Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. வணக்கம் வாத்தியார் ..........! இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஆண் : { ஒரே வானிலே ஒரே மண்ணிலே } (2) ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் ஆண் : காற்று நம்மை அடிமை என்று விலக வில்லையே கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே ஆண் : காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே ஆண் : தோன்றும்போது தாயில்லாமல் தோன்ற வில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே ஆண் : வாழும்போது பசியில்லாமல் வாழ வில்லையே போகும்போது வேறு பாதை போகவில்லையே ஆண் : கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போலே நாடு காண வேண்டும் விடுதலை ஆண் : அச்சமின்றி ஆடி பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் ......! --- அதோ அந்த பறவை போல ---
  3. ஆணாகப் பிறந்ததெல்லாம் ......... படம் : சபாஷ் மீனா , நடனம் : சரோஜாதேவி & ஜெமினி சந்திரா . ......பாடியவர்கள் : பி . சுசிலா & கே . ஜமுனாராணி ........ இசை : T . G லிங்கப்பா ......! 😍
  4. அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன. Jaffna Muslim
  5. சீமான் திருமணம் செய்தபின் எப்போது விஜியுடன் தொடர்பில் இருந்தார்?? விளங்காத ஒருவர் இதற்கு பச்சை புள்ளிவேறு போடுகிறார்!!
  6. Today
  7. முதலைகளின் தீப்பாடல் நீலாவணை இந்திரா ஹாவ்கின்ஸின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் இரண்டும் எனது இதயத்தை துளைத்து வெளியேறிய கணத்திலேயே, நான் மரித்துவிட்டேன். தோட்டாக்கள் என்றால் அவை சாதாரண உலோகக்குண்டுகள் தான், ஆனாலும் அதிவேகத்தோடு அவை, எனது இதயத்தை துளைத்து முதுகினூடாக வெளியேறும் போது வெடிமருந்து நிறைந்த கைவண்டியில் நான் தவறி விழுந்தேன். எனது உடல் சுக்கல் சுக்கல்களாக வெடித்துச் சிதற, எனது தலை மட்டும் உடலை விட்டுப் பிரிந்து தனித்து விழுந்தது. இது எல்லாம் நடந்து முடிந்த பின்னரும், கொழும்பின் அடிமைத் தீவைச் சுற்றியே அலைந்து கொண்டிருக்கும் எனது ஆன்மாவிற்கு சொல்ல வேண்டிய கதையொன்று உள்ளது. அந்தக் கதையில் இந்த அடிமையானவன் செத்துப் போனான் என்ற முடிவை வாசகர்களாகிய நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது, என்பதற்காகவே நான் மரித்துவிட்ட செய்தியை ஏற்கனவே உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன். நான் ஒரு தேர்ந்த கதைசொல்லியல்ல. ஆனாலும் இந்த துயர்நிறைந்த கதையை சொல்லியே தீரவேண்டும். முன்னும் பின்னுமாக எனக்குத் தெரிந்த உங்கள் மொழியில், இந்தக் கதையை எனது ஆன்மா உங்களுக்குச் சொல்ல விளைகிறது. அவைகளைக் கோர்த்து உங்களுக்குப் புரியும்படி கதையாக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் பொறுமையாக வாசியுங்கள்… இப்போது எனது கதை ஆரம்பமாகின்றது. 1 மாரி காலம் – கொழும்பின் அடிமைத்தீவு நான் மரித்துப் போன அந்த ராத்திரியில் கொழும்பு முழுவதும் கடும் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. கோட்டைக்குள்ளும் அதன் வெளிப்புறமும் ஆளரவமற்ற சூழலுடன், மந்தமான அமைதி நிலவியது. அந்த நிமிடங்களில் கொலைவெறித் தாக்குதலொன்றை நிகழ்த்தி முடித்துவிட்டு, கீழே கிடந்த துருப்பிடித்திருந்த இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டேன். குள்ளச் சிப்பாயின் நசுக்கப்பட்ட தலையிலிருந்து வடிந்த குருதி பேர வாவியின் நீரோடு சங்கமித்த தருணத்தில் எனது முகத்தை துடைத்தபடி நிமிர, புயல் வீசுவதற்கான அறிகுறியாக அம்மயான அமைதி மாற்றமடைந்தது. உருக்குச் சட்டத்தினையும், துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு இருளோடு இருளாக மறைந்து நின்ற வேளையில் கூட லூக் ஹாவ்கின்ஸ் உடைய முகமே எனக்குள் தோன்றி மறைந்தது. கொடூரமான ஒரு வெள்ளையன் என்றால் அது அவனாகத்தான் இருக்க முடியும். ‘டோ’ வகைக் கப்பல்களின் கேப்டனாக அவன் இருந்தான். கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிடைத்த அனைத்து அடிமைகளையும் ஸ்பானிய நாட்டிற்கும், தென் பிராந்திய நாடுகளுக்கும் கடத்தி பெரும் பணமீட்டிக் கொண்டிருந்தவன், கள்ளிக் கோட்டைத் துறைமுகத்தில் தங்கியிருந்த பறங்கியினருக்கும், கொழும்பில் கோட்டை புனரமைப்பில் ஈடுபட்டிருந்த சக வெள்ளையர்களுக்கும் அடிமைகளை விற்றுத் தீர்த்தான். அவன் வாங்கி வந்த மலாய் அடிமைகளையும், இங்கு தேவாலயங்கள் மற்றும் வீடுகள் கட்டும் பணிகளுக்காக விற்கத் தொடங்கினான். நெடுவலாக வளர்ந்திருக்கும் ஹாவ்கின்ஸ், கொஞ்சம் பருமனான உடலுடையவன். அவனது பகுதி சிதைந்த இடது கண்ணின் உருட்டலோடு அடிமைகளை கசக்கிப் பிழிந்து காரியம் சாதிப்பதில் வல்லவனாக இருந்தான். செம்பட்டை மயிர்களோடும், நீளமான உடைகளோடும் மிடுக்கான அதிகாரத் தோரணையுடன் நடந்து வரும் போது தனது வளைந்த தொப்பியினை கைகளுக்குள் திணித்துக் கொள்வான். சிறிய ரக இரும்புத் துப்பாக்கியொன்றை தனது இடுப்பில் எப்போதும் வைத்துக் கொள்பவன், அதை எந்த அடிமைகள் மீதும் பயன்படுத்தியதில்லை. அவனுக்கு ஒரு அடிமை செத்தாலும் அது மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாமல் போய்விடும் என்பதால் எவ்வளவு சித்திரவதைகளைச் செய்கின்ற போதும், அவன் அடிமைகளுக்கு மரண தண்டனையை வழங்குவதில்லை. முள் கொண்ட சவுக்கினால் அடித்துச் சித்திரவதை செய்த பின்னர் கடல் நீரினை காயங்கள் மீது ஊற்றி, கதறித் துடிக்கும் அடிமைகளைப் பார்த்து ரசிக்கும் வெறி கொண்டவன். பின்னர் அடிமைகளின் கைகளையும் கால்களையும் சங்கிலியினால் பிணைத்து கப்பலின் அடித்தள இருட்டறைக்குள் அவர்களை வாரக்கணக்கில் அடைத்து வைத்து நத்தைகளை தின்ன விடுவான். இவன் செய்யும் சித்திரவதைகளுக்கு மரணமே பெரிது என்று நடுக்கடலில் குதித்துவிடும் அடிமைகளையும் சுறா மீன் தூண்டிலால் கொழுவி எடுத்து மீண்டும் கப்பலின் அடித்தளத்தில் போட்டு சித்திரவதை செய்வான். முக்காசாவையும் என்னையும் இப்படிச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியே இந்த தீவிற்கு அழைத்து வந்தான். கிழக்கு ஆப்பிரிக்காவின் துறைமுகத்திற்குக் கப்பல் கட்டும் பணிகளுக்காக எங்களை அழைத்து வந்த வெள்ளையன் மலிவான விலையில் எங்களை ஹாவ்கின்ஸிற்கு விற்றுவிட்டான். சங்கிலியில் பிணைக்கப்பட்ட நிலையிலேயே இந்த அடிமைத்தீவிற்குக் கொண்டு வரப்பட்டோம். அவர்கள் எங்களைச் சங்கிலியில் பிணைத்து வைத்திருப்பதற்குக் காரணமிருந்தது. எங்களைப் போன்றே அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள், கோட்டையின் காறை பெயர்ந்த மதிற் சுவர்களைத் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எங்கள் எஜமானர்களான வெள்ளையர்கள், அடிமைகளாக வந்தவர்களின் கைவிலங்குகளை அகற்றியே அவர்களை வேலை வாங்கினர். சந்தர்ப்பம் கிடைத்த நாளொன்றில் கோட்டைக்குள்ளிலிருந்து தப்பிய அடிமைகள், வெள்ளைப் பிரபுவின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தி துறைமுகத்தை நோக்கி ஓடிய வேளையில் பிடிபட்டனர். அதிலிருந்து அடிமைத்தீவிற்கு வெளியில் அவர்களை எப்போதும் சங்கிலியில் பிணைத்து வைத்திருப்பதே சட்டமாக்கப்பட்டது என்பதைப் பின்னாளில் அறிந்து கொண்டேன். அடிமைத் தீவைச் சுற்றிப் பேர வாவி ஓடிக்கொண்டிருந்தது. ஆழமான அவ்வாவியினூடாக கொழும்பின் பிற பகுதிகளை அடைய முடியாது. வடக்குத் திசையில் கோட்டையும், வர்த்தகக் கட்டிடங்களும், கொழும்புத்துறைமுகமும் காணப்பட்டன. அதில் வெள்ளைப்பிரபுக்கள் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டியிருந்தனர். அவர்களது குடியிருப்புகளும் மாளிகையும் கூட கோட்டைக்குள் பாதுகாப்பான இடத்திலேயே நிர்மாணிக்கப்பட்டிருந்தன. ஆழமான பேர வாவியைச் சூழ சிப்பாய்களுடன் கூடிய காவற் கோபுரங்கள் குறைவாகவே இருந்தன. அதற்கும் மேலாக வாவியினுள் உப்பு நீர் முதலைகள் அட்டகாசம் செய்து திரிந்தன. முதலைகள் என்றால் ஒன்று இரண்டு அல்ல, அதிகமானவை மிக அதிகமானவை. நீளமான உடலுடன் ஊத்தைப் பச்சை நிறத்தில் பாசி படர்ந்த முதுகுடன் அவை கோட்டையைக் காவல் செய்தன. அவைகளைப் பற்றி பின்னர் சொல்கிறேன். எங்களைப்பற்றி முதலில் சொல்லிவிடுகின்றேன். தினமும் காலையில் பேர வாவியைக் கடந்துவரும் வள்ளங்களில் துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் வருவார்கள். நாங்கள் வரிசைகளில் நிற்போம். அங்கு கறுப்பு நிறத்திலும், பழுப்பு சேர் மஞ்சள் நிறத்திலும், பொதுவான கோப்பிக் கொட்டகையின் நிறத்திலும் அடிமைகள் காத்திருப்பர். ஒவ்வொருவராக சங்கிலியில் பிணைக்கப்பட்ட பின்னர், அந்த இடத்திற்கு, இதோ செத்து மிதக்கின்றானே அந்தக் குள்ளச் சிப்பாய் வருவான். அவன் ஒரு மலாய்க்காரன். டச்சுக்காரர்கள் காலத்திலிருந்து அவர்கள் பரம்பரை பரம்பரையாக சிப்பாய்களாக இருக்கின்றனர். வலுவான தேகமுடையவன். பூவின் நறுமணம் வீசும் அத்தரினைத் தனது நீண்ட தாடியில் பூசிக்கொண்டு நாற்றம் பிடித்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டு அலைபவன். அடிமைகளைப் பின்னங்கால்களில் உதைத்து, கீழே தள்ளி, அவர்களில் தலையில் முஷ்டியால் பலமிக்க மட்டும் அவன் அடிக்கும் போது சர்வமும் மறைந்துவிடுவதை நான் உணர்ந்திருக்கிறேன். இத்தனைக்கும் என்னில் பாதியளவு உயரமே