செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
பிரான்ஸின் கிராமப் பகுதியொன்றில் சாத்தானுக்கான மதச் சடங்கொன்றில் அநேக செம்மறி ஆடுகளும் குதிரையொன்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு பலி கொடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் தென்மேற்கேயுள்ள பெர்டிக்னன் நகருக்கு அண்மையில் கொடூரமான முறையில் இறந்துகிடந்த செம்மறி ஆடுகளை அவ்வழியாக சென்ற பாதசாரிகள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் அவற்றை பரிசோதனைக்குட்படுத்திய போது, அவை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட பின்னர் கத்தியால் குத்தப்பட்டும், எரிக்கப்பட்டும் கழுத்து நெரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. அத்துடன் அவற்றின் ரோமங்கள் வெட்டப்பட்டு, அவயவங்கள் துண்டிக்கப்பட்டிருந்ததுடன் அவற்றின் மீது கல்…
-
- 3 replies
- 635 views
-
-
தர்மத்தின் தலைவன்' திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக இருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த தனது வழக்கமான பாதையில் பஸ்ஸில் பயணிக்க வேஷ்டி கட்ட மறந்து செல்வார். வீதியிலும் பஸ் நிலையத்திலும் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். படத்தில் இதனை வேடிக்கைக்காக காட்டியிருப்பாhர்கள். ஆனால் நிஜத்திலும் இது போன்று வேடிக்கையான நிகழ்வை வருடாந்த நிகழ்வாக கொண்டாடி சிரிக்க வைக்கின்றார்கள். ஜனவரி 12 ஆம் திகதியை 'No Trousers Day' (காற்சட்டை அணியாத தினம்) என உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. 2002 ஆம் ஆண்டில் முதன் முறையாக அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட இத்தினம் தற்போது உலகின் பல நாடுகளிலும் பரவலடைந்து 13ஆவது வருடாந்த 'காற்சட்டை அணியாத தினம்' கடந்த ஞாயிற்றுக்கிழமை கொ…
-
- 7 replies
- 830 views
-
-
இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மனித மனங்களை நெகிழ வைக்கின்றன. அந்தவகையில் கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத கடும் குளிர், மற்றும் உறைய வைக்கும் பனிக் காலநிலையால் நயகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி, அப்படியே உறைந்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் 1902,1936 மற்றும் 1848 ஆம் ஆண்டுகளில் நயகரா நீர் வீழ்சி இவ்வாறு உறைந்து காணப்பட்டதாம். கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் கடும் குளிரினால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 11,000 விமானசேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் நயகரா நீர்வீழ்ச்சி பகுதியளவி; உறைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரி…
-
- 3 replies
- 1.6k views
-
-
உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னுடன் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவியுடன் பேஸ்புக்கில் நட்பு வைத்தமைக் காக ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் தொடர்பாக, அதே பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.முசாபர்நகர் அருகே ஷியாம்லியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் மயாங் (17). கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோச்சிங் சென்டரில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடன் படிக்கும் இரண்டு மாணவர்கள் அவனை வழிமறித்து தகராறு செய்தனர். பிறகு தங்களிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியால் மயாங்கை சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து, அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் வர்மா கூறுகையில், "தங்களுடன் பயிலும் ஒரு மா…
