Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. அண்ணை இதை இப்பதான் பாக்கிறன். சுகமாய் வீடு வந்தது சந்தோசம். உண்மையை சொல்லுங்கோ குத்து விட்டது, ரோஜாவோ? செல்வமணியோ😂
  3. கூகுள் டீப்‌மைண்ட், ஏஐ தொழில் மாற்றங்கள்: சுந்தர் பிச்சை வெளியிட்ட முக்கிய தகவல்கள் Published By: Digital Desk 3 20 Feb, 2026 | 02:32 PM டெல்லியில் இடம்பெறும் ஏஐ (Artificial Intelligence) மாநாட்டின் 4 ஆவது நாளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுந்தர் பிச்சை முக்கியப் பேச்சாளராக கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சுந்தர் பிச்சை பேசும் போது தெரிவித்ததாவது, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் கூகுள் சார்பில் 15 பில்லியன் டொலர் முதலீட்டில் ஏஐ மையம் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஏராளமானோர் தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய ஏஐ தொழில் நுட்பங்கள் உருவாகி, நாட்டின் தொழில் வளங்கள் மேலும் விரிவடையும் . இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்‌டிக் கேபிள் பதிக்கப்படவுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற பலருக்கும் வானிலை முன்னறிவிப்பு சேவைகள் வழங்கப்பட முடியும். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் பணம் சம்பாதிக்க முடியுமென யாரும் நினைத்திருக்கவில்லை. இப்போது இலட்சக்கணக்கானோர் யூடியூப்பில் இலாபம் பெறுகிறார்கள். அதே நேரத்தில், ஏஐ தொழில் நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது தொழில் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டார். கூகுளின் டீப் மைண்ட் நிறுவனம், ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஆல் பாபோல்ட் (AlphaFold) என்ற மொடலை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் புரொடீனின் 3டி வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மருத்துவத் துறையில் பெரிய புரட்சி ஏற்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பயன்படும். ஏஐ தொழில்நுட்பங்கள் அறிவியல் துறையில் மிகவும் கடினமான பிரச்சினைகளுக்கு கூட தீர்வை வழங்கும் சக்தி கொண்டவை என மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/239155
  4. 23,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை Feb 20, 2026 - 05:19 PM தற்பொழுது 23,000 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், இந்த ஆட்சேர்ப்பு செயன்முறையை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமரும் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதன் மூலம் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் கணிசமாகக் குறையும் என்று அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, திறந்த மற்றும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் பரீட்சைகளை நடத்தி பட்டதாரிகளை இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். அண்மையில் பாராளுமன்றத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்ன மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சுசார் ஆலோசனைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள கல்விச் சபையை நிறுவுவது பற்றிய உப குழுவினால், இலங்கையில் கல்விச் சபையொன்றை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் பல்வேறு கட்டக் கலந்துரையாடல்களின் பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த அறிக்கையை அமைச்சின் இணையதளத்தில் வெளியிட்டு, பொது அறிவித்தல் மூலம் அந்த அறிக்கை தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கு ஒரு மாத காலம் வழங்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், உயர்கல்வித் துறை தொடர்பான உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனவிரத்னவும், பாடசாலைகளில் நிலவும் மனித வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் பிரதி அமைச்சர் (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன ஆகியோரும் முன்வைத்தனர். மேலும், பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றிய உப குழுவின் முன்னேற்றத்தை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்ஹ முன்வைத்தார். அத்துடன், தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் இந்த அமைச்சுடன் சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது. அதற்கமைய, அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விபரங்களைக் கேட்டறிந்து கொள்ளல் மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளும் இதன்போது வழங்கப்பட்டது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். https://adaderanatamil.lk/news/cmlutuk3a0007356pbcwwmasu
  5. சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் இளைய மகன் தென்னாபிரிக்காவில் கைது 20 Feb, 2026 | 10:19 AM சிம்பாப்வே நாட்டின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் இளைய மகன் பெல்லார்மைன் முகாபே (28), கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில் தென்னாபிரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜொஹன்னஸ்பேர்க் நகரின் உயர்நிலை வசதி பகுதியாகக் கருதப்படும் ஹைட் பார்க் பகுதியில் அமைந்துள்ள ஒரு இல்லத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக தென்னாபிரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் 23 வயதுடைய ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அங்கு தோட்டப்பணியில் ஈடுபட்டிருந்த தோட்டக்காரர் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்திற்குப் பின்னர் அந்நாட்டுப் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், ஹைட் பார்க் இல்லத்திலிருந்து தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் துப்பாக்கி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் மேலும் ஒருவரும் பெல்லார்மைன் முகாபேவுடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸார் இதுவரை அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடவில்லை என்றாலும், சம்பவ இடத்தில் சர்வதேச ஊடகங்கள் பெல்லார்மைன் முகாபே கைதுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. பெல்லார்மைன் முகாபே, சிம்பாப்வே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே மற்றும் அவரது இரண்டாவது மனைவி கிரேஸ் முகாபே ஆகியோரின் இளைய மகன் ஆவார். ரொபர்ட் முகாபே, 37 ஆண்டுகள் சிம்பாப்வேவை ஆட்சி செய்த பின்னர் 2017 ஆம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் 2019 ஆம் ஆண்டு 93 வயதில் காலமானார். https://www.virakesari.lk/article/239127
  6. சிறப்பு. 80 புள்ளிகளில் 68ஐப் பெற்ற அல்வாயன், கந்தப்பு. வாழ்த்துகள். இனித்தான் விறு விறுப்பான கட்டம். எப்படி அமையப் போகிறது
  7. ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வீட்டில் தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை மே 5 ஆம் திகதி மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான நேற்று(17) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, இறந்த சிறுமியின் சகோதரர், இரண்டாவது சாட்சி, நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர். இதன்போது, சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சிய விசாரணை மே 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்காவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபரான பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகிய இரு சந்தேகநபர்களுக்கும் எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான ஜூட் குமார் ஹிசாலினி என்ற சிறுமி கடந்த 2021 ஆம் ஆண்டு தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்களின் பின்னர் உயிரிழந்திருந்தார். இவரின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, 2021 ஜூலை மாதம் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மரணத்திற்கு நீதி கோரி பரவலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதேவேளை, சிறுமி தற்கொலை செய்துகொண்டமைக்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்திருந்திருந்தது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுமார் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. Crimenews
  8. "மூன்று கவிதைகள் / 25" "மின்னலாய் ஒரு பின்னல்" [கனவு, நனவு, விழிப்பு, சோம்பல்] கனவு கண்டது போதும் தமிழா நனவு மனம் வேண்டாமோ? விழிப்புக் கொண்டு எழுந்து சோம்பல் அறுத்து வினை செய்யாயோ? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................................... "உழைக்கும் கைகளே உருவாக்குவது நீங்களே" ஏழை பணக்காரன் முடிச்சு போடாமல் பிழைகள் தேடி நேரத்தை வீணாக்காமல் மழை வெயிலென சாட்டுச் சொல்லாமல் ... உழைத்து வாழ ஆர்வம் இருந்தால் உள்ளம் மகிழும் உயர்ச்சி உண்டு உழைக்கும் கைகளே உருவாக்குவது நீங்களே கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................ "வைகரை கரையினிலே வைகறை நேரத்திலே" வைகரை கரையினிலே வைகறை நேரத்திலே வைத்தகண் மாறாமல் உனக்காகக் காத்திருக்க ... வைராக்கியம் நெஞ்சை முட்டி மொத வைரம்பதித்த மாலை மார்பைத் தழுவ வைதேகி வந்தாள்! மௌனமாய் நின்றாள்!! உன் நினைவு இதயத்தில் பூத்துக்குலுங்க என் மனம் மகிழ்ந்து எதிர்பார்க்க ... அன்ன நடையில் அழகு ஓவியமாய் கன்னம் இரண்டும் வெட்கிச் சிவப்பாக இன்பம் தந்தாள்! கூடல் கொண்டாள்!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் துளி/DROP: 2047 ["மூன்று கவிதைகள் / 25" https://www.facebook.com/groups/978753388866632/posts/33912545815060631/?
