அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
“அழகான கணித மூளைக்காரர்” ஜான் நாஷ் விபத்தில் மரணம் நோபெல் பரிசு பெற்ற கணிதமேதை ஜான் நாஷ்நோபெல் பரிசுபெற்ற கணிதமேதை ஜான் நாஷ் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் நடந்த கார்விபத்தில் காலமானார். "A Beautiful Mind," என்கிற உலகப்புகழ்பெற்ற திரைப்படம் அவரது வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. எண்பத்தி ஆறு வயதான ஜான் நாஷும் அவரது மனைவி அலிசியாவும் பயணம் செய்துகொண்டிருந்த டாக்ஸி சாலைத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவருமே இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. Paranoid schizophrenia என்கிற தீவிர மன அழுத்தநோயால் தன் வாழ்நாளின் பெரும்பகுதி அவதிப்பட்ட ஜான் நாஷ், 1994ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நேபெல் பரிசை வென்றார். Game theory என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக …
-
- 0 replies
- 774 views
-
-
நோபல் பரிசு பெற்ற Crispr மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து HIV ஐ வெற்றிகரமாக அகற்ற முடியும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். Crispr மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தின் மூலம் உடலிலிருந்து முழுவதுமாக வைரஸை அகற்ற முடியும், இருப்பினும் இது பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்பதை சரிபார்க்க இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறது. தற்போதுள்ள எச்.ஐ.வி மருந்துகள் வைரஸை கட்டுப்படுத்தலாம் ஆனால் அதை அகற்ற முடியாது. நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஸ்டெம்-செல் மற்றும் மரபணு சிகிச்சை தொழில்நுட்பங்களின் இணை பேராசிரியரான டாக்டர் ஜேம்ஸ் டிக்சன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் : “எதிர்கால சிகிச்சைக்காக முழு உடலிலும் இந்த…
-
- 1 reply
- 774 views
- 1 follower
-
-
தடுப்பூசி அறிவியல்: யாருடைய சொத்து? டிசம்பர் 2019-ல் கரோனா தலைகாட்ட ஆரம்பித்தது. ஜனவரி 2020-ல் அதன் மரபுக் கட்டமைப்பு அறியப்பட்டது. அடுத்த 10 மாதங்களில் தடுப்பூசிகள் தயாராகிவிட்டன. இம்மாதிரி உயிர் காக்கும் மருந்துகள் மக்களைச் சென்றடைவதில் ஒரு சிக்கல் இருந்துவருகிறது. மருந்து நிறுவனங்கள் புதிய மருந்துகளைக் கண்டறியப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கின்றன. ஆய்வு வெற்றியடையும்போது நிறுவனங்கள் மருந்தின் கலவையையும் செய்முறையையும் பகிர்ந்துகொள்வதில்லை. எனவே, மருந்துகள் அதீத விலைக்கு விற்கப்படுவதைத் தடுக்க முடிவதில்லை. 1995-ல் உலக வணிக அமைப்பு உருவாக்கிய ஒப்பந்தம் இவர்களின் நலனைக் காக்கிறது. அறிவுசார் சொத்துரிமையில் வணிகம் தொடர்பான சட்டங்கள் (டிரிப்ஸ்) என்பத…
-
- 0 replies
- 773 views
-
-
புகைப்படக்கருவியிலிருந்து நேரடியாக இணையத்திற்க்கு படங்களை அனுப்புவது பற்றி அறிய தர முடியுமா.சிம் காட் போடக்குடிய கமராக்கள் உள்ளன. அவை பற்றிய தகவல்களும் தேவை நன்றி.
