அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
கண்களை சிமிட்டுதல் என்பது கண் இமைகள் மூடித் திறக்கும் ஒரு வேகமான செயல்பாடாகும். இச்செய்கை சுமார் 400 மில்லி செகண்டில் (milliseconds) நடைபெறுகிறது. இவ்வேகம் சூழ்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற காரணிகளால் மாறுபடும். கண் விழிகளில் படிந்திருக்கும் தூசு, துகள்களையும் அகற்றவும், விழிகளின் ஈரத்தன்மை உலராமல் பாதுகாக்கவும் நாம் கண்களை சிமிட்டுகிறோம். சராசரியாக ஒரு நாளைக்கு நாம் 15,000 தடவை கண் சிமிட்டுகிறோம் அதாவது ஒரு நிமிடத்து சுமார் பத்து முறை. ஆண்களை விட பெண்கள் அதிகம் கண் சிமிட்டுகிறார்கள். விலங்குகளும் கண் சிமிட்டுகின்றன. மீனுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண் இமைகள் கிடையாது எனவே அவற்றிற்கு கண் சிமிட்டும் வேலை இல்லை https://oseefoundation.wordpress.com
-
- 2 replies
- 736 views
-
-
அசுவினி என்றழைக்கப்படும் எனப்படும் ஒரு வகை பூச்சியினங்களை எறும்புகள் தங்கள் புற்றுகளில் வைத்து வளர்க்கின்றன.இவற்றிற்கு ஒரு வகை புற்களை உணவாக அளித்து அவற்றிலிருந்து சுரக்கும் தேன் போன்ற இனிய பானத்தை கறந்து எறும்புகள் உணவாகக்கொள்கின்றன. எனவேதான் இவை ‘எறும்பு பசு, என்று அழைக்கப்படுகின்றன. இவ்வசுவினிகளை பாதுகாக்க, உணவளிக்க ஒரு தனி எறும்புப்பிரிவே இருக்கின்றன. இவை தேனெறும்புகள் (honey ants) என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் வேலை அசுவினிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதும், அவற்றிற்கு உணவளிப்பதும், அவை இடும் முட்டைகளை பாதுகாத்து வைப்பதில் தேனெறும்புகள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்ளும். உதாரணத்திற்கு குளிர்காலங்களில் முட்டைகளை சரியான சீதோஷ்ண நிலை உள்ள இடங்களுக்கு எடுத்துச்சென்ற…
-
- 0 replies
- 528 views
-
-
வாஷிங்டன், விலங்குகளின் கொழுப்பு, வீணாக போகும் சமையல் எண்ணெய் கழிவுகள் மற்றும் தாவர எண்ணெயிலிருந்து 'கிரீன் டீசல்' தயாரிக்கப்படுகிறது. ஏ.டி.எப்.-ஐ காட்டிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படும் இந்த எரிபொருள் கடந்த 2011-க்கு பிறகு தரைவழி போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. ஆசியா, ஐரோப்பிய, மற்றும் அமெரிக்க நாடுகளில் 800 மில்லியன் கேலன்கள் அளவுக்கு கிரீன் டீசல் உற்பத்தி உள்ளது. இது மிக குறைவே என்றாலும் பயன்பாடு அதிகரித்தால் உற்பத்தியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 'போயிங்' விமான நிறுவனம் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஜெட் பியூயல் பெட்ரோலியத்துடன் கிரீன் டீசலையும் கலந்து கடந்த 2 ஆம் தேதி போயிங் 787 விமானத்தில் சோதனை ச…
-
- 0 replies
- 599 views
-
-
ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது படைப்புகளை அணுகலாம். அதாவது, ஐன்ஸ்டீன் படைப்புகள் விரல் நுனியில் ஒரு கிளிக்கில் காத்திருக்கின்றன. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டி பிரஸ் தன் வசம் இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரம்மாண்டமான திறந்தவெளி அரங்கமொன்றில் நடிகர்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர விழாவொன்று நடக்கவிருக்கிறது. திறந்தவெளி மைதானத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களும் ரசிகர்களும் கூடியிருக்கிறார்கள். ஒவ்வொரு நடிகராக விழாவுக்கு வர ஆரம்பிக்கிறார் கள். நட்சத்திர நடிகர்களும் வருகிறார்கள். பிரபலமற்ற உபநடிகர்கள் வரும்போது, ரசிகர்கள் அவர்களைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால், மிகச் சுலபமாகவும் வேகமாகவும் மேடை நோக்கி நடந்து, மேடையில் அமர்ந்துகொள்கிறார்கள். இப்போது உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் உள்ளே வருகிறார்கள். நிலைமை மோசமாகிவிடுகிறது. அந்த உச்ச நட்சத்திரத்தைக் கூட்டம் சூழ்ந்து, அவரை ஆமைபோல நகரச் செய்கிறது. வழக்கமாக ஸ்டைலாக, வேகமாக நடக்கக் கூடியவர் இப்போது, ஆயிரம் மடங்கு எ…
-
- 2 replies
- 1.1k views
-
-
வாஷிங்டன், இந்தியாவில் பழைய லேப்டாப் பேட்டரியை கொண்டு குடிசைபகுதிகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற வளரும் நாடுகளிலும் மின்சாரம் வழங்க முடியும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடந்த மாநாட்டில், அப்புறப்படுத்தப்படும் பேட்டரிகளின் மாதிரிகளை கொண்டு செய்யப்பட்ட ஆய்வில், எல்.இ.டி. விளக்கை ஒருவருடத்திற்கு, நாள் ஒன்றிற்கு 4 மணி நேரங்களுக்கு மேலாக எரியசெய்யும் அளவு 70 சதவீத ஆற்றல் உள்ளது என்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. ஐ.பி.எம். இந்தியா ஆய்வு குழுவினரின் தகவலின்படி, இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சுமார் 50 மில்லியன் லித்தியம் அயன் லேப்டாப் பேட்டரிகள் அப்புறப்படுத்தப்படுகிறது, இதன்மூலம் வளரும் ந…
-
- 0 replies
- 589 views
-
-
உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சியடைந்து வரும் நிலையில் கடுமையான போட்டி காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையும் என ஸ்மார்ட்போன் சந்தையை பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஐ.டி.சி. ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் சுமார் 1.5 பில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என கணி்க்கப்பட்டுள்ளது. சைனா ஸ்மார்ட்போன்களின் வரத்தும் கணிசமாக அதிகரித்து வருவதால் பிரீமியம் ஹேன்ட்செட்டுகளின் விலையும் கடுமையாக சரிந்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் 80 சதவீதம் ஆண்ட்ராய்டு மொபைல்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆப்பிளின் ஐ.ஓ.எஸ் 13 சதவீத்தை மட்டுமே ஆக்கிரமித்துள்ளது. எனினும், டைசன், பயர்பாக்ஸ் போன்ற புதிய ஓ.எஸ்.களும் வாடிக்கையாளர்க…
-
- 0 replies
- 756 views
-
-
மனிதன் உருவாக்கும் தொழில்நுட்பங்களே அவனை அழிவுக்கு இட்டுச் செல்லும் முதன்மைக் காரணிகளாக அமைகின்றன என்ற வாதப் பிரதிவாதங்கள் உலகில் எப்போதும்.. இருந்து வரும் நிலையில்... தற்போது மனிதர்கள் உருவாக்கி வரும்.. செயற்கை மதிநுட்பம்.. artificial intelligence.. ஒரு காலத்தில்... மனித இனத்தை வெற்றி கொண்டு அவனை அழித்துவிடும் என்று எதிர்வு கூறியுள்ளார் பிரித்தானியாவின் பிரபல பெளதிகவியல் அறிவியலாளர்.. Prof Stephen Hawking. மனிதர்களைப் போலவே தானியங்கியாக சாட் பண்ணும் மொபைல் போன்கள். ஏலவே சிமாட் போன்களின் கீபோட்டில்.. இந்த செயற்கை மதிநுட்பம் புகுத்தப்பட்டு.. விரைவு சாட் பண்ணும்.. சொற் தெரிவுகளை நீங்கள் சாட்டில் புகுத்த வகை செய்யப்பட்டுள்ளமை இங்கு உதாரணமாக குறிப்பிடப்பட முடியும…
-
- 1 reply
- 580 views
-
-