  9. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 109 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 109 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் விகார மகா தேவி கெமுனுவைப் [Gemunu] பெற்றெடுத்தாள். ஒரு பெண் யானை அவனது பிறந்தநாளில் தூத்துகுடியிலிருந்து (இன்றைய தமிழ்நாட்டின் தெற்கு முனை) ஒரு இளம் யானை 'கடோல்'லை [Kandula] அங்கு விட்டுச் சென்று விட்டு, தான் வந்த இடத்திற்குத் திரும்பிச் சென்றது. இந்த யானை மற்ற இரண்டு நாளாகமங்களிலும் கந்துலா [Kandula] என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் மற்ற இரண்டு நாளாகமங்களும் தூத்துகுடியிலிருந்து வந்ததாகக் கூறவில்லை. விகார மகா தேவி மீண்டும் மற்றொரு இளவரசர் திஸ்ஸ குமாரயவைப் [Tissa Kumaraya] பெற்றெடுத்தாள். கெமுனுவுக்கு பத்து வயதாக இருந்த போது, தமிழ் படையெடுப்பாளர்களிடம் பகைமை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற தனது தந்தையின் வேண்டுகோளை அவன் ஏற்க மறுத்து விட்டான். பின்னர் அவன் சுருண்டு, கைகால்களை நீட்டாமல் தரையில் படுத்துக் கொண்டான். கடல் தெற்கிலும், தமிழ் படையெடுப்பாளர்கள் மகாவலி நதியின் மறுபுறத்திலும் இருக்கும்போது தன்னால் எப்படி கால்களை நீட்டி படுக்க முடியும் என்று அவன் தாயிடம் கூச்சலிட்டான். காவன்தீசன் அல்லது காகவண்ண தீசன் முடிசூடியதிலிருந்து அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். என்றாலும் இந்த ஆட்சிக்காலம் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் கொடுக்கப்படவில்லை. மகாவம்சத்தில் காமினியிடம் [Gamani] பத்து யானைகளின் பலம் கொண்ட பத்து வீரர்கள் இருந்தனர். மேலும் அந்த வீரர்களின் பெயர்களும் அங்கு கொடுக்கப்பட்டிருந்தன. அதே போல, இராசாவலியவும் பத்து வலிமைமிக்க வீரர்களைப் பற்றிப் பேசுகிறது, ஆனால் இருவரின் பெயர்களை மட்டுமே அதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டும் அவர்களின் வலிமை மற்றும் அவர்களின் வளர்ப்பு பற்றிய அற்புதமான கதைகளைக் கொண்டுள்ளன. மேலும் கெமுனுவின் படைகளுக்கும் எல்லாளனுடைய படைகளுக்கும் இடையே, போர்கள் நடந்த இடங்களின் பெயர்கள் மகாவம்சத்தில் உள்ளவற்றுடன் முரண்படுகின்றன. மகாவம்சத்தின்படி, காமனி இரண்டாவது போரில் எல்லாளனின் தளபதிக்கு தனது தாயை வழங்குவதாக நடித்து வென்றான். எனினும் இந்த சம்பவம் இராசாவலியத்தில் விவரிக்கப்படவில்லை. தனது படைகளை தமிழர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்ற கெமுனுவின் விருப்பம் தெய்வீகமானது என்று இராசாவலிய கூறுகிறது. எனினும் இப்படியான கருத்து மகாவம்சத்தில் கூறப் படவில்லை. இராசாவலியத்தின்படி பல்லுகன் அல்லது பல்லுகா [Bhalluka] முப்பதாயிரம் படைகளுடன் வந்தான், ஆனால் மகாவம்சத்தின்படி அறுபதாயிரம் படைகளுடன் வந்தான். எனினும் பல்லுகனின் அத்தியாயம் தீபவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. கெமுனு நாக உலகத்திலிருந்து நினைவுச்சின்னத்தைக் கொண்டு வந்தான், அதை அவன் எப்படிப் பெற்றான் என்பது விளக்கப்படவில்லை. இராசாவலியத்தில் கெமுனுவின் எந்த மகனைப் பற்றியும் எந்த தகவலும் இல்லை. கெமுனுவின் தம்பி சேதெ தீசன் [Sedetissa] கெமுனுவுக்குப் பிறகு முப்பத்தேழு ஆண்டுகள் ஆட்சி செய்தார். மற்ற நாளேடுகளில் இவன் சத்தா திச்சன் [Saddha Tissa] ஆவார். அவன் இராசாவலியத்தில் கூறப்பட்டுள்ளபடி முப்பத்தேழு ஆண்டுகள் அல்ல, ஆக பதினெட்டு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். பின்னர் அவரது மகன் துலானா அல்லது துலத்தன் [Tulana or Thulatthana] ஒரு வருடம் எட்டு மாதங்கள் ஆட்சி செய்தார். ஆனால் மற்ற இரண்டு நாளேடுகளின்படி ஆட்சியின் காலம் ஒரு வருடம் பத்து மாதங்கள் ஆகும். லெமினிதிஸ்ஸ [Leminitissa] துலானாவைக் அல்லது துலத்தனாவைக் [Tulana] கொன்று முப்பத்தொன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். எனினும் லெமினிதிஸ்ஸனின் வம்சாவளி தெளிவாகத் தெரியவில்லை. பின்னர் அவரது தம்பி வலகம்பாஹு [Valagambahu] ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தார். பின்னர் ஏழு தமிழர்கள் சோழ நாட்டிலிருந்து ஏழாயிரம் ஆண்களுடன் வந்து இராச்சியத்தைக் கைப்பற்றினர். அப்பொழுது வலகம்பாஹு அங்கிருந்து தப்பி ஓடினான். எனினும் அந்நிய நாட்டிலிருந்து ஏழாயிரம் ஆண்கள் மட்டும் வந்து இராச்சியத்தைக் கைப்பற்ற முடிந்தது விசித்திரமாக உள்ளது. கெமுனுவிற்கும் எல்லாளனுக்கும் இடையிலான போர்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒப்பீட்டளவில் மிகப் பெரிய படைவீரர்கள் அங்கு இருந்திருக்க வேண்டும்! மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள ரோஹனாவில் [Rohana / Ruhuna / உருகுணை] வாழ்ந்த பிராமணர் பற்றிய அத்தியாயம் இராசாவலியத்தில் கொடுக்கப்படவில்லை. ஏழு தமிழர்களில் ஒருவன், தப்பி ஓடும் மன்னனைப் பின்தொடர்ந்து அவனது தலைமை இராணியைப் கைப்பற்றி அவளுடன் திரும்பினான். இருப்பினும், மகாவம்சத்தின்படி, மன்னன் தனது தலைமை இராணியை விட்டுவிட்டு மற்றவர்களுடன் தப்பிச் சென்றான். மற்றொருவர் புத்தரின் தானம் பாத்திரத்தை கைப்பற்றி அதனுடன் திரும்பினார். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், புத்தரின் தானம் பாத்திரத்தில் திருப்தி அடைய தமிழர்கள் பௌத்தர்களாக இருக்க வேண்டும்! மீதமுள்ள ஐந்து தமிழர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பதினான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்கள் பதினான்கு ஆண்டுகள் மற்றும் ஏழு மாதங்கள் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது. இந்தத் தமிழர்களின் பெயர்கள் இராசாவலியத்தில் கொடுக்கப்படவில்லை, ஆனால் மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னர் வாலகம்பாஹு திரும்பி வந்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்தப் வாலகம்பாஹு [Valagambahu] என்ற பெயர் மகாவம்சத்திலும் தீபவம்சத்திலும் வட்டகமணி [Vattagamani] என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல, தீபவம்சம் ஐந்து தமிழர்களை மட்டுமே குறிக்கிறது. Part: 109 / APPENDIX – "Summary of Rajavaliya" Vihara