All Activity
- Past hour
-
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
'இரான் போரை முடிக்க பரிசீலனை' - ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு பற்றி டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கவில்லை. 21 மார்ச் 2026, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் உடனான போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒரு அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார். 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இரானுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் மற்றொரு புறம், தரைப்படை வீரர்களை இறக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "இரானில் உள்ள பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக மத்திய கிழக்கில் நாங்கள் மேற்கொண்டு வரும் எங்களது முக்கிய ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். ஏனெனில் எங்களது இலக்குகளை அடைவதற்கு மிக நெருக்கமாக நாங்கள் இருக்கிறோம்," என்று போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அவர் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். போர் தொடங்கிய நாள் முதல் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹோர்முஸ் நீரிணை குறித்துப் பேசிய டிரம்ப், "அதைக் (ஹோர்முஸ் நீரிணை) கண்காணிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான பொறுப்பை அதனைப் பயன்படுத்தும் நாடுகளே ஏற்க வேண்டும்," என்று கூறியுள்ளார். ஒரு மதிப்பீட்டின்படி, உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் வழக்கமாக ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடக்கிறது. "உதவி கேட்கப்பட்டால், ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதற்கான இந்த நாடுகளின் முயற்சிகளுக்கு நாங்கள் உதவுவோம்" என்று கூறிய டிரம்ப், "ஆனால் இரானிய அச்சுறுத்தல் நீக்கப்பட்ட பிறகு இது தேவையாக இருக்காது. முக்கியமாக, இது அந்த நாடுகளுக்கு ஒரு எளிதான ராணுவ நடவடிக்கையாக இருக்கும்," என்றும் தெரிவித்தார். மேலும், இரானுக்கு எதிரான போரில் இதுவரை எட்டியுள்ள இலக்குகள் குறித்தும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இரானின் ஏவுகணைத் திறன் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் ராணுவத் தொழில் கட்டமைப்பு பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் இரான் இனி ஒருபோதும் அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலையை நெருங்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தவிர, மத்திய கிழக்கில் உள்ள தனது நட்பு நாடுகளான இஸ்ரேல், சௌதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , பஹ்ரைன், குவைத் மற்றும் பிற நாடுகளுக்கு அமெரிக்கா மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பை வழங்கியுள்ளதாக டிரம்ப் கூறினார். டிரம்பின் செய்தி அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு பிடிக்காமல் போகலாம் பட மூலாதாரம்,Trump/Truth Social படக்குறிப்பு,இரானுக்கு எதிரான போரில் இதுவரை அடைந்துள்ள சாதனைகள் குறித்தும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பிபிசி செய்தியாளர் அந்தோணி சுர்ச்சரின் கூற்றுப்படி, அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் பாம் பீச் நோக்கி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த செய்தியாளர்களுக்கு டிரம்ப்பின் சமீபத்திய 'ட்ரூத் சோஷியல்' பதிவின் அச்சுப்பிரதிகள் வழங்கப்பட்டன. அதில் இரானில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை "படிப்படியாகக் குறைத்துக்கொள்ள" அவர் அழைப்பு விடுத்துள்ளார். தான் குறிப்பாக விளம்பரப்படுத்த விரும்பும் சமூக ஊடகச் செய்திகளுக்கு அதிபர் இதே முறையைத்தான் பயன்படுத்துகிறார். கடந்த அக்டோபர் மாதம், தென் கொரியாவில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனான சந்திப்பை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பிக் கொண்டிருந்த போதும் அவர் இதே போல செய்திருந்தார். இரான் குறித்த இன்றைய செய்தி மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதில் இரானுடனான போரில் அமெரிக்காவின் ராணுவ நோக்கங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவுடன் புளோரிடாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப், தனது வார்த்தைகளைத் ராஜ்ஜீய எச்சரிக்கையுடனேயே தேர்ந்தெடுத்துள்ளார் என்று தோன்றுகிறது. இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா தலைமை தாங்காது என்ற செய்தி, அமெரிக்காவின் நட்பு நாடுகளிடையே வரவேற்பைப் பெறாமல் போகக்கூடும். ஹோர்முஸ் நீரிணை குறித்து டிரம்ப் கூறியது என்ன? இந்த மோதல் முழுவதிலும் ஹோர்முஸ் நீரிணை அமெரிக்க அதிபரின் தொடர்ச்சியான கவனத்தைப் பெற்றுள்ளது. கப்பல் போக்குவரத்திற்காக இதனை மீண்டும் திறக்க வலுவான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். நேட்டோ நட்பு நாடுகளிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மார்ச் 3 அன்று, இந்த முக்கியமான கடல்வழிப் பாதை வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலுக்கும் "தீ வைப்போம்" என்று இரான் அச்சுறுத்திய போது, "தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை எண்ணெய் கப்பல்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லும்" என்று அமெரிக்க அதிபர் கூறினார். மார்ச் 10 அன்று, ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் செல்வதைத் தடுக்க இரான் "ஏதேனும் செய்தால்", ஏற்கனவே தாக்கியதை விட இருபது மடங்கு பலமாக அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்தார். இருப்பினும், இந்த குறுகிய கடல் பாதையைத் திறக்க நட்பு நாடுகளின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் கூறினார். மார்ச் 14 அன்று, "பல நாடுகள், குறிப்பாக இதனால் பாதிக்கப்படும் நாடுகள், தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும்" என்றார். மார்ச் 18 அன்று, அமெரிக்கா இரானிய ஆட்சியை "அழித்துவிட்டால்" ஹோர்முஸ் நீரிணையின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுப்பிய டிரம்ப் , "அதனைப் பயன்படுத்தும் நாடுகளே அதன் பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று பரிந்துரைத்தார். இன்று, அவர் நேட்டோ நாடுகளை விமர்சித்துப் பேசுகையில், அந்த நாடுகள் "அதிகரித்து வரும் எண்ணெய் விலையைப் பற்றிப் புகார் கூறுகின்றன, ஆனால் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது போன்ற எளிமையான ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவ முன்வருவதில்லை" என்று கூறினார். தரைப்படைகளை களமிறக்க ஆயத்தம் பட மூலாதாரம்,Contributor/Getty Images படக்குறிப்பு,இந்தப் புகைப்படம் மார்ச் 2 ஆம் தேதி எடுக்கப்பட்டது. இரானின் தலைநகரான தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட ஒரு மாபெரும் வெடிப்புக்குப் பிறகு, புகை மற்றும் தூசிக் குவியல் காணப்பட்டது. இரானில் ராணுவ நடவடிக்கையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று டிரம்ப் கூறிவரும் நிலையில், பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சிபிஎஸ் செய்தியின் படி, இரானில் தரைப்படை வீரர்களை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் விரிவான முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்த ஆலோசனைகள் குறித்து அறிந்த பல அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனின் மூத்த அதிகாரிகள், இத்தகைய நடவடிக்கையைத் திட்டமிடுமாறு சிறப்பு வேண்டுகோள் விடுத்து வருவதாக அந்த செய்தி கூறுகிறது. சிபிஎஸ் செய்தியின் படி, அமெரிக்கப் படைகள் இரானில் நிலைநிறுத்தப்பட்டால், இரானிய வீரர்களைச் சிறைபிடிக்கும் சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும். வெள்ளிக்கிழமை அதிபர் டிரம்ப் பேசுகையில், இரானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை "படிப்படியாகக் குறைத்துக்கொள்வது" குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாகக் கூறினார். இதற்கு முன்பு, தனக்கு போர்நிறுத்தத்தில் விருப்பமில்லை என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். தரைப்படை வீரர்களை "எங்கும்" அனுப்பும் திட்டம் தன்னிடம் இல்லை என்று அதிபர் டிரம்ப் முன்னதாகச் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். மேலும் அவர், "நான் அப்படிச் செய்தாலும், அதை நிச்சயமாக உங்களிடம் சொல்லமாட்டேன்," என்றும் குறிப்பிட்டார். வெள்ளிக்கிழமை, படையினரை நிலைநிறுத்துவது தொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை பதிலளிக்கவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அமெரிக்க மத்திய கட்டளை மையமும், சாத்தியமான படை நிலைநிறுத்த இடங்கள் குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg54661qeqpo
-
ஏராளன் started following அமெரிக்காவின் கூற்றை ஈரான் மறுப்பு – “உளவியல் போர்” என கடும் குற்றச்சாட்டு , முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா! and “யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல்
-
வட கொரியா நாடாளுமன்றத் தேர்தலில் கிம் ஜாங் உன் அமோக வெற்றி!
