All Activity
- Past hour
-
ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு இஸ்ரேல் அவசர கடிதம்!
எத்தனை குழந்தைகளை காசாவில் கொன்று குவித்திருக்கிறார்கள்… அதைப் பார்த்தும் உலகம் அமைதியாக இருந்தது. இப்போ மட்டும் அவசரக் கடிதமா? உங்களால் நினைத்தது போல இந்தப் போர் நடக்கலையா? சமீபத்தில் ஈரான் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டதும் உங்கள் கண்களுக்கு தெரியலையா? உலகமே ஒரு பெரிய மேடை… அதில் நடிப்பது மட்டும் தான் நிஜம் போல காட்டுறாங்க.
-
மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
சரியாக சொன்னீர்கள்...இவர்கள் அமெரிக்காவின் கைபாவை. இனி உலகம் இவர்கள் பேச்சை கேட்குமா? கை மீறிவிட்டது, இதைதான் சீனா, வட கொரியா, ரஸ்யா ஏதிர்பார்த்த து, ரம் அவரப்பட்டுவிட்டார் நெதனை நம்பி...☹️
-
மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
இந்தச்சபையையும் கலைக்க வேண்டும். இது வேடிக்கை பார்த்துவிட்டு அறிக்கை மட்டும் விடுவதற்கு எதற்கு இந்தச்சபை?
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
சுமேரியரா? மெசொப்பொத்தேமியா சுமேரியரா?? ஆச்சரியம்🤔. வருக! வருக!! யாழ்வருகை நல்வரவாகட்டும் சோதரி. 🙏
-
Paanch started following கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
- Today
-
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
கர்ஜனையோடு போரில் இறங்கியவர்கள், இப்போ போர் நிறுத்தம் கேட்டு முனகுகிறார்கள். ஒரு சில நாட்களுக்கு முன், ஈரானில் தலைவர்களை அழித்து விட்டோம், தளபதிகளை கொன்று விட்டோம், இராணுவத்தை அழித்து விட்டோம், கடற்படை இல்லை, யாரோடு பேசுவது என்பது தான் பெரிய பிரச்சனை என்றார். இப்போ என்னவென்றால், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறாராம். யாருமே இல்லாத ஈரானில் யாருடன் பேசுகிறார் ட்ரம்ப்? தன்னோடுதான் பேச வேண்டும். நாங்களே உலகில் சிறந்த படையென அறிக்கை விட்டிட்டு இப்போ, வெளிநாடுகள் தங்களுடன் போரில் இணைய வேண்டுமென்று வெட்கமேயில்லாமல் கேட்க்கிறார். நெதன்யாகுவுக்கு பயம் அதிகரித்து விட்டது. அமெரிக்காவுக்கு பின்னால் மறைந்திருந்து ஈரானை அழிக்கலாமென்று நினைத்தவர், இப்போ அமெரிக்கா விலகிக்கொண்டால், தன்னை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவார்கள் என்று அவர் ஒருபக்கம் ஈரானை அழிக்க எல்லோரும் ஓடி வாருங்கள் என்று ஒப்பாரி. யாரும் காதில் வாங்குவதாக இல்லை. நீங்கள் கொழுத்த நாங்கள் சாம்பல் உண்ணவேண்டுமா என்கின்றனர், எண்பது வயது மூளை சரியில்லாத ஒருவரின் சண்டித்தனத்துக்கு தமது மக்களை பலிகொடுக்க தயாரில்லை என்பதோடு, ஈரானை ஆதரிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். இப்போ ஆழம் தெரியாமல் காலை விட்டு தொடர்ந்து நின்று ஆடவும் முடியாமல், காலை எடுக்கவும் முடியாமல் திணறுகிறார் ட்ரம்ப். இவரை போய் தெரிவு செய்த மக்கள்தான் இதற்கு பொறுப்பு!
-
அதிர்ச்சியூட்டும் சைக்கிள் திருட்டு ஆனால் அதிசயமாக முடிந்த கதை
gps வழி மட்டும் காட்டுவதில்லை , வழி தவறுபவர்களையும் காட்டிக் கொடுத்து விடும் . ....... அவர் ஏன் சைக்கிளைப் பூட்டாமல் போனவர் ...........! 😃
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
இந்த விடயம் பலருக்கு ஏனோ புரியவில்லை. அவர் பொய்கதைகளை அழகா சொல்வதில் இனவெறிபேச்சுக் பேசுவதில் வல்லவராம். அந்த பலர் அதில் கட்டுபட்டு உள்ளனர் பீகார் எப்படி எல்லாம் முன்னேறி உள்ளது என்பதை பார் என்று அவர் கையை வீசி தொண்டையால் கத்தி பேசினால் அவர்கள் அதை அப்படியே நம்பிவிடுவார்கள் ☹️
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
வாழ்த்துக்கள் ஆதித்யா .........! 👍
-
உலகின் மிகச்சிறந்த போர் பிரிவு வளைகுடாவில்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டது வெள்ளை மாளிகை!
இஸ்ரேலை நொறுக்கி தள்ள சபதம் எடுத்த ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை அலறும் இஸ்ரேல் அமெரிக்க கூட்டு - செய்திகள் தமிழ் யுரியுப்பர்கள்
-
AI எழுதிய கவிதை -நானும் கிளோடும்
கவிதைகள் நல்லாக இருக்கு. ஆனால் சுருக்கமான prompt போதாது. கேட்கின்ற கேள்வி தரமாக இருந்தால், மனதில் உள்ளதை அப்படியே prompt இல் கொடுத்தால் Generative AI இலிருந்து கிடைக்கும் பதில் ஆச்சரியப்படவைக்கும். ஆனால் சிலநேரம் அது எல்லைதாண்டி மயங்கிவிடும் ஆபத்தும் உள்ளது.
-
இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தமிழ்ப் பெண் பிரான்ஸில் துணை மேயரானார்
உங்கள் கண்களுக்கு சீமான் பேசுவது இனவெறுப்பாகத் தெரிகிறது.சீமான் தமிழர்நிலத்தை தமிழர் ஆளவேண்டும் என்று சொல்கிறார்.இங்கு யாரும் வாழலாம்ஆனால் ஆள்வது மண்ணின் மைந்தனாக வாழவேண்டும் என்பதில் என்ன தவறு?கேரளாவிலோ.கர்நாடகவிலோ.ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டைத்தவிர வேறு எந்த மாநிலத்திலோ அந்த மண்ணின் மைந்தர்களைத் தவிர வேறு யாராவது முதலமைச்சராக இருந்துள்ளார்களா? அல்லது இனி வரமுடியுமா?மற்றைய மாநிலங்கள் அந்ததந்த மொழிவழி மாநிலங்களாக இருக்கும் பொழுது தமிழ்நாடு மட்டும் திராவிட நாடு என்ற போர்வையைப் போர்த்தியது யார்?என்ன காரணத்திற்காக திராவிடக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள் . திராவிடப் போர்வையில் தமிழர்களை ஆள்வதற்குத்தானே.தேசியக்கட்சியான காங்கிரசின் கொள்கை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டு அந்ததந்த மாநில நன்மை கருதும் காங்கிரசை எப்படி தேசியக்கட்சி என்று சொல்ல முடியும்.கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வருவதை கர்நாடக காங்கிரஸ் தரமறுக்கிறது கேரள காங்கிரசும் அவ்வாறே கேரளமக்களின் நலன்களைப் பேசுகிறது.தமிழக காங்கிரஸ் மட்டும் ஏன் தேசியம் பேச வேண்டும்.ஏனைய மாநிலத்தவர்கள் இனத்தூய்மைவாதம் பேசும்போது அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை சீமான் தமிழர்களைத் தமிழரே ஆளவேண்டும் என்னும் பொழுது இனவாதம் என்று சொல்லி மடை மாற்றுகிறீர்கள். சீமான் தமிழின உரிமை பற்றி மட்டும் பேசவில்லை அனைத்து உயிர்களுக்குமான அரசியலைப் பேசுகிறார். சூழலியல் பேசுகிறார். பொருளாதாரத்தைப்பற்றிப் பேசுகிறார். வேறு எந்க்கட்சி பேசுகிறது. அதுவெல்லாம் உங்கள் கண்களுக்குத் ஏன் தெரியவில்லை?