Maha Devi gave birth to Gemunu. A she-elephant came from Tuttukudiya (southern tip of present day Tamil Nadu) on his birthday to leave a young elephant Kadol and went back to the place where she came from. This elephant is named Kandula in the other two chronicles. The other two chronicles do not say that it came from Tuttukudiya. Vihara Maha Devi again gave birth to another prince Tissa Kumaraya. When Gemunu was ten years old he refused to accede to the request of his father that he would be free of enmity towards the Tamil invaders. Then he curling and lied down on ground without stretching his limbs. He exclaimed to the mother how he could stretch when the sea is on the south and the Tamil invaders are on the other side of the river Mahaveli. Kawantissatissa reigned sixty years from his coronation. This length of reign is not given in the other two chronicles. Gamani in the Mahavamsa had ten warriors each with the strength of ten elephants, and the names of the warriors are given. Rajavaliya also speaks of ten mighty warriors but gives the names of only two. These two are with fantastic tales about their strength and upbringing. Names of places where the battles between Gemunu’s forces and the Elara’s forces took place are in conflict with those in the Mahavamsa. Gamani won the second battle, as per the Mahavamsa, by pretending to offer his mother to the Elara’s general, and this incident is not narrated in the Rajavaliya. Gemunu’s wish to distinguish his forces from the Tamils is divine granted. This is not in the Mahavamsa. Bhalluka came with thirty thousand troops as per the Rajavaliya, but he came with sixty thousand troops as per the Mahavamsa. The Bhalluka episode is not at all mentioned in the Dipavamsa. Gemunu brought the relic from the Naga world, it is not explained how he got it. There is no information about any son of Gemunu in the Rajavaliya. Sedetissa, younger brother of Gemunu, ruled for thirty-seven years after Gemunu. The corresponding king in the other chronicles is Sadhatissa, and ruled only for eighteen years, not thirty-seven years as stated in the Rajavaliya. Then his son Tulana ruled for one year and eight months, but the length of reign is one year and ten months as per the other two chronicles. Leminitissa killed Tulana and ruled for thirty-nine years. Lineage of Leminitissa is not clear. Then his younger brother Valagambahu ruled for five months. Then seven Tamils landed from Soli country with seven thousand men and captured the kingdom. Valagambahu fled the scene. It is strange that seven thousand men from a foreign country were able to capture the kingdom. Looking back at the number of men mentioned in the battles between Gemunu and Elala, there must have had been comparatively larger body of troops! The episode of Brahmin from Rohana in the Mahavamsa is not given in the Rajavaliya. One of the seven Tamils pursued the king, and got his chief queen and returned with her. However, as per the Mahavamsa, the king left his chief queen and went with others. Another one returned with Buddha’s alms bowl. Tamils must be Buddhists to be satisfied with the alms bowl of Buddha! The remaining five Tamils reigned one after the other, for fourteen years. The Mahavamsa says that they ruled for fourteen years and seven months. These Tamils’ names are not given in the Rajavaliya, but given in the Mahavamsa. Then Valagambahu returned and ruled for twelve years. The name is not Valagambahu, but Vattagamani in the Mahavamsa and the Dipavamsa. The Dipavamsa refers to five Tamils only. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 110 தொடரும் / Will follow துளி/DROP: 2046 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 109 https://www.facebook.com/groups/978753388866632/posts/33896997296615483/? "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 110 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 110 / பின் இணைப்பு – இராசவலியவின் சுருக்கம் வாலகம்பாஹுவுக்குப் [Valagambahu] பிறகு மகாதேலியன் [Mahadeliya] ஐம்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். மகாதேலியன் எவ்வாறு அரியணை ஏறினார் என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும், தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தின்படி, நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட கால எல்லையில் மூத்தசிவனுக்குப் பிறகு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் யாரும் ஆட்சி செய்யவில்லை. மேலும் இராசாவலியவில், ஜம்புத் தீவு அல்லது நாவலந்தீவில் [Jambudvipa] மிலிந்து [Milindu] என்ற மன்னனைப் பற்றியும், ஒரு பிராமணன் மற்றும் அவரது மனைவியைப் பற்றியும் ஒரு கதை அங்கு உள்ளது. என்றாலும் இந்தக் கதை மற்ற இரண்டு நாளாகமங்களிலும் இல்லை. மிலிந்து என்ற மன்னனின் துஷ்பிரயோகம் காரணமாக இந்தியாவில் பன்னிரண்டு ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்டது. இந்தக் கதை, பின்னர் சிங்களவர்களால் பத்தினி தெய்வமாக வணங்கப்பட்ட கண்ணகியின் [Goddess Pattini Kannagi] கணவருக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டத்துடன் ஓரளவு ஒற்றுமையையும் கொண்டுள்ளது. சோரநாகன் [Chora Naga, also known as Coranaga or Mahanaga] பதினெட்டு விகாரைகளை தரைமட்டமாக்கியதால் இலங்கையில் மூன்று