Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்கா உலக நாடுகளின் தலைவர்களின் செல்போன் மற்றும் இமெயிலை ஹேக் செய்த போதிலும் அதனால் பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்போன் மற்றும் இமெயிலை மட்டும் ஹேக் செய்ய முடியவில்லை. வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் மாநில அரசு துறை அதிகாரிகள் அளித்த தொலைபேசி மற்றும் செல்போன் எண்களை வைத்து அமெரிக்க உளவாளிகள் உலகின் 35 நாடுகளின் தலைவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்டுள்ளனர் என்று தி கார்டியன் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரசின் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடன் அளித்த தகவல்களின் மூலம் தான் அமெரிக்கா ஒட்டுக் கேட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கடும் கோபத்தில் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் …

  2. மணலி ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). இவரது மனைவி குளோரி. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் (1½), கீர்த்தி (6 மாதம்) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. சுந்தரம் தற்போது துபாயில் இருக்கிறார். இவர் வெளிநாடு சென்று 4 மாதம் ஆகிறது. இவரது தாயார் செல்வி (54). மருமகள், பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார். குளோரி நீண்ட நேரம் செல்போனில் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதை மாமியார் செல்வி கண்டித்தார். இதனால் மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்தனர். அப்போது குளோரியின் செல்போனை மாமியார் செல்வி உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆவேசம் அடைந்த குளோரி, இ…

  3. காதலி மீது கொண்ட சந்தேகத்தால் 12வருடங்களாக பூட்டு போட்டு வைத்திருந்த காதலன் கைது செய்யப்பட்டான். மெக்சிகோவின் விராகுருஷ் பகுதியில் வசித்து வரும் ஜகாட்லாமே என்ற பெண்ணே இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதனால் இயற்கை உபாதைகளை கழிப்பது கூட மிகவும் கடினமாக இருந்துள்ளது. 13வயதில் இருந்தே ஜகாட்லாமே, தனது காதலன் ஆண்டோனியாவுடன் சேர்ந்து வாழத் தொடங்கியிருக்கிறார். காதலி மீதான சந்தேகத்தால் அதாவது தன்னை விட்டு விட்டு வேறு யாருடனாவது சென்று விடுவாரோ என பயந்து அவரது பேண்ட்டிற்கு(Pant) பூட்டு போட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விரைந்து சென்ற பொலிசார் ஆண்டோனியாவை கைது செய்துள்ளதுடன், பெண்ணையும் விடுவித்துள்ளனர். மீட்கப்பட்ட போது அப்பெண் மிகவும் பயந்து போய் காணப் …

  4. ஏமன் நாட்டிலுள்ள ஒரு சமூகத்தினர் ஒரு வித்தியாசமான நடைமுறையை பின்பற்றி வருகிறார்கள். திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ரகசியமாக பேசவோ, பழகவோ கூடாது. இந்நிலையில் அங்குள்ள ஷாபாப் கிராமத்தில் 15 வயது பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணம் நடக்கும் முன்பே அவள் தனது வருங்கால கணவருடன் தொலைபேசியில் உரையாடுவதை தந்தை பார்த்து விட்டார். இதன் விளைவு மகள் என்று கூட பார்க்காமல் அவளை எரித்துக்கொன்று விட்டார். 35 வயதாகும் தந்தை இப்போது போலீசில் பிடியில் சிக்கி விட்டார். இதுபோன்ற கௌரவக் கொலைகள் அங்கு சர்வசாதாரணமாக நடப்பதால் அதை தடுத்து நிறுத்த மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=95728&category=WorldNews&lang…

  5. உலகின் மிகவும் செலவுமிக்க நகரம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு? எங்கு வாழ்வது அதிக செலவு சாப்பிடக்கூடியது? நியூயோர்க்? மொஸ்கோ? டோக்கியோ? பாரிஸ்? நிச்சயமாக இல்லை. ஆப்பிரிக்க தேசமான அங்கோலாவின் தலைநகரம் லுவாண்டாவைச் சுட்டிக்காட்டுகின்றன புள்ளிவிவரங்கள். என்னடா விசேடம் என்று பார்த்தால் மொஸ்கோவில் நாலாயிரத்தி ஐந்நூறு டொலர் (மாதாந்திர வாடகைக்குக் கிடைக்கக்கூடிய ஒரு அப்பார்ட்மெண்ட்டுக்கு இங்கே பத்தாயிரம் டொலர் கொடுத்தாக வேண்டும். இந்தியாவில் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் ஓரளவு டீசண்ட்டான ஓட்டல் அறை கிடைத்துவிடும். லுவாண்டாவில் அதற்கு ஆறாயிரத்தி முன்னூறு டொலர் கொடுத்தாக வேண்டும். ஒரு ஃபுல் மீல்ஸுக்கு 8 டொலர். சாப்பாடு, போக்குவரத்து, பொழுதுபோக்கு என்று …

