All Activity
- Past hour
-
Germany இல் உயில் எழுதுவது பற்றி ஆலோசனைகள்
ஜேர்மனியில் சட்டத்தரணி / நொத்தாரிசு மூலம் உயில் எழுதப்படல் வேண்டும் என நினைக்கின்றேன். Dolmetscher மூலம் மொழிபெயர்ப்பு செய்து கை எழுத்து வைக்கப் பட்ட உயில்…… பிற்காலத்தில் பிள்ளைகள் மூலம் ஒரு பிரச்சினை வந்தால்? நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் என்று சொல்ல முடியாது.
- Yesterday
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
போலீசார் சிறிய குறுக்கு வீதிகளிலேயே மறைந்திருந்து கெல்மெட் போடாத உந்துருளி ஓட்டுநர்களிடம் கைலஞ்சம் வாங்குவது வழமை, கொடுத்து செல்வது நம்மவர் வழமை. ஒன்று, நேரமினக்கேடு மற்றது, கொடுக்காவிட்டால் கள்ள கேஸ் போடுவது, போதைப்பொருள் வைத்து கைது செய்வது. இது கள்ளன் போலீஸ் விளையாட்டு. ஒருவராவது நான் தவறு செய்தால் நீதிமன்றுக்கு அனுப்பு நான் அங்கே சரி செய்கிறேன் என்று சொல்வதில்லை, சொன்னாலும் அது நடக்கபோவதுமில்லை. தவறுகளில் இருந்து லஞ்சம் கொடுத்து மீளுவது. நடுராத்திரி லஞ்சம் வாங்குவது சுலபம், இவர்கள் கொடுத்து வேறு பழக்கியிருக்கிறார்கள், நண்பர்களாக பழகி இருக்கிறார்கள். தீயவர் நட்பு இப்படித்தான் முடியும். அவர்கள் தவறு செய்திருந்தால் வாகனத்தை நிறுத்த பல வழிகள் உண்டு. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதில் என்ன பிரச்சனை பொலிஸாருக்கு? எதையோ மறைப்பதற்காக அவரை சுட்டு, மற்றவர்களை அச்சுறுத்தி, ஆதாரங்களை சோடித்து, என்ன வேலை அது? இருபக்கமும் லஞ்சம் பெற்ற கை ஒருநாள் இப்படித்தான் முடியும். எல்லா ஆவணங்களும் கைவசம் வைத்திருப்பவர்களையே மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இந்த வழிப்பறித்திருடர். சில மாதங்களுக்கு முன் தெற்கில் சில இளைஞர் வாகனத்தில் எங்கோ சென்று விட்டு நடுராத்திரி திரும்பிக்கொண்டிருந்த போது போலீசார் அவர்களை இடைமறித்து லஞ்சம் கேட்டிருக்கிறார்கள், அவர்கள் மறுக்கவே போலீசார் வாகனத்தை சோதனையிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள், அவர்களும் சம்மதித்து வாகனத்தில் இருந்து இறங்கி வழி விட்டிருக்கிறார்கள். ஒரு போலீசார் தனது காற்சட்டை பையிலிருந்த போதைப்பொருளை வாகனத்தில் வைத்துவிட்டு கண்டெடுப்பதுபோல் அவர்களை மிரட்டியுள்ளார், அவர்கள் இளைஞர், விடவில்லை, கடைசியில் போலீசார் கைது செய்யப்பட்டு வேலையிழந்தார். நம் ஊரில் மக்களை பயமுறுத்தி இப்படி பல சேட்டைகள் நடந்துள்ளன. போலீசாரை சோதனைக்கு அமர்த்தும்போது போதைப்பொருள், மது பரிசோதனை, உடமையேதும் அவர்கள் வசம் உண்டா என்பதை பரிசோதித்து கடமைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், அவர்கள் உடலில் கமெரா பொருத்தப்படவேண்டும் இல்லையேல் கடமைக்கு அனுமதிக்க கூடாது.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