-
- 1 reply
- 726 views
-
-
பின்லேடனை சுட்டு கொன்றதாக கூறிய வீரர், பாய்ந்து பதுங்கினார் ஹோட்டல் ருமில்!! “ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொல்வதற்காக சென்ற அமெரிக்க நேவி சீல் (Navy SEAL) அதிரடிப்படையில் நானும் ஒருவன். பின்லேடனை சுட்டு வீழ்த்தியது எனது துப்பாக்கிதான்” இப்படி தம்மைப் பற்றி பெருமையாக கூறிக்கொண்டிருந்தஅமெரிக்கர் ஒருவர், தற்போது தலைமறைவாகியுள்ளார். இவர்மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபர் பொழுதுபோகாமல் சும்மா வீதியில் நின்ற நபரல்ல. அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்தியவர். ஐ.நா.வின் வெளிநாட்டு பாதுகாப்பு கான்ட்ராக்ட் ஒன்றை பெற்ற நிறுவனத்தின் உரிமையாளர். ஆபிரிக்க நாடான புருண்டியில் ஐ.நா. ஆபரேஷனுக்காக வழங்கப்பட்ட இந்த பாதுகாப்பு கான்ட்ராக்ட்டின் பெறுமதி…
-
- 0 replies
- 583 views
-
-
படிப்பை நிறுத்த மறுத்த, 11 வயது மகளின் முகத்தை சிதைத்த.... கொடூர தந்தை. போபால்: பள்ளிப் படிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை தந்தையே சிதைத்த கொடூரம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள மரஞ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் உய்கே. அவரது 11 வயது மகள் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். தினேஷுக்கு தனது மகள் படிப்பது பிடிக்கவில்லை. அதனால் படிப்பை நிறுத்திவிடுமாறு கூறி வந்துள்ளார். ஆனால் சிறுமி தினேஷின் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்தார். இதனால் கடுப்பான தினேஷ் கல்லை எடுத்து தனது மகளின் முகத்தை சிதைத்துவிட்டு தலையிலும் அடித்து காயப்படுத்தினார். இதையடுத்து…
-
- 1 reply
- 594 views
-
-
ஈரானில் 60 ஆண்டுகளாக ஒரு மனிதர் குளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த கப்பு மனிதர் விலங்குகளின் சாணத்தை பைப்பில் அடைத்து புகைக்கும் விசித்திர பழக்கமும் கொண்டுள்ளார். தினந்தோறும் குளிப்பது மனிதர்களின் இயல்பு, தண்ணீர் பஞ்சத்தைப் பற்றியும் கவலைப்படாமல், இருவேளை குளிப்பார்கள். ஈரானின் தெற்கு மாகாணமான ஃபர்ஸ் பகுதியில் உள்ள டெஜ்கா என்ற கிராமத்தை சேர்ந்த அமோவ் ஹாஜி. கடந்த 60 ஆண்டுகளாக உடம்பில் தண்ணீரே படாமல் வாழ்ந்து வருகிறார். இளம் வயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவர், இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார் that's tamil
-
- 5 replies
- 868 views
-
-
பிரான்ஸ் நாட்டில், புத்தாண்டு உற்சாகத்தில் பங்கேற்றவர்கள், ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை எரித்துள்ளனர்.பிரான்ஸ் நாட்டில், ஒவ்வொரு புத்தாண்டின் போதும், முதல் நாள் இரவு, புத்தாண்டை வரவேற்க காத்திருக்கும் இளைஞர்கள், உற்சாக மிகுதியில், சாலை ஓரங்களில் உள்ள கார்களை, தீ வைத்து கொளுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பிரான்ஸ் அரசு இதை வன்மையாக கண்டித்து வருகிறது. இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்பதற்காக, புத்தாண்டு அன்று, 53 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், இதையும் மீறி, 1,067 கார்கள் எரிக்கப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மானுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,''எதிரிகளை பழிவாங்கும் நோக்கில், அவர்கள் புத்தாண்டு உற…