இருக்கும் அவனிடம் எப்படி இவ்வளவு காட்டுயானையின் பலமிருக்கின்றது என்பதை நான் ஒவ்வொரு பொழுதிலும் யோசித்ததுண்டு. அவனைக் காட்டுயானை என்று சொல்வதில் தவறொன்றுமில்லை. கிழக்கு ஆப்பிரிக்காவில் கோடை நிலவும் போது, கொங்கோ காடுகளை அடைவதற்காக, நாடுகளைக் கடக்கும் யானைகள், வழியில் தென்படுகின்ற பெருங்காட்டை அடித்து, உடைத்து, நொறுக்கித் தனக்கான வழியை உருவாக்கிக் கொள்வது போலத்தான் இவனும் எங்களை நொறுக்கித்தள்ளி மூக்கை உடைத்துப்போடுவான். அவனது சித்திரவதைக்கு ஆளாகும் போதெல்லாம் முக்காசா, அக்கா…. என்று வீறிட்டு உடைந்து அழுவான். அந்தத் தருணங்களில், முடோனியின் ஞாபகங்கள் என்னை வாட்டத் தொடங்கும். அடிமைத்தீவின் குடிசைக்குள் உழலும் போதெல்லாம் நான் முடோனியை நினைக்காத நாட்களே இல்லை. அவளுக்கு நான் நினைத்ததைப் போன்றே ஆண் குழந்தை பிறந்திருக்கும். இங்கு வந்து எவ்வளவு நாட்களாகிவிட்டன என்று கூட ஞாபகமில்லை. எங்கள் நாடுகளில் தெரியும் வேட்டைக்காரன் நட்சத்திரத் தொகுதி இந்த அடிமைத்தீவின் வானத்திலும் தெரிந்தது. அந்த வானத்து வேட்டைக்காரன், ஹாவ்கின்ஸ் போல கைத்துப்பாக்கியோடு அல்லாமல் பெரும் வாளுடன் வானத்தில் நிற்கின்றான். அதன் தோற்றத்தையும், பெயர்வையும் எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டே வருடங்கள் ஓடுவதை நான் கணித்துக் கொண்டிருந்தேன். இந்த நாட்களிலெல்லாம் முடோனி, என் கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டேயிருந்தாள். எங்களுக்கென்று சொந்தமாக ஒரு நிலமிருந்தது. அதில் எனது மகன் கருத்த சுருள் சுருள் தலைமயிருடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவள் சோளம் விதைகளை விதைத்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் பருத்திக் காடுகளில் இருந்து எமது ‘சாவோ’ மக்கள் பாடிய படியே குடிசைகளை நோக்கி வருகின்றனர். முடோனி பாடல் வருகின்ற திசையை நோக்கி ஓடோடிச் சென்று தன் நியதிடி இசைக்கருவியின் தந்திகளை அதிரச் செய்கிறாள். அது காற்றில் கரைந்து அடிமைத் தீவெங்கும் பரவுகின்றது, கூடவே குள்ளச்சிப்பாயும் ஓடி வந்து பின்னங்காலில் மிதித்துத் தலையில் ஓங்கி அடிக்கவே, விழிப்பு வந்துவிட குடிசையின் விட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன். கர்ப்பமான நிலையில் அவளை விட்டுப் பிரிந்திருக்கக் கூடாது என்று அடிக்கடி நினைத்திருக்கிறேன். ஆனாலும் அடிமையாக இத்தீவில் உழலுவேன் என்று எப்போதும் நான் நினைத்ததேயில்லை. (மன்னிக்கவும் நான் சொல்ல வந்ததை மறந்து என்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டுவிட்டேன்.) ஹாவ்கின்ஸைக் கொல்லுமளவிற்கான கோபம் இந்த அடிமைக்கு ஏற்பட்டதற்கான காரணம், வலுவாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல அடிமைத் தீவில் இருந்த அத்தனை பேருக்கும் அவனை இன்று இராத்திரிக்குள்ளேயே கொன்று கிடத்த வேண்டும் என்கிற ஆத்திரம் மேலிட்டது. அவன் வவ்வேயின் வாழ்வையே சிதைத்து வீசிவிட்டான். எனது கண்பார்வையிலே வளர்ந்த அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி எவ்வளவு கொடுமையானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு மட்டுமல்ல, அவனது பழுப்பு நிற மனைவிக்கும் அது எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும். அதை தாங்கிக் கொள்ளும் சக்தி அவளுக்கு இருக்கப் போவதில்லை. ஏன் அடிமைத் தீவில் இருக்கும் எவருக்கும் அந்த நாள் சந்தோஷகரமானதாக இருக்கப் போவதில்லை. இந்தப் பாழாய்ப் போன வெள்ளையனுக்கும், குள்ளச் சிப்பாய்க்கும் இப்படியொரு கொடூர மனம் இருந்திருக்கும் என்பதை நான் கனவிலும் நினைத்தில்லை. இந்தக் கொடூரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமானால் வவ்வேயின் கதையிலிருந்தே அதை நான் கூறவேண்டும் என நினைக்கிறேன். 2 வவ்வேயின் கதை இந்த அடிமைத்தீவிற்கு எவ்வாறு நாங்கள் கொண்டுவரப்பட்டோமோ அப்படியே வவ்வேயும் இன்னும் சிலரும் அழைத்துவரப்பட்டனர். அவன் சிறுவனாக இருக்கும் போதே இங்கு கொண்டு வரப்பட்டுவிட்டான். காவி படிந்த ஊத்தைப் பற்களுடன் சாம்பல் கம்பளியொன்றை உடலில் சுற்றியபடி இந்த அடிமைத் தீவிற்கு அவன் வந்திறங்கிய நாட்களை என்னால் மறக்க முடியாது. உடலெங்கும் தீக்காயங்களுடனும், சித்திரவதை செய்யப்பட்ட நிண உடலுடனும் அவன் வந்திருந்த போது பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. பாவம், அவனிடமும் வார்த்தைகளிலிருக்கவில்லை. முக்காசாவின் குடிசைக்குள் வவ்வேயைத் தள்ளிவிட்ட குள்ளச் சிப்பாய் இவனைக் கட்டிட வேலைகளுக்காகத் தயார்படுத்து எனும் உத்தரவினை ஏவினான். அன்று முழுவதும் வானத்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு, என்னிடம் சொல்ல ஏதாவது உள்ளதா என்று பார்த்தேன். ஆனால், அவன் யாருடனும் பேசுவதற்குத் தயாராயில்லை. பசிக்கிறது, தண்ணீர் வேண்டும் இப்படி எதையும் அவன் கேட்கவில்லை. முக்காசா அவனை அழைத்த போதும் கூட தூரத்தில் கடற்கரைக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த காகங்களையே உற்றுப் பார்த்தபடியிருந்தான். சற்று நேரத்தில், மீளவும் வானத்தைப் பார்க்கத் தொடங்கிவிடுவான். தினமும் காலையில் வள்ளங்களில் ஏறி கோட்டைக்குள் வேலைக்குச் செல்லும் முன்பு, அடிமைகளுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது. ஆளுக்கு ஓர் உருண்டை குரக்கன் களியும், பச்சை மிளகாயொன்றும் வழங்கப்பட்டன. அதை வாங்கவும் வவ்வே வரவில்லை. நான் முக்காசாவின் குடிசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘வவ்… வா…. வா….வவ்வவ்வவ்…..’ ‘குட்டி நாயே யாரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருக்கிறாய்… இது அடிமைத் தீவு, இங்கு வந்தவர்கள் எல்லோரும் வேலை செய்துதான் பிழைக்க வேண்டும்…. இப்படியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு நீ வரவில்லை எழும்பி நட…. குரக்கன் களி தருவார்கள் தின்றுவிட்டு வள்ளத்தில் ஏறு….’ எனச் சினந்தான் முக்காசா. வவ்வேயிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. அடிமைத் தீவில் இருப்பவர்கள் எல்லோருக்குமே குள்ளச்சிப்பாயின் கொடூர முகம் தெரியும். அவன் ஒரு வேலையைத் தந்து யாரும் செய்யாமல் இருந்தாலோ அல்லது மறந்து போனாலோ கூட, அவர்களை அன்று இரவு முழுவதும் சித்திரவதை செய்தே சாகடிப்பான். இது எதையும் உணராதபடிக்கு அவன் இருந்து கொண்டிருந்தது முக்காசாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வவ்வேயை எட்டி முதுகிலேயே உதைத்தவன். ‘உன்னை நான் அழைத்தேனல்லவா கழுதையே… நேற்றிலிருந்து தின்னவுமில்லை, குடிக்கவுமில்லை…. வானத்தையே விக்கி விக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே… எங்களைப் போன்றவன் தானே நீ… நான் பேசும் பாஷை உனக்குப் புரியவில்லையா?.. இது அடிமைத் தீவு. இங்கு நீ வேலை செய்துதான் ஆக வேண்டும். குள்ளச் சிப்பாய் வந்தால் உன்னைக் கொன்று குழியிட்டுப் புதைப்பான்… எழும்பி நட குட்டி நாயே… என்று அவனை உலுப்பினான். குரக்கன் களி தின்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த நான் ஓடிச்சென்று முக்காசாவைத் தடுத்தேன். கண்கள் இரண்டும் குளமாகி நிற்க ஈனஸ்வரத்தில் வவ்வே… வவ்வவ்வவ்…. வா….. என்று அழுதபடியே விரல்களால் தனது நாக்கையும் காதையும் அசைத்து வவ்வவ்வா… என்றான். ஆம், அவனுக்குப் பிறப்பிலிருந்தே பேசவும் முடியாது, காதும் கேளாது என்பதை நான் அக்கணம் புரிந்துகொண்டேன். அவனுக்கு, அவனது நிலையைப் புரிய வைப்பதற்கு, எனக்குச் சில காலம் எடுத்தது. தினமும் முக்காசாவுடன் வேலைக்குச் செல்வதும் அங்குள்ள எடுபிடி வேலைகளைச் செய்து மீண்டும் திரும்புவதுமாக இருந்தான். ஒரு கட்டத்தில் முக்காசாவும், அவனும் நல்ல கூட்டாளிகள் போன்று ஆயினர். இந்த அடிமைத்தீவிற்குப் பழங்குடியினரின் எதுவித அடையாளங்களுமற்ற ஒரு அடிமையாகவே அவன் வந்து சேர்ந்தான். அழுக்கான தேகமுடையவன் ஆனால், அவனது கண்கள் மட்டும் மின்னல் வீச்சை போன்று இருப்பதால் மின்னல், முழக்கத்தை, மழையுடன் சேர்த்துத் தருகின்ற கடவுளது பெயரை அவனுக்கு வைக்க நினைத்தேன். ஆனால், அவனோ, யார் எதைக் குறித்துக் கேட்டாலும் வவ்வவ்வே… என்று ஊமை பாஷை பேசியபடியே அலைந்ததால், அவனுக்கு வவ்வே என்ற பெயரே அடிமைத் தீவு முழுவதிலும் நிலைத்துவிட்டது. எடுபிடி வேலைகளைச் செய்யும் அடிமையாகவே இருந்த வவ்வேயிடம் இன்னுமொரு திறமையும் இருந்தது. பேர வாவிக்குள் இருக்கும் முதலைகளைப்பற்றிப் பின்னர் சொல்கிறேன் என்று சொன்னேனல்லவா… அதைக்குறித்துச் சொல்கிறேன்… கேளுங்கள்… அடிமைத்தீவைச் சுற்றியோடும் பேர வாவிக்குள் திரிகின்ற நீண்ட முதலைகளை வேட்டையாடும் பழக்கம் ஹாவ்கின்ஸிற்கு இருந்தது. சுறா மீன் தூண்டில்களில் மீன்களைக் கட்டி, வாவிக்குள் வீச அதை நோக்கி வரும் முதலைகளை அப்படியே கொழுவி கரைக்கு இழுத்து விடுவான். முதலையின் இறைச்சி சுவையாக இருப்பதாகவும், அது கோழி இறைச்சியைப் போல் மிருதுவானவை என்றாலும் ருசி அதிகமானது என குள்ளச்சிப்பாய் அடிக்கடி கூறுவான். வெள்ளைப்பிரபுக்களின் விருந்தில் முதலைக்கறி பிரதான இடம் வகித்தது. சேற்று முதலைகளைப் போலவே இருக்கும் பேர வாவியின் முதலைகள் அங்கு தங்குகின்ற பறவைகளையும், மீன்களையும் தின்று தின்று நன்கு