All Activity
- Past hour
-
அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம்
அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம் Mar 29, 2026 - 11:30 AM அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இது முன்னதாக மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற "மன்னர்கள் வேண்டாம்" போராட்டத்தின் மூன்றாம் கட்டத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. ஈரானுடனான போர், கூட்டாட்சி குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த கொள்கைகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது போராட்டக்காரர்கள், ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தி, அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறும் கைது செய்யுமாறும் கோஷங்களை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmnbcna85000f356puzf7zq5a
-
-
ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயார்
ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயார் Mar 29, 2026 - 08:02 AM ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக 'வொஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது பல வாரங்களாக நீடிக்கக்கூடிய ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக அமையுமென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான போர்த் திட்டங்கள் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகத்தினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி தனது அனுமதியை வழங்குவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, சுமார் 4,000 மெரைன் படைவீரர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், அமெரிக்காவின் 82ஆவது வான்வழிப் படையின் பாரசூட் படைவீரர்களும் இந்த இராணுவ நடவடிக்கைக்குத் தயாராக உள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnb4kgfl0007356pb4v79e4v
-
மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது
மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது. ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக ஹட்டன் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமாகும். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த மோதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் பாடசாலையிலேயே சமரசம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாயார் நேற்று (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த மாணவன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் இன்று (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அதன் பின்னர் நீதவான் ஊடாக அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1470306
-
கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை
கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை. வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி ((GPS)) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். வடக்கில் சட்டரீதியற்ற முறையில் வள சுரண்டல்கள் இடம்பெற்று வருகிறது. அதனால் பல உயிர்கள் கூட காவு வாங்கப்பட்டுள்ளது. கனிய வள கடத்தல்களால் பல விபத்துக்கள் கூட சம்பவித்துள்ளன. இவ்வாறான உயிர்களை காவு வாங்கும் செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கனிய வள திருட்டுக்கள் , சுரண்டல்களை கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமாக கனிய வளங்களை கொண்டு செல்வோர் தொடர்பில் மக்கள் அறிந்து அறிவிக்க முடியும் மக்களின் பங்களிப்பு தான் இந்த விடயத்தில் மிக முக்கியம். எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் எண்ணிய நடைமுறைகள் ஊடாகவே கனிய வள விநியோகம் ஒழுங்குபடுத்தப்படும். அதனூடாக சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார். https://athavannews.com/2026/1470309
-
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
மணல் மாஃபியாக்களுக்கு எச்சரிக்கை. வடக்கிலுள்ள மணல் மாஃபியாக்களுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த கால ஆட்சியாளர்களை ஏமாற்றியது போல, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம். தவறு செய்யும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். வட மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: ‘மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 6 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரைக் கூட அவர்கள் பறித்துள்ளனர். இது ‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த’ கதையாக, பொலிஸாரின் உயிரையே பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மணல் விநியோகத்தை முறைப்படுத்தி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதன் ஊடாக, ஒரு கியூப் மணலை 7, 500 ரூபாவுக்கு வழங்க முடியும். அதன்படி ஒரு டிப்பர் மணலை 23, 000 ரூபாவுக்குப் பெறலாம். யாழ்ப்பாணத்திற்கு அதனைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய செலவுகளைக் கணித்தால், சுமார் 55, 000 முதல் 65, 000 ரூபாவுக்குள் மணலை விநியோகிக்க முடியும். ஆனால் சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மாஃபியாக்கள், ஒரு டிப்பர் மணலை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வரை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறான மாஃபியாக்களின் பின்னால் அரசியல்வாதிகளும் பொலிஸாரும் இருப்பதை நாம் அறிவோம். எமது அரசாங்கத்திடம் இத்தகைய விளையாட்டுகள் செல்லுபடியாகாது. அத்துடன், பொலிஸாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிப்பதாக இருக்கக் கூடாது; அது மாஃபியாக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக அமைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2026/1470297
- Today
-
கருத்து படங்கள்
- உலக வணிகம் டாலரை விட்டு போகுமா?
ஈழப்பிரியன் started following உலக வணிகம் டாலரை விட்டு போகுமா?- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றில் கேதீஸ்வரன் சாட்சியம்!
