Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. நானா, உங்களுக்குத்தான் எத்தனை பெண்டாட்டி என்ற பிரச்சனையே இல்லையே! போற போற இடங்களிலே கட்டீட்டு, பன்றி குட்டி போட்ட மாதிரி போட்டுக்கொண்டே இருக்கவேண்டியது!
  3. எண்ணை விலை ஏற... மற்றைய அனைத்துப் பொருட்களும் விலை ஏறும். இப்போதைய நிலையில்... மக்களுக்கு இதனை தாங்கும் சக்தி இல்லை என்றே கூற வேண்டும். விரைவில்... மின்சாரம், எரிவாயுவின் விலையும் இரட்டிப்பு ஆகும் என்று கூறுகின்றார்கள். சண்டை பிடிக்கின்றவர்கள்தான்... இந்த விலையேற்றத்துக்கும், தமது பணத்தை கொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால்தான்... மூடிக் கொண்டு இருப்பார்கள்.. யாரோ... சண்டை பிடிக்க... அதற்கு சம்பந்தம் இல்லாதவன், விலை கொடுக்க வேண்டி உள்ளது.
  4. இந்தியா... எவனுக்கும் உண்மையாக இருந்தது இல்லை. அவன் எமக்கு செய்த, இப்போதும் செய்து கொண்டு இருக்கும் துரோகங்கள்.... எண்ணில் அடங்காதவை. வெட்கம் கெட்டவர்கள்.
  5. ஏற்கனவே இன்னொருவருடன் நிச்சயமான உங்களின் விஜி அண்ணி எதற்காக சீமானுடன் மாலையை மாற்றி திருமண நிகர் உறவிற்கு சம்மதித்தார்!
  6. வடமாகாண முதலமைச்சரரும், தமிழ்நாட்டு முதலமைச்ரும்.... குடும்பத்தை விட்டு, தமிழர்களிற்காக வாழ்வை அர்பணிப்போர். Thurai Bagawathsing
  7. இந்தியாவுக்கு விருந்தாளிகளாக போனவர்களை இக்கட்டான தருணத்தில் வெளியேற்றி நல்லபிள்ளை பட்டம் எடுக்க அமெரிக்காவிடமும் போட்டுக் கொடுத்துள்ளது. முதுகில் குத்த இந்தியாவுக்கு சொல்லியா கொடுக்கணும். இதனாலேயே இந்திய கப்பல் தீப்பற்றி எரிகிறது. ஈரானின் அறிக்கையிலும் ருசியா சீனா பாகிஸ்தான் கப்பல்கள் மட்டுமே ஜலசந்தி ஊடாக பயணிக்கலாம் என்கிறார்கள். ஈரானிய கப்பல்களை காட்டிக் கொடுத்து தனது விசுவாசத்தைக் காட்டிவிட்டது. அமெரிக்கா இலங்கை கடலில் வைத்து தாக்கி அழித்துவிட்டு சர்வதேச கடலில் வைத்து அழித்ததாக சொல்கிறது.
  8. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  9. 🛑" குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE 🛑 குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர். இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. UPDATE 02 இன்றையதினம் யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் இருவர் பலியாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில் “இன்றையதினம் குருநகர் இறங்குதுறையில் இருந்து படகு ஒன்றில் பலர் பாலைதீவு நோக்கி சென்றனர். இதன்போது குறித்த படகு தண்ணீரில் கவிழிந்துள்ளது. இந்நிலையில் 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன ஏனையோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது UPDATE 03 யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குருநகர் பகுதியை சேர்ந்த எம்.ஜோசப் (வயது 80) மற்றும் பிரான்ஸிஸ் (வயது 57) ஆகியோரின் சடலமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேவேளை 13 வயது சிறுவன், 4 பெண்கள் 8 ஆண்கள் என 13 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு ஆணும், இரு பெண்களும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். UPDATE 04 யாழ்ப்பாணத்தில் கடலில் காணாமல் போன மீனவர்கள் தேடும் பணியில் களமிறங்கிய சுழியோடிகள்! யாழில் கடலில் காணாமல்போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், இன்றையதினம் பாலைதீவு திருவிழாவுக்கு படகு ஒன்றில் பலர் சென்ற நிலையில் குறித்த படகு கவிழிந்துள்ளது. இந்நிலையில் 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர். படகில் பயணித்தோரின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், கடலில் காணாமல் போனோர் இன்னும் இருக்கலாம் என்ற ரீதியில் சுழியோடிகள் மூலம் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://athavannews.com/2026/1467362
  10. Today
  11. kalyanammatrimony joined the community
  12. மாமியாருக்கு ஒரு சேதி , மதித்து நடந்தால் மரியாதை......! 😍
  13. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் ஆண் : இதில் வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூட்டுவேன் இசையை மலராய் நாளும் சூட்டுவேன் ஆண் : ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே ஆண் : உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது ஆண் : காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதத் தியாக ராஜரும் ஆண் : ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏற்றினாரம்மா அவர் பாடலில் ஜீவன் அதுவே அவரானார் ஆண் : என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது ஆண் : நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில் ஆண் : பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா ஆண் : மீராவின் கண்ணன் மீராவிடமே எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே.......! --- இதயம் ஒரு கோவில் ---