கொழுத்திருந்தன. அவை அதிகளவில் இருந்த போதிலும் அவற்றைப் பிடிப்பது அவ்வளவு சுலபமாயில்லை. அவை மாலை வேளைகளில் மட்டுமே பெரும்பாலும் கரைக்கு வரும். தங்களது பெரும் வாய்களை ஆவென்று திறந்தபடி சூரியனை நோக்கித் தவமிருக்கும். இதைப் பார்க்கும் போதெல்லாம் எங்களது ‘சாவோ’ மக்கள் தீப்பாடலைப் பாடுவதைப் போன்றே அது இருக்கும். வாவியைச்சூழ கரையேறும் முதலைகள் சூரிய வெப்பத்தையும் அதன் ஒளியையும் உடலில் வாங்கிக்கொண்டு பெரும் பற்கள் தெரியும் படி இருக்கும் காட்சி தூரத்தில் இருந்து பார்க்கும் எவருக்கும் அச்ச உணர்வையே ஏற்படுத்தும். கரையில் இருக்கும் முதலைகள் அவ்வெளியில் சிறு சலனத்தை உணர்ந்தாலும் மீண்டும் தாவிக்குதித்து வாவியின் ஆழத்திற்குச் சென்றுவிடும். இவ்வாறு தந்திரம் கொண்ட முதலைகளை வேட்டையாடுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. வவ்வே இதற்கொரு வழியைக் கண்டுபிடித்து குள்ளச்சிப்பாயிடம் விளக்கினான். அன்றிலிருந்து அந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. சூரியன் மறைவதற்கு முன்பே ஹாவ்கின்ஸ் துப்பாக்கியுடன் வந்தான். குள்ளச் சிப்பாயும், வவ்வேயும் முதலை வேட்டைக்காகத் தயாராகியிருந்தனர். தடிகளைக் குறுக்காகக் கட்டி அதில் கோழி இறைச்சியைத் தொங்கவிட்டனர். அதன் கீழே மீன்பிடி வலைகள் விரிக்கப்பட்டன. கோழி இறைச்சியின் ரத்தத்தை அந்தக் கரையெங்கும் தெளிக்க அந்த இரத்த வாடையின் வீச்சம் பேர வாவிக்குள் இருந்த முதலைகளை ஒவ்வொன்றாக வெளி நோக்கி ஈர்த்தது. தூரத்தில் மரத்தோடு இருக்கும் பாறையின் மேலே துப்பாக்கியோடு ஹாவ்கின்ஸ் தருணம் பார்த்து அமர்ந்திருந்தான். சிறியது, பெரியது என முதலைகள் கோழியின் இறைச்சியைத் தின்பதற்காக வெளியேறி வந்தபடியிருந்தன. பெரும் முதலையொன்று தனது கால்களால் வலையை மிதித்தபடி, கொழுவி வைக்கப்பட்ட கோழியைக் கவ்வத் தலையுயர்த்திய அக்கணத்தில் ஹாவ்கின்ஸ் அதன் அடித்தாடையில் தோட்டாவை இறக்கினான். ‘டமார்’ என்ற சத்தம் அந்த அடிமைத்தீவு முழுக்க எதிரொலிக்க புரள நினைத்த முதலை வலையோடு சிக்கிக் கொண்டது. பாறை மறைவிலிருந்த வவ்வேயும், குள்ளச் சிப்பாயும் வலையின் கயிறுகளை இழுத்துப்பிடிக்க இன்னுமொரு வெடி முதலையின் தலையில் விழ, அன்றிரவு கோட்டைக்குள் பெரும் முதலை விருந்து நடைபெற்றது. அன்றிலிருந்து முதலைத் தூண்டில் செய்து அதற்கு வலை விரிக்கும் வேட்டையாளனாகிப் போனான் வவ்வே. வேட்டை இல்லாத நாட்களிலெல்லாம் கட்டுமான வேலைகளுக்கு முக்காசாவுடன் கோட்டைக்குள் சென்று சுவரை வெண்மையாக்கும் சுண்ணாம்புக் கலவையைத் தயார் செய்து கொடுப்பான். நாளாக நாளாக இந்த அடிமைத்தீவு அவனுக்குப் பழக்கப்பட்டுப் போனது. இதிலிருந்து விடுதலை இல்லை என்பதை அவன் உணர்ந்து கொண்டான். பின்னர், இளைஞனான வவ்வே, காதலிக்கவும் கற்றுக் கொண்டான். பழுப்பு நிற அடிமைப் பெண்ணொருத்தியை காதலிப்பதாகக் கூறினான். அடிமைகளுக்கு இரவு உணவாக வழங்கப்படும் கோதுமை மாவில் அவர்கள் ரொட்டி சுட்டுக் கொண்டார்கள். வாரம் ஒரு முறை பாதிப் பேணி அளவிற்குக் கொடுக்கப்படும் கோதுமை மாவில் ரொட்டியைச் சுட்டு தண்ணீரில் நனைத்து உண்டார்கள். முக்காசா தான் எனக்கும், வவ்வேக்குமான ரொட்டிகளைத் தயாரிப்பது வழக்கம், பழுப்பு நிறப் பெண் அவனுக்காக ரொட்டிகளைத் தயாரிக்கத் தொடங்கியதிலிருந்தே அவள், வவ்வேயைக் காதலிப்பதை முக்காசா உணர்ந்து கொண்டான். இருவரும் கோட்டைக்குள் தேவாலயம் கட்டும் பணிகளுக்காக வள்ளமேறிய நிலையில், அங்குள்ள பாதிரியார் அவர்களுக்குத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். பாதிரியாரின் ஆலோசனைக்கு அமைய உலோகத்தட்டுக்களை வைத்து அவர்களுக்கென்றொரு குடிலும் அடிமைத் தீவில் அமைத்துக் கொடுக்கப்பட்டது. வவ்வே…. வவ்வ… வவ்வவ்…. என்று தனது சந்தோஷத்தை அடிமைத் தீவு முழுவதிலும் கூவித் திரிந்தான். அவர்கள் இருவரும் தங்களது முதலிரவை அடிமைத்தீவிலே கழித்தார்கள். முடோனியும் – நானும் இதுபோலத்தான் எங்களது இரவுகளையும் ஒன்றாகக் கழித்தோம். அவளது ஞாபகங்கள் என்னை அன்று பெரிதும் வாட்டின. குடிசைக்குள் இருந்து வெளியே வந்து வானத்திலிருந்த வேட்டைக்காரன் நட்சத்திரத்தைப் பார்த்தேன். அப்போது வவ்வேயின் பழுப்பு நிறக் காதலி முயக்கத்தில் வெகுவாக ஆலிங்கனம் செய்தாள். அது எனக்குள் இத்தனை காலமும் மறைந்திருந்த காமத்தையும், முடோனியின் முகத்தையும், அவளது உடலையும், எங்களது பருத்தித் காடுகளையும், ‘சாவோ’ மக்களையும் ஒரு கணம் உதிர்த்துவிட்டுப் போனது. 3 கோடை காலம் – கிழக்கு ஆப்பிரிக்காவின் பருத்திக் காடு முடோனி காட்டு விலங்கொன்றிலிருந்து பெறப்பட்ட நரம்புகளை வலிமையான தனது கைகளால் இழுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். தீப்பாடல் பாடப்படும் போது நியதிடி இசைக்கருவியை வாசிப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தவள், முக்கோணச் சட்டமொன்றின் வளைவில் தந்திகளை இணைத்துச் சுருதி சேர்த்துக் கொண்டாள். குழு நடனத்தை ஆடவிருந்த ஆண்கள் அனைவரும் சிவப்பு ஆடைகளை அணிந்து கொண்டிருந்தார்கள். முதுகிழவியின் இறப்பு ‘சாவோ’ மக்களிடையே கனத்த மனத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், இறந்தவர்களை மகிழ்வோடு அனுப்பி வைப்பதே எங்களது வழக்கமாயிருந்தது. எனது நண்பனான முக்காசா உடலெங்கும் சாம்பலைக் குழைத்துப் பூசியபடி, நடுவே மூட்டப்பட்டிருந்த பெருந்தீ அருகே தோன்றினான். அவன் தனது தாயின் ஆன்மாவைக் கடவுளிடத்தில் சேர்ப்பிப்பதற்கான தீப்பாடலைப் பெருங்குரலெடுத்துப் பாட ஆரம்பித்த உடனேயே குடி மக்கள் யாவரும் கைப்பிடியளவு தானியத்தோடு அந்த இடத்தை நெருங்கி வந்தனர். சிவப்பு ஆடை அணிந்த ஆண்கள் யாவரும் அவனைச் சுற்றி வட்டமாகத் தோன்றினர். முக்காசா தீப்பாடலின் முதற்கோவையான அழைப்புப் பாடலை மீண்டும் ஒரு தடவை உரத்த குரலில் கூவிக் கூவிப் பாடினான். முடோனி தந்திகளை அதிர்வுறச் செய்தாள். அது காற்றில் ஏற்படுத்திய அலைவுகளில் எனது மேனி சிலிர்த்தடங்கியது. கூடவே சிவோட்டி இசைக்கருவியும் ஊதப்பட அது ஆந்தையின் அழுகுரலைப் போல ஒலியெழுப்பியது. வட்டமாக நின்றிருந்த ஆண்கள் யாவரும் கால்களைத் தூக்கி நிலத்தை மிதித்தனர். கைகளைக் காற்றில் மெதுவாக அசைத்தனர். அவன் அழைப்புப்பாடலை நிறுத்தி முதுகிழவியின் பரம்பரை குறித்துப் பாடத்தொடங்கினான். மெல்ல மெல்ல பாடல் உருக்கமாக மாறிய வேளையில் முடோனி தனது நரம்புக்கருவியின் சில தந்திகளை அருட்டி அதற்கு ஏற்றாற் போல இசையளித்தாள். ஆண்கள் காற்றில் கைகளை அசைத்துக் கொண்டே ஆட்டத்தின் அடவுகளை மாற்றிக் குதிக்கத் தொடங்க, வட்டமான ஆட்டமுறைக்குள் தீ கனன்று கொண்டிருந்தது. இப்போது இறுதியாக வேகமாகப் பாடும் தீப்பாடல் தொடங்கியது. ஆண்கள் மேலும் கீழும் குதிக்கத் தொடங்க, பருத்திக் காடெங்கும் தீப்பிடித்தது போல முக்காசா தீப்பாடலைப் பாடினான். பாடலின் வேகத்திற்கு இணையாக நியதிடியின் எட்டுத் தந்திகளையும் ஒருங்கே அசைத்து அவளும் அவனோடு சேர்ந்து வெறியாட்டத்தில் இறங்கினாள். இருவரும் தீயைச் சுற்றியாட, சிவப்புச் சட்டை ஆண்கள், அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்தனர். தீயின் மினுமினுப்பில் முக்காசா மற்றும் முடோனியின் ஆட்டம் ஆக்ரோசமாக இருந்தது. சகோதரர்கள் இருவரும் தாயின் ஆன்மாவைக் கடவுளிடம் எத்தி வைத்த கணத்தில் நிலத்தில் கிடையாக விழ பழங்குடிகள் ஓவென்று கத்தியபடி தமது கைகளுக்குள்ளிருந்த தானியத்தைத் தீயில் வீசினர். நான் ஓடோடிச் சென்று முடோனியைத் தூக்கவும், ஆண்கள் முக்காசாவைத் தாங்கிப்பிடிக்கவும் ஆட்டம் நிறைவுற்றது. தீயின் கனதி குறையத் தொடங்க குடிகள் யாவரும் தமது குடிசைகளுக்குத் திரும்பினர். அன்றிரவு முடோனியும் நானும் உறவில் ஈடுபடத் தொடங்கினோம். இறந்தவர்களின் ஆன்மா அவர்களது குடும்பத்தை ஆசீர்வதிப்பதாகவும் அவர்களுக்குக் குழந்தைப் பேறை வழங்குவதாகவும் எமது குடிமக்கள் நம்பினர். அவர்கள் இறந்து அடுத்த பௌர்ணமிக்குள் கருவுறும் குழந்தை அவர்களது குணாம்சங்களைக் கொண்டே பிறப்பதாகவும் சொல்லிக் கொண்டனர். முதுகிழவியின் நீடித்த ஆயுளோடு ஒரு ஆண் குழந்தையை வேண்டி முடோனியும் நானும் முயங்கிக் கிடந்தோம். தரையில் கிடந்து என் மீது இயங்கத் தொடங்கியவள் தனது கால்களால் அருகிலிருந்த நீர்க் குவளையைத் தவறுதலாக உதைத்து விட பதறிக் கொண்டு எழுந்தாள். கோடை காலம் என்பதால் நீர் குறைவாகவே இருந்தது. அன்று வீட்டில் இருந்த கொஞ்சம் நீரையும் அவள் தட்டிவிட, பதற்றத்தில் காமத்தைத் தொலைத்த நாங்களிருவரும் நாவறண்ட படியே இரவைக் கழிக்க வேண்டியதாயிற்று. வெள்ளையர்கள் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்திருந்தனர். தானியங்கள் விளைந்த நிலமெங்கும் பருத்தியை விதைத்திருந்தனர். அந்தத் தோட்டங்களிலே நாங்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டோம். அவர்கள் பதிலீடாக, சோளம் விதைகளையும், கடல் மீன்களையும் எங்களுக்கு வழங்கினர். அவ்வப்போது வெள்ளையர்கள் எங்களுக்குப் புகையிலைகளையும் தந்தனர். அவை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும், வெள்ளையர்களின் பெரும் பெரும் கப்பல்கள் தொலைவில் கிழக்கேயுள்ள துறைமுகங்களில் நங்கூரமிடப்பட்டிருப்பதாகவும் கதைகளை அப்போது நான் கேள்வியுற்றேன். துறைமுகப் பணிகளுக்காக அவர்களால் அழைத்துச் சென்றவர்கள் நன்கு செழித்திருந்தார்கள். பருத்திக் காட்டில் தானியங்களையும் விதைக்க அனுமதிக்கப்பட்டார்கள். நாங்கள் கடல் மீன்களுக்காகத் தொடர்ந்தும் பருத்தியின் நுனிகளைக் கிள்ளிக் கொண்டும், களைகளைப் பிடுங்கிக் கொண்டும், பஞ்சினை ஆய்ந்து சேகரிக்கவென்றும் விலங்குகளாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். சில நாட்களின் பின், அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ‘நமது குழந்தை எனது வயிற்றில் வளர்கிறது என்று நினைக்கிறேன்…’ ‘ஏன் உனக்கு இரத்தம் படவில்லையா?!