Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. சோம.அழகுவின் சமீபத்திய கட்டுரை : அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு [சங்கிகள், சொங்கிகள், சிங்கி மங்கிகள் ஆகியோர் தயை கூர்ந்து இக்கட்டுரையை வாசிக்க வேண்டாம் எனத் தாழ்மையு…. அப்படி எல்லாம் கேக்க முடியாது. வேண்ணா வாசிச்சுக்குங்க! சொங்கி : சங்கி அல்லாவிடினும் ‘திராவிடம்’, ‘பெரியார்’ என்ற சொற்களைக் கேட்டவுடன் ஒவ்வாமையுடன் ஓங்கரிக்கும் ஒ(ஓ)ட்டுண்ணி சிங்கி மங்கி : தகுதியே இல்லாத தானைத் தலைவன்(!) என்ன உளறிக் கொட்டினாலும் சீழ்க்கை அடிக்கும் ஜெல்லி மீன்கள்] *************************************** ‘அரசியல் ஒரு சாக்கடை’, ‘இந்த அரசியல் செய்திகளில் எல்லாம் ஆர்வம் இல்லை’ - வழமையான இவ்வரிகளை ஒருவிதப் பெருமையுடன் தூக்கிக் கொண்டு திரிபவர்களின் ஆழ்மனங்களில் சென்று யாரோ அவர்களை மேதாவிகள் என நம்ப வைத்திருக்கின்றனர். அதன் கொடும் விளைவாக, “யார் ஆண்டால் எனக்கென்ன? நான் சம்பாதிக்குறது எனக்கு!” என்று பினாற்றுபவர்களுக்கு, தமக்கான ஊதியம் மொத்தமாக அல்லது பகுதியாகக் கூட தமது கைக்கு வருவதே ஆட்சியாளர்களின் கைங்கர்யம்தான் என்ற தெருட்சியெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதே மடமை! ஒரு தனி நபரது அரசியல் சார்பு என்பது கருத்துகளால் மட்டும் ஆனவை அல்ல. கருத்தியல் சார்ந்தது. ஒருவரது விழுமியங்கள்(ஒழுக்கம், நேர்மை…), மதிப்பீடுகள், கண்ணோட்டம், மனிதம் என உள் உறைந்திருக்கும் பலவற்றையும் ஒன்றாகக் கட்டி அவரது ஆளுமையை எடுத்துரைப்பதே அவ்வரசியல் நிலைப்பாடுதான்! அரசியலில் அற நெறிமுறைகள் மற்றும் உய்யச் சிந்தனைகளின்(critical thinking) நுட்பமான பகுப்பாய்வில் உருவாகும் விருப்பு வெறுப்புகள்தாம் சரியான நிலைப்பாட்டை எடுக்க உதவும். யாரை ஆதரிக்கிறோம் என்பதை விட முக்கியமானது யாரை எதிர்க்கிறோம் என்பது. நண்பனை வைத்து நம்மை எடை போடுவதை விட எதிரியை வைத்து நம்மைக் கணிப்பது இன்னும் துல்லியமாக இருக்கும் அல்லவோ? இடப்பக்கம் நிற்பார்க்கு உய்வுண்டாம்; உய்வில்லை வலப்பக்கம் நிற்கும் மாக்களுக்கு. இக்கட்டுரையை நடுவில் நின்று எழுதும் அளவிற்கு நான் பக்குவப்படவில்லை. அவ்வளவு பக்குவப்பட(!) விரும்பவும் இல்லை. வலதுசாரிகளில் தங்களது அடையாளத்தை வெளிக்காட்டத் துணிவில்லாதவர்கள் பூசிக் கொள்ளும் அரிதாரமே ‘நடுநிலையாளர்’. Annoying agnostics! இந்த நடுநிலை நக்கிகள் ஏதோ பண்பட்டவர்களாகவும் அறிவுநிலையில் மேம்பட்டவர்களாகவும் தங்களைத் தாங்களே புரிந்து வைத்திருப்பதுதான் அந்தோ பரிதாபம்! மனிதகுலத்திற்கு எதிரானது எனினும் ‘கொள்கை’ என்ற ஒன்றைக் கொண்ட வலது சாரிகள், “நீங்கள் தவறு” என்று நாம் வாதம் வைப்பதற்காகவாவது வழி வைத்துக் கொடுக்கிறார்கள். இந்தக் ‘கொள்கை அநாதை’களான நடுநிலையாளர்களிடம் என்னவென்று (அரசியல்) பேச முடியும்? இவ்வாறானவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் “ஏதாவது ஒரு பக்கமா நில்லு பக்கி. நடுவால நின்னு வண்டி ஏறி செத்துராத மூதேவி” என்று வடிவேலுவின் தொனியில் இவ்வரிகள்தாம் மனதினுள் ஓடும். ஆராய்ந்து தெளிந்து ஒரு பக்கத்தைத் தேர்வு செய்ய ரொம்பவெல்லாம் மெனெக்கெட வேண்டியதில்லை. மனிதத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘இட’த்தைதான் ஆறாம் அறிவு மிக இயல்பாகத் தெரிவு செய்யும். எனவே கடைந்தெடுத்த கயமைத்தனத்தை மட்டுமே பின்பற்றும் வலப்பக்கத்தில் தற்காலத்திலும் கரை ஒதுங்கி, இடப்பக்கத்தை ஏறெடுத்தும் பார்க்க மறுப்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வாதத்தைக் கடுமையாக எதிர்க்கிறேன். மூளைச்சலவை என்பதெல்லாம் ரொம்ப பூசி மெழுகப்பட்ட மென்மையான சொல். சிலருள் இயல்பாகவே ஊறிப் போயிருக்கும் வன்மத்திற்கு ஏற்ற தளம் அமைத்துத் தருவதால்தான் வலப்புறத்தை ஆரத் தழுவிக் கொள்கின்றனர். எந்த மனிதனிடமும் சென்று ‘நீ அடக்கி ஆளவும் ஏறி அடிக்கவும் உனக்குக் கீழேயும் ஒரு அடுக்கு இருக்கிறது’ என அவனுக்கு அதிகார ருசியைக் காட்டுவதையே தொழிலாகக் கொண்டுள்ள அந்த வன்மத்திற்குப் பல முகங்கள் - சாதி வெறி, மத வெறி, இன வெறி, இன்னும் எத்தனையோ. இந்த வெறிகளையெல்லாம் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு கட்டமைப்பை நோக்கிச் சாய்ந்து நிற்பதற்கு ஒரு தனித்துவமான மானமின்மை வேண்டும். பெரியார், அண்ணல் அம்பேகர், கார்ல் மார்க்ஸ் – cliché என இவர்களை எப்படி புறந்தள்ள முடியும்? கருப்பு, நீலம், சிவப்பு – ஒரு மனிதனிடமிருந்து இம்மூன்று நிறங்களையும் அழித்துவிட்டால் என்னதான் மிஞ்சும்? வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதைப் போல் காவி வந்து குடியமர்ந்து கொள்ளும். இயற்கையாய் ஒரு மனிதனுள் பூசப்பட்டிருக்க வேண்டிய அம்மூன்று நிறங்களையும் அழித்தொழிக்கும் உயிரிகளிடம் ஒரே ஒரு கேள்வி - “ஏன்?” ************************************ தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா ஆகிய மாபெரும் ஆளுமைகளையெல்லாம் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து மெய்சிலிர்த்த காலம் போய் இப்போது அதல பாதாளத்தில் எவ்வளவு எட்டி எட்டிப் பார்த்தாலும் இன்னும் இன்னும் கீழே போய்க் கொண்டிருக்கின்ற அரசியல் அப்பிரசண்டிகளின் பின்னால் ஒரு தலைமுறையே போதமில்லாமல் கூத்தடித்துக் கொண்டிருப்பதையும் காண நேர்வது தமிழ் நிலத்தின் சாபக்கேடு. ட்ரம்ப், பெஞ்சமின் நெதென்யாகு…. எனத் துவங்கி மோடி வரை ஒட்டுமொத்தமாக உலக அளவிலேயே அரசியல் தரங்கெட்டுப் போயிருக்கிறது எனினும் தமிழ்நாடு அதில் தற்போது கொஞ்சம் தப்பித்துவிட்டதாகப் பெருமூச்சு விட்டு ஆசுவாசம் கொள்ளும் முன்னரே, ‘தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என்று திடீரென சிலர் எம்பிக் குதித்து அநாகரிக அரசியலின் ஆழத்தைப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். என்னத்தப் போட்டு சூசகமா கொச கொசன்னு? தற்போதுள்ள அரசியல் சூழலில் பா.ஜ.க ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கையும் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் மிகத் தைரியமாக எல்லா வகைகளிலும் எதிர்க்கும் கட்சிகள் தமிழ்நாட்டில் மிகச் சில. அவ்வாறாக, தண்டு வடம் வாய்க்கப் பெற்ற கட்சிகளில் மிக முக்கியமான மாநிலக் கட்சிகள் தி.மு.கவும் வி.சி.கவும். நிற்க! உடனே ‘காவடி எடுக்கிறேன்’, ‘கூஜா தூக்குகிறேன்’ என்றெல்லாம் பாசத்தோடு பாராட்டு மழை பொழியும் முன் இதையும் வாசித்து விடுங்கள். எல்லாவாற்றிற்கும் அப்பாற்பட்ட புனிதர் பட்டத்தை இவர்களுக்குச் சாற்றவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க மீதான கோபம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு இப்போது அவர்களை நிராகரித்தால் பேராபத்தான சக்திகளின் பிடியில் மாட்டி நமது அடையாளத்தையே இழந்து சின்னா பின்னமாகிவிடுவோம். மேலும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. ஓரளவு வாசிப்பும் பேச்சுத் திறமையும் கொண்ட வல்லுநர்களை உடையது அக்கட்சி. தி.மு.க.வின் ஆதரவாளர்கள் பலர் அக்கட்சியில் இல்லாதவர்கள். மேலும், தலைமையிடம் ஒரு தவறு இழைக்கும் போது முதன்முதலில் இடித்துரைப்பது கட்சிக்காரர்களும் ஆதரவாளர்களுமாகத்தான் இருப்பர். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், தூய்மை பணித் தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவையே எடுத்துக்காட்டுகள். தலைமையைக் கேள்வி கேட்பதற்கான வெளியும் கேள்விகளுக்குச் செவி மடுக்கும் தலைமைப் பண்பும் அக்கட்சிக்கு உண்டு. அப்புறம் அநியாயத்திற்கு நாகரிக அரசியலால் ஓர் உயரிய செந்தரத்தை இப்போது நிலைநாட்டி வருகிறார்கள். பிழையை இடித்துரைப்பது போலவே நல்லதைப் பாராட்டவும் செய்யலாம்தானே? அ.தி.மு.க பா.ஜ.க.விடம் என்றோ விலை போய் விட்டாயிற்று. ‘அந்தம்மா இருந்திருந்தா நடக்குறதே வேற’ என தயவு செய்து தூக்கிக் கொண்டு வராதீர்கள். அவரே ஒரு சர்வாதிகாரிதான். தே.மு.தி.க, பா.ம.க – பொட்டியைக் கண்டால் எங்கும் யாருக்கும் குட்டிக்கரணம் அடிப்பார்கள். அதிலும் இரண்டாவது, கடைந்தெடுத்த சாதிக் கட்சி. நா.த.க – கட்டுக்கதைகளிலேயே கட்சியை வளர்த்த பெருமை இவர்களுடையது. தமிழ்த் தேசியம் வழியாக வந்தாலும் சமீபமாக பெரியாரை எதிர்த்ததன் மூலம் தங்களது கூட்டாளிகளை அம்பலப்படுத்தி விட்டார்கள். நிலைமை இப்போது இவ்வாறாக இருக்க பா.ஜ.க.வை விரட்ட இவர்களை எல்லாம் எதிர்க்கத்தான் வேண்டும். கணிசமான வாக்கு வங்கி உடைய கட்சிகளில் இக்கட்சிகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் தி.மு.க மட்டுமே மிஞ்சுகிறது. என்னுடைய இந்த நிலைப்பாடு என்றென்றைக்குமானது அல்ல. மாணவர்களுக்கு, பெண்களுக்கு எனப் பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் தி.மு.க., நாளை மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடுமாயின் நிச்சயம் என் நிலைப்பாடும் மாறுபடும். வேறு யாரேனும் மக்கள் பக்கம் நின்று நல்லது செய்வார்களாயின் அவர்களை ஆதரிப்பேன். எனவே இப்போது ‘தி.மு.க வேண்டாம்’, ‘திராவிடத்தால்தான் வீழ்ந்தோம்’ என்றெல்லாம் கொக்கரிப்பவர்கள் இன்றைய சூழலில் தி.மு.கவுக்கு யார் சரியான மாற்று என்று மட்டும் கூறிவிடுங்கள். சமரசமாகப் போய் விடலாம். ‘கொள்கை எதிரி; அரசியல் எதிரி’ என்றெல்லாம் பண்ணையார்த்தனமாக உருட்டக் கூடாது. தி.மு.க.வைத் தூற்றுபவர்கள் பெரும்பாலும் முன் வைக்கும் காரணிகள் : வாரிசு அரசியல், ஊழல் – இவை அறவே இல்லாத கட்சிகளைக் கூறினால் அடியேன் அறிந்து புரிந்து தெளிந்து கொள்வேன். அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான குற்றச்சாட்டுகளை விடுத்து வேற வேற…?. தி.மு.க. ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தால் கூட ‘அது எந்த அளவிற்கு மக்களுக்குச் சென்றடைகிறது? வழியில் எவ்வளவு வழிப்பறி நடக்கிறது?’ என்று ஆராய்ச்சியில் இறங்குவது தவறல்ல. அதே ஆர்வ மிகுதி அ.தி.மு.