செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7107 topics in this forum
-
புகையிரத நிலைய நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைகள் கைவண்டி, குழந்தையுடன் புகையிரத தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் அடங்கிய காணொளியொன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள அதிவேக புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற இச்சம்பம் அடங்கிய காணொளியை, பிரிட்டன் போக்குவரத்து பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குழந்தையை கைவண்டியுடன் கொண்டு வந்து புகையிரத நடைபாதையில் நிறுத்தியுள்ள அக்குழந்தையின் தந்தை, புகையிரத நிலையத்தில் நின்றிருந்த வேறொரு குடும்பமொன்று, புகையிரத நடைப்பாதைக்கு வருவதற்கான உதவிகளைச் செய்துள்ளார். அந்நேரத்தில் அங்கு வீசிய கடுமையான காற்று காரணமாக குழந்தையின் கைவண்டியானது தானாகவே கட்டுப்பாட்டை மீறி புகையிரத தண்டவாளத்தில் போய் விழுந்துள்ளது. புகைய…
-
- 0 replies
- 380 views
-
-
உணவகமொன்றுக்கு குழந்தையுடன் சென்ற தம்பதியினரை அவ்வுணவக பணிப்பாளர் வெளியேற்றிய சம்பவமொன்று அமெரிக்காவில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. மேற்படி குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த அணையாடையில் (பெம்பஸ்) இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த உணவகத்தில் உணவு உட்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் செய்த முறைபாட்டை அடுத்தே குறித்த தம்பதியினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள பிரதர்ஸ் பீஸா எக்ஸ்பிரஸ் என்ற உணவக பணிப்பாளர்களே இவ்வாறு குழந்தையுடன் சென்ற தம்பதியை வெளியேற்றியுள்ளனர். மிரிண்டா சோவோர்ஸ் என்ற பெண், தனது நான்கு மாத சிசுவான ரீகன் மற்றும் 4, 8 வயது மகள்மாரான லோரன், கெட்டிலின் ஆகியோருடன் இவ்வுணவகத்துக்கு சென்றுள்ளார். இதன்போது தனது நான்கு மாத குழந்த…
-
- 0 replies
- 679 views
-
-
-எஸ்.தியாகு நுவரெலியா ஹவா எலிய பிரதேசத்தில் வித்தியாசமான வண்டொன்று கண்டறியப்பட்டுள்ளது. விவசாயி ஒருவருடைய மரக்கறி தோட்டத்திலிருந்தே குறித்த வண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் தாடி வைத்த மனிதனின் முகம் போலவும் மறுபக்கம் பார்க்கும் பொழுது சாதாரண மனிதனின் முகம் போலவும் காட்சி தருகின்றது. இது தொடர்ப்பில் விவசாயி குறிப்பிடுகையில், 'விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவேளையிலே இந்த வண்டினை கண்டெடுத்தேன். இது வரை நான் இவ்வகையான வண்டினத்தை கண்டதில்லை' என குறிப்பிட்டார். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/121680-2014-08-11-12-45-20.html
-
- 6 replies
- 846 views
-
-
சரக்கு வாங்க காத்திருக்க சொன்னதால், 4 பேரின் கன்னத்தைக் கடித்த வாலிபர்! மதுரையில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க அதிக நேரம் ஆன காரணத்தால் வாலிபர் ஒருவர் டாஸ்மாக் ஊழியர்களைப் பிடித்து கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட கோர்ட்டு அருகே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே பயனாளிகள் சரக்கு வாங்க காத்திருந்தனர். நச்சரித்த குடிமகன்கள்: காலை 10 மணி அளவில் கடை திறந்தபோது காத்துக் கொண்டிருந்த அவர்கள் சரக்கு வாங்கும் ஆர்வத்துடன் சென்று டாஸ்மாக் கடை விற்பனையாளர் செல்லத் துரையை நச்சரித்தனர். அவரும் பொறுமையுடன் சரக்குகளை கொடுத்தார். ஒரே கல்ப்தான்: இதில் ஒரு வாலிபர் சரக்கு வாங்கி அதே இடத்திலேய…