…’ ‘இல்லை… இரண்டு மாதங்களாக இரத்தம் படவில்லை… ‘ நான் வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கினேன். அது நிச்சயமாக ஆண் குழந்தையாகத்தான் இருக்கும். முதுகிழவியின் அடையாளங்களோடு அவன் பிறப்பான். எங்கள் முதுகுலக் கடவுளான ‘என்காய்’ போல அவன் இருப்பான். என்காயிற்கு இரண்டு குணங்களுண்டு, குடிகளைக் காக்கும் போது நீல நிற உடலில் சாந்தமாகவும், போராடும் போது முதிர்ந்த காட்டுப்பருத்தியின் சிவப்பு நிறத்தில் இருப்பதாகவும் முதுகிழவி கூறுவாள். இவனும் அப்படித்தான் இருப்பான். ‘சாவோ’ குடிமக்களின் காப்பானாக இருப்பான். மீண்டும் பழையபடி எனது தந்தை போல, காட்டிற்கு வேட்டையாடச் செல்வான். நீண்ட தூரம் பயணித்துப் பெருங்கடலிலை அலைக்கழிக்கும் சுறாக்களைப் பிடித்து வருவான். முழுக்குடியினருக்கும் அதனைப் பகிர்ந்தளிப்பான். எனது தந்தை எப்படி ‘சாவோ’ மக்களைக் காப்பாற்றினாரோ அப்படியே அவன் இருப்பான். என்னைப்போல வெள்ளையர்களுக்கு ஊழியம் செய்து கொண்டு அவர்கள் தரும் சிறு உப்புமீன்களுக்காகத் தனது வியர்வையை இந்தப் பருத்திக் காடுகளில் சிந்தமாட்டான். உயர்ந்த மேட்டு நிலமொன்றில் என்னைப் புதைத்துவிட்டு எனக்கான தீப்பாடலையும் அவன் சகாக்களுடன் நடனமாடியபடியே அவன் பாடுவான் என்று நினைத்து நினைத்து மகிழ்வுற்றேன். முடோனியின் வயிறு மெல்ல மெல்ல வளருகையில் எனது மனதில் பயம் தொடர்ந்து கொண்டே போயிற்று. முழு நிலத்தையும் வெள்ளையர்கள் பருத்திக்காக உழுது விட்டிருந்தார்கள். வனத்தின் பெருமரங்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. துறைமுகத்தில் வேலை செய்தால் மட்டுமே தானியங்களை விதைக்கக் கூடிய நிலத்தை வெள்ளையர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். எனவே கடினமான கப்பல் கட்டும் துறைமுக வேலைக்குச் செல்வதற்காக என்னை நான் தயார்படுத்திக் கொண்டேன். விரைவில், நல்ல உணவுப் பொருட்களோடு பருத்தித் காட்டை மீண்டும் அடையும் எண்ணம் எனக்கிருந்தது. முக்காசாவும் என்னோடு பயணமாவதற்கு ஒத்துக் கொண்டான். ஆனால் முடோனியை மட்டும் என்னால் சமாளிக்கவே முடியவில்லை. அவளுடனான நெடு நேரப் போராட்டத்திற்குப் பின் அவள் வயிற்றில் வளரும் எனது குழந்தை மீது சத்தியம் செய்துவிட்டு நானும், முக்காசாவும், மேலும் சிலரும் வெள்ளையர்களோடு துறைமுகத்தை நோக்கிப் பயணமானோம். இத்தனை நினைவுகளும் என்னில் ஓடி மறைந்த பின்னரும் வானத்தின் நடுவே வேட்டைக்காரன் இன்னும் தனது வாளுடன் அப்படியே நின்று கொண்டிருந்தான். 4 இறுதியாக, மாரி காலம் – கொழும்பின் அடிமைத்தீவும், கோட்டை தேவாலயமும். அன்றைய தினம், சூரியன் அஸ்தமிக்கும் வேளையில், வவ்வேயின் மனைவி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த போது, நாங்கள் தேவாலயத்தினுள் குழந்தை இயேசுவைத் தாங்கியபடி இருக்கும் மரியாள் சிலையினை ஸ்தாபிக்க நினைத்தோம். வெள்ளைக்காரக் கட்டிடக்கலை நிபுணர்கள் அந்த அழகிய சிலையின் பிரம்மாண்டத்தையும், மரியாளது சிலைகளுடன் இணைக்கப்படாதவாறு தனித்தனிருந்த குழந்தை யேசுவையும் அதன் வார்ப்பையும் எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தனர். வவ்வே உயிரற்று அங்கு நடக்கும் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். மரியாளது கைகளில் குழந்தை யேசுவின் சிலையைப் பொருத்தி அதன் இடுக்குகளில் சிறிது சாந்தினை மெழுகி அதனை உயரத்தூக்கி நிறுத்த வேண்டியது எங்களது வேலையாயிருந்தது. பலமிக்க மட்டும் சிலையை உயர்த்தினோம், இன்னும் மேலே, இன்னும் மேலே உயர்த்த அந்த தேவாலயத்தின் மையத்தில் தாயொருத்தியின் கனத்த மௌனம் நிலவிய அதேவேளை, பழுப்பு நிறப் பெண் வீறிட்ட சத்தத்துடன் அடிமைத்தீவில் முனகிக் கொண்டிருந்தாள். மெல்லிய உடலை உடைய முக்காசா சாளரத்தின் மீதேறி, பலகை வழியே நடந்து குழந்தை யேசுவைப் பொருத்த முயல, வவ்வே தனது கண்களை மூடிக் கடவுளே… என் குழந்தையைக் காப்பாற்றும் என வேண்டினான். யாரும் எதிர்பாராத வகையில் குழந்தை யேசுவின் சிலை முக்காசாவின் கைகளில் இருந்து கீழே விழுந்து உடைந்து, அதன் சில்லுகள் தேவாலயத்தின் பரப்புகளெங்கும் துண்டங்களாக வெடித்துச் சிதறின. வெடித்துச் சிதறிய குழந்தை இயேசுவின் சிலையின் கரங்கள் வவ்வேயின் பாதங்களைத் தொடவும், அவன் துணுக்குற்று விழி திறந்து தன் பாதங்களை நோக்க, அங்கே அடிமைத்தீவின் குடிசைக்குள் ஒரு ஆண் குழந்தை வவ்வே….. எனும் சத்தத்துடன் ஜனித்தது. தேவாலயமே களேபரமானது, எல்லோரும் எல்லாத் திசைகளிலும் ஓடினர், காவலர்கள் பலகை மீதிருந்த முக்காசாவைப் பிடித்துக் கீழிறக்கி தமது சப்பாத்துக் கால்களால் மிதித்தனர். அனைத்து அடிமைகளையும் ஒன்றாக்கி வந்த வேளையில், வவ்வே மட்டும் சிதறிக்கிடந்த ஒவ்வொரு துண்டங்களையும் சேகரிக்கத் தொடங்கினான். இதே நேரம், வவ்வேயின் குடிலுக்குள் புகுந்த குள்ளச் சிப்பாய், பழுப்பு நிறப் பெண்ணின் கைகளில் இரத்தம் தோய்ந்தபடியிருந்த குழந்தையைப் பறித்தெடுத்து, அடிமைத்தீவின் சாலைகளில் நடக்கத் தொடங்கினான். தீவில் இருந்தது சில பெண்கள் மட்டுமே. அவர்கள் அதனைத் தடுக்க முடியாமல் தள்ளாட, இரத்தத்தில் நனைந்த தனது கீழாடையுடன் வவ்வேயின் மனைவி, தனது குழந்தையை நோக்கி ஓட்டமெடுத்தாள். ஆனாலும் அவன் மிகவும் வேகமாகத் தெருவைக்கடந்து வெளியேறினான். அதே நேரம் ஹாவ்கின்ஸ் தனது துப்பாக்கியுடன் தயாராக இருந்தான். குள்ளச்சிப்பாய் குழந்தையைக் கைகளில் ஏந்தித் தலைகீழாகக் கவிழ்த்து கயிற்றில் இறுகக் கட்டினான். வவ்வேயின் குழந்தை சுவாசப்பை நிறைந்த காற்றில் வீறிட்டழுதது. பேர வாவியை நோக்கி நடந்த குள்ளச் சிப்பாய் முதலைத் தூண்டிலில் கோழியைக் கொழுவும் இடத்தில், வவ்வேயின் குழந்தையைக் கொழுவி வலையை விரித்தான். குழந்தையின் வீறிட்டழும் சத்தம் அடிமைத்தீவெங்கும் நிறைந்தது. ஹாவ்கின்ஸ் முதலையின் வரவுக்காகத் துப்பாக்கியோடு காத்திருந்தான். நேரம் கடக்க, பெரும் முதலையொன்று கரையேறியது. அது ஹாவ்கின்ஸின் துப்பாக்கிக் குறியில் இருந்து தவறி, அந்த ஆண்குழந்தையை ஒரு கடியாகக் கடித்து இழுத்துச் சென்ற வேளையில் எங்கள் வள்ளங்கள் அடிமைத்தீவை நோக்கிப் புறப்பட்டிருந்தன. அடிமைத்தீவில் ஆக்ரோசமாக இருந்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. குள்ளச் சிப்பாயோடு சேர்ந்து கொண்ட வெள்ளையர்கள் குதிரைகளில் அமர்ந்திருந்தவாறே மக்களைத் தாக்கினர். எல்லோரும் தங்களது குடில்களை நோக்கிப் பதுங்கத் தொடங்கிய வேளையில், அடிமைத்தீவின் வாசலில் மயங்கிக் கிடந்த வவ்வேயின் மனைவி மீதும், வள்ளத்தில் வந்திறங்கிய வவ்வே மீதும் தாக்குதலை நிகழ்த்தத் தொடங்கினர். அவனது தலையில் ஓங்கியடித்துச் சிறைக்குள் இழுத்துச் சென்றான் குள்ளச்சிப்பாய். அவனது திறந்த கண்கள் என்னைப் பார்த்தபடியே மூட, அவன் மயக்க நிலையை அடைந்தான். இந்தத் துயர் நிறைந்த கதையைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல நினைத்தேன். இது அத்தனைக்கும் பிறகே எனது கொலைத்தாக்குதலுக்கான காரணம் பிறந்தது. இறுதியாக இன்னுமொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடுத்த நாள் இந்த அடிமையானவனின் தலை, பேர வாவியின் ஓரத்தில் தொங்கவிடப்பட்டது. அடிமைகள் எல்லோரும் அவ்விடத்தை நோக்கி வந்தனர். கைகால்கள் உடைக்கப்பட்ட நிலையில் வவ்வேயையும் அந்த இடத்திற்குத் தூக்கி வந்தனர். வவ்வே பெருங்குரலெடுத்துக் கதறி அழுதான். பொருமினான். விம்மி விம்மி அழுதான். தனது உடைந்த கால்களை நிமிர்த்தி மேலெழுந்தான். அவனது இடது கண்ணில் இருந்து ஒரு கண்ணீர்த்துளி தரையில் வீழ்ந்தது. வெம்மை மிகுந்த அவனது கண்ணீர் அடிமைத்தீவைச் சூடேற்றியது. அப்போது, அவன் வவ்வே… வவ்வவ்வவ்வவ்வே…. எனப் பெருங்குரலெடுத்துப் பாடினான். எனது ஆன்மாவிற்கு அவனது ஊமைப்பாஷையை மொழி பெயர்க்கத் தெரிந்திருந்தது. வவ்வே பாடினான் ஊமை பாஷையில்…. முதுகிழவியின் பேரன் நானே… முடோனியின் மகன் நானே… எனது தந்தையைப் போன்றவரே நீங்கள் எனக்காக இறந்தீரே…. https://thadari.com/the-fire-songs-of-the-alligators-nilavanai-intira/
