செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
“கோழிக் கால் சாப்பிடுங்கள்” என மக்களிடம் இந்த அரசாங்கம் ஏன் சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,யோலந்தே நெல் பதவி,பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "கடவுளே, எங்களை கோழிக்கால் சாப்பிடும் நிலைக்கு தள்ளி விடாதே" என்று கீஸா சந்தையில் கோழிக் கடைக்காரரிடம் ஒரு நபர் கெஞ்சுகிறார். எகிப்து கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அங்குள்ள மக்கள் தமது குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கக்கூட கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், நாய், பூனைகளுக்கு உணவாகத் தூக்கி எறியப்படும் கோழிக்…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
மானிப்பாயில் வன்முறைக் கும்பல் அட்டகாசம்..! யாழ்ப்பாணம், மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் வன்முறைக்கும்பல் ஒன்று அட்டகாசும் புரிந்துள்ளது . மானிப்பாய் கிறீன் மெமோறியல் வைத்தியசாலையின் பின்புற வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நான்கு உந்துருளிகளில் வருகைதந்த வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துமீறி வீட்டினுள் புகுந்து வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஹயஸ் ரக வாகனங்களை அடித்து சேதப்படுத்தியதோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கி, வீட்டின் முன்புற கதவின் தகரத்தின் மீதும் வாளால் வெட்டிய நிலையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதலும் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்…
-
- 2 replies
- 307 views
-
-
24 வயது இளம் பெண்ணுடன் இருந்த கத்தோலிக்க மதகுரு மடக்கிப் பிடிப்பு ! kugenJune 4, 2023 யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையான 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் இவ்வாறு பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவில் நேற்று (03) இந்த சம்பவம் இடம்பெற்றது. தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியை ஒருவர் தங்க…
-
- 2 replies
- 307 views
-
-
லண்டன் கட்டடம் முழுக்க தீ பரவக் காரணம் என்ன? மிகப்பயங்கர தீ விபத்தின் பின்னணி.! 21 mins ago பிரிட்டன் தலைநகர் லண்டனில் 24 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர், 74 பேர் படுகாயமடைந்தனர். காரணம் என்ன? ‘2 அல்லது 3-ஆவது மாடியில் பழுதான நிலையில் பயன்படுத்தப்பட்டு வந்த குளிர்சாதனப்பெட்டியில் ஏற்பட்ட தீ, குடியிருப்பு முழுவதும் பரவியிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சதிவேலை எதுவும் இருக்குமா? என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், இந்த கட்டடத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. அப்போது, கட்டடத்தின் வெளிப்பகுதியில் மரம், அலுமினி…
-
- 0 replies
- 306 views
-
-
ரஷ்சிய ஊடகங்களுக்கு தடை விதித்திருக்கும் மேற்குலக நாடுகள்.. தங்கள் ஊடகங்களை ரஷ்சியா உட்பட தடை செய்யப்பட்ட நாடுகளில் எப்படி களவாகப் பார்ப்பது என்று வகுப்பெடுக்கும் வினோதம் இப்போ பகிரங்கமாக நிகழ்கிறது.
-
- 1 reply
- 306 views
-
-
எம்.றொசாந்த், நிதர்ஷன் வினோத் தனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள குளிர்களி (ஐஸ் கிறீம்) விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 19 வயது யுவதிக்கு கடை உரிமையாளர் தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டுவது, அவற்றை யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு அனுப்புவது போன்ற பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதனை அடுத்து பாதிக்கப்பட்ட யுவதியால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடை உரிமையாளரை கைது செய்து மல்லாகம் நீதவான…
-
- 0 replies
- 306 views
-
-
17 வருடங்கள் குகையில் மறைந்திருந்த குற்றவாளியை கண்டுபிடித்த ஆளில்லா விமானம்! சீனாவில் சுமார் 17 வருடங்களுக்கு முன்பு பொலிஸாரிடமிருந்து தப்பியோடி, தனியே குகையில் வசித்து வந்த ஒருவரை ஆளில்லா விமானத்தின் காணொளிகளைக் கொண்டு சீன பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சீனா பொலிஸாரின் இந்த சாதுர்யமான நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள 63 வயதான சாங் ஜியாங் என்பவர், 2002 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் நடமாட்டமே இல்லாத இடத்தில் பல ஆண்டுகளாக சிறிய குகையில் ஜியாங் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்…
-
- 0 replies
- 306 views
-
-
தனது படத்தை வேட்பாளர்கள் பயன்படுத்துகின்றனர் – கர்தினால் அனுமதியின்றி சில வேட்பாளர்கள் துண்டு பிரசுரம் மற்றும் சுவரொட்டிகளில் தமது புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தம்மை சந்திக்கவந்த தருணம் தன்னுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/தனது-படத்தை-வேட்பாளர்கள்/
-
- 0 replies
- 306 views
-
-
நாங்கள் ஐந்து வருடங்களாக நண்பர்கள் !!!!
