செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
இலங்கையில் இருந்து... கடல் வழியே, தமிழகம் சென்ற... போலாந்து நாட்டவர் கைது! இலங்கையில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்கு சென்ற போலாந்து நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர் இலங்கையில் குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய குற்றத்தில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து , தண்டனைக்காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது. தமிழகம் வேதாரண்யம் அருகே முனங்காடு பகுதியில் அநாதரவான நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை படகொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த படகானது காற்று அடித்து (பலூன் போன்று) பாவிக்க கூடிய படகு ஆகும். அதில் இருவர் பயணம் செய்ய கூடியவாறு வடி…
-
- 1 reply
- 389 views
-
-
மனைவியை அடிப்பது எப்படி: சவுதியில் ஒளிபரப்பான வீடியோ ஞாயிறு, 15 மே 2016 (18:10 IST) சவுதியில் குடும்ப சிகிச்சை நிபுணர் ஒருவர் மனைவியை அடிப்பது எப்படி என்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வீடியோவில் அந்த சிகிச்சை நிபுணர் கூறியிருப்பதாவது:- மனைவியை அடிப்பது தீங்கு தான், இருந்தாலும் அதனை பாதுகாப்பாக செய்ய வேண்டும். சில பெண்கள் தங்கள் கணவருக்கு கீழ்படியாமல் இருப்பது, கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட காரணம். அல்லா செல்வது போல் முதலில் மனைவிக்கு எடுத்துக் கூற வேணடும். பின்னர், பல்துளைக்கும் கருவியைக் கொண்டு அடிக்க வேண்டும், என்றார். மேலும், இந்த வீடியோ காட்சி, வாஷிங்டனை சார்ந்த மத்திய கிழக்கு மீடியா ஆராய்ச்சி ந…
-
- 0 replies
- 389 views
-
-
சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு. தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. இப்படி உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த தமிழர்களையும் அவர்களுக்காக…
-
- 1 reply
- 389 views
-
-
உலகின் மிகப் பெரிய பொய்யர் உலகின் மிகப் பெரிய பொய்யராக பிரிட்டனைச் சேர்ந்த மைக் நெய்லர் என்பவர் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். ஆனால், இதற்காக அவர் கவலையடையவில்லை. மாறாக, அதை பெருமையாகக் கருதுகிறார். காரணம், பொய் கூறுவதற்கான போட்டியொன்றில் முதலிடம் பெற்றதன் மூலமே உலகின் மிகப் பெரிய பொய்யாக மைக் நெய்லர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உலகின் மிகப் பெரிய பொய்யர் போட்டி (World's Biggest Liar competition ) வருடாந்தம் பிரிட்டனில் நடத்தப்படுகிறது. எழுதி வைத்து வாசிக்காமல் பொய்யான கதையொன்றை நம்பும்படி கூறுவதுதான் போட்டி. இங்கிலாந்தின் மேற்கு கம்பிரியா…
-
- 0 replies
- 389 views
-
-
கனடாவில் போலி மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்கள் மூடநம்பிக்கைகளில் மூழ்கியுள்ளவர்களை குறிவைத்து லட்சக்கணக்கான டொலர்களை கொள்ளையடித்து வருவதாக பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் எட்மோண்டன் மாகாணத்தில் போலி மந்திரவாதிகள் மற்றும் சோதிடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிசாருக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன.மூடநம்பிக்கைகள் மற்றும் போலியான மதச்சடங்குகளை பின்பற்றி வரும் பலவீனமான மக்களை குறிவைத்து அந்த கும்பல் செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்ற மக்களை சந்திக்கும் சோதிடர்கள், அவர்கள் மிக மோசமான சாபத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனை நீக்கி வாழ்க்கையில் சுபிச்சம் உண்டாக வேண்டுமெனில் சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான டொலர்களை பறித்து வரு…
-
- 1 reply
- 388 views
-
-
