அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
வாட்ஸ் ஆப் வணிக செயலி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உள்ளூரில் சலவை தொழில் செய்பவரிடம் நீங்கள் கொடுத்த துணிகளை, அவர் இந்த துணிகளை துவைத்து உலர வைத்து, மடித்து உங்களிடம் தருவதற்கு தயாராக வைத்திருக்கிறாரா என்பதை அறிய அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவல் மட்டும் அனுப்பினால் போதும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? படத்தி…
-
- 0 replies
- 499 views
-
-
சூரியனை நெருங்கும் பூமி தமிழகத்தில் குளிர் காலத்தில் குறிப்பாக சில இடங்களில் நல்ல குளிர் இருக்கும். அப்போது ஏழை மக்கள் திறந்த வெளிகளில் கட்டைகளை, சுள்ளிகளை எரித்து அதில் குளிர் காய்வர். இவ்விதம் எரியும் நெருப்பிலிருந்து மிக அப்பால் இருந்தால் சூடு உறைக்காது. சற்றே அருகில் இருந்தால் வெப்பம் இதமாக இருக்கும். பூமியைப் பொருத்தவரையில் சூரியன் தான் நமக்கு வெப்பத்தை அளிக்கிறது. சூரியன் இன்றேல் நாம் அனைவரும் குளிரில் விறைத்து மடிந்து விடுவோம். ஆனால் சூரியனிலிருந்து நாம் எப்போதும் ஒரே தூரத்தில் இருப்பது கிடையாது. சூரியனைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையானது சற்றே நீள் வட்டத்தில் அமைந்துள்ளது. ஆகவே நாம் குறிப்பிட்ட சமயத்தில் சூரியனிலிருந்து சற்று விலகியபடி இருக்கிறோம். அ…
-
- 0 replies
- 2.1k views
-
-
நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கருந்துளைகள் மற்றும் விண்வெளியில் நெடுந்தொலைவில் ஏற்படும் அபூர்வ நிகழ்வுகளை ஆய்வு செய்ய 2012 ஆம் ஆண்டு ஜூன் 12 ந்தேதி அணு நிறமாலை தொலை நோக்கி ஒன்றை அமைத்தது. அணு நிறமாலை தொலைநோக்கி அல்லது நூஸ்டர் எனப்படும் இந்த தொலை நோக்கி கருவி விண்வெளி சார்ந்த சார்ந்த எக்ஸ்-ரே தொலைநோக்கி கருவியாகும். இந்த தொலை நோக்கி எடுத்து அனுப்பிய மிக அரிய புகைப்படம் ஒன்றை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்டது. இது நமது சூரி மண்டலம் குறித்து நீண்ட நாள் நிலவும் மர்மத்தை விடுவிப்பதாக உள்ளது. சூரிய இயக்கவியல் குறித்து படம் எடுத்து அனுப்பி உள்ளது. சூரியன் குறித்து இது எடுத்து அனுப்பி இருக்கும் முதல் படம் இதுவாகும். இந்த படம் பார்ப…
-
- 0 replies
- 494 views
-
-
கூடு விட்டு கூடு பாய்வது, ஆட்டின் உடலுக்குள் மனிதனின் ஆவி நுழைவது போன்ற காட்சிகளை விட்டாலாச்சார்யா தொடங்கி ஸ்டீவன் ஸ்பேல்பர்க வரையில் பல திரையுலக ஜாம்பவான்கள் நமக்கு சினிமாக்களின் மூலம் காட்சிப்படுத்தியுள்ளனர். பி.சி.சர்க்கார் உள்ளிட்ட சில மந்திரக்கலை நிபுணர்கள், தாஜ் மகாலை மறையச்செய்வது, காரை காணாமல் போக வைப்பது போன்றவற்றை நமது காட்சிப்பிழை மற்றும் ஒளியின் மாயாஜால வேலைகள் மூலம் நிகழ்த்தி நம்மை நம்ப வைத்துள்ளனர். ஆனால், ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விசேஷ கண்ணாடியை அணிவதன் மூலம் எதிரே இருக்கும் நபரை காணாமல் போகச் செய்து, வெறும் ஒளியின் நிழற்கற்றையாக்கி நிற்கவைத்து சாதனை படைத்துள்ளனர். வி.ஆர். (Virtual Reality) மென்பொருள் தொழில…
-
- 0 replies
- 798 views
-
-