-
சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும்
இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்ததுக்கு கோட்பாட்டு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த ஜி. பார்த்தசாரதி March 25, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — (கடந்த வாரத்தைய தொடர்ச்சி ) 1931 — 1947 காலப்பகுதியில் நடைமுறையில் இருந்த டொனமூர் அரசியலமைப்பு ஐக்கியப்பட்ட தேசிய அடையாளம் ஒன்றை உருவாக்கும் குறிக்கோளுடன் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டபோதிலும், அது உண்மையில் இலங்கையில் இனவாத அரசியலை தீவிரப்படுத்தியதன் மூலமாக எதிர்மறையான ஒரு திருப்புமுனையாக மாறியது. இனரீதியான பிரதிநிதித்துவத்தை ஒழித்து சர்வஜன வாக்குரிமையுடன் பிராந்தியப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அந்த அரசியலமைப்பு சிங்களப் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு அரசியல் அதிகாரத்தை நகர்த்தியது. இதன் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் பாகுபாட்டுக்குள்ளாகின. பெரிய அரசியல் அபிலாசைகளைக் கொண்டிருந்த பண்டாரநாயக்கவும் முற்போக்கு தேசிய கட்சியை கைவிட்டு சிங்கள மகாசபையை ஆரம்பித்தார். சமஷ்டி முறைக்காக குரல் கொடுப்பதை நிறுத்திய அவர் அதற்கு பதிலாக பன்முகப்படுத்தலை ஆதரிக்கத் தொடங்கினார். உள்ளூராட்சி முறையை மேம்படுத்தி பன்முகப்படுத்தலின் மூலமாக பெருமளவில் சுயாட்சியை வழங்குவதை பண்டாரநாயக்க ஆதரித்தார். பெரிய உள்ளூராட்சி அதிகார அலகாக மாகாணங்களை நோக்கத்தொடங்கிய பண்டாரநாயக்க மாகாணசபைகளை அமைக்க விரும்பினார். இரண்டாவது அரசாங்க சபையில் உள்ளூராட்சி அமைச்சராக அவர் பதிவி வகித்தபோது அந்த அமைச்சின் நிறைவேற்றுக்குழு உறுப்பினராக இருந்த ஆர்.எஸ். எஸ். குணவர்தன மாகாணசபைகளை அமைப்பதற்காக கொண்டுவந்த பிரேரணையை அரசாங்க சபை அங்கீகரித்தது. ஆனால், விளங்கிக்கொள்ள முடியாத காரணங்களுக்காக பண்ட ரநாயக்க மாகாணசபைகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்கவில்லை என்று ஜெயராஜ் எழுதியிருக்கிறார். பிறகு தனது சிங்கள மகாசபையுடன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து சுதந்திர இலங்கையில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின் முதலாவது அமைச்சரவையில் உள்ளூராட்சி அமைச்சராக பதவியேற்ற பண்டாரநாயக்க மக்களுக்கு நெருக்கமாக அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கான ஒரு வழிமுறையாக மாகாணசபை திட்டத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க முயற்சித்த போதிலும், அமைச்சர்களாக முழுமையாக தாங்கள் அனுபவித்த அதிகாரங்களை இழக்க அவரது சகாக்கள் விரும்பவில்லை. அதனால் பண்டாரநாயக்காவினால் மீண்டும் மாகாணசபை திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. பண்டாரநாயக்க மாகாணசபைகளை அமைப்பது குறித்து சிந்தித்த காலப்பகுதியில் அவற்றுக்கு இன்று இருப்பதைப் போன்று இனத்துவ அரசியல் பரிமாணம் ஒன்று இருக்கவில்லை என்பதால் பெருமளவுக்கு பிரச்சினைகள் இல்லாமல் அவற்றை அன்று அமைத்திருக்க முடியும் என்பது ஜெயராஜின் அவதானிப்பாக இருக்கிறது. 1951 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேறிய பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அமைத்து ஐந்து வருடங்களில் பிரதமராக பதவிக்கு வந்த பிறகு அவரது அரசாங்கம் முன்னெடுத்த கொள்கைகள் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்கள் தங்களது எதிர்கால இருப்புக் குறித்து அச்சம் கொள்கிற அளவுக்கு இனவாத அரசியலை முனைப்படையச் செய்தன. தனிச்சிங்களச் சட்டம் அதில் முக்கியமானது. இலங்கையில் முதன்முதலாக சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரல்கொடுத்த ஒரு அறிவார்ந்த தலைவர், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் எஸ். ஜே வி. செல்வநாயகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது சமஷ்டி பற்றி பேசுவதை தவிர்ப்பதில் கடுமையான கவனம் செலுத்திய அளவுக்கு அவரின் கொள்கைகளில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது. இன்று நடைமுறையில் இருக்கின்ற மாகாண சபைகள் முறை 39 வருடங்களுக்கு முன்னர் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அது. அடிப்படையில் பல தசாப்தங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்கவின் சிந்தனையில் உதித்ததே என்பது கவனிக்கத் தக்கது. பிராந்திய சபைகளை அமைப்பதற்காக செல்வநாயகத்துடன் பண்டாரநாயக்க செய்துகொண்ட 1957 ஒப்பந்தத்துக்கு எதிராக தென்னிலங்கையில் எதிர்ப்பைக் கிளப்புவதில் முன்னரங்கத்தில் நின்ற ஜெயவர்தன, மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மாகாணசபைகளை அமைப்பதற்கு வழிவகுத்த நிகழ்வுப் போக்குகளை இனிமேல் பார்ப்போம். சமாதான உடன்படிக்கை: பிராந்தியங்களுக்கு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடு எதையும் ஒருபோதும் கொண்டிராத இலங்கையில் இந்தியாவின் தலையீடு இல்லாமல் இருந்திருந்தால் மாகாணசபைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்காது என்பதில் சந்தேகமில்லை. தேசிய இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சகல விவகாரங்களிலும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவரான ஜனாதிபதி ஜெயவர்தனவை அந்த பிரச்சினைக்கு முடிவைக் கொண்டுவர வேண்டும் என்றால் அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடு ஒன்று அவசியம் என்று நம்பவைப்பதில் அல்லது வழிக்குக் கொண்டுவருவதில் இந்தியா அந்த நேரத்தில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியது. 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கையில் முரண்பட்டு நின்ற இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கு நல்லெண்ண உதவிகளை வழங்க முன்வந்த அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, தனது விசேட தூதுவராக நியமித்த கோபாலசுவாமி பார்த்தசாரதிக்கு ஜெயவர்தனவை இணங்க வைப்பதில் முக்கிய பங்கு இருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தலைசிறந்த அரசியலமைப்புச்சட்ட நிபுணருமான காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வம் பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரை ஒன்றில், ஜனாதிபதி ஜெயவர்தன ஒரு அரசியலமைப்பு நிபுணராக இருந்த போதிலும் கூட, அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டின் பயனுடைத்தன்மை மீது அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பெரும் கஷ்டப்பட வேண்டியிருந்தது என்று தன்னிடம் பார்த்தசாரதி ஒரு தடவை கூறியதாக குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜெயதிலக எழுதிய கட்டுரையொன்றில் கறுப்பு ஜூலைக்கு பின்னரான காலப் பகுதியில் இலஙகையில் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது எதிர்நோக்க வேண்டியிருந்த கஷ்டங்கள் குறித்து பார்த்தசாரதி புதுடில்லி சந்திப்பொன்றில் தன்னிடம் கூறியதாக தெரிவித்திருந்தார். 