க. ஆட்சியின் போது சோவார போயிற்றா? விமர்சனம் செய்யலாம். ஆனால் தி.மு.க. என்பதால் மட்டுமே தேவையற்ற காழ்ப்புணர்வுடனேயே எல்லா நல்லனவற்றையும் அணுகினால் இறுதியில் “இலவச காலை உணவு; நிரம்பி வழிகிறது கழிவறை”யில்தான் என்று 'தினமலம்' போல் வந்து நிற்பீர்கள். என் மனதிற்கு நெருக்கமான கம்யூனிஸ்ட் கட்சிகளை நான் குறிப்பிடாததற்குக் காரணம் அவர்கள் இன்னும் மாநிலமயமாக்கப்படாததுதான். நான் அரசியலை கவனிக்கத் துவங்கிய காலத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதை முழுவதுமாக ஆதரித்த அவர்களின் உறுதிப்பாடு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அது குறித்து இப்போது கூட தோழர்களின் மீது உரிமையுடனான கோபம் உண்டு எனக்கு. அது நிச்சயமாக அவர்களை விட்டுக் கொடுக்கும் தொனியில் அல்ல. “என்ன இது? நீங்களே இப்படி நிலைப்பாடு எடுக்கலாமா?’ என்று ஓர் ஆசானின் மீதான கதமாகவே வெளிப்படும். “பிற கட்சிகளும்தாம் ஆதரித்தன?” என கேட்பீர்களானால் எனது பதில் “ஒப்பற்றதும் அப்பழுக்கற்றதுமான செவ்விய ஓர் இடத்தைத் தோழர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். கருத்து வேறுபாட்டிற்கே வழியில்லை என்ற அதீத நம்பிக்கை சற்றே பிசகியதில் வெளிப்பட்ட திகைப்புதான் அது”. இவ்விடத்தில் என்னுள் எழும் இரண்டக மனநிலை(dilemma) பற்றியும் கூற விழைகிறேன். எனது ஊர் இலங்கையும் அல்ல, கூடங்குளமும் அல்ல. அவ்வூர்க்காரர்கள் இன்றைக்கும் முறையே தி.மு.க. மீதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும் கோபத்தில் இருந்தால் அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உடனே இதுவும் தோன்றும் – “அப்போ உனக்கு அடி விழுந்தாதான் வலிக்குமா?”. இக்கேள்வி என்மீது ஏளனப் பார்வை ஒன்றை வீசி நக்கலாகச் சிரிக்கும். ஆனால் நான் கூறியது போல், “கோபம்தான். ஆனால் இக்காரணங்களுக்காக மட்டும் இப்போது இவர்களைப் புறக்கணிப்பது விவேகமல்ல; பெருஞ்சேதத்திற்கு வழிவகுக்கும்”. திராவிடக் கட்சிகளின் புண்ணியத்தில் பிற தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையாகக் காலூன்ற இயலாமல் போனதில் பெரு மகிழ்ச்சியே! எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமது ஏவல்களாகப் பல விளியறி ஞமலிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கிறது பா.ஜ.க அரசு. பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணா ஆகியோரைத் தவிர்த்துவிட்டு தமிழ் மண்ணில் யாரும் அரசியல் செய்யவே முடியாது. ஆகையால் இப்பெருந்தகைகளின் பதாகைகளை ஏந்திக் கொண்டே நமது புறவாசல், வடவாசல், மேற்கு வாசல், கிழக்கு வாசல் என எல்லா வழிகளிலும் நுழைய முற்படுகின்றன பா.ஜ.க.வின் ‘ஆ’, ‘இ’, ‘ஈ’, ‘உ’….. பிரிவுகள். ********************************************* அதிலும் சமீபமாக இறங்கியிருக்கும் அல்லது இறக்கி விடப்பட்டிருக்கும் பனையூர் பண்ணையாரெல்லாம்….. எழுதப் பெறும் தகுதி உடையவரல்லதான். இடி அமீன், முசோலினி, ராஜபக்க்ஷ,… போன்றோருக்கும்தான் அத்தகுதி இல்லை. ஆனால் இவர்கள் வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள் அல்லவா? ‘யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்’ என்பது இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமை. அதையே தகுதியாகப் புரிந்து கொண்டால் எப்படி? சமூக நிகழ்வுகள் குறித்த அவதானிப்பு, மிதமான வாசிப்பு, மக்கள் மீதான அக்கறை, குறைந்தபட்ச உள்ளுணர்வு ஆகியவை வாய்க்கப் பெற்ற…. இந்தப் பண்புகளெல்லாம் கூட வேண்டாம். எந்த ஒரு ‘மனித’னாலும் கரூரில் கோரத் தாண்டவம் ஆடி விட்டுச் சற்றும் வெட்கமே இல்லாமல் ஓடிப் போய் ஒளிந்து கொண்டு பிறன்பழி கூற இயலாது. ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது; அல்லது நிகழ்த்தப்பட்டு விட்டது. அதன் பிறகான அந்த ‘சொகுசு அரசியல்வாதி’யின் அணுகுமுறைதான் இன்னும் ஆத்திரமூட்டக் கூடியதாக இருந்தது. அரசாங்கம் மீது தவறே இல்லை என்று கூறவில்லை. ஆணைய விசாரணையில் தெரிய வரும். வரட்டும். ஆனால் தெள்ளிதின் விளங்கி நிற்கும் தனது பொறுப்பற்றதனத்தை மூடி மறைக்க ஏகப்பட்ட சதிக் கோட்பாடுகளை(conspiracy theories) சமூக வலைதளங்களின் உதவியுடன் கிளப்பி விட்ட வில்லத்தனம் எல்லாம் திரைப்படங்களில் கூட பார்த்திராதது. ‘இந்த அரசாங்கம் ஏன் சரியாகப் பணியாற்றவில்லை?’ என்பதிலிருந்து ‘இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு வேகமாகப் பணியாற்றுகிறது?’ என்னும் சாட்டையடி(!) கேள்விக்குக் கொண்டு வந்து நிறுத்தி, அரசியல் தளத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறது இந்த தவக்கா கட்சி. கொள்கை ரீதியாக ஒருவரை எதிரி எனக் கை காண்பித்து விட்டு அந்த எதிரியின் எதிரியும் எனக்கு எதிரியே என்பதெல்லாம் என்ன மாதிரியான பம்மாத்து அரசியல்? தி.மு.