-
- 5 replies
- 696 views
-
-
அண்மை காலங்களில்.. முகநூலில்.. நயகரா நீர்வீழ்ச்சி உறைந்த படங்கள் வெளியாகி.. அது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்த நிலையில்.. அண்மைய வட துருவப் பகுதிக் கடும் குளிரால் புகழ்பெற்ற நயகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி முற்றிலுமாக உறைந்து போயுள்ள நிஜக் காட்சிகளை மக்கள் காண முடிகிறது. இது முன்னைய காட்சிகளை மக்கள் மீள மனங்களில் நினைவுபடுத்தவும் உதவி நிற்கிறது. http://youtu.be/26YLZ3xVtss Cascades of ice as Niagara Falls freezes. http://www.bbc.co.uk/news/world-us-canada-25679545
-
- 6 replies
- 861 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு விசித்திரமான, அதே சமயம் விபரீதமான சம்பவம் நடந்துள்ளது. இரு சகோதரிகள் வங்கியிலிருந்து ரூ. 17 லட்சம் பணத்தை எடுத்து அதை தீவைத்து எரித்து விட்டனர். அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது. மேலும், அந்த சகோதரிகளில் மூத்தவர் கையில் இருந்த பிஸ்டலை எடுத்து அக்கம் பக்கத்தினரை மிரட்டவும் செய்ததால் அவர்கள் அருகில் போக அஞ்சினர். பணத்தைக் காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து, இது எங்கள் பணம். இதை என்ன வேண்டுமா்னாலும் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. யாரும் அருகில் வரக் கூடாது. வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டினார் அவர். அந்த சகோதரிகளின் பெயர் நஹீத், 40 வயது. ர…
-
- 5 replies
- 434 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த ஜென் செட்லர் எனும் யுவதி நடிகையோ பாடகியோ அல்ல. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டகிராமில் சுமார் 13 லட்சம் பேர் அவரை பொலோ செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவரின் பின்னழகு. அத்துடன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஜென் செட்லர், தனது உடற்பயிற்சிகள் மூலமும் பெரும் எண்ணிக்கையானோரைக் கவர்ந்துள்ளார். தன்னை விதவிதமாக புகைப்படங்களைப் பிடித்து ஜென் செட்லர் வெளியிடுகிறார். அதனால் தினமும் அவரின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அண்மையில் நியூயோர்க் மிட்டவுன் ரயில் நிலையத்தில் இரு சுவர்கள் மீது கைகளையும் கால்களையும் அழுத்திக்கொண்டு அந்தரந்திலிருந்தவாறு ஜென் செட்லர் போஸ் கொடுத்தார். இதைப் பார்ப்பதற்கும் பலர் திரண்டனர். …
-
- 37 replies
- 3.1k views
-
-
இங்கிலாந்தின் கிழக்கு லண்டனை சேர்ந்த மேரிகோனி (வயது 21) என்ற பெண் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்தார். அவருடன் நயோனி ஓனி (21) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். இருவரும் நெருங்கிய நண்பிகள். ஆனாலும் நயோனி ஓனி மீது மேரிகோனிக்கு பொறாமை காரணம் அவரை விட தனது தோழி அழகானவள் என்பதால், எனவே நயோனி ஓனி அழகை சிதைக்க மேரிகோனி முடிவு செய்தார். இதற்காக ஆசிட்டை வாங்கி நயோனி ஓனி மீது ஊற்றினார். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேரிகோனி கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/?q=node/360544
-
- 2 replies
- 961 views
-
-
"சோனியா"ம்மன். இந்துக்களை எப்படி எல்லாம் கேவலப்படுத்திறாங்க வட இந்திய பிராமணிகள்.