இந்த திரியை நான் இணைத்ததன் காரணம் இதில் சொல்லப் படுவவை பெருவாரியானவை நிஜம். இதில் சொல்லப்பட்டுள்ள முதல் இரண்டு படிகளில் நான் இருந்து இருக்கிறேன். மற்றும் பெரிய நிதிப்பங்களிப்பாளன். பிரெஞ்சு பொறுப்பாளரிடம் ஒப்படைத்ததும் எமது கடமை மற்றும் பொறுப்பு நிறைவு பெறும். அதற்கு அடுத்த கட்டம் எமக்கு தெரியாது தெரியவும் முடியாது. இதில் மூன்றாவது நிலை பொறுப்பாளர். பிரெஞ்சு பொறுப்பாளர் எவரும் வாழ்க்கை தரத்தில் மிகவும் கடினமான நிலையிலேயே இன்றும் உள்ளனர். எனவே பிரான்ஸை பொறுத்தவரை அவர்களும் இதற்குள் அடங்கமாட்டார்கள். எனவே அதற்கு அடுத்த படிமுறைகளிலையே தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் பிரான்ஸை பொறுத்தவரை தலைவர் எப்பொழுதும் பணத்தை விட்டு வைக்கவில்லை. ஒரு மில்லியன் சேர்க்க முடியும் என்றால் இரண்டு மில்லியன் கேட்பார். அதனால் எப்பொழுதும் கடனும் பொறுப்புக்கூறலும் தான் சுமையாக இருக்கும். இதை நான் இங்கே சொல்வது உண்மையை தேடுபவர்களுக்கு மட்டுமே. செயற்பாட்டாளர்களை கள்ளர்களாக அல்லது தலைவருடன் நின்றவர்களை மக்களிடம் இருந்து அப்புறப்படுத்த தலைகீழாக நிற்பவர்களுக்கானது அல்ல.
-
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.
விஜை அரசியலில் வந்து சாட்டைக்கு தீனி போட்டதுதுதான் கண்ட மிச்சம்.விஜய் பேச்ச முடிந்தவுடன் சாட்டையின் அடுத்த வெளளியீட்டுக்கு எல்லேரும் வெயிற்றிங். சும்மாவே ஆடுற சாட்டைக்கு விஜைக்கு சாட்டையைக் கொடுத்த தற்குறிகள். சாட்டை சலங்கை கட்ட ஆடப் போகிறார்.
-
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.
புலவர் started following சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
காசை சுருட்டியவர்கள் அடைதியாக இருந்து காசை அனுபவிக்க விரும்புகின்றனர் கோஷான் சேயோ பத்த வைத்து எரிய விடுகின்றார் கொள்ளை அடித்தவர்களுக்கு கோவம் பத்தி எரிய போகின்றது 😂- புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
ரஷ்ய செம்பான AFD ஆட்சியை கைபற்றுவது சீமான் வார்த்தையில் சொல்வதானால் வாய்பில்லை ராசா மற்ற ஜனநாய கட்சிகளும் அதனுடன் கூட்டு சேராது உங்கள் தேர்தல் முறையும் அந்த கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் செய்யும் நல்ல விடயம் அந்த கட்சியின் சக்கிவாய்ந்த தலைவி Alice Weidel இப்போ கொஞ்சம் நல்ல மாதிரி சிந்திக்கின்றாவாம் ரஷ்யாவுக்கு விசிட் பண்ண விரும்பிய தனது கட்சி செம்புகளை விமர்சித்துள்ளார் ரஷ்யாவின் எஸ்தோனியா போலந்திற்க்கு எதிரான வான்வெளி மீறல்களை கண்டித்துள்ளார். ரஷ்யா ஒரு ஆக்கிமிப்பு வெறி கொண்ட நாடு தானே- Germany இல் உயில் எழுதுவது பற்றி ஆலோசனைகள்
Germany இல் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனது சொத்து (வீடு, bank இல் இருக்கும் பணம் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு என்று உயில் எழுதி, Dolmetscher மூலம் tranlate செய்து கை எழுத்து போட்டு வைத்து வைத்திருப்பதாக சொன்னாள். இது சாத்தியமா ? இப்படியும் செய்யலாமா?- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
