அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
200 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செய்மதி கனடாவில வீழ்ந்தது! [saturday, 2011-09-24 20:44:42] விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா "யூ.ஏ.ஆர்.எஸ்." என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கடந்த 2005-ம் ஆண்டில் முடிவடைந்தது.இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கைகோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கைகோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் விழும் என "நாசா" விண்வெளி மையம் அறிவித்தது. நேற்று இரவு 10.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அது பூமியில் மோதும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் அது ப…
-
- 0 replies
- 966 views
-
-
ஒளியை விஞ்சிய வேகத்தில் பயணம்: வியப்பில் விஞ்ஞானிகள் ஒளி பயணிக்கும் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் அணுக்களிலும் சிறிய துகள்கள் பயணிப்பதைத் தங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்று சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த முடிவு உண்மையானால் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய மிக முக்கியமான பௌதீக விதிகளில் ஒன்றை பொய்யாக்குவதாக இந்த கண்டுபிடிப்பு அமையும். தங்களது பரிசோதனை தந்துள்ள இந்த முடிவு சரிதானா என்பதை மற்றவர்களும் ஆராய்ச்சிகளை நடத்தி உறுதிசெய்ய வேண்டும் அல்லது தங்களது பிழையை சுட்டிக்காட்ட வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். ஒளியின் வேகமே அதிகபட்ச வேகம் ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்…
-
- 3 replies
- 4.4k views
-
-
செப்டம்பர் 23 ஆம் திகதி பூமியை நோக்கி வரும் புதிய அச்சுறுத்தல்: நாசா எச்சரிக்கை வீரகேசரி இணையம் 9/19/2011 12:40:51 PM முற்றிலுமாக செயலிழந்த நிலையிலுள்ள செயற்கைக்கோளொன்று எதிர்வரும் சில தினங்களில் பூமியில் விழும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டெப்ரிஸ் எனப்படும் குறித்த விண்கலத்தின் நிறை 6-7 டொன்கள் ஆகும். இதனை நாசா விஞ்ஞானிகள் தற்போது உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச் செயற்கைக்கோளானது எதிர்வரும் 23ஆம் திகதியளவில் பூமியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இக்கோளானது பூமியை வந்தடையும் போது 1006 துண்டுகளாக உடையுமெனவும் இவற்றில் 26 துண்டுகள் மட்டுமே பூமியில் விழுமெனவும் நாசா விஞ்ஞான…
-
- 7 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
இரண்டு சூரியன்களை சுற்றும் புதிய கோள் பூமியில் இருந்து சுமார் 200 ஒளி வருடங்களுக்கு அப்பால் இரண்டு சூரியன்கள் கொண்ட சூரியக் குடும்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நாஸாவின் தொலைநோக்கி மேற்கண்ட 16 பீ என்ற கிரகம் தொடர்பான அதிசயத்தை உலகின் முன் வைத்துள்ளது. இரண்டு சூரியன்களை சுற்றுவது என்பது உலகில் இதுவரை அறியப்படாத புதிய விடயம் என்று பொலிற்றிக்கன் சுட்டிக்காட்டியுள்ளது. பாரிய வெளிச்சம் போல ஒரு சூரியன் பின்னணியில் தெரிகிறது, அதன் முன்னால் இன்னொரு சூரியன் தெரிகிறது. அதற்கு அப்பால் கறுப்பு நிறத்தில் 16பீ என்ற அந்தக் கிரகம் தெரிகிறது. இதில் சிவப்பு வடிவமாகத் தெரியும் சூரியன் பூமியைவிட சிறியதாக இருக்கிறது. மேற்கண்ட குளிர்ந்த கிரகத்தின் வெப்பநிலை -73 இருந்…
-
- 3 replies
- 1.3k views
-
-