  8. ஆமென்! sudumanalMarch 4, 2026 மத்திய கிழக்கு போர்க் குறிப்பு கேள்வி கேட்கப்பட முடியாதவர்களை யாராவது துணிந்து கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பெறுமதி உண்டு. அது ஏற்படுத்துகிற மகிழ்ச்சி என்ற ஒன்று உண்டு. இவை அடிமையாக வாழ மறுக்கிற, அடங்க மறுக்கிற மனித உணர்வுகளிலிருந்து எழுபவை. ஈரான் தன் மீதான பாதிப்பையும் பொருட்படுத்தாமல் இன்று கொடுத்துக் கொண்டிருக்கும் பதிலடி என்பது இவற்றின் குறியீடுகளாக இருக்கின்றன. மேற்குலகு உருவாக்கி கட்டமைத்திருக்கிற இஸ்லாமிய எதிர்ப்பு மனநிலையிலும், ஜனநாயகத்தை பண்பாக வலியுறுத்துவதற்கும் மேலால் அதை வெறும் கட்டமைப்பாக மட்டும் வைத்து புரிந்துகொள்கிற மனநிலையிலும் நின்று இப்போரை அல்லது முரண்களின் மோதலை புரிந்துகொள்ள முடியாது. கொலோகாஸ் யூதப் படுகொலையிலிருந்து எப்ஸ்ரைன் வக்கிரமாளிகைக்குள் நடத்தப்பட்டது வரையான கொடூரமான செயல்களெல்லாம் மேற்குலக ஜனநாயகத்தின் பண்பை தோலுரித்துக் காட்டுபவை. அவர்களின் ஜனநாயகக் கட்டமைப்புக் கூட காலனிய நவகாலனிய சுரண்டல்களால் பெறப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பொருளாதார அடித்தளத்தைக் கொண்டவை. சலுகைபெற்ற மக்களாக (நாம் உட்பட) மேற்குலக நாடுகளில் வாழ இதுவே காரணம். இதை இந்த மக்கள் இழக்கத் தயாராக இல்லை. எத்தனையோ மனிதாபிமானப் போராட்டங்களையும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களையும் கண்ட மேற்குலக வீதிகள் காலனிய/நவ காலனிய வளச் சுரண்டலுக்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்தைத் தன்னும் கண்டதாக வரலாறு இல்லை. மேற்குலகம் வலியுறுத்தும் இந்த ஜனநாயக அளவுகோலை சர்வ உலகத்துக்குமான பொதுமையாக பிரதியெடுத்து சிந்திக்கும் அறிவுநிலையில் எம்மை நிலைநிறுத்தினால், மனிதஜீவியின் மேற்சொன்ன அடங்க மறுக்கும் இயல்பை விளங்கிக்கொள்ள முடியாது. அதுவே நூற்றாண்டு கால பல்வகைப் பண்பாட்டுத் தொடர்ச்சிகொண்ட மனித இன நாகரிகங்களின் பன்முக வளர்ச்சிப் பாதைகளை தேர்வு செய்கின்றது. நாகரிகம் என்பது மேற்குலகப் பண்பாட்டை அச்சும் அசலுமாக பிரதிபலிப்பதல்ல. அது ஒற்றைப் படித்தானதுமல்ல. அதை மற்றவர்கள் மீது மேற்குலகம் திணிப்பது வெள்ளை மேலாதிக்கம் கொண்ட காலனிய மனநிலையிலிருந்து பிறந்தது. அது ஐரோப்பிய மையவாத தன்மை கொண்டது. அவர்கள் வலியுறுத்துகிற இந்த கருத்தமைவை அப்படியே ஏற்றுக் கொள்வதானது காலனிய சிந்தனைமுறைக்குள் அகப்பட்டு வெளியேற முடியாத நிலையின் வெளிப்பாடு ஆகும். எனவே நூற்றாண்டு கால இஸ்லாமியப் பண்பாட்டை நீக்கம் செய்து ஈரானை புரிந்துகொள்ள முடியாது. ஈரானில் மதத் தலைவர் இருக்கிற அதே நேரம் ஈரானில் பாராளுமன்ற (ஜனநாயகக் கட்டமைப்பு) முறைமையும் செயல்வடிவத்தில் உள்ளது. இஸ்லாமியப் பண்பாட்டை வைத்து இப்போதும் மன்னராட்சி செய்கிற நிலையோடு ஒப்பிடுகையில், மத்திய கிழக்கில் ஒரு ஜனநாயகக் கட்டமைப்பைக் கொண்ட நாடாக ஈரானை பார்க்க முடியும். அதன் ஜனநாயகப் பண்பானது மதப் பண்பாட்டிலிருந்து உருவானதாக இருக்கிறது. இந்தப் பாரம்பரிய பண்பாட்டை மறுதலிப்பதோ ஏற்றுக்கொள்வதோ ஈரான் மக்களினது தேர்வுக்கு உரியது. காலம்-வெளி உடனான உலக இயங்குநிலையில் இத் தேர்வு மாற்றமடையவும் கூடும். (என்னளவில் அரசை மத நீக்கம் செய்ய வேண்டும் என்பது ஈரானுக்கும் பொருந்தும் என நம்புகிறபோதும், ஈரான் மக்களது தேர்வை நான் புரிந்துகொள்ளவே செய்கிறேன்). ஈரானின் அரசுக் கட்டமைப்பினுள் வைத்தே அதன் ஜனநாயக மறுப்புக்கு எதிராக வீதியில் மக்கள் இறங்கினார்கள். (அதற்குள் மொசாட் புகுந்துவிளையாடி சேறாடியது வேறு கதை). அவர்கள் மதப் பண்பாட்டை புறக்கணித்துவிட்டு, அரசுக்கு எதிராக இறங்கவில்லை. அதனாலேயே மதத் தலைவர் கமெய்னியின் கொலையை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இன்னும் சொல்வதானால் ஈரானிய மக்களிடத்தில் ஜீரணிக்க முடியாத பெரும் இழப்பாக இருக்கிறது. ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பழிவாங்க வேண்டும் என அவர்கள் -அமெரிக்க இஸ்ரேல் குண்டு வீச்சுக்கு நடுவிலும்- வீதியில் இறங்கி ஊர்வலம் போனார்கள். மற்றைய நாடுகள் மீது கமெய்னி பயங்கரவாதச் செயல்களை செய்தார் என்பதற்கும், ஈரான் செய்தது என்பதற்கும் என்ன ஆதாரங்களை அமெரிக்கா முன்வைக்கிறது. உலகம் முழுவதும் பல ஆயிரம் பேரைக் கொன்றார்கள் என சொல்கிறது. அது எங்கு நிகழ்ந்தது என அவர்களால் முன்வைக்க துப்பில்லை. (ஈரான்-ஈராக் இடையிலான போரை எட்டு வருடங்களாக நிகழ்த்தியதில் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் பங்குதான் இருக்கிறது). வியட்நாமிலிருந்து வெனிசுவேலா வரை மில்லியன் கணக்கான மக்களை கொன்ற அமெரிக்காவும், பலஸ்தீன மக்களை நக்பா படுகொலையிலிருந்து காஸா படுகொலை வரையான தொடரும் இரத்தக்கறை வரலாற்றையும் கொண்ட இஸ்ரேலும் இதைச் சொல்வது வேடிக்கையானது. இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் மேற்கொள்வதற்கான காரணம் இஸ்ரேலின் பலஸ்தீன மக்கள் மீதான படுகொலையும் நில ஆக்கிரமிப்பும் ஆகும். இதில் கொல்லப்படும் பலஸ்தீன மக்களும் இஸ்ரேல் மக்களும் குறித்து இஸ்ரேலிய அரசுக்கு எந்தக் கவலையுமில்லை. அமெரிக்கா என்ற ஏகாதிபத்தியம் தனது உளவுப்படை மூலம் தான் விரும்பாத ஆட்சிகளை திரைமறைவில் நின்று கவிழ்த்திய அல்லது அத் தலைவர்களைக் கொல்கிற வேலையை நீண்ட காலமாகவே செய்துவந்தது. கம்யூனிச எதிர்ப்பை வைத்து வியட்நாமுடன், நிக்கரகுவாவுடன் போர் புரிந்தது. சோவியத் ஆதரவு ஆப்பானிஸ்தானுடன் போரிட அல்கைடா என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி அதனூடாக போரிட்டது. பின் அதே அல்கைடா அமெரிக்காவுக்கு எதிரியாக மாறியது இன்னொரு கதை. சோவியத் இன் வீழ்ச்சிக்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்தியம் மறைமுகமாக அன்றி, நேரடியாகவே நாடுகளில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தியது. தனது நலனுக்கு குறுக்கே நின்ற அரசுகளை அச்சுறுத்தியது. இதன் தொடர்ச்சி இன்று ஈரான் வரை வந்து நிற்கின்றது. இதற்குமுன்னர் வெனிசுவேலாவுக்குள் புகுந்து அதன் அதிபர் மடுரோ அவர்களை கடத்தியது அமெரிக்கா. உலகம் மௌனமாக செயலற்று பார்த்துக் கொண்டிருந்தது. எந்தவகை உலக சட்டவிதிகளுக்கோ, தார்மீக அறத்துக்கோ உட்படாத இந்தச் செயலை அமெரிக்கா செய்து காட்டியபோதும், ஐநா கூட செயலற்றே இருந்தது. இதே வகைப்பட்ட அணுகுமுறையை ஈரான் விடயத்தில் அதன் உச்சபட்சத் தலைவரை மட்டுமல்ல, படைத்துறை சார்ந்த மற்றும் பாராளுமன்றம் சார்ந்த 40 க்கு மேற்பட்ட தலைவர்களையும் கொன்றொழித்திருக்கிறது. ஓர் அரச கட்டமைப்பினை ஆட்டம் காணச் செய்யக்கூடிய இந்தக் கூட்டுப் படுகொலைகூட ஈரானில் ஆட்சிமாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போனது அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரும் அதிர்ச்சி. அந்தளவுக்கு கமெய்னி அவர்கள் ஏகாதிபத்தியத்தின் தன்மையை புரிந்துகொண்டு அரச கட்டமைப்பிலுள்ள தலைவர்களை தாமதமின்றி பிரதியீடு செய்யக் கூடிய வகையில் ஒரு பன்முகப்பட்ட அமைப்புமுறையை உருவாக்கியிருக்கிறார். இது சர்வாதிகாரியாக இருக்கும் ஒருவரின் பண்புநிலைகளுக்கு முரணானது. சர்வாதிகாரிகள் தன்னைத் தவிர ஒருவரையுமே நம்புவதில்லை. இரண்டாம் கட்டத் தலைமையைக்கூட வளர விடுவதில்லை. இந்தத் தன்மைகளை கமெய்னி அவர்கள் கொண்டிருந்திருந்தால் அவரின் திடீர் மரணத்தோடு, ஈரானின் ஆட்சி பொலபொலவென உதிர்ந்து கொட்டுண்டு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். 46 வருடமாக ஈரானைவிட்டு அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க எடுபிடி ஷா மன்னின் வாரிசு கறள்பிடித்த அரசமுடியோடு மீண்டும் பதவிக்கு வந்திருக்கவும் முடிந்திருக்கும். ஈரானின் இன்றைய அரசை விரும்பாத ஈரானிய மக்கள்கூட மீண்டும் ஒரு முடியாட்சியை விரும்பப் போவதில்லை. ஈரானிய அரசோடு தீர்த்துக் கொள்ள வேண்டிய பல விடயங்கள் இந்த மக்களுக்கு இருக்கிறது. அவர்கள் அதற்காக வீதிக்கு இறங்கிப் போராடவும் செய்தார்கள். அதற்குள் ஊடுருவி மொசாட் ரெஹ்ரான் கிளர்ச்சியை (2014 உக்ரைன்) மைடான் கிளர்ச்சி போன்று மாற்ற எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. அதில் ஈரான் அரசு நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்கு உரியதாக இருக்கலாம். அந்தக் கணக்கை ஈரானிய மக்களே அரசுடன் சுயமாகத் தீர்த்துக் கொள்வார்கள். அல்லது ஒரு சுயபரிசீலனையினூடாக அரசு தன்னை மாற்றிக் கொள்ளலாம். இந்தப் பணியை அமெரிக்காவோ இஸ்ரேலோ மேற்குலகோ காலனிய மனப்பான்மையுடன் அணுகி தலையிடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தவகை தலையீடுகளான ஆட்சி மாற்ற சதிகள், தலைவர்களை கடத்துவது, கொலைசெய்வது என்ற சர்வாதிகார செயல்களை அடையாளம் கண்டு முதன்மையில் வைத்து எதிர்ப்பதற்குப் பதிலாக, அதற்குப் பலியாகும் நாடுகளை குற்றப்படுத்துவது அல்லது பலியாக்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. (அது ஒடுக்கும் எந்த அரசையும் நியாயப்படுத்துவது என பொருள் கொள்வதாகாது). அத்தோடு அமெரிக்கத் தலையீட்டைக்; கோருவது அல்லது அதை நியாயப்படுத்துவது ஒரு தேர்ந்த அரசியல் பார்வையும் அல்ல. உண்மையில் அது ஆபத்தானது. அதிகாரமற்ற மெலிந்த நாடுகளின்; கதவுகளையும் இந்தப் பிசாசு எதிர்காலத்தில் தட்டவும் கூடும். அதற்கு பலியாவது உங்கள் நாடாகவும்கூட இருக்க முடியும் என்ற புரிதலாவது தேவை. இப்படியாக அமெரிக்கா கதவுகளை உடைத்துத் திறந்து ஜனநாயகத்தை மலரச் செய்துகாட்டிய ஒரு நாட்டையாவது உதாரணமாகக் காட்ட முடியாது. 