Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றின் சில பக்கங்களை ஈழத் தமிழர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். இந்திய விடுதலைக்காக ஒரு தேசிய இராணுவத்தை அமைத்து, அதனை வழிநடாத்திய சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது வரலாறு தேசியத் தலைவர் அவர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தித் தம்மை அர்ப்பணித்த உயர்வான இந்தியர்களது வரலாறுகள் சில எமக்கும் படிப்பினையாக உள்ளன. அந்த வகையில், நாம் படிக்க வேண்டிய வரலாற்று மனிதராக உதம் சிங் அவர்களைக் கற்றுக்கொள்ளலாம். அவரது கோபமும், அதன்மீதான நியாயமும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட பாதையும், பழிவாங்கலும், அவரது மரணமும் அவரைக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையை எமக்கு ஏற்படுத்துகின்றது. …

  2. யாழ்.நகர் மத்தியில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்த நாய் : February 10, 2022 யாழ்.நகர் மத்தி பகுதியில் இன்றைய தினம் கட்டாக்காலி நாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு கடித்துள்ளது. யாழ்.நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் இன்று வியாழக்கிழமை மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது. அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு இரண்டு கால்களிலும் நாய் கடித்துள்ளது. அதேவேளை அப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை குறித்த நாய் கடித்துள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனுக்கு அறிவிக்…

  3. சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் சுமார் 25 கோடி இந்தியர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பயனடையும் வகையில், கட்டணம் ஏதுமின்றி பேஸ்புக் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பணப்பரிமாற்றம் செய்துக் கொள்ளும் புதிய சேவையை கோட்டக் மஹிந்திரா நிதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தனது நண்பருக்கு பணம் அனுப்ப விரும்பும் ஒருவர், இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘கேபே’ (kaypay) இணையத்தில் உடனடியாக கணக்கு தொடங்கி, தனது எந்த வங்கிக் கணக்கில் இருந்து, யாருக்கு, எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும்? என்று தெரிவித்தால் போதும். அந்த தொகையை பெற்றுக் கொள்ளும் நண்பர் ‘கேபே’ இணையத்தில் உறுப்பினராக இல்லாதபோதிலும், அவருக்கு உடனடியாக பணம் கிடைத்துவிடும். பணத்தை பெற்றுக் கொள்ளும் நபரும் இந்த இணையத்தில் உறுப்பினராக இருக்கு…

  4. கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற பஸ்ஸொன்றில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பல்கலைக்கழக மாணவிக்கு தமது அந்தரங்கத்தைக் காட்டி தொந்தரவு செய்த நபரொருவரை மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவி ஏனைய பயணிகளுக்கு இது குறித்து தெரிவித்ததை அடுத்து பயணிகளும் பஸ் சாரதியும் சம்பந்தப்பட்ட நபரை நையப்புடைத்து மஹபாகே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர் மஹபாகே பொலிஸார் வத்தளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=4567

  5. தமிழ்க் கொலை... எம்.செல்வராஜா ஊவா மாகாண கல்வி அமைச்சில், தமிழ்ப் பிழை இடம்பெற்றுள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ள கல்வி அதிகாரிகள், சியாம்பளாண்டுவை, கோட்ட கல்வி செயலகக் கடிதத் தலைப்பில், “கோட்ட கல்விச் செயலகம்” என்பதற்குப் பதிலாக,“கெட்ட கல்வி காரியாலயம் சியம்பளாண்டவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டினர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்தப் பிழையைத் திருத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தமிழ்க்-கொலை/46-212123

  6. பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பமாக இருப்பது உண்மைதான் என அந்நாட்டில் வெளியாகும் வாரப்பத்திரிகை ஒன்று பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய இளவரசி மூன்றாவது குழந்தைக்கு தயாரா என சில வாரங்களுக்கு முன்னர் எழுந்த பரபரப்பிற்கு தற்போது ஒரு பதில் கிடைத்துள்ளது. குட்டி இளவரசியான சார்லோட் பிறந்து 4 மாதங்களுக்கு பிறகு இந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இளவரசர் வில்லியமும், இளவரசி கேட் மிடில்டன்னும் அடைகாத்து வந்த ரகசியத்தை அந்நாட்டில் வெளியாகும் ஸ்டார் என்ற வாரப்பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. பத்திரிகைக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதில், இளவரசி 3-வது முறையாக கர்ப்பமாக இருப்பது உண…