இதுவரை பெயர் சூட்டப்படாத, பூமியின் மிக அபரிமிதமான கனிமத்துக்கு பிரிட்க்மனைட் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். பெர்ஜி பிரிட்க்மேன் என்ற பிரபல புவியியல் அறிஞரின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியின் மொத்த அளவில் 38 சதவீதமும், பூமியின் கீழ் அடுக்கில் (மேன்ட்டில்) 70 சதவீதம் வரையிலும் பிரிட்க்மனைட் உள்ளது. இக்கனிமத்தை நன்றாக அறிந்து கொள்ளும் வகையில் மிக அழுத்தப் பரிசோதனைகள் செய்வதில் பெர்ஜி பிரிட்க்மேன் முன்னோடியாக விளங்கினார். எனவே இந்தக் கனிமத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்க்மனைட் மிகவும் அடர்த்தியான மெக்னீசியம் அயர்ன் சிலிகேட்டால் ஆனது. இதுவரை இக்கனிமம் பெரோவ்ஸ்கைட் என்று அழைக்கப்பட்டு வந்தது. சர்வதேச கனிமவியல் சங்கத்தின் விதிகளின்படி முறைய…
-
- 0 replies
- 452 views
-
-
நாசாவைச் சேர்ந்த முன்னாள் ஊழியர் ஒருவர், தான் 35 ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில் மனிதர்கள் போன்ற உருவம் கொண்ட இரு உருவங்களைக் கண்டதாக ரேடியோ நிகழ்ச்சியில் கூறியுள்ளார். அமெரிக்க ரேடியோ நிகழ்ச்சியான Coast to Coast AM என்ற நிகழ்ச்சியில், 35 ஆண்டுகளுக்கு முன் தான் மனிதர்களைப் போன்ற உருவம் கொண்ட இரு உருவங்களை கண்டதாக ஜாக்கி என்ற முன்னாள் நாஸா ஊழியர் கூறியுள்ளார். ஜேக்கி 1976ல் செவ்வாய்க்கு அமெரிக்கா சார்பில் செலுத்தப்பட்டிருந்த வைக்கிங் லேண்டர் என்ற விண்கலத்தில் இருந்து தகவல்களை டவுன்லோடு செய்வதற்காக சென்ற குழுவில் ஒருவர் ஆவார். அந்த உருவங்களை அவர் மனிதர்கள் என்றே குறிப்பிட்டாலும், அவை பூமியைச் சேர்ந்தவையா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்த உருவங்களை தான…
-
- 0 replies
- 1.3k views
-
-
நமக்கென்று இருக்கும் ஒரே வீடான இந்தப் புவியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறோம் உலகம் மிக வேகமாக இயங்குகிறது. இந்த உலகத்திலேயே மிகப் பெரிய 3 சக்திகள் - சந்தை, இயற்கை அன்னை, மூரின் விதி. இந்த மூன்றுமே ஒரே சமயத்தில் வேகவேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. உலகமயம் காரணமாகச் சந்தையானது முன்னெப்போதையும்விட, எல்லா நாட்டுப் பொருளாதாரங்களையும் நெருக்கமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறது. இதனால், நம்முடைய தொழிலாளர்கள், முதலீட்டாளர்கள், சந்தைகள் ஆகிய மூன்று தரப்புமே தங்களைப் பாதுகாக்கும் சுவர்கள் ஏதுமின்றி, ஒன்றையொன்று சார்ந்து இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மைக்ரோ சிப்புகளின் வேகமும் ஆற்றலும் 2 ஆண்டுகளுக்கொரு முறை இரட்டிப்பாகிறது என்பதே மூரின் அடிப்படை விதி. இதனால் மென்பொருள…
-
- 0 replies
- 390 views
-
-
அப்ஸ் லொக்குக்கும் ஆப்பு! அலுவலகம், நண்பர்கள், வீட்டில் உள்ளவர்கள், என... நமது அலைபேசியை யார் எப்போது எடுத்து எதைப் பார்ப்பார்கள் என்று தவித்துக்கொண்டே இருப்பவர்கள் பலர். அதற்கான தீர்வு தான் அப்ஸ் லொக் என்ற பாதுகாப்பு செயலி. மொத்தமாக போனை லொக் செய்வதற்கும், அப்ஸ் லொக் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அப்ஸ் லொக்கை நமது அலைபேசியில்; இன்ஸ்டோல் செய்து பயன்படுத்தும்போது, நம் போனில் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் அல்லது பயன்படுத்த கூடாது என்று நினைப்பவற்றை எல்லாம் லொக் செய்துவிடலாம். சாதாரண பாதுகாப்பு செயலிதானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால், நமது அலைபேசியில் இருக்கும் எல்லாவற்றுக்கும் பாதுகாப்பு கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான விடயமல்லவா?. இந்த அப்ஸினை,http…
-
- 2 replies
- 1.2k views
-
-
