செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
காலி - பிலான பகுதியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழந்தார். வீட்டில் உள்ள கழிவறை குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முயன்ற போது நேற்று (12) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். 50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmgonwccm00yjqplpn4ia8856 https://www.facebook.com/reel/1324971306092243
-
- 1 reply
- 176 views
- 1 follower
-
-
திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிறது ஓர் ஆய்வு. ஆனந்தமான திருமண உறவுக்கான ரகசியங்கள் எவை என்பது குறித்து 4 ஆயிரம் தம்பதியரிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். எப்போதெல்லாம் மகிழ்ச்சியாகவும், மிக மகிழ்ச்சியாவுகம் இருக்கிறீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அவர்கள் அளித்த பதில்கள் மூலம் ஆனந்தமான திருமண பந்தம் எப்போதும் நீடிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுத்துள்ளனர் என்று 'தி டெலகிராப்' இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவையாவன: * நாளொன்றுக்கு 4 முறையேனும் கட்டியணைக்க வேண்டும்.அதாவது, வீட்டை வ…
-
- 1 reply
- 964 views
-
-
FILE உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்ட சுரங்க இரயில் பாதைக்கு இன்றுடன் 150 வயது ஆகிறது. உலகின் முதல் இரயில் சுரங்க பாதை லண்டனில் அமைந்துள்ளது.1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 தேதி துவங்கப்பட்ட இந்த இரயில் பாதைக்கு இன்று 150 வயதாகின்றது. ஆரம்பத்தில் மிகக் குறைந்த தூரத்தில் உருவாக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை படிப்படியாக விரிவடைந்து இன்று 402 கி.மீட்டர் நீளத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. லண்டன் டியூப் என்றழைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையின் வழியாக ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி பேர் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1301/10/1130110031_1.htm
-
- 1 reply
- 631 views
-
-
டுபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான பேர்ஜ் கலிஃபா கட்டடத்திலிருந்து குதித்து இரு 'ஸ்கைடைவ்வர்கள்' (ஆகாயத்தில் கரணமடிப்பவர்கள்) துணிகர கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெட் பியூஜென் மற்றும் வின்ஸ் ரெப்பெட் ஆகிய இருவரே இந்த மெய்சிலிர்க்க வைக்கும் சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். கட்டடங்களிலிருந்து குதிக்கும் பிரிவிலே கடந்த திங்கள் கிழமை காலையில் இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்த தகவல்கள் மற்றும் வீடியோ நேற்றைய தினமே வெளியிடப்பட்டிருந்தது. இச்சாதனைக்கான பயிற்சிகளை குறித்த இருவரும் ஸ்விட்சர்லாந்தில் பேர்ஜ் கலிஃபா கட்டடத்தின் உயரமுடைய மலைப்பகுதியில் ஒரு வாரம் மேற்கொண்டுள்ளனர். 828 மீற்றர் உயரமான பேர்ஜ் கலிஃபா கட்டடத்தின் உச்சிய…
-
- 1 reply
- 489 views
-
-
எதிர்வரும் இரண்டாம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் அங்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு பிரித்தானியப் பொலிசாரிடம் ஏற்பாட்டாளர்களால் அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கான அனுமதி தற்போதைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், இன்று லண்டன் நகரமெங்கும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பகிரப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவற்றுக்கு மேலதிகமாக பாரிய பதாகைக…
-
- 1 reply
- 590 views
-
-
அகதிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்: அரசு அதிரடி முடிவு [ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 07:09.19 மு.ப GMT ] ஜேர்மனியில் தகுதியற்ற அகதிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. Bremen நகரில், கடந்த வெள்ளியன்று Christian Democrat (CDU) கட்சியை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் Christian Democrat (CDU) கட்சியினர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த உள்துறை பாதுகாப்பு அமைச்சரான Thomas de Maizière, தகுதியற்ற விண்ணப்பங்களை நிராகரிப்பதுடன் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். ஜேர்மனி குடிமக…
-
- 1 reply
- 280 views
-
-
Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 11:44 AM போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் என நினைத்து தொற்றுநீக்கியை அருந்தியதால் இந்திய அணிவீரர் மயங்அகர்வால் கடும் உடல்நிலை பாதிப்பை எதிர்கொண்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மயங்அகர்வால் ரஞ்சிடிரொபி போட்டிகளிற்காக விமானத்தில் பயணிக்கவிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்டிகோவிமானசேவையின் விமானத்தில் மயங்அகர்வால் போத்தலில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர் என நினைத்து அவர் தொற்றுநீக்கியை அருந்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது அவர் வாந்தியெடுத்தார் இதனை தொடர்ந்து அவரை விமானத்திலிருந்து இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிரகி…
-
-
- 1 reply
- 527 views
- 1 follower
-
-
போலீசுக்கு, 10 நாள் லீவு கொடுக்க ரூ.2000 லஞ்சம்! இன்ஸ்பெக்டர் கைது. வேலூர்: வேலூர் மத்திய சிறையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள ஏட்டுவிடம் விடுமுறை வழங்க ரூ.2000 லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் இருந்து சமீபத்தில் ஏட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். வேலூர் மத்திய சிறையில், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் பாதுகாப்புப் பணியில் இவர் தற்போது ஈடுபட்டு வருகிறார். திருமூர்த்தி, தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் 10 நாட்கள் லீவு வேண்டும் என இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டரோ ஒ…
-
- 1 reply
- 252 views
-
-
நேற்றைய ...... எமக்குப் போட்டியாக .... இன்று கொழும்பில் உள்ள சில சிங்கள ஊடகங்கள் முல்லைத்தீவை சிங்கள இராணுவம் கைப்பற்றி விட்டதாக விடுகிறது!!
-
- 1 reply
- 927 views
-
-
யாழ். பல்கலை மாணவிகள், தங்கியிருந்த வீட்டின் மீது... தாக்குதல்! யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதக் சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த வீட்டில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1282208
-
- 0 replies
- 155 views
-
-
உக்ரேனிய சிப்பாயின் நெஞ்சிலிருந்து வெடிக்காத கிரனேட் அகற்றப்பட்டது By SETHU 16 JAN, 2023 | 02:58 PM உக்ரேனிய சிப்பாய் ஒருவரின் நெஞ்சுக்குள்ளிருந்து, வெடிக்காத கிரனேட் ஒன்றை அந்நாட்டு மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். சிப்பாயின் இதயத்துக்கு அருகில் இந்த கிரனேட் சிக்கியிருந்தது. இந்த கிரனேட் எந்த வேளையிலும் வெடிக்கும் அபாயம் இருந்ததால், இரத்தம் வெளியேறுவதை மின்சாரத்தால் கட்டுப்படுத்துவதை தவிர்த்து இச்சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக உக்ரேனிய இராணுவ மருத்துவர்களின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய பாதுகாப்புப் படைகளின் மிகுந்த அனுபவமுள்ள சத்திரசிகிச்சை நிபுணர் மேஜர்…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