-
- 0 replies
- 306 views
-
-
கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, பின்னர் குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். இதுதவிர தொழிலதிபர்கள், கலைத்துறையினர், சாதனை படைத்தவர்கள் என பலருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பூனைக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்கிற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் சுற்றி வரும் இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது. அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிற…
-
- 1 reply
- 306 views
- 1 follower
-
-
யாழ் இளைஞனை ஏமாற்றிய ஹிங்குராங்கொட பெண் கைது! கனடாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பெண் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இளைஞனிடமிருந்து 60 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ள போதும் இதுவரையில் பயண ஏற்பாடுகள் எதனையும் அவர் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞன் இது குறித்து யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தமையை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 306 views
-
-
உணவகத்தில் பிரித்தானிய அரச தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு! கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்ற உணவகத்தைக் கண்ட ஹரியின் பாதுகாவலர்கள், அந்த உணவகம் ஹரி குடும்பம் உணவு உண்ண பாதுகாப்பானதாக இருக்கும் என எண்ணி அங்கு முன் பதிவு செய்வதற்காக சென்றுள்ளனர். குறித்த உணவகத்தை நடத்தி வரும் Pierre மற்றும் Bev Koffel ஆகியோர் ஹரி குடும்பத்தின் வேண்டுகோளை நிராகரித்துள்ளனர். தங்கள் உணவகம் அமைந்திருக்கும் Horth Hill என்னும்…
-
- 0 replies
- 306 views
-
-
திரைப்படத்தில் சூப்பர்மேன் அணிந்திருந்த உடை, சுமார் ஒரு கோடியே 40 லட்ச ரூபாய்க்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜுலியன் என்ற ஏல நிறுவனத்தில் பிரபல ஹாலிவுட் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் பயன்படுத்திய ஏராளமான பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதில் 1978ஆம் ஆண்டு வெளியான சூப்பர் மேன் படத்தில் சூப்பர் மேனாக நடித்திருந்த க்ரிஸ்டோபர் ரீவீ (Christopher Reeve) அணிந்திருந்த உடை, சுமார் ஒரு கோடியே 37 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனது. சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் ஒன்றின் உடை அதிக தொகைக்கு ஏலம் போனது இதுவே முதன்முறை எனவும் கூறப்படுகிறது. இந்த ஏலத்தில் கோஸ்ட்பஸ்டர்ஸ்-2 படத்தில் டேன் அக்ராய்ட் அணிந்திருந்த ஜம்ப்சூட் சுமார் 22 லட்ச ரூ…
-
- 0 replies
- 306 views
-
-
சென்னையில் உள்ள ரயில்வே காவல்துறை தலைவர் அலுவலக காவலராக பணியாற்றி வந்தவர் கிருபாகரன். இவர் தனக்கு சொந்தமான காட்டுப்பாக்கத்தில் உள்ள மாந்தோப்பில் வளர்த்து வந்த நாய்க்கு இரவு 8 மணிக்கு மாமிச உணவுகளை சமைத்து வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் இனப்பெருக்கத்திற்காக நண்பரின் நாயை வாங்கி, தனது நாயுடன் மாந்தோப்பில் வைத்திருந்தார். செவ்வாய்க்கிழமை இரவு சற்று தாமதமாக நாய்களுக்கு மாமிச உணவை எடுத்துச் சென்றபோது, எதிர்பாரத விதமாக நாய்கள் அவரை கடித்து குதறியது. அவரது அலறல குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிருபாகரன் பரிதாபமாக உயிரிழந்தார் …
-
- 1 reply
- 306 views
-
-
111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் நஸர் சிங் லண்டன்: ஐரோப்பாவின் வயதான மனிதரான பஞ்சாப்பில் பிறந்த நஸர் சிங் வரும் 25ம் தேதி 111வது கிறிஸ்துமஸை கொண்டாட உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தநவர் நஸர் சிங்(110). பஞ்சாபில் விவசாயம் செய்து வந்த அவர் 1965ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவர் வடக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்டில் தனது மகன் செயின் சிங்குடன்(61) வசித்து வருகிறார். நஸர் சிங் தான் ஐரோப்பாவிலேயே வயதான மனிதர். 111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் ஜப்பானைச் சேர்ந்த 111 வயதாகும் சகாரி மோமோய் மற்றும் யசுதாரோ கொய்தே ஆகியோர் தான் நஸர் சிங்கை விட மூத்தவர்கள் ஆவர். இந்நிலையில் நஸர் சிங் இந்த ஆண்டு 11…
