Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. சாதி மத வேறுபாடுகளை வளர்த்து அரசியல் செய்யபடுகின்றது. அதில் உள்ள பெண்கள் வேட்பாளர்களை பார்த்தால் இஸ்லாமி மதத்தை பின்பற்றுகின்ற தமிழர்களாக தெரியவில்லை அரபு அடிமை பெண்கள் மாதிரி தெரிகின்றது. சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் கிரிக்கட் விளையாட்டுபார்க்க வந்த முஸ்லிம் மதத்தை பின்பற்றுகின்ற பாகிஸ்தான் பெண்களை காணொளியில் பார்த்தேன் அவர்கள் அப்படி இருக்கவில்லை.
  3. இன்றைய முதலாவது போட்டி மேற்கு இந்திய அணி மற்றும் தென்னாபிரிக்கா அணி மோடி மைதானத்தில் மோதுகின்றன, 200 ஓட்டங்களுக்கு மேலான ஓட்டத்தினை இந்த போட்டியில் நிச்சயமாக எதிர்பார்க்கலாம், பகல போட்டியாக நடைபெறும் போட்டி என்பதால் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடும். ஆடுகளம் சிகப்பு நிற மண் என கிரிக் இன்போ கூறுகிறது, ஆரம்ப ஓவர்கள் மிக சிரமமாக வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும், ஆரம்ப ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை இழக்காமல் இருக்கும் அணி ஒரு பெரிய ஓட்டத்தினை எடுக்க வாய்ப்புள்ளது. சிகப்பு மண் சுழலுக்கும் உதவும் ஆனால் தென்னாபிரிக்கா ஒரு முழுநேர சுழலுடனேயே வருவார்கள் கடந்த போடியில் விளையாடிவர்களே இந்த போட்டியிலும் கலந்து கொள்ளக்கூடும். இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு எந்த அணிக்கு என கூறமுடியாத வகையில் மிகவும் இறுக்கமான பலம் கொண்ட அணியாக இருந்தாலும் தென்னாபிரிக்காவின் திட்டமிடலுக்காக தென்னாபிரிக்கா வெல்லும் என கருதுகிறேன். இரண்டாவது போட்டி சென்னையில் சிம்ப்பாவேயிற்கு எதிராக இந்தியா மோதுகிறது சஞ்சு சாம்சன் விளையாடுகிறார் எனவும் ரிங்கு சிங்கு சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை என கூறப்படுகிறது, கிரிக் இன்போ ரிங்கு அல்லது திலக் என குறிப்பிடுகிறது, மற்றும் ஒரு மாற்றம் வலது ஆதிக்கம் கொண்ட சிம்பாவேயிற்கெதிராக சுந்தருக்கு பதிலாக இடது கை அகசர் மீண்டும் அணியில் இணைகிறார் என கூறப்படுகிறது. இரண்டாவது போட்டி யார் வெல்வார்கள் என்பதற்கு கேள்விக்கே இடமில்லை, ஆனால் சிம்பாவே கொஞ்சமாவது முயற்சி செய்து போட்டியினை சுவாரசியமாக்க வேண்டும், இலங்கை அணி போல அடுத்தடுத்து ஒரு மோசமான தோல்வியினை கொடுக்கும் போட்டியாக இல்லாமல் இரசிகர்களு ஒரு சிறந்த போட்டியினை கொடுக்க முன்வரவேண்டும். பையனின் கருத்தான சஞ்சு சாம்சனை அணியில் இணைக்கவேண்டும் என்ற கருத்தினை இந்திய தெரிவுக்குழுவும் காது கொடுத்து கேட்டுள்ளது போல இருக்கின்றது, ஆனால் அபிசேக்கினை நீக்கவில்லை, ரிங்கு சோந்த காரணத்திற்காக இன்றைய போட்டியில் கலந்து கொள்ளமுடியாமையால் அந்த இடத்திற்கு சஞ்சுவை இந்திய தெரிவுக்குழு தேர்வு செய்துள்ளதாக கூறுகிறார்கள்.
  4. வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை! ஏனென்றால் தெரிவுகள் அப்படி!!