1979 இல் ஏற்பட்ட ஈரானியப் புரட்சியின் பின் தமக்கு ஒவ்வாத அரசு என்ற ஒரேயொரு காரணத்துக்காக மேற்குலகு பொருளாதாரத் தடைகளை அறிவித்தது. இந்தப் புற அழுத்தத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நலிவடையச் செய்து அதன்மூலம் மக்களின் வாழ்நிலையை நெருக்கடிக்கு உள்ளாக்கி, மக்கள்; அரசுக்கு எதிராக கிளர்ந்து எழப் பண்ணுகிற கேடுகெட்ட உத்தி; அது. இந்த அணுகுமுறை வெனிசுவேலாவுக்கு எதிராகவும் செயற்படுத்தப்பட்டது. உச்சபட்சமாக, அறுபது ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிசத்துக்கு எதிரான வெறித்தனத்தோடு கியூபாவுக்கு எதிராக இன்றுவரை செயற்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அடுத்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நாடு கியூபா. இவ்வளவு அழுத்தங்களுக்கு இடையேயும் மத்தியகிழக்கில் அதிகளவு கல்வியறிவு படைத்தவர்களாகவும், விஞ்ஞானம் உட்பட பல துறைகளில் முன்னேறியவர்களாகவும், பாராளுமன்றத்தில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றி வைத்திருப்பவர்களாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை கவனம் கொள்ள வேண்டும். அவ்வாறான ஓர் ஆட்சிமுறைமையை சர்வாதிகாரம் என்ற எல்லைக்குள் வைத்துப் புரிந்துகொள்வது சாத்தியமா?. அதன் ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசுவது என்பதற்குப் பதிலாக, சர்வாதிகாரம் என்ற ஒற்றைச் சொல்லால் போகிற போக்கில் உச்சரித்துவிட்டு கடந்து செல்வது ஒரு அரசியல் பார்வையே அல்ல. ஈரான் மீதான போர் என்பது இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரலுடன் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது அமெரிக்காவின் நலன்களோடும் சம்பந்தப்பட்டது. வளங்களை தடுத்து நிறுத்துவதன் மூலம் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு சம்பந்தப்பட்டது. ஜி-7 இனை மேவியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பின்; பொருளாதார வளர்ச்சியை அடித்து வீழ்த்துவதோடு சம்பந்தப்பட்டது. ஒற்றைத் துருவ அதிகாரத்தை தக்கவைப்பதோடு சம்பந்தப்பட்டது. பெட்ரோ டொலர் நீக்கத்தை தடுத்து நிறுத்துவதோடு சம்பந்தப்பட்டது. மத்திய கிழக்கை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதோடு சம்பந்தப்பட்டது. இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரல் பலஸ்தீனத்தை மறுத்து (அதாவது இரு அரசுத் தீர்வை மறுத்து), அதை சிதைத்து இஸ்ரேல் என்ற ஓர் அரசுத் தீர்வை நிலைநாட்டுவது. அத்தோடு அகண்ட இஸ்ரேலை -அயல் நாடுகளுக்குள் எல்லைகளை அரக்கி- உருவாக்குவது. அதற்குத் தடையாக அல்லது சவாலாக இருக்கும் ஈரானை பலமிழக்கச் செய்வது அல்லது ஈரானில் எடுபிடி அரசை நிறுவுவது. ஈரானின் உதவியோடு பலஸ்தீன மக்களுக்காக நிற்கும் ஹமாஸ் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை பலமிழக்கச் செய்வது. மத்திய கிழக்கில் ஈரான் இஸ்ரேலைவிட மிதப்பான அதிகார சக்தியாக நிற்பதை தடுப்பது. இந்த நிகழ்ச்சி நிரலுக்குள் நிகழ்த்தப்பட்டதுதான் ஈராக் மீதான அமெரிக்காவின் போரும்கூட. அமெரிக்காவும் இஸ்ரேலும் பிரிக்க முடியாத சக்திகளாக பிணைந்து உள்ளன என்பது உலகறிந்த விடயம். சதாம் குசைனை அழித்துவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி நிலவும் என அப்போ நேரடியாகவே நெத்தன்யாகு பேசியிருந்தார். இப்போ ஈரானை அதன் தலைமையை அழித்துவிட்டால் மத்திய கிழக்கில் மட்டுமல்ல, உலகிலேயே அமைதி நிலவும் என கூறுகிறார். இதையெல்லாம் சாத்தியப்படுத்தவும் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தி வைத்திருக்கவும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் பலதையும் தனது தொங்குதசையாக மாற்றியது. அந்த நாடுகளின் பாதுகாப்பை தானே பார்த்துக் கொள்வதாக உறுதியளித்து படைத்தளங்களை நிறுவியது. அது இன்று அந்த நாடுகளுக்கே அழிவை தேடிக் கொடுத்துள்ளது. அந்த நாடுகளின் மன்னராட்சி முறைக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் ஒருபோதுமே ஜனநாயகம் மசிர் மட்டை என அளவுகோல்களை நீட்டியது கிடையாது. பெண்விடுதலை என குமுறியது கிடையாது. ஆப்கானில் பயங்கரவாதத்தை எதிர்த்த போராக பிரகடனம் செய்தது. பின் பெண்விடுதலையை எடுத்துக் கொடுக்கப் போகிறோம் என உப பிரகடனத்தையும் செய்து கிழிச்சுக் காட்டிய அமெரிக்கா இந்த தொங்குதசை நாடுகளின் பெண் ஒடுக்குமுறைக்கு எதிராக குரலை உயர்த்தியதே இல்லை. ஆக மத்திய கிழக்கை தனது இழுவைப் படகு அரசாக வைத்திருக்கிற அமெரிக்காவுக்கு ஈரான் ஒரு தலையிடி. பலஸ்தீன மக்களை கொன்று குவித்து நிலத்தை அபகரித்து அதை மீண்டும் மீண்டுமாய் அகண்ட இஸ்ரேலாக மாற்றும் சியோனிஸ்டுகளுக்கு ஈரான் ஒரு தலையிடி. இரண்டுபேரும் இந்தப் புள்ளியில் இணைகிறார்கள். அமெரிக்காவின் சியோனிஸ லொபியும், பெரும் மூலதனமும், அதுக்கு வெளியே செயற்பட முடியாத அமெரிக்க அரசியலும், அரசியல் தலைவர்களும்,; காங்கிரசும், உளவுப்படையும் என அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இருக்கிற பிணைப்பு வலுவானது. பலஸ்தீன போராட்டத்தையும் மண்ணையும் நேசிப்பதோடு, அவர்கள் மீதான படுகொலைகளையும் ஒடுக்குமுறையையும் சகித்துக் கொள்ளாத ஒரு நாடு ஈரான். இதன்விளைவாக உருவாகிய ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கு ஈரான் உதவியும் செய்தது. இவர்களை பயங்கரவாத அமைப்பு என சுட்ட இஸ்லாமிய எதிர்ப்பு மட்டுமே காரணமாக இருக்கிறது. அவர்களது தாக்குதல்கள் பலஸ்தீன மக்கள் சார்ந்து இஸ்ரேலுக்கு வெளியில் நிகழ்ந்ததில்லை. இஸ்ரேல் மீதான அவர்களின் தாக்குதல்கள் குறித்த அரசியல் விமர்சனங்கள் என்பது அவர்களை பயங்கரவாதிகளாக வரையறுக்க போதுமானதல்ல. அமெரிக்காவும் பிரித்தானியாவும் உருவாக்கிய அல்கைடா, ஐஎஸ், பொக்கோகராம் போன்ற அமைப்புகள் உலகு தழுவிய பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தியவை. அமெரிக்க நலனுக்கு ஏற்ப இப்போதும் அவர்கள் நண்பர்களாகவும் எதிரிகளாகவும்தான் மாறி மாறி பாத்திரம் வகிக்கிறார்கள். அசல் உதாரணம் இன்றைய சிரிய அதிபர். அல்கைடா, ஐஎஸ் என களமாடிய அவர் பெரும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இப்போ ட்றம்ப்புக்கு அவர் ஒரு ஸ்மார்ட் மனிதர். வெள்ளைமாளிகைக்கு விஜயம் செய்யக் கூடிய சிரிய அரசுத் தலைவர். ஆப்கானின் புரட்சியாளராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பின்லாடன், பின்னர் உலகப் பயங்கரவாதி என அதே அமெரிக்காவால் வரையறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார். மத்திய கிழக்கில் அணுகுண்டை வைத்திருக்கிற ஒரே நாடான இஸ்ரேலை பாதுகாக்கும் கள்ள நோக்கில் அமெரிக்கா மூன்று கோரிக்கைகளை மேசையில் வைத்த அதேநேரம், ஈரானிய மக்களின் விடுதலைக்கான போரை தொடங்கியுள்ளதாக குரலெடுத்து ட்றம்ப் மீட்பராகவும் மாறினார். “எனது அன்புக்குரிய ஈரானிய மக்களே உங்களுக்கு உதவிசெய்ய இதோ விரைந்து வருகிறேன். உங்கள் விடுதலையை நீங்கள் பெறும் காலம் வந்துவிட்டது. ஆயத்தமாக இருங்கள். இதோ வருகிறேன்” என ட்றம்ப்பு அழைப்பு விடுக்கிறார். ஆமென்! ravindran pa 03032026 https://sudumanal.com/2026/03/04/ஆமென்/
  9. Snsdproeto598ica767g20émviff6g6e ru706f,457m01f20:1h1r8 9u36 · ‘‘அப்பா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்’’ என மகன் ஆரம்பித்தான். அவனுக்கு 10 வயது இருக்கும். ‘‘சொல்லுப்பா?’’ ‘‘நீங்க படிச்சது பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரியா?’’ ‘‘ஆமா. ஏன் கேக்குறே?’’ ‘‘கெமிஸ்ட்ரி படிச்சிட்டு ஏன் மரக்கடை வச்சிருக்கீங்க?’’ ‘‘ஏன்... வைக்கக்கூடாதா?’’ ‘‘வைக்கலாம். ஆனா உங்க படிப்புக்கும் நீங்க செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லையே அப்பா!’’ ‘‘சரி, இப்ப நீ சைக்கிள் ஓட்டுறேதானே... அது எப்படி ஓடுகிறது?’’ ‘‘அது டயர் இருக்கறதால ஓடுதுப்பா!’’ ‘‘அந்த டயர்ல காத்து இல்லன்னா என்னவாகும்?’’ ‘‘சைக்கிளை ஓட்ட முடியாது.’’ ‘‘சரி, இப்படி காற்று அடைக்கிற சைக்கிள் டயரை முதன்முதலில் கண்டுபிடித்தவர் யார்... சொல்லு!’’ ‘‘ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜான் டன்லப் என்ற விஞ்ஞானிதான் அதைக் கண்டுபிடித்தவர் அப்பா.’’ ‘‘சரியான விடை. காற்று அடிக்கும் வகை சைக்கிள் டயரைக் கண்டுபிடித்தவர் ஜான் டன்லப்தான். ஆனால், அவர் விஞ்ஞானி கிடையாது. அவர் ஒரு கால்நடை மருத்துவர். அவருக்கும் டயருக்கும் சம்பந்தமே கிடையாது. அவர் தன் மகனின் முச்சக்கர சைக்கிளை வேகமாக நகர வைக்க என்ன வழி என்று யோசித்தார். இந்த காற்று அடைக்கும் டயரைக் கண்டறிந்தார். அதைப் பயன்படுத்தும்போது சைக்கிள் வேகமாக ஓடியது. அந்த காற்று அடைக்கும் டயர் முறை பிரபலமாகி, அதைக் கண்டுபிடித்த பெருமையும் ஜான் டன்லப்புக்கு வந்து சேர்ந்தது.’’ ‘‘இந்த புதிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது அப்பா.’’ ‘‘ஆமாம். இதைக் கேட்கும் அனைவருக்கும் ‘கால்நடை மருத்துவரா காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்’ என்று ஆச்சரியமாக இருக்கும். ஜான் டன்லப் தான் கற்ற கல்வியை ஒரு துறை சார்ந்த கல்வியாக பார்க்கவில்லை. எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனித்து ஆராயும் முறையைத்தான் அவர் கல்லூரியில் கற்றுக் கொண்டதாக நினைத்தார். அதனால்தான் தன் மகனின் சைக்கிளைக் கூட தனது துறையைச் சார்ந்ததாக இல்லாவிட்டாலும் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து காற்றடிக்கும் டயரைக் கண்டுபிடித்தார்.’’ ‘‘புரிகிறது அப்பா!’’........!
