Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குரியன்ஜோசப், 50. பி.ஏ., பட்டதாரியான இவர், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 35 ஏக்கர் செம்மண் தரிசு நிலத்தை வாங்கினார். மெயின் ரோட்டில் இருந்து இங்கு செல்லவே 5 கி.மீ., நடக்க வேண்டும். மலையடிவாரத்தின் முதல் நிலம் இதுதான். ரசாயன கலப்பு இல்லாமல், இயற்கை முறையில் பழங்கள் சாகுபடி செய்து உலக மார்க்கெட்டில் விற்பனை செய்வதே இவரது லட்சியம். இதற்காகவே இவர், ரசாயனம் எந்த வகையிலும் எட்டிப்பார்க்காத நிலத்தை தேர்வு செய்தார். அந்த நிலம் கடினமான கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது. அதனை பற்றி கவலைப்படவில்லை. எளிதாக கிடைத்த சான்று: அங்கு ""ஹார்வஸ்ட் பிரஷ்'' என பெயரிட்டு பழப்பண்ணை அமைத்தார். முதலி…

  2. வணக்கம் தொழில் நுட்ப அறிவு சார்ந்த நண்பர்களே . எனது கம்போர்சிங் ,இசை அமைப்பு ஆகியவற்றிற்கு CUBASE 5 என்னும் மென்பொருளை பாவித்து வருகிறேன் .தற்போது ஓடியோ ஒலிப்பதிவிற்கு மட்டுமல்ல வீடியோ ஒளிபபதிவிற்கு கூட அதை பயன்படுத்தும் வழி கண்டு ஆனந்தமடைந்தேன் .மிக இலகுவாக வீடியோ காட்சிக்கான இசையினை வழங்க கூடியதாய் உள்ளது .........நானாகேவே இந்த விடயத்தை கண்டு பிடித்தேன் ..ஆனால் வீடியோ இசை முடிந்தபின் அதை வீடியோ காட்சியுடன் சேர்த்து மிக்ஸ் டௌன் [mixdown ] செய்ய முயற்சித்துப்பார்த்தேன் ..முடியவில்லை .ஓடியோ மட்டுமே மிக்ஸ்டவுன் ஆகுது .இது சம்பந்தமாக யாருக்காவது தெரிந்திருந்தால் அறியத்தாருங்கள் நன்றி .

  3. மீத்தேன் எரிவாயுத் திட்டமும் அதன் எதிர்கால வினைகளும் தென்னை மரத்தில தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு சொல்லாடல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அது இப்போது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை விடயத்தில் உண்மையாகி போய் இருக்கிறது. தேவையில்லாத பாதுகாப்பு துறை செலவீனங்கள் , இமயம் அளவு ஊழல்கள், இந்தியாவுக்குப் பொருந்தாத சந்தைப் பொருளாதாரம் என சூறையாடப்பட்ட இந்தியாவின் பொருளாதாரம் இப்போது அதல பாதாளத்திற்குப் போய் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதில் இருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா தனது மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க முடிவு செய்து விட்டது. “என்னடா சிக்கும்” என அது தேடும் போது அதற்கு சிக்கி இருப்பது தான் தஞ்சை திருவாரூர் மாவ…

  4. மனிதர்கள் தூங்கும்போதும் மூளை விழித்திருக்கிறது மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை, மனிதர்கள் தூங்கும்போதும் விழிப்புடன் செயல்படுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். கேம்பிரிட்ஜ் மற்றும் பாரிஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது ஒரு வார்த்தைக்கட்டளையை பிறப்பித்து, அந்த கட்டளையை ஏற்று அந்த பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்படி பணிக்கப்பட்டார்கள். இந்த சோதனையின்போது இந்த பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது செய்யப்பழகிய செயல்களை தூங்கும்போதும் அதே மா…

  5. இந்த கணக்கை யாராவது கணக்குப்புலிகள் சரிசெய்து தர முடியுமா?