அது போராளிகளுக்கு தான் ஐயனே தெரியும். எனக்கு (பொதுமகன்) உந்த காகம் பொறுக்கின மாதிரி எங்கேனும் கிடைக்கும் கொசுறு தகவல்தான் தெரியும். ஆனால் ஒன்று. வட்டுவாகல் பாலம் விழுந்த பின்னர் அதை மீளக் கைப்பற்ற 13 கடற்கரும்புலிகள் மே 12 ம் திகதி முயன்றனர்; முடிவில் தோற்றுப் போயினர். அவர்களில் ஒருவன் கடற்கரும்புலி கப்டன் ஈகன் (அன்னாரின் உறவினர் முன்னொரு காலத்தில் ஊடகத்திற்கு வழங்கிய தகவல்). இதிலிருந்து அறிவது இவருக்கு தரநிலை வழங்கப்பட்டுள்ளது - என்றாலும் ஒருவரின் தரநிலையை வைத்து ஒக்கத்திற்குமே முடிவெடுக்கேலாது. முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர்களால் தான் முற்றாக நிறுத்தப்பட்ட திகதி தொடர்பான இத்தகவல் வழங்க முடியும். மற்றொன்று, மே மாதம் இரண்டாம் கிழமையோடு - ஏறத்தாழ 10 ம் திகதியோடு - தலைமைச்செயலகத்தின் சிறப்பு ஆளணி அறிக்கை பகுதி செயலற்றுவிட்டது/ நிறுத்தப்பட்டது. எனினும் மற்ற தனியான ஆளணி அறிக்கை பகுதிகள் தொடர்ந்து செயலுறுவாய் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. -- ஓம் அது உண்மை. என்றாலும் எல்லோருக்கும் வழங்கும் பொதுவான தரநிலையே அவர்களுக்கும் வழங்கலாம் என்பது எனது எண்ணம். மாவீரர்களில் புலிகள் வேறுபாடு காட்டியதில்லை. ஒவ்வொரு து. கல்லறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் (லெப். சங்கர் எ சுரேஸ் தவிர்த்து)- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1983 உலகக் கிண்ணத்தில் சிம்பாப்வே அவுஸ்ரேலியாவை வென்று தங்கள் வருகையை உலகுக்கு அறிவித்தார்கள். அதன் பின் எழுந்து வந்த சிம்பாப்வே அணியை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். பிளவர் சகோதர்களின் வருகை அணியை எங்கேயோ கொண்டு போனது. 90களில் அந்த அணி, நெருப்பு அணி. டெஸ்டில் பாகிஸ்தானை வென்றவர்கள். அரசியலால் சின்னாபின்னமான அணி. இப்போதுதான் மெல்ல எழுந்து வருகிறார்கள். இந்த வெற்றி, அவர்களுக்கு மீண்டும் ஒரு உத்வேகம் குடுக்குமா. அந்த 90கள் திரும்பவும் நடக்குமா.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஊக்குவிப்புக்கு நன்றி. அவர்கள் எவ்வாறு இலங்கையின் சுழல்பந்தைச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதில் தெரியும். சுழல் பந்திற்கு தடுமாறுவார்கள் என்றே நினைக்கிறேன். இலங்கை வெல்லும் என்றுதான் நினைக்கிறேன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நன்றி பிரியன்சார் ...பலசாலி நன்றாகத்தான் உதவுவார் ....கடைசியில் பாய்ந்தடித்து முன்னுக்கும் நிற்பார்...பார்த்து சூதானமாக இருங்கோ ( செம்பாட்டனுக்கு நன்றி)- இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!