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து! வட கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை காதும் காதும் வைத்த மாதிரி ஆளுங்கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்துள்ளது. அந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் கிம் ஜோங் உன்-க்கு ஆதரவாக 99.93% வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 687 இடங்களிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியின் தலைவராக கிம் ஜோங் உன்னை தேர்வு செய்யும் இந்தத் தேர்தலில் கிம் வேட்பாளரே இல்லை என்பது கூடுதல் ருசிகரத் தகவல். வட கொரியாவில் ஆளும் கொரிய தொழிலாளர்கள் கட்சிதான் அங்கு சர்வாதிகாரம் பொருந்திய கட்சி. சில குட்டிக் குட்டி அரசியல் கட்சிகள் பெயரளவில் இயங்குகின்றன. அவர்களும் ஆளும் கூட்டணியின் கட்டுப்பாட்டில் தான் இயங்குவார்களே தவிர, அவர்களுக்கென்று எந்த சுயமான அரசியல் அதிகாரமும் இல்லை. அதனால் தேர்தல் களத்தில் அவர்கள் போட்டியாளர்கள் இல்லை. தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் யார் போட்டி என்பதை கட்சித் தலைமை முடிவு செய்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் தான் வாக்காளர்கள் முன்னால் இருக்கும் சாய்ஸ். அதனால் வட கொரிய தேர்தலில் வாக்காளர்கள் எஜமானர்கள் அல்ல. வாக்கை செலுத்த ஒரு கருவிதான் அவர்கள். தேர்தல் மட்டுமல்ல ஊடகமும், தேர்தல் தொடர்பான மக்கள் கருத்துகளும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. தேர்தல் நடைமுறையும் கூட ஜனநாயக நாடுகளைப் போல் ரகசிய வாக்கெடுப்பில் நடப்பதில்லை. ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவை அங்கீகரிக்கும் வகையிலும் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. வட கொரிய தேர்தல் நடைமுறையையும், அங்கே எதிர்க்கட்சியே இல்லை என்பதையும் தெரிந்து கொண்டதால், அங்கு 99.93% வாக்குகள் மட்டுமே பதிவானது எப்படி? 0.07% எங்கே போயின என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழலாம். வாக்காளர்கள் தங்கள் முன்னால் இருக்கும் ஒற்றை வேட்பாளருக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு தொழில்நுட்ப ரீதியாக இருந்தாலும் கூட, அதில் ரகசியத் தன்மை ஏதும் இல்லாததால் அப்படி வாக்களித்தால் அரசு துரோக நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். இதனால், இந்த 0.07% நெகடிவ் வாக்கு என்பது வெறும் அடையாளம். போலிக் கணக்கு என்று எளிமையாகச் சொல்லலாம். வட கொரியாவில் ஜனநாயகம் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக செய்யப்படும் சால்ஜாப்பு இது. வட கொரிய தேர்தல் என்பது கிம் ஜோங் உன்னின் கட்டுப்பாட்டில் நிகழும் தலைமையை கட்டளைப்படி ஒருமனதாக, முழுமையாக ஆதரிக்கும் நடைமுறையே தவிர, அரசியல் போட்டிகளின் ஊடே நடக்கும் ஜனநாயகத் தேர்தல் அல்ல. இதனால் தன் உலகம் முழுவதுமான ஊடகங்கள் வட கொரிய தேர்தலை ‘ரப்பர் ஸ்டாம்ப் தேர்தல்’ என்றழைக்கின்றன. கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!
-
“யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல்
“யார் உங்கள் நண்பன் என்பதை தீர்மானியுங்கள்” – இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் இலங்கைக்கு அறிவுறுத்தல் 21 Mar, 2026 | 11:47 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்திய தூதுவராக உள்ள அவர், இலங்கை தனது வெளிநாட்டு கொள்கையில் யாருடன் நெருக்கமாக செயல்படுகிறது என்பதை தெளிவாக நிர்ணயிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். “நாடுகள் தங்களின் நண்பர்கள் யார் என்பதை தெளிவாக தீர்மானிக்க வேண்டிய காலகட்டம் இது” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், பல நாடுகள் தங்களின் அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், இலங்கையின் நிலைப்பாடு குறித்தும் சர்வதேச மட்டத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் மாற்றங்கள் வேகமாக இடம்பெற்று வரும் சூழலில், சிறிய மற்றும் நடுத்தர நாடுகள் தங்களின் வெளியுறவு கொள்கைகளை மிகுந்த கவனத்துடன் முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இலங்கை, பாரம்பரியமாக பல்துறை வெளிநாட்டு கொள்கையை பின்பற்றி, பல நாடுகளுடன் நடுநிலையான உறவுகளை பேணிவருகின்றது. எனினும், தற்போதைய உலக அரசியல் சூழ்நிலை அந்த அணுகுமுறைக்கு புதிய சவால்களை உருவாக்கியுள்ளது. இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசாரின் கருத்து தொடர்பாக இலங்கை அரசாங்கத்திலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241545
-
இரானிய எண்ணெய் மீதான தடைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்கா
இரான் எண்ணெய் மீதான அமெரிக்க தடைகள் தளர்வால் இந்தியாவுக்கு என்ன லாபம்? பட மூலாதாரம்,LightRocket via Getty Images படக்குறிப்பு,இந்தியா தான் நுகரும் எண்ணெய் பொருள்களில் 90% வரை இறக்குமதி செய்கிறது, இது உலகளாவிய விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்தியாவை அதிகம் ஆட்படுத்தக்கூடியதாக மாற்றுகிறது. கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் இந்தியா செய்தியாளர் 21 மார்ச் 2026, 06:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் நெருக்கடியில் இருக்கும் உலகளாவிய எரிசக்தி சந்தைகளின் அழுத்தத்தைக் குறைக்க அமெரிக்கா பல்வேறு வாய்ப்புகளை ஆய்வு செய்து வரும் வேளையில், இரானிய எண்ணெய் குறித்து அமெரிக்கா மேற்கொண்டுள்ள தற்காலிக தடை நீக்கத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் ஒருவராக இந்தியா இருக்கலாம். தற்போது கடலில் உள்ள இரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அதை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும். உலக சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதே அமெரிக்காவின் இந்த முடிவின் நோக்கமாகும். அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "இந்தக் குறுகிய கால அங்கீகாரம், சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெய் சர்வதேச சந்தையில் கிடைக்க வழிவகுக்கும்" என்று கூறினார். இந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் எந்தவொரு நிதிப் பலன்களையும் இரான் "பெறுவது கடினமாக இருக்கும்" என்று பெசன்ட் கூறினார். இத்தகைய நடவடிக்கை, கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தியில் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்ய, பல கோடி பேரல் எண்ணெயை உலகச் சந்தைகளில் வெளியிடக்கூடும். தனது எண்ணெய்த் தேவையில் 90%-ஐ இறக்குமதி செய்யும் மற்றும் தள்ளுபடி விலையிலான விநியோகத்தைப் பெறுவதில் சாதனை படைத்துள்ள இந்தியாவுக்கு, ஒரு சிறிய தளர்வு கூட நிம்மதியையும் வாய்ப்பையும் வழங்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். போர் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில், இறுக்கமான உலகளாவிய விநியோகத்தைத் தளர்த்துவதற்கான ஒரு வழியாக பெசன்ட் இந்த நடவடிக்கையை முன்வைத்தார். இது, நீண்டகால அமெரிக்கக் கொள்கையில் ஒரு வியக்கத்தக்க மற்றும் நிச்சயமற்ற மாற்றத்தைக் குறிக்கும். பட மூலாதாரம்,Bloomberg via Getty Images படக்குறிப்பு,தடைகளுக்கு முன்பாக, 2018-இல் இரான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்ல ஒரு எண்ணெய் டேங்கர் தயாராகிறது. தற்போது கடலில் உள்ள இரானிய சரக்குகளை (அதன் அளவு சுமார் 140 மில்லியன் பேரல்கள் என்று அவர் குறிப்பிட்டார்) வாங்குபவர்களைச் சென்றடைய அனுமதிப்பதன் மூலம், 10 முதல் 14 நாட்களுக்கு மட்டுமே என்றாலும் சப்ளை பற்றாக்குறையைக் குறைக்கவும் விலையைக் கட்டுப்படுத்தவும் முடியும் என அமெரிக்கா நம்புகிறது, இந்த நடவடிக்கை சீனாவை விட்டு இரானிய எண்ணெய் விநியோகத்தைத் திசைதிருப்பக் கூடும், இதனால் சீனா சந்தை விலைக்கு நெருக்கமான விலையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும், அதே நேரத்தில் இந்தியா, ஜப்பான் மற்றும் மலேசியா உள்ளிட்ட பிற ஆசிய நுகர்வோருக்கு கச்சா எண்ணெய் கிடைக்கச் செய்யும் என்று பெசன்ட் கூறினார். (இரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் முக்கிய நாடாகச் சீனா உள்ளது.) இந்த மறுசீரமைப்பின் மையத்தில் இந்தியா இருக்கக்கூடும். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60%-க்கும் அதிகமாக வளைகுடா நாடுகளிலிருந்து - முதன்மையாக இராக், செளதி, குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து வருகின்றன. இந்த இறக்குமதிகளில் பாதி ஹோர்மூஸ் நீரிணை வழியாகப் பயணிக்கின்றன, இது தற்போது மோதலால் மூடப்பட்டுள்ள ஒரு குறுகிய வளைகுடாப் பாதையாகும். "சீன நுகர்வோர் (அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள்) மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் சேர்ந்து, கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியத் தேவை மையமாக இந்தியா உருவெடுக்கக்கூடும்," என்று கடல்சார் உளவுத் துறை நிறுவனமான கெப்லரின் சுத்திகரிப்பு மற்றும் எண்ணெய் சந்தை ஆய்வாளர் சுமித் ரிடோலியா கூறுகிறார். வரலாற்று ரீதியாக, இந்தியா இரானிய கச்சா எண்ணெயை வாங்கும் ஒரு முக்கிய நாடாக இருந்தது, 2018-இல் தடைகள் கடுமையாக்கப்படுவதற்கு முன்பு அதன் மொத்த நுகர்வில் இரானிய இறக்குமதி சுமார் 11.5% ஆக உயர்ந்தது. இரானிய 'லைட்' மற்றும் 'ஹெவி' ரக கச்சா எண்ணெய்கள் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மிகவும் பொருத்தமானவை மற்றும் பெரும்பாலும் சாதகமான விலை மற்றும் பணம் செலுத்தும் விதிமுறைகளுடன் வந்தன. அந்த வரத்து 2019-இல் நின்றது, முதலில் மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்க கச்சா எண்ணெயாலும், பின்னர் யுக்ரேன் போர் உலகளாவிய வர்த்தகத்தை மாற்றியமைத்த பிறகு பெருமளவு தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷ்ய பேரல்களாலும் மாற்றப்பட்டது. பட மூலாதாரம்,Anadolu via Getty Images படக்குறிப்பு,இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கடலில் மிதந்து கொண்டிருந்த பல மில்லியன் பேரல் ரஷ்ய எண்ணெயை வாங்கியுள்ளன. ரஷ்ய எண்ணெய் தள்ளுபடி விலையில் கிடைத்தபோது, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் களத்தில் இறங்கி, குறைந்தபட்ச இடையூறுகளுடன் இறக்குமதியை அதிகரித்தன. இரானிய பேரல்கள் மீண்டும் சந்தைக்கு வந்தால் இதே போன்ற ஒரு நிலை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் இப்போது வாதிடுகின்றனர். தற்போது சேமிப்பு மற்றும் போக்குவரத்தில் உள்ள சரக்குகள் உட்பட சுமார் 170 மில்லியன் பேரல் இரானிய கச்சா எண்ணெய் கடலில் இருப்பதாக கெப்லர் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அவை அனைத்தும் விற்கப்படாதவை அல்ல, ஆனால் ஒரு பகுதி இன்னும் விற்கப்படாமல் உள்ளது, "இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள், முந்தைய அனுபவம் மற்றும் நிறுவப்பட்ட வர்த்தக அமைப்புகளின் ஆதரவுடன், குறைந்தபட்ச செயல்பாட்டு மாற்றங்களுடன் இந்த பேரல்களை மீண்டும் ஒருங்கிணைக்கும் திறனைப் பெற்றுள்ளன," என்று ரிடோலியா கூறுகிறார். உலகின் நான்காவது மிகப்பெரிய சுத்திகரிப்பு நாடான இந்தியா, எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளது - ஆனால் சீனாவைப் போலல்லாமல், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் ஏற்றுமதியைக் குறைக்க அது முனையவில்லை. இருப்பினும், கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ளன. இரானிய எண்ணெய் சந்தைக்கு திரும்புதல் என்பது சுத்திகரிப்புத் திறனை விட வணிகம் மற்றும் புவிசார் அரசியலைச் சார்ந்தே உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,LightRocket via Getty Images படக்குறிப்பு,இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நாடாகும். தடைகள் விற்பனையை மட்டும் கட்டுப்படுத்துவதில்லை; அவை கப்பல் போக்குவரத்து, காப்பீடு மற்றும் பணம் செலுத்துதல் ஆகியவற்றைச் சிக்கலாக்குகின்றன. "தடைத் தளர்வின் நோக்கம் மற்றும் நீடித்திருக்கும் தன்மை (கப்பல் போக்குவரத்து உட்பட), விலையமைப்பு மற்றும் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் தளவாட வழிமுறைகள் கிடைப்பது ஆகியவை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை," என்று ரிடோலியா கூறுகிறார். இந்த வழிமுறைகள் தெளிவுபடுத்தப்படாவிட்டால் அல்லது தளர்த்தப்படாவிட்டால், பரிவர்த்தனைகள் சவாலானதாகவே இருக்கும். இத்தகைய விலக்கு எவ்வாறு கட்டமைக்கப்படும் அல்லது வருமானம் மீண்டும் தெஹ்ரானுக்குச் செல்வதைத் தடுக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகள் உருவாக்கப்படுமா என்பது குறித்து பெசன்ட் விரிவான தகவல்களை அளிக்கவில்லை. கருவூலத் துறை இது குறித்து விளக்கமளிக்க மறுத்துவிட்டது. இந்த யோசனையை ஆதரிப்பீர்களா என்று கேட்டதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியான பதில் அளிக்காமல், "விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தேவையான எதையும் நாங்கள் செய்வோம்" என்று கூறி முடித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy41lwlmyywo
-
இளம்தாய் உயிருடன் மீட்கப்பட்ட கிணற்றினுள் இருந்து அழுகிய சடலமொன்று கண்டுபிடிப்பு ; வயல் பகுதியில் இரண்டரை வயது குழந்தையும் மீட்பு
மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்! வௌியான புதிய தகவல் Mar 21, 2026 - 03:15 PM மட்டக்களப்பு நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. நேற்று (20) அப்பகுதிவாசி ஒருவருக்கு கிணற்றுக்குள் இருந்து கேட்ட முனகல் சத்தம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அந்தப் பெண் கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். 26 வயதுடைய அந்தப் பெண்ணை கடந்த 19ஆம் திகதி ஒரு குழுவினர் கடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடத்தலின் போது தப்பிச் சென்றிருந்த அவரது மகள், கொதியபுலை வயல் பகுதியில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரும் மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த பெண்ணை மீட்டபோது அதே கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு பெண்ணின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmn056hek000d356prvjwkto4
-
அமெரிக்காவின் கூற்றை ஈரான் மறுப்பு – “உளவியல் போர்” என கடும் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் கூற்றை ஈரான் மறுப்பு – “உளவியல் போர்” என கடும் குற்றச்சாட்டு 21 Mar, 2026 | 11:41 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கில் இராணுவ நடவடிக்கைகளை குறைக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள கருத்தை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் கருத்துக்கள் உண்மையற்றவை மட்டுமல்லாது, உலக சந்தைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் “உளவியல் போர்” என ஈரான் கடுமையாக சாடியுள்ளது. ஈரானிய உயர்மட்ட அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகமான சி.என்.என். க்கு வழங்கிய தகவலின் படி, பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் குறைக்கப்பட்டதாக எந்தவிதமான உறுதியான மாற்றங்களும் காணப்படவில்லை. “எதிரியின் இராணுவ நிலைப்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், பங்குச் சந்தையில் நிலவும் பதற்றத்தை சமாளிக்கவும் டிரம்ப் இத்தகைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் சுமார் 20 சதவீதத்தை கட்டுப்படுத்தும் முக்கியப் பகுதி ஆகும். இந்நிலையில், அதன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதன் விளைவாக, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு 112 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. மேலும், Goldman Sachs வெளியிட்டுள்ள மதிப்பீட்டின்படி, இந்த விலை உயர்வு 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஈரானிய அதிகாரி ஒருவர், “டிரம்பிற்கு ஒரு தற்காலிக பதில் அளிப்பதற்குப் பதிலாக, அவருக்கு ஒரு வரலாற்றுப் பாடம் கற்பிக்க வேண்டும் என தெஹ்ரான் முடிவு செய்துள்ளது” என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலைமைகள் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய பொருளாதாரத்திலும் அதிர்வுகளை உருவாக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. https://www.virakesari.lk/article/241549
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
கவிப்பேரரசின் கருத்து.