-
- 0 replies
- 305 views
-
-
ஓடும் பேருந்தில் கொள்ளையடித்த வாலிபரை பந்தாடிய பெண் (வீடியோ) சீனாவில் ஓடும் பேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை இளம்பெண் ஒருவர் பந்தாடியுள்ளார். செல்போனில் கவனம் செலுத்திக்கொண்டே பேருந்தில் இளம்பெண் பயணித்துக் கொண்டிருக்கையில், அவருக்கு பின்னால் நிற்கும் வாலிபர், அவரது பையிற்குள் கையினை விடுகிறார். இதனை சற்றும் கவனிக்காத அவர், திடீரென பின்னால் திரும்பி பார்கையில் அந்த வாலிபரின் கையானது இவரது பையிற்குள் இருந்துள்ளது. உடனே அந்த வாலிபரின் கையினை இறுகப்பிடித்துக்கொண்டு கூச்சலிடுகிறார். ஆனால் அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்கின்றனரே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை. ஆனால் அந்த பெண்ணே, கொள்ளையனை சரமாரியாக தாக்கினார். இதனை பேருந்தில் பயணித்த ஒருவர் வீட…
-
- 0 replies
- 305 views
-
-
வவுனியா பொலிஸ் சார்ஜென்டை காணவில்லை…? August 09, 20158:15 am வவுனியா பொலிஸ் சார்ஜென்டை கடந்த 6ஆம் திகதி முதல் காணவில்லை என்று அவருடைய மனைவி தம்புத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். வீட்டுக்கு செல்வதற்காக கூறி பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியவர் இன்னும் வீடுவந்து சேரவில்லை என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.jvpnews.com/srilanka/120068.html
-
- 0 replies
- 305 views
-
-
இந்தியக் காவல்துறை ஊழல் நிறைந்தது மட்டுமல்ல, பயனற்ற ஒன்று என்றும் யேர்மனியத் தொலைக்காட்சி ஊடகம் NTV செய்தி வெளியிட்டிருக்கிறது. வீதி விபத்தில் பலியான ஒரு முதியவரின் உடலின் ஒரு பகுதியை மூன்று இந்தியக் காவல்துறையினர், கால்வாயில் எறியும் ஒரு வீடியோவை அது இணையத்தில் இருந்து எடுத்து பதிவிட்டிருக்கிறது. முசாபர்பூர் (Muzaffarpur) மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் இந்தச் சம்பவம் பற்றிக் கூறுகையில், மூன்று காவலர்களும் பாரிய தவறொன்றைச் செய்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மூவரையும் சேவையில் இருந்து இடைநிறுத்தி இருக்கிறோம் என ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். வேகமாக வந்த ஒரு பார ஊர்தி மோதி முதியவர் உடல் நசுங்கி உயிர் இழந்திருக்கிறார்.அவர் இன்ன…
-
- 0 replies
- 305 views
-
-
மும்பை கோரேகாவ் ஆரே காலனி பகுதியில் அடர்ந்த காடு இருக்கிறது. இங்கு சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இப்பகுதியில் சிறுத்தை தாக்கி 5 பேர் காயம் அடைந்துள்ளனர். தற்போது மீண்டும் மூதாட்டி ஒருவரை சிறுத்தை தாக்கிக் காயப்படுத்தியிருக்கிறது. ஆரே காலனியில் பால்பண்ணை அருகில் உள்ள தனது வீட்டிற்கு வெளியில் நிர்மல் சிங் (68) என்ற மூதாட்டி இரவு 8 மணியளவில் ஊன்று கோல் உதவியுடன் நடந்து வந்து தின்னையில் வந்து அமர்ந்தார். ஏற்கெனவே சிறுத்தை ஒன்று அருகிலிருந்த புதருக்குள் மறைந்திருந்தது. அந்த சிறுத்தை மூதாட்டி மீது பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன்னிடம் இருந்த கைத்தடியின் உதவியுடன் சிறுத்தையை எதிர்த்துப் போராடினார். மூதாட்டி மீது மீண்டும் சிறுத்தை பாய முயன்றது. ஆ…
-
- 0 replies
- 305 views
-
-
இஸ்ரேல் நலன்களுக்காக உளவு பார்த்த டொல்பின் மீன் ஒன்றை காஸா கடற்கரை பகுதியில் கைப்பற்றியதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்ப்பில் ஹமாஸ் அமைப்புடன் நெருக்கமான வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி பிரிட்டனின் டைம்ஸ் என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.உளவு கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் குறித்த டொல்பின் மீனில் கட்டப்பட்டிருந்ததாக ஹமாஸ் கடற்படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் உளவுத் துறை (மொசாத்) உளவு பார்க்க பயன்படுத்தும் நீண்ட மிருக இனங்களின் பட்டியலில் டொல்பின் மீன் இனமும் அடங்குவதாக குறித்த பிரிட்டிஷ் பத்திரிக்கை சுட்டிக் காட்டி உள்ளது. இஸ்ரேலுக்காக உளவு பார்த்த சந்தேகத்தில் சவூதி மற்றும் சூடான் ஆகிய நாடுகள் ஒரு சந்தர்ப்பத்தில் வேட்டையாடும் பறவைகள் …
