All Activity
- Past hour
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
கோலியை விஞ்சி அசத்தல்: 'நீண்ட' காத்திருப்பை சாதனையாக மாற்றிக் காட்டிய சாம்சன் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரவீன் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'ஜஸ்டிஸ் ஃபார் சஞ்சு சாம்சன்' (சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும்) கடந்த 10 ஆண்டுகளில், இந்த வரி சமூக வலைதளங்களில் பல முறை ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான செயலைச் செய்தார், அது அடிக்கடி ட்ரெண்ட் ஆகும் அந்த வரியையே மாற்றிவிட்டது. டி20 உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட காலிறுதி போன்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் விளாசி, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற உதவினார். சஞ்சுவின் இந்த இன்னிங்ஸிற்குப் பிறகு, 'இறுதியாக சஞ்சு சாம்சனுக்கு நீதி கிடைத்துவிட்டது' என்பதுதான் அதிகமாக விவாதிக்கப்பட்டது. ஆனால் 'சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும்' என்ற ட்ரெண்டிலிருந்து 'இறுதியாக சஞ்சு சாம்சனுக்கு நீதி கிடைத்துவிட்டது' என்ற நிலைக்கு வர சஞ்சு சாம்சன் கடந்து வந்த பயணம் எவ்வளவு கடினமானது மற்றும் எவ்வளவு நீண்டது என்பதை அவரை விட யாராலும் சிறப்பாக விவரித்திருக்க முடியாது. இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு, அவர் மைதானத்தில் மண்டியிட்டு அமர்ந்து, தனது நீண்ட கால கனவு நனவானது போல வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். சஞ்சு சாம்சன் எப்போதும் தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டாத ஒரு வீரராகவே அறியப்படுகிறார். ஆனால் இந்த இன்னிங்ஸ் பலவற்றை மாற்றியுள்ளது. அவர் இப்போது தனது உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார். போட்டிக்குப் பிறகு அவர் கூறுகையில், "இந்த இன்னிங்ஸ் எனக்கு மிக முக்கியமானது. நான் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்து, எனது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்ட நாளிலிருந்து, இதற்காகத்தான் நான் அதிகம் காத்திருந்தேன்," என்றார். நீண்ட காத்திருப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சஞ்சு சாம்சன் மிக இளம் வயதிலேயே எதிர்கால நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டார். கடந்த இருபது ஆண்டுகளில் ரோஹித் சர்மாவிற்குப் பிறகு இந்தியாவில் ஏதேனும் ஒரு வீரர் மிகவும் திறமையானவராகக் கருதப்பட்டார் என்றால், அது சஞ்சு சாம்சன் தான். ரோஹித் சர்மாவைப் போலவே, சஞ்சு சாம்சனும் இயல்பாகவே புல்-ஷாட் ஆடுபவர். எந்த ஒரு சிறப்பான முயற்சியும் எடுக்காமல், வெறும் டைமிங் மூலமாகவே பெரிய சிக்ஸர்களை அடிக்கும் திறன் கொண்டவர். சஞ்சு சாம்சன் தனது 17 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது முதல் சீசனில் அவர் சிறப்பாகச் செயல்படவில்லை. இருப்பினும், அடுத்த சீசனில் பலமாக மீண்டு வந்த அவர், ஐந்து இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார். அதற்கு அடுத்த ஆண்டே, ராஜஸ்தான் ராயல்ஸ் அவருக்கு வாய்ப்பளித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சனைத் தேர்ந்தெடுக்கும் போது, அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "சஞ்சு சாம்சன் இந்திய அணியின் எதிர்காலமாகத் திகழப் போகும் ஒரு சில வீரர்களில் ஒருவர்" என்று கூறினார். ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக சஞ்சு சாம்சனுக்குப் பலன் கிடைத்தது. 2015-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்தச் சுற்றுப்பயணத்தில், இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது, ஆனால் அவரால் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்பிறகு, மீண்டும் அணிக்குத் திரும்ப அவர் 2019 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், 2024 வரை இந்திய அணியில் தனது இடத்தைப் பிடிக்க சஞ்சு சாம்சனால் முடியவில்லை. 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரால் இடம்பெற முடிந்தது. ஆனால் அப்போதும் கூட, அவர் மைதானத்தில் இல்லாமல் பெஞ்சில் தான் அமர வேண்டியிருந்தது. அந்த உலகக் கோப்பையின் போது பெஞ்சில் அமர வைக்கப்பட்ட கோபமோ என்னவோ, பின்னர் அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைத்தவுடன் வெறும் ஐந்து டி20 சர்வதேச போட்டிகளில் அவர் மூன்று சதங்களை விளாசினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2024 உலகக் கோப்பையின் போது சஞ்சு சாம்சன் டக்அவுட்டிலேயே இருந்தார். ஆனால், அப்போதும் கூட அணியில் அவரது இடம் உறுதி செய்யப்படவில்லை. இத்தகைய சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகும், அவர் அணியின் பரிசோதனைகளில் ஒரு பகுதியாகவே நீடித்தார். கடந்த ஆண்டு, அவரை டாப் ஆர்டரில் விளையாட வைப்பதற்காக சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர் இடத்திலிருந்து மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டார். சுப்மனுக்கான தரப்பட்ட வாய்ப்புகள் பலன் தராத நிலையில், உலகக் கோப்பைக்கு சற்று முன்பு மீண்டும் அவருக்குத் தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கப்பட்ட போது, அவரது ஃபார்ம் சரிந்திருந்தது. நேற்றைய ஆட்டத்திற்கு முந்தைய 12 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. பின்னர் இந்த உலகக்கோப்பையின் தொடக்கத்தில், இஷான் கிஷன் பலமாக மீண்டு வந்து, இந்திய அணியில் சாம்சனின் இடத்தைப் பிடித்துவிட்டார். இரண்டு