Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. அண்ணன் திரள் நிதியில், பெட்டி வாங்கி ஊதி கொழுக்க, இவர்கள்தான் முதலீடுகள். இதில் பலர் கடன் வாங்கி தேர்தலுக்கு செலவு செய்து, கடனாளியாகி குடும்பத்தை கஸ்டத்தில் தள்ளுவார்கள். முந்தைய பல வேட்பாளருக்கு இப்படி நடந்தது என யூடியூப்பில் பலர் கதறுகிறார்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து எடுக்கும் 4-8% வாக்கை அண்ணன் ஏலம் விட்டு, பெட்டி வாங்கி விடுவார். அதில் கொஞ்சம் பாக்கியராச்னுக்கு போகும். இடும்பாவனம் போன்றோருக்கு சோறு போடப்படும். மிகுதி எல்லாம் அண்ணன் பிள்ளைகளுக்கு இங்கிலீஷ் தனியார் பள்ளி பீஸ் கட்டவும், 3 இலட்சம் மாதவாடகை கொடுக்கவும், இரெண்டு கிலோ தங்கம் வாங்கவும், 50 ஏக்கர் நிலம் வாங்கவும் பயன்படும்.
  3. இரண்டு வீடுகளுக்கு உள்ள வேலியின் கீழ்... குனிந்து நுழைந்து அடுத்த வீட்டிற்கு செல்ல, முன்னைய யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இந்தப் பொட்டு அமைத்து இருப்பார்கள். எங்கள் வீட்டிலும் இப்படி ஒன்று இருந்தது. இப்போ... மதில்கள் எல்லாம் வந்து, அயல் வீடடையும் அந்நியமாக்கி விட்டது. ###################### ################# போர்க் காலத்தில் நாம் அவசரத்திற்கு ஓட... கை கொடுத்த பொட்டு, கடப்பு... இன்றும் சில இடங்களில் உள்ளது. வேலியின் கீழ்ப் பகுதியை வெட்டி அதற்குள்ளால் போனால் அது பொட்டு. வேலியின் மேல் அரைப் பகுதியை வெட்டி அதற்கு மேலாகக் கடந்து போனால் அது கடப்பு. Babu Babugi
  4. இல்லை. துணை கொ.ப.செ பதவியும் இன்னும் கொடுக்கப்படவில்லை. இவர் மட்டும் அல்ல திமுகவில் ரஜீவ் காந்தி, அதிமுகவில் க.சுந்தரம் என முன்னாள் தம்பிகள் எவருக்கும் சீட் இல்லை. காளியம்மாள் நாதகவில் இருந்து வெளியேறிய உடனே தவெகவில் இணைந்திருக்கலாம். காலம் தாழ்த்தி அதிமுகவில் இணைந்ததால் தேர்தலுக்கு அண்மையில் இணைந்தவருக்கு சீட் கொடுக்க இவர் அப்படி ஒன்னும் அப்பாடக்கர் இல்லை என எடப்பாடி நினைத்திருக்கிறார்.
  5. ஆடல் - கிரிசாந் “காமம் என்ற எளிய திரையைத் தாண்டி ஒரு ஆணால் பெண்ணை பார்க்க முடிவதில்லை. இல்லையா?” என்றாள். இரண்டு பிளேட்கள் போன்ற அவளது சிறிய உதடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிமிர்ந்துஅவளின் விழிகளின் கருமணிகளைப் பார்த்தேன். மண்ணிறமான தொட்டாச் சிணுங்கியின் மலர்களைப்போல விரிந்திருந்திருந்தன. சில கணங்கள் அவளது கண்களையே பார்த்து விட்டு விலத்தி தூரத்தில்தெரிந்த ஆமை போன்ற சிறிய தீவைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னேன். “முடியும் என்று தான் தோன்றுகிறது. குருதி உறவுகள், அணுக்கமானவர்கள் என நெருங்க நெருங்ககாமத்தின் எளிய திரைகள் உதிர்கின்றன” என்றேன். “அதற்கு வெளியே அத்தனை பெண்களும் ஒன்று தான் இல்லையா?” “ரசனை, மானுட நிலமைகள், உடல் நோய்கள், உளச் சிக்கல்கள், தன்னறங்கள் என பல அடுக்குகள்இருக்கின்றன இல்லையா?” “அவை அளவைக் குறைத்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி போதாது இல்லையா?” “ம்ம்.. போதும். ஆனால் அது ஒரு சாத்தியம் மட்டும் தான். பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியமில்லை. மனிதன் கற்பனையால் வாழும் விலங்கு. கற்பனை போல நுணுக்கமான ஒன்று இருப்பதிலேயே ஆழமானசிக்கல். கற்பனையே நம் வேட்கையின் தீவிரத்தை தீர்மானிக்கிறது. பெரும்பாலான ஆண்களின் கற்பனைக்காமங்கள் பகற்கனவுகள். அதற்கு மிஞ்சி அவர்களால் நிகர்வாழ்வில் ஒன்றையும் புரிய முடியாது. காமம்மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகம் என நம்மைச் சொல்லும் பொழுதே துலக்கமாகத் தெரிவது என்ன? ஒடுக்கப்படும் ஒவ்வொன்றும் கனவாய் மாறும் தன்மை கொண்டது. கனவுகள்! நாம் எல்லோரும் கனவுகளின்தீராத அலைக்கழிப்புகள்“ “காமமும் காதலும் ஒன்றின் இரண்டு தோற்றங்கள் தானே?” “இல்லை. காதலும் காமமும் இரண்டு வேறு வேறு திசைகளில் இருப்பவை. சூரியன் உதிப்பதும்அஸ்த்தமனமாவதும் போல“ இருவரும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருந்தோம். அவள் ஒரு சிங்கள – ஜெர்மானிய கலவை. அவளது அப்பா சிங்களவர், அம்மா ஜெர்மானிய தூதரகத்தில் பணியாற்றியிருந்தார். அப்பா இறந்ததும்ஜெர்மனிக்கே திரும்பிச் சென்று விட்டார். இவள் இங்கே ஒரு துணிக்கடையும் நாயும் வைத்திருக்கிறாள். அவளது கணவன் என் தோள்களில் கைவைத்தபடி மதுவில் நெளிந்து கொண்டிருந்தான். அவன் ஒருசிங்களவன். அவளுடன் உரையாடத் தொடங்கும் போதே என்னை எச்சரிக்கை செய்திருந்தான். “அவள்பேசும் பேச்சுகளை ஊக்கப்படுத்தாதே நண்பா, பிறகு வருந்துவாய்“. இந்த வினோத எச்சரிக்கை யாரைத்தான் விலகி ஓட வைக்கும். “உன் கண்களிலும் காமம் கொப்பளிக்கிறதே, உன்னை எப்படி நம்புவது?” என்றாள். பச்சை வண்ணஆடையில் மயில் போலிருந்தாள். நான் சிகரெட்டை எடுத்து மூட்டினேன். “நீ சிகரெட்டை எப்போதும் இவ்வளவு வசீகரமானதாகத் தான் பற்ற வைப்பாயா?” “இல்லை. அழகான பெண்கள் முன்னால் இருக்கும் போது மட்டும்” என்றேன். வலக்காலால் நான் அமர்ந்திருந்த வெண்ணிற பெயிண்ட் அடித்த இரும்புக் கதிரையை எட்டி உதைத்தாள். நான் பாதாளத்திற்குள் விழுந்து மீண்டு வந்து திடுக்கிட்டு நேராகினேன். சிரித்தாள். குழந்தையினுடையவைபோல வெண்ணிறப் பற்கள். நாங்கள் அமர்ந்திருந்த விருந்து முற்றத்தில் பழைய தேவாலயமொன்றில்பிடுங்கப்பட்டவை போன்ற கற்சிலைகளை வைத்திருந்தார்கள். நடன அரங்கில் ஆங்கிலப் பாடல்கள்ஒலித்துக் கொண்டிருந்தன. கொக்டெயில்கள் விரும்பிய அளவு பெருக்கெடுத்தன. குஷ்ஷின் வாசனைபழங்கால அரண்மனை போலிருக்கும் அந்த கட்டடத்தினை இன்னும் வெகுகாலம் பின்னே கொண்டுசென்றிருந்தது. பெரும்பாலானவர்களின் விழிகள் சிவந்த படலம் போல மினுங்கி மேலும் ஆழத்திற்கெனஅலைந்தன. இரண்டு கற்சிறகுகளை விரித்தபடி ஏரியை நோக்கி வலக்கை விரலை நீட்டியபடியிருந்த ஆண்தேவதையொன்றின் சிலையின் விரல் நுனியில் ஒரு நட்சத்திரம் ஒளிரத் தொடங்கியது. அவளுக்கு அதைக்காட்டினேன். முழு போதையும் அகன்று துள்ளிக் குதித்து போனை எடுத்து அதைப் படம் பிடித்தாள். “ஒரு குட்டி மீனைக் காட்டி குழந்தையை ஈர்ப்பதைப் போல என்னை நீ மயக்கப் பார்க்கிறாய்” என்றாள். “தன்னைக் குழந்தையாக உணரச் செய்யும் ஆண்களைத் தானே பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்” “இல்லை” என்றாள். சிறிது நேரம் யோசித்து விட்டு தலையை மெல்லச் சரித்து ஆட்டி விட்டு என் தோளில்அடித்து சிரித்தாள். மேலும் அழகு கூடி வந்தது. காது வரை குறுகத் தரித்த அவளது சிகை விம்மித்தழைந்தது. “உண்மையைச் சொல். என்னை உனக்குப் பிடிக்கவில்லையா? கோபமும் ஆக்ரோஷமுமான பெண்ணைஆண்கள் விரும்புவதில்லை” “சிலர் விரும்புவார்கள். மூளையுள்ள பெண்களை விரும்பும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் ரசனைஅப்படி” “தன்னறம் என்றாயே, அதுக்கும் காமத்துக்கும் என்ன இணைப்பு. விளங்கவில்லை?” “ஒருவனுக்கு ஒருத்தியென்பது ஒரு அறம். அது இலக்கியங்களால் உருவாக்கி அளிக்கப்பட்டது. மதங்களால் நெறிப்படுத்தப்பட்டது. மானுட குலம் வரலாறு நெடுக காமத்தை என்ன செய்வதென்றுவிளங்காமல் திகைத்தபடியே இருக்கிறது. ஒவ்வொரு மதத்தையும் அது ஏளனம் செய்கிறது. தன் வளைந்தவாலை நேராக்க முடியாத நாயைப் போல அது காமத்துடன் அலைகிறது. விரும்பினாலும் இல்லையென்றாலும் மண்ணுக்கு அடியில் வேரைப் போல காமம் அனைத்தையும் தொட்டுவிட மென்மையான நுண் விரல்களால் துழாவிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்களை ஒரு போதும் ஒன்றென ஆக்கவே இயலாது. நாம் ஆணின் பெண்ணின் காமங்களிற்கு அப்பால்குயர்களையும் அல்லவா வரலாறு நெடுகிலும் பார்க்கிறோம். அது அத்தனை நுட்பமான அடுக்குகள்கொண்ட இழைப்பு. நீ ஒன்றென ஆக்கும் தோறும் அது இன்னொன்றை விரித்துக் கொள்ளும் மலர். அறத்திற்கும் தன்னறத்திற்கும் உள்ள வேறுபாடு அதனால் முக்கியமானது என நினைக்கிறேன். அறம்பொதுவாக நிறுவப்பட்டது. மலைகளைப் போல நெடுங்காலம் வளர்ந்து நிற்பது. ஆனால் அதுஅனைவருக்கும் பொதுவென ஆக முடியாது. எல்லாக் காலங்களிற்குமான பொது அறம் என ஒன்றில்லை. அதை நீயே அறிவாய். காமத்தை ஒழுங்குபடுத்துவதின் சிக்கல் நாளுக்கு நாள் பெருகுவது. கற்பனையைப்போல. ஆகவே தான் தன்னறம் என அதை வகுக்க வேண்டியிருக்கிறது. ஒருவர் பொது அறத்தை மீறமுடியும். அது ஏற்புள்ளது. தன்னறமும் மாறக் கூடியது தான். ஆனால் அது அடிப்படையானது. ஒருவரின்சொந்த அழிவும் மீட்பும் தன்னறத்தில் தான் நிலை கொண்டுள்ளது. ஆகவே தான் காமத்தில் ஒருவரின்தன்னறம் முக்கியமானது. அதை