Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இந்த வீடியோவை அவசியம் முழுவதும் பார்க்க வேண்டும். ஸ்னைப்பர்கள் சுட்டதாக சொல்லப்படுவதைவிட பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது

  2. மங்களூர் பாஜ்பே விமான நிலையத்தில் காட்டெருமை நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மங்களூர் மாநகரில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் பஜ்பே விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. நேற்று காலை 9 மணியளவில் விமான ஓடுபாதையில் காட்டெருமை ஒன்று திடீரென புகுந்து தறிகெட்டு ஓடியது. அதை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக விமான சேவையை ரத்து செய்தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். வன அதிகாரிகள் விமான நிலையம் வந்தனர். பஜ்பே விமான நிலையம் அடர்ந்த வனப்பகுதியில் மலை மீது அமைக்கப்பட்டு உள்ளதால், காட்டெருமை எங்கு பதுங்கியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் போராடி எரிபொருள் நிரப்பும் நி…

  3. பிருத்தாணியா வாழ் தமிழர்களே! உங்கள் மனச்சாட்சியுடன் நாங்கள் யார்? எங்கள் அடையாளம் என்ன? என்பதை ஒரு நிமிடம் சிந்தித்துப்பார்போம் அன்று அடையாள அட்டைகளை காட்டி காட்டியே எங்கள் அடையாளங்களை தொலைத்தவர்களாய் அகதிகளாகி இலங்கைத்தீவுக்குள் சுதந்திரமாக வாழ வழியற்றவர்களாகி சொந்த வீடு வாசல் சொந்த பந்தம் ஏன் எத்தனையோ உயிர்களைக்கூட பலிகொடுத்து அந்த மாங்கனித்தீவை விட்டு வெளியேறி வந்தோம் ஆனாலும் கூட பரந்த உலகில் சுதந்திரமாக இறக்கைகளை விரித்துப்பறப்பதற்க்குக்கூட இயலாது இறக்கைகள் வெட்டப்பட பறவைகளாய் கள்ளத்தனமாகவும் சட்டவிரோதமாகவும் கடல் அலைகள் அழைத்துச்சொல்லும் திசைகள் நோக்கி உயிரையே பணயமாக வைத்து இன்று எங்கெல்லாமோ வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாங்கள் அகதிகளாய் வந்தால் கூட யாருக்க…

  4. மஹிந்தவுக்கு எதிராக கூட்டுச்சதி – நாடுகடந்த தமிழீழ அரசுடன் அமெரிக்க அர சின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் January 17, 2015 இந்திய அரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஏன் விலகிக்கொண்டது என்று பார்க்கின்றபொழுது, பல தரப்புக்களாலும் இந்தியா தமக்கு துரோகம் இழைத்துவிட்டது, இந்தியாவை நம்புவது மண்குதிரையில் ஏறுவதற்கு சமன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவற்றுக்கான காரணம் என்ன? இந்தியா இலங்கையின் அண்மைய நாடு மட்டுமன்றி பண்டமாற்று வியாபார காலம் தொடக்கம் நல்லதொரு நிலைப்பாட்டினை கொண்டிருந்த நாடா கும். அமெரிக்க அரசின் திட்டத்தின் படியே இறுதிக்கட்டத்தில் இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் இலங்கைக்கெதிராக வாக்களித்ததன் பின் புலமும், ஆதரவு த…

  5. முட்­டைக்குக் காவல் போட்டதால் முரண்­பட்ட சபை உறுப்­பி­னர்!! முட்­டைக்குக் காவல் போட்டதால் முரண்­பட்ட சபை உறுப்­பி­னர்!! யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­றது. உறுப்­பி­னர்­க­ளுக்­கான மதிய உணவு வழங்­கும் இடத்­தில் முட்­டைக்­கும், இறைச்­சிக்­கும் மாந­கர சபை உத்­தி­யோ­கத்­தர்­கள் காவ­லி­ருந்­த­னர். அத­னால் சீற்­ற­மை­டைந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர் ஒரு­வர் சீறிப் பாய்ந்­தார். அந்த இடம் சிறிது பர­ப­ரப்­பா­னத…