ஆண்டுகள் பஞ்சம் ஏற்பட்டது. இந்த மன்னரின் ஆட்சிக் காலத்தில் மற்ற இரண்டு நாளாகமங்களிலும் மேலே கூறப்பட்ட இந்த இரண்டு பஞ்சங்களும் இல்லை. என்றாலும் பன்னிரண்டு ஆண்டு பஞ்சம் என்பது மௌரிய வம்சத்தை நிறுவிய சந்திரகுப்த மௌரியரின் [Chandragupta Maurya, the founder of the Maurya dynasty] காலத்தில் ஏற்பட்ட பன்னிரண்டு ஆண்டு பஞ்சத்தைக் குறிக்கலாம்?. ஆனால் அது நிகழ்ந்த அல்லது நடந்த காலம் வேறுபட்டது என்பது குறிப்பிடத் தக்கது. சோரநாகன் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார், மக்கள் அவரைக் கொன்றனர். மகாவம்சத்தின்படி சோரநாகன் மக்களால் அல்ல, அவரது மனைவி அனுலாவால் [Anula] விஷம் வைத்து கொல்லப்பட்டார். பக்கம் 45 இல் சோரநாகரின் ஆட்சி முடிவுக்கு வரும்போது அறுநூற்று இருபத்து மூன்று (623) ஆண்டுகள், புத்தர் இறந்ததில் இருந்து [அல்லது விஜயன் இலங்கைக்கு வந்ததில் இருந்து] கடந்துவிட்டன என்று கூறப்பட்டுள்ளது? மகாவம்சத்தின்படி சோரநாகனின் ஆட்சியின் முடிவு கி.மு 50 ஆகும். [Chora Naga, also known as Coranaga or Mahanaga, was King of Anuradhapura in the 1st century BC, who ruled from 62 BC to 50 BC] எனவே ஆண்டுகளின் எண்ணிக்கை 483 - 50, மொத்தம் 433 ஆண்டுகள் இருக்க வேண்டும்? எனவே நாளாகமங்களுக்கிடையே மோதல் அல்லது வேறுபாடு வரலாற்று ரீதியாக உள்ளது. சோரநாகனின் ஆட்சிக்குப் பிறகு இராசாவலியத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்ற இரண்டு முன்னைய நாளாகமங்களில் உள்ள விவரங்களுடன் மிகவும் வேறுபடுகின்றன. மகாதெலிய திஸ்ஸனின் [Mahadeliya Tissa or Mahakuli Mahatissa, also known as Maha Cula Maha Tissa] மகன் குட்ட திச்சன் அல்லது குட திச்சன் [Kuda Tissa], சோரநாகத்திற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். தலைமை ராணி அவனைக் கொன்று, மந்திரி சுராகித்தை [Surakit] ஒரு வருடம் ஆட்சி செய்ய வைத்தாள். மற்ற இரண்டு நாளாகமங்களிலும் அவளுடைய பெயர் அனுலா என்றாலும், தலைமை ராணியின் பெயர் இராசாவலியத்தில் அடையாளம் காணப்படவில்லை. தலைமை ராணி சுராகித்தைக் கொன்று, ஒரு தமிழரான முகவேட்டியை [Mukavetti] ஒரு வருடம் ஆட்சி செய்ய வைத்தாள். தலைமை ராணி மீண்டும் முகவேட்டியைக் கொன்று, தனது குடும்பப் பூசாரியான பிராமணரை ஒரு வருடம் ஆட்சி செய்ய வைத்தாள். பின்னர் அவள் அந்த பிரமணனைக் கொன்று நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள். குட திச்சனின் மகன் மகலன் திச்சனால் [Makalantissa, the son of Kuda Tissa] அவள் கொல்லப்பட்டு, இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். பின்னர் மகலன் திச்சனின் மகன் பாட்டியா [Bhatiya] பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் அவரது தம்பி மகாதெலியா [Mahadeliya] பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். தலைமை ராணியின் பூசாரியாக ஒரு பிராமணர் இருந்தார் என்பது சுவாரஸ்யமானது, காரணம் அவன் இந்து சமய பூசாரியாகும். அவரது மகன் அடகேமுனு [Adagemunue] ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். எந்த உயிரினமும் அழிக்கப்படக்கூடாது என்று அவர் தடை விதித்தார். மகாவம்சத்தின்படி, இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்ட ஒகாரிக திச்சன் [Voharikatissa] தான் இந்த மன்னன். இங்கே நிறைய காலப் பொருத்தமின்மை காணப்படுகிறது. பின்னர் ஆறு அல்லது ஏழு மன்னர்கள் ஆட்சி செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சிக்காலம் காணப்படவில்லை. ஏழு மன்னர்கள் என்று மன்னர்களின் அட்டவணை கூறுகிறது, ஆனால் அது உரையில் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஏழு மன்னர்களும் சொர்க்கத்திற்குச் சென்றனர். எனவே, அவர்களின் ஆடசி மிகவும் சரியானதாக இருக்க வேண்டும்? அதன் பிறகு மன்னர் வேஹெப் [Vehep] நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் அவரது மகன் சினநம்பப்பா [Sinanambapa] என்றும் அழைக்கப்படும் வன்னேசிநம்பப்பா [Vannesinambapa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரது காலத்தில் சோழ நாட்டின் மன்னர் தமிழர்களின் படையுடன் வந்து பன்னிரண்டாயிரம் பேர்களை கைதிகளாக பிடித்துச் சென்றார். என்றாலும் சோழ மன்னன் பன்னிரண்டாயிரம் கைதிகளை சோழ நாட்டிற்கு பிடித்துச் சென்றதை அல்லது இந்த சம்பவத்தை தீபவம்சமும் மகாவம்சமும் கூறவில்லை. எனவே இது 100 , 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகலெடுக்கும் செயல்பாட்டின் போது பின்னர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்? மற்ற இரண்டு நாளாகமங்களில் வன்னேசிநம்பப்பாவின் [Vannesinambapa] தொடர்புடைய மன்னன் வங்கனாசிக தீசன் அல்லது வங்க நாசிக தீசன் [Vankanasikatissa] ஆவார். தீபவம்சம் 22 - 28 இன் படி, 'வங்கநாசிகதீசன் இறந்த பிறகு அவரது மகன் முதலாம் கஜபாகு அல்லது கஜபாகுக காமணி [Gajabahu I or Gajabahuka Gamani] இருபத்திரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்'. தீபவம்சத்தில் இந்த மன்னரைப் பற்றி வேறு எதுவும் இல்லை. மகாவம்சத்தின் 35 ஆம் அத்தியாயத்தின் 112 முதல் 122 வரையிலான வசனங்கள் வங்கனாசிக தீசன் மற்றும் அவரது மகன் கஜபாகுக காமணி ஆகியோரைப் பற்றியது, மேலும் வங்கனாசிக தீசன் ஆட்சிக் காலத்தில் சோழ மன்னன் இலங்கைக்கு வந்து கைதிகளுடன் திரும்பியதற்கான எந்தக் குறிப்பும் அங்கு இல்லை. மற்ற இரண்டு நாளாகமங்களிலும் கஜபாகுக காமணி கடல் ஒதுங்கி [ கடலுக்கு நடுவில் நடந்து போக பாதை அமைத்து கொடுத்து], கடலுக்கிடையில் நடந்து போக வழிவிட, அதனூடாக சோழ நாட்டிற்கு நடந்து சென்று கைதிகளை மீண்டும் அழைத்து வந்ததற்கான எந்தக் குறிப்பும் கூட அங்கு இல்லை. கடல் இடைவெளி விட்ட பாதைகளுக்கு ஊடாக சுமார் நாற்பது மைல் தூரம் நீண்ட நடைப்பயணமாக இருந்திருக்க வேண்டும். சிங்கள பௌத்தர்களிடையே தமிழர்களின் வெறுப்பின் விதைகளைக் விதைப்பதற்கான பிற்கால துறவி எழுத்தாளர்களின் தெளிவான சதி இதுவாக இருக்கலாம்? போர்த்துக்கேயர்கள் [Portuguese] பைபிளுடன் வந்த பிறகு இது செருகப்பட்டிருக்க வேண்டும்? கஜபாகுக காமணி நடக்க வழிவகுத்த, கடல் பிளந்தது வழி விட்ட கதை