அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 250 மைல் தொலைவிலுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திலிருக்கும் விண்வெளிவீரரொருவர் பூமியின் மேற்பரப்பை படமெடுத்து அனுப்பியுள்ளார். தற்போது டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள இப்படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. கனேடிய விண்வெளி வீரரான கிறிஸ் ஹெட்பீல்ட் தனது மகனுக்கு இப் படங்களை அனுப்பியுள்ளார். அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கினை பராமரிக்கும் மகன் இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். http://www.virakesari.lk/article/technology.php?vid=136
-
- 2 replies
- 579 views
-
-
முதலாவதாக மாயன் கேலண்டர், நிபுரு சமாச்சாரம், இரண்டாவதாக பூமி மூன்று நாள் இருளில் மூழ்கும் என்ற சமாச்சாரம் ஆகியவை வெறும் புருடா என்பது இந்த மாதக் கடைசியில் நிரூபணமாகி விடும். ஆனால் புருடா ஆசாமிகள் சொல்லாத சமாச்சாரம் ஒன்று உள்ளது. அதாவது வருகிற ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ஓர் அஸ்டிராய்ட் பூமியின் மீது உராயாத குறையாக பூமியை மிக அருகில் கடந்து செல்ல இருக்கிறது.பறக்கும் பாறை என்று சொல்லத்தக்க இந்த அஸ்டிராய்ட் நிச்ச்யம் பூமி மீது மோதாது என்று நாஸா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனினும் ஓர் அஸ்டிராய்ட் பூமிக்கு இவ்வளவு அருகில் வந்து செல்வது என்பது அபூர்வமே.அந்த வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த பல நூறு ஆண்டுகளில் எந்த அஸ்டிராய்டும் பூமிக்கு இவ்வளவு அருகில் வந்தது க…
-
- 8 replies
- 1.7k views
-
-
பிளாக்பெரி 10 கனேடிய நிறுவனமான பிளாக்பெரி மீண்டும் தலை தூக்குமா இல்லையா என்பது இன்றைய அதன் வெளியீடான பிளாக்பெரி 10 இல் தங்கி உள்ளது. கை விசைப்பலகை அழுத்தியுடனான ஒருவகை அது இல்லமால் ஒருவகை என இரண்டு வகைகள் வெளியாக உள்ளன. ஆப்பிளின் ஐபோன் கூகிளின் ஆண்ட்ராயிட் ( சாம்சங்கின் கலக்சி), நோக்கியா மற்றும் மைக்ரோசொப்ட் என பல நிறுவனங்களுடன் போட்டிபோட வேண்டிய தேவை உள்ளது. BlackBerry Z10 versus iPhone 5
-
- 7 replies
- 870 views
-
-
விமான சாதனையை உடைத்த நாசா சூப்பர் டைகர் பலூன் அண்டார்க்டிகாவுக்கு பறக்கவிட்ட நாசாவின் பெரிய சூப்பர்-டைகர் அறிவியல் பலூன் 55 நாட்களுக்கு பின் திரும்பிய அதன் வகையான நீளமான விமான சாதனையை உடைத்ததாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் நேற்று தெரிவித்துள்ளது.2009 ல் ஒரு நாள் முழுவதும் அமைக்கப்பட்ட சூப்பர்-டைகர் பலூன், பழைய சாதனையை முறியடித்தது, 127.000 அடி (38,710 மீட்டர்) உயரத்தில் பறக்கும் சூப்பர்-டைகர் பலூன் 55 நாட்கள், ஒரு மணி நேரம் 34 நிமிடங்கள் கழித்தபின் அது வேறு விண்மண்டலத்தின் இருந்து பூமியின் ஹிட் என்று உயர் ஆற்றல் காஸ்மி கதிர்களை சேகரித்தது.அந்த செயல்முறை கதிர்கள் வருகை மத்தியில் இரும்பை காட்டிலும் வலுவான அரிய சக்திகளை அளவிட ஒரு புதிய கருவியை பயன்படுத்துவதற்கு உதவும்.…
-
- 0 replies
- 772 views
-
-