  14. யாழ். படகு விபத்து ; அவசர விசாரணை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்தார் கடற்றொழில் அமைச்சர் Published By: Digital Desk 3 06 Mar, 2026 | 03:07 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படகு விபத்துக்கான முழுமையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து அவசர விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். விபத்துக்குள்ளான படகு கடற்பயணத்திற்குப் பாதுகாப்பான நிலையில் இருந்ததா?, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டு அமைந்திருந்ததா?, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் (உயிர் காப்பு அங்கிகள் போன்றவை) முறையாகப் பின்பற்றப்பட்டதா? என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மீட்பு நடவடிக்கைகளில் எந்தவிதத் தாமதமும் ஏற்படக்கூடாது. கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். கடலில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்து வைத்தியசாலை அதிகாரிகளுடன் அமைச்சர் நேரடியாகத் தொடர்புகொண்டு கேட்டறிந்துள்ளார். யாழ். படகு விபத்து ; அவசர விசாரணை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்தார் கடற்றொழில் அமைச்சர்
  15. இங்கிலாந்தை வென்றாலும் இந்தியாவுக்கு கவலை தரும் 4 விஷயங்கள் பட மூலாதாரம்,Alex Davidson-ICC/ICC via Getty Images படக்குறிப்பு,இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இரண்டு நாயகர்கள் செயல்பட்டனர். அதில் ஒருவர் சஞ்சு சாம்சன், அவர் அபாரமாக 89 ரன்கள் எடுத்தார். இன்னொருவர் ஜஸ்பிரித் பும்ரா. அவர் இறுதி தருணங்களில் அற்புதமாக பந்து வீசினார். கட்டுரை தகவல் பிரவீன் பிபிசி செய்தியாளர் 6 மார்ச் 2026, 07:11 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் "இந்த விருது ஜஸ்பிரித் பும்ராவுக்குச் செல்ல வேண்டும். அவர் மட்டும் இல்லையென்றால், நான் இங்கே இருந்திருக்க மாட்டேன்." இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கான பெருமையை ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சிற்கு அவர் வழங்கினார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 253 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எடுத்தாலும் கூட, கடைசி ஓவர் வரை அதன் வெற்றி உறுதியாகத் தெரியவில்லை. கடைசி வரை பரபரப்பாக நடந்து முடிந்த இந்த ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் சேர்ந்து 499 ரன்கள் குவித்த ஒரு போட்டியில், இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஒரே ஒரு பந்துவீச்சாளர் மட்டுமே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் தான் ஜஸ்பிரித் பும்ரா. இங்கிலாந்து அணியின் 18-வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்தியாவை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தார். இருப்பினும், போட்டியில் தோல்வியடைந்தாலும், மார்ச் 8-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து இந்தியாவிற்கு பல பாடங்களைக் கொடுத்துள்ளது, இது அவர்களுக்கு இறுதிப் போட்டியில் பயனுள்ளதாக இருக்கும். 'ஜஸ்பிரித் பும்ராவைப் போல யாரும் இல்லை' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,18வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா 6 ரன்கள் கொடுத்து போட்டியின் போக்கையே மாற்றினார். கடைசி மூன்று ஓவர்களில் இங்கிலாந்து வெற்றி பெற 45 ரன்கள் தேவைப்பட்டன. ஜேக்கப் பெத்தேல் 42 பந்துகளில் 94 ரன்களுடனும், சாம் கர்ரனும் களத்தில் இருந்தனர். அந்த நேரத்தில், ஜேக்கப் பெத்தேல் இந்தியாவை இறுதிப் போட்டிக்கு செல்ல விடமாட்டார் என்றே தோன்றியது. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா, தான் எதற்காக அறியப்படுகிறாரோ அதையே மீண்டும் ஒருமுறை செய்து காட்டினார். அவர் 18-வது ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, இங்கிலாந்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார். கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன்கள் எடுப்பது எந்த அணிக்கும் எளிதான காரியம் அல்ல, குறிப்பாக ஐந்து பேட்ஸ்மேன்கள் ஏற்கனவே ஆட்டமிழந்த நிலையில் அது இன்னும் கடினம். ஹர்திக் பாண்டியா அடுத்த ஓவரில் மீதமுள்ள பணியை முடித்தார், அவர் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 19-வது ஓவரில் பாண்டியா இந்தியாவின் இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்தார். ஆனால் இந்த வெற்றியின் உண்மையான காரணகர்த்தா ஜஸ்பிரித் பும்ரா தான். அவர் நான்கு ஓவர்களில் வெறும் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டையும் கைப்பற்றினார். பும்ராவின் செயல்பாடு குறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், "பும்ரா ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் ஒரு தலைமுறைக்கு ஒருமுறை வரும் சிறந்த