  6. இந்தியாவின் அகமதாபாத், ராஜ்கோட்டில் உள்ள மோர்பி மாவட்டத்தில் கொலனி ஒன்றின் வெளிப்புறத்தில் பிண நாற்றம் அடிக்க பொதுமக்கள் பொலிசிடம் புகார் தெரிவித்தனர். அங்கு விரைந்த பொலிஸ் கடுமையான விசாரணையில் இறங்கினர். அப்போது பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பார்தி வானியா என்ற பெண்ணை பொலிசார் சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர். விசாரணைகளில் புதன்கிழமை தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இந்த பார்தி வானியா, தன் கணவன் மகேந்திர தாராசந்த் வானியாவை நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. கணவனைக் கொலை செய்ய கள்ளக்காதலன் சூரிய பிரகாஷுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வரவழைத்துள்ளார். பின் கணவனை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்து கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து கணவனின் உ…

  7. பெலாரஸின் விக்டோரியா அசரென்காவைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு, அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் லூகாஸ்கென்கோவை தெரியாது. டென்னிஸ் போட்டிகளில் பட்டங்கள் பல வென்ற காரணத்தால் பத்திரிகைகள் அதிகம் இ(ப)டம் கொடுத்தன. அதனால் அசரென்காவை அறிவோம். அந்த கிரிகோரிவிச் லூகாஸ்கென்கோ அப்படி என்ன சாதனை படைத்துவிட்டார், அவரை நாம் தெரிந்து வைத்திருக்க? என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. ஜனநாயகம் என்பதே உயிர்மூச்சு என்று உயர்த்திப் பிடிக்கும் ஐரோப்பிய கண்டத்தில் ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என்ற பெயருடன், 1994 முதல் இப்போது வரை அசைக்கமுடியாத அதிபராக இருப்பது சாதனை தானே. சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார் என்று மேற்கத்திய நாடுகள் பலமுறை குற்றம்சாட்டிய போதும், நாட்டின் …

  8. திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளருக்கு அடி, உதை விழுந்தது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள லந்தகோட்டையில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலளார் மலர்வண்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தின் முடிவில் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் மூர்த்தி பேசினார். அப்போது முன்னாள் செயலாளர் மதுராபாண்டி உள்பட சிலர் திடீர் என்று மேடையில் ஏறி மைக்கை பறித்துக் கொண்டு மலர்வண்ணனிடம் தனது மனைவி காஞ்சனா குஜிலியம்பாறை ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் தற்போதைய மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருந்தும் அவரது பெயரை ஏன் நோட்டீஸின் கீழ் பகுதியில் அச்சடித்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து மதுராபாண்டி மலர்வண்ண…

    • 3 replies
    • 3.1k views
  9. திருமணமான ஜோடிகளுக்கு மிகப்பெரும் இன்ப நிகழ்வாக அமைவது ஹனிமூன் என்கிற தேன்நிலவு தான். தம்பதிகள் உல்லாசமாக சில மாதங்களை கழிப்பதே ஹனிமூன். ஆரம்ப காலங்களில் ஹனிமூன் கிடையாது. ஹனிமன்த் தான் இருந்துள்ளது. அதுதான் பின்னாளில் ஹனிமூனாக மாறியதாக கூறுகின்றனர். டியூட்டன் என்ற இன மக்கள் திருமணமான தம்பதிகளுக்கு தேனை முப்பது நாட்கள் கொடுப்பார்களாம். இதைத்தான் ஹனிமன்த் என்று கூறியுள்ளனர். எகிப்து, பாரசீகம், சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் தேனுக்கும், திருமணத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. புதுமண தம்பதிகள் ஒரே கிண்ணத்தில் இருந்து தேன் பருகும் வழக்கம் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் உண்டு. மணமகள் வீட்டு கதவில் தேனை தெளிப்பது கிரேக்க விவசாயிகளின் வழக்கம்.…