1984 பேச்சுவார்த்தைகளின் போது ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ஜெயவர்தனவின் வேண்டுகோளின் பேரில் கண்டியில் உள்ள பௌத்தபீடங்களின் மகாநாயக்கர்களைச் சந்தித்ததாகவும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பது சாத்தியமில்லாத அளவுக்கு கடுமையானது என்பதை தெரிந்து கொண்டதாகவும் பார்த்தசாரதி தன்னிடம் கூறியதாகவும் கலாநிதி ஜெயதிலக எழுதியிருந்தார். சிக்கல் மிகுந்த மத்தியஸ்த முயற்சிகளை பொறுமையுடன் முன்னெடுப்பதற்கு எமது பிராந்தியத்தின் பூகோள அரசியலை முறையாகப் புரிந்து கொண்டவராகவும் இலங்கையின் அரசியலமைப்பின் சிக்கலான தன்மைகளைப் புரிந்து கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வல்லவராகவும் இருக்கக்கூடிய இராஜதந்திரி ஒருவரே அவசியம் என்று கருதியதனால்தான் இந்திரா காந்தி தனது நம்பிக்கைக்கு பெரிதும் பாத்திரமானவரான பார்த்தசாரதியை விசேட தூதுவராக அனுப்பினார். அவர் வெளியுறவுச் செயலாளர் உட்பட பல இராஜந்திர பதவிகளை வகித்தவர். தனது பணிக்கு முன்னதாக இருந்த சிக்கல்களும் இடறுகுழிகளும் பாரதூரமானவை என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட பார்த்தசாரதியின் முதற்பணி அன்றைய அரசாங்கத் தலைவர்களினதும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களினதும் அச்சங்கள், ஏக்கங்கள், பிரமைகள் மற்றும் எண்ணப் போக்குகளை மிகுந்த நிதானத்துடன் கிரகிக்க வேண்டியதாகவே இருந்தது. இலங்கையின் பழைய இடதுசாரித் தலைவர்களுடன் அவரால் எளிதாகப் பழகிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. தமிழ்த் தலைவர்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய அரசியல் தெரிவுகளின் மட்டுப்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டும் என்பதும் பேச்சுவார்த்தை செயன்முறைகள் தொடர்பில் அடிப்படைவாத நிலைப்பாடுகளில் பிடிவாதமாக இருப்பவர்கள் போராடிக்கொண்டே பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட வேண்டும் என்பதே அவர்களுக்கான பார்த்தசாரதியின் ஆலோசனையாக இருந்ததாக கலாநிதி திருச்செல்வம் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். பிராந்திய சபைகளுக்கு (Regiinal Councils) அதிகாரங்களைப் பகிர்வதற்கான ஒரு தொகுதி யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தியதே பார்த்தசாரதியின் தனித்துவமான பங்களிப்பாகும். அந்த யோசனைகளே ‘இணைப்பு — சி’ ( Annexure — C ) என்று பிரபல்யமாக அழைக்கப்பட்டவையாகும். 1983 ஆகஸ்ட் தொடக்கம் டிசம்பர் வரை கொழும்பிலும் புதுடில்லியிலும் ஜனாதிபதி ஜெயவர்தனவுடன் நடத்திய சந்திப்புக்களில் இந்த இணைப்பு -. சி யைப் பூரணப்படுத்தும் செயற்பாடுகளை பார்த்தசாரதி நிறைவு செய்தார் என்று கூறப்பட்டது. தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் ஜெயவர்தன அரசாங்கத்துக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிப்பதில் ஒரு முழுநிறைவான சமரசப் பேச்சுவார்த்தையாளருக்குரிய சகல திறமைகளையும் மதிநுட்பத்தையும். வெளிக்கொணர்ந்தாகக் கூறப்பட்ட பார்த்தசாரதியினால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் அம்சங்களை. ஜெயவர்தன உடனடியாகவே இணங்கிக் கொண்டார். ஆனால், அதிகாரப் பகிர்வுக்கான அடிப்படை அலகு (Unit of Devolution) தொடர்பில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வருவதென்பது தொடர்ந்தும் கஷ்டமானதாகவே இருந்தது. ஒரு மாகாணத்திற்குள் இருக்கும் மாவட்டங்களை இணைத்த பெரியதொரு அதிகாரப்பகிர்வு அலகு தமிழர்களுக்கு வழங்கப்படக்கூடாத ஒரு சலுகையாக நோக்கப்பட்டது. பிறகு 1983 டிசம்பரில் ஜெயவர்தன புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தனியொரு மொழிரீதியான பிராந்தியத்தை (Single Linguistic Region) அமைப்பதற்கான யோசனையை முன்வைப்பதற்கு இந்திரா காந்தியின் ஆதரவை பார்த்தசாரதி பெற்றிருந்தார். அத்தகைய யோசனைக்கு இணங்குவதன் மூலம் தென்னிலங்கையில் தனது ஆதரவுத்தளத்தை இழப்பதற்கு ஜெயவர்தன விரும்பவில்லை. ஆனால், அவர் விட்டுக்கொடுப்பு ஒன்றைச் செய்வதற்கு இணங்கினார். இணைப்பு — சி யில் பிராந்திய சபைகள். என்று இருந்ததை மாகாண மட்டத்துக்கு மட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். புதுடில்லி அஷோக் ஹோட்டலில் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியத் தரப்பின் நெருக்குதலினால் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஜெயவர்தன, பார்த்தசாரதியை நோக்கி “நான் எங்கே கையெழுத்திட வேண்டும்” என்று கேட்டதாகவும் அதற்கு பதிலளித்த பார்த்தசாரதி “இது ஒரு உடன்படிக்கை அல்ல. கையெழுத்து ஒன்றும் தேவையில்லை” என்று கூறியதாக அந்த நேரத்தில் இந்திய ஊடகங்களில் செய்தி வௌயாகியது. 1984 ஜனவரியில் கூட்டப்பட்ட சர்வகட்சி மகாநாட்டில் இணைப்பு — சி சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், சிங்கள அமைப்புக்கள், பௌத்த குழுக்கள் மற்றும் சில எதிர்க்கட்சிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து ஜெயவர்தன அதிலிருந்து தன்னைத் தூரவிலக்கிக் கொண்டார். இணைப்பு — சி யின் உள்ளடக்கங்களுக்கு தான் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை என்று அவர் கைகழுவிவிட்டார். அதனால் சர்வகட்சி மகாநாடு தோல்வியில் முடிவடைந்தது. இந்திரா காந்தியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்றதை தொடர்ந்து 1985 முற்பகுதியில் புதுடில்லியில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், தாயாரின் நம்பிக்கைக்குரியவராக விளங்கிய பார்த்தசாரதியை பேச்சுவார்த்தை செயன்முறைகளில் ஈடுபடுத்துவதை மகன் தவிர்த்தார். தமிழ் அரசியல் தலைவர்கள் வழிகாட்டலுக்காகவும் ஆலோசனைக்காகவும் பெருமளவுக்கு பார்த்தசாரதியில் தங்கியிருந்த காரணத்தால் அவரின் வகிபாகத்தில் இலங்கை அரசாங்கத்தரப்புக்கு சந்தேகம் ஏற்படத் தொடங்கியமை அவரை ஓரங்கட்டுவதற்கு ராஜீவ் காந்தி தீர்மானித்தற்கான ஒரு காரணி என்று கூறப்பட்டது. வெளியுறவு செயலாளர் ரொமேஷ் பண்டாரி, அமைச்சர்கள் பி. சிதம்பரம் மற்றும் நட்வர்சிங் ஆகியோரையே இலங்கை இனப்பிரச்சினையைக் கையாளுவதற்கு ராஜீவ் காந்தி பயன்படுத்தினார். 1987 ஜூலை 29 சமாதான உடன்படிக்கையில் கொழும்புக்கு வருகைதந்த ராஜீவ் காந்தியுடன் செல்வாக்குமிக்க அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய பெரிய தூதுக்குழுவொன்று வந்திருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் ஆரம்பக்கட்டங்களில் தீர்க்கமான பாத்திரத்தை வகித்து சமாதான உடன்படிக்கைக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த பார்த்தசாரதி அந்த தூதுக்குழுவில் இல்லாதது ஒரு பிரகாசமான வெற்றிடமாக இருந்ததாக அந்த நேரத்தில் அரசியல் மற்றும் இராஜதந்திர வட்டாரங்களில் வர்ணிக்கப்பட்டது. எது எவ்வாறிருந்தாலும், இலங்கையில் அதிகாரப் பரவலாக்கத்துக்கான கோட்பாட்டு அடிப்படையையும் பல்லின சமுதாயமொன்றுக்கான அரசியலமைப்பு அத்திபாரத்தையும் (Constitutional foundation for a multi – ethnic polity) அமைத்த பெருமையில் பெரும்பகுதி பார்த்தசாரதிக்கே உரியது என்று என்பதில் சந்தேகமில்லை என்று நீலன் திருச்செல்வம் எழுதினார். மாகாணசபைகளை அமைப்பதற்காக இலங்கை அரசியலமைப்புக்கு 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்டு 38 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அது இதுவரையில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவுமில்லை, மாகாணசபைகள் ஒழுங்காக இயங்கவுமில்லை. கடந்த எட்டு வருடங்களாக மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் ஒரு வருட காலத்திற்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்த போதிலும், சாத்தியமானளவுக்கு அந்த தேர்தல்களை மேலும் பின்போடுவதற்கான வியூகங்களே முன்னெடுக்கப்படுகின்றன போன்று தெரிகிறது. தமிழ் அரசியல் கட்சிகள் இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறையின் அடிப்படையிலான தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகின்றன. வேறு காரணத்துக்காக என்றாலும் சிங்களவர்கள் தரப்பில் சமஷ்டி ஆட்சிமுறை யோசனை முன்வைக்கப்பட்டு ஒரு நூற்றாண்டும் தமிழர் தரப்பினால் அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு முக்கால் நூற்றாண்டும் கடந்துவிட்ட நிலையில், அரைகுறையான அதிகாரங்களுடன் கூடிய மாகாண சபைகளைக் கூட ஒழுங்காக செயற்பட வைப்பதில் அக்கறையில்லாமல் சிங்கள அரசியல் சமுதாயம் இருக்கிறது. தமிழர் அரசியல் சமுதாயம் சமஷ்டி முறைத் தீர்வொன்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாலும், புதிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டுவரும் பட்சத்தில் முதலில் மாகாணசபைகளைக் காப்பாற்றப் போராடவேண்டியிருக்கும். https://arangamnews.com/?p=12770
-
ஈரான் - வெட்ட வெட்ட தழைத்தல் !
