செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
உலகில் உள்ள அனைத்து கிரிக்கட் வீரர்களின் வீடுகளில் சிறந்த 10 வீரர்களின் வீடுகளை Cric traker சஞ்சிகை வரிசைப்படுத்தி உள்ளது. உலக பணக்கார நாட்டு வீரர்களின் வீடுகளுடன் ஒப்பிட்டு இலங்கை வீரர் சங்ககாரவின் கண்டி வீடும் Top 10 இல் உள்ளடக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிஸ் கெய்ல் : ஜமைய்க்கா கிங்க்ஸ்டன் நகர் ( பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்) ஷேன் வோர்ன் : அவுஸ்திரேலியா பிரைட்டன் சச்சின் : மும்பாய் பிரட்லீ: அவுஸ்திரேலியா டேவிட் வார்னர்: அவுஸ்த்திரேலியா – கோர்டன் போக் ( 6 மில்லியன் அமெரிக்க டொலர்) குமார் சங்ககார: Engeltine Cottage என வர்ணிக்கப்படும் சங்ககாரவின் இந்த வீடு கண்டி லேக் ரவுண்ட் மேல் பகுதியில் அமைந்துள்ளது…
-
- 0 replies
- 340 views
-
-
முஸ்லீம்கள் வடக்கில் மீளக் குடியேற தமிழ்த் தரப்பில் எந்தத் தடையும் இல்லை – தடை என்பது அபாண்டமான குற்றச்சாட்டு:-சீவீகே சிவஞானம் காணிகளை மட்டும் அல்ல சுடலைகளை கூட கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளனர் என அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தி அலை நிகழ்ச்சியில் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர் சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நடராஜா குருபரனால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு காரசாரமான பதிலை அளித்த அவர் முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் குறித்து தெரிவித்த போது முஸ்லீம்கள் வடக்கில் மீளக் குடியேற தமிழ்த் தரப்பில் எந்தத் தடையும் இல்லை தடை என்பது அபாண்டமான குற்றச்சாட்டு என சீவீகே சிவஞானம் தெரிவித்துள்ளார். மிகுதியை ஒலிவடிவில் கேளுங்கள…
-
- 0 replies
- 340 views
-
-
களுத்துறை 16 வயது யுவதி மரணம்-நீதிமன்றத்தின் உத்தரவு! களுத்துறையில் 16 வயது யுவதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 29 வயதான பிரதான சந்தேகநபரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை, உயிரிழந்த யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு வந்த அழைப்புகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்ததாக விசாரணைகளை முன்னெடுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி…
-
- 6 replies
- 340 views
- 1 follower
-
-
யாழ்.கொக்குவில் கலட்டி சந்திப் பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த முகாம் காணியினுள் இராணுவத்தினரால் புத்தர் கோவில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்தமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சமாதான காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களைக் கண்காணிப்பதற்காக யாழ்.பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த குறித்த பகுதியில் இராணுவத்தினரால் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட அப்பக்கடை பல்கலைக்கழக மாணவர்களால் அடித்துச் சேதமாக்கப்பட்டிருந்தமையும் தெரிந்ததே. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ முகாமின் ஒருபகுதிக்காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியிருக்கின்றனர். இராணுவத்தினர் வெளியேறியதை அ…
-
- 0 replies
- 340 views
-
-
வலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்து நெகிழ வைத்த 11 வயது மகன்! நியூயார்க்: பிரசவ வலியால் கதறித்துடித்து கொண்டிருந்த தாயின் அருகில் இருந்து, அவருக்கு ஆறுதலும், தைரியமும் அளித்து அவர் குழந்தை பெற்றெடுக்க உதவியாக இருந்துள்ளான் அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன். அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள மரியேட்டா பகுதியை சேர்ந்தவர் கென்யார்டா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு குறிப்பிடப்பட்டிருந்த தேதிக்கு முன்னதாகவே திடீரென பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது. அப்போது வீட்டில், அவருடைய 11 வயது மகனை தவிர யாரும் துணைக்கு இல்லாததால் அவர் வேதனையால் துடிதுடித்துப் போயுள்ளார். அந்த நேரத்தில், பிரசவ வலியால் தனது தாய் கதறி துடித்துக்கொண்டிருப்பதை வீட்டில் விளையாடிக் கொண்டி…
