All Activity
- Past hour
-
இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
நம்ம குருநகர் மண்ணின் கதை ... இசைஞானி இளையராஜாவின் இசை.. ❤️
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏற்கனவே குழம்பி போயுள்ளேன், மாயாயாலம் நடக்கும் என மொட்டையாக சொல்லிவிட்டு பையன் போய்விட்டாரே, எந்த மாயாலாம்? என சரியாக சொல்லாமல் போய்விட்டார் என, சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாதுடன் 95 ஓட்டங்களுக்கு இலங்கை செய்த மாயாலாயாலமா? அல்லது நியுசிலாந்தினை வெல்வதனை மாயாயாலம் என்பதா என.
-
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
புத்தனுக்கு. பயந்து போகவில்லை. மன்னிக்கவும். புத்தருக்கு. புத்தருக்குபயந்து. போகவில்லை.
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
உலகில் சில விடயங்களை நம்ப மாட்டோம் என அடம் பிடிச்சாலும் இறுதியில் நம்ப வேண்டிய நிலைக்கு காலம் எங்களை அழைத்து சென்றுவிடுகிறது
- Today
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
நல்லதொரு பகிர்வு விசுகர். இந்தக்காலத்து குழந்தைகளுக்கு அறிவு அதிகம். எனக்கும் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. ஆனால், ஏதோரு ஒரு ரூபத்தில் மரணத்தின் பின்னரும் வாழ்க்கை தொடரும் என நம்புகின்றேன்.
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
நானும் பேரப்பிள்ளை சாம்ராஜ்யத்தில் பிரவேசித்து 9 மாதங்களாகின்றது. உங்கள் பதிவை உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள முடிகின்றது . எனக்கு இரு புதல்விகள் மாத்திரம் என்பதால் பேரன் என்பது கூடுதல் விசேடம் . எனது நண்பன் ஒருவனின் பேரனுக்கு ஆறு வயது . மியூசிக் நோட்ஸுகளை செவிமடுத்து , குறைந்த நேரத்தில் கூடிய ம்யூசிக் ஆக்கியோரை ( பீத்தோவன் , எல்விஸ் etc ) அடையாளம் காண்பதில் கின்னஸ் சாதனை அண்மையில் ஏற்படுத்தியிருக்கிறார் .
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
யாவும். கற்பனை. என்று. ஏன். கீழே. போடவில்லை. விசுகர்.
- Yesterday
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
மிகவும் நன்றாக இருக்கின்றது, விசுகு ஐயா.....................👍. ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனதிலும் ஆயிரம் ஆயிரம் வருடங்களாக வாழ்ந்த நம் முன்னோர்களின் அனுபவங்களும், அறிவுகளும் தங்கி இருக்கின்றன என்று சொல்பவர்கள் உண்டு. எழுத்தாளர் ஜெயமோகன் இதை அடிக்கடி குறிப்பிடுவார். ஒரு தலைமுறையின் தாய்மொழி மாறிப் போவதால் உண்டாகும் பாதகமான விளைவுகளை விளக்க இந்தக் கூற்றை உபயோகிப்பவர்களும் உண்டு. உங்கள் பேரனின் செய்கைகளும், கதைகளும் அந்த அறுபடாத நீண்ட தொடர்பையே சொல்லுகின்றன என்று நினைக்கின்றேன்................❤️.
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
நன்றி அல்வாயன். எங்களுகே புரியவில்லை😂
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
ம்ம்ம்… அதொண்டுதான் இல்லாத குறை😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@ வேலை செய்யுதண்ணை… இந்த கணிப்புகள் தான் ஒரு மண்ணாங்கட்டியும் செய்யுதில்லை😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிருபன் 2024 இல் நடாத்திய போட்டிகள் இரண்டிலும் 3 வாதகவும் 2025 ல் நடைபெற்ற போட்டிகள் இரண்டிலும் 5 வதாக வந்தேன். இப்போட்டிகளில் ஆரம்பத்தில் பின்னுக்கு இருந்தாலும் குண்டக்க மண்டக்க கேள்விகளில் பெற்ற புள்ளிகளினால்தான் முன்னுக்கு வந்தேன். ஆனால் இம்முறை குண்டக்க மண்டக்க கேள்விகளில் எனக்கு பெரிதாக புள்ளிகள் கிடைக்க வாய்ப்பில்லை. போட்டி முடிவில் நான் பின்னுக்கு போக சந்தர்ப்பம் இருக்கிறது.