- Today
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
நீங்கள் எவ்வளவு நீட்டி முழக்கினாலும்; நீங்கள் யார் என்பதே (உங்கள் பெயர், விபரம்) யாருக்கும் தெரியாது. ஆகவே உங்கள் உறவினர் யார் என்பதோ, அவர் என்ன வேலை செய்தார் என்பதோ கூட யாருக்கும் தெரியாது. எனவே நீங்கள் என் உறவினர் அப்படி சொன்னார், இப்படி சொன்னார் என்பது ஆதாரம் ஏதும் அற்ற கூற்று. இது வரலாற்றில் பிரபலமான வாக்கியம். இந்த வாக்கியத்தை ஒரு அரசியல்வாதி கூறுவதன் பாதக தன்மை கிட்டதட்ட அரசியலில் கொஞ்சூண்டு ஞானம் உள்ளோருக்கே தெரியும். அதுவும் அதே போல் பாண், கேக் என்று இலங்கையில் வாழும் சிறிமா கூறி இருக்க வாய்ப்பே இல்லை. ஆகவே இது ஒரு பச்சை பொய் என்பது வெள்ளிடைமலை. ஏன் நீங்கள் இந்த பொய்யை சொல்லுகிறீர்கள்? மேலே சொன்ன படி குறைபுரிதல். உவமான உவமேயத்தை, அசொட்டா நடந்த்து என புரிந்துகொண்டுள்ளீர்கள்.
-
முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
வேலியில் போன ஓணானை பிடித்து தம்பர் தன்ர ரவுசருக்குள் விட்டுவிட்டு படும் அவதி சொல்லிவேலையில்லை🤣
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
சட்டத்துறைக்கு பரீட்சியம் என்று சொல்லி கொண்டு, இதை இங்கு சொல்வது மொ... தனமாக படவில்லை? எல்லாம் ஆதாரத்தை கொண்டா தீர்மானிப்பது? நான் சொன்னதை உங்களால் கற்பனை பண்ணி கூட (நான் சொல்வதற்கு முதல்) இருக்க முடியாது என்பதே யதார்த்தம். இதில்வேறு ஒருவர் கொச்சையான இரு அர்த்தத சொல்லவாகையை பாவித்து சொல்ல வந்த முக்கிய விடயத்தில் மூக்கு உடைபட்ட நிலை, வடகொரியாவின் யாப்பு தன்மை தெரியாது, அவரின் சொந்தம் வடகொரிய அரசாங்கத்தில் வேலை, அதன் வழியாக அறிந்ததாக. ஏன் நீங்கள் செய்வதை மற்றவர்கள் மீது சுமத்துகிறீர்கள்? நான் (அறிந்ததை) சொல்லியது 2-3 வரிகளில் எந்த மொழி, யாதார்த்தம் , மற்றும் விடயம் முரண்பாடு இல்லலாமல். சொன்ன பின்பும், விளக்கத்துக்கு முக்கியும், மொழி, விடய உள்ளடக்க முரண்பாடுகளே சொல்கிறது, தவிர்க்க முடியவில்லை, வெளிப்படையாக இருந்தும் புரியாமலே பதிந்தது. 1) அமைச்சரவை கூட்டம் எனபதை அரசியல் (கூட்டம்) என்று விடயம் தெரியாத பிறழ்வு அடிப்படை எடுகோளாக எடுத்து. (அல்லது கற்பனையா?). (அமைச்சரவை (சர்ச்சையான) உரையாட ல் எங்கும் பிற்காலத்தில் வாசிக்கப்பட முடியாது என்பதும் அறியாது, ஏனெனில் பதியப்படுவது இல்லை. அதனால் வாய்வழியாக கூட்டத்தில் இந்தவர்கள் வழியாக கேள்விப்பட்டால் ஒழிய வேறு வழியாக அறியப்பட முடியாது.) (இதனால் தான் UK முதன்மை பத்திரிகைகள், அமைச்சரவை (கூட்ட) கசமுசா போன்றவற்றை அனாமதேயம் என்பது. UK இல் இருந்து கொண்டு இந்த விளக்கம் சொல்லும் கால்வாசியிலும் விளக்கம் குறைந்த தன்மை ) 2) பின் மொழியில் அரைகுறையாக விளக்கம் என்பதை முன்னுக்கு பின் முரணாக சொல்லி 3) அதுவும் போதாது என்று கிரிபாத் என்றால் நம்பகூடியது எனறு முன்னுக்கு பின் முரணாக பின்னூட்டமும் கொடுத்து. (இதில் சிறிமா போன்றோரின் கிட்டத்தட்ட 2 வாழ்கை தெரியாமல் சொல்வது -கிரிபத் அவர்களுக்கு புனிதமான / தெய்வ கடாட்ஷம் / சிங்கள பௌத்த அரசியல் முக்கியதுத்துவம் உள்ள உணவு, குறிப்பாக பகிரங்கமாக அப்படி காட்டி கொள்ள வேண்டும் என்ற கடப்பாடு , ஒழுங்கான உணவு அல்ல) இவை எல்லாவற்றையும் விடுவோம் ஒன்றும் வேண்டாம் சாத்திய கூறுகள் என்ன? இல்லை என்பதே உங்களின் அரைகுறை மொழி, விடயம் புரிவு அடிப்படையில் முன்னுக்கு பின் முரணான பதில். (ஆம், நான் காண்பது எந்த வித சிந்தனை இல்லாத ஒப்புவிக்கும் பதில், ) வரலாற்றில் இது மன்னர் ஆட்சியில் சொன்னது என்ற காலத்திலே பாணே குடிகளுக்கு மிகவும் தள்ளி, கேக் உச்ச ஆடம்பரதுக்கு அப்பால், - அப்படியான நிலையில் தான் எந்த இளவரசியோ சொன்னது என்று. சிறிமா காலத்தில் (ஆட்சிக்கு வரும் போது) - பாண் சமூகத்தின் அன்றாட உணவு, கேக் பொதுவாக அவ்வப்போது, பெரிய முயற்சியுடன் எட்ட கூடிய தூரத்தில். சிறிமா வுக்கு , அவரின் பார்வையில், நாளாந்த வாழ்க்கையில் - கேக் ஒரு ஒழுங்கான உணவு, பாணை போல. ஆகவே, (சிறிமா) கேட்டு இருக்க கூடிய சாத்திய கூறுகள் இளவரசியை விட மிகவும் கூட. அந்த நேரத்தில் political correctness என்பதே என்ன என்று கேட்கும் காலம். சிறுமை பகிரங்கமாக சொல்லி இருந்தால் கூட அது புறம் தள்ளப்படும் காலம். அனால் கூட்டத்தில் இருந்த அதிகாரிகள் சிரிமாவுக்கு பா, கேக் இன் அருமை தன்மை, சராசரியாக மக்கள் பெறக்கூடிய நிலையை சொல்லி அந்த விடயத்தை மூடியதாக. அனால், சிங்கள பௌத்த அரசியலுக்கு எது சரி என்பதில் மிகவம் கவனம் ( ஏனெனில், அவர்களை பொறுத்வசரை , சிங்கள பௌத்த சமுகத்தை பொறுத்தவரைஅவர்கள் பௌத்தர்கள் இல்லை. கிறிஸ்தவத்தில் இருந்த்துமாறி , மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட பௌத்த பகிரங்க தோற்றம் / வாழ்க்கை. உள்ளே கிருஸ்தவ / மேற்கத்திய போக்கு வாழ்கை. இப்படியாக மாற விரும்பாத uk வந்த சிங்கள குடும்பங்கள் இருக்கிறது.) இதை புலம் பெயர் தமிழரிலும் காணலாம் - அங்கு வசதி குறைவான நிலையில் இருந்து, இங்கு வந்து நெடுங்காலம் இருந்த பின் - WASHING MACHINE, hoover (vacuum cleaner), microwave, வாசனை திரவிய பாவனை போன்றவை அங்குள்ளவர்களிடம் சராசரியாக இருக்கும், இருக்க வேண்டும் என்று எதிர்பார்பது. இது ஏனைய சமூகங்களிலும் இருக்கிறது. அதுவும் இந்த காலத்தில். தர்க அடிப்படையில் கூட (அதுக்கு நிதர்சனம் சமூக நடத்தை) நீங்கள் சொல்லுவது நில்லாது, எந்த அரைகுறை பிறழ்வை தவிர்த்தாலும். (அனால், இதை சொல்லும் போது இவை எல்லாவற்றையும் கருத்தில் எடுத்த அச்சொட்டாக பொருந்த கூடியவாறு கற்பனை கதை சொல்லி உள்ளேன் என்றால், எதிலும் நான் அரைகுறை இல்லை) முற்று முழுதாதாக தெரியாத விடயமும், அரைகுறை, முரண்பாடு மொழியம் எல்லாம் உங்களிடம்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