அவர் பிறரிடம் வெளிப்படுத்தத் தேவையில்லை. அது மனசாட்சி. அதன்முன் நிற்பது அந்த ஒருவர் மட்டுமே“ பனி மெல்ல மெல்ல அடர்ந்து வந்தது. நடன அரங்கில் பாயும் பலவர்ண விளக்கு வெளிச்சங்கள்இருட்டைச் சுழன்று விரட்டின. “வா, ஏரிக்கரையின் விளிம்பில் நின்று புகைக்கலாம்” என்றாள். அவனது கணவன் ‘என்னை விட்டுவிடுங்கள்‘ என மன்றாடினான். அவனுக்கு ஒரு உதட்டு முத்தம் கொடுத்து விட்டு பேப்பரையும் சிறு துண்டுகுஷ்ஷையும் அவனது ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் இருந்து எடுத்துக் கொண்டாள். செவ்வியல் நாடகத்திற்கானஅரங்கைப் போல ஏரிக்கரையின் தனிமை மெளன வெளியில் திரை விலகியிருந்தது. கரிய தீவின்மரங்களில் இருள் அசைந்தது. “நீ தமிழன் தானே, உங்கள் பெண்களில் இல்லாத எது என்னிடமிருக்கிறது?” என்றாள். “தெரியவில்லை. பெண்ணென்றால் பெண் தான். எங்கு பிறந்தாலும் என்ன செய்தாலும். நான் அப்படித்தான் பார்க்கிறேன். மேற்பரப்பினால் ஏரி அழகாவதில்லை. ஆழத்தினால் உண்டாகும் மாயமே அதைவசீகரிக்கிறது” “நீ கவிஞன் தான். ஒத்துக் கொள்கிறேன். அதற்காக சொற்களால் விளையாடாதே” “அப்படியென்றால் நீயே சொல், நீ அறிந்த சிங்களப் பெண்களுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்? உடைஉடுத்தும் முறையா? ஆபரணங்களா? நீளமான அருவிக் கூந்தல்களா? சொல்?” “அது எல்லாம் வித்தியாசம் தானே?” “வெறும் விவாதத்திற்காக முரண்டு பிடிக்காதே, நீ அறிவாய். இங்கிருக்கும் எல்லோருக்கும் ஒருவரைஇன்னொருவருக்குத் தெரியும். அனைவருக்கு அடியிலும் இருப்பது எதுவோ அதுவே அனைத்திற்கும்அடியிலும் இருக்கிறது. மேற்பரப்பை அறியாதவர்கள் இருக்கலாம், ஆனால் ஆழம் அனைவரும் அறிந்ததுதான்“ அவள் சற்றுச் சீற்றமானாள். பூவரசம் இலையை நொடியில் மடித்து குழல் செய்யும் சிறுமியின்கைநயத்துடன் குஷ்ஷை மடித்து பேப்பரில் உருட்டினாள், பற்ற வைத்து இழுத்துக் கொண்டு தன் சிறியகறுப்பு ஸ்வெட்டரை எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள். பின்னால் அலறிக் கொண்டிருந்த பாடலின்இரைச்சல் மெல்ல மெல்ல நீருக்கடியிலென அமிழ்ந்து கொண்டிருந்தது. “ஆக இங்கு நடப்பதெல்லாம் நாடகம் என்று சொல்கிறாய், எல்லாம் நடிப்பு இல்லையா?” என்றாள். புகையைக் கையில் தந்தாள், ஒரு கைமாற்றைப் போல. “இல்லை. மேற்கு இலக்கியங்களில் தான் இதுவொரு நாடகம், கீழைப் பண்பாட்டில் இதுவொரு ஆடல்” என்றேன். “ஆடலென்றால், ஆடுவதா?” “ஆங்கிலத்தில் இதை விளக்கிச் சொல்ல முடியாது. ஆனால் ஆடினால் உனக்கு விளங்க வைக்க முடியும்” என்றேன். “இத்தனை நேர்மையான தந்திரத்துடன் எவனும் என்னை ஆட அழைத்ததில்லை. நீயொரு கள்வன்” என்றாள். புன்னகையுடன் “நீ தமிழ் ஆணிடம், குறிப்பாக கவிஞனை இதற்கு முன் சந்தித்தது இல்லை அல்லவா? அவர்கள் அப்படித் தான். குலத் தொழிலே பாடி மகிழ்வித்தல், பெண் நாடல்” என்றேன். அடிவயிற்றைப் பிடித்தபடி சிரித்தாள். “அயோக்கியர்கள்!” என்றாள். “எல்லா மொழிகளிலும் ஒரு கவிஞனின் முதன்மைத் தொழில் அது தான். சொற்களைச் சாணை பிடிக்கும்கல்லைப் போன்றது காமம். கவிதை என்பது மயங்கச் செய்து நம்ப வைப்பது. அது உண்மை இல்லை எனசொல்பவரும் கேட்பவரும் அறிவார்கள். ஆனால் அது அப்போதைக்கான பெரிய உண்மை என இருவரும்நம்புவார்கள். கவிதை என்பதை இருவர் நம்பும் ஒரு பொய் எனச் சொல்லலாம்” என்றேன். என் கண்களை நேராகப் பார்த்து “உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது” என்றாள். “சந்தேகமேயில்லாமல், நானும் நீயும் நேற்று மாலை சந்தித்துக் கொண்ட போதே உனக்கு இது தெரியும்தானே. எனக்கும் அது தெரியும். அது தான் நான் சொன்ன ஆழம்” என்றேன். நிச்சலனமாக ஏரியைப் பார்த்தாள், தலையைச் சரித்துத் தூக்கி ஆகாயத்தைப் பார்த்தாள். “நீ உண்மையாக யாரையாவது காதலித்திருக்கிறாயா? அப்படி ஒரு உணர்வு உனக்கு வந்திருக்கிறதா?” என்றாள். அவளது கண்களில் இரண்டு விண்மீன்கள் நீந்தி என்னை நெருங்கின. அத்தனை தீவிரமான பார்வை. தொடமுடியாமல் கண்களைத் தாழ்த்திக் கொண்டே சொன்னேன். “யெஸ். நான் ஒரு முறை வாழ்வில் காதலை உணர்ந்திருக்கிறேன். ஒரே ஒரு முறை“ அவள் கைகளைத் தட்டி ஆகாயத்திற்கும் ஏரிக்குமிடையில் தேவதை போலக் காற்றில் துள்ளிக் குதித்தாள். “யெஸ். நான் நினைத்தேன், நான் நினைத்தேன். உன் கண்களில் காதலை அறிந்தவனின் நிதானம்இருக்கிறது. என்னிடம் நீ வெறுமனே விளையாடுகிறாய். உன் திறமைகளைப் பரிசோதித்துப் பார்க்கிறாய். பொம்மைக் கடையில் சிறுவனைப் போன்ற உன் கண்களில் அனைத்தும் உள்ளது” என்றாள். “யெஸ்.. இது ஒரு ஆடல்” “Ahhh.. சொல், ஆடலென்று என்னைக் கொல்லாதே, எங்கிருக்கிறது அதன் முடிச்சு?” “நம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது“ “வாலைப் பிடித்துக்கு கொண்டு தலையை விட்டு விடுகிறாய். சரி, உனக்கு காதல் வந்ததை எப்படி நீநம்பினாய்?” “அவளை நான் பார்த்து பல காலங்களுக்குப் பின்னர், என்றுமே நான் அவளைக் காதலிக்கும் எண்ணம்இருக்கவில்லை. குறிப்பாகச் சொன்னால் காதலையே நான் மறுப்பவனாக அப்போது இருந்தேன். அவளுக்கும் எனக்கும் இடையில் இருந்த ஆடலே அது தான். அவள் காதலை மட்டுமே உண்மையானஒன்றென நம்புபவள், நான் அதன் மறு அந்தத்தில் நின்றேன். இருவரது எந்த விவாதமும் உச்சகோபத்திலோ உச்ச சிரிப்பிலோ தான் முடியும். கோபம் தான் அதிகம். இரண்டு நம்பிக்கைகள் மோதிக் கொள்வது கோபத்தின் ஆற்றலிலே மட்டும் தான் சாத்தியம். அவள் எங்கள்இலக்கியங்களின் ஆதார கதாபாத்திரங்களின் கனவின் திரண்ட உரு. நான் ஓஷோவின் மாணவன். அவரதுகாதல், காமம் பற்றிய பார்வைகளே எனக்கிருந்தன. இரண்டு வலிமையான தரப்புகள் மோதிக் கொள்வதேமெய்யான விவாதம். தர்க்கங்கள் ஐஸ் கட்டிகளை எறிந்து முட்டிக் கொண்டு வெடித்தன. பளிச்சென்றமுனைகள். உடைகையில் துண்டு துண்டாகத் துமித் துமியாகச் சிதைபவை. என்றுமே இருவரும் ஒருவரைஇன்னொருவர் தர்க்கத்தால் வெல்ல முடியாது திகைத்தோம். ஒரு பின்மாலைப் பொழுதில் என்னதென்று இன்று விளக்க முடியாத உவகையில் மனம் திளைத்திருந்தது. கனியப் போகும் கனிக்குள் உள்ள இனிப்பைப் போல, கனிந்து ஊறப் போகும் அதன் உள்ளுணர்வேகனியாவதைப் போல. ஒரு குளக்கரையில் நான் அமர்ந்திருந்தேன். அவள் அவளது வீட்டில். இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம். தர்க்கங்கள் கரைந்த பின்னர் எஞ்சும் நீரில் இரண்டு மீன்களைப் போல என இப்போதுசொல்லத் தோன்றுகிறது. தீவிரமாகப் போரிட்ட இணையான வீரர்கள் களைத்து சாய்ந்து அமர்ந்திருக்கும்பொழுது இருவர் மட்டுமே உணரும் அந்தரங்க நெருக்கம் அது. அதைச் சொற்களால் என்னால் விவரிக்கமுடியவில்லை. ஆகவே தான் உவமைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” எனச் சொல்லி அதற்கு மேல்சொற்கள் எழாமல் திக்கித்தவன் போல நின்றேன். திடீரென்று விழித்துக் கொண்ட தபஸ்வியைப் போன்றுகுலைந்து சுற்றையும் பார்த்தேன். மகத்தானதை மட்டுமே அப்படிப் பார்க்க முடியும் எனும் நோக்கால் அவள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். விழுங்கி விடும் பார்வை. அரிதானதை நோக்கும் நுண்மை கூடியது. புன்னகையுடன்எனக்கு புகையை நீட்டினாள். வாங்கி இழுத்து அந்த மனநிலையிலிருந்து இறங்க விரும்பினேன். பாதத்தின் உறுதியான இருப்பைப் போல அந்த உணர்ச்சிகரம் என்னை விட்டு நீங்காமல் அப்படியேஇருந்தது. அப் பாதத்திலிருந்து ஏறும் குளிர் போல காதல் என்னுள் ஓங்கி வளர்ந்தது. சிரித்தபடி “காதலை நான் உணர்ந்தேன்” என்றேன். “எப்படி?” “அவளுடன் உரையாடி முடித்து எழுந்தேன். கால்களால் நடக்கவே முடியவில்லை. நரம்புகள் பின்னிக்கொண்ட பாம்புகளைப் போலக் குழைந்தன. என் மூச்சு எனக்கே அந்நியமானது போல இருந்தது. காதலைப் போல தாங்கிக் கொள்ள முடியாத உணர்வு உடலுக்கு மிகவும் புதிதானது. உண்மையாகவேதாங்க முடியாதது. உலகை மறந்து அதைப் பிளந்து காற்றைப் போல நடந்தேன். எல்லாம் எனக்கென வழிபிரிந்து விலகின. என் மேல் விழுந்தனவும் எனக்குப் பொருட்டே இல்லாமல் இருந்தன. கொஞ்சத்தூரத்திற்கு மேல் நடக்க முடியாமல் நகரத்தின் வீதிக்கரையில் விழுந்து படுத்து விட்டேன். புன்னகைமட்டுமே உடலாக ஆக முடியும் என்பதை அன்று அறிந்தேன். தித்திப்பது எத்தனை தாங்க முடியாதுஎன்பதை அறிந்த முதற்கணம் அது. காதல் உண்மையாகவே நிகழ்வது உள்ளத்தில் அல்ல. உடலில். உடலும் உள்ளமும் இரண்டில்லை” என்றேன். நடன அரங்கின் ஓசை நீருக்குள்ளிருந்து எழுந்து வரும் செவியைப் போல கேட்கத் தொடங்கியது. நான்முன்னர் கேட்டேயிராத பாடல்கள் தான் அங்கே ஒலித்துக் கொண்டிருப்பதால் எனக்கு ஒரு குறையும்இல்லை. “எப்படி இது