ரஷ்யாவின் பிரமிப்பூட்டும் ஒரு சாதனை. https://www.facebook.com/video/video.php?v=510654265710771
-
- 1 reply
- 689 views
-
-
உலகில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நாள்தோறு வெளியாகி கொண்டே உள்ளது. இந்நிலையில் சீனாவில் சூ லிஞ்கன் தொழிலதிபர் ஒருவர் இரண்டு சக்கர எலக்ட்ரிக் காரை கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். இக்காரில் உள்ள பேட்டரி மூலம் தொடர்ச்சியாக 1000 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கரங்கள் கொண்ட கார்கள் மத்தியில் இந்த புதிய இரண்டு சக்கர கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=121182&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 400 views
-
-
எபோலாவை எதிர்கொள்ளவே இந்தியா தயாராகாத சூழலில் மார்பெர்க் தாக்கினால் சமாளிக்க முடியுமா? டெல்லி விமானநிலையத்தில், 18 நவம்பர் 2014 அன்று லைபீரியாவிலிருந்து வந்த ஒருவர் எபோலா தாக்கம் கொண்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்புச் சூழலில் வைக்கப்பட்டிருக்கிறார். விநோதம் என்ன வென்றால், அந்தப் பயணி லைபீரியாவிலேயே எபோலா காய்ச்சல் கண்டவர் என அறியப்பட்டு, சிகிக்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்ததாகச் சான்றிதழும் பெற்றிருக்கிறார். அவரது ரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையில் அவர் உடலில் எபோலா வைரஸ் இல்லை என்று சான்றளிக்கப்பட்டிருக்கிறது. குணமடையும்போது எபோலா வைரஸ், உடல் திரவங்களின் வழியே வெளியேறும். அது ரத்த மாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இதனை அறிந்திருந்த இந்திய அதிகாரிகள், அவரது …
-
- 0 replies
- 461 views
-
-
சேகர் ராகவன் சென்னையில் ஆறு, குளம், ஏரி என அனைத்து வகையான நீர் ஆதாரங்களும் சிறிது சிறிதாக ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறிவருகின்றன. சென்னையின் இப்போதைய குடிநீர் ஆதாரங்கள் கார்ப்பரேஷன் குழாயும் லாரியும் மட்டுமே. இந்த சூழ்நிலையில், தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய நம்முன் இருக்கும் ஒரே தீர்வு மழைநீர் சேகரிப்பு மட்டுமே. முன்னோடித் திட்டம் 2002-ல் மழைநீர் சேகரிப்பு முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு கட்டாயமாக்கி, சிறப்பாக அமல்படுத்தியது. ஆயிரக்கணக் கான அரசு அலுவலகங்கள், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தனது முதல் உரையின்போது, மழைநீர் சேகரிப்பில் தமிழகத்தை நாடு பின்பற்றவேண்டும் …
-
- 0 replies
- 442 views
-
-
தமிழில் மருத்துவ நூல்கள் தமிழ் இலக்கியம் தமிழ் இலக்கியம் பலவகைப்படும். அவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் என விரிவடைந்து இலக்கிய வகையின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும். காலத்துக்கு ஏற்ப கருத்துகள் வளர்ந்து கொண்டே வருவதைப் போல இலக்கிய வளர்ச்சியும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. கலை இலக்கியம் இலக்கியம் கலை என்னும் கோட்பாட்டினை உள்ளடக்கியது. தமிழ்ப் புலமை மிக்கோர் நெஞ்சில் இடம் புகுந்த கலை, வடிவ நிலையை அடைந்து கைத்தொழில் கைவினைத் திறத்தினால் உருவாகும் கட்டிடக் கலை போன்ற பயன் கலைகளும், புலன்களுக்கும் மனத்திற்கும் இன்பத்தைத் தருகின்ற சிற்பம், ஓவியம் போன்ற இன்பக் கலைகளும், மாந்தர் தம் உள்ளங்களில் சுவையுணர்வை…
-
- 0 replies
- 14.5k views
-
-
