Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. உடன்பிறவா சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு March 1, 2021 உடன்பிறவாத சகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சிறுவனின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கிளிநொச்சி கச்சேரி வீதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் தயா (வயது -7) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் கடந்த 20ஆம் திகதி மட்டக்களப்பு சென்றுள்ளார். சிறுவனுக்கு மூத்த சகோதரனும் (ஒன்பது வயது) இளைய சகோதரனும் (நாலு வயது) உள்ளனர். தாயார் மட்டக்களப்புக்கு சென்றதை அடு…

  2. `மனிதர்களுக்குத்தான் லாக் டெளன்... சாலையில் உறங்கும் சிங்கங்கள்’ -மிரளவைக்கும் புகைப்படங்கள்! கொரோனா ஊரடங்கால் மனித நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலையில் உறங்கும் காட்சி வைரலாகிவருகிறது. கொரோனா வைரஸால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் மனித நடமாட்டம் இல்லாததால், விலங்கினங்களும் பறவைகளும் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காக்களில் ஒன்றான, க்ரூகர் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலைகளில் கூட்டமாகப் படுத்துறங்கும் காட்சி இணையத்தில் பரவ, செம வைரல். …

  3. வாஸ்துவுக்கு அமைச்சர்?தெலுங்கானாவில் கூத்து ..... ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தில், எந்த புதிய சாலை மற்றும் கட்டடங்கள் கட்டுவதானாலும், வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜா, 50, ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி உள்ள தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவ், வாஸ்து சாஸ்திரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.முதல்வராக பதவியேற்ற பின், சாலை, கட்டடங்கள் கட்டுவதற்கு, வாஸ்து ஆலோசனைகளை பெறுவதற்காக, வாஸ்து சாஸ்திர நிபுணர் சுத்தாலா சுதாகர் தேஜாவை, அரசின் ஆலோசகராக நியமித்துள்ளார். கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் உள்ள தேஜா இல்லாமல், அரசின் ஆலோசனை கூட்டங்கள் நடக்காது.ஐதராபாத்தில், உசைன் சாகர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள தலைமை …

  4. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு இருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அவர் கூறுவதற்குக் காரணமே, மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக் கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்! ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் பற்றி பேசுகையில், பழைய புழுத்துப்போன பொய்யைத் திரும்பவும் கூறி இருக்கிறார் கருணாநிதி. 'ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனம் திறந்து பேச வேண்டுமேயானால், சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. யார் பெரியவர், இதை சாதிக்கிற முயற்சிகளில் வெல்லக்கூடியவர் யார் என்பதை நிலைநிறுத்துவதற்கா…

  5. மியான்மர் பெண்களின் அழகுக்கு காரணமான மரம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மியான்மரில் பெண்கள் அழகாக தோன்றுவதற்கு தனகா என்ற பொருளை பயன்படுத்துகின்றனர். சந்தன மரம் போன்றதொரு மரமே தனகா. நவீன ஒ…

  6. ஜெர்மனியில் 7,500 இசைக் கலைஞர்களுடன் நடைபெற்ற பிரம்மாண்ட இசைக் கச்சேரி ஜெர்மனியில் 7,500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்ற உலகின் மிக பிரம்மாண்ட இசைக் கச்சேரி நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்த் நாடுகளை சேர்ந்த இசைக் கலைஞர்கள் பல்வேறு பாப் பாடல்களையும், மெலடி இசைகளையும் மற்றும் பாரம்பரிய இசைகளையும் வாசித்தனர். இதில், பீத்தோவனின் ''ஒடே டூ ஜாய்'' இசையும் அடக்கம். மூன்றாண்டுகளுக்குமுன், ஆஸ்திரேலியா நகரமான பிரிஸ்பேனில் நடந்த இசைக் கச்சேரியில் பங்கேற்ற கலைஞர்களின் எண்ணிக்கையை காட்டிலும், ஃபிராங்ஃப்ர்ட் மைதானத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் 300 பேர் அதிகமாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. http://www.bbc.…