  6. முட்டையில் இருந்து எப்படி குஞ்சு வரும்? https://www.facebook.com/video/video.php?v=723512921001098

  7. பாப்லோ பிக்காஸோ (’நவீன ஓவியங்களின் பிரம்மா' ) - வரலாற்று நாயகர்! கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை பொதுவாக 'கலைவல்லுநர்கள்' என்றழைக்கிறோம். அதற்கும் ஒருபடி மேலே சென்று ஒரு தலைமுறை மாற்றத்தையோ, அல்லது ஒரு பிரெளயத்தையோ ஏற்படுத்தும் ஒரு சிலரைத்தான் 'கலையுலக பிரம்மாக்கள்' என்றழைக்கிறோம். ஓவியத்துறையை பொருத்தமட்டிலும் ஆரம்பத்தில் இரண்டு பரிணாம (Two Dimension) ஓவியங்கள்தான் வரையப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் உதித்த மைக்கலாஞ்சலோவும், லியொனார்டோ டாவின்சியும் அந்த இரண்டு பரிணாம வரையறையைத் தகர்த்து முப்பரிணாம ஓவியங்களை வரைந்து உலகை அசத்தினர், ஓவியத்துறைக்கு இன்னொரு முகத்தை கொடுத்தனர். அவர்கள் மறைந்த பிறகு பல நூற்றாண்டுகள் வரை ஓவியத்துறைக்கு எவராலும் வேறு ஒரு புதிய …

  8. Started by nunavilan,

    SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்) இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான். அந்த அதியசத்துக்கு…

  9. நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளது ரொசெட்டா ஆளில்லா விண்கலமான ரொசெட்டா, தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றில், எங்கு இறங்கி பரிசோதனைகளைச் செய்யும் என்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தேர்தெடுத்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் அந்த விண்கலம் தரையிறங்க, ஒப்பீட்டளவில் சமமாகவுள்ள ஒரு இடத்தையே தாங்கள் தேர்தெடுதுள்ளதாக, விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.'67P' என்று பெயரிடப்பட்டுள்ள, நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட அந்த வால் நட்சத்திரத்தின் நூற்றுக்கணக்கானப் படங்களை ஆராய்ந்த பிறகே, ரொசெட்டா இறங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்த ஈர்ப்புச் சக்தி ஃபிலே என்று அழைக்கப்படும் அந்தச் சோதனைக் கருவி , பனிப்பாறைகளைக் கொண்ட தளமொன்றில், திருகாணிகள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு நிலை நிறுத்திக் கொ…

  10. மீள் உருவாக்கம் என்று தமிழ்ச் சொல்லாக்கம் செய்யப்பட்டிருக்கும் குளோனிங் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புதைந்துபோன வரலாற்றைக் கூட உயிரியல் விஞ்ஞானிகள் தோண்டிக் கொண்டுவந்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து உலகையே கலக்கிய ஜூராசிக் பார்க் படத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியுமா? அதில் விஞ்ஞானிகள் டைனோசரை சாகசமாக உருவாக்குவார்கள். கடைசியில் அது விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால் அதுபோல நிஜ வாழ்க்கையில் நடக்காது என நினைத்திருப்போம். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் ஒரு டைனோசர் குட்டியை உருவாக்கியிருக்கிறார்கள். இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இ…

  11. பிரியா நடராஜன் தேனீக்கள் ஒரு பக்கம் பிறந்து வளர்ந்து கொண்டும் இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கான மலர்களில் இருந்து தேனைக் கொண்டுவந்து சேகரித்து வைத்து இருக்கும் தேனடையைப் பார்த்து இருக்கிறீர்களா? அதேபோல பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிறந்து வளர்ந்து இறக்கும் நிகழ்வு நடைபெறுகிற காலக்ஸிக்கு விண்மீன் பேரடை என பெயர் வைத்துள்ளார்கள். தமிழ் தேன்தான். கருந்துளை நமது சூரியக்குடும்பம் பிறந்து வளர்ந்த தொட்டில் பால்வெளி மண்டலம் எனும் விண்மீன் பேரடை. சூரியனைச் சுற்றி கோள்கள் சுழல்கின்றன. சூரியன் தன் கோள்களையும் இழுத்துக்கொண்டுப் பால்வெளி மண்டலத்தைச் சுற்றுகிறது. சூரியனைப் போன்ற எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட பால்வெளி மண்டலம் தனது மையத்தில் உள்ளக் கருந் துளைய…

