All Activity
- Past hour
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
oSeordtsnp1fl0m45rt é,f86reg55:hg0ct7a10v1i065ffmcu753657 0f · இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்களிடம் அந்த ஊரை சேர்ந்த நபர்கள் கூறியிருக்கிறார்கள் அதாவது நீங்கள் கிரிக்கெட்டில் பெரிய ஆளாக வந்துவிட்ட பிறகு உங்களால் இந்த ஊரில் வாழ முடியாது இந்த ராஞ்சி சிறிய நகரம் உங்களுக்கு இந்த ஊர் பிடிக்காமல் போய்விடும் நீங்கள் வேணும்னா பாருங்கள் நீங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவுடன் வேறு நாட்டிற்கு அல்லது வேறு ஊருக்கு நீங்கள் செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள் அதனை அப்போது தோணி இல்லை நான் எவ்வளவு பெரிய ஆளாகினாலும் நான் இங்கே தான் இருப்பேன் என்று சொல்லி மறுத்து இருக்கிறார் அவர்களும் அப்போது அதனை ஏற்க மறுத்து விட்டனர் இப்போது தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் இதே ராஞ்சி நகரில் தான் இருக்கிறேன் என்னிடம் அப்போது கூறியவர்கள் இங்கே இருக்க மாட்டேன் என்று என்னை பார்த்து சொன்னார்கள் ஆனால் எனக்கு இந்த ராஞ்சி மிகவும் பிடிக்கும் இந்த ராஞ்சியில் தான் நான் பிறந்தேன் இந்த ராஞ்சி மண் என்னுடைய சொந்த ஊர் இது எனக்கு சொர்க்கம் தான் என்று நான் இங்கு விட்டு எங்கும் குடியேற மாட்டேன் மேலும் இங்கே சும்மா இல்லாமல் எனக்கு பிடித்தமான விவசாயம் செய்வதை மிகுந்த சந்தோஷமாக உணர்த்துகிறேன் மேலும் என்னுடைய உடல் நலத்திற்கு இது மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்றும் தோனி மனம் திறந்து கூறியிருக்கிறார் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் சொந்த ஊரில் வாழ்வது அவமானம் என்று நகரத்தை நோக்கி செல்பவர்கள் ஏராளம்..ஆனால் இங்கே தோனியின் இந்த செயல் அவரின் வாழ்வியல் பாராட்டுதலுக்குரியது தோனியின் ரசிகன் என்பதில் பெருமிதம் 😍"
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
பிள்ளையானை அனுரவுக்கு முன்பே உள்ளே தூக்கி போட்டு விட்டார்கள். அனுர தனது போர்கால அமைசரவை சகாவான டக்லஸ் மீது போட்டது “பாவாடை நாடாவை காணவில்லை” ரீதியிலான கண்துடைப்பு வழக்கு - முடிந்தால் யூ எஸ் ஸ்டேட் டிப்பார்ட்மெண்ட் சொன்னதன் அடிப்படையில் அல்லது நிமலராஜன் கொலைக்கு டக்லஸ் மீது வழக்கு போட சொல்லுங்கள் உங்கள் அனுர மஹானை. மாட்டார் - ஏன் என்றால் அப்படி செய்தால் இனவாதத்தின் கைக்கூலியை காட்டி கொடுப்பதாகிவிடும்.
-
யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்
பால்காவடி…பன்னீர்காவடி…புஷ்பகாவடி…. பெண்ணுங்க எல்லாம் தூக்கி வந்தோம்… அனுர காவடி. ஐ ஆம் வெய்ட்டிங் மை சன்…. பதவிகாலம் முடியும் போது அனுர அப்படி என்னத்தை தமிழருக்கு அவித்து கொட்டிவிடுவார் என பார்க்கலாம்…. அசோக்….இந்த நாள உன்(ங்க) காலண்டர்ல குறித்துக்கோ😂. ஏன் என்றால் வேறு எவருக்கும் இப்படி முன்னாள் புலிவால்கள் யாழில் காவடி எடுத்ததில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந் வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு..................... சில கைச்சுகள் பிடிப்பது சிரமம் தலைவரே நேற்று வெஸ்சின்டீஸ் வீரரும் ஒரு கைச்சை விட்டார்................. கிரிக்கேட்டில் கைச் முக்கியம்............. கேரன் போலாட் சுரேஸ் ரெயினா ரவெந்திர ஜடேயா இவர்கள் கைச் பிடிப்பதில் கில்லிகள்.....................