  7. தமிழகத்தில் ஆறு மாதமாக கோமாவில் இருந்த நபருக்கு நினைவு திரும்பியதால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளவிட்ட நண்பர்களை அடையாளம் காட்டியுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் நல்லவனம்பேட்டையை சேர்ந்தவர் பூபாலன்(23), இவரது நண்பர்கள் வெங்கடேசன்(39), சம்பந்தம்(24).இவர்கள் மூன்று பேரும் சென்னையில் ஹொட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்க்கின்றனர்.கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி மூன்று பேரும் வேலை முடித்துவிட்டு சென்ட்ரலில் இருந்து ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது வில்லிவாக்கம்- கொரட்டூருக்கு இடையே ரயில் சென்ற போது பூபாலன் தவறி கீழே விழுந்தார், உடனடியாக ரயிலை நிறுத்திய பயணிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயமடைந்ததால் பூபாலன் கோமா நிலைக்கு சென்றார்.…

  8. பிலிப்பைன்ஸ் மாணவர்கள் விநோத முறையில் பரீட்சை பிலிப்பைன்ஸ் நாட்டில் பரீட்சையின்போது மோசடி இடம்பெறாத வண்ணம் மாணவர்கள் வித்தியாசமான முறைகளில் தொப்பிகள் அணிந்து பரீட்சை எழுதியுள்ளனர். பரீட்சை எழுதும் போது சக மாணவர்கள் பார்த்து எழுதுவதை பார்க்க முடியாத வகையில் பிலிப்பைன்ஸிலுள்ள லேகாஸ்பி நகரிலுள்ள பைகோல் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியால் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய மாணவர்கள் சாதாரணமான தொப்பி அணியாது விதவிதமான வித்தியாசமான தொப்பிகளை தயாரித்து பரீட்சை நிலையத்துக்கு வந்து பரீட்சை எழுதியுள்ளனர். சாதாரண வடிவமைப்பு முறையில் தயாரிக்குமாறு ஆலோசனை வழ…

  9. உலகிலேயே மிகவும் வயதான மூதாட்டியாக அறியப்பட்ட ரஷ்யாவை சேர்ந்த 123 வயது மூதாட்டி உயிரிழந்தார். அஸ்ட்ரகான் பகுதியை சேர்ந்த தன்சில்யா பிசம்பெயேவா என்ற மூதாட்டி தான் உலகிலேயே மிகவும் அதிக வயதானவர் என்று நம்பப்படுகிறது. 1896 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் அவர் பிறந்ததாக கருதப்படுகிறது. அந்த மூதாட்டிக்கு 10 பேரக்குழந்தைகள், 13 கொள்ளுப்பேரக்குழந்தைகள், 2 எள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். தனது 123 வது வயதில் அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது உடல் குடும்பத்தினருக்கான கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டதாகவும், கிராம மக்கள் அனைவரும் இறுதிச்சடங்கில் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. https://www.polimernews.com/…

  10. சிங்களவர்களை நெகிழ வைத்த தமிழ் பெண் Vhg ஜூலை 27, 2024 திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். பணமில்லாத ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே பதிவிடப்பட்டுள்ளது. தினமும் அன்னதானம் வழங்கும் ஷீலாம்மா என்ற பெயரில் இந்த பதிவை சிங்கள இளைஞன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மனிதாபிமான செயல் “பதவியில் இருந்து திருகோணமலை செல்லும் போது இக்பால் நகர் என்ற இடத்திலேயே இந்த மனிதாபிமானமிக்க பெண்ணை சந்தித்தேன். வீதிக்கு அருகிலுள்ள சிறிய குடிசை ஒன்றில், மிகவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. தமிழர்களின் சுவையில் வழங்கப்பட்ட உணவ…

    • 1 reply
    • 376 views
  11. பூனைக்குட்டி என நினைத்து சிறுத்தை குட்டியை பிடித்த ஹட்டன் ரயில்வே ஊழியர்கள் (நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்) பூனைக்குட்டி என நினைத்து சிறுத்தை குட்டி ஒன்றைப் பிடித்த ஹட்டன் ரயில் கடவை ஊழியர்கள் பின்னர் அதனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் சனிக்கிழமை இரவு ஹட்டனில் இடம்பெற்று ள்ளது. ஹட்டன் அஜந்தா விடுதிக்கு அருகில் ரயில் கடவை பகுதியில் தனியாக சுற்றி திரிந்த சிறுத்தைக் குட்டியே பிடிக்கப்பட்டது. பூனைக் குட்டி ஒன்று ரயில் கடவையில் காணப்படுவதாக நினைத்த ஹட்டன் ரயில் கடவ…

  12.  ‘குமரிக்கு’ பெயரில்லை 1998ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தை, வளர்ந்து பெரியவளாகி, 19 வயதைப் பூர்த்தியடைந்த போதிலும் அப்பெண்ணுக்கு, இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இவ்வாறான மிகமிக விசித்திரமான சம்பவமொன்று, மலையகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பெண், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதியன்று தனது 20 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடவிருக்கின்றார். இந்நிலையிலேயே, அப்பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அப்பெண்ணின் பெற்றோர் முயற்சித்துள்ளனர். அந்த முயற்சியின் பயனாக, எமது காரியாலயத்துடன் நேற்று (21) அலைபேசியில் தொடர்புகொண்ட, அப்பெண்ணின…