‘வால் நட்சத்திரம்’ என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் ஆகும். ஒரு வால் நட்சத்திரமானது சூரிய குடும்பத்தின் உட்புற மண்டலத்தை நெருங்கும்போது, சூரியனின் வெப்பத்தால் அதில் உள்ள பனி ஆவியாகி, வால் நட்சத்திரத்தின் கருவைச் சுற்றி ஒருவித ஒளிரும் தன்மைகொண்ட வாயு மற்றும் தூசியால் ஆன வால் போன்ற அமைப்பு உருவாகிறது. இந்த வால் நட்சத்திரங்கள் காண்பதற்கு அரிதான நிகழ்வாகவும், வானியல் அற்புதங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது. சுமார் 30 கி.மீ. நீள மையப் பகுதியை கொண்ட இந்த வால்நட…
-
- 0 replies
- 545 views
- 1 follower
-
-
சந்திரனைத் தொட்டது யார்? - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து.. # 1 நேற்று மாலை கார்த்திகை நிறைநிலா. இன்று மாலையிலோ கிரகணப் பிறைநிலா. ஆறு மணி பதினான்கு நிமிடத்தில் ஆரம்பித்து, மெல்ல மெல்லக் கீழிருந்து மேலாக இடமிருந்து வலமாகத் தேய்ந்து எட்டு மணி இரண்டு நிமிடத்தில் முழுமையாக மறைந்து மறுபடியும் கீழிருந்து மேலாகவே வலமிருந்து இடமாக வளர்ந்த இச்சந்திரக் கிரகணமே இதுகாலமும் வந்தவற்றில் நீண்ட ஒன்றாகுமாம் அடுத்து 2018-ல் வரவிருக்கும் கிரகணம் வரை. # 2 ஃப்ளிக்கர் தளத்தில் நேற்றுப் பதிந்த கார்த்திகை முழுநிலவு இன்று: # 3 கண் முன்னே தேயும் அற்புதம் முன் நேரத்தில் தேயும் நிலவை யூரோப், ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய…
-
- 0 replies
- 878 views
-
-
செவ்வாய் கிரகத்தை ஆராயும் முயற்சியில் நீண்ட காலமாக தீவிரமாகவே ஈடுபட்டு வரும் நாசா, தனது ஆய்வின் அடுத்த கட்டமாக விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தங்குமிடம் ஒன்றை அமைக்கவுள்ளது. மனிதனின் மண்டை ஓடு முதல் பீட்சா தயாரிப்பது வரை பல்வேறு சாதனைகளை 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் நிகழ்த்தி வரும் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களுக்காக தங்குமிடம் ஒன்றை நாசா அமைக்கவுள்ளது. கூடு போன்று தோற்றம் கொண்ட இந்த தங்குமிடத்தில் மொத்தம் 3 தளங்கள் இருக்கும். 3 ஆவது தளம் வெறும் 3 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்டது. 2 ஆவது தளம் 29 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும் இதில் பணியிடமும் கழிவறைகளும் இருக்கும், தரைத்தளம் 40 சதுர மீட்டர் அள…
-
- 0 replies
- 419 views
-
-
உலகின் அதிவேக விமானத்தை மீண்டும் தயாரிக்கிறது அமெரிக்கா உலகின் அதிவேக விமானமான SR-71 Blackbird விமானத்தை மீண்டும் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1950ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவுடனான பனிப்போரின் போது SR-71 Blackbird என்ற விமானத்தை அமெரிக்கா தயாரித்தது. குறித்த விமானம் இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களிலேயே அதிக வேகமாகவும், அதிக உயரமாகவும் பறக்கும் திறன் கொண்டது. 80 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு மூவாயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட குறித்த விமானம் கருப்பு வண்ணப் பூச்சுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1960ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவு விமானமான ‘யு-2’ என்ற விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து SR-71 Blackbird விமானத்தின் பயன்பாட்டை…
-
- 0 replies
- 402 views
-
-