பீஜிங்: சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் தங்கள் உயிரணுக்களை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்வதில் தீவிரமாக உள்ளனர். இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு அங்கு ஆன்லைன் விந்தணு விற்பனை அமோகமாக அதிகரித்துள்ளது. பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின், துணை இணையதளம், சீனாவில் தாய்ப்பாலில் செய்யப்பட்ட சோப் உட்பட, சமூகத்தில் அதிகம் புழக்கம் இல்லாத பல வித்தியாசமான பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த இணையதளம் சமீபத்தில் புதிய முயற்சியாக, ஆண்களின் விந்தணுவைக் கேட்டு தனது வலைதளத்தில் விளம்பரம் கொடுத்திருந்தது. இந்த விளம்பரம் வெளியான 72 மணி நேரத்திலேயே 22 ஆயிரத்து 17 பேர் தங்கள் பெயர், அடையாள அட்டை விவரங்கள் உட்பட முழு விவரங்களையும் கொடுத்து விந்தணு தானத்திற்கான தன்னார்வலர்களாக பதிவு…
-
- 0 replies
- 326 views
-
-
இந்தியாவில் பெருமளவில் விற்பனையாகும் தொழிற்சாலை உற்பத்தி உணவுப் பொருட்களில் உப்பும் கொழுப்பும் இனிப்பும் அளவுக்கதிகமாக இருப்பதாகவும், இவற்றை அதிகம் உண்டால் இளைஞர்களுக்கு பெரும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என்றும் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. ஜங்க் புட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற உடல் நலத்துக்கு தீங்கான உணவு வகைகளில், trance fat என்ற எளிதில் கெட்ட கொழுப்பாக மாறக்கூடிய கொழுப்பும், உப்பும், இனிப்பும் மிக அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இவற்றை உண்ணும் வழக்கம் உடையவர்களுக்கு உடல் எடை அளவுக்கதிகமாகக் கூடிப்போகவும், இருதயக் கோளாறு, நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்கள் வரக்கூடிய ஆபத்து அதிகம் என்றும்…
-
- 0 replies
- 937 views
-
-
1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர். லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பிரான்சிலும், ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்கள் நடக்கின்றன. அந்த தொழிலாளர்கள் கண்ணீர் சிந்துகின்றனர். இந்தியாவிலும் சீனாவிலும் கூட சில இடங்களில் இந்தக் காட்சிகள் நடக்கின்றன. அந்த 1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் கண்ணீர் சிந்திய நாள். அவர்கள் அனைவரின் கவனமும் சோவியத் ரசியாவை நோக்கி இருந்த…
-
- 0 replies
- 2.6k views
-
-
[size=4]கண்டெய்னர் ஒன்றில் சிக்கிக் கொண்ட 5 மாத பூனை குட்டி, பெருங்கடல் வழியாக 3 வாரம் மிதந்தபடியே சீனாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்திற்கு உயிருடன் வந்து சேர்ந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=4]இந்த 3 வார கடல் பயணத்தின் போது, உணவு எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் கடல் பயணம் செய்த இந்த பூனைக்குட்டியை லாஸ் ஏஞ்சல்ஸ் கால் நடை மருத்துவமனை பராமரித்து வருகின்றது. ஹலோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பூனை குட்டி, மருத்துவமனைக்கு வரும் போது கண்கள் இருண்ட நிலையில் மூச்சு விட முடியாமல் அவதிப்பட்டது.[/size] [size=4]உடனே, அதை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மரணத்தில் இருந்து காப்பாற்றி விட்டோம். விரைவில் ஹலோ டிஸ்சார்ஜ் ஆகிவ…
-
- 0 replies
- 371 views
-
-
கொரோனா பரவுவதற்கு டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு காரணம் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது டெல்ல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் தான் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிகம் பரவி இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்முடைய பகுதியில் மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான் இந்தியாவில் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று பரவியது என பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது அந்த இளைஞர் தனது வீட்டின் வெளியே நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள்…