மிசைல் கையிருப்பு தீரும் என பலரும் கருதிய நிலையில் டியாகோ கார்சியா நோக்கி இரு மிசைல்கள் பாய்ந்துள்ளன. இது ஐரோப்பாவின் பல நகர்களை வீச்சு எல்லைக்குள் கொண்டு வரும். தம்பர் இன்று சொல்வதை பார்த்தால் தரையிறக்கம் வராது போலவே படுகிறது. ஆனால் போரை இவர்கள் நிறுத்தினாலும், நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தும் எனில் - அதன் விலை அமெரிக்காவை அரபுநாடுகளில் இருந்து அகற்றுவது அல்லது குறைப்பதாக இருக்கலாம்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சிவாஜி வெற்றிவேல் ·ptedonroSs2 hs10l6à7:L27gga8gf1m41 g853e3c1r3c0 tt5mitf0m6 2 · நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1953 இல் யாழ்ப்பாணத்தில் .. மருத்துவ மனைக்கு நிதி உதவி. .. என்தங்கை நாடகம் .. :நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இடையில் ஒரு பாரம்பரிய தொடர்பு இருக்கிறது . சிவாஜியின் பராசக்தி கொழும்பு மைலன் தியேட்டரில் சுமார் 350 நாட்களுக்கும் மேலாக ஓடியது .இது பலரும் அறிந்தது .ஆனால் அவர் செய்த நிதி உதவி பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்க மாட்டாரகள். 30.11.53 திங்கட்கிழமை இரவு 8-30 மணிக்கு, யாழ்ப்பாணம் மூளாய் ஆஸ்பத்திரி நிதிக்காக, கொழும்பு, ஜிந்துப்பிட்டி முருகன் டாக்கீஸில், ‘பராசக்தி’ புகழ் சிவாஜி கணேசனும் 30 ஆண், பெண் நடிகர்களும் சேர்ந்த அவரது திருச்சி ஜி.எஸ். நாடக சபா கோஷ்டியாரும் நடிக்கும் ‘என் தங்கை’ நாடகம் நடைபெறும். நாடக முடிவில் சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் பேசிய கோர்ட் சீன் வசனங்கள் பேசுவதைக் கேட்கத் தவறாதீர்கள்’ என்று அந்தக் காலத்தில் அச்சிடப்பட்ட நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது . 1953-ல் அவர் ஒரு நாடகம் நடத்தி, அதில் வசூலான தொகை முழுவதையும் (கிட்டத்தட்ட ரூ.25,000) ஆஸ்பத்திரி வளர்ச்சி நிதியாகக் கொடுத்துவிட்டார். அதன்பிறகுதான் அவர் இதே முறையில் பல ஊர்களிலும் நாடகங்கள் நடத்தி, அதில் வசூலாகும் தொகையை பல நல்ல காரியங்களுக்கு அன்பளிப்பு வழங்குவது என்கிற வழக்கத்தைக் கைக்கொண்டார். உண்மையில், 1953-ல் ரூ.25,000 என்பது மிகப் பெரிய தொகை என்பது ரூ.10, 7, 5, 2 என நாடகத்துக்கான டிக்கெட் விலைகளைப் பார்த்தாலே புரிகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் பெயர் ‘மூளாய்’. அது ஒரு கூட்டுறவு மருத்துவமனை. அதன் சபைத் தலைவராக இருந்தவர் பி.எம்.சங்கரப்பிள்ளை என்பவர். அவர்தான் சிவாஜிகணேசனை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து, பெரிய வரவேற்பு கொடுத்தவர். அந்த மூளாய் ஆஸ்பத்திரியை விரிவுபடுத்தும்பொருட்டு நிதி திரட்டித் தரும்படி அவர் சிவாஜிகணேசனிடம் கோரிக்கை வைக்க, சிவாஜியும் உடனே மனமுவந்து இதற்காகவே தமது கோஷ்டியாருடன் இலங்கை போய் ‘என் தங்கை’ என்ற நாடகத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுத்திருக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் நடந்த ‘என் தங்கை’ நாடகத்தின் இறுதியில், பராசக்தி படத்தில் பேசி அசத்திய கோர்ட் சீன் வசனத்தை ரசிகர்களுக்காகப் பேசிக் காண்பித்திருக்கிறார் சிவாஜி கணேசன். யாழ்ப்பாணம் மூளாய் மருத்துவமனை .. நடுவில் இருப்பவர் சிவாஜி கணேசன் சிவாஜிகணேசன் நடித்து ‘பராசக்தி’ என்று ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸாகியிருந்த சமயத்தில், அவரை வேறு யாரும் பெரிய அளவில் கௌரவிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணம் மக்களாகிய நாங்கள்தான் அவருக்குப் பெரிய வரவேற்பு கொடுத்துக் கௌரவித்தோம். சிவாஜி முதன்முதல் சென்ற வெளிநாடு இலங்கைதான்!” என்றார். சங்கர பிள்ளை . தகவல்கள் தந்த திரு ரவி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி . Voir la traduction......!
-
குட்டிக் கதைகள்.
· Suivre oteprSdonst32ac42ia5tsu9 :1ctLl802r10aà a3c4 u6e1cm206af1a l · பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர். அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள். “அதோ பாருங்கள் குருதேவா... கிருஷ்ண பரமாத்மா வருகிறார்” என்று குதித்தான் மட்டி. “ஆமாம் குருவே.. கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்” என்றான் மடையன். பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்.. உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார். “சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்” என்றார் பரமார்த்தர். “புதுத் துணிகளைக் கிழிப்பதா? ஏன் குருவே?” என்று கேட்டான், முட்டாள். “புத்தி கெட்டவனே.. ஏன் என்று கேட்காதே. சீக்கிரம் கிழி... அப்போதுதான் நாம் ஏழைகள் என்று அவர் நம்புவார்” என ஆணையிட்டார் பரமார்த்த குரு. சீடர்கள் ஐவரும், குருவின் கட்டளைப்படி கட்டியிருந்த வேட்டிகளைக் கிழித்துக் கந்தல் கந்தலாக ஆக்கினார்கள்.. உடனே பரமார்த்தர் வேகமாகச் சென்று, கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலில் விழுந்து வணங்கினார். “பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணா.. அதே போல் நீதான் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு புடவை கொடுத்து எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினார் பரமார்த்தர். “குருவே.. நமக்கு எதற்குப் புடவை?” என்று கேட்டான் மண்டு. “அதானே? நமக்கு வேட்டி அல்லவா தேவை” என்றான் மூடன். “கார்மேகக் கண்ணா.. இந்தா, பொரி உன் இஷ்டம் போல் கொரி..” என்றபடி கொஞ்சம் பொரியைத் தந்தான் மட்டி. கிருஷ்ணர் வேடம் போட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. “நான் கடவுள் இல்லை.. எனக்கு நேரமாகிறது, என்னைப் போகவிடுங்கள்” என்றார். “கண்ண பெருமானே எங்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்” எனக் கெஞ்சினான், முட்டாள். “கண்ணா.. அன்று குசேலர் கொடுத்த அவலை மட்டும் சாப்பிட்ட நீ, இந்த ஏழைப் பரமார்த்தர் தரும் பொரியைச் சாப்பிடத் தயங்குவது ஏன்?” என்றார் குரு. “கோபாலா கோவிந்தா.. தயவு செய்து கொஞ்சம் பொரியையாவது சாப்பிடு” என்றான் மடையன். “பொரியைச் சாப்பிடாவிட்டால் விடமாட்டார்கள்” என்று நினைத்து, கொஞ்சம் பொரியைச் சாப்பிட்டார் தெருக்கூத்து நடிகர். “பொரி கொடுத்ததற்கு நன்றி.. நான் போய் வருகிறேன்” என்று நகரத் தொடங்கினார் நடிகர். “என்ன? பொரியைத் தின்றுவிட்டு சும்மா போகிறீர்கள்? எங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுங்கள்” என்றார் பரமார்த்தர். “வரமா?” அதென்ன?” “ஆமாம்.. குசேலர் வீடு பொன்னாக