போட்டிகளுக்கு முன், அபிஷேக் சர்மாவின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமாரிடம் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்று கேட்கப்பட்ட போது அவர் எப்படிப்பட்ட அனுபவத்தைக் கடந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். அதற்கு கேப்டன் சூர்யகுமார், "அப்படியென்றால் அபிஷேக்கிற்குப் பதிலாகவோ அல்லது மூன்றாவது வரிசையில் திலக்கிற்குப் பதிலாகவோ அவரை விளையாட வைக்கச் சொல்கிறீர்களா?" என்று கேட்டார். இந்தப் பதிலைக் கூறிவிட்டு சூர்யகுமார் சிரித்தார். ஆனால், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் தோல்வி, சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்குள் வருவதற்கான வழியை திறந்துவிட்டது. அதன்பிறகு கேப்டன் சூர்யகுமார் தனது வார்த்தைகளை மாற்றிக்கொண்டது மட்டுமல்லாமல், போட்டிக்கு பிறகு மைதானத்திற்குள் நுழையும் போது தனது தொப்பியைக் கழற்றி தலைவணங்கி சஞ்சு சாம்சனின் திறமையை அங்கீகரித்தார். சஞ்சு சாம்சன் இந்தியாவிற்கு அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தபோது, சூர்யகுமார் கூறுகையில், "காத்திருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நான் எப்போதும் சொல்வேன். இந்திய அணிக்காக விளையாடாத போது அவர் செய்த கடின உழைப்பினால்தான் இது சாத்தியமானது. இப்போது அதற்கான பலனை அவர் அறுவடை செய்துள்ளார்," என்றார். ' என்னால் இதைச் செய்ய முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சஞ்சு சாம்சன் 11 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான போதிலும் 60 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடந்த 10-12 ஆண்டுகளில் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தபோது தான் எதையெல்லாம் கடந்து வந்தேன் என்பது குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், "எனது பயணம் எண்ணற்ற ஏற்றத்தாழ்வுகளுடன் சிறப்பானதாக இருந்தது. நான் எப்போதும் என்னையே சந்தேகித்தேன். என்னால் முடியுமா, என்னால் இதைச் செய்ய முடியுமா என்று நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தேன்," என்றார். "ஆனால் இந்தச் சந்தேகங்களுக்கு மத்தியிலும், முடிவுக்கு வராத ஒன்று இருந்தது, அது நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி. இப்போது நான் எனது ஆசிர்வாதங்களைப் பெற்றுள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்"என்றார் அவர். "நான் இந்த வடிவத்தில் பல வருடங்களாக விளையாடி வருகிறேன். நான் ஐபிஎல் தொடரில் 12 ஆண்டுகளாகவும், இந்திய அணியுடன் 10 ஆண்டுகளாகவும் இருக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு விளையாட அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்த நேரத்தில் நான் டக்அவுட்டில் இருந்தேன். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியமாக இருந்தது. இது எனக்கு நிறைய உதவியது" என்றும் குறிப்பிட்டார். சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியில், ஒரு நல்ல தொடக்கம் கிடைத்த பிறகும் பொறுப்பற்ற ஷாட்களை ஆடி அடிக்கடி ஆட்டமிழப்பதாகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை, அவரது ஆட்டத்தில் ஒரு தெளிவான மாற்றம் தெரிந்தது. போட்டிக்குப் பிறகு ஹாட்ஸ்டாரில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், சஞ்சு சாம்சன் இதற்கு முன் இப்படி பேட்டிங் செய்து தான் பார்த்ததில்லை என்று கூறினார். பந்தை காற்றில் பறக்கவிட்டு லாங் ஷாட்களை அடிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர் தரைப்பகுதியில் ஷாட்களை ஆட முயன்றார். அத்துடன், தனது விக்கெட்டையும் அவர் இழக்கவில்லை. அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "அணிக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் சஞ்சு சாம்சன் நிதானத்தை கடைபிடித்தார். அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியதிலிருந்து, ஒரு வித்தியாசமான அணுகுமுறையுடன் மைதானத்திற்கு வருகிறார். இந்த இன்னிங்ஸ் அற்புதமானது, ஏனென்றால் இந்தியா ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்திருந்தது. அவர் தனது விளையாடும் பாணியை மாற்றியுள்ளார். நிதானம் என்ற அந்த ஒரு வார்த்தை தான் அனைத்தையும் மாற்றியது"என்றார். போட்டிக்குப் பிறகு தனது ஆட்டத்தில் செய்த மாற்றங்கள் குறித்தும் சஞ்சு சாம்சன் பேசினார். அவர் கூறுகையில், "ஆரம்பத்தில், நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தோம். நான் பார்ட்னர்ஷிப்களை உருவாக்க முயற்சித்தேன். அந்த நேரத்தில், அடுத்த பந்தைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன். அனைத்து கேள்விகளுக்கும் மத்தியில், நான் என்னை நம்பினேன், பந்து எப்படி வந்ததோ அப்படியே விளையாடினேன். அது எனக்குக் கை கொடுத்தது," என்றார். பட மூலாதாரம்,Getty Images கோலியை விஞ்சி சாம்சன் படைத்த சாதனை டி20 உலகக் கோப்பையில் இலக்கைத் துரத்தும்போது , இந்தியாவிற்காக மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடிய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, 2016-ல் விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 82 ரன்களும், 2022-ல் பாகிஸ்தானிற்கு எதிராகவும் ஆட்டமிழக்காமல் 82 ரன்களும் எடுத்திருந்தார். கோலியை விஞ்சி, டி20 உலகக் கோப்பையில் இலக்கைத் துரத்தும் போது அதிக ரன் சேர்த்த இந்திய வீரராக தற்போது சஞ்சு சாம்சன் உருவெடுத்துள்ளார். அதனால்தான் சஞ்சு சாம்சனின் இந்த இன்னிங்ஸ் சமூக