செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7084 topics in this forum
-
புயலில் தொட்டிலோடு அடித்துச் செல்லப்பட்ட 4 மாத குழந்தை மரத்தில் தொங்கிய அதிசயம் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,CAITLYN MOORE/GOFUNDME படக்குறிப்பு, புயலால் தூக்கி எறியப்பட்ட 4மாத குழந்தை மீட்பு 29 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் ஏற்பட்ட தீவிர புயலில் சிக்கிக் கொண்ட 4 மாத குழந்தை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்த குழந்தையின் பெற்றோர்கள், புயல் தங்கள் வீடு, மொபைல் என அனைத்தையும் அழித்து விட்டதாகவும் தங்கள் குழந்தையின் தொட்டில் புயலோடு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். ஆனால், கடவுள் புண்ணியத்தில் தங்கள் குழந்தை உயிர் பிழைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். …
-
- 4 replies
- 412 views
- 1 follower
-
-
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இளைஞன் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு சென்று செல்ஃபி எடுக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த இளைஞனை சிங்கம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதான இளைஞரே இவ்வாறு சிங்கத்தால் தாக்கப்பட்டுள்ளார். https://thinakkural.lk/article/284675
-
- 6 replies
- 559 views
- 1 follower
-
-
செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஜோனாதன் என அழைக்கப்படும் குறித்த ஆமை கி.பி. 1832ஆம் ஆண்டு பிறந்ததாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆமை 1882இல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. வயதானாலும் சுறுசுறுப்புடன் வலம் வரும் ஜோனாதன், இந்த ஆண்டு 191ஆவது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான காணொளியை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆமையின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என அதற்கு சிகிச்சை அளித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/283378
-
- 1 reply
- 242 views
- 1 follower
-
-
இலங்கை மற்றும் இந்திய, சீனா உறவு தொடர்பில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் புலனாய்வு கட்டமைப்புக்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருக்கும் இலங்கை தூதரகத்தில் இராஜதந்திரிகள் உரையாடும் அறையில் இரகசிய கமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலிருக்கும் இலங்கை தூதரகத்தில் இராஜதந்திரிகள் உரையாடும் அறையில் MI5 - CIA இரகசிய கமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இவை பிரித்தானியாவின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும் இதனை உறுதி…
-
- 3 replies
- 390 views
-
-
சீனாவில் மிரர் என்ற பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால், இது வினோதமான அறுவை சிகிச்சை என்றும் அவர்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, கூச்ச உணர்வைப் போக்க அவர் கண்களைத் தேய்த்தபோது கண்ணில் இருந்து ஒரு ஒட்டுண்ணிப் புழு வெளியே வந்து விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சிடையந்த அந்த பெண் பயந்துபோய் உடனடியாக சீனாவின் குன்மிங்கில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார். ஆனால், அந்த பெண்ணை சோதனை செய்த மருத்துவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணின் கண்களை சோதனை செய்தபோது, இரு கண்களிலும் கருவிழியில் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெர…
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பீட்டர் ஷட்டில்வர்த் பதவி, பிபிசி செய்திகள் 9 டிசம்பர் 2023 வயாகரா. புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலே அதற்கு விளம்பரம் செய்தார். போப் ஆண்டவர் அதை அங்கீகரித்தார். ஆனால், வேல்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் இருக்கும், தொழிற்சாலைகள் நிறைந்த மெர்தெர் டிட்வில் என்னும் சிற்றூர் மட்டும் இல்லையெனில், வயாகராவை பற்றி நாம் கேள்விபட்டிருக்கவே மாட்டோம். முன்பு ஒருமுறை அந்த ஊரில் உள்ள தொழிற்சாலைகள் சரிவைச் சந்தித்தன. அப்போது, அங்கிருந்த ஆண்களில் பலர், இரும்புத் தொழிற்சாலையில் செய்து வந்த வேலையை இழந்தனர். நெருக்கடியான சூழலில், பணம் வேண்டி, உள்ளூரிலிருந்…
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 09 DEC, 2023 | 03:40 PM இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிவேக வீதியில் போலி நுழைவாயில் அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் கட்ச் பகுதியை இணைக்கும் பாமன்போர் - கட்ச் அதிவேக வீதியில் நுழைவாயில் உள்ளது. இந்த நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வர்கசியா கிராமத்தில் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று மூடிய நிலையில் இருந்துள்ளது. இந்த தொழிற்சாலையை போலி நுழைவாயிலுக்காக மாற்ற சில மோசடி பேர்வழிகள் முடிவு செய்தனர். அதன்படி, தேசிய அதிவேக வீதியில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் போன்று போலியான நுழைவாயில் அமைத்தனர். …
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