பைபிளிலிருந்து ஒரு அப்பட்டமான திருட்டு போல் தெரிகிறது. மேலும் மொழிபெயர்ப்பாளர் பி. குணசேகரன் முன்னுரையில் 'அவர், இராசவாலியவை எழுதியவர், கிறிஸ்தவர்களுக்கு இயல்பான சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறார்' [‘he uses phraseology natural to Christian’.] என்று கூற இதுவே காரணமாக இருக்கலாம்? Part: 110 / APPENDIX – "Summary of Rajavaliya" Mahadeliya succeeded Valagambahu and reigned for fifty years. How Mahadeliya succeeded to the throne is not given. Furthermore, no one reigned for more than fifty years after Mutasiva as per the Dipavamsa and the Mahavamsa for the period under consideration. There is a story about a king, Milindu, in Jambudvipa and about a Brahamin and his wife. This story is not in the other two chronicles. There was a twelve-year famine in India due to the wickedness of the king Milindu. This story has some resemblance with the ill fate that happened to the husband of Kannagi who was later venerated by the Sinhalese as the Goddess Pattini. There was a famine for three years in Lanka as Choranaga demolished eighteen Viharas to the ground. These two famines are also not in the other two chronicles during the reign of this king. The twelve-year famine must have the reference to the twelve-year famine that happened during the time of Chandragupta Maurya, the founder of the Maurya dynasty. The time when it occurred is different. Choranaga ruled for twelve years, and the people killed him. Coranaga was poisoned by his wife Anula as per the Mahavamsa, and not killed by the people. It is stated on page 45 that six hundred and twenty three (623) years have elapsed by the time the Choranaga’s rule came to an end. The end of Coranaga’s rule as per the Mahavamsa is 9 A. D. Therefore the number of years must be, 483 + 9, 492 years. There is conflict between the chronicles. The details given in the Rajavaliya after the rule of Choranaga is quite at variance with that in the other two chronicles. Kuda-Tissa, the son of Mahadeliya Tissa, ruled for three years after Choranaga. The chief queen killed him, made the minister Surakit to rule for one year. The name of the chief queen is not identified in the Rajavaliya, though her name is Anula in the other two chronicles. The chief queen had assassinated Surakit, and made Mukavetti, a Tamil, to rule for one year. The chief queen again assassinated Mukavetti, and made her family priest, a Brahmin, to rule for one year. She then had the priest assassinated and ruled for four months. She put to death by Makalantissa, the son of Kuda Tissa, and reigned for twenty-two years. Then Bhatiya, the son of Makalantissa, ruled for eighteen years. Then his younger brother, Mahadeliya, ruled for twelve years. It is interesting to note that a Brahmin was the priest of the chief queen. His son Adagemunue reigned for nine years. He prohibited that no living being should be destroyed. Voharikatissa is the king, as per the Mahavamsa, who made the similar proclamation. There is quite a lot of time mismatch here. Then six or seven kings ruled, but the lengths of their reigns are not stated, table says seven kings, but it is not very clear in the text. These seven kings passed away to heaven, and therefore, their rules must be very proper. Thereafter king Vehep reigned for forty-four years. Then his son Vannesinambapa, also known as Sinanambapa, ruled for three years. During his time the king of the Soli country came with an army of Tamils and carried away twelve thousand prisoners. The Dipavamsa and the Mahavamsa did not record this coming of Soli king and taking away twelve thousand prisoners to Soli country. This must be a later inclusion during the copying process. Vankanasikatissa in the other two chronicles is the corresponding king to Vannesinambapa. As per the Dipavamsa, 22 – 28, ’After the death of Vankanasikatissa his son Gajabahukagamani reigned for twenty two years’. There is nothing more about this king in the Dipavamsa. The verses 112 to 122 of the chapter 35 of the Mahavamsa are about the kings Vankanasikatissa and his son Gajabahukagamani and there is no reference to the coming of the Soli king and returning with prisoners during the reign of Vankanasikatissa. There is also no reference of Gajabahukagamani walking through the sea walls to Soli country to bring back the prisoners in the other two chronicles. It must have been a long walk of about forty miles between two water walls. This is the clear plot of latter day monkish authors to saw the seeds of hatred of Tamils among the Sinhala Buddhists. This must have been inserted after the arrival of the Portuguese with the Bible. The sea parting to provide path for Gajabahukagamani to walk is a naked plagiarism from the Bible. Perhaps this might be the reason for the translator, B. Gunasekara, to say in the Preface that ‘he uses phraseology natural to Christian’. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 111 தொடரும் / Will follow துளி/DROP: 2048 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 110 https://www.facebook.com/groups/978753388866632/posts/33913180414997171/?