சாத்தியம்! ஹோலி ஷிட்! எப்படி இது நிகழ முடியும்?” எனக் கூவினாள். “என்ன ஆயிற்று?” “வா, இங்கே வா, ஒரு சொல்லும் சொல்லாதே, உலகிலேயே எனக்கு மிக மிகப் பிடித்த பாடல் இது தான். மிகச் சரியாக இந்த நொடியில் இது எப்படி ஒலிக்கிறது” என்று சொல்லிய பின்னர் ஏரியில் ததும்பும்மென்னலை ஆட்டத்துடன் ஒத்திசைந்து தன் உடலை அசைய விட்டாள். நான் என் பாட்டுக்குக் கோணலாக அசைந்தேன். காற்று விட்ட திசைக்கு பாய்மரம் போல என் பெரியசேர்ட் ஆடியது. அது நான் ஆடுவது போலிருக்கவே நான் அதில் பொதிந்து கொண்டேன். குளிரானபனிக்காற்றும் குஷ்ஷின் கதகதப்பும் சேர அசைந்தேன். அவள் உடல் நடுங்கத் தொடங்கியது. வரிவரியாகஅவளது பிளேட் உதடுகள் அப்பாடலின் சொற்களை மிகத் துல்லியாமாக அசைத்தன. சொல் ஓசையின்றிஉதடுகளில் துடித்துக் கொண்டிருந்தது. திரும்பி நடன அரங்கைப் பார்த்தேன். நிழல்களும் உடல்களும் வேறு வேறு காலங்களில் ஆடிக்கொண்டிருந்தன. ஒரு நிழல் இன்னொரு நிழலைத் தழுவி விலகியது. இன்னொரு நிழலின் அபிநயம்இன்னொன்றிற்கு மிகச் சரியாக ஈடு கொடுத்தது. சிலர் அதன் ஓரங்களில் சாய்ந்து படுத்திருந்தனர். ஒருபக்கத்தில் குவிந்திருந்த சாறமும் சேர்ட்டும் அணிந்த சிப்பந்திகள் இந்த மேட்டுக் குடிக்கொண்டாட்டத்தை அசையாத உறைந்த முகங்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். “நீ ஏதோ விளங்க வைக்கப் போகிறாய் என்றாயே? அது என்ன?” “நீ ஆடுவது உனக்குப் பிடித்திருக்கிறதா?” ஓம் எனத் தலையசைத்தாள். சூரியகாந்தி சுழல்வதைப் போல தலையை ஆட்டினாள். கைவிரல்களில்நளினம் அசைந்தது. ஒரு துள்ளல் துள்ளி ஈரம் படிந்த புற்களில் கால்களை வைத்து சிறகைப் போலகைகளை விரித்தாள். “ஆட விரும்பும் எண்ணத்தை உனக்குள் தோன்றச் செய்வது எது? இந்தப் பாடலா? அதன் இசையா? வரிகளா? அதில் உள்ள காதல் பற்றிய மிகையான கற்பனைகளா? சொல்?” “நானும் உன்னைப் போலத் தான் நண்பா, என் உடலில் காதலை உணர்கிறேன். ஆனால் பெரிய தனித்தகாதல். ஒரு போதும் அது நிறையவே இல்லை” என்றாள். “பெருகிக் கொண்டிருக்கும் மலையருவியின் ஊற்றைப் போல, தொடங்கும் இடத்தில் குளிர்ந்து தளிர்போன்ற தீ நீர். பெருகுகையில் ஆங்காரமான பேரிரைச்சலுடன் கொந்தளிப்பான அக்கினிப் பெருக்கு” என்றேன். “யெஸ்.. நீ சரியாகத் தான் சொல்கிறாய். ஆனால் ஏன் என்னால் முழுமையை நோக்கி செல்லமுடியவில்லை?” “உன்னிடம் ஆன்மீகமில்லை. ஆன்மீகமில்லாத காதல் நிறைவடையாது. தகித்துக் கொண்டிருக்கும்எரிமலையின் உடல் அது” “ஆன்மீகமா, ஓ ஷிட். நீ ஓஷோவின் ஆள் இல்லையா, அந்த தாடி வைத்த செக்ஸ் சாமியாரின் சீடன்“ “ம்ம். செக்ஸும் ஆன்மீகமென்று அவர் சொல்லியிருக்காவிட்டால் அது வெறும் விலங்குணர்ச்சி எனநம்பியிருப்பேன். எந்த ஒரு மானுட உணர்ச்சியும் ஆன்மீகத்தைத் தொடாமல் நிறைவை அளிக்காது“ “இப்பொழுது நான் தியானம் செய்ய வேண்டுமா!” எனச் சொல்லி சின் முத்திரை பிடித்துக் கொண்டுநடித்துக் காட்டினாள். உதறலான ஒரு பர்ர்ர் ஒலியை குறட்டையைப் போலச் செய்து காட்டி விட்டு“கண்ணை மூடி அமர்ந்தால் நான் உறங்கி விடுவேன். தியானம் எல்லாம் ஏமாற்றிக் கொண்டே உறங்கும்வேலை” “நீ ஒரு குறையைச் சொன்னாய் நான் அது நிறையும் வழியைச் சொன்னேன். மிகுதி உன் விருப்பம். ஆனால்நான் உண்மையாகவே உணர்ந்த ஒன்றைச் சொன்னேன். புத்தகங்களில் வாசித்ததை அல்ல“ அமைதியாக ஆனாள். ராட்சத பலூன் போல ஊதிய இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். எண்ணையில் நீரெனஅதில் ஆடினாள். ஒரு வைன் கிண்ணத்தில் சோடாவைக் கொணர்ந்து கொடுத்தேன். ஒரு மடக்கு குடித்து விட்டு உதடுகளைஉரசி மினுக்கினாள். பளபளவென்ற இளஞ்சிவப்பு நிறமென்பது அது மட்டும் தான் எனத் தோன்றியது. ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே கைகளை என் நெஞ்சை நோக்கி நீட்டி “அப்படியென்றால்எனக்குக் காதல் நிறையவே நிறையாதா?” என்றாள். “அதற்கு நீ தியானமெல்லாம் செய்யத் தேவையில்லை. தியானமென்பது என்ன? உன்னை நீயென அறிதல், நீயாகவே மட்டும் இருக்கும் நிலையை எய்தல். மனமோ உடலோ இதயமோ இல்லை, தியானம் உன்னைக்கூட்டிச் செல்வது துரியத்திற்கு என்று ஓஷோ சொல்வார். அனைத்து உயிரின் ஆழமும் தழுவியோடும்மாபெரும் நதி அது” “எனது தத்துவங்கள் வாழ்க்கையை இப்படியும் அப்படியும் கத்தரிக்கோலால் அறுப்பவை. துயரத்தைஅடிப்படையான உண்மை என நிறுவுபவை. மேற்கின் எல்லாக் குப்பையும் என் தலைக்குள் தான்இருக்கின்றன” “உண்மை தான், அவை ஆன்மீகத்தை ஒரு மீட்பெனக் கருதுபவை, ஓஷோ அந்தப் புள்ளியைத் தான் தன்கூர்மையான வாதங்களால் தகர்த்தார். கீழை உலகம் மகிழ்ச்சியை அடிப்படையான ஆன்மீகமாக என்றோகொண்டு விட்டது. காலனித்துவம் யானைக் கூட்டம் நுழைவது போல இந்தப் பண்பாட்டின் ஆழங்களைக்குலைத்து விட்டது. சேற்றுக் கலங்கலெனவே இங்கு இப்போது ஆன்மீகமும்” “ஹ்ம்ம்..” என்றாள். சொற்கள் விடாய் போலப் பெருகுபவை, சொற்களின் ஆழத்தை உணர உணர தாகம்அடங்கி விடுகிறது. “நீ ஞானியா?” “இல்லை. கவிஞன்” “ஆன்மீகமான கவிஞர்களும் இருக்கிறார்கள் தானே, கபீரைப் போல ரூமியைப் போல” “ஒரு நாள் அப்படி நான் ஆகலாம். ஆனால் காதலை என் வாழ்க்கையில் உணர்ந்து உலகியலில் நிறைந்துவிட்டேன். இதுவும் ஒரு பேறே. இங்கிருந்தும் நான் அடையக் கூடியவை நிறையவே உண்டு” சிரித்தாள். “யெஸ். நீ ஞானியில்லை. உன் கண்களில் இருப்பது காதலின் குறுகுறுப்பு. நுண்ணியதாக, ஒருகனவின் வால் நுனி போல” “நீயும் கவிஞை தான்” உரக்கச் சிரித்தாள். “உனக்கு நெஞ்சம் பதறத் தொடங்கி விட்டதா, பயப்படாதே நான் உன்னை விழுங்கி விட மாட்டேன். நீயொன்றும் அத்தனை மகத்தான காதலனில்லை” “நானும் அறிவேன். இங்கு யாரும் அத்தனை மகத்தான காதலனில்லை“ “பிறகு எதற்கு என்னை மயக்க இத்தனை பிரயத்தனப்படுகிறாய்?” “ஆடலின் நிமித்தம்” என்றேன். “என்ன?” “சரி, நேற்று மாலை உன்னை நான் பார்த்த முதற் கணம் உனக்கு நினைவிருக்கிறதா?” நான் பார்த்துக் கொண்டிருந்த நேரத்திலேயே ஏதோவொரு இமை வெட்டுக் கணத்தில் அநாயசமாகச்சுற்றிய புகையை நீட்டினாள். “இது உனக்காக” என்றாள். அவளது நாவிளிம்பின் எச்சில் பேப்பரின் முடிச்சை பிணைத்து மின்னியது. “ம்ம்.. சொல். நினைவிருக்கிறதா?” தலையை இடமும் வலமும் ஆட்டி விரல்களாலும் No என காட்டி ‘அதற்கு என்ன?’ என்பது போல புருவத்தைதூக்கி வினவினாள். “இது தான் ஆடல், நானறிவேன், வானுக்கு இடக்கை சுட்டுவிரல் உயர்த்திய பெண் தேவதையின்சிலையின் முன்னிருந்த தடாகத்தின் பிம்பத்தில் பார்த்துக் கொண்டோம். தேவதையின் பின்னேஉரோமாபுரி அரண்மனைகளின் உயர்ந்த தூண் போன்ற மரமொன்று நின்றது. அந்தச் சிலையின் பின்னால்சூரியன் காட்டுக்குள் இறங்கியபடி இருந்தது. போர்வையைப் போல மாலைப்பனி அணைத்தது. வெய்யிலின் இளஞ்சூடும் இருந்தது. நான் நீரில் விழுந்த என் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அசைவில்லாத நீர்மேற்பரப்பில் சில ஊதா நிற மலர்கள் விழுந்திருந்தன. சில ஊதா நிற அல்லிகள்அவிழ்ந்திருந்தன. பெரிய ஆழமில்லாத அந்தத் தடாகத்தின் மறுமுனையில் அந்த தேவதை தலைகுனிந்திருந்தாள். நீ என்னருகில் வந்து நின்றாய், நீர்ப்பரப்பை பார்த்து விட்டு தேவதையை உற்றுப்பார்த்தாய். நான் உன்னை நீரில் விழுந்த உன் பிம்பத்தில் பார்த்தேன். அத்தனை அழகான பெண்ணைகவனிக்காது விடும் அளவிற்கு எனக்கு முட்டாள்த்தனமில்லை. நானும் தேவதையை நிமிர்ந்து பார்த்தேன். நீஎன்னருகில் ஐந்து நிமிடத்திற்கு மேல் தொடுகையே இல்லாமல் பறந்து கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் போல மிதந்து கொண்டிருந்தாய். நீ எனக்கு அருளினாய், எல்லா பெண் தெய்வங்களும் எளியபக்தனுக்கு காட்டும் சிறிய அருளலை. அதுவே நம் ஆடலின் துவக்கம்” என்றேன். “நீயொரு கள்வன், மோசமானவன், அயோக்கியன். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறாய்” என்றாள். “முதல் மூன்றும் நான் தான், ஆனால் நீ என்னை விடக் கள்ளி, மோசமானவள், அயோக்கியை. உனக்குஎன்னை விட அந்தக் கணம் அதிகம் நினைவிருக்கும்“ சீண்டப்பட்ட பூனையைப் போல விலகி நகர்ந்தாள். சோடாவைக் குடித்து முடித்து “கொண்டு வா, போ” என அதட்டினாள். அவளது கணவனைப் பார்த்தேன். மேசையின் மீது கவிழ்ந்து நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். திருமணத் தம்பதிகள் இருவரும் நடன அரங்கில் காதல் பாடலொன்றுக்கு ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி வைன் கிண்ணத்தை உயர்த்தி சியேர்ஸ் சொன்னேன். அவளிடம்திரும்பி நடந்த போது கற்சுவரில் அமர்ந்திருந்தாள். அவளது கால்கள் இரண்டும் மெழுகுத் துண்டுகள்போல ஒளிவீசின. கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். துமித்துத் தூறும் மழையைப் போலஅழுதழுது ஏரியைப் பார்த்தாள். பல்லாயிரம் கால்களில் காற்று ஏரியின் மீது நடக்கும் தடங்கள் தோன்றிவந்து எங்களையும் உழக்கியபடி நகர்ந்து சென்றது. உடல் மயிர்கள் புல்லரித்தன. சிகரட்டைப் பற்றவைத்து அவளிடம் நீட்டினேன். உதடுகள் நடுங்க வாயில் வைத்து இழுத்து ஊதினாள். அந்தப் புகையைக்குடிக்க வேண்டும் போலிருந்தது. கேட்டிருந்தால், மறுத்திருக்க மாட்டாள். இமைகளைத் திறக்காமல், “உண்மையைச் சொல், உன்னால் உண்மையாகவே என்னைக் காதலிக்கமுடியாது இல்லையா, என்னை மட்டுமே காதலி என மூர்க்கமாகச் சொல்லும் பெண் என மாறிவிடுவேன் எனநினைக்கிறாய் இல்லையா? குடித்து விட்டு புலம்பும் ஒரு பொறுக்கிப் பெண் என நினைக்கிறாய்? யெஸ். நான் அறிவேன். நான் சுதந்திரமானவள், ஆனால் கோபக்காரி. எனக்குக் கோபம் அடிவயிற்றில் பிறந்தது. இங்கிருக்கும் அனைத்திலும் அது எதிரொலிக்கிறது“ “கோபம் பெண்ணுக்கு ஒரு வரம். அதுவே அவளை வெல்லுதற்கு அரியவள் ஆக்குகிறது. அனைத்திலும்அனல் உண்டென்கிறது ஒரு இந்து நம்பிக்கை. ஆடும் சிவனென்பது தீயின் நெளிவு, பெருக்கு. பிரபஞ்சமேஒரு ஆடல் என்கிறது இன்னொரு நம்பிக்கை” அவள் அமைதியானாள். அடிவயிற்றை மெல்லிதாக தடவிக் கொண்டாள். “தண்ணீர்?” என்றாள். எடுத்துவந்து கொடுத்தேன். கற்பரப்பில் படுத்திருந்து கைகளை தலைக்கு அடியில் கோர்த்திருந்தாள். அவளதுமுகத்துக்கு நேரில் வந்து நின்று நீரைக் கொடுத்தேன். நீரில் இத்தனை நிறைவுடன் தான் விழுந்துகிடந்தாய் எனச் சொல்ல விரும்பினேன். அவள் என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என எண்ணம்தோன்றவும் சிரித்தேன். அவள் சந்தேகமான இனிய புன்னகையை அருளினாள். நீரைக் குடித்து விட்டுஏரியை நோக்கி ஒரு கை தலைக்குக் கொடுத்து சயன அமர்வில் திரும்பினாள். அருகில் அமர்ந்துகொண்டேன். மீண்டும் சிகரெட். மீண்டும் புகை. “எனக்குத் தெரியவில்லை. எது என்னை இந்தக் காதலை நம்பச் செய்கிறது, மடத்தனமான இந்தக் காதல்எங்கிருக்கிறதென்று தெரியவே இல்லை. புத்தகங்களில் வாசித்தேனா, வாழ்க்கையில் பார்த்தேனா, கனவாதெரியவில்லை. உனக்குத் தெரியுமா?” “தெரியும்” என்று சொல்லி நிறுத்தினேன். “ஆடலா?” எனச் சொல்லிச் சிரித்தாள். அவளது தேகம் சயன அமர்வில் வெல்வெட் பூச்சியைப் போல மிருதுகாட்டியது. “இல்லை, உண்மையாகவே தெரியும். நான் கவிஞன்” “உன்னிடம் நான் கெஞ்ச வேண்டுமா? சொல், இல்லையென்றால் நரகத்திற்குப் போ” “உலகின் அழகான ஒவ்வொன்றும் காலமின்மையில் இருக்கிறது. காலத்திற்கு உள்ளே வாழ்ந்து மடியும்ஒவ்வொரு அழகும் காலமின்மையில் சென்று சேர்கிறது. மழைத்துளி கடலிலென. காதல் மிக மிக அழகானது, ஆனால் அதுவும் காலமின்மையில் நின்று கொண்டிருப்பது. காலமின்மையின்சிக்கல் என்னவென்றால் அது காலத்திற்குள் பல்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்த மட்டுமேமுடியும். மேகம் மண்ணில் மிதக்க முடியாதது போல, துளித்துளியாக மண்ணைத் தொட்டு விடுவதைப்போல, தொட்டுத் தொட்டு நிறைவதைப் போல, நானும் நீயும் எல்லோரும் ஒவ்வொரு சின்னஞ்சிறு துளிகள், நாம் பூமியெங்கும் காதலைப் பெய்கிறோம். ஆகவே நாம் பூரணத்தை அடைய முடியாது. அந்தத்துளிக்கணத்தில் விரியும் வேகமும் அடையும் நிறைவும் நம்மில் எஞ்ச முடியும். பெண்ணால் அதை ஒருபோதும் ஏற்க முடியாது. அவள் ஆழத்தில் கடல் எனத் தன்னை எண்ணிக் கொள்பவள். ஆணுக்கு காதல்ஒரு நிமித்தம் தான், ஆடலே பொருட்டு. பெண்ணுக்கு காதலே பொருட்டு. இதை ஒரு வகையில் இந்தஆடலின் நியதி எனச் சொல்லலாம்” “என்ன உளறுகிறாய், எங்கிருந்து இந்தக் குப்பைச் சிந்தனைகளை அள்ளி வருகிறாய்” சிரித்தேன். “ஆடலின் மிக முக்கியமான சிக்கல் எதுவெனத் தெரியுமா?” என்றேன். “தெரியும்” என்றாள். அவளைப் பார்த்தேன். பிடரி முடிகள் உலைந்து கொண்டிருக்க தியானத்தில் இருப்பவள் போல அமர்ந்துகொண்டாள். “சொல்” நடன அரங்கு வெறிச்சென்று இருந்தது. காதில் பாடலோ சிறிய பேச்சுக் குரல்களோ கூடக்கேட்கவில்லை. அவளது மூக்கு நுனியின் வாளிப்பைப் பார்த்தேன். அகன்ற பொன்னிற நெற்றியில் சிகைதவழ ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மூக்கைத் தொட்டால் எவ்வளவு குளிருமோ அவ்வளவுகுளிர் என் நெஞ்சில் இருந்ததை உணர்ந்து கொண்டிருந்தேன். சிகரெட்டை எடுத்து மூட்டினேன். மார்புமயிர்கள் சூடாகி வந்தன. அவளால் அந்தக் குளிரைத் தாங்க முடியாது என மூளை ஒரு கணம் அதிர்ந்தது. “போகலாம் வா, ஒரு போர்வை வேண்டும் உனக்கு” என்றேன். ஏரி நீரின் நிச்சலனத்துடன் அவளது குரல் கேட்டது, “அது ஆடலென்பதை நாம் அறியவே கூடாது. புறவயமாக நாம் அதைச் சொல்லாக மாற்றக் கூடாது. இப்போது இக்கணம் என் இதயம் உணரும் ஒன்றைப்போல” நான் கற்சுவரிலிருந்து இறங்கினேன். இடுப்பில் கையை ஊன்றி ஒரு கையால் சிகரட்டை இழுத்தபடிஅவளைப் பார்த்தேன். அவள் ஏரியை நோக்கியிருந்தாள். நான் அவளது முதுகைப் பார்த்தேன். மெல்லியகூன் விழுந்தது போல வளைந்திருந்தாள். தலை கவிழ்ந்திருந்தது. “சரி தான், என்னுடன் ஆட வருகிறாயா?” எனக் கேட்டேன். உண்மையில் வாயால் அந்தச் சொற்களை நான்உச்சரித்தேனா? அவள் மறுப்பாள் என என்னுள் உறுதியாகச் சொல்லியது எது? அவளது உடல் சுருங்கி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விதைக்குத் திரும்ப பூ விரும்புவதைப்போல. அவளில் நிறைந்து ததும்பும் தனிமையை நெருக்கமாக உணர்ந்தேன். அருகருகே உரசும் மேனிமயிர்களின் தொடுகையென. அவளது பிளேட் உதடுகள் கூர்மையாக அச்சொல்லை உச்சரித்துப் பார்த்தன. “ஆடல்“. தனக்குள் அது இல்லையெனச் சொல்வது போல தலையை ஆட்டி மறுத்தாள். விம்மினாள். கண்ணீர்பெய்யும் விழிகளை மூடிக் கொண்டு நெஞ்சைப் பிடித்தபடி குறண்டினாள். தொட்டு வருடி விட்டிருக்கவேண்டும் நான். அதைச் செய்யக் கூடாது. விரல்களின் நுனியில் எழாத தொடுகை வெறும் காமம். நான்புகையை எடுத்து மூட்டினேன். இழுத்து நுரையீரலை நிறைத்து ஊதினேன். அவளைக் கடந்து அப்பால்இருந்த தீவின் மரங்கள் காற்றை ஊதின. ஏரியின் மார்பில் பட்டு எழுந்த குளிர்காற்று எங்களைத் தழுவிச்சென்று கொண்டிருந்தது. https://mayir.in/short-stories/kirishanth300gmail-com/4494/
  6. காளிஅம்மாவுக்கு அதிமுக வேட்பாரா நிற்கின்றாரா ஒரு தொகுதி கொடுக்கபட்டுள்ளதா ? நம்பி போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் பார்க்க பாவங்களாக இருக்கின்றது. வேறு கட்சிகளில் சான்ஸ் கொடுக்க மாட்டார்கள் என்பதால் தங்கள் ஆசையை இங்கே நிறைவேற்றி கொள்கின்றார்கள் என்றும் சொல்கின்றார்கள்
  7. உயர்தரத்தில் '3 A' சித்திகளை பெற்ற மாணவன் உயிரிழப்பு ! 04 Apr, 2026 | 01:18 PM கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A சித்திகளை பெற்ற மாணவன் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், இணுவில் பகுதியை சேர்ந்த , யாழ். இந்துக்கல்லூரி மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் 3A பெறுபேறுகளை பெற்று , யாழ்.மாவட்ட மட்டத்தில் 24ஆவது இடத்தை பெற்ற மாணவன் திடீர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/242707
  8. முடிவுக்கு வருகிறதா எரிபொருள் நெருக்கடி? இலங்கைக்கு கிடைக்கப்போகும் பாரிய சலுகை 03 April 2026 இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு மத்தியில், நாட்டுக்குத் தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ரஷ்ய முதலீட்டாளர்கள் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதை ஊக்குவிக்கவும், ரஷ்யாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முயற்சிப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையே நிலவும் சுமார் 70 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இதுவே பொருத்தமான தருணம் என அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் நீண்டகால வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், குறிப்பாக எரிசக்தித் துறையில் ரஷ்யா வழங்க முன்வந்துள்ள ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்தார். https://hirunews.lk/tm/457590/is-the-fuel-crisis-coming-to-an-end-sri-lanka-is-about-to-get-a-huge-concession