தெரியவில்லைக் கோசான்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள். மீண்டும் ஒர தடவை பலசாலி என்று நிரூபிக்க முன்வந்த @goshan_che க்குப் பாராட்டுக்கள்.- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 20.12.2025
-
கருத்துப்படம் 19.12.2025
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியனுக்கு பாகிஸ்தான் ரீமை பார்த்தவுடன் அகோரவெறிஏறும் ...அது அநேகமாக வெற்றி அடையவைக்கும் ...சிலவேளை குழப்பியும் அடிக்கும் .. அபிசேக் சர்மாவில் முன்னைய உசாரை காணாவில்லை .. நடிப்போ தெரியாது பாக்கி வீரர்கள் வாய்ச்சவடாலுக்கு குறைவில்லை ..பலதடவை மண்கவ்வினவை மைதான ஆதரவு பாக்கிக்கே கூடவிருக்கும்...மோடி 4 பில்லியன் கொடுத்தாலும் ...நாய்வாலை நிமிர்த்த முடியாது இந்திய அணியின் பாதுகாப்பு கேள்விக்குறியானதே....மிக அண்மையில் நடந்த துப்பாக்கிசூடுகளைப் பார்க்கும்போது ..மைதானப் பாதுகாப்பு கேள்விகுறிதான்...கடவுள்தான் துணை- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் இந்தியாவை வெல்லக் கூடும் இந்தியா சார்பாய் தமிழக வீரர் வருன் சக்கரவத்தி தான் விக்கேட் வேட்டை..............மற்ற இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துக்கு சின்ன அணிக்கள் அடிக்கினம் பாக்கிஸ்தான் மட்டையடி வீரர்கள் நல்ல உசாரா நிக்கினம் நாளையான் போட்டி தான் இதுவரை நடந்த போட்டிகளை விட சிறப்பாக இருக்கும்..............................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு நாளைக்கு கோஷானுக்கு துணையாக பின்வாங்கிலுக்கு போவதற்கு சந்தர்பம் இருக்கு.- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
அது ஒரு நேரான வீதி அல்லைப்பிட்டியைத்தாண்டியிருந்தால் குறுக்குப்பாதைகளுக்குள் விட்டிருக்கலாம். ஆனால்அந்தப்பாதையில் அவர்களைப் பொலிசாருக்குத் சிரமமான வேலை இல்லை.பொலிசார் இந்த இடத்தில்எல்லைமீறி நடந்திருக்கிறார்கள். அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே பொலிசாரின் கடமை. மாறாக துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒரு சிறுவனைக் கொன்று விட்டார்கள்.- என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்?
தெரியாது.சுட்டிக்காட்டியதற்கு நன்றி.நான் லிங்கை அழுத்தும் போது பதிவிட்டவரின் பெயர்தான் எனக்குத் தெரிகிறது.- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
கடைசியாக எந்த திகதி இயக்கத்தால் தரநிலை வழங்கப்பட்டது. மாவீரர் பணிமனை எப்போது கடைசியாக செயல்பட்டது போன்ற தகவல்களை அறிய முடியுமா என பாருங்கள். தளபதிகள் ரமேஸ், சொர்ணம், சூசை போன்றோரை கூட நாம் தரநிலை சொல்ல முடியுமா என்பதை இட்டு நான் பலவாறு சிந்திப்பதுண்டு. அவர்கள் அனைவரும் பிரிகேடியர் தரம் என்பதை மக்களும், வரலாறும் அறியும். ஆனால் - இதை அறிவிக்க தகுதியானோர் எவரும் 2009 மே 19 இன் பின் இப்பூவுலகில் இல்லை.- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
அது தெரியாது ஐயனே ... இல்லை.... அது சொந்த முடிவுகளை எடுக்குமாறு அறிவிக்கப்பட்ட திகதி ... இதன் திகதி எனக்கு தெரியாது ... ஆனால் 13 ம் திகதி எனக்கு தெரிந்த ஒருவர் வீரச்சாவடைந்தார்... ஒரு பொறுப்பாளர்.அவருக்கு கூட தரநிலை புலிகள் வழங்கவில்லை.- தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!