  13. கழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கழுதைகளுக்கு வர்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக எகிப்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. படத்தின் காப்புரிமைMAHMOUD A SARHAN உடல் மீது கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்ட கழுதை ஒன்றின் படம் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருவதைத் தொ…

  14. ) சாமான்யர்களுக்கு ஆதரவாக இணையம் எத்தனையோ முறை ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறது. ஆதரவு தெரிவித்திருக்கிறது. நிதி திரட்டி தந்திருக்கிறது. நியாயம் பெற்றுத்தந்திருக்கிறது. இப்போது அமெரிக்காவில் பிட்சா நிறுவன ஊழியர் ஒருவருக்காக இது எல்லாவற்றையும் செய்திருக்கிறது. பணியின் போது டிப் மறுக்கப்பட்டு அவமதிப்பிற்கும் இலக்கான பிட்சா நிறுவன ஊழியருக்காக தான் இப்படி அறிமுகம் இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து 20 ஆயிரம் டாலருக்கு மேல் அள்ளி கொடுத்திருக்கின்றனர். இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் இந்த கதையில் நடந்தது இது தான். ஜாரிட் டான்சே அமெரிக்காவின் மாசாசூட்ஸில் உள்ள வெஸ்ட்போர்டில் இருக்கும் பேலஸ் பிட்சாவில் பணியாற்றுபவர். சமீபத்…

  15. எதியோப்பியாவில் வாகன போக்குவரத்து எப்படி இருக்கும்? https://www.facebook.com/video.php?v=10203666721061359

  16. தமிழர்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு - சீனாவின் வழியில் சிறீலங்கா சீனாவில் மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழந்தைத் திட்டத்தைக் கொண்டுவந்து, இரண்டாவது குழந்தை பெற்றவர்களுக்கு பெருந்தொகையாகத் தண்டப்பணம் அறவிடுவதுடன், பலரை வலுக்கட்டாயக் கருக்கலைப்புக்கும் உட்படுத்திவருகின்றது. இதேவேளை, சிறீலங்கா அரசோ இன அழிப்பு நோக்குடன் தமிழர்களுக்கு மட்டும் கட்டாயக் கருக்கலைப்புச் செய்து வருகின்றது. இதில் தமிழர் தாயகம், மலையகம் என்று வேறுபாடு காட்டாமல் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றி வருகின்றது. கடந்த வாரம் மலையகத்தில் தமிழ்ப் பெண் ஒருவர் கட்டாயக் கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு பரிசோதனை என்ற பெயரில் கந்தப்பள…

  17. யு.எஸ்.- ரென்னிஸ்சி என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் கர்பினியாக இருக்கும் போது பயங்கரமான கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது. கோமா நிலையில் இருந்த இப்பெண் கடந்த புதன்கிழமை கண்விழித்தார். அப்போது தான் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டார். சரிஸ்டா ஜில்ஸ் என்ற 20-வயதுடைய இவரின் குடும்பத்தினர் இரண்டு அதிசயங்களை கொண்டாடினர். பெற்ற தாய் கண் திறந்ததோடு தனது குழந்தையையும் பார்த்தது என்பனவாகும். நான்கு மாத கர்ப்பினியாக இருக்கும் போது டிசம்பர் மாதம் கார் விபத்து நடந்து கோமா நிலைக்காளானார். வைத்தியர்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் தாங்கள் நம்பிக்கையோடு இருந்ததாகவும் சரிஸ்டாசவின் உறவினர் தெரிவித்…

    • 0 replies
    • 375 views
  18. மிக அரிதான நாசி ஜெர்மனி காலத்தில் வடிவமைக்கப்பட்ட 'போர்ஸ்சா' மோட்டார் வாகன ஏல விற்பனையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனது ஏலம் தடைப்பட்டது கோரப்பட்ட தொகை 17 மில்லியன்கள் திரையில் 70 மில்லியன்கள் என காட்டப்பட்ட பொழுது அந்த தவறு உணரப்பட்டு ஏலம் நிறுத்தப்பட்டது.