-
- 10 replies
- 873 views
-
-
நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்திற்குள் ஒளிந்துகொண்ட நபர் ஒருவர் அரைமணி போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று அவுஸ்திரேலியாவின் வடக்கு மெல்போர்னில் நகரில் இடம்பெற்றுள்ளது. காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவே மேற்படி நபர் இவ்வாறு நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்திற்குள் நுழைந்துகொண்டுள்ளார். இதன்போது சலவை இயந்திரத்தினுள் சிக்கிக்கொண்ட இந்நபர் வெளியில் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். முயற்சி தோல்வியடையவே தீயணைப்பு பிரிவினர், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் குறித்த நபர் மீது ஒலிவ் எண்ணெயை தடவி அரை மணி போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர். இதேபோல், அண்மையில் அமெர…
-
- 1 reply
- 297 views
-
-
கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கணனி மூலம் ஆபாச படங்களை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய பொலிசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மறந்து விட்டு, இந்த ஆபாச வலைத்தளங்களே கதியாக கிடக்கின்றனர் என்பதை கண்டுபிடித்த சி.பி.ஐ., இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளது. இதனையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அரசின் இணைய இணைப்பின் வாயிலாக மேற்கண்ட வலைத்தளங்களுக்குள் நுழைவதை தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. செக்ஸ் படம் பார்ப்போம் இல்லையேல் பேஸ்புக், டுவிட்டர்: ஆனாலும் அலுவலக கணனிகளின் வழ…
-
- 6 replies
- 750 views
-
-
விர்ர்ர்ர்ர்ரென்று 'கிராஸ்' செய்த 'பறக்கும் தட்டு'... தட்டுத் தடுமாறித் தப்பிய ஜெட் விமானம்! லண்டன்: ஒரு பெரிய ரக்பி பந்து போல காணப்பட்ட பறக்கும் தட்டு தனது விமானத்தின் மீது மோதுவது போல வந்ததாகவும், நிமிடத்தில் சுதாரித்து தனது விமானத்தை வேறு பக்கம் திருப்பியதால் பேராபத்திலிருந்து விமானமும், பயணிகளும் தப்பியதாகவும் ஒரு விமானி கூறியுள்ளார். இவரது இந்த கூற்றால் லண்டன், ஹீத்ரு விமா்ன நிலைய அதிகாரிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். உண்மையில் விமானத்தின் மீது மோதுவது போல வந்தது விண்ணிலிருந்து வந்த பறக்கும் தட்டா.. அல்லது வேறு ஏதேனுமா என்ற விசாரணையில் அவர்கள் குதித்துள்ளனர். ஹீத்ரு விமா்ன நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏ320 ஏ…
-
- 4 replies
- 2.2k views
-
-
8cd1ed90ee26d704dac8a3918761717a
-
- 6 replies
- 760 views
-
-
-எஸ்.குகன் யாழ்.அளவெட்டிப் மலைவேம்படியைச்சேர்ந்த கிராம அலுவலரான எஸ்.துவாரகன் என்பவரது வீட்டில் வளர்த்த ஆடொன்று வித்தியாசமான முக அமைப்பை கொண்ட குட்டியொன்றை கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈன்றுள்ளது. மேற்படி ஆட்டுக்குட்டியின் இரு கண்களும் மிக அருகில் நெருக்கமாக இருக்கிறது. இதனை அப்பகுதியினைச் சேர்ந்த பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/95694-2014-01-05-06-24-31.html
-
- 6 replies
- 869 views
-
-
வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார். இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங் யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார். இதை அறிந்த அதிபர் அவரையும், அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார். அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாங் சாங் தேக் மற்றும் உதவியாளர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் துரோகி, வெறுக்கத்தக்க அழுக்கான நபர், நாயை விட கேவலமானவர் என்று கொரிய செய்தி நிறுவனங்கள் வர…
-
- 1 reply
- 489 views
-
-
Published:Thursday, 02 January 2014, 09:33 GMT இந்தோனேஷியாவில் இறந்தவர்களை உயிருடன் எழுப்பப்படும் சடங்குகள் நடைபெறுகிறது. இச்சடங்கு இறந்தவருக்கான சடங்குகளை முறைப்படி செய்ய வேண்டும் என்பதால் இவ்வாறு உயிருடன் எழுப்பப்படுகின்றனர். இவர்களின் சடங்கினால் உயிரோடு எழும்பும் மனிதர்கள் சுயமாக நடந்து தனது பிறந்து ஊருக்கு நடந்து செல்ல மட்டும் முடியும். ஆனால் தொடர்ந்து இவர்களால் உயிர்வாழ முடியாது. இறந்தவரை உயிருடன் எழுப்ப மந்திரம் பிரயோகிக்கப்பட்டு ஒரு விசித்திரமான சடங்கினை அங்குள்ள மந்திர வைத்தியர் ஒருவர் செய்து வைக்கிறார். ரொரஜா என்ற இன மக்களிடம் தற்போதும் இந்த நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. இறந்த மனிதர் அவர் பிறந்த ஊரிலே அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான ஏற்பாட…