-
- 1 reply
- 340 views
-
-
ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்: 6பேர் காயம் வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் ரிஷாட் பதியூதீன் மற்றும் மஸ்தான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 6 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம்- மெனிக்பாம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரசாரகூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு சாளம்பைக்குளம் பகுதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி வேட்பாளர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் சென்றிருந்த போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த பகுதிக்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி வேட்பாளரான ரிஷாட் பதியூதீனின் ஆதரவாளர்கள், மஸ்தானின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்…
-
- 0 replies
- 340 views
-
-
பற்றிஸினுள் தங்கமோதிரம் : காத்தான்குடியிற்கு போட்டியா.? மட்டக்களப்பு நகரில் உள்ள உணவகம் ஒன்றில், உணவருந்த சென்றவருக்கு பற்றீஸினுள் தங்கமோதிரம் ஒன்று கிடைத்து உள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த ரவி என்டன் என்பவர் வாங்கிய பற்றீஸினுள்ளே இவ்வாறு தங்க மோதிரம் இருந்துள்ளது. இதேவேளை, குறித்த மோதிரத்தை தான் திருப்பிகொடுக்க தயாராக உள்ளதாகவும் உரிய நபர்கள் சரியான ஆதாரங்களை முன்வைத்து பெற்றுக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் காத்தான்குடி உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை, இரும்பு ஆணி போன்றதனை வாடிக்கையாளர்கள் பெற்றதை தொடர்ந்து, மட்டக்களப்பு நகரில் இன்று பரவலாக கடைகள் பூட்டப்பட்ட நிலையில் தங்க மோதிரம் மீட்…
-
- 1 reply
- 340 views
-
-
சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடினார் எனும் குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற உற்சவத்தில் பூசகர்கள் ஐவரின் தொலைபேசிகள் களவாடப்பட்டன. அவற்றின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில், பூசகர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆலயத்தில் அன்றைய தினம் நின்ற 25 வயதான பூசகர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சக பூசகர்கள் ஐவரின் கையடக்க தொலைபேசிகளை திருடிய பூசகர் யாழில் கைது | Virakesari.lk
-
- 0 replies
- 339 views
-
-
டிரக்கில வெங்காயம் வைத்திருந்தால் போதும்; 1300 கி.மீ. பயணம் சாத்தியம்: லாக் டவுனை வென்ற மும்பை நபரின் வினோத முயற்சி டிரக்கில் வெங்காயம் வைத்திருந்தால் போதும். தனது சொந்த கிராமத்திற்குச் செல்ல 1300 கி.மீ. பயணம் சாத்தியம் என்று மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் நிரூபித்துள்ளார். இந்தியாவில் முதல் கட்ட லாக் டவுனை அமல்படுத்தியபோதே நகரங்களிலிருந்து வாகனங்களிலும் நடைபயணமாகவும் சொந்த ஊர்போய்ச் சேர்ந்தவர்கள் ஏராளம். சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டவர்களும் உள்ளனர். மும்பை விமான நிலையத்தில் பணிபுரியும் பிரேம் மூர்த்தி பாண்டே, அலகாபாத்தின் புறநகரில் உள்ள தனது சொந்த கிராமத்தை அடைய ஒரு வினோத முயற்சியை மேற்கொண்டார். தனது 1,300 கி.மீ. டிரக் பயணம்…
-
- 0 replies
- 339 views
-
-
