடைய ஃபீல்டிங்கால் ஆட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய அக்ஷர் பட்டேல், இந்தப் போட்டியில் தன்னுடைய பந்துவீச்சில் அதே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தினார். மூன்றாவது ஓவரில் பந்துவீசிய அக்ஷர் பட்டேல், அரையிறுதியில் அதிவேக சதமடித்திருந்த ஃபின் ஆலனின் விக்கெட்டைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் ஆலன் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நியூசிலாந்தின் பெரிய பலமாகக் கருதப்பட்ட அவர்களின் தொடக்க ஜோடி 31 ரன்களுக்கே உடைக்கப்பட்டது. இது இந்தியா ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அஸ்திவாரமாக அமைந்தது. அடுத்ததாக ஐந்தாவது ஓவரில் அதிரடி வீரர் கிளென் ஃபிலிப்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார் அக்ஷர். வழக்கமான அக்ஷர் பாணியில் உள்ளே வந்து ஸ்டம்பைத் தகர்ந்தது அந்தப் பந்து. பின்னர் 13-வது ஓவரில் டேரில் மிட்செல் விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர். இன்னொருபக்கம், நியூசிலாந்தின் பெரும்பாலான வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பினார் ஜஸ்ப்ரித் பும்ரா. நியூசிலாந்து இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரை வீச வந்த அவர், முதல் பந்திலேயே ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். அரையிறுதியில் தன் ஸ்பெல்லின் முதல் பந்தில் 'ஸ்லோயர் பால்' வீசி ஹேரி ப்ரூக் விக்கெட்டை வீழ்த்தியதைப் போலவே, இந்தப் போட்டியிலும் தன் ஸ்பெல்லின் முதல் பந்தை ஸ்லோயர் பாலாக வீசி ரச்சினை அவர் வெளியேற்றினார். பும்ராவும் அக்ஷரும் பவர்பிளேவில் நியூசிலாந்தின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அங்கேயே நியூசிலாந்தை பின்தங்க வைத்தார்கள். தன்னுடைய கடைசி ஸ்பெல்லை வீச வந்த பும்ரா 'ஸ்லோயர் யார்க்கர்களாக' வீசி மூன்று நியூசிலாந்து வீரர்களின் ஸ்டம்புகளைப் பதம் பார்த்தார். மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், மேட் ஹென்றி என அனைவருமே பும்ராவின் ஸ்லோயர் யார்க்கர்களில் போல்டாகி வெளியேறினார்கள். 4-0-15-4 என்று தன் ஸ்பெல்லை முடித்தார் பும்ரா. அதற்காக இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது வென்றார் அவர். அதுமட்டுமல்லாமல் இந்த உலகக் கோப்பையின் டாப் விக்கெட் டேக்கர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் அவர். பட மூலாதாரம்,Getty Images இந்தியா உலக சாம்பியன் பவர்பிளேவிலேயே பின்தங்கிய நியூசிலாந்து அணியால் அதன்பின் கம்பேக் கொடுக்க முடியவில்லை. டிம் செய்ஃபர்ட் மட்டும் சற்று போராடி அரைசதம் அடித்தார். அவர் அவுட் ஆன பிறகு அந்த நம்பிக்கையும் குறைந்துவிட்டது. அதன்பிறகு டேரில் மிட்செல் மற்றும் மிட்செல் சான்ட்னர் (43 ரன்கள்) மட்டுமே நியூசிலாந்து அணிக்காக இரட்டை இலக்கத்தை எட்டினர். கடைசி கட்டத்தில் பும்ரா வரிசையாக விக்கெட்டுகள் வீழ்த்த 19-வது ஓவரின் முடிவில் நியூசிலாந்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியால் 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி உலக சாம்பியன் ஆனது. இந்தியாவின் பிரச்னைகளாகக் கருதப்பட்ட விஷயங்களெல்லாம் கடைசி கட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்குக் கைகொடுத்தன. இறுதிப் போட்டி வரை சோபிக்காத அபிஷேக் ஷர்மா, இந்தியா வெற்றி பெறுவதற்கு ஒரு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். ஃபீல்டிங் மிகப் பெரிய பிரச்னையாக சொல்லப்பட்டுவந்த நிலையில் அரையிறுதியில் அக்ஷர் பட்டேல், இறுதிப் போட்டியில் இஷான் கிஷன் போன்றவர்களின் ஃபீல்டிங் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல சவால்கள் இருந்த நிலையிலும், முக்கியமான தருணங்களில் இந்திய வீரர்கள் எழுச்சி பெற்று அணியை சாம்பியன் ஆக்கியிருக்கிறார்கள். டி20 உலகக் கோப்பை சாம்பியன் - ஒரே வெற்றியில் இந்தியா படைத்த 4 வரலாறு என்ன?- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
IRIS Dena கப்பல் குறித்து ஈரான் இராணுவத்தின் அறிவிப்பு Mar 9, 2026 - 08:53 AM ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதல் காரணமாக, இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இந்த கப்பல் விபத்துக்குள்ளானது. கடந்த மார்ச் 4-ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் மீது தாக்குதலுக்குள்ளானது. கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 10 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் மீதான பிரேத பரிசோதனைகள் அண்மையில் காலி தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டன. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் கடற்படையினரில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. IRIS Dena கப்பல் குறித்து ஈரான் இராணுவத்தின் அறிவிப்பு- கறையான் புற்று