  10. இன்றைய இறுதியான முதல்சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஓமான் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. வாசிம் அலி மாத்திரம் நிதானமாக 32 (33 பந்துகளில்) ஓட்டங்களை எடுத்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் வீழ்ந்து, இறுதியில் 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 104 ஓட்டங்களுடனும் சுருண்டுகொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் மிச்செல் மார்ஷும், ட்ராவிஸ் ஹெட்டும் பந்துகளை நாலாபக்கமும் விளாசித் தள்ளி 6 ஓவர்களிலேயே 73 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். தொடர்ந்தும் வேகமாக அடித்தாடியபோதும் ட்ராவிஸ் ஹெட் 32 ஓட்டங்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். எனினும் மிச்சல் மார்ஷ் மின்னல் வேகத்தில் ஆட்டமிழக்காமல் 64 (33 பந்துகளில்) ஓட்டங்கள் எடுத்து 9.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். முதல் சுற்றின் 40 போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  11. 'மகா சங்க மாநாடு' - 10 அம்சங்களைக் கொண்ட சங்கப் பிரகடனம் வௌியீடு Feb 20, 2026 - 06:33 PM பௌத்த மதத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் தற்போது விடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மகா சங்க மாநாடு' இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது. அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டின் போது, பௌத்த சாசனம், பிக்குகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் சமூக நெருக்கடிகளைத் தணிப்பதற்காக நாட்டின் அனைத்து பிக்குகளும் பௌத்த தலைவர்களும் இணைந்து 'சங்கப் பிரகடனம்' ஒன்றை வெளியிட்டனர். அனைத்து பிக்குகளினதும் கையொப்பங்களுடன் கூடிய இந்தப் பிரகடனம் விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வணக்கத்திற்குரிய அகலகட சிறி சுமன தேரர் தெரிவித்தார். 10 அம்சங்களைக் கொண்ட அந்த சங்கப் பிரகடனம் வருமாறு: 01. அர்ஹத் மஹா மஹிந்த தேரர் பௌத்த தர்மத்தை இலங்கைக்குக் கொண்டு வந்து நிறுவியது அன்றைய ஆட்சியாளர் தேவநம்பியதிஸ்ஸ மன்னரின் முழுமையான ஆதரவுடன் என்பதை நினைவூட்டுவதுடன், அன்று முதல் அரசும், பௌத்தமும் பின்னிப்பிணைந்துள்ளன. பௌத்த போதனைகளின் அடிப்படையில் ஒரு தார்மீக நாட்டை உருவாக்கும் பொறுப்பு ஆட்சியாளருக்கும் மதத்திற்கும் உண்டு. இந்த வரலாற்று ரீதியான உரிமையை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். 02. பௌத்தத்தையும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கலாச்சாரங்களையும், முந்தைய மன்னர்களால் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட புனிதத் தலங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு உடரட்ட ஒப்பந்தத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், புத்த சாசனம் 1972 மற்றும் 1978 அரசியலமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நீதிமன்றங்களால் வரையறுக்கப்பட்டுள்ளதால், அரசாங்கம் இந்த அரசியலமைப்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். 03. தேசத்தின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு வரலாற்று ரீதியாக நிறுவப்பட்ட சாதாரண-துறவி உறவைச் சார்ந்துள்ளது, மேலும் சோழர்கள், மேற்கத்திய சதிகாரர்களோ அல்லது விடுதலைப் புலிகளோ இந்த உறவை அழிக்க முடியாது என்பதுடன், சமூக ஊடகங்கள் உட்பட அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளால் எடுக்கப்பட்ட குறுகிய பார்வை கொண்ட நடவடிக்கைகளைத் தோற்கடிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும், அதை உடைத்து அந்நியப்படுத்தவும் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். 04. பௌத்த அரசியல் தத்துவத்தின்படி ஆட்சி செய்ய வேண்டியதன் அவசியத்தையும், குறிப்பாக பௌத்தம் பரிந்துரைத்த தசராஜ தர்மத்தின் நான்கு கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலமும், நான்கு பாரபட்சங்கள் இல்லாமல் நாட்டை ஆள வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். கடந்த கால ஆட்சியாளர்கள் பௌத்தத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் செயல்பட்டதால், இலங்கையின் அரசராக யாரும் இருக்கக்கூடாது என்று கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளது. 05. பண்டைய காலங்களிலிருந்தே புத்தர் சிலை இலங்கையின் பக்தியுள்ள பௌத்த மக்களால் மிகவும் மதிக்கப்படும் ஒரு புனிதப் பொருளாக இருந்து வருகிறது என்பதையும், சமாதி, அவுகன மற்றும் கல் விகாரை போன்ற சிறந்த படைப்புகள் பண்டைய மன்னர்களால் மக்களின் தூய்மையை மேம்படுத்த மிகுந்த முயற்சியுடன் கட்டப்பட்டன என்பதையும், இந்த மத மற்றும் கலாச்சார பாரம்பரியங்கள் இன்றுவரை மிகவும் மதிக்கப்படுகின்றன என்பதையும் நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். எனவே, புத்தர் சிலையை அவமதிக்கும் எந்தவொரு வடிவமோ அல்லது செயலோ அரசாங்கமோ அல்லது வேறு எந்த சமூக நிறுவனமோ எடுக்கக்கூடாது என்றும், தேவையான நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக எடுக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். 06. பௌத்த கல்வியின் தலைமையகம் அனுராதபுரம் மகா விஹாரை என்பதையும், அன்றிலிருந்து பிக்குகள் நாட்டு மக்களின் முக்கிய ஆசிரியர்களாக இருந்து வருவதாகவும், அதிலிருந்து ஒரு ஒழுக்கமான மாணவர் தலைமுறை கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும, உயர் இலக்கியக் கலைகளை நாட்டிற்கு மரபுரிமையாகக் கொண்டு வருவதன் மூலம் பிக்குகளின் கல்விப் பணி பாராட்டப்பட வேண்டும் என்பதையும், வித்யலங்கார பிரிவேனாவிலிருந்து அதன் மூலம் பல்கலைக்கழகங்கள் வரை இலங்கையில் பௌத்த கல்வி எவ்வாறு வளர்ந்தது என்பதன் அடிப்படையில் நவீன பிரிவேனாக்கள் மற்றும் பாடசாலை கல்வி கட்டமைக்கப்பட வேண்டும் என்பதையும், பாடத்திட்ட உருவாக்கத்தில் பௌத்த கல்விக் கொள்கைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நாங்கள் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறோம். 07. முந்தைய ஜனாதிபதிகள் அமைச்சர் பதவிகளை வகித்ததால் செயல்படுத்தப்பட்ட புத்த சாசன அமைச்சகம், தற்போது முறையான அமைச்சர் இல்லாததால் செயலற்று நீர்த்துப் போய்விட்டதால், புத்த சாசன அமைச்சகத்தையும் பௌத்த விவகாரத் துறையையும் ஒரு திறமையான நிறுவனமாக மாற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். 08. "தேவோ வஸ்ஸது காலேன" என்ற பௌத்த வசனத்தில் கூறப்பட்டுள்ளபடி, நாட்டின் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக வளர்ச்சியின் அடிப்படை அடித்தளமாகக் கருதப்படும் ஒரு நீதியான அரசு ஆட்சிக்கான மக்களின் வரலாற்று அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசை வழிநடத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். 09. பௌத்த தொல்பொருட்கள், புனித இடங்கள், விகாரைகள் என்பன பிக்குகளின் தனிப்பட்ட சொத்துக்கள் அல்ல, அவை தேசத்தின் பாரம்பரிய சொத்துக்களாகும். அவற்றை எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 10. பிக்குகளை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுதல், சமூக ஊடகங்கள் ஊடாக அவதூறு பரப்புதல் போன்ற பிக்குகளின் கௌரவத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகள் அரசாங்கத்தின் கீழ் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். https://adaderanatamil.lk/news/cmluwga6w0009356par0jw9tn
  12. அவுஸ்திரேலியாவின் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கு சிறந்த குடிமகனுக்கான விருது 20 Feb, 2026 | 02:28 PM அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பகுதியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனர் மோசஸ் வேதமுத்து, பரமட்டா 2026 ஆம் ஆண்டின் சிறந்த குடிமகன் (Citizen of the Year) விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரமட்டா மற்றும் மேற்கு சிட்னி பகுதிகளில் உதவி தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவரது சேவையை பாராட்டி, ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விழா பரமட்டா டவுன் ஹாலில் நடைபெற்றது. மோசஸ் வேதமுத்து SOHAS அறக்கட்டளையின் (Support for Homeless and Asylum Seekers) நிறுவனர் மற்றும் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில், வீடற்றவர்கள், புகலிடம் கோருவோர், சர்வதேச மாணவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் முதியோர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினருக்கு ஆதரவு வழங்கும் பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரது அர்ப்பணிப்பான சமூகப் பணியை முன்னிட்டு, வருடாந்திர குடிமகன் விருது வழங்கும் விழாவில் அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றது குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஆண்டின் சிறந்த குடிமகனாக தேர்வு செய்யப்பட்டது எனக்கு மிகுந்த பெருமையும் பொறுப்பும் அளிக்கிறது. இது எனது சேவையை மேலும் சிறப்பாக செய்யும் உந்துதலை அளிக்கிறது” என கூறினார். மேலும் அவர் கூறுகையில், “ஒரு நல்ல குடிமகனாக இருப்பது என்பது, சமூகத்தின் நலனுக்காக பொறுப்புடன் செயல்படுவதாகும். நமது சிறிய செயல்களே தேவைப்படுபவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் நம்புகிறேன். இந்த விருது எனது சேவை, பொறுப்பு மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் உறுதியை பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும், சமூக சேவையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மோசஸ் வேதமுத்துவின் இந்த சாதனை, தமிழர் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும். https://www.virakesari.lk/article/239154