  7. எருமை மாட்டிறைச்சி மூலம் உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம் சுவாமிநாதன் நடராஜன், தமிழோசை லண்டன் உலகின் முன்னணி பால் உற்பத்தியாளர் என்ற நிலையை பல ஆண்டுகளாக தக்க வைத்துள்ள இந்தியா தற்போது மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தை எட்டியுள்ளது. எருமை இறைச்சி உற்பத்தில் ஏற்பட்டுள்ள பெருக்கம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் முதல் இடத்தை பிரேசிலிடமிருந்து அது தட்டிப் பறிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் புள்ளிவிபரங்களின் படி 2012 ஆம் ஆண்டில் பிரேசில் 1.52 மில்லியன் டன்கள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்தது. இந்தியாவோ 1.45 மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு உலகச் சந்தையில் வெறும் 8 சதவீதம்…

    • 2 replies
    • 417 views
  8. ஆட்டுக்கறி சாப்பிடும் விநாயகர்... ஆஸ்திரேலிய நிறுவனத்தின் விஷமத்தால் சர்ச்சை! ஆஸ்திரேலியாவின் இறைச்சி நிறுவனம் ஒன்று இறைச்சி குறித்து வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இந்து மதக் கடவுளான விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருப்பதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் இறைச்சி, கால்நடை ஆய்வுகள் மற்றும் அதை சந்தையில் விற்பனை செய்யும் நிறுவனம் ஆட்டு இறைச்சி விளம்பரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் விருந்து நடக்கும் மேஜையில் விநாயகர், இயேசு, புத்தர், ஜுலியஸ் சீசர் என பலரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகின்றனர். அப்போது இறுதியில் இறைச்சி சாப்பிடுவோம் என்று சொல்வது போல அந்த வ…

  9. விழுப்புரம் மாவட்டத்தில் மகளை சேர்த்து வைக்க மருமகன் வீட்டு முன்பு மாமியார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் கேசவராம் (28). மென்பொருள் பொறியாளரான இவருக்கும், சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்த அமுதராணி மகள் சிவரஞ்சனி (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு மனைவியை விழுப்புரத்தில் தனது வீட்டில் தங்கவைத்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிவரஞ்சனி தனது தாய் வீ…

  10. அது என்ன ‘ஒப்பரேஷன் ட்ரஸ்ட்”? ஒப்பரேஷன் ட்ரஸ்ட்” என்ற இந்த இராணுவ நடவடிக்கை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உலக இராணுவ விவகாரங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு போதாது என்றுதான் கூறவேண்டும். ஒரு நாட்டின் உளவுப் பிரிவு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட மிக முக்கியமானதும், மிகவும் பிரபல்யமானதுமான ஒரு நடவடிக்கைதான் இந்த Operation Trust என்ற இராணுவ நடவடிக்கை. ஒரு தேசத்தின் ஆட்சிக்கு எதிராகப் புலம்பெயர்ந்த அந்த தேசத்து மக்கள் சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட ஒரு புரட்சியை மிகவும் வெற்றிகரமாக அடக்கி ஒடுக்கிய ஒரு இராணுவ நடவடிக்கைதான் Operation Trust. இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது உலக மட்டத்தில் ஒரு காலத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு உளவு அமைப்பாக வலம் வந்த கே.ஜீ.ப…

  11. ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு, 151 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிரீம்லைனர் விமானத்தின் கழிப்பறைசரியாக செயல்படாததால், அது மீண்டும் மாஸ்கோவில் தரையிறக்கப்பட்டது. இது குறித்து விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாஸ்கோவில் இருந்து டோக்யோ அருகில் உள்ள நரிடா விமான நிலையத்திற்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. இது, 10 மணி நேர பயணமாகும். இந்நிலையில், விமானம் புறப்பட்டு 2 மணி நேரத்தில், மின்சார கோளாறு காரணமாக கழிப்பறையின் கிளட்ச் பழுதாகிவிட்டது. இதனால், பயணிகள் டாய்லெட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், மீண்டும் விமானம் மாஸ்கோவிற்கு திரும்பியது என்றார். சர்வதேச அளவில், பரபரப்பாக பேசப்பட்ட ட…