அமெரிக்காவில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி இந்த படுகொலை இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து விசாரணைகளை நடத்தி வந்த காவற்துறையின் இரண்டு இளைஞர்களை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் குறித்த இலங்கையர் சுட்டுக் கொல்லப்பட்ட வர்த்தக நிலையத்தில் பணியாற்றியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.jvpnews.com/srilanka/111460.html
-
- 0 replies
- 388 views
-
-
வேகமாக நடப்பவர்களுக்காக வீதியில் தனியான வழித்தடம் பிரிட்டனின் லிவர்பூல் நகரத்தில் வீதியில் வேகமாக நடந்து செல்லும் பாதசாரிகளுக்காக தனியான வழித்தடமொன்று (லேன்) திறக்கப்பட்டுள்ளது. மெதுவாக நடந்து செல்பவர்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களால் வேகமாக நடந்து செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்ப்பதே இதன் நோக்கமாகும். லிவர்பூல் நகரத்தின் செயின்ற் ஜோன் வீதியில் நேற்றுமுன்தினம் இந்த வேக நடைபாதை திறக்கப்பட்டது. பிரிட்டனின் முதலாவது வேக நடை பாதை இதுவாகும். லிவர்பூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பொன்றின்படி, பாதையோரங்களில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களால் வேகமாக நடப்பதற்கு …
-
- 2 replies
- 388 views
-
-
மனைவி பிரிந்து சென்ற சோகம்.. உலகின் ஆபத்தான விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரைவிட்ட கணவர்!மனைவி பிரிந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெக்கைச் சேர்ந்த தம்பதி அர்ஸன் வலேவ்-எக்டேரினா கேத்யா. இருவரும் பாம்பு மற்றும் பூனைகள் குறித்த காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சுமார் 4,00,000 க்கும் மேல் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளனர். இதனால் இவர்களின் சேனல் ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலமாக இருந்துள்ளது.அர்ஸன் விலங்குகள் பூங்காவில் பணியாற்றியவர் என்பதால், அதிகமாக பாம்புகள் குறித்த வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளார்.…
-
- 1 reply
- 388 views
-
-
நாயின் காலில் 12 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் கட்டிய வாலிபர்: வெடிக்கும் சர்ச்சை [ சீனாவில் இளைஞர் ஒருவர் நாயின் காலில் ஆப்பிள் வாட்சை கட்டி அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் வாங் ஜியாலின். சிறிது நாட்களுக்கு முன்பு இவரது 27 வயது மகன் வாங் சிகாங் ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார். அந்த படத்தில் நாய் ஒன்றின் இரண்டு கால்களில் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் கட்டப்பட்டிருந்தது. மேலும் உங்களிடம் இந்த வாட்ச் உள்ளதா என்றும் கேட்கப்பட்டிருந்தது. இது சீனாவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே நிலவும் வேறுபாட்டை காட்டுவதாக இணையத்…
-
- 2 replies
- 388 views
-
-
பேதமில்லை…. சண்டே திவயின பத்திரிகையின் ஆசிரியரும் முதுபெரும் ஊடகவியலாளருமான அனுர சொலமனது, மகளின் திருமண வைபவம், கொழும்பு சினமன் கிரான் ஹொட்டலில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இருதரப்பு எம்.பிகளும் பங்கேற்றிருந்தனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/பேதமில்லை/46-216557
-
- 1 reply
- 388 views
-
-
போபால்: பெண்கள் பாலியல் தொந்தரவை எதிர்கொள்வதற்கு, ஆண்களை அவர்கள் தூண்டும் விதமாக பார்ப்பதே காரணம் என்று மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சத்யதேவ் கட்டாரே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,"ஆண்களை தூண்டும்விதமாக பெண்கள் பார்க்காதவரை எந்த ஒரு ஆணும் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதில்லை" என்று கூறினார். அவர் இவ்வாறு பேசும் போது அதே மேடையில், அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் காந்திலால் இதனை கேட்டுக்கொண்டு இருந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி 10 வருடங்களுக்கு முன்பே மாநிலத்தில் ஆட்சியை இழந்தது. தற்போது…