  13. உச்ச நீதிமன்றின் 9 நீதிபதிகளில் 6 பேர் குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள். இதனால் ரம்பும் எதற்கெடுத்தாலும் தமக்கு சார்பாக தீர்ப்பு வழங்குவார்கள் என்று எண்ணி எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்று செல்வார். இந்த தீர்ப்பு எல்லோருக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தான்.
  14. கனடாவை இலகுவாக வெற்றிகொண்டு நாடு திரும்புகிறது ஆப்கானிஸ்தான் Published By: Vishnu 19 Feb, 2026 | 11:06 PM (நெவில் அன்தனி) இந்த வருட ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் எதையாவது சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் சராசரி பெறுபேறுகளுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வியாழக்கிழமை (19) விடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற கடைசி டி குழு போட்டியில் கனடாவை 82 ஓட்டங்களால் வெற்றிகொண்ட திருப்தியுடன் ஆப்கானிஸ்தான் நாடு திரும்புகிறது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்றது. மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய இப்ராஹிம் ஸத்ரான் ஆரம்ப விக்கெட்டில் ரஹ்மானுல்லா குர்பாஸுடன் 47 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் சிதிக்குல்லா அத்தலுடன் 95 ஓட்டங்களையும் பகிர்ந்தார். இப்ராஹிம் ஸத்ரான் 56 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 95 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவரை விட சிதிக்குல்லா அத்தல் 44 ஓட்டங்களையும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்கரன் சிங் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். மிகவும் கடினமான 201 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் ஹார்ஷ் தக்கர் 30 ஓட்டங்களையும் சாத் பின் ஸபர் 28 ஓட்டங்களையும் யுவ்ராஜ் சம்ரா 17 ஓட்டங்களையும் பெற்றனர். ஹார்ஷ் தக்கர், சாத் பின் ஸபர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து கனடாவின் மொத்த எண்ணிக்கை 100 ஓட்டங்களைக் கடக்க உதவினர். பந்துவீச்சில் மொஹம்மத் நபி 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ராஷித் கான் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: இப்ராஹிம் ஸத்ரான் https://www.virakesari.lk/article/239100
  15. உலக நாடுகளுக்கு டிரம்ப் விதித்த வரியை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம் - நேரலை தகவல் பட மூலாதாரம்,Getty Images 20 பிப்ரவரி 2026, 15:23 GMT புதுப்பிக்கப்பட்டது 13 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் (இச்செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அமெரிக்காவின் உச்சநீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என கூறி, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கடந்த ஆண்டு டிரம்ப் வரி விதித்தார். நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பதிலாக, 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் இந்த வரிகளை விதித்தது. ஆகஸ்ட் 2025 இல், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் டிரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தது, ஆனால் அவை அமலில் இருக்க அனுமதிக்கப்பட்டன. அந்த மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வெள்ளை மாளிகை கோரிக்கை வைத்ததால், விவகாரம் இறுதியில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. பட மூலாதாரம்,Getty Images நீதிபதிகள் கூறியது என்ன? அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், டிரம்ப் தனது அதிகாரங்களை மீறி தேசிய அவசரநிலைக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியது. சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் வரிகளை விதிக்க அனுமதிக்கவில்லை என நீதிபதிகள் கூறினர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி கூறியது என்ன? பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதம் பாடிய 4 மாணவர்களுக்கு என்ன நேர்ந்தது? மலேசியா வாசுதேவன் பாடிய 'மயங்க வைக்கும்' 10 பாடல்கள் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் சூப்பர்-8ல் கவலை தரும் 3 விஷயங்கள் எவை? End of அதிகம் படிக்கப்பட்டது உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் வரி ரத்துக்கு ஆதரவாகவும், 3 பேர் இந்த தீர்ப்புக்கு எதிராகவும் இருந்தனர். ஆனால், பெரும்பான்மை நீதிபதிகளின் ஆதரவு இருந்ததால் வரி ரத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட வரி ஏப்ரல் மாதத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பொருட்களுக்கு வரிகளை அறிவித்தார். இந்த வரிகள் மூலம், அரசுக்கு வரும் வரிவசூல் அதிகரிக்கும், அமெரிக்கர்கள் அதிகமாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவார்கள், அமெரிக்காவில் முதலீடு அதிகரிக்கும் என டிரம்ப் கூறினார். ஆனால் விமர்சகர்கள், இதனால் பொருட்களின் விலை உயரக்கூடும் என்றும், உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் கூறினர். பிற நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருக்கும் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க தான் விரும்புதாக டிரம்ப் கூறினார். டிரம்பால்அறிவிக்கப்பட்ட பல வரிகள் பின்னர் திருத்தப்பட்டன அல்லது தாமதப்படுத்தப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly1zx1nzgjo
  16. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி Published By: Vishnu 20 Feb, 2026 | 08:54 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெற்றிலைப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவரது சமூக வலைப்பதிவில் பதிவிட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தரும், மிகுந்த நெரிசல் கொண்ட சுகாதார நிலையமாகும். இவ்வளவு பெரும் மக்கள் வருகையுள்ள சூழலில் வைத்தியசாலையை சுத்தமாகவும் சுகாதாரத் தரநிலைகளுக்கு இணங்கவும் பேணுவது எங்களின் முதன்மை பொறுப்பாகும். இத்தகைய நோக்கத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தினமும் இரவு பகலாக பணியாற்றி, வார்டுகள், நடைபாதைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் மிகுந்த தூய்மையுடன் பராமரித்து வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு சேவையால் வைத்தியசாலை சுத்தமான சூழலை நிலைநிறுத்தி வருகிறது. ஆயினும், சிலர் வெற்றிலைப் பயன்படுத்தி எச்சில் துப்புவதன் மூலம் வைத்தியசாலை வளாகத்தில் அசுத்தமும் அசௌகரியமும் ஏற்படுகிறது. இது சுகாதாரத் தரநிலைகளுக்கு முரணானதோடு, நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அரசாங்கத்தின் பொது இடங்களை பாதுகாக்கும் விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைவாக, வைத்தியசாலை வளாகத்தில் வெற்றிலைப் பயன்படுத்துதல் மற்றும் எச்சில் துப்புதல் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பல அறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைத்தியசாலை முழுவதும் பதியப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் இத்தடை மீறப்படின், சம்பந்தப்பட்டவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்காக அனுப்பப்படுவார்கள் என்பதை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்த வைத்தியசாலை உங்கள் அனைவரின் வைத்தியசாலையாகும். அதனை சுத்தமாகவும் சுகாதாரமான சூழலுடனும் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாகும். எனவே, இத்தகைய செயல்களில் இருந்து முழுமையாக விலகி, சுத்தம் மற்றும் ஒழுங்கை பேணுவதில் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/239187
  17. Today
  18. பழைய ஆட்களை சந்திக்க கிளுகிளுப்பாக இருந்திருக்குமே? தட்டச்சு செய்ய பிரச்சனை இல்லையோ? என்னை மாதிரி ஒத்தை விரல் தானோ?