ஈரான் - வெட்ட வெட்ட தழைத்தல் ! பா. ரவீந்திரன் sudumanal அமெரிக்காவும் இஸ்ரேலும் கனவு கண்டதைப்போல ஈரான் அரசாங்கத்தை விரைவாக கவிழ்த்து தமக்கு சார்பான அடிவருடி -ஷா இன் புத்திரனான- றேசா பாலவியை ஆட்சிக்குக் கொண்டுவர முடியவில்லை. தலைவர்களைக் கொல்வதன் மூலம் அல்லது உள்நாட்டு மக்களின் அரசுக்கு எதிரான நியாயமான போராட்டங்களினுள் புகுந்து மடைமாற்றி அல்லது அதை செயற்கையாக உருவாக்கி ஆட்சியைக் கவிழ்த்த அமெரிக்க நரித்தன வரலாறு ஈரானிடம் வந்து முட்டி மோதி நிற்கிறது. அதற்கான காரணங்களில் மிக முக்கியமானது, ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்புத்தான். உச்சத் தலைவரை மட்டுமல்ல இராணுவத் தளபதிகள் ஆலோசகர்கள் என சுமார் 50 பேருக்கு மேல் இதுவரை அமெரிக்காவும் இஸ்ரேலும் கொலைசெய்தபோதும் ஈரான் அரசை சரிக்க முடியவில்லை. 1979 ஈரானியப் புரட்சியின் பின் கட்டமைக்கப்பட்ட அரசாட்சி வடிவமே ஈரானின் அரசியல் அமைப்பாக இருக்கிறது. உச்சத் தலைவர் என ஒருவர் இருக்கிறபோதும், அவர் ஒருவரே அந்த இடத்துக்கான தகுதி படைத்தவர் அல்ல. அவர் வீழ்ந்தால் தாமதமின்றி அந்த இடத்தை நிரப்பக்கூடிய வகையில் “வல்லுனர் சபை” என்ற கட்டமைப்பு உள்ளது. அதிலிருந்து ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு தாமதமின்றி பதவியேற்பார். 86 மதத் தலைவர்களைக் கொண்ட சபை அது. இச் சபை உச்சத் தலைவரை நியமிக்கும் அதிகாரம் மட்டுமல்ல, அவரை நீக்கக் கூடிய அதிகாரமும் கொண்டதாகும். இந்த 86 பேரையும் 8 வருடத்துக்கு ஒருமுறை மக்கள் தெரிவுசெய்வர். இதைவிட பாதுகாப்புச் சபை, நிபுணர் சபை, பாராளுமன்றம், ஜனாதிபதி என எல்லாமும் சேர்ந்த ஒரு வலைக் கட்டமைப்பு கொண்டது ஈரானிய அரசு முறைமை. பாதுகாப்புப் படை கட்டமைப்பைப் பொறுத்தவரை 1979 ஈரானியப் புரட்சியின்பின் உச்சத் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும்; ஐ.ஆர்.ஜி.சி மற்றும் பாராளுமன்றம் பிரதிநிதித்துவப் படுத்தும் அரச இராணுவம் (ஆர்ற்ரெஷ்) என இரு பெரும் பிரிவுகள் தோன்றின. மையப்படுத்தப்பட்ட முறையில் இந்த இராணுவ பிரிவுகள் இயங்கின. அரச இராணுவமும் ஐஆர்ஜசியும் தத்தமக்கான காலாட் படை, வான்படை, கப்பற்படை, உளவுப்படை, சேவைப் பிரிவு, தொழில்நுட்பப் பிரிவு என்பவற்றைக் கொண்டன. 2003 இல் ஈராக் இன் தலைவர் சதாம் வீழ்த்தப்பட்டவுடன் அந்த நாடும் வீழ்ந்தது. இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டனர், ஐ.ஆர்.ஜி.சி ராணுவத் தலைவர்கள்!. தலைவர் கொல்லப்படுகிறபோது, மையப்படுத்தப்பட்ட இராணுவக் கட்டமைப்பும் வீழ்ந்து போய்விடும்; என்பதை கண்டுபிடித்தனர். 2005 இல் ஜெனரல் மொகமட் ஜபாரி அவர்கள் இராணுவக் கட்டமைப்பில் “மொசைக்” என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தினார். அது உச்சத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. அதன்படி ஈரானின் 31 மாகாணங்களையும் கவனத்தில் எடுத்து இராணுவக் கட்டமைப்பு 31 பிரிவுகளாக கட்டமைக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவும் தனியாக போரிடக் கூடிய வலுவடன் உருவாக்கப்பட்டது. ஒவ்வொன்றும் தமக்கான தலைமையகத்தையும், ஆயுத இருப்பையும், உளவு வலையமைப்பையும் கொண்டனவாக இருந்தன. தமக்கான ஏவுகணை பிரிவுகளையும் இருப்பையும் கொண்டுள்ளன. தெஹ்ரானில் மத்தியப்படுத்தப்பட்டகட்டளைத் தலைமையகத்திலிருந்து போர்க் காலங்களில் தகவலை பெற முடியாத சந்தர்ப்பங்களில் அல்லது அது தாக்கப்பட்டு செயலிழந்திருக்கும் பட்சத்தில் இந்த 31 பிரிவுகளும் தனித்தனியாக சுயமாக முடிவெடுத்து இயங்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. அதற்கான முன் அங்கீகாரம் வழங்கப்பட்டுமிருக்கிறது. தெஹ்ரானிலிருந்து எந்த அறிவிப்பும் தேவையில்லை. உச்சபட்ச தலைவரிடமிருந்தும் எந்த கட்டளையும் தேவையில்லை. “எவராவது நிறுத்தும்படி சொல்வது வரை நிறுத்தாதே” என்பது அதன் தாரக மந்திரமாக இருக்கிறது. அதாவது நிறுத்தும் சுவிச் அந்த இராணுவ இயந்திரத்துக்கு இருக்காது. இன்னொரு வகையில் சொன்னால், தமது இருத்தலுக்காக இயக்குபவர் இல்லாமலே இயங்குகிற வல்லமை கொண்ட இராணுவ இயந்திரமாகும். இயக்குபவர் இல்லாமல் போகலாம். ஆனால் இயந்திரம் ஓடிக்கொண்டேயிருக்கும். அதனால்தான் ஈரான் இராணுவத்தை குண்டுகளாலோ அல்லது அதன் தலைவர்களைக் கொல்வதாலோ எவராலும் நிறுத்த முடியாது. ஏன், ஈரான் விரும்பினால் கூட இந்த இயந்திரத்தை நிறுத்த முடியாது என்கின்றனர், இராணுவ வல்லுநர்கள். தற்போதைய போர் ஈரான் வெற்றி பெறுவதற்கான போராட்டம் அல்ல. ஈரான் ஒருபோதும் வீழ்ந்துவிடக் கூடாது என்ற போராட்டம். அதாவது இருத்தலுக்கான போராட்டம். இராணுவ கட்டமைப்பு ஆர்ற்ரெஷ், ஐ.ஆர்.ஜி.சி என இரு அடுக்குகளைக் கொண்டது என பார்த்தோம். ஆர்ற்ரெஷ் ஆனது மரபார்ந்த இராணுக் கட்டமைப்பு. அது ஒரு நாட்டுக்கான இராணுவக் கட்டமைப்பு ஆகும். மற்றது இஸ்லாமிய புரட்சிக் காவற்படை ஐ.ஆர்.ஜி.