அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3275 topics in this forum
-
1972 ஆம் ஆண்டு தொடக்கம் சோவியத் விமானப்படையினால் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் உலங்குவானூர்தியானது தாக்குதற்திறன் மிக்கதாக இருப்பது மட்டுமல்லாது சிறு எண்ணிக்கையான துருப்புக்களையும் நகர்த்தவல்லது. ஈழத்தில் இந்தியக் காடையர் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே, அங்கு இவ் உலங்கு வானூர்தி தமிழ் மக்களுக்கு அறிமுகமானது. “முதலைக் கெலி" , "மூஞ்சுறு “ என்று இது தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய Mi- 24 உலங்குவானூர்தியில் தேசியத் தலைவர் அவர்களை புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்ட நிகழ்வானது இந்தியாவிற்கும் ஈழத்திற்க்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணம் ஆக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது…
-
- 0 replies
- 713 views
-
-
கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன. கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர். மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன மின்னியல் மற்றும் அமைப்புகள்…
-
- 1 reply
- 531 views
-
-
[size=6]Varna Tempest[/size] [size=5]After moving to Toronto from Belgrade in the 1970s, sculptor Georgi Georgiev found inspiration in a Popular Mechanics article he read about the Human-Powered Speed Championship, a competition that pitted the fastest pedal-powered vehicles against each other. Since then he's been trying to design his own version, taking cues from the world around him to shape the aerodynamic carbon fiber and Kevlar shell built around a low-profile recumbent bicycle. "I looked at nature and the shapes of the things that moved efficiently through fluids, air or water, with a dolphin being a good example," he says.[/size] [size=5]Each year …
-
- 16 replies
- 5.5k views
-
-
Dassault Mirage 200 மிராச் 2000 1978 ல் தயாரிக்கப்பட்டு 1984 முதல் பிரஞ்சு விமானப்படையின் செயல்பாட்டு வருகிறது, மற்றும் அபுதாபி, எகிப்து, கிரீஸ், இந்தியா, பெரு, கத்தார், தைவான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் பாவனையில் உள்ளது . இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ம் தலைமுறைப் போர் வானூர்தி ஆகும். இது நிறை குறைந்த வானூர்தியான, மிராச் III இன் வடிவமைப்பைக் கொண்டு 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவ்வகை வானூர்திகள் வெற்றிகரமாக அமைந்ததால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மிராச் 2000N , மிராச் 2000D போன்ற தாக்குதல் வானூர்திகளும், மிராச் 2000 -5 என்ற மேம்படுத்தப்பட்ட வானூர்திகளும், மேலும் பல்வேறு வகையான வானூர்திகளும் உருவாக்கப்பட்டன. 2009 நிலவரப்…
-
- 0 replies
- 806 views
-
-
39,000 மீற்றர் உயரத்திலிருந்து பாய்ந்து சாதனை. சற்று நேரம் முன், இனி ஒருவராலும் முறியடிக்க முடியாத உலகசாதனை நிகழ்த்தப் பட்டது. ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த பவும் கார்டினர் (Baumgartner) என்பவர் அமெரிக்காவிலுள்ள நியூ மெக்சிக்கோ என்னுமிடத்திலிருந்து... ஹீலியம் வாயு நிரப்பப் பட்ட பலூன் மூலம், விமானம் கூட செல்ல முடியாத உயரமான... 39,000 மீற்றர் உயர்த்துக்கு விசேடமாகத் தயாரிக்கப் பட்ட குடுவை மூலம், மேலே சென்று.... கீழெ... பாரசூட் மூலம் குதித்து, இனி எவரும் சாதிக்க முடியாத, உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இனி எவரும் சாதிக்கமுடியாத என்று சொல்வதற்கு முக்கிய காரணம். அவர் சென்ற உயரம் விண்வெளியின்... புவியீர்ப்பு எல்லையின் கடைசிப் பகுதியாகும். அதற்கு மேல் சென்றால்.... அவர் கீழே…
-
- 11 replies