  19. இன்று காலையில் வீட்டிற்கு வந்து விட்டேன். 🙂 நலம் விசாரித்த @Paanch அண்ணை, @குமாரசாமி அண்ணை, @விளங்க நினைப்பவன், @satan, @யாயினி, @alvayan, @ஈழப்பிரியன், @நியாயம், @ஏராளன், @suvy ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள். 🙏
  20. ஒமான் அணி தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ப‌டு கேவ‌ல‌மாய் விளையாடின‌து ம‌ற்ற‌ அணிக‌ள் அங்கினேக்க‌ ப‌ந்து வீச்சில் ம‌ட்டைய‌டியில் சாதிச்சின‌ம் ஒமான் அணி எல்லாத்திலும் சுத‌ப்ப‌ல்...........................
  21. இரண்டு கிழமைக்கு முன்பு... தோட்டத்தில் இருந்த ரோஜா செடிகளின் கிளைகளை வெட்டும் போது... முள் ஒன்று நடு விரலில் குத்தி விட்டது. இப்படி வேலை செய்யும் போது, வழமையாக குத்தினாலும்... அடுத்த நாளில், முள் குத்திய இடமே தெரியாமல் மாறிவிடும். இம்முறை, அது குத்திய சில மணி நேரங்களில்... விரல் பயங்கரமாக வீங்கி, சரியான குத்து வலியாக இருந்தது. நானும், இரண்டு நாள் பொறுத்து வைத்தியரிடம் செல்வோம்... அது வரை எமக்குத் தெரிந்த வீட்டு வைத்தியங்களான "ஐஸ்" ஒத்தடம் கொடுத்தல், "நோ" கிறீம் பூசுதல், நோவை குறைக்க சில குளிசைகள் என்று போட்டும், பலன் கிடைக்காததால்... குடும்ப வைத்தியரிடம் போக... அவர் இதுவரை நான் செய்த வைத்திய முறைகளை கேட்டு விட்டு, சிலவேளை கிருமி தொற்று ஏற்பட்டிருக்க சாத்தியக் கூறுகள் உள்ளது என்று... Antibiotic குளிசைகளை காலையும், மாலையும் 5 நாட்களுக்கு போடும்படி தந்தார். 5 நாட்களும் கடந்த பின்பும்... Antibiotic குளிசைக்கு நோவும், வீக்கமும் சொல்வழி கேட்கவில்லை. இப்படியே பொறுத்து இருந்தால்... கடைசியில் பிரச்சினை பெரிதாகி விடும் என நான் முடிவெடுத்து, அருகில் உள்ள வைத்தியசாலையின் அவசர நோயாளர் பிரிவிற்கு சென்று நடந்ததை சொல்ல... அவர்கள் "எக்ஸ் ரே", இரத்தப் பரிசோதனை எல்லாம் எடுத்து சோதித்து பார்த்து விட்டு... மூன்று நாட்களுக்கு, தினமும் மூன்று போத்தல் வீதம்... கையில் Antibiotic ஐ, திரவ வடிவில் ஏற்றி கண்காணிக்க வேண்டும் என்றும், வீக்கம் வற்றாது விட்டால்... அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் என்றும் சொன்னார்கள். நமக்கும்... ஆஸ்பத்திரி சாப்பாடு சாப்பிட்டு கனநாள், ஒரு மாற்றமாக இருக்கட்டுமே என்று , அவர்கள் நீட்டிய காகிதங்களில் கையெழுத்தை போட்டுக் கொடுத்து விட்டு... நான் அந்த ஆஸ்பத்திரியின் வாடிக்கையாளன் என்ற படியால், எங்கு அடுத்துப் போக வேண்டும் என்று எனக்கு ஒருவரும் கூட்டி வந்து காட்ட வேண்டிய தேவை இருக்கவில்லை . அவர்கள் தந்த சில காகிதங்களை வாங்கிக் கொண்டு, நான் தங்க வேண்டிய பகுதிக்கு பொறுப்பான "நேர்ஸ்" ஐ சந்திக்க சென்றேன். தொடரும்... ✍
  22. AmandaDonis joined the community
  23. கண்ணாலே பண்பாடும் . .......! படம் : திரும்பிப்பார் , நரசிம்மபாரதி & கிரிஜா .......! 😍
  24. வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய் ஆண் : சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய் கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் ஆண் : காதலே நீ பூ எறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல் எறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் ஆண் : இனி மீள்வதா ஆஅ இல்லை வீழ்வதா.. உயிர் வாழ்வதா ஆஅ இல்லை போவதா.. அமுதென்பதா விஷம் என்பதா.. இல்லை அமுதவிஷமென்பதா ஆண் : காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிக்கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுதேன் ஆண் : இது மாற்றமா ஆஅ தடுமாற்றமா.. என் நெஞ்சிலே ஏ பனி மூட்டமா.. நீ தோழியா… இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா…...! --- என் காதலே என் காதலே ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.