சி. இது உள்நாட்டுப் பாதுகாப்பையும் இஸ்லாமியக் குடியரசு அரசியல் கட்டமைப்பின்; இராணுவப் பாதுகாப்பாகவும் இருக்கும். வெளியிலிருந்து வரும் தாக்குதலை அதாவது போரை மரபு இராணுவத்துடன் சமாந்தரமாக நடத்துபவர்களாகவும் இருப்பர். மரபு இராணுவத்துக்கும் ஐ.ஆர்.ஜி.சி க்கும் தனித்தனியான கட்டளைத் தலைமையகம் இருக்கிறது. இரண்டுக்கும் இடையில் தொடர்பும் இருக்கிறது. தொடர்புபட்ட நடவடிக்கைகளும் இருக்கின்றன. இரண்டு பிரிவுகளிலும் மொத்தமாக 610’000 நிரந்தர படை வீரர்கள் இருக்கிறார்கள்.350’000 றிசேவ் படை வீரர்கள் இருக்கிறார்கள். 93 மில்லியன் மக்களைக் கொண்ட ஈரானின் நிலப்பரப்பு மிகப் பெரியது. மலையையும் பாலைவனத்தையும் சமதரையையும் கொண்ட இந் நிலத்தை தரைவழியாக அமெரிக்கா ஆக்கிரமிப்பது எந்தளவு சாத்தியம் என தெரியாது. அது நடந்தால் ஆக்கிரமிப்பு இராணுவம் இலகுவில் மீள முடியாத சேற்றுள் காலத்தைப் புதைப்பதாக முடியும். மரபு இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட ஆப்கானிஸ்தானையே வெற்றி கொள்ள முடியாமல் தோற்றுப்போனது அமெரிக்கா. ஈரானின் வித்தியாசமான இராணுவ மூலோபாயக் கட்டமைப்பை முன்வைத்தும், ஏவுகணைத் தொழில்நுட்பத்தை முதன்மையிலும் வைத்தும் ஓர் அசமச்சீர்ப் போர் முறையில் தனது இருத்தலுக்கான போராட்டத்தை ஈரான் நடத்துகிறது. பலவீனமான கடற்படையைக் கொண்டிருந்தாலும் மினி நீர்மூழ்கிக் கப்பலையும் கடற் கண்ணிவெடிகளையும் கொண்ட இன்னொரு அசமச்சீர் கடற் போர்முறையை கொண்டு போராட அதனால் முடியும். அதேபோலவே பலவீனமான வான்படையைக் கொண்டிருந்தாலும் வான்பரப்பை ஏவுகணைகளால் முடிந்தளவு ஆக்கிரமித்து வைத்திருக்கவும் செய்கிறது. 1979 இலிருந்து பொருளாதாரத் தடையை அந்த நாடு எதிர்கொண்டு வருகிறபோதும் அங்கு வேலைவாய்ப்பின்மை 7.2 வீதம் மட்டுமே உள்ளது. படிப்பறிவைப் பொறுத்தவரை வயதானவர்களினது 89 வீதமும் இளஞ்சந்ததியினது 99 வீதமுமாக உள்ளது. பல்கலைக் கழகத்தில் கல்வி கற்போரில் பெண்கள் 60-70 வீதமானோர் என்கிறது புள்ளிவிபரம். எண்ணற்ற விஞ்ஞானிகளை அது உருவாக்குகிறது. எல்லா தடைகளுக்கூடாகவும் தொடரும் அவர்களது இருத்தலுக்கான போராட்டத்தில் இப்போ இன்னொரு போரை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். அழிவுகள் மிகப் பயங்கரமானதாகவே இருக்கிறது. இந்தப் போரின் சூத்திரதாரிகள் மனிதவிரோதிகளான இஸ்ரேலும் அமெரிக்காவும்தான் என்பது உலகு அறியும். வெட்ட வெட்ட தழைக்கும் வலுவும் வளமும் கொண்டது ஈரான் என்பதை அமெரிக்க அதிகாரம் நம்ப மறுக்கலாம். ஆனால் இதுவும் கடந்து போகும் என்ற நிலையில் ஈரான் உறுதியோடு நிற்கிறது. பாசிஸ்டுகள் பார்ப்பதற்கு விறைப்பானவர்கள் போல் தெரிந்தாலும், அவர்கள் கோமாளிகள் என்றார் சார்லி சப்ளின். எந்தளவு உண்மை என தெரியாது. ஆனால் முன்னுக்குப் பின் மாத்தி மாத்தி பேசுவதிலும், தனது மூளை அக் கணத்தில் எடுக்கும் முடிவுகள்தான் தன்னை வழிநடத்துவதாகவும் கூறும் டொனால்ட் ட்றம்ப் இன் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது சப்ளின் சொன்னது உண்மைதானோ என எண்ணத் தோன்றுகிறது. https://sudumanal.com/2026/03/22/7651/
-
கருத்து படங்கள்
- போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை! விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் மோசடிச் செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். இந்த விளம்பரங்கள் தவறான தகவல்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணத்தைத் திருடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்: சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்: தள்ளுபடிகளை விளம்பரப்படுத்தும், அறியப்படாத அல்லது சரிபார்க்கப்படாத இணையதள இணைப்புகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடப் பயன்படுத்தப்படலாம். வங்கி விவரங்களைப் பகிர வேண்டாம்: எந்தவொரு முறையான விமான நிறுவனமோ அல்லது நம்பகமான முகமையோ, அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் உங்கள் OTP-கள், கடவுச்சொற்கள் அல்லது முக்கியமான நிதித் தகவல்களைக் கோராது. அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் சரிபார்க்கவும்: சலுகைகளை எப்போதும் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் சரிபார்க்கவும். நம்பகமான முகவர்களை அணுகவும்: பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், பதிவுசெய்யப்பட்ட மற்றும் நற்பெயர் பெற்ற பயண முகவரிடம் விவரங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும். எந்தவொரு முறையான விமான நிறுவனமோ அல்லது நம்பகமான முகமையோ, அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் முக்கியமான நிதித் தகவல்களைக் கோராது என்று பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பொதுமக்கள் மோசடிகளுக்குப் பலியாக வேண்டாம் என்றும், விழிப்புடன் இருக்குமாறும், மற்றவர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வைப் பரப்புமாறும் அவர்கள் வலியுறுத்தினர். https://athavannews.com/2026/1470040- அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு!