நல்லாட்சி (?) அரசாங்கத்தில் காணாமலாக்கப்பட்டோர் நெருக்கடிகளை நீர்த்து போக செய்யும் நோக்கில் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) ஒன்றை உருவாக்கினார் இவ்வாறு உருவாக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு (OMP) மேஜர் ஜெனரல் பதவி நிலைக்குரிய இராணுவ அதிகாரி உட்பட ஏழு ஆணையாளர்களை நியமித்தார்கள் அதாவது இராணுவத்தின் Legal Department யின் பணிப்பாளர் நாயகமாக கடைமையாற்றிய மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris என்பவர் குறித்த OMP அலுவலகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார் வடக்கு கிழக்கில் பெரும்தொகையாக அப்பாவி பொதுமக்கள் காணாமலாக்கப்பட்ட 2007-2010 காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்சே அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகவிருந்த மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris இராணுவத்தின் பிரதான சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டிருந்தார் இவ்வாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு விசுவாசமான மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris OMP ற்கு ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டதை சர்வதேச ரீதியாக International Truth and Justice Project (ITJP) உட்பட பலவேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முழுமையாக நிராகரித்து கண்டனம் தெரிவித்தன ஆனால் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் மிக நெருங்கிய சகாவாகவிருந்த திரு சுமந்திரன் அவர்கள் அரச நிறுவனமான OMP இற்கு இராணுவ அதிகாரி நியமனம் செய்யப்பட்டதை ஆதரித்தார் ஜனாதிபதி சட்டத்தரணியான திரு சுமந்திரன் அவர்கள் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் இராணுவத்தால் விசாரிக்கப்பட்டதா, இல்லையென்றால் ஏன் விசாரிக்கப்படவில்லை, யார் அதை விசாரிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்கள் என்பது தொடர்பாக OMP இற்கு சாட்சியாளராக (Witness) மட்டுமே மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris வை அழைக்க வேண்டும் என வலியுறுத்தி அவரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும் ஆனால் மிக தெளிவாக OMP ஐயும் அரச அலுவலகமான OMP யில் இராணுவ அதிகாரி நியமனம் செய்யப்பட்டதையும் ஆதரித்தார் விசேடமாக OMP யால் கண்டுபிடிக்கப்படும் விடயங்கள் குற்றவியல் மற்றும் சிவில் சட்ட மீறல் சம்பந்தமான எவ்வித குற்றத்திற்கும் வழிவகுக்காத வகையில் உருவாக்கப்பட்ட போதிலும் இந்த அலுவலகம் நிறுவுவது தொடர்பான சட்டமூலத்தை பாதிக்கப்பட்டோரின் எந்தவிதமான ஆலோசனைகளுமின்றி திரு சுமந்திரன் ஆதரித்தார் இது போதாதென்று OMP ஐ ஆதரித்து... 'வேண்டும் வேண்டும் OMP வேண்டும்' என போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் . குறித்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை கூட சுமந்திரன் ஆட்கள் தாக்கினார்கள் இது மாத்திரமின்றி திரு சுமந்திரன் அவர்கள் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் செல்லப்பிள்ளையாக அதிகாரத்தோடு இருந்த போது தான் செம்மணி புதைகுழி பிரதான சந்தேகநபர் பிரிகேடியர் லலித் ஹேவா உட்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது நாவற்குழியில் 24 க்கு மேற்பட்டவர்களை கடத்தி காணாமலாக்கிய மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமலாக்கிய முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் காலம் சென்ற பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவின் தலையீட்டுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திலேயே காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்த பொதுமக்களும் சட்டத்தரணிகளும் தாக்கப்பட்டார்கள் இது போன்ற எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அப்போது அதிகாரம்மிக்க நபராகவிருந்த திரு சுமந்திரன் அவர்கள் வாய் மூடி அமைதியாகவே இருந்து அத்தனை அத்துமீறல்களுக்கும் ஒத்துழைத்தார் ஆனால் அதே திரு சுமந்திரன் அவர்கள் தற்போது பதவி இழந்த நிலையில் இராணுவமயமாக்கல் பற்றி பேசுகின்றார் கொந்தளிக்கின்றார் உளறுகின்றார் அச்சுறுத்துகின்றார் இனமொன்றின் குரல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.