  12. இனி பார்வையற்றவர்களாலும் காட்சிகளைக் காண முடியும் ! விசேஷ கருவி கண்டுபிடிப்பு.! பார்வையற்றோர் காட்சிகளைக் காண வழி செய்யும் ஒருவித விசேஷக் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல வருடங்களாக கண்கள், பார்வை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் காட்சிப் பதிவுகளிலிருந்து வரும் ஒளி அலைகள் (Light waves) பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்தக் கருவியில் ஒலி அலைகளாகப் (Sound waves) பதிவு செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒலி அலைகளை ஒளி அலைகளாக மாற்றி (காட்சி) அதனை மூளைக்கு அனுப்புகிறது. எனவே மனித மூளையில் உள்ள ஒளி உணரும் பகுதி, காட்சிகளை அப்படியே ப…

    • 4 replies
    • 533 views
  13. தங்கத்தின் ‘நேனோ’ நிறங்கள் பெரியாழ்வார் வையமளந்தானை வாமன உருவில் “ஆனிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்” இட்டு திருத்தாலாட்டுப் பாடுகிறார். ஆனிப்பொன் மஞ்சள் நிறத்தது. சிலப்பதிகாரத்தில் “கடல் ஆடு காதையில்” மாதவி அணிந்திருந்த நகைகளில் இருந்து இன்றைய உஸ்மான் ரோட்டு நகைக்கடை தங்கம்வரை மஞ்சள் நிறத்தில்தான் நம் கண்களுக்குத் தெரியும். காரணம் சற்று தீவிரமானது. விவரிப்போம். ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டை (special relativity theory) நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் ஒரு கருத்தாக்கத்தின்படி பிரபஞ்சத்தில் எப்பருப்பொருளுக்கும் பயணம் செய்யமுடிந்த உச்சகட்ட வேகம் என்பது ஒளியின் வேகம்தான். ஒளி விநாடிக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் செல்லும். இவ்வாறு உச்ச…

  14. Started by nunavilan,

    Jaw Dropping Science https://www.facebook.com/video/video.php?v=10204606640270542

  15. உலகிலேயே அதிக விலை கொண்ட வீடியோ கேமாக உருவாகியிருக்கும் டெஸ்டினி, கடந்த 9-ம் தேதி உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தது. இது வீடியோ கேம்ஸ் துறையையே புரட்டிப் போடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மாணவர்கள் நெருக்கடியாக சேர்ந்து வாழும் சிகாகோ குடியிருப்பு அறையில்தான் இந்த வீடியோ கேமுக்கான ஐடியா தோன்றியுள்ளது. ஜேசன் ஜோன்ஸ், அலெக்ஸ் செரோபியன் என்ற இரண்டு இளைஞர்கள் சேர்ந்து கம்ப்யூட்டர் கேம்ஸ்களை உருவாக்கத் தொடங்கினார்கள். இரண்டு பேராகத் தொடங்கிய ‘பங்கி’ நிறுவனம் தற்போது ஐநூறு ஊழியர்களைக் கொண்ட பிரம்மாண்ட நிறுவனமாக உருவாகியுள்ளது. பங்கி தயாரித்துள்ள ‘டெஸ்டினி’ தான் அதிகபட்ச பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. இதன் தயாரிப்புச் செலவு ரூ.375 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஹா…