-
- 1 reply
- 387 views
-
-
பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் சொகுசு பேருந்து விபத்து – 17 காயம் November 27, 2020 ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை யாழ்ப்பாணம் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஏற்றிவந்த சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி பளை – ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்து இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்துள்ள 3 பேர் உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். ஏனையோர் பளை வைத்தி…
-
- 0 replies
- 387 views
-
-
அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமானோரை கொலைசெய்த முதியவர் – குற்றத்தை ஒப்புக் கொண்டார்! அமெரிக்காவின் ரெக்ஸாஸைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அந்த நாட்டின் வரலாற்றில் அதிகளவான கொலைகளை செய்தவர் என்று அறியப்பட்டுள்ளார். 79 வயதான சாமுவெல் லிட்டில் (Samuel Little) என்ற குறித்த முதியவர் 93 பேரை கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். 1970 க்கும் 2005 க்கும் இடைப்பட்ட காலத்திலேயே அவர் இந்த கொலைகளைச் செய்ததாக தெரியவந்துள்ளது. அவரால் கொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்களாவர். அவர் கொலை செய்ததாகக் கூறப்பட்ட பெண்களின் உயிரிழப்புகள் போதைப்பொருள் காரணமாகவும் விபத்துகளால் நிகழ்ந்ததாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. 2014 ஆம் ஆண்டில் அவர் மூன்று கொலைகளுடன் தொடர்புபட்டிருந்த நி…
-
- 1 reply
- 387 views
-
-
ஒரு தவறினால் இரண்டு ஜெக்பொட் வென்ற அவுஸ்திரேலியர் அதிர்ஷ்ட லாபச் சீட்டொன்றில் தவறுதலாக ஒரே இலக்கங்களைப் பதிவுசெய்த அவுஸ்திரேலியருக்கு, ஒரே நேரத்தில் இரண்டு ஜெக்பொட் பரிசுகள் கிடைத்துள்ளன. மெல்போனைச் சேர்ந்த இவர், எதேச்சையாக அதிர்ஷ்ட லாபச் சீட்டு நிலையம் ஒன்றுக்குள் நுழைந்திருக்கிறார். அங்கே லொட்டோ வகையான - வாடிக்கையாளர் விரும்பும் இலக்கங்களைத் தெரிவுசெய்யும் - அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் இரண்டை வாங்கினார். தவறுதலாக, ஒரே இலக்கங்களையே இரண்டு சீட்டுக்களிலும் புள்ளடியிட்டுச் சமர்ப்பித்தார். ஒரு வாரத்தின் பின், அதாவது கடந்த நான்காம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில், இவர் குறிப்பிட்டிருந்த அதே இலக்கங்கள் வெற்றிபெற்றன. இதையடுத்து, அவருக்கு…
-
- 0 replies
- 387 views
-
-
நாய்களும் மனிதர்களும் முத்தமிட்டுக்கொள்ளும் காதலர் தினப் போட்டி அமெரிக்க ஒரேகன் மாநிலத்திலுள்ள போர்ட்லான்ட் நகரில் காதலர் தினத்தை முன்னிட்டு நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் முத்தமிடும் போட்டி இடம்பெற்றது. அங்கு 9ஆவது வருடமாக இடம்பெற்ற இப்போட்டியில் பியயு என்ற 12 வயது நாய் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாய் தனது உரிமையாளரான லிண்டா வால்டனை 45.8 செக்கன்கள் தொடர்ந்து முத்தமிட்டுள்ளது. இதில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சன்னி என்ற நாயும் மூன்றாம் இடத்தைப் பெற்ற டஜன்கோ என்ற நாயும் முறையே 16.8, 11.7 செக்கன்கள் முத்தமிட்டுள்ளன. http://www.virakesari.lk/article/interesting.php?vid=80
-
- 0 replies
- 387 views
-
-