- 1.6k views
-
-
அல்ஸிமர் ௭ன்ற நோயால் பீடிக்கப்பட்டு மறதி நிலைக்குள்ளானவர்களும் மன நோயாளர்களும் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போகும் பட்சத்தில் அவர்களை உறவினர்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவும் செய்மதி தொழில்நுட்பம் மூலம் செயற்படும் விசேட பாதணிகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. மேற்படி பாதணியில் பொருத்தப்பட்டுள்ள விசேட நுண் உபகரணமானது அப்பாதணியை அணிந்திருப்பவர் ௭ங்குள்ளார் ௭ன்ற தகவலை செய்மதி மூலம் அவரை பராமரிக்கும் அவரது உறவினர்களின் கணனிக்கோ அன்றி கையடக்கத்தொலைபேசிகளுக்கோ அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் அல்ஸிமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை இலகுவாக அறிந்து அவரை அழைத்து வருவது உறவினர்களுக்கு சாத்தியமாகிறது. …
-
- 0 replies
- 664 views
-
-
[size=4]நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இப்படியானதொரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்திருக்கும் வானியலாளர்கள்.[/size] [size=4]பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையதளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கின்றன. எனவே பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.[/size] [size=4]பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது. அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு சூர…
-
- 2 replies
- 1k views
-
-
[size=4]” புற நகர் வானத்தை விட கிராமத்து வானம் எவ்வளவோ ப்ரவாயில்லை” என்கிறார் ஒருவர்.[/size] “ சிடி வானம் தான் ரொம்ப மோசம்.” என்கிறார் இன்னொருவர். இது கற்பனை உரையாடல் தான். [size=4]ஆனால் இப்படிப் பேசக்கூடிய இருவரும் சிறு டெலஸ்கோப் மூலம் அல்லது பைனாகுலர்ஸ் மூலம் வானத்தை ஆராய்கின்ற அமெச்சூர் வானவியல் ஆர்வலர்களாக இருக்கலாம். சரி, ஊருக்கு ஊர் வானம் வித்தியாசப்படுமா? நிலவற்ற வானம் எல்லா ஊர்களிலும் கருமையாகத் தானே இருக்க வேண்டும்? இரவு வானின் நிறம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுமா? நிச்சயமாக.[/size] [size=4][/size] [size=4]சுமார் 350 கிலோ மீட்ட்ர் உயரத்தில் பறக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரவில் எடுத்த படம். பிரகாசமாக் உள…
-
- 3 replies
- 2.4k views
-
-
செம்சுங் கெலக்ஸி S III 'மினி' By Kavinthan Shanmugarajah 2012-10-11 13:09:47 செம்சுங்கின் கெலக்ஸி S III ஸ்மார்ட் போன் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளமை நாம் அறிந்த விடயம். இது விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் செம்சுங் நிறுவனமானது குறைந்த விலையில் கெலக்ஸி S III வரிசையில் இன்னொமொரு 'ஸ்மார்ட் போன்' ஒன்றினை வெளியிடவுள்ளது. அதற்கு கெலக்ஸி S III 'மினி' என செம்சுங் பெயரிட்டுள்ளது. ஐரோப்பிய சந்தையில் 4.0 அங்குல திரையைக் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு நல்ல கேள்வி நிலவுவதை கருத்தில் கொண்டே இம்மாதிரியை வெளியிடவுள்ளதாக செம்சுங் தெரிவிக்கின்றது. இதன் தோற்றமானது செம்சுங் கெலக்ஸி S III ஐ போன்றது எனினும் சற்று சிறியது. Samsung Ga…
-
- 0 replies
- 540 views
-
-
கற்றல் – கற்பித்தல் கற்றல் – கற்பித்தல் -அப்பச்சி “சார்” ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான். அனுப்பினேன். “சார்” உடனே மற்றொருவன் அதட்டினேன். நொடிகள் நகர உள்ளேயே ஈரம் வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது என் அதிகாரம். - பழ. புகழேந்தி (“கரும்பலகையில் எழுதாதவை”) எனது நண்பரின் மகளை முதுகலை படிப்பிற்காக ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்த்து விட்டார்கள். இளங்கலை பட்டப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவள் அவள். முதுகலை பயிலுவதற்காக சேர்த்து விடப்பட்ட கல்லூரியிலிருந்து தலைதெரிக்க ஓடி வந்து விட்டாள். நண்பர் குடும்பத்தில் பிடிபிடியென்று அந்த இளம் பெண்ணைப் திட்டித் தீர்த்து விட்டு “படிப்பும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் கழுதைக்கு காலாகாலத்துல …