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
நன்றி தம்பி
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சுப்பர் சகோ சொல்ல வார்த்தைகள் இல்லை போராட்டத்தை வியாபாரத்துடன் ஒப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அந்த சிறிய லாபத்தை தந்தவுடன் நாம் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து சொத்துக்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற குட்டை மறைத்து விட்டீர்கள். ஆகா ஓகோ....- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியூசிலாந்து அடிக்கினம் என்று பார்த்தால் உடனே விக்கட் விழுது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரஷீட்கான் ஒரு நல்ல காட்சை நழுவவிட்டுவிட்டார் .......!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இப்பொழுது போட்டி முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. மூன்றாவது விக்கட் விழுந்துள்ளது. நியூசிலாந்து என்ன செய்யப் போகிறார்கள்.- `தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!
தகவலுக்கு நன்றி kadancha ........! 👍- கருத்து படங்கள்
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பீன் அலன் வந்த கையோட அவுட் ஆகி வெளிய போய் விட்டார்.................- தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்
மக்களால்... நிராகரிக்கப் பட்ட, "பின் கதவு" சுமந்திரனுக்கு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்... என்ன அலுவல் ? நாடாளுமன்றத்துக்குள்... "காலடி" எடுத்து வைக்க வேண்டாம் என்று தானே.. தமிழ் மக்கள் இவரை, வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். 😂 இதற்குப் பின்பும்... "நாலுகால் பிராணி" மாதிரி, நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு, நாடாளுமன்றத்துக்குள் போக... வெட்கம், ரோசம், மானம்,, எதுவுமே இல்லையா? 🤓 சுத்துமாத்து சுமந்திரனுக்கு.. தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பதவியை, மத்திய குழு வழங்கவே இல்லை. வைத்தியர் சத்தியமூர்த்தியின் பதவியை அடாத்தாக எடுத்து... பதில் செயலாளர் என்று ஆரம்பத்தில் சுத்துமாத்து விட்டு, இப்போ... தமிழரசு கட்சியின் செயலாளர் என்று, தனக்குத்தானே "லேபிள்" ஒட்டிக் கொண்டு திரியும், இந்தக் குழப்பவாதிக்கு... தமிழ் மக்கள், விரைவில் பாடம் படிப்பிப்பார்கள். இந்த மனிதன் செய்யும்... "நரக" வேலைகளால், தமிழ் மக்களின் முக்கியமான பல விடயங்கள் மழுங்கடிக்கப் பட்டுக் கொண்டிருப்பது... இந்தப் "பைத்தியக்காரனுக்கு" இன்னும் விளங்கவில்லையா.- இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
சொல்லுறது புரியாமல் விட்டால் அப்படி தான் இருக்கும். 😂 உங்களுக்கு இனா ஈயன்னக்கு அங்கால கற்பிக்கும் கற்பித்தல் திறமை எனக்கில்லை.- Today
- டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை.
டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை. டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். TikTok மீதான விசாரணையின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், செயலியில் உள்ள சில முக்கிய அம்சங்கள் போதைப்பொருளைப் போல பயனர்களை அடிமையாக்குவதை ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக எல்லையற்ற ஸ்க்ரோல் (Infinite Scroll) , தானாக இயங்கும் காணொளிகள் (Autoplay), புஷ் அறிவிப்புகள் (Push Notifications), தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை வழிமுறை (Algorithms), இவை சிறுவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இது டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) மீறும் செயல் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. 2024 பெப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட சில தரவுகளை ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் தோமஸ் ரெக்னியர் (Thomas Regnier) மேற்கோள் காட்டினார். 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் நள்ளிரவுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமாக TikTok உள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 7 சதவீதமானோர் நாளொன்றுக்கு 4 முதல் 5 மணிநேரம் வரை இந்தச் செயலியில் செலவிடுகின்றனர். “TikTok தனது வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்து சிறுவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்பத் தலைவர் ஹென்னா விர்க்குனென் (Henna Virkkunen) தெரிவித்துள்ளார். இதேவேளை, விதிகளை மீறும் பட்சத்தில், TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ (ByteDance) இன் உலகளாவிய வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் அச்சுறுத்தியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகளை முற்றாக மறுத்துள்ள TikTok செய்தித் தொடர்பாளர், “ஒன்றியத்தின் இந்த ஆரம்ப முடிவுகள் எமது தளத்தைப் பற்றிய தவறான மற்றும் தகுதியற்ற சித்தரிப்பாகும். இதனைச் சவாலுக்கு உட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1463654- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆட்டங்கண்டது நியுசிலாந்து. அடுத்தடுத்த இரண்டு விக்கட்டுகள். அதுவும் அடித்தாடக்கூடிய இருவர். ஆப்கானிஸ்தானின் வாய்ப்புகள் பிரகாசமாயுள்ளது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சென்றமாதம் இந்தியாவில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 88 ஓட்டங்களை பெற்றார்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அப்கானிஸ்தான் வெல்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது போலவே உள்ளது, நியுசிலாந்திற்கு இது ஒரு கடினமான இலக்கு, ஆனால் நியுசிலாந்தில் நம்பிக்கையுள்ளது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
182 ஓட்டங்கள். நியுசிலாந்துக்கு இது பெரிய ஓட்டம். அவர்கள் 180க்கு மேல் துரத்தியதில்லை. ஆப்கானிஸ்தானைத் தெரிவு செய்த அவ்விருவரும் மகிழ்ந்திருப்பார்கள்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மைதானத்தில் தமிழ் பாட்டுகள் தூள் பறக்குது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆப்கானிஸ்தான் நல்ல ஓட்டம் அடிக்கப் போகுது. நியுசிலாந்து நிலைமை கவலைக்கிடம் போல.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த பி பி எல்லில் காட்டடி அடித்தார், இவரது முதல் சர்வதேச போட்டி அவுஸ்ரேலியாவுடனே ஆரம்பமாகியிருந்தது, அப்போதே ஸ்ராக்கின் புதிய பந்தினை இறங்கி வந்து எல்லைக்கோட்டிற்கு முதலாவது பந்தையே தூக்கி அடித்தார், அது ஒரு நாள் ஆட்டம் என நினைக்கிறேன் வேகமான அவரது ஓட்டம் நியுசிலாந்திற்கு போட்டியினை வெல்ல உதவியிருந்தது, அதன் பின்னர் காணாமல் போய்விட்டார்.- தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்
இவர் யாருடன் கருது மோதல் இல்லாமல் இருந்திருக்கிறார்? இவரை கட்சிக்குள் நுழைத்த சம்பந்தருடனேயே முரண்பட்டிருக்கிறார்.- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ஹெட்மயர் அதிரடி அரைச் சதம், ஷெப்பர்ட் ஹெட்-ட்ரிக்குடன் 5 விக்கெட் குவியல்; மேற்கிந்தியத் தீவுகள் 35 ஓட்டங்களால் வெற்றி Published By: Vishnu 07 Feb, 2026 | 07:37 PM (நெவில் அன்தனி) மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்ற சி குழுவுக்கான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஷிம்ரன் ஹெட்மயர் குவித்த அதிரடி அரைச் சதம், ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்த ஹெட்-ட்ரிக் என்பன மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிபெறச் செய்தன. இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு ஸ்கொட்லாந்து தகுதிபெற்றிருக்கவில்லை. ஆனால், இந்தியாவில் தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்து பங்களாதேஷ் விலகிக்கொண்டதால் பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்து சி குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டது. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஸ்கொட்லாந்து ஓரளவு திறமையை வெளிப்படுத்தியது. இன்றயை போட்டியில் முதலில் துடப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்ளைப் பெற்றது. ப்றெண்டன் கிங் (35), அணித் தலைவர் ஷாய் ஹோப் (19) ஆகிய இருவரும் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர். ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 64 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் ரோவ்மன் பவல் 24 ஓட்டங்களையும் ஷேர்பெய்ன் ரதர்பர்ட் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்றட் கியூரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சபியான் ஷெரிப், ஒலிவர் டேவிட்சன், மைக்கல் லீஸ்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (42), டொம் ப்றூஸ் (35) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால், ரிச்சி பெறிங்டன் உட்பட கடைசி 7 விக்கெட்கள் வெறும் 32 ஓட்டங்ளுக்கு சரிந்ததால் ஸ்கொட்லாந்து தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் அவர்கள் இருவரைவிட ஜோர்ஜ் மன்சே (19), மார்க் வொட் (15), மெத்யூ க்ரொஸ் (11) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதலாவது ஹெட் - ட்ரிக்கையும் முதலாவது 5 விக்கெட் குவியலையும் ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்து பலத்த பாராட்டைப் பெற்றார். அத்துடன் அவர் ஒரே ஓவரில் நால்வரை ஆட்டம் இழக்கச் செய்தார். 3 ஓவர்கள் பந்துவீசிய ரொமாரியோ ஷெப்பர்ட் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான ஜேசன் ஹோல்டர் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷிம்ரன் ஹெட்மயர் https://www.virakesari.lk/article/238095 அமெரிக்காவுடனான போட்டியில் அரைச் சதம் குவித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டு வெற்றிக்கு வித்திட்ட சூரியகுமார் யாதவ் Published By: Vishnu 07 Feb, 2026 | 11:33 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) இரவு நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் சூரியகுமார் யாதவ் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. ஆனால், இந்த மொத்த எண்ணிக்கையை இந்தியா இலகுவாக அடையவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சுப்பர் ஓவரில் ஐக்கிய அமெரிக்கா வீழ்த்தியது போன்று இந்தியாவும் எதிர்நோக்குமோ என்ற ஒரு நிலை இந்தப் போட்டியில் காணப்பட்டது. இப் போட்டியின் 13ஆவது ஓவரில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்ற பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது. அதிரடிக்கு பெயர்பெற்ற அபிஷேக் ஷர்மா (0), இஷான் கிஷான் (20), திலக் வர்மா (25), ஷிவம் டுபே (0), ரின்கு சிங் (6), ஹார்திக் பாண்டியா (5) ஆகிய ஆறு பேரும் ஆட்டம் இழந்திருந்தனர். இதன் காரணமாக இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக அமெரிக்கா விளங்கியது. ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் மறு பக்கத்தில் சூரியகுமார் யாதவ் தலைவருக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுத்தார். ஆரம்பத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்துகொண்ட பின்னர் அதிரடியில் இறங்கினார். 13ஆவது ஓவர் நிறைவில் 22 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்றிருந்த யாதவ், 20 ஓவர்கள் நிறைவில் அடுத்த 27 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்று 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இதில் 10 பவுண்டறிகளும் 4 சிக்ஸ்களும் அடங்கி இருந்தன. இதனிடையே 14 ஓட்டங்களைப் பெற்ற அக்சார் பட்டேலுடன் 8ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களை சூரியகுமார் யாதவ் பகிர்ந்திருந்தார். பந்துவீச்சில் ஷெட்லி வன் ஷோக்வைக் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹர்மீத் சிங் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் மத்திய வரிசையில் மிலிந்த் குமார் (34), சஞ்சய் கிரிஷ்ணமூர்த்தி (37), ஷுபம் ரஞ்சேன் (37) ஆகிய மூவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். மிலிந்த் குமார், சஞ்சய் கிரிஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டமானது முழு போட்டியிலும் சிறந்த இணைப்பாட்டமாக பதிவானது. எனினும் அமெரிக்க துடுப்பெடுத்தாட்டதில் மற்றைய 8 பேரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. பந்துவீச்சில் மொஹம்மத் சிராஜ் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சூரியகுமார் யாதவ் https://www.virakesari.lk/article/238097 - “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
Important Information
By using this site, you agree to our Terms of Use.