  9. தவத்திரு யோகர் சுவாமிகளின் குருபூஜை தினம் இன்று. ( பங்குனி ஆயிலியம்) ஈழத்தின் சரித்திரப் பிரசித்தி பெற்ற மாவிட்டபுரத்திலே அம்பலவாணர் என்னும் சைவப் பெரியார் ஒருவர் வாழ்ந்தார். இவரது மனைவி சின்னாச்சி அம்மையார் இவர்களது பூர்வ புண்ணிய விசேடத்தினாலே 29.05.1872 இல் அவிட்ட நட்சத்திரத்தில் ஓர் ஆண்மகவு பிறந்தது. பெற்றோர் இக்குழந்தைக்கு யோகநாதன் என்று நாமகரணம் சூட்டினர். அம்பலவாணர் மஸ்கெலியா என்ற மலைப் பிரதேசத்தில் கடை ஒன்று நடத்தி வந்தார். யோகநாதனுடைய கல்வி விடயத்தை யோசேப்பு கவனித்து வந்தார். அதனால் யோகநாதன் மாவிட்டபுரத்தைவிட்டு கொழும்புத்துறையில் வாழ வேண்டிய சூழ்நிலை உருவானது. அக்காலத்தில் சைவப் பாடசாலைகள் மிக மிகக் குறைவு. அதனால் யோகநாதனின் கல்வி கத்தோலிக்கப் பாடசாலையிலேயே ஆரம்பமானது. இளமையில் துடுக்குடையவராயும், புத்தி யுக்தி உள்ளவராயும் வாழ்ந்து வந்தார். யோகநாதனுக்கு வயது எட்டாயிருக்கும் போது தாயார் இறந்துவிட்டார். சிறிய தந்தையார் யோகநாதனுடைய கல்வியில் மிகுந்த ஊக்கம் காட்டினார். ஆங்கிலக் கல்வி கற்கும் பொருட்டு சம்பத்திரிசியார் கல்லூரியில் இணைக்கப்பட்டார். பகலில் சிறிய தகப்பனார் வீட்டிலும், மாலையில் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையிலுள்ள தந்தை வழி மாமியாராகிய முத்துப்பிள்ளை அவர்களுடைய இல்லத்துக்கும் போய்விடுவார்கள். எட்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் கற்றார். அம்பலவாணர் யோகனை அழைப்பித்து தேயிலைத் தோட்டம் ஒன்றிலே வேலைக்கு அமர்த்தினார். மலையகத்தின் இயற்கைச் சூழ்நிலை யோகனின் மனதைக் கவர்ந்தது. ஒருநாள் யோகநாதன் சிவனொளிபாதம் சென்று சூரியன் உதிக்கும் காட்சியினைக் கண்டு மகிழ்ந்து வந்தார். சிவனொளி பாதம் சென்று வந்த யோகநாதன் இயற்கையின் சூழலிலே தமது மனதைப் பறிகொடுத்து விட்டார். அதனால் தன்பாட்டிலேயே பேசத் தொடங்கினார். இது எல்லாம் உண்மை. எனது உடம்பு சிவன் சொத்து. சிவனுக்கே அது சொந்தம். அவனையே தேடிப் போனேன். இந்த விபரீத எண்ணங்களைக் கண்ட தந்தையார் இவரை யாழ்ப்பாணத்திற்கே அனுப்பிவைத்தார். யோகர் சும்மா இருக்கமாட்டார். உத்தியோகம் தேடித்திரிவார். இரணைமடுக்குளம் கட்டுமான வேலை நடைபெற்ற காலம் அங்கு சென்ற போது பிறவுண் என்ற பொறியியலாளர் பண்டகசாலை பாதுகாவலர் என்ற உத்தியோகத்தை இவருக்கு அளித்தார். உங்கள் கடமையை மறவாதீர்கள் என்று எல்லோருக்கும் உபதேசித்த சுவாமிகள் நேர்மையாகவும் உண்மையாகவும் வேலை பார்த்தார். பொறியியலாளரிடம் ஒரு நன்மதிப்பை பெற்றுக்கொண்டார். யோகநாதன் கிளிநொச்சியை விட்டு மாவிட்டபுரம் திரும்பினார். அவருக்கு அப்போது வயது 32. தந்தையும் இறந்துவிட்டார். தாயை எட்டு வயதில் இழந்தார். தந்தையை வாலிப வயதில் இழந்தார். ஆனால் மாவிட்ட கந்தன் கருணையை இழக்கவில்லை. கீரிமலையிலும் மாவிட்டபுரத்திலும் மாறி மாறி வசித்தார். கீரிமலையிலிருந்து நடையிலேயே நல்லூருக்கு வருவார். ஆத்மீகத் தாகம் மேலிட்ட காலம். குரு ஒருவரை தேடி அலைந்த காலம். பற்றுக்கோடாக இருந்த இரு முதுகுரவரையும் இழந்த போது பற்றுக்கோடு ஒன்றை நாடினார். நல்லூர்த் தேரடியில் செல்லப்பா சுவாமிகளை சந்தித்தார். செல்லப்பா சுவாமிகளின் பார்வை இவரை காந்தமெனக் கவர்ந்தது. குருநாதனை சந்தித்த அனுபவத்தை அவரே கூறுகின்றார். கருத்தில் நினைந்துருகி கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந் தீர்க்கும் வடிவேல்– திருத்தலத்தில் தேரடியில் தேசிகனைக் கண்டு தரிசித்தேன். ஆரடா நீ என்றான் அவன் விசர்ச் செல்லப்பா என்று மக்களால் ஏசப்பட்ட செல்லப்பா சுவாமிகளைச் சூழ ஒரு கூட்டம் கூடத் தொடங்கியிருந்த காலம் செல்லப்பா சுவாமிகளின் அரிய சீடர்கள் கதிரவேலுச்சாமியும், யோகநாதனும் ஆவர். பெரும்பாலும் மூவரும் ஒன்று கூடித்திரிவர். சண்டை போடுவர். சமையல் செய்வர். சமையல் முடியும் தருணத்தில் சட்டி பானையை உடைப்பர். இச்செயலைக் கண்டால் யார்தான் இவர்களைப் பைத்தியம் என்று கூறமாட்டார்கள். யோகர் சுவாமிகள்கொழும்புத்துறையில் சிற்றம்பலம் சம்பந்தர் என்னும் ஒரு சைவப் பெரியார் வளவில் றோட்டுப் பக்கமாக ஒரு இலுப்பை மரம். இந்த இலுப்பை மரத்தின் கீழேதான் யோகர் சுவாமிகளுடைய அருந்தவம் நடைபெற்றது. கொழும்புத்துறை வளவில் இருந்த கடையொன்றைத் திருநாவுக்கரவு என்பவர் திருத்தி அமைத்துக் குடிசை ஒன்று கட்டிக்கொடுத்து சுவாமிகளை அதில் தங்குமாறு அவரும் அவரது தாயாரும் அன்புடன் வேண்டிக் கொண்டனர். அவர்களுடைய அன்புக்கு கட்டுப்பட்ட சுவாமிகள் பூத உடலைவிட்ட உயிர் பிரியும் வரை அக்குடியையிலேயே வாழ்ந்து வந்தார்கள். சுவாமிகளை நாடி நாள் தோறும் கூட்டம் கூடத் தொடங்கியது. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் பெருங்கூட்டம் திருமுறைகள் பாராயணம் இடம்பெறும். எல்லாத் தரங்களிலும் உள்ள மக்கள் ஒன்று கூடுவார்கள். ஆன்மீக தாகம் கொண்டவர்களும் வருவார்கள். தங்கள் இட்டல் இடைஞ்சல்களை தீர்த்துக் கொள்வதற்காகவும் வருவார்கள். சுவாமிகளை சோதித்துப் பார்க்கவும் வருவார்கள். சுவாமிகள் தம்மை நாடி வந்தவர்களுடைய உள்ளப்பாங்கை அறிந்து அவர்களுக்கேற்ற வகையில் புத்திமதிகள் கூறுவார்கள். சிலரை ஏசியும் துரத்துவார்கள். அதைப் பொருட்படுத்தாமல் தம்மைத் மேலும் மேலும் நாடி வந்தவர்களை அன்புடன் அணைத்து அருளுரை வழங்குவார்கள். அவர்களை ஏசுவதன் மூலம் அவர்கள் வினைகளைச் சுவாமிகள் தொலைத்து விடுவார்கள். இவ்வுண்மையை உணர்ந்த அடியார்கள் சுவாமிகளின் மறமயக் கருணையை நினைந்து நினைந்து ஆனந்த புஷ்பம் சொரிவார்கள். “எல்லோரும் ஒரு குலம், எல்லோரும் ஒரு இனம்” என்பது சுவாமிகள் தம்மை நாடி வருபவர் களுக்கு அடிக்கடி கூறும் உபதேச மாகும். ‘எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம். எல்லோரும் சமம்’ என்றும் கூறுவார்கள். “நீயும் மனிதன் நானும் மனிதன் உங்கள் கடமையைப் போய்ச் செய்யுங்கள். இங்கே ஏன் வருகின்றீர்கள்? நாங்கள் பிச்சைக்காரர்கள், நாங்கள் சும்மா இருக்கின்றோம். எங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்று ஏசிக்கலைப்பதும் உண்டு. “கர்மவினையால் எமக்கு இப்பிறவி வந்தது. நாம் ஒன்றும் அறியோம். நாம் ஏன் இங்கு பிறந்தோம்? இப்பிறவியால் ஒரு பொல்லாப்பும் இல்லை. அதனால் பாதகமும் இல்லை. பிறப்பு வர இருந்தது. வந்துவிட்டது. நாங்கள் ஆத்மலாபத்தை நல்லாய்த் தேடிக் கொள்ளலாம்.” என்று உபதேசம் செய்தார்கள். சுவாமிகளுடைய உபதேசங்களை எலலோருக்கும் பரப்ப வேண்டும் என்று அடியார் கூட்டம் விரும்பியது. சுவாமிகளிடம் மாத வெளியீடு ஒன்று வெளியிடுவது பற்றி அடியார்கள் விண்ணப்பித்தார்கள். சுவாமிகளும் அதற்கிசைந்து நாம் எல்லோரும் சிவத் தொண்டர்கள். நாம் செய்வது சிவத்தொண்டு ஆகவே எமது வெளியீடும் ‘சிவத் தொண்டன்’ ஆக இருக்கட்டும் என்றார்கள். 1935ம் ஆண்டு மார்கழி மாதம் முதலாவது இதழாகிய சிவத்தொண்டன் திரு. க. கி. நடராசன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. சிவத்தொண்டனுக்கு நிலையம் ஒன்று காங்கேசன்துறை வீதியில் 4-11-1953 இல் உருவானது. அந்த நிலைய மேல் மாடியில் இன்னும் தியான மண்டபத்தில் சுவாமிகளுடைய ஆன்மிக அலையை இன்னும் அனுபவிக்கலாம். சுவாமிகள் தமது அடியார்கள் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கெல்லாம் செல்வார். யாருக்கும் அறிவித்தல் கொடுக்க மாட்டார். இருந்தாற் போல் ஒரு அடியவருடைய வீட்டில் தோன்றுவார். கேள்வியுற்ற அடியவர்கள் எல்லோரும் அங்குவந்து கூடுவர். அவர்களுக்கெல்லாம் நல்லுபதேசம் கிடைக்கும். சிலசமயம் கண்மூடி சிவயோகத்திலே ஆழ்ந்து விடுவார். அன்பர்களும் தியானத்தில் மூழ்கி ஆனந்தம் பெறுவர். இரண்டு வருடகாலம் சுவாமிகள் கொழும்புத்துறை ஆச்சிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. 24.03.1964 செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆயிலிய நட்சத்திரத்தில் சுவாமிகள் மகாசமாதி அடைந்தார்கள். சுவாமிகளுடைய குருபூசை ஆயிலிய நட்சத்திரத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. எவ்வுயிரும் பெருமான் முன்னிலையென்று கருணை செய் கடவுள் உள்ளும் புறமும் உள்ளார். சுவாமிகளின் மறைவுக்குப் பின்னர் அவரது சீடர்களான மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள் போன்றோர் அவரது பணியை முன்னெடுத்துச் சென்றார்கள். Thivakara Sarma ·
  10. Today
  11. மாலை முரசு இப்போ யாருக்கு தமுக்கடிக்கிறது என யாருக்கும் தெரியுமா? ஏன் கேட்கிறேன் என்றால் - அவர்களின் உங்கள் வாக்கு யாருக்கு என தொகுதிகளில் கேட்கும் கேள்விகளுக்கு, 40 பேரை கேட்டால், திமுக, அதிமுக, தவெக 2/3 புள்ளிகள் வித்தியாசத்தில் வருகிறன. சில இடங்களில் தவெக 2ம் இடம் வருகிறது. இது நிஜத்தில் பிரதிபலித்தால், திமுக மெஜாரிட்டி, அதிமுக 2ம் இடம், தவெக 20% மேல் எடுத்து 3ம் இடம் என வரும் என நினைக்கிறேன்.