உலகம் தற்போது எதிர்நோக்கி வரும் பிரதான சவால்களில் ஒன்று மின் சக்திப் பற்றாக்குறையாகும். வளர்ந்து வரும் நாடுகள் முதல் வளர்ச்சியடைந்த நாடுகள் வரை அனைத்தும் இதற்கு முகங்கொடுத்து வருகின்றன. குறிப்பாக ஜப்பான் தற்போது மிகப் பெரியளவில் மின்சக்தி பற்றாக்குறைக்கு முகங்கொடுத்து வருகின்றது. அண்மையில் அந்நாட்டைத் தாக்கிய சுனாமியால் அங்கு காணப்பட்ட பல அணுமின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஜப்பான் வரலாறு காணாத மிக மோசமான மின்சாரப் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்துள்ளது. இதனை ஈடுசெய்யும் முகமாக தற்போது ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் புதுவித முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றே மனித அசைவுகள் மற்றும் செயற்பாடுகளிலிருந்து மின்சக்தியைப் பெற்றுக் கொள்ளுத…
-
- 6 replies
- 1.3k views
-
-
துளையை அடைத்து பூமியை காப்போம் – இன்று சர்வதேச ஓசோன் தினம் Posted by சோபிதா புவி மண்டலத்திலிருக்கும் ஓசோன் படலம் தான், நம்மை சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது. இதை பாதுகாக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் செப்.16ம் தேதி “சர்வதேச ஓசோன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. ஆபத்தான இந்த கதிர்கள் தோல்புற்று நோயை உருவாக்கக்கூடியவை. இதனால் உலகில் ஆண்டுதோறும் 66 ஆயிரம் பேர் பலியாகின்றனர். இவை பயிர்களையும் பாதித்து உணவுச்சங்கிலியை சீர்குலைக்க கூடியவை. ஏன் பாதிக்கிறது : 01970களின் தொடக்கத்தில் ஆலந்தை சேர்ந்த பால் குருட்சன், புகை மண்டலங்களால் ஓசோனுக்கு பாதிப்பு ஏற்படுவதை கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குளோரோ புளூரோ கார்பன்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
பூமியை விட 3.6 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு. [saturday, 2011-09-17 00:23:15] ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் கிரகங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிநவீன டெலஸ் கோப் மூலம் விண் வெளியில் ஆய்வு நடத்திய போது பூமியை போன்று மற்றொரு புதிய கிரகம் இருப்பதை கண்டுபிடித்தனர். இது பூமியை விட 3.6 மடங்கு பெரியது. இதை சுற்றி விண்மீன் (நட்சத்திரங்கள்) கூட்டம் உள்ளது. அதற்கு எச்.டி.85512 பி என பெயரிட்டுள்ளனர். இந்த கிரகம் பூமியில் இருந்து 36 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இதன் வலது புறம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. எனவே, இங்கு உயிர்கள் வாழ முடியும் என கருதப்படுகிறது. மேலும் இந்த புதிய கிரகத்தின் வெளிப்புற தோற்றம் பாறை போன்று காட்சி அளிக்கிறது. …
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
உணவுக்காக செவ்வாய் கிரகத்தில் தோட்டம். அமெரிக்காவின் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் வருகிற 2030-ம் ஆண்டில் செவ்வாய்கிரகத்தில் ஆய்வு தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த ஆய்வு 5 வருடங்கள் நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் விஞ்ஞானிகளில் தலா ஒருவருக்கு 3,175 கிலோ உணவு தேவைப்படுகிறது. எனவே, தேவையான உணவை சமாளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்கள் தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி ஓடத்தில் ஒரு வீட்டு தோட்டம் அமைத்து அதில் காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை பயிர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான வசதிகளுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அந்த விண்வெளி ஓடத்தை வடிவமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வு டெக்சாஸ் மாகாணத்தில் ஹிஸ்டனில் உள்ள டாக்டர் மயா கூப்பர்…
-
- 7 replies
- 1.1k views
-
-
