Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. காமனெயி கொல்லப்பட்ட பிறகு இரானில் என்ன நடக்கிறது? ஒரு புகைப்படத் தொகுப்பு பட மூலாதாரம்,Getty Images 9 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இரான் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்ட செய்தியை சில இரானியர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு பல நகரங்களில் மக்கள் கொண்டாடியதாக வெளியான வீடியோக்களை பிபிசி பெர்சியன் சரிபார்த்தது. இன்று காலை, தெருக்களில் நடக்கும் பெரும்பாலானவை அதிஉயர் தலைவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் அரசாங்க சார்பு நிகழ்வுகளாகத் தெரிகிறது என்று பிபிசி பெர்சியன் தெரிவித்துள்ளது. இரானில் இன்னும் அதிகாலை நேரம் தான், அது பிற்பகலில் மாறக்கூடும். மத்திய இரானில் உள்ள இஸ்ஃபஹானின் தெருக்களில் உள்ள காட்சி மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் கார் ஹாரன்களை அடித்து ஆரவாரம் செய்வதை காட்டுகின்றன. இரவு வானத்தில் பட்டாசுகள் வெடிக்கும்போது, நெருப்பைச் சுற்றி மக்கள் கூடிவருவதை மற்றொரு வீடியோ காட்டுகிறது. அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் பல குடும்பங்களும் தெருக்களிலும் வீடுகளிலும் கொண்டாடினர். டெஹ்ரானுக்கு அருகிலுள்ள கராஜிலும் கொண்டாட்டங்கள் நடந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. டெஹ்ரான் தெருக்களில் மக்கள் துக்கத்தில் இருப்பதையும், சிலர் காமனெயி புகைப்படங்களை வைத்திருப்பதையும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள படங்கள் காட்டுகின்றன. பட மூலாதாரம்,IRINN படக்குறிப்பு,ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், பல இரானிய அரசு ஊடக தொலைக்காட்சி சேனல்கள் காமனெயி கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தின. பட மூலாதாரம்,Getty Images பட மூலாதாரம்,Mamlekate/X படக்குறிப்பு,இரானின் மத்திய நகரமான கஜாரில் எடுக்கப்பட்ட சரிபார்க்கப்பட்ட வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டில் உள்ளதைப் போல, சனிக்கிழமை பிற்பகுதியில், சில இடங்களில் இரானிய அதிஉயர் தலைவர் காமனெயி மரணத்தை சிலர் கூடி கொண்டாடியதைக் காண முடிந்தது. டெஹ்ரானில் சூரியன் உதிப்பதற்கு முன்பே, சில மணி நேரமாக வெடிப்புச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டன. சனிக்கிழமை இரானிய தலைநகரம் டஜன்கணக்கான கொடிய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொண்டது. இரான் அதிஉயர் தலைவர் அலி காமனெயி மரணத்துக்குப் பிறகும் தாக்குதல் தொடரும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேலும் அமெரிக்காவும் இரானின் பல இலக்குகளைத் தாக்கத் தொடங்கி 24 மணிநேரம் நெருங்கி வரும் நிலையில், இரானில் என்ன நடக்கிறது என்பதை காட்டும் புகைப்படங்களின் தொகுப்பைப் பார்க்கலாம். பட மூலாதாரம்,SUPPLIED படக்குறிப்பு,டெஹ்ரானில் சூரியன் உதிப்பதற்கு முன்பே, சில மணி நேரமாக வெடிப்புச் சத்தங்கள் தொடர்ந்து கேட்டன. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, இரானின் தலைநகர் டெஹ்ரானில் புகை மூட்டம் எழுவதைக் காணலாம். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,தாக்குதலில் இடிந்து விழுந்த கட்டடங்களின் இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்று மீட்புப் பணியாளர்கள் தேடும் காட்சி. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பல இரானியர்கள் தலைநகரிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்கள் தொடங்கிய பின்னர், தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு தேடி ஓடுவதைக் காண முடிந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காமனெயி கொல்லப்பட்ட பிறகு இரானில் என்ன நடக்கிறது? ஒரு புகைப்படத் தொகுப்பு