-
- 0 replies
- 308 views
-
-
(எஸ்.கே) நுகேகொட பிரதேசத்திலுள்ள சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியையின் முகத்தை நிர்வான பெண்ணொருவரின் புகைப்படத்தில் பொருத்தி அப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட 14வயது மாணவனை ஒருலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் நீதவான் திஸ்ஸ விஜேரத்ன உத்தரவிட்டார். ஆசிரியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறையிட்டதையடுத்த மாணவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்த போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டார். குறித்த ஆசிரியையின் நிர்வாணப்படமொன்று சமூக இணையத்தளமான பேஸ்புக்கில் வெளிவந்திருப்பதாக அவரது நண்பியான ஆசிரியை ஒருவர் தெரிவித்ததையடுத்து இது குறித்து ஆராய்ந்ததாக ஆசிரியை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். பேஸ்புக…
-
- 0 replies
- 666 views
-
-
கனடாவில் நின்றபடி சுற்றும் ஸ்கை ரைடர் சவாரி செப்டம்பர் மாதம் 1ம் திகதியுடன் ஓய்வு பெறுகின்றது. கடந்த 29 வருடங்களாக 22மில்லியன்களிற்கும் மேலானவர்கள் இதில் சவாரி செய்துள்ளனர். இந்த நிலையில் தாங்கள் ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளதென இந்த கேளிக்கை பூங்காவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை துணை தலைவர் டேவ் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார். 1985ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்றரை நிமிட சவாரி கனடாவின் முதலாவதும் மற்றும் உலகின் இரண்டாவதுமான இடத்தில் உள்ள கோஸ்டர் சவாரியாகும். தரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு 26-மீற்றர்கள் உயரத்திற்கு செங்குத்து வளையமாக செல்லும். அடுத்து வரும் வாரங்களில் இந்த ரோலர் கோஸ்டரில் சவாரி செய்யும் சிலருக்கு ஞாபகார்த்த நினைவு பொருட்களை பரிசாக வழங்க திட…
-
- 0 replies
- 584 views
-
-
https://www.youtube.com/watch?v=BfrroXbHBnM இந்த விஷப்பரீட்சையெல்லாம் தேவையா?
-
- 3 replies
- 527 views
-
-
‘ஆசிட் ஊசி’ மூலம் டூப்ளிகேட் மைக்கேல் ஜாக்சனாக உருமாறிய பிரேசில் ரசிகர்! ரியோ டி ஜெனிரோ: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மீது கொண்ட தீவிர அன்பால் பிரேசில் நாட்டு ரசிகர் ஒருவர் ஆசிட் ஊசி மூலம் தன்னையும் அவரைப் போலவே மாற்றிக் கொண்டுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் அண்டோனியா கிளய்ட்சன் ரோட்ரிக்ஸ் (30) . இவர் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர். அவரை போல் தன்னால் பாட முடியாவிட்டாலும், அவரை போன்ற தோற்றத்தையாவது பெற வேண்டும் என முடிவு செய்தார் அண்டோனியா. இதற்கு அவரது முகச்சாயலும் ஒத்துப் போனதால், தற்போது மைக்கேல் ஜாக்சனின் ஜெராக்ஸ் காப்பி போல் நடமாடி வருகிறார். ஆசிட் ஊசி... இயற்கையிலேயே ஜாக்சனின் முகச்சாயல் இருந்த போதும், நிறம் மட்ட…
-
- 1 reply
- 668 views
-
-
அலாரம் அடிக்கும்போதே மணமான கோப்பி தயாராகி, நீங்கள் எழுந்து அலாரத்தை அணைத்ததும் உங்கள் கைகளில் ஜம்மென்று காபி வந்து அமர்ந்தால் எப்படி இருக்கும்? கேட்க நன்றாக இருக்கிறது நடக்க வேண்டுமே என அலுத்துக்கொள்ளாதீர்கள். அப்படி ஒரு அலாரம் க்ளாக்கை உருவாக்கியுள்ளார் uk சேர்ந்த டிசைனர் Joshua Renouf. “Barisieur”. எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த அலாரம் மணிக்கூட்டில் கோப்பிக்குதேவையான பொருள்களை முந்தைய நாள் இரவிலேயே அடைத்துவைத்துவிட்டால் போதும். This Luxury Alarm Clock Wakes You Up With A Freshly Brewed Cup Of Coffee Forget the blaring ring from your phone's alarm clock. Your early morning routine may soon get so much more enjoyable -- and infinitely more aromatic. Br…