ஆந்தைகள் எல்லா திசையிலும் கழுத்தை திருப்பும் ரகசியம் ஆந்தை தன் கழுத்தை நாலாபுறமும் திருப்ப முடிவது எப்படி என்ற கேள்விக்கு, அமெரிக்க விஞ்ஞானிகள் விடை கண்டுள்ளனர். இரவில் வேட்டையாடும் பறவையான ஆந்தை, தன் கழுத்தை, 270 டிகிரி வரை திருப்பும் அபூர்வமான திறமை கொண்டது. இதே அளவுக்கு மனிதன் தன் கழுத்தை திருப்பினால், ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலை ஏற்படும். இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த அமெரிக்காவின், ஜான்ஸ் ஹாப்கின் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் அபூர்வ சக்தி பற்றிய ரகசியத்தை கண்டறிந்து உள்ளனர். இறந்த ஆந்தைகளை பரிசோதனைக்கு எடுத்துக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஆந்தையின் தலையை கைகளால் நன்கு திருப்பி சோதனை செய்தபோது, அதன் தலையின் அடியில், தாடை எலும்ப…
-
- 7 replies
- 954 views
-
-
கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்! நியூயார்க்: பிப்ரவரி 1- ந் தேதி...2003-ம் ஆண்டு! அமெரிக்காவின் நாசா மையத்தில் அந்த 7 விஞ்ஞானிகளின் உறவுகளும் காத்திருக்கின்றனர்.. வெற்றிகரமான விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் உறவுகள் வந்துவிடுவர் எனக் காத்திருந்த அவர்களுக்கு மட்டுமே உலகமே அப்படி ஒரு கோர விபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்...ஆனால் ஒரு உண்மை இப்போது வெளியாகியுள்ளது.. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்பதுதான் அது! 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக…
-
- 1 reply
- 749 views
-
-
அறிவியல் தொழில் நுட்பம் மீள்பார்வை – முனைவர் சு. பூங்கொடி அறிவியல் கருத்தாக்கங்களின் போக்கு: ”அறிவாண்மை” என்பது ஒரு குறிப்பிட்ட ஆதிக்கத்தின் ”கருவூலம்” என்ற நிலை மாறி வளர்ந்த அறிவியல் ஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டில் அரசியல் ஆதிக்கம் செய்த வணிக முதலாளிகளால் ஒரு பெரும் திருப்பத்தைச் சந்தித்தது. உற்பத்தியின் அடிப்படைக் குறிக்கோள் சமூகத்தேவை என்பது மாறி ”இலாபநேக்கமே” அடிப்படையாகவும் தீர்மானிக்கும் கூறாகவும் மாறியது. நவீன அறிவியலின் உயர் தொழில்நுட்பமும் வணிகர்களின் கருவிகளாக மாற்றப்பட்டன. இத்தகு தொழில்நுட்பமே மக்களை அடிமைப்படுத்தவும் இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இம் முதலாளிகளின் ஆதிக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. வேளாண்துறைகள், தொழில்துற…
-
- 0 replies
- 736 views
-
-
-
- 1 reply
- 603 views
-
-
புதிய ஆப்பிள் ஐபோன் 6 இன் படங்கள் வெளியாகின! செவ்வாய், 29 ஜனவரி 2013( 17:19 IST ) அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஆப்பிள் ஐபோன் 6 இன் படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. பிரெஞ்ச் டெக் பிளாக்கின் ஆசிரியர் இந்த படங்களைப் பார்த்துவிட்டு தெரிவிக்கையில், ஐபோன் 6 இன் ஒலிபெருக்கி(ஸ்பீக்கர்) உள்ளிட்ட சாதனங்கள் ஐபோன் 5-யைப் போன்ற தோற்றத்தையே கொண்டுள்ளன. ஐபோன் 6-யைப் பற்றிய செய்திகள் ஒரு கிசுகிசு போல வந்துள்ளது. இதில் 128 GB தரவு தேக்கி (ஸ்டோரேஜ் மெமரி) உள்ளதாகவும், மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ இதில் இயங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெய்லி மெய்ல் ரிப்போர்ட் படி, வெளியிடப்பட்ட புகைப்படங்கள் தூரக்கிழக்கு நிறுவனத்தின் ஒரு பணியாளரால் வெளியிடப்பட்டது. இந்தப் பு…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆண்டிபயாடிக் சாப்பிட்டால் வைரஸ் சாகுமா? ஆண்டிபயாடிக் மருந்து சாப்பிட்டால் வைரஸ் கிருமிகள் சாகும் என்ற ஒரு நம்பிக்கை நம்மில் பலரிடையே இருக்கிறது. சளிக்கும் இருமலுக்கும் மருத்துவரிடம் செல்லாமல் நாமாகவே மருந்து கடைகளுக்கு