  3. லிபியாவை ஆண்ட கடாபி சதாமைப் போன்றதொரு முன்னாள் இராணுவ அதிகாரி, பின்னர் 42 வருடங்களாக நாட்டினை கொடுங்கோலாட்சி செய்த சர்வாதிகாரி, குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே நாட்டின் வளங்களைச் சூறையாடி சொத்துக் குவித்த ஊழல்வாதி, இவற்றுக்கெல்லாம் மேலாக கடுமையான மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒரு மனிதர். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மத அடிப்படைவாதி. ஆனால் நீங்கள் கூறும் மேற்குலகு அவரை அகற்றவில்லை. மாறாக அவரது குற்றங்களை எதிர்த்து சாதாரண லிபிய மக்கள், மனிதவுரிமைவாதிகள், செயற்ப்பாட்டாளர்கள் ஆகியோரே போராட்டங்களில் குதித்தனர். இப்போராட்டங்களை கடாபி இராணுவத்தினைக் கொண்டு கொடூரமாக அடக்க முனைகையிலேயே அது மக்களின் ஆயுதப் போராட்டமாக மாறியது. போட்ராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளக் கைப்பற்ற கடாபியின் படைகள் முயலும்போதே நேட்டொ தலைமையில் வாந்தாக்குதல்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்டது. இறுதியில் தப்பிச்செல்ல எத்தனித்த கடாபியின் வாகனத்தின்மீது நேட்டோவின் வான் தாக்குதலில் அகப்பட்ட கடாபி பதுங்கியிருந்தபொழுது அவரை லிபிய புரட்சிகரப் படையே கண்டுபிடித்துக் கொன்றது. அவரின் பின்னரான லிபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தமக்கிடையே சண்டையிட்டு நாட்டினை அழித்தார்கள். சிரியாவின் சர்வாதிகாரி பற்றி நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடாபியைப் போலவே அவரும் ஒரு கொடுமையான சர்வாதிகாரி. புட்டினின் நெருங்கிய நண்பர். சுமார் இரண்டு இலட்சம் சிரிய மக்களின் படுகொலைகளுக்கு நேரடியாகக் காரணமானவர். ரஸ்ஸிய ஆயுதங்கள், ரஸ்ஸிய இராணுவப் பிரிவுகள், ரஸ்ஸியாவின் தனியார் இராணுவக் கூலிகள், ரஸ்ஸிய விமானங்கள், ஈரானின் ஆயுத வளங்கள், ஹிஸ்புள்ளாக்களின் படையணிகள் என்று பல முனை உதவிகளைக்கொண்டு போர் நடத்தியவர். தனது அதிகார ஆசையினால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளான ஐஸிஸ் அமைப்பு உருவாக வழிசமைத்துக் கொடுத்தவர். நீங்கள் கூறும் மேற்கினைக் காட்டிலும் நீங்கள் பூஜிக்கும் புட்டினும், இன்று நீங்கள் உருகும் அயொதுள்ளா கமெய்னியுமே சிரியாவின் அழிவுகளுக்குப் பெருங்காரணமானவர்கள். அப்கானிஸ்த்தானை முதலில் ஆக்கிரமித்தது நீங்கள் பூஜிக்கும் புட்டினின் நாடான ரஸ்ஸியாதான் என்றால் நம்புவீர்களா? 1979 முதல் 1989 வரையான 10 வருட காலத்தில் குறைந்தது பத்து இலட்சம் அப்கானியர்கள் கொல்லப்படுவதற்கு ரஸ்ஸியா முதன்மைக் காரணமாக இருந்தது. நீங்கள் கூறும் மேற்கின் ஆக்கிரமிப்பில் கொல்லப்பட்ட அப்கான் மக்களின் எண்ணிக்கை இரண்டரை இலட்சம் மக்கள். ஆக அப்கானின் மக்கள் அழிவில் மேற்கைக் காட்டிலும் ரஸ்ஸியாவின் பங்களிப்பு நான்கு மடங்கிலும் அதிகமானது. நீங்கள் இன்று கூறும் ஈராக், சிரியா,லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு மோதல்களைப் போல அப்கானிஸ்த்தானிலும் உள்நாட்டு மோதல்களை ரஸ்ஸியாவின் வெளியேற்றம் ஏற்படுத்தியது. அதுவரை ஒன்றாகப் போராடிய முஜஹிதீன்கள் ரஸ்ஸியாவின் வெளியேற்றத்தின் பின்னர் அதிகாரத்திற்காகப் தம்க்குள்ப் போராடி நாட்டினை மேலும் அழித்தார்கள். 1994 இல் பாக்கிஸ்த்தானின் இராணுவப் புலநாய்வுப் பிரிவினால் உருவாக்கப்பட்ட தலிபான்களும் அப்கானிஸ்த்தானிற்குள் வரை மோதல்கள் பன்முகப்படுத்த‌ப்பட்டன. ஆக, மேற்கைக் காட்டிலும் நீங்கள் குறிப்பிடும் நாடுகளில் அதிக‌ அழிவினை ஏற்படுத்தியது ரஸ்ஸியாதான் என்பதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம்.
