அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
வியாழன் கிரகத்தின், துணை கோளான, "யூரோப்பா'வில் உயிர்கள் வாழ சூழல் உள்ளதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை போல, மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதா என்பதை அறிய, விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மைய நிபுணர், ராபர்ட் பப்பலார்டோ கூறியதாவது: சூரிய குடும்பத்தில் உள்ள, வியாழன் கிரகத்தின், ஆறாவது துணை கோளான, யூரோப்பாவின் நிலப்பரப்பில், கடல், பனிப்படலம் மற்றும் பிராணவாயு மூலக்கூறுகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை விடவும், இந்த நிலவில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல், அதிமாக உள்ளது. இந்த நிலவை ஆய்வு செய்ய, வரும், 2021ல், கிளிப்பர் என்ற விண்கலத்தை, விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டம…
-
- 1 reply
- 611 views
-
-
ஒன்றாரியோவில் தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி! ஒன்றாரியோ மாகாண வீதிகளில் சாரதியற்ற தன்னியக்க வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் ஜெஃப் யுறெக் தெரிவித்துள்ளார். சாரதிகள் அற்ற வாகனங்களை ஒன்றாரியோ மாகாண வீதிகளில் செலுத்திப் பரிசோதிப்பதற்கு முன்னோடித் திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்களுக்கு ஜனவரி முதலாந் திகதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊபர், பிளக்பெரி, வோட்டர்லூ பல்கலைக்கழகம் உட்பட ஒன்பது நிறுவனங்கள் பத்து வகையான கார்களைப் பரிசோதித்து வருகின்றன. எனினும் முழுமையான தன்னியக்க முறையில் அவை செலுத்தப்படவில்லை. இந்நிலையில் பொதுமக்களும், தன்னியக்க முறையில் இயங்கும் வாகனங்களை ஒன்றாரியோ வீதிகளில் செலுத்த அனுமதி வழ…
-
- 2 replies
- 610 views
-
-
-
- 1 reply
- 610 views
-
-
புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும் அற்புத நிகழ்வை வரும் 28-ம் தேதி காணலாம். பூமியில் இருந்து காண்போரின் கண்களுக்கு இந்த காட்சியானது புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிரகங்கள் அருகருகே இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இரண்டு பவுர்ணமி நிலவின் அளவிற்கு புதன் கிரகம் காணப்படும். அதனையடுத்து சற்று ஒளிமங்கிய நிலையில் வியாழன் கிரகமும், நேர்க்கோட்டில் தென்படும். இவை இரண்டிற்கும் சற்று தூரத்தில் வெள்ளி கிரகமும் தெரியும். வரும் 28-ம் தேதி சூரியன் மறைந்த பிறகு வானத்தின் மேற்கு திசையில் இக்காட்சியை காண முடியும். பூமியில் இருந்து புதன் கிரகத்தை சென்றடைய 38 மில்லியன் கி.மீட்டர் பயணிக்க வேண்டும்.புதன் கிரகத்தில் இருந்து வியாழன் 66…
-
- 0 replies
- 610 views
-
-
நிலவோடு மோதியது சிறிய கோள் - தொலைநோக்கி மூலம் கண்டதாக ஆய்வாளர் தெரிவிப்பு! [Tuesday, 2014-02-25 20:52:42] நிலவை சிறு கோள் ஒன்று தாக்கிய சுவாரஸ்யமான சம்பவத்தை தொலைநோக்கி மூலம் கண்டதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வானவியல் ஆய்வாளர் ஜோஸ் மரியா மடீடோ என்பவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சந்திர மண்டலத்தை ஆராயும் இரு தொலைநோக்கிகளை வைத்து தான் கண்காணித்து வந்தபோது வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர் சாதனமான பிரிட்ஜ் போன்ற பரப்பு கொண்ட அந்த கோள் நிலவை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் யார் நிலவை பார்த்திருந்தாலும் சாதாரணமாகவே இந்நிகழ்வை கண்டிருக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தாக்குதல் எட்டு நிம…
-
- 4 replies
- 610 views
-
-