சென்று ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொள்ளும் ஒரு வழக்கத்தை இந்தியாவில் பார்க்கலாம். உண்மையில் ஆண்டிபயாடிக் மருந்துகள் வைரஸ்களைக் கொல்லுமா? பாக்டீரியா என்று சொல்லப்படுகின்ற நுண்ணுயிரிகளைத்தான் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொல்லுமே ஒழிய வைரஸ்களைக் கொல்லாது. ஏனென்றால் வைரஸ்கள் என்பவற்றை ஒரு வகையில் பார்த்தால் உயிருள்ள வஸ்துக்கள் என்றே சொல்ல இயலாது. எனவே சளி இருமல் எல்லாம் வந்தால், ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொண்டு அவற்றை குணப்படுத்…
-
- 8 replies
- 763 views
-
-
மகுடி இசைக்குக் கட்டுண்டுதான் பாம்பு ‘படம்’ எடுத்து ஆடுகிறதா? இந்தக் கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் ‘ஆம்’ என்கிற பதிலில் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனக்குச் சிறுவயது முதல் இக்கேள்வியும் அதற்கான மேற்படி பதிலில் நம்பிக்கையின்மையும் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல். இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்துவிட்டது என்று சொல்லமாட்டேன். இப்பொழுதும் ரேடியோவில் புன்னாகவராளி கேட்கையில் அப்படி இப்படி பார்த்துவிட்டு, காலை நாற்காலி மீது மடித்து வைத்துக்கொள்ளுவேன். சரி, அப்ப விடை என்ன? நம்மில் பலருக்கு மகுடி இசையை கேட்டுதான் பாம்பு படம் எடு…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ் அனுப்புது நாசா நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் எங்கு பறக்கிறது என்று எஸ்எம்எஸ் மூலம் மக்களுக்கு தெரிவிக்கும் சேவையை நாசா தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது ‘ஐஎஸ்எஸ்’ சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம். இதில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்பட 6 பேர் தங்கியிருந்து தற்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராக்கெட்களை நிலைநிறுத்தும் தளம், ஆய்வுக் கருவிகள், விஞ்ஞானிகள் தங்கி ஆய்வு நடத்தும் பகுதி என மொத்தம் 450 டன் எடை கொ…
-
- 0 replies
- 502 views
-
-
வணக்கம் தமிழ் உறவுகளே! பலர் தொழில் நுட்பம் சார்ந்த அதாவது கணினி கைபேசி இணையத்தின் தமிழ் மென் பொருள் சார்ந்த அறிவு இல்லாது இருக்கிறார்கள் . அன்பான தமிழ் உறவுகளே! தமிழுக்கு அழகே தமிழ் எழுத்துகள்தான். தமிழைத் தமிழில் எழுதுங்கள் & ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதி தமிழைக் கொலை செய்ய வேண்டாம். நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால் தெளிவாக புரியவில்லை.ஏன் தமிங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.? இன்று தமிழில் எழுத நிறைய மென்பொருட்கள் உள்ளன..தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதும்/ தமிழில் எழுத முடியாத தமிழர்களால் தமிழ் அழிந்துவிடும் என்றே அஞ்சுகிறோம். தமிழனால் தமிழில் எழுதவோ பேசவோ முடியவில்லை என்றால் எவன் தமிழை எழுதுவான்/ பேசுவான்?தமிழை ஆங்கில எழுத…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=5]விண்வெளியில் உள்ள வாயு, தூசி, ஒளி போன்றவற்றை தன்வசம் ஈர்க்கும் கருந்துளையை(Black Hole) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.[/size] [size=5]பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த இந்திய விஞ்ஞானி மாண்டா பானர்ஜி தலைமையிலான குழுவினர் ULASJ1234+0907 என்ற சக்தி வாய்ந்த கருந்துளையை கண்டறிந்துள்ளனர்.[/size] [size=5]இது குறித்து விஞ்ஞானி மாண்டா பானர்ஜி கூறுகையில், விண்ணில் இருக்கும் இந்த கருந்துளைகள் அடர்த்தியான தூசியால் மூடப்பட்டிருந்ததால், இதற்கு முன் இதனை கண்டறிவதில் சிரமம் இருந்தது.[/size] [size=5]இந்நிலையில் தற்போது அதி நவீன தொலைநோக்கியை பயன்படுத்தி இதனை கண்டுபிடித்துள்ளோம்.[/size] [size=5]அருகில் காணப்படும் நட்சத்திர கூட்டங்களில் உள்ள பொருட்…