பால்வெளி மண்டலத்தின் மையத்தில் இருக்கும் ராட்சத கருந்துளை (Black hole) இனம்புரியாத அதி-ஆற்றல் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்து அனுப்புவதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு மேல் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டால், நியூட்ரினோக்கள் உற்பத்தியை கருந்துளையக் காரணமாக்கும் முதல் கண்டுபிடிப்பு என்று கூறமுடியும். நியூட்ரினோக்கள் என்பது மிகமிகச் சிறிய துகள்கள் ஆகும். இது மின்னூட்டம் இல்லாதது. மேலும் புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான்களுடன் மிகவும் பலவீனமாக ஊடாடும் துகள்கள் ஆகும். மின்னூட்ட துகள்கள் அல்லது ஒளி போன்று அல்லாமல், நியூட்ரினோக்கள் அதன் அண்டவெளியின் அடியாழ ஆதாரங்களிலிருந்தே உருவாகும். மேலும், பிரபஞ்சம் முழுதும் அது பயணிக்கக் கூடியது. இடையில…
-
- 0 replies
- 927 views
-
-
ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறது. மழையில் நனையாமல் இருக்க குடை, ஷவர் கேப், ரெயின் கோட்டு என எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ரெயின் கோட் போட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். குடை பிடித்தபடி இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாது. நடந்து சென்றால்கூடப் பேருந்து ஏறி இறங்கும்போது குடையை விரித்து, மடக்குவதற்குள் நனைந்துவிடுவோம். இவை எல்லாவற்றிற்கும் ஓர் எளிய தீர்வைக் கண்டு பிடித்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் குழு. சீனாவில் இருக்கும் நான்ஜிங்க் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர்கள் புரட்சிகரமான ஒரு குடையை உருவாக்கியுள்ளார்கள். குடையின் முக்கிய பாகம் என்ன? அரை வட்டத்தில…
-
- 0 replies
- 779 views
-
-
உலகம் முழுவதும் இப்போது தேன்கூடுகளின் எண்ணிக்கை வெகு வேகமாகக் குறைந்துவருகிறது. தேனீக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. ஆண்டுதோறும் தேன்கூடுகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அழிகிறது. தேனீக்கள், மலரிலிருந்து தேனைத் திரட்டி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கையினால்தான் தாவரங்கள் பெருகுகின்றன. இதனாலேயே விவசாயிகள், தேனீயை விரும்புவோர், தேனீயை வளர்ப்போர் என்று அனைவரும் அதைச் சமுதாயத்துக்கு நன்மை தரும் பூச்சியினமாகப் பார்க்கின்றனர். நெருக்கடியான தருணங்களில்தான் நாம் சில பாடங் களைப் படிக்கிறோம். இப்போதைய மனித சமூகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் கொடிய ரசாயனங்களின் தீமைகளை அறியவும், அழிவிலிருந்து காத்துக்கொள்ளவும் தேனடை களின் அழிவு நமக்கு நல்லதொரு பாடமா…
-
- 1 reply
- 504 views
-
-
மாலை மணி ஐந்து. கடிகாரத்தை பார்த்து மோகன் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் இவ்வளவு இருக்கின்றதே என்ற மலைப்பில் அன்றைய தினமும் தாமதமாக தான் செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு வருகின்றான். வேலை நேரத்துக்குள் செய்து முடிக்கவேண்டிய பணிகள் எவ்வாறு வேலை நேரத்தையும் தாண்டி முடிக்கப்படாமல் மீதம் இருக்கின்றன என்ற ஐயம் மோகன் மனதில் மலைப்பை ஏற்படுத்தியது. பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் கூறியதை போல நேரத்தை வீணாக்கினால் வாழ்க்கைக்கு அர்த்த மில்லை, வாழ்வின் அடிப்படையே நேரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றது என்ற சொற்கள் மனதில் அலைமோதியது. இருப்பதோ 24 மணி நேரம். இதில் எதை செய்வது? எதை விடுவது? இருக்கும் 24 மணி நேரத்தில் வேலைகளை தள்ளிப் போட்டாலோ, முன்னுரிமைகளை மாற்றி வேலைகளை செய்தாலோ நிகழ்வத…