  12. இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் .....நிலக்கரி ஊழல் கோப்புகளை மத்திய அரசு தொலைத்து விட்டதாக பாராளுமன்றதில் அறிவிக்கப்பட்டுள்ளது .பல கோடி பெருமானமுள்ள அக்கோப்புகள் உங்களுக்கு கிடைத்தால் உடனடியாக அகில உலக மன்மோகன் சிங் ரசிகர் மன்றத் தலைவர் ...கோபன்னா அவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ! பின்குறிப்பு :22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன ராஜிவ் கொலை வழக்கு பற்றிய வர்மா கமிஷன் கோப்புகளை கண்டால் அன்னை சோனியா காந்தி ரசிகர் மன்ற தலைவர் வேலூர் ஞானசேகரனிடம் வழங்கவும் !-மானம் கெட்ட காங்கிரஸ் பேரவை . Prakash Tamilan facebook

  13. அமெரிக்காவில் உள்ள காட்டில் கிடந்த பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளார் பெண் போலீஸ் ஒருவர். அமெரிக்காவின் கொலம்பியா மாநிலத்தில் உள்ள லா மரினாவில் போலீஸ் அதிகாரியாக இருப்பவர் லூயிசா பெர்ணான்டா உர்ரியா. அண்மையில் தான் அவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தையை எடினோரா ஜிமெனெஸ்(59) என்பவர் கண்டுபிடித்தார். உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த லூயிசா குழந்தை பசியாலும், காட்டில் கிடந்ததால் உடல் சூடு வெகுவாக குறைந்தும் இருப்பதை உணர்ந்தார். குழந்தையை தனது மார்போடு அணைத்து அதற்கு தாய்ப்பால் கொடுத்தார். பின்னர்…

  14. நெல்லை: குரங்காடி வித்தைகாட்டி வரும் குரங்கு அவரைப்போல் தினமும் ஒரு குவார்டர் மதுவை உள்ளே தள்ளிவிட்டு கும்மாளமிடுவது பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. அந்த ருசிகர செய்திதான் இங்கே தரப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு தினமும் காலை, மாலை என பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. இதில் வேலைக்கு செல்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பயணம் செய்வார்கள். இதுபோல் குரங்காட்டி ஒருவரும் அடிக்கடி இந்த ரயிலில் வருவார். அவர் கையில் நன்றாக கொழுத்து வளர்ந்த 3 வயது ஆன ஆண் குரங்கை அழைத்து வருவார். ரயிலில் பயணம் செய்பவர்களிடம் குரங்கு அன்பாக சேட்டை செய்யும், நாம் முறைத்துபார்த்தால் அதுவும் முறைக்கும். என்ன சாமியோவ்..அப்படி பார்க்கிறீக..எங்க …

    • 0 replies
    • 416 views
  15. சிக்கன் சமைப்பதற்கு எவ்வளவு வெப்பநிலை தேவை? பிரித்தானிய அவசர சேவை பிரிவுடன் தொடர்புகொண்ட நபர் கேள்வி பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்நாட்டு அவசர சேவைப் பிரிவு பொலிஸாருக்கு அழைப்பு விடுத்து, சிக்கன் சமைப்பதற்கு அவணில் எந்தளவு வெப்பநிலை வைக்க வேண்டும் என கேட்டுள்ளார். இங்கிலாந்தின் கம்பிரியா பிராந்தியத்திலுள்ள அவசரசேவை பொலிஸ் பிரிவினரிடம் மேற்படி நபர் இக்கேள்வியை கேட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் அவசரத் தேவைகளின் போது உதவிக்கு அழைப்பதற்காக 999 எனும் தொலைபேசி இலக்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இச்சேவையின் பெறுமானத்தை உணராத சிலர் அபத்தமான விடயங்களுக்கும் இந்த இலக்கத்துக்கு அழைப்பு விடுப்பதாக கம்பிரியா பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