மாறியது போல எங்கள் மடமும் தங்கமாக மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் பொற்காசுகளும், வைரங்களும் மின்ன வேண்டும்” என்றான். “எங்கள் கந்தல் உடைகள் பட்டாடையாக மாற வேண்டும்” என்றான் முட்டாள். “வரம் தராவிட்டால் ஆளை விடமாட்டோம்” என்றான் மடையன். “சரி.. நீங்கள் நினைத்தபடியே நடக்க்கடவது..” என்று அருள்புரிவது மாதிரி கையைக் காட்டினார் தெருக்கூத்து நடிகர். “ஆஹா.. பொரிக்குப் பொன் கொடுத்த கிருஷ்ணா.. உன் கருணையே கருணை” என்றபடி குருவும் சீடர்களும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். ஆளைவிட்டால் போதும் என்று தெருக்கூத்து நடிகர் ஓட்டம் பிடித்தார். “அப்பாடா! கடவுளேயே நேரில் பார்த்து விட்டோம், அவரும் ஏமாந்து போய் வரம் கொடுத்து விட்டார்” என்றார் பரமார்த்தர். “குருவே! நாம் மடத்துக்குப் போகும்போது, மடமெல்லாம் தங்கமாக மாறி விட்டிருக்கும். மடம் முழுதும் பொற் காசுகள் குவிந்து கிடக்கும்.. அதனால் இனிமேல் நீங்கள் நடந்து போகக் கூடாது” என்றான் மட்டி. “எங்காவது பல்லக்குக் கிடைத்தால் வாங்கி விடலாம்” என்றான் மடையன். போகும் வழியில் ஒருவன் பாடை கட்டிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட முட்டாள், “குருவே! இதோ பாருங்கள் பூப்பல்லக்கு.. இதையே விலைக்கு வாங்கி விடலாம்” என்றான் மடையன். பாடை கட்டியவனிடம் சென்ற மட்டி, “இந்தப் பல்லக்கு என்ன விலை?” என்று விசாரித்தான். “இது பல்லக்கு இல்லை” என்றான் பாடை கட்டியவன். “நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.. இது பல்லக்கே தான். உனக்கு வேண்டிய பணம் தருகிறோம்” என்றான் மடையன். சீடர்களின் தொல்லையைப் பொறுக்காமல், “நான் வேறு ஒன்று செய்து கொள்கிறேன்; நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான், அவன். பரமார்த்தரும் மகிழ்ச்சியோடு பாடையில் ஏறி அமர்ந்து கொண்டார். இருட்டத் தொடங்கியதும், முட்டாள் கொள்ளிக் கட்டையைத் தூக்கியபடி முன்னே நடந்தான். மற்ற சீடர்கள் பாடையைத் தூக்கி வந்தனர். சிறிது தூரம் வந்ததும், “ஒரே தாகமாக இருக்கிறது” என்றபடி பாடையை இறக்கி வைத்தார்கள், சீடர்கள். ஐந்து பேரும் தண்ணீரைத் தேடிச் சென்றபோது, பரமார்த்தர் விழித்துக் கொண்டார். “என்ன? யாரையுமே காணோம்?” என்றபடி சீடர்களைத் தேடி வேறு பக்கம் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று பாடையில் ஏறிப் படுத்துக் கொண்டது. திரும்பி வந்த சீடர்களோ, எதையும் கவனிக்காமல் பழையபடி பாடையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர். மடத்தை நெருங்கியதும், நாய் விழித்துக் கொண்டது. “லொள், வள்” என்று குரைத்தது. அவ்வளவுதான்.. பாடையைத் “தொப்” என்று கீழே போட்ட சீடர்கள், “ஐயையோ! இதென்ன அதிசயம்? நம் குரு நாயாக மாறி இருக்கிறாரே” என அலறினார்கள். “அந்தக் கிருஷ்ணக் கடவுள் தான் ஏதோ மந்திரம் போட்டு விட்டார்” என்றான் முட்டாள். “நம் மடம் கூடத் தங்கமாக மாறாமல், பழையபடி அப்படியே இருக்கிறதே” என்று துக்கப்பட்டான் மண்டு. அப்போது இருட்டில் விழுந்தடித்து ஓடிவந்த பரமார்த்தர், “புத்திகெட்ட சீடர்களே! என்னைப் பாதி வழியிலேயே விட்டு விட்டு வந்து விட்டீர்களே” எனத் திட்டினார். “குருநாதா..” அந்தக் கிருஷ்ணக் கடவுளை நம்பினோம்.. அவரும் பொரி வாங்கித் தின்று விட்டு, நம்மைக் கைவிட்டு விட்டாரோ” என்று ஒப்பாரி வைத்தனர் சீடர்கள். பரமார்த்தரும் சீடர்களும் சேர்ந்து கொண்டு புலம்பினார்.. Voir la traduction.....!
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!
ஞானபீடம் சர்ச்சையை முன் வைத்து. மரபின் மைந்தன் முத்தையா திரு சீமானுக்கு திரு.ஜெயமோகன் எழுதிய கடிதத்தில் தனக்கு அவர் தரப்பில் இருந்துவரும் வசை மொழிகளை தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறார். அதில் “இலக்கியம் என்றால் விவாதம் வரும் பூசல் வரும் “என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவரும் சரி மற்றவர்கள் பலரும் சரி இந்த விவாதத்தை இலக்கியப்பூர்வமாக கொண்டு செலுத்தவில்லை. கவிஞர் வைரமுத்து படைப்பாளரே இல்லை என்பது போன்ற சித்திரத்தை நிறுவ முயலும் போதே விமர்சனம் விவாதம் என்பதெல்லாம் வெறும் அவதூறுகளாகத் திரிந்து விட்டன. கவிஞர் வைரமுத்து பற்றிய என்னுடைய புத்தகம் குறித்து திரு ஜெயமோகன் எழுதிய கட்டுரை இணையத்தில் பரவலாக கிடைக்கின்றது. “முழுக்கமுழுக்க நேர்நிலை நோக்கு கொண்ட கவிஞர் அவர். துயரங்கள் இல்லாதவர். கவிதை பொதுவாக மானுடனின் தவிர்க்கமுடியாத கையறுநிலைகளை நோக்கிச் செல்வது. அங்கே செயலற்று நின்று ஏங்குவது. அந்த அம்சம் வைரமுத்துவிடம் இல்லை. சாதாரணமாக கவிஞர்களில் இருக்கும் தனிமை ஏக்கம், இறந்தகால ஏக்கம் போன்றவையும் இல்லை. நவீன கவிதைகளில் உள்ள இருண்மையும் கைவிடப்பட்ட நிலையும் முற்றிலும் இல்லை. வைரமுத்துவின் கவிதைகள் வெயில் பரந்த தெற்கத்தி நிலம் போல பளீரென்று நான்கு பக்கமும் திறந்து கிடக்கின்றன.” இவை கவிஞர் வைரமுத்து கவிதைகள் பற்றி திரு ஜெயமோகன் எழுதியது. நவீன கவிதையின் போக்குக்கும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை பாணிக்கும் இருக்கிற வித்தியாசத்தை இவரே இவ்வளவு தெளிவாக சொல்லியிருக்கிறார். ஃபிரண்ட்லைன் பேட்டியில் கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்கள் பல நேரங்களில் inappropriate என்று எழுதுவதும் இலக்கிய விவாதம் என்கிற அளவுகோலுக்குள் வரவே வராத அவதூறு. ஏனென்றால் கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்கள் பற்றி அந்தக் கட்டுரையில் திரு.