வலைதளங்களிலும் பெரிதும் பாராட்டப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சஞ்சு சாம்சனின் 97 ரன்கள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சாம்சனுக்கு பாராட்டு விளையாட்டுச் செய்தியாளர் பரத் சுந்தரேசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார். அதில், "அனைத்து அழகான பவுண்டரிகளுக்கு மத்தியிலும், சஞ்சு சாம்சனின் தோழமை உணர்வு அவரது இன்னிங்ஸை முன்னோக்கி எடுத்துச் சென்றது. அவர் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் சென்றார் மற்றும் உலகக் கோப்பையின் மறக்க முடியாத இன்னிங்ஸ்களில் ஒன்றை விளையாடினார்" என்று கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். "வாழ்வா சாவா என்ற நிலையில் இருந்த ஒரு போட்டியில் சஞ்சு சாம்சன் இந்தியாவின் நம்பிக்கையாகத் திகழ்ந்தார். அவர் ஒருபோதும் கவனம் பெற்றவராக இருந்ததில்லை, ஆனால் அவர் ஒரு ஆட்டத்தை மாற்றியமைப்பவராக தன்னை நிரூபித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸின் விளையாட்டுச் செய்தியாளர் ஆஷிஷ் மாகோத்ரா சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், " சஞ்சு சாம்சன், என்ன ஒரு பயணம்" என்று கூறியுள்ளார். "சுப்மன் கில்லுக்காக சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரருக்கான இடத்திலிருந்து நீக்கப்பட்டார். கில் சிறப்பாக செயல்படவில்லை. சஞ்சு சாம்சன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இஷான் கிஷனுக்காக அவர் நீக்கப்பட்டார். அபிஷேக்கின் மோசமான ஃபார்ம் மற்றும் வலது-இடது கை ஆட்டக்காரர்கள் கலவையின் தேவை ஆகியவை சாம்சனை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. இப்போது அவர் இந்தப் போட்டியின் நட்சத்திரமாகத் திகழ்கிறார்"என்று அவர் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y6jyxe3rzo
-
-
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! 02 Mar, 2026 | 02:22 PM காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இதன் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வழமைபோல் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் இந்த கப்பல் சேவையில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
-
ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்! Mar 2, 2026 - 01:18 PM மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரண்டு வருவதுடன், ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான விசேட சலுகைகளை அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளதாகப் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளன. நட்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் தளங்களை அழிப்பதற்கான தற்காப்புத் தாக்குதல்களை நடத்தத் தயாராக உள்ளதாகவும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஈரானின் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. "பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என வளைகுடா நாடுகள் தமது கூட்டறிக்கையில் எச்சரித்துள்ளன. இந்தப் போர் பதற்றம் மற்றும் விமான ரத்துச் சம்பவங்கள் காரணமாகத் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளை அரசே ஏற்கும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் ஏற்கனவே தங்கியுள்ள ஹோட்டல்களில் தங்குமிட காலத்தை இலவசமாக நீட்டித்துக் கொள்ள முடியும் என்றும், அமீரக அரசுக்கு விருந்தினர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
- Today
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
பெருமளவு கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். நிதானமாகப் பதிலளிக்கிறேன். உங்களுடன் வாதிடும் நோக்கத்தில் அல்ல, மாறாக சில கருத்துக்களை முன்வைப்பதற்காக மட்டுமே. வேலையில் இருக்கிறேன், ஆனால் கட்டாயம் பதில் தருகிறேன். நன்றி
-
இன்று உலக தாய்மொழி தினம்
அம்மா என்ற சொல் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற தமிழ் சொல்லைத் தருகின்றது. தமிழ்மொழி இனிமையானது, சுவையானது. அதனால்தான் பூச்சி புழுக்கள்கூட தமிழுக்குள் புகுந்து தமிழைத் தின்பதற்கு முனைகின்றன.😲
-
Paanch started following இன்று உலக தாய்மொழி தினம்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் குறிப்பிட்ட திரி சாத்திரக் குறிப்பு இல்லை. மாறாக சாத்திரம் ஏமாற்று வேலையா என்ற விவாதப் பதிவு. அத் திரியில் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு திரியில் மட்டுறுத்தினர் கருத்து எழுதினாலும் அதே திரியில் கள விதிகள் அப்பட்டமாக மீறப்படும்போது அவரே தணிக்கை செய்ய முடியும்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
எல்லாம் சரி, ஐநா, நேட்டோ பங்கேற்காது இன்னொரு நாட்டை தாக்கும் உரிமையை யார் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொடுத்தது? ரஸ்சியா உக்ரேனுக்கு அடித்தால் மட்டும் குய்யோ முறையோ என்று கத்துவது!!
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
போராட்டக்காரர்களை உருவாக்கியது யார், அவர்களுக்கு பண உதவி செய்தது யார் என்று குழந்தை பிள்ளையை கேட்டாலும் சொல்லும். ஒருகாலத்தில் ஆப்பிரிக்காவிலேயே கூடிய GDP , HDI ஐ கொண்டிருந்த நாட்டை இப்படி அழித்தது யார்? அவரை கொன்றதன் காரணம் முழு ஆபிரிக்க தேசத்தையும் ஒரே நாணய (African Dollar) பரிமாற்றத்திற்குள் கொண்டுவர முயன்றதே. ராபர்ட் முகாபே ஜிம்பாப்வேயை 37 வருடங்கள் ஆண்டாரே. மேற்கு எதுவும் செய்யவில்லையே! தலிபான், அல்கயிதா, ஹமாஸ் இவர்களை எல்லாம் உருவாக்கிவிட்டது யார்?