Unicode Technical Note #21: Tamil Numbers Originally, Tamils did not use zero, nor did they use positional digits (having separate symbols for the numbers 10, 100 and 1000). Symbols for the numbers are similar to other Tamil letters, with some minor changes. For example, the number 3782 is not written as ௩௭௮௨ as in modern usage. Instead it is written as ௩ ௲ ௭ ௱ ௮ ௰ ௨. This would be read as they are written as Three Thousands, Seven Hundreds, Eight Tens, Two; or in Tamil as ¬}²-ஆயŽர{¢-எ¸-¥‚²-எz-ப{¢-இரzž. [1] Reference [1] uses Tamil numerals for Chapter numbers. This usage is based on modern practice, using both positional digits and zero. Refer…
-
- 0 replies
- 779 views
-
-
மதுவுக்கு அடிமையானவர்களை அந்தப் பிரச்சனையிலிருந்து மீட்பதற்கான ஒருவகை மாத்திரை தான் நல்மாஃபீன் (Nalmefene). ஸ்காட்லாந்தில் மதுவுக்கு அடிமையான நோயாளிகளுக்கு அரச மருத்துவத் துறை இந்த மாத்திரையை வழங்குகின்றது. இதனை, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பிராந்தியங்களான இங்கிலாந்திலும் வேல்ஸிலும் உள்ள நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று நைஸ் (NICE) என்கின்ற தேசிய சுகாதார பராமரிப்புக்கான நிறுவனம் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொன்றும் 3 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கும் அதிக விலைகொண்ட இந்த மாத்திரையை சுமார் 6 லட்சம் நோயாளிகளுக்கு வழங்கவேண்டிவரும் என்று நைஸ் கணித்துள்ளது. நல்மாஃபீன் அல்லது செலின்க்ரோ (Selincro) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று வீத…
-
- 0 replies
- 472 views
-
-
பனி மனிதன் வடிவில் காட்சி தரும் Ultima Thule கோள் – நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு சூரியனிலிருந்து 6.4 பில்லியன் கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோள் Ultima Thule. இந்த கோள் ஒரு பெரிய பனிமனிதன் போன்ற (snowman) வடிவில் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கோளின் துல்லியமான ஒளிப்படங்களை அமெரிக்க ஆய்வு அமைப்பின் New Horizons விண்கலம் வெளியிட்டுள்ளது. இரண்டு கோளங்கள் இணைந்து அந்த வடிவம் உருவானதாக நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இது மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு எனவும் அவர்கள் கூறியுள்ளனர். New Horizons விண்கலம் Ultima Thule கோளை கடந்த செவ்வாய்க்கிழமை கடந்து சென்ற போது குறித்த ஒளிப்படம் எடுக்கப்பட்டுள்ளது. Ultima Thule கோள் 2014ஆம் ஆண்டு முதல்முறையாகத் …
-
- 0 replies
- 501 views
-
-
சாம்சங்கின் 'bendable phones'..!? சாம்சங் வெகு நாட்களாகவே புதிய வகை 'பெண்டபல் ஃபோன்களை' உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சில இணைய தளங்களில், பெண்டபல் ஸ்கிரீனுடைய சாம்சங் ஃபோன்களின் டிசைன் என்று சில படங்கள் வெளியாகியுள்ளது. இது சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், அந்நிறுவனத்தின் ஃபோனின் டிசைன் தான் இது என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுவரை ஸ்க்ரீனை மடிக்கும் படியான வடிவுள்ள ஃபோன்கள் வராத நிலையில், இந்த ஃபோன்கள் வந்தால், மொபைல் தொழில்நுட்பத்தின் அடுத்த நிலை என்று கூறப்படுகிறது. இந்த ஃபோன்கள் 2017ல் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சாம்சங் நிறு…
-
- 0 replies
- 341 views
-
-