-
- 7 replies
- 5.6k views
-
-
snowmen கட்டினால்.. வெள்ளப் பெருக்கு வராது என்ற ஐதீகம்.. மேற்கு நாடுகளில் உள்ளது. இந்த ஐதீகத்தின் பின்னால் அறிவியல் கொண்டு தேடிய போது.. அதில் கொஞ்சோண்டு உண்மை இருப்பது தெரிய வந்துள்ளது. பனி பெரும் திட்டாக ஒன்றுசேர்க்கப்படும் போது நீர் மூலக்கூறுகளின் தொடு மேற்பரப்பு குறைவடைய.. அது இளகி உருக அதிக நேரமும் சக்தியும் எடுப்பதால்.. பனி மீது மழை பெய்வதால் வரக்கூடிய வெள்ளப் பெருக்கை அது ஓரளவுக்கு தடுக்க வாய்ப்புள்ளது என்று snowmen பற்றிய ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் சில சேர்ந்து நடத்திய ஆய்வில் இருந்து இது தெரியவந்துள்ளது. ஆனால் மக்கள் snowmen செய்ய பாவிக்கும் பனியின் அளவு பொழியும் பனியின் அளவோடு... ஒப்பிடும் போது சிறிது என…
-
- 3 replies
- 990 views
-
-
தகவற்சித்திரங்கள் - Infographics Infographics என ஆங்கிலத்தில் கூறப்படும் தகவற்சித்திரங்கள் இணையமெங்கும் பரவிக் கிடக்கின்றன. நீங்களும் பலவற்றை பார்த்திருப்பீர்கள். நான் கண்ட சுவாரசியமான தகவற்சித்திரங்களை அவ்வப்போது உங்களுடன் இத்தொடரில் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கின்றேன். தகவற்சித்திரம் – சிறுவிளக்கம் பக்கம், பக்கமாக எழுதி ஒரு கட்டுரையில் சொல்லவேண்டிய தகவல்களை எளிதாக ஒரு தகவற்சித்திரத்தில் வடிவமைத்துவிடலாம். இன்னும் சொல்லப்போனால் குறும்தகவல்கள், வரைபடங்கள், சித்திரங்களென செறிவுமிக்க தகவல்களை உள்ளடக்கிய ஒரு தகவற்சித்திரத்தை சிறப்பாக வடிவமைப்பதன் மூலம் சொல்லவேண்டிய விடயத்தை இலகுவாகவும், எளிதாகவும் வாசகர்களுக்கு புரிய வைத்துவிடலாம். இனி இன்றைய தகவற்சித்திரத்தைப் …
-
- 0 replies
- 486 views
-
-
ஜனவரி 1, 1983. இண்டர்நெட் பிறந்தது. அமெரிக்க அதிபரில் தொடங்கி ஆப்பிரிக்காவின் ஏதோ ஒரு ஏழைநாட்டு குடிமகன் வரை இன்று இண்டர்நெட்டை ஏதோ ஒரு வகையில் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ‘உலகம் ஒரே கிராமம்’ எனும் கோஷம் தற்போது ஓங்கி ஒலிப்பது இண்டர்நெட்டால்தான். இண்டர்நெட் வருவதற்கு முன்பாக கம்ப்யூட்டர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ள அதுவரை இருந்த நெட்வொர்க் முறைகள் சிக்கலானதும், சிரமமானதும் ஆகும். அவற்றை எளிமைப்படுத்தி, TCP, IP என்கிற இரண்டு நெட்வொர்க் முறைகளை இணைத்து TCP/IP (Transmission Control Protocol over Internet Protocol) என்று ஒரேமுறையாக அன்றுதான் செயல்படத் தொடங்கியது. ஆரம்பத்தில் அமெரிக்காவின் இராணுவ மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த தொழில்நுட்ப கட்டமை…