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சரி. எற்றுக்கொள்கிறேன். களவிதிகளை மீறும் நோக்கம். எனக்கு. சிறுதுளியும் கிடையாது. இல்லை மேலும் களவிதிக்கு. முரண்பாடாபத் தான் இந்த திரி. களத்தில் அனுமதிக்கப்பட்டதா ? ஏன். அதை அனுமதித்து. மூன்று. பக்கங்கள். வரை. கருத்துகள். பதித்து. இருக்கிறார்கள். ? மேலும். ஒரு. மட்டுநிறுத்தினர். ஒரு. திரியில். கருத்தையும். எழுதிக்கொண்டு. அதே. திரியில். மட்டுநிறுத்தவும். முடியுமா. ? இதுபற்றி. களவிதிகள். என்ன சொல்கிறது. ?நன்றிகள். பல. வணக்கம்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எங்களுக்கு சாத்திரம், ஜோதிடத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் பிள்ளைகளின், சொந்தக்காரரின் சாதகத்தை ஊர் ஊராய் அனுப்புவம். வரன் தேட!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Bharath Reddy (1978-1979), Hemang Badani (2001-2004), Lakshmipathy Balaji (2003-2005), Thangarasu Natarajan (2021), Washington Sundar (from 2020) இதில்Hemang Badani இன் பெற்றோர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள். ஆனால் Hemang Badani பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான்!- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
முன்பு சோதிடம் பற்றி ஒரு திரியில் விவாதித்துள்ளோம். கள விதிகளில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: சாத்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை ஊட்டும் பதிவுகளை யாழ் ஊக்குவிக்கவில்லை, அவை நீக்கப்படும்.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இது ஒரு தனிநபர் மீதான வெறுப்பு தாக்குதல், இதற்கு எந்த நொண்டிச்சாட்டுகளாலும் நியாயப்படுத்த முடியாத செயல். இதற்காக நீங்கள் பெருமைப்படுபவராக இருந்தால் உங்களுக்காக வருந்துகிறேன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அணி இருந்த குழுதான் மிகவும் பலவீனமான அணிகள் கொண்ட குழு, அதிர்ஸ்டவசமாக மோசமான அவுஸ்ரேலியாவும் அந்த குழுவில் இருந்து விட சிம்ப்பாவே இலங்கை அணிகள் அவுஸ்ரேலியாவினை வீழ்த்தி வென்றுவிட; இரசிகர்கள் மனதில் ஒரு மிகைப்படுத்தப்பட்ட அளவீடு உருவாகிவிட்டது. இதனை Anchoring bias என்பார்கள், சாம்பியன் அணி அவுஸ்ரேலியாவினை வீழ்த்தியமையால் இலங்கை அணியினையும் சிம்ப்பாவேயினையும் சாம்பியனாக இரசிகர்கள் பார்க்க தொடங்கினார்கள். ஒரு அணியினை வெறும் பெயரிற்காக இன்னொரு அணியுடன் ஒப்பீடு செய்யும் போது தவறான புரிதல்கள் ஏற்படுகின்றது, இறுதியில் சுப்பர் 8 போட்டிகள் அனைத்திலும் இலங்கை அணி தோற்கும் யதார்த்தத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத இரசிகர்கள் இவ்வாறான சாக்கு போக்குகளிற்கு வருகிறார்கள். ஒரு அணி நாட்டிற்கு வெற்றி தேடி பெருமை ஏற்படுத்தாத நிலையில், எதற்காக நாட்டின் பொருளாதாரத்தினை பற்றி யோசிக்கவேண்டும்? குறைந்த பட்சம் ஒரு நாகரிகமான தோல்வியின் மூலம் தமது பெயர்களையாவது காப்பாற்றவே விரும்புவார்கள் (அது அவர்களின் வேலையும் இல்லை), அதுவே நடந்தது. ஆனால் இது ஒரு மனவழுத்தம், சோர்வு, துக்கம், கோபம் என பல உளவியல் வெளிப்பாடுகள் ஏற்படுத்தும், இரசிகர்கள் தமக்குள் சண்டையிடுதல், பொது சொத்துக்களை சேதப்படுத்தல் போன்ற மற்றவர்களையும் பாதிக்கும் செயல்களிலிலும் ஈடுபடுவார்கள். விளையாட்டு மனதிற்கு ஒரு உற்சாக உணர்ச்சியினை கொடுப்பதற்கு பதிலாக எதிர்பாராத பக்கவிளைவுகளையும் சிலரில் ஏற்படுத்திவிடுகிறது, மனம் ஒரு விந்தையானது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்குள்ளும் ஒரு அன்னியனா?????????? சாம்பியன் அணிகள் மோசமாக தொடங்கினாலும் போட்டியின் போக்கில் (தொடர்ந்து விளையாட) அவர்கள் மெருகேறுவார்கள், ஆனால் இந்தியணி நொக்கவுட் போட்டிகளில் சொதப்புகின்ற அணி (இந்தியர்கள் பயப்படும் அணி நியுசிலாந்து🤣).- கருத்து படங்கள்
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இவை இனவாதம் (racism) /இனவெறி ( race hatred) அல்ல. இவை கறுவியத்தீர்வு ( settling a grudge) ஆகும். ஐயனே, என்று தென் தமிழீழத்தில் முஸ்லீம் ஊர்காவல்படையும் காடையரும் செய்தவற்றை அறிந்தனோ அன்று தொடக்கம் இப்படித்தான் ... அதான் இந்த வடிவமைப்பில் இருக்கிறேன்: வாய்ப்பின் போது சோனகரை வெளுத்தல்😁 மற்றது, வட தமிழீழத்தவர் தென் தமிழீழ சோகமெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்தாலும் (தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற இழி கொள்கையுடையோர்/ பிரதேசவாதிகள்) ஒற்றுமை வேண்டும் என்று கூறி இவற்றை மறைத்திடுவர்... இவரே சிங்களக் காடையரும் ஊர்காவல்படையினரும் வட தமிழீழத்தில் செய்தவற்றை கூறி ஒப்பாரி வைப்பர். கிஞ்சித்தும் தென் தமிழீழ படுகொலை பற்றி வாய் திறார். வாய் திறந்தால் - படுகொலைகளில் முஸ்லீம்கள் பங்காற்றியிருந்தாலும் / செய்திருந்தாலும் - சிங்களப்படை என்று செய்தியிடுவர்! ஏன் இந்தப் பாகுபாடு...? முஸ்லீம் என்டு போட வேண்டியது தானே?- யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!