நடுவிரலை தூக்கி காட்டிய பெண் தொகுப்பாளினி பிபிசி செய்தி தொகுப்பாளர் புதன்கிழமை நேரலையில் நடுவிரலை தூக்கி காண்பித்தார். பிறகு மன்னிப்பு கேட்டார். பிரிட்டிஷ் நெட்வொர்க்கின் தலைமை தொகுப்பாளரான மரியம் மோஷிரி, நேரடி ஒளிபரப்பப்பட்டபோது, அவர் தனது நடுவிரலை நீட்டியபோது "அணியுடன் கொஞ்சம் நகைச்சுவையாக" இருந்ததாகக் கூறினார். மோஷிரி சைகை செய்யும் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது, ஒரு வீடியோ 700,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. அவர் விரைவாக சைகை செய்கிறார், பின்னர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனைப் பற்றிய முதல் தலைப்புச் செய்தியை வழங்குகிறார். வியாழன் அன்று X இல் ஒரு இடுகையில், மோஷிரி 10 விரல்களை உயர்த்தி, அவற்றைக் கீழே எண்ணியபோது, இயக்குனர்…
-
- 4 replies
- 785 views
-
-
ஜெர்மனியிலிருந்து தாய்லாந்துக்குச் சென்ற தம்பதி இடையே நடுவானில் சண்டை ஏற்பட்டதால், விமானம் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கணவன், மனைவி இடையே எப்போது சண்டை வரும், எப்போது ஒன்று சேருவார்கள் என்று கணிக்கவே முடியாது. திடீரெனச் சண்டைபோடுவார்கள், அடுத்த நிமிடமே சேர்ந்துகொள்வார்கள். அந்த வகையில், ஜெர்மனியின் ம்யூனிச் நகரிலிருந்து தாய்லாந்தின் பாங்காக்குக்குச் சென்ற லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த தம்பதிக்கு இடையே, நடுவானில் தகராறு ஏற்பட்டது. அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவர் தன்னை மிரட்டுவதாகக் கூறி, பைலட்டிடம் மனைவி புகார் செய்தார். விமானப் பணியாளர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களின் சண்டையை…
-
- 19 replies
- 1.6k views
- 1 follower
-
-
யாழில் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதி! யாழ் சாவகச்சேரியில், ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை எனக் கூறி சிறுமி ஒருவர் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1362036
-
- 1 reply
- 441 views
-
-
வணக்கம் உறவுகளே இப்போது உள்ள சூழலில் சோசல் மீடியாக்களில் எங்கடை உணர்வை வெளிப்படுத்த முடியாது...........அன்மையில் தலைவரின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு எனது தங்கைச்சி tiktokகில் தலைவரை பற்றி வீடியோ போட்டதால் சகோதரியின் ரிக்ரொக் முற்றிலுமாய் முடக்கப் பட்டு விட்டது...........44ஆயிரம் பார்வையாளர்கள் சகோதரியின் ரிக்ரொக்கில் இருந்தார்கள் 1மில்லியன் லைக்...............ஒரு வீடியோ போட்டதால் நிரந்தர தடை...........யூடுப்பிலும் அதே வீடியோவை போட்டா யூடுப் நிறுவனம் உடனை அதை நீக்கி விட்டதாக சொன்னா.................இளையதலைமுறை பிள்ளைகள் கூட சோசல் மீடியாக்களை தான் அதிகம் விரும்புகினம்.................இனி வரும் காலம் அவர்களின் காலம்…
-
- 6 replies
- 893 views
-
-
தமிழகத்தில் கொரோனாவால் இறந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மரணம் ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரைச் சேர்ந்த தம்பதியினர் இளையராஜா (50) மற்றும் கலைச்செல்வி (40). இவர்களுக்கு, ஸ்ரீஹரி பாண்டியன் என்ற மகனும், சவுந்தர்யா என்ற மகளும் உள்ளனர். இதில், இளையராஜா மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். கலைச்செல்வி, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2020 -ம் ஆண்டு கலைச்செல்விக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியின் இறப்பை இளையராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால், மனைவிக்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று இளையராஜா…
-
- 13 replies
- 1.3k views
-
-
யேர்மனியில், சமீபகாலமாகக் காலநிலை ஆர்வலர்களால் ‘கடைசித் தலைமுறை’ என்ற அமைப்பினூடாக வீதிகளில் நடத்தப்படும் போராட்டங்களால், மக்கள் விசனம் அடைந்திருப்பது என்னவோ உண்மைதான். 12.07.2023 புதன்கிழமை Stralsund நகரின் பிரதான வீதியில் கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வீதியை மறித்துப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடந்த வீதியில் வாகனம் செலுத்தி வந்த 41 வயதான பார ஊர்தி ஓட்டுனர் ஒருவர் அங்கே அமைதியை இழந்து, கோபம் கொண்டு செய்த செயல் இப்பொழுது பேசு பொருளாக மாறி இருக்கிறது. பார ஊர்தி ஓட்டுனர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி,போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரை வீதியில் இருந்து இழுத்து நடைபாதையில் போட்டுவிட்டு மற்றொருவரை தாக்க முயன்றிருக்கிறார். அவர் தனது கோபத்தின் உச்சமாக த…
-
- 7 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,INSTAGRAM/@SRINITHYANANDA 16 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்களுக்கு நித்யானந்தா பற்றிய அறிமுகம் தேவையில்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நித்யானந்தா தலைவராக தன்னை அறிவித்துக்கொண்ட தேடியும் கிடைக்காத ஒரு நாடான 'கைலாசா'வுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக பாராகுவே நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பராகுவே விவசாயம் மற்றும் கால்நடை அமைச்சின் தலைமைப் பணியாளர் அர்னால்டோ சாமோரோ இந்த புதன்கிழமை ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த அறிக்கையில், கைலாசாவுடன் வெளியுறவை மேற்கொள்ள பாராகுவே அரசாங்கம் மிகவும் விருப்பத்தோடு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். …
-
- 0 replies
- 569 views
- 1 follower
-
-
மிகவும் தெளிவாக பேசுகிறார்.