  10. தவறாக மாப்பிள்ளைத் தோழனுடன், செக்ஸ் வைத்துக் கொண்ட மணப்பெண். மெல்போர்ன்: சீனாவில் ஒரு கூத்து நடந்துள்ளது. திருமணமானதும், மாப்பிள்ளையுடன் ரகசியமாக சந்திக்க விரும்பி அவர் தங்கியிருந்ததாக நினைத்து மாப்பிள்ளைத் தோழன் தங்கியிருந்த அறைக்குள் போய் அவருடன் உறவு வைத்துக் கொண்டுள்ளார் ஒரு பெண். இருட்டில் நடந்து விட்ட இந்த கூத்தால் தற்போது இரு வீட்டாரும் செம டென்ஷனாகியுள்ளனர். அந்தப் பெண்ணின் பெயரை ஹுவாங் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இவருக்கு சமீபத்தில் திருமணமானது. அன்று இரவு முதலிரவுக்கு முன்பே மாப்பிள்ளயை ரகசியமாக சந்திக்க விரும்பினார் மணப்பெண். இதையடுத்து மாப்பிள்ளையை அங்குள்ள ஒரு அறைக்கு வரச் சொன்னார். அவரும் வந்து காத்திருந்தார். ஆனால் அப்போது இருட்டாக இர…

  11. டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அங்கு இசைக்கப்பட்ட வயலின் ஏலத்தில் 900,000 பவுஸ்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கடந்த 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி இங்கிலாந்தின் சவுத்ஹாம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது பயணத்தை தொடங்கிய ‘டைட்டானிக்' என்ற பயணிகள் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது இசைக்கப்பட்ட வயலின் ஏலம் பயணத்தின் போது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 1500 க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகினர். கப்பல் மூழ்கிய போது அதில் இருந்த இசைக் குழுவினர் வயலின் இசைத்த படியே இருந்தனர். கப்பலில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல் பயணிகளுடன் கடலில் மூழ்கி மரணத்தை …

  12. தமிழர்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு - சீனாவின் வழியில் சிறீலங்கா சீனாவில் மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழந்தைத் திட்டத்தைக் கொண்டுவந்து, இரண்டாவது குழந்தை பெற்றவர்களுக்கு பெருந்தொகையாகத் தண்டப்பணம் அறவிடுவதுடன், பலரை வலுக்கட்டாயக் கருக்கலைப்புக்கும் உட்படுத்திவருகின்றது. இதேவேளை, சிறீலங்கா அரசோ இன அழிப்பு நோக்குடன் தமிழர்களுக்கு மட்டும் கட்டாயக் கருக்கலைப்புச் செய்து வருகின்றது. இதில் தமிழர் தாயகம், மலையகம் என்று வேறுபாடு காட்டாமல் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றி வருகின்றது. கடந்த வாரம் மலையகத்தில் தமிழ்ப் பெண் ஒருவர் கட்டாயக் கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு பரிசோதனை என்ற பெயரில் கந்தப்பள…

  13. நமது நாட்டில் வசதிக்காகவும், சொகுசான வாழ்க்கைக்காகவும் திருடுகிறார்கள். பெரும்பாலும் தங்க நகைகள், பணம் போன்றவைதான் அவர்களின் இலக்கு. ஆனால் தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பெண்களின் கூந்தலை திருடுகிறார்கள். வெனிசுலாவில் நீளமான கூந்தல் கொண்ட பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. மேலும் நீளமான கூந்தல் கொண்டவர்கள்தான் அழகானவர்கள் என்று அங்குள்ள ஆண்கள் கருதுகிறார்கள். இதனால் கூந்தலை நீளமாக வளர்ப்பது அங்குள்ள பெண்களுக்கு பிடித்தமான விஷயம். அதுபோல நீளமாக வளர்க்க முடியாத பெண்கள் சவுரிமுடியை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட கூந்தல் அங்குள்ள கடைகளில் ரூ.2,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவே இயற்கையான கூந்தல் என்…

  14. ரயில் பயணத்தின் போது, தன் சகோதரனை பிரிந்த, ஐந்து வயது சிறுவன், 26 ஆண்டுகளுக்குப் பின், 'கூகுள் எர்த்' இணையதளம் உதவியுடன் தன் வீட்டை அடைந்தார். இதனால், தொலைந்த சிறுவனின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர், சரோ முன்ஷி கான், 26 ஆண்டுகளுக்கு முன், தன், 14 வயது சகோதரனுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் பயணத்தில் தன் அண்ணனை தொலைத்த சரோ முன்ஷி கான், செல்லும் இடம் தெரியாமல், ஊர் ஊராக அலைந்துள்ளார். வீதிகளில் திரிந்த சரோ, அனாதை இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்துள்ளார். சில ஆண்டுகளில், சரோவை அவுஸ்ரேலியாவை சேர்ந்த தம்பதி தத்து எடுத்து சென்றனர். பல ஆண்டுகளாக, தன் வீட்டு நினைவாகவே இருந்த சரோ, 5 வயதில் தன் நினைவில் இருந்தவைகளை மீண்…

