All Activity
- Past hour
-
யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது
யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது Mar 28, 2026 - 07:37 AM யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண், அந்த வீட்டில் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், வீட்டு வேலைகளுக்காக 54 வயதுடைய பெண் ஒருவரைப் பணியில் அமர்த்தியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த 14 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக அந்தத் தம்பதியினர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த வீட்டின் பணிப்பெண்ணைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட 14 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை, தான் இதற்கு முன்னர் பணியாற்றிய வீட்டிலும் நகைகளைத் திருடியுள்ளதாக அந்தப் பெண் விசாரணைகளின் போது ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த பெண்ணைத் தடுத்து வைத்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmn9owf250003356pczb28am1
-
ஏராளன் started following யாழில் தங்க நகைகளைத் திருடிய பணிப்பெண் கைது
-
"சர்வதேச விதிகளைப் பெரிய நாடுகள் மீறி வரும் வேளையில், சுதந்திரமான நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்" - பெலாரஸ் ஜனாதிபதி
அண்ணை, இப்ப ரஸ்யா வல்லரசும் இல்லை, பெரிய நாடும் இல்லை என்று கீழிறங்கிவிட்டது தானே?!
-
உலகளவில் இரண்டாவது இடம்: இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி?
உலகளவில் இரண்டாவது இடம்: இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி? General28 March 2026 ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி நிலைமையால் பொருட்களின் விலை அதிகரிப்பினால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக பிபிசி வெரிஃபை (BBC Verify) ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வழமையாக நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து, தற்போது ஒரு சில கப்பல்களாகக் குறைந்துள்ளதாக பிபிசி வெரிஃபை சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக, எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிப்புடன், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் வேகமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விவசாயத் தேவைகளுக்கான யூரியா, பொட்டாஷியம், அமோனியா மற்றும் பொஸ்பரேட் போன்ற உரத் தேவைகளில் மூன்றில் ஒரு பங்கு (1/3) பொதுவாக இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. வட அரைக்கோளத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் முக்கிய பயிர்ச்செய்கை காலங்களாக இருப்பதால், தற்போதைய உரத் தட்டுப்பாடு ஆண்டின் பிற்பகுதியில் பயிர் விளைச்சல் குறைவதற்கு நேரடியாக வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஜெர்மனியின் கீல் ஆராய்ச்சி நிறுவனம்(Kiel Research Institute), ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலகளாவிய கோதுமை விலை 4.2% ஆகவும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் 5.2% ஆகவும் உயரக்கூடும் எனக் குறிப்பிடுகிறது. கீல் நிறுவனத்தின் தரவுகளின்படி, ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் பொருட்களின் விலை அதிகம் உயரக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. உணவுப் பொருட்களின் ஒட்டுமொத்த விலை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளாக ஜாம்பியா (30.7%), இலங்கை (15.3%), தாய்வான் (12.5%) மற்றும் பாகிஸ்தான் (11.4%) ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/456304/second-place-in-the-world-a-massive-economic-crisis-awaits-sri-lanka
-
பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’
பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையைத் தடுக்க, தென்னாப்பிரிக்க மருத்துவர் சொன்னெட்எஹ்லர்ஸ் (Sonnet Ehlers) உருவாக்கிய பாலியல் வல்லுறவு எதிர்ப்பு சாதனம் 'Rape-aXe' ஆகும். இது பெண்கள் உள்ளே அணியக்கூடிய, கூர்மையான கொக்கிகள் கொண்ட ஒரு தற்காப்பு சாதனமாகும். பாலியல் வன்முறை முயற்சியின் போது, உள்ளே இருக்கும் சிறிய கொக்கிகள் (Hooks) தாக்குபவரின் உறுப்பில் சிக்கி, உடனே கடும் வலியை ஏற்படுத்தும். இந்த சாதனத்தை மருத்துவரின் உதவி இன்றி அகற்ற முடியாது, இதனால் குற்றவாளியை எளிதாக அடையாளம் கண்டு பிடிக்க முடியும். பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து, பெண்களுக்குப் பாதுகாப்பு உணர்வை வழங்குவதே இந்த கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கமாகும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான இந்த புதிய முயற்சி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. https://www.tamilmirror.lk/விநோத-உலகம்/பாலியல்-வன்முறையைத்-தடுக்க-Rape-aXe/53-374648
-
Male baby கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்
தமிழில் அழகிய நீளம் குறைந்த பெயர்களும் இருக்கிறது. உ+ம்-அகிலன், நேயன், மாறன், எழிழன், யாழவன், சேயோன், சுடர், சுரபி, மயூரன். எனது பிள்ளைகளுக்கு இப்புத்தகத்தில் இருந்தே பெயர்கள் சூட்டினேன்.