  16. 'வல்லபட்டை இன வகையைச் சேர்ந்த அகர்வுட் செய்கையை இலங்கையில் வணிக ரீதியில் முன்னெடுப்பது என்பது CAKit (Cultivated Agarwood Kits) முறையினூடாக மட்டுமே முடியும். இதற்கான காப்புரிமையை சதாஹரித பிளான்டேஷன்ஸ் நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது' என நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எச்.கே.ரோஹண அண்மையில் தெரிவித்திருந்தார். 'இந்த தொழில்நுட்பத்தில் சதாஹரித பிளான்டேஷன்ஸ் என்பது அதிகளவு முதலீடு செய்துள்ளதுடன் அகர்வுட் செய்கைக்காக பிரத்தியேக அங்கீகாரத்தை பெற்ற நிறுவனமாகவும் திகழ்கிறது' என அவர் மேலும் குறிப்பிட்டார். வணிக நோக்கிலான மற்றும் பொருளாதார ரீதியில் பெருமளவு பயன் தரக்கூடிய வகையில் அமெரிக்காவின் மின்னேசொடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபர்ட் பிளான்செட்டே பல்வேறு ஆய்வுகள்…

  17. கொழும்பு: இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா- அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை. அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவுகளை க…

  18. நிறுவனத்தில் நிலைத்திருக்க...அறிவுத்திறனை மேம்படுத்துங்கள்! செ.கார்த்திகேயன் ‘‘ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார் சபரி. அந்த நிறுவனம், நன்கு வேலை செய்பவர்களை முதல் பக்கெட் பிரிவிலும், சுமாராக வேலை செய்பவர்களை இரண்டாவது பக்கெட் பிரிவிலும், மிகச் சுமாராக வேலை செய்பவர்களை மூன்றாவது பக்கெட் பிரிவிலும், மோசமாக வேலை செய்பவர்களை நான்காவது பக்கெட் பிரிவிலும் வைத்திருக்கும். நான்காம் பக்கெட் பிரிவில் இருப்பவர்களின் வேலை செய்யும் திறனானது மேலும் குறைந்தால், நிறுவனத்தைவிட்டே அந்தப் பணியாளரை வெளியேற்றிவிடுவார்கள். சபரி தற்போது நான்காவது பக்கெட் பிரிவில் இருக்கிறார். இனியாவது அவர் சுதாரித்துக்கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை எனில், வேலையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். …

  19. சிந்தனைச்சோதனைகள் சுந்தர் வேதாந்தம் ஒரு புறம் Large Hadron Collider, International Space Station போன்ற பல பில்லியன் டாலர்களை விழுங்கிவிட்டு மெல்ல எழுந்து நிற்கும் சோதனைகளும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் காசு பணம் ரொம்பத்தேவை இல்லாத வெறும் சிந்தனையை மட்டுமே உபயோகிக்கும் பல சுவையான சோதனைகளும் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. வெகு காலத்துக்கு முன்பே கேள்விகள் வழியே பிரச்சினைகளை அலசும் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் பழசும் புதுசுமாய் இவற்றில் பல வகைகள் உண்டு. அறிவியல், உளவியல், பொருளாதாரம், அரசியல், மதங்கள், நீதி, தர்மம், நெறிமுறை (Ethics), தத்துவம் என்று பல துறைகளையும், மனித சமூகத்தின் வாழ்முறையின் பல பக்கங்களையும் தொடும் சிந்தனைச்சோதனைகளை…

  20. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மூலிகைப் பயிர்களில் செங்காந்தள் மலர் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் விதைகளும், கிழங்கும் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதால் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரசு மலர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த மூலிகைப் பயிர் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் கரூர், திண்டுக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களிலும் இந்த செங்காந்தள் சாகுபடி பரவலாகி வருகிறது. செங்காந்தள் சாகுபடி குறித்து திருப்பூர் மாவட்டம், மூலனூர் வட்டார வேளாண் பொறியாளர் தி. யுவராஜ் கூறியதாவது: கண்வலிக் கிழங்கு என்றும், கலப்பைக் கிழங்கு என்றும் அழைக்கப்படும் செங்காந்தள், பொதுவாக…