விண்வெளியில் என்ன இருக்கிறது என்று ஆராயும் நோக்கில் எண்ணெற்ற செயற்கைகோள்களை நாம் பூமியிலிருந்து ஏவி வருகிறோம். அவ்வாறு விண்வெளிக்கு பூமியை மற்றும் அண்ட வெளியை ஆராய நாம் அனுப்பிய விண்கலங்கள் ஏராளம் அங்கு சுற்றிக்கொண்டிருக்கின்றன. அதில் காலாவதியான விண்கலங்கள், அதை ஏற்றிச்சென்ற ராக்கெட்டுகள் மற்றும் வெடித்த சிதறியவை என மொத்தம் 19000-க்கும் மேற்பட்ட விண்வெளிக் குப்பைகளும் விண்வெளியில் சுற்றிவருவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு சுற்றிவரும் குப்பைகளை நாம் உடனடியாக தடுக்கா விட்டால் அது விண்கலங்களின் (சேட்டிலைட்டுகள்) சுற்றிவட்டப்பாதையில் அடுத்த 200 ஆண்டுகளில் பேரழிவு மோதல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் பூமியை சுற்றிவரும் விண்கலங்கள் இதுபோன்று பேரழிவுகளை இன்னும் 5-9 …
-
- 0 replies
- 555 views
-
-
நமது சூரிய மண்டலங் களுக்கு அப்பால் 200க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் கிளீஸ்-581 என்ற நட்சத்திரத்தை சுற்றி சூப்பர் பூமி என்ற புதிய கிரகம் சுற்றி வருவதை கண்டறிந்தனர். இந்த புதியகிரகம் பூமியை போலவே உள்ளது. இப்போது கரோட் எக்சோ 1 பி என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள் ளனர். மானோசிரஸ் என்ற நட்சத்திர கூட்டங்களை இந்த புதிய கிரகம் சுற்றி வருகிறது. இந்த நட்சத்திர கூட்டங்களில் இருப்பது 1500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இது உள்ளது. பிரான்சு நாட்டு விஞ்ஞானிகள் அனுப்பிய கரோட் என்ற விண்கலம் இந்த புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. குரு கிரகத்தை வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, தற்போது சூரியன் தனது ‘அதிகபட்ச செயல்பாட்டு காலகட்டத்தில்’ உள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஜானதன் ஓ'கேலகன் பதவி, பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது சூரியன் தனது ‘அதிகபட்ச செயல்பாட்டு காலகட்டத்தில்’ உள்ளது. ஆனால் 14,000 ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியைத் தாக்கிய ஒரு மிகப்பெரிய சூரிய நிகழ்வுடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் இல்லை. இன்று அத்தகைய ஒரு சூரிய நிகழ்வு ஏற்பட்டால், பூமியில் அதன் விளைவு பேரழிவை ஏற்படுத்தக் கூடும். பூமியில் உள்ள மிகப் பழமையான மரங்கள் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையவை. அனைத்து வகையான வரலாற்று நிகழ்வுகளையும் கடந்து இவை வாழ்ந்துள்ளன. ரோமானியப் …
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
ஆரொவில் அருகே அகழ்ந்தெடுக்கப்பட்ட இரும்புக் கால தாழி புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஆரோவில்லில் இரும்பு காலத்தைச் சேர்ந்த அதாவது கி.மு. 300ஐச் சேர்ந்த , இறந்தவர்களின் உடல் எச்சங்களைப் புதைக்கும் தாழிகள், கருவிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை நடந்த இந்த அகழ்வாய்வில், ஐந்து குழிகள் தோண்டப்பட்டன. இதில் 4 தாழிகள் கிடைத்துள்ளன. இந்த தாழிகளுக்குள் சிறு சிறு கிண்ணங்கள் போன்ற வேறு பொருட்களும் இருந்தன. இவை தவிர, 4 வாட்கள், ஈட்டி, கோடாலி போன்ற பொருட்களும் கிடைத்துள்ளன. அந்த இரும்புக் கோடாலி மரக் கைப்பிடியில் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டிருந்ததாகக் கருதப்படுகிறது. மரம் மக்கிவிட, இரும்புக் கோடாலியும் கம்பியும் கிடைத்துள்ளன. இங்கிருந்…