-
யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரியுடன் விசேட சந்திப்பு!
வாள் வெட்டு, கத்திக் குத்து… எல்லாம் பழகீட்டுது குமாரசாமி அண்ணை. பைத்தியர்தான்… கண்ட கண்ட இடத்தில், வாய் வைத்து… ஒரே அரியண்டமாய் இருக்கு. இதைத்தான்… ஐ.நா.விலை சொல்லி ஒரு முடிவு கட்ட வேணும். ஐ.நா.வுக்கும் வேலை வேணுமெல்லோ… 😂
- Today
-
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!
எப்ப இருந்து ??? 😃... திருநாளை வரும் அமெரிக்க
-
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!
புழுகுவது என்று தீர்மானித்து விட்டார் ட்ரம்ப்.
-
Male baby கி, கூ, கே, கோ (Khi, Koo, Ke, Ko) ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் தூய தமிழ் பெயர்கள்
இனி வரும் தமிழ் சார்ந்த சமுதாயம் தமிழ் பெயருக்காக போராடுமா என தெரியவில்லை? எனது பெயர் பெயர் சுத்த தமிழ் பெயர். கொஞ்சம் நீளமான பெயர். புலம் பெயர் நாடுகளில் என் பெயரை சொல்லி கூப்பிடவே கொஞ்சம் சிரமப்படுவார்கள்😄. உதாரணத்திற்கு கதிர்காமலிங்கம் சிவயோகபரமானந்தன். இப்படி ஒருவனுக்கு ஐந்து பெயர்களை ஒண்டடி மண்டடியாய் சூட்டினால் யார்தான் என்ன பண்ண முடியும்?😂
-
அமெரிக்க டொலரில் டொனால்ட் ட்ரம்ப்பின் கையெழுத்து
சிங்கன்..🦁 என் தலைவன் எதுக்கு வந்தானோ .. அந்த வேலையில் கவனமாக இருக்கின்றான். நீ கலக்கு தல...... உன் மூன்று மீற்றர் கையெழுத்து .. நாட்டின் வரலாற்று தலையெழுத்து.. நீ கலக்கு தல.. அமெரிக்காவின்.. ரோயல் பமிலி எண்டால்.. நீதான் தலை😂
- Yesterday
-
பாழ்கிணற்றுப் படுகொலை: ’’ சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது’’ :கண்டனப் போராட்டம்
ஒரு நீதிமன்ற வழக்கில் குற்றவாளிக்கும் சட்டத்தரணி வேண்டும் என நினைக்கின்றேன். எனது விண்ணப்பம் என்னவெனில் குற்றவாளி கூட்டில் நிற்பவர்களுக்காக பிரபல சட்டத்தரணிகளும் ஸ்டார் சட்டத்தரணிகளும் காவலாக/ஆஜராக நிற்கக்கூடாது என்பது என் கருத்து. ஏனென்றால் இலங்கையில் பொய்யானவர்கள் கைதாவது குறைவு. அல்லது இல்லை.
-
யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரியுடன் விசேட சந்திப்பு!