  12. அமெரிக்காவிற்கு... அடி மேல் அடி விழுந்து கொண்டுள்ளது. 😂 அமெரிக்காவிற்கு... இன்னொரு வியட்நாம் தான், ஈரான். 🤣 வெட்கப் படாமல்... வெள்ளைக் கொடியுடன், ஈரானிடம் சரண் அடைவதே புத்திசாலித்தனம். 😂 🤣
  13. இரானில் வீழ்த்தப்பட்ட போர் விமானத்தில் இருந்த வீரரை தேடும் போட்டியில் அமெரிக்கா, இரான் - நேரலை பட மூலாதாரம்,EPA/Shutterstock படக்குறிப்பு,இரான் வான்வெளியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன (விளக்கப் படம்) 4 ஏப்ரல் 2026, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தில் இருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரானியப் படைகளே அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இரானின் அரசு ஊடகம் உரிமை கோருகிறது. முன்னதாக, தெற்கு இரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) போர் விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும் முயற்சி நடைபெற்று வருவதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த இரண்டாவது நபருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. இரான் பாதுகாப்பு படைகள் காணாமல் போன நபரை தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக இரான் அரசு ஊடகம் கூறியுள்ளது. காணொளிக் குறிப்பு இரானால் 'எதுவும் செய்ய முடியாது' என கூறிய டிரம்ப் எஃப்-15 குழுவினரை மீட்க முயன்றபோது ஏ-10 வார்தாக் (A-10 Warthog) மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உட்பட மேலும் இரண்டு அமெரிக்க விமானங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக சிபிஎஸ் தெரிவிக்கிறது. இந்தப் போரில், இரான் வான்வெளியில் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறியப்படுவதில் இதுவே முதல் சம்பவமாகும். மேலும், அமெரிக்க விமானங்கள் இரானுக்கு மேல் பறக்கும், ஆனால் இரானால் 'எதுவும் செய்ய முடியாது' என்று டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இது நடந்துள்ளது. அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது போரை முடிவுக்குக் கொண்டுவர இரானுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக என்பிசி நியூஸ் தெரிவிக்கிறது. ஒரு குறுகிய தொலைபேசி நேர்காணலில், இந்த நிகழ்வுகள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று அமெரிக்க அதிபரிடம் கேட்கப்பட்டதாக என்பிசி நியூஸ் கூறுகிறது. அதற்கு அவர், "இல்லை, இல்லவே இல்லை. இது போர். நாம் போரில் இருக்கிறோம்," என்று பதிலளித்தார். பட மூலாதாரம்,State media படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட படங்களில் காணப்படும் பாகங்கள், அமெரிக்காவின் எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் ரக விமானத்தைச் சேர்ந்தவை என்பதை நிபுணர்களிடம் பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. 'விளைவுகள் மோசமாக உள்ளன' அயோன் வெல்ஸ் பிபிசி செய்தியாளர் இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சிபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தச் சம்பவத்தின் விளைவுகள் தொடக்கத்தில் நினைத்ததை விட மோசமாக உள்ளன. எஃப்-15இ (F-15E) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மட்டுமின்றி, வீழ்த்தப்பட்ட விமானத்தைத் தேடும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஏ-10 வார்தாக் விமானமும் சுடப்பட்டு சேதமடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். எஃப்-15இ விமானத்திலிருந்து வெளியேறிய ஒரு விமானி வெற்றிகரமாக மீட்கப்பட்டார். மீட்புப் பணியில் இரண்டு ஹெலிகாப்டர்களும் பங்கேற்று, வெளியேறிய எஃப்-15இ விமானியை மீட்டன, ஆனால் இரண்டாவது நபரைத் தேடும் பணி தொடர்கிறது. மீட்கப்பட்ட விமானியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் மீது சிறிய ரக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அதிலிருந்த குழுவினர் காயமடைந்தனர். இரானால் தனது வான்வெளியில் பறக்கும் அமெரிக்க விமானங்கள் குறித்து எதுவும் செய்ய முடியாது என்ற டொனால்ட் டிரம்பின் சமீபத்தில் தெரிவித்துள்ள போதிலும், ஆபத்துகள் இன்னும் அதிகமாகவே உள்ளன என்பதை இவை அனைத்தும் காட்டுகின்றன. அமெரிக்க 'விமானியை' தேடும் இரான் கோன்ஷே ஹபிபியாசாத் மூத்த செய்தியாளர், பிபிசி பாரசீக சேவை அமெரிக்கா, தனது போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 போர் விமானத்தின் 'காணாமல் போன விமானியை' தேடும் பணிகள் இன்னும் முழு வீச்சில் தொடர்வதாக இரானின் தெற்கு கோகிலுயே-போயரஹ்மத் மாகாணத்தின் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார். இரானின் அரசு ஆதரவு செய்தி முகமையான ஃபார்ஸ் (Fars) செய்தியின்படி, "காணாமல் போன நபரை கண்டுபிடிப்பதற்கான, காவல்துறை, பாதுகாப்புப் படைகள் மற்றும் உள்ளூர் மக்களின் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன" என்று மாகாண துணை ஆளுநர் கூறியதுடன், 'காணாமல் போன விமானி' பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு அப்பகுதி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். விமானம் சரியாக எங்கே சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும், இரானின் அரசு ஊடகங்களில் இதுவரை இரண்டு மாகாணங்களின் பெயர்கள் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன - அவை கோகிலுயே-போயரஹ்மத் மற்றும் குசெஸ்தான். பட மூலாதாரம்,Reuters 'போருக்கு எதிராக அமெரிக்க மக்களை மேலும் தூண்டிவிடக்கூடும்' கிரேஸ் எலிசா குட்வின் பிபிசி செய்தியாளர், அமெரிக்கா இரண்டு ராணுவ ஆய்வாளர்களிடம் பேசுகையில், அவர்கள் இரான் வான்வெளியில் ஒரு அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது செயல்பாட்டு ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்றாலும், இது போருக்கு எதிராக அமெரிக்க மக்களை மேலும் தூண்டிவிடக்கூடும் என்று கூறுகிறார்கள். "ஆரம்பத்திலிருந்தே இதுவொரு தவறான போர் என்றும், இது அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தேவையற்ற ஆபத்து என்றும், இது அமெரிக்க ராணுவ சக்தியின் தேவையற்ற பயன்பாடு மற்றும் அமெரிக்க ராணுவ வளங்களை இது வீணடிக்கிறது என்று வாதிடுபவர்களுக்கு - இந்தச் சம்பவம் வலு சேர்க்கிறது," என்று டிஃபென்ஸ் பிரையாரிட்டிஸ் சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளரும் ராணுவப் பகுப்பாய்வு இயக்குநருமான ஜெனிபர் கவானாக் கூறுகிறார். இந்த சிந்தனைக் குழு கட்டுப்பாடுகளுடன் கூடிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கிறது. இந்தச் சம்பவம், தற்போதைக்கு, டிரம்ப் போரைக் கைவிடுவதை 'அரசியல் ரீதியாக அடிப்படையில் சாத்தியமற்ற ஒன்றாக மாற்றுகிறது' என்று அவர் கூறுகிறார். ஏனென்றால், போர் வெற்றி குறித்த தனது கூற்றுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமெரிக்க அதிபருக்கு வேறு ஏதேனும் தேவைப்படுகிறது, ஆனால் இந்தச் சம்பவம் அத்தகைய ஒன்றல்ல என்று ஜெனிபர் கூறுகிறார். 'தி வாஷிங்டன் இன்ஸ்டிடியூட்' சிந்தனைக் குழுவின் ராணுவ உத்தி நிபுணரும் ஆய்வாளருமான ஜேம்ஸ் ஜெஃப்ரி பேசுகையில், "இந்தத் துயரச் சம்பவத்தின் விளைவாக, போர் குறித்த தங்களது கோபம் தற்போது மேலும் அதிகரித்துள்ளதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுவார்கள்" என்கிறார். "இது உண்மையில் ஒரு கவலைக்குரிய விஷயம், ஏனென்றால் அவர்கள் அப்படித்தான் உணர்கிறார்கள்," என்று ஜெஃப்ரி கூறுகிறார். "பெரும்பாலான நவீன நாடுகளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கர்கள் தங்களது ராணுவ வீரர்களை அதிகமாக நேசிக்கிறார்கள்." ஆனால், ''பொதுமக்களின் கவலை, டிரம்ப் போரை எவ்வாறு கையாள்கிறார் என்பதையோ அல்லது அவர் அடுத்ததாக எடுக்கப்போகும் நடவடிக்கைகளையோ பாதிக்காது'' என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,F-15 போர் விமானம் (விளக்கப் படம்) அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவங்கள் கடந்த சில தசாப்தங்களில் எதிரிப் படைகளால் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்து வருகிறது. மார்ச் தொடக்கத்தில், குவைத்துக்கு மேலே மூன்று அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானங்கள் நட்பு நாட்டுப் படையின் தவறுதலான தாக்குதல் காரணமாக வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு (CentCom) தெரிவித்தது. இந்தச் சம்பவத்தில் விமானங்களில் இருந்த ஆறு வீரர்களும் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது. மார்ச் 12 அன்று மேற்கு இராக்கில் நடந்த மற்றொரு சம்பவத்தில், அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் இருந்த ஆறு பேரும் கொல்லப்பட்டதாக சென்ட்காம் (CentCom) தெரிவித்தது. 7 ஏப்ரல் 2003 அன்று, 'இராக் சுதந்திர நடவடிக்கையின்' (Operation Iraqi Freedom) போது இராக்கிற்கு மேலே பறந்த ஒரு அமெரிக்க எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானி எரிக் தாஸ் மற்றும் ஆயுத அதிகாரி வில்லியம் வாட்கின்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க கடற்படை நினைவு இணையதளத்தின்படி, இராக்கின் டிக்ரிட் அருகே உள்ள இலக்குகளைத் தாக்கும் ஒரு முக்கியமான பணியை மேற்கொள்வதற்காக, அந்த விமானம் கத்தாரில் உள்ள அல் உதைத் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டது. அமெரிக்க விமானப்படையின் கூற்றுப்படி, 8 ஏப்ரல் 2003 அன்று இராக்கின் பாக்தாத்தில், தரையிலிருந்து வான்நோக்கி பாயும் ஏவுகணை மூலம் அமெரிக்காவின் ஏ-10 தண்டர்போல்ட் II (A-10 Thunderbolt II) விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக விமானி பாதுகாப்பாக வெளியேறினார். மற்றொரு எஃப்-15இ (F-15E) போர் விமானம் மார்ச் 2011இல் வடகிழக்கு லிபியாவில் விழுந்து நொறுங்கியது. விமானியை மீட்பதற்காக நான்கு விமானங்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டதாக அமெரிக்க கடற்படை அப்போது தெரிவித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y8kdr7vgjo
  14. ஆப்கானிஸ்தானில் வெள்ள அனர்த்தம் : 50 பேர் உயிரிழப்பு – பல மாகாணங்களில் கடும் சேதம் Published By: Digital Desk 2 04 Apr, 2026 | 11:48 AM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஐ கடந்துள்ளது. கடந்த எட்டு நாட்களில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 89 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு நாட்டின் பல பகுதிகளை தாக்கியுள்ள நிலையில், குறைந்தது 18 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தலைநகர் காபூல், கந்தஹார் மற்றும் ஹெராத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளும் அடங்குகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூவர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.செய்தி அறிவிப்புகள் இந்த பேரழிவால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நூற்றுக்கணக்கான வீடுகள் முற்றிலும் அழிந்ததோ அல்லது சேதமடைந்ததோடு, சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கடந்த ஒரு நாளில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மார்ச் 26 முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் 676 வீடுகள் அழிந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் வீதிகள் சேதமடைந்துள்ளன. மேலும், சுமார் 4,000 ஏக்கர் நிலப்பரப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், நாடு முழுவதும் 8,600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வசந்த காலத்தில் கனமழையும் பனிப்பாறைகள் உருகுவதும் காரணமாக, ஆப்கானிஸ்தான் அடிக்கடி வெள்ள அபாயத்திற்கு உள்ளாகும் நாடாகும். இதனால் பலவீனமான கட்டமைப்புகள் மேலும் அழுத்தத்திற்குள்ளாகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு கிராமப்புற மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/242710