  6. ‘சிவபெருமானான கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்’: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு பேஸ்புக்கில் வைரவான புகைப்படம் - படம்உதவி: பேஸ்புக் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான்கானை கடவுள் சிவனைப் போல் சித்தரித்து வெளியிட்ட படத்தால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டு பெரும் அமளி ஏற்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த 8-ம் தேதி பிடிஐ கட்சியின் எம்.பி. தனது பேஸ்புக் பக்கத்தில் கடவுள் சிவன் உருவத்தில் இருக்கும் இம்ரான்கான் …

  7. அப்போது ரகத் ஹுசைனுக்கு வயது வெறும் 15 தான். திருமணத்தின் போது, இராக் மற்றும் இரானுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. 1996ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது 25ஆம் வயதில் ரகத் தனது குடும்ப உத்தரவின் பேரில் விவாகரத்து பெற்றார். விவாகரத்து பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது கணவர் கொல்லப்பட்டார். ரகத் ஹுசைன், சதாம் ஹுசைனின் ஒன்றுவிட்ட சகோதரர் ஹுசைன் கெமையில் அல் மஜித்தை மணந்தார். அப்போது ஹுசைன் கெமையில், சதாம் ஹூசைனின் பாதுகாப்புப்பணியில் இருந்தார். சதாமின் இரண்டாவது மகள் ராணா சதாமின் திருமணம், ஹுசைன் மெமையிலின் சகோதரர் சதாம் கெமையில் அல் மஜித்துடன் நடந்தது. சதாமின் இரண்டு மகள்களின் திருமணம், விவாகரத்து மற்றும் கணவர்களின் கொலை பற்றிய கதை மிகவும் சோகமான…

  8. அமெரிக்க சரணாலயத்தில் அபூர்வ ஆந்தை திருட்டு! ரூ.2.5 லட்சம் மதிப்புமிக்கதென தெரிவிப்பு! [Friday, 2014-02-07 13:15:37] அமெரிக்க பறவைகள் சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள அபூர்வ வகை ஆந்தை ஒன்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அமெரிக்காவிலுள்ள 'யாக்கிமா' மாகாணத்தில் உள்ளது ரேப்டர் ஹவுஸ் பறவைகள் சரணாலயம். இங்கு பல அபூர்வ பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சரணாலயத்தில் இருந்து அபூர்வ வகை ஆந்தை ஒன்று கடந்த வாரம் திருடப்பட்டுள்ளதாக சரணாலய நிர்வாகி உறுதி செய்துள்ளார். திருடர்கள் ஆந்தையைக் குறி வைத்து திருடியுள்ளார்கள் எனவும், அதன் அருகிலிருந்த மற்ற அரிய பறவைகள் திருடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருடப்பட்…

  9. ஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களுக்கு செல்லும் பெண்கள் தலையில் துணியால் மூடிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் அவர்கள் மீது நன்னடத்தை போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சிலர் தங்கள் தலையை மொட்டையடித்து அழகை குறைத்து கொண்டு பர்தா அணியாமல் வலம் வருகின்றனர். இந்த நிலையில் தங்களது மனைவிகளுக்கு ஆதரவாக கணவன்மார்களும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மனைவியுடன் வெளியே செல்லும் ஆண்கள் தங்கள் தலையை துணியால் மறைத்து சென்றனர். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. http://www.seithy.…

  10. தாம் எந்த மதத்திடனும் இணைந்தவர்கள் இல்லை என அடையாளப்படுத்துபவர்கள் மூலம் ஒன்பது நாடுகளில் மதம் இல்லாமல் போய்விடும், இவ்வாறு ஆய்வு மூலம் ஆராய்ச்சியாளர்கள், கூறியுள்ளார்கள். இந்த ஒன்பது நாடுகளிலும் எடுக்கப்பட்ட சனத்தொகை புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட "கணித எதிர்வுகூறல்" (mathematical model) மூலம் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இந்த நாடுகளில் மக்கள் தாம் எந்த மதத்திடனும் தம்மை இணைத்தவர்கள் அல்ல என சனத்தொகை கணிப்பில் கூறுவார்கள் என்பதே இந்த எதிர்வுகூறலாகின்றது. கீழ்வரும் நாடுகளே அவை: அவுஸ்திரேலியா ஆஸ்திரியா கனடா செக் குடியரசு பின்லாந்து அயர்லாந்து நெதர்லாந்து நியூசிலாந்து சுவிற்சலாந்து Religion may…