பந்துவீச்சாளர். இதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்" என்றார். கேப்டன் சூர்யகுமாரும் இந்தப் போட்டியில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உண்மையான வித்தியாசமாக ஜஸ்பிரித் பும்ரா அமைந்தார் என்று கூறினார். அவர் கூறுகையில், "ஜஸ்பிரித் பும்ராவால் என்ன செய்ய முடியும் என்பதும், கடந்த சில ஆண்டுகளில் அவர் என்ன செய்திருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். அதையே அவர் இன்றும் செய்தார். அவர் இங்கிலாந்திடமிருந்து போட்டியைத் தன்வசப்படுத்தினார். இது மிகவும் சிறப்பான ஒரு செயல்பாடு" என்றார். ஃபீல்டிங்கிலும் முன்னேற்றம் தேவை பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஃபீல்டிங்கைத் தவிர, வருண் சக்கரவர்த்தி இந்தியாவின் மிகப்பெரிய கவலையாக மாறி வருகிறார். ஃபீல்டிங்கைத் தவிர, வருண் சக்கரவர்த்தி இந்தியாவின் மிகப்பெரிய கவலையாக மாறி வருகிறார். இறுதிப் போட்டியை எட்டிய போதிலும், இந்திய அணியின் பலவீனங்கள் இந்தப் போட்டியில் வெளிப்பட்டன. முந்தைய போட்டிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா தனது ஃபீல்டிங்கை கணிசமாக மேம்படுத்தியிருந்தது, அதன் முடிவும் தெளிவாகத் தெரிந்தது. ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில், அக்சர் படேல் 'பேக்வார்ட் பாயிண்டில்' பின்னோக்கி ஓடிச் சென்று ஹாரி ப்ரூக்கின் ஒரு அற்புதமான கேட்சைப் பிடித்தார். இந்தப் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணி இந்தத் தொடரில் 13 கேட்சுகளை தவறவிட்டிருந்தது. கேப்டன் சூர்யகுமார் கூறுகையில், "ஃபீல்டிங்கில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கான பெருமை ஃபீல்டிங் பயிற்சியாளர் திலிப்பையே சேரும். நாங்கள் பயிற்சி அமர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம், இப்போது அதன் முடிவுகள் போட்டியின் போது தெரிகின்றன" என்றார். ஆனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னதாக தங்களது 'கிரவுண்ட் ஃபீல்டிங்' குறித்து இன்னும் கவனம் செலுத்த வேண்டும். கிரவுண்ட் ஃபீல்டிங் சிறப்பாக இருந்திருந்தால், இங்கிலாந்தை 230 ரன்களுக்குள் இந்தியா கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஃபீல்டிங்கைத் தவிர, வருண் சக்கரவர்த்தி இந்தியாவின் மிகப்பெரிய கவலையாக மாறி வருகிறார். அவர் நான்கு ஓவர்களில் 64 ரன்களை விட்டுக்கொடுத்தார். இந்தப் போட்டியின் போது வருண் சக்கரவர்த்தி பந்துவீச வந்த போதெல்லாம், அவர் மீது இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தியது போல் தோன்றியது. அவரது முதல் ஓவரிலேயே ஜேக்கப் பெத்தேல் மூன்று சிக்ஸர்களை விளாசினார். அரையிறுதிக்கு முந்தைய இரண்டு போட்டிகளில், வருண் சக்கரவர்த்தி எட்டு ஓவர்களில் 87 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இத்தகைய சூழ்நிலையில், இறுதிப் போட்டிக்கான பிளேயிங் லெவனில் வருண் சக்கரவர்த்தியைத் தக்கவைப்பது இந்திய அணிக்கு மிகவும் கடினமான முடிவாக இருக்கலாம். 6வது பந்து வீச்சாளர் மற்றும் அபிஷேக் சர்மா பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடைசி ஓவரில் ஷிவம் துபே 22 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஃபீல்டிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி அதிக ரன்களை விட்டுக் கொடுப்பது ஆகியவை தவிர, இந்திய அணிக்கு மேலும் இரண்டு முக்கிய பிரச்னைகள் உள்ளன. அவை அபிஷேக் ஷர்மாவின் மோசமான ஃபார்ம் மற்றும் ஆறாவது பந்துவீச்சாளர் இல்லாதது ஆகும். 20-வது ஓவரில், இங்கிலாந்து வெற்றி பெற 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், யாரிடம் பந்தைக் கொடுப்பது என்பதே கேப்டனுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அர்ஷ்தீப், பும்ரா மற்றும் ஹர்திக் ஆகியோர் ஏற்கனவே தங்களது ஓவர்களை முடித்திருந்தனர். இத்தகைய சூழ்நிலையில், அக்சர் படேல் அல்லது ஷிவம் துபே மட்டுமே மீதமிருந்த வழியாக இருந்தனர். கடைசி ஓவரின் முதல் பந்திலேயே பெத்தேலை ஷிவம் துபே ஆட்டமிழக்கச் செய்தார். இருப்பினும், ஆர்ச்சர் இறுதியில் மூன்று பந்துகளில் மூன்று சிக்ஸர்களை விளாசி வெற்றி வித்தியாசத்தை வெறும் 7 ரன்களாகக் குறைத்தார். ஷிவம் துபே வீசிய அந்த ஓவரில் 22 ரன்கள் இங்கிலாந்து அணிக்குச் சென்றன. முன்னதாக, ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் இரண்டு ஓவர்களில் 46 ரன்களை விட்டுக்கொடுத்தார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அவரது இரண்டு ஓவர்களில் 32 ரன்கள் சென்றன. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும், இறுதிப் போட்டி போன்ற ஒரு முக்கியமான ஆட்டத்தில், குறைந்தபட்சம் ஆறாவது பந்துவீச்சாளராக ஷிவம் துபேவை இந்தியா நம்ப முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. அபிஷேக் ஷர்மாவின் மோசமான ஃபார்ம் அரையிறுதியிலும் தொடர்ந்தது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதுவரை, இந்தத் தொடரில் 7 இன்னிங்ஸ்களில் அவர் வெறும் 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் ஜிம்பாப்வேக்கு எதிராக எடுத்த 55 ரன்களும் அடங்கும். அபிஷேக் ஃபார்மில் இல்லாததால், இந்திய அணியால் இந்தத் தொடரில் ஒருமுறை கூட 50 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப்பை பெற முடியவில்லை. இறுதிப் போட்டியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இதுவரை அபிஷேக் ஷர்மாவிற்கு ஆதரவாக இருந்த அணி நிர்வாகம், ஒரு பெரிய முடிவை எடுக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g2486egz9o