கடலில் மூழ்கியுள்ள நிலப்பகுதிகள் பற்றி குறிப்பு திரு. ஒரிசா பாலு, நிறுவனர் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் அவர்களின் நேர்காணல் நிகழ்வின் ஒரு பகுதி "In these days Tamil Research can be grouped in three type, [1] obtaining data from on the field research placing oneself in the real situation (with all its adherent risks) , [2] Just sitting in front of the computer and gathering information from various sources and reviewing the data, [3] ruthlessly stealing information from someones un indexed research and claiming it to be their own; unfortunately [2] and [3] are rampant in our society in the recent times - Intellectual copyright is of paramount…
-
- 0 replies
- 610 views
-
-
அமெரிக்காவில் நிஜத் தோட்டாக்களை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பிளாஸ்டிக்கினால் தயார் செய்யப்பட்ட இது, நிஜத் துப்பாக்கியை போல செயல்படக்கூடியதாகும். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குழு வெற்றிகரமாக பிளாஸ்டிக் துப்பாக்கி ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த துப்பாக்கியில் உண்மையான தோட்டாக்களை போட்டு வெற்றிகரமாக சுட முடியும் என்பதால், இந்த புதுவகை துப்பாக்கி மக்கள் மத்தியில் பிரபலாமகிவருகிறது. முப்பரிமாண அச்சு எந்திரத்தால் உருவாக்கபட்டுள்ள இந்த துப்பாக்கியை எந்த சோதனை கருவியாலும் கண்டறியமுடியாது. இந்த பிளாஸ்டிக் துப்பாக்கியை பயன்படுத்தும் விதம், இதனை தயார் செய்த விதம் ஆகிய வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களி…
-
- 2 replies
- 610 views
-
-
சந்திரனில் வேற்று கிரக வாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.இந்த நிலையில் பூமியின் துணை கோளான சந்திரனில் வேற்று கிரகவாசி நடமாட்டம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு உதாரணமாக அவர்கள் பயன்படுத்தும் வினோதமான விண்கலம் அங்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த விண்கலம் முக்கோண வடிவில் ஆப்பு போன்ற வடிவில் உள்ளது. இதை கூகுல் வரை படம் காட்டுவதாக ஆராய்ச்சியாளர் வாவ்போர்ரீல் கூறியுள்ளார். இந்த விண்கலம் வழக்கத்து மாறான வடிவில் தனிச் சிறப்பம்சம் வாய்ந்ததாக உள்ளது. எனவே இது வேற்று கிரகவாசியின் விண்கலம் தான்…
-
- 1 reply
- 609 views
-
-
ஒலிம்பிக் ஜோதியேந்தும் ரோபாட்? 2012-ல் லண்டனில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் அந்த ஜோதியை ஏந்தி ஓடப்போவது ஒரு ரோபாட்டாக இருக்கலாம்! iCub எனப்படும் அந்த ரோபாட்டுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். எங்கிருந்து வந்தது இந்த சிந்தனை? கணிணிகளுக்கு செயற்கையாக அறிவூட்டும் தொழில்நுட்பம் குறித்து முதலில் பேசியவர் ஆலன் ட்யூரிங். 2012-ஆம் ஆண்டு இவர் பிறந்து 100-வருடம் ஆகும். ஆகையால் அவரை கெளரவப்படுத்தும் வண்ணம் இதை செயல்படுத்த எண்ணியிருக்கின்றனர். Robotic toddler nominated to carry Olympic torch in 2012 Scientists have nominated the iCub child-like humanoid robot to participate in the Olympic T…
-
- 0 replies
- 609 views
-
-
மனித இனத்தை போன்ற மற்றுமொரு இனம் பூமியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு மனிதப்பரிணாம வளர்ச்சி குறித்த நம் தற்போதைய புரிதலில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர், வேறொரு ஆரம்பகால மனிதர்களோடு ஆபிரிக்காவில் வாழ்ந்ததற்கான புதைபடிம ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹோமோ நலெடி என்றழைக்கப்படும் இந்த மனித இனம், நவீன மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்பே அழிந்துவிட்டதாக முன்பு கருதப்பட்டது. தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கருத்தை மாற்றியமைத்திருக்கிறது. நியோ என்று பெயரிடப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டின் உதவியுடன் ஆய்வாளர்கள் இதை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 608 views