  16. பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு கனேடிய பிரதமரின் நிர்வாண புகைப்படங்கள் ! சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முயற்சியுடன் செயல்பட்டு வரும் கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாண புகைப்படங்கள் தர ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடற் பிரச்சினைகள் மற்றும் விரை விதை புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிர்வாண புகைப்படத்திற்கு அவர் போஸ் தரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்தே இந்த நிர்வாண புகைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் அவரின் நிர்வாண புகைப்படங்கள் அ…

  17. அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகர் ரோன் ஜெரேமி, ஒரு 15 வயது சிறுமி உள்பட, மேலும் 13 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் 2004ஆம் ஆண்டு நடைபெற்றன என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது 67 வயதாகும் ஜெரேமி 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நான்கு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார் மற்றும் பாலியல் வல்லுறவு செய்தார் என்று ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசப்படத் துறையில் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவரான ரோன் ஜெரேமி, 40 ஆண்டுகளில் 1,700க்கும் அதிகமான ஆபாசப் படங்களில் நடித்துள்ளார். இவர் மீதான க…

  18. போரைச் சாட்டாக வைத்து தமிழ் மக்களின் உயிர்களை பறித்த சிங்கள அரச கைக்கூலிப் படைகளான சிறீலங்கா இராணுவத்தினர், தமிழ் மக்களின் சொத்துக்கள் உடைமைகள் என்பவற்றையும் விட்டுவைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மைகள். அவைபற்றி இப்பகுதியில் பலதடவைகள் எழுதி இருந்தோம். இந்நிலையில், போர் ஓய்ந்ததாக வெளி உலகை ஏமாற்றி வரும் சிங்கள அரசும் அதன் இராணுவத்தினரும் இன்னும் தமிழ் மக்களையும் மக்களின் சொத்துக்களையும் துடைத் தழிக்கும் செயற்பாடுகளை நிறுத்தியதாகத் தெரியவில்லை. தமிழர் தாயகப் பகுதி எங்கும் இராணுவப் பிரசன்னமே காணப்படுகின்றது. இதனை சர்வதேசங்களில் இருந்து தமிழர் தாயகப் பகுதிகளுக்கு செல்லும் பிரதிநிதிகள் கண்முன்னே கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அங்கு சிவில் நடவடிக்கைகளில் கூட இராணுவத் தல…

  19. இணையத்தளம் ஒன்றிற்கு தகவல்களை வழங்கும் ஒற்றர்கள் சிலர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குள் இருக்கின்றனர். இவர்களில் ஒருவரேனும் சிக்கினால் அவர்களுக்கு அரச காலத்து தண்டனை வழங்கப்படும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஜநாயக்க தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தள்ளது. பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரன் கொலை தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்குவதற்கு முன்னர் அதிலுள்ள தகவல்கள் குறித்த இணையத்தளத்தில் பிரசுரமாகியிருந்தன. இதுவே பிரதிப் பணிப்பாளர் சமீபத்தில் ஆத்திரமடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தாக்கல் செய்யும் அறிக்கையில்இ பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரன் மீதுஇ துமிந்த சில்வா தற்ப…

  20. வாழ்நாளில் ஒரு முறையே நிகழக் கூடிய அரிதான நிகழ்வு எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி ஏற்படவுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஜூன் 6ம் திகதி வெள்ளிக் கிரகம் ஊட றுத்து செல்லவுள்ளது. வானியலில் மிக அரிதாக நிகழும் இது இந்த நூற்றாண்டில் கடைசி முறையாக ஏற்படவுள்ளது. இதன் படி இவ்வாறான ஒரு நிகழ்வை மீண்டும் பார்க்க ஒரு நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டி வரும். எதிர்வரும் ஜூன் 6ஆம் திக திக்கு பின்னர் 2117 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி யிலேயே வெள்ளிக் கிரகம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லவுள்ளது. எனினும் இதற்கு முன்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இதன்போது வெள்ளிக்கிரகம் சூரியனின் மேற்பரப்பில் சிறு புள்ளியாக தோற்றம் பெறும் ஒரு சில மணி நேரங…