க எதிர்ப்பு/வெறுப்பு அரசியல் என அறிவித்துவிட்டுப் போவதுதானே? ஒரு தனி நபராக அந்நடிகர் என்ன வேண்டுமானாலும் பிதற்றிவிட்டுப் போகட்டும். யார் இழுப்புக்கும் போகட்டும். கருத்துச் சுதந்திரம், உரிமை என்று விட்டுத் தொலைக்கலாம். ஆனால் தன்னைப் பின் தொடரும் ஒரு கூட்டத்திடம் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒருவர் என்ற வகையில் சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல் இந்தப் பெரிய அணில். மற்ற எல்லா கட்சிகளும் கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்ய, இவர்கள் மட்டும்தான் தனி நபர் வழிபாட்டில் கட்டுண்டு கிடக்கின்றனர். மேலும் அரசியல் மேடையின் தரத்தை வெகுவாகக் குறைத்து, பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்களைச் சொல்ல வைத்ததில் இவர்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளலாம். தன்பழி, ஊழ்வினையாக மாற்றம் அடையப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவ்வளவு நடத்தியது போதாது என்பது போல் ‘அதுக்கும் மேல…’ என்று அடுத்தடுத்து அசிங்கங்கள் அரங்கேறின. இவ்வளவு தரம் தாழ்ந்து போனதில்லை தமிழ்நாடு. ‘குழந்தையை இழந்தவர்கள்’ என நாம் பாவப்பட்டு வருத்தப்பட, அவர்கள் அனைவரும் சில நாட்கள் கழித்து அதற்கு முக்கிய காரணமானவர் மீது தவறே இல்லை என்று ஒரே குரலில் ஓங்கிப் பேசினார்கள். ‘அவரைப் பார்க்கும் ஆசை நிறைவேறிவிட்டது. என்ன ஒன்று? அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளைத் தூக்கிக் கொடுக்க வேண்டியதாகப் போயிற்று’ என்று சிரித்துக் கொண்டே ஒரு தாயால் பேச முடிந்ததை எங்ஙனம் ஏற்றுக் கொள்வது? ‘பாதிக்கப்பட்டவர்கள்’ மீது உண்டான இவ்வளவு வெறுப்பும் அருவருப்பும் இதுவரை எங்கும் காணாதது. தாமாகவே இப்படிப் பேசியிருந்தால் ரொம்ப குரூரம். பணம் பெற்றுக் கொண்டு பேசினார்களாயின் அது கேடு கெட்ட கேவலம். எப்படிப் பார்த்தாலும் சமூகம் போகிற போக்கைப் பார்த்தால் பதறுகிறது. பேச வைத்தவர்களுக்கும் பேசியவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ‘இன்னும் ரெண்டு பிள்ளையையும் கூட்டிட்டுப் போகாம போய்ட்டேனே’, ‘இதுக்காகவாவது இன்னும் ரெண்டு புள்ளைய பெத்தேன் இல்லையே?” – நல்லவேளை இப்படியெல்லாம் ஆதங்கப்படவில்லை. ‘உங்கள் பரிதாபத்திற்கும் அனுதாபத்திற்கும் எங்களுக்குக் கொஞ்சமும் தகுதி கிடையாது’ என பாதிக்கப்பட்டோர் நமது முகத்திலறைந்து சொன்ன விதம்; பேருந்து ஏறிச் சென்று நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து ‘பண்ணையார் சவரம் செய்யவில்லை, ஷவர்மா சாப்பிடவில்லை, ஷாம்பூ போடவில்லை, ரொம்ப வருத்தத்தில் இருக்கார்’ என ஆறுதல் பெறச் சென்றவர்கள் ஆறுதல் அளித்து வந்தது….. தமிழ்நாட்டில் அரங்கேறிய இந்நாணக்கேடான நிகழ்வுகள் அழிக்க முடியாத கரும்புள்ளிகள். இது இப்போது பழைய செய்தி ஆகிவிட்டது. இப்போது அல்ல. சம்பவம் முடிந்த ஒரு மாதத்திலேயே ‘பிண நாயகன்’ திரைப்படம் குறித்த மேலதிகத் தகவல்கள் கேட்டு அனத்த ஆரம்பித்துவிட்டன அணில்கள். மாநாடு என்னும் பெயரில் நடத்தப்படும் ஒவ்வொரு வைபவத்திலும் அவர் பேசுவதை…. மன்னிக்கவும்! வாசிப்பதைக் கேட்கும் போது “ச்சே! இப்படி நல்லா நடிப்பு வர ஆரம்பிக்குற நேரத்துல முழுக்கு போடுறாரே!” என்று மட்டும் கொஞ்சம் கவலை(!) மேலிடுகிறது. நம்மால் யாரோ ஒருவருக்குக் காயம் பட்டுவிட்டது என்றாலே தூங்க முடியாமல் குற்றவுணர்வில் உழன்று கொண்டிருப்போம். கரூர் அட்டூழியத்திற்குப் பிறகும்… சரி, அந்த உத்தமர்ர்ர் மீது தவறே இல்லை என்றே கொள்வோம். தன்னைப் பார்க்க வந்துதானே மடிந்தார்கள் என்ற உணர்வு கூட இல்லாமல் மூன்று மாதம் கழித்து மலேசியாவுக்குச் சென்று ஒருவனால் ஆட்டம் போட முடிகிறது எனில் இவ்வகை உயிரினத்தைப் புறந்தள்ளுதலே சாலச் சிறந்தது. போதாக்குறைக்கு அத்திரைப்படத்தின் வரவுக்காக வாலை ஆட்டியபடியே காத்திருப்பவர்களின் நடுவில்தான் நாமும் வாழ்கிறோம் என்று உணரும் கணம் உடல் கொஞ்சம் அதிர்ந்து அடங்குகிறது. அவரை வைத்துப் படம் என்ற பெயரில் என்ன கருமத்தைக் கிண்டி வைத்திருந்தாலும் விசில் பறக்கத்தான் போகிறது. வழக்கம் போல ஐந்நூறு கோடி, ஆயிரம் கோடி என வடை சுடத்தான் போகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து திமிராகப் பேசிய பிறகும் திருவாளர் கெய்க்வாட் படங்கள் நன்றாகவே ஓடின. ‘கலை வேறு; கொலை வேறு’ என்று நம் மக்கள் பிரித்தறியும் உயரிய(!) பண்பைப் பெற்றவர்கள் என்று ஏற்கெனவே வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறார். எவ்வளவு விஷத்தை வேண்டுமானாலும் உமிழலாம்; எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். மக்கள் சீக்கிரமே மறந்து விட்டுக் கொண்டாட்ட மனநிலையுடன் கூத்து பார்க்கக் கிளம்பிவிடுவார்கள் என்ற அரிய உண்மையை மீண்டும் மீண்டும் பரிசோதித்துப் பார்த்து அதில் வெற்றியும் அடைந்து கொண்டிருக்கின்றனர். நாம்தான் செப்டம்பரிலேயே தேங்கி விட்டோம் போல. இதில் “இவர்களைத் ‘தற்குறி’ என்றழைக்கக் கூடாது. இவர்களைச் சரியாக அரசியல் படுத்தத் தவறிவிட்டோம்” என்றெல்லாம் உண்மையான