-
- 0 replies
- 1.8k views
-
-
வணக்கம் Samsung Galaxy S2 கைதொலைபேசியில் தமிழ் எழுத்துக்கள் எப்படி வர செய்வது. தற்பொழுது சில எழுத்துக்கள் தவறாக காட்டுகின்றது. உதாரணமாக யாழ் களம் பார்க்க வந்தால் அதில் ஒரு சில எழுத்துக்கள் மாறியோ அல்லது தவறாகவோ காட்டுகிறது. இதை எப்படி சரி செய்வது என்று யாருக்காவது தெரியுமா? பி.கு. நான் Opera Webbrowser பாவித்து பார்த்துவிட்டேன். ஆனால் அதிலும் எழுத்துக்கள் சரியா வரவில்லை. எனது கைதொலை பேசி வாங்கி இன்னும் நான் update பண்ணாதது பிரச்சனையாக இருக்கலாமா? நன்றி
-
- 2 replies
- 1.4k views
-
-
http://www.telegraaf.nl/buitenland/13063525/__Diamanten_planeet_ontdekt__.html விஞ்சானிகள் வைரத்தினாலான கோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் ...........இந்தப்பாரைகளினால் ஆன கோள் பூமியையும் விட இருமடங்கு பெரியது .............இந்தக்கோளில் மூன்றில் ஒரு பகுதி விலை மதிக்க முடியாத வைரங்களை உள்ளடக்கியுள்ளது. இது பூமியில் இருந்து 40 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது..........இதன் வெப்பநிலை 1648 கிராட் செல்சியஸ் ஆகும்.இந்தப்பாறைகளினால் ஆன கோள் அடிப்படையில் பூமியை விட வேறுபட்ட ஒரு கோளாகவே காணப்படுகிறதாம் .........அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ச்ஜாநியான Nikku மதுசுத் கூறுகிறார் இது சம்பந்தமான மேலதிக கண்டுபிடிப்புகள் மிக விரைவில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படும் ...............இதன் பெயர் 55 சென்சர…
-
- 4 replies
- 820 views
-
-
[size=1] [url=""][/size] சூரியனுக்கு மிக அருகில் உள்ளது புதன் (Mercury), இரண்டாவதாக உள்ளது வெள்ளி (Venus). இதைச் சுக்கிரன் என்றும் அழைப்பார்கள். சூரியனில் இருந்து மூன்றாவது இடத்தில் இருப்பது பூமி (Earth). நான்காவது இடத்தில் இருப்பது செவ்வாய் (Mars). இதை அங்காரகன் என்றும் அழைப்பதுண்டு. சூரியனுக்குப் பக்கத்திலுள்ள புதன், வெள்ளி ஆகியவற்றில் வெப்பம் மிக அதிகம். சூரியனில் இருந்து தூரஞ் செல்லச் செல்ல வெப்பம் குறையும். நடுத்தர வெப்பம் நிலவுவதால் தான் பூமியில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் அதிகம். பூமியும் செவ்வாயும் இரட்டைக் கோள்கள் (Twin Planets) என்று சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். சூரியன் – பூமி இடைவெளியைவிட சூரியன் – செவ்வாய் இடைவெளி ஒன…
-
- 0 replies
- 749 views
-
-
சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போனை, அமெரிக்க தொலை தொடர்பு சேவை நிறுவனமான ஏடி&டி வருகிற நவம்பர் மாதம் அறிமுகம் செய்கிறது. விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள், போட்டி போட்டு கொண்டு மொபைல் சந்தைகளில் விற்பனை செய்யயப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் லுமியா-920 ஸ்மார்ட்போன், வரும் நவம்பரில் விற்பனைக்கு வருவதாக தெரிவித்திருக்கிறது அமெரிக்க ஏடி&டி நிறுவனம். லுமியா-920 ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாது, குறைந்த விலையில் லுமியா-820 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஏடி&டி நிறுவனம் லுமியா வரிசை ஸ்மார்ட்போன்க…
-
- 0 replies
- 918 views
-
-