  5. எளிமை நேர்மைக்கு முன்னுதாரணமாக வாழ்ந்த தலைவராக அறிந்து கொள்ள முடிகின்றது ஆழ்ந்த இரங்கல் 😢
  6. புலிகளின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவே சுரேஸ் சலே கைது விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் ஆகவே புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இது முறையற்றது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (25) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விடுதலை புலிகள் அமைப்பை அழிப்பதற்கு இராணுவ வீரனாக சுரேஷ் சலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.அதன் பின்னர் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக பதவி வகித்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும், பிரிவினைவாத ஆதரவாளர்கள் உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ளார்கள்.அவர்கள் சுரேஷ் சலே மீது வெறுப்புக் கொண்டு அவரை பழிவாங்குவதற்கு எதிர்பார்த்திருந்தார்கள்.அதற்காகவே அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பளம் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் -04 நிறுவனம் வெளிப்படுத்திய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் சுரேஷ் சலே மற்றும் பிள்ளையானை கைது செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட இமாம் குழுவின் அறிக்கையால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நோக்கம் வெற்றிப்பெறவில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியை பகிரங்கப்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டார். குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் குறிப்பிட்டார்கள். ஆனால் குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையானிடம் விசாரணை அதிகாரிகள் ஏதும் கேட்கவில்லை. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியான சுரேஷ் சலே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் செயற்படாகவும் இதனை பார்க்கலாம் என்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/புலிகளின்-ஆதரவாளர்களை-திருப்திப்படுத்தவே-சுரேஸ்-சலே-கைது/175-373046
  7. Today
  8. புத்தரே ....எல்லாமே கண்டாவளை கொத்துரொட்டிப் பாலம் போலதான் இருக்கும் ...இது அனுர அம்மானுக்கும் தெரியும் ...காசு வேணுமே ...4 பில்லியன் ரூபாவென்றால் சும்மாவா
  9. யாரைய்யா இவர்? கால்களிற்கு மரக்கட்டையில் பாதவணி மாட்டியுள்ளார். ஆனால், எல்லா இடங்களிற்கும் உலங்குவானூர்தியில் உலவுகின்றார்.
  10. இந்திய கப்பல் வருகின்றது இந்திய காவிகளும் வருகின்றனர் க‌ப்பல் வருவது நட்புக்காம் காவி வருவது சுற்றுலாவுக்காம் அனுரா அம்மான் உன் காவி நண்பர்கள் எங்கே உசுப்பி விடும் ஐசே,நீர் உசுப்பாவிடில் ரில்வின் உசுப்பிவிடுவார்
  11. உறவுகளே ,குடைக்கு பின்னால் தெரியும் மொழி சிங்களமா அல்லது தெலுங்கா?
  12. தெரியவில்லை! ஜக்கம்மாவினை வைத்து கொஞ்சம் அதிகமாக கலாய்த்துவிட்டோமோ என ஒரு புறம் யோசனையாக இருந்தாலும், பையன் இதனை ஒரு விடயமாக எடுக்கும் நபர் இல்லை என்று நினைத்தாலும் பையன் திடீரென காணாமல் போயுள்ள நிலையில் கோசான் வேறு ஜக்கம்மாவிலிருந்து சர்வதேச பயங்கரவாதியாக மாற்றியதால் உண்மையாக தலைமறைவாகிவிட்டாரோ தெரியவில்லை. ஆனால் அவர் இல்லாத யாழ்கள போட்டி நினைத்து கூட பார்க்கமுடியவில்லை! ஏதாவது சொற்குற்றம் பொருள் குற்றமிருந்தால் பொறுத்து மன்னித்து மீண்டும் களத்திற்கு வாருங்கள் பையன், அல்லது வேலைப்பழு காரணமாக வராமல் இருந்தால் ஒரு வார்த்தை பதிந்து விட்டாவது செல்லுங்கள்.
  13. தோல்வியுற்ற சிறிலங்கா தீவில் இதுவும் நடக்கும் இதைவிட கேவலமான விடயங்களும் நடக்கும் ,அனுரா அம்மான் வந்தால் என்ன மைத்திரி மாமா ஆட்சி அமைத்தால் என்ன ? அனுரா அம்மான் ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய காரணம் மகிந்தாவும் கோத்தாவும் சிறிலங்காவின் இனவெறி இராணுவமும் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை
  14. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பிரதான மூளையாக செயற்பட்ட சுரேஷ் சாலே கைதுசெய்யப்பட்டுள்ளார்! கம்மன்பிலவின் சட்டத்தரணி சட்டை தயாரில்லாததாதாலோ அல்லது தனது இனம் என்பதாலோ அலி சப்ரி விரைந்தோடியுள்ளார். பயங்கரவாத சட்டம் இன்னும் நடைமுறையிலிருப்பதையும், அது எவ்வாறு தமிழருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது என்பதையும் மறந்து விட்டார் அலி சப்ரி தனது வாதத்தில். விமான நிலையத்தில் மிகவும் ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டும், நாமல் ஏதாவது எதிர்ப்பு அணி, மக்கள் அணி என்று நாடகமாடுவார், நாங்களும் பாப்போம் அவற்றை.