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை – ஈரான் அறிவிப்பு! மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரானிய அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஆனால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araqchi) தெரிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும், மூன்றாம் தரப்பினர் மூலம் அமெரிக்காவுடன் தொடர்பு கொள்வது என்பது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று அர்த்தமல்ல என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான எந்தவொரு போர்நிறுத்த ஒப்பந்தத்திலும் லெபனான் சேர்க்கப்பட வேண்டும் என்று ஈரான் இடைத்தரகர்களிடம் கூறியுள்ளது என, ஈரானின் நிலைப்பாட்டை அறிந்த ஆறு பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானியத் தலைவர்கள் அமெரிக்காவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், ஆனால் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அதை வெளிப்படையாகக் கூற விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வொஷிங்டனில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். அதேநேரம், பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்ட ட்ரம்பின் 15 அம்சத் திட்டம், ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அகற்றுதல், செறிவூட்டலை நிறுத்துதல், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பிராந்திய நட்பு நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என, இத்திட்டம் குறித்து அறிந்த மூன்று இஸ்ரேலிய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் வெள்ளை மாளிகை தனது 15 திட்டத்தின் குறிப்பிட்ட விவரங்களை வெளியிட மறுத்ததுடன், தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் அச்சுறுத்தியது. ஈரான் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளும் என்பதில் இஸ்ரேலுக்கு சந்தேகம் இருப்பதாகவும், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் சலுகைகளை வழங்கக்கூடும் என்று இஸ்ரேல் கவலைப்படுவதாகவும் ஒரு மூத்த இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி கூறினார். மேலும், எந்தவொரு ஒப்பந்தமும் முன்னெச்சரிக்கை தாக்குதல்களை நடத்துவதற்கான தனது வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் விரும்புவதாக இரண்டாவது வட்டாரம் தெரிவித்தது. ஈரானின் 10,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை வழிநடத்தும் மத்திய கட்டளைத் தளபதியான அட்மிரல் பிராட் கூப்பர் ஒரு காணொளிக் கூட்டத்தில், அமெரிக்கா ஈரானுக்குள் 10,000-க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாகவும், அதன் எல்லைகளுக்கு வெளியே ஈரான் தனது சக்தியை வெளிப்படுத்தும் திறனைக் கட்டுப்படுத்தும் பாதையில் முன்னேறி வருவதாகவும் கூறினார். ஈரானின் மிகப்பெரிய கடற்படைக் கப்பல்களில் 92% அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை ஏவுதல் விகிதங்கள் 90%-க்கும் மேல் குறைந்துவிட்டதாகவும் கூப்பர் கூறினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் கடற்படை உற்பத்தி வசதிகள் மற்றும் கப்பல் கட்டும் தளங்களில் மூன்றில் இரண்டு பங்கை சேதப்படுத்தியுள்ளன அல்லது அழித்துள்ளன என்றும் கூப்பர் கூறினார். இருப்பினும், ஈரானுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்களும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு எதிரான ஈரானிய ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களும் சற்றும் குறையாமல் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈரானின் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டுமானத்தின் மீதான தாக்குதல் உட்பட, அன்றைய தினம் ஈரான் மீது பல புதிய அலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை விவரித்தது. தெஹ்ரானில் ஒரு குடியிருப்புப் பகுதி தாக்கப்பட்டதாகவும், மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் தேடி வருவதாகவும் ஈரானின் அரை அதிகாரப்பூர்வ SNN செய்தி நிறுவனம் தெரிவித்தது. புதிய ஆளில்லா விமானத் தாக்குதல்களை முறியடித்ததாக குவைத்தும் சவுதி அரேபியாவும் தெரிவித்தன. பங்குச் சந்தைகள் ஓரளவு மீண்டன, எண்ணெய் விலைகள் சரிந்தன வொஷிங்டன் ஈரானுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று உலகளாவிய பங்குச் சந்தைகள் ஓரளவு மீண்டன, அதே நேரத்தில் எண்ணெய் விலைகள் சரிந்தன. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைத்து, பணவீக்கத்தைத் தூண்டும் அபாயம் உள்ள ஒரு போருக்கு முடிவு வரும் என்று முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதற்கிடையில், தரைவழித் தாக்குதலுக்கு உத்தரவிட ட்ரம்பிற்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதற்காக, ஆயிரக்கணக்கான வான்வழிப் படைகளை வளைகுடாவிற்கு அனுப்ப பென்டகன் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது, ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் இரண்டு கடற்படைப் பிரிவுகளுடன் கூடுதலாக அமையும். தன் நாட்டுப் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், செங்கடல் முகத்துவாரத்தில் ஈரான் ஒரு புதிய போர்முனையைத் திறக்கக்கூடும் என்று, பெயர் குறிப்பிடப்படாத ஒரு இராணுவ வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஈரானின் அரை-அரசு தஸ்னிம் செய்தி நிறுவனம் புதன்கிழமை கூறியது. https://athavannews.com/2026/1470018- தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
எங்கெங்கு கோவில்கள் இருக்கு என்று தேடித் திரிவதில் பெண்களுக்கு சலிப்பு ஏற்படுவதில்லை . ..... வீட்டுக்கு வீடு வாசற்படி ..........! சைவம் சிவன் , வைஷ்ணவம் திருமால் , சாக்தம் அம்பாள் , காணாபத்யம் விநாயகர் , கௌமாரம் முருகன் , சௌரம் சூரியன். என ஆறு பிரிவுகள் உண்டு ........! தொடருங்கள் . .........!- மத்திய கிழக்கு மோதல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது - ஐ.நா. பொதுச்செயலாளர்
மோதல் கட்டுப்பாட்டை மீறும் மட்டும், நீங்கள் "மிக்சர்" சாப்பிட்டுக் கொண்டு இருந்தீர்களா. முற் கூட்டியே... தடுக்கத் தெரியாத நீங்கள் எல்லாம்... வீணாய்ப் போன சபை. உலகில் எந்தப் போரையும், தடுக்கத் தெரியாத உங்களுக்கு... எதற்கு ஐக்கிய நாடுகள் சபை.- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
அய்..இந்தப் படம் மிகவும் நன்றாக இருக்கிறது..🤭- AI எழுதிய கவிதை -நானும் கிளோடும்
இந்தத் திருத்தாண்டகமும் நல்லாயிருக்கே ........! இதெல்லாம் எனக்குத் தெரிந்தால் கவி அருணாசலத்துக்கும் ரசோதரனுக்கும் தவிர்க்கவியலாத போட்டியாளராய் நான்தான் இருப்பேன் ....... சான்சே இல்லை ......! 😂- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
உங்களின் வாழ்நாளில் அரைவாசியை வீணாக்கி விட்டீர்கள் வசீ ....... கெதியா வாசியுங்கோ .......! 😂- சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும்
சமஷ்டிமுறை தொடர்பான ஒரு நூற்றாண்டு விவாதமும் அதிகாரப்பகிர்வு அலகாக மாகாணங்கள் வந்த கதையும் March 16, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத் தூதுக் குழுவுக்கு தலைமை வகித்த பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அண்மையில் ‘இலங்கையின் சமாதான செயன்முறை; ஒரு உட்பக்க நோக்கு’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டிருந்தார். சமாதானச் செயன்முறையை அந்த நேரத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு நேர்மையுடன் முன்னெடுத்தது என்பதைப் பற்றி எங்களுக்கு தனியான அபிப்பிராயம் இருக்கிறது என்ற போதிலும், அரசாங்கத்தின் தலைமைப் பேச்சாளராக பேராசிரியர் பீரிஸ் பங்கேற்றவர் என்பதால் அவரது நூல் பரவலான கவனத்துக்கு உரியதாக இருக்கிறது. நூலின் முதல் அத்தியாயத்தின் முதற் பந்தியிலேயே அவர் இலங்கையில் அதிகாரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பிலான யோசனையின் தோற்றுவாய் குறித்து தெரிவித்த கருத்து இன்று சகல தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகளும் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையின் அடிப்படையில் நிலையான தீர்வொன்று காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நிற்கும் பின்புலத்தில் சகல சமூகங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. தனது நூலின் ஊடாக ஆராயப்படும் அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம் மற்றும் சமஷ்டிமுறை என்ற தொனிப்பொருட்கள் அவற்றின் தோற்றுவாயை இனத்துவத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளில் கொண்டிருக்கவில்லை என்று எழுதியிருக்கும் பேராசிரியர், இலங்கைக்கு பொருத்தமான ஒரு ஆட்சிமுறைக் கட்டமைப்பாக சமஷ்டிமுறை என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு பின்புலத்திலேயே முன்மொழியப்பட்டது என்பதை நினைவூட்டுகிறார். தொடக்கத்தில் சமஷ்டி முறை யோசனை தமிழர்களின் அபிலாசைகளுடன் அல்ல, கண்டிச் சிங்களவர்களின் அபிலாசைகளுடனேயே தொடர்புபட்டதாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரலெழுப்பி இந்த வருடத்துடன் சரியாக ஒரு நூற்றாண்டு நிறைவடையும் நிலையில் பேராசிரியர் இதைக் குறிப்பிட்டிருப்பது தற்செயலானதாக இருந்தாலும் கூட, அதில் ஒரு பொருத்தப்பாடு இருக்கிறது. கனடாவில் வாழும் மூத்த இலங்கைப் பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் ‘100 வருடங்களுக்கு