-
- 3 replies
- 704 views
-
-
மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் பாரக் என்பவர் தனது 45அவது பிறந்த நாளுக்காக ரூ.1 கோடியே 30 லட்சம் (இந்திய ரூபாய்) மதிப்புள்ள தங்கச் சட்டையை வாங்கியுள்ளார். மும்பையில் இருந்து 260 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது இயோலா நகரம். அந்த நகரைச் சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் பங்கஜ் பாரக். 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர், சிறுவயதிலேயே ஜவுளித் தொழிலில் இறங்கி மிகக் குறுகிய காலத்தில் பெரும் தொழிலதிபராக உயர்ந்தார். பள்ளிப் பருவம் முதலே அவருக்கு தங்கத்தின் மீது தணியாத ஆசை. அதனால் எப்போதுமே சுமார் இரண்டு கிலோ அளவுக்கு தங்க நகைகளை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் தனது 45ஆவது பிறந்தநாளை இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடுகிறார். இதற்காக அவர் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள தங…
-
- 1 reply
- 481 views
-
-
சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபரொருவர் தங்கக் காருடன் பிரித்தானியாவுக்கு சுற்றுலா சென்று அங்குள்ளவர்களை வாயைப் பிளக்குமளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். செல்வந்தரான மேற்படி சவூதி சுற்றுலாப் பயணி பிரித்தானியாவின் நைட்ஸ்பிரிட்ஜ் நகரிலுள்ள அல்ட்ரா - லூக்ஸ் வெலெஸ்லி ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்த ஹோட்டலுக்கு வெளியிலே தனது 'தங்கக் கார்' நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இக்காரினைப் பார்வையிட அப்பகுதியை சேர்ந்த பிரித்தானிய மக்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன் அதனைப் புகைப்படமெடுத்து இணையத்தளத்தில் தரவேற்றி மகிழ்ந்துள்ளனர். பலரையும் ஈர்த்துள்ள இக்காரின் பெறுமதி சுமார் 32 கோடி ஆகும். ரே…
-
- 3 replies
- 623 views
-
-
வாழ் நாளில் ஒரு தடவையேனும் பிடிக்க வேண்டும் என மீனவர்களே ஆசைப்படும் அரிய வகை மீன்களில் ஒபாஹ் எனப்படும் மீனும் ஒன்று. எதிர்பாராதவிதமாக இம்மீன்கள் 3 ஒரே நாளில் மீன்பிடிப்படகு மூலம் கடந்த வாரம் பிடிக்கப்பட்டுள்ளன. நுட்பமான முறையில் படகில் பயணித்து மீன் பிடிக்கும் ஆர்மன்டோ கஸ்டிலோ, ஜோ லுட்லோவ் மற்றும் ட்ரவிஸ் சவாலா ஆகிய மூவரும் இணைந்தே ஒபாஹ் மீன்கள் மூன்றையும் பிடித்துள்ளனர். இவற்றின் சராசரியான நிறை 70 கிலோ கிராம்களாகும். செம்மஞ்சள் நிறத்தில் சற்றே இறுவட்டு போன்ற அமைப்பிலுள்ள ஒபாஹ் மீன்கள் மூன்றுடனும் மேற்படி மூவரும் இணைந்து புகைப்படமெடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். இப்புகைப்படத்தினை 2000 பேருக்கும் அதிக…
-
- 0 replies
- 462 views
-
-
காமிரா கைத்தொலைபேசிகளை வைத்து தன்னைத்தானே புகைப்படம் எடுத்து பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிபவர்களைப் பார்த்திருப்பீர்கள். இந்த மாதிரி சுய படங்களை ஆங்கிலத்தில் செல்பீ ( selifie) என்கிறார்கள். நீங்கள் உங்களை எடுத்துகொண்ட செல்பீ படத்துக்கான காப்புரிமை உங்களிடம்தான் இருக்கும். ஆனால் ஒரு குரங்கு தன்னைத்தானே எடுத்துகொண்ட படத்துக்கு சொந்தம் கொண்டாட யாருக்கு உரிமை இருக்கிறது? காமிரா போனின் உரிமையாளருக்கா, குரங்குக்கா ? இந்த விசித்திரமான வழக்கை விக்கிப்பீடியா சந்திக்கிறது. விக்கிப்பீடியா பக்கங்களில் உள்ள அபூர்வமான கறுப்பு மக்காக் இன குரங்கு பிரிட்டிஷ் புகைப்படக்காரர் டேவிட் ஸ்லேட்டரின் காமிராவைப் பறித்து தன்னைத்தானே படமெடுத்துக்கொண்டதாம். இது இந்தோனேசியாவில் 2011ல் நடந்த…