  4. யோசனையாகத்தான் கிடக்கு...ஜக்கம்மாவிடம்..வேண்டுதல்விட யாராவது இருக்கிறியளா
  5. சட்டத்தின் நுணுக்கங்களை பாமர மக்களுக்கும் புரியவைக்கும் கடமை சட்ட மாணவர்களுக்கு உண்டு நீதியரசர் குமாரரத்தினம் வலியுறுத்து 01 Mar, 2026 | 09:18 AM (க.சிவலிங்கமூர்த்தி) சட்டமும் மொழியும் ஒரு தேசத்தின் இரு கண்களைப் போன்றவை சட்டத்தின் நுணுக்கங்களை பாமர மக்களுக்கும் புரியவைக்கும் கடமை சட்ட மாணவர்களுக்கு உண்டு என்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரபாகரன் குமாரரத்தினம் தெரிவித்தார். கொழும்பு இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றத்தின் 2022 ஆம் ஆண்டு நிர்வாகக் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த வித்தக விழா மற்றும் 57 ஆவது நீதி முரசு சஞ்சிகை வெளியீட்டு விழா சட்டக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்றது. தமிழ் மன்றத்தின் 75 ஆவது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு ‘மன்று 75’ எனும் துணிப்பொருளில் இவ்விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்1950 ஆம் ஆண்டு மறைந்த பெருந்தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிறு விதையாக விதைக்கப்பட்ட இந்தத் தமிழ் மன்றம் இன்று விழுதுகள் பரப்பிய ஆலமரமாக 75 ஆண்டுகளைக் கடந்து நிற்பது பெருமைக்குரியது. சட்டம் என்பது வெறும் கருப்பு அங்கியும் தடிமனான புத்தகங்களும் மட்டுமல்ல அது ஒரு சமூகத்தின் விழுமியங்களைப் பாதுகாக்கும் அரண். அந்த அரணுக்கு உயிர் கொடுப்பது நமது தமிழ் மொழி. தமிழ் இலக்கியங்கள் காலங்காலமாக நீதியை வலியுறுத்தி வந்துள்ளன. குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் எனச் சிலப்பதிகாரம் நீதியின் மேன்மையை உரக்கச் சொல்லியுள்ளது. அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே இன்றைய சட்ட மாணவர்கள் திகழ வேண்டும். ஒரு மாணவன் கலைகள் வழியாகத் தனது இதயத்தை மென்மையாக்கிக் கொள்ளும் போதே நாளை சமுதாயத்திற்கு உண்மையான நீதியை வழங்க முடியும். சட்டத்தின் சிக்கலான விடயங்களை எளிய தமிழில் பாமர மக்களுக்குப் புரிய வைக்கும் கடமை உங்களுக்கு உண்டு. உங்கள் வாதத் திறமையை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகப் பயன்படுத்துங்கள். அறிவும் ஆற்றலும் ஒருபுறம் இருக்க அறமும் ஈரமும் மறுபுறம் இணைய வேண்டும். அத்தகைய முழுமையான சட்டத்தரணிகளாக நீங்கள் உருவாக வேண்டும் என்றார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி கே. கனகஈஸ்வரன் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினரான சட்டக் கல்லூரி முதல்வர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டி அல்வி ஸின் வாழ்த்துச் செய்தியும் பகிரப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் சிறப்புரையினை நிகழ்த்தினார். 57 ஆவது நீதி முரசு சஞ்சிகையினை வெளியிட்டு வைத்து அதன் நூல் மதிப்புரையினை மேலதிக அரசாங்க சட்டவாதியும் தமிழ் மன்றத்தின் பொருளாளருமான செல்வராகவன் வழங்கினார். விழாவின் சிறப்பம்சமாக மாணவர்களின் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியதுடன் பவள விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பாராளுமன்ற விவாதப் போட்டி சட்ட ஆய்வு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. https://www.virakesari.lk/article/239854
  6. இந்தியா 196 அடிச்சா அரை இறுதி. இலகுவான இலக்கு அல்ல. மே.இன் பந்து வீச்சாளர்கள் என்ன செய்யப் போகிறார்க்ள்.