புதிய துணைவேந்தர் வேல்நம்பிக்கு வாழ்த்துக்கள்! இப்போதைய துணைவேந்தருக்கு வடமராட்சி ஆட்கள் என்றால்தான் மண்டைகாய்கள் என்று ஒரு பிடிப்பு உள்ளதாம். புதியவரும் எப்படியோ.- லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் Published By: VISHNU 02 MAR, 2026 | 08:50 AM "லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரால் வடக்கு இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவிற்கு அருகிலுள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை வீசியதாகக் கூறியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலைக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா குறித்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய போர் விமானங்கள் உடனடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலக்குகள் மீது தொடர்ச்சியான கடுமையான குண்டுவீச்சுகளைத் தொடங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/239935- கொழும்பு போர்ட் சிட்டி கடலில் வல்வெட்டித்துறை இளைஞரின் சடலம்
கொழும்பு போர்ட் சிட்டி கடலில் வல்வெட்டித்துறை இளைஞரின் சடலம் திங்கள், 02 மார்ச் 2026 07:45 AM கொழும்பு துறைமுக நகரக் கடற்பரப்பிலிருந்து ஆணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கொழும்பு துறைமுகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கடந்த 28ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்தவர் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் https://jaffnazone.com/news/55313- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
வாழும் முறையால் வழிகாட்டிய தோழர் நல்லகண்ணு March 1, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — சென்னையில் கடந்த புதன்கிழமை தனது 101 வயதில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செய்து ‘தினமணி’ பத்திரிகை மறுநாள் எழுதிய ஆசிரிய தலையங்கத்துக்கு ‘இனி யாருண்டு இது போல…’ என்று தலைப்பிட்டிருந்தது. அவரின் மறைவுக்கு பிறகு பொதுவாழ்வில் நேர்மைக்கும் கண்ணியத்துக்கும் எடுத்துக்காட்டாக உலகில் உயிருடன் இருக்கும் எவரையாவது காட்டமுடியும் என்பது சந்தேகமே. நல்லகண்ணுவின் மறைவு தமிழ்நாட்டு அரசியலில் தனிப்பட்ட அர்ப்பணிப்பு, கொள்கைப்பற்று மற்றும் சமூகநீதி மீதான நீடித்த பற்றுறுதி ஆகியவற்றினால் வரையறை செய்யப்பட்ட பொதுவாழ்வைக் கொண்ட — தனித்துவமான அடையாளச் சின்னங்களாக விளங்கிய ஒரு தலைமுறைத் தலைவர்களினால் வடிவமைக்கப்பட்ட ஒரு யுகத்தின் முடிவைக் குறித்து நிற்கிறது. நல்லகண்ணு தமிழ்நாட்டில் தனது மார்க்சிய சமகாலத்தவரும் தோழருமான என். சங்கரையாவுக்கு பிறகு நூறு வருட வாழ்க்கையையும் பல தசாப்தகால அரசியல் வாழ்வையும் கொண்ட இரண்டாவது முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவராவார். சங்கரையா அவரது 101 வயதில் 2023 ஆம் ஆண்டு காலமானார். நல்லகண்ணுவின் எளிமை, நேர்மை மற்றும் கண்ணியம் நிறைந்த வாழ்க்கை தார்மீக வெற்றிடத்தைக் கொண்டதாக விளங்கும் நவீன அரசியல் பரப்பில் முற்றிலும் மாறுபட்டதாக விளங்கியது. பகட்டாரவாரமும் பணமும் அதிகார வேட்கையும் ஆக்கிரமித்து நிற்கும் ஒரு யுகத்தில் அவர் அரசியலில் எளிமை, ஔிவுமறைவற்ற தன்மை மற்றும் நேர்மையான அணுகுமுறையை நியாயப்படுத்திக் குரல்கொடுத்தார். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறும் நல்லகண்ணுவின் வாழ்வும் சமாந்தரமானவை. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டத்தில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி நல்லகண்ணு பிறந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி தாபிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் தொண்டர்களினால் ‘தோழர் ஆர்.என்.கே.’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட நல்லகண்ணுவின் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவாகவும் அமைந்தமை அவரின் வாழ்வும் கம்யூனிஸ்ட் இயக்கமும் இணை பிரிக்கமுடியாதவை என்பதை காட்டியது. பெரும்பாலும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர்கள் அனைவரையும் போன்று நல்லகண்ணுவின் அரசியல் வாழ்வும் சுதந்திரப் போராட்டத்திலும் காங்கிரஸ் இயக்கத்திலும் தான் ஆரம்பித்தன. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பமும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடும் பண்பும் நல்லகண்ணுவிடம் வளரத் தொடங்கியது. அநீதிகளுக்கு எதிராகப் போராடும் இயல்புணர்ச்சி கொண்டவரான நல்லகண்ணுவினால் காங்கிரஸ் இயக்கத்தில் நீண்ட நாட்கள் பயணம் செய்ய முடியவில்லை. தூத்துக்குடியில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட அவர், தனது பள்ளி ஆசிரியர் ஒருவரின் வழிகாட்டுதலில் 1943 ஆம் ஆண்டில் தனது 19 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டார். தோழர் ஜீவாவின் உரைகளும் தொ.மு. சிதம்பர ரகுநாதனின் நட்பும் அவர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு கட்டத்தில் ஜீவாவின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் நாழிதளான ‘ஜனசக்தி’ யில் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவமும் நல்லகண்ணுவுக்கு இருந்தது. அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், நேர்த்தியான பேச்சாளர். மக்களை உணர்ச்சிவசத்துக்கு உள்ளாக்காமல் முதிர்ச்சியை நோக்கி நகர்த்தும் வகையில் தான் அவரது பேச்சும் எழுத்தும் இருக்கும். தொடக்க காலத்தில் மார்க்ஸ், லெனின் போன்ற கம்யூனிஸ்ட் பிதாமகர்களின் நூல்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் ஜவஹர்லால் நேருவின் நூல்களின் மூலமாகவே கம்யூனிஸட் இயக்கம் பற்றி அறிந்து கொண்டதாகவும் நல்லகண்ணு கூறியிருக்கிறார். அதே நேருவின் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சியை 1948 ஆம் ஆண்டில் தடை செய்தபோது நல்லகண்ணு தலைமறைவாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு முன்னதாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்த வேளையிலும் அவர் தலைமறைவாக இயங்கினார். தலைமறைவாக இருந்த வேளையில் கைது செய்ப்பட்ட நல்லகண்ணு பொலிசாரின் கொடூரமான சித்திரவதைக்கு ஆளானார். மற்றைய கம்யூனிஸ்ட் தோழர்கள் மறைந்திருந்த இடங்களை காட்டித் தருமாறு கேட்டு சித்திரவதை செய்த பொலிஸ் அதிகாரி நல்லகண்ணுவின் அடர்த்தியான மீசையைச் சிகரெட்டினால் சுட்டுப் பொசுக்கியதனால் அன்று தொடக்கம் மீசைவைக்கும் வழக்கத்தை அவர் கைவிட்டுவிட்டார். 