  10. FactCheck: IRISDena - சர்வதேச கடற்பரப்பிலா மூழ்கடிக்கப்பட்டது? பெப்ரவரி 2026 இல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை மதிப்பாய்வுக்கு வந்த ஐந்தே வயதான 100 மிட்டர் நீளமான ஈரானிய கடற்படைக்கப்பலான IRISDena அமெரிக்காவின் நீர்மூழ்கிக்கப்பலில் இருந்து ஏவப்பட்ட மார்க் 48 டோப்பிடோ (Mark 48 torpedo) என்னும் நீரடி ஏவுகணை ஒன்றால் தாக்கப்பட்டு காலி கடற்கரையில் இருந்து 40 கடல் மைல்கள் தூரத்தில் மார்ச் மாதம் 4ம் திகதி அதிகாலை மூழ்கடிக்கப்பட்டது. இதில் 60 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 87 பேர் இறந்துள்ளதாகவும், 32 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் இதுவரை வந்த செய்திகளில் கூறப்படுகின்றது. கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிரதேசம் சர்வதேச கடல் எல்லை என்று பலராலும் கூறப்படுவது உண்மையா? இணைக்கப்பட்டுள்ள படத்தில் ஈரானிய கப்பலானது ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஈரானுக்கு செல்லும் கடல் வழி காட்டப்பட்டுள்ளது. சர்வதேச சட்டங்களின்படி இலங்கைக் கரையில் இருந்து 12 கடல் மைகள் தூரம் வரை இலங்கைக்கான பிராந்திய கடல் வலையமாகும் (Territorial sea) . இது இலங்கைக்கான நிலம் போன்ற அதிகாரங்கள் உள்ள பிரதேசமாகும். அதன் தொடர்ச்சியாக 12-24 கடல் மைல் பிரதேசம் Contiguous zone என்னும் தொடர்வலய பிரதேசமாகும். இதுவும் இலங்கைக்கு வரையறுக்கப்பட்ட சுங்கம், குடியேற்றம், சுகாதாரம் போன்ற அதிகாரங்கள் கொண்ட பகுதியாகும். இலங்கை கடற்கரையில் இருந்து 200 கடல் மைல்கள் பிரதேசம் பிரத்தியேக பொருளாதார வலயம் (Exclusive Economic Zone (EEZ) என்றழைக்கப்படும். இவ்வலயத்தில் மீன்பிடி, கனியவளம், காற்று சக்தி போன்றவை இலங்கைக்கு சொந்தமாகும். (இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள கடல் சிறிதாகையால் அதன் நடுப்புள்ளி எடுக்கப்படும்.) இதற்கு அப்பால் உள்ள பிரதேசமே உண்மையில் சர்வதேச கடல் பிரதேசமாகும். இப்பொழுது சொல்லுங்கள், காலியில் இருந்து 40 கடல் மைல்கள் தூரம் சர்வதேச கடலா? Kumar Ganesh
  11. நோன்புப் பெருநாளை முன்னிட்டு மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை. நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:நடைமுறை ஆண்டுக்கான நாட்காட்டியின் பிரகாரம், நோன்புப் பெருநாள் மார்ச் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இஸ்லாமிய மார்க்க முறைப்படி பெருநாள் தினமானது பிறை தெரிவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றது. இலங்கை பிறைக் குழுவின் தீர்மானம் சில நேரங்களில் இரவு வேளையிலேயே அறிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, நாட்காட்டியில் உள்ளபடி சனிக்கிழமைக்கு பதிலாக, மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையே பெருநாள் கொண்டாடப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. இவ்வாறான திடீர் மாற்றங்கள் ஏற்படும்போது, சனிக்கிழமை விடுமுறை தினமாக இருந்தாலும், வெள்ளிக்கிழமை அலுவலகங்கள் திறந்திருக்கும். இதனால் முஸ்லிம் அரசாங்க ஊழியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்துகொள்வதிலும், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதிலும் பாரிய இக்கட்டான நிலையை எதிர்கொள்வார்கள். இந்த நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும், முஸ்லிம் ஊழியர்கள் எவ்வித தடையுமின்றித் தமது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் ஏதுவாக மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமையை முன்கூட்டியே பொது விடுமுறையாக அறிவிப்பது அவசியமாகும். நாட்காட்டியின்படி சனிக்கிழமை பெருநாள் வந்தாலும், வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. மாறாக, அது அனைத்து சமுதாயத்தினருக்கும் ஒரு நீண்ட வார இறுதி விடுமுறையாக அமைந்து நன்மையளிக்கும். இலங்கையின் அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஜனாதிபதியின் தலைமையின் கீழ், முஸ்லிம் சமூகத்தின் இந்த நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தான் எதிர்பார்ப்பதாக இம்ரான் மகரூப் எம்.பி. தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2026/1467253
  12. காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்! யாழ்ப்பாணம் காங்கேசன் துறை ஊரணி கடற் பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல் போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற் பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது கடந்த வெள்ளிக்கிழமை குறித்த இரு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களின் படகு பழுதடைந்து இந்திய கடல் எல்லைக்குள் சென்று கொண்டிருந்தது. இதனை அவதானித்த இந்திய மீனவர்கள் குறித்த படகினை தமது விசைப் படகால் இழுத்துச் சென்று மீனவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லையில் விட்டு விட்டு சென்றனர். பின்னர் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்ட படகு மீண்டும் இந்திய கடல் எல்லைக்கால் சென்ற நிலையில் இன்றைய தினம் ஏழாவது நாள் தமிழ்நாட்டின் வடக்கு கரையில் மீட்கபட்டுள்ளது. https://athavannews.com/2026/1467250
  13. இஸ்ரேல் மீதான ஈரானின் புதிய ஏவுகணைத் தாக்குதல்; ஆறாவது நாளாகவும் தொடரும் மோதல்! ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது நாளை எட்டியபோதும், அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வொஷிங்டனில் தடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னரும் வியாழக்கிழமை (05) அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதனால், மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வொஷிங்டனில் உள்ள குடியரசுக் கட்சி செனட்டர்கள், வான்வழித் தாக்குதலை நிறுத்துவதையும், இராணுவ நடவடிக்கைக்கு காங்கிரஸால் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதனால் மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் மோதல்கள் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், போரை இயக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரம் பெரும்பாலும் கட்டுப்பாடற்றதாக உள்ளது. அமெரிக்க செனட் 53க்கு 47 என்ற வாக்குகளில் தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று வாக்களித்தது, பெரும்பாலும் கட்சி அடிப்படையில், ஒரு குடியரசுக் கட்சியைத் தவிர மற்ற அனைவரும் நடைமுறை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர் மற்றும் ஒரு ஜனநாயகக் கட்சியைத் தவிர மற்ற அனைவரும் அதை ஆதரித்தனர். புதன்கிழமை இலங்கைக்கு அருகில் ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்ததில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர். மேலும் துருக்கியை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணையை நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் அழித்ததன் மூலமும், அமெரிக்க-ஈரான் போர் கூர்மையாக விரிவடைந்துள்ளது. ஈரானின் கொல்லப்பட்ட உச்ச தலைவரின் சக்திவாய்ந்த மகன் அவருக்குப் பின் வருவதற்கான முன்னணிப் போட்டியாளராக வெளிப்பட்டதால் இந்த மோதல் ஆழமானது. இது, நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று உலக சந்தைகளை உலுக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையின் அழுத்தத்திற்கு தெஹ்ரான் அடிபணியப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தியது. இந்த ஏவுகணை சம்பவம், ஈரானின் எல்லையை ஒட்டியுள்ள மற்றும் நேட்டோவின் இரண்டாவது பெரிய இராணுவத்தைக் கொண்ட துருக்கி மோதலில் ஈடுபடுவது இதுவே முதல். வியாழக்கிழமையும் போர் தொடர்ந்ததால், ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடங்கியது, மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஓட்டம் தடைபட்டது. வியாழக்கிழமை எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவதால், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்த கப்பல்களுக்கு காப்பீடு மற்றும் கடற்படை பாதுகாப்பு வழங்குவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்திச் ச‍ேவையின் மதிப்பீடுகளின்படி, குறைந்தது 200 கப்பல்கள் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டுள்ளன. போரில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரக்கணக்கான குடிமக்களை வீட்டிற்கு அழைத்து வர பல நாடுகளின் அரசாங்கங்கள் விரைந்ததால், புதன்கிழமை மத்திய கிழக்கிலிருந்து திருப்பி அனுப்பும் விமானங்கள் புறப்பட்டன. சர்வதேச பயணிகளுக்கு உலகின் பரபரப்பான விமான நிலையமான துபாய் உள்ளிட்ட முக்கிய வளைகுடா மையங்கள் பாதிக்கப்பட்டதால், பிராந்தியத்தின் பெரும்பகுதியில் வணிக விமானப் போக்குவரத்து பெரும்பாலும் இரத்து செய்யப்பட்டிருந்தன. கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு சனிக்கிழமை இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட 86 வயதான ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் குறித்த திட்டங்கள் சந்தேகத்தில் இருந்தன. ஒரு நாட்டின் உயர்மட்ட ஆட்சியாளர் வான்வழித் தாக்குதலில் முதன்முறையாக படுகொலை செய்யப்பட்டார். புதன்கிழமை மாலை முதல் தெஹ்ரானில் உள்ள ஒரு பெரிய மசூதியில் உடல் அஞ்சலி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்று நாட்கள் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாகவும், இறுதிச் சடங்கு திகதி அறிவிக்கப்படவில்லை என்றும் ஈரான் அறிவித்தது. பெயர் வெளியிட விரும்பாத இரண்டு ஈரானிய வட்டாரங்கள், ஈரானின் கொல்லப்பட்ட உச்ச தலைவரின் மகன் மொஜ்தபா கமேனி, அவரது தந்தை கொல்லப்பட்டபோது தெஹ்ரானில் இல்லை என்று ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நிபுணர்கள் சபை விரைவில் தனது முடிவை அறிவிக்கும் என்றும், 1979 இல் இஸ்லாமிய குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து இரண்டாவது முறையாக அவ்வாறு செய்யும் என்றும் ஈரான் கூறியது. சட்டமன்ற உறுப்பினர் அயதுல்லா அகமட் கட்டாமி அரசு தொலைக்காட்சிக்கு வேட்பாளர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும் கூறினார். உயர் தலைவருக்கான பிற வேட்பாளர்களில் இஸ்லாமிய குடியரசின் நிறுவனரின் பேரனும் அண்மைய தசாப்தங்களில் ஒதுக்கி வைக்கப்பட்ட சீர்திருத்தவாத பிரிவின் ஆதரவாளருமான ஹசன் கோமேனியும் அடங்குவர். https://athavannews.com/2026/1467208
  14. கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக அறிக்கைகள் வியாழக்கிழமை (05) தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 70 குழந்தைகள் அடங்குவதாக கொரியாவின் சுரங்க அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் வடக்கு கிவு மாகாணத்தின் தலைநகரான கோமா நகரில் உள்ள மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட்டதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் பெய்த கனமழைக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்ததாக அறிக்கை கூறுகிறது. ஜனவரி மாத இறுதியில் இதே சுரங்கத்தில் இதேபோன்ற விபத்து ஏற்பட்டது. ரூபாயா சுரங்கம் உலகின் தாதுக்கில் சுமார் 15 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. இது மொபைல் போன்கள், கணினிகள், விண்வெளி உபகரணங்கள் மற்றும் எரிவாயு விசையாழிகள் உற்பத்தி உட்பட பல தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் உலோகமாகும். https://athavannews.com/2026/1467243