  16. உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் Published By: Digital Desk 3 06 Mar, 2026 | 10:43 AM மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிரடியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதன் நேரடித் தாக்கம் இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச காப்புறுதி நிறுவனங்களான கார்ட், ஸ்கல்ட், மற்றும் லண்டன் பி&ஐ கிளப் போன்றவை பாரசீக வளைகுடா பிராந்தியத்திற்கான 'போர் கால இடர் காப்புறுதியை' மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் இரத்து செய்துள்ளன. கடந்த வாரம் கப்பல் பெறுமதியில் 0.2 சதவீதமாக இருந்த காப்புறுதி கட்டணம், தற்போது 1 சதவீதமாக உயர்ந்துள்ளது. உதாரணமாக, 100 மில்லியன் டொலர் பெறுமதியான கப்பல் ஒன்றுக்கான காப்புறுதி கட்டணம் 02 இலட்சம் டொலரிலிருந்து 10 இலட்சம் டொலர் வரை அதிகரித்துள்ளது. காப்புறுதி கட்டண அதிகரிப்பு மற்றும் கப்பல்கள் மாற்றுப் பாதையில் பயணிப்பதால் ஏற்படும் மேலதிக செலவுகள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை இலங்கையில் அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் பேச்சாளர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். கப்பல்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துவதால் இலங்கையை வந்தடைவதற்கு மேலதிகமாக 10 முதல் 14 நாட்கள் வரை தாமதமாகும். ஆடை மற்றும் இறப்பர் ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் போட்டித்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத மசகு எண்ணெய் விநியோகம் ஹோமுஸ் நீரிணை ஊடாகவே இடம்பெறுகிறது. தற்போது இப்பாதை மூடப்பட்டுள்ளதால், மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 90 டொலரைக் கடந்துள்ளது. இது இலங்கையின் மின்சாரக் கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்
  17. எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு Published By: Vishnu 06 Mar, 2026 | 06:05 AM (க.சிவலிங்கமூர்த்தி) நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே அமைந்துள்ளன என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; கடந்த காலங்களில் மக்கள் எரிவாயுவுக்காக நீண்ட வரிசைகளில் நின்றனர். புதிதாகத் திருமணம் செய்யும் தம்பதியினர் கூட ஒரு எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள அடகுக்கடைக்குச் செல்லும் நிலையே காணப்பட்டது. தற்போது ஜனாதிபதி ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விடுவிப்பதாகக் கூறுகிறார். இதனை நாம் வரவேற்கிறோம் ஆனால் இந்த முடிவை அவர் முன்னரே எடுத்திருக்க வேண்டும். அதேநேரம், தற்போது சந்தைக்கு வரும் சிலிண்டர்களில் எரிவாயுவின் அளவு குறைவாக இருப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனை உறுதிப்படுத்த நாம் வரும் நாட்களில் தராசுகளைப் பயன்படுத்தி சிலிண்டர்களின் வெற்று எடை மற்றும் எரிவாயுவின் எடையை அளவிட்டு நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக நிரூபிப்போம். லாஃப்ஸ் போன்ற நிறுவனங்கள் தமது இலாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சரியான விலையில் தரமான சேவையை வழங்க வேண்டும். தற்போது காணப்படும் எரிபொருள் வரிசைகளுக்குப் பின்னாலும் ஜே.வி.பி உள்ளிட்ட தரப்பினரின் கைவரிசை உள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எரிபொருளைப் பதுக்கி வைத்து போத்தல்களில் 2000 ரூபாவுக்கு விற்றவர்கள் இவர்களே. இவர்களது ஆதரவாளர்களே எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் நின்று தேவையற்ற அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றனர். தற்போது நாட்டில் எரிபொருள் கையிருப்பு தாராளமாக உள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக ஜே.வி.பி உறுப்பினர்களின் வீடுகளைச் சோதனையிட வேண்டும். அங்கு சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை காண முடியும். மக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கி எரிபொருளைத் தேவையற்ற முறையில் சேமிக்க வேண்டாம் என்றார். எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு
  18. குருநகர் படகு விபத்து - காணாமல் போனோரை தேடும் பணி தொடர்கிறது Mar 6, 2026 - 03:26 PM யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் இன்று (6) படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காணாமல் போன இருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்குள்ளான குறித்த படகில் பயணித்த நிலையில் மீட்கப்பட்டிருந்தவர்களில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை அத தெரண செய்திகளுக்கு உறுதிப்படுத்தினார். நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (2 பெண்கள் ஒரு ஆண்). மேலும் 8 பேர் சாதாரண நோயாளர் சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். பாலைத்தீவு திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் சென்ற படகு ஒன்றே இன்று காலை 6 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது. குறித்தப் படகில் 25 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 23 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் காணாமல் போன இருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. குருநகர் படகு விபத்து - காணாமல் போனோரை தேடும் பணி தொடர்கிறது
  19. இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை சந்திக்கிறது; பெத்தெலின் சதம் வீண், சஞ்சு செம்சன் மீண்டும் ஆட்டநாயகன் Published By: Vishnu 05 Mar, 2026 | 11:47 PM (நெவில் அன்தனி) மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தியதும் கணிசமான மொத்த ஓட்டங்கள் குவிக்கப்பட்டதுமான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 7 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நடப்பு சம்பியன் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. இதனை அடுத்து அஹமதாபாத்தில் எதிர்வரும் 8ஆம் திகதி ரி20 உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை இந்தியா எதிர்த்தாடவுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்தாடவிருப்பது இதுவே முதல் தடவையாகும். இந்தியாவின் வெற்றியில் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக சஞ்ச செம்சன் குவித்த அரைச் சதம் பெரும் பங்காற்றியது. அதேவேளை, இங்கிலாந்தின் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்த ஜேக்கப் பெத்தெல் அபார சதம் குவித்த போதிலும் கடைசி ஓவரில் அவர் தனது விக்கெட்டை ரன் அவுட் முறையில் பறிகொடுத்ததால் அது பயனற்று போனது. இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 254 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது. கடினமான வெற்றி இலக்கை அடைவதற்கு அதிரடிதான் சிறந்தது என்ற எண்ணத்துடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பில் சோல்ட் (5), அணித் தலைவர் ஹெரி ப்றூக் (7) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (38 - 2 விக்.). இது இங்கிலாந்துக்கு பேரிடியைக் கொடுத்தது. ஜொஸ் பட்லர் வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முயற்சித்து 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். டொம் பென்டன் 17 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்க (95 - 4 விக்.) இங்கிலாந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால், ஜேக்கப் பெத்தெல், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர். வில் ஜெக்ஸ் 20 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பவுண்டறி எல்லையில் அவரது பிடியை எடுத்த அக்ஸார் பட்டேல் தன்னைக் கட்டுப்படுத்த முடியால் பந்தை அர்ஷ்தீப் சிங்கை நோக்கி எறிந்துவிட்டு பவுண்டறிக்கு வெளியே சென்றார். அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்ததால் வில் ஜெக்ஸ் ஆட்டம் இழந்தார். (172 - 5 விக்.) தொடர்ந்து ஜேக்கப் பெத்தெல், சாம் கரன் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்திரந்தபோது சாம் கரன் 18 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந் நிலையில் இந்திய அணித் தலைவர் சூரியகுமார் யாதவ்வும் சிரேஷ்ட வீரர்களும் தீவிர ஆலோசனை நடத்தி கடைசி ஓவரை ஷிவம் டுபேயிடம் ஒப்படைத்தனர். ஷிவம் டுபே அற்புதமாக பந்துவீசி முதல் 2 பந்துகளில் இரண்டு ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்வதை உறுதி செய்தார். ஷிவம் டுபேயின் முதல் பந்தில் இல்லாத இரண்டாவது ஓட்டத்துக்கு முயற்சித்த ஜேக்கப் பெத்தெல் ரன் அவுட் ஆனார். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜேக்கப் பெத்தெல் 48 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 105 ஓட்டங்களைக் குவித்தார். ஷிவம் டுபேயின் கடைசி 4 பந்துகளில் வைட் அடங்கலாக 20 ஓட்டங்கள் பெறப்பட்டது. அதனால் எவ்வித தாக்கமும் இந்தியாவுக்கு ஏற்படவில்லை. பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா, சஞ்சு செம்சனின் அபார துடுப்பாட்ட உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களைக் குவித்தது. சஞ்சு செம்சன் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் அபராகமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் குவித்து இந்தியாவுக்கு கைகொடுத்தார். ஆரம்ப வீரர் அபிஷேக் ஷர்மா (9) இன்றைய போட்டியிலும் குறைந்த எண்ணிக்கைக்கு ஆட்டம் இழந்தார். (20 - 1 விக்.) ஆனால், சஞ்சு செம்சன், இஷான் கிஷான் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர். இஷான் கிஷான் 18 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார். மொத்த எண்ணிக்கை 160 ஓட்டங்களாக இருந்தபோது சஞ்சு செம்சன் ஆட்டம் இழந்தார். சஞ்சு செம்சன் 42 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைக் குவித்தார். அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் (11) பிரகாசிக்கத் தவறினார். தொடர்ந்து ஷிவம் டுபே 25 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டறிகள் உட்பட 43 ஓட்டங்களையும் திலக் வர்மா 21 ஓட்டங்களையும் ஹார்திக் பாண்டியா 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வில் ஜெக்ஸ் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சஞ்சு செம்சன் இரண்டாவது தொடர்ச்சியான ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார். இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை சந்திக்கிறது; பெத்தெலின் சதம் வீண், சஞ்சு செம்சன் மீண்டும் ஆட்டநாயகன்
  20. IRIS Dena கப்பல் மீட்பு பணிகள் தொடர்கின்றன Mar 6, 2026 - 12:27 PM இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் போர்க் கப்பலான IRIS Dena வில் இருந்து மூழ்கிய ஈரானிய கடற்படையினரை மீட்கும் பணிகளில் தொடர்ந்தும் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது. குறித்த பணிகளில் கடற்படை ஈடுபடும் காட்சிகள் தற்போது வௌியாகியுள்ளன. IRIS Dena கப்பல் மீட்பு பணிகள் தொடர்கின்றன
  21. மது அருந்தாதவர்களையும் அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் 'கல்லீரல் நோய்' பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சண்முகப் பிரியா செல்வராஜ் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் உலகம் முழுவதும் ஆயிரத்தில் 47 பேருக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (non alcoholic fatty liver - NAFLD) பாதிப்பு இருப்பதாக பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையம் (National Center for Biotechnology Information - NCBI) கூறுகிறது. இது பெண்களை விட ஆண்களிடையே அதிகமாக காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்பட்ட வளர்சிதை மாற்ற செயலிழப்பு கல்லீரல் நோய் (MASLD) உடல் பருமன், வகை 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடைய, கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேரும் நிலை. இது கல்லீரல் அழற்சி (MASH), வடுக்கள், மற்றும் சில நேரங்களில் கல்லீரல் புற்றுநோய்க்கும் கூட வழிவகுக்கும் ஒரு தீவிரமான நிலையாக உள்ளது. இது கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கக் கூடும். மது அருந்தாதவர்களுக்கும் கூட வளர்சிதை மாற்ற செயலிழப்புடன் தொடர்புடைய இந்த கல்லீரல் நோய் வரலாம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த நிலையில், கல்லீரல் நோய் நிபுணர் மருத்துவர் கார்த்திக் மதிவாணன் அதுகுறித்து விரிவாக விளக்குகிறார். கல்லீரல் என்ன செய்கிறது? பட மூலாதாரம்,Getty Images நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் செய்கின்றன. இதயம் இரத்தத்தை பம்ப் செய்கிறது. நுரையீரல் ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது. ஆனால் கல்லீரல் மட்டும் 500-க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. "வேறு எந்த உறுப்பும் இந்த அளவுக்கு சிக்கலான பணிகளை மேற்கொள்வதில்லை. கல்லீரல் இல்லாவிட்டால் உட்கொண்ட உணவு ஜீரணமாகாது; உயிர் வாழ்வதே சாத்தியமில்லை," என்கிறார் மருத்துவர் கார்த்திக் மதிவாணன். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் எப்படி வருகிறது? படக்குறிப்பு,கல்லீரல் நோய் நிபுணர் மருத்துவர் கார்த்திக் மதிவாணன் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் இன்று "வளர்சிதை மாற்ற நோய்க்குழுமம்" என்று வகைப்படுத்தப்படுகிறது. இது ஒரே ஒரு குறிப்பிட்ட காரணத்தால் வருவதில்லை என்கிறது நவீன மருத்துவம். மது அருந்துதல், துரித உணவு, அதிக கலோரி உள்ள உணவுகளை உட்கொள்ளுதல், உடல் ரீதியாக பெரியளவில் இயக்கம் இல்லாமலிருப்பது. புகைப்பிடித்தல், தூக்கமின்மை ஆகியவை சேர்ந்து கல்லீரலை படிப்படியாக பாதிக்கின்றன. "இப்போது இதை நாம் வளர்சிதைமாற்ற நோய்க்குழுமம் என்று அழைக்கிறோம். கல்லீரல் மட்டுமல்ல, இதயம் வரை இதன் தாக்கம் பரவும். நீரிழிவு நோயுடன் கல்லீரல் கொழுப்பும் சேர்ந்து இருந்தால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகரிக்கிறது," என்று எச்சரிக்கிறார் மருத்துவர் கார்த்திக் மதிவாணன். நோய்க்கான அறிகுறிகள் என்ன? கொழுப்பு கல்லீரலின் மிகப்பெரிய சிக்கல் அவை எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. சோர்வு, உற்சாகமின்மை போன்றவை காணப்படலாம். ஆனால் இவை தைராய்டு உட்பட வேறு பல நோய்களிலும் தோன்றுவதால் இவற்றை வைத்து மட்டுமே கொழுப்பு கல்லீரல் என்று கூறிவிட முடியாது. "கொழுப்பு கல்லீரல் இருக்கிறது என்று அறிகுறிகளை வைத்து மட்டுமே கண்டறிவது சாத்தியமில்லை. அதனால்தான் அதிக ஆபத்துள்ள நபர்கள் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்," என்கிறார் மருத்துவர் கார்த்திக். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மது அருந்தாதவர்களுக்கும் கூட வளர்சிதை மாற்ற செயலிழப்பு கல்லீரல் நோய் வரலாம் யாருக்கு அதிக ஆபத்து? பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பிஎம்ஐ (BMI) 23-க்கு மேல் உள்ளவர்கள், வயிறு பெரிதாக இருப்பவர்கள் (Visceral fat), மது அருந்துபவர்கள் ஆகியோர் கல்லீரல் பரிசோதனையை கட்டாயம் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறும் மருத்துவர் அருண்குமார். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் ஃபைப்ரோ ஸ்கேன் மூலம் கல்லீரலின் நிலையை துல்லியமாக அறிய முடியும் என்பதால் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்துகிறார். இதனை பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையம் (NCBI) வெளியிட்ட ஆய்வறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது. "ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்பது நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் அல்லது இடது வென்ட்ரிக்கிள் சுவர் தடிமன் அதிகரிப்பு உள்ள நோயாளிகளில் ஒரு பொதுவான இணை நோயாக கண்டறியப்பட்டுள்ளது " என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்லீரல் கொழுப்பு ஆபத்தான நிலைக்கு போனால் என்ன ஆகும்? கல்லீரல் கொழுப்பைக் கண்டுகொள்ளாமல் விட்டால், நார்த்திசு மாற்றத்துக்கு (Fibrosis) வழிவகுக்கும். அதன் அடுத்த நிலையான சிரோசிஸ் நிலை வந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே வழி என்கிறார் மருத்துவர் கார்த்திக். தற்போது அறுவை சிகிச்சை தொழில்நுட்ப தோல்வி விகிதம் 5 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகான தொற்றுநோய் அபாயம் 15 முதல் 20 சதவிகிதம் வரை நீடிக்கிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிசை பற்றிய அச்சம் தேவையில்லை என்று கூறும் அவர், அந்த அபாய நிலைக்குச் செல்லாமல் தவிர்க்க கல்லீரலை ஆரோக்கியமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க என்ன செய்யலாம்? பட மூலாதாரம்,Getty Images கல்லீரல் ஆரோக்கியத்துக்கு சரியான உணவுப் பழக்கவழக்கம் மிக அவசியம் என வலியுறுத்தும் மருத்துவர் கார்த்திக் 20 வயதில் சாப்பிட்டதை 50 வயதிலும் சாப்பிட முடியாது, வயதாக வயதாக வளர்சிதைமாற்ற வேகம் கணிசமாக குறைகிறது என்கிறார். 1,500 கலோரி மட்டும் தேவைப்படும் நேரத்தில் 3,000 கலோரி சாப்பிட்டால், மிகுதியான கலோரிகள் கொழுப்பாக மாறி கல்லீரலில் படிகின்றன. அது மட்டுமல்ல, வயிற்றைச் சுற்றியும் உள் உறுப்புகளிலும் கொழுப்பு படிய தொடங்கும். "100 கலோரி எரிக்க ஜிம்மில் எவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால் சாலையோரம் ஒரு சின்ன இனிப்பு சாப்பிட்டாலே 100 கலோரி நம் உடலில் சேர்ந்துவிடும். நாம் சாப்பிடுவதை உணர்வுடன் கவனித்து சாப்பிடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது அவசியம்," என்கிறார் அவர். "காய்கறிகளை அதிகமாகவும் சாதத்தை குறைவாகவும் சாப்பிட வேண்டும். வெள்ளை சர்க்கரை, மைதா போன்ற எளிய மாவுச்சத்துகளை விட்டு கைக்குத்தல் அரிசி, கோதுமை போன்ற சிக்கலான மாவுச்சத்துகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த உணவுகளை தினசரி எடுத்துக்கொள்வதும் கல்லீரலை பாதுகாக்கும். 40 வயதை நெருங்கும்போது, இன்னும் அதிக எடை கூடாமல் பார்த்துக் கொள்வதும் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதும் மிகவும் அவசியமாகிறது. உணவை உணர்வுடன் கவனித்து சாப்பிடும் பழக்கம் மட்டுமே கல்லீரலை நீண்ட நாள் ஆரோக்கியமாக வைக்கும்," என்று வலியுறுத்துகிறார் மருத்துவர் கார்த்திக் மதிவாணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98qq84q3evo
  22. மத்திய கிழக்கில் அச்சுறுத்தல்கள்: WHO துபாய் அவசர மையம் செயல்பாடுகளை நிறுத்தியது Published By: Vishnu 06 Mar, 2026 | 06:21 AM மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், துபாயில் உள்ள அதன் உலகளாவிய அவசர தளவாட மையத்தில் செயல்பாடுகளை நிறுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், தற்போதைய பாதுகாப்பின்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார். ஹார்முஸ் ஜலசந்தியில் கடல்சார் விநியோகச் சங்கிலிகளில் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகளும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கில் அச்சுறுத்தல்கள்: WHO துபாய் அவசர மையம் செயல்பாடுகளை நிறுத்தியது