-
- 2 replies
- 773 views
- 1 follower
-
-
மே 22, 1822-ம் ஆண்டு. ஜெர்மனி. குளிர்காலம் சென்று வசந்தம் பிறந்தது. மெக்லென்பேர்க் பிரதேசத்தில் இருக்கும் போத்மேர் எஸ்டேட் முதலாளி எப்போதும்போல பறவைகளைச் சுடும் விளையாட்டில் அன்றைய ஜமீன்தார்கள் போல ஈடுபட்டுவந்தார். அவரது தலைக்கு மேலே வசந்த காலத்தில் பறந்தது செங்கால் நாரை (White Stork). எடுத்தார் தனது துப்பாக்கியை, சரியாகக் குறிவைத்தார். டுமீல்... கீழே விழுந்தது நாரை. இரண்டாம் வேட்டை நாரையின் அருகே விரைந்தனர் அவரும் அவரது கூட்டாளிகளும். குண்டடி பட்டு இறக்கும் தறுவாயில் கிடந்த நாரையைப் பார்த்ததும் வியப்பில் ஆழ்ந்தார்கள், திகைப்பில் ஒரு கணம் விறைத்துப்போனார்கள். ஏற்கெனவே அந்த நாரை வேட்டையாடப்பட்டிருந்தது. அதன் கழுத்தில் 80 சென்டிமீட்டர் நீளமுள்ள இரும்பு முனையுடன் ஈட்டி பா…
-
- 0 replies
- 772 views
-
-
விண்ணில் சீறிப்பாய்ந்த உலகின் மிகப்பெரிய ரொக்கெட். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” என்ற ரொக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனமனானது, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது. ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” எனப்படும் உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டானது, பூமியின் சுற்றுப்பாதை, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டார்ஷிப் ரொக்கெட் 394-அடி (120-மீற்றர்) உயரத்துடன் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. குறித்த ரொக்கெட் தெற்கு டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ…
-
-
- 2 replies
- 771 views
-
-
ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பஸ்சை மகேந்திரகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஞானகாந்தி. இவர் டீசல், கேஸ் ஏதுமின்றி ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பஸ்சை வடிவமைத்துள்ளார். நீண்ட வருடங் களாக, ஹைட்ரஜன் வாயு வில் இயங்கும் வாகனம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுவந்த இவர் இந்த முயற்சி வெற்றியடையே பஸ்சையே இயக்க முடியும் என்ற விபரத்தை ஐஎஸ்ஆர்ஓ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இஸ்ரோ குழுவினர் மற்றும் டாடா வாகன உற்பத்தி நிறுவனத்தின் துணை பொது மேலாளர் ராஜா தலைமையிலான குழுவினர் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் மெகா சைஸ் வால்வோ பஸ்சை தயாரிக் கும் பணியில் கடந்த 5 ஆண்டுகள…
-
- 3 replies
- 771 views
-
-
சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் போன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் ஃபோன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டெக் கிரன்ச் (TechCrunch) வெளியிட்டுள்ள தகவலில், பேஸ்புக் ஒரு புதிய ஸ்மார்ட் போனுக்கான மென்பொருளை வடிவமைப்பதில் தீவிரமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் செய்தியாளர் சந்திப்பின்போது பேஸ்புக் இணை நிறுவனர்…
-
- 0 replies
- 770 views
-
-
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களா?? இணையங்களில் பரபரப்பு Ca.Thamil Cathamil August 28, 2014 Canada செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆய்விற்காக நாசா, செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில், அங்கு விலங்குகளின் தொடை எலும்புகள் கிடப்பது போன்ற தோற்றம் காணப்பட்டது. அதன்மூலம், டைனோசர்கள் தோன்றி மறைவதற்கு முன்பே, செவ்வாய் கிரகத்தில் பெரியவகை விலங்குகள் உயிர் வாழ்ந்ததாக யூகங்கள் எழுந்தன. இதுபற்றி இணையதளங்களில் பரபரப்பாக கருத்து பரிமாற்றங்கள் நடந்தன. இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த தோற்றம், எலும்பு அல்ல, வெறும் பாறைதான் என்று நாசா வ…
-
- 4 replies
- 770 views
-
-