பகிர்வுக்கும், பங்களிப்புக்கும் மிக்க நன்றி.....!- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
போரில் வெற்றி பெற அமெரிக்கா எவ்வளவு தூரத்திற்கும் செல்லும் Mar 9, 2026 - 07:36 AM ஈரான் உடனான போரில் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டுமோ, அவ்வளவு தூரம் செல்ல அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஒரு இராணுவ நடவடிக்கையில் எல்லைகள் என்ன என்பதை எதிரியிடமோ, ஊடகத்திடமோ அல்லது வேறு யாருடமோ வெளிப்படுத்தக் கூடாது. அமெரிக்கா வெற்றிக்காகப் போராடுகிறது, ஈரானின் சரணடைதலுக்கான நிபந்தனைகளை டொனால்ட் டிரம்ப் தீர்மானிப்பார். ஈரானால் போரிட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தெரிந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் போர்க்களத்தில் செயலற்றவர்களாகி, சரணடைவார்கள் என்று ஹெக்செத் குறிப்பிட்டார். மேலும், ஈரானின் கடற்படை பெரும்பாலும் அழிந்துவிட்டது என்றும், அது தொடர்ந்து வலுவிழந்து கொண்டே இருக்கும் என்றும் அவர் கூறினார். இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று அவர் எச்சரித்துள்ளார். போரில் வெற்றி பெற அமெரிக்கா எவ்வளவு தூரத்திற்கும் செல்லும்- சர்வதேச சந்தையில் 10% இனால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!
மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு Mar 9, 2026 - 06:26 AM மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. இந்நிலையில் அதற்குப் பதிலடியாக இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18% உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 108.68 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 20% அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தபோது மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியது. அதற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு- சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை எழுச்சி மாநாட்டில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்து
சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை எழுச்சி மாநாட்டில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்து Published By: Vishnu 09 Mar, 2026 | 12:52 AM (க.சிவலிங்கமூர்த்தி) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை' எனும் தொனிப்பொருளில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் ஏற்பாடு செய்த விசேட மாநாடு ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. 115 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் பெண்களின் உரிமைகள் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பெண்களின் உண்மையான விடுதலைக்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. நிகழ்வில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் ஒழுங்கமைப்புச் செயலாளர் ஹேமமாலி அபேரத்ன அங்கு உரையாற்றுகையில் பெண் விடுதலை என்பது தானாகக் கிடைத்த ஒன்றல்ல. மனித வரலாற்றில் பெண்கள் தங்களது கல்வி உரிமை கருக்கலைப்பு உரிமை இனப்பெருக்க உரிமை மற்றும் தொழில் உரிமை என்பவற்றை நீண்ட போராட்டங்கள் மூலமே வென்றெடுத்தனர். ஜனநாயகத்தின் அடிப்படை அங்கமான வாக்குரிமை கூட போராட்டத்தின் மூலமே எமக்குக் கிடைத்தது. எப்படியிருப்பினும், இத்தனை உரிமைகளைப் பெற்ற பின்னரும், இந்த 115 ஆவது சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் இந்த உலகில் ஒரு முழுமையான மனிதனாக வாழும் உரிமை கிடைத்துள்ளதா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது. பெண்கள் இன்றும் சமூகத்தில் இரண்டாம் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். சமூகம் வகுத்துள்ள பொதுவான மரபுகள் மதக் கட்டுப்பாடுகள் மற்றும் கலாச்சாரம் என்ற பெயரிலான தடைகளை உடைக்க நாம் இன்னும் தயாராகவில்லை. பிள்ளைகளைப் பெறுவதும், சமையலறையில் முடங்கிக்கிடப்பதும் மட்டுமே பெண்ணின் கடமை என்று கருதும் வரை பெண்கள் நசுக்கப்பட்டே வாழ்வார்கள். இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் ஒரு மனிதனாக வாழ்வதற்கான உரிமையை