சந்திரனை முழுமையாக ஆராயும் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டம் சந்திரனுக்கு அமெரிக்கா முதன் முதலாக மனிதனை அனுப்பியது. தற்போது அங்கு முழுமையாக ஆராய்ச்சி நடத்த நாசா மையம் திட்டமிட்டுள்ளது. சந்திரனின் புவிஈர்ப்பு தன்மை மற்றும் அதன் அமைப்பு குறித்த முழு தகவல்களும் திரட்டப்பட உள்ளது. அதற்காக அதி நவீன திறன் கொண்ட 2 செயற்கை கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.22 ஆயிரத்து 500 கோடி செலவில் வாஷிங் மெஷின் போன்ற 2 செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செயற்கை கோளை கேப் கானவரலில் உள்ள விமானபடை தளத்தில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. அவற்றை டெல்பா-2 என்ற ராக்கெட் மூலம் விஞ்ஞானிகள் செலுத்தினர். இந்த ராக்கெட் 3 மாத பயணத்துக்கு பிறகு சந்தி…
-
- 1 reply
- 1.3k views
-
-
அறிவாற்றல் மரபுப் பண்பா? பிரகாஷ் சங்கரன் நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா, இல்லை, சமூகச் சூழ்நிலையால் அமைவதா?” உலகின் எல்லாப் பகுதிகளிலும் அறிவாற்றல் உட்பட பல்வேறு பண்புகளும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது இனக்குழுவுக்கோ மரபார்ந்தவை, தலைமுறைகளாக வருபவை என்ற கருத்து பொதுவாக இருந்தது, பின்னர் சமூக-பண்பாட்டு வளர்ச்சியின் நிலையில் அறிவாற்றல் என்பது ஒரு மரபுப் பண்போ, பாரம்பரியமானதோ அல்ல, அது ஒரு பொதுப் பண்பு; சூழ்நிலையும், வாழ்நிலையுமே அதனைத் தீர்மானிக்கிறது, தகுந்த சூழ்நில…
-
- 14 replies
- 3k views
-
-
இரு கால்கள் இருந்தும் சில பறவைகள் ஒற்றைக்காலிலேயே நிற்கின்றனவே. ஏன்? மாதங்கி நாரைகள், பூநாரைகள் (ஃப்ளெமிங்கோ) தண்ணீரில் ஒற்றைக் காலில் தொடர்ந்து பலமணிநேரங்கள் நிற்பதைக் கவனித்திருப்போம். ஆய்வாளர்களும் இதுகுறித்து சிந்தித்திருக்கிறார்கள். தண்ணீரில் நின்றுகொண்டிருக்கும்போது இருகால்களுக்கிடையே அடிக்கடி வாத்துகள் புகுந்து நீந்திச் செல்வதால் ஏற்படும் இடையூறைத் தவிர்க்க ஒன்றைக்காலில் நிற்கின்றன என்ற கருத்தை முதலில் முன்வைத்தார்கள். இச்செயலின் அடிப்படைக் காரணம் ஆற்றல் சேமிப்புதான் என்று பின்னர் முடிவு செய்தார்கள். இப்பறவைகளின் கால்களில் உள்ள இரத்தக் குழாய்கள், உடலின் வெளிப்பரப்பிற்கு அருகில் இருப்பதால், குளிர்ந்த பருவநிலையில் , பறவைகளின் உடல்வெப்பம், கால்கள் மூலம் அ…
-
- 2 replies
- 2.3k views
-
-
புவி வெப்பமடைதல் தற்போது நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும். நம்மில் பலர் அதன் விளைவுகள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை. எனினும் இதன் விளைவுகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அண்டார்டிக்காவின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருவதனைக் குறிப்பிடலாம். இதனால் இப்பகுதியில் உருவாகி வரும் அபாயமொன்று தொடர்பில் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம், அண்டார்டிகாவின் 'பார்மர் டீப்' எனப்படும் பகுதியில் 'கிங் கிரப்' எனப்படும் இராட்சத நண்டினம் பெருகி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நண்டினமானது 1 முதல் 3 மீற்றர்கள் வரை வளரக்கூடியன. இவ்வகை நண்டுகள் வெப்பமான நீர்ப் பகுதி…
-
- 9 replies
- 1.4k views
-
-
தங்கம் உருவான கதை தங்கம் விண்ணிலிருந்து வந்தது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கம் மற்றும் பெருமதிப்பு வாய்ந்த தனிமங்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவை அனைத்தும் அண்ட வெளியிலிருந்து பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வந்தன என்பதுதான் தற்போது அறிவியலாளர்கள் கூறும் செய்தி. இந்த கண்டுபிடிப்பு குறித்த தகவல்களை இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர். கீரீன்லாண்டில் நான்கு பில்லியன் ஆண்டுகள் பழமையான படிமங்களை அராய்ந்த பிறகே தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் படிமங்…
-
- 0 replies
- 925 views
-
-
-