பிரித்தானியாவில் தாய் ஒருவர், இறந்த மகளின் கருவை தனது வயிற்றில் சுமக்க கடந்த 4 வருடமாக போராடி வருகிறார். 59 வயதாகும் அந்த பெண்ணின் மகள், கடந்த 45 வருடங்களுக்கு முன் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயினால், தன்னால் கருவுற முடியாது என்ற பயத்தில் அந்த பெண்மணி, 2008ம் ஆண்டு லண்டனில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில் தனது கருமுட்டையை சேமித்து வைத்தார். இந்நிலையில் நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால், அந்தப்பெண்மணி உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்னால் தனது தாயிடம், என் கருமுட்டையை கொண்டு நீ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். நான் பிறந்த உன்னுடைய கருப்பையிலேயே என்னுடைய குழந்தையும் வளர வேண்டும் என தனது இறுதி ஆசையை கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள சட்டங்கள் …
-
- 0 replies
- 339 views
-
-
கறுப்பு பந்துகளாக காட்சியளித்த ஏரி: தண்ணீர் ஆவியாவதை தடுக்கும் கலிபோர்னியா (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 01:24.26 பி.ப GMT ] லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சில்மர் நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீர் வேகமாக ஆவியாகி வருவதை தடுக்கும் பொருட்டு 9.6 கோடி கறுப்பு பிளாஸ்டிக் பந்துகள் நீர்த்தேக்கம் முழுவதும் போடப்பட்டுள்ளன.இதன் மூலம் தண்ணீரை அழுக்கு, ரசாயனம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதோடு, நீர் ஆவியாகாமலும் தடுக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பந்துகள் மூலம் ஓராண்டுக்கு 1135 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க முடியும். மேலும், சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களையும் தண்ணீருக்குள் ஊடுருவ விடாமல் இந்த பந்துகள் தடுத்து விடுகின்றன. இந்த நீர்த்தேக்கத்தில் த…
-
- 0 replies
- 339 views
-
-
ஜெருசலம்: ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் இன்டர்நெட்,ஃபேஸ்புக், ட்விட்டரை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். நான் குளிக்கப் போகிறேன், சாப்பிடப் போகிறேன், தூங்கப் போகிறேன் என்று தாங்கள் செய்யும் அனைத்தையும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் மக்கள் தெரிவிக்கின்றனர். பலர் அலுவலகத்திலும் வேலைக்கு இடையே ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு அவர்களால் இந்த சமூக வலைத்தளங்கள் இல்லாமல் இருக்க முடியவில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்கள் மக்கள் மனநிலையை பாதிக்கிறது …
-
- 2 replies
- 339 views
-
-
சம்பவம் நடந்த அடுத்த மூன்று, நான்கு நாள்களில் தனது குடும்ப நபர்கள் 7 பேரை ஷப்னம் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், கொலை செய்வதற்கு ஷப்னமின் காதலர் சலீம் உதவியதும் தெரியவந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோகாவை சேர்ந்தவர் ஷப்னம். இவருக்கும் இவர் காதலர் சலீமுக்கும் தூக்குத் தண்டனை வழங்கி, 2008-ம் ஆண்டு அம்ரோகா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர் இருவரும். இரண்டு நீதிமன்றங்களுமே தண்டனையைக் குறைக்க இயலாது என்று மறுக்க, குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ஷப்னம் மற்றும் சலீமை தூக்கிலிடுவதற்கான மரண தண்டனைக்கான ஆணை விரைவில் பிறப்…
-
- 0 replies
- 339 views
-
-
காளையார்கோவில் அருகே குருவி கட்டிய கூட்டை பாதுகாக்கும் கிராமத்தினர்ஒரு மாதமாக இருளில் நடமாடுகிறார்கள் காளையார்கோவில், காளையார்கோவில் அருகே சின்னஞ்சிறு குருவி கட்டிய கூடு கலைந்துவிடாமல் இருக்க ஒட்டுமொத்த கிராமத்தினர் அதற்கு உதவி உள்ளனர். இதனால் ஒரு மாதமாக அவர்கள் இருளில் நடக்க வேண்டிய நிலை தொடர்ந்து வருகிறது. பறவைகள் என்றாலே மனம் புத்துணர்வு அடைந்து விடும். அதிலும் சிட்டுக்குருவி மனிதனை தேடி வந்து உறவாடும். வீடுகளுக்குள் புகுந்து தனக்கும் ஓர் கூடு கட்டி சொந்தம் கொண்டாடும். சிட்டுக்குருவி மட்டுமல்ல, தற்போது பல்வேறு பறவையினங்கள் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருவது வேதனை தருவதாகும். இந்த குருவிகளை பாதுகாக்க நடவடிக்கைகள் இருந்தாலும், அவற்றை முழுவது…