    • 4 replies
    • 596 views
  15. வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் எமது நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க - பதிலடி கொடுக்க - எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் - இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயாரத்நாயக்க தெரிவித்தார். இராணுவத் தளபதியாகப் பொறுப்பெடுத்த பின்னர் வட பகுதிக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினருடனான சந்திப்புக்களை முடித்துக் கொண்டு வவுனியா மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். வன்னிப்பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது; சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதுங்கு குழிகளில் இருக்கும…

  16. அமெரிக்காவில், நடுவானில் பறந்த விமானத்தின் கதவு கழன்று, ஹோட்டல் கூரை மீது விழுந்தது. அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தின், மான்டரி விமான நிலையத்திலிருந்து, கடந்த வாரம், சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் வேகமாக பறந்து கொண்டிருந்த போது, திடீரென சத்தம் கேட்டது. இதைஅடுத்து திரும்பி பார்த்த பைலட், விமானத்தின் கதவு காணாதது கண்டு பதற்றம் அடைந்தார். விமானத்தை தாழ்வாக பறக்க செய்து, கதவு எங்கே விழுந்திருக்கிறது, என்று தேடினார். இரண்டு மூன்று முறை வட்டமடித்து தேடி பார்த்தும், கதவு கிடைக்காததால், விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்கி விட்டு, விஷயத்தை, அங்குள்ள அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள, ஹோட்டல் உரிமையாள…

  17. சவுதி அரேபியாவில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், இந்த ஆண்டு, ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பக்ரீதையொட்டி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, உலகம் முழுவதும் இருந்து ஏராளமான முஸ்லிம் யாத்திரிகர்கள், புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு, 32 லட்சம் பேர், பக்ரீத் பண்டிகையின் போது, மெக்காவில் கூடினர். தற்போது, அரேபியாவில், நுரையீரலை பாதிக்கும் வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை, 50 பேர் இந்த காய்ச்சலால், உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவுதி அரசு, நோயாளிகள் பலரை "ஹஜ் பயணத்துக்கு வரவேண்டாம்' என தடுத்து விட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு, ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை, 20 சதவீதம் குறைந்…

  18. செக்ஸ் அடிமை என்பது உண்மையல்ல. ஆய்வில் தகவல் செக்ஸ் அடிமை என்ற வார்த்தையே உண்மையானதல்ல…. அது கூடுதலான உணர்வுதான் என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இயல்பை விட கூடுதலாக செக்ஸ் பற்றி நினைப்பவர்களும், பேசுபவர்களும் இருக்கின்றனர். சிலர் செக்ஸுக்கு அடிமையாகி விட்டதாக நினைக்கின்றனர். உண்மையில் அதீதமான செக்ஸ் உணர்வுகளைக் கொண்டவர்களாக இருக்க முடியுமே தவிர செக்ஸுக்கு அடிமையானவர்களாக அவர்கள் இருக்க முடியாது என்றும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வு கூறுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு இந்த சர்வேயை எடுத்துள்ளது. இந்த ஆய்வுக்காக 39 ஆண்களையும், 13 பெண்களையும் சோதனைக்குட்படுத்தினர். இவர்கள் அதிக அளவில் செக்ஸுக்கு அடிமையானவர்கள் என்று…

    • 9 replies
    • 1.7k views
  19. லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக வெளியான தகவலால் தொல்லியல்துறை அங்கு ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் கேடா என்ற கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற மன்னர் வசித்த கோட்டை இருக்கிறது. அவர் இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரிழந்தவர். தற்போது அந்த மன்னரின் கோட்டை சிதிலமடைந்துள்ளது. ஆனாலும் மன்னரை மக்கள் இன்னமும் மறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளூர் சாது ஒருவர் தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருப்பதாக கூறினார் என்று தெரிவித்தார். ஆனால் இதை யாரும் நம்பத் தயாரில்லை. இருப்பினும் மத்திய இணை அமைச்சர் சரண் தாஸ் …

  20. Zürich” மாநிலத்தில் ,,Stadthaus” என்னும் இடத்தில் நடைபெற்ற இவ் விழாவில் சுமார் 50 சுவிஸ் நாட்டு பிரஜைகள் பங்குபற்றினார்கள். அங்கு நின்ற தமிழர்கள் எங்களுடைய கலாசாரத்தையும், வரலாற்றையும் சுவிஸ் நாட்டு பிரஜைகளுக்கு விளங்கப்படுத்தினார்கள். எங்களுடைய தேசியக் கொடியும் அங்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 4 http://irruppu.com/?p=37706