    • 0 replies
    • 541 views
  11. புதுடெல்லி, உலகம் முழுவதிலும் உள்ள நகரங்களில் மெர்செர் என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் உள்ள சிறந்த நகரங்களில் ஐதராபாத் நகரம் தான் வாழ்தற்கு சிறந்த நகரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு வாழ்வதற்கு சிறந்த காரணிகளான வாழ்க்கை தரம், மற்றும் சுற்றுசூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளபட்டதாக ஆய்வு கூறியுள்ளது. ஐதராபாத்தில் சர்வதேச விமானங்கள் மற்றும் பொதுசேவை வசதிகள் அதிகம் காணப்படுகிறது. ஆங்கிலம் சரளமாக பேசும் பள்ளி மாணவ மாணவிகள் சர்வதேச பள்ளி கூடங்கள் இங்கு உள்ளது. எனவே உலக வாழ்க்கைக்கு சிறந்த தரம் கொண்ட நகரம் ஐதராபாத் தான் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. http://www.dailythanthi.com/News/India/2015/03/05141801/Mercers-Quality-of-Livin…

  12. திடீரென இறந்து விழும் காகங்கள் ! ரங்களில் இருக்கும் காகங்கள் திடீரென இறந்து விழுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். காகங்கள் இறப்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து பிரதேச செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டி, வெலிகந்தை, நெலும்வெவ ஆகிய கிராமங்களில் இன்று (16) காலை முதல் காகங்கள் அதிகளவில் இறந்து வருவதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர். கூட்டமாக இறக்கும் காகங்கள் பிரதேசத்தில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதாகவும் மரணிக்கும் தருவாயில் இருக்கும் காகங்களுக்கு தேங்காய் பால் கொடுத்து அவற்றின் உயிர்களை காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும் கிராமவாசிகள் கூறியுள்ளனர். https:/…

  13. இறைச்சிக்கறியில் எலி - பங்களாதேஷ் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு _ வீரகேசரி இணையம் 12/8/2010 2:37:31 PM பங்களாதேஷில் உள்ள பிரபல பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையொன்றில் பரிமாறப்பட்ட கோழி இறைச்சிக்கறியில் எலியொன்றின் தலை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திங்கட்கிழமை பகல் மாணவர் ஒருவர் உணவு உட்கொண்டிருந்த வேளையில் தனக்கு பரிமாறப்பட்ட கோழிக்கறியில் எலியின் தலை இருப்பதை அவதானித்துள்ளதுடன் உடனடியாக சுகயீனத்திற்கும் உள்ளாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ…

  14. முற்பிறவியில் கோடாரியால் வெட்டிக் கொன்றவனைக் காட்டிக் கொடுத்த 3 வயது 'சிரிய' குழந்தை Posted by: Jayachitra Updated: [iST] டமாஸ்கஸ்: சிரியாவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தன்னை முற்பிறவியில் கொலை செய்தவனைக் காட்டிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சிரியாவில் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியை சேர்ந்த 3 வயது ஆண் குழந்தை பிறக்கும் போதே தலையில் சிறிய கோடு போன்ற அடையாளத்துடன் பிறந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் தங்களது முற்பிறவியை நினைவில் கொண்டிருப்பார்கள் என்பது ட்ருஸ் தனி இனக்குழுவின் நம்பிக்கையாம். அதை உண்மையென்று நிரூபிக்கும் விதமாக அந்த சிறுவன் பேசும் வயதை எட்டியவுடன் தனது முற்பிறவி ரகசியங்களை கூறியுள்ளான். அதன்படி, முற்பிறவியில் தன்னுடைய…