  15. ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை! சர்வதேச கடல் எல்லையில் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை (IRIS Dena) அமெரிக்கா தாக்கியதற்கு ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி கண்டனம் தெரிவித்தார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அவர், ஈரான் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது. கிட்டத்தட்ட 130 மாலுமிகளை ஏற்றிச் சென்ற இந்திய கடற்படையின் விருந்தினரான ஃபிரிகேட் தேனா, சர்வதேச நீரில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தாக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த தவறான முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டும் – என்றும் எச்சரித்தார். https://athavannews.com/2026/1467254
  16. இந்தியாவுக்காக இருக்காது. சீனாவுக்காக இருக்கலாம். இசண்டையில் ரஷ்யாவிலும், சீனாவிலும் தயாரிக்கப்படும் ஆயுதங்களின் தரமும் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
  17. இஸ்ரேல் & இரான் யுத்தத்தின் போக்கு பற்றி ரகசிய மாநாடு .......! 😂
  18. இணையத்தளங்கள் உருவாக்கும்போது ஒரு பொதுவான நடைமுறை என்னவென்றால் ஒரு பயனாளர் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தின் உள்ளே எங்கிருந்தாலும் அதன் தலைப்பில் உள்ள லோகோவில்(logo) சொடுக்கும்போது மீண்டும் அதே இணையத்தளத்தின் முகப் பக்கத்திற்கு செல்வதுதான் . இதை Express way to home அல்லது Clickable logo linking to home page என்று அழைப்பார்கள். பாதை மாறி போகும் பயனாளர் ஒருவர் ஒரே கிளிக்கில் இணையத்தளத்தின் முகப்பைச் சென்றடையும் இந்தப் பயன்பாடு யாழ் இணயத்தில் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கே ஒவ்வொரு முறையும் முகப்பு பக்கத்தைக் கடந்து உள்ளே சென்றபின் யாழ் லோகோவில் கிளிக் செய்யும்போது மீண்டும் முகப்புப் பக்கத்துக்குச் (front page / first page / Landing page) செல்லாமல் யாழ் இணையத்தின் உப பக்கங்களின் தலைப்பு விபரங்கள் அடங்கிய பட்டியலுள்ள forum3 என்று குறியிடப்பட்டுள்ள ஒரு பக்கத்திற்கே செல்கிறது.
  19. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  20. மத்திய கிழக்கு போரில் கனடாவின் இராணுவ பங்கேற்பை முற்றிலும் மறுக்க முடியாது – பிரதமர் மார்க் கார்னி Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 11:36 AM மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போரில் கனேடிய இராணுவத்தின் பங்களிப்பை முற்றாக நிராகரிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதலில் அந்நாட்டின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களுக்கு மத்தியில், அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், கன்பெராவில் அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். கடந்த வாரம் ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு தனது ஆதரவை வெளியிட்டிருந்த பிரதமர் கார்னி, தற்போது அவுஸ்திரேலியாவில் தனது கருத்தில் மென்மையான போக்கைக் கடைப்பிடித்துள்ளார். "எந்தவொரு சூழ்நிலையிலும் போரில் பங்கேற்பதை நாம் திட்டவட்டமாக நிராகரிக்க முடியாது. இது ஒரு கருதுகோள் சார்ந்த கேள்வி என்றாலும், தேவைப்படும்போது நாம் எமது நட்பு நாடுகளுடன் உறுதியாக நிற்போம்" என அவர் குறிப்பிட்டார். ஈரான் மீதான தற்போதைய அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்கள் 'சர்வதேச சட்டங்களுக்கு முரணானது' எனத் தெரிவித்த அவர், இது சர்வதேச ஒழுங்குமுறை தோல்வியடைந்துள்ளதையே காட்டுவதாகவும் வருத்தம் தெரிவித்தார். மார்க் கார்னியின் இந்த ஆசிய-பசிபிக் விஜயம் (இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான்) அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற 'நடுத்தர சக்திகள்' ஒன்றிணைந்து புதிய உலக விதிகளை எழுதவேண்டும் என அழைப்பு விடுத்தார். அரிய வகை கனிம வளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் அவுஸ்திரேலியாவுடன் மூலோபாய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவை இணைத்துக்கொள்வது குறித்த அச்சுறுத்தல்களை விடுத்து வரும் நிலையில், மார்க் கார்னியின் இந்த வெளிநாட்டுப் பயணம் சர்வதேச அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய கிழக்கு போரில் கனடாவின் இராணுவ பங்கேற்பை முற்றிலும் மறுக்க முடியாது – பிரதமர் மார்க் கார்னி
  21. தென் ஆபிரிக்காவை சிதறடித்து ஃபின் அலன் குவித்த சாதனைமிகு சதத்தின் உதவியுடன் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து Published By: Vishnu 05 Mar, 2026 | 11:32 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (04) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் ஃபின் அலன் குவித்த அற்புதமான சாதனைமிகு ஆட்டம் இழக்காத சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டிய நியூஸிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் நியூஸிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2021 இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து விளையாடி இருந்தது. அப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்று சம்பியனாகியது. இந்த உலகக் கிண்ணத்தில் அரை இறுதிவரை தோல்வி அடையாமல் இருந்த 2024 உப சம்பியன் தென் ஆபிரிக்கா முதல் தடவையாக தொல்வி அடைந்து ஏமாற்றத்துடனும் கவலையுடனும் வெளியேறியது. 170 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து எதிரணியின் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து 12.5 ஓவரக்ளில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இறதிப் போட்டிக்குள் நுழைந்தது. தென் ஆபிரிக்கா பந்தவீச்சாளர்கள் மீது கொஞ்சமேனும் இறக்கம் காட்டாத ஃபின் அலன் 33 பந்துகளில் 10 பவுண்டறி கள், 8 சிக்ஸ்களை விளாசி ஆட்டம் இழக்காமல் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது ரி20 உலகக் கிண்ணத்தில் அதிவேக சதமாக பதிவாகியுள்ளது. 19 பந்துகளில் 50 ஓட்டங்களை எட்டிய அவர், இந்த வருட உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட அதிவேக அரைச் சதத்தை சமப்படுத்தினார். அவருக்கு இரண்டாவது 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய 14 பந்துகளே தெவைப்பட்டது. தனது ஆரம்ப ஜோடி டிம் சீஃபேர்ட்டுடன் 55 பந்துகளில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த ஃபின் அலன் மொத்த எண்ணிக்கையில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தார். டிம் சீஃபேர்ட் 33 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார். ரச்சின் ரவிந்த்ரா 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா தடுமாற்றத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட தென் ஆபிரிக்கா துடுப்பாட்ட வீரர்களால் சுதந்திரமாக ஓட்டங்களைப் பெற முடியவில்லை. இரண்டாவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 12 ஓட்டங்களாக இருந்தபோது குவின்டன் டி கொக் (10), ரெயான் ரிக்ல்டன் (0) ஆகிய இருவரும் கோல் மெக்கொன்ச்சியின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம், டிவோல்ட் ப்ரெவிஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால், ஏய்டன் மார்க்ராம் 18 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மொத்த எண்ணிக்கை 77 ஓட்டங்களாக இருந்தபோது டேவிட் மில்லர் (6), டிவோல்ட் ப்ரெவிஸ் (34) ஆகிய இருவரும் மூன்று பந்துகள் இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக இரண்டாவது தடவையாக தென் ஆபிரிக்கா நெருக்கடியில் வீழ்ந்தது. இதனை அடுத்து ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (29), மார்க்கோ ஜென்சன் ஆகிய இருவரும் முதலில் நிதானத்துடனும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர். மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மார்க்கோ ஜென்சன் 30 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 55 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கோல் மெக்கொன்ச்சி ஒரு ஓவர் மாத்திரம் வீசி 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவரை விட ரச்சின் ரவிந்த்ரா 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெட் ஹென்றி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நியூஸிலாந்து துடுப்பெடுத்தாடுகிறது. ஆட்டநாயகன்: ஃபின் அலன் தென் ஆபிரிக்காவை சிதறடித்து ஃபின் அலன் குவித்த சாதனைமிகு சதத்தின் உதவியுடன் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து
  22. இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள் Mar 5, 2026 - 06:18 AM யாழ்ப்பாணம், காங்கேசன்துறை - ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக இலங்கை கடல் எல்லைக்குள் விட்டுச் சென்ற காணொளி வெளியாகியுள்ள போதிலும், இலங்கை கடற்படையினரால் அவர்கள் இதுவரை மீட்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஊரணிப் பகுதியிலிருந்து சிறிய படகில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள், இயந்திரக் கோளாறு அல்லது சீரற்ற காலநிலை காரணமாக திசைமாறி நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். பல நாட்களாக நடுக்கடலில் தவித்த இந்த மீனவர்களை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாகச் செயற்பட்ட இந்திய மீனவர்கள், நடுக்கடலில் தவித்த ஈழத்து மீனவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கி மனிதாபிமானத்துடன் உதவியுள்ளனர். அத்துடன், அவர்களின் படகினைப் பாதுகாப்பாக இழுத்து வந்து இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் விட்டுச் சென்றுள்ளனர். இந்த முழுமையான நிகழ்வையும் இந்திய மீனவர்கள் காணொளியாகப் பதிவு செய்து உறவினர்களுக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளனர். இந்திய மீனவர்களால் உணவு வழங்கி எல்லைக்குள் விடப்பட்ட காணொளி ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையிலும், சம்பவம் நடைபெற்று ஆறு நாட்கள் கடந்தும் இலங்கை கடற்படையினரால் குறித்த இரண்டு மீனவர்களையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடற்படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை எனவும், கிடைக்கப்பெற்றுள்ள காணொளி ஆதாரத்தின் அடிப்படையிலாவது கடற்படையினர் தமது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி, காணாமல் போன மீனவர்களை விரைவாக மீட்டுத் தர வேண்டும் எனவும் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். -யாழ். நிருபர் பிரதீபன்- இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்
  23. அமெரிக்கா - ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை: நெதன்யாகு சந்தேகம் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமைக்கு மத்தியில், அமெரிக்காவும் ஈரானும் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தேகம் வெளியிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமக்குத் தெரியாமல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரானுடன் போர்நிறுத்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இஸ்ரேலியப் பிரதமருக்குப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எனினும், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை, ஈரானுடன் அவ்வாறான எந்தவொரு இரகசியப் பேச்சுவார்த்தையையும் தாம் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் எதிர்பார்க்கும் இராணுவ இலக்குகளை அடைவதற்கு முன்னதாகவே போர் முடிவுக்கு வந்துவிடுமோ என நெதன்யாகு அச்சம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரானியப் புலனாய்வுப் பிரிவினர் அமெரிக்காவின் சி.ஐ.ஏ (CIA) அமைப்பைத் தொடர்புகொண்டு, போரை நிறுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக 'நியூயோர்க் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmd1mxla0004356picrn04zb

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.