-
- 1 reply
- 465 views
-
-
சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் யங் என்பவர் வீதியோரத்தில் நின்று தனது நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். இதன்போது அவருடைய நண்பருடன் அவர் வளர்க்கும் மஸ்டிப் என்ற நாயும் இருந்தது. நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென யங்கின் ஆணுறுப்பை மஸ்டிப் கவ்வி பிடித்து கடித்து துண்டாக்கிவிட்டது. இதனால் யங் வலியால் துடித்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் யங்கை வைத்தியசாலையில் சேர்த்தனர். இரத்த வெள்ளத்தில் சுயநினைவு இல்லாமல் இருந்த அவருக்கு சீனாவின் பிரபல அறுவை சிகிச்சை நிபுணர்;கள் சுமார் ஆறுமணி நேரம் மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் துண்டான ஆணுறுப்பு மீண்டும் ஒட்டவைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யங்வுடன…
-
- 10 replies
- 1.1k views
-
-
காஸா பிராந்தியத்தில் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வந்த வேளையில் அங்குள்ள மருத்துவ மனையில் பாலஸ்தீன பெண் ஒருவர் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளார். காஸா நகரிலுள்ள அஸ்ஷாபா மருத்துவமனையில் பெயர் வெளியிடப்படாத பெண் ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளதாக அந்த மருத்துவமனையின் மருத்துவர் காஸா அபு வட்ரா தெரிவித்தார். கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த பிரசவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. http://www.virakesari.lk/articles/2014/08/01/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0…
-
- 3 replies
- 457 views
-
-
உணவு எதனையும் சாப்பிடாமல் 5 ஆண்டுகள் வரை உயிர் வாழ முடியும் என இலங்கையர் ஒருவர் கூறியுள்ளார். மனிதர்கள் உணவின்றி இரண்டு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என நிபுணர்கள் நம்புகின்றனர். எனினும் கிர்பி டி லேனர்ரோல் (Kirby de Lanerolle) என்ற இந்த இலங்கையர் சுத்தமான காற்றும் ஊட்டமும் மட்டுமே மனிதர்கள் உயிர்வாழ தேவை என குறிப்பிட்டுள்ளார். சுவாசிப்பது தனது வாழ்க்கை முறை எனவும் ஒளி, காற்று மற்றும் கடவுளின் அதிர்வுகள் மூலம் நீண்டகாலம் உயிர் வாழ முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உண்ணும் உணவுகளை விட சிறந்த கலோரி சத்துக்கள் வெளியில் உள்ளன. அதிர்வுகள், ஒளியணுக்கள் மற்றும் ஒளி மூலம் கலோரிக…
-
- 0 replies
- 510 views
-
-
பெண் பேய் பாலியல் வன்புணர்வு செய்வதாக பேராசிரியர் புகார் ஒரு பெண் பேய், இரவு நேரத்தில் தம்மை விரட்டி விரட்டி பாலியல் வன்புணர்வு செய்வதாக பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ள புகார் குறித்து இந்திய மாநிலம் ஒன்றின் போலிஸ் தலைமையகம் விசாரணை தொடங்கி இருக்கிறது. சந்திர பிரகாஷ் திரிவேதி, 66, என்ற பேராசிரியர் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் இந்தூர் நகரில் விசிக்கிறார். அவர் வேத அறிவியல் பற்றி 10 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். “இதைச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். காற்று அழுத்த காந்த அலை பயிற்சி சிகிச்சை செய்வதைப் போல் அந்தப் பெண் பேய் இரவில் வந்து என்னை பாலியல் வன்புணர்வு செய்கின்றது. யாரோ வருவது, இருப்பதைப் போல் எனக்குத் தெரிகிறது,” என்று பேராசிரியர் புகாரில் தெரிவித்துள்ள…