-
- 4 replies
- 633 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,FBI படக்குறிப்பு, அமெரிக்க வரலாற்றில் பிடிபடாத ஒரே கடத்தல்காரர் கூப்பர் மட்டுமே. கட்டுரை தகவல் எழுதியவர், ஜுபைர் ஆஸம் பதவி, பிபிசி நியூஸ் 27 நவம்பர் 2023 நவம்பர் 24, 1971 அன்று, டீன் கூப்பர் என்ற நபர், அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் விமான நிலையத்தில், வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் நகருக்குப் பயணம் செய்யும் டிக்கெட்டை வாங்கினார். நார்த்வெஸ்ட் ஏர்லைன்ஸின் கவுன்டரில் இருந்த ஊழியர்களுக்கு அமெரிக்க வரலாற்றில் மிகவும் சிக்கலான குற்றத்தை இந்த நபர் செய்யப் போகிறார் என்பது அப்போது தெரியாது. 52 ஆண்டுகளுக்குப் பிறகும் எந்த விதமான துப்பையும் கண்டுபிடிக்க முடியவில…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
எமக்காக வாழ்ந்து எமது நாட்டுக்காகப் போரிட்டுத் தம் இன்னுயிர்களையீந்த மாவீரர்களுக்கு எமது தலைதாழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிக்கிறோம். தேசியத்தலைவரும் அவரது எஞ்சிய குடும்பத்தினரும் இவ்வளவு காலமும் ஏன் தங்களை வெளிப்படுத்தவில்லையென்ற கேள்வியைப் பலரும் கேட்கிறார்கள். ஒருவர் அடைக்கலம் தேடி நாடொன்றில் தஞ்சம் புகுந்தால் அதற்கான பெறுபேறுகள் கிடைக்க பத்திலிருந்து பதினைந்து வருடங்கள் எடுக்கலாம். அதிலும் தேசியத்தலைவரைப் போன்றவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தக்கால வரையறை அதிலும் அதிகமாகவேயிருக்கும். 1951 ஜெனிவா ஒப்பந்தப் பிரகாரம் கையெழுத்திட்ட அகதி அந்தஸ்தை வழங்கும் நாடுகள் இந்த விவகாரங்களை எந்தவொரு நாட்டிடமோஅல்லது ஏஜென்சிகளிடமோ வெளிப்படுத்தாது மிகவும் இரகசியமாகவே பேண…
-
- 20 replies
- 1.9k views
-
-
-
- 8 replies
- 875 views
- 2 followers
-
-
25 NOV, 2023 | 06:06 PM தனது பிறந்த நாளுக்கு டுபாய்க்கு அழைத்துச் செல்லாத கணவரை தாக்கி கொலை செய்த குற்றத்தில் மனைவி ஒருவர் இந்திய பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் புனே நகரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.! உயிரிழந்தவர் இந்தியாவின் புனே நகரத்தை சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். கடந்த செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி சந்தேக நபரின் பிறந்த நாள் என்றும், கடந்த நவம்பர் 5ஆம் திகதி இவர்களது திருமண நாள் என்றும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான மனைவி தனது பிறந்த நாளுக்காக டுபாய் செல்ல விரும்புவதாக கணவரிடம் தெரிவித்தும் எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில், இவர்களது திருமண…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
45 கிலோ காட்டுபன்றி இறைச்சியை உண்ட பொலிஸ் பணி இடை நீக்கம். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 50 கிலோ காட்டுப்பன்றி இறைச்சிக்கு பதிலாக, 05 கிலோ காட்டு பன்றி இறைச்சியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எஞ்சிய 45 கிலோவை சாப்பிட்ட அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்குப் பொருட்களை தவறாகக் கையாளுதல், நேர்மையற்ற முறையில் அல்லது மோசடியான முறையில் மறைத்தமை அல்லது அகற்றியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த அதிகாரிக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த …
-
- 3 replies
- 507 views
-
-
கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு November 23, 2023 11:31 am கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒருவரது கிணறு திடீரென நேற்று (22) தாழ்விறங்கியுள்ளது. தங்களது அன்றாட பயன்பாட்டை முடித்து மறுநாள் காலை எழுந்து கிணற்றைப் பார்த்த பொழுது கிணறு முற்று முழுதாக தாழ் இறங்கியதை அவதானித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கிராம அலுவளர் நேரில் சென்று தொடப்பாக பார்வையிட்டுள்ளார். அத்துடன் கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீர் இறைக்கும் பம்பியும் கிணறில் முழ்கியுள்ளது. கடந்த 20…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஆர்சி அடண்டிரில்லா பதவி,பிபிசி பங்களா 16 நவம்பர் 2023 இஸ்ரேல் நாடு, யூதர்கள் தங்களுக்கென ஒரு தனி தேசத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் உருவானது. யூதர்களின் இருப்பு மற்றும் உரிமைகளின் பின்னணியில் இஸ்ரேல் உருவான போதிலும், இஸ்ரேலை ஆதரிக்காத பல யூதர்களும் உள்ளனர். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், யூத விரோதத்திற்கு பதிலாகவும், பாலத்தீனிய பிரதேசத்தில் ஒரு யூத அரசை நிறுவுவதற்கான நோக்கத்துடனும் யூத தேசிய இயக்கம் எனப்படும் 'சியோனிசம்' (Zionism) தோன்றியது. ஹீப்ரூ விவிலியத்தில், சியோன…
-
- 0 replies
- 443 views
-
-
விசா கோரி 50 தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவர் கைது : மனநிலையை ஆராயவும் உத்தரவு! பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது. குருந்துவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார். பிரான்ஸ் தூதரகத்தின் எலிசபெத் டெசன் செய்த முறைப்பாட்டின்படி, பிரான்ஸ் தூதரகத்திற்கு தொலைபேசியில் …
-
- 0 replies
- 298 views
-
-
21 NOV, 2023 | 11:03 AM புதுடெல்லி: மணிப்பூர் மாநிலம் இம்பால் விமானநிலையம் அருகே பறக்கும் தட்டு (யுஎஃப்ஓ) பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பறக்கும் தட்டை தேடும் பணியில் இந்திய விமானப் படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன. வழக்கமாக வானத்தில் பறக்கும்தட்டுகள் அல்லது அடையாளம் தெரியாத மர்மப் பொருட்கள் அவ்வப்போது வானில் தெரிவதாகத் தகவல் வெளியாகும். இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். இவை பறக்கும் தட்டுகள், வேற்று கிரகங்களில் இருந்து வரும் வேற்று கிரக வாசிகளின் விமானங்கள் என்ற தகவல்களும் வெளியாகும். ஆனால், இவை பெரும்பாலும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில்தான் நடைபெறும். இந்நிலையில் இதேபோன்ற தொரு சம்பவம் மணிப்பூர் மா…
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
புலம்பெயர் இலங்கையரை இலக்கு வைத்து இலங்கை எங்கும் காணி, வீடு, கடைகள் என ஆதன மோசடிகள் பரவலாக நடை பெறுவதாக தெரிகிறது. சில இடங்களில் பொலீசாருக்கு அல்லது உள்ளூர் காடையர்களுக்கு பணமும் கொடுத்து பயமுறுத்தல்கள் நடந்துள்ளன. சில இடங்களில், உங்களுக்கு இதெல்லாம் பெரிய சொத்தா, எமது பிள்ளைக்கு சீதனமா கொடுங்களன், கரை சேர்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று எமோசனல் தாக்குதல் நடக்கிறது. இலண்டணில் ஒரு வைத்திய நிபுணர். பிள்ளைகள் இல்லை. மணைவியும் அவருமாக வெள்ளவத்தையில் பல ஆண்டுகளுக்கு முன் அடுக்குமாடி வீடு ஒன்றை வாங்கி அவ்வப்போது போய் தங்கி வருவார்கள். இந்நிலையில் வைத்தியர் கோவிட் காலத்தில் இறக்க, விதவை மணைவி போனவருடம் போயிருக்கிறார். வீட்டில் வேறு யாரோ... விசாரித்தால் வ…
-
- 1 reply
- 257 views
-