செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விபரங்கள் வெளியாகாத நிலையில், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.ibctamil.com/srilanka/80/146474
-
- 0 replies
- 366 views
-
-
யாழில் மாதா சொரூபத்தில் கண்ணீர் வடியும் காட்சி! 28 SEP, 2025 | 11:06 AM யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில் இருந்து கடந்த மூன்று தினங்களாக கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த சம்பவமானது தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில் இதனை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் திரள்தின்றது. https://www.virakesari.lk/article/226294
-
- 0 replies
- 86 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 11:13 AM யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
முட்டைகளை குடிப்பதில் கின்னஸ் சாதனை படைப்பதற்கான பரீட்சார்த்த முயற்சியில் யாழ்ப்பாணம் இளவாலையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் ஈடுபட்ட சுவாரஸ்ய சம்பவம் நேற்று நடந்துள்ளது. இளவாலை கரும்பனை சனசமூக நிலையத்தில் நடந்த இந்த சுவாரஸ்ய நிகழ்வை பார்க்க பெருமளவு மக்கள் முண்டியடித்துக் வந்ததையும் அவதானிக்க முடிந்தது. அளவெட்டி வடக்கைச் சேர்ந்த அப்புத்துரை ராசேந்திரம் [வயது-53] எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையாரே இந்தமுயற்சியில் ஈடுபட்டிருந்தார். நூற்று பத்து முட்டைகள் குடிக்கப்பட்டதே உலக சாதனையாக உள்ளது. இச்சாதனையை முறியடிக்கும் பரீட்சார்த்த நடவடிக்கையாகவே இந்த முயற்சியை அவர் மேற்கொண்டிருந்தார். காலை 11.10 மணியளவில் முட்டை குடிக்க ஆரம்பித்த அவர் காலை 11.13 மணி 14 வி…
-
- 3 replies
- 509 views
-
-
யாழில் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது 72) எனும் பெண்ணே அடித்துக்கொலை செய்யப்பட்டு இருந்தார். அப்பெண் தனிமையில் இருந்த வேளை, வீட்டு வேலைக்கு வந்த இளைஞனே பெண்ணை பூ சாடியால் அடித்துக்கொலை செய்த பின்னர் , அப்பெண் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பா…
-
- 7 replies
- 732 views
-
-
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டிற்கு சென்ற ரௌடிக்குழுவொன்று பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது. தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் வாள்வெட்டிற்கு சென்ற குழுவே மடக்கிப் பிடிக்கப்பட்டது. இரண்டு ரௌடிகள் பிடிக்கப்பட்டனர். ஏனையவர்கள் தப்பியோடி விட்டனர். எட்டுப் பேர் கொண்ட ரௌடிக்குழு வாள்களுடன் தாக்குதல் நடத்த சென்றனர். இதையடுத்து ஒன்றுகூடிய மக்கள் ரௌடிகளை வளைத்து பிடிக்க முயன்றனர். இரண்டு ரெடிளகள் சிக்கினர். ஏனைய ரௌடிகள் தப்பியோடி விட்டனர். மடக்கிப் பிடிக்கப்படும் போது இரண்டு ரௌடிகளும் வாள்களுடனேயே சிக்கினர். புத்தூரை சேர்ந்த மகாதேவன் கோகுலன் (30), ஆவரங்கால் மேற்கு புத்தூர் பகுதியை சேர்ந்த…
-
- 0 replies
- 422 views
-
-
யாழில் விபத்து! முதியவர் படுகாயம்..! யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துச் சம்பவத்தில், துவிச்சக்கர வண்டியில் வந்த முதியவர் தலையில் படுகாயமடைந்து, மயக்கமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்றில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பரமேஸ்வராச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைகளான யாழ் வைத்தியசாலை மற்றும் நொதோண் வைத்தியசாலைகளுக்கு அருகில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உடனடியாக அங்கு நின்ற மக்கள் விபத்தில் சிக்கிய முதியவருக்கு சிகிச்சை அளிக்குமாறு மேற்குறித்த இரண்டு வைத்தியசாலைகளிலும் உதவி கோரியிருந்தனர். இருந்தும…
-
- 0 replies
- 304 views
-
-
யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த குளிர்பான விற்பனை நிலையத்தில் நேற்று (14) ஐஸ்கிறீம் குடிக்க சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்தநிலையில் குறித்த குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. https://thinakkural.lk/article/291932
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
யாழில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை உடைத்துவிட்டு வன்முறைக் கும்பல் தப்பியோட்டம்! யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்குப் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், பெறுமிக்க பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. ஒன்பது பேர் கொண்ட கும்பலே இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆறு மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் குறித்த வீடுகளுக்குச் சென்றிருந்த கும்பல், பெறுமதியான தளபாடங்களை அடித்து உடைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ளது. வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு அடாவடியில் ஈடுபட்டுவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார் ம…