-
- 1 reply
- 339 views
-
-
பெண் ஊழியரை தாக்கிய மேலதிகாரி! அரச அலுவலகமொன்றில் பணி புரியும் பெண் ஊழியர் மீது உயர் அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் இடம்பெற்ற அலுவலகம் எது, அங்குள்ளது என்பது தொடர்பிலான உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் குறித்த சம்பவம் கம்பஹா – உடுகம்பொல பகுதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையில் கடந்த 23ம் திகதி இடம்பெற்றதாக சமூக வலைதள தகவல்கள் தெரிவிக்கின்றன. https://newuthayan.com/பெண்-ஊழியரை-தாக்கிய-மேலத/
-
- 0 replies
- 339 views
-
-
அமெரிக்கா- ஐந்து வருடங்களின் பின்னர் 5-வயது சிறுவன் பிட்சாவை விரும்பி சாப்பிட தனது மூத்தசகோதரர்களுடன் விளையாட கூடிய நிலைமைக்கு திரும்பியுள்ளான். கதைக்கும் போது அவனது சொற்கள் தடிப்பானதாகவும் இயந்திரமயமானதாகவும் தெரிகின்றது. ஒரு சிறிய துண்டு பிட்சா சாப்பிடுவதும் கூட ஒரு சவாலாக உள்ளது. அரிசோனாவைச் சேர்ந்து எமெற் றோச் என்ற இச்சிறுவன் 2010-ல் ஒரு பொத்தான் பட்டரியை—கனடிய 5சத நாணயம் அளவிலான டிவிடி ரிமோட் கொன்ட்ரோல்-விழுங்கியுள்ளான். இந்த சம்பவம் முதலில் கவனிக்கப்படவில்லை. இவனின் தாயாரும் அவதானிக்கவில்லை. சில நாட்களின் பின்னர் சிறுவன் இருமும் போது இரத்தவாந்தி எடுத்தான். வைத்தியசாலைக்கு கொண்டு சென்று எக்ஸ்-ரே எடுத்த போது பொத்தான் பட்டரி கண்டுபிடிக்கப்பட்டது. ஊடுகதிர்வீச்சிய…
-
- 0 replies
- 339 views
-
-
யாழ்ப்பாணத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கும்பல் சிக்கியது – நகைக் கடை உரிமையாளரும் கைது யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உள்பட 5 இடங்களில் வீதியில் பயணித்தவர்களிடம் தங்க நகைகளை அறுத்து அபகரித்துச் சென்ற தெல்லிப்பழை மற்றும் ஏழாலையைச் சேர்ந்த 20 - 25 வயதுடைய நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து நகைகளைக் கொள்வனவு செய்த சுன்னாகத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 6 தங்கப் பவுண் எடையுடைய 5 சங்கிலிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வழிப்பறிக்குப் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்…
-
- 1 reply
- 339 views
- 1 follower
-
-
விகாரையில் ஏலம் விடப்பட்ட கசிப்பு போத்தல் ! அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ மற்றும் மடத்துகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் அண்மையில் நடைபெற்ற சந்தை மற்றும் பாடல் கச்சேரியில் இரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் கசிப்பும் ஏலத்திற்கு விடப்பட்டன. . ஆலயம் அமைந்துள்ள நகரின் பிரதான பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் துறவி மற்றும் இளம் அமைப்பாளர்கள் அடங்கிய குழுவினர் இணைந்து இந்த ஏலத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு மதுப்போத்தல்களை ஏலத்தில் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது . இந்நிலையில் குறித்த மதுப்போத்தல்களை கைப்பற்ற பலரு…
-
- 3 replies
- 339 views
-
-
டக்ளஸ் பெரிய கோடீஸ்வரர்! போட்டு உடைத்தார் ஈ.பி.டி.பி பிரமுகர்! [ புதன்கிழமை, 15 யூலை 2015, 10:20.29 AM GMT ] டக்ளஸ் தேவானந்தா ஒரு கோடீஸ்வரர்தான். இவர் வைத்திருக்கின்ற கோடீஸ்வர செல்வம் மக்களாகிய நீங்களே. என எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற சமூக சேவையாளர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியால் நடத்தப்படுகின்ற மகேஸ்வரி பவுண்டேசன் நிறுவனம் உண்மையில் மக்கள் சேவை நிலையமே ஆகும், மாறாக மணல் கொள்ளை நிறுவனம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இவர் வட்டுக்கோட்டையில் துணவி கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு கூறினார். இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு- யாழ். …