-
- 13 replies
- 7.9k views
-
-
தனது கணவர் முள்ளுக்கரண்டியை பாவித்து பட்டாணி உண்பதில்லை என்று கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார். குவைத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார். திருமணம் முடித்து ஒரு கிழமையிலே இவ்வாறு மேற்படி பெண் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'தனது கணவர் பட்டாணி உண்ணும்போது முள்ளுக்கரண்டியை பயன்படுத்துவதில்லை. அதேபோல், பாண் உண்ணும்போது முள்ளுக்கரண்டிக்கு பதிலாக வேறு உபகரணங்களை பயன்படுத்துகிறார்' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தது. இதேபோல் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பற்பசையை எடுக்கும்போது அதனை முடிவிலிருந்து எடுக்காமல் நடுவிலிருந்து எடுக்குமாறு கூறி தன்னை தனது கணவர் வலிய…
-
- 0 replies
- 467 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மனாட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஷாவோனா ரம்ப் என்ற பெண், தனது காதலனுடன் வசித்து வருகிறார். இருவரும் தங்கள் குடியிருக்கும் வீட்டிலேயே அடிக்கடி மது அருந்துவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் இருவரும் தூங்குவதற்கு முன் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் போதையுடன் இருவரும் தூங்க சென்றனர். அப்போது, காதல் மயக்கத்தில் இருந்த ஷவோனா தன்னை கட்டித் தழுவும்படி காதலனிடம் கூறியுள்ளார். காதலன் மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஷவோனா தனது காதலனின் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்துள்ளார். இதனால் காதலன் வீட்டை விட்டு வெளியேற முயன்றார். ஒரு கட்ட…
-
- 10 replies
- 1.3k views
-
-
நபரொருவர் மூகமூடி அணிந்துகொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் குஆன்ஷொஉ நகரைச் சேர்ந்த ஷியாஓ யென் என்ற 36 வயதான பெண்ணொருவர் சமயலறையில் வேலைசெய்துகொண்டிருந்த போது மூகமூடி அணிந்த திருடன் ஒருவர் வீட்டினுள் நுழைந்துள்ளான். அத்திருடன் பணம் கேட்டு அச்சுறுத்த 35 ரென்மின்பியை (சுமார் 600 ரூபா) கொடுத்துள்ளார் யென். பின்னர் மூகமூடியுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாது யென்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து யென் நடந்தவற்றை கணவனிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் இணைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரின் விசாரணையின் போது யென்னின் கணவனில…
-
- 1 reply
- 537 views
-
-
செக்கோஸ்லோவேக்கியா நாட்டிற்கான பாலஸ்தீன தூதராக ஜமீல் அல் ஜமால் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், தூதரக அலுவலகத்தில், கடந்த 20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த பெட்டகத்தை திறந்து பார்த்தார். அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=100487&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 417 views
-
-
ரொம் மியொக் எனும் சிற்பக் கலைஞர் தத்ரூபமான மனித சிற்பங்களை செய்வதில் வல்லவராகத் திகழ்கிறார். உண்மையான மனிதர்களோ என எண்ண வைக்கும் அளவுக்கு இவரின் சிற்பங்கள் உள்ளன. உலகின் பல நாடுகளில் இவரின் சிற்பகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறார்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் தயாரித்துக்கொண்டிருந்த ரொ மியொக், 1996 ஆம் ஆண்டு முதல் மனிதச் சிற்பங்களை தயாரித்து வருகிறார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஜேர்மன் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் ரொன் மியொக். பின்னர் லண்டனுக்குச் சென்று சிற்பங்களை உருவாக்க ஆரம்பித்த அவர் சொந்த நிறுவனமொன்றையும் ஸ்தாபித்தார். இவரின் மனிதச் சிற்பங்கள் அசல் மனிதர்களைப் போலவே தோற்றமளிப்பதால் பலரையும் கவரத்…
-
- 0 replies
- 424 views
-