அக்கறையுடனும் குற்றவுணர்வுடனும் திராவிட கழகத்தினர் சிலர் பேசுவதைக் கேட்டால்….. மன்னிக்கவும்! சிரிப்புதான் வருகிறது. அணில்களைப் போன்ற தனி மனித ஒழுக்கமற்ற கட்டுப்படுத்த முடியாத கூட்டம் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. உலகமே கையில் சுருங்கி விட்ட இந்த யுகத்தில் எல்லா செய்திகளையும் வாசிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள். எது சரி எது தவறு என்று பிரித்தறியும் திறனை வளர்த்துக் கொள்ளாதது அவரவர் குற்றம் மட்டுமே. அறியாப் பருவத்தில் இருக்கும் மழலையரைப் போல் இவர்களைக் கொஞ்ச வேண்டியதில்லை. அடிப்படை அறிவை அடிமாட்டு விலைக்குக் கூட வாங்கத் துப்பில்லாத இவர்கள் சமூக வலைத்தளங்களில் நான்கு கால் பாய்ச்சலில் ஒன்றிய அரசின் தவறுகளுக்குக் கூட வீறு கொண்டு மாநில அரசை மட்டுமே துவைத்து வெளுப்பதைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும்… “உங்களை எல்லாம் வச்சுகிட்டு இந்தியா ஏன் இன்னும் வல்லரசா ஆகாம இருக்கு?” உலக வரலாற்றில் முதன் முறையாக இவரைப் பேட்டி எடுக்க வந்தவர்கள் பேட்டி எடுத்ததைப் பேட்டியாகக் கொடுத்த கேலிக்கூத்துப் பெருமையும் இப்பெரிய அணிலையே சாரும். “பொது வாழ்க்கைக்கு வந்து விட்டு மக்களையும் சந்திக்க மறுக்கிறார். பத்திரிக்கையையும் எதிர்கொள்ள மருள்கிறார். ஆனால் இவருக்கு முதலமைச்சர் நாற்காலியைத் தூக்கித் தந்திட வேண்டுமாம்” என்று இவரைப் பின் தொடரும் ஆச்சரியக் குறிகள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாலே போதும். அவர்களை மட்டும் சொல்லித்தான் என்ன? படித்து மண்ணள்ளிப் போட்ட பலரும் கூட கரூர் சம்பவத்தைக் காணுற்ற பிறகும் “எப்போ பாரு… தி.மு.க., அ.தி.மு.கன்னே போய்ட்டுருக்கு. ஒரு மாற்றம் வரட்டும். இவருக்குத்தான் ஒரு வாய்ப்பு குடுத்துப் பார்க்கலாமே?” என்று, ‘இன்றைக்கு வேண்டுமானால் இந்தப் புதிய உணவகத்தில் சாப்பிட்டுப் பார்ப்போமா?’ என்ற தொனியில் பேசுவதைப் பார்த்தால் “நீங்கள்லாம் எப்படி இன்னும் வெளிய நடமாடிட்டு இருக்கீங்க? யாரு சங்கிலியைக் கழட்டி விட்டது? எப்போ தப்பிச்சீங்க?” எனக் கேட்கத் தோன்றுகிறது. ‘எது சரி?’ என்பதைப் புரிந்து கொள்ளவும் ‘யார் பக்கம் நிற்பது?’ என்று தேர்ந்து தெளியவுமாவது கொஞ்சம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல் நலம். எதை வாசிக்கிறோம் என்பதும் இங்கு முக்கியம் அமைச்சரே! ***************************************** கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னும் என்னென்ன கண்றாவியையெல்லாம்தான் கேட்பது? அறத்தோடு கூடியவற்றைப் பேசுதல் மட்டுமே கருத்துச் சுதந்திரம் என வரையறையை மாற்றுங்கள் ஐயா! தம்மை அரசன் என்று சொல்லிக் கொள்(ல்)பவர்களால் அன்றே நிகழ்த்தப்படும் கொலைகள் யாவும் பிரிவினைவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் பறைசாற்றுவதற்காகவும் சுய ஆதாயத்திற்காகவும் அரங்கேறுகின்றன. தெய்வமோ தெண்டத்திற்கு நின்று கொண்டே இருக்கிறது. அநீதியையும் தீமையையும் கொல்வதற்கான நோக்கம் சற்றும் இருப்பதாகத் தெரியவில்லை. கொல்வதெல்லாம் கூட இருக்கட்டும்; உணர்ச்சி மேலீட்டில் கோபத்தில் பொங்குவது கூடக் கிடையாது. (supposed)அரசர்கள் மற்றும் (so called)தெய்வங்களின் (அவ)லட்சணம் இவ்வாறாக இருக்க யாரை அல்லது எதை நம்புவது? எவ்வகையான நம்பிக்கையில் பிடிப்புக் கொள்வது? நியாயத் தராசுகள் எல்லாம் பொருளற்றுப் போன தற்காலத்தில், “வாழ்க்கை அப்படித்தான்; நடப்பது நடந்துகொண்டே இருக்கும். அது அநீதி என்றாலும் கூட” என்ற எதார்த்தம் புரியாமல் இல்லை. மனதில் ‘ஊழ்’ என்றொரு பிரிவை உருவாக்கி எல்லா அநியாயங்களையும் அதில் இருத்தி வைக்க வெகு கடினமாக இருக்கிறது. பகுத்தறிவாளராக இருந்து கொண்டு வாழ்க்கைச் சக்கரத்திற்கான நம்பிக்கை அச்சாணியை எதில் தேடுவது? போகிற போக்கில் எல்லாவற்றையும் வெறுமனே கவனித்து மட்டும் கடந்து செல்வதற்கு நாம் ஒன்றும் கடவுள் இல்லையே! கடவுளே இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். சமூக விடயங்களில் அறம் சார்ந்த கோபத்தை இல்லாத இறைகளின் மீது கொட்டி நேரத்தை வீணடிப்பதை விடுத்து, இருக்கும் தலைவர்கள்/தளபதிகள்/சிப்பாய்கள் ஆகியோரில் சரியானவர்கள் (அதாவது தவறானவர்கள்) மீது முறையாக வெளிப்படுத்துதல் மனதிற்கான ஒரு தற்காலிக வடிகால் மட்டுமே. ஒருமா அளவு மனிதத்தைத் தன்னுள் இடுக்கி வைத்திருக்கும் மனிதனுக்குக் கூட அத்துமீறிய அநீதிகளின் போதும் நீதி தேவதையின் கண்கள் இறுகக் கட்டப்பட்டு இருப்பது மனச்சோர்வைத் தந்து விரக்தியைப் படரச் செய்யும் அல்லவா? இக்கையறு நிலையில்தான் “அறம் கூற்றாகும்!” என்பதை நம்பச் சொல்லி ஆறுதல் அடைய முனைகிறது மனம். அதுவே “அறம் கூற்றாகட்டும்!” என ஆங்காரமாக மனதினுள் ஒலிக்கும்போது உத்வேகத்துடன் கூடிய ஏதோ ஒரு வகையான சமாதானத்தையும் அழைத்து வருகிறது. எனவே…. அறம் கூற்றாகட்டும்! ஆகியே தீர வேண்டும்! அப்படியே ஆகக் கடவதாக! ஆமென்!