கனடாவில்(Canada) வங்கிக் கொள்ளையில் ஈடுபட முயற்சித்த திருடனின் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொன்றியல் வங்கியின் கிளையொன்றில் புகுந்த நபர் ஒருவர் வங்கிப் பணியாளரை அச்சுறுத்தி பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளார். கொள்ளை சம்பவம் இதன்போது, துப்பாக்கி இருப்பதாகக் கூறி வங்கிப் பணியாளரை கொள்ளையர் அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில், சக வங்கிப் பணியாளர்கள் குறித்த கொள்ளையரை தடுக்க முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது கொள்ளையரினால் பணம் கொள்ளையிட முடியவில்லை எனவும் வெறும் கையுடன் வங்கியை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுக…
-
-
- 3 replies
- 387 views
- 1 follower
-
-
7 செப்டெம்பர் 2024 அமெரிக்காவில் இரவில் காணாமல் போன 3 வயது குழந்தை 100 ஏக்கர் மக்காச்சோள தோட்டத்திற்குள் தன்னந்தனியாக தவித்ததை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர். விஸ்கான்சின் மாகாணத்தின் ஆல்டோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8:49 மணிக்கு தங்கள் 3 வயது மகனை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். வீட்டின் பின்புறம் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் குழந்தை சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தெர்மல் இமேஜிங் டிரோன் மூலம் குழந்தையை தேடிய நிலையில், ஒரு மணிநேர தேடுதலுக்குப் பின் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. எந்த காயமும் இன்றி குழந்தை மீட்கப்பட்டு பெற்றோர…
-
-
- 1 reply
- 387 views
- 1 follower
-
-
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை குடிமக்கள் தாய் நாட்டிற்கு அனுப்பிய பணம் எவ்வளவு? வெளியான புள்ளிவிபரம் [ செவ்வாய்க்கிழமை, 16 யூன் 2015, 07:33.21 மு.ப GMT ] ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட குடிமக்கள் தங்களின் தாய்நாடுகளுக்கு அனுப்பியுள்ள பணம் தொடர்பான புள்ளிவிபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் குடியேறி பணிபுரிந்து வரும் வெளிநாட்டினர்கள் கடந்த 2014ம் ஆண்டு தங்களது தாய் நாடுகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பியுள்ளார்கள் என்ற புள்ளிவிபரத்தை International Fund for Agricultural Development (IFAD) நேற்று வெளியிட்டது. இந்த புள்ளிவிபரத்தில், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்கு கடந்தாண்டு அனுப்பப்பட்ட ஒட்டு மொத்த தொகையானது 109 பில்லியன் டொல…
-
- 0 replies
- 387 views
-
-
துளசி இலைகள் புற்றுநோயை போக்கும் என்ற செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சிக்கு £ 25000 அபராதம் 1 ஆகஸ்ட் 2015பகிர்க துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு ஆகிய இவ்விரண்டும் புற்றுநோயை தவிர்க்கும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலை ‘யோகா பார் யூ’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பிய, ஆசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருபத்தி ஐயாயிரம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துளசி இலைகளும் கறுப்பு மிளகும் புற்றுநோயை குணமாக்கும் என அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது.இது ஆதாரமற்ற, நிரூபிக்கப்படாத ஒரு மருத்துவ ஆலோசனை என்று தெரிவித்துள்ள பிரிட்டனின் ஒளிப்பரப்பு துறை கண்காணிப்பு அமைப்பான ஆப்காம், நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இந்த தகவல் அமைந்துள்ளது என்…
-
- 1 reply
- 387 views
-
-
பேனாவைக் களவெடுத்த செக் நாட்டின் அதிபர் சிலி நாட்டுக்கு விஜயம் செய்த செக் நாட்டின் அதிபர் வக்லேவ் கிளவுஸ் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். அத்தருணம் அவர் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பேனாவை கச்சிதமாக திருடி பாக்கட்டில் மறைத்துக் கொண்டார். இந்தக் காட்சியை அங்கிருந்த படப்பிடிப்பாளர் பதிவு செய்துள்ளார். செக் நாட்டின் தொலைக்காட்சி அதிபரின் திருட்டுப் புத்தியை பகிரங்கமாக வெளியிட்ட பின்னர் இது யூரூப்பில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. சிலி நாட்டின் பிரதமர் செபஸ்டியான் பினிரா அதிபரை மக்களுக்கு அறிமுகம் செய்தபோதே இந்தத்திருட்டு நிகழ்வு இடம் பெற்றது. இந்த ஒளிப்படத்தை இதுவரை அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துவிட்டார்கள். தற்போது 63 வ…