உரக்கச் சொல்லும் காலம் வந்துவிட்டது. இன்று சந்தை வாய்ப்புக்களில் பெண்கள் ஈடுபடுவதால் அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. முதலாளித்துவப் பொருளாதாரம் பெண்களை வேலைத்தளங்களுக்கு அழைத்து வந்ததன் உண்மையான நோக்கம் அவர்களின் மலிவான உழைப்பைச் சுரண்டுவதாகும். இன்று நவதாராளவாதப் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் பெண்கள் ஒரு சந்தைப் பொருளாக மாற்றப்பட்டுள்ளனர். எம்மை ஒடுக்குவது ஆண்கள் அல்ல் மாறாக இந்த நிலவும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பே எமது உண்மையான எதிரி. இந்த முறையை மாற்றியமைக்காமல் பெண் விடுதலை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உட்பட கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் பெண்களைத் திரட்டியது தங்களது வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதற்காக மட்டுமே. தேர்தலுக்குப் பின்னர் பெண்களுக்காக எவரும் ஆக்கபூர்வமான எதனையும் செய்யவில்லை. எமது வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள், இறுதியில் பெண்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் சட்டங்களையே நிறைவேற்றினர். எனவே தேர்தல் அரசியலை நம்பி ஏமாறாமல் நிலத்தில் இறங்கிப் போராடும் பெண்களை நாம் உருவாக்க வேண்டும். அநீதி இழைக்கப்படும் போது அச்சப்பட்டு ஒடுங்காமல் உரிமைகளுக்காக முன்னின்று குரல் கொடுக்கும் போராட்டக் குணமிக்க பெண்களை உருவாக்க எமது இயக்கம் முன்னின்று செயற்படும். இதற்காக நாட்டின் அனைத்துப் பெண்களும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார். இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து பெருமளவிலான பெண்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை எழுச்சி மாநாட்டில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்து- லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
லெபனானில் 5 இலட்சம் பேர் இடம்பெயர்வு Mar 8, 2026 - 11:47 PM இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் போரினால், 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது. இருப்பினும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லெபனான் அரசு குறிப்பிட்டுள்ள 5,17,000 என்ற எண்ணிக்கை, அரசின் இணையதளத்தில் பதிவு செய்தவர்களை மட்டுமே குறிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள லெபனான் அரசு, தெற்கு மற்றும் கிழக்கு லெபனானின் பெரும் பகுதிகளில் இருந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ள ஏராளமான மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்கள் மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள் முழுவதையும் விட்டு வௌியேறுமாறு கடந்த வாரத்தில் இருந்து இஸ்ரேல் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmi2qxxg0000356pz4ez682f- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நியூபலன்ஸ், கந்தப்பு அண்ணை, நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் அண்ணைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.- கருத்து படங்கள்
- டிரம்பின் நடவடிக்கைகள் சந்தைகளை அமைதிப்படுத்தத் தவறியதால் கச்சா எண்ணெய் விலைகள் சாதனை அளவில் உயர்ந்துள்ளன.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்தது. மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள், உற்பத்தியைக் குறைத்துள்ளதை தொடர்ந்து, சர்வதேச சந்தையில் நேற்று முதல் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் போர் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான சர்வதேச, மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது. இந்நிலையில் அதற்குப் பதிலடியாக இந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 18வீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 108.68 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது. அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 20வீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தபோது மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியிருந்ததுடன் அதன் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இது அமைந்துள்ளமையும் குறிப்பிடத்க்கது. https://athavannews.com/2026/1467654- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடுத்து என்ன IPLஆ. - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.