All Activity
- Past hour
-
ட்ரம்பின் முடிவை வரவேற்கிறோம் : ஆனால் லெபனான் சேர்க்கப்படவில்லை: நெதன்யாகு
இஸ்ரேலுக்கும் போர் நிறுத்தத்திற்கும் என்ன சம்பந்தம்? இஸ்ரேல் யார் இதுபற்றி கருத்து சொல்ல? இவர்களை கேட்டா போர் நிறுத்தம் செய்தார்கள்? அமெரிக்கா போர் நிறுத்தம் செய்தாலும் தாம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோமென அறிவித்திருந்தார்களே. சிரிப்பு சிரிப்பாய் வருகுது. யார் முதல் தாக்குதலை ஆரம்பித்தார்கள்? திறந்திருந்த ஹோர்மூஸ் நீரிணை ஏன் மூடப்பட்டது என்பது தெரியாதா இவர்களுக்கு? அல்லது இவர்களுக்கும் மூளையில் கோளாறா? நெதன்யாகு, அமெரிக்காவை உசுப்பி, தான் ஒரு இனப்படுகொலை அரங்கேற்றலாம், பழியை அமெரிக்கா மேல் போட்டு விடலாம் என்கிற கனவில் மிதந்திருப்பார். அது பிழைக்கப்போகுதே என்கிற அச்சமும் இருக்கும்.
-
இலங்கையின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பு சரிவு
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சரிவு Apr 8, 2026 - 09:10 AM இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள், 2026 பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட 7,270 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து, 2026 மார்ச் மாதத்தில் 7,019 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை 3.5 சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சீன மக்கள் வங்கியின் கீழான நாணயப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் பெறப்பட்ட நிதியும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnpi1qws0000356phs4jisfs
-
-
இரானுடன் போர்நிறுத்தம் - "தற்காலிக வெற்றிக்காக அதிக விலை" கொடுத்த டிரம்ப்
இரானுடன் போர்நிறுத்தம் - "தற்காலிக வெற்றிக்காக அதிக விலை" கொடுத்த டிரம்ப் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இந்த ஒப்பந்தம் டிரம்பை ஒரு இக்கட்டான சூழலிலிருந்து விடுவித்துள்ளது. கட்டுரை தகவல் அந்தோனி ஜர்ச்சர் வட அமெரிக்க செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இறுதியாக, நிதானமான முடிவுகள் தான் வெற்றி பெற்றுள்ளன. குறைந்தபட்சம் இப்போதைக்கு வெற்றி பெற்றுள்ளன எனக் கூறலாம். வாஷிங்டன் நேரப்படி 18:32 மணிக்கு, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில், அமெரிக்காவும் இரானும் ஓர் "உறுதியான" அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் "மிக நெருக்கமான நிலையை" அடைந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைகளைத் தொடர வழிவகுக்கும் வகையில் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்குத் தான் சம்மதித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். இது சரியாகக் கடைசி நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனச் சொல்ல முடியாது என்றாலும், ஒரு ஒப்பந்தத்தை எட்டாவிட்டால் இரானின் எரிசக்தி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதல்களைத் தொடுக்கும் என டிரம்ப் விதித்திருந்த செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணி (இந்திய நேரப்படி புதன் கிழமை அதிகாலை) என்ற காலக்கெடு முடிவதற்கு மிக நெருக்கமான நேரத்தில் இது வெளியானது. இரானும் மோதல்களை நிறுத்திவிட்டு, ஹோர்முஸ் நீரிணையை வணிகக் கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இவை அனைத்தும் அமையும். அந்த நீர்வழிப்பாதையின் மீது தங்களுக்கு இன்னும் "ஆதிக்கம்" இருப்பதாக வலியுறுத்தும் அதே வேளையில், அதனைத் திறப்பதாக இரான் அரசு கூறியுள்ளது. இந்த ஒப்பந்தம் டிரம்பை ஒரு இக்கட்டான சூழலிலிருந்து விடுவித்துள்ளது. அதாவது "இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழியும்" என்ற தனது வாக்குறுதியின்படி போரைத் தீவிரப்படுத்துவது அல்லது பின்வாங்கித் தனது நம்பகத்தன்மையைக் குறைத்துக்கொள்வது ஆகியவற்றுக்கு இடையேயான தேர்வில் இருந்து அவர் தப்பியுள்ளார். இருப்பினும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்கு ஒரு தற்காலிக விடுதலையை மட்டுமே பெற்றுத் தந்திருக்கக்கூடும். அமெரிக்கர்களும் இரானியர்களும் இப்போது அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள், இது நிரந்தரத் தீர்வை எட்ட முயற்சிப்பதற்கான கால அவகாசத்தை வழங்குகிறது. அதே சமயம் இது ஒரு கடினமான பயணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அமெரிக்காவில் வர்த்தக நேரத்திற்குப் பிந்தைய சந்தையில், ஒரு பேரல் எண்ணெயின் விலை பல நாட்களில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக 100 டாலருக்குக் கீழ் சரிந்தது மற்றும் அமெரிக்கப் பங்குச்சந்தையின் எதிர்கால வர்த்தகம் (futures) உயர்ந்தன. மோசமான நிலை முடிந்துவிட்டது என்ற ஒருவித நம்பிக்கை நிலவுவது போல் தெரிகிறது. செவ்வாய்க்கிழமை காலை வரை கூட இத்தகைய முன்னேற்றம் ஏற்படும் என்பது நிச்சயமற்றதாகவே இருந்தது. அப்போதுதான் இரானிய நாகரிகம் அழிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தியிருந்தார். ஓர் அமெரிக்க அதிபரிடமிருந்து வந்த இத்தகைய அதிர வைக்கும் அச்சுறுத்தல், இரான் இதற்கு முன்பு நிராகரித்த போர்நிறுத்தத்திற்குச் சம்மதிக்க அழுத்தம் கொடுத்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. டிரம்பின் வியக்கத்தக்க, ஆத்திரமூட்டும் இந்த அறிவிப்பு, அதுவும் இதேபோன்ற ஆபாசமான வார்த்தைகள் கலந்த 'ட்ரூத் சோஷியல்' பதிவிற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்தது, நவீன கால அமெரிக்க அதிபர் எவரும் இதுவரை செய்திராத அல்லது மறைமுகமாகக் கூடக் குறிப்பிடாத ஒன்றாகும். இந்த இரண்டு வார கால போர்நிறுத்தம் ஒரு நிரந்தர அமைதிக்கு வழிவகுத்தாலும் கூட, இரான் போர் மற்றும் டிரம்பின் சமீபத்திய சொற்கள், உலக நாடுகள் அமெரிக்காவைப் பார்க்கும் விதத்தை முற்றிலும் மாற்றியிருக்கக்கூடும். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... ஒரு காலத்தில் உலகளவில் நிலைத்தன்மைக்கான சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட ஒரு நாடு, இப்போது சர்வதேச ஒழுங்கின் அடித்தளத்தையே உலுக்கி வருகிறது. உள்நாட்டு அரசியலில் விதிமுறைகளையும் மரபுகளையும் உடைப்பதில் மகிழ்ச்சியடைவதாக காட்சியளித்த ஓர் அதிபர், இப்போது உலக அரங்கிலும் அதையே செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை டிரம்பின் வார்த்தைகளுக்கு ஜனநாயகக் கட்சியினர் உடனடியாகக் கண்டனம் தெரிவித்தனர், சிலர் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறினர். "அதிபரின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது என்பதும், அவர் தலைமை தாங்கத் தகுதியற்றவர் என்பதும் தெளிவாகிறது," என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜோவாகின் காஸ்ட்ரோ 'எக்ஸ்' தளத்தில் எழுதியுள்ளார். இரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாக்கெடுப்பில் இணையாத எந்தவொரு குடியரசுக் கட்சியினரும், "இந்த மோசமான செயலின் ஒவ்வொரு விளைவிற்கும் பொறுப்பாவார்கள்," என்று அமெரிக்க செனட் சபையின் மூத்த ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images டிரம்பின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பலர் அவருக்கு ஆதரவாக நின்ற போதிலும், அவர் பொதுவாகப் பெறும் முழுமையான ஆதரவு இம்முறை அவருக்குக் கிடைக்கவில்லை. ஜார்ஜியாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் குழுவின் மூத்த உறுப்பினருமான ஆஸ்டின் ஸ்காட், ஒரு நாகரிகமே அழிந்துவிடும் என்பது குறித்த டிரம்பின் அச்சுறுத்தல்களைக் கடுமையாக விமர்சித்தார். "அதிபரின் கருத்துக்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும், நான் அவற்றுடன் உடன்படவில்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். பொதுவாக டிரம்பின் விசுவாசியாகக் கருதப்படும் விஸ்கான்சின் செனட்டர் ரான் ஜான்சன், டிரம்ப் தனது குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்தால் அது "மிகப்பெரிய தவறாக" இருக்கும் என்று கூறினார். டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நதானியேல் மோரன், "ஒரு முழு நாகரிகத்தின் அழிவை" தான் ஆதரிக்கவில்லை என்று சமூக வலைதளத்தில் எழுதினார். "இது நமது அடையாளம் அல்ல, மேலும் இது அமெரிக்காவை நீண்டகாலமாக வழிநடத்தி வரும் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார். அதிபரின் நிலைப்பாட்டோடு அடிக்கடி முரண்படும் அலாஸ்கா செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி, அதிபரின் அச்சுறுத்தலை "இரானுடனான பேச்சுவார்த்தைகளில் சாதகமான நிலையைப் பெறுவதற்கான ஒரு முயற்சி என்று கூறி நியாயப்படுத்த முடியாது," என எழுதினார். இருப்பினும், அந்த அழுத்தம் பலனளித்தது என்று வெள்ளை மாளிகை பதிலளிக்க வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,Getty Images சரிந்து வரும் கருத்துக்கணிப்புகளும், சொந்தக் கட்சியிலேயே அதிகரித்து வரும் விமர்சகர்கள் மற்றும் அதிக எரிசக்தி விலைகளால் திணறும் பொருளாதாரம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் ஓர் அதிபருக்கு, இந்த மோதலில் இருந்து கிடைக்கும் எந்தவொரு தளர்வும் ஒரு நிம்மதியாகவே அமையும். போர்நிறுத்தத்தை அறிவித்து தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில், அமெரிக்கா தனது அனைத்து ராணுவ இலக்குகளையும் "நிறைவேற்றியுள்ளது, மேலும் அவற்றை விஞ்சியும் செயல்பட்டுள்ளது" என்று டிரம்ப் கூறியுள்ளார். இரானின் ராணுவம் கணிசமாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சி இன்னும் அதிகாரத்தில் இருந்தாலும், அதன் உயர்மட்டத் தலைவர்கள் பலர் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், தற்போது அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட பல இலக்குகள் இன்னும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளன. இரானின் அணு ஆயுதத் திட்டத்தின் அடித்தளமாக விளங்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஏமனில் உள்ள ஹூத்திக்கள் போன்ற பிராந்திய நிழற்படை அமைப்புகளின் மீது அந்த நாடு இன்னும் செல்வாக்கு செலுத்துகிறது. சுங்கக்கட்டணம் அல்லது பிற கட்டணங்கள் போன்ற நிபந்தனைகள் இன்றி இரான் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறந்தாலும் கூட, அந்த முக்கியமான உலக அரசியல் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதன் திறன் முன்னெப்போதையும் விட இப்போது தெளிவாகத் தெரிகிறது. டிரம்பின் போர்நிறுத்தச் செய்திக்குப் பிறகு ஒரு அறிக்கையில், இரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, இரான் தனது "பாதுகாப்பு நடவடிக்கைகளை" நிறுத்தும் என்றும், "இரானின் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம்" ஹோர்முஸ் வழியாகப் பாதுகாப்பான பயணத்தை அனுமதிக்கும் என்றும் கூறினார். இரானின் 10 அம்சத் திட்டத்தின் "பொதுவான கட்டமைப்பை" அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அந்தத் திட்டத்தில் அமெரிக்கா இப்பகுதியிலிருந்து தனது ராணுவப் படைகளைத் திரும்பப் பெறுதல், இரானின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் ஹோர்முஸ் மீதான கட்டுப்பாட்டை இரான் தக்க வைத்துக்கொள்ள அனுமதித்தல் ஆகியவை அடங்கும். இந்த நிபந்தனைகள் எதற்கும் டிரம்ப் உண்மையில் உடன்படுவார் என்று கற்பனை செய்வது கடினம். இது, அடுத்த இரண்டு வார காலப் பேச்சுவார்த்தைகள் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும். இருப்பினும், தற்போதைக்கு இது டிரம்பிற்கு கிடைத்த ஒரு பகுதி அரசியல் வெற்றியாகும். அவர் ஒரு கடுமையான அச்சுறுத்தலை விடுத்து, விரும்பிய முடிவை எட்டியுள்ளார். ஆனால் இந்த போர்நிறுத்தம் ஒரு தற்காலிக விடுதலையே தவிர, நிரந்தரத் தீர்வு அல்ல. அதிபரின் சொற்களாலும் செயல்களாலும், ஒட்டுமொத்தப் போரினாலும் ஏற்பட்ட நீண்டகால பாதிப்புகள் இன்னும் முழுமையாக மதிப்பிடப்படவில்லை. படக்குறிப்பு, Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0q9p537yz1o
-
சட்டமன்ற 'தேர்தல் புறக்கணிப்பை' அறிவித்த வேங்கைவயல் மக்கள் - என்ன நடக்கிறது?