ஆர்ட்டெமிஸ்: நிலவுக்கு முதல் பயணம் செல்ல தயாராகும் நாசாவின் ராட்சத ராக்கெட் ஜொனாதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, விண்வெளி ஏவுதள அமைப்பு என்பது சந்திரனின் ஆய்வுக்கான புதிய சகாப்தத்தின் புதிய ராக்கெட் ஆகும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது புதிய ராட்சத நிலவு ராக்கெட்டை அதன் முதல் பயணத்திற்காக தயார்படுத்திவருகிறது. ஸ்பேஸ் லான்ச் சிஸ்டம் (எஸ்எல்எஸ்) என அழைக்கப்படும் இந்த வாகனம், ஆகஸ்ட் 29 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள விண்வெளி பயணத்திற்காக, ப்ஃளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள…
-
- 8 replies
- 769 views
- 1 follower
-
-
Title: Decoding of the Thirukkural Book Series - Volume 1 - Chapter 1 தலைப்பு: திருக்குறளின் மறைபொருள் அறியும் பயணம் - பாகம் - 1 - அத்தியாயம் - 1 மூலநூல் ஆங்கிலத்தில் - டாக்டர்.மு.செம்மல் (இந்தியா) தமிழில் மொழிபெயர்ப்பு - முனைவர் தேமொழி (அமெரிக்கா) The World's first medical science fiction book based on an imaginary core concept of extraterrestrial species conducting critical inquiry into the Neurological acumen embedded in Thirukkural which is a 2000 year old script penned in Tamil, probably the oldest language in the world. This science fiction book is written via the Google platform simultaneously in 2 Languages (English from India and Tamil from Americ…
-
- 0 replies
- 769 views
-
-
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஸ்கைப் சொப்ட்வெயாரில் எதிர் முனையில் பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும் உடனடியாக அது அடுத்த முனையில் பேசுபவர் தெரிவு செய்துள்ள மொழிக்கு மாற்றம் செய்து அந்த மொழியில் கேட்க கூடியவாறு வசதியினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரியில் இருந்து நடைபெற்று வந்த போதிலும், தற்போது சோதனைத் தொகுப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://virakesari.lk/articles/2014/06/04/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%…
-
- 1 reply
- 768 views
-
-
செயற்கைக்கோள் உதவியுடன் கடல் ஆழ அடிப்பரப்பைப் பற்றி புதிய புரிதலை உருவாக்கும் வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதில் தெரியும் நீளமான சிகப்பு கோடு, 5.5 ரிக்டர் அளவுக்கு மேலான பூகம்பப் பகுதிகளைக் காண்பிக்கிறது. | படம்: ராய்ட்டர்ஸ். கண்டங்கள் உருவான விதம் பற்றி புதிய புரிதல்களை ஏற்படுத்தும் விதமாக கடலின் அடிப் பரப்பு (sea floor)குறித்த புதிய விரிவான வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் கடலின் அடிப்பரப்பிலிருந்து எழும்பியுள்ள, இதுவரை அறியப்படாத ஆயிரக்கணக்கான மலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவை ‘கடல்மலைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. உலகில் சிறியது முதல் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு இந்த புதிய கடலடித்தள மலைகளின் பங்களிப்பு மிக மிக அதிகம் என்பது …
-
- 0 replies
- 768 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு, அறிவியலில் மட்டுமல்லாது, ஆன்மீகத்திலும் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், கடவுள்தான் மனிதனைப் படைத்தார் என்று மதங்கள் அதுகாறும் சொல்லி வந்த கோட்பாடுகளையும், கருத்துகளையும் மறுதலிக்கக் கூடியதாக அவரது கண்டுபிடிப்புகள் அமைந்தன. அதுவரை, எல்லா உயிரினங்களும் ஒரு தெய்வீக சக்தியால் கருத்தரிக்கப்படுகிறது என்றே மக்களும் நம்பி வந்தனர். பிரிட்டனில் பிறந்த இயற்கை ஆர்வலரான சார்லஸ் டார்வின்தான், முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என்பதை விளக்கினார். நடராஜனின் 'யார்க்கர்கள்' எங்கே போயின? அர்ஜூனை…
-
- 0 replies
- 767 views
- 1 follower
-
-
பேஸ்புக்கில் மார்க் சக்கபேர்க்கை பிளாக் செய்ய முடியாது நீங்கள் விரும்பாத, பிடிக்காத நபரை பேஸ்புக்கில் பிளாக் செய்யமுடியும். ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க்கை என்ன முயற்சித்தாலும் பிளாக் செய்ய முடியாது. மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம் நேரடியாகத் தொடர்பில் உள்ளார். தனது அடுத்த நடவடிக்கை தொடர்பான விவரங்களை உலகம் முழுவதும் உள்ளோரிடம் இந்தப் பக்கத்தின் மூலமாகத்தான் பகிர்ந்துகொள்கிறார். கம்ப்யூட்டர் புரோகிராமர் ஃபஹாத் என்பவர் நேற்று, பேஸ்புக் நிறுவனர் மார்க்கை பிளாக் செய்யும் முயற்சியில் தோல்வியடைந்ததையடுத்து தன்னுடைய இந்த ஆச்சரியமளிக்கும் அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்துகொண்டார். நீங்கள் எத்தனைமுறை அவரை பேஸ்புக்…