-
- 0 replies
- 387 views
-
-
செய்த தவறுக்காக மரணத்தை எதிர்பார்த்து 20 வருடங்களாக மயானத்தில் வாழும் வயோதிபர்: குருநாகலில் சம்பவம் தனது மரணத்தை எதிர்பார்த்து 20 வருடங்களாக வயோதிபர் ஒருவர் கல்லறையில் வாழும் அதிசய சம்பவம் குருநாகல் கல்லேவெல, கலாவெவ பிரதான வீதியின் பெலியகந்த பகுதியில் பதிவாகியுள்ளது. 75 வயதுடைய ரணவிர ஆராச்சி தொன் டேவிட் என்ற வயோதிபரே இவ்வாறு கல்லறையில் வாழ்ந்து வருகிறார். குறித்த நபர் தனக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விபரிக்கையில், 'நான் நாட்டின் பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோகராக பணியாற்றி வந்தேன். அநுராதபுரத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, தனது அலுவலகத்தில் வைத்து மாட்டிறைச்சி கடை உரிமையாளரிடம் 300 ரூபாவை இலஞ்சமாக பெற்றேன். அக்காலத்தில் 30…
-
- 0 replies
- 387 views
-
-
Zürich” மாநிலத்தில் ,,Stadthaus” என்னும் இடத்தில் நடைபெற்ற இவ் விழாவில் சுமார் 50 சுவிஸ் நாட்டு பிரஜைகள் பங்குபற்றினார்கள். அங்கு நின்ற தமிழர்கள் எங்களுடைய கலாசாரத்தையும், வரலாற்றையும் சுவிஸ் நாட்டு பிரஜைகளுக்கு விளங்கப்படுத்தினார்கள். எங்களுடைய தேசியக் கொடியும் அங்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 4 http://irruppu.com/?p=37706
-
- 0 replies
- 386 views
-
-
மன்னார் மாவட்டம் தபால்மூல தேர்தல் முடிவு இலங்கை தமிழரசுக் கட்சி 1300 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 408 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 135 http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 386 views
-
-
கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் முன்னாள் கணவர் அதிபன் போஸ் இப்போது சாமியார் ஆகி விட்டார். கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் முன்னாள் கணவன் அதிபன் பிரபல தொழிலதிபராக விளங்கினார். இப்போது அமெரிக்காவில் காவி வேட்டி கட்டி சாமியாரக செட்டிலாகி விட்டார். இப்பொது தமிழ்நாட்டிலும் ஆன்மீக கருத்துக்களை பரப்ப இருக்கிறார். அமெரிக்காவில் தனக்கு ஒரு லட்சம் சீடர்கள் இருப்பதாக கூறும் இவர் சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் “சிறு வயதிலிருந்தே எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டு. கனிமொழியுடன் திருமணம் நடந்த பிறகு என் வாழ்வில் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்து, என் ஆத்மா என்னை விட்டு வெளியேறியது ப…
-
- 0 replies
- 386 views
-
-
இத்தாலியில் வெரோனா நகரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தன்னுடன் இருந்த இரண்டு பெண் பிள்ளைகளை இலங்கைத் தாய் ஒருவர் கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது வரை கொலைக்கான காரணம் கண்டுப்பிடிக்கப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இலங்கையை பூர்வீகமாக கொண்ட 33 வயதுடைய சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்பவர் தனது சாபதி (11 வயது) மற்றும் சாந்தனி (03 வயது) மகள்களுடன் ஜனவரி மாதம் முதல் இத்தாலியில் வெரோனா நகரத்தில் வசித்து வந்துள்ளார். வெனிஸ் சிறுவர் நீதிமன்ற உத்தரவின் கீழ் இரு பிள்ளைகளும் அவர்களின் தந்தையிடமிருந்து பிரிந்து தாயுடன் வசித்து வந்துள்ளார்கள். இந்நிலையில், நேற்று காலை குறித்த இரு பிள…
-
- 3 replies
- 386 views
-