செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7156 topics in this forum
-
"தூங்கிய பெண்ணுடன் காதலன் போல நடித்து உடலுறவு கொள்வது குற்றமாகாது" அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒருவர் மீது பாலியல் வல்லுறவு குற்றத்தை உறுதி செய்து கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்து முடிவு வழங்கியிருப்பதை எதிர்த்து அங்குள்ள பெண்ணுரிமைக் குழுக்கள் குரல்கொடுத்துள்ளன. 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மாகாணச் சட்டத்தின் கீழ் இந்த முடிவு வழங்கப்பட்டுள்ளது. தான் வேறொருவர் என்று ஏமாற்றி ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்கிறார் என்றால், அந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகியிருந்திருக்க வேண்டும், தவிர அந்த ஆண் அந்தப் பெண்ணின் கணவனாக என்று நடித்து உடலுறவு வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் மட்டுமே அந்த ஆண் பாலியல் வல்ல…
-
- 6 replies
- 1.3k views
-
-
இரத்தினபுரியில் பௌத்த பிக்குவை "எப்படி மச்சான்" என அழைத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த பௌத்த பிக்குவின் தோளில் கையைப் போட்டு, எப்படி மச்சான் என அழைத்த பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பிக்கு இதுகுறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்தே, பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் போது சாரதி மது போதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://seithy.com/breifNews.php?newsID=73272&category=TamilNews&language=tamil
-
- 11 replies
- 753 views
-
-
அழையா விருந்தாளியாக நுழைந்த குரங்கு காற்றை சுத்திகரிக்கும் குழாய்க்குள் மாட்டுப்பட்டது ஒரு நாள் சென்றே அகற்றப்பட்டது Diplomacy typically isn’t monkey business, but the folks at the U.S. Embassy in Sri Lanka recently had their usual routine disrupted by a wandering primate. The embassy invasion began on Dec. 20, when an an e-mail went out to employees of the facility in Colombo notifying them that the ground floor doors were locked because a monkey was trapped in the building and instructing them to use alternate exits. “A little bit different than a Kabul ‘lock down!’” observed one worker there whose previous tours of duty were perhaps a bit more dangerous. We’…
-
- 3 replies
- 451 views
-
-
"பிறந்தால் இந்த நாட்டில் தான் பிறக்க வேண்டும்' என்ற விருப்பத்தின் அளவில், பொதுமக்கள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் அடிப்படையில், நாடுகள் தேர்வு செய்யப்பட்டன.இதில், இந்தியா, 66வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை, 63வது இடத்தையும், பாகிஸ்தான் மற்றும் வங்க தேச நாடுகள், முறையே, 75 மற்றும் 77வது இடங்களில் உள்ளன. ஆப்ரிக்க நாடான, நைஜீரியா, 80வது இடத்தை பிடித்துள்ளது. இது போன்றதொரு ஆய்வு, 1988ல் எடுக்கப்பட்ட போது, 13வது இடத்தை பிடித்த, சுவிட்சர்லாந்து, இந்த முறை முதலிடத்தில் வந்துள்ளது. இரண்டாவது இடத்தை, ஆஸ்திரேலியாவும், அடுத்த இடங்களை, நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் நாடுகள் பெற்றுள்ளன.ஆறாவது இடத்தை, சிங்கப்பூரும், எட்டாவது இடத்தை, நெதர்லாந்தும், ஒன்பதாவது இடத்தை க…
-
- 7 replies
- 983 views
-
-
போத்தல்தண்ணீரை விட குழாய் நீரே பாதுகாப்பானது என பிரிட்டன் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பால் யங்கர் தலைமையிலான குழு தெரிவித்துள்ளதாவது: பொதுவாக குழாய்களில் வரும் தண்ணீரை விட பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடி நீர்தான் பாதுகாப்பானது என பலரும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் குழாய் நீருக்கு எந்த விதத்திலும் போத்தல்தண்ணீர் உயர்ந்தது அல்ல என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக குழாய் நீரில் கலக்கப்படும் குளோரின் "மினரல் வாட்டர்' எனப்படும் போத்தல் தண்ணீரில் இல்லை. போத்தல்தண்ணீர் மூடியைத் திறந்தவுடன் சில மணி நேரங்களுக்குள் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இல்லாவிட்டால் நோய்த் தொற…
-
- 16 replies
- 1k views
-
-
டாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு! கிளான்டெல், அமெரிக்கா: தனது மனைவியின் பிரசவத்தின்போது எடுக்ப்பட்ட படம் ஒன்றை அவரது கணவர் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது மகள் பிறந்தபோது, பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை இறுகப் பற்றியபடி வெளியே வந்ததே இந்த ஆச்சரியத்திற்குக் காரணம். இந்தப் புகைப்படம் இப்போது இன்டர்நெட்டில் படு வேகமாகப் பரவி வருகிறதாம். அமெரிக்காவின் அரிசோனா, கிளான்டெல் பகுதியைச் சேர்ந்தவர் அலிசியா அட்கின்ஸ். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பிரசவம் நடந்தது. அழகிய மகளைப் பெற்றெடுத்தார். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். நெவியா என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். ப…