  3. Today
  4. நீங்கள்தான் தளபதி விஜய் அண்ணாவின் ஆதரவளாராச்சே!? 🤣 இன்னும் நல்ல கருத்துக்கள் வளர்ந்து வரட்டும். 😂
  5. ஆம். உண்மை. நான். எண் சோதிடம் பற்றி எழுதிய. கருத்துகள். நீக்கப்பட்டிருந்தது எந்த விதிபடி. நீக்கப்பட்டது. எனக்கு. தெரியாது. ஒரு மட்டுவுக்கு. நம்பிக்கை இல்லை. என்பது. தெரியும். எந்தவித கள விதிகளுமின்றி. தனக்கு. நம்பிக்கை இல்லை விருப்பமில்லை என்ற. காரணத்தினால் மட்டுமே. நீக்கினார். அதன். பின்னர். நான். எழுதுவதை. குறைத்து. விட்டேன். வேறுபொழுதுபோக்கை. தேடிக்கொண்டேன் காரணம். அடிபட விரும்பவில்லை. நன்றி. வணக்கம். புலவர்.
  6. உண்மை. தான். ஆனால. சங்கீதாவும் பிள்ளைகளும். தமிழ்நாட்டு் அரசியலில் ஆர்வம். காட்டவில்லை. அவர்கள் எந்தவொரு. பதவியும் எற்கப்போவதில்லை.
  7. Yesterday
  8. ஆளும் முடிஞ்சுதாம் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன... இரண்டாவது விக்கட்டும் ஔட் 🤣🤣
  9. எந்த அரசியல் கட்சியினதும் பிரச்சார தளங்களில இருந்தோ, பிரச்சார YouTube channel களில் இருந்தோ - அது இலங்கையை சார்ந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி, இந்தியாவை சார்ந்த கட்சியாக இருந்தாலும் சரி - பதிவுகள், காணொளிகள் இணைக்கப்படல் ஆகாது என்பது கள விதி. ஆனால் இதனை கொஞ்சமும் மதிக்காது, பல நூறு முறை இவ்வாறான தளங்களில் இருந்து நீங்கள் இணைத்துள்ளீர்கள். இவ்வாறு இணைக்கப்பட்டவற்றில் எம்மால் அவதானிக்கப்பட்ட அனைத்தும் நீக்கப்பட்டன. எதிர்காலத்திலும் அவை கண்டிப்பாக நீக்கப்படும். மீண்டும் மீண்டும் இவ்வாறான விதிகளை மீறும் செயல் தொடருமாயின் உங்கள் கருத்துக்களை மட்டுறுத்துனரின் பார்வைக்கு உட்படுத்திய பின்பே அனுமதிக்கப்படும். யாழில் எவரும் வேறு எந்த கட்சி சார்பாகவும் இவ்வாறு பதிவுகளை இடுவதில்லை. சீமான் ஆதரவாளர்களாக தம்மை வெளிப்படுத்துகின்றவர்கள் மட்டுமே இவ்வாறு விதிகளை கொஞ்சமும் மதிக்காது பதிவுகளை பகிர்வதையும் அவதானித்துள்ளோம். இதில் நீங்கள் ஒரு படி மேலே போய் ஒரு முறை தேவடியாள் எனும் மிகவும் ஆபசமான, அநாகரீகமான, பண்பட்ட பொருள் தருகின்ற ஒரு சொல்லை பயன்படுத்தி இருந்த ஒரு பதிவையும் யாழில் பகிர்ந்து அது என்னால் நீக்கப்பட்டது என்பதை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகின்றேன். கருத்துக்களத்தில் சீமானை மட்டுமல்ல எந்த அரசியல்வாதியையும் நாகரீகமாக விமர்சிக்கும் உரிமை கள உறவுகளுக்கு உள்ளது. சுமந்திரனை, அனுரவை, சாணக்கியனை, மோடியை, கருணாநிதி போன்றவர்களை விமர்சிப்பது போல சீமான் எனும் அரசியல்வாதியையும் விமர்சிக்கும் உரிமை எல்லாருக்கும் உள்ளது. அது தேவையற்ற இடத்தில் வலிந்து செய்த செயலாக உங்களுக்கு தோன்றினால், report செய்து முறையிடவும். நன்றி
  10. @நியாயம் ஐயனே ... மதத் தலீவர் மண்டையை போட்டிட்டாராம்...😔😭🥺 இண்டைக்கு எங்க போயிற்றியள்? .... ஒப்பாரி முடியேலையோ?🤭 .... சரி என்ன நினைக்கிறியள் என்டாவது சொல்லுங்கோவன்😁
  11. கபில்தேவ் இந்து மதத்தினை பின்பற்றுபவர். பஞ்சாபி இந்து மதத்தை சேர்ந்த Khatri சமூகத்தை சேர்ந்தவர். இந்தியா அணியில் இஸ்லாமியர்கள் அணித்தலைவர்களாக இருந்துள்ளார்கள். முகமத் அசாருதீன், மன்சூர் அலிகான் patudi , இஃப்திகார் அலி கான் படௌடி 80 களில் கவாஸ்கர் தலைமையில் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் அணித்தலைவர் கவாஸ்கரின் தனிப்பட்ட விரோதம் காரணமாக 3 வது டெஸ்ட் போட்டியில் அணியில் இருந்து கபில்தேவ் நீக்கப்பட்டார் . அப்போட்டியில் கபில்தேவுக்கு பதிலாக அசாருதின் சேர்க்கப்பட்டார். இதுதான் அசாருதீனின் முதல் போட்டி. முதல் 3 போட்டிகளிலும் 100 ஓட்டங்கள் அசாருதீன் எடுத்தார். இந்த சாதனை இன்னும் முறியடிக்கபடவில்லை. கபில்தேவ் 3 வது போட்டியில் விளையாடி இருந்தால் அதிக போட்டிகளில் தொடர்ச்சியாக எல்லாப் போட்டிகளிலும் விளையாடியவர் என்ற சாதனையில் இருந்திருப்பார். 90 களில் தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இந்தியா அணி தோல்வியுடன் திரும்பியது. அணித்தலைவர் அசாருதினை அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கும்படி குரல் எழும்பப்பட்டது. கபில்தேவ் மீண்டும் அணித்தலைவராக வர வேண்டும் என ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டன. அக்காலத்தில் இந்தியாவின் பிரதமர் நரசிம்மராவ். அசாருதினுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இந்தியா வந்த இங்கிலாந்து 3-0 என்று தோல்வி அடைந்தது. இந்தியா உள்ளூரில் தொடர்ச்சியாக வெற்றிமேல் வெற்றி பெற்றது. கபில்தேவ் அவர்களை அணியில் இருந்து ஓய்வு பெற்று இளம் வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என சிலர் (அசாருதீன் உட்பட) விரும்பினார்கள். நியூசிலாந்தின் ரிச்சாட் கார்ட்லியின் அதிக டெஸ்ட் விக்கேட்டுக்கள் எடுத்தவர் என்ற சாதனையை முறியடித்தபின்பு கபில்தேவ் ஓய்வு பெற்றார்
  12. கவலைப்படாதே சகோதரா! 🤣 கெதியிலை வரும்! 😁 ஏன்னா பெசஷ்கியன் நம்மாளு! 😎
  13. எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி இந்தியா அரை இறுதிக்குப் போய்விட்டது.