ஜெயமோகன் இப்படி எழுதுகிறார்… “வைரமுத்துவின் சிறப்பாக நான் காண்பதை இங்கே முத்தையாவும் சுட்டிக்காட்டுகிறார். அவர் தமிழ் மரபின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர். பாடல் [லிரிக்] என்பது எடுத்தாள்கை கவிதை [அப்ளைட் பொயட்ரி] ஒரு மரபின் சாரமான கவித்துவத்தை முழுக்க வேர்பரப்பி உறிஞ்சி தன் கவித்துவத்துடன் இணைத்து ஒன்றாக்கி இசைக்குள் பொருத்தும் கலை அது. தமிழின் பிற பாடலாசிரியர்கள் செவ்வியல் மரபில் இருந்து பெற்றுக்கொண்டதே அதிகம். நாட்டார் மரபில் இருந்தும் புதுக்கவிதை மரபில் இருந்தும் தமிழ்ச் செவ்வியல் மரபில் இருந்தும் ஒரேசமயம் பெற்றுக் கொண்ட பாடலாசிரியர் என்பதே வைரமுத்துவின் தனித்தன்மை.” தமிழ் கவிதையில் மரபுக் கவிதையை ஆழமாக பயின்று புதுக்கவிதையை தனித்தன்மை கொண்ட வீச்சுகளுடன் வெளிப்படுத்தி திரு ஜெயமோகனே சொல்வது போல நவீன கவிதையின் இருண்மை இல்லாமல் உருவாகும் படைப்புகள் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள். சமீபத்தில் ஆனந்த விகடன் நேர்காணலில் கவிஞர் வைரமுத்து சொல்லியுள்ள ஒரு கருத்து இங்கு முக்கியமானது. “எதார்த்தத்தை அப்படியே எழுதுவது ஒரு வகை. கலைத்தன்மையோடு வெளிப்படுத்துவது இன்னொரு வகை” என்று சொல்லி இருக்கிறார். இரண்டு பாணிகளுமே படைப்பிலக்கியத்திலும் திரைப்பாட்டிலும் கொண்டாடப்படுபவை. நான் அடிக்கடி சொல்லும் உதாரணம் ஒன்று. ஒரு படத்தில் கதாநாயகி கண்ணீர் வடிக்கிறாள் என்றால் கவியரசர் கண்ணதாசன் ” ஏன் அழுதாய் ஏன் அழுதாய்! என்னுயிரே ஏன் அழுதாய்! நான் அழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய்”என எழுதும்போது கேட்பவருடைய உள்ளங்கள் உருகி விடுகின்றன. வேறொரு படத்தில் அதே சூழலுக்கு கவிஞர் வைரமுத்து எழுதும்போது “கண்ணில் என்ன கார்காலம்? கன்னங்களில் நீர்க்கோலம்” என எழுதுவது கலைத்தன்மை கொண்டது. அவரைப் பிடிக்காதவர்கள் இதை அலங்கார அடுக்கு என்று சொல்லிவிட்டுப் போகலாம். ஒருவர் எவ்வளவு பெரிய படைப்பாளியாகவும் இருக்கலாம். அல்லது திறனாய்வு அறிஞராக இருக்கலாம். ஒரு படைப்பை வாசிக்கும் நேரத்தில் நான் ஒரு வாசகம் என்ற உணர்வுடன் வாசித்தால் திறந்த மனதுடன் அந்தப் படைப்பை பார்க்க முடியும். கவிஞர் வைரமுத்து எழுத்துகள் இவர்கள் முன்னிறுத்தும் வகைமையிலிருந்து வேறானது.இலக்கியச் செழுமை இலக்கணத் துல்லியம் ஆகியவற்றை உணர்ந்த உள்வாங்கிய எழுத்து நடை. இன்றளவும் இந்த வடிவம் தான் இலக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது. இளைஞர்களை மொழியின்பால் ஈர்ப்பது. இவர்கள் முன்னிறுத்தும் வகையில் இருந்து வேறானது என்பதாலேயே அது இலக்கியம் அல்ல என்று ஆகிவிடாது. இருபதாம் நூற்றாண்டிலும் 21ம் நூற்றாண்டிலும் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ஒரு வாசகன் என்ற முறையில் “காவிய மரபின் குறுநீட்சி” என்று வகைப்படுத்துகிறேன். இந்தச் சூழலில் அவர் படைப்பாளியே அல்லர் என்பது போன்ற அவதூறு யார் செய்தாலும் அது உண்மையின்நோக்கத்தில் இல்லாமல் உள்நோக்கத்தின் அடிப்படையில் வீசப்படும் வசை தான் என்பது உறுதி. இந்த அவதூறுக்கு இலக்கிய விவாதம் இலக்கியப் பூசல் என்றெல்லாம் நாகரீகச் சாயம் பூச முயலாதீர்கள். வல்லமை மிக்க தமிழ் மரபின் பின்புலத்தில் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் துலங்கும் தன்மை பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். https://www.marabinmaindan.com/2026/03/20/ஞானபீடம்-சர்ச்சையை-முன்/?fbclid=IwdGRleAQrPChleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEex_omHbQiM_-FZaNBVoghJXLinLc5AWZHjVeqAR2-mgYGbOTekSx1JabubfE_aem_fm_nj37FkT9wDvQjKSlluQ
-
உலகப்புகழ் பெற்ற ஹொலிவுட் நடிகர் காலமானார்
சக்நோரிஸ் சின் பல படங்கள் நான்பார்த்திருக்கின்றேன் .......பின்பு அவர் நடிக்கும் டீ . வி சீரியல் தொடர்களும் விரும்பிப் பார்ப்பது வழக்கம் ......... அருமையான நடிகர் . ........!
-
அமெரிக்கா இல்லாமல், நேட்டோ ஒரு காகிதப் புலி!
காகிதப்புலிகளை இவர் எதற்காக அழைத்தார்? அவர்களின் உதவி இவருக்கு தேவைப்படிருக்கு. ட்ரம்பின் தோல்வி, ஏமாற்றம், அவமானம் இப்படி வெளிவருகிறது. கோழைகளை அழைத்த இவர் மட்டும் வீரனாம்.
-
வீதியோரம்.
நீங்கள் இப்படி ஓரிரு வரிகள் எழுதிச்செல்வதே மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கு ....... நன்றி .....! 👍
-
ஜப்பான் பிரதமர் முன்பு ‘பேர்ல் ஹார்பர்’ குறித்துப் பேசிய டிரம்ப்
இனி வருங்காலத்தில் அரபு நாடுகள் அமெரிக்காவை நம்பவோ அல்லது தமது நாடுகளுக்குள் அனுமதிக்கவோ விரும்பாது. ] அரபு நாடுகள் அமெரிக்காவை தங்கள் பாதுகாப்பிற்கு வைத்திருக்காமல் இருந்திருந்தால் ஈரானால் அந்த நாடுகள் லெபனான் போன்று நாசமாக்கப்பட்ட நிலைக்கு முதலே இருந்திருக்கும்.
-
வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்
வடக்கில் நாலு தமிழருக்கு ஒரு இராணுவம் எனும் வீதத்தில் தமிழர் நிலங்களிலேயே இராணுவம் குடியிருக்கு, வடக்கில் வசிக்கும் சிங்கள மக்களுக்கும் அதிகமான விகாரைகள் அதுவும் தமிழரின் நிலங்களில் எழுந்து நிக்குது, தமிழரோ நிலம் இருந்தும் உறவுகள் வீட்டில், வாடகை வீட்டில், அகதிகளாக வாழுகிறார்கள். அப்படி இவர்களுக்கு என்னதான் பிரச்சனை? அப்படி பிரச்சனை இருந்தால், இங்கே காவற்துறை இருக்கிறது, நீதிமன்றங்கள் இருக்கின்றன. பிரச்சனை இருந்தால் அங்க முறையிடாமல் கொழுப்புக்கு ஏன் நடைபயணம்? ஓ.... அங்கே உள்ளவர்களை உசுப்பிவிடவேண்டுமென பிக்குகள் துடிக்கிறார்கள். அவர்களது போராட்டங்கள், மகாநாடுகளெல்லாம் பிசுபிசுத்துப்போனதால் இப்படி கிளம்பியிருக்கிறார்கள். படத்தில் தமிழிலும் எழுதி தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்கள் கொழுப்பிலிருந்து இறக்கப்பட்டவர்கள். அதில் சில பெண்கள் பொட்டு வைத்திருக்கிறார்கள், அருண் சிர்த்தாத்தின் ஆட்கள் போலிருக்கிறது. அடுத்து கோத்தா கைதை திசை மாற்றுவதற்கு பல நாடகங்கள் அரங்கேற்றுவார்கள் கள்ளர், கொலைகாரர் கூட்டம். ஏதேதோ செய்து பார்க்கிறார்கள், சவால் விடுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், ஒன்றும் யாரிடமும் எடுபடுவதாக தெரியவில்லை. விதைத்ததை அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டது.
-
உங்களுக்கு தெரியாத வட கொரியா
👌 நான் வாழ தயாராக இல்லாத தப்பிவந்த ஒரு வாழ்க்கை முறையை மற்றவர்களுக்கு பரித்துரைப்பது மிக மோசமான வழிகாட்டுதலாகும்.
-
இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!!!
https://www.facebook.com/1457391262/posts/pfbid0Bj2uL1uwoc2ThhSpJFrjxzc2JRxQfaMLL9ofxBTy7LNpY4BekuBhRANm4vdYuNCWl/?mibextid=wwXIfr
-
ஈழப்பிரியன் started following இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!!!
-
இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!!!