-
- 1 reply
- 338 views
-
-
உலகிலேயே ’இளம் வயது பட்டதாரி’ என்ற பட்டத்தை பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் பெற உள்ளார். பெல்ஜியத்தை சேர்ந்த அலெக்சாண்டர் சைமன்ஸ் -லிடியா தம்பதியினரின் மகன் லாரண்ட் சைமன்ஸ், தனது 8வது வயதிலேயே உயர்கல்வியை முடித்து உலகளவில் புகழ்பெற்றார். அதையடுத்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பில் சேர்ந்த லாரண்ட் சைமன்ஸ், அடுத்த மாதம் அதனை நிறைவு செய்ய உள்ளார். இதன் காரணமாக உலகிலேயே ’இளம் வயது பட்டதாரி’ என்ற பட்டத்தை லாரண்ட் சைமன்ஸ் பெற உள்ளார். இதனை, 10 வயதில் ’இளம் வயது பட்டதாரி’ விருதை பெற்ற மைக்கேல் கியார்னியிடம் இருந்து லாரண்ட் சைமன்ஸ் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 338 views
-
-
வீடற்ற பெண்(homeless woman!) மீது பொலிசாரின் தாக்குதல்
-
- 2 replies
- 338 views
-
-
காதலியை சந்திக்க பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் - போலீசிடம் சிக்கியது எப்படி? காதலியை சந்திப்பதற்கு பிறர் கவனத்தை திசை திருப்பும் வகையில் பெட்ரோல் குண்டு வீசி இருக்கிறார் இளைஞரொருவர். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் சாலையில் ஒரு குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் திடீரென தீ பிடித்துள்ளது. வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அருகிலிருந்த பெட்ரோல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்வது பதிவாகியிருந்தது. …
-
- 0 replies
- 338 views
-
-
செக். குடியரசு ஜனாதிபதியின் கொடிக்குப் பதிலாக பாரிய உள்ளாடையை பறக்கவிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் செக். குடியரசின் ஜனாதிபதி மாளிகையின் கூரையிலுள்ள கொடிகம்பத்தில் அந்நாட்டு ஜனாதிபதியின் கொடிக்கு பதிலாக பாரிய உள்ளாடையொன்று அண்மையில் பறக்கவிடப்பட்டிருந்தது. செக். குடியரசு ஜனாதிபதி மிலோஸ் ஸெமேனுக்கு எதிரான கலைஞர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை இந்த உள்ளாடையை பறக்க விட்டிருந்தனர். ஜனாதிபதி மிலோஸ் ஸெமன், சீனா, ரஷ்யா நாடுகளுடன் ஆரோக்கி யமற்ற வகையில் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாக மேற்படி கலைஞர்கள் குழு குற்றம் சுமத்துகின்றனர். மேற்படி பாரிய உள்ளாடையின் சிவப்பு நிறமானது இந்த தொடர்புகளை பிரதிலிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். செக் குடியரசின் தலைநகர் பிரேக்க…
-
- 0 replies
- 338 views
-
-
மன்னார் ஆயர் தலைமையில்…! முதல்வர் “CV” அதிரடி அறிவிப்பு. April 17, 201510:41 am புலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ‘எமது மக்களின் நன்மையிலும் தீமையிலும், வாழ்க்கையிலும் மரணத்தறுவாயிலும் பக்கத்தில் நின்று, இறுக்கமா…
-
- 0 replies
- 338 views
-
-
இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன. ஆயுதப்போராட்ட காலத்திலும், தமிழீழ விடுதலைக்காக போராடிய ஆயுதக்குழுக்களை இந்திய இலங்கை அரசுகள் மோதவிட்டன. இன்றும் அந்த நிலைதான் தொடர்கிறது. உண்மையாக இதய சுத்தியுடன் தமிழ் தலைமைகள் ஒன்றுபடாவிட்டால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதும் இல்லை, தமிழ் இனம் நிம்மதியாக வாழப்போவதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வவுனியாவில் நேற்று நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்….. தமிழினம் பெருந்துயரையும் அவலத்தையும் சந்தித்துள்ள இன்றைய நிலையிலும் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை. …
-
- 0 replies
- 338 views
-