  23. குருநகர் படகு கவிழ்ந்து விபத்து - இருவர் பலி Mar 6, 2026 - 12:05 PM யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை அத தெரண செய்திகளுக்கு உறுதிப்படுத்தினார். நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 13 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (2 பெண்கள் ஒரு ஆண்). மேலும் 8 பேர் சாதாரண சிகிச்சை அறையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். பாலைத்தீவு திருவிழாவுக்கு யாத்திரிகர்கள் சென்ற படகு ஒன்றே இன்று காலை 6 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது. குறித்தப் படகில் 25 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் 10 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. குருநகர் படகு கவிழ்ந்து விபத்து - இருவர் பலி
  24. இஸ்ரேலின் தாக்குதலால் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது Published By: Vishnu 06 Mar, 2026 | 06:14 AM கடந்த திங்கட்கிழமை முதல் லெபனானை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய பாரிய குண்டுவீச்சு தாக்குதலினால் இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. லெபனான் தேசிய செய்தி நிறுவனம் (NNA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளின்படி, தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 102 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல்களின் விளைவாக 638 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/240266
  25. IRIS Bushehr கப்பலில் இருந்த பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு Mar 6, 2026 - 07:37 AM இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் 'IRIS Bushehr' கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (5) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சம்பந்தப்பட்ட கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறித்த கப்பலில் மொத்தம் 208 பணியாளர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. IRIS Bushehr கப்பலில் இருந்த பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு
  26. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் - இந்தக் கதை உண்மையா? This is a discussion about the Easter Sunday attacks in Sri Lanka, based on true stories and news articles published in newspapers. This discussion elaborates on the real and chilling events, from the planning stage to the aftermath of the bombings, which claimed the lives of more than 250 innocent people. டெய்லிமிரர் பத்திரிகையில் நிர்மலா கன்னங்கரா எழுதிய பத்தியை தமிழில் மருத்துவர் செந்தூரன், மருத்துவர் சாதிக்கின் சுவாரஸ்யமான உரையாடல் காணொளி.
  27. எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 இன் இறுதிப் போட்டி நாளை மறுதினம் ஞாயிறு (08 மார்ச்) நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத் நியூஸிலாந்து அணி எதிர் இந்திய அணி NZ எதிர் IND ஒருவரும் இறுதிப் போட்டியில் விளையாடும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. 14 பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 09 பேர் பிற அணிகள் வெல்வதாகக் கணித்தமையால் அவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் AUS வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் IND ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் IND வாத்தியார் IND கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 PAK சுவி IND கிருபன் IND கோஷான் சே ENG அஹஸ்தியன் SA கந்தப்பு IND நியாயம் IND எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் IND நாளைய இறுதிப் போட்டியில் 5 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு வாய்க்குமா அல்லது எல்லோருக்கும் நியூஸிலாந்து அணி முட்டைகளைப் பரிமாறுமா? குறிப்பு: யாழ் களப் போட்டியில் வெற்றிவாகை சூடுபவர் உலகக் கிண்ணப் போட்டி 2026 இன் சாதனைப் தரவுகளுக்கான இன்னும் 12 கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னரே அறிவிக்கப்படுவார்!!!
  28. வணக்கம் வணாங்காமுடி. முகப்பு வழியாக யாழின் உள்ளே நுளைந்தவுடன் மறுபடி முகப்புக்குச் செல்ல வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால் முகப்பில் உள்ளவை அனைத்தும் கருத்துக்களத்தில் உள்ளன. அத்துடன் முகப்பும் கருத்துக் களமும் வெவ்வேறு மென்பொருட்கள் (வெவ்வேறு இணையத் தளங்கள் போன்றவை). கருத்துக் களத்திலிருந்து முகப்புக்குப் போக வேண்டிய அவசியம் இருந்தால், மேலுள்ள "முகப்பு" என்ற இணைப்பின் மூலம் செல்லலாம் (தொலைபேசியில் "Menu" இல் உள்ளது).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.