-
-
-
- 0 replies
- 608 views
-
-
Published By: DIGITAL DESK 3 25 JUN, 2024 | 01:22 PM விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட, இந்தியா - இலங்கை இடையிலான ராமர் பாலத்தின் புகைப்படத்தை ஐரோப்பிய ஏஜென்சி வெளியிட்டது. இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியா - இலங்கை இடையே, கடலுக்கடியில் 48 கிலோ மீற்றர் தொலைவுக்கு, இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான ராமேஸ்வரத்திலிருந்து, இலங்கையின் மன்னாருக்கு இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராமர் பாலத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் கோப்பர்நிக்கஸ் சென்டினெல் - 2 செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கிறது. இந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் ஐரோப்பிய …
-
- 0 replies
- 608 views
- 1 follower
-
-
அமேஸான் - புத்தக விற்பனையிலிருந்து பூதாகர வளர்ச்சி! எஸ்.எல்.வி. மூர்த்தி இ-காமர்ஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இணையதள வியா பாரம் இந்தியாவில் சுமார் 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. பிளிப்கார்ட், ஜபாங், ஜங்லீ, மைந்த்ரா, ஸ்நாப்டீல் போன்ற இ காமர்ஸ் கம்பெனிகள் புத்தகங்கள், சமையல் சாதனங்கள், எலெக்ட்ரானிக் கருவிகள், செல்போன்கள், உடைகள், வாட்ச்கள், நகை கள் என நமக்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களையும், ஏகப்பட்ட பிராண்ட்களில் தருகிறார்கள். பெரும்பாலான இ-காமர்ஸ் கம்பெனிகளின் ஆண்டு விற்பனை பல்லாயிரம் கோடிகளுக்கும் அதிகம். பல லட்சம் பேருக்கு இந்தக் கம்பெனிகள் வேலை வாய்ப்புத் தருகின்றன. இது மட்டுமல்ல, குற…
-
- 0 replies
- 608 views
-
-
அமெரிக்காவில் உயரிய விருது பெற்ற, மலேசியத் தமிழர்! மலேசியாவின் ஈப்போவினைச் சேர்ந்த தமிழரான வைத்தியர் பெர்னார்ட் அருளானந்தம் அமெரிக்காவில் உயரிய விருதினைப் பெற்றுள்ளார். தொற்று நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளைக் கண்டு பிடிக்கும் பணியில் சிறந்த பங்காற்றியமைக்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் அமெரிக்காவில் புதிய கண்டு பிடிப்பாளர்களுக்கான தேசிய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் ஈப்போவினைச் சேர்ந்த தமிழரான வைத்தியர் அருளானந்தம், கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்போது அவர் செண் அந்தோனியாவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி, பொருளாதார மேம்பாடு அறிவாக்கத் துறையின் துணைத் தலை…
-
- 0 replies
- 608 views
-
-
சூரியனுக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளாகவே புதன் அறியப்படுகிறது. ஆனால் அந்தக் கோள்தான் எப்போதுமே சூரியனுக்கு அருகில் இருந்தததாகக் கூறமுடியாது என்று அறிவியலாளர்கள் இப்போது கருத ஆரம்பித்துள்ளார்கள். புதனின் தோற்றம் குறித்து இப்போது ஆய்வாளர்கள் மீள்சிந்தனையைத் தொடங்கியுள்ளார்கள். அந்தக் கோளில் உள்ள சில வேதியல் பொருட்கள் அதீதமான வெப்பத்தில் உருவாகியிருக்க முடியாது என ஆய்வாளர்கள் எண்ணுகிறார்கள். அமெரிக்க தேசிய விண்வெளி அமைப்பான நாசா புதன் கோளை ஆய்வு செய்ய ஏவிய மெஸஞ்சர் என்ற விண்கலம் எடுத்து அனுப்பியப் படங்களை வைத்தே இப்படியான கருத்துக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர். புதன் கோளின் மேற்பரப்பு குறித்து புதிய புகைப்படங்கள் வந்துள்ளன புதன் கோள் நமது சூரிய மண…
-
- 1 reply
- 608 views
-
-