- அறிவித்தல்: யாழ் இணையம் 28 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்
-
ஈழப்பிரியன் started following யாழ் உறவோசை
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
நமக்கு 6 பேர். எப்படி இருக்கும்? என்னது உங்களுக்கும் பேரன் பேத்தியா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அண்ணா, கொழும்பில் நாளைக்கு நல்ல வெயில் என்று காலநிலை சொல்லுகின்றது............... ஆனால் நாளைக்கு அபிராமி பட்டர் கதை மீண்டும் நடக்கப் போகின்றது. 'ஆதிபராசக்தி' படத்தில் வந்தது போலவே................🤣. ரஜனி சினிமாவில் ஆன்மீகத்தை கலந்தது போல நாங்கள் இங்கே கலந்து கொண்டிருக்கின்றோம்...............😜.
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
பேரன்மீது பேரன்பேரன்பு கொண்டால் ...இப்படி அன்பான ...அருமையான பேரன்தான்..கிடைப்பான் ...அது ஆண்டவன் தந்த கொடை...வாழ்க
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பரவாயில்லை.நான் அரை இறுதிக்கு இங்கிலாந்து போகும் என கணித்திருந்தேன். இத்துடன் எத்தனை தடவை சொல்லிச் சொல்லி அழுதாச்சு. தம்பி ஜக்கம்மா தெலுங்கராம். என்ன கோசான் நீண்ட நாட்களின் பின் அற் சைன் வேலை செய்யுது போல. @ரசோதரன் நாளை மழை பெய்யுமா? முதலமைச்சர் @கந்தப்பு க்கும் சுமைதாங்கி @goshan_che க்கும் வாழ்த்துக்கள்.
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
கதை மூலம் என்னமோ கதைக்கிறியள்....ஒன்றுமாப் புரியவில்லை ...எழுத்துமுறை நல்லாயிருக்கு...இருவருக்கும் வாழ்த்துக்கள்
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
நம்ம நிலைமையும் உப்பிடிதான் அண்ணை. நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
உண்மையில் உங்கள் ஆண்டு மாணவர்களோடு ஒப்பிடும் போது, ஏதுவும் நல்லது நடக்காமல் இருந்தாலுமே நாம் எங்காவது போய் ஒரு மைல் கல்லுக்காவது நன்றி சொல்ல வேண்டும். எனது அக்கா ஒருவருக்கும் எனக்கும் 8 வயது வித்தியாசம். ஒரே விடயத்தை நான் படித்து முடிக்க ஒரு வருடம் முன்புதான் அவர் இலங்கையில் முடித்திருந்தார் 😂. உள்ளே போகவே மூணு வருச வெயிட்டிங். பின் ஸ்டிரைக் லொட்டு, லொசுக்கு எண்டு பாதி வாழ்க்கை கம்பசிலேயே கழிந்து விட்டது. நல்லவேளையாக ஐடி, அக்கவுண்டன்சி போன்ற படிப்புகளி வெளிவாரியாக தொடர்ந்ததால் தகமையை வளர்த்து கொண்டார். நானும் அந்த காலத்தில் மினி சினிமா போவதுண்டு. கெஞ்சி கூத்தாடினால் உள்ளே விடுவார்கள். அதுவும் சண்டை படம் மட்டும்தான். கொமாண்டோ, பிளட்டூன், ரம்போ, இப்படி பல. நீங்கள் சொல்லுவது போல் தெரிவுகள் ஓரளவு சரியாகத்தான் அமைகிறன, 2ம், 3ம் முயற்சியில் இங்கிலாந்து போல் தட்டு தடுமாறியாவது செமி பைனல் வந்து விடுகிறேன்😂.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
🤣.............. நாளைக்கு விளையாடுகின்ற இரண்டு அணிகளில் ஒன்று வெல்வதை விட, இதில் விளையாடாத ஆப்கான் வென்றால், அது மாயஜாலம், அப்படியே நான் உங்கள் இருவருக்கும் சீடனாக வந்து விடுவேன்................. ஆகக் குறைந்தது கொழும்பில் முழுநாளும் அடைமழை பெய்ய வைத்தாலும் மிக்க சந்தோசமே...............😜.
-
மறுபிறவி அல்லது அடுத்த ஜென்மம்....????