  7. ஈராக்கின் சதாம் உசேன் எவ்வாறான அரசதிபர்? ஜனநாயக தேர்தல் மூலம் தேர்வுசெய்யப்பட்டவரா? அவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி, சதிப்புரட்சிமூலம் ஆட்சியைக் கைப்பற்றியவர். மிகவும் கொடூரமான சர்வாதிகாரியாக வலம் வந்தவர். அவரது ஆட்சியில் குர்திஸ்கள் உட்பட அவரின் இனத்தைச் சாராத பல மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். குர்திஸ்கள் மீது இரசாயண ஆயுதத்தினைப் பிரயோகித்தார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது இருந்தது. ஆனாலும் குவைத்தினை ஆக்கிரமிப்பென்பதென்று அவர் எடுத்த முடிவே அவருக்கு எமனாக மாறியது. 1990 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளின் யுத்தம் அவரை குவைத்திலிருந்து வெளியேற்ற நடத்தப்பட்டது. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னரான காலத்தில் சதாம் எடுத்த நிலைப்பாடும், பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரிப்பதில் அவர் காட்டிய தீவிரமும் 2003 இல் ஈராக்கினை அமெரிக்கா மீண்டும் தாக்கவேண்டிய சூழ்நிலையினை ஏற்படுத்தியது. இப்போரிற்காக அமெரிக்கா முன்வைத்த காரணங்கள் வலுவற்றவையாக இருந்தபொழுதிலும், பாரிய அழிவினை ஏற்படுத்தும் ஆயுதங்கள் மீதான சதாமின் ஆசை இரகசியமல்ல. ஈராக் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர், உலகெங்கிலும் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் அமெரிக்காவைத் தாக்குவதற்காக ஈராக்கினுள் வந்து குவிந்தார்கள் அதன் விளைவாக ஏற்பட்ட போர்களும், சியா ‍- சுன்னி பிரிவுகளுக்கிடையிலான போரின் விளைவுகளுமே ஈராக்கினை முற்றான அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றன.
  8. நீங்கள் கேட்பது சரிதான். இன்று சர்வதேச வல்லரசுகளோ, பிராந்ர்திய வல்லரசுகளோ எந்த சட்டத்திற்கும் கட்டுப்படுவதில்லை என்பது உண்மையே. அமெரிக்கா நடத்திய வியட்னாம், ஈராக் மற்றும் அப்கானிஸ்த்தான் மீதான தாக்குதல்கள், ரஸ்ஸியா நடத்திய அப்கானிஸ்த்தான், மோல்ட்டோவா, ஜோர்ஜியா மற்றும் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு வல்வளைப்புக்கள், சீனா நடத்திய தீபெத், தென்சீனக் கடற்பகுதி மற்றும் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மீதான ஆக்கிரமிப்புக்கள் என்று எல்லா வல்லரசுகளும் தம் பங்கிற்கு தமது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி சர்வதேசச் சட்டங்களை மீறி வருகின்றன. ஆனால், இவை எதுவுமே தம்மிடம் இருக்கும் அணுவாயுதத்தினை சட்டங்களை மீறும் செயற்பாடுகளில் பாவித்ததில்லை, இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீதான தாக்குதலைத் தவிர. புலிகளையும் ஈரானின் முல்லாக்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதன் மூலம் போரட்டத்தையல்லவா கொச்சைப்படுத்துகிறீர்கள். இஸ்ரேலினை உலக வரைபடத்திலிருந்து அழிப்பதுவே தலையாய கடமையென்று அணுவாயுத உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஈரானைப்போல, புலிகள் ஏதாவதொரு இனத்தை அழிப்பதே தமது தலையாய கடமை என்று செயற்பட்டார்களா? அப்படிச் செயற்பட்டார்கள் என்றால் அதனை இங்கே குறிப்பிடுங்கள் பார்க்கலாம். அடுத்ததாக, புலிகளிடம் கடற்படையும், வான்படையும் இருப்பதனால்த்தான் அழிக்கப்பட்டார்கள் என்று எப்படி முடிவு செய்தீர்கள்? இதனை நிரூபிக்க உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் இங்கே பகிரலாமே? இந்தியா தனது பழிவாங்கலுக்காகவே புலிகளை அழிக்கக் கங்கணம் கட்டிச் செயற்பட்டது என்று நன்கு தெரிந்தபின்னரும் ஏன் மீண்டும் மீண்டும் புதிதாக காரணங்களைக் கொண்டுவந்து இணைக்கிறீர்கள்?