  15. '2வது போட்டியிலே இப்படியா?' - சிஎஸ்கே தோல்விக்கான 4 காரணங்கள் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த சீசனில் தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்திருக்கிறது சூப்பர் கிங்ஸ் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 3 அன்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் 209 ரன்கள் எடுக்க, அந்த இலக்கை 18.4 ஓவர்களிலேயே எட்டியது பஞ்சாப் கிங்ஸ். இந்த சீசனில் விளையாடிய 2 போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்திருக்கிறது. மேலும், சேப்பாக்கத்தில் விளையாடிய கடைசி 7 போட்டிகளிலுமே சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்தபோது சிஎஸ்கே நன்றாக செயல்பட்டது போன்று தெரிந்தாலும், அந்த இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி பெரிய சவால் ஏதுமின்றி சேஸ் செய்தது. 8 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது ஷ்ரேயாஸ் ஐயரின் அணி. இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸ் தோற்றதற்குக் காரணமாக இருந்த 4 விஷயங்கள் என்ன? பவர்பிளே பந்துவீச்சு இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் ஓப்பனர் பிரியான்ஷ் ஆர்யா சந்தித்தது வெறும் 11 பந்துகள்தான். அந்த 11 பந்துகளிலேயே ஆட்டத்தை மாற்றக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தினார் அவர். மேட் ஹென்றி, கலீல் அஹமது இருவரின் பந்துவீச்சையும் விளாசிய அவர் அந்த 11 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள். ஒருபக்கம் அவர் அதிரடி காட்டுகிறார் என்றால், அதை சமாளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சும் இருக்கவில்லை. சிறப்பாக புல் ஷாட் அடிக்கும் பிரியான்ஷ் ஆர்யாவுக்கு எதிராக நிறைய ஷார்ட் பால்கள் வீசினார்கள். கலீல் சில நல்ல பந்துகள் வீசினாலும், ஓரிரு பந்துகளை பிரியான்ஷ் அடிப்பதற்கு ஏற்ப வீசினார். மறுபக்கம் ஹென்றியோ முழு ஓவரையும் அப்படித்தான் வீசினார். பிரியான்ஷ் அவுட் ஆனபோது 4.2 ஓவர்களில் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 61 ரன்கள். அதாவது 26 பந்துகளில் 61 ரன்கள். எகானமி - 14.08! பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பவர்பிளேவில் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு அவர்களைப் போட்டியில் பின்தங்கவைத்தது (கோப்புப் படம்) அந்த அளவுக்கு சரியான திட்டமிடல் இல்லாமல் ஒரேமாதிரியாக இருந்தது சூப்பர் கிங்ஸின் பவர்பிளே பந்துவீச்சு. கலீல், ஹென்றி இருவரும் பிரியான்ஷ் அடிப்பதுபோல் பந்துவீசுகிறார்கள் என்றால், அதற்கு இடையே பிரப்சிம்ரனுக்கு ஏற்ற வகையில் ஃபுல் லென்த் பந்துகளாக வீசினார் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ். அப்படி அவர் வீச, ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார் பிரப்சிம்ரன். இரண்டு ஓப்பனர்களும் சிறப்பாக ஆடியதால் பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் பவர்பிளேவில் எடுத்த ஸ்கோர் 57/1. முதல் கட்டத்திலேயே பஞ்சாப்பை விட 11 ரன்கள் கூடுதலாகப் பெற்றது சிஎஸ்கே. சூப்பர் கிங்ஸுக்கு பவர்பிளேவில் போட ஓரளவு சரியான பௌலர்கள் இருக்கிறார்கள் என்றும், டெத் பௌலிங் தான் பிரச்னை என்றும் பேசப்பட்டது. ஆனால், பவர்பிளேவிலேயே இப்படிப் பந்துவீசி பின்தங்குகிறார்கள். ஆட்டமோ டெத் ஓவர்களை அடைவதற்கு முன்னதாகவே ஒருதலைப்பட்சமாக மாறிவிடுகிறது. ஸ்பின்னர்களின் செயல்பாடு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சூப்பர் கிங்ஸ் ஸ்பின்னர்கள் இந்தப் போட்டியில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை (கோப்புப் படம்) ஆயுஷ் மாத்ரே தன் அதிரடியை ஆரம்பித்ததும் சென்னை சூப்பர் கிங்ஸின் ரன்ரேட் மெல்ல உயரத் தொடங்கியது. நான்காவது ஓவரிலிருந்து மெல்ல உயரத் தொடங்கிய ரன்ரேட் ஏழாவது ஓவரில் முதல் முறையாக பத்தைத் தொட்டது. ஆனால், அடுத்த ஓவரே அதை சற்றுக் குறைத்தார் சஹல். அப்போது மட்டுமல்ல, இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் வீசிய அவர், ஒவ்வொரு முறையும் ரன்ரேட்டைக் குறைத்தார். சிஎஸ்கே பேட்டர்களின் நம்பிக்கையிலும் சிறு விரிசலை ஏற்படுத்தினார். 3 ஓவர்கள் பந்துவீசிய அவர் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். மொத்தம் 6 பௌலர்கள் பந்துவீசிய இந்தப் போட்டியில் ஒன்பதுக்கும் குறைவான ரன்ரேட்டில் பந்துவீசிய பௌலர் இவர் மட்டுமே. இவர் பந்துவீச்சில் பஞ்சாப் ஃபீல்டர்கள் ஆயுஷ் மாத்ரேவின் இரண்டு கேட்சுகளைத் தவறவிட்டனர். இல்லையேல் அவர் கூடுதலாக விக்கெட் வீழ்த்தியிருக்கக்கூடும். அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நூர் அஹமது, ராகுல் சஹர் என 2 ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது. ராகுல் சஹரை இம்பேக்ட் வீரராக களமிறக்கினார். சஹல் போல் இவர்கள் தாக்கம் ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. இரு சிஎஸ்கே ஸ்பின்னர்களும் சேர்ந்து 8 ஓவர்களில் 84 ரன்கள் கொடுத்தனர். விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்த முடியவில்லை. போக, அவர்களால் எந்த வகையிலும் பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்களுக்கு சவால் கொடுக்க முடியவில்லை. போட்டிக்குப் பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணிக்குத் தேவைப்படும் ரன்ரேட் கிட்டத்தட்ட 11 வரை சென்றது. அப்போது இரண்டு நல்ல ஓவர்கள் வீசியிருந்தால் அது 12-13 வரை சென்றிருக்கும். ஆனால், எங்களுக்கு அது கிடைக்கவில்லை" என்று கூறினார். பஞ்சாப் கிங்ஸுக்கு சஹல் செய்ததை சூப்பர் கிங்ஸுக்காக சஹர் மற்றும் நூர் இருவரால் செய்ய முடியவில்லை. யுஸ்வேந்திர சஹல் இந்த ஆடுகளத்தை நன்கு கணித்து வேகத்தை வேறுபடுத்தினார். சில பந்துகளை சுமார் 70-75 kmph வேகத்திலும் கூட வீசினார். அப்படி மெதுவாக வீசப்பட்ட பந்துகள் சூப்பர் கிங்ஸ் பேட்டர்களுக்கு சவாலாக அமைந்தன. ஆனால், சென்னை ஸ்பின்னர்களோ அப்படி எதுவும் செய்யாமல் தங்களின் வழக்கமான வேகத்திலேயே பந்துவீசினார்கள். அது அவர்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. அணித்தேர்வும் பயன்பாடும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜேமி ஓவர்டன் இந்தப் போட்டியில் விளையாடவில்லை (கோப்புப் படம்) இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெளிநாட்டு வீரர்களைத் தான் பயன்படுத்தியது - மேட் ஹென்றி, நூர் அஹமது. கடந்த போட்டியில் 43 ரன்கள் எடுத்து அணியை ஓரளவு நல்ல ஸ்கோர் எட்ட உதவிய ஜேமி ஓவர்டனை அவர்கள் பிளேயிங் லெவனில் சேர்க்கவில்லை. அதற்குப் பதிலாக பிரஷாந்த் வீர் இந்தப் போட்டியில் வாய்ப்பு பெற்றார். பிரஷாந்த் வீரின் பந்துவீச்சை பயன்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்குமோ என்று கருதப்பட்ட நிலையில், அவருக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட ஆட்டம் கையை விட்டுப் போன பிறகும் கூட பிரஷாந்த் வீருக்கு கெய்க்வாட் பந்தைக் கொடுக்கவில்லை. அப்படி அவரை பேட்டராகத்தான் பயன்படுத்தப்போகிறார்கள் என்றால், அதற்கு ஓவர்டனையே பயன்படுத்தியிருக்கலாம் என்று வல்லுநர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்தப் போட்டியில் 7 பந்துகளை சந்தித்த பிரஷாந்த் வீர் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருக்காக கடைசி கட்டத்தில் நன்றாக அதிரடி காட்டக்கூடிய ஓவர்டனை களமிறக்காதது கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு கிரிக்பஸ் நிகழ்ச்சியொன்றில் பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூட, ஜேமி ஓவர்டன் இந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினார். உடல்மொழி பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 7 ஐபிஎல் போட்டிகளில் தோற்றிருக்கிறது சிஎஸ்கே (கோப்புப் படம்) போட்டி முடிந்த பிறகு ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், "சிஎஸ்கே அணியின் பேட்டிங், பௌலிங் ஆகியவற்றைவிட அவர்களின் உடல்மொழி தான் எனக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஆட்டத்தின் 12வது ஓவரிலேயே அவர்களின் உடல்மொழி தொய்வடைந்துவிட்டது. அதுதான் எனக்கு பெரிய கவலையாக இருக்கிறது" என்று கூறினார். சீசனின் இரண்டாவது போட்டியிலேயே அணியின் உடல்மொழி விமர்சிக்கப்படுகிறது என்றால் அது சற்றே ஆபத்தானதுதான். தொடர்ந்து தடுமாற்றமான செயல்பாடுகள் வந்துகொண்டே இருப்பதால் அது வீரர்களின் நம்பிக்கையில் தாக்கம் ஏற்படுத்தக்கூடும். ஆனால், அதை சூப்பர் கிங்ஸ் சரியாகக் கையாள்கிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ருதுராஜ் நடுவே தங்களால் நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை என்கிறார். ஆனால், ஆட்டத்தின் பாதியிலேயே சோர்ந்துவிடும் உடல்மொழியை வீரர்கள் வெளிக்காட்டும்போது எதிரணி எப்படி நெருக்கடிக்குள்ளாகும்? இது சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் அடுத்த போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியோடு மோதுகிறது. இந்தப் போட்டி பெங்களூருவில் நடக்கிறது. - இது, பிபிசிக்கா கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg9ewn7lj1o
  16. அமெரிக்கா ஈரானுக்கெதிராக இன்னமும் வான் ஆதிக்கம் கொண்டதாகவே காணப்படுகிறது, விமானிகளை மீட்பதற்காக மீட்பு பணிகளை செய்வதற்காக விமான எதிர்ப்பு ஏவுகனைகளை எதிர்கொள்வதற்காக தாழ்வாக பறந்து செல்கின்ற நிலை காணப்படுகிறது. தாழ்வாக பறக்கும் விமானத்தினை சுட்டு வீழ்த்தும் மான்பாட் களை பயன்படுத்தும் நிலை கூட காணப்படவில்லை, இரஸ்சிய உக்கிரேன் போரில் ஆரம்ப காலத்தில் இவ்வாறு தாழ்வாக பறந்த இரஸ்சிய விமானத்தினை வகை தொகையின்றி உக்கிரேன் இராணுவத்தினர் மான்பாட் களை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியிருந்தனர். ஈரானிய படையினர் தற்போது விமானங்களை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்பட்ட விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அனைத்தும் குறுந்தூர எல்லை கொண்ட ஏவுகணைகளே, இவற்றின் பிற ஊதா செயற்பாடு நீண்ட நடுத்தர தூர ஏவுகணைகளில் உள்ள ராடர் தொழில்னுட்பம் இன்மையால் அமெரிக்க விமானப்படைக்கு விமான எதிர்ப்பு ஏவுகனை தொடர்பான எச்சரிப்பு கிடைப்பதில்லை, அதுவே அமெரிக்க விமானப்படைக்கு தலையிடியாகவுள்ளது, தாழ்வாக அல்லது மிக உயரமாக பறக்கும் அமெரிக்க விமானத்தினை ஈரானால் தற்போதுள்ள நிலையில் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே உண்மை, அத்துடன் குறித்த குறுந்தூர ஏவுகனைகளில் கூட ஒரே ஒரு சூடு மட்டும் செய்கின்ற நிலை காணப்படுகிறது (காணொளிகளை பார்க்கும் போது), இது ஈரானினது குறித்த ஏவுகணைகளின் இருப்புக்களின் அளவு தொடர்பில் சந்தேகம் ஏற்படுத்துகிறது (அல்லது திட்டமிட்டு வேண்டு மென்றே தவறாக தம்மை பிரதிபலிக்கிறார்களோ தெரியவில்லை). இது ஒரு இணைய மிகைப்படுத்தலகவே இந்த நிகழ்வுகளை கொள்ளமுடியும், அமெரிக்க விமானப்படை இன்னமும் ஈரானில் எதுவும் செய்யும் நிலையிலேயே காணப்படுவதாகவே கருதுகிறேன்.