சட்டமன்ற 'தேர்தல் புறக்கணிப்பை' அறிவித்த வேங்கைவயல் மக்கள் - என்ன நடக்கிறது? கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 7 ஏப்ரல் 2026 வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகள் தரப்பில் வேங்கைவயல் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் தேர்தல் புறக்கணிப்பு என்பது தங்களின் இறுதியான முடிவு என்கிறார். வேங்கைவயலில் பட்டியலின மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த வழக்கை புதிதாக விசாரிக்க வேண்டும் என வேங்கைவயல் மக்கள் கோரி தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர். இந்த செய்தியைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், ''திமுக துரோகங்களை பட்டியலின மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்'' எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அன்புமணி ராமதாஸ் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் கூறும் திமுகவின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, தேர்தல் நேரத்தில் அரசியல் நோக்கங்களுக்காக இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைப்பதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டும் திமுகவின் பதிலும் தேர்தல் புறக்கணிப்பு செய்தி தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பதிவில், "தங்களுக்கு நீதி கிடைக்காததைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக திமுக அரசு சித்தரிப்பதைக் கண்டித்தும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அங்குள்ள பட்டியலின மக்கள் அறிவித்துள்ளனர். பட்டியலின மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக, பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது," எனத் தெரிவித்துள்ளார். அதன்பிறகாவது அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு நீதி வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,X/Saravanan Annadurai படக்குறிப்பு,திமுகவின் செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் சரவணன், "காவல்துறை அறிவியல்பூர்வமான முறையில் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தவறான வாதத்தை முன்வைக்கும் அவர் அரசியல் பிரச்னையாக தற்போது இதை பரப்புகிறார்." எனத் தெரிவித்தார். எஸ்சி/எஸ்டி மக்களுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது எனக் கூறும் சரவணன், அன்புமணி ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார் என்றும் கூறினார். "காவல்துறை விசாரணை செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவர் எதன் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார் எனக் கூற வேண்டும். அவரிடம் ஆதாரம் இருந்தால் அதனை வெளியிட வேண்டும்," என்றும் தெரிவித்தார். "தேர்தல் புறக்கணிப்பு எங்களின் இறுதி முடிவு" ஊர் மக்களின் முடிவில் மாற்றம் இருக்கப்போவதில்லை என்கிறார் வேங்கைவயலைச் சேர்ந்த முருகன், "எங்கள் ஊர் மக்கள் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றனர். குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது அரசுக்குத்தான் தெரியும். தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும்," என்றார். 2024 நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிப்பதாக வேங்கைவயல் மக்கள் அறிவித்திருந்த நிலையில் தங்களுக்குப் 'பொய்யான வாக்குறுதிகள்' வழங்கப்பட்டதாக கூறுகிறார் முருகன். "போன முறை பேச்சுவார்த்தை நடத்தி வேலை மற்றும் வழக்கு விசாரணை தொடர்பாக பல்வேறு உத்தரவாதங்களை வழங்கினர். வாக்குப்பதிவு நாளன்று கூட மாலை வரை நாங்கள் வாக்களிக்கவில்லை. அன்றைய தினமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தான் நாங்கள் வாக்களித்தோம். ஆனால் எந்த உத்தரவாதமும் நிறைவேற்றப்படவில்லை. நாங்கள் ஏமாற்றப்பட்டோம்." என்று அவர் தெரிவித்தார். அவரின் கூற்றுப்படி வேங்கைவயல் கிராமத்தில் 35 குடும்பங்களும், சுமார் 100 வாக்காளர்கள் உள்ளனர். காவல்துறை, வருவாய் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து வேங்கைவயல் கிராம மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஊர் மக்களை மறுபரிசீலனை செய்யக் கூறியுள்ளோம் என அரசு அதிகாரிகள் கூறும் நிலையில் தேர்தல் புறக்கணிப்பு என்கிற தங்களின் முடிவு இறுதியானது என்கிறார் முருகன். "அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள், ஆனால் நாங்கள் செல்லவில்லை. அதன் பிறகு எங்கள் ஊருக்கே வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தான் எங்களின் இறுதி முடிவு எனக் கூறிவிட்டோம். விசாரணை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் தெரியாது. முறையாக விசாரித்து உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்," என்றும் கூறினார். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை அரசு அதிகாரிகளும் உறுதிபடுத்துகின்றனர். அதே வேளையில் தேர்தல் சமயம் என்பதால் தங்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டாம் என்றும் கோரினர். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... மறுபரிசீலனை செய்யக் கோரியுள்ளோம் - அரசு அதிகாரிகள் வேங்கைவயல் மக்களிடம் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரியதாக வருவாய் துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "ஒரு முறை நேரில் சென்று பேசியுள்ளோம். வேங்கைவயலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தேர்தலை புறக்கணிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளோம். எங்களின் கோரிக்கையை கருத்தில் கொள்வதாகக் கூறியுள்ளனர். மக்கள் முடிவை மாற்றுவார்கள் என நம்புகிறோம். வேறு எந்த விஷயமும் இல்லை. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளும் நடத்த உள்ளோம். விழிப்புணர்வும் மேற்கொண்டு வருகிறோம்." என்றார். "தேர்தலில் மக்கள் வாக்களிப்பபதை உறுதி செய்வது எங்களின் கடமையாக உள்ளது. மாவட்ட காவல்துறைக்கும் இந்த வழக்கும் தற்போது எந்த தொடர்பும் இல்லை. சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஊர் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சட்ட ரீதியான நிவாரணங்களைப் பெறும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளோம். அடுத்த சில நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்," என்றார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் . வேங்கைவயல் வழக்கு கடந்த வந்த பாதை 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பஞ்சாயத்தில் குழந்தைகள் உட்பட ஊர் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் சென்று பார்க்கையில் அந்தப் பகுதிக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருது தெரியவந்தது. இந்தச் சம்பவம் பெரிய அளவில் விவாதப் பொருளானது. இந்த வழக்கை முறையாக விசாரித்து அதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்தச் சம்பவம் சட்டமன்றத்திலும் விவாதப் பொருளானது. பல்வேறு கட்சிகளும் இது தொடர்பாக குரல் எழுப்பிய நிலையில் 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இதனை விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையில், சிபிசிஐடி விசாரணையில் தாமதமான முன்னேற்றமே இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்தின் இயக்குநர் வேங்கைவயலுக்குச் விசாரணை நடத்தினார். சிபிசிஐடி போலீசார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அறிக்கையில், பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்திருந்தது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதுக்கோட்டை சிறப்பு எஸ்சி/எஸ்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சந்தேக நபர்கள் என அடையாளம் காணப்பட்ட மூன்று பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கில் தாக்கல் செய்ய குற்றப்பத்திரிகையின் நகல் வேண்டும் என சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்ட 3 பேரும் எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதே வேளையில், இந்த வழக்கில் சேர்க்கப்பட்ட 3 பேரும் அதே ஊரைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகள் பொருந்தாது என்றும் விசாரணையை புதுக்கோட்டை நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சிபிசிஐடி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த வழக்கு புதுக்கோட்டை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மார்ச் மாதம் 3 பேருக்கும் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2r5gzdn7vo
-
விரிவடையும் மத்திய கிழக்கு போர்; சாதனை அளவை எட்டிய எண்ணெய் விலை!