யாழ்ப்பாண பக்கத்திலை இப்ப மனித உரிமைமீறல் ஒண்டும் இல்லையே? சிறித்தம்பி இப்ப நீங்கள் என்ன சொல்ல வாறியள்?🤣 வாள்வெட்டு,கத்திக்குத்து எல்லாம் இப்ப நோர்மல். வேறை என்ன மனித உரிமை மீறலாய் இருக்கும்? ஒரு வேளை எம்பி அர்ச்சுனா?😂
-
சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
தமிழ்நாட்டின் ஈழ அரசியலை பொறுத்தவரை பழ.நெடுமாறனின் ஈழ அரசியலை விட, சீமானின் ஈழ அரசியலை விட வைகோ அவர்களின் அரசியல் பரவாயில்லை என்பது என் கருத்து. அது மட்டுமல்லாமல் நன்றிக் கடனும் உண்டு. இன்னுமொன்று..... அல்லது என் கேள்வி? தமிழ்நாட்டு அரசியலில் யாரிடம்,எந்த கட்சியிடம் பச்சோந்தி தனம் இல்லை என்று கூறுங்கள் பார்க்கலாம்? தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலே ஒரு குறளி வித்தை அரசியல் நிறைந்த நாடு. அந்த அரசியல் காற்று ஈழத்தமிழ் மண்ணில் வீசக்கூடாது என்பது என் நீண்ட கால பிரார்த்தனை.
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
கோவை என்ற ஊரில் ஒரு மாணவி பாலியல் கூட்டு வன்கொடுமை செய்பட்டதிற்கு அந்த மாணவியும் தான் பொறுப்பு என்று பாஜக பெண்நிர்வாகி நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார்.
-
யாழ்களத்தை வாழ்த்தும் ஒரு உறவு
நானும் ஒளவையார் பற்றி அறிந்தது சாதிகள் இல்லை உதவிகள் செய்வோர் உதவி செய்யாதோர் என்று இருவகை தான் உண்டு என்பதை சொன்னவர்
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
🤣 நல்ல கருத்து.👍 மாற்றங்கள் விரும்பத்தக்கது. காலத்திற்கேற்ப மனிதர்கள் மாறவேண்டும். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் உடை நாகரீகத்தில் மாற்றம் வேண்டும் என்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இருந்து ஆரம்பிக்க தயாரா என்பதையும் தெரிவித்தால் நல்லது. அதாவது இன்றைய அரைகுறை உடையுடன்......
-
’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி!
எனக்கு டெக்சஸ் போன ஜேசுதாஸ் பற்றி தெரியாது புலம்பெயர் வாழ்வை கொண்ட ஈழ தமிழர்கள் பற்றி அறிந்து கொண்டதை வைத்து சொல்வதானால் டெக்சஸ் ஜேசுதாசும் அமெரிக்காவில் தனது வீட்டவர்கள் விரும்பிய ஆடைகள் அணிந்தாலும் இந்தியாவில் உள்ள பெண்கள் சீலை கட்டி அடக்க ஒடுக்கமாக தான் வெளியே வரவேண்டும் என்று விரும்புபவராக இருப்பார்
-
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!
அனுதாபம் எப்படி பெற வேண்டும் என்பதை இனவாத சிங்களத்திற்கு சொல்லிக்கொடுத்ததே இஸ்ரேல் அமைப்பு என்பதை நான் அறிந்துள்ளேன். உதாரணத்திற்கு ஈழத்தில் எமக்கு எதிராக நடந்த கொடுமைகளும் அழிவுகளும் நன்கு தெரியும். அதை யார் செய்தார்கள் என்பதும் நன்றாக எமக்கு தெரியும். ஏனெனில் நாம் அந்த நாட்டவர்கள்.நாம் விடுதலை இயக்கத்தை ஆதரித்தோம்.அதே விடுதலை இயக்கம் சர்வதேசத்தில் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டார்கள்.ஏன் எப்படி எதனால் என நம்மவர்கள் ஆராய தயாரில்லை.செய்யாத குற்றத்திற்கும் தண்டனை அனுபவித்ததுதான் எமது விடுதலைப்போராட்டம். சர்வதேச ரீதியில் எமது விடுதலை போராட்ட இயக்கத்தை முதலில் பிள்ளையார் சுழி போட்டு தடை செய்தது அமெரிக்காதான்.அதே அமெரிக்காவை இன்று இங்கே எல்லோரும் ஆதரிக்கின்றோம். கால சுழற்சி வேகமானது மட்டுமல்ல விசித்திரமானதும் கூட...