-
- 0 replies
- 429 views
-
-
‘டீவியை போட்டா விளம்பரம். ரேடியோவை திருப்பினா விளம்பரம். பேப்பர் பிரிச்சா விளம்பரம். மார்க்கெட்டிங் தொல்லை தாங்க முடியாம படுத்தா காலிங் பெல்லடித்து வாசலில் நிற்கும் சேல்ஸ்மென். பெரிய ரோதனையாப் போச்சு’ என்று கடுப்பிலிருக்கிறீர்களா? மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். இது இன்னும் மோசமாகப் போகிறது! வீட்டு வாசல் வரை வந்தவர்கள் அடுத்ததாக நுழையப் போவது………உங்கள் மூளைக்குள்! நியூரோ மார்க்கெட்டிங். மார்க்கெட்டிங்கின் அடுத்த கட்டம் ஆரம்பித்துவிட்டது. யோசித்துப் பாருங்கள். வீட்டிற்குள் நுழைந்து வண்டி சாவியை வைத்த இடம் பத்து நிமிஷத்தில் மறந்து போகிறது. நேற்று சாப்பிட்ட டிபன் இன்று ஞாபகத்தில் இல்லை. நேற்று டிபன் சாப்பிட்டோமா என்பதே நினைவில் இல்லை. சில விஷயங்களை எதற்கு என்று தெரியாமல…
-
- 0 replies
- 699 views
-
-
Jun 26, 2011 பிரான்சை மையமாகக் கொண்டியங்கும் ஐரோப்பிய வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி மையம் [European Aeronautic Defence and Space Company (EADS)] வான் வழித் தட வரலாற்றில் ஒரு பெரும் புரட்சிக்குத் தயாராகியுள்ளது. ஒரு விமானம் மணிக்கு 5000 கிவோமீற்றர் வேகத்தில் பறந்து 0%மான எரிபொருள் எச்சத்தை வான்வெளியில் கசிய விடுமாயின் அதுவே இன்றைய ஐரோப்பிய சூழல் பாதுகாப்பு மையத்தினதும் வான் போக்குவரத்துத் துறையினரும் கண்டு வரும் மாபெரும் கனவாகும். இந்தக் கனவிற்கு EADS ஒரு முழுமையான வடிவம் கொடுத்துள்ளனர். கனவு மெய்ப்பட்வேண்டும் என்ற பாரதி வாக்கு மீண்டும் பிரான்சில் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இதுவரை காலமாக அதியுச்ச வேகச்சாதனை படைத்த Supersonic Concor…
-
- 0 replies
- 960 views
-
-
பட மூலாதாரம்,ISRO/X கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 23 மார்ச் 2024, 12:47 GMT புதுப்பிக்கப்பட்டது 58 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முதல் முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட்டான ‘புஷ்பக்’-ஐ இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நேற்று (மார்ச் 22) காலை 7 மணிக்கு கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் நடத்தப்பட்ட மூன்றாவது கட்ட சோதனையில் ஆளில்லா புஷ்பக் ராக்கெட் தானியங்கி மூலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. முழுமையான மறுபயன்பாட்டு ராக்கெட் என்றால் என்ன? இந்த திட்டத்தின் வெற்றியால் இந்தியாவுக்கு கிடைக்கப் போகும் பலன்கள் எ…
-
- 0 replies
- 483 views
- 1 follower
-
-
1980 களின் நடுப்பகுதில் மிகப் பிரபல்யமாக இருந்த கொலிவூட் (Hollywood) தொலைகாட்சித் தொடரான Knight Rider இல் வலம் வந்த தானியங்கிக் கார் போன்ற கார் இன்று நிஜமாகி உள்ளது. அதனை கூகிள் நமக்காக செய்ய விளைந்துள்ளது. கூகிள் நிறுவனம் தயாரித்துள்ள (உருமாற்றி அமைக்கப்பட்ட Toyota Prius) தானியங்கி கார் தெருக்களில் ஓடுவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை அமெரிக்காவின் Nevada மாநிலம் வழங்கியுள்ளது..! இதன் மூலம் செய்மதிகளின் வழிகாட்டலோடு இயங்கும்.. கூகிளின் தானியங்கிக் காரின் உத்தியோக பூர்வ பாவனை உலகின் வீதிகளில் அதிகரிக்க அதிக காலம் எடுக்கப் போவதில்லை என்பதும் வெளிச்சமாகியுள்ளது. கூகிள் இணைய உலகில் இருந்து.. அன்ராயிட் மூலம் மென்பொருள் உலகிற்கு தாவி.. இப்போ அதன் வியாபார தந்திரத…