மல்டி ஆக்சில் டிரக், மல்டி ஆக்சில் பஸ் ஆகியவற்றை பார்த்திருக்கிறோம். ஆனால், இத்தாலியை சேர்ந்த கொவினி நிறுவனம் 6 வீல்களுடன் கூடிய மல்டி ஆக்சில் சூப்பர் காரை வடிவமைத்து அசத்தியுள்ளது. சி6டபிள்யூ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் உலகின் 6 சக்கரங்களை கொண்ட முதல் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. முன்பக்கம் நான்கு சக்கரங்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். இதில், 500 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் ஆடியின் 4.2 லிட்டர் வி-8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இலகு எடையும், அதிக உறுதித்தன்மையும் வாய்ந்த கார்பன் பைஃபர் பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இந்த கார் வெறும் 1,150 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. மணிக்கு அதிகபட்சமாக …
-
- 0 replies
- 975 views
-
-
Cashback பணமீள்ஈடு இணைய அங்காடியில் பொருட்கள் வாங்கும் போது எவ்வாறு பணம்சேமிக்கலாம்? என்பதை பற்றி பார்ப்போம். Cashback பணமீள்ஈடு அமைப்பானது (system) நாங்கள் பொருள் வாங்கும்போது, செலுத்திய பணத்தின் ஒருபகுதியை மீளப்பெறுவதாகும். எவ்வாறு? முதலீல் நாங்கள் கீழ் கண்ட இணைப்பை சுட்டி அல்லது முழுவதுமாகக ஒரு எழுத்து விடாமைல் நகல் எடுத்து அதை உலாவியல் ஒட்டவும். 1. YINGIZ shopping community - Geld zurück statt Bonus-Punkte oder Meilen! Adresse: https://www.yingiz.com/?ref=36520#.TlkfkRcdlpE.email 2. http://www.tamola.de/empfehlung/NjM0OQ,,/ இந்த இரண்டிலும் உங்களை இணைத்துக்கொள்ளவும். இது வெகு இலகு * ஊங்கள் மின்-அஞ்சல்…
-
- 0 replies
- 786 views
-
-
வைரத்தினால் உருவான கோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மஞ்செஸ்டர் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இந்தக் கோளைக் கண்டுபிடித்துள்ளனர். பால் வீதியில் காணப்பட்ட பிரமாண்டமான கோள் ஒன்றே இவ்வாறு மாறியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பூமியிலிருந்து சுமார் 4000 ஒளிவருடங்கள் தொலைவிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கோளில் அதிகளவாக அடர்த்தியான காபன் காணப்படுவதாகவும், இக்காபன் படிகமாக இருக்க வேண்டுமெனவும் இதன் பெரும்பகுதி வைரத்தினால் ஆனதெனவும் அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். வீரகேசரி இணையம் 8/26/2011 3:13:01 PM http://www.virakesar...asp?key_c=33500
-
- 4 replies
- 1.2k views
-
-
கணிதம் கற்க உங்கள் உறவுகளுக்கு கணிதத்தில் தமிழில் கற்க இந்த தளம் உதவலாம். http://bseshadri.wordpress.com/
-
- 1 reply
- 3.3k views
-
-
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் “நாசா” விஞ்ஞானிகள் பல ஆண்டு களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளில்லா விண்கலம், புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்புகிறது. சமீபத்தில் விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பிய போட்டோவை ஆராய்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்ப தற்கான அறிகுறிகள் காணப் படுவதாக தெரிவித்தனர். நீரோட்டத்துக்கான தடம் செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் காணப்படு கின்றன. எனினும் புகைப் படம் தெளிவாக இல்லாத தால் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறி…
-
- 0 replies
- 681 views
-
-