  15. சிறுவர்கள், தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்தில் தடை கால்பந்து விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு ஸ்கொட்லாந்து அரசாங்கம் தடை விதிக்கவுள்ளது. கால்பந்து விளையாட்டுக்கும் முதுமை மறதிக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த அச்சம் காரணமாகவே இந்தத் தடை நடைமுறைக்கு வரவுள்ளது. முன்னாள் கால்பந்து வீரர்கள் மூளைச்சிதைவு நோயால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகக் கண்டறிந்த அறிக்கை ஒன்று கடந்த ஒக்ரோபரில் வெளியானதையடுத்து சிறுவர்கள் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது இந்த மாத இறுதியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபடவுள்ள 12 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தலையினால் பந்தை அடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. …

  16. லாகூர் சதிவழக்கு சம்பந்தமான தீர்ப்பில் காந்தி நடந்து கொண்ட விதம், பிரிட்டிஷ் அரசோடு கள்ளக் காதல் கொண்டு உறவாடிய விசயங்கள் ஆகியவை சமீபகாலத்தில் கூட அம்பலமாகியுள்ளது. மத்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதற்காகவும், லாலா லஜபதிராயை அடித்துக் கொன்ற பிரிட்டிஷ் போலீசு அதிகாரி சாண்டர்சைச் சுட்டுக் கொன்றதற்காகவும் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற தோழர்களுக்கு லாகூர் சிறைச்சாலையிலே தூக்குத் தண்டனை காத்திருந்தது. இதே நேரத்தில் 1931ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலனி ஆட்சியின் தலைவனான இர்வின் என்பவனுக்கும் காந்திக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. (காந்தி இர்வின் ஒப்பந்தம்) இவ்வொப்பந்தப்படி “சுயராச்சியம்’ சம்பந்தமான சில சரத்துக்களையும், “இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான…

  17. மத்திய பிரதேசத்தில்... கிணற்றுக்குள் விழுந்த, 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்! மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குழந்தையொன்று கிணற்றுக்குள் விழுந்துள்ளது. குறித்த குழந்தையை மீட்பதற்காக நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை சுற்றி இருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர். அவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதம் இரு…

  18. நோமொபோபியா என்னும் பீதியால், 66 சதவீதம் பேரால் செல்போனை ஒரு வினாடிகூட பிரிந்திருக்க முடியாது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. முன்பெல்லாம், வீட்டிலிருந்து ஒருவர் வெளியே புறப்படும் போது, கண்ணாடி, பணம், பேனா என எப்போதும் தேவைப்படக் கூடிய பொருட்களை எடுத்து செல்வார்கள். எதுவும் மறந்து விடக் கூடாது என்பதற்காக பல முறை யோசித்து பார்த்து விட்டு படியிறங்குவார்கள். ஆனால், இன்றைய நவீன உலகில் இந்த பட்டியலில் செல்போன் முதலிடம் பிடித்துள்ளது. இங்கிலாந்தில் செக்யூர் என்வாய் அமைப்பு, செல்போன் பயன்படுத்துவோர் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதில் வெளியான தகவல்: செல்போன் இல்லாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று …

  19. ஆளில்லா விமானம் ஒன்றின் மூலமாக இந்தியாவின் பல்வேறு இடங்களைப் படம் பிடித்திருக்கிறார் புகைப்படக் கலைஞர் அமோஸ் சாப்பல்- இந்தப் படத்தில் மும்பையின் சாசூன் துறைமுகத்தில் மீன்பிடிப் படகுகள் சில. வாரணாசியில் காலை நேரத்தில் கங்கை நதி-- " இந்தியாவில் பல மிக அழகிய கட்டிடங்கள் இருக்கின்றன. அவைகள் பல நூற்றாண்டுகளாகவே இது போல வானிலிருந்து பார்க்கப்படவில்லை என்பதால், இது போன்ற வானிலிருந்து புகைப்படங்களை எடுப்பது உற்சாகத்தைத் தருகிறது" என்கிறார் புகைப்படக்கலைஞர் அமோஸ் சாப்பல் உலக அதிசயங்களில் ஒன்றாக அடிக்கடி வர்ணிக்கப்படும் 17ம் நூற்றாண்டு வெண் பளிங்கு தாஜ் மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹானால், அவரது மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டப்பட்டது. பிரசவ நேரத்தில் அவர் இறந்தார். இந்த…

    • 0 replies
    • 539 views
  20. விமானம் கண்டுபிடித்தது யார் ? 1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில.இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல. 1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கற…