-
- 0 replies
- 350 views
-
-
யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு; சொகுசு கார் தீயில் எரிந்தது! யாழ்ப்பாணம் – நாவலர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனம் தெரியாத வன்முறை கும்பல் ஒன்றே இவ்வாறு பெற்றோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த தாக்குதலில் வீட்டில் தரித்து நின்ற காரிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://newuthayan.com/யாழில்-வீட்டின்-மீது-பெற/
-
- 0 replies
- 364 views
-
-
யாழ்.பொலிஸ் நிலையமருகில் கடந்த 20ஆம் திகதியில் இருந்து உரிமைகோரப்படாது அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள் இன்று வீடு சென்றுள்ளது. அதன் உரிமையாளர் இன்று பிணையில் விடுதலையாகியதையடுத்தே மோட்டார் சைக்கிள் வீடு சென்றுள்ளது. நீதிமன்றம் தாக்கப்பட்ட தினமான கடந்த 20 ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரம் காற்று போயுள்ளது. அதனையடுத்து மோட்டார் சைக்கிளை அவ்விடத்தில் விட்டுவிட்டு சில்லினை கழற்றி காற்று அடிப்பதற்கு கடைக்கு சென்றுள்ளார். அவ் வேளையில் யாழ்.நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 130 பேர் கைதாகியிருந்த நிலையினில் அவர்களுடன் மோட்டார் சைக்கிள் சி…
-
- 0 replies
- 299 views
-
-
யாழில் வீதியில் நெல் விதைத்துப் போராட்டம்! வீதியில் நெல் விதைத்து யாழில் இன்று விநோத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்புச் செய்துதருமாறு கோரியே மூளாயில் மக்களால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும், உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றினர். https://athavannews.com/2023/1358212
-
- 4 replies
- 646 views
- 1 follower
-
-
யாழில், கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து.. காயங்களை ஏற்படுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த நான்காம் திகதி இடம்பெற்றது. “சந்தேக நபரின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று வந்ததையடுத்து அதனை விரட்ட சந்தேக நபர் பெற்றோலை விசிறியுள்ளார் அது அங்கு ஏற்றப்பட்டிருந்த சாம்பிராணி குச்சியில் பட்டு தீ ஏற்பட்டுள்ளது. கணவன் மீது பெற்றோலை ஊற்றும் எண்ணம் சந்தேக நபரிடம் இல்லை” என்று ச…
-
- 15 replies
- 539 views
-
-
யாழில், பயணத் தடை வேளையிலும்... இயங்கி வந்த, மதுபானசாலை முற்றுகை !! யாழ்ப்பாணம் -கோப்பாய் பொலிஸ் பிரிவில் மதுபான சாலை ஒன்று மதுவரித் திணைக்களத்தினால் சீல் செய்யப்பட்டதுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வரும் ஜூன் 7ஆம் திகதிவரை மதுபான சாலைகளை மூட மதுவரி ஆணையாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் அதனை மீறி மதுபான சாலையைத் திறந்த குற்றச்சாட்டில் அதன் முகாமையாளர், விற்பனையாளரும் அரச சாராயத்தை சட்டத்துக்குப் புறம்பாக வாங்கிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (செவ்வாய்க்கிழ…
-
- 0 replies
- 281 views
-
-
யாழில், போதைக்கு அடிமையான... 17 வயது சிறுமி, கர்ப்பம் – மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை. யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த சிறுமி போதைப்…
-
- 1 reply
- 403 views
- 1 follower
-
-
யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது. யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து, துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 17 நாட்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த சிறுமி நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டார். இதனையடுத்து பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறித்த சிறுமியை இளைஞன் ஒருவர் காதலித்து வந்ததாகவும், அவரே சிறும…
-
-
- 7 replies
- 300 views
- 1 follower
-
-
யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு! வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில், தனிப்பட்ட தேவைக்காக வெளியில் சென்ற சமயம், கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சீமெந்தினால் ஆனா உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் முதியவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்திருந்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்ப…