  15. அது ஒரு கனாக்காலம் ...அண்ணன்மாரோடை போனாலும் ..அதிலை ஒரு யூ ரேண் அடித்துப் பார்ப்பதில் ஒரு தனி சந்தோசம் ..அண்ணன்டை ஆபீசு விக்க்டோரியப் பாக் பக்கத்திலை ....சிலவேளை மதியச் சாப்பாடு கொடுக்கப் போனால் ...வீட்டைவர அண்ணன் நிற்பார்
  16. எழுதலாம்….சில தனிபட்ட தகவல்களை தவிர்த்து விட்டு எழுத வேண்டும்…. அத்தோட @suvy அண்ணா தனது 18+ பாணியை நான் கையில் எடுப்பதாக குறைபடவும் கூடும்😂
  17. உலக வெப்பமாதல் மூலம் அனர்தங்கள் வருவது மட்டும் அல்ல. அவை இடம்மாறவும் செய்யும். நான் அறிய தமிழ் நாட்டில் 80,90,00,10 இல் முன்னர் இருந்தது போல் இப்போ கொஞ்ச காலம் வரட்சி இல்லை. அதேபோல் யூகேயில் முன்னரை விட மழை குறிப்பாக ஒரு சிறிய நேரத்தில் அடித்து பெய் அடை மழை, திடீர்வெள்ளம் மிக அதிகம். முன்னர் யாழ்களத்தில் பசுமைவாத கருத்துக்களை, இயற்கை அழிவை, அதனால் வரும் உலக வெப்பமாதலை பற்றி எல்லாம் எழுதியவர் நீங்கள். ஆனால் அரசியலில் நீங்கள் எப்போதும், புட்டின் டிரம்ப் போன்ற புவிவெப்பமாதலை ஏற்காதோர் பக்கம். உங்களில் இருந்த இந்த உள்முரணை நான் முன்பே அவதானித்துள்ளேன். இந்த உள்முரணில் டிரம்ப், புட்டின் பக்கம் வெற்றி பெற்றது என எண்ணுகிறேன். நீங்கள் மட்டும் அல்ல ஈயூ, யூகே எங்குமே இப்போ புவி வெப்பமாதலை பேசுவது பேஷன் இல்லை. நாம் பார்க்கும் ஊடகங்கள் கூட இப்படி ஒரு பின்வாங்கலுக்கு எம்மை பதப்படுத்துகிறன என நான் உணர்கிறேன். எனது நிலைப்பாடு புவிவெப்பமாதல் உண்மை. அதில் கணிசமான பாதிப்பு வரும் என்பதும் உண்மை. ஆனால் இதை தடுக்க மனிதர் ஒன்றுபட போவதில்லை. அமெரிக்கா, சீனாவை சாட்ட, சீனா இந்தியாவை காட்ட, இந்தியா பிரேசிலை காட்ட, பிரேசில் ஐரோப்பாவை நோக… காலம் பிந்தி விட்டிருக்கும். பிறகு வெப்பமான புவியில் எப்படி வாழ்வது என சிந்திப்பார்கள். நான் இருக்க போவதில்லை… So I don’t care that much 😂
  18. எழுதுங்க எழுதுங்க ஆவலாக இருக்கிறோம். வடக்கில் குக்கிராமத்தில் இருந்து போனநேரம் திடீரென கிளுகிளுப்பான காட்சிகளைப் பார்க்க அட இதை விட்டுவிட்டு வெளிநாடா என்ற மாதிரி இருந்தது. இதே மாதிரியே விக்டோரியா பார்க்கும். அவர்கள் பார்க்கிறவர்களைப் பற்றி கவலையே இல்லாமல் தமது கருமத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
  19. அதே போல் இசை உரிமை தயாரிப்பாளருக்கு என ஒப்பந்தம் போட்டு விட்டால் அதன் உரிமை தயாரிப்பாளர் அல்லது அவரிடம் உரிமையை வாங்கியோருக்கே. அதை தொடர்ந்தும் உரிமை கோருவது, ராயல்டியை தனக்கு தருமாறு கேட்பது, இன்னொருவர் சொத்தை கொள்ளை அடிப்பது. களவு. இளையராஜாவால் யாரும் தெருவுக்கு வந்ததாக நான் கூறவில்லை. ஆனால் அவர் இசை அமைத்து, இசையும், படமும் எடுபடாமல் போன பல படங்கள் உள்ளன. ஆனாலும் அவர் ஒரு அதி உச்ச கலைஞன்…. சிம்பொனி ஹால்களை வாடகைக்கு எடுத்து தனக்குதானே விசிறிக் கொள்ள தேவையில்லாத ஒரு இசை ஆளுமை…(இது பற்றி சிம்பொனி வந்த நேரம் எழுதினேன்). ஆனால் வெள்ளந்தி மனிதர் அல்ல. சராசரியான ஒரு நல்ல மனிதர் கூட அல்ல. புகழாசை, பணத்தாசை, பேராசை, பதவியாசை தன்னை விட வாழ்வில் கீழே உள்ளோரை துரும்பென நடத்தும், ஒரு ஈகோஜிஸ்ட்தான் ராஜா. சின்னதாயி மகன் டேனியல் ரொம்ம சின்னத்தனமானவர் ஆனால் அவரின் இசை வல்லமை இமயம் தாண்டி பெரியது.