சவுத்ஹம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிறிய கண்ணாடி டிஸ்க்கினை சுமார் 260 ஜிபி வரையான தரவுகளை சேமிக்ககூடியதாக மாற்றி சாதனை படைத்துள்ளனர். இக் கண்ணாடி டிஸ்க்கானது நீண்ட கால பாவனைக்கு உகந்ததெனவும், 1000 பாகை செல்சியஸ் வரை வெப்பத்தினைத் தாங்கக்கூடியதுமாகும். 'மெம்டோ பிரிண்டிங்' என்ற குறுகிய லேசர் பல்ஸ்களைப் பயன்படுத்தும் முறையின் மூலமே இதில் தரவுகள் பதியப்படவுள்ளன. ஒரே பகுதியினுள் பல தரவுகளைப் பதிவுசெய்யும் வசதியும் இதில் உள்ளது. மருத்துவத் துறையினரின் பயன்பாட்டுக்காகவே இதனை முக்கியமாக உருவாக்கியதாக இதன் உருவாக்குநர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் படங்களைப் பதிவு செய்து சேமிப்பதற்கு அதிகமான இடவசதி தேவைப்படுவதன…
-
- 0 replies
- 872 views
-
-
உங்களிடம் ஐபோன் (iphone) இல்லை என்ற கவலையா..??! ஐபொட் (ipod) ஒன்று இருந்தும் ஐபோன் இல்லையே என்ற தவிப்பா..??! கவலையை விடுங்கள். அப்பிள் பீல் (Apple peel).. என்ற ஒரு கருவி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயில் பிரேக் (jailbreak) செய்யப்பட்ட உங்கள் ஐபொட்டை (3ஜி அல்லது 4ஜி) இந்தக் கருவியை வாங்கி செருகிக் கொள்ள வேண்டியது தான். உங்கள் ஐபொட் ஐபோன் ஆக மாறிவிடும். அப்புறம் என்ன.. உயர்ந்த விலை கொடுத்து வாங்க வேண்டிய ஐபோன்.. கொஞ்சப் பணத்தில் வாங்கக் கூடிய ஐபொட்டின் வழி.. ஐபோன் ஆகிவிடும். நீங்கள் விரும்பிய போன் சிம் (Phone SIM) போட்டு பாவிக்கலாம். இப்போது நம்பகமான அமேசனிலும் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 79 பவுண்டுகள் மட்டுமே. ஈபேயிலும் விற்பனைக…
-
- 2 replies
- 1.2k views
-
-
<span style="font-family: tahoma, geneva, sans-serif"><span style="font-size: 18px">அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது. இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன. சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே இதன் தயாரிப்புக்கான முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவிக்கின்றது. செயற்கை நுண்ணறிவின் ( artificial intelligence ) அடிப்படையாக இதன் உருவாக்கமானது திகழுமென ஆராய்ச்சியாள…
-
- 1 reply
- 1.1k views
-
-
Posted by சோபிதா on 17/08/2011 in புதினங்கள் | 0 Comment தைவான் தலைநகர் தைபேயில் உள்ளது தேசிய தைவான் அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகம். இங்குள்ள எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவு பேராசிரியர் சியூ லின் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் சேர்ந்து பாடும் ரோபோ அழகியை உருவாக்கி உள்ளனர். பாட்டு ஸ்வரங்கள் (நோட்ஸ்) எழுதிய பேப்பரை இதன் முன்பு காட்டினால் போதும்.. பாடகி போல, சூப்பராக பாட ஆரம்பிக்கிறது. பேப்பரில் எழுதியிருக்கும் நோட்ஸ்களை படிப்பதற்காக இதன் கண்ணில் பிரத்யேக கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் உதவியுடன் வரிகளை முதலில் கவனமாக படிக்கிறது. பின்னர் ஒலிக்கான நோட்ஸ்கள் தனியாக சின்தசைசர் கருவிக்கு மாற்றுகிறது. பாடல் வரிகளை சரியாக உச்சரித்து ராகம் போட்டு பா…
-
- 1 reply
- 1.3k views
-
-
இவ் விண்வெளி ஓட விடுதியானது சர்வதேச வீண்வெளி ஓடத்தினை விட வசதியாக இருக்கும், 7 பேர் தங்கியிருக்கமுடியும் என்பதுடன் விண்வெளியை கண்டு இரசிக்க முடியும். இப்பயணத்தின் போது பயணிப்பவர்கள் மதுபானம் அருந்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பூமியில் சமைக்கப்பட்ட உணவுகள் விண்வெளி விடுதியில் உள்ள மைக்ரோவேவ் அவனில் சூடாக்கப்பட்டு பரிமாறப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. விண்வெளித்துறையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களை மேற்கொண்டுள்ள நாடு ரஷ்யா. தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனமொன்று புரட்சிகரமானதும் வித்தியாசமானதுமான கற்பனையொன்றுக்கு வடிவம் கொடுக்கவுள்ளது. ஆம், விண்வெளியில் உங்கள் சுற்றுலாவை கண்டு களிப்பதற்கு அந்நிறுவனம் ஏற்ப…
-
- 3 replies
- 1.2k views
-