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக வந்தார்கள். அப்போது இந்தியா பூராவும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக தொடரப்பட்ட சதி வழக்குகளை இரத்துச் செய்யக்கோரிய போராட்டங்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமடைந்தன. வேறு வழியின்றி பெரும்பாலான சதி வழக்குகளை காங்கிரஸ் அரசாங்கம் மீளப்பெற்றது. அதன் விளைவாக நெல்லை சதிவழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நல்லகண்ணு மற்றும் பாலதண்டாயுதம் உட்பட. கம்யூனிஸ்டுகள் பலர் விடுதலையாகினர். ஆனால், வெடிகுண்டு வைத்திருந்த வழக்கும் நல்லகண்ணு மீது இருந்ததால் அவர் மேலும் ஐந்து வருடங்கள் சிறையில் தண்டனைக் காலத்தை கழிக்க வேண்டியிருந்தது. ஏழு வருடங்கள் சிறைவாழ்வுக்கு பின்னர் 1956 டிசம்பரில் மதுரை சிறையில் இருந்து விடுதலையான நல்லகண்ணு முன்னரை விடவும் தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். இரண்டு வருடங்களுக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஒருவரின் மகளானா பள்ளி ஆசிரியர் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொண்டார். அது ஒரு சாதிக்கலப்பு திருமணமாகும். இந்திய — சீனப்போர் மற்றும் சோவியத் யூனியனுக்கும் சீனாவுக்கும் இடையிலான தத்துவார்த்தப் போரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964 ஆம் ஆண்டில் பிளவுபட்டபோது பிரிந்து சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தவர்களுடன் நல்லகண்ணு செல்லவில்லை. 1992 ஆம் ஆண்டில் இருந்து. மூன்று பதவிக் காலங்களுக்கு மொத்தமாக 13 வருடங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக நல்லகண்ணு பணியாற்றினார். அறுபது வருடங்களுக்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்படுவதற்கு காரணமாக இருந்த பிரச்சினைகள் இனிமேலும் பொருத்தமற்றவை என்று நம்பிய நல்லகண்ணு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் இணைப்பதற்கு கடுமமையாகப் பாடுபட்டார்.ஆனால், அவரின் வாழ்நாளில் அது சாத்தியமாகவில்லை. சிக்கனத்துடன் கூட சீராக வாழமுடியும் என்று நிரூபித்துக் காட்டிய நல்லகண்ணு சமூகத்தின் நலன்களுக்கும் கட்சியின் வளர்ச்சிக்கும் தான் முன்னுரிமை அளித்தார். தனது அரசியல் நடவடிக்கைகளினால் மனைவிக்கும் மகள்மாருக்கும் நெருக்கடி வந்துவிடக் கூடாது என்பதற்காக குடும்பத்தில் இருந்து அவர் விலகியிருந்த நாட்களும் உண்டு. தனது கோட்பாட்டின் மீது வலிமையான பற்றுறுதி கொண்டவரான நல்லகண்ணு மிகவும் எளிமையான மனிதர். மென்மையான சுபாவம் கொண்டவர். அதிகாரத்துக்கும் சொத்துக்கும் அவர் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. தமிழ்நாடு அரசாங்கம் நல்லகண்ணுவுக்கு 2022 ஆம் ஆண்டில் ‘தகைசால் தமிழர் ‘ விருதை வழங்கிக் கௌரவித்த போது 15 இலட்சம் ரூபா பணப்பரிசும் கொடுக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கினாரே தவிர, வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் நல்லகண்ணுவுக்கு ஒரு கோடி ரூபாவையும் கார் ஒன்றையும் பரிசாக வழங்கிய போது அவற்றை அவர் கட்சிக்கே நன்கொடையாக வழங்கிவிட்டார். சென்னையில் அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட அளவான வீடு ஒன்றுக்கு 5,700. ரூபா வாடகை செலுத்தி வாழ்ந்துவந்த நல்லகண்ணுவின் குடும்பம் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு வழங்கிய 2,500 ரூபா சம்பளத்திலும் மனைவியின் 4,500 ரூபா ஓய்வூதியத்திலும் வாழ்க்கையை நடத்தியது. சிக்கனத்தை ஆதாரமாகக் கொண்ட கோட்பாடு ஒன்று இல்லாமல் சமூக மாற்றம் இடம்பெற முடியாது என்பதில் அவர் உறதியான நம்பிக்கை கொண்டவர். சமரசமற்ற நேர்மைக்கு பிரகாசமான உதாரணமாக அவர் விளங்கினார். சென்னை தியாகராஜ நகரில் நல்லகண்ணு வாடகைக்கு வசித்துவந்த வீட்டின் கட்டிடத் தொகுதியை இடித்து புதிதாக நிர்மாணம் செய்வதற்காக அங்கிருந்து வெளியேறுமாறு 2019 மே மாதம் மாநில அரசாங்கம் அவரைக் கேட்டுக் கொண்டது. அப்போது மனைவியை மூன்று வருடங்களுக்கு முன்னர் இழந்த அவர் அமைதியாக அங்கிருந்து வெளியேறி சென்னையில் வேறு பகுதியில் வாழ்ந்த ஒரு மகளின் வீட்டுக்கு சென்றுவிட்டார். அந்த சம்பவம் குறித்து தெரிய வந்ததும் கடுமையான கண்டங்கள் கிளம்பின. அது குறித்து செய்தியாளர்கள் நல்லகண்ணுவிடம் கேட்டபோது வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது வேதனைக்குரியது என்ற போதிலும், இன்னொரு வீட்டை தனக்கு அரசாங்கம் ஒதுக்கித் தராததால் பிரச்சினை எதுவுமில்லை என்று பதிலளித்தார். ஆனால், தன்னைப் போன்று வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட காலஞ்சென்ற காங்கிரஸ் அமைச்சர் பி. கக்கனின் குடும்பத்தவர்களுக்கு மாற்று வீடு ஒன்றை வழங்குமாறு நல்லகண்ணு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். பொதுவாழ்வில் சுயநலமின்றி எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு அந்த விவகாரத்தை அவர் கையாண்ட முறை ஒரு சிறந்த உதாரணம். ஆனால், இத்தகைய அர்ப்பணிப்புச் சிந்தையுடைய — வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களின் நலன்களுக்காக பாடுபட்ட நல்லகண்ணுவை தமிழ்நாட்டு மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பாராளுமன்றத்துக்கோ அல்லது மாநில சட்டசபைக்கோ ஒருபோதும் தெரிவு செய்யவில்லை. அவரது உடலை குடும்பத்தினர் மருத்துவ ஆராய்ச்சிக்காக கையளித்தனர். உயிரோடிருந்தபோது மக்களுக்கு ஒரு பாடமாக விளங்கிய நல்லகண்ணு இறந்த பின்னரும் மருத்துவ மாணவர்களுக்கு பாடமாக அமையப் போகிறார். மகாத்மா காந்தி இறந்த போது அல்பேர்ட் அயன்ஸ்டீன் “எலும்புடனும் சதையுடனும் இவ்வாறு ஒரு உருவம் உலகில் நடமாடியது என்று சொன்னால் எதிர்காலச் சந்ததிகள் நம்ப மறுக்கும்” என்று சொன்னார். நல்லகண்ணு விடயத்திலும் அதுவே உண்மை. https://arangamnews.com/?p=12708- வேலையற்ற பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் சமூகம் ? நிலாந்தன்!