  21. செயலிகளில் சில அற்புதமானவை என்று வியக்க வைக்கும்.ஒரு சில செயலிகளோ மாயஜாலத்தன்மை மிக்கவையாக அதிசயிக்க வைத்துவிடும்.இன்டுநவ் செயலி இப்படி தான் அதிசயத்தில் ஆழ்த்துகிறது. அமெரிக்காவை சேர்ந்த ஆட்டிடியூட் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டுநவ் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. தொலைக்காட்சி ரசிகர்கள் தாங்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சிகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் இந்த செயலி அதனை செய்யும் விதம் தான் மாயஜாலமாக இருக்கிறது. அதாவது டிவி பார்த்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் பார்க்கும் நிகழ்ச்சியை குறிப்பிட வேண்டிய தேவை கூட கிடையாதௌ.இந்த செயலியே அந்த நிகழ்ச்சி என்ன என்பதை தெரிந்து கொண்டு அது பற்றிய தகவலை நண்பர்களுக்கு தெரிவிக்கும்.நேயர்கள் பார்ப்பது என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும்…

  22. பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டும் திட்டமான, கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்துக்கு இஸ்ரேல் உதவ முன்வந்துள்ளது. மாசுபட்டுள்ள கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ‘நமாமி கங்கா’ என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா வந்துள்ள இஸ்ரேலிய பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவின் தலைவர் யோனாதன் பென் ஜேகன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறும்போது, “இத்திட்டம் தொடர்பாக இந்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி மற்றும் அத்துறையின் செயலாளரை நாங்கள் ஏற்கெனவே சிலமுறை சந்தித்து பேசியுள்ளோம். இத்திட்டத்தில் நாங்களும் பங்கேற்க விரும்புகிறோம். இத்திட்டத்துக்காக எங்களின் அனுபவம்…

  23. ஆங்கிலத்தில் ‘அபாரிஜினல் (Aboriginal)' என்ற வார்த்தை உண்டு. லத்தீன் மொழியில் ‘அபாரிஜின்ஸ் (Aborigines)' என்ற சொல்லில் இருந்து இந்த வார்த்தை உருவானது. இதற்கு ‘ஆதியிலிருந்து இருப்பவர்கள்' (ஒரிஜினல்) என்று அர்த்தம். சுமார் 16-ம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்தச் சொல், காலத்துக்கு ஏற்பக் காட்டுவாசிகள், ஆதிவாசிகள், பழங்குடிகள், பூர்வகுடிகள் என்று பல்வேறு விதமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சொல்லே இத்தனை மாற்றங்களுக்கு உள்ளாகிறபோது, ஆதியின் எந்தச் சுவடும் மாறாமல் இன்னமும் சில பூர்வகுடிகள் உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்றால்... அது பேரதிசயம் அல்லவா? ஜராவா பழங்குடிகள் இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிகோபார் தீவுகளில் அப்படி வசிக்கும் இனங்களில் ஒன்றுதான் ஜ…

  24. பிரிட்டன் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். | கோப்புப் படம் CERN ஆராய்ச்சிக் கூடம். கோப்புப் படம் மாபெரும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் 2012ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரிட்டன் பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திற்கும் வடிவமும் அளவும் கொடுத்த கடவுள் துகள் நிலையற்றத் தன்மைக்குச் செல்லலாம் என்கிறார் அவர். இதன் விளைவாக "பேரழிவு வெற்றிட சீர்கேடு" (Catastrophic vaccuum decay)ஏற்பட்டு காலம், வெளி குலைந்து போகும் அபாய வாய்ப்புகள் உள்ளது என்று அவர் கூறியதாக express.co.uk என்ற இணையதள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிக்ஸ் பாஸன் என்று அழைக்கப்படும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.