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு Apr 8, 2026 - 06:29 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை 5.45 மணி நிலவரப்படி சந்தை தரவுகளின்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 95.47 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது. இது 17.48 டொலர் வீழ்ச்சியாகப் பதிவாகியுள்ளதுடன், சதவீத அடிப்படையில் 15.48 சதவீத சரிவாகும். அதேபோல், ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.84 டொலராகக் குறைந்துள்ளது. இதற்கிடையில், மர்பன் வகை கச்சா எண்ணெய் விலையும் 106.51 டொலராகக் குறைந்துள்ளது. இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 18.85 சதவீத வீழ்ச்சி என சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. https://adaderanatamil.lk/news/cmnpc9pty0005356pofs5a55j
-
விசாரணைகள் தீவிரமடையும் போது கம்மன்பில பதற்றமடைவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - விஜித ஹேரத்
விசாரணைகள் தீவிரமடையும் போது கம்மன்பில பதற்றமடைவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது - அமைச்சர் விஜித ஹேரத் 08 Apr, 2026 | 11:37 AM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் முறைப்படி பலப்படுத்தி முன்னெடுத்து வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில போன்றவர்கள் தேவையற்ற முறையில் பதற்றமடைகின்றனர். இது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் உதய கம்மன்பில போன்றவர்கள் கடும் கலக்கமடைவதைக் காணமுடிகிறது. அண்மையில் அவர் வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பிடப்படும் சூத்திரதாரி என்று சொல்லப்படுபவர், அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் எங்கே அமர்ந்திருந்தார் என்பதை இந்த நாடே நன்கு பார்த்தது. வெறும் புத்தகங்களை வெளியிடுவதன் மூலம் உண்மையான குற்றவாளிகளை மறைத்துவிட முடியாது. நீதிமன்றத்தின் மூலம் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை, இவ்வாறான புத்தக வெளியீடுகள் மற்றும் கருத்துக்கள் விசாரணைகளைத் திசைதிருப்பும் முயற்சியாகவே அமையும். குறிப்பாக, சுரேஷ் சலே போன்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழும் போதெல்லாம் இவர்களே முன்னின்று பதற்றமடைகிறார்கள். இவர்களின் இத்தகைய செயல்பாடுகள்தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை வலுக்கச் செய்கின்றன. தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான சக்திகளைக் கண்டறியும் வரை அரசாங்கம் தனது விசாரணைகளைக் கைவிடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது ஆட்சியில் நிச்சயம் நியாயம் வழங்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/243017
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
பும்ராவை எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சர் அடித்த சூர்யவன்ஷி - ராஜஸ்தானின் இளைஞர் படை சாதிப்பது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படபடம் கட்டுரை தகவல் நிதீஷ் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் மும்பை மற்றும் ராஜஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது ராஜஸ்தான் அணி. முடிவு எப்படி இருந்தாலும் சரி, பிடித்த அணி ஆடுவதை கண்கொட்டாமல் பார்த்துவிடவேண்டும் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் ஆசை. அந்த ஆசையை முன்தினம் கொல்கத்தா, பஞ்சாப் அணி ரசிகர்களிடமிருந்து பறித்துக்கொண்டது மழை. நேற்று கவுஹாத்தியில் நடைபெற்ற மும்பை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திலும் தன் வருகையைப் பதிவு செய்ய மழை தவறவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை ஒருவழியாக 9 மணி அளவில் தன் ஆட்டத்தை நிறுத்தி கிரிக்கெட் ஆட்டத்திற்கு வழிவிட்டது. அவகாசமின்மை காரணமாக தலா 11 ஓவர்கள் என மாற்றியமைக்கப்பட்ட ஆட்டத்திற்கு டாஸ் போட வந்தார்கள் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்கும் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவும். பொதுவாக இப்படியான மழைநாட்களில் டாஸ் ஜெயிக்கும் அணி கண்ணை மூடிக்கொண்டு பீல்டிங் தேர்வு செய்வதுதான் வழக்கம். இரண்டாவது இன்னிங்சில் பனி இறங்கி பவுலர்கள் கையில் இருந்து பந்து கைக்கொள்ளாமல் வழுக்கியபடி வரும், மீண்டும் மழை வரும்பட்சத்தில் டிஎல்எஸ் (DLS) முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்படும், ஸ்கோர் போர்ட் பிரஷர் இல்லாமல் தெளிவாக இலக்கு தெரிந்து ஆடலாம் என்பன போன்றவைதான் இந்த பீல்டிங் முடிவிற்கு காரணங்கள். ஆனால் முன்னெப்போதும் இல்லாத புதுப்பழக்கமாக முன்தினம் நடந்த கொல்கத்தா - பஞ்சாப் அணி டாஸின்போது பேட்டிங்கை தேர்வு செய்தார் கொல்கத்தா கேப்டன் ரஹானே. விளையாடிய சில ஓவர்களிலேயே அதற்கான விலையையும் கொடுத்தது அந்த அணி. அப்போதே அஸ்வின் போன்ற வீரர்களால் இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கவும்பட்டது. ஒருவேளை ஆட்டம் முழுமையாக ஆடப்பட்டிருந்து அதில் கொல்கத்தா தோற்றிருக்குமானால் இன்னும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார் ரஹானே. நேற்றைய ஆட்டத்தில் பாண்ட்யா கவனமாக டாஸ் வென்றவுடன் பீல்டிங்கை தேர்வு செய்தார். பாண்ட்யா மீண்டும் அணிக்குள் வந்திருப்பதால் ரூதர்போர்ட் இம்பேக்ட் வீரர்கள் பட்டியலுக்குப் போனார். ஆட்டத்தின் போக்கை மாற்றிய பவர்ப்ளே: பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் ரசிகர்களை பதற்றத்தில் நகம் கடிக்கவைத்து இறுதி ஓவர் வரை இழுத்துச்சென்று ஆட்டத்தை முடிப்பதை எல்லாம் ஐ.பி.எல் அருங்காட்சியகத்தில்தான் இனி காணமுடியும் போல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பவர்ப்ளே ஸ்கோர்கள் தான் ஆட்டத்தின் முடிவையே தீர்மானிக்கின்றன. எதிரில் எப்படிப்பட்ட பவுலராக இருந்தாலும் துணிந்து முதல் பந்திலேயே தூக்கியடிக்கும் இளம் வீரர்களின் வருகையே இதற்கு முக்கியக் காரணம். அப்படிப்பட்ட வீரர்கள் இருவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கொண்ட அணி ராஜஸ்தான். ஒருபக்கம் 160 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் ஜெய்ஸ்வால், மறுபக்கம் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் வைபவ் சூர்யவன்ஷி. தீபக் சாஹர் வீசிய முதல் பந்து பவுண்டரிக்கு, அடுத்த பந்து சிக்ஸ், மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது பந்தில் பவுண்டரி என ராஜஸ்தானுக்கு முதல் ஓவரிலேயே 22 ரன்கள். அடுத்த ஓவரை, இன்றைய தேதியில் மூன்று பார்மட்களிலும் சிறந்த பவுலராக அறியப்படும் பும்ரா வீச வருகிறார். அவர் வீசிய முதல் பந்தையே மிட் ஆன் பக்கம் தூக்கி சிக்ஸ் அடித்தார் சூர்யவன்ஷி. அவர் பும்ராவை எதிர்கொள்வது இதுவே முதல்முறை. ஆனாலும் உலகின் முதல்தர பவுலரை எதிர்கொள்கிறோம் என்கிற பதற்றம் துளியும் இல்லை அந்த 15 வயது பதின்பருவ இளைஞரிடம். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய மாற்றம் இதுதான். எதற்கும் துணிந்த இளைஞர்கள் அனுபவம் வாய்ந்த சீனியர்களை கொஞ்சமும் தயக்கமில்லாமல் களத்தில் எதிர்கொள்கிறார்கள். வெற்றிக்காக சரிக்குச் சமமாய் முட்டி மோதுகிறார்கள். பும்ரா வீசிய நான்காவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ். இம்முறை டீப் ஸ்கொயர் லெக் பக்கம். பேட்ஸ்மேன்களுக்கு லெக் சைடில் மட்டுமே போடுங்கள் என மும்பை கோச் உத்தரவிட்டாரோ என்னவோ, தொடர்ந்து அதே பக்கம் போட்டு ரன்களை வாரிக்கொடுத்துக்கொண்டிருந்தார்கள் பவுலர்கள். மூன்றாவது ஓவர் போல்ட். மீண்டும் லெக் சைடில் பட்டு எகிறிய பந்துகள். மீண்டும் சிக்ஸர்கள். பவர்ப்ளேவில் ராஜஸ்தான் அணி 59 ரன்கள் எடுத்தது. சூர்யவன்ஷி ஒருகட்டத்தில் அவுட்டாகிவிட்டாலும் இறுதிவரை ஜெய்ஸ்வால் நின்று ஆட, 11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோர் 150/3. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சூர்யவன்ஷி ஒருகட்டத்தில் அவுட்டாகிவிட்டாலும் இறுதிவரை ஜெய்ஸ்வால் நின்று ஆடினார் (கோப்புப் படம்) மறுமுனையில் மும்பை பேட்டிங்கில் கோட்டைவிட்ட இடமும் அதுவே. மும்பையின் நட்சத்திர ஆட்டக்காரர்களான ரோஹித், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மூவருமே களத்தில் பொறுமையாக நின்று பந்துவரும் போக்கை அவதானித்து கொஞ்சம் கொஞ்சமாக வேகம் கூட்டுபவர்கள். ஆனால் ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் அதிரடி இம்முறை இவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுக்கவே இல்லை. முதல் ஓவரில் ரிக்கெல்டன், அடுத்த ஓவரில் சூர்யா, மூன்றாவது ஓவரில் ரோஹித் என அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்க முனைந்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பவர்ப்ளே முடிவில் மும்பை அணியின் ஸ்கோர் 30/3. 46 பந்துகளில் 121 ரன்கள் எடுக்கவேண்டும். ஓவருக்கு கிட்டத்தட்ட 16 ரன்கள். இதனால் 'அடி அல்லது அவுட் ஆகு' என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வெளியேறிக்கொண்டே இருந்தார்கள் மும்பை பேட்ஸ்மேன்கள். ரவி பிஸ்னோய், சந்தீப் ஷர்மா என பந்துவீசிய அனைவருக்கும் ஏதோவொரு வகையில் விக்கெட்கள் வந்துகொண்டே இருந்தன. இறுதியாக 11 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்களை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை அணி. படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் திரும்புமா 2008-ன் மேஜிக்? ஐ.பி.எல்லின் முதல் சீஸனின்போது எல்லா அணிகளுக்கும் ஒரு நட்சத்திர வீரர் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்யப்பட்டார். சென்னைக்கும் கூட ஏலத்தில் தோனி கிடைத்தார். ஆனால் அப்படியான வீரர்கள் யாருமில்லாமல் தொடருக்குள் நுழைந்த ஒரே அணி ராஜஸ்தான். ஏலத்தில் ராஜஸ்தான் அணிக்காக எடுக்கப்பட்ட ஜஸ்டின் லாங்கர், டேரன் லீமன், யூனிஸ் கான் போன்ற வீரர்களும் டி20 போட்டிகளில் அதிகம் ஆடியிராதவர்கள். முழுக்க முழுக்க இளைஞர்களின் துணைகொண்டு மட்டுமே அந்த முறை கோப்பையை வென்றார் கேப்டன் ஷேன் வார்னே. ஸ்வப்னில் அஸ்னோத்கர், சித்தார்த் திரிவேதி என வார்னே பட்டைதீட்டிய வைரங்கள் ஏராளம். அவரின் பட்டறையிலிருந்து இந்தியாவிற்கு ரவீந்திர ஜடேஜா கிடைத்தார், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் உருவானார். அதன்பின் சில ஆண்டுகள் மற்ற அணிகளைப் போலவே சூப்பர்ஸ்டார்களுக்கும் அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து வந்தது ராஜஸ்தான் அணி நிர்வாகம். அதில் பெரிய பலன் கிடைக்கவில்லை என்பதால் சமீபத்திய ஆண்டுகளில் மீண்டும் இளைஞர்கள் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறது. Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் ஜெய்ஸ்வாலை அவர்கள் கண்டடைந்தது அப்படித்தான். சொதப்பினாலும் ஏமாற்றினாலும் மீண்டும் மீண்டும் ரியான் பராக்கிற்கு வாய்ப்பு கொடுத்தது அப்படித்தான். 'ஏலத்தில் இவருக்கென பத்து கோடி ரூபாயை முன்கூட்டியே தனியே எடுத்து வைத்திருந்தோம்' என சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுத்தபின் சங்ககாரா கூறியதும் இதனால்தான். இன்று 15 வயதேயான சூர்யவன்ஷி பும்ரா, போல்ட், ஷர்துல் மூவரின் முதல் பந்தையும் சிக்சருக்கு பறக்கவிடுகிறார். 24 வயதான ஜெய்ஸ்வால் ஒவ்வொரு மேட்ச்சிலும் 160 ஸ்ட்ரைக் ரேட்டிற்கு குறையாமல் ஆடுகிறார். பாண்ட்யா, பன்ட் போன்ற சீனியர் கேப்டன்களே திணறும் ஐ.பி.எல்லில் முதன்முறை கேப்டன் ரியான் பராக் சென்னை, மும்பை போன்ற சாம்பியன் அணிகளை அசாத்தியமாக தன் இளம்படை கொண்டு தோற்கடிக்கிறார். துடிப்பும் தன் முனைப்பும் இருந்தால் போதும், எப்பேர்ப்பட்ட பலசாலிகளையும் வீழ்த்திவிடலாம் என டி20 ஆடப்படும் போக்கையே 2008-இல் மாற்றியமைத்தார் வார்னே. 'அசாத்திய துணிச்சலும் வேகமும் இருந்தால் போதும், எதிரே யார் பந்து போட்டாலும் இறங்கி அடிக்கலாம்' என பவர்ப்ளே ட்ரெண்ட்டையே மாற்றியமைத்து இன்று புதுப்பாதை போடுகிறார்கள் அவரின் ஜூனியர்கள். 2008 சீசனைப் போலவே இந்த சீசனிலும் ராஜஸ்தான் வலுவான அணியாகத் தெரிகிறது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy01kkd4nv7o
-
ட்ரம்பின் முடிவை வரவேற்கிறோம் : ஆனால் லெபனான் சேர்க்கப்படவில்லை: நெதன்யாகு
போருக்கான அடிப்படை என்றும் மாறாது போல உள்ளது.
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
அடியான் என்பவரின் காணொளி நான் பார்த்து பல மாதங்களாகிவிட்டது 😂 இந்த மத மயக்க பெரும் கூட்டத்தை குதூகலிப்படைய வைப்பதின் மூலம் தாங்கள் பயன்பெற்று கொள்கின்ற நோக்கத்தில் தான் பல தமிழ் யுரியுப் காணொளிகள் அதற்கேற்ப கதைகள் எழுதி பெற்று கொண்டிருக்கின்றது.
-
கல்வி உரிமையை ஆளுநர்பறிக்கிறாரா: ? அர்ச்சுனா கேள்வி
ஆளுனரை அவர் வேலையில் ( உதவ அரசாங்க அதிபராக சேர்ந்த அன்றிலிருந்து எனக்கத்தெரியும். மிகவும் நேர்மையான அடக்கமான மனிதர். எனது அப்பாவும் interview panel இல் இருந்தவர். அன்று எங்களுக்கு அப்பா சொன்னவர், இவர் யாழ்மாவட்ட அரசாங்க அதிபராக மட்டுமல்ல அதேனிலும் மேலாக செல்லுவார் ( அரசியல் அழுத்ங்கள் பாவிக்கபடாமல் இருந்தால்) என்று. அது மட்டுமல்ல இவர் கொக்குவில் ( எமது ஊர்) மாப்பிள்ளை. இந்த அர்ச்சுனா ஒரு ஒரு கொடிய கிருமி…இது சும்மா உளறிக்கொன்றிருக்கும் , அதுன்ற கதைகளை கருத்தில் எடுக்காதீர்கள்.