  14. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 119 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 119 / பின் இணைப்பு - "புத்தரின் பண்புநலனுக்கும் அல்லது நடத்தைக்கும் இலங்கை நாளேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் அல்லது முரண்பாடுகள் " புத்தர் 29 வயதில் அரச வசதிகளையும், புதிதாகப் பிறந்த மகனையும், இளம் மனைவியையும் துறந்த மற்றும் மிகவும் கருணையுள்ள மாமனிதர் என்று இன்று பலராலும் புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த உலக வாழ்க்கையின் துயரத்தால் அல்லற்பட்டு, வருத்தமடைந்து, அந்தத் துயரத்திலிருந்து விடுபட ஒரு வழியைக் கண்டுபிடிக்க விரும்பினார். தீபவம்சம் புத்தரை முனிவர்களில் முதன்மையானவர், மகிழ்ச்சியைத் தருபவர், இரக்கமுள்ளவர், கருணையுள்ளவர் என்று விவரிக்கிறது. புத்தர் 2400 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார். மேலும் இலங்கையின் வரலாற்றுக் குறிப்புகள், புத்தர் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் அல்லாதவர்கள் இலங்கையில் இருந்தனர் என்று நம்மை நம்ப வைக்க முயல்வதும் வெளிப்டையாகத் தெரிகிறது; புத்தர் காலத்தில் இலங்கையில் இரத்த தாகம் கொண்ட இயக்கர்கள், காட்டுமிராண்டி பிசாசுகள் மற்றும் கடுமையான இராட்சதர்கள் [blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas] போன்ற மனிதர் அல்லாத உயிரினங்கள் வாழ்ந்ததாக பண்டைய இலங்கை நாளேடுகளில், இலங்கையின் அசல் குடிமக்களை, புத்தரின் கருணையை உண்மையை பொய்யாக்கி, தாம் புத்த துறவி ஆசிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு வர்ணிக்கிறார்கள். ஆனால் உண்மையில், இந்தக் கதைகள், அந்த நிலத்தின் அசல் மக்களை ஆபத்தானவர்களாகவோ அல்லது தீயவர்களாகவோ காட்டிட புத்த துறவிகளால் அபத்தமாக சித்தரிக்கப் படுகின்றன. அதாவது, இதன் மூலம், இந்த பூர்வீக சமூகங்களின் பாரம்பரிய நிலங்களைக் கையகப்படுத்துவதை நியாயப்படுத்த முயன்றனர் என்பதே உண்மை. அதை இன்றும் குறிப்பாக இலங்கை தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், புத்த குருக்களுடனும், ராணுவ வீரர்களுடனும் இணைந்து, அரச ஆதரவுடன் செய்துகொண்டே இருக்கின்றன. வங்கத்திலிருந்து [Vanga] இலங்கைக்கு வரவிருக்கும் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களுக்கு [chosen followers] வழி வகுக்கும் வகையில், மேற்கூறிய துணை மனிதர்களை [sub-humans] இலங்கையில் இருந்து அகற்ற புத்தர் விரும்பினார் என்றும் அவர் மூன்று முறை இலங்கைக்கு காற்றில் பறந்து வந்தார் என்றும் இலங்கை நூல்கள் கூறுகின்றன. புத்தர் ஒரு மனிதப் பிறவி. எனவே அவர் கட்டாயம் பறந்திருக்க முடியாது என்பதே உண்மை! மேலும் அவரது பறத்தல் பற்றிய வர்ணனை அல்லது சம்பவம் இராமாயண காவியத்தில், அனுமான் இலங்கைக்கு பறந்ததாக கூறும் கதையின் திருட்டு என்று இலகுவாக எவரும் கூறலாம். காரணம் தீபவம்சத்துக்கு அல்லது மகாவம்சத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இராமாயணத்தின் ஆரம்ப கட்டம் கிமு 7-5 மற்றும் 5-4 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் எழுதப்பட்டிருக்கலாம் என் இன்று ஊகிக்கப்படுகிறது. எனவே அதில் இருந்து இந்த சம்பவ பிரதி எடுக்கப்பட்டு இருக்கலாம் என்பது நம்பக்கூடிய ஒன்றே ஆகும். தீபவம்சம் 1- 51 இன் படி, கூடியிருந்த இயக்கர்களின் கூட்டத்தினர் சம்புத்தர் [Sambuddha means the ‘Perfectly Enlightened One’, sammā = perfectly; saṁ = by himself without a teacher; buddha = Enlightened or Awakened One, by realisation of the four Noble Truths. According to Buddhist scriptures, there have been four Sammā Sambuddhas including Lord Gautama Buddha in the present world cycle, and a fifth Sammā Sambuddha named Maithriya is expected to appear sometime in the future. / சம்புத்தர் என்றால் 'முழுமையான ஞானம் பெற்றவர்', சம்மா = பரிபூரணமாக; சாம் = ஒரு ஆசிரியர் இல்லாமல் தானே; புத்தர் = நான்கு உன்னத உண்மைகளை உணர்ந்து ஞானம் பெற்றவர் அல்லது விழித்தெழுந்தவர். பௌத்த சாஸ்திரங்களின்படி, தற்போதைய உலகச் சுழற்சியில் பகவான் கௌதம புத்தர் உட்பட நான்கு சம்மா சம்புத்தர்கள் இருந்துள்ளனர், மேலும் மைத்ரியா என்ற ஐந்தாவது சம்மா சம்புத்தர் எதிர்காலத்தில் எப்போதாவது தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.] அங்கே, நடுவானில் இயக்கர்களின் தலைகளுக்கு மேல் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள், ஆனால் அவர் புத்தர் என்று அவர்கள் நினைக்கவில்லை; அவரை வேறொரு இயக்கர் என்றே தவறாக நினைத்தார்கள். Part: 119 / APPENDIX – "Conflict between buddha's characters and the events mentioned in Ceylon chronicles" Buddha is understood to be a very kind person who renounced the royal comforts, his just born son and his young wife when he was 29 years of age. He was saddened by the misery of this worldly life and wanted to find a way out of this misery. Dipavamsa describes Buddha as; the chief among Sages, the bringer of Happiness, the compassionate, and merciful grate Sage. Buddha was born more than 2400 years ago, and the Ceylon chronicles wanted us to believe that there were non- humans; blood thirsty Yakkhas, savage Pisacas and Rakkhasas during his life time in Lanka. The monkish authors branded the original inhabitants of Lanka as above to misappropriate their traditional land. The Buddha wanted to clear Lanka of the above sub-humans to make way for his chosen followers yet to come to Lanka from Vanga, and he came, flying to Lanka thrice. Buddha is a Human, and couldn’t have flown, and his flying is a plagiarism from the Epic Ramayana. When he came he was hovering over the heads of Yakkhas in mid air! Yakkahs mistook Buddha as one of theirs, the Dipavamsa, 1- 51. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 120 தொடரும் / Will follow துளி/DROP: 2066 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 119 https://www.facebook.com/groups/978753388866632/posts/34067398726242005/?