-
- 12 replies
- 1.3k views
-
-
வரலாறு: மிளகாய் 'அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?'னு கேட்டா... சட்டுனு 'கொலம்பஸ்' பேரைச் சொல்லிடுவீங்க. அதுவே, 'மிளகாயை அறிமுகப்படுத்தினது யாரு?'னு கேட்டாக்கா... மண்டை காயாதீங்க. அதுவும் கொலம்பஸ்தான்! செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ் என்பது வரலாறு நமக்கு தெரிவிக்கும் செய்தி! குகையில் வாழ்ந்த மனித இனம் நாகரீகம் அடைந்து, உணவை சமைத்து உண்ண ஆரம்பித்த காலந்தொட்டே மிளகாயை பயன்படுத்தத் தொடங்கி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் கி.மு. 7,500-ம் ஆண்டு காலத்தில் மிளகாய…
-
- 2 replies
- 1.3k views
-
-
நாடாளுமன்ற உணவகத்தில் வழங்கப்படும் உணவு சுகாதாரமானதாக இல்லை என்றும், அதை உட்கொண்ட எம்.பி.க்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் புகார் எழுப்பினர். இதுகுறித்து ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே.சி. தியாகி புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது பேசுகையில், "நாடாளுமன்ற உணவகத்தில் உணவருந்தும் எம்.பி.க்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. சமாஜவாதி கட்சி உறுப்பினர்களான ராம் கோபால் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் சமீபத்தில் இதனால் பாதிக்கப்பட்டனர். இது, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை அமைதியாக வைத்திருக்க திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சதியாகும்' என்றார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரான வெங்கையா நாயுடு, இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளுமாறு மாநிலங்கள…
-
- 0 replies
- 275 views
-
-
இங்கிலாந்திலுள்ள வீடொன்றினுள் 8 அங்குலம் நீளமான அசுர தும்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரும்பச்சை நிறத்திலான இந்தத் தும்பியானது சிறிய வகை ஹெலிகொப்டர் போன்று, பயங்கர சத்தத்துடன் குறித்த வீட்டின் அறையொன்றினுள் சுற்றித் திரிந்ததாக அவ்வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ட்ராகன் ப்ளைஸ் எனப்படும் இந்த அசுர வகை தும்பி இனமானது புவியில் 325 மில்லியன் ஆண்டுகள் வாழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் நீர் மாசுபாடு ஆகிய காரணங்களால் இந்த இனம் காலப்போக்கில் அழிவடைந்து வருகிறது. http://www.onlineuthayan.com/News_More.php?id=227533274430212451
-
- 0 replies
- 438 views
-
-
கம்பன் விழா உரையரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம் என மூன்று நிகழ்வுகளாக நடைபெற்ற கம்பன் விழாவில் கம்பன் காப்பியத்தில் தனிப் புலமை பெற்ற இலங்கையின் கம்பவாரிதி ஜெயராஜ் ‘கம்பன் கண்ட மானுடம்’ எனும் தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். தலைமைப் பண்புகள் சிறு வயதிலிருந்தே வளர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் இராமனின் சிறுவயது நடவடிக்கைகளை கம்பன் விவரிப்பதை எடுத்துக் காட்டினார்.தமிழகத்தின் பொற்கிழிக் கவிஞர் சொ.சொ.மீ.சுந்தரம் ‘மும்மடங்கு பொலிந்தன’ எனும் தலைப்பில் இராவணன் பற்றி உரையாற்றினார். இராவணன் மிகச் சிறந்த தலைவன் என்றும் அவன் அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டதால் வீழ்ந்தான் என்றும் பிறன்மனை நோக்காப் பேராண்மை வேண்டும் என்றும் அவர் பல்வேறு பாடல்களை மேற்கோள் காட்டிக் கூறினார்.…