-
- 2 replies
- 762 views
-
-
கோவை: கோவையில் ஒரு பங்குச் சந்தை புரோக்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 28,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் (US Treasury bonds) சிக்கின. இவை உண்மையானவையா அல்லது போலியானவையா என்பது குறித்து அமெரிக்க தூதரக உதவியுடன் ஆய்வு நடந்து வருகிறது. மத்திய நிதியமைச்சகத்தின் உளவுப் பிரிவான Financial Intelligence Unit கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்ட் நடத்தப்பட்டது. அப்போது ரூ. 28,000 கோடி அளவுக்கு அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டதற்கான பங்குகளின் ஆவணங்கள் சிக்கியபோது வருமான வரித்துறை அதிகாரிகளே மலைத்துவிட்டனர். ஒரு தனி மனிதர் இவ்வளவு பெரிய அமெரிக்க முதலீடு செய்தது எப்படி என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. சென்ன…
-
- 2 replies
- 510 views
-
-
16 ஆம் லூயி மன்னன் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் படம் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் இரத்தக் கறை படிந்துள்ள துணி ஒன்று தம்மிடம் உள்ளது என்பதை கிட்டத்தட்ட உறுதியாக சொல்ல முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருநூறு ஆண்டுகளுக்கும் முன் பிரஞ்சு புரட்சி நடந்தபோது கிளர்ச்சிக்காரர்களால் கிலட்டின் இயந்திரத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் மன்னர் பதினாறாம் லூயி ஆவார். இந்தத் துண்டியில் இருக்கும் ரத்தத்தின் மரபணுத் தகவலும், லூயிக்கு முன்னாள் வாழ்ந்த பிரஞ்சு மன்னன் ஒருவரின் பதப்படுத்தப்பட்ட சடலத்தின் மண்டை ஓட்டின் மரபணுத் தகவலும் கணிசமான அளவில் பொருந்திப்போகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். பதினாறாம் லூயி பாரிசில் தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்ல…
-
- 1 reply
- 600 views
-
-
புனே நகர தொழிலதிபர், 1.27 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க சட்டையை அணிந்து, புத்தாண்டை கொண்டாட உள்ளார். இதற்காக அவர், 3.25 கிலோ எடையில், புதிய தங்க சட்டையை உருவாக்கியுள்ளார். புனே அருகே உள்ள, பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர், தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி, சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்; தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஏற்கனவே, 5 கிலோ எடையில் கழுத்து, கை மற்றும் இடுப்பில், தங்க நகைகளை அணிந்து வலம் வரும் தத்தா, 2013ம் ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார். இது வரை யாருமே செய்யாத வகையில், தங்க சட்டை அணிந்து, புத்தாண்டை கொண்டாட விரும்பிய அவர், அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார். பதினைந்து பொற்கொல்லர்கள், 15 நாட்கள் உழைத்…
-
- 7 replies
- 599 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=waJWA85kag4[/xml]
-
- 2 replies
- 403 views
-
-
சோனியா காந்தி புத்தாண்டைக் கொண்டாட மாட்டார். டெல்லி: டெல்லியில் பிசியோதெரப்பி மாணவி பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி கொடுமையாக மரணமடைந்த சம்பவத்தின் எதிரொலியாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த ஆண்டு புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில், டெல்லி பாலியல் பலாத்காரக் கொடுமை தேசிய அவமானமாகும். இதையொட்டி கட்சித் தலைவர் சோனியா காந்தி இந்த ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். இதேபோல காங்கிரஸ் பேரியக்கத்தினரும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளார். நன்றி : http://tamil.oneindia…
-
- 1 reply
- 537 views
-
-
உருளைக் கிழங்கில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள். மடவளை பஸார் புகையிலை தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஜனாப் ரிம்சான் என்பவரின் வீட்டில் இருந்த உருளைக் கிழங்கு ஒன்றில் அல்லாஹ், பிஸ்மில்லாஹ் போன்ற சொற்பதங்கள் காணப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மடவளை, வாங்குவகடை அக்ரம் என்பவரின் கடையில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகை உருளைக் கிழங்கில் இருந்தே இந்த அபூர்வ கிழங்கு கண்டறியப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி.