-
யாழில் நடைபெற்ற போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் மாநாடு!
போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலைஞர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வில் “வரலாற்றின் வேர்கள்” எனும் விருதினை பெற்ற பின்னர் தாயகத்தின் மூத்த பாடகி பார்வதி சிவபாதம் பாடிய பாடல் https://web.facebook.com/reel/1693541788331300 அலையே நீயும் பொங்காதே "அலையே நீயும் பொங்காதே" என்ற பாடலானது 1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் வெளிவந்த "நெய்தல்" என்னும் பாடல் தொகுப்பில் இடம்பெற்ற பாடலாகும். இசைவாணர் கண்ணனின் இசையில் பார்வதி சிவபாதம் பாடிய இப்பாடலை எழுதியவர் போராளிக் கவிஞர் உதயலட்சுமி அவர்கள். இது உதயலட்சுமியின் முதலாவது பாடலாகும். பாடல் பிறந்த கதை இப்பாடல் உருவான காலப்பகுதியில் பெண் போராளிகள் கடற்புலிகள் அணியில் இணைக்கப்பட்டிருக்கவில்லை, கடற்பயிற்சி அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆகையால் இவர்கள் கடற்கரையோரத்தில் நின்று காப்பரண்களை அமைத்து சிறிலங்காப் படைகளின் கடற்கலன்களில் இருந்து பாதுகாப்பது வழக்கமாயிருந்தது. உதயலட்சுமியும் சக பெண் போராளிகளும் பாதுக்கப்புப் பணிக்காக நாயாற்றுக் கடற்கரையோர அரண்களுக்குச் சென்றிருந்தனர். உதயலட்சுமிக்குத் தூரத்திலிருந்து சிறிலாங்காப் படைகளின் கடற்கலங்கள் தெரியாமல் வெறும் அலைகள் மட்டும் தான் தெரிந்துவிட்டன. ஆகையால் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற உதயலட்சுமிக்கு அலைகள் தடையாய் இருந்ததினால், கடலன்னையை நோக்கி “அலையே நீயும் பொங்காதே” என்ற பாடலை எழுதத் தொடங்கினார். பின்னர் இப்பாடல் விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரைக்கு அனுப்பப்பட்டு, ‘நெய்தல்’ என்னும் பாடல் தொகுப்புக்காக அறிமுகப்பட்டது. முழுப் பாடல் பல்லவி அலையே நீயும் பொங்காதே - என் இலக்கினை இனியும் மறைக்காதே சிலைபோல் இப்போது இருக்கின்றேன் - கொடுஞ் சிங்களம் வந்தால் சிதைத்திடுவேன் சரணம் மறைந்த நம் வீரர் கனவேந்தி - அவர் நினைவுடன் கருவியும் கைப்பிடித்தேன் கத்தாதே அலையே கணப்பொழுது - ஏதோ சத்தங்கள் கேட்குதே கடல்மீது கருவியை ஏந்திக் கரையினிலே - பகைப் படகினை உடைக்கவே நிலையெடுத்தேன் திரையே நீ ஏன் ஒலிக்கின்றாய் - பெருந் திரை போட்டென்னை மறைக்கின்றாய் வேதனை கொண்டுதான் ஒலித்தாயா - வேங்கை வெல்வதால் வேகம் பெற்றாயா சற்றே நீ அமைதியாய் இருந்துவிடு - பகை முற்றையும் பொடிப் பொடியாக்கிடலாம் மேற்கோள்கள் ஈழநாதம் 1992.07.10 பக். 5-6. 'வெளிச்சம்' இதழ் வைகாசி-ஆனி 1992 - பக். 35. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
போர் நிறுத்தத்தினை அனைவரும் விரும்புகிறார்கள், அதனால் அதற்கு ஏற்பாடு செய்யும் தரப்புக்கள் அனைத்திற்கும் நன்றிகள்.
- Today
-
சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
இன்று சூரியன் உச்சம் கொடுக்கும் முக்கிய நகரங்கள் இதோ? Apr 8, 2026 - 06:43 AM மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. சூரியனின் தோற்ற வடதிசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கமைய, இன்று (08) நண்பகல் 12:12 மணிக்கு நீர்கொழும்பு, வரக்காபொல, அரநாயக்க, கம்பளை, பிபிலை, இகினியாகல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnpcf1xc0006356plnw5cp3r
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
ஈரான் மீதான குண்டுவீச்சை இடைநிறுத்த இஸ்ரேல் இணக்கம்! Apr 8, 2026 - 06:23 AM டொனால்ட் ட்ரம்ப் தற்காலிக போர்நிறுத்தம் ஒன்றை அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் திறக்க வேண்டும் என்பதற்காக, பிரித்தானிய நேரப்படி இன்று (08) அதிகாலை 1 மணி வரை ட்ரம்ப் வழங்கியிருந்த கால அவகாசம் முடிவடைய 90 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, போர்நிறுத்தக் காலப்பகுதியில் நீரிணை வழியாக "பாதுகாப்பான பயணத்தை" அனுமதிப்பதற்கு ஈரான் உடன்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்திருந்ததுடன், இஸ்ரேலில் எச்சரிக்கை சைரன் ஒலிகளும் இடைமறிப்புத் தாக்குதல்களும் கேட்டதாக ஸ்கை நியூஸ் செய்தியாளர்கள் தெரிவித்திருந்தனர். https://adaderanatamil.lk/news/cmnpc0ieg0004356p346nsf4e
-
ட்ரம்பின் முடிவை வரவேற்கிறோம் : ஆனால் லெபனான் சேர்க்கப்படவில்லை: நெதன்யாகு
ட்ரம்பின் முடிவை வரவேற்கிறோம் : ஆனால் லெபனான் சேர்க்கப்படவில்லை: நெதன்யாகு 08 Apr, 2026 | 10:40 AM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தியுள்ள முடிவை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. எனினும், இந்த போர்நிறுத்தம் லெபனான் மீது பொருந்தாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், சில முக்கிய நிபந்தனைகளையும் வலியுறுத்தியுள்ளது. அதன்படி, ஈரான் உடனடியாக ஹோர்மூஸ் நீரிணை கடல் வழித்தடத்தை திறக்க வேண்டும் என்பதோடு, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா முன்னெடுத்து வரும் பதற்ற தணிப்பு முயற்சிகளுக்கும், பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கும் இஸ்ரேல் ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் அரபு அண்டை நாடுகளுக்கு ஈரான் இனி அணு ஆயுதம், ஏவுகணை அல்லது “பயங்கரவாத” அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது என்ற அமெரிக்காவின் நோக்கத்தையும் ஆதரிப்பதாக இஸ்ரேல் மேலும் தெரிவித்துள்ளது. இதனை அடைய எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் இணைந்து செயல்பட உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி இஸ்லாமபாத் நகரில் தொடங்கவுள்ளதாக ஈரான் தரப்பு அறிவித்துள்ளது. இந்த முன்னேற்றங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையை குறைக்கும் முக்கிய கட்டமாகக் கருதப்படுகின்றன. https://www.virakesari.lk/article/243009
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
தம்பர் வாய்ச்சவடால்காரன் என்பது இதன் மூலம் வெளிப்பட்டு விட்டது.பேசாமல் இருந்திருக்கலாம் கண்டபடி வாயை விட்டு விட்டு இப்பொழுது பின்வாங்கி அமெரிக்காவின் மானத்தை வாங்கி விட்டார்.போர்நிறுத்தம் லெபானான் உட்பட அனைத்து மோதல்களும் இடைநிறுத்தப்படவேண்டும் என்று இருக்கிறது. ஆனால் இஸ்ரேல் போர்நிறுத்தத்தை வரவேற்கும் வேளை இந்த யுத்த நிறுத்ததறிற்குள் லெபனான் உள்ளடக்கப்பட வில்லை என்று கூறுகிறது. ஆக ஈரான் இஸ்ரேலுக்கு அடிக்கக்கூடாது அதற்கு யுத்த நிறுத்தம் தேவை. ஆனால் இஸ்ரேல் லெபானானுக்கு அடிக்கலாமாம்.தன்னைத்தயார் படுத்திக் கொண்டவுடன் இந்த யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் முறிக்கும்.இருந்தாலும் தற்போதைய நிலையில் இந்தியாவை விட பாகிஸ்தான் ஒருபடி மேலே போய் விட்டது.