-
- 8 replies
- 1.1k views
-
-
ஆளில்லா விமானம் ஒன்றின் மூலமாக இந்தியாவின் பல்வேறு இடங்களைப் படம் பிடித்திருக்கிறார் புகைப்படக் கலைஞர் அமோஸ் சாப்பல்- இந்தப் படத்தில் மும்பையின் சாசூன் துறைமுகத்தில் மீன்பிடிப் படகுகள் சில. வாரணாசியில் காலை நேரத்தில் கங்கை நதி-- " இந்தியாவில் பல மிக அழகிய கட்டிடங்கள் இருக்கின்றன. அவைகள் பல நூற்றாண்டுகளாகவே இது போல வானிலிருந்து பார்க்கப்படவில்லை என்பதால், இது போன்ற வானிலிருந்து புகைப்படங்களை எடுப்பது உற்சாகத்தைத் தருகிறது" என்கிறார் புகைப்படக்கலைஞர் அமோஸ் சாப்பல் உலக அதிசயங்களில் ஒன்றாக அடிக்கடி வர்ணிக்கப்படும் 17ம் நூற்றாண்டு வெண் பளிங்கு தாஜ் மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜஹானால், அவரது மனைவி மும்தாஜ் நினைவாகக் கட்டப்பட்டது. பிரசவ நேரத்தில் அவர் இறந்தார். இந்த…
-
- 0 replies
- 535 views
-
-
மயூரா திஸாநாயக்க என்ற சிங்களவர் தான் வேலை செய்யும் சேர்விஸ் ஸ்டேஷனில் திருட முட்பட்ட திருடர்களை அடித்து விரட்டியுள்ளார். மயூரவின் கடையில் திருட முட்பட்டவர்களுக்கு மயூரா மார்ஷியல் ஆர்ட்ஸ் சம்பியன் என்ற தகவல் தெரியாது. வங்கியில் இருந்து மயூராவின் நன்பர் பணத்துடன் திரும்பும் போது அதை பறிக்க முட்பட்டுள்ளனர். மயூரா அவர்களை துவம்சம் செய்து ஓட ஓட விரட்டியுள்ளார். ஓடும் போது ஒருவரை விட்டு விட்டு தம்முடைய SUV இல் ஓடியுள்ளார்கள். டெக்ஸாசில் நடந்த இந்த சம்பவத்தை வாடிக்கையாளர்கள் ரசித்துள்ளனர். இணைப்பில் காணொலி உள்ளது. http://www.news.com.au/world/mma-attendant-turns-tables-on-thieves-with-violent-beating/story-fndir2ev-1227004881933
-
- 4 replies
- 616 views
-
-
சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சைக்கு பலனின்று இறந்தவுடன் அந்த சிறுவனுக்கு அந்த மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் அனைவரும் சிறுவனது இறந்த உடலுக்கு முன் நின்று தலை வணங்கினர். குறித்த சிறுவன் இறப்பதற்கு முன் தனது உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் தானமாக கொடுத்து அதன்மூலம் பல உயிர்கள் வாழ்வதற்கு காரணமாக இருந்தமையினாலேயே டாக்டர்கள் தலைவணங்கி மரியாதை செய்துள்ளனர். சீனாவில் உள்ள சென்லேன் என்ற பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் லியாங் யாவோயி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கடந்த ஜூன மாதம் 6ஆம் திகதி அனுமதிக்கப்பட்டான். அவனுடைய உடல் நிலையை ஆய்வு செய்த டாக்டர்கள், நோய் மிகவும் முற்றிவிட்டதாகவும்,…
-
- 1 reply
- 448 views
-
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டு தாய்மார் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக அடுத்தடுத்த இரு தினங்களில் ஆறு குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. அம்பாறை ஆலையடிவேம்பு, நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நிசாந்தினி என்ற தாய் ஒரே சூலில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார். அறுவைச் சிகிச்சை மூலமே குறித்த குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் மா.திருக்குமரன் தெரிவித்தார். இரு பெண்குழந்தைகளும் ஓர் ஆண்குழந்தையும் பிரசவிக்கப்பட்டன என்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இதேபோன்று ஏறாவூ…
-
- 0 replies
- 436 views
-