  9. எப்போதும் தமிழன், நீங்கள் கேட்டதனால் சில விடயங்களை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் முட்டுக் கொடுப்பதற்காக நான் எனது பதிவினை இடவில்லை. இரண்டாவது, இன்று அணுவாயுத வல்லமை பெற்ற நாடுகளைப் பார்த்தீர்கள் என்றால், அந்நாடுகள் புதிதாக எந்த நாட்டிற்கும் அணுவாயுதத்தைக் கொடுக்கப்போவதில்லை, தம்மிடம் இருக்கும் அணுவாயுதங்களை சிறிது சிறிதாக குறைத்துக்கொள்வது, எந்த நாடும் தனது சக்தித் தேவைகளுக்காக சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட வழிகளில் வீரியம் குறைந்த அணுச் சக்தி நிலைகளை உருவாக்கிக்கொள்வது எனும் கொள்கைகளை மட்டுமே கொண்ட அணுவாயுத பரவல்த் தடுப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் அமெரிக்கா, ரஸ்ஸியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தன. பின்னாட்களில் அணுவாயுதத்தை உருவாக்கிக்கொண்ட இந்தியா, பாக்கிஸ்த்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இவ்வொப்பந்தத்தில் இதுவரை கைச்சாத்திடவில்லை. வடகொரியா 2003 ஆம் ஆண்டளவில் இவ்வொப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டது. இவற்றுள், வடகொரியாவைத் தவிர ஏனைய நாடுகள் அனைத்துமே அணுவாயுதத்தினை ஒருபோதும் பாவிக்கப்போவதில்லை என்பதே சர்வதேசத்தின் எண்ணம். வடகொரியாவினை ஆளும் சர்வாதிகாரி எந்நேரத்திலும் அணுவாயுதத்தைப் பாவிக்கலாம் எனும் அச்சம் இன்றுவரை இருந்தே வருகிறது. ஆனால், ஈரானின் அணுவாயுத ஆசைக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருக்கிறது. அதுதான் இஸ்ரேல் எனும் நாட்டினை உலக வரைபடத்திலிருந்து முற்றாக அழித்துவிடுவதென்பது. ஆகவேதான் எப்பாடுபட்டாவது அணுவாயுத வல்லமையினைப் பெற்றுவிட அது துடிக்கிறது. மதவெறிபிடித்து அலையும் ஈரானிய முல்லாக்கள் தமது கைகளில் அணுவாயுதம் கிடைத்தவுடன் அதனை எந்நாட்டின் மீது ஏவுவார்கள் என்பதை அனுமானிப்பது அவ்வளவு கடிணமான விடயமாக உங்களுக்கு இருக்கப்போவதில்லை. சர்வாதிகாரியான கிம் உங் ஜுன் இடம் இருக்கும் அணுவாயுதத்தின் ஆபத்தினை எதிர்கொள்ளும் உலகு, மதவாதிகளான ஈரானிய முல்லாக்களின் அணுவாயுத அச்சுருத்தலினையும் எதிர்கொள்ளவேண்டுமா என்பதே இன்றிருக்கும் கேள்வி. அதனால்த்தான் ஈரான் அணுவாயுதத்தினை உருவாக்கிக்கொள்வதனை எப்படியாவது தடுத்துவிட வேண்டிய தேவை இருக்கிறது. இதனால்த்தான் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலினை நான் ஆதரிக்கிறேன்.
  10. Today
  11. கனடாவில் இந்த தடவை பனி கொட்டி இன்னும் சிலர் இயல்பாக வெளியில் போக இயலாத நிலை.சில இடங்களில் பனியை அள்ளி எடுக்கும் போது மண்ணையும் சேர்த்து எடுக்கபட்டுள்ளதால் பஸ் தரிப்பு இடங்களுக்கு அருகில் இலகுவாக வயோதிபர்கள், இயலாதவர்கள் தெரிலிலிருந்து கரைக்கு மாறிக் கொள்ள இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.பஸ் தரிப்பு இடங்களுக்கு அருகில் மிகவும் அவதானமாக பார்த்து போவது நன்று.