ரிஸ்க் எடு கொண்டாடு - நிலாந்தன் கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வழமையாக சமூகவலைத்தளங்களில் பட்டம் பெற்றவர்களின் கொண்டாட்டப் படங்கள் பகிரப்படும். ஆனால் இம்முறை வேலையற்ற பட்டதாரிகளை முன்வைத்து ஒரு விவாதப் பரப்பு திறக்கப்பட்டது. பல்கலைக்கழகங்கள் ஆண்டு தோறும் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால் நாட்டில் இப்பொழுது 42000க்கும் குறையாத வேலையற்ற பட்டதாரிகள் உண்டு. நாட்டில் வேலையில்லாத 365,951 தனி நபர்களில், பட்டதாரிகள் அல்லது அதையொத்த கல்வித் தகமையுடையவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 42,254 என்று பிரதமர் ஹரிணி கடந்தநொவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கூறினார். அவர்களை வேலையற்ற பட்டதாரிகள் என்று அழைப்பதை விடவும் அரச வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் என்று அழைப்பது நல்லது என்று எனது நண்பர் ஒருவர் கூறுவார். கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களும் அந்த வகைப்பட்டவைதான். பட்டதாரிகள் பட்டம் பெற்ற பின் வேலை இன்றி தெருவில் நிற்கப் போகிறார்கள் அல்லது அரச வேலை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறார்கள் என்ற பொருளில் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. இத்தகையதோர் பின்னணியில்,புதிய தொகுதி பட்டதாரிகள் வெளியேறுவது என்பது வெளியேற்றப் பட்டதாரிகளின் எண்ணிக்கையில் ஒரு புதிய தொகுதி இணைவதைக் குறிக்கும் என்றும் அங்கு விமர்சிக்கப்பட்டது. பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும்பொழுது வாழ்வின் முக்கிய பேறு ஒன்றை அடைந்து விட்டதாக ஒவ்வொரு பிள்ளையும் பெருமைப்படுகிறது. அது உண்மைதான். பொன்னிறக் கனவுகளோடு அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் வருகிறார்கள். பட்டம் கிடைத்ததும் அவர்கள் அதைக் கொண்டாடும் விதத்தில், எடுக்கும் ஒளிப்படங்களில் அதை அவர்கள் எந்தளவு பெருமைக்குரியதாகக் கொண்டாடுகிறார்கள் என்பது தெரியும். ஆனால் பட்டம் எடுத்த பின் வேலை தேடி அலையும் போதுதான் அவர்களுடைய பொன் நிறக் கனவுகள் நிறமிழக்கத் தொடங்குகின்றன. ஆனால் அதற்கு அவர்கள் மட்டும் பொறுப்பல்ல. பின்வரும் அடிப்படைக் காரணங்கள் உண்டு. முதலாவது,சந்தைப் பெறுமதி மிக்க, தொழில் வாய்ப்புகள் அதிகமுடைய பட்டதாரிகளை உருவாக்கும் விதத்தில் கல்விக் கொள்கை திட்டமிடப்படாமை. இரண்டாவது, புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதில் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் தோல்வியடைந்தமை. மூன்றாவது, தொழில் தொடர்பாக சமூகத்திடம் இருக்கும் அளவுகோல்கள், பிரமைகள். நான்காவது,தொழில் முனைவோரை உருவாக்காத கல்வி முறை. இதை வேறு வார்த்தைகளில் சொன்னால் அரசு அலுவலர்களை அதிகமாக உற்பத்தி செய்யும் கல்வி. அதாவது ரிஸ்க் எடுக்கக் கற்றுக் கொடுக்காத கல்வி. எனவே பட்டதாரிகள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்பதற்கு தனிய அவர்கள் மட்டும் பொறுப்பல்ல. மேற்சொன்ன காரணங்களும் பொறுப்பு அது ஒரு கூட்டுத் தோல்வி. பட்டதாரிகளில் பெரும் பகுதியினர் ஏன் அரச வேலையை நாடுகிறார்கள் ? அதற்குப் பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவதாக அங்கே கஷ்டப்பட்டு வேலை செய்யத் தேவையில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு. சும்மா இருந்து சம்பளம் எடுக்கலாம்,தடை தாண்டிப் பரீட்சைகளில் சித்தி பெறுவதன் மூலம் பதவி உயர்வுகளையும் சம்பள உயர்வுகளையும் பெறலாம் என்று பட்டதாரிகள் நம்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டு. இரண்டாவது காரணம்,ஓய்வூதியம் கிடைக்கும். எனவே முதிய வயதில் பாதுகாப்பு உண்டு. மூன்றாவது காரணம், அரசாங்கம் என்றால் பலமானது. மக்களைப் பாதுகாப்பது. அதிகாரம் மிக்கது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அரச ஊழியராக இருப்பது அதாவது அரச அதிகாரத்தை சமூகத்தில் அமுல்படுத்துவோராக இருப்பது கௌரவமானது, உயர்வானது என்ற சமூக நம்பிக்கை. நான்காவது காரணம், அரசாங்கத்தை மட்டுமல்ல யாரையும் பார்த்துக் கொண்டிருக்காமல்,யாரிடமும் கையேந்தாமல் தன் திறமைகளை நம்பி, தான் கற்றவைவைகளை அடிப்படையாக வைத்து தொழில் முனைவோராக மேல் எழத் தேவையான துணிச்சலும் வைராக்கியமும் இல்லாமல் இருப்பது. இந்த நான்கு காரணங்களிலும் முக்கியமானது நாலாவது. பட்டதாரிகள் ஏன் தொழில் முனைவோராக மேலெழ முடியவில்லை? அல்லது மேலெழ விரும்பவில்லை? இந்தக் கேள்விக்குப் பதில், கல்வி