-
- 0 replies
- 148 views
-
-
யாழில். உயிர்கொல்லி தேள்கள்: உயிரி ஆயுதமாக புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உயிர் கொல்லி தேள்கள் காணப்படுவதாக சிங்கள தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் எப்போது கண்டிராத வெள்ளை நிறத்திலான மிகவும் கொடி விஷத்தைக் கொண்ட தேள் வகையொன்று யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேள் கொட்டினால் மரணம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இந்தத் தேள் கொட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த தேள் வகை இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தில் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ…
-
- 5 replies
- 983 views
-
-
யாழில். காவற்துறையினரிடம் இருந்து தப்பிக்க மணலை கொட்டிய கடத்தல்காரர்கள்! adminNovember 6, 2023 டிப்பரில் மணலை கடத்தியவர்கள் காவற்துறையினரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில், சிறுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை (06.11.23) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தி செல்லப்பட்ட போது, வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் வாகனத்தை மறித்துள்ளனர். அதன் போது, மணலை கடத்தி…
-
- 0 replies
- 187 views
-
-
யாழில். சுவிஸ் நாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து 12 பவுண் நகைகள் திருட்டு! யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் இருந்து வந்த குடும்பம் ஒன்று உரும்பிராய் கிழக்கு பகுதியில் வீடொன்றில் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆலயம் ஒன்றுக்கு சென்று இருந்த வேளை , வீட்டின் கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். https://athavannews.com/2022/1302151
-
- 0 replies
- 200 views
-
-
யாழில். நடமாடும் கஞ்சா வியாபாரி கைது! யாழ்.நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், சிறிய சிறிய பொதிகளாக, பொதி செய்து, நபர் ஒருவர் யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்து வருவதாக, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்ததுடன், கஞ்சா பைக்கட்டுக்களையும் மீட்டுள்ளனர். சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://athavannews.com/2022/1266360
-
- 8 replies
- 576 views
-
-
யாழில். நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில்... உயிரிழந்தவர், போதை ஊசியாலையே உயிரிழந்தார்! நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர், ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார் என உடல் கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்து உயிரிழந்தார் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட உடல் கூற்று பரிசோதனையின் போது , கையில் ஊசி மூலம் போதை பொருளை செலுத…
-
- 1 reply
- 137 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 NOV, 2023 | 12:27 PM யாழ்ப்பாணத்தில் பிட்டு சாப்பிடும்போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டில் பிட்டு சாப்பிட்ட போது, அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறியபோது, வீட்டார் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர். சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து, இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். அ…
-
- 6 replies
- 759 views
- 1 follower
-
-
யாழில். பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் உயிரிழப்பு யாழில், பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் என்ற 26 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தின் மிதி பலகையில் நின்றவாறு பயணித்துள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக கரந்தாய் பகுதியில் வைத்து அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அ…
-
- 0 replies
- 142 views
-
-
யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த இருவர் கைது! யாழில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது” பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர். அதன்போது உற்பத்தி நிலையம் உரிய அனுமதிகள் பெறாது இயங்கி வந்ததமையும், டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்தமையும் சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய போது சுகாதார பரிசோதகர்களுக்கும் அங்கு பணியாற்றிவரும் ஊழியர்களுக்கும் இடையே வாய…
-
- 0 replies
- 351 views
-