-
- 0 replies
- 911 views
-
-
கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 கலைச்சொல் விழியங்கள் Medical Terms in Tamil 0001 to 0005 http://youtu.be/PAD9Ybap8f4
-
- 0 replies
- 534 views
-
-
ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அம்மம்மா ராமன் ராஜா ‘நேச்சர்’ இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. ஆரெகான் மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மூன்று பெற்றோர் கொண்ட குழந்தைக் கரு ஒன்றை உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்களா ? ஆம், ஒரு அப்பா, இரண்டு அம்மா ! இது எப்படி சாத்தியம் என்று பார்ப்பதற்கு முன், நாம் மைடோகாண்ட்ரியாவை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. புழுப் பூச்சி முதல் ஆண்ட்ரியா வரை அனைவரையும் இயக்குவது மைடோகாண்ட்ரியாதான். ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாம்: நம்முடைய உடல், செல்களால் ஆனது. முகம், முடி, நகம் எல்லாவற்றுக்கும் வெவ்வேறு வித செல்கள். ஒரு செல்லுக்குள் புகுந்து பார்த்தால், அங்கே ஒரு மாபெரும் கெமிக்கல்…
-
- 0 replies
- 1.2k views
-
-
19 ஜூன் 2021 பட மூலாதாரம்,YU CHEN ஒரு மிகப் பெரிய காண்டாமிருக இனத்தை சீனாவின் வட மேற்குப் பகுதியில் கண்டுபிடித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது நிலத்தில் நடக்கும் மிகப் பெரிய பாலூட்டிகளில் ஒன்றாக இருந்திருக்கும் என கூறப்படுகிறது. 21 டன் எடை கொண்ட (இது நான்கு ஆப்பிரிக்க யானைகளின் எடைக்குச் சமம்) தி பராசிராதெரியம் லின்சியான்ஸ் (The Paraceratherium linxiaense) என்கிற காண்டாமிருக இனம் 26.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. கொம்பு இல்லாத அந்த காண்டாமிருகத்தினால் ஏழு மீட்டர் உயரமுள்ள மரம், செடி கொடிகளை மேய முடிந்திருக்கும் என்பதால், அது ஒட்டகச்சிவிங்கியை விட உயரமானதாக கரு…
-
- 0 replies
- 358 views
-
-
மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய செயற்கை கரத்தை பொருத்திக் கொண்ட முதலாவது பிரித்தானியர் என்ற பெயரை ஆப்கானிஸ்தானில் சேவையாற்றும் போது தாக்குதலுக்கு இலக்காகி கையொன்றை இழந்த அந்நாட்டு படைவீரர் பெறுகின்றார். தென் ரைனிசைட்டைச் சேர்ந்த அன்ட்றூகார்த்வெயிட் என்ற மேற்படி நபர் ஆப்கானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் பணியாற்றிய வேளை தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகி கையொன்றை இழந்தார். இந்நிலையில் அவருக்கு ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மேற்படி மனதால் செயற்படுத்தக்கூடிய செயற்கை கரத்தை பொருத்தியுள்ளனர். மேற்படி அறுவைச்சிகிச்சைக்கு 7 மணித்தியால நேரம் செலவிடப்பட்டுள்ளது. அன்ட்றூ தனது செயற்கை கரத்தை எவ்வாறு அசைப்பது என நினைக்கும் போது அவரது மூளைய…
-
- 0 replies
- 425 views
-
-
முன்னுரை அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஐன்ஸ்டீன் மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே மதங்கள் அழிந்து விடவில்லை. மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்திருக்கும் வர்க்க சமூகம் இருக்கும் வரையிலும் மதங்கள் அறிவியிலின் ஒளியை தடை செய்து கொண்டுதான் இருக்கும். …
-
- 0 replies
- 1.3k views
-