இந்திய பெருங்கடலில் போர் அபாயம்!!! --- --- --- *முதன் முதலில் 4ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் ஈரான் தாக்குதல்... *ஆனால், உலகலாவிய அச்சுறுத்தல் அல்ல என்கிறது ஈரான் *டியாகோ கார்சியா மீதான தாக்குதல் அபாயத்தை ஏற்க மறுக்கும் அமெரிக்க - பிரித்தானிய ஊடகங்கள்... --- --- --- மத்திய இந்தியப் பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு (Equator) தெற்கே அமைந்துள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல், அமெரிக்க - பிரித்தானிய கூட்டு செயற்பாட்டை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நான்காயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் ஒரு நேர் வழிப் பாதையில் கூம்பு வெட்டாக பயணிக்கக் கூடிய (Intermediate-Range Ballistic Missiles - IRBMs) ஏவுகணைகளை ஈரான் தாக்குதலுக்கு முதன் முதலில் பயன்படுத்தியதாக, த வோள்ஸ்ட்ரீட் ஜேர்னல் (the wall street journal) செய்தி தளம் கூறுகிறது. டியாகோ கார்சியா ஈரானில் இருந்து 4 ஆயிரம் கிலோ மிற்றர் (2, 300 இல் இருந்து 2. 500 மைல்கள்) வரையான தூரத்தில் அமைந்துள்ளது. ஆகவே இத் தாக்குதல், அமெரிக்க - இந்திய கூட்டுப் படைத்தளத்திற்கு மாத்திரமல்ல. இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தோ - பசுபினக் பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என்ற தொனியில் அச் செய்தி விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ள அமெரிக்க - பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா மீது ஈரான் இரண்டு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தவோல் ஸ்ரிற் ஜேர்னல் செய்தித் தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இடை மறிப்புச் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறியபோதும், அதனை உறுதிப்படுத்த முடியிவ்லை எனவும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க போர்க்கப்பல் SM-3 இன்டர்செப்டர் (SM-3 interceptor) டியாகோ கார்சியா தரித்து நிற்கிறது. 30 கிலோ மீற்றர் சதுரப் பரப்பைக் கொண்ட டியாகோ கார்சியாவில் அமெரிக்க - பிரித்தானிய கூட்டுப்படைத் தளம் அமைந்துள்ளது. டியாகோ கார்சியாவில் ஆக குறைந்தது 4 அயிரம் பேர் மாத்திரமே வாழ்கின்றனர். படையினரும் படைகளுக்கு உதவியளிக்கும் பணியாளர்களும் அங்கு அதிகமாக வாழ்கின்றனர். இத் தாக்குதல் ஊடாக, உலகின் எந்தப் பகுதிகளுக்கும் தன்னால் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முடியும் என்றும், அமெரிக்க தளங்களை இனம் காண முடியும் எனவும் ஈரான் காண்பித்துள்ளது. அமெரிக்க - பிரித்தானிய படை உயர் அதிகாரிகள், அதிர்ச்சியடைந்துள்ளதாக எக்கனமிக்ஸ் ரைம்ஸ் (economictimes) இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை தாக்குதலை 2,000 கிமீ (1,250 மைல்கள்) வரை கட்டுப்படுத்தியுள்ளதாக. கடந்த மாதம் இந்தியா டுடேக்கு (India Today)அளித்த பேட்டியில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி கூறியிருந்தார். ஆனாலும், டியாகோ கார்சியா மீது ஈரான் நடத்திய தாக்குதல் உலகளாவிய அச்சுறுத்தலாக மாற முயற்சிக்கவில்லை என்று அப்பாஸ் ஆராச்சி சுட்டிக்காட்டியதாக எக்கனமிக்ஸ் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் அமெரிக்க - பிரித்தானிய நாடுகளை மையப்படுத்திய பிரதான ஆங்கில செய்தி ஊடகங்கள், தாக்குதல் பற்றிய “அச்சம்” - “ஆபத்து” போன்றவற்றை நேரடியாக ஏற்கத் தயங்குவதை அவதானிக்க முடிகிறது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
-
துருக்கி மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை: உச்ச தலைவர் கமேனி
துருக்கி மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை: உச்ச தலைவர் கமேனி Published By: Vishnu 21 Mar, 2026 | 04:21 AM துருக்கி மற்றும் ஓமானைக் குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானிய ஆயுதப் படைகளுக்கோ அல்லது அவற்றின் கூட்டாளிகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வலியுறுத்தியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் ஈரானால் எந்த வகையிலும் திட்டமிடப்படவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். இந்தத் தாக்குதல்கள் ஈரானின் எதிரிகளால் நடத்தப்படும் 'போலிக் கொடி' தாக்குதல்கள் என்றும், அல்லது பொறுப்பை மற்றொரு தரப்பின் மீது சுமத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சதிச் செயல்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அண்டை நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைப்பதற்காக எதிரிகள் இத்தகைய தந்திரங்களைப் பயன்படுத்துவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார். https://www.virakesari.lk/article/241523
-
-
டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!
டியாகோ கார்சியா அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! 21 Mar, 2026 | 11:11 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க – பிரித்தானிய கூட்டு இராணுவத் தளமான டியாகோ கார்சியா (Diego Garcia) மீது ஈரான் இரண்டு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்த முயன்றதாக The Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவலின்படி, ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் குறித்த இராணுவத் தளத்தைத் தாக்கவில்லை. இதனால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல்களின் படி, ஒரு ஏவுகணை நடுவானில் பயணிக்கும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. மற்றொரு ஏவுகணை தளத்தை நோக்கி வந்தபோது, அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று ‘SM-3’ வகை இடைமறிப்பு ஏவுகணையை ஏவி அதைத் தடுக்க முயன்றுள்ளது. எனினும், அந்த இடைமறிப்பு முயற்சி முழுமையாக வெற்றியடைந்ததா அல்லது ஏவுகணை தானாகவே கடலில் விழுந்ததா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. இந்தத் தாக்குதல் எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பான துல்லியமான கால விபரங்கள் வெளியிடப்படவில்லை. மேலும், வெள்ளை மாளிகை அல்லது பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் இதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வ கருத்து வெளியிடவில்லை. டியாகோ கார்சியா தளம், அமெரிக்காவின் நீண்ட தூர போர் விமானங்கள், கடற்படை நடவடிக்கைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான முக்கிய மூலோபாய மையமாகக் கருதப்படுகிறது. ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தளத்தை குறிவைத்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது, பிராந்திய மோதல்கள் மேலும் விரிவடையும் அபாயத்தை சுட்டிக்காட்டுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தச் சம்பவம், மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியங்களில் நிலவி வரும் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடியதாகக் கருதப்படுகிறது. மேலும் தகவல்கள் வெளியாகும் நிலையில், சர்வதேச சமூகத்தின் கவனம் இந்தச் சம்பவத்தின் மீது திரும்பியுள்ளது. https://www.virakesari.lk/article/241542
-
மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை - துரைராசா ரவிகரன்
மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை - துரைராசா ரவிகரன் 20 Mar, 2026 | 04:33 PM (எம்.ஆர்.எம்.வசீம்) கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது. எனவே மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) இரண்டாவது நாளாக இடம்பெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர்அங்கு மேலும் உரையாற்றுகையில், நிலத்துடன் ஆழமாக இணைக்கப்பட்ட ஒரு காலசாரம் எமக்குள்ளது. என்று ஹிரிகம காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தில் அநுராதபுரத்தில் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார். பாராட்டுகின்றேன். இதனைத்தான் நாங்களும் எதிர்பார்க்கின்றோம். கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் நிலப்பறிப்பினாலேயே விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்தகால ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்ட காணிகளை மீட்டெடுக்க மக்கள் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் இந்நேரம் இப்போதைய ஜனாதிபதி நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையுடனும் ஒருபகுதி மக்கள் நம்பிக்கொண்டிருக்கும் சமயம் இது. ஆனால் வவுனியாவடக்கு, முல்லைத்தீவு, தையிட்டி. வலிவடக்கு, கேப்பாப்புலவு, முள்ளிக்குளம், திருகோணமலை, அம்பாறை. மட்டக்களப்பு என வடக்கு கிழக்கெங்கும் தமது நிலமீட்பிற்காகத்தான் தமிழ்மக்கள் உரமாகப் போராடுகின்றார்கள். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்களுக்கும் தமது நிலம் தமது உறவுகளின் பின்னிப்பிணைந்த கலாசாரத்துடனான பூர்வீகத் தமிழ் மண்தான் என்பதை ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஜனாதிபதி அநுராதபுரத்தில் உரை நிகழ்த்திய அதே நாளில் கடந்த முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி என்னும் இடத்திலுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக விவசாயக் காணிகளை மகாவலி அதிகாரசபை ஆக்கிரமிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அந்தக்காணிகள் தமிழ்மக்களுடைய பூர்வீக தனியார் அறுதி உறுதிக் காணிகளாகும். நில அளவையாளர் நாயகத்தினால் அளந்து வரையப்பட்டு, பேணப்பட்டுவரும் (Top off pp 70 இலக்க) வரைபடத் தொகுதியில் தனியார் காணியாகவும், மேய்ச்சல் தரை நிலங்களாகவும் உள்ளன. எனவே மகாவலி அதிகாரசபைக்கு அந்த நிலங்களை நிர்வகிக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால் மகாவலி அதிகாரசபை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் அதிகார எல்லைக்குட்பட்ட இந்த தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளைத் திருடி சிங்கள வர்த்தகருக்கு குத்தகைக்கு வழங்கும் சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மகாவலி அதிகாரசபையிடமிருந்து தமிழ்மக்களின் அறுதி உறுதிக் காணிகளை சட்டவிரோதமாகக் குத்தகைக்குப் பெற்றுள்ள அந்தநபர், அந்தக் காணியில் உப்பளம் அமைக்கும் வேலையைத் தொடங்கியதால் அங்கு ஒரு அமைதிக்குலைவு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவாகியிருந்ததது.இவ்வாறான இனவிரோத செயற்பாட்டைச் செய்தது மகாவலி அதிகாரசபையே . இவ்வாறான இனவிரோத செயற்பாடு தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்திலே மகாவலி அதிகார சபையினால் வடக்கிற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் அப்பகுதி தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை ஆக்கிரமித்தல், தமிழ் கிராமப்பெயர்களை சிங்களப் பெயராக மாற்றி அங்கு சிங்களமக்களைக் குடியேற்றம் செய்தல் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன மகாவலியின் இத்தகைய அத்துமீறிய அடாவடித்தனமான செயற்பாடுகளால் நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையும், சமாதானக் குலைவும் ஏற்படுகின்றது. எனவே மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை. எமது தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியான இந்த மகாவலி அதிகாரசபையை எமது பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/241485