இவரின் வாயால் ஒருநாள் மாட்டுவார் என எதிர்பார்த்திருந்தேன். ஒரு வைத்தியராகவும் சரியாக பணியாற்ற முடியவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களுக்காக செயற்பட முடியவில்லை, மொத்தத்தில் ஒரு பண்பாளனாக பேசவும் தெரியவில்லை. அவர் மக்களுக்காக பாராளுமன்றம் போகவில்லை, வைத்தியர் சத்தியமூர்த்தியை பாழிவாங்கப்போய் தன்னை தாழ்த்திக்கொள்கிறார். எத்தனை தடவை போலீஸ் நிலையம் அழைக்கப்பட்டிருக்கிறார், நீதிமன்றம் சென்றிருக்கிறார்? அத்தனையும் அவரது பிழையான தனி நடத்தைக்காகவே. இவர் அடுத்த சிலோன் ட்ரம்ப். ஒருநாளைக்கு நாமலை புகழ்ந்து அடுத்த ஜனாதிபதி என்பார், இன்னொருநாள் சஜித்துக்கு பின்னால் ஓடுவார், சுயமாக தன் இருப்பை தக்க வைக்க முடியாத கோமாளி, இவருக்கு வாக்கு போட்ட மக்கள் வெட்க்கித் தலை குனிய வேண்டும். இதில, நடிகர் விஜய்க்கு வக்காலத்து வேறு.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சினிமாவுக்கு கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல்- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
“நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது- தமிழனின் சிற்பக் கலை.
வரதராஜ பெருமாள் - காஞ்சிபுரம்- உணவு செய்முறையை ரசிப்போம் !
கார சாரமான நெல்லூர் (ஆந்திரா) வெங்காய சட்னி- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓரிடம் உன்னிடம் ( அந்த கால கிளுகிளுப்பு பாடல்) படம் : வீட்டுக்கு வந்த மருமகள் (1973) இசை: சங்கர் கணேஷ் பாடியோர்: TMS & வாணி ஜெயராம் வரிகள்: கண்ணதாசன்- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- நான் ரசித்த விளம்பரம் .
உன்ர தமிழ்ல தீய வைக்க..- மலரும் நினைவுகள் ..
உங்களில் யாரெல்லாம் பரீட்சை அட்டையில் சிரிக்கர் ஒட்டினவை ரெல் மீ?- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம்
இந்தத் தாக்குதலில்… பல அமெரிக்க போர் விமானங்களும் சேதமடைந்ததாக சில செய்திகள் வருகின்றன. அது என்ன…. ஈரான் தாக்கினால் 10 அமெரிக்க படையினர் காயம், மூன்று இஸ்ரேலியருக்கு மூக்கால் இரத்தம் வடிந்தது என்று செய்திகளை போடுகின்றார்கள். 😂 ஒரு வேளை இவர்கள்…‘‘சாகாத வரம்‘‘ பெற்றவர்களோ… 🤣- இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்
பல்முனை தாக்குதல், எந்தப் பெரிய பலசாலியையும் நிலை குலைய செய்யச் கூடிய நிலையை உருவாக்கலாம். அத்துடன்… உறுதிப் படுத்தப் படாத தகவல் ஒன்றின்படி, இஸ்ரேலின் “அயன் டோம்” ஈரானின் ஏவுகணைகளுக்கு முன்பு போல் அல்லாமல் மிகக் குறைந்த அளவிலான எதிர் நடவடிக்கைகளை செய்வதாக கூறுகின்றார்கள். இது… அதன் ஆயுதங்களின் பற்றாக் குறையாக இருக்கலாம் என கூறுகின்றார்கள். உண்மைத் தன்மை தெரியவில்லை.- இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்
இவர்களினால் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?- Yesterday
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
பிரான்ஸில் தமிழர்கள் பிரெஞ்சு அரசியலில் நுழையும் குறிக்கோள் யாது? இதற்கான விடை தெரிந்தால் ???.- பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’
இதே போன்று ஆண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்கவும் ஏதாவது கண்டுபிடித்திருப்பார்களா .........! 🙃 - உலக வணிகம் டாலரை விட்டு போகுமா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.