-
- 5 replies
- 627 views
-
-
74 வயதில் 7வது முறையாக தந்தையாகும் தாத்தா.. மூத்த மகனுக்கு வயது 52! Posted by: Sudha Published: Monday, December 31, 2012, 10:02 [iST] லண்டன்: இங்கிலாந்தில் 74 வயதான நபர் தனது 32 வயது மனைவியின் மூலம் 7வது முறையாக தந்தையாகவுள்ளார். இவரது மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நபருக்கு ஏற்கனவே 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பெயர் மைக் அமிடேஜ். இவருக்கு 32 வயதில் லின்ட்சே என்ற இளம் மனைவி உள்ளார். இவர் 3வது மனைவி ஆவார். அமிடேஜுக்கு ஏற்கனவே முதல் இரு மனைவிகள் மூலம் 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது. இந்த நிலையில், லின்ட்சே தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.…
-
- 2 replies
- 505 views
-
-
மாயன் காலண்டர் கடந்த 21-ந்தேதியுடன் முடிந்தது. எனவே அன்றுடன் உலகம் அழியும் என்ற பீதி சர்வதேச நாடுகளை ஆட்டிப் படைத்தது. இக்கருத்தை விஞ்ஞானிகள் மறுத்தாலும், விண்ணில் நிகழும் மாற்றங்களை கண்காணித்து கொண்டுதான் இருந்தனர். மாயன் காலண்டர் முடிந்த சில நிமிடங்களில் அதாவது 22-ந்தேதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் சூரிய சக்தி கண்காணிப்பு மைய விஞ்ஞானிகள் சூரியனை போட்டோ எடுத்தனர். அப்போது சூரியன் விட்டுவிட்டு கண் சிமிட்டியபடி ஒளிர்ந்தது. இதற்கு, மாயன் காலண்டரில் குறிப்பிட்டபடி உலகம் அழிவதற்கான அறிகுறி இல்லை. சூரியனில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகரிப்பே இதற்கு காரணம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாயன் காலண்டரின் கூற்றுப்படி பூமியை வேற்று கிரகம் தாக்குக…
-
- 4 replies
- 1.6k views
-
-
குயின்ஸ்: அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியில் சுரங்க ரயிலில் தள்ளி இந்தியரைக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமக்கு இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிடிக்காது என்ற காரணத்தாலேயே அவரைக் கொலை செய்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அமெரிக்க குயின்ஸ் பகுதியில் மூன்று நண்பர்களுடன் வசித்து வந்த இந்தியர் சுனந்தோ சென், அங்கு பிரிண்டிங் தொழில் செய்து வந்தார். கடந்த வியாழன் அன்று குயின்ஸ் சுரங்க ரயிலில் பயணிக்க சென்றபோது அடையாளம் தெரியாத ஒரு பெண், அவரை எதிரே வந்த ரயிலில் தள்ளிக்கொன்றார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பித்து சென்றார். ரயில் பாதையில் அமைக்கப்பட்டிருந்த வீடியோ காமிராவில் அந்த பெண் உருவம் பதிவாகியிருந்ததை போலீசார் கண்டுபிடித்து வெளியிட்டனர். அந்…
-
- 0 replies
- 587 views
-
-
உலகிற்கு மக்களாட்சி படம் காட்டும் அமெரிக்காவில் 2001 செப் 11 க்குப் பின் கருத்துச் சுதந்திரம் விதைத்த நச்சு விதைகளின் அறுவடை ஆரம்பமாகியுள்ளது. அதன் கீழ் நியூயோர்க் பகுதியில் Queens subway station இல் நிலக்கீழ் ரயிலில் பயணிக்க காத்திருந்த ஒரு முஸ்லீம் ஆண் பயணியை அமெரிக்கப் பெண் ஒருவர் ஓடும் ரயிலின் முன் தள்ளி விட்டுக் கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி தான் செய்ததிற்கு நியாயம் கற்பிக்கும் அவர் 2001 செப் 11 க்குப் பின் தான் முஸ்லீம்களையும் இந்துக்களையும் வெறுக்கிறாராம். Prosecutors said in a statement that Ms Menendez, from the Bronx, admitted pushing the victim, saying: "I pushed a Muslim off the train tracks because I hate Hindus and Muslims ever since 2001 whe…