  20. இந்த செய்தியில் இருந்து ....நீதி மறுப்பு தமிழனுக்கு மட்டும்தான் என்று தெரிகிறது ....தற்கொலை குண்டுதாரிகள் ...அவர்கள் என்னவழியில் சொத்து சேர்த்தார்கள் என்பது கேள்விக்குறியே ...ஆனால் இலங்கையின் நீதிதுறை சொத்தை உயிருடன் உள்ள சகோதரனிடம் ஒப்படைக்க உத்தரவிடுகிறது ...அனுர ஆட்சியா ..இல்லை வளமைபோல் பெரும்பான்மை இன ஆட்சியா...
  21. வெள்ளவத்தை இப்ப வெளிச்சவத்தையாய் இருபதைக் கண்டு கண்ணீர் தாரையாக ஓட விடுதில் நானும் ஒருவன் அய்யா....
  22. வணக்கம் வாருங்கள் ... இப்பவும் இப்படி தமிழ்விளக்கம் கொடுக்கும் யாழ் தமிழரை காண்பதில் அதி சந்தோசம்
  23. 🤣............. இன்று நடந்த இலங்கை - நியூசிலாந்து போட்டியில் நான் ஆப்கானை தெரிவு செய்ததால் நாளைய போட்டியில் ஆப்கானை தெரிவு செய்ய முடியாமல் போய் விட்டது, அண்ணா................... ஆப்கான் நல்ல அணி தான்.......... அதற்காக அவர்கள் தினமும் விளையாட முடியுமா......................🤣. சகுனியின் நாடு தான் இன்றைய ஆப்கான், அன்றைய காந்தாரம்............. நான் இந்த வழியில் கொஞ்சம் யோசித்திருக்கலாமோ என்று இப்ப தோன்றுகின்றது.................🤣.
  24. கனிந்ததொரு சிறுபொழுதில் கணநேர ஸ்பரிசத்தில் மலர்ந்து சிரித்தன இரு மொட்டுகள் கொள்ளை அழகுடன் பூரணியோடு பிள்ளைகளுமாய் கட்டில் நிறைந்திட - இன்று மன்னவன் ரகு படுப்பதோ ஹாலில் கிடைக்கும் செற்றியில் இது வீட்டுக்கு வீடு வாசல்படிதான் ....எனினும் கிடைக்கும் இடைவெளியில்... அந்த சிலுசிலுப்பான நேரங்கள் ...சொற்கம்தானே சுவியர் ...இதிலை கவித்திறனைவிட ...உங்கள் ஆத்மார்ந்த அனுபவிப்பு ...கவிதையை உயிரோட்டமாக்குகிறது
  25. இங்கே ஜேர்மனியில் 20,30 வருடங்களுக்கு முந்திய செய்திகளை திகதிகளுக்கேற்ப தினசரி மறு ஒளிபரப்பு செய்வார்கள்.அப்போது அன்றைய வானிலை அறிவுப்பும் இருக்கும். அதை பார்த்த அளவில் பாரிய மாற்றம் ஏதுமில்லை. இயற்கை அழிவுகள் என்றும் எங்கும் உண்டு. உதாரணத்திற்கு 70களில் கிழக்கு மாகாணத்தில் வந்த சூறாவளி அனர்த்தங்கள் வந்த போது யாரும் உலக வெப்பமாவதலை பற்றி பேசவில்லை. ஒரு காலத்தில் பங்களாதேசில் அடிக்கடி சூறாவளிகள் வந்து அழித்தொழிக்கும். இன்று அது அங்கில்லை? ஏன்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.