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
வாழ்த்துகள் ஆதித்யா. பிரான்சில் வாக்களிக்கும் தமிழர்களில் இரண்டு வகையினரை அவதானித்துள்ளேன். முதலாவது தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் எந்தக் கட்சி என்று பாராமல் அவருக்கு வாக்களிக்கும் தமிழர்கள். மற்றது வெளிநாட்டவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்று தீவிர இனவாத வலதுசாரிகளுக்கு வாக்களிக்கும் தமிழர்கள். இந்த இரு தரப்பினரும் இரு வேறு துருவங்கள் அல்லவா ? ஆனால் இருவரும் (பலர்) தமிழ் தேசிய ஆதரவாளர்கள். தமிழர்கள் ஒரு நாட்டு அரசியலுக்குள் நுளைந்து வளர வேண்டும். அதே வேளை வெளிநாட்டவர்கள் அடக்கப்பட வேண்டும். இதேபோன்றுதான் பிரான்சில் தமிழர்கள் பிரெஞ்சு அரசியலுக்குள் நுளைய வேண்டும் என்பவர்கள் சீமானின் தமிழனைத் தமிழன் ஆள வேண்டும் என்ற கோசத்தை எவ்வாறு ஏற்க முடியும் என்பது புரியவில்லை. (சீமான் பற்றி இத் திரியில் விவாதிக்கப்பட்டதால் உதாரணம் கூற வேண்டி வந்தது)
-
அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்?
ட்ரம்ப் ஈரானுக்கு மூன்று நாள் கெடு விதித்தார், பின் பத்து நாள் என்கிறார். அவ்வளவு வீரமுள்ளவர், நடந்து கொண்டிருக்கும் போர், தானே தன்னிச்சையாக தொடங்கிய போருக்கு, இன்னும் களத்துக்கு வீரரை அனுப்பிக்கொண்டிருப்பவர், சவால் விடுபவர், எதற்காக கெடு விதிக்கிறார், கெடுவை நீட்டிக்கிறார் என்பதற்கு அவர்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். தன்னிச்சையாக, காரணமின்றி போரை தொடங்கினார், தன்னிச்சையாக பேசுகிறாராம், அதேபோல் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுகிறார். இதென்ன நோய் என்று தெரியவில்லை?
-
அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்?
ஈரானின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே, அதற்கு என ஒரு இறையாண்மை உள்ளது, அது ஏன் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்? தேவையில்லாமல் வலுக்கட்டாயமாக அந்த நாட்டுக்குள் போரை திணித்து, அழித்து விட்டு சும்மா தெனாவட்டாக செல்ல முடியுமா? எத்தனை பேரின், எத்தனை கால கனவு, உழைப்பை அழித்திருக்கிறார்கள் தமது வீம்புக்காக. ஆனால் அமெரிக்காவின் நிபந்தனை ஏற்றுக்கொள்ளக்கூடியவையல்ல. அவர்களின் நாட்டில், அவர்களின் வளங்களை எப்படி கையாள வேண்டுமென்று அமெரிக்கா கட்டளையிட முடியாது. அவர்களை கட்டிப்போட்டு சுதந்திரம் என்று சொல்ல முடியுமா? அதைவிட ட்ரம்ப், நேரம் ஒரு மாறாட்டப் பேச்சு பேசுகிறார். ஈரானில் பேசுவதற்கு தகுந்த ஆட்கள் யாருமில்லை எல்லோரையும் அழித்து விட்டோம் யாரோடு பேசுவது என்பதே பிரச்சனை என்றார். அப்படியென்றால் போர் எப்படி தொடர்கிறது? யாரோடு பேசுகிறேன் என்கிறார்? இப்போது தகுந்த நபர்களோடு பேசுகிறோம் என்கிறார். இரான் தனக்கு சிறந்த பரிசு தந்திருக்கிறது என்கிறார். தனக்கு அதியுயர் பதவியை இரான் அளித்ததாகவும் தான் மிக்க நன்றி ஆனால் வேண்டாம் என்றாராம். ஈரானோ இவை எல்லாவற்றையும் மறுக்கிறது. அதுவே உண்மை. போர் தொடர்கிறது, அமெரிக்க படைகள் ஈரானை நோக்கி விரைக்கின்றன. இப்படியான மாறாட்ட நோயாளியை நம்பி தம் பிள்ளைகளை, பிரஜைகளை அமெரிக்கர் பலி கொடுக்கின்றனர், மற்ற நாடுகளையும் அழிக்கின்றனர்.