-
- 3 replies
- 786 views
-
-
முகப்புத்தகத்தில் கிடைத்த தகவலை யாழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். You can send gifts to your love one in Jaffna . யாழ்பாணத்திற்கு இப்போ இணையத்தினூடாக பரிசுப்பொருட்கள் அனுப்ப http://www.yarlolai.com/cart/
-
- 4 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முழுப் பொறுப்பு கூறவேண்டியது இவரா ? ON 28 DECEMBER 2012. 2009ம் ஆண்டு முள்ளிவய்க்காலில் நடந்த படுகொலைகளை, நோர்வே நிறுத்தியிருக்கலாம், இந்தியா தடுத்து நிறுத்தியிருக்கலாம், இல்லையேல் அமெரிக்கா தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று பலர் விவாதிப்பது உண்டு. ஆனால் அப்போது நடந்துகொண்டிருந்த போரை ஒரு முடிவுக்கு கொண்டுவர... ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலால் மட்டும் தான் முடியும் என்பதே உண்மையாகும். இதில் பிரித்தானியத் தமிழர்கள் குறிப்பிடத்தக்க காய் நகர்வுகளை மேற்கொண்டனர். பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் கொடுத்த அழுத்தத்தால், அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த டேவிட் மிலபான் அவர்கள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை …
-
- 4 replies
- 550 views
-
-
சுருட்டுப் பிடிக்க 12 மில்லியன் செலவில் வீடு! - மைக்கேல் ஜோர்டனின் கனவு இல்லம். Dec 27 2012 09:45:59 பெரும் பணம் படைத்த பிரபலங்களின் இல்லங்கள் எப்போதுமே மற்றவர்களின் கவனத்தை கவருபவை. தற்போது கூடைப்பந்து வீரர் உலகப் புகழ் பெற்ற மைக்கேல் ஜோர்டனின் 12 மில்லியன் டாலர் இல்லம் பலரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள உள்ள உல்லாசபுரியான ஃப்ளோரிடாவில் உள்ள ஜுபிடர் பகுதியில் புதிதாய் இடம் வாங்கி பிரமாண்டமாய் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் மைக்கேல் ஜோர்டான். பேர் கிளப் என்றழைக்கப்படும் இந்தப் பகுதியில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே வசிக்க இயலும். இங்கே மூன்று ஏக்கர் நிலத்தை 4.8மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறார் ஜோர்டான். இந்தப் பகுதியில்தான் கால்ஃப் வீரர் டைகர் …
-
- 3 replies
- 697 views
-
-
-
- 0 replies
- 685 views
-
-
இந்திய மாணவனின் நாக்கை வெட்டியெறிந்த கும்பல் வெள்ளி, 28 டிசம்பர் 2012( 12:07 IST ) உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் பலவிதமான இனவெறி கொடுமைகளை சந்தித்து வரும் நிலையில், ஜெர்மனியில் உள்ள போன் பகுதியில் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் இந்தியர் ஒருவரின் நாக்கை வெட்டி எறிந்த சம்பவம் நடந்துள்ளது. 24 வயது நிரம்பிய இந்திய மாணவனை சுற்றி வளைத்த ஒரு மர்ம கும்பல், அவரின் மதம் பற்றி விசாரித்தனர். அதன் பிறகு இஸ்லாமிய மதத்திற்கு மாறாவிட்டால் நாக்கை வெட்டிவிடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள். இதனை மறுத்து அங்கிருந்து வெளியேறிய மாணவனை அடித்து துன்புறுத்தி, நாக்கை வெட்டி எறிந்துவிட்டு அக்கும்பல் காரில் தப்பியது. தெருவில் ரத்தவெள்ளத்தில் மயங்கிய நிலையில் இருந்த மாணவனை அப்பகுதி மக்கள் …