  21. 1945 ஆம் ஆண்டு பிரிந்த காதல் ஜோடி­யொன்று 70 வரு­டங்கள் கழித்து மீளவும் இணைந்து கொண்ட சம்­பவம் அமெ­ரிக்க கலி­போர்­னியா மாநி­லத்தில் இடம்பெற்­றுள்­ளது. 1945 ஆம் ஆண்டில் 17 வய­தான சக் ரெட் லெவிஸும் 16 வய­தான சான்டி பிரான்சி றிக்­கின்ஸும் கலி­போர்­னிய கடற்­க­ரையில் சந்தித்து முதல் பார்­வை­யி­லேயே காதல் கொண்­டனர். இந்­நி­லையில் சான்­டியின் குடும்பம் லொஸ் ஏஞ்­செல்­ஸுக்கு சென்­ற­தை­ய­டுத்து அவர்­க­ளி­டை­யே­யான காதல் தொடர்பு முறி­வ­டைந்­தது. தொடர்ந்து அவர்கள் இரு­வரும் வெவ்வேறு வாழ்க்கைத் துணை­க­ளுடன் திரு­மண வாழ்வில் இணைந்­தனர். இந்­நி­லையில், தமது வாழ்க்கைத் துணை­களை இழந்து தனி­மையில் வாழ்ந்த லெவிஸும் (85 வயது), சான்­டியும் (84 வயது) 7 வரு­டங்­க­ளுக்கு முன் இலத்…

    • 19 replies
    • 1.1k views
  22. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் பைலட், மாரடைப்பால் சரிந்ததால், அனுபவமில்லாத பயணி ஒருவர், விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். பிரிட்டனின், ஹம்பர்சைட் விமான நிலையத்தில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன், சிறிய ரக விமானம், ஒரு பயணியுடன், கெக்னெஸ் என்ற இடத்துக்கு புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, பைலட்டுக்கு, மார்பில் வலி ஏற்பட்டது. உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும், விமானத்தை ஓட்ட முடியவில்லை என்றும் கூறிவிட்டு, மயங்கி விட்டார். உடனே, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், தரையில் இருந்து, விமானத்தில் இருந்த பயணியிடம், விமானத்தை இயக்குவது குறித்து வழிகாட்டினர…

  23. ரஷ்யாவில் இருந்து ஜப்பானுக்கு, 151 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிரீம்லைனர் விமானத்தின் கழிப்பறைசரியாக செயல்படாததால், அது மீண்டும் மாஸ்கோவில் தரையிறக்கப்பட்டது. இது குறித்து விமான நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாஸ்கோவில் இருந்து டோக்யோ அருகில் உள்ள நரிடா விமான நிலையத்திற்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. இது, 10 மணி நேர பயணமாகும். இந்நிலையில், விமானம் புறப்பட்டு 2 மணி நேரத்தில், மின்சார கோளாறு காரணமாக கழிப்பறையின் கிளட்ச் பழுதாகிவிட்டது. இதனால், பயணிகள் டாய்லெட்டை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், மீண்டும் விமானம் மாஸ்கோவிற்கு திரும்பியது என்றார். சர்வதேச அளவில், பரபரப்பாக பேசப்பட்ட ட…

  24. இலுமினேட்டி தொடர், எதிர் இலுமினேட்டி உறுப்பினர்களால் எதிர்வு கூறப்பட்ட “2012 ஒலிம்பிக் தாக்குதல்” பொய்த்ததன் பின்னர் நிறுத்தப்பட்டது. எனினும், இந்த ஆக்கத்தை எழுதும் எனக்கு ஒரு விடையம் அப்போதே உறுத்தியது. அதாவது “ஒலிம்பிக்கில் தாக்குதல் நடாத்தப்பட உள்ளது” என்ற ஒரு ஐயக்கருத்தை இலுமினேட்ட உறுப்பினர்களே பரப்பினால், எதிர் இலுமினேட்ட உறுப்பினர்கள் நிச்சயமாக அந்த கருத்தை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். அதாவது இவ்வாறான ஒரு தாக்குதல் இலுமினேட்டி எனும் குழுவினால் நடாத்தப்படவுள்ளதாக அறிவிப்பார்கள். அப்படி ஆதாரங்களுடன் அறிவிக்கப்பட்டும், அத்தாக்குதல் நடைபெறாது போனால், “இலுமினேட்டி” என்ற குழு பற்றி மக்களிடையே அரிதாக பரவிவரும் நம்பிக்கை தகவல்கள் அனைத்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.