  12. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 12 விமானச் சேவைகள் ரத்து written by admin March 1, 2026 வளைகுடா பிராந்தியத்தில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் துபாய், ரியாத், தம்மாம் மற்றும் குவைத் உள்ளிட்ட நகரங்களுக்கான 12 விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன் விமான நிறுவனத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விபரங்கள்: விமான இலக்கம் புறப்படும் இடம் – சேருமிடம் UL 231 கொழும்பு – துபாய் UL 232 துபாய் – கொழும்பு UL 225 கொழும்பு – துபாய் UL 226 துபாய் – கொழும்பு UL 217 கொழும்பு – தோஹா UL 218 தோஹா – கொழும்பு UL 253 கொழும்பு – தம்மாம் UL 254 தம்மாம் – கொழும்பு UL 265 கொழும்பு – ரியாத் UL 266 ரியாத் – கொழும்பு UL 229 கொழும்பு – குவைத் UL 230 குவைத் – கொழும்பு பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், மேலதிக விபரங்களுக்குத் தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது அழைப்பு மையத்தைத் (Call Center) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. வான்பரப்பில் ஏவுகணைத் தாக்குதல் அபாயம் உள்ளதாலேயே, பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில் இந்த ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான மாற்றுப் பயணத் திகதிகள் அல்லது பணம் மீளப் பெறுவது (Refund) குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #FlightAlert #SriLanka #SriLankanAirlines #MiddleEastWar #TravelUpdate #ColomboAirport https://globaltamilnews.net/2026/229935/
  13. இங்கே பேசப்பட்டுக்கொண்டிருப்பது ஆயுதங்கள் பற்றியல்ல, அணு ஆயுதங்கள் பற்றியதே இரண்டு ஆயுதங்களும் ஒன்றல்ல, இரண்டும் வேறுவேறானவை. இரண்டாம் உலக போரின் பின்னர் அணுஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் அனைத்துமே அணுஆயுத ஒப்பந்தத்தை உறுதியாக கடைப்பிடித்தே நடந்து வந்திருக்கின்றன, அவை அணு ஆயுத போரில் ஈடுபட்டதாக உங்களிடம்கூட ஆதாரங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆயுதமோதல்களில் உலகில் யார்தான் ஈடுபடவில்லை அதுவும் அணுஆயுதபோரும் ஒன்றல்ல. புலிகள் அமைப்பிடம் கடற்படை வான்படை இருந்த காரணத்தினால்தான் உலகம் அது ஆபத்தானது என்று சொல்லி அவர்களை அழித்தது என்று நீங்கள் படித்த ஆதாரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நாங்களும் அறிந்தால் தவறில்லையே. செப்11ன் பின்னர் உலகின் போக்கே மாறியதால்தான் எம் போராட்டமும் சுற்றி வளைக்கப்பட்டது, அதேநேரம் புலிகளை முழு பயங்கரவாதிகள் என்று உலகம் முடிவு செய்திருந்தால் ஜெனீவா தாய்லாந்து நோர்வேக்கெல்லாம் ராஜதந்திரிகளுக்குரிய கெளரவத்துடன் அழைத்து பேசியிருக்காது. அவர்களிடம் அணு ஆயுதமோ ரசாயன ஆயுதங்களோ இருந்திருந்தால் கதை ஒருபோதும் அப்படி அமைந்திருக்காது. காலங்கள் சிறிது ஓடிவிட்டால் கண்முன்னே கண்டதெல்லாம் சிறிது மறந்து போய்விடுகிறது. அது மனித இயல்புதான். புலிகளிடம் அன்றைய போர் சூழலில் இலங்கை அரசைவிட வலுவான ஆயுதங்கள் ஆளணி இருந்திருந்தால் உலகம் தூர நின்று வேடிக்கைதான் பார்த்திருக்கும். பேச்சு வார்த்தைக்கு போக சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கும், அதற்கும் அணுஆயுத தயாரிப்புக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?
  14. நிச்சயமாக அது பெரிய பிரச்சனைதான் என்பதை 99% துறைசார் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ஒரு காரணம் அல்ல, முழுக்காரணும் விஞ்ஞானமே. நிலக்கரியை, பெற்றோலை எரித்து சக்தி+ காபனீரொட்சைட்டை பெறும் உக்தியை விஞ்னானம் கண்டு பிடித்திராவிடில் புவி வெப்பமயாமாதல் ஏற்பட்டிராது (நாமும் குதிரையில் பயணங்கள் செய்து கொண்டிருப்போம்). ஆனால் இதற்கான தீர்வையும் விஞ்ஞான வழி மூலம் பெற முடியும். விஞ்ஞானம் கடவுள் மாதிரி, ஆக்கும், காக்கும், அழிக்கும். அதை எப்படி பயன்படுத்துவது என்பது மனிதர் கையில்.