-
- 0 replies
- 698 views
-
-
பிலே ஆய்வுக்கலன் வால்நட்சத்திரத்தின் மீது இறங்குவதைக் காட்டும் வரைபடம் சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் , விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின் மீது இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது போல வால் நட்சத்திரத்தின் மீது இறங்கிய முதல் விண்கலன் இதுதான். சில நிமிடங்களுக்கு முன்னர்தான், இந்த இரண்டு கிலோமீட்டர் அகலமுள்ள வால்நட்சத்திரத்தின் பனிக்கட்டிகள் படர்ந்த மேற்பரப்பின்மீது இந்த பிலே ஆய்வுக்கலன் பத்திரமாக இறங்கியது என்ற சமிக்ஞையை விண்வெளி விஞ்ஞானிகள் அந்தக்கலனிடமிருந்து பெற்றனர். இந்த விண்கலனும், வால் நட்சத்திரமும், மணிக்கு 66,000 கிலோ மீட்டர் வ…
-
- 15 replies
- 1.4k views
-
-
குதிரை சாணத்தில் வளரும் காளானை பக்டீரியாக்கள் சிலவற்றை அழிப்பதற்கு மருந்தாக, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் பலரின்; மரணத்துக்கு காரணமான பக்டீரியாக்களை அழிப்பதற்காக புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டுமென, பல விஞ்ஞானிகள் தமது ஆயுள் காலத்தை ஆய்வுக் கூடத்தில் செலவளித்துள்ளமை நாம் அறிந்ததே. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பக்டீரியாக்களை அழிப்பதற்கு சிறந்த மருந்தாக குதிரை சாணத்தில் வளரும் காளானை சுவிட்ஸர்லாந்திலுள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 'இது அருவருக்கத்தக்க விடயம் என்றாலும் அந்த காளான் மருந்தாகவே கருதப்படுகின்றது. இது மற்றைய காளான்களை விட வித்தியாசமாகவும் கருஞ்சாம்பல் நிறத்தையும் கொண்டிருக்கும். இந்த சாம்பல் காளானானது …
-
- 2 replies
- 835 views
-
-
மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். ஒவ்வொரு சுவைக்கும் மூளையில் சிறப்பு நியூரான்கள் உள்ளனவாம்உப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு உரைப்பான உமாமி சுவை ஆகிய ஐந்து வகையான சுவைகளுக்கும் என தனித்தனியான விசேட நியூரான்கள் (உணர்வு உயிரணுக்கள்) மூளையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வெவ்வேறு சுவைகொண்ட உணவுகளை சுண்டெலிகளுக்கு கொடுக்கும்போது அவற்றின் மூளையில் ஒவ்வொரு நியூரானிலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அவதானித்து கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். உணவு நாளுக்கு நாள் சுவையில்லாமல் போவதாக உணரும் வய…
-
- 0 replies
- 407 views
-
-
பொதுமக்கள் பயணத்திற்கு பாதுகாப்பான வகையில் வடிவமைக்கப்பட்ட இ-ரிக்சா டெல்லியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து மத்திய மந்திரி கட்காரி கூறும்போது, ‘‘இந்த ஆட்டோக்கள் அறிமுகம் மூலம் மனிதர்களே மனிதர்களை இழுக்கும் என்ற நிலைமை முற்றிலும் மாறும். மேலும், இதனால் கைகளால் ரிக்சாக்களை இழுத்து தொழில் நடத்தியவர்கள் பயன்அடைவார்கள்’’ என்றார். இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆட்களால் இழுக்கப்படும் ரிக்சா பயணம் பெயர்போனதாக இருந்தது. இந்த ரிக்சா இழுக்கும் தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக அனைத்து ரிக்சாக்களும் இ-ரிக்சாவாக மாற்றப்படும் என்று மத்தியில் ஆட்சி அமைத்த பா.ஜனதா கூறியது. இதன்படி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் சாதாரண ரிக்சாக்கள் அனைத்தும் இ- ரிக்…
-
- 0 replies
- 582 views
-