-
டான்பாஸிலிருந்து உக்ரைன் வெளியேறினால் பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கும் – ஜெலென்ஸ்கி
2022 ஆம் ஆண்டு உக்ரெய்னின் நான்கு மாகாணங்களைத் தனது நாட்டுடன் ரஸ்யா சேர்த்துக் கொண்டதாக அறிவித்தது. இதில் ஒன்றுதான் டொன்பாஸ். இந்த 4 வருடத்தில் ரஷ்யா குறைந்தபட்சம் டொன்பாசையாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மட்டுப்படுத்தப்பட்ட போர் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாமே. ஏன் அப்படிச் செய்யவில்லை ? மாறாக ஏன் உக்ரெய்னிடம் அப் பகுதியைத் தருமாறு அமெரிக்கா மூலமாகக் கேட்கிறது ? ரஸ்யா போர் முடிவுக்கு வருவதை விரும்பவில்லை என்பதே காரணம்.😂
-
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!
ஈரானின் இரண்டு அணுமின் நிலையங்கள் இன்று தாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இன்னும் இரண்டு வாரங்களில் தனது இலக்கை எட்டும் என்று மார்க்கோ ருபியோ கூறியுள்ளார். பார்க்கலாம்.
-
அமெரிக்கா மூழ்கடித்த இரான் கப்பல் இலங்கை அழைத்ததால் வந்ததா?
சும்மா ஒரு சம்பிரதாயத்திற்கு கண்ட இடத்தில் அழைப்பு விடுவது வழமை, அதற்காக அதிகார பூர்வ அழைப்பில்லாமல், நாட்டின் இன்றைய இக்கட்டு நிலையை மனதிற் கொள்ளாமல், யாரும் வந்த வழியில் போய் பார்த்துவிட்டு வருவோம் என்று செல்வதற்கு அவர்கள் ஒன்றும் வழிப்போக்கர்கள் அல்ல. இந்தியாவில் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பியவர்கள் என்று கூறப்பட்டது பின் அவர்கள் இசைக்கலைஞர்கள் என்கிறார்கள். இப்போ அதுவல்ல பிரச்சினை, இரானே இலங்கையின் மனிதாபிமான செயலை பாராட்டியிருக்கிறது. அனுரா எதை செய்தாலும் அதை அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரை ஆட்சியிலிருந்து துரத்தியடிப்பதே நாட்டில் இன்றைய பெரும் பிரச்சனை. இல்லையென்றால்; இவர்களது ஊழல்கள் வெளிவரும், மக்களிடம் இவர்களுக்கு இருந்த செல்வாக்கு சரியும், சிறை செல்ல வேண்டி வரும், அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கும், சும்மா இருந்து மக்களை வதைத்து நாட்டை சூறையாடும் கலாச்சாரம் மாறும் என்கிற பயப்பீதியில் என்னென்னவோ தந்திரங்கள், குற்றச்சாட்டுக்கள். இவர்களின் எந்த தந்திரமும் பலிக்காது. எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது. இவர்கள் எதையெதை நினைத்து பயப்படுகிறார்களோ அதுவெல்லாம் நடந்தேறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகின்றன.
-
வீதியோரம்.
கதையை மிக விறுவிறுப்பான சம்பவங்களுடன் நகர்த்தியுள்ளீர்கள். இறுதிப் பகுதியை வாசித்துக்கொண்டிருந்தபோது பழிவாங்குதல் சட்டப்படி குற்றம் என்பதை உறுத்தியது. நீங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்டத்திற்கப்பாற்பட்ட தீர்வைக் கொடுத்து அதற்கான தண்டனையக் கதையின் நாயகர்களுக்குக் கொடுக்காமல் அது தவறு, தண்டிக்கப்படலாம் என்ற தொனியில் முடித்தது அருமை. இரண்டாம் பாகத்துக்கான வாடை தெரிகிறது.