-
- 0 replies
- 767 views
-
-
செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் தாதுக்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர். லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபெர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின…
-
- 0 replies
- 766 views
-
-
19 பிப்ரவரி 2021 பட மூலாதாரம்,NASA செவ்வாய் கோளின் மேற்பரப்பில் புதிய ரோவர் ரோபாட் களமிறக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாயின் பரப்பில் இப்படி ஓர் இயந்திர ரோவரை நாசா களமிறக்குவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும். அமெரிக்காவின் நாசா தன் பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance rover) இயந்திரத்தை, வெற்றிகரமாக ஜெசெரோ என்றழைக்கப்படும் செவ்வாயின் மத்திய ரேகை பகுதிக்கு அருகில் ஓர் ஆழமான பள்ளத்தில் தரையிறக்கப்பட்டு இருக்கிறது. செவ்வாயின் மேற்பரப்பை வெற்றிகரமாக அடைந்த செய்தி உறுதி செய்யப்பட்ட பின், கலிஃபோர்னியாவில் நாசாவின் திட்டக்…
-
- 4 replies
- 765 views
-
-
கால்கள் ஒருவரின் மனதை காட்டிக் கொடுத்து விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், அது உண்மை தான், நமது உடல் பாகங்களில் முகத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கைகள். கைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியும், ஆனால் கால்கள் என்ன செய்கிறது என்பதை உணர மறந்து விடுகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதற்காக சோகமான நேரங்களில் கூட, வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல முகத்தை மாற்றி வைப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களின் கால்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும். நடக்கும் விதம் இளமையாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் வேகமாக நடக்கிறார்கள். இதனால் அவர்களது கைகள் முன்னும், பின்னும் அசைகின்றன. தாங்கள் இளமையானவர்கள், துடிப்பானவர்கள் என்…
-
- 2 replies
- 764 views
-
-
பிரியா நடராஜன் தேனீக்கள் ஒரு பக்கம் பிறந்து வளர்ந்து கொண்டும் இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கான மலர்களில் இருந்து தேனைக் கொண்டுவந்து சேகரித்து வைத்து இருக்கும் தேனடையைப் பார்த்து இருக்கிறீர்களா? அதேபோல பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிறந்து வளர்ந்து இறக்கும் நிகழ்வு நடைபெறுகிற காலக்ஸிக்கு விண்மீன் பேரடை என பெயர் வைத்துள்ளார்கள். தமிழ் தேன்தான். கருந்துளை நமது சூரியக்குடும்பம் பிறந்து வளர்ந்த தொட்டில் பால்வெளி மண்டலம் எனும் விண்மீன் பேரடை. சூரியனைச் சுற்றி கோள்கள் சுழல்கின்றன. சூரியன் தன் கோள்களையும் இழுத்துக்கொண்டுப் பால்வெளி மண்டலத்தைச் சுற்றுகிறது. சூரியனைப் போன்ற எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட பால்வெளி மண்டலம் தனது மையத்தில் உள்ளக் கருந் துளைய…
-
- 1 reply
- 764 views
-
-
போஸ்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், போர்ப்ஸ் இதழின் 400 பெரும் பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தொடர்ந்து 17வது ஆண்டாக அவர் இந்த இடத்தை தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கேட்ஸின் சொத்து மதிப்பு 54 பில்லியன் டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் வாரன் பபட், 45 பில்லியன் டாலருடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். 27 பில்லியன் டாலர் சொத்துக்களை உடைய ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓவுமான லேரி எலிசன் 3வது உலகப் பெரும் பணக்கார அமெரிக்கராக உருவெடுத்துள்ளார். இந்த பட்டியலில் பேஸ் புக் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் 35வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் (Steve Jobs) மற்றும் மீடி…
-
- 0 replies
- 764 views
-
-