-
- 0 replies
- 305 views
-
-
கொழும்பில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்ற கொவிட்-19 தொற்றாளர் கொழும்பு டி சொய்சா மகப்பேற்று மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை இன்று(17) பிரசவித்துள்ளார். மருதானையைச் சேர்ந்த 29 வயது பெண்ணுக்கே இரு பெண் குழந்தைகளும் இரு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக அறிய வருகிறது. கொழும்பில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்ற கொவிட்-19 தொற்றாளர் – Thinakkural
-
- 0 replies
- 305 views
-
-
சரக்கு வாங்க காத்திருக்க சொன்னதால், 4 பேரின் கன்னத்தைக் கடித்த வாலிபர்! மதுரையில் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க அதிக நேரம் ஆன காரணத்தால் வாலிபர் ஒருவர் டாஸ்மாக் ஊழியர்களைப் பிடித்து கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட கோர்ட்டு அருகே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே பயனாளிகள் சரக்கு வாங்க காத்திருந்தனர். நச்சரித்த குடிமகன்கள்: காலை 10 மணி அளவில் கடை திறந்தபோது காத்துக் கொண்டிருந்த அவர்கள் சரக்கு வாங்கும் ஆர்வத்துடன் சென்று டாஸ்மாக் கடை விற்பனையாளர் செல்லத் துரையை நச்சரித்தனர். அவரும் பொறுமையுடன் சரக்குகளை கொடுத்தார். ஒரே கல்ப்தான்: இதில் ஒரு வாலிபர் சரக்கு வாங்கி அதே இடத்திலேய…
-
- 0 replies
- 305 views
-
-
புகைப்படக் கலைஞரை குறை கூறிய மணப்பெண்... அபராதம் விதித்த நீதிமன்றம்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES திருமணங்களுக்கு புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரரின் புகைப்படங்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியதற்காக மணப்பெண்ணிற்கு 1.15லட்சம் டாலர்கள் அபராதமாக விதித்துள்ளது நீதிமன்றம். அப்படி என்ன அவதூறு பேசினார் அந்த மணப்பெண்? க…
-
- 0 replies
- 305 views
-
-
இறந்தவர் உயிருடன் இருப்பதாக கூறிய ஊர் மக்கள்: வைத்தியசாலையில் குழப்பநிலை நெல்லியடியில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் உயிருடன்தான் உள்ளார் என்று ஊர் மக்கள் முரண்பட்டமையால் பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் குழப்பநிலை ஏற்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் பொலிஸாரின் தலையீட்டால் சுமுகநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நெல்லியடி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் பொருள்கள் சுமக்கும் தொழிலாளியான இராஜ கிராமத்தைச் சேர்ந்த நாகராசா நரேஸ் (வயது -26) என்பவரே உயிரிழந்தவராவார். குடும்பத்தலைவர் நேற்று மாலை தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மயக்கமடைந்து சரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக அம்புலன்ஸ் வண்டியில் ம…
-
- 0 replies
- 305 views
-
-
தேர்த்திருவிழாவில் வியப்பை ஏற்படுத்திய பௌத்த துறவி கொழும்பு - 12, ஆமர்வீதியில் உள்ள ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தில் இன்று தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது. இதன்போது பக்தர்கள் வடம் இழுக்க தேர் வீதிவலம் வந்துள்ளது. இந்த நிலையில் பௌத்த துறவியொருவரின் செயற்பாடு அங்கிருந்த இந்துக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீற்றிருந்த தேர் வடத்தினை இந்துக்கள் இழுத்த பொழுது குறித்த பௌத்த துறவியும் வடம் இழுத்துள்ளார். இதன்பொழுது தேர்த்திருவிழாவிற்கு பெருந்திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/special/01/172595?ref…
-
- 0 replies
- 305 views
-