முறையின் தோல்விக்குள் இருக்கிறது. நமது கல்வி முறைமை தொழில் முனைவோருக்குத் தேவையான துணிச்சலையும் படைப்புத்திறனையும் தெரிவுகளையும் பட்டதாரிகளுக்கு வழங்கத் தவறிவிட்டதா? அரச ஊழியத்துக்குள் கிடைக்கும் பாதுகாப்பு,அரசு ஊழியர் என்பதால் கிடைக்கும் மரியாதை இவை இரண்டையும் தவிர ஒரு தொழில் முனைவோர் அல்லது புதிதாகச் சிந்திக்கும் ஒரு பட்டதாரி அதிகம் சம்பாதிக்கலாம், அதிகம் சாதிக்கலாம், அதிகம் பிரபல்யமாகலாம் என்பதற்கு நமது சமூகத்துக்குள்ளேயே உதாரணங்கள் உண்டு. ஆனால் பட்டங்கள் தொடர்பாகவும் தொழில் தெரிவுகள் பொறுத்தும் தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் இறுகிக் கட்டிபத்திய சிந்தனைகளை உடைத்துக் கொண்டு வெளிவர பெரும்பாலான பட்டதாரிகள் தயாராக இல்லை. ஒரே வசனத்தில் சொன்னால் ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை. ஒரு காலம் யுத்த களத்தில் அதி உச்ச ரிஸ்க் எடுத்த ஒரு சமூகம். அதைவிட முக்கியமாக அவ்வாறு ரிஸ்க் எடுக்கலாம் என்ற முன்னுதாரணத்தை காட்டிய பெரும்பாலானவர்கள் முறைசார் கல்விக்கூடாக வந்தவர்கள் அல்ல. ஆயுதப் போராட்டம் தமிழ் சமூகத்தில் பல வெடிப்புகளை ஏற்படுத்தியது. சமூகத்தின் பாரம்பரியக் கல்வி தொடர்பான நம்பிக்கைகளை அது தகர்த்தெறிந்தது. கல்வித் தகமைக்கும் துணிச்சலுக்கும், கல்வித் தகமைக்கும் சாதனைகளுக்கும் இடையே கண்டிப்பாகத் தொடர்பு இருக்கத் தேவையில்லை என்பதையும் அது நிரூபித்தது. பட்டப் படிப்புக்களை அடிப்படைத் தகைமைகளாகப் போற்றாத விடுதலை இயக்கங்கள் சமூகத்தின் தலைவிதியைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டன. சமூகத்தின் மூன்றில் ஒரு பகுதியை புலம்பெயர வைத்தன. உலகமே வியக்கும் தியாகங்களையும் வீரத்தையும் நிரூபித்த ஒரு போராட்டம் அது. ஆயுதப் போராட்டத்தின் தொடக்கத்தில் “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது”, “கல்வித் தகுமையற்ற போராளிகள் வெற்றிபெற மாட்டார்கள்” என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்கு நூற்றாண்டு காலப்பகுதிக்குள் அரசற்ற தமிழ் மக்கள் மத்தியில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் நிலைத்திருந்த கருநிலை அரசானது மேற்படி நம்பிக்கைகளை விவாதத்துக்கு உள்ளாக்கியது. எனினும் ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கு பின் மீண்டும் படிப்பு,செல்வம்,செல்வாக்கு… போன்றவை தலைமையைத் தீர்மானிக்கும் அளவுகோல்களாக மேலெழுந்தன. அதிகம் பட்டப் படிப்புகள் இல்லாதவர்கள் நடத்திய போராட்டம் தோல்வியடைந்தது என்று கூறுவோர் இப்பொழுது உண்டு. ஆனால் அவர்கள் வசதியாக மறந்துவிடும் ஒரு விடயம் என்னவென்றால், ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரும் பின்னருமான அப்புக்காத்துக்களின் அரசியல் தமிழ் மக்களை மட்டுமல்ல, அவர்களுடைய கட்சிகளையே எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? என்பதுதான். ஆங்கிலம் தெரிந்த, சிங்களம் தெரிந்த, கற்றறிந்த தமிழ்த் தலைவர்களும் இறுதி வெற்றியைப் பெறவில்லை. அவர்களை மீறி எழுந்த ஆயுதப் போராட்டமும் இறுதி வெற்றியைப் பெறவில்லை. இப்படிப்பட்டதோர் அரசியல், பொருளாதார,சமூக உளவியல் பின்னணிக்குள், கடந்த 16ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் இருந்து அடுத்து வந்த தலைமுறை கற்றுக்கொண்டவை எவை? என்று கேள்வி வலிமையாக மேல் எழுகிறது. ஆயுதப் போராட்டம் கற்றுக்கொடுத்த துணிச்சல், தியாக முன்னுதாரணம்,ரிஸ்க் எடுக்கும் மனோநிலை போன்றவற்றில் இருந்து பட்டதாரிகள் எந்தளவுக்குக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் உயிரைக் கொடுக்க வேண்டாம். பெரிய அளவில் அர்பணிக்கவும் வேண்டாம். தொழில் ரீதியாக ரிஸ்க் எடுத்தாலே, துணிகர தொழில் முயற்சிகளில் இறங்கினாலே போதும். செல்வந்தர்களாகலாம். புதிய முன்னுதாரணங்கள் ஆகலாம். ஆனால் ஏன் தங்களுடைய சௌகரிய வலையங்களை விட்டு வெளியே வரப் பயப்படுகிறார்கள்? “துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிற்பது கப்பலுக்குப் பாதுகாப்பானது. ஆனால் கப்பல் அதற்காகக் கட்டப்படுவதில்லை” என்று ஆங்கில மேற்கோள் ஒன்று உண்டு. அது போலவே “அமைதியான கடல் சிறந்த படகோட்டிகளை உருவாக்குவதில்லை” என்றும் ஆங்கிலம் மேற்கோள் ஒன்று உண்டு. இந்த இரண்டு மேற்கோள்களில் இருந்தும் கற்றுக் கொண்டால் பட்டதாரிகளுக்கு அவர்களுடைய பட்டங்களே சிறைகளாக மாறாது. https://www.nillanthan.com/8161/ - "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.