முன்னர் பண்டா ரநாயக்க விடுத்த சமஷ்டி ஆட்சி முறைக்கான அறைகூவல்’ என்ற தலைப்பில் அண்மையில் ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி ஆட்சிமுறைக்காக குரலெழுப்புவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னதாகவே 1920 களின் முற்பகுதியில் இளம் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவும் அந்த தசாப்தத்தின் பிற்பகுதியில் டொனமூர் ஆணைக்குழுவின் முன்னிலையில் கண்டிச் சிங்களப் பிரதிநிதிகளும் சமஷ்டி முறைக்காக குரல் கொடுத்தனர் என்றும் வடக்கு — கிழக்கு மாகாணம் ஒன்று உட்பட மூன்று மாகாணங்களுடனான சமஷ்டி இலங்கை யோசனையை கண்டிச் சிங்களவர்கள் முன்வைத்தனர் என்றும் அரசியலமைப்புச் சட்ட நிபுணரான கலாநிதி றொஹான் எதிரிசிங்க ‘சமஷ்டி முறை; மாயைகளும் யதார்த்தங்களும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டியே ஜெயராஜ் தனது கட்டுரையை தொடங்கினார். “அந்த யுகத்தின் அரசியல் தலைவர்கள் மத்தியில் தலைசிறந்த அறிவுஜீவியான பண்டாரநாயக்க ஒரு வகையான சமஷ்டிமுறை மாத்திரமே இலங்கையின் ஆட்சிமுறைப் பிரச்சினைக்கு தீர்வாக இருக்கமுடியும் என்று முன்கூட்டியே 1926 ஆம் ஆண்டளவில் வாதாடினார். “கரையோரச் சிங்களவர்களுக்கும் மலைநாட்டுச் சிங்களவர்களுக்குமாக இரு அலகுகளையும் தமிழர்களுக்காக வடக்கு — கிழக்கில் ஒரு அலகையும் கொண்ட ஒரு சமஷ்டி ஏற்பாட்டை 1927 ஆம் ஆண்டில் கண்டிச் சிங்களவர்கள் முன்மொழிந்தனர். “சிங்களவர்களினால் முன்மொழியப்பட்டபோது சமஷ்டிமுறையை இலங்கைத் தமிழர்கள் நிராகரித்தார்கள். தங்களுக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள் வடக்கு — கிழக்கு தமிழர்களுக்காக சமஷ்டிமுறையை வழங்குமாறு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சகல சாத்தியப்பாடுகளும் அன்று இருந்தன. “பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்தில் இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர்கள் சமஷ்டி முறையையோ அல்லது தனிநாட்டையோ கூட கோரவில்லை. பதிலாக அந்தக் கோரிக்கைகளை தமிழ்த் தலைவர்கள் பிரிட்டிஷார் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் மாத்திரமே முன்வைத்தனர்” என்று அவர் எழுதியிருந்தார். நூறு வருடங்களுக்கு முன்னர் ‘மோர்ணிங் லீடர்’ பத்திரிகைக்கு ஆறு கடிதங்களை எழுதிய பண்டாரநாயக்க இலங்கைக்கு சமஷ்டி ஆட்சிமுறையே பொருத்தமானது என்று தமிழர்களை நம்பவைப்பதற்கு ‘யாழ்ப்பாண விரிவுரையை’ நிகழ்த்த 1926 ஜூலை 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். அன்றைய தினம் ‘எமது அரசியல் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு சமஷ்டி முறையே’ என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் இனவேறுபாடுகளைக் கையாளுவதற்கும் பிராந்திய சுயாட்சியே சீரான வழி என்று வாதிட்டார். சமஷ்டி முறைக்காக குரல்கொடுக்க தன்னுடன் இணைந்து கொள்ளுமாறு அவர் விடுத்த வேண்டுகோளை தமிழர்கள் நிராகரித்தார்கள். யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் (பிறகு அது யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது) சமஷ்டிமுறை யோசனையை எதிர்த்தது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரகாசமான கல்வியைப் பெற்றதன் பின்னர் 1925 ஆம் ஆண்டில் நாடுதிரும்பிய பண்டாரநாயக்க இலங்கை தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்த அதேவேளை, அரசியல் சுயாட்சி இலக்கை அடைவதற்காக முற்போக்கு தேசியக் கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியின் யாப்பு பண்டாரநாயக்கவின் மனதில் இருந்த சமஷ்டி ஆட்சிமுறை பற்றிய திட்டவரைவு ஒன்றை உள்ளடக்கியதாக இருந்தது. கரையோரச் சிங்களவர்களையும் மலைநாட்டுச் சிங்களவரையும் தமிழர்களையும் நாட்டின் பிரதான குழுக்களாகக் குறிப்பிட்ட அந்த யாப்பு ஒவ்வொன்றும் முற்றுமுழுதான சுயாட்சியைக் கொண்ட ஒன்பது மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பண்டாரநாயக்கவின் யோசனையை அவரின் நெருங்கிய நண்பரான கல்விமான் ஜேம்ஸ் ரி. இரத்தினத்தை தவிர, முற்போக்கு தேசிய கட்சியின் சகல உறுப்பினர்களும் ஆதரித்தனர். சமஷ்டிமுறை தொடர்பிலான யோசனை அந்த காலகட்டத்தில் இனவாத உணர்வுகளையோ அல்லது சிங்களவர்களிடமிருந்து எதிர்ப்பையோ கிளப்பவில்லை. அந்த யோசனைக்கு கடுமையான எதிர்ப்பு ஒரு சிங்களவரிடமிருந்து அல்ல, தமிழரிடமிருந்தே வந்தது என்று ஜெயராஜ் எழுதினார். இது இவ்வாறிருக்க, காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கையில் பிரபல்யமான பிரிட்டிஷ் சிவில்சேவை அதிகாரியாக இருந்த லெனார்ட் வூல்வ் 1930 களின் பிற்பகுதியில் இலங்கைக்கு சுவிட்சர்லாந்தின் கன்ரோன் முறையே அதிபொருத்தமானது என்ற கருத்தை முன்வைத்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 1938 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் லெனார்ட் வூல்வ் கரையோரச் சிங்கள மாகாணம், கண்டியச் சிங்கள மாகாணம், தமிழ் வடக்கு மாகாணம், தமிழ் கிழக்கு மாகாணம் என்று நான்கு கன்ரோன்களையும் மலைநாட்டில் இந்திய வம்சாவளி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தேயிலைத் தோட்டப்பகுதிகளை உள்ளடக்கி ஐந்தாவது கன்ரோன் ஒன்றையும் உருவாக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் தேசிய நலன்களைப் பேணுவதற்காக அவர்களுக்கென்று தனியொரு கன்ரோனை பரிந்துரைத்த ஒருவர் என்றால் நாமறிந்தவரை அது லெனார்ட் வூல்வ் மாத்திரமேயாவார். கன்ரோன் முறையை அறிமுகப்படுத்தக்கூடிய அளவுக்கு இலங்கை பெரிய நாடு அல்ல என்ற வாதம் முன்வைக்கப்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த அவர் இலங்கையின் பரப்பளவு சுவிட்சர்லாந்தின் பரப்பளவை விடவும் 10 ஆயிரம் சதுரமைல்கள் அதிகம் என்று சுட்டிக் காட்டியதுடன் இனத்துவ அடிப்படையிலான சனத்தொகையைப் பொறுத்தவரை சுவிட்சர்லாந்தில் ஜேர்மன் மொழி பேசுபவர்களை இலங்கையில் சிங்களவர்களுடனும் பிரெஞ்சு மொழி பேசுபவர்களை தமிழர்களுடனும் இத்தாலி மொழி பேசுபவர்களை முஸ்லிம்களுடனும் ஒப்பிட்டார். இவை ஒரு காலனித்துவ நிருவாகியாக இருந்த முற்போக்குவாதியான ஆங்கிலேயர் ஒருவர் ஏழு ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து அதன் மக்களை நெருக்கமாக அறிந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களின் விளைவாக முன்வைத்த யோசனைகளாகும். பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து அன்றைய தமிழ்த் தலைவர்கள் சமஷ்டிமுறைக்காக குரல்கொடுத்துப் போராடியிருந்தால் இலங்கையின் அரசியல் வரலாறு நிச்சயமாக வேறுபட்டதாக இருந்திருக்கும். 1931 ஆம் ஆண்டில் டொனமூர் அரசியலமைப்பின் மூலமாக சர்வஜன வாக்குரிமையும் பிராந்திய அடிப்படையிலான பிரதிநிதித்துவமும் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பண்டாரநாயக்கவின் அரசியல் நோக்கில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளை அடுத்தவாரம் பார்ப்போம்.(தொடரும்) https://arangamnews.com/?p=12739- வட மாகாண ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
வட மாகாண ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் மாகாண கல்வித் திணைக்களம் தமது இடமாற்றக் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்யாது, மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்து வட மாகாண ஆசிரியர்கள் இன்றையதினம் (26) போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஒன்றுகூடிய ஆசிரியர்கள், பல்வேறு பதாதைகளைத் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் பணிபுரிந்தோர், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் குடும்பச் சூழல் காரணமாகத் தூர இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் எனப் பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். தமது இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாகாண கல்வித் திணைக்களத்திற்கு மேன்முறையீடு செய்தும், அந்த விண்ணப்பங்களை மாகாண கல்வித் திணைக்களம் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கவில்லை என ஆசிரியர்கள் இதன்போது குற்றம் சுமத்தினர். இதனைத் தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் உள்ளிட்ட பிரதிநிதிகள், வட மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீ என்பவரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தீபன் திலீசன், "மாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக எந்தவொரு மேன்முறையீடும் தமக்கு அனுப்பப்படவில்லை என்றும், அவ்வாறு அனுப்பப்பட்டால் மட்டுமே தம்மால் அவற்றைப்பரிசீலிக்க முடியும் என்றும் செயலாளர் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டார். பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் பதிலைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தமது போராட்டத்தை வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகத் தொடர்ந்தனர். தமது மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டுத் தீர்வு வழங்கப்படும் வரை, தற்போது பணியாற்றும் பாடசாலைகளிலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறில்லாத பட்சத்தில் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்தனர். https://adaderanatamil.lk/news/cmn73j6rd0002356p9ed32igh- மாகாண சபை தேர்தல் நடக்கும்