-
-
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை 08 Apr, 2026 | 10:52 AM யாழ். செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என செவ்வாய்க்கிழமை (07) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வெளிப்பட்டது. செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று (7) யாழ். நீதிவான் லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் ஆஜராகி இருந்ததுடன் இந்த மனித புதைகுழி தொடர்பிலான அகழ்வு பணிகளை மேற்பார்வை செய்யும் சட்ட வைத்திய நிபுணர் செல்லையா பிரணவன் நீதிமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றினை தாக்கல் செய்தார். பாதிக்கப்பட்ட தரப்பினர் சார் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா ஆஜரான தலைமையிலான குழுவினர் ஆஜரானதுடன் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சட்டத்தரணி பூரணி ஆஜராகி இருந்தார். இதன்போது நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த அகழ்வு பணிகளை மேற்பார்வை செய்யும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கான தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியுமான சூழல் இருப்பதாக அவர் இதன்போது நீதிமன்றில் குறிப்பிட்டார். இந்த நிலையில் குறித்த மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு திட்டமிட்ட செலவீனங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை எனவும் அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவதானம் செலுத்திய யாழ். நீதிவான் லெனின் குமார் நீதி அமைச்சுக்கு இது தொடர்பில் ஞாபகமூட்டும் கடிதம் ஒன்றினை அனுப்ப உடனடியாக உத்தரவிட்டார். எதிர்வரும் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பாதீட்டுக்கு அனுமதி கிடைக்காத நிலையில் அவ்வாறான அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் தற்போது சந்தேகம் நிலவுகிறது. எனினும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பாதீட்டுக்கு அனுமதி பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் மீண்டும் ஒருமுறை ஆராய இந்த வழக்கை எதிர்வரும் 21ஆம் தேதி மீள விசாரணைக்கு அழைக்குமாறு நீதிவான் லெனின் குமார் உத்தரவிட்டார். இதன்போது காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி பூரணி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் செம்மணி மனித புதைகுழி வளாகத்தை பார்வையிட அனுமதி கோரியுள்ளதாக நீதிமன்றில் குறிப்பிட்டு அதற்காக அனுமதி கோரினார். இது தொடர்பாக கவனம் செலுத்திய நீதிவான் லெனின் குமார் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு முதலோ அல்லது அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு பிறகோ குறித்த வளாகத்தை பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார். இதேவேளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான அதிகாரிகள் இதுவரை முன்னெடுத்த விசாரணை அறிக்கை ஒன்றினை மன்றில் சமர்ப்பித்து செம்மணி மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட வழக்கு பொருட்களின் கால நிர்ணயம் தொடர்பில் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க பேராசிரியர் ராஜ் சோமதேவவுக்கு கட்டளை ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரினர். இது தொடர்பில் ஏற்கனவே நீதிமன்றம் கட்டளை ஒன்றை பிறப்பித்திருந்த நிலையில் அது தொடர்பில் அவதானம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேநேரம் இதுவரையில் செம்மணி மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக மேலதிக ஆய்வுகளை முன்னெடுப்பதற்கான செலவீனங்கள் குறித்த பாதீட்டுக்கும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்ற விடயம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் திருத்தப்பட்ட பாதீடு ஒன்றை அது தொடர்பில் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்வைத்து அதற்கு அனுமதி கோரினார். இது தொடர்பில் அவதானம் செலுத்திய யாழ். நீதிவான் லெனின் குமார் அந்த பாதீட்டுக்கும் அனுமதி அளித்தார். இந்த நிலையில் இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை தீர்மானிப்பது தொடர்பான விடயத்துக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. https://www.virakesari.lk/article/243005
-
-
அன்பை மறந்த உலகமே - பா.உதயன்-
- இந்தியப் படகுகளிலிருந்து அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள் ஏலம்
இந்தியப் படகுகளிலிருந்து அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள் ஏலம் Apr 8, 2026 - 08:23 AM இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள், யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் (07) இந்த ஏலம் நடத்தப்பட்டது. இந்தியப் படகுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், எரிவாயு அடுப்புகள் மற்றும் மின்கலங்கள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டன. நீண்டகாலமாக ஏலம் விடப்படாமல் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மற்றும் இந்தியப் பொருட்கள் அனைத்தும் அன்றைய தினம் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஏலத்தில் பெருமளவிலானோர் கலந்துகொண்டு, போட்டி விலைக் கோரல்கள் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்தனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmnpgasdq000c356payn8nwsw- கருத்து படங்கள்
- ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்
‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம். வடமாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் , எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்காகவும் கூட்டத்தின் முடிவில் 3 விசேட உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றைய தினம் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.அதன் போதே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. குறித்த கூட்டமானது வடக்கு மாகாணத்தின் பொருளாதாரச் சுழற்சியை மேம்படுத்துவதற்காக அரச, தனியார், நிதி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கிடையில் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது மாகாணத்தின் வணிகச் சூழலை ஆரோக்கியமானதாக்குவதற்குத் தடையாக உள்ள பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. மாகாணத்தின் வளங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்பான தரவுகள் சேகரிப்பு முறையாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது. வங்கித்துறையினருக்கும் உள்ளூர் தொழில்முயற்சியாளர்களுக்கும் இடையில் இடைவெளி காணப்படுவதால், முயற்சியாளர்கள் நிதியுதவிகளைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் ஆழமாக விவாதிக்கப்பட்டது. மாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான ‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும், எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்காகவும் கூட்டத்தின் முடிவில் 3 விசேட உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. மாகாணத்தின் வர்த்தகம், வளங்கள் மற்றும் தொழில்முயற்சிகள் தொடர்பான தரவுகளை முறையாகச் சேகரித்து ஒழுங்கமைப்பதற்கான குழு. வடக்கு மாகாணத்திலிருந்து எந்தெந்தத் துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது என்பதைத் தீர்மானிக்கும் குழு. தற்போதைய உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சூழலால் வடக்கு மாகாணத்திலுள்ள தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளப் போகும் சவால்களை முன்கூட்டியே ஆராய்ந்து, அவற்றைத் தணிப்பதற்கான உத்திகளை வகுக்கும் குழு. இந்தக் கூட்டத்தில் மாகாண அரச உயர்மட்ட அதிகாரிகள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு வடக்கு மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தமது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். https://athavannews.com/2026/1471297- மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது
மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக ஆறு பணியாளர்களை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் (SLRC) இணைத்துக்கொண்டமை மற்றும் அவர்களை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட ஊழியர்களாகப் பணியில் அமர்த்தி, அதற்கான கொடுப்பனவுகளை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு 14.32 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1471249- வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
2 வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட அமெரிக்கா, ஈரான்; ஹார்முஸ் நீரிணையை திறக்க உடன்பாடு! ஈரான் தனது குடிமக்கள் உள்கட்டமைப்புகள் மீது பேரழிவுகரமான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருந்த காலக்கெடுவுக்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திற்கு முன்பு, செவ்வாயன்று (07) ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். இது 40 நாள் மோதலைத் தணிப்பதற்கான ஒரு இராஜதந்திர வாய்ப்பைத் திறந்தது. மேலும், ஈரானும் இந்த போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டு, ஹார்முஸ் நீரிணையை நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க ஒப்புக்கொண்டது. ஈரான் முன்வைத்த, செயல்படுத்தக்கூடிய 10 அம்ச சமாதானத் திட்டத்தைத் தொடர்ந்து, ஈரானியப் பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற பொதுமக்கள் உள்கட்டமைப்புகளைத் தாக்குவதை அமெரிக்கா நிறுத்தி வைக்கும் என்று ட்ரம்ப் கூறினார். மத்திய கிழக்கில் நீண்டகால அமைதியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட மேலதிகப் பேச்சுவார்த்தைகள், வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளன. இந்த போர் நிறுத்தம், லெபனானில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த வேண்டும் என்று கோருகிறது என பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். இராஜதந்திர முயற்சிகள் வேகம் பெற்றபோதிலும், களத்தில் நிச்சயமற்ற தன்மையும் வன்முறையும் தொடர்ந்தன. போர் நிறுத்தக் கட்டமைப்பை ஏற்றுக்கொண்டதை ஈரான் உறுதிப்படுத்திய போதிலும், வளைகுடா முழுவதும் ஏவுகணை எச்சரிக்கைகள் தொடர்ந்து பதிவாகி வந்தன. ஹார்முஸ் நீரிணையில் கப்பல் கட்டணம் வசூலிக்க தயாராகும் ஈரான், ஓமான் ஈரானிய இராணுவ நிர்வாகத்தின் கீழ் அந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்று தெஹ்ரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, கூறினார். இதன் பொருள், அந்த நீர்வழிப்பாதையின் மீதான தனது இறுக்கமான பிடியை ஈரான் முழுமையாகத் தளர்த்துமா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை. தாங்கள் நேரடியாக ஈடுபட்டிருந்த பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிப்பதற்காக, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பிராந்திய அதிகாரியின் கூற்றுப்படி, இந்தத் திட்டம் ஈரான் மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளும் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கிறது. இதன்மூலம் திரட்டப்படும் பணத்தை ஈரான் புனரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் என்றும் அந்த அதிகாரி கூறினார். நீரிணையின் மீதான கட்டுப்பாடு மட்டுமின்றி, அப்பகுதியிலிருந்து அமெரிக்கப் போர்ப் படைகளைத் திரும்பப் பெறுதல், தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட அதன் சொத்துக்களை விடுவித்தல் ஆகியவையும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரானின் கோரிக்கைகளில் அடங்கும். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இராணுவத் திறன்கள், தலைமை மற்றும் அணுசக்தித் திட்டம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டைக் கடுமையாகத் தாக்கியுள்ளன. இதற்குப் பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா அரபு அண்டை நாடுகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி, பிராந்தியத்தில் குழப்பத்தையும் மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆயுதங்களின் அதிநவீனத் தன்மைக்கோ அல்லது வான்வழியில் அவற்றின் ஆதிக்கத்திற்கோ ஈரான் ஈடாக முடியாது என்றாலும், பெப்ரவரி பிற்பகுதியில் போர் தொடங்கியதிலிருந்து நீரிணையின் மீதான அதன் இறுக்கமான பிடி உலகப் பொருளாதாரத்தைக் கலக்கி வருகிறது. மேலும், இந்த முட்டுக்கட்டையிலிருந்து ஒரு வழியைக் கண்டறியுமாறு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ட்ரம்ப் மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. https://athavannews.com/2026/1471263- வந்து கொண்டிருக்கும் செய்தி - ஈரான் அமெரிக்கா தற்காலிக போர் தவிர்ப்பிற்கு இணக்கம்
அடியான் எடுத்துவிடுகிற கதைகளைக் கேட்டாலே சரியான கடுப்பாயிடுவேன். இரண்டாவது விமானியைத் தேடி வெறும் 24 அமெரிக்க வீரர்கள் காட்டுக்குள் ஒளிந்திருப்பதாகவும் அவர்களை ஆயிரக்கணக்கான ஈரானிய இராணுவத்தினர் சுற்றிவளைத்திருப்பதாகவும் ஒரு புலுடாவை விட்டார். உடனே பலர் வந்து "அழிந்தார்கள் அமெரிக்கர்கள்" என்று குதூகலித்தார்கள். பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய மதத்தவர்கள். மறுநாள் அமெரிக்க இராணுவம் அந்த விமானியைக் கடுமையான சண்டைக்கு மத்தியில் மீட்டுச் சென்றிருந்தது. தனது படையல் பிழைத்துப்போனதுபற்றி வாயே திறக்காத அடியான், அமெரிக்க வீரர்கள் ஈரானுக்குள் போகவே அஞ்சினார்கள், அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அவர்களைக் கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டார்கள் என்று ஒரு புதிய புலுடாவை விட்டார். அவரது அடியார்களோ அப்பாவித்தனமாக அவரது அவியலை சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்கள். இப்போது ஈரானுக்கு வெற்றி, வெற்றி, வெற்றிவேல், வீரவேல் என்று கம்பு சுத்திக்கொண்டு வருகிறார். எப்போதுபார்த்தாலும் அரைபோதையில் இருக்கும் இவரது உளறளை உண்மையென்று நம்பி ஏமாந்துபோகும் அப்பாவிகளை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது. இதற்கு இப்படியொரு கோணமும் இருக்கின்றதா? ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களும், விமானியின் மீட்பும் அமெரிக்காவின் இராணுவ வல்லமையினைப் பறைசாட்டுவதாகவே எனக்குப் பட்டது. உக்ரேனுக்குள் ரஸ்ஸியா தவழ்ந்து தவழ்ந்து சேடையிழுக்கும் நிலையினையும், ஈரானுக்குள் அமெரிக்க நடத்தும் தாக்குதல்களின் வீரியத்தையும் பார்க்கும்போது உலகில் ஒரு வல்லரசே இருப்பது போன்ற உணர்வினையே தருகிறது. அப்படியிருக்க, தம்பர் அமெரிக்காவின் ஒற்றை வல்லரசுக் கனவினைச் சிதைக்க இப்போரைப் எப்படிப் பயன்படுத்த முடியும்? - இந்தியப் படகுகளிலிருந்து அரசுடைமையாக்கப்பட்ட பொருட்கள் ஏலம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.