  15. இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிப்போம் எண்டவன் எங்கடா இப்ப? அது சரி செத்தகிளியிண்ட சிலமனையும் காணேல்லை. 🤣 அதிண்ட வாடகைக் குஞ்சுகள்தான் பாவம் அதுகளும் இலவுகாத்த செத்தகிளிகளாக நிக்குதுகள்! 🤣
  16. அவர்கள் பக்கம் இழப்பு என்றால் அவனிடமிருந்து வந்தோம் அவனிடமே போகிறோம் என்று சொல்லி தாளிப்பார்கள், அவர்கள் பக்கம் வெற்றி என்றால் அல்லாஹு அக்பர் என்று குமுறுவார்கள் காசா போரின்போது சின்வார் தளபதியாக நியமிக்கப்பட்டபோது அவர் சிங்கம் இஸ்ரேலால் அவரை நெருங்ககூட முடியாது என்று கதறினார்கள், எண்ணி மூன்றேநாளில் இஸ்ரேல் அவர் கதையை முடித்தபோது என்ன இழவை சொல்லி சமாளிக்குறது எண்டு தெரியாமல் இது ஒன்றும் இழப்பில்லை அவனிடமிருந்து வந்தோம் அவனிடமே போகிறோம் என்று சடைஞ்சார்கள், அப்போ காசாவில் மக்கள் சாகிறார்கள் ஐநா காப்பாத்து அல்லாஹ் காப்பாத்து என்று ஏன் கதறுகிறீர்கள் அவனிடம்தானே போகிறார்கள் என்று கேட்டேன், அதுக்கு செத்துபோன எங்கவீட்டு கிழவியிலிருந்து சித்தி பெரியம்மா வரை தோண்டி எடுத்து சிறப்பான தமிழில் திட்டினார்கள். சரி அவங்க மார்க்க கடமையைதானே செய்கிறார்கள் என்று பேசாமலே வந்துட்டேன். மக்கள் உயிர் இழப்பை கேலி செய்யும் எந்த நோக்கமும் இல்லை, ஆனால் மக்கள் இழப்பைபற்றி அவர்கள் கவலைபடுவது அவர்கள் பக்கம் அதிக இழப்பு என்றால் மட்டுமே மக்களை இழுத்து திசை திருப்புவார்கள். மற்றும்படி மற்றவர்களை கொன்றுவிட்டு இறைவன் பெரியவன் என்பதே கோஷமாக இருக்கும். எந்த ஒரு விஷயமும் தமக்கு சாதகமாக இல்லையென்றால் அப்படியே எந்த திசைக்கு வேணுமென்றாலும் மாற்றி உருட்டுவார்கள், உருட்டுவதில் இவர்களிடம் பிதாமகன் சூர்யா தோற்றுபோனார் என்றே சொல்லவேண்டும் .
  17. முசராபாணியின் பந்தில் மில்லரும் நடையை கட்டிவிட்டார்...பெரெவிஸ் மட்டும் சாத்துகின்றார்
  18. நம்பியிருக்கிற புள்ளி போயிடுமோ.... ஆறு ஓவரில் சவுத் அப்பிரிக்கா 43- 3 ....பரமா காப்பாத்து
  19. இந்த பதிவுக்கான பதிலை எனது முகப்புத்தக மேய்ச்சலில் கிடைத்தது ...இதனைப் பார்த்ததும் எனக்கு நாலுபுறத்தில் இருந்துதாக்குதல் ...அடியும்விழும் ...கவுரவ பட்டமளிப்பையும் தருவார்கள் ..ஆனால் நான் எந்தவித கருத்தும் எழுதமாட்டேன் ...இது இன்னொருத்தரின் கருத்து ..மேற்குறிப்பிட்ட கருத்துக்கு ஒத்து வந்ததுபோல் இருந்தது ...பிரதி பண்ணி விட்டேன் . நிர்வாகம் நீக்கினால்கூட ..மகிழ்ச்சி அடைவேன் பால்சோறும்.. பட்டாசு கொளுத்தியும் தன்னுடைய சொந்த இனம் அழியும்போது றபான் அடித்து டான்ஸ் ஆடி கொண்டாடிய மனிதாபிமான அற்ற கூட்டம் .. இன்று எங்களைப் பாத்து நீ யெல்லாம் மனிதனா மனிதாபிமானம் இல்லையா என்று கேக்கிறார்கள் 🤷" அடேய் நீங்கள் எல்லாம் இன்றும் ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்லிக்கொண்டு இலங்கைல இருக்கிற தமிழர்களை எப்படியாவது விரட்டனும், அவர்களுடைய