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய்க் கிரகத்தில் நிலப்பரப்புக்கு கீழேயுள்ள கிடைக்கப்பெறுகின்ற தாதுக்கள் அந்த கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கு இதுவரையில் கிடைத்திருப்பதில் வலுவான ஆதாரம் என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. செவ்வாய்க் கிரகத்தின் சரித்திரத்தில் பெரும்பான்மையான காலங்களுக்கு அதன் மேற்பரப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் வரையான ஆழங்களில் உயிர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டும் தாதுக்கள் அங்கு காணப்படுவதாக ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர். லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் மற்றும் அபெர்டீன் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஈசா ஆகியவற்றின…
-
- 0 replies
- 763 views
-
-
தென் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களின் வறண்ட பகுதிகளில், மலை முகடுகளின் கூம்பான புனல் போன்ற புவி அமைப்பால் தென்மேற்கு பருவக்காற்று கேரளாவிலிருந்து அதி வேகத்துடன் தமிழ் நாட்டில் நுழைகிறது. இத்தென்மேற்கு பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும் போது சாரலாகவும், குமரிப் பக்கம் வீசும் போது சுழல் காற்றாகவும் உருமாறுகிறது. இதைக் கண்ட பொறியாளர்களின் மூளை வாளாவிருக்குமா? பிறந்தது காற்றாலை (Wind Mill) எனப்படும் பொறி. இப்பொறி, விரைந்து வீசும் காற்றால் உந்தப்பட்டு விசிறி சுழற்சி மூலம் ஆற்றல் உற்பத்தி செய்ய பயன்படுகிறது. இந்த வகையில் செய்யப்படும் ஆற்றல் உற்பத்தி(Energy), அணு உலைகள், நீர் உலைகள் மற்றும் வாயு உலைகள் மாதிரி இல்லாமல், சுற்றுச்ச…
-
- 1 reply
- 1.6k views
-
-
பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம். பின்னர் தனது மிக நுண்ணிய ஊசியால் தேவையான மனிதரின் தோலில் குற்றி அழுத்தசக்கியின் பிரயோகத்தால் DNA மாதிரியை (குருதியை) எடுத்து விடலாம். முக்கியமா…
-
- 2 replies
- 516 views
-
-
பாதரச நச்சால் ஏற்பட்ட பாதிப்பு பாதரசத்தினால் (மேர்க்குரியினால்) சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, அதனைச் சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் 140 க்கும் அதிகமான நாடுகள் உடன்பாடு கண்டுள்ளன. மேர்க்குரி வெப்பமானி போன்ற சாதாரண வீட்டுப் பாவனைப் பொருட்களில் உயர் நச்சுப் பொருளான பாதரசம் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் சீமெந்து தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் பாதரச நச்சுப் பொருட்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் உடன்பாடு கண்டுள்ளனர். தங்கத்தை வேறு பொருட்களில் இருந்து பிரித்தெடுக்க பாதரசத்தை பயன்படுத்தும், சிறிய அள…
-
- 2 replies
- 1.2k views
-
-
கண்காணா உலகங்கள் invisible worlds - a BBC television documentary பல விடயங்கள் தெளிவாகும் 1. Speed Limits 2. Out of Sight 3.off the scale
-
- 28 replies
- 3.6k views
-
-
தட்பவெப்ப மாற்றத்தின் வெளிப்பாடாக பறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கான எச்சரிக்கை மணியாக உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
-
- 3 replies
- 537 views
-
-
செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 1500 கி.மீ., நீளமும், 7 கி.மீ., அகலமும் கொண்ட அந்த ஆறு, செவ்வாய் கிரகத்திற்கு ஊடாக செல்கிறது. செவ்வாய் கிரகத்தில் ஆறு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்து, அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு சூடுபிடித்துள்ளது. http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%95-%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-090400649.html
-
- 1 reply
- 1k views
-