-
- 3 replies
- 731 views
-
-
என் மகள் போனுக்கு பசங்க கிட்டேருந்து ஒரே போனா வருது... ஒபாமா தகவல் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் டீன் ஏஜ் மகள் மலியா கையில் செல்போனை கொடுத்து விட்டார்கள் அவரது பெற்றோர். போன் கைக்கு வந்தது முதல் அவருக்கு நிறைய டீன் ஏஜ் பசங்களிடமிருந்து போனாக வந்தவண்ணம் இருக்கிறதாம். தந்தை ஒபாமாவும் தாயார் மிஷலும் இதைச் சொல்லியுள்ளனர். இதுகுறித்து ஏபிசி நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர்கள் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: இபோது மலியாவுக்கு செல்போன் கொடுத்து விட்டோம். ஆனால் அவர் யாருடன் பேசுகிறார் என்பதையெல்லாம் நாங்கள் ஒட்டுக் கேட்பதில்லை. இருந்தாலும் 'நீண்ட கயிறு' கொண்டு அவரை பிணைத்திருக்கிறோம். அதேசமயம், அதிபர் மாளிகையில் வசிப்பதால், செல்போன் பேச்சுக்கள் நிச்ச…
-
- 0 replies
- 722 views
-
-
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் தீப்பற்றி எரிந்த வீட்டுக்கு விரைந்து சென்ற தீயணைப்புப்படையினரை சினப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வீட்டு உரிமையாளர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று அதிகாலையில் றேசெஸ்ரர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீப்பற்றி எரிவதாக தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்த தீயணைக்கும் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எரிந்து கொண்டிருந்த வீடு மற்றும் காரின் உரிமையாளரே, துப்பாக்கிச்சூட்டை நடத்தினார்.வீட்டை தீவைத்து எரித்து விட்டு அவர் பாதுகாப்பான இடம்ஒன்றில் நிலையெடுத்திருந்து சினப்பர் துப்பாக்கியால் ஒவ்வொருவராக சுட்டார். இந்தச் சம்பவத்தில் நியுயோர்க் பகுதி தீயணைக்கும் படையைச் சேர்ந்த இருவர் ம…
-
- 4 replies
- 600 views
-
-
மனிதப் பெண் ஒருவருக்கு பிள்ளையாக பாம்பு பிறந்து உள்ளது என்று ஒரு கிராமம் முழுவதுமே முழுமையாக நம்புகின்றது. இது நடப்பது வெளிநாட்டில் அல்ல. நம் நாட்டில்தான். கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் உள்ளது கடுக்கன் என்கிற தனித் தமிழ் கிராமம். இங்கு அனைவருமே இந்துக்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பெண் முத்துலிங்கம் மோசிகசுந்தரி. 1966 ஆம் ஆண்டு பிறந்தவர். 46 வயது. 1983 ஆம் ஆண்டு 17 ஆவது வயதில் தகாயநாயகம் என்பவரை திருமணம் செய்தார். தகாயநாயகம் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. முதல் இரண்டும் பெண் குழந்தை. மூன்றாவது ஆண். நான்காவது பாம்பு. ஐந்தாவது ஆண் குழந்தை. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு இப்பெண்ணுக்கு பாம்புக் குழந்தை பிறந்தது. இங்கு வீடுக…
-
- 3 replies
- 6k views
-
-
dec25,2012 அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர். ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அவ்வளவு ஆழ…
-
- 0 replies
- 753 views
-