எனது பேரனின் சில செய்கைகள் அல்லது பேச்சுக்கள் எனக்கு அதிசயமாக ஆச்சரியமாக இருக்கும். ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நின்று விட்டு வெயில் அதிகமாக இருந்ததால் வீட்டில் வரவேற்பு அறையில் இருந்தேன். அவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் காணொளி ஒன்றை பார்த்துக் கொண்டு இருந்தான். நான் சோர்ந்து போய் இருந்தது அவனுக்கு தெரிந்து இருக்கவேண்டும். என்னைப் பார்த்து தாத்தா களைக்குதா? ஏதாவது வருத்தமா?? நித்திரை கொள்ளபோகிறீர்களா??? என்று இந்த மூன்றையும் ஒரே வசனத்தில் கேட்டான். நான் அதிர்ந்து போனேன். ஏனெனில் அவனுக்கு அப்போது இரண்டு வயது தான். அவனுக்கு பிறந்த நாள் வந்தது. பல கடைகளுக்கும் சென்று பார்த்தபோதும் அத்தனை பொருட்களும் அவனது அறையில் கண்டவையாகவே இருந்ததால் ஒன்றையும் வாங்கவில்லை. பிறந்த நாள் அன்று உனது உண்டியலை கொண்டு வா என்று பத்து ஈரோ தாள்களில் பத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக உண்டியலுக்குள் போட சொல்லி கொடுத்துக்கொண்டே இருந்தேன். ஐந்தாவது தாளை உண்டியலுக்குள் போட்டவன் என்னை பார்த்து கேட்ட கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உங்களுக்கு வேற காசு பொக்கற்றில் இருக்கா தாத்தா என்று கேட்டான். ஓம் இருக்கு என்றதும் அப்படியானால் மிச்சத்தையும் போடுவோம் என்றான். இதை சொல்லும் போது அவனுக்கு மூன்று வயது தான். எனது கடைக்கு பக்கத்தில் எனது கார் நிற்பாட்டும் இடம் நிலத்தில் கீழே உள்ளது. அதற்கு செல்லும் கதவு திறந்து மேலே சென்று தான் உள்ளே போகணும். ஒரு நாள் அவனுடன் காரை எடுக்க சென்ற போது அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் கதவு மேலே செல்வதற்கு முன் தலையை குனிந்து செல்ல முயன்றேன். எனது கையை பிடித்து பின்னுக்கு இழுத்தபடி சொன்னான் நீங்க தலையை குனியக்கூடாது தாத்தா என்று. எனக்கு தூக்கி வாரி போட்டது. இதை சொல்லும் போது அவனுக்கு மூன்றரை வயது தான். ஒரு நாள் மத்தியானம் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தேன். தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த எனது மனைவி பேரனிடம் தாத்தாவை எழுப்பி விடு எனக்கு அவரது உதவி தேவை என்று சொல்வது எனக்கு கேட்டது. அதற்கு அவன் சொன்ன பதில் என்னை கண் கலங்க வைத்தது. தாத்தா கனக்க நல்லது செய்து விட்டார். இனி அவரை தொந்தரவு செய்யாதீர்கள். அதைவிட முக்கியமானது இனி ஏதாவது தேவைப்பட்டால் என்னிடம் கேளுங்கள் என்றான். இந்த கடைசி வரிகளை என் பிள்ளைகள் கூட இதுவரை சொன்னதில்லை. மனைவி பேரனிடம் வந்து உதவி செய்ய சொல்லி கேட்ட அத்தனை உதவிகளையும் அவனே செய்தும் கொடுத்து விட்டு வந்தான். இதை சொல்லும் போது அவனுக்கு நான்கு வயது தான். எனக்கு இவை மிகவும் அதிசயமாக இருக்கிறது. எனது அம்மாவுக்கு ஐந்து பெண்பிள்ளைகளின் பின்னர் தான் நான் பிறந்தேன். அதனால் என்மீது அதீத பாசம் உண்டு அவருக்கு. எனது மனைவி சொல்வார். எனது தாயார் இறந்த அடுத்த கிழமை எனது மகள் தனது வயிற்றில் ஒரு அசைவு இருப்பதை உணர்ந்ததாக சொன்னாளாம். (எனக்கு மறு பிறப்பு மற்றும் அடுத்த பிறவியில் நம்பிக்கை இல்லை.)