வரலாறுகளை அழிக்கனும் என்று துடிக்கிறிங்கள்.. நீங்கள் புனித ரமலான் மாதத்தில் பேசுகின்ற வார்த்தைகளை பாக்கும்போது உங்களுக்கு, இஸ்லாத்தைவிட துவேசம் தான் முக்கியம் என்று புரிகிறது.. ஈரானிய பிரச்சனைகளை பற்றி பேசும்போது எதற்கடா இலங்கைக்குள்ள போறிங்கள், ஏனென்றால் உங்களுடைய எண்ணம் சிந்தனையெல்லாம் இலங்கைலுள்ள தமிழினம் அழியவேண்டும் என்ற வெறி ஊறிப்போனதால்தான்... அதனால்தான் ஈரானிய பிரச்சனைக்குரிய பதில்களை வழங்காது அங்கு ஓடுறிங்க.. உங்களுக்கு ஒன்று தெரியமா அடுத்துவரும் சட்டத்திருத்தங்களிலோ அல்லது யாப்புகளிலோ இலங்கையில் இரண்டு இனம் மட்டும்தான் என முன்மொழியப்பட்டுள்ளது.. தமிழர்கள் தமிழர்கள் என்று நாங்கள் சொல்லும்போது கேக்காத நீங்கள் இனி இலங்கை அரசே சொல்லுது நீங்க தமிழர்களென்று 🤣" ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் பெட்டி படுக்கையை கட்டிட்டு ராஜஸ்தான் போக வேண்டியதுதான்.. இல்லாட்டி கண்ணாடியைப்பார்த்து பீ தமிழன் என்று சொல்லி காறித்துப்புங்கள் உங்க முகறையில். எங்களுக்கு என்றைக்கும் ஒரே ஒரு தலைவன்தான் அவருக்காக நிறைய கடமைப்பாடு உள்ளது.. அதுவரை என்னை உணர்ந்தவன் என்னுடன் நில்லு மற்றவன் எல்லாம் நடையை கட்டுங்கள்... கொள்கை கோட்பாடு அற்ற இஸ்லாமியர்களுக்கு இந்த உலகில் எங்கெல்லாம் இஸ்லாத்தை தழுவி வாழுகின்றார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கென்று ஒரு தலைவன் இருப்பான்.... நன்றி..... iroshan Sivakumar .
  20. ஆயுதங்களை மட்டும் வைத்து கொண்டு உணர்ச்சி மற்றும் வெற்று பிடிவாதத்துடன் அறிவில்லாமல் சண்டை செய்தால் அழிவு நிச்சயம் என்பதற்கு ஈரானும் உலகத்துக்கு எடுத்துக்காட்டு ஆகிவிட்டது.
  21. இங்கே பலர் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் நல்லா முட்டுக்கொடுக்கிறார்கள்! அதில் ஒருவர் இனி யூதர்கள் நிம்மதியாக வாழ்வார்களாம்! இன்னொருவர் சர்வதேச விதிகளுக்கும் ஒப்பந்தங்களுக்கும் கட்டுப்படாத எந்த நாட்டிடமும் அணு ஆயுதம் இருப்பது இஸ்ரேல் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகின் எந்த நாட்டுக்குமே ஆபத்தானது என்கிறார். இஸ்ரேலும் அமெரிக்காவும் எந்த சர்வதேச விதிகளுக்கு கட்டுப்படுகிறது! இதேபோலத்தான் ஒரு பயங்கரவாத அமைப்பிடம் கடற்படை, வான்படை இருப்பது ஆபத்தானது என்று கூறி புலிகளை அழித்தனர்! பலரின் இரட்டை முகங்கள் இப்போதுதான் வெளிவருகின்றன! மேற்காலும் அமெரிக்காவாலும் ஏற்கனவே தலைமை அழிக்கப்பட்ட ஈராக், லிபியா, சிரியா, ஆப்கான் போன்ற நாடுகளின் இன்றய நிலை யாருக்கும் புரியவில்லை போலும்
  22. 73 அடித்து 153க்கு அணியை எடுத்துச் சென்ற தலைவர், இரண்டு விக்கட்டுகளையும் எடுத்து விட்டார். அது நடந்திடுமோ.
  23. அர்ப்பணிப்பான அணித்தலைவர் கிடைப்பது வரம்... சிம்பாவே 151 பார்ப்போம்
  24. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.