  17. தர்மபுரம் பகுதியில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பலி Apr 4, 2026 - 08:18 AM கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் - முல்லைத்தீவு (A35) வீதியில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (03) இரவு 10 ஆம் வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்த மோட்டார் கிரேடர் (Motor Grader) வாகனத்துடன், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் என என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -கிளிநொச்சி நிருபர் சப்தன்- https://adaderanatamil.lk/news/cmnjqf1ib0006356pkv1mpz7v
  18. ஆர்டெமிஸ் II : பூமியின் முதல் தொகுதி புகைப்படங்கள் நாசா வெளியீடு Published By: Vishnu 04 Apr, 2026 | 04:02 AM ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் எடுத்த பூமியின் முதல் தொகுதிப் புகைப்படங்களை நாசா வெள்ளிக்கிழமை (03) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாசா இந்தப் புகைப்படத்தைத் தனது X கணக்கில் "அது நாங்கள்!" என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளது. 1972 முதல் நிலவுக்குப் பயணம் செய்து வரும் ஓரியன் விண்கலம், தனது பயணத்தின் முதல் நாளில், உயிர் ஆதரவு அமைப்புகள் மற்றும் காற்று அமைப்புகள் உள்ளிட்ட விண்கலத்தின் செயல்பாட்டைச் சோதிப்பதற்காகப் புவி சுற்றுவட்டப்பாதையில் இருந்தது. இருப்பினும், விண்கலம் ஏவப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, அதன் கழிப்பறை அமைப்பில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. கட்டுப்பாட்டு அறையின் உதவியுடன் அவர்கள் அந்தச் சிக்கலைத் தீர்த்தனர், பின்னர் புவி சுற்றுவட்டப்பாதையை விட்டு நிலவை நோக்கிய பாதையில் பயணித்தனர். நான்கு விண்வெளி வீரர்களும் நலமாக இருப்பதாகவும், விண்கலமும் நன்றாகச் செயல்படுவதாகவும் நாசா அறிவித்துள்ளது. விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்கள், தங்களது முதல் நாள் முடிவில் காணொளிக் காட்சி அழைப்பு மூலம் நாசாவுடன் தொடர்புகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அதன்படி, அந்த விண்கலம் 4 நாட்களுக்குள் நிலவை இன்னும் நெருங்கிச் செல்லும். https://www.virakesari.lk/article/242683 This handout picture provided by NASA shows a view of a backlit Earth as seen through the Orion spacecrafts window, photographed by NASA astronaut Reid Wiseman [Reid Wiseman/NASA/AFP]
  19. ஈரான், இஸ்பஹான் மாகாணத்தின் மேல் பறந்த ஒரு அமெரிக்க ட்ரோனை தாங்கள் வீழ்த்தியதாக அறிவித்துள்ளது. ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது, இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் “மேம்பட்ட நவீன” வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் அந்த MQ‑1 ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளன. இதற்கு முன்பும், ஈரான் படைகள் இரண்டு அமெரிக்க ராணுவ விமானங்களை வீழ்த்தியதாக தெரிவித்திருந்தன — ஒன்று தென்‑மேற்கு ஈரானில், மற்றொன்று ஹோர்முஸ் நீரிணை அருகே. Al JazeeraIran fires more missiles at Israel, celebrates downing of...Celebrations in Tehran as Iran's military says the strikes show its forces still have fighting capability.
  20. அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானத்தையும் சுட்டு வீழ்த்திய ஈரான் Apr 4, 2026 - 07:50 AM ஈரானிய பாதுகாப்புப் படையினர் அமெரிக்காவின் A-10 ரக விமானம் ஒன்றின் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வான்பரப்பில் வைத்து இந்த விமானம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதன் விமானி வான்குடை மூலம் வெளியேறி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈரானினால் நேற்று (3) சுட்டு வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் விமானியைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த விமானமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnjpgno90005356pof9lra2d
  21. சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பணிசுமையும் அதிகரிப்பு ; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ 03 Apr, 2026 | 04:03 PM (செ.சுபதர்ஷனி) குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரேத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைத் கைது செய்தல் மற்றும் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தும் நடவடிக்கைகள் என்பன துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு, சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பணிசுமையும் அதிகரித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மார்ச் மாதம் 20ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்காக தேசிய வாய் சுகாதார பரிசோதனை மற்றும் நடமாடும் பல் மருத்துவ சேவைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த விசேட வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, வியாழக்கிழமை (02) சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் வெலிக்கடை சிறைச்சாலை ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு பயிற்சி மத்திய நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காகப் பல திட்டங்களை நாம் செயல்படுத்தினோம். அதேவேளை, சமூகத்தில் அதிகம் பேசப்படாத எனினும் பாரிய சேவையை ஆற்றிவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களைச் சுகாதார அமைச்சு மறந்துவிடவில்லை. அண்மைகாலமாக குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிது கைது செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்ட நிலையில், சிறை கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால் சிறை அதிகாரிகளின் வேலைப்பளுவும் பலமடங்காக அதிகரித்துள்ளது. அத்தோடு தொற்றாநோய்களும் இந்நாட்டின் சுகாதார துறையில் பாரிய நெறுக்கடியாக உருவெடுத்துள்ளன. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் மற்றும் பதிவாகும் மரணங்களுக்கு 80 சதவீதம் தொற்றா நோய்களே பிரதான காணமாக உள்ளன. இவ்வாறு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் 30 முதல் 70 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். முறையான கணக்கெடுப்பு இல்லாவிடினும், கிடைக்கப்பெற்ற தரவுகளின்படி நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 சதவீதமானோருக்கு உயர் இரத்த அழுத்தமும், 30 – 33 சதவீதமானோருக்கு நீரிழிவு நோயும் உள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் நாளாந்தம் 100 புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். தற்போது சிறைச்சாலைத் திணைக்களத்தின் கீழ் சுமார் 6 ஆயிரம் உத்தியோகத்தர்கள் கடமையாற்றுவதுடன், 36 சிறைச்சாலைகளில் சுமார் 33,500 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டே சுகாதார அமைச்சு இத்தகைய திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/242657
  22. போருக்கு மத்தியில் முதல் முறையாக ஹோர்முஸ் நீரிணையை கடந்த பிரான்ஸ், ஜப்பான் கப்பல்கள் Apr 4, 2026 - 11:14 AM ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக பிரான்ஸிற்குச் சொந்தமான ஒரு கப்பலும், ஜப்பானுக்குச் சொந்தமான ஒரு கப்பலும் நேற்று (3) ஹோர்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmnjwq1150002356p1kr0xizf
  23. இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்! ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, இரண்டு விமானிகள் மீட்கப்பட்டதாகவும், மூன்றாவது விமானி காணாமல் போயுள்ள நிலையில், அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் ‍தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்தும் வளைகுடா வான்வெளி மீது தங்கள் படைகளுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகக் கூறி வரும் நிலையில், ஈரான் வான்பரப்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இன்னமும் எதிர்கொள்ளும் அபாயங்களை இந்தச் சம்பவங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளன. இரு இருக்கைகள் கொண்ட முதல் அமெரிக்க F-15E ரக விமானம் ஈரானியத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரு நாடுகளின் அதிகாரிகளும் தெரிவித்தனர். இரண்டாவது விமானமான, A-10 வார்ஹொக் (Warthog) ரகப் போர் விமானம் ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளாகி குவைத்தின் மீது விழுந்து நொறுங்கியதில், விமானி வெளியே குதித்ததாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறினர். ஈரானியத் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் குறித்த விமானங்கள் ஈரானிய வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமானக் குழுவினருக்கு ஏற்பட்ட காயங்களின் அளவு தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம், காணாமல் போன F-15E விமானக் குழு உறுப்பினரை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. ஈரானின் தென்மேற்குப் பகுதியில் எதிரியின் விமானம் விழுந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியைத் தாங்கள் சல்லடை போட்டுத் தேடி வருவதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியுள்ளது. அதேநேரம், எதிரியின் படைகளை பிடிப்பவர்கள் அல்லது அவர்களை கொல்பவர்களுக்குப் பாராட்டு வழங்கப்படும் என்று பிராந்திய ஆளுநர் உறுதியளித்தார். https://athavannews.com/2026/1470940
  24. # Question Team1 Team 2 Prediction 1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB SRH RCB 2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI KKR MI 3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் RR CSK RR 4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் PBKS GT PBKS 5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG DC DC 6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR SRH SRH 7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் CSK PBKS PBKS 8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் DC MI MI 9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் GT RR RR 10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH LSG SRH 11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் RCB CSK RCB 12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் KKR PBKS PBKS 13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் RR MI MI 14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் DC GT DC 15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR LSG KKR 16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RR RCB RCB 17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் PBKS SRH PBKS 18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK DC CSK 19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் LSG GT GT 20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு MI RCB MI 21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் SRH RR SRH 22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK KKR CSK 23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RCB LSG RCB 24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் MI PBKS MI 25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் GT KKR GT 26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB DC RCB 27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் SRH CSK SRH 28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் KKR RR RR 29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS LSG PBKS 30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் GT MI MI 31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH DC SRH 32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் LSG RR RR 33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் MI CSK MI 34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் RCB GT RCB 35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் DC PBKS PBKS 36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RR SRH SRH 37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் GT CSK CSK 38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் LSG KKR KKR 39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு DC RCB RCB 40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS RR PBKS 41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI SRH MI 42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு GT RCB RCB 43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RR DC DC 44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் CSK MI MI 45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH KKR SRH 46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் GT PBKS PBKS 47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI LSG MI 48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் DC CSK CSK 49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் SRH PBKS PBKS 50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு LSG RCB RCB 51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC KKR DC 52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் RR GT RR 53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் CSK LSG CSK 54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் RCB MI MI 55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS DC PBKS 56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT SRH SRH 57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB KKR RCB 58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் PBKS MI MI 59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் LSG CSK LSG 60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் KKR GT GT 61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு PBKS RCB PBKS 62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் DC RR DC 63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK SRH SRH 64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR LSG RR 65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் KKR MI MI 66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் CSK GT CSK 67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு SRH RCB SRH 68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் LSG PBKS PBKS 69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் MI RR MI 70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் KKR DC DC 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK Select DC Select GT Select KKR Select LSG Select MI MI PBKS PBKS RR Select RCB RCB SRH SRH 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக MI #2 - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PBKS #3 - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SRH #4 - ? (1 புள்ளி) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக RCB 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக LSG 74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team MI 75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator PBKS 77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 MI 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) LSG 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shreyas Iyer 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PBKS 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Arshdeep Singh 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PBKS 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Mitchell Marsh 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) LSG 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammed Siraj 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) GT 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Ishan Kishan 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK
  25. அதுமட்டுமா? முதலமைச்சர் பதவி, கூட்டம், உரை. பலி கொடுக்கப்போகும் கடாவுக்கும் வெட்டுவதற்கு முதல் மாலை சந்தணம் தூபம் காட்டப்படுவதுண்டு. பாவம் இந்த உளறுவாயன் கம்மன்பில! அவர் எதற்காக கைது செய்யப்பட்டால் இவருக்கு என்ன? ஏன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என அலறுகிறார்? ஏன் விசாரணைகளில் தலையிடுகிறார்? சந்திரகாந்தனுக்கு எதிராக அவரோடு இயங்கியவர்களே சாட்சி வழங்கியுள்ளார்கள். இவர் ஏன் இப்படி துடிக்கிறார்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது இவருக்குப்பின்னால். இவருக்கு பதட்டத்தில் பைத்தியம் பிடித்து முன்னுக்கு பின் முரணாக உளறுகிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.