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை நியுசிலாந்து போட்டியில் என்ன நடக்கும் என கேட்டதற்கு பையன் குறி சொல்பவர் போல சூசகமாக மாஜாலாம் நடக்கும் என குறி சொல்கிறாரே?🤣
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
🤣........... இரண்டு மாதங்களே இப்படி என்றல் இரண்டரை வருடங்கள் என்றால் எப்படியிருக்கும் என்கின்றீர்கள்.................... 87ம் ஆண்டில் ஏ லெவல் எடுத்து பல்கலை அனுமதி கிடைத்தது. இலங்கை அரசு ஜேவிபி பிரச்சனையை தற்காலிகமாக இல்லாமல் ஆக்கி தெற்குப் பல்கலைகளை மீண்டும் திறக்கும் போது 90ம் ஆண்டு ஆகிவிட்டது......... அவ்வளவு நாட்களும் ஊரிலேயே இருந்தேன். நண்பர்கள் கனடா, லண்டன், ஜேர்மனி, கப்பல் என்று போய்க் கொண்டேயிருந்தார்கள். கடைசி ஆளாக ஓரிருவர் நின்று கொண்டிருந்தோம். வழியே இல்லை என்று தான் நினைத்தேன். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம், மீண்டும் இலங்கை இராணுவம், இயக்கங்கள் என்று வாழ்க்கை ஓட்டமும் நடையுமாக போய்க் கொண்டிருந்தது. மினி சினிமாவில் நிறையப் படங்கள் பார்த்தேன். அதற்காகவே ஒரு மினி சினிமாவில் வேலை செய்தேன்................😜. ஊரில் உள்ள சில வாசிகசாலைகளின் சாவிகள் கூட என்னிடம் இருந்தன..................🤣. 90ம் ஆண்டுக்கு பின் நடந்தது அதை விட விசித்திரம். முன்னைய நாட்களில் எங்கள் ஊரவர்கள் கடல் கடந்து கோடியாக்கரைக்கு போய் படம் பார்ப்பார்கள் என்று சொல்லுவார்கள். என் அம்மா கூட அவரின் சிறு வயதில் தானே படம் பார்க்க கோடியாக்கரைக்கு வள்ளத்தில் போனதாகச் சொல்லியிருக்கின்றார்...............🫢. பல்கலைக்கு போய் சில நாட்களிலேயே இந்தியாவில் இருந்து ஒரு கடிதம்.......... இந்தியாவில் இருந்து நமக்கு யாரடா கடிதம் போடுகின்றது என்று பார்த்தால்................ படம் பார்க்க இந்தியா போகின்ற கோஷ்டி குடும்பமாக ஊரையே காலி செய்து விட்டு, தமிழ்நாட்டுக்கு போய்ச் சேர்ந்து விட்டார்கள்....................... அதை ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்கள். செய்தியை புறாவின் காலில் கட்டி அனுப்பாமல் விட்டார்களே..............🤣. ஆனாலும் களத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் நடப்பது போலவே, என்னுடைய தெரிவுகள் அப்பப்ப சரியாக வேலை செய்தன.............. அம்மா செய்த புண்ணியங்கள் போல................ இங்கு அமெரிக்காவில் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். வயதானவர். இந்தியர். நான் கோவிலுக்கு போவதில்லை என்பதையும், என் மனைவி எப்போதும் கோவிலுக்கு போவதையும் அவதானித்து இருந்தார். ஏன் போவதில்லை என்று கேட்டார். பெரிதாக நம்பிக்கை இல்லை என்றேன். நீ அங்கே கும்பிட வேண்டாம், ஆனால் நன்றி சொல்ல வேண்டும், யாருக்காவது நீ நன்றி சொல்ல வேண்டும்.................. இப்படி ஒரு வாழ்க்கை எத்தனையோ கோடி மக்களுக்கு இந்த உலகில் கிடைப்பதில்லை என்றார்................... போகும் போதெல்லாம் 'மிக்க நன்றி கடவுளே.............' என்று சொல்லுகின்றேன்.............
-
மூன்று கவிதைகள் / 26"
மூன்று கவிதைகள் / 26" புகைப்படக் கவிதை' பனி பொழியும் மாலை வேளையிலே பணி முடித்து எட்டிப் பார்க்கிறேன்! பகலோன் கதிரும் ஓய்ந்து விட்டது பஞ்சுபஞ்சாய் வான் கொட்டித் தீர்க்குது!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................... "மின்னலாய் ஒரு பின்னல்" [வண்ணம், புன்னகை, கன்னம் & கண்ணீர்] வண்ணம் கொண்ட அழகு ஆடையிலே புன்னகை பொழியும் அணங்கே! கன்னம் சிவந்தது யாராலோ? கண்ணீர் ததும்பும் ஆனந்தம் இதுவோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................ 'நீயின்றி நானில்லை கண்ணே' நீயின்றி நானில்லை கண்ணே- உன் நிழலின்றி வாழ்வு ஏது மண்ணில்? மூச்சின்றி பிழைப்பில்லை பெண்ணே - என் கிழத்தியின்றி இயக்கம் எங்கே என்னில்? உயிரின்றி உடலில்லை நுண்ணிடையே - தேன் மொழியின்றி இன்பம் யாது உலகில்? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் துளி/DROP: 2055 ["மூன்று கவிதைகள் / 26" https://www.facebook.com/groups/978753388866632/posts/33980369108278301/?