துணிகள் வாங்கினாலும் சரி, மணிகள் வாங்கினாலும் சரி, மளிகை சாமான்கள் வாங்கினாலும் சரி, மருந்து மாத்திரைகள் வாங்கினாலும் சரி, காய்கறிகள் வாங்கினாலும் சரி, காண்டம் வாங்கினாலும் சரி, "நெகிழிப் பை" என சொல்லக்கூடிய 'ஒரு கேரிபேக் கொடுங்கள்' என கேட்கும் நுகர்வு கலாச்சாரம் நம்மிடம் பெரும்பான்மையாக இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் உலகம் முழுவதும் சுமார் 160000 நெகிழிப் பைகள் பயன்பாட்டிற்கு வருகிறது என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. அதன்படி சராசரியாக ஒரு வருடத்திற்கு 3.5 இலட்சம் கோடி நெகிழிப் பைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். சென்ற வருடம் மட்டும் நாம் 5 இலட்சம் கோடி நெகிழிப் பைகளை பயன்படுத்தி குப்பைகளாக வீசியிருக்கிறோம். இந்த வேகமும் இந்த நிலையும் தொடர்ந்தால் 700 வருடங்களில் இந்த பூமி முழுவ…
-
- 0 replies
- 608 views
-
-
நம்மில் பலரும் ஐ.பி.எல். 20 - 20 கிரிக்கெட் போட்டித் தொடரில் நமக்குப் பிடித்த அணி எந்த இடத்தில் இருக்கிறது என்று கடந்த ஒன்றரை மாதமாகத் தினமும் ஆர்வத்துடன் பார்த்திருப்போம். ஆனால், இந்த ஒன்றரை மாதத்தில் ஒரு நாளாவது நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சத்துகளை வரிசைப்படுத்திப் பார்த்திருப்போமா? அப்படிப் பார்த்திருந்தால் முறையான, சத்தான உணவைத்தான் சாப்பிடுகிறோமா என்ற கேள்வி நிச்சயம் தோன்றியிருக்கும். ‘தினமும் வீட்டுச் சாப்பாடுதானே சாப்பிடறேன்... எனக்கெல்லாம் என்ன பிரச்சினை வரப் போகுது?’ என்று சொல்லும் போக்கு பரவலாகி விட்டது. அதெல்லாம் சரி, நம் வீட்டில் தயாரிக்கப்படும் உணவில் சேர்க்கப் படும் பொருட்களின் தரம் என்ன? அவை எப்படிப்பட்ட முறையில் உற்பத்தி யாகின்றன என்று நமக்குத் தெரி…
-
- 0 replies
- 607 views
-
-
வந்துவிட்டன ஓட்டுநர் இல்லாத கார்கள் ஓட்டுநர் இல்லா கார்ஓட்டுநர் இல்லாத கார்கள் தெருக்களுக்கு வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் நான்கு இடங்களில் தானாகவே இயங்கும் ஓட்டுநர் இல்லாத கார்கள் அல்லது தானியங்கி நாற்சக்கர வாகனங்கள் சோதனை முயற்சியாக இயக்க அனுமதிக்கப் பட்டுள்ளன. ஓட்டுநர் இல்லாத வாகனத்தொழில்நுட்பம் குறித்து ஐக்கிய ராஜ்ஜியம் ஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக இந்த வாகனங்களை அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் இந்த ஓட்டுநர் இல்லாத கார்களை சாலைகளில் அனுமதிக்க வேண்டுமானால் நாட்டின் சாலை விதிகளிலும், கார் பரிசோதனை வழிமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது. ஓட்டுநர் இல்லாத கார…
-
- 2 replies
- 607 views
-
-
ஞாயிற்றுத் தொகுதியில் சூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் ஒரு அதிசய நிகழ்வு நாளை நடக்கிறது. செவ்வாய் சூரியனை சுற்றி வர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. அந்த வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த மூன்று கிரகங்களின் நேர் கோட்டு அதிசியம் நாளை நிகழ்கிறது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=424562843007297552#sthash.yLRMWdDK.dpuf
-
- 0 replies
- 607 views
-
-
கடல் நீரில் இருந்து அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் யுரேனியத்தை பிரித்தெடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், இம்முயற்சியில் அவர்கள் வெற்றியடைந்திருப்பது விஞ்ஞான வளர்ச்சியில் முக்கிய பங்காக கருதப்படுகிறது. கடல் நீரில் இருக்கும் யுரேனியத்தை பிரித்தெடுப்பதற்காக நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சியில் தற்போது வெற்றி கண்டுள்ளனர் விஞ்ஞானிகள். யுரேனியம் அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரிய தாதுவான யுரேனியம் பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. யுரேனியம் கடல்நீரில் ஆயிரம் மடங்கு கொட்டிக்கிடப்பதாக கண்டறிந்த விஞ்ஞானிகள் அவற்றை பிரித்தெடுக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் சேப்பல் ஹில…