-
- 0 replies
- 409 views
-
-
அன்னமிட்ட கையை அபகரிக்க நினைத்த மீனிடமிருந்து ஒரு மனிதர் அலறி தப்பிய வீடியோ காட்சியை இப்போது பார்க்கலாம். florida- வில் உள்ள ஒரு கடற்கரைக்கு பொழுதை கழிக்க வந்த இந்த மனிதர்,மீன் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட பலகையில் படுத்துக்கொண்டே மீனுக்கு உணவு கொடுக்க நினைத்தார். ஆனால்,நடந்ததோ வேறு. கிட்ட தட்ட 50 கிலோ எடைகொண்ட இந்த மீனிடமிருந்த தப்பிக்க மனிதர் படாதபாடு பட்டுவிட்டார்.அவரது சக நண்பரால் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சி இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்த இந்த வீடியோ காட்சி. தற்போது அதிகமான நபர்களால் விரும்பி பார்க்கப்பட்டும் வருகிறது. ஒருவேளை இவர் கொடுத்து சாப்பாடு போதாமையால் அவரின் கையை கடித்து திண்ண ஆசைப்பட்டதோ என்னமோ.. இந்த மீன்
-
- 0 replies
- 497 views
-
-
ஈரானில் நீர் பற்றாக்குறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கொலை தென்மேற்கு ஈரானில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்த்து இரண்டாவது நாளாக இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்செயலாக வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களால் குறித்த நபர் தாக்கப்பட்டதாக குஜெஸ்தான் மாகாணத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு ஐ.ஆர்.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் ஈராக்கின் எல்லையில் அமைந்துள்ள குஜெஸ்தானில் உள்ள அரபு சிறுபான்மையினத்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த மரணத்திற்கு பாதுகாப்பு படையினர்தான் காரணம் என எதிர்க்கட்சி வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஈரானில் நிலவும் கடுமையான வறட்சி…
-
- 0 replies
- 224 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசு, உண்ணி போன்ற பிற பூச்சிகளைப் போல் கரப்பான் பூச்சிகள் நோய்களைப் பரப்புவதில்லை. நமது ரத்தத்தைக் குடிப்பதோ, உடலிலுள்ள தோலைச் சாப்பிடுவதோ கிடையாது. கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கரப்பான் பூச்சிகள். நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு அதனுடனான முதல் அனுபவம், மறக்கமுடியாத, கிட்டத்தட்ட மோசமான அனுபவமாகவே இருந்திருக்கும். எனக்கும் அது மோசமாகவே இருந்தது. அப்போது எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும். வீட்டின் சமையலறையில் இருந்த எதோவொரு பொருளை எடுத்தபோது, அதற்கு…
-
- 0 replies
- 418 views
- 1 follower
-
-
கமலா ஹாரிஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள அணில் விவகாரம்! அமெரிக்காவில் 4 நாட்களுக்கு முன்பு அணில் ஒன்று கருணை கொலை செய்யப்பட்ட விவகாரம் அந்நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளது. உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் பெரும்பாலான மக்களின் சமூக வலைத்தளப்பக்கங்களில் பீனட் என்ற அணிலை கருணை கொலை செய்ய விவகாரம் பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. நியூயோர்க் நகரை சேர்ந்த லோனோ என்பவர் பீனட் என்ற 7 வயதான அணிலை வளர்த்து வந்துள்ளார். அவர் குறித்த அணில் செய்யும் சேட்டைகள் மற்றும் குறும்பு தனங்களை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவேற்றி வ…
-
- 0 replies
- 784 views
-
-
இலங்கை அரசு தயாரித்து வெளியிட்ட நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை தமிழ் -சிங்கள நல்லுறவுக்கு முதலிடம் அளிக்கிறது. எனினும் இதற்கு முரணான நிகழ்ச்சி நிரலை அரசு தீவிரமாக நடைமுறைப் படுத்துகிறது. ஈழத் தமிழர்களுடைய தாய் மண் தொடர்ச்சியாக அபகரிக்கப் படுகிறது. தமிழர் மண்ணில் சிங்களக் குடியேற்றம் இராணுவ ஆதரவோடு நடத்தப்படுகிறது. இந்து மதக் கோவில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. சிங்களவர் ஒருவர் கூட வாழாத இடத்திலும் புத்த விகாரைகள் கட்டியெழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு வல்வெட்டித்துறைச் சந்தி விகாரை வடக்கு – கிழக்கை இராணுவ ஆட்சி மூலம் அடிமைப் படுத்தும் அரசின் அடிப்படை நோக்கம் பளிச்சென்று தெரிகிறது. இன விகிதாசரத்தை மாற்றி அமைக்கும் ஆயுதமாகச் சிங்களக் குடி…