ஆண்ட்ராய்டு போனில் அழகாக படம் எடுக்க அசத்தல் டிப்ஸ்! இன்றைய ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசிய அம்சங்களில் முதன்மையாக இருப்பது கேமராதான். ஸ்மார்ட்போன் வாங்கும் பலரும் முதலில் கேட்பது, "போனில் கேமரா எத்தனை மெகாபிக்ஸல்?" என்ற கேள்வியையே. அவ்வாறு நீங்களும் அதிக மெகாபிக்ஸல் கொண்ட நல்ல ஸ்மார்ட்போனை வாங்கி விட்டீர்களா? அதிக எம்பி கொண்ட கேமரா இருந்த போதும் அழகாக புகைப்படம் எடுக்க தெரியவில்லையா? கவலை வேண்டாம். ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை அழகாக எடுக்க சில டிப்ஸ் உங்களுக்காக... 1.டிஜிட்டல் ஜூம்மை தவிர்க்கவும்: டிஜிட்டல் ஜூம் செய்வதால் போட்டோவை பெரிதுபடுத்த முடியுமே தவிர துல்லியமான படத்தை எடுக்க முடியாது. இப்படி டிஜிட்டல் ஜூம் ( Digital zoom) செய்வதால் புகைப்படம் …
-
- 0 replies
- 763 views
-
-
பெர்சவரன்ஸ்: செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? - கண்டறிய கிளம்பியது நாசா விண்கலம் NASA / TWITTER அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய் கோள் ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக 'பெர்சவரன்ஸ்' விண் ஊர்தி நேற்று (ஜூலை 30) தனது பயணத்தை தொடங்கியுள்ளது. ஒரு டன் எடை மற்றும் ஆறு சக்கரங்கள் உள்ள இந்த விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும். ஃபுளோரிடாவின் கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் ஒன்றின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்ணூர்தி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாயில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ…
-
- 1 reply
- 763 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜோ அகாபாவுடன் ஜப்பான் வீரர் அகி ஹஷிடே கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னர்ட் பதவி, அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் இரண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெறும் எட்டு நாட்கள் தங்குவதற்காக பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) சென்றனர். ஆனால் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் பூமிக்கு திரும்பி வருவது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர்ந்த நாசா, அங்கே சென்ற ஆராய்ச்சியாளர்களான சுனிதா வில்லியம்ஸ், வில்மோரின் வருகையை 2025-ஆம் …
-
- 0 replies
- 763 views
- 1 follower
-
-
மல்டிவர்ஸ் என்றால் என்ன? நாம் வாழும் பேரண்டம் தவிர வேறு பேரண்டங்கள் உண்டா? பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY கட்டுரை தகவல் எழுதியவர்,டெய்சி ரோட்ரிக்ஸ் பதவி,. 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் 7 ஆஸ்கார் விருது வென்ற "எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்" படத்தின் பாத்திரமான ஈவ்லின் ஒரே நேரத்தில் ஒரு சலவை இயந்திர நிறுவனத்தின் உரிமையாளராகவும், குங்ஃபூ நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற ஒரு திரைப்பட நட்சத்திரமாகவும், நீண்ட, தளர்வான விரல்களைக் கொண்ட பெண்ணாகவும் இருக்கிறார். இந்த பாத்திரம் பல்வேறு இணை பிரபஞ்சங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்கிறது. அவரது சுயத்தின…
-
- 0 replies
- 763 views
- 1 follower
-
-
3 லட்சம் மைல்களை கடந்து சாதனை புரிந்த கூகுள் தானியங்கி கார்! சோதனை ஓட்டத்தில் இதுவரை 3 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) விபத்து உள்ளிட்ட எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக கடந்து சாதனை புரிந்திருக்கிறது டிரைவர் இல்லாமல் செல்லும் கூகுள் தானியங்கி கார். டிரைவர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி காரை கூகுள் சோதனை நடத்தி வருகிறது. செயற்கை கோள் தொடர்புடன் இயங்கும் இந்த காரை சுற்றிலும் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கம்ப்யூட்டர் உதவியுடன் கட்டுப்படுத்தி செல்லும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வரும் இந்த தானியங்கி கார் இதுவரை 300000 லட்சம் மைல்களை(4,82,803கிமீ) தூரத்தை கடந்…
-
- 0 replies
- 763 views
-