  21. மைசூரில் யானைகள் சண்டையை தடுக்க முயன்ற பாகனும், அவர் வளர்த்த யானையும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மைசூர் தசரா விழாவில் பங்கேற்கும் யானைகள் சாம்ராஜ்நகரில் உள்ள முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு, கஜோந்திரா, ஸ்ரீராமா என்ற இரு யானைகளும் உள்ளன. நேற்று இந்த இரு யானைகளும் திடீரென்று சண்டையிட்டுக் கொண்டன. இரண்டும் ஒன்றையொன்று தந்தத்தால் குத்திக் கொண்டன. சண்டையை பார்த்த ஸ்ரீராமா யானையின் பாகன் கணபதி, சண்டையை விலக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால், கடும் ஆத்திரமடைந்த கஜேந்திரா யானை, பாகன் கணபதியை தந்தத்தால் ஆவேசத்துடன் குத்தியது. இதில், சம்பவ இடத்திலேயே பாகன் கணபதி பலியானார். தொடர்ந்து ஆத்திரம் தணியான கஜேந்திரா யானை, ஸ்ரீராமா யானையை மேலும் த…

  22. பிரபல ஆபாசப்பட வலைதளமான பார்ன்ஹப், பயனர்களால் பதிவேற்றப்பட்ட பல காணொளிகளை, தன் வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வண்புணர்வு தொடர்பான காணொளி பதிவுகள் பார்ன்ஹப்பில் கூடுதலாக இருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியானதற்கு, பார்ன்ஹப் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. பார்ன்ஹப் ஒரு பிரபலமான ஆபாசப்பட வலைதளம். இந்த வலைதளத்தில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது & பாலியல் வண்புணர்வு போன்ற காணொளிகள் பதிவேற்றப்பட்டு இருந்தன. நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு செய்தி, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட காணொளிகள், பார்ன் ஹப்பில் அதிகமாக இருந்ததைக் சு…

  23. குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் பிரான்ஸிற்கான இலங்கைகத் தூதுவர் தயான் ஜயதிலக்கவிற்கு எதிராக குற்ற விசாரணை சட்டதிட்டங்களின் கீழ் ஏன் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லையென வெளிவிவகார அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜி.எஸ். பிரசன்ன கடிதமொன்றின் மூலம் கேள்வியெழுப்பியுள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வருகிறது. பரிஸ் நகரிலுள்ள தூதரக அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் முறைகேடுகள் குறித்து அவர் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கடிதம் ஐந்து பக்கங்களுக்கு எழுதப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பரிஸ் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்னர் வெள்ளையடிக்கப்பட்டது குறித்தும் குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்ட…

  24. வங்கதேசத்தில் இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும் மூங்கில் கட்டை விளம்பரம்...! கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, வெளியிடப்பட்ட மோகா மோகா விளம்பரம் போல, தற்போது வங்கதேச - இந்திய தொடரின் போது இந்திய ரசிகர்களை வங்கதேசத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனம் இந்திய ரசிகர்களை வெறுப்பேற்றும்விதத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. வங்க தேசத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரத்தில் ஒரு இந்தியரும் பாகிஸ்தானியரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தியர் எதிரே இருப்பவரை பார்த்து நீங்கள் பாகிஸ்தானியரா? என்று கேட்கிறார். இப்படி தொடங்கும் பேச்சால், ஒரு கட்டத்தில் கோபமடைந்த பாகிஸ்தானியர் கீழே கிடந்த மூங்கில் கட்டையை எடுத்து இந்தியருக்கு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.