  21. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை இந்திய மத்திய அரசு இதுவரை காலமும் பலிக்கடாவாக்கியே வந்துள்ளது. தனது துறை சாராத ஒரு பதவிக்கு அன்று இந்திய மத்திய அரசு நியமித்தது. அறிவியலில் குறிப்பாக அணு சக்தி துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்று அத்துறையில் பலகாலமாக பணியாற்றிய கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக்க இந்திய மத்திய அரசிற்கு அன்று பல காரணங்கள் இருந்தது. கலாம் அவர்கள் ஒரு இஸ்லாமிய மதத்தவர் என்பது ஒரு காரணம். அணுசக்தி துறையில் பாண்டித்துவம் உடையவரை குடியரசுத் தலைவராக்குவதனூடாக உலகநாடுகளின் நம்பிக்கையைப் பெற்று விடலாம் என்கிற கருத்து அன்று இந்திய அரசிற்கு இருந்தது. இந்தியாவின் அணுகுண்டுச் சோதனைக்குப் பின்னர் உலகநாடுகள் இந்தியா மீது விதித்திருந்த தடை…

  22. தன்னை துரத்தி வந்த நாய்களிடமிருந்து தப்புவதற்காக மின் கம்பமொன்றில் ஏறிய கரடியொன்று அந்தக் கம்பத்தில் தன்னை மறந்து உறங்கி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது. சஸ்கட்சிவான் பிராந்தியத்தில் ஷெல்புறூன் எனும் இடத்திற்கு அண்மையிலுள்ள மின் கம்பத்திலேயே அந்தக் கரடி உறங்கியுள்ளது. அந்தக் கரடியை மின் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாப்பாக கீழே இறக்குவதற்கு பிராந்திய மின்சார ஊழியர்கள் பெரும் போராட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. virakesari

    • 0 replies
    • 539 views
  23. கனடாவில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் டொரண்டோவின் பியர்சன் விமான நிலைய ஊழியர் ஒருவர் தனது பணி நேரத்தில் லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கையில் சிக்கியுள்ளார். டொரண்டோ பியர்சன் விமான நிலையத்தில் பணிபுரியும் ஆண் ஊழியர் ஒருவர், தனது மேஜையின் கீழ் லேப்டாப்பில் ஆபாச வீடியோ பார்த்துக்கொண்டிருந்ததை, ஒருவர் பார்த்து அதை தனது மொபைல் போனில் படமெடுத்து, கனடாவின் முன்னணி பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த முன்னணி பத்திரிகை தனது இணையதளத்தில் உடனே இந்த செய்தியை வெளியிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பியர்சன் விமான நிறுவனம், அந்த ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. விமான நிலைய உயர் அதிகார் Scott Ar…

  24. இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கேல் ஜாக்சன் ஆவி! வாஷிங்டன்: மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவர் உயிரை விட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள பெவர்லி ஹில்ஸ் வீட்டில் அவரது ஆவி உலவுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். உலாவுவது மட்டுமல்ல இரவு நேரத்தில் பாடவும் செய்கிறதாம். இதனால் அப்பகுதிவாசிகள் அச்சத்தில் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் உயிரு…

  25. ஷாங்காய்:சீனாவில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி அமோகமாக உள்ளது. இங்கு வாழும் மக்களின் பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. ஷாங்காயில் வசிக்கும் பெரும்பாலானோர் செல்வந்தர்களாக மாறி வருகின்றனர். இதனால் அங்கு திருமணங்களை மிகவும் விமரிசையாக நடத்துகின்றனர். ஆனால், திருமணங்களை எளிமையாக நடத்துங்கள் என்று அரசு தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், ஷாங்காய் மாகாணம் ஷியாங்ஜி நகரை சேர்ந்த செல்வந்தர் ஒருவர், தான் மணக்க போகும் பெண்ணுக்கு கட்டுக் கட்டாக பணம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தான் மணக்க போகும் மணமகளுக்கு மூங்கில் கூடைகள், பெட்டிகளில் கட்டுக் கட்டாக பணத்தை அழகாக அடுக்கி, அவற்றை விலை உயர்ந்த சொகுசு காரில் பணிப்பெண்கள் சூழ ஊர்வலம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.