மைக்ரோசொப்ட் 'ஸ்மார்ட் போன்' விரைவில்? By Kavinthan Shanmugarajah 2012-10-04 15:07:55 மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 8 மொபைல் இயங்குதளத்தினை பிரபலப்படுத்தும் பொருட்டு ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மைக்ரோசொப்டின் ஸ்மார்ட் போன் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டதாகவும் தற்போது அந்நிறுவனம் அதனை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வருடமளவில் இச் ஸ்மார்ட் போன் வெளியிடப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. மைக்ரோசொப்ட் நிறுவனமானது ஏற்கனவே நொக்கியா, எச்.டி.சி, செம்சுங் போன்ற நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. அந் நிறுவனங்களும் விண்டோஸ் மூல…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4] [/size] [size=4]எந்தவொரு பொருளாக இருந்தாலும் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றின் தோற்றமாகும் .அப்பிள் சாதனங்களுக்கு இக்கூற்று நன்றாகவே பொருந்தும்.[/size] [size=4] [/size] [size=4]அப்பிளின் சாதனங்கள் சந்தையில் வெற்றியடைந்தமைக்கும், அதற்கென தனியானதொரு கூட்டம் உருவாகியமைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது அவற்றின் தயாரிப்புகளின் வடிவமாகும்.[/size] [size=4] [/size] [size=4]அவற்றின் தொழில்நுட்ப அம்சங்கள், தரம் என்வற்றுக்கு அப்பால் அப்பிள் சாதனங்களின் வடிவமே தனித்துவமானது தான். உதாரணமாக முதலாவது' வின்டோஸ்' கணனி சற்றென்று உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? இல்லை முதலாவது 'மெக்' ஞாபகத்துக்கு வருகின்றதா?[/size] [size=4] [/size] [size=4]நிச்சயமாக பல…
-
- 6 replies
- 740 views
-
-
பறக்கும் சிறிய ரோபோ (பார்த்ததில் பிடித்தது) கணினியில் antivirus கட்டாயமாக பாவிப்பதுபோல் இனி எமது வீடுகளுக்குள்ளும் anti _flyingrobo system ஏதாவது நிச்சயமாக பொருத்திவைக்க வேண்டியகட்டாயம் வரலாம்.எனினும் இந்த வடிவமைப்புகளுக்கு பின்னால் உள்ள தொழில்நுட்பம்,கடின உழைப்பு நிச்சயமாக மெச்சத்தக்கது.
-
- 16 replies
- 2.9k views
-
-
http://img14.imageshack.us/img14/9148/waterwar.jpg தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் உலகில் உயிரினங்களின் அழிவுக்கும் உருவாக்கத்துக்கும் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இக் கொள்கையின் அடிப்படையிலேயே மனிதன் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். வலியது உயிர்பிழைக்கும் ஆனால் எத்தகைய ஆற்றல் மிக்க ஜீவராசியும் உயிரின் ஆதாரமான நீர் இன்றி உயிர் வாழ்வதென்பது சாத்தியமாகாது என்பது நிதர்சனமானது. அவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாம் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் வாழப்போகின்றோம். ஆனால் இன்று நீரின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை உலக மக்களிடையே பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இன்று உலகில் தங்கம், வைரம், வைடூரியம் என மதிப்புமிக்க பல பொருட்களாகக் கருதி அவற்ற…
-
- 3 replies
- 1.5k views
-
-
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளை கற்கள் பாறை இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ள நாசா கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. முன்னதாக அது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் பதிந்த இடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நீரோடையால் அடித்துக் கொண்டு வரப்பட்ட சரளிக் கற்களின் பாறைகளை கியூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது. அந்த பாறைகளின் அளவு மற்றும் …
-
- 5 replies
- 930 views
-
-
[size=5]ஐயோ,வேண்டாமே, ஹீலியம் பலூன்[/size] இப்போதெல்லாம் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் வீட்டில் ஏதாவது விழா என்றால் ஹீலியம் வாயு நிரபப்பட்ட பலூன்களை வாங்கி ஆங்காங்கு கட்டி விடுகிறார்கள். சென்னை உட்பட பெரிய நகரங்களில் இவ்வகை பலூன்களை விற்பதற்கென ஏஜன்சிகள் உள்ளன். இவை பார்ட்டி பலூன்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் மேலை நாடுகளில் கேட்கவே வேண்டாம். விதவிதமான ஹீலியம் பலூன்கள்.விலங்குகள் உருவத்தில் பெரிய பெரிய பலூன்கள், உலோகப் பூச்சு கொண்ட பல வித வர்ணம் தீட்டப்பட்ட பலூன்களும் உண்டு. ஹீலியம் என்பது ஒரு வகை வாயு. அது தீப்பிடிக்காதது. அந்த வாயு நிரப்பப்பட்ட பலூனின் நூலை விட்டால் அது உயரே …