-
- 0 replies
- 446 views
-
-
வசீகரமான தோற்றத்தால் பிரபலமான பிரித்தானிய பொலிஸ் அதிகாரி பிரித்தானிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது வசீகரமான தோற்றத்தினால் சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறார். ஜிம் கோல்வெல் எனும் இவர் பிரித்தானிய பொலிஸில் பிரதம பொலிஸ் அத்தியட்சகர் தர அதிகாரியாக விளங்குகிறார். இவர் டெவோன் பிராந்திய பொலிஸாருக்கு தலைமை தாங்க நியமிக்கப்பட்டமை குறித்து டெவோன் மற்றும் கோர்ன்வெல் பிரிவு பொலிஸார் தமது பேஸ் புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தனர். இத்தகவலுடன் இணைக்கப்பட்டிருந்த ஜிம் கோல்வெல்லின் புகைப்படத்தைப் பார்த்து பலர் சினிமா நடிகரின் தோற்றத்தில் ஒரு நிஜ பொ…
-
- 0 replies
- 369 views
-
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சிங்கப்பூர், மலேசியா உள்பட வெளிநாட்டு பக்தர்கள் வழிபட வருகிறார்கள். இவர்கள் தங்கள் நாட்டு ரூபாய் மற்றும் நாணயங்களை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகிறார்கள். இதனை அந்த நாட்டில் மாற்ற தேவஸ்தானம் பல கட்டங்களில் முயற்சி செய்தது ஆனால் ரூபாய் மதிப்பை விட அதனை மாற்றுவதற்கான நடவடிக்கைக்குரிய செலவு அதிகமாக இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனால் வெளிநாட்டு நாணயங்கள் கோவிலில் தேக்கமடைய தொடங்கியது. தற்போது கோவிலில் 40 டன் வெளிநாட்டு நாணயம் தேக்கமடைந்து உள்ளது. இதன் மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது. இதில் மலேசியா நாட்டு நாணயம் மட்டும் 4.7 டன் உள்ளது. அமெரிக்க டாலர் 300 கிலோ உள்ளது. இதனை இந்திய கரன்சிக்கு மாற்றுவது குறித்து ரிசர…
-
- 0 replies
- 451 views
-
-
ஷெரீ எச்செசன் 26 வருடங்களின் பின்னர் தனது தாயை சந்தித்தார் இலங்கையிலுள்ள தனது தாயை கண்டுபிடித்துத் தருமாறு முன்வைக்கப்பட்ட ஷெரீ எச்செசனின் கோரிக்கையை நியூஸ்பெஸ்ட் இன்று நிறைவேற்றியது. 26 வருடங்களின் பின்னர் தனது உண்மையான தாயை ஷெரீ எச்செசன் இன்று (14) சந்தித்தார். இலங்கையிலுள்ள தமது தாயை கண்டுபிடுத்துத் தருமாறு, சில வாரங்களுக்கு முன்னர் நியூஸ்பெஸ்டுக்கு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. ஐக்கிய இராச்சியத்தில் தொழில்நுட்பத் துறையில் பிரபலமான ஷெரீ எச்செசன் என்பவரே அந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார். இதற்கமைய நாம் முன்னெடுத்த உறவுத் தேடல் பயணத்தில கண்டறியப்பட்டவர், ஷெரீ எச்செசனின் உண்மையான தாய் என…
-
- 0 replies
- 301 views
-
-
கடவுள் பற்றியும், பேய் போன்ற அமானுஷ்ய சக்திகள் பற்றியும் என் அபிப்பிராயங்களும், அவற்றையொட்டிய என் கருத்துகளும் மாறுபட்டவை. நவீன இயற்பியலையும், குவாண்டம் இயற்பியலையும் முழுமையாக ஏற்றுக் கொண்டவன் நான். அதனால் கடவுள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய என் கருத்துகளுக்கு அறிவியல் சார்ந்த ஒரு விளக்கத்தை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவன். இன்று எனக்குக் கிடைக்கும் ஒரு விளக்கம், நாளை வேறு ஒன்றாகத் தன்னைப் புதுப்பித்துத் திருத்திக் கொள்ளலாம். அறிவியலுக்கும், மத நம்பிக்கைகளுக்குமிடையில் நூலிழை வித்தியாசம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எத்தனை ஆயிரம் வருடங்களானாலும், தன்னைப் புதிப்பித்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகள் மாறாமல் இருக்க, அறிவியல் தன்னை அந்தந்தக் கணத்திலேயே புதுப்பித்துக் கொள்…
-
- 0 replies
- 701 views
-