-
- 0 replies
- 606 views
-
-
1,000 வருடங்களுக்கு முன்னர் உங்களது மூதாதையர்கள் எங்கிருந்தார்கள் என அறிந்துகொள்வது இலகுவானதொரு விடயமல்ல. ஆனால் உங்களை உங்கள் மூதாதையர்களின் இடத்திற்கு வழிகாட்டும் சாதனம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்காக அதி தொழில்நுட்பத்திலமைந்த புவியியல் குடித்தொகை அமைப்பு (ஜோகிரபிக் பொபியூலேஷன் ஸ்ரக்சர்) எனும் ஜீ.பி.எஸ் எனப்படும் இணையத்த டூல் ஒன்றினை விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர். இச்சாதனத்தின் மூலம் உங்களது மரபணு எங்கே எந்த கிராமத்தில் உருவானது என கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் உங்களது மூதாதையர்களின் இடத்தினை கண்டுபிடிக்க முடியும். இதற்கு முன்னர் எந்த இடத்தில் உங்களது மரபணு உருவானது என 700 கிலோ மீற்றர்களுக்கு உட்பட்ட பிரதேசத்திலே கண்டுபிடிக்க முடியுமாக இருந்…
-
- 1 reply
- 606 views
-
-
பெர்சவரன்ஸ் விண்கலத்தின் விண்வெளி ஆய்வு: செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா? - சரியான இடத்தைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் பட மூலாதாரம், NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, செவ்வாய் பாறை மாதிரிகளை பெர்சி உலவு வாகனம் சேகரிக்கிறது "நாம் நிச்சயமாக சரியான இடத்தில் இருக்கிறோம்." என்று செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க விண்வெளி அமைப்பின் (நாசா) பெர்சவரென்ஸ் உலவு வாகனத்தை இயக்கும் விஞ்ஞானிகள் குழுவுக்கு இப்போதுதான் மூச்சு வந்திருக்கிறது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியம் குறித்த சமிக்ஞைகளை அளிக்கும் இடத்தில…
-
- 1 reply
- 606 views
-
-
http://youtu.be/BmpyfOjIO_U அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது Sex Education in Tamil - Neurobiology of Love in Tamil by Dr.M.Semmal
-
- 0 replies
- 606 views
-
-
ஸ்மார்ட்போன்கள் அதன் பன்முக வசதிகளுக்காகவும், இணைய இணைப்பு வசதிக்காகவும், கம்ப்யூட்டர் போல செயல்படும் தன்மைக்காகவும், ஸ்டேட்டஸ் அடையாளமாகவும் இன்று உல்கம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.அதிலும் விஞ்ஞான தொழில் நுட்பம் நாளும் வளர்ந்து வருகிற இந்த நாட்களில் ஸ்மார்ட் போன் மனிதர்களுக்கு குறிப்பாக உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, எப்போதும் பரபரப்பாக இயங்குகிறவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கம்ப்யூட்டர் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையெல்லாம் இந்த ஸ்மார்ட் போன் செய்து விடுவதால் இதன் விற்பனை தினந்தோறும் எகிறிக் கொண்டே போகிறது. இந்நிலையில் இப்போது வாசனையை பரப்புகிற ஸ்மார்ட் போன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மு…
-
- 0 replies
- 605 views
-
-
பேஸ்புக் நிறுவனம் "பேஸ்புக் ஹோம்" என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட்டுள்ளது. ஆப்ஸ் போன்ற இந்த செயலி ஆண்ட்ராய்டு போன்களை பேஸ்புக் போனாக மாற்றக்கூடியது. தைவானின் ஹெச்டிசி நிறுவனம் இந்த போனைத் தயாரிக்க உள்ளது. இந்த போன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். பேஸ்புக் போனின் 5 சுவாரஸ்யமான அம்சங்கள் 1. ஹோம் என்ற புதிய மென்பொருள், பயனாளர்களை ஆண்ட்ராய்டு போனை கூகுளால் உருவாக்கப்பட்ட புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்றக்கூடியது. இந்த புதிய மென்பொருள் தொடர்ச்சியாக பேஸ்புக் செய்திகளையும், மற்ற தகவல்களையும் இந்த போனின் ஹோமில் பார்க்க முடியும். இந்த வசதி மற்ற ஆப்ஸ்களில் கிடையாது. 2. முகப்புப் பகுதியில் எப்போதும் போல வால் பேப்பர்கள் அல்லது …
-
- 0 replies
- 605 views
-