  15. இவ்விரண்டு பத்திகளுமே ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறதே! முதலில் கையெழுத்திட்ட நான்கு நாடுகளும் உதவாமல் எப்படி பின்னர் இந்தியா, பாக்கிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுஆயுதங்களை உற்பத்திசெய்தன! அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத இந்தியா, பாக்கிஸ்தான், இஸ்ரேல் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! ஏனென்றால் அவர்களிடம் அணுஆயுதம் இருக்கிறது அதனால் ஒருவராலும் வாலாட்ட முடியாது! எதுவுமே இல்லாத ஈராக், ஈரான் போன்ற நாடுகளுடன்தான் வீரத்தை காண்பிக்க முடியும்! அதுவும் ஐநாவின் எந்தவித அனுமதியுமின்றி!
  16. முழு ஆவணம்:
  17. அதுக்கு காரணம் பிரான்சில் உள்ளவரின் அதிமேதாவித்தனம்! ஏதோ தன்னால்தான் யாழ் களம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற மிதப்பு!
  18. WIவீரர்கள் இலகுவாகத்தடுக்கக் கூடிய பல பவுண்டரிகளை தடுக்காமால் ஏனோதானே என்று விட்டார்கள். இந்தியா செமிபைனலுக்கு வராவிட்டால் ICCக்கு வருமானம் படுத்து விடும் என்று செய்தார்களா என்று சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாமல் இருக்கிறது. இது இந்திய அணியில் எப்போதும் நடப்பதுதான் அவர்களுக்கு கபில்தேவ் தலைமையில் முதல் உலகப் கோப்யை வென்றதையே இன்னும் சகிக்க முடியாமல் இலருக்கிறார்கள். இருந்தாலும் இந்திய அணியில் தமிழர்களுக்கும் இடம் உன்டு. ஆனால் இலங்கை அணியில் சிங்களவர்களைத்தவிர யாருக்கும் இடம் இல்லை.
  19. இது விஜையின் தனிப்பட்ட குடும்ப விடயம். அவரருடைய மனைவிக்கு விவாகரத்து கோருவதற்கு முழு உரிமையுண்டு.இந்த வழக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னே போடப்பட்டது. அதை இந்த நேரத்தில் கசிய விட்டது யார்? அதனால் ஆதாயம் அடையப் போவதுயார்?வியையின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன். ஆனால் விஜையை ஆதரிக்கப் போவதில்லை. அதற்குள் வேறு கணக்குகள் இருக்கின்றன.விஜையின் கொள்கைத்தலைவராக பெரியாரை வைத்திருப்பது சரியாகத்தான் இருக்கிறது. பெரியாரிஸ்ட்டுகள் திருமணம் கடந்த உறவு என்று அதற்கு நல்ல பெயரும் வைத்திருக்கிறார்கள்.இந்திய அரசியல் கட்சிகளின் வரலாறு இப்படித்தான் அமைந்திருக்கின்றது. (ஒரு சில கட்சிகள் விதிவிலக்கு) எப்படி ஒரு கட்சித்தலைவருக்குப் பிறகு அந்தக்கட்சியின் தலைவராக அவரது மனைவி அல்லது அதற்குச் சமமானவர்கள் அல்லது தலைவரின் வாரிசுகள் தான் கட்சிப் பொறுப்பை உயில் எழுதுகிறார்கள். ஏனென்றால் கட்சியின் சொத்து தங்கள் குடும்பத்திடமே இருக்க வேண்டும் என்ற சுயநல நோக்கம்தான். நாளை தவெக ஒரு ஈழத்து தமிழிச்சியின் கைகளில் போவதை விட ஒரு இந்திய அதுவும் ஒரு பாப்பாத்தியின் கைகளுக்குப் போக வேண்டும் என்று சில பார்ப்பனர்கள் வேலை பார்த்திருக்கலாம். எது எப்படியோ விஜை அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து பெரும் சறுக்கல்களையே சந்திக்கிறார். பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தயங்குகிறார்.எதுவாகிலும் அவர் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை இந்தத் தேர்தலில் ஏற்படுத்துவார்( தேர்தலுக்கு முகம் கொடுத்தால்). பிற்குறிப்பு-நான் நாம்தமிழர்கட்சி தொடர்பான எந்த செய்தியைப்பகிர்ந்தாலும் யாழ்நிர்வாகம் உடனே அதைத்தூக்குகிறது. இதன்காரணத்தை அறியலாமா? நாம்தமிழர்கட்சிக்கு யாழில் தடை என்றால் அதன் தலைவர் சீமான் சம்பந்தபடாத இந்த விடயத்தில் அவரது பெரை வலிந்து உள்நோக்கத்துடன் தினிக்கப்படும் கருத்துக்களை எப்படி நிர்வாகம் அனுமதிக்கிறது.அதுமட்டுமல்ல நாம்தமிழர்பற்றிய எதிர்மறையான செய்திகளை யார்பதிந்தாலும் அனுமதிக்கும்நிர்வாகம் நான்பதியும் செயதிகளைத் தூக்குவது என் அதன்காரணம்பற்றி எனக்கு அறியத்தரப்படுவதும் இல்லை.
  20. இப்ப வருமோ.., எப்ப வருமோ….. இஸ்ரேல் நினைச்சா…. அப்ப வருமோ…
  21. நான் 2012 இல் போன போது உச்ச மாடியில் இருந்தது. நீங்கள் வருவதை அறிந்து பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பார்கள் போலும்😂.
  22. King of conspiracy என்டு சொல்லுவாங்கள். இப்பிடி போட்டுத் தள்ளுறியலே. முடியல. 😉
  23. உங்களுக்காக இன்று 154 மாடிக்குப் போய் வெண்டிங் மெஷினைத் தேடினேன்.. காணவில்லை. வெளியே பல்கனியில் நின்று கீழே உள்ள கட்டடங்களைப் பார்த்தபோது ஒரு பாரிய வெடிச்சத்தம் கேட்டது. துறைமுகத்தில் தாக்குதல் நடந்தது என்று நினைக்கின்றேன்! கீழே 148 மாடியில் வெண்டிங் மெஷினைக் கண்டுபிடித்தேன்.. ரவுண்டான பிஸ்கட்! தங்கம் என்று உரசிப் பார்க்கவா முடியும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.