  19. சவுதி அரேபியாவில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், இந்த ஆண்டு, ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பக்ரீதையொட்டி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, உலகம் முழுவதும் இருந்து ஏராளமான முஸ்லிம் யாத்திரிகர்கள், புனித பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு, 32 லட்சம் பேர், பக்ரீத் பண்டிகையின் போது, மெக்காவில் கூடினர். தற்போது, அரேபியாவில், நுரையீரலை பாதிக்கும் வைரஸ் காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை, 50 பேர் இந்த காய்ச்சலால், உயிரிழந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவுதி அரசு, நோயாளிகள் பலரை "ஹஜ் பயணத்துக்கு வரவேண்டாம்' என தடுத்து விட்டது. இதன் காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு, ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை, 20 சதவீதம் குறைந்…

  20. கடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு September 22, 2019 அமெரிக்க இளைஞர் ஒருவர் தன்சானியாவில் கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த முயன்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர் என்பவர் தன் தோழி கெனிஷாவுடன் தன்சானியாவில் உள்ள பெம்பா தீவில் தண்ணீருக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந’;தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்பதைக் கவித்துவமாகக் கேட்க விரும்பிய அவர் நீருக்குள் இதனைக் கேட்க முடிவு செய்து தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் நீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தை எடுத்த …

  21. ஹாகிங் அளித்த ஆறுதல்! விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் வியக்க வைக்க வைத்துகொண்டே இருக்கிறார். மோட்டார் நியூரான் பாதிப்பால் அவரது குரலையும், உடல் அசைவுகளையும் தான் முடக்க முடிந்திருக்கிறதே தவிர அவரது சிந்தனையை அல்ல. 70 வயதை கடந்த நிலையிலும் அவரது அறிவியில் மூளை சுறுசுறுப்பாக இருக்கிறது. சக்கர நாற்காலியில் வலம் வந்தாலும் சாப்ட்வேர் துணையோடு தனது விஞ்ஞான கருத்துக்களை உற்சாகமாக உலகுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் ஹாகிங் ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா அரங்கில் ஹோலோகிராம் வடிவில் உரை நிகழ்த்தினார். அதாவது பிரிட்டனில் அவர் வசிப்பிடத்தில் இரண்டு காமிராக்கள் மூலம் அவர் பேசுவது படமாக்கப்பாட்டு அந்த காட்சி சிட்னியில் ஹோலோகிராம் வடிவில் தோன்றியது. ஹாகிங்கின் மகள் லூசி இந்த உரைக்கா…

  22. 1948இல் இலங்கை சுதந்திரமடைந்த போது 47இல் உருவான சோல்பரி அரசியலமைப்பே நடைமுறையிலிருந்தது. தற்போது 13+ ஆக மாறியிருக்கும் செனட் சபையும் முதன் முதலாக அந்த நாட்களிலேயே உருவாக்கப்பட்டது. 30 பேர் கொண்ட சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 செனட்டர்களும் கவர்னர் ஜெனரலால் நியமிக்கப்பட்ட 15 பேரும் அங்கம் வகித்தார்கள். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக எஸ்.நடேசன், டொக்டர் நாகநாதன், பெரி.சுந்தரம் அவர்களும், நியமிக்கப்பட்ட தமிழ் செனட்டர்களாக சி.குமாரசுவாமி, சேர் சிற்றம்பலம் கார்டினர் மற்றும் முதலியார் ஏ.பி.இராஜேந்திராவும், அத்தோடு தெரிவு செய்ப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்களாக சேர்.ரசீக் பரீட்டும், சேர் முஹம்மட் மாக்கான் மாக்கரும் சுதந்திர இலங்கையின் முதலாவது செனட் சபையில் பங்குபற…

  23. வாரணாசி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் உள்ள விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. சாமி சிலையை பக்தர்கள் யாரும் தொட வேண்டாம் என அர்ச்சகர் கேட்டுக்கொண்டுள்ளார். சீனாவில் உருவான, 'கொரோனா' வைரஸ், இன்று சர்வதேச நோயாகி இருக்கிறது. இந்தியா உட்பட, 100க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டம் காண செய்துள்ளது. இந்நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் ஒருவர் சாமி சிலைகளுக்கு முகக்கவசம் அணிவித்துள்ளார். பக்தர்கள் யாரும் சாமி சிலையை தொடவேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து அர்ச்சகர் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறுகையில், கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விஸ்வநாதர் சிலைக்கு ம…

    • 0 replies
    • 374 views
  24. ‘என் கடவுளே, என்ன நடந்தது?’ டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசியம் கசிந்தது! பிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. டயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்த இரகசியம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ள பரிஸ் தீயணைப்பு வீரர் Xavier Gourmelon, ‘1997 ஆம் ஆண்டில் பரிஸில் உள்ள ஆல்மா சுரங்கப்பாதையில் இளவரசி சென்ற விபத்துக்குள்ளான போது, சம்பவ இடத்திற்கு சென்ற அவசர உதவி சேவை வீரர்களில் நானும் ஒருவர். கார் விபத்துக்குள்ளாகி இருந்தது, வழக்கமான வீதி விபத்து …

  25. எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி! வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப் பகுதியில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி நேற்று இறந்து பிறந்துள்ளது. இதனைப் பார்வையிட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு அதிகமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/எட்டுக்கால்களுடன்-இறந்த/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.