மாகாண சபை தேர்தல் நடக்கும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து, யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி கூடி ஆராய்ந்துள்ளது. இந்த ஆராய்வானது இவ்வருடத்திற்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளதாகத் தெரிகிறது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னர் தேர்தலுக்கான திகதி மற்றும் எந்த முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அரசு வெளியிடும் என்றும் தகவல் கசிந்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் பொருட்டு, விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைக்க நாடாளுமன்ற விசேட செயற்குழு ஒன்றை நியமிப்பதற்கான யோசனையை ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ 2026.01.06 அன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இந்த யோசனையின் அடிப்படையில் ஒரு குழு நியமிக்கப்பட்டிருந்தது. மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறைப்படி நடத்துவதா என்பது தொடர்பில் ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்க நியமிக்கப்பட்டுள்ள 12 பேரில், ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர்களான சுனில் வட்டகல, முனீர் முழப்பர், அருண் ஹேமசந்திரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுணராச்சி, சமன்மலி குணசிங்க, தர்மப்பிரிய விஜேசிங்க, சந்தன சூரியாராச்சி ஆகியோர் அடங்குகின்றனர். எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். கடந்த 8 வருடங்களாக மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இன்றி இயங்கி வருகின்றன. எல்லை நிர்ணய முறைமை இதுவரையில் நிறைவு செய்யப்படாத காரணத்தால், 1988ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்தம் செய்து, தற்போதுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமைக்கமைய தொகுதி அடிப்படையில் தேர்தலை நடத்துவது சிக்கலாகியுள்ளது. தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டத்தின் குறைகளை அவதானித்து திருத்தங்களை முன்வைக்க 2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழு, 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணயம் செய்து, அதன் பின்னர் சட்ட வரைவைத் தயாரிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. அதேநேரம், அதுவரையில் விகிதாசாரத் தேர்தல் முறைமையில் தேர்தலை நடத்தலாம் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், இன்னமும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதே தற்போதைய பிரச்சினையாகும். நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கான தீர்மானத்திற்கு விசேட செயற்குழு வருவது, அரசியல் தரப்பினருக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம். அத்துடன், மாகாண சபைத் தேர்தலில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களும் வாக்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக அறியமுடிகிறது. நீண்டகாலக் கோரிக்கைகளான தேர்தல் முறைமை மாற்றம், புலம்பெயர் இலங்கையர்களுக்கான வாக்குரிமை தொடர்பான பரிந்துரைகள் இதற்கான சூழலை உருவாக்கியுள்ளன. இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாக அமையலாம். இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் ஜூன் மாதத்திற்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன், அதற்கான முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை இவ்வருடத்துடன் நிறைவடைகின்றது. இந்தச் சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் நல்லாட்சி உள்ளிட்ட 27 நிபந்தனைகளை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும். அத்துடன், இவ்வருட செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்தொடரை அரசு எதிர்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தொடரில் இலங்கை அரசு மீது தேவையற்ற அழுத்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கு முன்னதாகவே மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழுக்கள் அமைப்பதும், ஆராய்வதும், அறிக்கை சமர்ப்பிப்பதும் பின்னர் அவை கைவிடப்படுவதும் நமது நாட்டில் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. இதனால் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் காணப்பட்டாலும், இந்த அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக மாகாண சபைத் தேர்தல் இவ்வருடத்திலேனும் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் நிர்வாகத்தை முன்னெடுப்பதாலும், மக்கள் ஆதரவு குறைந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும், தேர்தலுக்கான தற்போதைய நகர்வுகள் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன. சுயநிர்ணயக் கோரிக்கையுடன் தமிழ் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக இந்தியா இதில் தலையிட்டு, 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபைத் தீர்வை உருவாக்கியது. அவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாண சபைகளில் வடக்கு மற்றும் கிழக்கு இணைந்த சபை காணப்பட்டாலும், ஏனைய மாகாணங்கள் தனித்தனியாக இயங்கி வந்தன. வடக்கு மற்றும் கிழக்கு தற்காலிக இணைப்பின் அடிப்படையில் ஒரே மாகாணமாக 1988இல் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. 1990இல் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துடன், வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ‘தமிழீழப் பிரகடனத்தை' மேற்கொண்டுவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் ஆளுநர்களின் அதிகாரத்திலேயே இம் மாகாண சபை இருந்து வந்தது. 2006ஆம் ஆண்டு ஜே.வி.பி (JVP) உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. மாகாண சபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்துவதற்காக நல்லாட்சி அரசாங்க காலத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது, தேர்தலை நடத்த முடியாத முட்டுக்கட்டை நிலையை ஏற்படுத்தியது. 2012ஆம் ஆண்டில் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. 2013இல் மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், 2014இல் ஊவா மாகாணத்திலும் தேர்தல்கள் இடம்பெற்றன. இப்போது பழைய முறையிலா அல்லது புதிய கலப்புத் தேர்தல் முறையிலா தேர்தல் நடைபெறும் என்பது தெரியாமலேயே காலம் கடக்கிறது. வட-கிழக்குத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறைமையின் ஊடாகத் தமிழர்கள் பெற்ற பயனை விடவும், ஏனைய மாகாணங்களே அதிக பயனை அடைந்துள்ளன. அரசியல் உரிமைகளை அனுபவிக்க அரசியல் கட்டமைப்புகள் அவசியமானவை. அந்த வகையில் கடந்த 8 வருடங்களாகத் தேர்தல் நடைபெறவில்லை என்ற கவலை இவ்வருடத்துடன் நீங்கும் என நம்புவோம். எனினும், ஈரானை மையப்படுத்தி மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் முடிவுக்கு வருவதும் தேர்தல் நடைபெறுவதற்குச் சாதகமாக அமைய வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாகாண-சபை-தேர்தல்-நடக்கும்/91-374400- அந்தரத்தில் தொங்குகிறது இலங்கை - மே மாதம் நடுப்பகுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்
அந்தரத்தில் தொங்குகிறது இலங்கை மே மாதம் நடுப்பகுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்: இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதி எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருளைத் தட்டுப்பாடுகளின்றி விநியோகிக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். எரிபொருள் கையிருப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பொதுமக்களின் கவலைகளுக்கு மத்தியில், மே மாதப் பாதி வரை போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31-ஆம் திகதி வரை எரிபொருள் கப்பல்கள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் 6-ஆம் திகதி முதல் 29-ஆம் திகதி வரை மேலதிக விநியோகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான அளவை விட 10% க்கும் அதிகமான மேலதிக எரிபொருளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்பதிவு செய்துள்ளது" எனக் குறிப்பிட்டார். இதேவேளை, சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளைப் பதுக்கி வைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி, சில நிலையங்கள் ஆறு மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் சுமார் 18 எரிபொருள் தாங்கிகளைக் கோரியுள்ளன. இவ்வாறான பதுக்கல் நடவடிக்கைகள் சாதாரண வாகன ஓட்டுநர்களுக்கு எரிபொருள் கிடைப்பதைக் கடினமாக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. இத்தகைய செயற்பாடுகளை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முறையாகக் கண்காணிக்கிறதா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் கூறினாலும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் நீண்ட வரிசைகள், தட்டுப்பாடு குறித்த பயத்தினால் மக்கள் எரிபொருளைச் சேமிக்கத் தொடங்கியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இது கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழிகள் மீதான நம்பிக்கையைக் குறைப்பதாக அமைந்துள்ளது. வரவிருக்கும் மாதங்களை எதிர்கொள்ள இலங்கை உண்மையிலேயே தயாராக உள்ளதா அல்லது மறைமுகமான எரிபொருள் நெருக்கடி ஒன்று உருவாகிறதா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளதாக விமர்சகர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/அந்தரத்தில்-தொங்குகிறது-இலங்கை/175-374574 - போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.