-
- 3 replies
- 1.5k views
-
-
சுமாத்ரா தீவு பூமியதிர்ச்சிகள் இந்து சமுத்திர தட்டு இரண்டாக பிளவடைவதற்கான சமிக்ஞை By General 2012-09-28 10:18:06 சுமாத்ரா கடற்கரைக்கு அப்பால் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய தொடர் பூமியதிர்ச்சிகள் இந்து சமுத்திர தளத்தில் பிளவு ஏற்பட்டுள்ளமைக்கான சமிக்ஞைகளாக உள்ளதாக ஆய்வாளர்கள் ௭ச்சரித்துள்ளனர். மேற்படி பூமியதிர்ச்சிகளின் போதான அதிர்வுகளை பகுப்பாய்வு செய்த ஆய்வாளர்கள் 8.7 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சிகளின் போது சமுத்திர அடித்தளத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர். இது இந்து சமுத்திர மற்றும் அவுஸ்திரேலிய கடல் அடித்தட்டு இரண்டாக பிளவடைவதற்கான சமிக்ஞையாகவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ௭னினும் மேற்படி சமுத்திர அடித்த…
-
- 0 replies
- 612 views
-
-
[size=1]Wed,Sep 26, 2012. By Sukkran [/size] Evernote Skitch எனப்படுவது அப்பிளின் தயாரிப்புக்களான ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளாகும். இம்மென்பொருளானது விசேட பொருட்கள், அம்புக்குறிகள், ஓவியங்கள், மற்றும் சிறுகுறிப்புக்களின் உதவியுடன் புகைப்படங்களை மெருகூட்டுவதற்காக பயன்படுத்தப்படுவதாகும். இதனை அப்பிளின் ஐ டியூன்ஸ் இணையப்பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.
-
- 0 replies
- 1.2k views
-
-
லண்டன்: தற்போது உலகம் சந்தித்து வரும் காலநிலை மாற்றம் மூலம் வரும் 2030ம் ஆண்டிற்கு உலகில் 10 கோடி பேர் பலியாகலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது. பல்வேறு காரணங்களால் உலகின் காலநிலையில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹஸ் விளைவு பாதிக்கப்பட்டுள்ளதால், உலகின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் துருவ பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது அதிகரித்து, கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக பூமி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் டாரா என்று மனிதாபிமான அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகில் உள்ள 184 நாடுகளில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு …
-
- 0 replies
- 1k views
-
-
உலகச் சந்தையில் தமிழ் மூளைக்கு மதிப்பு அதிகம் என்பதை நிரூபித்து இருக்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சிவராஜ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். தற்போது இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப்’தான் திருப்பூரின் ஹைலைட். பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக் ஷா. புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு…
-
- 4 replies
- 931 views
-
-
இது சனி கிரகத்தின் அரிய படமாகும். சனி கிரகம் சூரியனை மறைத்தபடி இருந்த கட்டத்தில் காசினி விண்கலம் மறு புறத்திலிருந்து இப்படத்தை எடுத்தது. சனி கிரகத்தின் வளையங்கள் ஒளிருவதைக் கவனிக்கவும். படம் நன்றி: நாஸா வருகிற நாட்களில் சனிக் கிரகம் மீது விசேஷ ஆர்வம் காட்டப்படும். காரணம் சனிப் பெயர்ச்சி. ஜோசியர்களின் கணக்குப்படி சனி கிரகம் டிசம்பர் 21 ஆம் தேதி துலா ராசிக்குச் செல்கிறது. தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் சனிப் பெயர்ச்சியின் பலன்கள் அடங்கிய சிறு புத்தகங்கள் பெட்டிக் கடைகளிலும் தொங்கும். நாளிதழ், வார மற்றும் மாத இதழ்களில் சனிப் பெயர்ச்சியின் பலன்கள் பத்தி பத்தியாக இடம் பெற்றிருக்கும். சூரிய மண்டலத்தில் சூரியனை சுற்றும் கிரகங்களில் சனி முக்கியமான ஒன்றாகும்…
-
- 13 replies
- 2k views
-